விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு123

கிரந்த எழுத்துக்கள் - தரப்படுத்துதல்

தொகு

மு. க. ஸ்டாலின், ஜெயலலிதா ஆகிய பக்கங்களில் கிரந்த எழுத்துக்கள் அனுமதிக்கப்படுகையில் பிற ஆளுமைகளின் பெயர்களில் உள்ள கிரந்த எழுத்துக்களைத் திருத்தலாமா? சக அரசியல்வாதி ஒருவரின் (விஜயகாந்த்) பெயரில் கிரந்தம் நீக்கப்படுவதுடன் ஒலிக்குறிப்பும் தமிழுக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது -விசயகாந்து என. விக்கிப்பீடியா முழுமைக்கும் ஒரே கொள்கையைக் கடைபிடிக்க வேண்டாமா? ஏன் இந்த வேறுபாடு? உண்மையில் விக்கிப்பீடியாவில் கிரந்தச் சொற்களை நீக்குவதில் அடிப்படை விதிகள் எவை? -- CXPathi (பேச்சு) 12:30, 4 சூன் 2021 (UTC)[பதிலளி]

முறைசார்ந்து எழுதுவதாயின் செயலலிதா (Jayalalitha), மு.க. தாலின் (M.K. Stalin) என்றெழுதுவது சரியாகும். தாலின் என்பது வேண்டாமெனில் இசுத்தாலின் என்றோ பிறவாறோ எழுதலாம். --செல்வா (பேச்சு) 20:33, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஆனால் பிறவாறு எழுதினால் அந்தத் திருத்தம் நீக்கப்படுகிறதே (பார்க்க: https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/3163108) CXPathi (பேச்சு) 17:06, 10 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

இதற்கு என்ன தான் கடைசி தீர்வு. தமிழ் விக்கிப்பீடியா வழக்கிற்கு வெகுதூரத்தில் இயங்குகிறதோ என்ற ஐயத்தினை ஏற்படுத்துகிறது. மாற்றங்களை மக்கள், சமூகம் மற்றும் பொதுவெளியில் கொண்டுவராமல், விக்கியில் செய்து என்ன பயன்? --சத்தியராஜ் (பேச்சு) 11:42, 25 செப்டம்பர் 2022 (UTC)
"தமிழ் விக்கிப்பீடியா ஓர் சீர்திருத்தக் களம் அன்று" என இங்கு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் "கிரந்தம் தவிப்போம்" என்னும் சீர்திருத்தத்தினை வலிந்து செய்வது போல் உள்ளது. மேலும், இவ்வாறான மாற்றங்கள் அனைத்து இடத்திலும் ஒரே அளவுகோளில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தெளிவான வழிகாட்டுதலைக் கோருகிறேன். --சத்தியராஜ் (பேச்சு) 15:35, 28 செப்டம்பர் 2022 (UTC)

Edit warring

தொகு

சில செயற்பாடுகள் இங்கு en:Wikipedia:Edit warring என்பது தேவையென்பதை உணர்த்துகின்றன. நிர்வாகிகளானாலும் 3 மீளமைப்புச் செய்தால் தடை செய்யப்பட வேண்டும். கருத்துக்கள் தேவை. --AntanO (பேச்சு) 07:50, 15 சனவரி 2018 (UTC)[பதிலளி]

ஆதரவு. அவர் அதிகாரி என்றாலும் நிரந்தரத் தடை செய்யப்பட வேண்டும்.--Kanags (பேச்சு) 11:13, 15 சனவரி 2018 (UTC)[பதிலளி]
ஆதரவு.--நந்தகுமார் (பேச்சு) 10:21, 11 பெப்ரவரி 2018 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா/விக்சனரி அகரவரிசை சீராக்கம்

