பயனர் பேச்சு:செல்வா/தொகுப்பு 3
ontology
தொகுhttp://en.wikipedia.org/wiki/Ontology_(computer_science) - தமிழில் ? இருப்பியல்?--ரவி 14:53, 4 ஜூன் 2008 (UTC)
Ontology என்னும் சொல் சில மாறுபட்ட பொருள்களில் வழங்குவது. இதன் அடிப்படைப் பொருள் கிரேக்க மொழி வேரின் படி (ontos) "on being", nature and essence of existence; "ontology is the study of what actually is" என்பதாகும். எனவே தமிழில் எது உள்ளதென்று கூறுகிறோமோ அதுவே. உண்மை. ஆனால் உண்மை என்னும் சொல் உள்ளதன்மையை, உள்ளதைக் குறித்தாலும், அதுதான் ஆன்ட்டால'சி (ontology) என்றாலும், "truth" என்னும் சொற்களுடன் குழப்பம் தர வாய்ப்புள்ளது. எனவே உள்ளியம் எனலாம் (உள், உள்ளதன்மை +இயம்) . உள்ளியல் என்றும் கூறலாம். மெய்யியலிலும், கணினி கருத்தியலிலும், உயிரியல் போன்ற பிற பல துறைகளிலும் சற்றே வெவ்வேறுபட்ட பொருள்களில் இது ஆளப்படுகின்றது. பல இடங்களில் இதன் பொருள் அடிப்படைக் கூறுகள், அடிப்படை கூறுகளும் அதன் அடிப்படை உள்ளுறவுகளும் என்னும் பொருளில் ஆளப்படும். அதாவது ஒன்றைப் பற்றி அறிய அதன் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களைப் பற்றி அறிவதும், அவைகளுக்கிடையே உள்ள அடிப்படை உறவுக்கூறுகளை அறிவதும் ஒன்றைப் பற்றி புரிந்து கொள்ள உதவும் அல்லவா? இதனாலேயே, அடிப்படை சொற்களையும், அச்சொற்களின் பொருள்களையும் வரையறை செய்து ஓர் அறிவுப்புலத்தை வரையறை செய்யும் இயலை ஆன்ட்டால'சி என்கிறார்கள். ஒரு துறையின் அறிவை ஒழுங்குபட கருத்துகளாக பகுத்து, அவற்றின் அடிப்படையில் அத்துறையை (domain) அறிதல். எனவே உள்ளியியல், உள்ளியம், உள்ளடுக்கியல், உள்ளமைப்பியல், உள்ளொழுங்கியல் என்று பல இடங்களில் இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். ஆன்ட்டால'சி என்பதன் உண்மையான அடிப்படைப் பொருள் உண்மையியல் என்பதுதான் !! எனவே உண்மையியல் என்றும் கூறலாம். இன்னும் நிறைய விரித்து எழுதலாம். இது பற்றி சுருக்கமாக வேண்டுமானால் ஒரு கட்டுரையே எழுதிவிடுவோம்.--செல்வா 16:00, 4 ஜூன் 2008 (UTC)
சீனம், மேற்கு, தமிழியம்
தொகுமேற்கின் மெய்யியலை systematic argumentation and theory என்று கூறுகின்றனர் [1]. சீன மெய்யிலை அனுபவ அறிவு என்று கூறுலாம். ("Chinese philosophy is "wisdom" literature, composed primarily of stories and sayings designed to move the audience to adopt a way of life or to confirm its adoption of that way of life.") இது பொதுமைப்படுத்தலே.
அப்படியானால், தமிழியம் அல்லது தமிழ் மெய்யிலை அவதானிப்புகள் - Observations என்று கூறலாமா. அனுபவத்திலிருந்து observations என்றாலும். அல்லது பரிந்துரைகள்தான் பெரிதும் கிடைக்கின்றனவா. தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் போன்றவற்றை வைத்து ஒரு கருத்து கூற முடியுமா? அல்லது இத்தகைய பொதுமைப்படுத்தல் சாத்திமற்றதா?
தொல்காப்பியத்தை எடுத்துக்கொண்டால், அது மேற்கு வழிமுறையோடு கூடிதாலாக ஒத்திருப்பதாக சொல்லாமா?
உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.நன்றி. --Natkeeran 20:05, 11 ஜூன் 2008 (UTC)
தமிழ் மெய்யியல் என்பது இன்னமும் உலக அறிஞர்கள் போதிய அளவு உணராதது. தமிழ் மெய்யியலும் இந்திய மெய்யியலும் (இதில் புத்தமதம், சமணமதம், வேதமதம், சிவனிய மதம், திருமாலியம், சாக்தம் என்னும் சத்தியியம் ஆகிய எல்லாமும் அடங்கும்) ஏறத்தாழ ஒன்றே. தமிழில் தொடர்பறா வாழ்மரபாக குறைந்தது 2500 ஆண்டுகளாக வருவது. தமிழர் மெய்யியலில் இரண்டை நினைவில் கொள்ளுதல் பொருந்தும்
- எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்பது அறிவு.
- எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு.
தமிழ் மெய்யியல் மேற்கு உலக மெய்யியலை பெரிதும் ஒத்தது என்றாலும், தமிழர்களின் பார்வையும் ஆழமும் வேறானது. தமிழ் மெய்யியலிலும் அடிப்படை உள்ளுணர்வு (அனுபவம்) தான், ஆனால் அதில் dogmatism ஏதும் இல்லை, புற அறிவுக்கூறானது அல்ல (not pure intellectualism), உள்ளுள்ளது - உணர்த்தவரியது, ஆனால் அவரவர் உணர இயலுவது. தெக்கணாமூர்த்தி (தட்சிணாமூர்த்தி) சொல்லாமல் சொன்னார் என்பார்களே அப்படி நிகழ்வது என்று கூறலாம். இங்கு விரிக்க இயலாது நற்கீரன். --செல்வா 23:11, 11 ஜூன் 2008 (UTC)
- கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 23:52, 11 ஜூன் 2008 (UTC)
லிபர்ட்டேரியனிசம்
தொகுசெல்வா, இங்கு உள்ள உரையாடல் குறித்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். மயூரநாதன் 10:24, 28 ஜூன் 2008 (UTC)
I need assistance
தொகுDue to some personal work, I was not able to concentrate with my article. I want to continue writing article about Indian Climate in Tamil and I am not able to find most of the Geographical and Geological terms in Tamil. Its is more difficult than Hassan article. Can you please provide me your guidance. −முன்நிற்கும் கருத்து Rnarendr (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
தயவுசெய்து தங்கள் பெயரை/கையொப்பத்தை இடவும். தங்களுக்கு, புவியியல் மற்றும் பருவநிலை தொடர்பான கலைசொற்கள் சம்மந்தமாக உதவி செய்ய நான் தயார் :-) --கார்த்திக் 13:20, 15 ஜூலை 2008 (UTC)
விக்கி எழுத்துப் பணி
தொகுஎன் பணிப் பொறுப்புகளால், விக்கியில் எழுதுவது சற்று தளர்வுற்று இருக்கின்றது. கூடிய விரைவில், முன்போலவே பணியாற்ற முயலுவேன். மறுமொழிகள் தர இயலாது அல்லது காலம் தாழ்ந்து போனால் அருள்கூர்ந்து பொருத்தருள்க. நன்றி.--செல்வா 03:05, 31 ஜூலை 2008 (UTC)
- செல்வா, உங்கள் பணி நெருக்கடிகள் குறையும் போது மீண்டும் உங்கள் விக்கிப் பணிகளையும் தொடருங்கள். நன்றி. மயூரநாதன் 04:46, 31 ஜூலை 2008 (UTC)
மீண்டும் வருக செல்வா. "கட்டுரை எழுதி செல்வாவிடம் பதக்கம் வாங்குவோம் என்றால் அவரைக் காணோமே" என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன் :) மீண்டும் காண மகிழ்ச்சி--ரவி 10:22, 31 ஜூலை 2008 (UTC)
அய்யா நான் திரு இளமுருகு (வயது 67). இணையத்திற்கு புதுமுகம். நான் கருமுத்து தியாகராசர் பற்றி எழுதியிருந்ததை தாங்கள் படித்தது கண்டு மகிழ்ச்சி. எனக்கு அவ்வளவாக விக்கிபீடியா பற்றி தெரியாதகாரணத்தினால் கட்டுரைகளை வெளியிடுவதில் சிரமப்படுகிறேன். தங்கள் மின்னஞ்சல் முகவரியை எனது மின்னஞ்சலான panjalai42_kavingar@yahoo.co.in க்கு அனுப்பி உதவி செய்யவும். என்னிடம் நிறைய தகவல்கள் உள்ளன. நன்றி - பஞ்சாலைக்கவிஞர் இளமுருகு, கோவை. (செல்பேசி- +91 9952453223 )
- உங்களுக்குத் தனிமடல் ஒன்று விடுத்திருக்கின்றேன் ஐயா. பார்க்கவும். கட்டாயம் உதுவுகிறேன். கருமுத்து தியாகராசர் ஓர் அருமையான தமிழர். அவரைப் பற்றி கட்டாயம் தெரிந்ததை ஆவணப்படுத்த வேண்டும். உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி.--செல்வா 19:35, 12 மே 2009 (UTC)
ஊக்கமும் நன்றியும்
தொகுதங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி செல்வா :-). இவை எல்லாம் நீங்கள், ரவி, சுந்தர் மற்றும் பல நல்ல நண்பர்களின் ஊக்கமும் உதவிகளால்தான் முடிகிறது. இப்பணியின் அடுத்த கட்டமாக ஒரு சில விளங்குகளை தேர்வுசெய்து அதை சிறிய புத்தக வடிவில் கொணர்ந்து, நான் சூற்றுச்சூழல் கல்வி செல்லித்தரும் 4 பள்ளிகளுக்கு கொடுக்க இருக்கிறேன். இன்னும் பல பணிகள் பாக்கி இருக்கின்றது. தங்கள் அனைத்து உதவிக்கும் ஊக்கத்திற்கும் நன்றி --கார்த்திக் 03:25, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
- மிக நல்ல திட்டம் கார்த்திக். கட்டாயம் செய்யுங்கள்! ஏதும் உதவிகள் வேண்டின் தயங்காமல் தெரிவியுங்கள். என்னால் ஆன பணிகள் உதவிகளைச் செய்ய அணியமாக இருக்கின்றேன். --செல்வா 14:19, 4 ஆகஸ்ட் 2008 (UTC)
பரிந்துரைகள் வேண்டும், நன்றி
தொகு- Triathlon
- நெடுமுப்போட்டி, ( 1.5 km நீச்சல், 40 km மிதிவண்டியோட்டம், 10 km ஓட்டம்)
- Modern pentathlon
- தொங்கு கம்பம் - en:Uneven bars (gymnastics)
- உத்தரம் ? - en:Balance beam (gymnastics)
- வளைவுக்கூரை ? - en:Vault (gymnastics)
- கிடைக் கம்பம் - en:Horizontal bar
- வளையங்கள் - en:Rings (gymnastics)
- en:Parallel bars (gymnastics)
- floor exercise
- pommel horse
--Natkeeran 23:38, 16 ஆகஸ்ட் 2008 (UTC)
என்பரிந்துரைகள்:
- Triathlon நெடுமுப்போட்டி, ( 1.5 km நீச்சல், 40 km மிதிவண்டியோட்டம், 10 km ஓட்டம்)
- Modern pentathlon - தற்கால ஐம்போட்டி அல்லது தற்கால ஐந்திறப்போட்டி (வாள்வீச்சு, கைத்துப்பாக்கிச் சுடல், 200 மீ தன்னியல்பு நீச்சல், குதிரைத் தாண்டோட்டம், 3 கிமீ தடமற்ற ஓட்டம். )
- en:Uneven bars (gymnastics) - ஏறிறங்கு தண்டுகள், படித்தண்டுகள்
- en:Balance beam (gymnastics) - நடுவயங்கோல் (நடுவயம் , நடுமியம் = balance)
- en:Vault (gymnastics) எம்பிக் குதிரை
- en:pommel horse பச்சக் குதிரை
- en:Horizontal bar கிடைக் கம்பம், கிடைக்கழி, உயர்கிடைக் கழி, உயர்கிடைக் கோல்
- floor exercise தரைப் பயிற்சி அல்லது தரைச் செம்பயிற்சி
மேலும் gymnastics என்னும் சொல்லின் பொருள் (ஆடையின்றி செய்யும்) உடற்பயிற்சி. ['சிம்னோ˘ச் (gymnos) என்றால் பிறந்தமேனியாய் இருத்தல்]. எனவே gymnastics என்பதை உடற்செம்பயிற்சி எனலாம். --செல்வா 01:54, 17 ஆகஸ்ட் 2008 (UTC)
Reply
தொகுHi Selva, Thanks for the welcome message. Sorry for English. Even though I can read and write Tamil (to some extent I can speak also) I am not fluent in that language.
Have you people made arrangement to reach press regarding this, so that more people will be attracted to wiki?
