டி. ராஜேந்தர்

(விஜய டி. ராஜேந்தர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டி. ராஜேந்தர் (T. Rajendar, பிறப்பு: மே 9, 1955) ஓர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குனரும், பாடகரும், இசைக் கலைஞரும், தமிழக அரசியல்வாதியும் ஆவார். வீராசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மூத்த மகன் சிலம்பரசன் ஒரு புகழ்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.

விஜய டி. ராஜேந்தர்
VijayaTR.JPG
விஜய டி. ராஜேந்தர்
பிறப்பு மே 9, 1955 (1955-05-09) (அகவை 66)
மயிலாடுதுறை[1]
வேறு பெயர் டி. ஆர்
தொழில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளார், அரசியல்வாதி, பின்னணிப் பாடகர், திரைப்படப் பாடலாசிரியர்
நடிப்புக் காலம் 1980 லிருந்து தற்போது வரை
துணைவர் உசா ராஜேந்தர்
பிள்ளைகள் சிலம்பரசன்
குறளரசன்
இலக்கியா

டி. ராஜேந்தர் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி. ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்கு மொழி வசனம் பேசுவது இவரது தனிச் சிறப்பாகும்.

அரசியல் வாழ்க்கைதொகு

திமுகவில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்துள்ளார். 1996ல் சென்னை பூங்காநகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2004ல் திமுகவிலிருந்து விலகி அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு இறுதியில், லட்சிய திமுக கட்சியை கலைத்து விட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.[2][3]

திரைப்படங்கள்:தொகு

 1. ஒரு தலை ராகம்(1980)
 2. வசந்த அழைப்புகள்(1980)
 3. இரயில் பயணங்களில்(1981)
 4. நெஞ்சில் ஒரு ராகம்(1982)
 5. ராகம் தேடும் பல்லவி(1982)
 6. தங்கைக்கோர் கீதம்(1983)
 7. உயிருள்ளவரை உஷா(1983)
 8. உறவைக்காத்த கிளி(1984)
 9. மைதலி என்னை காதலி(1986)
 10. ஒரு தாயின் சபதம்(1987)
 11. என் தங்கை கல்யாணி(1988)
 12. சம்சார சங்கீதம்(1989)
 13. சாந்தி எனது சாந்தி(1991)
 14. எங்க வீட்டு வேலன்(1992)
 15. பெற்றெடுத்தப் பிள்ளை(1993)
 16. ஒரு வசந்த கீதம்1994)
 17. தாய் தங்கை பாசம்(1995)
 18. மோனிஷா என் மோனலிசா(1999)
 19. சொன்னால்தான் காதலா(2001)
 20. காதல் அழிவதில்லை(2002)
 21. வீராசாமி(2007)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ராஜேந்தர்&oldid=3196074" இருந்து மீள்விக்கப்பட்டது