பயனர் பேச்சு:Ravidreams/தொகுப்பு 7
பெயர்மாற்றம்+AWB-க்காவும் TamilBOT அணுக்கம்
தொகுபெயர்மாற்றம்
தொகு1.எனது பயனர் பெயரான தகவலுழவன் என்பதனை, tha.uzhavan என்று மாற்றிட விண்ணப்பிக்கிறேன். அதன் மூலம் அனைத்து விக்கிகளிலும் உள்ள, எனது முந்தைய பங்களிப்புகள், இந்த ஆங்கிலப்பெயரிலும் இருக்கும்/மாறும் அல்லவா?
- நேரம் கிடைக்கும் போது பார்த்துச் செய்கிறேன்.
- காத்திருப்பேன்.ஓரிரு மாதங்களுக்கு பிறகு ஞாபகப்படுத்துகிறேன்.
ஒருமாதத்திற்கு முன்பு குறிப்பிட்டது போல, பெயர் மாற்ற நினைவுப்படுத்துகிறேன்.நீங்கள் கலைக்கு செய்ததால், உங்களிடம் கேட்கிறேன்.தொந்தரவு இருப்பின் மன்னிக்கவும். முதல் இந்திய விக்கி மாநாட்டிற்கு செல்ல எண்ணுகிறேன். அதற்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இப்பெயர் மாற்றம் அவசியமெனக் கருதுகிறேன். முன்பு tha.uzhavan என்று மாற்றக்கேட்டேன். புள்ளி வேண்டாமென்று முன்பு உங்களுடன் உரையாடிய போது தெரிந்து கொண்டேன்.எனவே,THA uzhavanஎன மாற்றக் கோருகிறேன்.வணக்கம்.≈02:02, 12 ஆகத்து 2011 (UTC)த♥உழவன்+உரை..
2.AWB-மூலம் கிரந்த எழுத்துக்களை, நீக்கி உரிய தமிழ் எழுத்துக்களை, இது போல(ஜெருமன்-->செருமன், ஆகஸ்டு-->ஆகத்து) ஆலோசித்து, மாற்ற எண்ணுகிறேன்.ஏற்கனவே, அதுபோல, பகுப்பு:செருமனி என்ற தாய்பகுப்பை மாற்றி வருகிறேன். பிறகு ஒவ்வொரு கட்டுரைக்குள்ளும், பொருள் மாறாமல், கிரந்த எழுத்தை நீக்க வேண்டும். இவற்றிற்காகவும் TamilBOT அணுக்கத்தினை இங்கும் நீட்டிக்கக் கோருகிறேன்.
3.என் கையொப்பத்தினை கீழ்கண்டவாறு வார்ப்புரு ஏற்படுத்தி இடலாம் தானே?≈00:29, 9 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
- 2. தானியக்கமாகவோ மனித முறையிலோ ஒட்டு மொத்த தமிழ் விக்கிப்பீடியாவிலும் கிரந்தத்தை நீக்குவது மிக முக்கியமான கொள்கை முடிவாக இருக்கும். எனவே, இது குறித்து உரையாடியே முடிவு எடுக்க முடியும். எனவே, அதுவரை awb / tamilbot மூலம் இத்தகைய செயல்பாடுகளைச் செய்வது ஏற்புடையதாக இருக்காது. இது குறித்த கொள்கை உரையாடலைத் துவக்கி, பின் செயல்படுங்கள்.
- உரையாடலுக்கென தனி திட்டப்பக்கம் துவங்குகிறேன். ஏற்கனவே உள்ள உரையாடலை இணைக்க முயற்சிக்கிறேன்.
- 3. இடலாம் :) --இரவி 06:03, 9 சூலை 2011 (UTC)
பலவேலைகளுக்கும் இடையில், பதிலளித்தமைக்கு மிக்கநன்றி.வருகிறேன். வணக்கம்.≈07:28, 9 சூலை 2011 (UTC)த♥உழவன்+உரை..
தமிழ்99
தொகுஎப்படி தமிழ் எண்களை எழுதுவது? ~1, 2~ `1 3` 01~ ~04 விக்கி தமிழ்99, பயர்பாக்ஸ் நீட்சி, இ கலப்பை தமிழ் 99 பயன்படுத்தி பார்த்துவிட்டேன். --குறும்பன் 13:33, 10 சூலை 2011 (UTC)
- NHM writerன் எல்லா விசைப்பலகைகளிலும் 1 (அதற்கடுத்து இடைவெளி விடாமல்) ~ குறி இடுவதன் மூலம் தமிழ் எண்ணைப் பெறலாம். இதே போல் எல்லா எண்களுக்குள் இடலாம். --இரவி 16:54, 10 சூலை 2011 (UTC)
- இரவி நான் பயர்பாக்ஸ் தமிழ்விசை நீட்சி மற்றும் விக்கி தட்டச்சு கருவியைதான் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். அரிதாக தான் இ-கலப்பையை பயன்படுத்துவேன். NHM writerஐ நிறுவவில்லை, விக்கி தமிழ்99, தமிழ்விசை நீட்சி, இ-கலப்பை உருவாக்குனர்களுக்கு இந்த வழுவை தெரிவியுங்கள். --குறும்பன் 18:21, 12 சூலை 2011 (UTC) ~1 3~
இறுவட்டுத் திட்டம்
தொகுஇரவி, இப்பொழுது ஒரு நாளில் ஏறத்தாழ 6 மணி நேரத்தைப் போக்குவரத்தில் செலவிட வேண்டி இருப்பதனால் கிழமை நாட்களில் அதிகம் நேரம் கிடைப்பதில்லை. அதனால்தான் இறுவட்டுத் திட்டத்தில் ஈடுபட முடியவில்லை. வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் சில கட்டுரைகளைச் சேர்க்க முயல்கிறேன். -- மயூரநாதன் 18:11, 12 சூலை 2011 (UTC)
- இரவி, வேதியியல் கட்டுரைகளைச் சேர்ப்பது பற்றிக் கேட்டிருந்தீர்கள். பரிந்துரைக்கிறேன்.. உடனே செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். பல தனிமங்கள், கரிமவேதியியல் சேர்மங்கள் முதலியன சேர்க்க வேண்டும். --செல்வா 23:32, 14 சூலை 2011 (UTC)
உங்களுக்குத் தெரியுமா? அறிவிப்புத் திட்டம்
தொகு
நீங்கள் பங்களித்த லோரம் இப்சம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகஸ்ட் 3, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த அரைஞாண் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 27, 2012 அன்று வெளியானது. |
missing bureaucrat noticeboard on this wiki
தொகுHi. You are listed as a bureaucrat on this wiki, but so is at least one other person. To contact a bureaucrat, in order to usurp accounts and similar, users have to send duplicate messages, rather than post at a single place. Please create a bureaucrat noticeboard of some sort and list it at meta:Index of pages where renaming can be requested. If it already exists, please list it there! Thank you. --Joy-temporary 11:48, 5 ஆகத்து 2011 (UTC)
இந்திய விக்கி மாநாடு -- மும்பை -- நவம்பர் 18-20 2011 |
---|
வணக்கம் Ravidreams,
முதல் இந்திய விக்கி மாநாடு மும்பையில் 2011 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான 100 நாள் பரப்புரை தொடங்கவுள்ளது. நீங்கள் தமிழ் விக்கி சமூகத்தின் அங்கத்தினராக இருப்பதால், மாநாட்டிற்கு வருகை தந்து உங்களின் விக்கி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அழைக்கிறோம். உங்களின் பங்களிப்புகளுக்கு நன்றி. உங்களை 18-20 நவம்பர் 2011 இல், மும்பையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். |
Invite to WikiConference India 2011
தொகுHi Ravidreams,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
Mohamed ElGedawy → محمد الجداوي
தொகுHi, I want to change my name from: "Mohamed ElGedawy" to: "محمد الجداوي", Because i have changed my username on many wikipedias.--Mohamed ElGedawy 07:45, 14 ஆகத்து 2011 (UTC)
நன்றி
தொகுதங்கள் அழைப்பிற்கு நன்றி! --இராஜ்குமார் 19:04, 5 செப்டெம்பர் 2011 (UTC)
இறுவட்டுத் திட்டம் - 100 கட்டுரைகள்
தொகுவணக்கம் ரவி. இறுவட்டுத் திட்டத்தின் முதல் கட்டமாக 100 கட்டுரைகளைக் கொண்ட இறுவட்டை வெளியிடுவது என்று திட்டமிடப்பட்டது. அதில் எந்த எந்த கட்டுரைகள் மேம்படுத்தப் பட வேண்டும் என்று குறிப்பிட்டால், பயனர்கள் அதில் ஒத்துளைப்பு வழங்க முடியும். நன்றி. --Natkeeran 23:43, 7 செப்டெம்பர் 2011 (UTC)
- நற்கீரன், வேலை - வீட்டில் கடுமையான நேர நெருக்கடியில் உடனடியாக இதில் செயல்படவில்லை. இயன்ற அளவு விரைவில் மீண்டும் திட்டப்பணிகளில் ஈடுபடுகிறேன். நன்றி--இரவி 15:49, 15 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி
தொகுஉங்கள் பாராட்டுதலுக்கு நன்றி.