தொகு

தமிழ் விக்கி, விக்‌சனரி உள்ளிட்ட திட்டங்களில் அகரவரிசைப்படுத்தல் சீராக இல்லை. அதற்காக phabricator.wikimedia.orgல் வழுவும், அதற்கான முறையையும் நாம் பரிந்துரைக்க விரும்புகிறேன். ஏற்கனவே இது தொடர்பாக விக்கிப்பீடியா மீது சமூகத்தளத்தில் விமர்சனத்தைச் சிலர் வைத்துள்ளதை நாம் அறிந்திருக்கலாம். கீழ்க்கண்ட சில வழுக்களை ஆய்ந்து -ஆலோசனைகளோ, ஆதரவையோ தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்மெய் இடையே கிரந்தம் புகுதல்: பகுப்பு:ஐரோப்பிய_நாடுகள் போல பகுப்புகளில் சரியாக இருந்தாலும் [1] சிறப்புப் பக்கங்களில் வெளிப்படுவதில்லை.
தமிழின் முதலெழுத்தாக அகரத்திற்கு முன் ஃ வருதல் : [2]
ஔகாரத்திற்குப் பின் மெய் வராதல் : [3] இங்கே சரியாக வந்தாலும் பகுப்பு:வாழும்_நபர்கள் இங்கே அக்பருக்குப் பின்னே அகமது வருகிறது.

பரிந்துரைக்கும் வரிசை (பொதுவாகத் தமிழ் அகரவரிசைப்படுத்தல் தொடர்பாக மேலும் அறிய இங்கே செல்லலாம் http://tech.neechalkaran.com/2018/02/tamil-sorting.html) அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ க கா கீ கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க் ங் ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ஜ ஜா ஜ் ஷ் ஸ் ஸ்ரீ ஹ் -நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 11 பெப்ரவரி 2018 (UTC)

  1.   விருப்பம்--Kanags (பேச்சு) 07:13, 11 பெப்ரவரி 2018 (UTC)
  2. --உழவன் (உரை) 08:34, 11 பெப்ரவரி 2018 (UTC)
  3.   விருப்பம்--கலை (பேச்சு) 10:03, 11 பெப்ரவரி 2018 (UTC)
  4.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:19, 11 பெப்ரவரி 2018 (UTC)
  5.   விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 15:02, 11 பெப்ரவரி 2018 (UTC)
  6.   விருப்பம்--பாலாஜி (பேசலாம் வாங்க!) 15:50, 8 செப்டம்பர் 2018 (UTC)

பெயர் வைக்க என்ன விதிமுறை

தொகு

Snake River, Bear river என்று உள்ளதை பாம்பு ஆறு, கரடியாறு என்பதா இசுனேக் ஆறு பியர் ஆறு என்பதா? --குறும்பன் (பேச்சு) 19:54, 6 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

தீர்மானம் எதுவானாலும் தமிழில் பெயர்த்து வழங்குவதானால் "பாம்பு ஆறு" என்று பிரிக்காமல் "பாம்பாறு" என்றே வழங்கவேண்டும். "பாம்பு ஆறு"என்பது ஒரு வாக்கியம்; பாம்பே ஆறு என்பதுபோல் பொருட்படும்.

3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கை உரையாடல்

தொகு

3 வரிக் கட்டுரைகளை நீக்குவது குறித்த கொள்கையை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டுகிறேன். இங்கு இது தொடர்பான உரையாடலில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 14:03, 18 சூன் 2018 (UTC)[பதிலளி]

Inscription Stones of Bangalore - A Citizen Project

தொகு

In Kannada Wikipedia we did a project on Inscription stones of Bangalore. In that project we added 30 articles about inscription stones which are intact in Bengaluru. In that Tamil inscription stones are also included.
This weekend i.e on 3rd November at 5:30PM there is a talk about inscription stones. This is hosted by Tamil Heritage Trust at Arkay Convention Center (ACC), Chennai. Inscription stone team would like to add articles on Tamil Wikipedia. There are bunch of enthusiasts who wants write on Tamil Wikipedia but have less Tamil typing skills. I kindly request interested Tamil Wikipedians/ Wikipedians around Chennai to attend this event. --Gopala Krishna A (பேச்சு) 07:51, 31 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கிரந்த நீக்க முறைகள்

தொகு

தமிழில் கலந்துள்ள கிரந்த சொற்களை மற்றும் எளிய வழிமுறையை நன்னூல் விளக்குகிறது. அதனைக் கொண்ட JavaScript இங்கு காணக் கிடைக்கிறது. எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இங்கு உள்ளது. இந்த Library விக்கிபீடியா'வுக்கு உதவலாம் எனும் நோக்கில் ஆலமரத்தடியில் இந்தச் செய்தியை வைக்கிறேன்.

வழிமாற்று கொள்கை - மறு ஆய்வு கோரிக்கை

தொகு

வணக்கம். வழிமாற்று கொள்கையில் மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன். விக்கிப்பீடியா:வழிமாற்று#எதற்கு_பயன்படுத்தக்_கூடாது என்ற தலைப்பில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது என நம்புகிறேன்.

