வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் பெப்ரவரி 2015
- பெப்ரவரி 24:
- ஈராக்கிற்கு பயிற்சிக்காக 143 இராணுவத்தினரை அனுப்பும் திட்டம் ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அறிவித்தார். (நியூசிலந்து எரால்டு)
- உக்ரைனிய இராணுவத்தினருக்கு அலோசனை வழங்குவதற்கு 75 பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் செல்லவிருப்பதாக பிரித்தானியா அறிவித்தது. (பீஏ)
- இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஆத்திரேலிய இளைஞர்கள் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் ஆகியோரின் மேன்முறையீட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. (ராய்ட்டர்சு), (விஓஏ)
- செக் குடியரசில் உணவகம் ஒன்றில் துப்பாக்கி மனிதன் சுட்டதில் 8 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பெப்ரவரி 23:
- சிரியாவின் அசிரியக் கிறித்தவக் கிராமங்களில் குறைந்தது 150 பேர் வரை இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டனர் என சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. (ராய்ட்டர்சு)
- அனுமதி இல்லாமல் அரசியல் ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எகிப்திய அரசியல் செயற்பாட்டாளர் அலா அப்துல் பத்தாஹ்விற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (அல்-அராபியா)
- பெப்ரவரி 22:
- உக்ரைன், கார்கீவ் நகரில் உக்ரைன் சார்பான ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் (ஏஎஃப்பி)
- இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் மோசுல் நகரில் 8,000 இற்கும் அதிகமான வரலாற்றுப் புகழ்மிக்க நூல்களையும், ஆவணங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர் (பொக்சு)
- மெக்சிகோவின் பேர்ட்மேன் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது கிடைத்தது.(டெலிகிராப்)
- அமெரிக்க நடிகை ஜூலியானா மூரே சிறந்த நடிகைக்கான அகாதமி விருது பெற்றார். (ஒலிவுட் ரிப்போர்ட்டர்)
- மாலைதீவு முன்னாள் அரசுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நசீது கைது செய்யப்பட்டார். (வி நியூசு)
- பெப்ரவரி 21:
- நைஜீரியாவில் பாகா நகரை போகோ அராம் போராளிகளிடம் இருந்து இராணுவத்தினர் கைப்பற்றினர். (பிபிசி)
- உக்ரைன் இராணுவமும் பிரிவினைவாதிகளும் போர்க்கைதிகளைப் பரிமாறிக் கொண்டனர். (எஸ்பிஎஸ்)
- பெப்ரவரி 20:
- லிபியாவின் கிழக்கே அல் குபா நகரில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்புகளில் 45 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- சுவிட்சர்லாந்தின் ராப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 49 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- மேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: எபோலா நோய்த் தாக்கம் முடிவுக்கு வருவதை அடுத்து லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. (டெய்லி ஸ்டார்)
- வணிக முறையில் வெளிநாட்டவர் பதிலித்தாய்களை வாடகைக்கு எடுப்பதை தாய்லாந்து அரசு தடை செய்தது. (பிபிசி)
- பெப்ரவரி 19:
- அண்டத்தில் உள்ள இலித்தியத்தின் பெரும் பகுதி குறுமீன் வெடிப்பினால் உருவானதென நேச்சர் இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. (ஏபிசி)
- பெப்ரவரி 18:
- நைஜீரியாவில் இராணுவத்தினருடனான மோதல் ஒன்றில் 30 போகோ அராம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என இராணுவம் அறிவித்துள்ளது. (பிபிசி)
- நைஜரில் சாவு வீடு ஒன்றின் மீது போர் விமானம் ஒன்று குண்டு வீசியதில் 30 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- இந்தியக் கடற்படைக்காக ஆறு நீர்மூழ்க்கிக் கப்ல்லகளைத் தயாரிக்க இந்திய அரசு அனுமதி வழங்கியது. (டைம்சு ஒஃப் இந்தியா)
- கிரேக்கத்தின் புதிய அரசுத்தலைவராக புரோகோபிசு பாவ்லோபூலோசு தேர்ந்தெடுக்கப்பட்டார். (கிரீக் ரிப்போர்ட்டர்)
- பெப்ரவரி 17:
- துனீசியாவின் மத்திய பகுதியில் காவல்துறையின் சோதனைச்சாவடியைத் தாக்கிய இசுலாமியப் போராளிகள் நான்கு காவல்துறையினரைக் கொன்று ஆயுதங்களைப் பறிந்த்துச் சென்றனர். (ராய்ட்டர்சு)
- பெப்ரவரி 16:
- லிபியாவில் உள்ள இசுலாமிய தேசத் தளங்கள் மீது எகிப்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியது. (பிபிசி)
- போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள உக்ரைனில் இடம்பெற்ற மோதல்களில் ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர். (சீஎனென்)
