திருக்கோயிலூர்
திருக்கோவிலூர் (Tirukkovilure), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் அமைந்த முதல் நிலை நகராட்சி ஆகும். இது திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். திருக்கோவிலூர் நடுநாட்டின் தலைநகராக இருந்தபோது கோவலூர், கோவல், மற்றும் திருக்கோவிலூர் என அழைக்கப்பட்டு வந்தது. திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது.
திருக்கோவிலூர்
கோவலூர், கோவல், திருக்கோவிலூர் | |
---|---|
நகரமும் நகராட்சியும் | |
அடைபெயர்(கள்): நடு நாட்டின் தலைநகரம், கோவில் நகரம் | |
ஆள்கூறுகள்: 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
பெயர்ச்சூட்டு | கோவில்களும் பாரம்பரியமும் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | திருக்கோவிலூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.99 km2 (4.63 sq mi) |
ஏற்றம் | 73 m (240 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 40,212 |
• அடர்த்தி | 3,400/km2 (8,700/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN-35 |
திருக்கோவிலூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
தொகு12 செப்டம்பர் 2021 அன்று திருக்கோவிலூர் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1] திருக்கோவிலூரானது தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ள அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. திருக்கோவிலூர் தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் அறிவித்த 34 ஆண்டுகளாக இருந்து வருகிறது விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்த போது திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக இருந்தது. ஆனால் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது. திருக்கோவிலூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர், திருக்கோவிலூர் புதிய பெரிய பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டுவதற்கு 2014-ஆம் ஆண்டு சட்ட மன்றத்தில் அறிவிக்கப்பட்டது. செவலை ரோடு பகுதி, ஏரி கரை பகுதி அகிய இரண்டு பகுதி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்று இறுதி செய்யப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் துவங்கப்படவுள்ளன. திருக்கோவிலூர் அருகில் மேற்கில் திருவண்ணாமலை 40 கிமீ; இதன் கிழக்கில் கடலூர் 70 கிமீ; வடக்கில் விழுப்புரம் 35 கிமீ; தெற்கில் கள்ளக்குறிச்சி 46 கிமீ தொலைவில் உள்ளது.
ஊர் அமைப்பு
தொகுவரலாற்றுப் பெருமைக்கு உரியதான இந்த நகரம் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலூராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது.
திருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும். இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கீழூர்ப் பகுதியில்தான் வீரட்டேஸ்வரர் கோயில் சிவன் கோயில் இருக்கிறது. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று.[2]
முதல்நிலை நகராட்சி அமைப்பு
தொகு11.99 சகிமீ பரப்பும், 27+3 நகராட்சிமன்ற உறுப்பினர்களையும், 160+40 தெருக்களையும் கொண்ட முதல் நிலை நகராட்சி, கூடிய விரைவில் தேர்வுநிலை அல்லது சிறப்புநிலை நகராட்சியாக விரிவாக்கம் செய்யபடவுள்ளது நகராட்சி விரிவாக்கம் திருக்கோவிலூர் திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சி 15,929 வீடுகளும், 53,252 மக்கள்தொகையும் கொண்டது. நகராட்சி எழுத்தறிவு 86.7% மற்றும் பாலின விகிதம் 10,000 ஆண்களுக்கு, 10,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 10000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,125 மற்றும் 471 ஆகவுள்ளனர்.[4]
வரலாறு
தொகுபொ.ஊ. 300-ஆம் நூற்றாண்டில் இருந்து நடுநாட்டின் தலைநகராக கோவல் நகரம் இருந்துவந்தது சங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோவலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததது. ஔவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர்குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோவலூரில் இருப்பதும் இவ்வூரின் பெருமைக்குத் தக்க சான்றுகளாம்.
கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி சங்ககாலத்தில் இவ்வூரை ஆண்ட மன்னர்களில் ஒருவன். கோவலூரில் பாயும் ஆறு பெண்ணை. இந்த ஆற்றுமணலின் அறல் படிவு போல் தலைவியின் கூந்தல் சுருள் படிந்திருந்ததாம்.[5]
கடையெழு வள்ளல்களில் மற்றொருவன் அதியமான் நெடுமான் அஞ்சி. இந்த அஞ்சி கோவலூரைப் போரிட்டு அழித்தான் என்றும், அந்த வெற்றியைப் புலவர் பரணன் சிறப்பித்துப் பாடினான் என்றும் ஔவையார் குறிப்பிடுகிறார்.[6]
திருக்கோயிலூர் வீரட்டேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் போன்றோர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இவ்வாலயம் அந்தகாசூரனை அழித்த தலம் ஆதலால் அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்ககால மலையமான் நாட்டின் தலைநகரமாகவும் விளங்கியது. ஆதலால் காரி திருக்கோவலூர் மலையமான் காரி என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறான்.