புதிய சொற்களை உருவாக்கும் போது, தற்போது பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கு வழிமாற்று உருவாக்குவது வழமையானது என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கும் வார்த்தைகளில் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பது வியப்பளிக்கின்றது. க், த், ட், ப், உள்ளிட்ட எழுத்துகளில் கட்டுரை வழிமாற்றுகள் நேற்று வரை இருந்தது. இன்று ஒருவேளை அழிக்கப்பட்டிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ப்ளாக்செயின் என்று பரவாலாக[1][2][3][4] அறியப்பட்ட ஒரு சொல்லை, தமிழில் தொடரேடு என்று புதியதாக ஒரு இணையான சொல்லை உருவாக்கி கட்டுரை எழுதும்போது பயன்பாட்டில் உள்ள ஒரு சொல்லிற்கு வழிமாற்றாவது உருவாக்க வேண்டும். இதற்கு பிற விக்கி பயனர்களின் கருத்தும் ஆதரவும் தேவை. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:51, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

[1] இந்திய நடுவண் அரசு இணையத்தளம் [2] பிபிசி தமிழ் [3] விகடன் குழுமம் [4] தமிழ் கிசுபாட்

ஆதரவு

தொகு
  1. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:30, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  2. -- நீச்சல்காரன் (பேச்சு) 00:55, 6 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]
  3. --சிவகோசரன் (பேச்சு) 15:16, 7 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

தொகு
  1. தமிழில் ஒற்று எழுத்துடன் சொற்கள் ஆரம்பிப்பது இலக்கணப் பிழையாகும். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது.--நந்தகுமார் (பேச்சு) 03:04, 4 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

கருத்துக்கள்

தொகு

இவ்வாறான நடைமுறை சொற்களைக் கொண்டு தேடுபவர்களுக்கு சரியான கட்டுரையை அடைய இந்த முயற்சி வழிவகுக்கும் எனக்கருதுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:29, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

  • தமிழில் மெய் எழுத்துக்களில் சொற்கள் ஆரம்பிக்காது எனவே கட்டுரைகளோ வழிமாற்றுப்பக்கங்களோ மெய் எழுத்துக்களில் ஆரம்பிக்கவேண்டாம். தேவையானவர்கள் ஆங்கிலத்தில் தேடி தமிழைத் தெரிவுசெய்து படிக்கலாம். அல்லத்து பிளக்செயின் என்னும் வழிமாற்றுப் பக்கத்தை உருவாக்கியும் விடலாம். இலக்கணப்பிழையான வழிமாற்றங்கள் தேவையற்றது அது கலைக்கழஞ்சியத்தின் தரத்தைக் குறைத்துவிடும்.

தடை செய்க.

தொகு

பயனர்:SIVAN Meenakshi, பயனர்:Sivansakthi இவ்விரு கணக்குகளையும் தற்காலிகத் தடைசெய்க. இவர் உரையாடல் செய்கையில் கீழ்தனமாகவே உரையாடல் செய்து வருகிறார். பிறபயனருக்கு மரியாதை கொடுக்காமல், தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்ர

உதாரணம்:

புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரை

தொகு

பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி. புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான பரிந்துரை ஒன்றை அளித்துள்ளேன். முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கொள்கை குறித்து உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 20:09, 6 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

இக்கொள்கை முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு தற்போது தொடங்கியுள்ளது. அனைவரும் சனவரி ஒன்றாம் தேதிக்கு முன் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:44, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

முரண்பாடு

தொகு

விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி என்பதில் முன்மொழியப்பட்டு, 20-1-0 என்ற வாக்குகள் அடிப்படையில் ஒப்புதல் பெறப்பட்டிருந்தாலும் விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது ஏன்? இங்கு விக்கிச் சமூக ஒப்புதல் பெறப்பட்டதா? இங்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டது? --AntanO (பேச்சு) 00:13, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]