//சீரிய பங்களிப்புகளை அளித்துத் திக்குமுக்காட வைத்துள்ளீர்கள்.//
பொதுவாக நான் சீரிய பங்களிப்புகளை செய்வதில்லை. நான் குறுட்டாம்போக்கில் தவறாக கட்டுரை எழுத அதை sodabottle, kanags, natkeeran, theni.m.subramani, suryaprakash, prash, sengaipodhuvan, karthi.dr, bahim போன்றவர்கள் சீராக்கிவிடுவதே வா(வே)டிக்கை. அதனால் சீரிய பங்களிப்புகளுக்கூரிய பாராட்டுகள் மேலுள்ளவர்களையே சேரும்.--தென்காசி சுப்பிரமணியன் 17:32, 12 செப்டெம்பர் 2011 (UTC)
தமிழ் விக்கி ஊடகப் போட்டி
தொகுஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:22, 4 அக்டோபர் 2011 (UTC)
சோதனை
தொகுசோதனை தட்டச்சு. இது இன்னொரு சோதனை தட்டச்சு
மிக்க நன்றி
தொகுஐயா,
தங்களின் உளங்கனிந்த பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. ஆசை இருந்தும், எழுத நேரம் கிடைக்காமல் இருப்பது மிகுந்த வருத்தம் தருகிறது. 'தினமும் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டும்' என்பது என் ஆசை. --Selvasivagurunathan mஉரையாடுக
- ஐயா,
- உங்களின் பாராட்டுகளுக்கும், ஊக்கப்படுத்துதலுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்! என்றென்றும் அன்புடன் ...Selvasivagurunathan mஉரையாடுக
விக்கிமூலம்
தொகுஇரவி, விக்கிமூலத்தில் சில பக்கங்களை நீக்க பவுல் அவர்கள் எனது பேச்சுப் பக்கத்தில் வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார். அவருக்கு உதவ முடியுமா? அவர் ஒப்புதல் அளித்தால் அவரை விக்கிமூலத்தில் நிருவாகியாகப் பரிந்துரைக்கலாம் என்றிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 11:26, 2 பெப்ரவரி 2012 (UTC)
- அவர் வேண்டிய பக்கங்களை நீக்கத் தொடங்கி உள்ளேன். விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கி மேற்கோள் ஆகியவற்றில் புதிதாய் பல பயனர்கள் ஆர்வம் காட்டி வருவதால், புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம். செய்வோம்.--இரவி 10:16, 4 பெப்ரவரி 2012 (UTC)
Re: Removing your bot's sandbox articles in ta wiki
தொகுHi Ravi, you can go ahead and remove them. Thanks. Ganeshk 13:48, 4 பெப்ரவரி 2012 (UTC)
தரம் கண்காணிக்கப்பட வேண்டிய கட்டுரைகள்
தொகுஇரவி, என் பேச்சுப்பக்கத்தில் உங்களுக்கு விடை பகர்ந்திருக்கின்றேன். ஒரே இடத்தில் கருத்துகள் இருக்கட்டும் என்று. மிகவும் தேவை எனில் பிறிதொரு பொது இடத்துலும் இட்டுப் பேசலாம். இப்பொழுதே 50 கட்டுரைகள் சேர்த்திருக்கின்றேன். குறைந்தது 100-200 கட்டுரைகள் தரமானதாக இருக்கும்படிச் செய்ய இயலும். சற்று பொறுமையாக கூகுள் கட்டுரைககள் பலவற்றைத் திருத்தினால் குறைந்தது 1000 மிக நல்ல கட்டுரைகள் கிட்டும். (கூகுள் கட்டுரைகள் மிக நீளமாக இருந்தால், கவனமாக சிலவற்றைக் களைந்தோ, இரண்டு கட்டுரைகள் ஆக்கியோ நல்ல கட்டுரைகளாக வடித்தெடுகக் முடியும்). நாம் 50,000 கட்டுரைகளை எட்டும் பொழுது ஒரு 1000 கட்டுரைகள் "நல்ல கட்டுரைகள்" என்னும் தரத்தில் இருந்தால், அது ஒரு நல்ல முன்வளர்ச்சியாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் "கடைசியாக" 1/3 பகுதி கட்டுரைகள் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும். கலைக்களஞ்சியத்தில் உள்ள எல்லா கட்டுரைகளும் சீர்மை பேணி, பிழை இன்றி, ஓரளவுக்கு நல்ல தரமானதாகவும் இருக்க வேண்டும். தரம் பேணுவது, விக்கியின் உண்மையான பயனையும் செல்வாக்கையும் கூட்டும். --செல்வா 19:45, 4 பெப்ரவரி 2012 (UTC)
- இரவி, மேலும் சில கருத்துகளை என் பேச்சுப்பக்கத்தில் இட்டிருக்கின்றேன். மேற்கொண்டு வார்ப்புரு இடவேண்டாம் எனில் இடவில்லை. இடுவது நல்லது என்பது என் கருத்து. காரணங்களைக் கூறியுள்ளேன்.--செல்வா 01:54, 5 பெப்ரவரி 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம் வேண்டல்
தொகுவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/வாசு பக்கத்தை உரை திருத்தியதற்க்கு நன்றி கூற விரும்புகிறேன். --வாசு (பேச்சு, பங்களிப்புகள்) 14:37, 7 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி
தொகுஎன் பயனர் பேச்சுப் பக்கத்தில் பாராட்டியதற்கு நன்றி இரவி! மாணவர்களுக்குப் பயன்படக்கூடும் என்றே குறுங்கட்டுரைகள் சிலவற்றை மொழி பெயர்த்தேன். --செல்வா 13:18, 9 பெப்ரவரி 2012 (UTC)
விக்கிமேற்கோள் பிரச்சனை
தொகுவிக்கிமேற்கோள் தளத்தின் நிருவாகப் பொறுப்பு ஏற்பது குறித்த மேல் விக்கிப் பக்கத்துக்கான தொடுப்பு. மேலும் விக்கி மேற்கோள் தளத்தின் ஆலமரத்தடி தொகுத்தல் பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 13:20, 14 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி
தொகுஇரவி எனது உரையாடல் பக்கத்தில் நீங்கள் அளித்த வரவேற்புக்கு நன்றி. இப்பொழுது வேலைக்காக நீண்ட தூரப் பயணம் செய்யவேண்டி இருப்பதால், வார நாட்களில் ஏறத்தாழ அரை மணி நேரம் வரை தான் ஓய்வு நேரம் கிட்டுகிறது. தேங்கிக் கிடக்கும் சொந்த வேலைகளை வார இறுதி நாட்களில் செய்யவேண்டி இருப்பதால் அந்த நாட்களிலும் நேரம் அதிகம் கிடைப்பதில்லை. சென்ற இரண்டு வாரங்கள் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கைக்குச் சென்றிருந்தேன். எவ்வளவுதான் நேரப் பிரச்சினை இருந்தாலும் சிறிது நேரம் தமிழ் விக்கிக்கு வந்து அண்மைய மாற்றங்கள், ஆலமரத்தடி பகுதிகளையாவது பார்க்காமல் இருப்பதில்லை. நிலைமை சற்றுச் சீராகும்போது மீண்டும் பழைய வேகத்துடன் பங்களிப்பேன். --- மயூரநாதன் 06:08, 17 பெப்ரவரி 2012 (UTC)
நல்ல தமிழ்
தொகு//சிறீக்காந்த், விக்கிமீடியா திட்டங்களில் சில அடிப்படைக் கொள்கைகள், கூட்டுறவுச் செயற்பாடுகளை வலியுறுத்துகிறோம். இயன்ற வரை நல்ல தமிழ் என்ற கொள்கையும் உண்டு.// இதனை என்னிடம் கூறியதற்கு காரணம் என்ன? ஃபாசிசம்,கோமாளித்தனம் போன்ற சொற்கள் என்த ஊரில் நல்ல தமிழ் இல்லை என்று சொல்லுங்கள்? ஸ்ரீகாந்த் 15:38, 23 பெப்ரவரி 2012 (UTC)
- சிறீக்காந்த், மீடியாவிக்கி மென்பொருளை ஒரு பெருவணிக நிறுவனத்தின் உள் பயன்பாட்டுக்குக் கூடப் பயன்படுத்தலாம். அவர்கள், எடிட் செய், சேவ் செய், ஃபைலை அப்லோடு செய் என்று தமிங்கிலம் கலந்து கூட மொழிபெயர்க்க முனையலாம். இதுவே பயனருக்கு இலகுவாக இருக்கும் என்று கூட நினைக்கலாம். இவ்வாறு, மொழிபெயர்ப்பு குறித்த பல்வேறு அணுகுமுறை உள்ளோர் கூடும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் நல்ல தமிழ் என்னும் கொள்கையை Translatewikiயில் வலியுறுத்துவது சிரமமாக இருக்கும். இப்படிச் சிக்கல்கள் வரும் போது, Assume good faith, Be civil போன்ற கொள்கை வழிகாட்டல்கள் இல்லாவிட்டால், நிலைமை இன்னும் சிக்கலாகும். இந்தச் சிக்கலைத் தான், நீங்கள் இத்திட்டத்தை முன்வைப்பவர் என்னும் முறையில் உங்களை முன்வைத்துக் குறிப்பிட்டேன். மற்றபடி, உங்களின் மற்ற தனிப்பட்ட கருத்துகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நன்றி.--இரவி 18:43, 23 பெப்ரவரி 2012 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. எடிட் செய், சேவ் செய், ஃபைலை அப்லோடு செய் -> அது மொழிபெயர்ப்பே அன்று :) ஸ்ரீகாந்த் 19:30, 23 பெப்ரவரி 2012 (UTC)
தொழில்முறையாகவே இப்படி மொழிபெயர்ப்பவர்கள் இருக்கிறார்கள் :(. தமிழ் வரலாறு காரணமாக நாம் இயல்பாகவே இயன்ற வரை நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். ஆனால், இந்தி முதலான மொழிகளில் நிறைய நுட்பச் சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே எழுதுபவர்கள் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, Blogஐ பிளாகு என்றே சொல்கிறார்கள். நாம் நெடுங்காலமாகவே வலைப்பதிவு என்று சொல்கிறோம்.--இரவி 19:34, 23 பெப்ரவரி 2012 (UTC)
--Madhavan.elango (பேச்சு) 21:58, 1 மார்ச் 2012 (UTC)==நன்றி==
வரவேற்புக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, இரவி.
நான் ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதே சமயம் விடுபட்ட முக்கியமான தலைப்புகளிலும் புதிய கட்டுரைகளை எழுத விரும்புகிறேன். இன்று "இசுக்கிரம்" (Scrum) என்ற கட்டுரையை மேம்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
நாம் தொடர்பிலிருப்போம்.