புவியியல்
தொகுஇவ்வூரின் அமைவிடம் 11°57′N 79°12′E / 11.95°N 79.2°E ஆகும்.[7] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 73 மீட்டர் (239 அடி) உயரத்தில் இருக்கின்றது.
போக்குவரத்து
தொகுதிருக்கோவிலூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. திருக்கோவிலூர் நகராட்சியானது, சாலை மற்றும் தொடருந்து மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து
தொகுதிருக்கோவிலூர் நகரைப் பொறுத்த வரையில், சாலை வசதிகள் நன்கு அமைக்கப்பட்டுள்ளன.
- தேசிய நெடுஞ்சாலை 77 திருக்கோவிலூர் - பெங்களூர் வழி :( திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ,ஓசூர் ) 6 வழி சாலை
- தேசிய நெடுஞ்சாலை38 திருக்கோவிலூர் - திருச்சி (வழி : ( இளவணாசூர்கோட்டை ) 4 வழி சாலை
- தேசிய நெடுஞ்சாலை 36 திருக்கோவிலூர் - கடலூர் ( வழி: மடப்பட்டு, அரசூர், பண்ருட்டி) 4 வழி சாலை
- தேசிய நெடுஞ்சாலை79 திருக்கோவிலூர் - சேலம் (வழி : ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி) 4 வழி சாலை
- தேசிய நெடுஞ்சாலை 45 சென்னை- வழி : திருக்கோவிலூர் , விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல்)
- தேசிய நெடுஞ்சாலை 45 எ திருக்கோவிலூர் -நாகப்பட்டினம் (வழி: விழுப்புரம் , புதுச்சேரி, கடலூர்)
- தேசிய நெடுஞ்சாலை 234 திருக்கோவிலூர் - மங்களூர் (வழி: திருவண்ணாமலை, வேலூர்)
- மாநில நெடுஞ்சாலை 4 திருக்கோவிலூர் - ஆற்காடு (வழி: செஞ்சி - சேத்துப்பட்டு- ஆரணி - திமிரி)
- தேசிய நெடுஞ்சாலை 45சிவிக்கிரவாண்டி - தஞ்சாவூர் (வழி: பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், கும்பகோணம்) இச்சாலையானது விழுப்புரம் நகரில் செல்லவில்லை என்றாலும், தேசிய நெடுஞ்சாலை 45 எ புதுச்சேரி செல்லும் சாலையில் கோலியனூர் என்னும் ஊரில் இச்சாலை செல்வதால், இதன் வழியாகச் செல்ல முடியும். விழுப்புரத்திலிருந்து கோலியனூர் 05தொலைவிஉள்ளதது.
திருக்கோவிலூர் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும்.
இங்கிருந்து சென்னை, திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, காஞ்சிபுரம், புதுச்சேரி, பெங்களூரு, சேலம், திருத்தணி, புதுக்கோட்டை, , கடலூர், அரியலூர், நெய்வேலி, பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய முக்கிய நகரங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.
தொடருந்துப் போக்குவரத்து
தொகுவிழுப்புரம் தொடருந்து நிலையமானது மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.விழுப்புரத்தில் இருந்து ஐந்து கிளைகளாக இரயில் பாதைகள் பிரிகின்றன:
- விழுப்புரம் - சென்னைக் கடற்கரை, (வழி: செங்கல்பட்டு, தாம்பரம்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை.
- விழுப்புரம் - திருச்சி, (வழி: விருதாச்சலம், அரியலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை. இது கார்டு லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
- விழுப்புரம் - திருச்சி, (வழி: கடலூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் மின்மயமாக்கப்படாத அகலப் பாதை. இது மெயின் லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
- விழுப்புரம் - காட்பாடி (வழி: திருக்கோவிலூர், திருவண்ணாமலை,ஆரணி, வேலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
- விழுப்புரம் - புதுச்சேரிமின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
வானூர்தி நிலையம்
தொகுஇங்கிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள புதுச்சேரி வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையமாகும்.
கோவில்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Govt upgrades 9 Town Panchayats as Municipalities
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல். மெய்யப்பன்
தமிழாய்வகம். pp. 290–292. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2020.
{{cite web}}
: line feed character in|publisher=
at position 11 (help) - ↑ திருக்கோவிலூர் நகராட்சி இணையதளம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Town Tirukkoyilur Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
- ↑ அம்மூவனார் பாடல் அகநானூறு 35-14
- ↑ புறநானூறு 99-13
- ↑ "Tirukkoyilur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)