என்ன முரண்பாடு?--இரவி (பேச்சு) 01:14, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் (விக்கி நிர்வாகிகள் பள்ளி) இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டிருப்பது. --AntanO (பேச்சு) 03:41, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நேரடியாக முரண்பாட்டைச் சுட்டிக்காட்டவும். --இரவி (பேச்சு) 08:22, 6 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நியமன முறை, படிமுறைகள் ஆகிய தலைப்புக்களின் கீழ் நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் என்பதில் முன்மொழிவில் இல்லாத பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. பின் மாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளன. காண்க: மாற்றம். --AntanO (பேச்சு) 16:20, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
இந்த மாற்றம் பார்க்கவும். இது 2016க்குப் பிறகு அந்தப் பக்கத்தை இற்றைப்படுத்தி முதல் வேட்பு மனுவைக் கோரும் போது நிகழ்ந்த மாற்றம். முன்பும் இப்போதும் 80% ஆதரவு வேண்டும் என்று அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. // இக்காலம் அதிகாரி (Bureaucrat) களினால் நீட்டிக்கப்படலாம் (பொதுவாக 80% ஆதரவு எதிர்பார்க்கப்படுகின்றது).// என்ற சொற்றொடரைப் பார்க்கவும். அதற்குப் பிறகு, clarify, what என்று இரு வார்ப்புருக்களை இட்டு நீங்கள் தான் விளக்கம் கோரியுள்ளீர்கள். நீங்கள் கோரிய விளக்கத்துக்குப் பதிலாக, உரையைத் திருத்தித் தெளிவுபடுத்தினேன். இந்தத் தெளிவுபடுத்தல் ஏற்கனவே இருந்த 80% விதி மற்றும் அடையாளம் அற்றவர்கள் என்று நாம் கூறுவது பயனர் கணக்கற்றவர்கள் (2005 முதல் அவ்வாறு தான் கூறி வருகிறோம்) என்பதைத் தான் தெளிவுபடுத்துகிறது. புதிதாக எந்த விதியையும் நுழைக்கவில்லை. உரையைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அதுவும் நீங்கள் விளக்கம் கோரியதால். புதிய கொள்கை முன்மொழிவு என்பது வேட்பாளரின் பண்புகள், தகுதிகள் குறித்தே அமைந்தது. ஏன் எனில், பண்புகள், தகுதிகள் குறித்த குழப்பமே கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க விடாமல் தடுத்தது. படிமுறைகள், நியமன முறையில் மாறுதல்கள் தேவைப்படுகின்றன என்ற கொள்கை உருவாக்கக் காலத்தில் யாரும் சுட்டிக் காட்டவில்லை. எனவே, அவற்றைப் பயன்படுத்திக் கொண்டோம். இதில் நான் எந்த முரண்பாட்டையும் காணவில்லை. --இரவி (பேச்சு) 16:56, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
ஒரு முன்மொழிவு எவ்வித மாற்றமும் இன்றி சட்டமாக்கப்பட / அமுலாக்கப்பட வேண்டும். அவ்வளவே. அல்லது முன்மொழிவில் முன்னை பகுதிகள் பின்பற்றப்படும் எனத் தெரிவித்திருக்க வேண்டும். இதனாலேயே, முன்மொழிவில் தெளிவு, விரிவாக்கம் தேவை என்று அப்பொழுதே கூறினேன். சட்டமும் இயற்றுபவரும், மாற்றுபவரும், அமுலாக்குபவரும் ஒன்றாயிருப்பது நல்லதல்ல. முரண்பாட்டை இல்லை என்றால் இனி இங்கு பேசுவதற்கு தேவையுமில்லை. --AntanO (பேச்சு) 17:09, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
புதிய கொள்கை 20-1-0 என்ற கணக்கில் நடைமுறைக்கு வந்தது. புதிய நிருவாகத் தேர்தல் முறையை ஏற்றுக் கொண்டு பத்து வேட்பாளர்களுக்கு நூற்றுக்கணக்கான வாக்குகளை அளித்துள்ளார்கள். விக்கியில் சமூக ஆதரவின்றி தனியாளாக எதையும் கட்டுப்படுத்த முடியாது. நன்றி. --இரவி (பேச்சு) 17:14, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
நல்லது. --AntanO (பேச்சு) 17:20, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கை மீளாய்வு

தொகு

பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி#கொள்கை மீளாய்வு --இரவி (பேச்சு) 17:53, 5 ஏப்ரல் 2019 (UTC)

விக்கி அதிகாரிகள் பள்ளி - கொள்கை முன்மொழிவு

தொகு

பார்க்க - விக்கிப்பீடியா பேச்சு:விக்கி அதிகாரிகள் பள்ளி --இரவி (பேச்சு) 18:16, 5 ஏப்ரல் 2019 (UTC)