As an interwiki user I was looking for the Embassy link on the left panel. But I couldn't find that. I suggest inserting that link since that will be very helpful for the other language users to interact with tamil wikipedians. You can see an example in Malayalam wikipedia. Also what is the most common input method adopted by Tamil wikipedians. I was expecting some inbuilt tool for it. I have couple of other suggestions too. --Shijualex 02:31, 20 ஆகஸ்ட் 2008 (UTC)
- Thank you for your kind suggestions. I'll post your message under our "banyan tree" (ஆலமரத்தடி) and someone would take a look and do the needful.--செல்வா 02:41, 20 ஆகஸ்ட் 2008 (UTC)
பாராட்டுதலுக்கு நன்றி
தொகுமிக்க நன்றி செல்வா. இன்னும் பல தமிழ் விக்கிப்பிடியா பணிகளில் என்னை இணைத்து கொள்ள விழைகிறேன். நேரம் கிடைக்கும் போதல்லாம் பங்களிக்க திட்டம் வகுத்துள்ளேன். --Daniel pandian 21:36, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
climate chart
தொகுமிக்க நன்றி செல்வா. காலநிலை வரைபடம் அருமை. ஊக்கத்திற்கு நன்றி. --Daniel pandian 20:45, 22 ஆகஸ்ட் 2008 (UTC)
:படிமம்:Ayeyarwadyriver.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Ayeyarwadyriver.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 06:38, 27 ஆகஸ்ட் 2008 (UTC)
விக்கிப் பங்களிப்பு
தொகுஎன் விக்கிப் பங்களிப்பு தற்பொழுது குறைவாக உள்ளது. விரைவில் மீண்டும் பணியாற்றுவேன். தற்பொழுது பிற பொறுப்புகள் கூடுதலாக உள்ளதால், சில காலம் விக்கி வளர்ச்சியைப் பார்க்கக் கூட முடியாம போய்விடுகின்றது. வீழ்நாள் படாமல் விக்கிப்பங்களிப்புகள் தொடர வேண்டும் என்று உள்மனம் கூறினும், சிலநாட்கள், ஏன் கிழமைகள் கூட பிற பொறுப்புகளால் என் விக்கிப் பங்களிப்புகளில் வீழ்நாட்களாக ஆகிவிடுகின்றன. கூடிய விரைவில் மீண்டும் தொடருவேன்.--செல்வா 15:35, 19 செப்டெம்பர் 2008 (UTC)
- உங்கள் பெயரைச் சில நாட்கள் விக்கியில் காணாவிட்டாலும் தமிழ் விக்கியில் உங்களுக்கு உள்ள அக்கறை குறையாது என்பது எங்களுக்குத் தெரியும். உங்கள் பொறுப்புக்கள் குறையும்போது பங்களியுங்கள் அது எமக்கு உற்சாகத்தைத் தரும். மயூரநாதன் 16:49, 19 செப்டெம்பர் 2008 (UTC)
ஒரு ஐயம்
தொகுஎனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஐயம் உள்ளது. பண்டைய தமிழகத்தை அறிய சங்க இலக்கியங்களே துணை நிற்கின்றன. இதை மட்டுமே கொண்டு எவ்வாறு செய்தியின் நம்பகத்தன்மையை நாம் நிரூபிக்க முடியும்? அவ்வகையில் தேற்றாமரத்தையோ, குருகையோ இந்தப் மரம், பறவை தான் என எவ்வாறு உறுதியாகக் கூறுவது? சில வரலாற்று நூல்களிலும் தமிழ், தமிழகம் குறித்த ஆங்கில விக்கி பேச்சுப்பக்கங்களிலும் இது சுட்டிக்காட்டப்படுகிறதானாலேயே இந்த எண்ணம் வந்தது. உங்கள் கருத்தை அறிய ஆவல்.--சிவக்குமார் \பேச்சு 15:15, 17 அக்டோபர் 2008 (UTC)
Process தமிழ் என்ன?
தொகு- Method - வழிமுறை
- Methodology - முறையியல்
- Procedure - செய்முறை
- Process - முறையாக்கம், முறைவழியாக்கம், செய்முறையாக்கம் ??
- Implementation - நிறைவேற்றல்
- Performance - நிகழ்த்துதல்
- Presentation - நிகழ்த்துதல் ??
- Constrain - ??
- Problem - பிரச்சினை
- Solving - தீர்த்தல் ??
- Problem Sovling - ??
நன்றி. --Natkeeran 15:10, 3 நவம்பர் 2008 (UTC)
- நற்கீரன், process என்பது பல இடங்களில் பல பொருளில் வருவது. பொறியியலில், தொழில்நுட்பத்தில், process என்பது படிப்படியாய் ஒன்றைச் செய்யப் பயன்படுத்தும் முறைகளைக் குறிக்கும். இதனை சில இடங்களில் பதப்படுத்தல் எனலாம், சில இடங்களில் படிப்படியாய் பல செயன்முறைகளுக்கு உட்படும் பொழுது பணிக்கோவை, செய்கோவை, முறைகோவை எனலாம். அலுவலகப் பணிகளிலும் சட்டமன்றங்களிலும் வரும் process என்பதை முறை அல்லது செய்முறை எனலாம். பொதுவாக தனிச்சொல்லாக இல்லாமல் ஒரு தொடராக வருமிடங்களைப் பொருத்து மொழியாக்கம் செய்வது நல்லது. Problem solving என்பதை சிக்கல் தீர்பு அல்லது சிக்கல் தீர்வு எனலாம். problem என்பது பல இடங்களில் கேள்வி என்று பொருள் படும், சில இடங்களில் சிக்கல் என பொருள் படும். என்ன்ன problem என்று பேச்சு வழக்கில் கேட்பது என்ன சிக்கல்? இங்கே என்ன குழப்பம், என்ன குளறுபடி? என்று பொருள் படும். சில இடங்களில் என்ன தடை, என்ன முடை என்று பொருள்படும். சேலம் திருச்சி பக்கங்களில் அங்கே போய் கேட்பதற்கு உனக்கு என்ன முடை? என்றால் அங்கே போய் கேட்க உனக்கு என்ன problem என்று பொருள். சில இடங்களில் problem என்பது கணக்கு, அல்லது கேள்விக் கணக்கு (அல்லது கணக்குக் கேள்வி) என்று பொருள்படும். Presentation என்பது சில இடங்களில் (கருத்தை) முன்வைத்தல், முன்படைத்தல் எனப் பொருள்படும். பிரச்சினை ( प्रश्नः) என்னும் சொல்லின் பொருள் கேள்வி. அதற்கு தமிழில் சிக்கல், முடை, முரண்பாடு என்னும் பொருள்கள் கிளைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன். प्रश्नः என்றால் முரண்பாடு (dispute, controversy) என்னும் பொருளும் தரும், ஆனால் அடிப்படையான பொருள் கேள்வி, inquiry என்பதுதான். தமிழில் சிக்கல், குழப்பம், குளறுபடி, கேள்வி, முரண்பாடு, முடை, இடக்கு, சிடுக்கு, இடைஞ்சல் என பற்பல சொற்களால் குறிக்கலாம் (இடத்திற்கு ஏற்றவாறு). --செல்வா 20:04, 11 நவம்பர் 2008 (UTC)
- நன்றி செல்வா.
- singnal processing என்பது அதன் தலைப்பில் உள்ள் ஒரு நூலில் குறியீடு முறைவழியாக்கம் (தமிழ்நாடு) என்று தமிழ் படுத்தப்பட்டுள்து. முறை, முறைமை என்பது system ஈடாக பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. செய்முறை என்பது Procedure. process என்பது பெயர்சொல்லே. ஆனால் இது வினைச்சொல்லில் இருந்து வந்த பெயர்சொல் என்று நினைக்கிறேன்.
- en:Process (computing), en:Thread (computer science) இவற்றுக்கு !!
- செயலாக்கம் என்று இங்கே தரப்படுகிறது http://www.tcwords.com/. நல்ல சொல்லே. thread - புரி!!.
- சிக்கல் என்றால் complex என்றல்லவா பொருள் தருகிறது. எ.கா சிக்கல் எண். பிரச்சினையின் ஒரு பண்பாக சிக்கல் அமையக்கூடும். அமாம், நீங்கள் சொல்லது மாதிரி problem என்றால் பல சூழலில் பல பொருள்களைத் தருகிறது. --Natkeeran 14:15, 12 நவம்பர் 2008 (UTC)
சிக்கல் என்பது entanglement, difficulty, problematic thing, complicated, tricky என பல பொருள்கள் தரும். சிக்கு என்பது குறுகிய இடத்தில் மாட்டிக்கொளுதல். சிக்கெனப் பிடித்தேன் என்றால் தப்பிக்க முடியாமல் பிடித்தேன் என்று பொருள் (எளிதாகப் பிடித்தேன் என்றும் ஒரு பொருள் உண்டு). சிக்கு என்பது சிக்கல் என்றாகியது. நூல், முடி, கயிறு முதலியன தாறுமாறாக (இடக்கு மடக்காக) முடிச்சு விழுந்து பிரிக்கக் கடினமாக உள்ளதைச் சிக்கு என்பார்கள். complex என்னும் பொருளும் பிரித்தறியக் கடினமான ஒன்று என்னும் பொருள் தருவதுதான். problem என்பது ஏதோ ஒன்று தீர்வு கிடைக்காமல் இடர்ப்படுவதைக் குறிக்கும் இடங்களில் சிக்கல் என்னும் பொருள் பொருந்தி வரும். பிரச்சனை என்னும் சொல் மிகப்பெரும்பாலான இடங்களில், சிக்கல், குழப்பம், குளறுபடி, இடர், சண்டை, பிணக்கு என்னும் பொருள்களில்தான் வழங்குகின்றது. Signal processing என்பது குறிப்பலைகளை பதப்படுத்துவது. குறியீடு என்பது symbol code, என்பது போன்ற பொருள் தரும் சொல். முறைவழியாக்கம் என்பது சரியான பொருள்தான். ஆனால் போதிய அளவு தெளிவாக இல்லை என்று நினைக்கிறேன். signal என்பதை குறிகை அல்லது குறிப்பலை என்பது நல்லது. இந்த குறிப்பலைகளை தேவைக்கு ஏற்றார்போல தட்டிகொட்டி, அதாவது பல்வேறு வழிகளில் பிரித்து, வகுத்து (வடிகட்டி), களைய வேண்டியவற்றைக் களைந்து, பதப்படுத்துவதை processing என்பர். எனவே குறிப்பலை பதப்பாடு, குறிப்ப்லைப் பதப்படுத்தல் எனலாம். process (computing) என்பதைச் செயலாக்கம் என்பது பொருந்தும். செயற்படுத்தல். --செல்வா 19:20, 12 நவம்பர் 2008 (UTC)
Firn தொடர்பான சொற்களுக்குத் தமிழ் நிகரிகள்
தொகுFirn Snow, Firn Ice, Glacier Ice என்பதன் இணையான தமிழ் வார்த்தை என்ன?--Rnarendr 14:35, 19 நவம்பர் 2008 (UTC)
Firn snow அடை தூவிப்பனி அல்லது அடைபனி அல்லது அடைபனித்தூவி எனலாம். Firn Ice என்பதற்கு அடை உறைபனி அல்லது உறை அடைபனி எனலாம். Glacier Ice என்பதற்கு பனியாற்றுப் பனிக்கட்டி அல்லது பையாற்றுப் பனிக்கட்டி அல்லது பனியாற்று உறைபனி அல்லது பனியாற்றுக் கட்டி எனலாம். --செல்வா 15:04, 19 நவம்பர் 2008 (UTC)
நான் இவ்விடத்தில் பார்த்ததையும், கேட்டதையும் வைத்து இக்கட்டுற்றை வடிவம் கொடுத்து வருகிறேன், நீங்கள் பிழை திருத்தம் மற்றும் சீர்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Rnarendr 15:16, 19 நவம்பர் 2008 (UTC)
Flow, runs along, glacier elbow, convergence, supplied என்பதன் இணையான புவியியல், நீரியல் தமிழ் சொற்கள் என்ன? --Rnarendr 21:22, 19 நவம்பர் 2008 (UTC)
தமிழ் தேவை
தொகு- en:Sexual orientation - பாலின அமைவு ? பாலுறவு அமைவு ??
- en:Gender - பாலினம்
- en:Sex - பாலினம் ????
- en:Sexology - பாலியல் ??
- en:Sexual intercourse - பாலுறவு ??, உடலுறவு?? ஊடல், புணர்ச்சி ??
- காமம் - ??
- en:Pornography - ஆபாசம் ??
- en:Dating - ??
நன்றி. --Natkeeran 17:43, 22 நவம்பர் 2008 (UTC)
- நன்றி செல்வா.
- பால் Biological Gender எனபதால் Sexual Orientation பாலின அமைவு என்பதை விட பாலுறவுச் சாய்வு எனக்கு நன்றாக படுகிறது.
- பால் பாலினம் இரண்டும் ஒன்றேயே சுட்டுகின்றன என்று நினைக்கிறன்.