- பெப்ரவரி 15:
- இலங்கையின் புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றார். (பிபிசி)
- நைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டு 30 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- இசுலாமிய தேச தீவிரவாதிகள் தாம் கடத்தி வைத்திருந்த 21 எகிப்தியக் கோப்து கிறித்தவர்களை தலைகளை வெட்டிக் கொல்லும் காணொளியை வெளியிட்டனர். (பிபிசி)
- பெப்ரவரி 14:
- டென்மார்க் தலைநகர் கோபனாவனில் யூதத் தொழுகைக்கூடம் ஒன்றில் இடம்பெற்ற கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (பிபிசி)
- திருத்தந்தை பிரான்சிசு இருபது புதிய கர்தினால்களை நியமித்தார். (பிபிசி)
- இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் 12 பேர் எச்1.என்1 சளிக்காய்ச்சல் நோயினால் இறந்தனர். (ஐபிஎன்)
- இந்தோனேசியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் பாலி ஒன்பது போதைப்பொருள் கடத்தகாரர்களான ஆன்ட்ரூ சான், மயூரன் சுகுமாரன் ஆகியோருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் கடைசி-நிமிடக் கோரிக்கையை விடுத்தார். (தி ஆஸ்திரேலியன்)
- சாட்டின் முன்னாள் அரசுத்தலைவர் இசேனே ஆப்ரே போர்க்குற்றங்களுக்காக செனிகலில் விசாரணை செய்யப்படுகிறார். (பிபிசி)
- ஹாலிஃபாக்ஸ் நகரில் வேலன்டைன் நாள் படுகொலைத் திட்டம் ஒன்றை கனடா காவல்துறையினர் முறியடித்தனர். (ராய்ட்டர்சு)
- 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆரம்பமானது. நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் நகரில் நியூசிலாந்து அணி இலங்கையை வென்றது. (கார்டியன்)
- பெப்ரவரி 13:
- பாக்கித்தானின் பெசாவர் நகர சியா பள்ளிவாசல் ஒன்றின்மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- பர்மாவில் கோக்காங் கிளர்ச்சியாளர்களுடனான நான்கு நாள் சண்டையில், அரசு இராணுவத்தினர் 47 பேர் கொல்லப்பட்டு, 73 பேர் காயமடைந்தனர். (சீஎனென்)
- பெங்களூரிலிருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் வரை செல்கின்ற இன்டர்சிட்டி விரைவு வண்டி ஓசூர் அருகே 4 கிமீ தொலைவிலுள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டதில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- பெப்ரவரி 12:
- உக்ரைன் உடனான மூன்றாவது அமைதி உடன்பாட்டை உருசியத் தலைவர்விளாதிமிர் பூட்டின் அறிவித்தார். (ஏபி)
- தெற்கு யெமனில் அல் காயிதா-சார்பு அன்சார் அல்-சரியா போராளிகள் இராணுவத் தளம் ஒன்றைக் கைப்பற்றினர். (ராய்ட்டர்சு)
- சியூசிலாந்தின் வடக்கே ஒரு பெரும் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது. (ஸ்டஃப்)
- பெப்ரவரி 11:
- இத்தாலியில் விபத்துக்குள்ளான கொஸ்டா கொன்கோர்டியா கப்பலின் தலைமை மாலுமிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று 16 ஆண்டுகள் சிறைந்த்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- யெமனில் உள்ள தமது தூதரகங்களை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகள் மூடின. (யூஎஸ்ஏ)
- பெப்ரவரி 10:
- உக்ரைனின் கிராமத்தோர்ஸ்க் நகரில் உள்ள உராணுவத் தலைமையகம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர், 60 பேர் காயமடைந்தனர். (ரேடியோ ஐரோப்பா)
- இசுலாமியத் தேச புரட்சியாளர்கள் கைப்பற்றியிருந்த அமெரிக்கக் கைதி கைலா முல்லெர் என்பவர் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதிப்படுத்தியது. (பொக்சு)
- தில்லி சட்டமன்றத் தேர்தல்களில் மொத்த 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களைக் கைப்பற்றியது. (பிபிசி)
- இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்கிற தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரனால் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. (பிபிசி)
- கொழும்பு நகரில் நெலும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. (தினகரன்)
- பூமியின் உட்கருவில் மற்றொரு பிராந்தியம் இருப்பதாக சீன, அமெரிக்க அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். (பிபிசி)
- பெப்ரவரி 9:
- ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டின் தலைமைத்துவத்திற்கு எதிராக ஆளும் லிபரல் கட்சியில் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 61-39 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. (பிபிசி)