பயனர் பக்கக் கட்டுப்பாடுகள்

தொகு

விக்கிப்பயனர் பக்கத்தில் எந்தக் கட்டுப்பாடுகள் இல்லாமலிருந்தாலும் பொதுவாக விளம்பரப் பயன்பாட்டைத் தவிர்க்க சில விதிமுறைகளைக் கொண்டுள்ளோம். விக்கியில் பங்களிப்பு செய்பவர் பக்கங்களை விட்டுவிடலாம். அவ்வாறில்லாமல் சுமார் ஐம்பதற்கும் மேற்பட்ட பயனர் பக்கங்களில் தேவையற்ற அல்லது சுய விளம்பரக் குறிப்புகள்(விக்கியல்லாதவை) இருக்கின்றன. உதாரணம்:) @Joseph anton george, இயக்குனர் ஆபிரகாம் லிங்கன், MOHAMED YOOSUF, Compcare K. Bhuvaneswari, Balagangadharan, and Kavignarthanigai: இவை போன்றவற்றை எவ்வாறு கையாளலாம்? இரு பக்கங்களுக்கு மேல் விக்கி தொடர்பில்லாதவற்றை எழுதக் கூடாது என்ற அடிப்படையில் நீக்கச் சொல்லிக் கேட்கலாமா? அல்லது பக்கத்தை நாமே திருத்திக் குறைக்கலாமா? மேலுமறிய கொரி பக்கம் -நீச்சல்காரன் (பேச்சு) 13:23, 7 மே 2019 (UTC)[பதிலளி]


@Neechalkaran: இது தொடர்பாக நிருவாகிகள் ஏதேனும் முடிவு எடுத்துள்ளீர்களா அல்லது நாமே நீக்கலாமா?ஸ்ரீ (talk) 14:56, 2 சூன் 2019 (UTC)[பதிலளி]

இது நிர்வாகிகள் மட்டும் முடிவு செய்ய வேண்டியதில்லை. யாவரும் கருத்திடலாம். மேலே குறிப்பிட்டவாறு பொதுவாக இவர்கள் விக்கியில் பங்களிப்பதில்லை என்னும் போது அவர்களாகத் திருத்தி எழுதவாய்ப்பில்லை. அதே வேளையில் பக்கத்தை நீக்கி அவர்களுக்கு ஒரு இடைவெளியை உருவாக்காமல் எல்லாப் பயனர் பக்கத்தையும் உள்ளடக்கத்திலுள்ள தேவையற்றதை நீக்கப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 20:46, 2 சூன் 2019 (UTC)[பதிலளி]
பயனர் பக்கங்களை நாமே திருத்தி அல்லது குறைத்து எழுத முடியாது. பயனர் தகவல்கள் சுருக்கமாக இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட பக்கங்களை முழுமையாக நீக்கலாம்..--Kanags \உரையாடுக 08:18, 3 சூன் 2019 (UTC)[பதிலளி]

சரி. @Neechalkaran and Kanags: புதுப்பயனர்களை வரவேற்கும் செய்தியில் அல்லது பயனர் பக்கத்தினை துவக்கும் போதோ பயனர் பக்கம் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பது பற்றி ஏன் சுருக்கமாக செய்திகளை இடம் பெறச் செய்தல் கூடாது? அது பற்றிய தகவல்கள் தெரியாமலும் சிலபேர் இவ்வாறு எழுதுகிறார்கள் தானே? ஸ்ரீ (talk) 14:02, 4 சூன் 2019 (UTC)[பதிலளி]

Multilingual Shared Templates and Modules

தொகு
Hello ta-wiki community! (Please help translate to your language)

I recently organized a project to share templates and modules between wikis. It allows modules and templates to be “language-neutral”, and store all text translations on Commons. This means that it is enough to copy/paste a template without any changes, and update the translations separately. If someone fixes a bug or adds a new feature in the original module, you can copy/paste it again without any translation work. My bot DiBabelYurikBot can help with copying. This way users can spend more time on content, and less time on updating and copying templates. Please see project page for details and ask questions on talk page.

P.S. I am currently running for the Wikimedia board, focusing on content and support of multi-language communities. If you liked my projects like maps, graphs, or this one, I will be happy to receive your support. (any registered user group can vote). Thank you! --Yurik (🗨️) 06:33, 11 மே 2019 (UTC)[பதிலளி]

internetarchivebot ஐ தமிழ் விக்கிப்பீடியாவில் செயல்படுத்துவது.