- Dating - சற்று சுருக்கமாக் இருந்தால் நன்றாக இருக்கும். முன்காதல், முன்சந்திப்பு ...! பேசேக்கே சுக்கமாக இலகுவா வந்தா நல்லாயிருக்கும். ஆனால் முன்காதல் சந்திப்பு நன்றே.
- Pornograpy - வன்தூண்டல் எல்லா porongrapy criminal மாதிரி பொருள் தருகிறது. பாலுணர்வு ஆக தூய்மையாக இருக்கிறது...!!
Sled dog - தமிழ்ச்சொல் உதவி
தொகுசெல்வா, Sled dog என்பதற்கு இணையாக இழுநாய் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். வேறு பொருத்தமான மாற்றுச்சொல் இருப்பின் பரிந்துரையுங்கள். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 16:58, 26 நவம்பர் 2008 (UTC)
நன்றி
தொகுவாழ்த்துகளுக்கு நன்றி செல்வா. தமிழ் ஒலிப்பு மற்றும் எழுத்து முறையைப் பற்றி தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் படித்து வருகிறேன். இவற்றைச் சிறிது சிறிதாகக் கட்டுரைகளாக இட்டால் விக்கிப்பீடியா:ஒலிபெயர்ப்புக் கையேடு செய்ய உதவும் என்ற எண்ணத்தில் எழுதி வருகிறேன். -- சுந்தர் \பேச்சு 04:11, 4 டிசம்பர் 2008 (UTC)
மறு: புதுப்பயனர் பக்கம்
தொகுஆம், செல்வா. பதிவு செய்த பங்களிப்பாளர்களுக்கு {{புதுப்பயனர்}} என்ற வார்ப்புருவையும் மற்றவர்களுக்கு {{anonymous}} என்ற வார்ப்புருவையும் பயன்படுத்துகிறேன். ஆனால், subst என்ற முன்னொட்டை {{subst:புதுப்பயனர்}} என்பதுபோல் இடுவதால் வார்ப்புருவின் நிரல் இங்கு வந்துவிடுகிறது. முன்னரொருமுறை விக்கி தரவகங்களுக்கு இது நல்லது என்ற அறிவுறுத்தலால் இவ்வாறு செய்யத் துவங்கினோம். இப்போது இது தேவையில்லை. நீங்கள் சொன்னதுபோல் வார்ப்புருவை உள்ளபடியே பயன்படுத்துகிறேன். நினைவூட்டியதற்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 16:09, 6 டிசம்பர் 2008 (UTC)
நலம் தொடர்பான சொற்கள்
தொகு- Health Care - நலம் பேணல், நலம் பராமரிப்பு, நலம் பாதுகாப்பு
- Health Care System - நலம் பேணல் முறைமை
- Health literacy - நலவியல் கல்வி
- Health Science - நலவியல், நல அறிவியல்
- Universal health care - பொது ? நலம் பேணல் ?
- Health informatics
- Population health
- Electronic health record
உங்கள் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன. நன்றி.
--Natkeeran 19:48, 12 டிசம்பர் 2008 (UTC)
என் பரிந்துரைகள் (இப்போதைக்கு):
- Health Care - நலம் பேணல், நலம் பேண்மை
- Health Care System - நலம்பேண் வலயம்
- Health literacy - நலவியல் கல்வி, நலவியக் கல்வி
- Health Science - நலவியல், நல அறிவியல், நலவியம்
- Universal health care - முழுப்பொது நலம் பேண்மை, யாவருக்குமான நலப்பேண்மை
- Health informatics - நலத்தகவல்நுட்பம்
- Population health - மக்கட்தொகைச் சீர்நலம்.
- Electronic health record = நலமின் பதிவடை, நலமின்பதிவு
--செல்வா 23:28, 12 டிசம்பர் 2008 (UTC)
- மிக்க நன்றி செல்வா. --Natkeeran 00:46, 13 டிசம்பர் 2008 (UTC)
உங்களது வரவேற்புரைக்கும் இன்னும் பாராட்டுதல்களுக்கும் நன்றி. பரந்தளவில் எழுதுவதில் எனக்கு ஆர்வமிருந்தாலும் இஸ்லாம் என்ற பகுப்பிலமைந்த தலைப்பின் கீழ் ஆதாரமற்ற விடயங்கள் நிறைய உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவைகளை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன் . இப்பகுப்பின் கீழ் கட்டுரைகளை ஆக்க தரமானவர்கள் இல்லை என்பதையும் அறிகிறேன். முடிந்தளவு எனது பார்வையில் நடுநிலைமையோடு அதே நேரம் தலைப்பிலிருந்து விலகிச்செல்லாமலும், தலைப்புக்கு வலு சேர்க்கும் வகையிலும் இருப்பதாகவே கட்டுரைகளை வரைகிறேன். கட்டுரைகளில் குறைகள் இருப்பின் அவ்விடத்தைச்சுட்டுமிடத்து "ஏற்றுக்கொள்வேன்" என பணிவுடன் உறுதி தருகிறேன்.
உங்களது ஆதரவுகளை தொடர்ந்தும் எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.--Mohamed S. Nisardeen 22:04, 16 டிசம்பர் 2008 (UTC)
பழவேற்காடு
தொகுபழவேற்காடு பற்றிய உரையாடல் -- சுந்தர் \பேச்சு 05:39, 17 டிசம்பர் 2008 (UTC)
Project
தொகுசெல்வா, இதைப் பற்றி முன்னர் உரையாடினோமோ. இல்லை என்றே நினைக்கிறேன்.
இப்போது செயற்றிட்டம் என்று ஒரு குறங்கட்டுரை இருக்கிறது. ஆனால் பொது வழக்கத்தில் திட்டம் என்ற சொல்லே இருப்பத்தாக நினைக்கிறேன். எனக்கு திட்டம் என்ற சொல் நன்றாகவே படுகிறது. en:Plan, project planning ஆகியவற்றை திட்டமிடல் எனலாம். உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல். நன்றி.
- Plan என்பதற்கும் Project என்பதற்கும் தொடர்பான வேறு சில சொற்களுடனும் வேறுபாடு காட்டுமாறு இருத்தல் வேண்டும். திட்டம் என்பது திண் = உறுதி, கெட்டி என்பதன் அடிப்படையில் உருவானது. திட்டமிட்டு செய்தல் என்பது உறுதியாக "திட்டம் தீட்டி" அதன்படி செயற்படுதல். ஒரு செயலை (பணியை) நிறைவேற்றுமுகமாக வழிமுறைகள், இடைநிலைகள் உறுதி செய்த திட்டம் செயற்திட்டம் எனலாம். பிளான் என்னும் சொல், பணியை நிறைவேற்றத் தொடங்கும் முன் திட்டம் பற்றிய வரைவு எனலாம். முன் திட்ட வரைவு அல்லது முன்திட்டம் பிளான். பிரா'சக்ட் என்பது திட்டமிட்ட ஒன்றைச் செய்வது- காலம் வரையறையுடன் மற்றும் பணிநிலைகளை முன்திட்டப்படி நடத்திச்செல்லுதல். செயற்திட்டம் என்பது actionable plan or action-plan. திட்டம் என்பது solidfied plan or project plan. என் நண்பர் இராம.கி யின் புறத்திட்டு என்பது சரியென எனக்குப் படவில்லை. புறத்திட்டு என்னும் சொல் வெளியே உள்ள திட்டான நிலப்பகுதி என்பது போல பொருள் தருகின்றது. புறத்தீடு என்றாரோ? எனக்கு விளங்கவில்லை. தேவநேயப்பாவாணர் வகுதி = design என்னும் சொல்லை ஓரிடத்தில் பரிந்துரைக்கின்றார். "வகுத்தான் வகுத்த வழியல்லாது" என்னும் திருக்குறள் சொல்லாட்சியும் பொருளை விளக்கும்.
- வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
இந்த வகுதியும், திட்டம் தீட்டல், திட்டம் வகுத்தல் என்பதற்குப் பயன்படும் சொல். திட்டவகுதி என்பது பிளான் என்பது போல, வகுத்திட்டம் என்றும் கூறலாம். --செல்வா 17:43, 19 டிசம்பர் 2008 (UTC)
- Plan என்பதற்கும் Project என்பதற்கும் தொடர்பான வேறு சில சொற்களுடனும் வேறுபாடு காட்டுமாறு இருத்தல் வேண்டும். திட்டம் என்பது திண் = உறுதி, கெட்டி என்பதன் அடிப்படையில் உருவானது. திட்டமிட்டு செய்தல் என்பது உறுதியாக "திட்டம் தீட்டி" அதன்படி செயற்படுதல். ஒரு செயலை (பணியை) நிறைவேற்றுமுகமாக வழிமுறைகள், இடைநிலைகள் உறுதி செய்த திட்டம் செயற்திட்டம் எனலாம். பிளான் என்னும் சொல், பணியை நிறைவேற்றத் தொடங்கும் முன் திட்டம் பற்றிய வரைவு எனலாம். முன் திட்ட வரைவு அல்லது முன்திட்டம் பிளான். பிரா'சக்ட் என்பது திட்டமிட்ட ஒன்றைச் செய்வது- காலம் வரையறையுடன் மற்றும் பணிநிலைகளை முன்திட்டப்படி நடத்திச்செல்லுதல். செயற்திட்டம் என்பது actionable plan or action-plan. திட்டம் என்பது solidfied plan or project plan. என் நண்பர் இராம.கி யின் புறத்திட்டு என்பது சரியென எனக்குப் படவில்லை. புறத்திட்டு என்னும் சொல் வெளியே உள்ள திட்டான நிலப்பகுதி என்பது போல பொருள் தருகின்றது. புறத்தீடு என்றாரோ? எனக்கு விளங்கவில்லை. தேவநேயப்பாவாணர் வகுதி = design என்னும் சொல்லை ஓரிடத்தில் பரிந்துரைக்கின்றார். "வகுத்தான் வகுத்த வழியல்லாது" என்னும் திருக்குறள் சொல்லாட்சியும் பொருளை விளக்கும்.
வழக்கத்தில் இருப்பவை
தொகு- திட்டம்
- வேலைத்திட்டம்
- செயற்திட்டம்
விக்சனரி
தொகு- திட்டப்பணி
- ஒரு வேலை
- வேலைத்திட்டம்
வேறு பரிந்துரைகள்
தொகு- புறத்திட்டு - இராம. கி.
- முயலல் - [2]
--Natkeeran 17:10, 19 டிசம்பர் 2008 (UTC)
வலைப்பதிவில்
தொகுஇங்கு சில கருத்துகளை இட்டுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 17:55, 19 டிசம்பர் 2008 (UTC)
2009 தமிழ் விக்கிப்பீடியா வேலைத்திட்டம்
தொகுவணக்கம் செல்வா:
பயனர்களுக்கு ஊக்கம் தந்து, சிரமம் பாராமல் கலைச்சொற்கள் தந்து, கருத்துரைகள் தந்து, அரிய பல ஆழமான கட்டுரைகள் ஆக்கித் தந்து நல்ல வழிகாட்டியாக இருப்பதற்கு மிக்க நன்றி.
அடுத்த ஆண்டு நமது வேலைத்திட்டம் என்னவாக அமையவேண்டும் என்ற உங்கள் பரிந்துரைகளை இங்கு பகிர்தால் நன்றி. மூன்று முக்கிய துறைகள், மூன்று சந்தைப்படுத்தல் வழிகள் பற்றியும் குறிப்பிட்டால் நன்று. --Natkeeran 03:50, 24 டிசம்பர் 2008 (UTC)
- கருத்துக்களுக்கு நன்றி. உயிரினங்கள் நல்ல தேர்வு. அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பகுப்புகளில் ஒரு நிலை கீழ் சென்று தெரிந்தால் குவியப்படுத்தப்பட்ட கவனம் தரக்கூடியதாக இருக்கும். ஊடகங்களை அணுகவேண்டும் என்பது மெத்த சரியே. --Natkeeran 13:51, 24 டிசம்பர் 2008 (UTC)
இலக்கணம் இனிது
தொகு- பக்கம் 130 பாக்க. எவ்வளவு மாற்றங்கள்.