சந்தேகம்
தொகுவணக்கம் இரவி.. எனது கணக்கு sul sq விக்கியில் சேர வில்லை.. ஏற்கனவே அங்கே அப்படியொரு பயனர் இருக்கிறார் என நினைக்கிறேன்.. அந்த விக்கியில் புகுபதிகை செய்யவும் இயலவில்லை.. இவர்களில் யாரவது ஒருவரிடம் கேட்க சொன்னார்கள்.. என்னவென்று கேட்பது.. முதலில் அங்கே வேறு பெயரில் கணக்கு உருவாக்கி பிறகு இந்த கணக்குடன் இணைக்க (usurp) சொல்ல வேண்டுமா? அல்லது இங்கே கோர வேண்டுமா? ஏனெனில் அந்த மூவரும் அவ்விக்கியில் ஜனவரி 15க்கு பிறகு தொகுத்ததாக தெரியவில்லை.--shanmugam (பேச்சு) 10:15, 6 மார்ச் 2012 (UTC)
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
நன்றி நண்பரே! --இ.பு.ஞானப்பிரகாசன் (பேச்சு) 10:44, 8 மார்ச் 2012 (UTC)
விக்கிமேனியா தள அறிவிப்பு
தொகுஇரவி, "...வாசிங்கடன் டி.சியில் சூலை 12-15 இல் ...." என மாற்றம் செய்ய முடியுமா? முடிந்தால் செய்ய வேண்டுகிறேன். நன்றி.--செல்வா (பேச்சு) 19:22, 10 மார்ச் 2012 (UTC)
- செல்வா, அது translatewiki மூலமாக வரக்கூடிய நடுவண் அறிவிப்பு என நினைக்கிறேன். குறிப்பிட்டு எந்தக் கோப்பு என்று சொன்னீர்கள் என்றால், எனக்கு அணுக்கம் இருந்தால் உதவுகிறேன்--இரவி (பேச்சு) 19:28, 10 மார்ச் 2012 (UTC)
- திரான்சிலேட்டு விக்கியில் சூலை என்பதை மாற்றுவதால் குழப்பம் வரும் என்று கூறி முன்னர் செய்த திருத்தத்தை மீளமைத்து உள்ளனர் (இதற்கான சரியான காரணம் இன்று வரை எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. இங்கே கொடுத்த விளக்கம் எனக்குச் சரியானதாகத் தெரியவில்லை; மாறி என்பதன் அடிப்படைக் கருத்தையே செயலிழக்கச் செய்கின்றது இது. வாசிங்டன் என்பது எங்கிருக்கின்றது என்று தெரிந்தால் தெரிவிக்கின்றேன். திரான்சிலேட்டு விக்கி எனில் நானும் மாற்றவும் முடியும். ஆனாலும் இணைப்பு முறிந்துவிடுகின்றது என்னும் காரணமும் முன் வைக்கக்கூடும். --செல்வா (பேச்சு) 20:08, 10 மார்ச் 2012 (UTC)
- (பேச்சுப் பக்கம் பின்தொடருபவர்) translatewiki மென்பொருட்களை மட்டுமே மொழிபெயர்க்கும் தளம். விக்கிமீடியா அறிவிப்புகள் மேல் விக்கியில் மொழிபெயர்ப்பு வேண்டுகோள்கள் மூலம் மொழிபெயர்யக்கப் படுகின்றது. meta:Wikimania_2012/CentralNotice பக்கத்தில் மொழிபெயர்ப்புக்கள் உள்ளன. ஆனால் இதை மாற்றக் கூடாது என்பது என் கருத்து.
- translatewiki யில் ஏன் மாற்றக் கூடாது : அது ஒரு மென்பொருளை மொழிபெயர்க்கும் தளம். உலகளாவிய தமிழ் மக்களுக்காக மொழிபெயர்க்கப்ப்டுவதால், அவர்கள் தமிழ் வழக்கில் இன்றும் ஜூலை என்றே பயன்படுத்துவதால்("தமிழ் ஆசான்கள்/காப்பாளர்கள்" உட்பட) அது பயன்படுத்த வேண்டும். விக்கிப்பீடியா சமூகத்தில் மாதங்களைப் பொருத்த வரை மட்டும் இணக்கம் இருப்பதால், நாம் இங்கு தனிப்பட்ட செய்திகளின் மூலம் அவற்றை மாற்றியுள்ளோம்.
- இந்த செய்தியை ஏன் மாற்றக்கூடாது : இது விக்கிப்பீடியர்களை மட்டும் சென்றடைய வேண்டிய செய்தியில்லை, ஆகையால் சூலை என்று மாற்றுவது என்பது இந்த அறிவிப்பின் தாக்கத்தை விக்கிப்பீடியா கிரந்த வழக்கு தெரியாமல் இருக்கும் ஒருவரை குழப்பக்கூடும்.
- பி.கு, இது பற்றி (தேவைப்பட்டால்) விவாதிக்க நாம் ரவியின் பேச்சுப் பக்கத்தை பயன்படுத்தாமல், வேறு எங்காவது விவாதித்தால் பிற்காலத்தில் தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கும். ஸ்ரீகாந்த் (பேச்சு) 16:01, 11 மார்ச் 2012 (UTC)
- நீங்கள் மேலே சொன்ன இரண்டு கூற்றுங்களும் சரியானதல்ல!! சூன், சூலை என்று எழுதுவோரும் ஜூன் ஜூலை என்று எழுதுவோரும் உள்ளனர். சரியான தமிழ் முறை, தமிழ் எழுத்துகளில் எழுதுவதே. மேலும் அம்மாதங்களில் ஒலிப்பு பல மொழிகளில் பலவாறு உள்ளன. திரான்சிலேட்டு விக்கியில் முறைப்படி உரையாட ஒரு குழுமம் இல்லை. விக்கிப்பீடியாவில் உள்ளது போன்ற அறவொழுக்க வழிமுறைகள் ஏதும் இல்லை (இது வரை). ஆகவே முதன்மைத்தளமாக விளங்கும் தமிழ்விக்கிப்பீடியாவில் வழங்கும் முறைகளை அங்கு முதன்மைப் படுத்தி இடுவதே முறை. திரான்சிலேட்டு விக்கியைப் பயன்படுத்தும் பிற திட்டங்கள் வேண்டும் எனில் அவர்கள் திட்டத்துக்குள் மற்றிக்கொள்ளலாம். முதலில் கூறப்பட்டது "நுட்பக்காரணம்" இப்பொழுது நீங்கள் சொல்வது "கருத்தியல் கோட்பாடு". இவற்றை முறைப்படி உரையாட விக்கிப்பீடியா போன்ற களங்கள் உள்ளனவா? "தனிக்கருத்து" (opinion) என்றால் பலரும் பலவும் கொள்ளலாம், ஆனால், "பொது" முறையில் வைத்தல் என்றால் அறிவடிப்படையான, அற அடிப்படையான முறைமை வேண்டும். ஊடகங்கள் இன்ஜினியர் என்று எழுதினால் அப்படித்தான் எழுத வேண்டும் என்பது போல உரையாடினாலோ, சிறுபான்மையரே இணைய வசதி பெற்ற இந்நாளில் கூகுள் முதலானவற்றைன் உதவி கொண்டு அறுதியிட்டுச் சிலவற்றைக் கூறுவதோ பொருந்தாது. திரான்சிலேட்டு விக்கி விக்கிப்பீடியாவுக்கு மட்டும் அல்ல என்பதும் தெரிந்த ஒன்றே. ஆனாலும் தமிழ்விக்கிப்பீடியாவை முதன்மைக் களமாகக் கொண்டு திரான்சிலேட்டு விக்கியில் இடுவதே பொருந்தும் (வேறு பொதுவான முறைகள் இருந்தால் தெரிவிக்கவும்). இவற்றை இங்கு இரவியின் பேச்சுப் பக்கம் அன்றி வேறு இடத்தில் கருத்தாடுதல் எனக்கும் உடன்பாடே. --செல்வா (பேச்சு) 17:20, 11 மார்ச் 2012 (UTC)
- இங்கு உரையாடலைத் தொடர்ந்துள்ளேன். --இரவி (பேச்சு) 20:24, 11 மார்ச் 2012 (UTC)
ஏழாண்டுகள் நிறைவு நல்வாழ்த்துகள்
தொகு- இரவி உங்கள் விக்கித் தொண்டு ஏழாண்டுகள் நிறைந்துள்ளது என்று அறியும் பொழுது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! ஆலமரத்தடியிலும் ஒரு குறிப்பை இட்டுள்ளேன். மேன்மேலும் செழிப்பாக உங்கள் தொண்டும் வழிகாட்டலும் தொடர நல்வாழ்த்துகள்.--செல்வா (பேச்சு) 20:39, 10 மார்ச் 2012 (UTC)
- இரவி, உங்கள் பங்களிப்பால் விக்கியும் வளர்ந்தது, நீங்களும் வளர்ந்தீர்கள் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. பயனர்களுக்குத் தொழில்நுட்ப உதவியளித்து, வழிகாட்டி, அவர்கள்தம் எழுத்துத் திறமை மேம்படுவதற்கும் துணைசெய்து வருகின்றீர்கள். உங்கள் சீரிய பணி தடையின்றி தொடர்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்!--பவுல்-Paul (பேச்சு) 20:06, 10 மார்ச் 2012 (UTC)
- இரவி, இல்லறத்தில் ஏழாண்டு அரிப்பு என்று (ஆங்கிலச் சொல்லாடல்) அன்பில் தொய்வு ஏற்படுவதாகக் கூறுவார்கள்.:) விக்கிபாற் கொண்ட உங்கள் அன்பு குன்றாதிருக்கட்டும். இந்த ஏழாண்டுகளில் மிகச்சிறந்தமுறையில் தமிழ்விக்கியின் நிர்வாகக் கட்டமைப்பிற்கும் தரம் பேணலுக்கும் சீரிய பங்களித்துள்ளீர்கள். பல பிணக்குகளில் இருநிலைகளுக்கும் இடையே பொதுவான தீர்வு காண விழைந்துள்ளீர்கள். ஆதர்சத்திற்கும் நிதர்சத்திற்கும் (சட்டென்று தமிழ்ச்சொல் வரவில்லை..மன்னிக்க!) பாலமாக அமைந்திருந்தீர்கள். என்னைப் போன்றவர்களை பலரை பதிவுலகிலிருந்து இங்கு கொணர்ந்து வழிகாட்டியுள்ளீர்கள். வாழ்க உங்கள் விடாமுயற்சி !! வளர்க உங்கள் சீரிய பணி !!--மணியன் (பேச்சு) 01:36, 11 மார்ச் 2012 (UTC)
- இரவி, தங்கள் விக்கிப்பணி மென்மேலும் சிறப்பாகத் தொடர எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 21:25, 10 மார்ச் 2012 (UTC)
- ஏழாண்டுகளாக விக்கிப்பணியில் அர்பணித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு இதயங் கனிந்த வாழ்த்துக்கள்! பாராட்டுகள்! மேன்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:29, 10 மார்ச் 2012 (UTC)