தொகு

விக்கிப்பீடியாவில் தகவல்கள் சேர்க்கப்படும் பொழுது அதற்கான தக்க சான்றுகள் வழங்கப்படவேண்டும்/வழங்கப்படுகிறது. அப்படியான சான்றுகள் பெரும்பாலும் இணைய செய்திகளாக உள்ளன. இப்படியான இணைய இனைப்புகள் பல சமயங்களில் Link rotகளாக மாறிவிடுகிறது. அதாவது சான்றுகள் சேர்த்து சில காலங்களுக்கு பின்பு அந்த இணைய இணைப்புகள் இல்லாமல் போகின்றன. இதனால் பின்னால் சேர்க்கப்பட்ட தகவல்கள் சரியா தவறா என்று சரிபார்க்க முடிவதில்லை. இதனை தவிர்க்கும் பொருட்டு இணைய இணைப்புகளை 100 ஆண்டுகளுக்கு மேல் சேமிப்பதற்கு Internet archive way back machine என்னும் இணைய தளம் பயன்படுத்தப்படுகிறது. சான்று தரப்பட்ட ஒரு இணைய பக்கத்தை இந்த இணைய தளத்தில் சேமித்துக் கொள்ளலாம். சேமித்து அதற்கான ஒரு உரலி கிடைக்கும். அந்த உரலியை சான்று தரும் பொழுது cite web போன்ற வார்ப்புருவில் "archive-url" மற்றும் "archive-date" களங்களில் அப்படி archiveவில் சேமித்த உரலியையும் சேமித்த தேதியையும் இட வேண்டும். இப்படியாக நாம் தகவல்களில் நம்பகத் தன்மையை மேம்படுத்தலாம். இப்படி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து கட்டுரைகளிலும் ஒவ்வொரு இணைப்பாகச் சோதித்து மாற்றங்களைச் செய்வது மிகவும் கடினமான மற்றும் அயற்சியான பணி. இந்த மாதிரி பணிகளைச் செய்வதற்கு InternetArchiveBot என்னும் ஒரு தானியங்கி உள்ளது. இதன் மொத்த விவரங்களும் கொடுக்கப்பட்ட மேல் விக்கி இணைப்பில் உள்ளது. இந்த தானியங்கி இங்கு செயல்படுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் fix dead links என்னும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுலபமாக இந்தத் தானியங்கியை இயக்கலாம். இந்த தானியங்கியைப் பயன்படுத்தி ஒரு பக்கம் அல்லது பல பக்கங்களை மேம்படுத்தலாம். இக்கருவியால் ஆங்கில விக்கியில் செய்யப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தொகுப்பு. இந்த மாதிரி வசதி தற்பொழுது இந்திய விக்கிகளில் பெங்காளி மற்றும் தெலுங்கு விக்கிப்படியாவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தானியங்கியை தமிழில் செயல்படுத்தினால் சிறப்பாக இருக்கும். இதனைக் குறித்து தமிழ் விக்கி சமூகத்தின் ஆதரவு கிடைத்தால் வேலைகளை முன்னெடுத்து செய்யலாம். இதற்காக இந்த உரையாடலைத் தொடங்கியுள்ளேன். முதலில் ஆலமரத்தடியில் ஆலோசிக்க வேண்டும். பின்பு செயல்படுத்தலாம் என்னும் முடிவு ஏற்பட்டால் இதற்காக InternetArchiveBot நிரலாளருக்கு தமிழ் விக்கியை சேர்க்கச்சொல்லி ஒரு கோரிக்கையை எழுப்ப வேண்டும். பின்பு இத்தளத்தில் தமிழ் விக்கியும் சேர்க்கப்படும். தமிழ் விக்கியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:37, 2 சூலை 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு அளித்ததற்கு நன்றி. இடைமுகத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைச் சேர்ப்பதற்கு இங்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:44, 14 சூலை 2019 (UTC)[பதிலளி]