- http://www.tamilcc.org/thamizham/ebooks/2/150/150.pdf
--Natkeeran 00:23, 30 டிசம்பர் 2008 (UTC)
தனிமங்கள் பெயர்கள் ஒலிப்புமுறைக்க ஏற்ப
தொகுதனிமங்கள் பற்றிய பல கட்டுரைகளை நீங்களே ஆக்கியுள்ளீர்கள். அவற்றில் சிலவற்றை தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப மாற்றினால் நன்று. --Natkeeran 23:31, 3 ஜனவரி 2009 (UTC)
கோப்புகள் பற்றி
தொகுசெல்வா, சுந்தருடன் உங்களின் BRITISH LIBRARYல் இருந்து பழைய கோப்புகள் இணைப்பதை பற்றிய உரையாடல் கண்டேன். இன்று BRITISH LIBRARYல் இருந்து சில கோப்புகளை இணைத்துள்ளேன், நான் செய்த முறை சரியா என்று பார்த்துக்கூறவும். --கார்த்திக் 18:49, 14 ஜனவரி 2009 (UTC)
அருமையான கட்டுரை
தொகுத. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை.[3]
--Natkeeran 02:08, 23 ஜனவரி 2009 (UTC)
உதவி
தொகுrocket - எறிகணை என்பது சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் rocket என்ற சொல் rocket இயந்திரம் பொருத்திய பலதரபட்ட வாகனங்களை குறிக்கும். எகா rocket aircraft, all missiles use rocket tech, .
missile - ஏவுகணை
ballistic missile - எறிகணை - எந்த வித வழிசெலுத்துதல் இல்லாமல், உந்துசக்தி பயணத்தின் பாதிதூரம் வரை கொடுக்கப்பட்டு பின் புவியீர்ப்பு விசையினால் விழும் கணை. இதை எறிகணை என்று சொல்ல முடியுமா?.
cruise missile - வழிசெலுத்துதலுடன் சிறிய பறக்கும் (வானூர்தி போன்றே) இறக்கையுடன் குறைந்த உயரத்தில் பறந்து இலக்கை தாக்கும்.
shell -- ??
செல்வா, உங்கள் பரிந்துரைகள் என்ன?. ஏவுகணை, எறிகணை ஆகியவற்றை தவிர வேறு சொற்களை காணொம்.
பரிந்துரைகள் வேண்டும், நன்றி
தொகுScience Citation Index
சயன்சு சைட்டேசன் இண்டெக்சு என்று சொல்லலாம். அறிவியல் மேற்கோள் சுட்டென் என்றும் கூறலாம்.
கிளிமஞ்சாரோ மலை
தொகுசில நாட்களாக விக்கியில் பங்களிக்க இயலாமல் இருந்தது. பல மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டவாறு மனைவி மகளுடன் தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை ஏறச் சென்றோம். பிப்ரவரி 18 ஆம் நாள் கிளிமஞ்சாரோ மலையின் மிக உயரமான முகடாகிய உஃகுரு (Uhuru) உச்சியை வெற்றியுடன் எட்டினோம். இதன் உயரம் 5895 மீ. இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிக உயரமான மலை உச்சி. ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படுகின்றது. உஃகுரு முகட்டை எட்டியதற்காக தான்சானிய அரசு சான்றிதழ் தந்தார்கள். ஏறத்தாழ 50 விலங்குகளும் பறவைகளும், மேலும் 50 செடி-கொடி இனங்களும் இயற்கைச் சூழலில் கண்டு களித்தோம். மீண்டும் விக்கியில் முழு மூச்சுடன் பணியாற்ற உள்ளேன். --செல்வா 04:32, 23 பெப்ரவரி 2009 (UTC)
- வாழ்த்துக்கள், செல்வா. உங்கள் கிளிமஞ்சாரோ அனுபவங்கள் விக்கிப்பீடியாவுக்கும் வளம் சேர்க்கும் என நம்புகிறேன். மயூரநாதன் 16:35, 23 பெப்ரவரி 2009 (UTC)
- வாழ்த்துக்கள் செல்வா. --Natkeeran 22:20, 23 பெப்ரவரி 2009 (UTC)
ஆஸ்கார் விருது
தொகுஇதை எப்படி தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப எழுதுவீர்கள்? --Natkeeran 22:27, 23 பெப்ரவரி 2009 (UTC)
ஹ என்பதற்கு க சில இடங்களில் பொருந்து வரும் அல்லவா?
- ஹென்றி ஃபயோல் கென்றி ஃப்யோல்
- ஹோய்சாலப் பேரரசு கொய்சாலப் பேரரசு
- ஹாரி பாட்டர் காரிப் பாட்டர்
--Natkeeran 22:34, 23 பெப்ரவரி 2009 (UTC)
நற்கீரன், பொதுவாக தமிழ் முறை என்பது ஹ் என்னும் ஒலியை நீக்கி, அதனை ஒட்டி இருக்கும் உயிரொலியை எழுதுவது முறை - குறிப்பாக முதல் எழுத்தாக வருமிடங்களில். எ.கா: அனுமன், அரன், அரி. அது போலவேஎ ஹென்றி என்பதை என்றி என்றும், ஒய்சாளப் பேரரசு, ஆரி பாட்டர் என்றும் தயங்காமல் எழுதலாம். ககரம் பயன் படுத்துவது தவறு, ஆனால் ஃக = ஹ. எனவே ஃகாரி பாட்டர், ஃகென்றி, ஃகொய்சாளப் பேரரசு என்று எழுதினால் ஒலிப்பு துல்லியமாய் இருக்கும். ஆய்தம் முதல் எழுத்தாக வருதல் கூடாது என்று சிலர் கருதுகிறார்கள், ஆனால் ஒலிப்புத் துல்லியம் கூடுதலாக இருக்கும்.
ஆசுக்கர் விருது அல்லது ஆசுக்கார் விருது என்று எழுதலாம். --செல்வா 03:34, 24 பெப்ரவரி 2009 (UTC)
கருத்து கோரல்
தொகு- ரஷ்யா எனபதை தமிழ் வழக்கில் உள்ள மாதிரி உருசியா எனலாமா?
- Steave
- Stephan தமிழ் வேண்டும்
- Scrbrough
- Scotland
- விக்கிப்பீடியா:அகர வரிசையில் கட்டுரைகள் மேலும் பல சொற்கல்
- நீங்கள் எழுதிய தனிமங்கள் பற்றிய கட்டுரைகளுக்கும் மாற்றினால் நன்று.
நன்றி. --Natkeeran 22:42, 26 பெப்ரவரி 2009 (UTC)
- நற்கீரன் உருசியா என்று எழுதுவதுதான் வழக்கம். உருசியா, உருசியப் பயணம் என்பன வழக்கு. அடுத்து Steve, Stephen, Stefan என்பனவற்றை இசுட்டீவ், இசுட்டீவன், இசுட்டெவான் எனலாம். அதாவது மெய்யொலிக்கூட்டங்களைப் பிரித்துத்தான் தமிழில் எழுத இயலும். ஸ்டீவ், ஸ்டீவன் என்றெல்லாம் எழுதினாலும், அது எளிது என்று கூறுவோர் 10-20% மக்களாக இருப்பர். இசுட்டீவ், இசுட்டீவன் என்பது எல்லோராலும் ஒலிக்க இயலும். அதே போல இசுக்கார்பரோ (Scrbrough ), இசுக்காட்லாந்து (Scotland) எனலாம். ஸ்தல, ஸ்பரிச, ஸ்தூண எனபற்றை தல, பரிச, தூண் என்று முதல் காற்றொலி சகரத்தை விட்டு எழுதுகிறோமோ, அதேபோல இசுக்கார்பரோ என்பதற்கு மாறாக கார்பரோ என்றுக்கூடக் கூறலாம். இசுக்கூலுக்குப் போகலையா? = Schoolஉக்குப் போகலையா? என்பது போல முதலில் ஓர் இகரமோ, உகரமோ, எகர்மோ சேர்த்தால் தானே காற்றொலி சகரம் வரும். ஆனாலும் மெய்யொலிக்கூட்டத்தைப் பிரித்துத்தான் தமிழில் எளிதாக ஒலிக்க இயலும். ஸ்ட்ரான்ஷியம் (Strontium) என்று கூறத்தேவை இல்லை, இசுட்டிரான்சியம் என்றாலே போதும். அல்லது இசுத்திரான்சியம் என்றுகூட எழுதியும் ஒலிக்கலாம். தமிழ் மொழியின் இயல்புக்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தி எழுதுவதே முறை. ஆங்கிலேயன் திருவனந்தபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி என்னும் ஊர்ப்பெயர்களை எப்படி திரித்து எழுதினான் என்று பாருங்கள். இத்தனைக்கும், அவர்கள் மொழியில் இச்சொற்களில் உள்ள எல்லா ஒலியன்களும் உண்டு ஆனால் அவர்கள் மொழி வழக்குக்கு முரண்பட்டு வருவதால் திரித்தார்கள் (Trivandrum, tutucorin, tinneveli). அதே போல தமிழில் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு எளிமைப்படுத்தி வழங்குவதை அறியாமல் சிலர் குறைகூறுகிறார்கள். --செல்வா 00:19, 28 பெப்ரவரி 2009 (UTC)
முறைமை System
தொகு- முறை - method
- முறையியல் - methodology
- முறைமை - system
- முறைமைக் கட்டுப்பாடு - system control
- System Engineering - முறைமைப் பொறியியல்
இங்கு System என்பதற்கு முறைமை என்பது பொருந்துகிறதா. ஒழுங்கமைப்பு பெரிய சொல்லாகவும், இங்கு அவ்வளவு பொருந்தவும் இல்லை. (அந்த வரையறையை நான் தான் எழுதுநேன்.) முறைமை என்பது இப்போது system இணையாக பல இடங்களின் பயன்படுகிறது. நல்ல சொல்லாகப் படுகிறது. உங்கள் கருத்து அறிய ஆவல். --Natkeeran 19:38, 27 பெப்ரவரி 2009 (UTC)
- நற்கீரன், இங்கே முன்னொரு முறை, இப்படி எழுதினேன்://Control System என்பதற்கு கட்டுறுத்தியம் என்று சொல்லலாம். தனித்தனி சொற்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. System என்பதை அமைப்பு அல்லது அமையம் எனலாம். System என்பதற்கு ஒருங்கியம் என்ற சொல் மிகப் பொருத்தமானது. ஒருங்குதல் என்றால் பல்வேறு உறுப்புகளோ, கருத்துகளோ, அமைப்புகளோ ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றாக சேர்ந்து இயங்குதல். உடங்குதல் என்றாலும் இணக்கமுற இயங்குதல்/ஒன்றுதல் (harmonious) என்றே பொருள்படும். எனவே ஒருங்கியம் அல்லது உடங்கியம் என்றால் ஒத்து இயங்கும் ஓர் அமைப்பு முறை என்று பொருள்படும். Control System என்பதற்கு கட்டுப்பாட்டு ஒருங்கியம், கட்டுறுத்து ஒருங்கியம் எனலாம். Electrical system என்பதையும் அது ஒரு மின்னியல் ஒருங்கியம் எனலாம். ஒருங்கியம் என்னும் சொல்லின் அடிப்படை, பலவும் ஒன்று சேர்ந்து ஒன்றாக இயங்குவது என்பதுதான்.// இதன் படி system என்பதற்கு ஒருங்கியம், உடங்கியம், அமையம் எனலாம். சமைதியம் என்றும் சில இடங்களில் கூறலாம். அதாவது அடிப்படை என்னவென்றால் எப்படி ஒன்றோடு ஒன்று இணக்கமுற ஒன்றுசேர்ந்து ஒன்று இயங்குகின்றது அல்லது அமைந்து உள்ளது என்பது கருத்து. முறைமை என்பதும் சில இடங்களில் மிகப்பொருந்தும். முறை என்பதிலும், எதற்கு அடுத்தாற்போல் எது என்னும் ஒழுக்கப்பாடுகள் வலியுறுத்தும் கருத்து உண்டு. முறை செய்து, முறை வகுத்து என்னும் சொல்லாட்சிகளில் வழங்கும் பொருள் system (order, organization) என்பதுதான். --செல்வா 23:01, 27 பெப்ரவரி 2009 (UTC)
பாக்க
தொகு- மேலே...உங்கள் கருத்துக்கு நன்றி.
- http://www.tamilcc.org/thamizham/ebooks/4/362/362.pdf
- தமிதாய்கொலை கட்டுரையை முடிந்தால் படிக்கவும்.
- தமிழ் கலைச்சொற்கள், தமிழ்க் கலைக்களஞ்சியம் பற்றி ஒரு வரலாற்றுக் குறிப்புக் கட்டுரை...அங்கே எப்படி தமிழ்வழிக் கலைச்சொற்கள் சமசுகிருத கலைச்சொற்கள் மோதி உள்ளன எனபதை கவனிக்கலாம். --Natkeeran 02:36, 28 பெப்ரவரி 2009 (UTC)
பூக்கோசு, இந்தியா
தொகுபூக்கோசு ஒரு கீரையா? அங்கு உள்ள கலைச்சொற்கள் சரியா? நன்றி.
- கீரை என்று சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். ஆனால் செடி முழுவதும் கீரையைப் போல் பிடுங்கி விடுகிறார்கள். சென்னையில் கால்பிளவர் பூ என்பர். பூக்கோசு என்றும் கூறுவர். பூக்கோசு என்பது சரியான சொல்தான்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர்....எங்கு நல்ல தமிழில் மாற்றலாமோ. பரிந்துரைக்க.
- இவற்றை இராசசுத்தான் அல்லது இராச்சசுத்தான் அல்லது இராசத்தான், சம்மு (ஒலிப்பு:chammu), காசுமீர் (இது பெரு வழக்கு) எனலாம். --செல்வா 17:54, 7 மார்ச் 2009 (UTC)
--Natkeeran 13:16, 7 மார்ச் 2009 (UTC)
நன்று செல்வா.