- அட ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டனவா? வாழ்த்துகள் இரவி. :) தொடர்ந்து உங்கள் பணியும் கருத்தும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்க்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:50, 11 மார்ச் 2012 (UTC)
- இரவி,தொடரட்டும் தங்கள் விக்கிப் பயணம்... நல்வாழ்த்துக்கள். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:59, 11 மார்ச் 2012 (UTC)
- உங்கள் விக்கிப்பணி தொடர வாழ்த்துக்கள். விக்கிக்கு வெளியே நடக்கும் பட்டறைகள் / கூட்டங்களை அறவே புறக்கணிக்க வேண்டாம், அவ்வப்போது என்னைப் போல் யாராவது அகப்படுவார்கள். :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 15:35, 11 மார்ச் 2012 (UTC)
- +1 (ஏழு ஆண்டுகளா.... ;-))--சோடாபாட்டில்உரையாடுக 18:01, 11 மார்ச் 2012 (UTC)
- இரவி,வணக்கம்! நீங்கள் இங்கு ஆற்றிவரும் நற்பணிகளுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன்
(பேச்சு) 18:13, 11 மார்ச் 2012 (UTC)
- தொடக்க நாட்களில் இருந்து ஏறத்தாழ இடையறாது பங்களித்து வரும் இரவின் விக்கிப்பணி இன்றோடு ஏழாண்டுகள் நிறைவு அடைந்து, எட்டாவது ஆண்டு தொடங்குகின்றது. அவருடைய அரிய பல பணிகளுக்கு நன்றியும் நல்வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய நாட்களில் மயூரநாதன் முதலிலும் பின்னர் இரவி, சுந்தர், சிவக்குமார், உமாபதி, கோபி, நற்கீரன், கனகு சிறீதரன் முதலோனோர் கூடி உழைத்துப் பின்னர் பலரும் வந்து பலவாறு வளர்ந்துள்ளது தமிழ் விக்கிப்பீடியா இன்று. அடித்தளம் அமைத்தவர்கள் இன்றும் உடன் இருந்து பங்களிப்பது பேருவகை அளிப்பது. தனி வாழ்வில் நல்வெற்றியும் உயர்ச்சியையும் எட்டவும், விக்கிப்பீடியா, அதன் உறவுத்திட்டங்களிலும் தொடர்ந்து உங்கள் பங்களிப்பு மேன்மேலும் செழிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். --செல்வா (பேச்சு) 20:29, 10 மார்ச் 2012 (UTC)--செல்வா (பேச்சு) 02:45, 11 மார்ச் 2012 (UTC)
- இரவியின் விக்கிப்பணி ஏழு ஆண்டுகள் முடிந்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறதா? மகிழ்ச்சி. எட்டாம் ஆண்டில் மேலும் பல விக்கிப் பணிகளை மேற்கொண்டு பல்வேறு சிறப்புகளைப் பெற்றிட வாழ்த்துகிறேன். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:16, 11 மார்ச் 2012 (UTC)
- வாழ்த்துக்கள் இரவி! தங்கள் பணி மேன்மேலும் தொடர்ந்து, மேலும் பல சிறப்புகளையும் பெற இறைவனை வேண்டுகிறேன்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:00, 11 மார்ச் 2012 (UTC)
- +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:32, 11 மார்ச் 2012 (UTC)
- விக்கிதிட்டங்களில் ஓரளவு நான் செயல்படுகிறேன் என்றால், அதற்கு முதன்மைகாரணம் இரவி. ஒருவேளை இரவி இல்லையென்றால், நான் கணினி, இணையம் என்பதனை பற்றி அறியாமலேயே, என் வாழ்க்கையைக் கடந்திருப்பேன். என்னையும் தொடர்ந்து அணுகி, என்னை மேம்படுத்தியமைக்கு நன்றி கூறி ,வாழ்த்த விரும்புகிறேன். வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
- வாழ்த்துக்களும் வணக்கங்களும் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 06:32, 11 மார்ச் 2012 (UTC)
- ஒரு புத்தகம் வெளியிட்டுவிட்டு வெட்டி விளம்பரம் தேடிக்கொள்ளும் நம்மவர்களுக்கு மத்தியில் வெளி உலகிற்கு தெரியாமலே ஏழு வருடம் தமிழ் தொண்டாற்றிவரும் ரவி அவர்களுக்கும் அவர் போன்ற இன்னம் பல ஜாம்பவான்களுக்கும் கண்டிப்பாக இந்த தமிழ் கூறும் நல்லுலகம் கடமைப்பட்டுள்ளது. ரவி அவர்களுக்கு இணையத் தமிழ் தாத்தா என்று கூட பட்டம் தரல்லாம். :P வாழ்த்துக்கள் ரவிக்கு.. --எஸ்ஸார் 10:45, 11 மார்ச் 2012 (UTC) விருப்பம்:)
- வாழ்த்துக்கள் இரவி. தங்கள் பணி தொடரட்டும். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:56, 11 மார்ச் 2012 (UTC)
- வாழ்த்துக்கள்! உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். --கிருஷ்ணபிரசாத் /உரையாடுக 11:12, 11 மார்ச் 2012 (UTC)
- வாழ்த்துக்கள் இரவி. ஏழாண்டுகள் என்பது கணிசமான காலம். இந்த ஏழாண்டு காலத்திலும் பல முனைகளிலிருந்தும் தமிழ் விக்கிக்குக் காத்திரமான பங்களிப்புச் செய்தவர்களுள் இரவி மிகவும் முக்கியமானவர். விக்கியின் நடைமுறைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு யாராயிருந்தாலும், தனக்குச் சரியென்று பட்டதை நேரடியாகவே எடுத்துக்கூறும் துணிவும், அதேபோல, மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புக்கொடுத்து ஏற்றுக்கொள்வதிலும் பிற பயனர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர். பல ஆண்டுகளுக்கு முன்பே இணையத்துக்கு வெளியேயான தமிழ் விக்கிப் பணிகளில் ஈடுபட்டுத் த.வி.க்குப் புதிய பயனர்களை ஈர்ப்பதில் முன்னோடியாகத் திகழ்பவர். அவருடைய பணி நீண்டகாலம் தொடர வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 17:58, 11 மார்ச் 2012 (UTC)
உளங்கனிந்த நன்றிகள்!
தொகுஇரவி, என்னுடைய அறிமுகக் குறிப்பில் தேவையான திருத்தங்களை செய்துகொண்டதற்கு நன்றிகள்! பணியின் நெருக்கடி காரணமாக, என்னால் அந்தத் தொகுப்பினை உடனடியாக செய்து முடிக்க இயலவில்லை. தொகுத்தல் முடிந்ததும் உங்களுக்கு தெரிவிக்க இயலாமல் போனதற்கு இணைய இணைப்பில் இருந்த கோளாறு காரணமாகும். இந்த இரண்டையும் பொறுத்துக் கொள்ளவும். (நீங்கள் அவ்வப்போது அத்தொகுப்பின் மீது ஒரு கண் வைத்திருந்ததை என்னால் உணரமுடிகிறது, அதற்கும் நன்றி!)
உங்களின் 'கூட்டு முயற்சிக் கட்டுரை' மற்றும் 'முக்கிய கட்டுரைகளை உருவாக்குதல்' போன்ற திட்டங்கள், நல்ல பலன்களை தரத்தக்கவை. பாராட்டுகள்! ஆவலிருந்தும் என்னால் தற்சமயம் இத்திட்டங்களில் பங்கு பெற இயலவில்லை. விரைவில் பங்களிக்க முயல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:14, 12 மார்ச் 2012 (UTC)
ஒன்றிணைக்க வேண்டாம்
தொகுபல்வேறு இசுலாமிய தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளை பட்டியலாக்கும் படி வார்ப்புரு இட்டிருக்கிறீர்கள். அப்படி ஆக்க வேண்டாம் என்று கோருகிறேன். சில நபர்களின் notability தொடர்பாக கேள்விகள் இருப்பினும் பலரின் கட்டுரைகள் தகுந்தவையே. அனைத்தும் 3 வரிகளுக்கு மேல் உள்ளவை. ஒரு மேற்கோளும் உண்டு. இசுலாமியத் தமிழ் இலக்கியம் பற்றி அரிதாகவே மேற்கோள் கிடைப்பதாலும் இதைக் கருத்தில் கொள்ளவும். இவ்வாறு ஒன்றிணைப்பாதாயின், பொது விதி எது, அது முழுமையாக அமுல்படுத்தப்படுமா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இத் தருணத்தில் அத்தகைய உரையாடல்கள் வேண்டாம் என்பது என் கருத்து. நன்றி. --Natkeeran (பேச்சு) 03:04, 14 மார்ச் 2012 (UTC)
- நற்கீரன், இந்த விசயம் குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே முறையாக உரையாடி, வாக்கெடுப்பு நடத்தி முடித்து விட்டோம். பாதி பேர் நீக்கலாம் என்றார்கள். பாதி பேர் நீக்க வேண்டாம், பட்டியல் ஆக்குங்கள் என்றார்கள். அதற்கு மதிப்பளித்தே பட்டியல் ஆக்க அறிவிப்பு இட்டுள்ளோம். கட்டுரையில் உள்ள முழு தகவலையும், எந்த வரியையும் நீக்காது, அப்படியே தான் பட்டியல் பக்கத்தில் இடப் போகிறோம். முன்பு தனிக்கட்டுரையாக இருந்தது, இப்போது ஒரு கட்டுரையின் துணைத்தலைப்பாக இருக்கும். குறிப்பிடத்தக்கமை குறித்த போதுமான சான்றுகள் கிட்டியவுடன் மீண்டும் தனிக்கட்டுரை ஆக்கிக் கொள்ளலாம். எனவே, அரிதான துறை தகவல் இழப்பு என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.