ஆதரவு

தொகு
  1. இந்த வசதியும் சேவையும் தமிழ் விக்கியில் இருத்தல் மிக அவசியம். முன்னெடுப்புக்கு நன்றி. த.சீனிவாசன் (பேச்சு) 08:42, 2 சூலை 2019 (UTC)[பதிலளி]
  2.   ஆதரவு --Kanags \உரையாடுக 11:16, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
  3.   ஆதரவு--அருளரசன் (பேச்சு) 11:19, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
  4.   ஆதரவு--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:38, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
  5.   ஆதரவு----TNSE Mahalingam VNR (பேச்சு) 00:18, 5 சூலை 2019 (UTC)[பதிலளி]
  6.   ஆதரவு சந்தேகங்களுக்குக் கிடைத்த தெளிவு நிறைவாக இருப்பதால் ஆதரிக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 06:47, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]
  7.   ஆதரவு நல்ல முயற்சி. வாழ்த்துகள் ஸ்ரீ (talk) 07:08, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]

எதிர்ப்பு

தொகு

பொதுவான கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள்

தொகு
  • பொதுவாகவே கெடு உரலிகளை(link rot) மாற்றும் தேவை தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. குறிப்பாக ஆங்கில இந்து நாளிதழின் கடந்த கால இணைப்புகள் எல்லாம் தற்போது கட்டணப் பக்கங்களாக மாற்றப்பட்டுள்ளதால் இத்தகைய மாற்று வாய்ப்புகளை நோக்க வேண்டிய தேவையுமுள்ளது. இது internetarchivebot தானியங்கிக்கான அனுமதி கோரலா அல்லது https://tools.wmflabs.org/iabot கருவிக்கான அனுமதியா? internetarchivebot தானியங்கி தெலுங்கில் இல்லை. மேலும் தானியங்கி அணுக்கம் வழங்கும் முன் அதனைத் தமிழில் சோதிக்க வேண்டும். எனவே internetarchivebot தானியங்கி தவிர்த்து, iabot தானியங்கி இடைமுகத்தை முதலில் அனுமதிக்கலாமா என விவாதிக்கலாம். சில சந்தேகங்கள். ஒரு இணைப்பானது ஆவணமாகப்பட்டால் தான் அதனை இக்கருவி மாற்ற உதவுமா அல்லது archive தளத்தில் ஆவணமாக்கிவிட்டு, பின்னர் அந்த உரலியை மாற்றுமா? நான் புரிந்து கொண்டவரை ஆவணமாக்கப்பட்ட இணைப்புகளை மட்டுமே இது மாற்றுகிறது அப்படியெனில் தமிழ் மேற்கோள் பக்கங்கள் பெரும்பாலும் ஆவணமாக்கப்படாத நிலையில் தமிழ் விக்கிக்கென்று பிரத்தியேகப் பலன் இல்லையா? -நீச்சல்காரன் (பேச்சு) 12:39, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
@Neechalkaran:
  1. //இது internetarchivebot தானியங்கிக்கான அனுமதி கோரலா அல்லது https://tools.wmflabs.org/iabot கருவிக்கான அனுமதியா?// இது இடைமுகத்துக்கான அனுமதி. கொஞ்சம் குழப்பமாக எழுதிவிட்டேன். இடைமுகத்தில் ஒரே முறை 5 பக்கங்கள் வரை நமது விக்கி கணக்கிலேயே மாற்றங்கள் செய்யலாம். இக்கருவியால் ஆங்கில விக்கியில் செய்யப்பட்ட ஒரு எடுத்துக்காட்டுத் தொகுப்பு.
  2. //internetarchivebot தானியங்கி தெலுங்கில் இல்லை.// ஆம். இக்கருவியை சோதனை செய்து பின்னர் தேவையானால் internetarchivebot தானியங்கிக்கு அனுமதி தரலாம். ஆனால் அதற்கு தனியாக ஒரு உரையாடல் நடைபெற வேண்டும்.
  3. //iabot தானியங்கி இடைமுகத்தை முதலில் அனுமதிக்கலாமா என விவாதிக்கலாம்.// அப்படியே.
  4. //ஒரு இணைப்பானது ஆவணமாகப்பட்டால் தான் அதனை இக்கருவி மாற்ற உதவுமா அல்லது archive தளத்தில் ஆவணமாக்கிவிட்டு, பின்னர் அந்த உரலியை மாற்றுமா? // இக்கருவி செயல்படும் விதம். ஒரு பக்கத்தை ஆராய்ச்சி செய்யக் கொடுத்தால் பின்வரும் காரியங்களை அது செய்யும்.
  • ஒவ்வொரு சான்று உரலியாக பரிசோதனை செய்யும்.
  • உரலி வேலை செய்கிறாதா என்று பார்க்கும்.
  • அப்படி வேலை செய்தால் அது internet archiveயில் உள்ளதா என்று பார்க்கும். அப்பக்கம் internet archiveயில் இல்லையென்றால் archiveயில் சேமித்துவிடும். விக்கியில் எந்த மாற்றமும் ஏற்படாது.
  • உரலி கெடு உரலியாக இருந்தால் அந்தப்பக்கம் internet archiveயில் உள்ளதா என்று பார்க்கும். அப்படி இருந்தால் archive உரலியை சான்றோடு சேர்த்து "dead link=yes" என்று விக்கியில் குறித்துவிடும்.
  • உரலி கெடு உரலியாக இருந்து internet archiveயில் பக்கம் சேமிக்கப்படவில்லை என்றால் விக்கி சான்றில் "dead link=yes" என்று சேமிக்கும். இது பொதுவான நடிவடிக்கை. இதனை இயக்கும் பொழுது சில மாற்றங்களைச் செய்யலாம். உரலி வேலை செய்தாலும் காப்பு உரலியையும் இணைக்குமாறு செய்யலாம்.
5. //நான் புரிந்து கொண்டவரை ஆவணமாக்கப்பட்ட இணைப்புகளை மட்டுமே இது மாற்றுகிறது அப்படியெனில் தமிழ் மேற்கோள் பக்கங்கள் பெரும்பாலும் ஆவணமாக்கப்படாத நிலையில் தமிழ் விக்கிக்கென்று பிரத்தியேகப் பலன் இல்லையா?// நிறைய கட்டுரைகளின் சான்றுகள் ஆங்கில விக்கிப்பீடியாவிலும் அப்படியே இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியாவில் சான்றுகள் இருந்தால் கண்டிப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். அதனால் நமக்கு பயன்தான். கெடு உரலியாக இருந்து சேமிக்கப்படாவிட்டாலும் அது கெடு உரலி என்றாவது தெரிந்துக் கொள்ளலாம். மேலும் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் உரலிகள் archiveயில் படியெடுக்கப்படும். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]
தேவைப்பட்டால் சோதனை செய்த பிறகு செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம். IABot, InternetArchiveBot என இரண்டும் தேவைப்பட்டால் இரண்டையும் செயல்படுத்தலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 3 சூலை 2019 (UTC)[பதிலளி]
அப்படியே. முதலில் இடைமுகத்தைச் செயல் படுத்தலாம். பின்னர் InternetArchiveBotயை அனுமதிக்கலாமா என்ற தனியாக ஆலோசிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 03:43, 9 சூலை 2019 (UTC)[பதிலளி]