இங்கை வழக்கில் ஜ எனபதற்கு பதிலாக ய என்றே பயன்படுத்துவர். யேர்மனி, யூன், யூலை...இந்தக் கூற்று சரியா. அதை நீங்கள் பின்பற்ற வேண்டு என்று சொல்லவில்லை. ஆனால் இதைப் பற்றி மேலுதிக விளக்கம் இருந்தால் நன்று. --Natkeeran 18:05, 7 மார்ச் 2009 (UTC)
- பல ஐரோப்பிய மொழிகளில் 'ச (J) ஒலிப்பு இல்லை. எசுப்பானியத்தில் மிக முக்கியமான Jesus என்பதையே (Hesoos, ஃகெசூ˘ச்) என பலுக்குகின்றனர். டாய்ட்சு மொழியை 'செர்மன் என்று கூறினாலும் அவர்கள் மொழியில் J என்பதற்கு ய என்ற ஒலிப்புதான். பொதுவாக இலத்தீன் அடிப்படையில் எழுந்த மொழிகள் பலவற்றிலும், இலத்தீன அல்லாத வேற்று உட்கூடும்ப மொழியாகிய 'டாய்ட்ச் மொழியிலும் J என்னும் எழுத்து வேறாக ஒலிக்கப்பட்கின்றது. போர்த்துகீசிய மொழியில் J எப்படி ஒலிக்கின்றது என அறியேன். பொதுவாக ஏதொ ஓர் ஐரோப்பிய மொழியைப் பின் பற்றியோ அல்லது கிரந்தத்தைத் தவிர்க்கவோ இலங்கையில் இவ்வழக்கம் தோன்றி வழக்கூன்றி இருக்க வேண்டும். இலங்கையில் சிறீ என்று எழுதும் வழக்கமும், பொதுவாக கிரந்தம் தவிர்த்து எழுதுதலும் உகந்த சூழலாக இருந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டிலும் கிரந்தம் கலந்து எழுதும் வழக்கம் மிக அண்மையில் தோன்றி வளர்வதே. Broken window problem!--செல்வா 18:18, 7 மார்ச் 2009 (UTC)
- செல்வா, இலங்கையில் கிரந்தம் தமிழ்ப் பாடத்தில் படிப்பிக்கப்படுவதில்லை. பல சமசுகிருத வழி சொற்களை இன்னும் பயன்படுத்துகிறோம் (எ.கா விஞ்ஞானம்) ஆனால் கிரந்தம் மிகவும் சிரமானது. ஷ, ஷ், ஹ எல்லாம் அறவே இல்லை என்று சொல்லாம். இதை தமிழ் விக்கிப்பீடியாவில் கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் இங்கு எழுதப்படுவதை வாசிக்க சிரமப்படுவார்கள். ஜ எனபதற்கு பதியால ய என்பதை பயன்படுத்துவது சில இடங்களில் ஆவது பொருந்துமா? குயராத் ?? --Natkeeran 18:32, 7 மார்ச் 2009 (UTC)
தனிமங்களின் எண் பட்டியல்
தொகுதனிமங்களின் எண் பட்டியல் இயன்றவரை தமிழ்ப் படுத்தி தந்தால் நன்று. பல தனிமங்களுக்கு தமிழ்ப் பெயர்களும் வழக்கில் உள்ளன என்பது குறிக்கத்தக்கது. --Natkeeran 17:12, 14 மார்ச் 2009 (UTC)
- கட்டாயம் செய்கிறேன். --செல்வா 17:43, 14 மார்ச் 2009 (UTC)
- ஸ் என்பதற்கு இசு, இசுக், இசுப், சே போன்ற இடத்துக்கு ஏற்ப மிகவும் பொருத்தமாக இருக்கின்றன. ஷ என்பதற்கு ச என்பது பல இடங்களில் பொருந்துகிறது. ஷ் என்பது சற்று கூடிய கடினமாக இருக்கிறது. Steve Nash என்பதை இசுடீவ் நேச்சு என்பது ஆவ்வளவு பொருதமாக அமையவில்லை. கிரந்த கையேட்டில் குறிப்பிட்ட மாதிரி ட் பல இடங்களில் வழக்கத்தில் ஷ வுக்கு மாற்றாக இருக்கிறது. ஹ உள்ள சொற்களுக்கு முதல் எழுத்தை உயிரெழுத்தாக கொள்வது பற்றி கூடிய புரிதல் எனக்கு இப்போது உள்ளது. ஜ என்பது ய என்பதே மிகவும் பழக்கத்தில் இருப்பதால் ச என்பது அவ்வளவு பொருத்தமாக இன்னும் படவில்லை. விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு கையேட்டில் ஆதாரபூர்வமான இலக்கண நூல்களை மேற்கொள் சுட்டுதல் வேண்டும். --Natkeeran 17:57, 14 மார்ச் 2009 (UTC)
- Steve Nash என்னும் பெயரை இசுட்டீவ் நாழ்சு அல்லது இசுட்டீவ் நேழ்சு என்று எழுதலாம். J என்பதை ச (cha) என்று கூறுதல் வழக்கம். அதுமட்டுமல்லாமல் கூடிய நெருக்கமான ஒலிப்பும் கூட. சகன்னாதன், சம்புலிங்கம், சானகி, சடாயு, இராமானுசன், கூசா (koojaa) என்று எத்தனையோ சொற்களில் வழங்குகின்றது. இராமானுசன் என்னும் பொழுது iraamaanusan என்று S ஒலியும், முதல் எழுத்தாக வரும்பொழுது (சகன்னாந்தன், சானகி..) cha என்னும் வல்லின எழுத்தாகவும் தமிழ் முறைப்படி ஒலிக்கும். J என்பதற்கு ய என்பது இலங்கை வழக்கமாக இருக்கலாம். ய என்னும் தமிழ் ஒலியே சில தமிழ்ச்சொற்களில் கொச்சையாகச் சொல்லும் பொழுது ச எனத் திரியும். சில இடங்களின் கொச்சையாக இல்லாமலும் மாறும். மயிர் என்பது மசிர் என்றும், உயர்த்தி--> உசத்தி, குயவன் ->குசவன் என்பன சில எடுத்துக்காட்டுகள். பாய்--> பாசனம் என்பது நல்ல தமிழே. --செல்வா 20:18, 14 மார்ச் 2009 (UTC)
- நன்றி செல்வா, நாழ்சு என்பது கூடிய துல்லியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நிச்சியமாக ஜ என்பதற்கு ய என்பது இலங்கை வழக்கம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. Germayny, யேர்மனி, Jappan, யப்பான், யாழ்ப்பாணம் -> jaffana. ஒலிப்பில் நாம் சொல்லும் போது ய-ja, jer - யேர், என்றே வருகிறது. --Natkeeran 20:55, 14 மார்ச் 2009 (UTC)
- தமிழ்நாட்டில் சப்பான், செருமனி, யாழ்ப்பாணம்.--செல்வா 21:16, 14 மார்ச் 2009 (UTC)
- நன்றி செல்வா, நாழ்சு என்பது கூடிய துல்லியமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். நிச்சியமாக ஜ என்பதற்கு ய என்பது இலங்கை வழக்கம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. Germayny, யேர்மனி, Jappan, யப்பான், யாழ்ப்பாணம் -> jaffana. ஒலிப்பில் நாம் சொல்லும் போது ய-ja, jer - யேர், என்றே வருகிறது. --Natkeeran 20:55, 14 மார்ச் 2009 (UTC)
Public Good, Common Good, Club Good, Private Good
தொகு- பொதுப் பண்டம்
- ??
- ?? கழகப் பண்டம் ??
- தனியார் பண்டம்
--Natkeeran 01:05, 24 மார்ச் 2009 (UTC)
பெயர் தமிழாக்கம்
தொகுசெல்வா வேர்னர் ஹெய்சன்பர்க் கட்டுரையில் வலதுபுற சட்டத்துள் உள்ள பெயர்களை தமிழாக்கம் செய்ய இயலுமா? இப்பெயர்களின் ஒலிப்பு எனக்கு பரிச்சயம் இல்லை. நன்றி --கார்த்திக் 17:47, 24 மார்ச் 2009 (UTC)
நன்றி
தொகுதங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வா--கார்த்திக் 03:16, 28 மார்ச் 2009 (UTC)
டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம்
தொகுசெல்வா, உங்களுடைய பல தமிழாக்கத்தை ரசித்துக்கொண்டிருக்கிறேன். டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம் (Dirichlet character) என்ற தமிழாக்கத்தை கொஞ்சம் விளக்கமுடியுமா? நான் Group character க்கு தமிழ் கண்டுபிடிக்கமுடியாமல் கலங்கிக் கொண்டிருந்தேன்.--Profvk 08:25, 4 ஏப்ரல் 2009 (UTC)
- நீங்கள் என் பயனர் பேச்சு பக்கத்தில் நான் டிரிழ்ச்லெட் காரக்டகருக்கு வைத்த பேரைப் பற்றி கேட்டிருந்தீர்கள். முதலில் Group Character என்பது அணியியலில் வரும் Trace என்பதற்கு இணையான குலக் கோட்பாடு என்பதால் வேறு வகையில் பெயர் சூட்டலாம் என்று நினைக்கிறேன். Trace என்பதை மூலைக்கூட்டு அல்லது சுவடு எனலாம். சதுர அணியில்
- என்பது மூலைவிட்டத்தில் (diagonal) உள்ள உறுப்புகளின் கூட்டுத் தொகை. எனவே Group character என்பதற்கு தமிழில் இருபொருள் பட குலச் சுவடு எனலாம். சுவடு என்பது அடையாளப் "பதிவு" என்னும் பொருளில் trace, character ஆகிய இருபொருள்களும் கொள்ளும். டிரிழ்ச்லெட் காரக்டருக்கு நான் டிரிழ்ச்லெட் சுவடு என்று பெயர் இட்டிருக்கலாம், ஆனால் சற்று சுற்றி வளைத்துப் பெயர் சூட்டிவிட்டேன். டிரிழ்ச்லெட் காரக்டர் டிரிழ்ச்லெட் எல்-சார்பியத்தில் (Dirichlet L-function) வருவதாலும், இவை சில புள்ளிகளில் தெறித்து முடிவிலி கொள்ளும் மேரோமார்ஃவிக் சார்பியம்(meromorphic functions)(பொறிவிரிவு சார்பியம்) ஆக நீட்சிப்பெறக்கூடியது என்பதாலும் டிரிழ்ச்லெட் எழுச்சி சார்பியம் என்று பெயர் சூட்டினேன். இன்னொரு காரணம், டிரிழ்ச்லெட் காரக்டர் χ(n) = χ(n + k என்னும் அலையீடு (periodic) பண்பு கொண்டிருப்பதாலும் மீண்டும் மீண்டும் எழுந்தீடு கொள்வதால் டிரிழ்ச்லெட் காரக்டரை டிரிழ்ச்லெட் எழுச்சி என்று கூறினேன். டிரிழ்ச்லெட் காரக்டரை விட டிரிழ்ச்லெட் எல்-சார்பியத்துக்கு இப்பெயர் பொருந்தும் என நினைக்கிறேன். டிரிழ்ச்லெட் காரக்டருக்கு, எளிமையாக டிரிழ்ச்லெட் சுவடு அல்லது டிரிழ்ச்லெட் சுவடியம் என்றும் பெயர் சூட்டலாம். --செல்வா 00:06, 5 ஏப்ரல் 2009 (UTC)
எது கூடப் பொருத்தம்
தொகுகிறித்துவம், கிறித்தவம் எது சரி? --Natkeeran 23:04, 4 ஏப்ரல் 2009 (UTC)
- கிறித்து என்பது இயேசு கிறித்துவை அழைக்கும் பெயர்களில் ஒன்று, எனவே கிறித்துவம் என்பது பொருத்தமாக இருப்பதுபோல் தெரிகின்றது. ஆனால் கிறிஸ்தவம் (கூகுள் 165K), கிறிஸ்துவம் (36K) என்றும் எழுதுகிறார்கள் எனவே கிறித்தவம், கிறித்துவம் ஆகிய இரண்டுமே சரியானதாகத்தான் தெரிகின்றது. கிறித்து (Christ) கிறித்தவம், கிறித்தவர் என்று கூறலாம் என நினைக்கின்றேன். --செல்வா 23:18, 4 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:Artiodactyla feet.png இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:Artiodactyla feet.png படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:40, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:SaiBabaFakeRegurgitation.ogv இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:SaiBabaFakeRegurgitation.ogv படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:43, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:BabaNecklacefake.ogv இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:BabaNecklacefake.ogv படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:44, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:SaiBabaAshCreationExposed.ogv இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:SaiBabaAshCreationExposed.ogv படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:44, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:BBC-Expose-saibabaClaim.ogv இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:BBC-Expose-saibabaClaim.ogv படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:45, 8 ஏப்ரல் 2009 (UTC)
:படிமம்:BBC-Expose-saibabaClaim ogv.jpg இன் காப்புரிமை என்ன?