- கட்டுரைகளை மேம்படுத்தவும், கருத்து சொல்லவும் புன்னியாமீனுக்கு உரிய நேரம் வழங்கினோம். தன் கட்டுரைகளை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று ஒதுங்கிக் கொண்டார். தற்போது, தனி மடலில் பல விக்கிப்பீடியர்களைத் தொடர்பு கொண்டு இது குறித்து முறையிட்டு வருகிறார். குறிப்பிட்ட மூன்று பயனர்கள் சதித் திட்டம் தீட்டி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக எழுதியுள்ளார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. வழக்கமான விக்கி நடைமுறைகளைக் கூட தனக்கு நேரும் இழுக்காகக் கருதுகிறார். நேர்மையாக, வெளிப்படையாக, நேரடியாக விக்கியில் உரையாடாமல் அனுதாபம் தேட முயல்கிறார். ஒரு சிலர் விலகுவார்கள், விக்கிப்பீடியாவை எதிர்ப்பார்கள் என்பதற்காக வழக்கமான விக்கி நடைமுறைகளை விட்டுத் தர முடியாது. உள்ளடக்கம் தொடர்பாக இவ்வாறு தனிமடலில் பஞ்சாயத்து வைப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் எதிர்காலத்துக்கு நல்லதன்று. அருள் கூர்ந்து இது தொடர்பாக மேற்கொண்டு என்னைத் தனிப்பட அணுக வேண்டாம். நீக்கல் வாக்கெடுப்பில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றால் தங்கள் கருத்தை அங்கே தெரிவிக்கவும். நான் அங்கு தொடர்கிறேன்.--இரவி (பேச்சு) 06:39, 14 மார்ச் 2012 (UTC)
- ரவி, எனக்கு இந்த வாக்கெடுப்பில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் பொதுவாக ஒரு கருத்து.முன்மொழிந்த நீங்களே முடிவு கூறியுள்ளதை இனிமேல் வரும் சந்தர்ப்பங்களில் தவிர்க்கலாம். பார்க்க en:WP:UNINVOLVED. ஸ்ரீகாந்த் (பேச்சு) 10:23, 14 மார்ச் 2012 (UTC)
சிறீக்காந்த், ஆங்கில விக்கிக் கொள்கையைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இந்த வாக்கெடுப்பைப் பொறுத்தவரை, நீக்கலாம் - பட்டியல் ஆக்கலாம் என்பதே பொதுவான இரு நிலைப்பாடுகள். நான் முன்மொழிந்த நிலைப்பாட்டுக்கு எதிரான, வளர்முகமான நிலைப்பாட்டையே இணக்க முடிவாக முன்வைத்து உள்ளேன். அதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து உள்ளதா என வினவி, பொறுத்திருந்தே முடிவைச் செயற்படுத்தி உள்ளேன். எனவே, இதில் நல முரண் இல்லை. ஆங்கில விக்கி நடைமுறைகள் பொதுவாக ஏற்புடையன. ஆனால், தமிழ் விக்கி போன்ற சிறிய சமூகங்களில் உரையாடல்களில் ஈடுபட்டுள்ளோரே நடுநிலையான முடிவை நோக்கி நகர்வது வழமையே. இரு பக்கமும் தங்கள் நிலைப்பாடுகளில் இருந்து மாறாத இழுபறி நிலையில், தேவைப்பட்டால் பிறரின் உதவியை நாடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 11:21, 14 மார்ச் 2012 (UTC)
- பட்டியலில் சேர்க்கலாம் என்று பாதிப்பேர் சம்மதித்தார்கள் என்று கூறுவது தவறு. அதற்கான சான்றுகளைத் தரவும். நான் அப்படிச் செய்யவில்லை. "குறிப்பிட்ட மூன்று பயனர்கள் சதித் திட்டம் தீட்டி தன்னை அவமானப்படுத்தி விட்டதாக எழுதியுள்ளார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு" என்ற அவர் கருத்தில் எந்தவிதத்திலும் உண்மையில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளேன். வெவ்வேறு பயனர்கள் தமிழ் விக்கியின் அனுபவங்கள் வெவ்வேறு முறையில் அமைகின்றன என்பதை புரிதல் வேண்டும். அவர்களுக்கும் இருக்கும் perception issues பெறுமையாக தீர்க்க வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 13:11, 14 மார்ச் 2012 (UTC)
நற்கீரன்,மொத்தம் வாக்கு அளித்தவர்கள் ஒன்பது பேர். முன்மொழிந்த என்னையும் சேர்த்து நீக்க வேண்டும் என்று சொல்லி உள்ளோர் ஐவர். சோடாபாட்டில் பட்டியல் ஆக்க வாக்கிட்டுள்ளார். சுப்பிரமணி பட்டியல் ஆக்க ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். நீக்க வேண்டும் என்று முன்மொழிந்தோரே கூட பட்டியல் பக்கத்துக்காவது நகர்த்தலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக, 7 பேர் பட்டியல் ஆக்கத்துக்கு இசைவாகவே கருத்தளித்துள்ளனர். 7/10 பாதிக்கு மேலா இல்லையா? வாக்கெடுப்பில் நீங்கள் மட்டுமே நீக்க வேண்டாம் என்று கூறி உள்ளீர்கள். அவசரப்பட்டு நீக்க வேண்டாம் என்று கலை, சஞ்சீவி கூறியுள்ளார். இதன் பொருள் அவகாசம் தந்து பட்டியல் பக்கத்துக்காவது நகர்த்தலாம் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறேன். தமிழ் விக்கி வளரும் விக்கி. எல்லா விசயங்களுக்கும் முற்சான்று இருக்காது. தேவையான இடங்களில் நாமே இணக்க முடிவும், திரும்ப திரும்ப ஒரு பிரச்சினை வரும் போது அது தொடர்பான கொள்கைகள் வகுப்பதும் நீங்கள் அறியாதது அல்லவே.
புன்னியாமீனின் பேச்சுப் பக்கத்தில் பல விளக்கங்களை அளித்துள்ளேன். ஒரு மாதத்துக்கு முன்பு என்னை நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினார். இதற்கு மேலும் விளக்க எனக்கு நேரமும் பொறுமையும் இல்லை. மன்னிக்கவும். --இரவி (பேச்சு) 13:32, 14 மார்ச் 2012 (UTC)
- அப்படியானால், திரைப்படங்கள், துடுப்பாட்டுக் காரர்களின் கட்டுரைகளையும் முதலில் இணைக்கவும். தமிழ் எழுத்தாளர்களின் கட்டுரைகளை மட்டும் இணைப்பதில் விதி ஒழுங்கு இல்லை. ஒரு கொள்கை உருவாக்கும் குறிப்பான ஒரு விடயத்துக்காக மட்டும் உருவாக்கல் ஆகாது. அது பொதுவாகப் பயன்பட வேண்டும். இது அவ்வாற ஒரு செயற்பாடு அல்ல. இங்கு எந்தக் கொள்கையை முன்வைத்து இவ்வாறு ஒன்றிணைக்கப்படுகிறது. அந்தக் கொள்கைக்கு தமிழ் விக்கியில் ஏற்பு இருக்கிறதா என்று விளக்க வேண்டுகிறேன். இல்லாவிட்டால் சில பயனர்கள் விருப்பாத கட்டுரைகளை வாக்குப் போட்டு நீக்கிவிடலாம். --Natkeeran (பேச்சு) 13:49, 14 மார்ச் 2012 (UTC)
நற்கீரன், முதலில் முற்சான்று கேட்டீர்கள். வாக்கெடுப்புத் தரவுகள் கேட்டீர்கள். அவற்றைத் தந்தவுடன் மற்றவற்றை நீக்கி விட்டு இவற்றை நீக்குங்கள் என்கிறீர்கள் :) துடுப்பாட்டக்காரர்களுக்கு உரிய தரவுகளும், ஆங்கில விக்கி இணைப்புகளும் தந்துள்ளார். என்னால் அவற்றைச் சரி பார்க்க முடிவதால் அவற்றின் குறிப்பிடத்தக்கமையை ஏற்றுக் கொள்கிறேன். திரைப்படங்களும் இதே போன்றவையே. இரு வரிக் கட்டுரைகள் ஆனாலும், ஒவ்வொரு கட்டுரையிலும் தகவற் பெட்டி உள்ளது. ஆனால், இன்னார் இந்த தெருவில் வசிக்கிறார், பைண்டிங் தொழில் செய்கிறார் என்றெல்லாம் எழுதி அவரை ஒரு எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தினால் என்னால் நேரடியாக அந்தத் தெருவுக்குப் போய் விசாரித்து விட்டு வர முடியுமா? இக்கட்டுரைகளில் அவர்களது எழுத்தாக்கம் பற்றி எந்தத் தரவும் இல்லை. மற்ற தரவுகளை நீக்கினால் ஊருக்கு ஆயிரம் ஆட்களாவது அதே பெயரில் இருப்பார்கள். இவர்களை எப்படிக் குறிப்பிடத்தக்கவர்கள் என்று ஏற்பது? தயவு செய்து இது குறித்த தங்கள் கருத்துகளை நீக்கல்வாக்கெடுப்பு பக்கத்தில் இடவும். இதற்கு மேல் இவ்விசயத்தில் எனது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
//இல்லாவிட்டால் சில பயனர்கள் விருப்பாத கட்டுரைகளை வாக்குப் போட்டு நீக்கிவிடலாம். // நற்கீரன், இது தேவையிலாத அச்சம். இங்கு எந்தக் கட்டுரையையும் நீக்கவில்லை. பட்டியல் பக்கத்துக்கே நகர்த்துகிறோம். இது வரை சமூகத்தின் அறிவுக்கு எட்டாமலோ வலுக்கட்டாயமாகவோ எந்தக் கட்டுரையையும் நீக்கியதில்லை. இது தொடர்பான கொள்கை இல்லாதது தான் உங்கள் பிரச்சினை என்றால், கொள்கை முன்மொழிவை உருவாக்குகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 14:01, 14 மார்ச் 2012 (UTC)
- இரவி, ஏ. எம். ஹாஜா பந்தேநவாஸ் மஹமூது என்பவரும் ஏ. எம். ஹாஜா பந்தே நவாஸ் என்பவரும் முத்துவாப்பா மெயின்ரோடுவில் வசிக்கிறார்கள்; எழுத்தாளர்களாக இருக்கிறார்கள்; இலக்கிய ஆர்வத்தோடு இலக்கிய நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்கள். இருவரும் ஒரே ஆள்தானோ என எனக்கு ஒரு சந்தேகம் இருக்குதென்றாலும் ஒரே பெயரில் துடுப்பாட்டக்காரர்களும் திரைப்படங்களும் இருப்பது போல ஒரே தெருவில் இருக்கக் கூடாதா என்ன? இரண்டில் ஒன்றை நீக்கக் கோரினால் ஒரே பெயரில் இருக்கும் துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளையும் திரைப்படக் கட்டுரைகளையும் முதலில் நீக்கக் கோரப்படலாம். நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை. கோபி (பேச்சு) 14:57, 14 மார்ச் 2012 (UTC)
- நற்கீரன், தகவல் இழப்பு ஏதும் இல்லை என்று இரவி முதலிலேயே கூறிவிட்டார். தனித்தனி கட்டுரைகள் இருக்கத்தேவையில்லை என்பது தெளிவில்லையா உங்களுக்கு? என்ன நற்கீரன்?!! சொல்லப்போனால் துடுப்பாட்டக்காரர்களுக்கும் கூடத் தனித்தனி கட்டுரைகள் தேவையே இல்லை. தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்கள் என்று ஒரு பக்கம் உருவாக்கி அங்கு முக்கியத் தரவுகள் மட்டும் கொடுத்தால் போதும். குறிப்பிடத்தக்க புகழ்பெற்ற ஆட்டக்காரர்களைப் பற்றி விரிவாக தனிக்கட்டுரைகள் எழுதலாம் (ஒவ்வொரு நாட்டில் இருந்தும்). திரைப்படங்கள் கூட இப்படித்தான். ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு பட்டியல்/அட்டவணையில் இருந்தால் போதும். குறிப்பிடத்தகுந்த, ஏதேனும் சில அளவீடுகளில் மிகச் சிறப்பு வாய்ந்த, திரைப்படங்களாக இருந்தால் தனிக்கட்டுரையாக விரிவாக எழுதலாம். இவை என் தனிக்கருத்துகள்தாம். ஒரு கலைக்களஞ்சியத்தில் குறிப்பிடத்தகுந்தமை என்பதை எதிர்பார்ப்பது மிக முக்கியம். ஆங்கில விக்கியில் இருந்தாலும் இங்கே நாம் இட வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. ஆங்கில விக்கியிலே இருந்துவிட்டால் குறிப்பிடத்தக்கமை நிறுவிவிட்டதாகக் கொள்ளவும் தேவை இல்லை (பொதுவாக). "இருந்துவிட்டுப் போகட்டுமே" என்றால் மிகப்பலவும் சேர்த்து இன்னும் நீர்த்துப்போகச் செய்யலாம். துடுப்பாட்டக்காரர்கள், திரைப்படம் ஆகியவை பற்றி முக்கியமான அனைத்துத் தகவல்களும் இருக்கும் ஆனால் தனிக்கட்டுரைகளாக இரா அவ்வளவுதான் வேறுபாடு. இவை என் தனிக்கருத்துகள்தாம். ஆனால் இரவி முன்னெடுத்துச் செய்தது மிகவும் சரியான ஒன்றே. --செல்வா (பேச்சு) 15:10, 14 மார்ச் 2012 (UTC)