சந்தேகம்

தொகு

வணக்கம் @Balajijagadesh: அண்ணா ,உடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரை எனும் பகுப்பில் உள்ள சில கட்டுரைகளில் archive url மற்றும் archive date , url , title ஆகிய அனைத்து தகவல்களுமே உள்ளது. இருந்தபோதிலும் அது உடைந்த மேற்கோள்கள் உள்ளதாகவே கருதப்படுகிறது. ஆனால் archive url என்பதனை நீக்கினால் அந்த பிழை போய்விடுகிறது. உதாரணத்திற்கு பொண்டாட்டி பொண்டாட்டிதான் எனும் கட்டுரையில் உள்ள 5 ஆவது சான்று. இதற்கும் நீங்கள் மேலே குறிப்பிட்டதற்கும் தொடர்பு உள்ளதா? இருந்தால் தெளிவுபடுத்தவும். நன்றிஸ்ரீ (talk) 15:13, 10 சூலை 2019 (UTC)[பதிலளி]

@ஞா. ஸ்ரீதர்: archive-url என்று இருக்க வேண்டும். அவ்வாறு மாற்றிய பிறகு தற்பொழுது சரியாகிவிட்டது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:53, 14 சூலை 2019 (UTC)[பதிலளி]
நன்றி ஸ்ரீ (talk) 05:08, 14 சூலை 2019 (UTC)[பதிலளி]
@ஞா. ஸ்ரீதர்:நமது வார்ப்புரு:Cite web மற்றும் en:template:Cite web இரண்டுக்கும் நிரல் அளவில் வேறுபாடு உள்ளது. இந்த இரண்டு பக்கங்களும் ஒரே மாதிரியில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவில் en:Template:Citation Style documentation/url என்னும் பக்கத்தில்

archive-url: The URL of an archived snapshot of a web page. Typically used to refer to services such as Internet Archive