தொகுபடிமம்:BBC-Expose-saibabaClaim ogv.jpg படிமத்தை பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான காப்புரிமை/அளிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா காப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. காப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகு சீக்கிரத்தில் நீக்கப்படும். உங்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிந்திருப்பின் காப்புரிமை வார்ப்புரு ஒன்றை படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.
இது தொடர்பான கேள்விகள் இருப்பின் பதிப்புரிமை கேள்விகள் பக்கத்தில் கேட்கவும். TrengarasuBOT 12:45, 8 ஏப்ரல் 2009 (UTC)
தமிழால் முடியுமா?
தொகு"எடுத்துக்காட்டாக, "ராஜலக்ஷ்மி" என்பதை இலகுவாக "இராசலக்குமி" என்றோ "இராசலட்சுமி" என்றோ மாற்றிக்கொள்ளலாம். "கஜலக்ஷ்மி" என்பதை "கசலக்குமி" என்று எழுதினால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். "கச நோய்" பீடித்த இலக்குமி என்ற பொருள் வராதா? பொதுவிதியைக் கடைப்பிடித்து "கசலக்குமி" என்றுதான் எழுதுவேண்டும் என வாதிடுவது நல்லதல்ல." என்பது மயூரநாதன் கருத்து. கஜலக்சுமி என்பதை எப்படி தமிழில் எழுதலாம்? --Natkeeran 16:39, 11 ஏப்ரல் 2009 (UTC)
- மயூரநாதனின் கருத்துகளும் பரிந்துரைகளும் எண்ணி ஏற்கவேண்டியன. ராசு, ராசன் என்று கொள்வதே சரியாக இருக்கும். பிருத்திவிராசு அல்லது பிருத்திவிராசன் என்று இருக்கலாம். முதலில் எல்லாவற்றையும் விரைந்து மாற்றத்தேவை இல்லை. ஒரு சில இடங்களில் கிரந்தம் இப்போதைக்காவது இருக்கலாம். ஆனால் ஒரு கருத்து- கச, கசன் என்பது தமிழில் வழக்குதான். கடோத்கசன், கசலட்சுமி, கசமுகன் என்னும் வழக்குகள் உண்டு. எ.கா: "அடியேனுக்கு அமைத்தருளின சுவர்க்கலோகத்தைக் கசமுகன் சங்கரிக்க..". சில இடங்களில் தமிழ்-வழி பொருட்பிழை வருவது போல் உள்ளவை தவிர்க்க இயலாதன. இது போன்ற இடர்ப்பாடுகள் எல்லா மொழியிலும் உள்ளன. ஆங்கிலத்திலும் சொல்லக்கூடாத ஒலிப்புகள் வரும் (சிலருடைய பெயர்களில்). சில இக்கட்டான இடங்களில் வேறுவிதமாகவும் கூறலாம். இலட்சுமணன் என்றும் இலெட்சுமணன் என்றும் கூறுவது போலவும், தட்சிணாமூரித்தி, தெட்சிணாமூர்த்தி என்று சொல்வது போலவும், கசலட்சுமி என்று கூறாமல் கெசலட்சுமி என்று கூறும் வழக்கமும் உண்டு. எ.கா: "தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடுவீராசாமியின் தம்பி தேவராஜன்-கெசலட்சுமி மகள் கவிதா, சென்னை நீலாங்கரை சிவராம..". இதே போல சகதாம்பா, சகன்னாதன் என்னாமல் செகதாம்பா, செகன்னாதன் என்றும் கூறுவதுண்டு. ஆனால் மயூரநாதன் சொன்ன பரிந்துரையை ஏற்பது நல்லது. சற்று பொறுமையாகவே செய்யுங்கள். தாஜ் மகால் என்பதை தாச்சு மகால் என்றால் ஒன்றும் தவறாகாது (பலர் இப்படியேதான் பலுக்குவரும் கூட), ஆனால் தாஜ் மகால் என்று இருக்கட்டும். முடிந்தால், பின்னர் தகுந்த பக்குவம் எய்தினால் தாச்சு மகால் என்று எழுதலாம். இப்போது வேண்டியதில்லை. --செல்வா 04:19, 16 ஏப்ரல் 2009 (UTC)
வடமொழியில் எழுத உதவி தேவை
தொகுசெல்வா, வணக்கம் தத்துவமஸி என்ற மகாவாக்கியம் என்ற பக்கத்தைப்பார்க்கவும். நான் 'தத்துவ்மஸி' யை வடமொழியில் எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அது வரவில்லை. Please help. --Profvk 14:32, 19 ஏப்ரல் 2009 (UTC) ]]
- तत् त्वम् असि அல்லது तत्त्वमसि என இப்பொழுதுள்ளது. அந்த வார்ர்ப்புரு வேண்டியதில்லை. --செல்வா 14:39, 19 ஏப்ரல் 2009 (UTC)
- செல்வா, நன்றி. ஆனால் அதை எப்படிச்செய்தீர்கள் என எனக்குத்தெரியவேண்டுமே!--Profvk 15:37, 19 ஏப்ரல் 2009 (UTC)
- மகிழ்ச்சிங்க. அந்த lang-sa என்னும் வார்ப்புருவுக்கான {{lang-sa|..}} என்னும் பகுதிகளை நீக்கினேன். நான் என்ன செய்தேன் என்பதைக் காண பக்கத்தின் வரலாறு என்னும் பிரிகையை (tab)அழுத்தி, தேவையான மாற்றம் கொண்ட பதிப்பில் "கடைசி" என்னும் சுட்டியைச் சொடுக்கினால் "வேறுபாடு" தெரியும். இங்கே பாருங்கள் நான் செய்த மாற்றம் என்ன என்று காண. --செல்வா 15:47, 19 ஏப்ரல் 2009 (UTC)
- செல்வா, நன்றி. ஆனால் அதை எப்படிச்செய்தீர்கள் என எனக்குத்தெரியவேண்டுமே!--Profvk 15:37, 19 ஏப்ரல் 2009 (UTC)
தமிழ் பெயர் வேணும்
தொகுசெல்வா en:Four-horned_Antelope இந்த விலங்கிற்கு தமிழ் பெயர் வேணும். மிக அரிதான விலங்கு! தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் காணப்படும் விலங்கு. என்னுடைய அடுத்த கட்டுரை இதுதான்--கார்த்திக் 16:39, 19 ஏப்ரல் 2009 (UTC)
- கார்த்திக், "அழிவுக்கு இலக்காகிய இருக்கும் இந்திய விலங்குகளும் அவற்றைக் காக்கும் முறைகளும்" என்னும் நூலில் நாலு கொம்பு மான் என்றே கொடுத்துள்ளனர். (ஆங்கில மூல நூல்:Endangered Animals Of India & Their Conservation, 812370187X 9788123701875)--சிவக்குமார் \பேச்சு 16:48, 19 ஏப்ரல் 2009 (UTC)
- நாற்கொம்பு மான் என்று சொல்லலாம். --செல்வா 17:13, 19 ஏப்ரல் 2009 (UTC)
பாறையில் ஏறி முகில்களின் ஊடே இயற்கையை நோக்குகையில்
தொகுஉணர்வு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பாக்கிறேன். இந்த மலை ஏறியது ஒரு சாதனைதான். வாழ்த்துக்கள் செல்வா. படங்களுக்கு நன்றி.
நீங்கள் ஏறிய மலையை இன்னொமொரு தமிழர் ஈழத்தில் மக்களுக்கான நிதி திரட்டுவதற்கென ஏறுவிருப்பதாக வானொலியில் கேட்டேன். --Natkeeran 02:46, 20 ஏப்ரல் 2009 (UTC)
- நன்றிக்ள் நற்கீரன். ஆம், மிகவும் நிறைவான மலையேற்றம். நாங்கள் செய்ய இயன்ற ஒரு அரிசெயல்தான் (எங்கள் அகவையில்). 9 நாட்கள் ஏறினோம். மொத்தம் 87 கிலோ மீட்டர் ஏற இறங்க. ஈழத்தமிழருக்கான மலையேறம் நடப்பதைப் பின்னர்தான் கேள்விப்பட்டோம். நாங்கள் முன்னமே இவற்றை முடிவு செய்து விட்டோம். இல்லையெனில் நாங்களும் இதில் கலந்து கொண்டிருக்க முடியும். --செல்வா 02:54, 20 ஏப்ரல் 2009 (UTC)
நன்றி
தொகுசெல்வா, தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :) கண்டிப்பாக விரைவாக நூறு கட்டுரைகள் எழுதுவேன். இன்றுடன் தவிக்கு வந்து 1 வருடம் முடிந்து விட்டது. ஒரு வருடத்திற்கு வெறும் 83 கட்டுரைகள் தான் :( மிகக் குறைவான பங்களிப்பு. நான் தவிக்கு பங்களிக்க தவி நண்பர்களின் ஊக்கமும் நட்புமே காரணம்.--கார்த்திக் 16:19, 23 ஏப்ரல் 2009 (UTC)
- நான்கைந்து ஆண்டுகளில் நூறுக்கும் குறைவான கட்டுரைகளையே தொடங்கியுள்ள என்னைப் போன்றவர்களைக் காட்டிலும் நீங்கள் பல மடங்கு மேல். ;) -- சுந்தர் \பேச்சு 16:31, 23 ஏப்ரல் 2009 (UTC)
- சுந்தர், கார்த்திக், கட்டுரை எண்ணிக்கை மட்டும் முக்கியம் அல்ல. என்ன தரத்தில் உள்ளன, என்ன பயன் விளைவிக்கின்றது, என்னென்ன தலைப்பில் உள்ளன என்பனவும் முக்கியம். நீங்கள் இருவரும் ஆக்கிய பல கட்டுரைகள் முதல்தரமானவை என்பது என் கணிப்பு. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல பலரும் வந்து தரமான கட்டுரைகள் ஆக்கினால் இன்னும் விரைவாக வளர்வோம். ஆனால் நல்ல முறையில் அகல ஆழத்துடன் கட்டுரைகள் உருவாகி த.வி வளர்வது மிக இன்றியமையாதது. ஓராண்டுக்கு 52 கட்டுரைகள் எழுதினாலே போதும் (ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரு கட்டுரை). கூடியமட்டிலும் எல்லோரும் வந்து பங்காற்றலாம். என் நினைப்பு என்னவென்றால் கல்லூரி சென்ற தமிழர்களில் 100 இல் ஒருவராவது ஆளொன்றுக்கு 100 கட்டுரைகள் எழுதி வளம் சேர்க்கவேண்டும். எந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் தரமான கருத்துகளும், தெளிவான விளக்கங்களும், நல்ல படங்களுடன் தகவல் செறிவாக நல்ல தமிழில் கிடைக்கும் இடம் த.வி என்று வளர்ச்சி பெறுதல் வேண்டும். --செல்வா 17:09, 23 ஏப்ரல் 2009 (UTC)
- ஊக்கத்துக்கு நன்றி, செல்வா. இயன்றவரை தொடர்ந்து பயனுள்ள கட்டுரைகளைத் தொடங்குவேன். எப்போதும்போல மற்றவர்கள் துவக்கும் கட்டுரைகளையும் மேம்படுத்த முயல்வேன். என்னுடைய தொடக்க நாட்களில் புகுபதிகை செய்யாமல் பயனர்கள் சோதனை முயற்சியாக தலைப்பை மட்டும் உள்ளிட்டு கட்டுரையைத் தொடங்குவர். அவற்றை குறுங்கட்டுரையாகவாவது ஆக்க வேண்டுமென்று முனைந்து ரவி, நற்கீரன், சிவா,மற்றும் சிலருடன் நானும் சில நூறு கட்டுரைகளை எழுதினோம். இப்போது குறும்பன், செல்வம், கார்த்திக் என மற்ற பழைய பயனர்களுடன் முழுநீளக் கட்டுரைகளை உருவாக்குவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியளிக்கிறது. -- சுந்தர் \பேச்சு 17:26, 23 ஏப்ரல் 2009 (UTC)
- சுந்தர், கார்த்திக், கட்டுரை எண்ணிக்கை மட்டும் முக்கியம் அல்ல. என்ன தரத்தில் உள்ளன, என்ன பயன் விளைவிக்கின்றது, என்னென்ன தலைப்பில் உள்ளன என்பனவும் முக்கியம். நீங்கள் இருவரும் ஆக்கிய பல கட்டுரைகள் முதல்தரமானவை என்பது என் கணிப்பு. சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல பலரும் வந்து தரமான கட்டுரைகள் ஆக்கினால் இன்னும் விரைவாக வளர்வோம். ஆனால் நல்ல முறையில் அகல ஆழத்துடன் கட்டுரைகள் உருவாகி த.வி வளர்வது மிக இன்றியமையாதது. ஓராண்டுக்கு 52 கட்டுரைகள் எழுதினாலே போதும் (ஒரு கிழமைக்கு (வாரத்திற்கு) ஒரு கட்டுரை). கூடியமட்டிலும் எல்லோரும் வந்து பங்காற்றலாம். என் நினைப்பு என்னவென்றால் கல்லூரி சென்ற தமிழர்களில் 100 இல் ஒருவராவது ஆளொன்றுக்கு 100 கட்டுரைகள் எழுதி வளம் சேர்க்கவேண்டும். எந்தத் தலைப்பை எடுத்துக்கொண்டாலும் தரமான கருத்துகளும், தெளிவான விளக்கங்களும், நல்ல படங்களுடன் தகவல் செறிவாக நல்ல தமிழில் கிடைக்கும் இடம் த.வி என்று வளர்ச்சி பெறுதல் வேண்டும். --செல்வா 17:09, 23 ஏப்ரல் 2009 (UTC)