- உக்ரைனில் இடம்பெற்ற சண்டையில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 1961 ஆகத்து 3 இல் காணாமல் போன சிலி நாட்டு விமானத்தின் சிதைந்த பகுதிகளை அந்தீசு மலைகளில் மலையேறிகள் கண்டுபிடித்தனர். இவ்விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். (இன்டிபென்டென்ட்)
- பெப்ரவரி 8:
- பெப்ரவரி 7:
- உக்ரைன் தலைவர் பெத்ரோ பொரொசென்கோவுடன் அமைதி உடன்பாட்டு ஒன்றை முன்வைக்க பிரான்சு, ஜெர்மனி, உருசியா நாட்டுத் தலைவர்கள் உடன்பட்டனர். (பிபிசி)
- இலங்கையில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. (தி ஐலண்டு)
- பக்தாத்தில் இசுலாமிய தேசத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- போகோ அராமின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை மீட்டெடுப்பதற்காக நைஜீரிய அரசு பொதுத் தேர்தல்களை ஆறு வாரங்களுக்கு ஒத்திப் போட்டுள்ளது. (ஐரிசு டைம்சு)
- அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் துப்பாக்கி நபர் ஒருவர் சுட்டதில் குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர், துப்பாக்கி நபர் பின்னர் தற்கொலை செஉது கொண்டான். (ஏபி)
- பெப்ரவரி 6:
- மெக்சிக்கோவில் அக்கபுல்கோ என்ற இடத்தில் 61 உடல்களைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். (பிபிசி)
- இலங்கையின் கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக் கட்சியின் நசீர் அகமது பதவியேற்றார். (பிபிசி)(பிபிசி)
- பெப்ரவரி 5:
- சிரிய உள்நாட்டுப் போர்: ஐக்கிய அரபு அமீரகம் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் மீதான வான் தாக்குதல்களை இடைநிறுத்தியது. (என்பிசி)
- இலங்கையின் வடக்கே ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. (பிபிசி)
- பிரெஞ்சு ஓவியர் பவுல் கோகன் வரைந்த Nafea Faa Ipoipo (எப்போது என்னை மணப்பாய்?) ஓவியம் $300 மில்லியன்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை விற்கப்பட்ட கலைப்படைப்புகளிலேயே அதிக விலைக்கு ஏலம்போன படைப்பு இதுவாகும். (நியூயோர்க் டைம்சு)
- பெப்ரவரி 4:
- இசுலாமிய தேசத் தீவிரவாதிகளால் ஜோர்தான் நாட்டு விமானப்படை வீரர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தான் கைப்பற்றியிருந்த ஈராக்கிய தீவிரவாதிகள் சஜிதா அல்-ரிசாவி, சியாத் அல்-கபூலி ஆகியோருக்கு சோர்தான் மரணதண்டனையை நிறைவேற்றியது. (யூஎஸ்ஏ டுடே)
- டிரான்சுஆசியா ஏர்வேசு ஏடிஆர் 72 பயணிகள் விமானம் ஒன்று சீனக் குடியரசின் தலைநகர் தாய்பெய் நகரில் உள்ள கீலங்கு ஆற்றில் வீழ்ந்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற சுதந்திர நாள் நிகழ்வுகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் ஆர். சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியமை கட்சியில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. (பிபிசி)
- பெப்ரவரி 3:
- வங்காளதேசத்தில் சுட்டோகிரம் நகரில் பேருந்து ஒன்றின் மீது அரசு-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் எரிகுண்டு என்றை வீசியதில் ஏழு பயணிகள் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சோர்தானிய விமானப்ப்படை விமானஓட்டி ஒருவரை உயிருடன் எரிக்கும் காணொளி ஒன்றை இசுலாமிய தேசத் தீவிரவாதிகள் வெளியிட்டனர். (பிபிசி)
- ஆத்திரேலியாவின் பேர்த் நகரின் மோர்லி என்ற புறநகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார், ஒன்பது பேர் காயமடைந்தனர். (நியூசு லிமிட்டெட்)
- பெப்ரவரி 2:
- ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார். (டெய்லிமிரர்)
- இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். (பிபிசி தமிழ்)
- பெப்ரவரி 1:
- 400 நாட்களுக்கு முன்னர் எகிப்தில் கைது செய்யப்பட்ட ஆத்திரேலிய செய்தியாளர் பீட்டர் கிரெஸ்ட் விடுவிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். (பிபிசி)
- ஆங்காங்கில் மக்களாட்சிக்கு ஆதரவானவர்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். (ராய்ட்டரசு)
- 2015 ஆஸ்திரேலிய டென்னிஸ் திறந்த சுற்று ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவாக் ஜோக்கொவிச் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேயை வென்றார். ஜோக்கோவிச் ஐந்து தடவைகள் ஆத்திரேலிய திறந்த சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். (ஏபிசி)
- இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன. (தமிழ்வின்)