செல்வா, கோபி மற்ற பல துறைக்கட்டுரைகளிலும் குறிப்பிடத்தக்கமை, தனிக்கட்டுரைகளாக இருக்க வேண்டிய அவசியம் குறித்து எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால், அவற்றில் அடிப்படை தரவுகளாவது உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதற்காக நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அது ஒரு குறைந்தபட்ச குறிப்பிடத்தக்கமைக்கான, தகவல் உறுதிப்படுத்துவதற்கான சான்று. எழுத்தாளர்கள் குறித்த இக்கட்டுரைகளுக்கே இவ்வளவு உரையாட வேண்டியுள்ளது அயரச் செய்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே என்று போக வேண்டியது தான். நாம் ஆக்குவது கலைக்களஞ்சியமாக இல்லாவிட்டால் என்ன ஒரு தொலைபேசி அட்டவணை போல் இருந்து விட்டுப் போகட்டும் :( --இரவி (பேச்சு) 15:44, 14 மார்ச் 2012 (UTC)
- இரவி, அயர்ச்சி அடையாதீர்கள்! நன்கு அறிந்த நற்கீரன் போன்றவர்களே, எந்தத் தகவல் இழப்பும் இல்லை என்று அறிந்த பின்னும் இப்படி உரையாடுவது வியப்பளிக்கின்றது என்றாலும், சற்று பொறுமையாகவே அணுக வேண்டியுள்ளது. " எழுத்தாளர்கள் குறித்த இக்கட்டுரைகளுக்கே" என்கிறீர்கள், இதற்கான தக்க சான்றுகள் ஏதும் கூட இல்லை. பலரும் பல இடத்திலும் ஏதாவது எழுதியிருப்பார்கள், அதனால் எல்லோரையும் "எழுத்தாளர்" என்று குறிப்பிட முடியுமா? அப்படியே எழுத்தாளர்கள் என்றாலும் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் தனித்தனி கட்டுரை இருக்க வேண்டுமா (பட்டியலில் இருந்தாலே போதுமே!!)? அரிய ஆக்கங்கள் செய்த, பெரும்புகழ் ஈட்டிய எழுத்தாளர்களைப் பற்றித் தனிக்கட்டுரைகள் இருப்பது தகும். இன்ன தெருவிலே வசிக்கும் இன்னின்னாருக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்பது போன்ற மிகப் பொதுப்படையான தகவல்கள் கொண்ட தனிக்கட்டுரைகள் வேண்டுமா ? அதுவும் கருத்துக் கணிப்பு செய்து, தகவல் சேர்க்கத் தக்க கால இடைவெளி தந்து, பட்டியலுக்கு நகர்த்தும் போதும்கூட மறுப்புக் கூறுவது எனக்கு வியப்பாகவே உள்ளது! --செல்வா (பேச்சு) 16:42, 14 மார்ச் 2012 (UTC)
செல்வா, இதே இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள் குறித்த கட்டுரைகளில் அவர் ஏதேனும் ஒரு நூல் எழுதியிருக்கிறார் என்று குறிப்பு இருந்தால் கூட வார்ப்புரு இடாமல், நகர்த்தாமல் அப்படியே தான் வைத்து உள்ளோம். ஒரு நூல் எழுதியவர் எல்லாம் எழுத்தாளரா, யார் எழுத்தாளர், குறிப்பிடத்தக்க எழுத்தாளர் யார் என்றெல்லாம் உரையாடத் தொடங்கினால் முடிவே இல்லாமல் போகும். ஆனால், என்ன எழுதினார் என்ற தகவலைக் கோருவது புறவயமான அடிப்படையான எதிர்பார்ப்பு. எனவே, இங்கு குறிப்பிடத்தக்கமை இல்லை, போதிய ஆதாரம் இல்லை என்பதற்கு முதல் போதிய அடிப்படை தகவல் இல்லை என்பதே முதன்மையான குறை. இதற்கே இவ்வளவு உரையாடி வேண்டி இருக்கும் போது, குறைந்தபட்ச தரவு, நம்பகமான ஆதாரம், ஆங்கில விக்கி இருப்பு உள்ள மற்ற கட்டுரைகளுக்கு நகர்த்தல் / நீக்கல் / பட்டியலாக்கல் உரையாடல் நடத்த எனக்குத் தெம்பில்லை. எனவே, இருந்து விட்டுப் போகட்டும் என்றே செல்ல வேண்டி இருக்கிறது.--இரவி (பேச்சு) 18:20, 14 மார்ச் 2012 (UTC)
திருத்தம் வேண்டி...
தொகுகட்டுரைகளை வேறு தலைப்பிற்கு நகர்த்தும்போது வரும் விவரக் குறிப்பில்.... நகர்த்தப் பட்டுள்ளது என வருகிறது. நகர்த்தப்பட்டுள்ளது என வரும்படி செய்யவும். நன்றி!
உதாரணம்: Ravidreams பயனரால் சண்முகநாதன், கோ. சண்முகநாதன் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:57, 16 மார்ச் 2012 (UTC)
ஹான் அரசமரபு
தொகுஹான் அரசமரபு என்பதை கிரந்தம் தவிர்த்து எப்படி எழுதலாம். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:26, 21 மார்ச் 2012 (UTC)
- ஆன் என்று எழுதலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்து, ஹ வரிசையில் தொடங்குவதாக இருந்தால், அதில் உள்ள உயிரெழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதுதல் வேண்டும். எ.க: ஹனுமன் => அனுமன்; ஹரன் => அரன்; ஹிந்து => இந்து; ஹோமர் (Homer)= ஓமர்; Herodotus = எரோடோட்டசு. பார்க்க: விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு#ஹ--இரவி (பேச்சு) 03:33, 21 மார்ச் 2012 (UTC)
தொழிற்புரட்சி
தொகுவணக்கம் இரவி. தொழிற்புரட்சி கட்டுரையை விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். அதன் பேச்சுப்பக்கத்தில் தாங்கள் வினவியிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கட்டுரையிலிருந்து நீக்கிவிட்டு அதற்கேற்பத் தொகுத்துள்ளேன். சரிபார்க்கவும் நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:25, 1 ஏப்ரல் 2012 (UTC)
- முதற்பக்கக் கட்டுரைகளில் இட வேண்டிய வார்ப்புருக்கள் இன்னும் இடம்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:05, 2 ஏப்ரல் 2012 (UTC)
பார்வதி, மாற்றங்களுக்கு நன்றி. சரி பார்க்கிறேன். ஒரு கட்டுரை முதற்பக்கத்தில் இடம்பெற்ற பின்னரே அதன் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புரு இடுகிறோம். தற்போது இக்கட்டுரை பரிந்துரை நிலையிலேயே உள்ளது. வேறு ஏதேனும் வார்ப்புருவைக் குறிப்பிடுகிறீர்களா? நன்றி.--இரவி (பேச்சு) 05:14, 2 ஏப்ரல் 2012 (UTC)
- முதற்பக்கத்தில் இந்தவாரம் இடம் பெற்ற கட்டுரைகளையே குறிப்பிட்டேன். இன்று வார்ப்புரு இடப்பட்டது. பொதுவாக ஞாயிறன்றே இடம் பெறும். தென்காசி இப்பணியினைச் செய்கிறார் என நினைக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:43, 2 ஏப்ரல் 2012 (UTC)
ஓ.. சரி. ஏதேனும் பணிகள் விடுபட்டிருப்பது / காலம் கடந்திருப்பது கண்டால், நீங்களும் அதனை மாற்றிடலாம். நன்றி--இரவி (பேச்சு) 11:47, 2 ஏப்ரல் 2012 (UTC)
கிராஃபைட் - தமிழாக்கம்
தொகுகிராஃபைட் என்ற சொல்லுக்கு அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் காரீயம் என மொழிபெயர்ப்புத் தரப்பட்டுள்ளது. பொதுவாக tin வெள்ளீயம் என்றும் lead ஈயம்/காரீயம் எனவும் அழைக்கப்படுகிறது. நமது தமிழ் விக்கிப்பீடியாவிலும் தேடினால் இந்த பொருள்படவே பயன்படுத்தப்பட்டுள்ளது. விக்சனரியில் கிராஃபைட் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு கடுங்கரி, பென்சிற்கரி எனத் தரப்பட்டுள்ளன. ஆனால் காரீயம் என்ற தமிழ்ச்சொல்லுக்கு கிராஃபைட் என ஆங்கில இணைச்சொல் தரப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு பாடபுத்தக ஆதாரமும் (dead link) தரப்பட்டுள்ளது. எனக்கு கரியம் என்பதே தவறாக அச்சிடப்பட்டிருக்கலாமோ என்ற குழப்பம் உள்ளது. புதிய கட்டுரை துவங்கும் முன் அறிந்தவர்கள் இதனைத் தெளிவுபடுத்துவது நல்லது. --மணியன் (பேச்சு) 16:18, 2 ஏப்ரல் 2012 (UTC)
- எனக்கும் இதே குழப்பம் இருந்தது. விக்சனரியை அடிப்படையாக வைத்தே ஆங்கில விக்கி இணைப்பு தந்தேன். தற்போதைக்கு அண்மைய மாற்றத் தூண்டலில் இருந்து விலக்கி வைக்கலாம்--இரவி (பேச்சு) 18:24, 2 ஏப்ரல் 2012 (UTC)
இலங்கை வழக்கின்படி Lead என்பது ஈயம் என்றே அழைக்கப்படுகின்றது. நான் இப்போது தான் Lead என்பது காரீயம் என்பதைக் குறிப்பதாகக் கேள்விப்படுகின்றேன். அவ்வாறு எங்கேயும் பயன்படுத்தப்படுவதாக அறியவில்லை. Graphite என்பது காரீயம் என்றே இலங்கைப் பாடநூல்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. --மதனாஹரன் (பேச்சு) 09:54, 3 ஏப்ரல் 2012 (UTC)
நிர்வாகிகள் தேர்வு
தொகுசில இளம் பயனர்கள் மிகவும் துடிப்புடன் துப்புரவுப் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகி அணுக்கம் கொடுத்தால் சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என எண்ணுகிறேன். ஆனால் நிர்வாகி ஆனதும் முனைப்பு குறைவதையும் வரலாறூடாக காண்கிறோம். தாங்கள் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு பரிந்துரைக்க வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 16:34, 4 மே 2012 (UTC)
- பயனர்கள், நிர்வாகியாகத் தேர்வான பின்பு அவர்களின் பங்களிப்புகள் குறைந்து விடுவது முற்றிலும் உண்மை. எனவே நிர்வாகிக்குப் பரிந்துரை செய்பவர்கள் குறைந்தது இரண்டு வருடமாவது துடிப்புடன் பங்களிப்பவர்களை அடையாளம் கண்டு அதன் பின்னர் அவர்களை நிர்வாகி நிலைக்குப் பரிந்துரைக்கலாம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:31, 4 மே 2012 (UTC)
- மணியன், நினைவூட்டியதற்கு நன்றி. இயல்பாகவே, ஆண்டுக்கு குறைந்தது நான்கு புதிய நிருவாகிகளைத் தேர்ந்தெடுத்து வருகிறோம். தற்போது முனைப்பாக பங்களிப்பவர்களில் நிறைய பேர் பராமரிப்புப் பணிகளிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். அண்மைய மாற்றங்களைக் கண்காணித்துத் தேவையான மாற்றங்களைச் செய்ய கூடுதல் நிருவாகிகளுக்கான தேவையை உணர்கிறேன். அதே வேளையில், ஒரு கருத்து முரண் / பிணக்கு வருகையில் புதிய பயனர்கள் எவ்வாறு விக்கி நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு நிருவாகிக்கு உரிய பக்குவத்துடன் செயற்படுகிறார்கள் என்பதை அவதானித்து வாக்களிக்க இன்னும் சிறிது காலம் தேவை என்று நினைக்கிறேன். சூலை மாதத்திலோ குறுந்தட்டுத் திட்டம் நிறைவேறிய பின்னரோ இதனை முன்மொழிய எண்ணியுள்ளேன்.