Pattern தோரணம் கோலம்
தொகுPattern என்பதற்கு சமூக அறிவியல் தமிழ் நூல்களில் தோரணம் என்று பயன்படுத்துகிறார்கள். வேறு இடங்களில் கோலம் (வடிவமைபுக் கோலம்) என்றும் வருகிறது. எது கூடப் பொருத்தம்?--Natkeeran 23:47, 24 ஏப்ரல் 2009 (UTC)
- இதற்கு சரியான சொல் தெரியவில்லை. சில இடங்களில் பின்னல், கோலம், ஒழுக்கம், மிடை, அமைப்பு, அடுக்கு போன்ற சொற்கள் பொருந்தலாம். தோரணம் என்பது தமிழ்ச்சொல் இல்லை என்று நினைக்கிறேன். மேலும் தோரணம் என்பது பொருந்தாது. தோரணம் என்பது சாலை, வாயில் போன்ற ஒன்றுக்கு குறுக்காக கட்டிய கயிற்றில் இருந்து தொங்கும் இலை, ஓலை முதலானவை. தோரணத்தில் சீராக இடம் விட்டு இலை, ஓலை முதலியன தொங்கலாம். இதன்வழி pattern என்னும் கருத்தைச் சுட்டலாம், ஆனால் மிகவும் பொருத்தமான சொல் இல்லை. மிடைவு என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆனால் இது எல்லா இடங்களிலும் பொருந்தாது. மீண்டும் மீண்டும் வரும் அமைப்பு, மறுபடியும் மறுபடியும் சீராக தோன்றும்/வரும் அமைப்பு. சீரடுக்கு, சீர்மிடை என்று ஏதேனும் ஒன்று பொருந்தி வரக்கூடும். மீண்டும் சிந்திப்போம். --செல்வா 00:43, 25 ஏப்ரல் 2009 (UTC)
- சீரமைவு என்ற சொல் பொருந்தும் என்று தோன்றுகிறது. --Profvk 10:40, 25 ஏப்ரல் 2009 (UTC)
- ஆம் பல இடங்களில் சீரமைவு என்பது பொருந்தும். மிக்க நன்றி. pattern என்பதை ஆங்கிலத்தில் பல இடங்களில் பல பொருள்பட சுட்டுகின்றனர். அது தவிர, ஆங்கிலத்தில் இல்லாத அல்லது அதிகம் வழங்காத புதுப் பொருட்களிலும் நீட்சியிலும் தமிழில் வழங்கப்படுகின்றது. சீலை அல்லது திருமண அழைப்பிதழ் வடிவமைப்பில் கூட அந்த "பாட்டர்ன் நல்ல இருக்கு" என்கின்றனர். அங்கே அவர்கள் கூறுவது "design" (design pattern??!!). ஓர் ஆங்கிலச்சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல்தான் இருக்கவேண்டும் என்பதல்ல, ஆனால் இடத்துக்கு ஏற்ப தமிழ்ச்சொற்கள் இருந்தாலும், அவை ஒரு சீரொற்றி இருக்கவேண்டும். தமிழில் சீராக, தொடராக, பிணைவு கொண்டு உள்ளவற்றுக்கு மாலை என்று பெயர். நிறமாலை என்பது வெள்ளை ஒளிக் கற்றை கண்ணாடிப் பட்டகம் போன்ற பொருள்களில் பட்டு ஒளிப்பிரிகை அடைந்து தோன்றும் நிற அடுக்கம். பகலை இரவோடு தொடர்புபடுத்திப் பின்னும் காலம் மாலை. மால் என்பது மயங்குதல் (= ஒன்று திரிந்து பிறிதாதல்), மால்-மாலை. தொடுக்கப்படுவது மாலை. தொடுக்கப்படுவதைத் தொடை என்றும் கூறுவர். எனவே தொடை, மாலை, கோவை முதலான சொற்களையும் pattern என்பதற்குப் பயன்படுத்தலாம். மிக எளிமையாக சீர் என்றும் கூறலாம். என்ன பாட்டர்ன் எனக்குப் பிடித்திருக்கின்றது என்பதை அந்தச் சீர் எனக்குப் பிடித்திருக்கின்றது என்று கூறலாம். சீர் என்பது இணக்கமுற அமைந்திருக்கும் ஓர் அமைப்புநிலை. திருமணங்களில் பல பரிசுப்பொருள்களை அழகுற அடுக்கி வரிசைப்படுத்தி வைப்பதற்கும் சீர் என்று பொருள். ஆனால் இங்கு சீர் என்னும் சொல் சிறப்பான அறிவியல், கணிதவியல் பொருளில் ஆளப்படுகின்றது. என்ன சீர் என்றால் என்ன பாட்டர்ன் என்று பொருள். சீர்தி என்றும் நீட்டலாம் ஆனால் சீர்த்தி என்னும் சொல் வேறு பொருளில் தமிழில் ஆளப்படுகின்றது. இங்கே சீர்தி, சீர்த்தி அல்ல. அதே போல தொடை என்றும் கூறலாம். என்ன தொடை என்றால் என்ன பாட்டர்ன் (என்ன பிணைவு அமைப்பு). இதனைத் தோடு என்றும் கூறலாம். சேர்ந்திருப்பது தோடு (தொடுக்கப்பட்டு சேர்ந்திருப்பது தோடு). தொடுப்பு என்பது சீராக பிணைத்து அடுக்குவது. அதே போல, பண் என்றும் கூறலாம். பண் என்பது ஒன்றுக்கு ஒன்று இணக்கமாக சீருடன் அமையும் ஏதொன்றும் ஆகும். இராகம் என்பதை தமிழில் பண் என்பது யாரும் அறியும் ஒன்று. இங்கு பண் என்பது அறிவியல், கணிதவியல் பொருளில் பயன்படும் கலைச்சொல். எந்தப் பண் என்றால் எந்தப் பாட்டர்ன் என்று பொருள். இப்படி பல சொற்கள் தமிழில் ஆள இயலும். ஆனால் தொடர்புடைய அறிவியல், கணிதவியல், பொறியியல் விளக்கத்துடன் வரும்பொழுதே இச்சொற்கள் பொருள் உருவேறும். தனிச்சொற்களாக எண்ணினால் அதிகம் பயன் இராது. --செல்வா 15:09, 25 ஏப்ரல் 2009 (UTC)
விக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study
தொகுவிக்கிப்பீடியா:Tamil Wikipedia: A Case Study - இங்குள்ள உரையை இந்திய நேரத்தில் இன்றிரவுக்குள் திருத்த முடிந்தால் அருள்கூர்ந்து செய்து தாருங்கள், செல்வா. நான் தரக்கண்காணிப்புத் தரவுகளைக் கொண்டு விளக்கப்படங்களை உருவாக்கி இணைத்துப் பின் ஒப்படைக்கவுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 14:30, 29 ஏப்ரல் 2009 (UTC)
ஊர்
தொகுகிராமம் என்பதற்கு தமிழ் ஊர் என்கிறார்கள். எனவே கிராமவியல் எனபதை ஊரியல் எனலாமா? --Natkeeran 18:09, 2 மே 2009 (UTC)
- கட்டாயம் ஊரியல், நகரவியல், மாநகரவியல், ஆகிய சொற்களைத் தகுந்த இடங்களில் பயன்படுத்தலாம். --செல்வா 18:33, 2 மே 2009 (UTC)
Recursion
தொகுRecursion எனபதற்கு சுழல் என்று tcwords.com தருகிறது. பொருந்துகிறதா? --Natkeeran 16:06, 3 மே 2009 (UTC)
பொருந்தலாம். இடத்தைப் பொருத்தது. கணிதத்தில் recursive relation என்னும் இடத்தில் தொடரீடு, மீள் ஈடு, வேறுபாட்டீடு என்னும் சொற்களாலும் குறிக்கலாம்.
என்று குறிக்கும்பொழுது ஒரு தொடரில் என்னும் (n+1) ஆவது மாறி, அதற்கு முன் உள்ள என்பதோடுதொடர்பு கொண்ட ஏதோவொரு ஈடு (சமன்பாடு), ஆகவே தொடரீடு. மீளீடு என்பது மீண்டும் மீண்டும் இவ்வாறு தொடர்பு கொண்டு மற்றெல்லாமும் நிறுவப்பெறும் என்பதால். வேறுபாட்டு ஈடு என்பது என்பது போல இருந்தால் என்பது போல எழுதலாம். இப்படி எல்லாவற்றையும் எழுதுதல் இயலாமல் இருக்கலாம். என்றாலும் ஒரு தொடரில் உள்ள பலவற்றை ஒப்பிட்டு(தொடர்புபடுத்தி) வரையும் ஓர் ஈடு. ஆகவே வேறுபாட்டு ஈடு என்றும் சொல்லலாம். சுழல் என்பது மீளீடு என்பதன் பொருள் போன்றது. கணிதம் அல்லாத பிற சூழல்களிலும், recursion, recurrence என்னும் சொற்கள் வழங்கும். நோய், பொருள்முதல் கருத்துகள், அரசியல் வன்முறை, போன்ற பல சூழல்களில். எனவே. மீண்டும் வருதல் என்பது பொதுவான கருத்து. சுழல் என்பதும் பொருந்துமாறு பயன்படுத்த இயலும். சுழல் என்பது எளிமையான அழகான சொல். சுழலீடு எனலாம். சுழல் என்பதனையும் கட்டாயம் பயன்படுத்தலாம். --செல்வா 20:35, 3 மே 2009 (UTC)
Software Framework, Software Architecture, Structure
தொகுFramework, Architecture ஆகிய இரண்டும் வேறு பொருளில் நிரலாக்கத்தில் வழங்கப்படுகிறது. தமிழில் கட்டமைப்பு என்ற சொல் Structure, Framework Architecture என எல்லாவற்றுக்கும் பொருந்துவது போல் வருகிறது. இவற்றை வேறுபடுத்திக் காட்டுவது எப்படி? --Natkeeran 02:20, 8 மே 2009 (UTC)
- Framework என்பதை மென்பொருள் துறையில் பகுப்பமைப்பு அல்லது வகுப்பமைப்பு எனலாம். அதாவது மீண்டும் பயன்படுத்துமாறு தேர்ந்து பகுத்து/வகுத்து உருவாக்கும் அமைப்பு. இப் பகுப்பமைப்பில் பலவாறு ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்குமாறு உள்ள பகுதிகள் அடங்கி இருக்கும் -துணை செய்யும் நிரலிகள், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவைப்படும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் நிரல்கட்டுகள் (libraries) முதலியன அடங்கும். architecture என்பதை கட்டமைப்பு எனலாம். --செல்வா 02:50, 8 மே 2009 (UTC)
தமிழ் பெயர் தேவை
தொகுசெல்வா en: Caecilian, en: Salamander என்பதற்கு தமிழ் பெயர் தேவை --கார்த்திக் 14:30, 15 மே 2009 (UTC)
- கார்த்திக், Caecilian என்பதை "Gymnophiona or Apoda" என்னும் வரிசை என்கிறார்கள். இவ் வரிசையின் பெயரை காலிலி எனலாம். Apoda என்றால் காலிலி. Gymnos என்றால் அம்மணம் (ஆடை இல்லாமல் இருத்தல்), ஆனால் இங்கே புற உறுப்புகள் இல்லாமல் இருத்தல் எனப் பொருள்படும். Caecilian என்பது இலத்தீன் சொல்லாகிய cæcilia (பெண்பால் சொல்வடிவம்)என்பதில் இருந்து வந்தது என்கிறது ஆக்ஃசுபோர்டு அகரமுதலி. இதனை பிளினி என்பார் குருட்டுப் புழு என்னும் பொருளில் "Pliny cæcus serpens blind worm" பயன்படுத்தினாராம்.ஆக்ஃசுபோர்டு அகரமுதலி, "" A member of the Cæciliadæ, a curious family of Amphibia, having the form of serpents, but the naked skin and complete metamorphosis of Batrachians; their eyes are very small and nearly hidden by the skin." என்கிறது. ஆகவே சிறுகண் காலிலி என்பது போன்ற ஒரு பெயரால் குறிக்கலாம். Salamander என்பது வாலுடைய பல்லி, அரணை போன்ற ஓர் உயிரி. Caudata என்னும் வரிசையைச் சேர்ந்ததாம். இந்த Caudata என்னும் சொல்லின் பொருள் வாலுடைய உயிரி (!!), ஆனால் வாலுள்ள இருவாழ்வி (நிலநீர் உயிரி) என்று கொள்ளலாமோ? தமிழில் அரணை என்பது Lacertidae சுவர்ப் பல்லி இனம் என்கிறது தமிழ் லெக்ஃசிகன். ஆனால் அரணை என்பது வேறு வீட்டில் உள்ள சுவர்ப்பல்லி வேறு. சுவர்ப்பல்லி Squamata என்னும் வரிசையைச் சேர்ந்த ஊர்வன. எனவே Salamander என்பதை நிலநீர் வாலுயிரி எனலாமா? அல்லது உருவ ஒற்றுமையைக் கொண்டு நிலநீர் அரணை எனலாமா? --செல்வா 19:52, 15 மே 2009 (UTC) பாம்பரணை என்பற்கான ஆங்கிலச்சொல் என்னவென்றும் தெரியவில்லை. Salamander என்னும் ஊர்வன போலவே அரணைக்கும் வால் அறுந்துவிட்டால் மீண்டும் வளருமென்பார்கள். --செல்வா 21:14, 15 மே 2009 (UTC)