- சுப்பிரமணி, நிருவாகி ஆவதன் காரணமாக முனைப்பு குறைகிறது என்று நான் எண்ணவில்லை. ஒருவரது பங்களிப்பு குறைவதற்குப் பல வாழ்க்கைச் சூழல் காரணங்கள் உள்ளன. சற்று ஓய்வில் உள்ளவர்கள் நேரம் கிடைக்கும் போது மீண்டும் வந்து பங்களிப்பதையும் காண்கிறோம். எனவே, இதன் பொருட்டு நிருவாகப் பொறுப்பு அளிப்பதைத் தாமதப்படுத்த நினைத்தால் மிகத் தவறாகும். ஒருவர் முனைப்பாகப் பங்களிக்கும் காலத்திலேயே இன்னும் சிறப்பாகப் பங்களிப்பதற்கான வாய்ப்பாக நிருவாக அணுக்கத்தைத் தருவதே நன்றாக இருக்கும். குறிப்பு: இது என் தனிப்பட்ட கருத்தே. அனைவரும் எப்போது வேண்டுமானாலும் உரியவர்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 18:55, 4 மே 2012 (UTC)
- இரவி, வாழ்க்கைச் சூழலில் பலரது பங்களிப்புகள் குறைந்து விட வாய்ப்புள்ளது என்கிற தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடே. தமிழ் விக்கிப்பீடியாவில் சோடாபாட்டில், கனக்ஸ், நற்கீரன் போன்றவர்களின் நிர்வாகப் பங்களிப்புகள் என்னை வியக்க வைத்துள்ளது. நம்மால் இப்படி செய்ய முடியவில்லையே...? என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வும் கூட உண்டு. தற்போது பயனர் நிலையிலேயே சிறப்பாகச் செயலாற்றும் தென்காசி சுப்பிரமணி, மதனாஹரன், சண்முகம்பி போன்றவர்களின் பங்களிப்புகள் என்னை வியக்க வைக்கின்றன. நிர்வாகப் பொறுப்புக்கு எப்போது வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். மேலும், நிர்வாகிகள் தேர்வில் தாங்களாகவே பரிந்துரை செய்து கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. என்பதை நானும் அறிந்தே இருக்கிறேன். பயனர் நிலையில் குறிப்பிட்ட காலம் தொடர்ந்து அதிகமாகப் பங்களிப்பு செய்பவர்கள், நிர்வாகி நிலையிலும் அதே போல் பங்களிப்புகளைத் தொடரும் வாய்ப்புகள் அதிகம் என்பதையே நான் தெரிவித்திருக்கிறேன். இங்கு, தமிழ் விக்கிப்பீடியாவில் நிர்வாகி நிலைக்குக் குறைவான பங்களிப்புகள் செய்து, குறுகிய காலத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் சிலர் நிர்வாகி அணுக்கம் பெற்ற பிறகு தங்கள் பங்களிப்பையே நிறுத்திக் கொண்டதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:46, 5 மே 2012 (UTC)
உங்களின் கவனத்திற்கு...
தொகுஇரவி, வணக்கம்!
கணிதத்துறையில் அருமையான கட்டுரைகள் படைக்கும் 'பயனர்:Booradleyp' அவர்களைப் பற்றி 'முதற் பக்க அறிமுகம்' வாயிலாக
அறிய விருப்பம்! நீங்கள் ஏற்கனவே அவருக்கு வேண்டுகோள் விடுத்ததை நான் அறிவேன். மீண்டும் முயற்சிக்கலாமே?! நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:28, 13 மே 2012 (UTC)
- செல்வசிவா :) (ஏற்கனவே செல்வா என்றும் சிவா என்றும் பயனர்கள் இருப்பதால் :) ), விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/காத்திருக்கும் வேண்டுகோள்கள் பக்கத்தில் உள்ள அனைத்துப் பயனர்களிடமும் இன்னும் பல பயனர்களும் நேரடியாக வேண்டுகோள் விடுத்தால், முதற்பக்க அறிமுகம் அளிக்க அவர்கள் இணங்கலாம். சிலர், தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், குறைந்தது அவர்களது விக்கிப்பங்களிப்புகளையாவது முன்னிலைப்படுத்தி அறிமுகம் தர வேண்டலாம். நன்றி--இரவி (பேச்சு) 08:46, 13 மே 2012 (UTC)
இரவி, நல்லது; என் பங்கிற்கு நானும் முயல்கிறேன் - வலை வீசிப் பார்க்கிறேன்!
('சிவகுரு' எனும் பெயர் எனக்குப் பிடித்துள்ளது!)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:58, 13 மே 2012 (UTC)
சரி, சிவகுரு :) --இரவி (பேச்சு) 09:00, 13 மே 2012 (UTC)
வணக்கம் இரவி, விக்கிப்பீடியா பேச்சு:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும் இப்பக்கத்தை பார்த்து தெளிவுபடுத்தினால் எனது வேலையை ஆரம்பிக்க இலகுவாக இருக்கும் :) . ஏற்கனவே ஆரம்பித்து விட்டேன் இருந்தாலும் ஒரு தயக்கம்.--shanmugam (பேச்சு) 03:10, 18 மே 2012 (UTC)
- இது குறித்து மற்ற விக்கிப்பீடியாக்களின் நிலைப்பாடுகள் பற்றி சற்று ஆய்ந்து பார்த்து விட்டு எனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். அனைவரின் கருத்துகளையும் அறிந்து பொறுமையாக இதனைச் செயற்படுத்தலாம். நன்றி. --இரவி (பேச்சு) 19:04, 18 மே 2012 (UTC)
- சரி இரவி. இப்போதைக்கு காப்புரிமை சரியாகத் தெரிந்த படிமங்களுக்கு (logo, screenshot,old,fair use) அதற்கேற்ற வார்ப்புருவை இணைத்துள்ளேன். சரியாக காப்புரிமை கண்டுபிடிக்க இயலாத படங்களுக்கு இங்கு கூறியுள்ளபடி என்ன செய்யலாம் என கூறினீர்கள் என்றால் அதற்கேற்றவாறு செய்யலாம்.--சண்முகம் (பேச்சு) 01:17, 19 மே 2012 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் இரவி. முதற்பக்க விக்கிபீடியர்கள் அறிமுகம் எத்துனை நாட்களுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தப்பட வென்டும்? காத்திருக்கும் வேண்டுகோள் பக்கத்தில் உள்ளவர்களுக்கு முதற்பக்க அறிமுகம் வேண்டி விண்ணப்பம் செய்யலாமா? தங்களுக்கு வேலைப்பளு எனில் நான் வேண்டுமானால் முயற்சி செய்யட்டுமா? நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:47, 20 மே 2012 (UTC)
- குறைந்தது இரு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வருகிறோம். இதற்கு இறுக்கமான கால வரையறை கிடையாது. காத்திருக்கும் வேண்டுகோள்கள் பக்கத்தில் உள்ளவர்களை நான் ஏற்கனவே பல முறை வேண்டி தொல்லை கொடுத்திருக்கிறேன் :) அவர்களில் பலர் இன்னும் கூடிய பங்களிப்புகளைத் தந்த பிறகு அறிமுகத்தைத் தர விரும்புகிறார்கள். சிலர், விக்கி விடுப்பில் இருக்கிறார்கள். எனவே, அவர்களை கொஞ்ச நாட்களுக்கு விட்டு வைக்கலாம் :) அறிமுகங்கள் தொடர்பான முறையான பரிந்துரைப் பக்கங்கள், பட்டியல்களை உருவாக்குவதே வருங்காலத்தில் எவரேனும் பொறுப்பெடுத்துச் செய்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் தான். எனவே, நீங்கள் தாராளமாக இப்பொறுப்பை எடுத்துக் கொள்ளலாம். நன்றி--இரவி (பேச்சு) 14:55, 20 மே 2012 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:32, 26 மே 2012 (UTC) +1 அணுக்கத்தை செயற்படுத்தியமைக்கும், ஆதரவாக வாக்ககளித்தமைக்கும், தங்கள் நம்பிக்கைக்கும் மிக்க நன்றி இரவி, கண்டிப்பாக அனைவரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்படுவேன்--சண்முகம் (பேச்சு) 11:54, 26 மே 2012 (UTC)
+1 நன்றி. கேள்வி பதில்களிலுள்ள பல உரையாடல்களை வரும் நாட்களில் தொடருவோம் :) ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:34, 30 மே 2012 (UTC)
பதில்கள்
தொகுநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
+1 -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:44, 27 மே 2012 (UTC)
கட்டுரைத் தலைப்பை மாற்ற வேண்டுகோள்
தொகுஇரவி, கட்டுரையாக்கத்துக்குப் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகளுள் ஒன்று "பெரும் கழிவாக்கம்" என்றுள்ளது. அதை "பெரும் துப்புரவாக்கம்" என்று மாற்றும்படி வேண்டுகிறேன். அக்கட்டுரைத் தலைப்பின் பேச்சுப்பக்கத்திலும் ஒரு குறிப்பு இட்டுள்ளேன். தலைப்பு மாற்றப்பட்டதும் கட்டுரையாக்கம் செய்கிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 22:13, 28 மே 2012 (UTC)
- ஆயிற்று. பெரும் துப்புரவாக்கம் என்ற தலைப்பிலேயே கட்டுரையைத் தொடங்கி பெரும் கழிவகற்றல் கட்டுரையை அதற்கு வழிமாற்றி விட்டிருந்தாலும் சரியாக இருந்திருக்கும்.--இரவி (பேச்சு) 07:18, 29 மே 2012 (UTC)
- எனது கருத்துக்களை பேச்சு:பெரும் கழிவகற்றல் பக்கத்தில் இட்டுள்ளேன்.--மணியன் (பேச்சு) 15:21, 29 மே 2012 (UTC)
மேலும் இரு தலைப்புகளை மாற்றிட வேண்டுகோள்
தொகுஇரவி, விக்கியில் "ஓசேயா (நூல்)" என்னும் தலைப்பை , குறில் இட்டு "ஒசேயா (நூல்)" என்று மாற்றுங்கள்.
- ஆயிற்று. பக்கங்களின் தலைப்பை மாற்ற / நகர்த்த உதவி:பக்கத்தை நகர்த்துதல் பாருங்கள்.
அதுபோலவே, விக்கிமூலத்தில் "ஓசேயா - அதிகாரங்கள் 1-2" என்ற தலைப்பில் உள்ள பக்கத்தை அகற்றிவிடுங்கள். அதற்குப் பதிலாக "ஒசேயா - அதிகாரங்கள் 1-2" என்று குறிலில் ஏற்கெனவே தேவையான பக்கத்தை உருவாக்கிவிட்டேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 22:39, 28 மே 2012 (UTC)
- ஆயிற்று--இரவி (பேச்சு) 07:18, 29 மே 2012 (UTC)
- நன்றி, இரவி!--பவுல்-Paul (பேச்சு) 22:20, 29 மே 2012 (UTC)
வாரமிருமுறை முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுஇங்கு கவனிக்க விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்#வாரம் இரு முறை முதற்பக்கக் கட்டுரைகள் இடலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:01, 29 மே 2012 (UTC)
சான்று தேவை குறித்து
தொகு//உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்ற விக்சனரி இணைப்புகளை இடாமல், முறையான உதவிப் பக்கங்களுக்கு இணைப்பு தர வேண்டும். இந்த உதவிப் பக்கங்களைத் தமிழில் விரிவு செய்ய வேண்டும்.// ஏற்கனவே, விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் திட்டப்பக்கத்தில் அனைத்து தகவல்களும் தெளிவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பக்கத்திற்கு இடையிணைப்பு கொடுக்கலாமா ? அல்லது புதிதாக தொடங்குதல் அல்லது வழிமாற்று செய்யவேண்டுமா? உங்களுடைய பல்வேறு கேள்விகளுக்கு ஆங்காங்கே எனக்குத் தெரிந்தமட்டும் பதிலளித்து உள்ளேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:37, 30 மே 2012 (UTC)
விக்கிமூலம்
தொகு- வணக்கம் இரவி..பார்க்க s:wikisource:ஆலமரத்தடி--சண்முகம் (பேச்சு) 06:48, 31 மே 2012 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகு
நீங்கள் பங்களித்த நெல்சன் மண்டேலா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் 17 சூன், 2012 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் இந்த அறிவிப்பை {{மின்னஞ்சல்}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்!
விக்கிமூலம்
தொகுவணக்கம் இரவி, சிறிது நாட்களுக்கு முன்பு பவுல் ஐயா விக்கிமூலத்தில் மீடியாவிக்கி:edittools வேண்டுமென கேட்டிருந்தார், அதை நேரம் கிடைக்கும் போது உருவாக்கித் தர வேண்டுகிறேன். பர்ர்க்க s:பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy--சண்முகம்ப7 (பேச்சு) 10:19, 28 சூன் 2012 (UTC)
வேண்டுகோள்
தொகுஇரவி, பவுல் அவர்கள் மிக அருமையான பங்களிப்புகளை அமைதியாகவும் நிறைவாகவும் செய்துகொண்டு வருகின்றார். அவருக்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகி நிலை கிட்டினால் நன்றாக இருக்கும், அவரால் இன்னும் பல பணிகள் ஆற்ற இயலும் என்று கருதுகின்றேன். அவரை நிருவாகித் தரத்துக்குப் பரிந்துரைக்கின்றேன். வரும் பல நாட்கள் என்னால் முன்னின்று நடத்த முடியாமல் இருக்கும். நீங்களோ, நற்கீரனோ பரிந்துரைத்து, முன்மொழிந்து செய்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.--செல்வா (பேச்சு) 02:03, 3 சூலை 2012 (UTC)
- @செல்வா: பவுல், நிருவாகப் பணி வேண்டாம் என இங்கே இரவியிடம் குறிப்பிட்டுள்ளார். பரிந்துரைப்பதற்கு முதல் மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். --மதனாகரன் (பேச்சு) 02:56, 3 சூலை 2012 (UTC)
- மிக்க நன்றி மதன். நீங்கள் சுட்டும் வரை நான் அதனைப் பார்க்கவில்லை. பவுல் நிருவாகியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றே பரிந்துரைத்தேன். பவுல் ஒப்புக்கொள்வார் எனில் மிகவும் உவந்து ஆதரவளிக்க முன்வருவேன். மிகுந்த அக்கறையுடனும் நடுநிலைமையுடனும், ஆழமாகவும் மிகவும் பொறுப்பாகவும் அவர் ஆற்றும் பணி மற்றவர்களுக்கு ஊக்கம் தருவது மட்டும் அல்லாமல் எடுத்துக்காட்டாகவும் அமையுமே என்றே நினைத்தேன். அவரிடம் கேட்டுப்பார்க்கின்றேன்.--செல்வா (பேச்சு) 03:13, 3 சூலை 2012 (UTC)
நதி, ஆறு
தொகுநதி என்பது தெய்வங்களோ தேவதைகளோ திறந்து விட்டதாக பழங்கதை உண்டு. உதாரணங்கள் அனுமான் நதி அனுமனால் பிறந்தது. கருப்பா நதி கருப்பசாமியால் பிறந்தது. அரிகர நதி சிவன் மற்றும் மாலிற்கும் பிறந்த சாஸ்தாவால் பிறந்தது என்பது பழங்கதைகள். ஆறு என்பது இயற்கையாக உருவாவது. உதாரணம் சிற்றாறு இயற்கையாக உருவானதாக தெரிகிறது. எத்தெய்வமும் அதை உருவாக்கியதாக பழங்கதையில்லை. அறிவிப்பு பலகைகளில் எல்லாம் அனுமான் நதி கருப்பா நதி அரிகர நதி என்று தான் உள்ளது. அதைப் போல் சிற்றாறு, குண்டாறு என்றும் உள்ளது. அதனால் நதி என்பது வேற்று மொழியாக இருப்பினும் பரவலாக வழக்கத்தில் உள்ள அப்பெயர்களை எல்லாம் மாற்ற வேண்டாம் என்பது என் கருத்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 6 சூலை 2012 (UTC)
- நதி என்பது ஆறு என்பதனைக் குறிக்கும் வட சொல்லே. எடுத்துக்காட்டு: தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் போன்ற சொல்லாடல்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆறுகளுக்கு இவ்வாறான கதைகள் இருக்கலாம். ஆனால், இவ்வாறான ஆறுகளைக் குறிப்பதற்கும் மட்டும் நதி என்ற சொல் பயன்பாட்டில் இல்லை. கருப்பசாமியைத் தவிர்த்து மற்ற கதைகள் இந்து சமய / வட மொழி சார்புடையதாகவே தோன்றுகின்றன. எனவே, அதன் காரணமாகவும் நதி என்ற பெயரை வைத்துப் பரப்பி இருக்கலாம். கோயில் ஆலயம் ஆவது போலவே இதவும். எனவே, இவற்றை ஆறு என்றே குறிப்பிடுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்--இரவி (பேச்சு) 11:05, 6 சூலை 2012 (UTC)
நீங்கள் கூறுவது புரிகிறது. என்றால் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் தேசிய ஆற்றுநீர் இணைப்புத் திட்டம் என்றல்லவா இருக்க வேண்டும். நான் அனைத்திலுமே பரவலான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறேன். உதாரணத்திற்கு கந்தன், முருகன் இரண்டும் பரவலான வழக்கில் உள்ளவை. அதனால் முருகன் என்றே பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த ஆறுகளை பரவலாக நதி என்று தான் கூறுகிறார்கள். (அரசாங்க நடைமுறையிலும் கூட). யாரும் அரிகர ஆறு என்று கூறுவதில்லை. அதனால் தான் இவற்றை மாற்ற வேண்டாம் என்று கூறினேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:48, 6 சூலை 2012 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் இயன்ற அளவு நல்ல தமிழைப் பயன்படுத்த முனைகிறோம். நதி என்ற சொல் வரும் அனைத்து இடங்களிலும் ஆறு என்று மாற்றினாலும் தகும். ஆறு என்பது மக்கள் நன்கு அறிந்த, புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொல். முருகன்-கந்தன் உவமை இங்கு பொருந்தாது என்று கருதுகிறேன். அரிகர, அனுமான் ஆகியவையே இவ்வாற்றின் பெயர்கள். அவற்றை மாற்றவில்லையே? சங்ககிரி, நீலகிரி போன்ற பெயர்களை சங்கமலை, நீலமலை என்று மாற்றினால் பெயர் குழப்பம் வரலாம். ஆனால், அரிகர ஆறு, அனுமன் ஆறு என்று மாற்றுவதால் எந்தக் குழப்பமும் வராது.--இரவி (பேச்சு) 13:21, 6 சூலை 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 14:08, 6 சூலை 2012 (UTC)
இங்கு வரவும்
தொகுதிருத்துக
தொகுவணக்கம் இரவி..முதல் பக்கத்திலுள்ள நீங்களும் கட்டுரை எழுதலாம் பெட்டியினுள் எதுவும் எழுதாமல் வெறுமனே கட்டுரையைத் தொடங்கவும் பெத்தனை அழுத்த முதல் பக்கத்தின் தொகுத்தல் பக்கத்திற்கு செல்கிறது மற்றும் உதாரணமாக மமரம் என்று அப்பெட்டியில் எழுதினால் புதுப்பயனர் வாரப்புருவில் வாருங்கள்,மமரம்!' என்று வருகிறது. புதுப்பயனர் வாரப்புருவினுள் இன்னுமெரு கட்டுரை தெடங்கல் பெட்டி வருகிறது. இவற்றை சரி செய்யவும். நன்றி--Sank (பேச்சு) 18:36, 12 சூலை 2012 (UTC)
- ஆ.. மிக முக்கியமான பிரச்சினையைச் சுட்டிக் காட்டி உள்ளீர்கள். சோதிக்காமல் இட்டதற்கு வருந்துகிறேன். இப்போது சரி செய்துள்ளேன். ஏதேனும் மாற்றங்கள் வேண்டும் என்றால் தெரிவியுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 18:56, 12 சூலை 2012 (UTC)