மூன்றாண்டுகள் நிறைவு
தொகுஇன்றோடு நான் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்ந்து பங்குகொள்ளத் தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவுற்றுள்ளன. இதுகாறும் 645 கட்டுரைகளைத் துவக்கியுள்ளேன். குறைந்தது 200 உரையாடல் பேச்சுப் பக்கங்களில் சொல் பற்றிய உரையாடல்களில் என் கருத்துகளைப் பகிர்ந்து பங்களித்துள்ளேன். மொத்தம் 11,924 தொகுப்புகள் செய்துள்ளேன். பல கட்டுரைகளை விரிவுபடுத்தியுள்ளேன். ஆண்டொன்றுக்கு சராசரியாக 215 கட்டுரகள் துவங்கியுள்ளேன். வரும் ஆண்டுகளில் இன்னும் கூடுதலாக உழைக்க விருப்பம் கொண்டுள்ளேன். --செல்வா 22:57, 24 மே 2009 (UTC)
- செல்வா, தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் மூன்றாண்டுகளை நிறைவு செய்ததையிட்டு எனது வாழ்த்துக்கள். நீங்கள் தொடங்கிய கட்டுரைகள், கருத்துப் பகிர்வுகள் ஆலோசனைகள் என்பவை ஒரு புறம் இருக்க, பிற பங்களிப்பாளர்களுக்கு நீங்கள் தரும் ஊக்கம் மிகப் பெரியது. பல்லாண்டு காலம் உங்கள் பணி தமிழ் மக்களுக்குத் தேவை. மயூரநாதன் 02:07, 25 மே 2009 (UTC)
- வாழ்த்துகள் செல்வா. உங்கள் கட்டுரை பங்களிப்புகள் சிறப்பானவையும் கருவானவையும் ஆவன. நீங்கள் எங்களைப் போன்ற மற்ற பயனர்களுக்கு அளித்து வரும் தொடர் ஊக்கம் அவற்றைக் காட்டிலும் பன்மடங்கு பயன் விளைவித்துள்ளது. நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை நம் விக்கி பண்பாட்டில் ஏற்றியதில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது. பல்லாண்டு தொடர்க நின் பணி! -- சுந்தர் \பேச்சு 03:09, 25 மே 2009 (UTC)
- தங்களின் மூன்றாண்டு விக்கி தமிழ் பணி வியக்கத்தக்கது. புதிய புதிய அறிவியல் சொற்கள், அறிவியல் கட்டுரைகள், அழமான (மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய) பேச்சுகள், இவை எல்லாவற்றுக்கும் மேல் பிற விக்கியினருக்கு அளிக்கும் அளவில்லா ஊக்கமும் உறுதுணைகளும் பாராட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள். தங்களின் த வி பங்களிப்புகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் செல்வா! வாழ்க--கார்த்திக் 07:12, 25 மே 2009 (UTC)
மயூரநாதன், சுந்தர், கார்த்திக் உங்கள் யாவருக்கும் என் உளமார்ந்த நன்றி. இங்கு பங்காற்றுவதில் உங்களைப்போன்ற நல்ல தமிழன்பர்களைக் காணும் பேறு பெற்றதை நான் மிகவும் பெரிதாக நினைக்கின்றேன். இணைய உலகில் இணையில்லாத தமிழ் கலைக்களஞ்சியமாக விக்கிப்பீடியா திகழ்ந்து தமிழ் பேசும் மக்களுக்கு நல்ல பயன் தர வேண்டும் என்பது நம் எல்லோருடைய கனவு. இதில் உங்களோடு உழைப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். அன்புடன் --செல்வா 23:13, 25 மே 2009 (UTC)
தவியின் தாய்ப் பகுப்புக்களை சினிமா, சாத்திரம், அரசியல், கிசுகிசு, கிறிக்கட் என்று மாற்றலாமா
தொகுசெல்வா, இந்தப் பயனர் பல இடங்களில் இதே வாதங்களை முன்வைத்து பதில் தந்தாயிற்று. மீண்டும் இவருக்கு பதில் கொடுப்பது தேவையற்றது. பொது ஊடகங்களை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது ஒரு தகுந்த வாதமா? அப்படி என்றால் தமிழ் விக்கிப்பீடியாவில் சினிமா, சாத்திரம், அரசியல், கிசுகிசு, கிறிக்கட், தொ.கா தொடர்கள் என்று மாத்தலாமா. இதுதானே பெரிசா விக்குது. இரு பெரும் பந்திகளுக்கு பதிலாக ஒரு குறுங்கட்டுரை எழுதியிருந்தால் பயன் மிகுந்து இருக்கும். --Natkeeran 21:01, 6 ஜூன் 2009 (UTC)
- ஆம் செல்வா. இவர்களை இந்த முறையில் அணுக வேண்டும். விரைவில் இதுபோன்ற உரையாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இறுக்கமற்ற, அதே வேளை சரியான கொள்கையை உருவாக்க வேண்டும். -- சுந்தர் \பேச்சு 02:53, 7 ஜூன் 2009 (UTC)
கருத்து வேண்டல்
தொகுமேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கட்டுரையைப் பார்த்து தேவையான மாற்றங்கள், கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 16:05, 9 ஜூன் 2009 (UTC)
தலைப்பு பரிந்துரை
தொகுசெல்வா, இந்தக் கட்டுரைக்கான சரியான தலைப்பு தோன்றினால் கூறுங்கள். ஒரு அடிப்படையான இந்த கட்டுரையை ஆங்கில விக்கியைக் காட்டிலும் (புரிந்து கொள்ளுதல் நோக்கில்) சிறப்பாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:52, 10 ஜூன் 2009 (UTC)
பி.கு. ஏமா மாலினியின் படம் நன்றாக உள்ளது.
- அக் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் பரிந்துரைத்துள்ளேன். ஏமா மாலினி படம் பற்றிய கருத்துக்கு நன்றி :) --செல்வா 21:54, 10 ஜூன் 2009 (UTC)
பொருட்படுத்தாமல் விடுவதே நன்று
தொகுஇந்த இங்கிலாந்துப் பயனர் ஒரு நட்சத்திரம். இவர் ஆரியர், கிரந்தம், சமசுகிருதம் தவிர வேறு எதுவும் இதுவரை கூறவில்லை. நாங்கள் தரும் பதில்கள் அவரை மேலும் ஒளிப்பெறச் செய்கின்றன. பொதுவாக இப்படிப்பட்ட விசம கருத்தாளர்களை பொருட்படுத்தாமல் விடுவதே நன்று. குறைந்த பட்சம் அவர் சில கட்டுரைகள் எழுதினால் பின்னர் பாக்கலாம். --Natkeeran 01:05, 13 ஜூன் 2009 (UTC)
பொருட்கள், பொருள்கள்
தொகுஎது சரி --Natkeeran 21:48, 17 ஜூன் 2009 (UTC)
- பொருட்கள் என்பது சரி. ஆனால் பொருள்கள் என்பது புணர்ச்சி விதியைப் பயன்படுத்தாமல் எழுதுவது. இதேபோல நாள்கள் என்பதை நாட்கள் என்று எழுதலாம். ஆனால் நாட்கள் என்றால் வேறு பொருள் என்றும் அப்படி எழுதலாகாது. நாள்கள் என்றுதான் எழுதவேண்டும் என்றும் கருத்துகள் உள்ளன. பொருட்கள் என்று எழுதலாம். --செல்வா 22:08, 17 ஜூன் 2009 (UTC)
தமிழ்
தொகு- berry, strawberry, blueberry, blackberry, peach குழிப்பேரி?,
- berry என்பதற்கு தமிழில் தனியாகப் பெயர் இல்லை. குறும்பழம், குறுங்கனி, சிறுகனி என்று வேன்டுமானால் கூறலாம். ஆங்கிலத்தில் gooseberry என்பதை நெல்லி என்கிறோம். --செல்வா 21:58, 21 ஜூன் 2009 (UTC)
- Aerospace - விண்வெளி என்று பல இடங்களில் இருக்கிறது! வான்விண்ணியல்
- வான்விண்ணியல் பொருந்தாது. விண்வெளி, விண்வெளியியல் என்பன சரியானவை --செல்வா 21:58, 21 ஜூன் 2009 (UTC)
--Natkeeran 21:18, 21 ஜூன் 2009 (UTC)
செந்நாய்
தொகுசெந்நாய் கட்டுரையை முடித்துவிட்டேன், இன்னும் பல இடங்களில் மேற்கோள்கள் மட்டும் சேர்க்கவேண்டும். ஒரு முறை பார்க்கவும்.--கார்த்திக் 19:12, 21 ஜூன் 2009 (UTC)
பெயர் தேவை
தொகுசெல்வா en:Nilgai இந்த விலங்கிற்கு தமிழ் பெயர் தேவை.இவ்விலங்கு சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் வரை தமிழ் நாட்டில் இருந்திருக்கலாம்? தற்போது இதன் தென் கோடி எல்லை வடக்கு ஆந்திரம் ஆகும். எனது அடுத்த கட்டுரை இதுதான். முனைவர் கட்டுரையை (doctoral thesis) இன்னும் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்து விடலாம் என நினைக்கிறேன். --கார்த்திக் 12:41, 23 ஜூன் 2009 (UTC)
- கார்த்திக் உங்கள் முனைவர் ஆய்வுரையை இன்னும் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பித்து விடுவீர்கள் என்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. இன்னும் சிறிது காலத்தில் முனைவர் கார்திக்
பாலா, டாக்டர் கார்த்திக்பாலாஎன்று அழைக்கலாம்! எல்லாம் ஒளிவீசும் நல் வெற்றியாக அமைய நல்வாழ்த்துகள். நீல்கை (Nilkgai) என்பது Bovidae (ஆவின் குடும்பம்) என்பதால் நீலா எனலாம். அல்லது நீலமான் எனலாம். பொதுவாக ஆன் என்றால் மான், மாடு ஆகியவற்றின் பெண் என்று அகராதி கூறும், ஆனால் காளை மாட்டிற்கும் ஆன் என்று பெயர் உண்டு. ஆகவே நீலான் (நீல ஆன்) என்றும் கூறலாம். மறுமொழி தர காலம் தாழ்ந்து விட்டதற்கு மன்னிக்கவும். --செல்வா 00:56, 25 ஜூன் 2009 (UTC)
- செல்வா மிக்க நன்றி நீலான் என்றே வைத்துவிடுவோம். செல்வா என்பெயர் கார்த்திக் மட்டும் தான், இந்த பெயரில் எற்கனவே பயனர் இருந்ததால் பாலா (என் தந்தை பெயர் பாலசுப்பிரமணியன்) என்று சேர்த்துக்கொண்டான்.--கார்த்திக் 08:11, 25 ஜூன் 2009 (UTC)
கருமுத்து தியாகராஜர்
தொகுசெல்வா, பயனர் இளமுருகன் (பயனர்:Panjalai) உங்கள் பயனர் பக்கத்தில் உங்களுக்கு ஒரு செய்தியைத் தந்துள்ளார். அங்க்கு ஒருவேளை உங்கள் கண்ணில் படாமல் போய்விடலாம் மாற்றும் அதன் முக்கியத்துவம் கருதி அதனை உங்கள் உரையாடல் பக்கத்தில் கீழே தந்திருக்கிறேன்.--Kanags \பேச்சு 23:53, 24 ஜூன் 2009 (UTC)
respected sir, s.elamurugan here. as such you encouraged me to write about karumttu thiagarajan chettiar i am able to type with the tamil editor and finished the article. kindly go through it m.k.gandhi grand son of mahathma gandhiji has given a mail to put study materials about karumuttu. now iam at madurai to collect the same. kindly place yur comments about somale article to panjalai42_kavingar@yahoo.co.in.--−முன்நிற்கும் கருத்து Panjalai (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- மிக்க நன்றி கனகு. இவருடன் தனி மடலிலும் இரண்டொரு முறை உரையாடியுள்ளேன். கருமுத்து தியாகராசர் மிக முக்கியமான ஒரு தமிழர். இவரைப்பற்றி அரிய செய்திகள் இளமுருகன் அவர்கள் வைத்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால் தெளிவாக எதுவும் விக்கிப்பீடியாவுக்குப் பெற இயலவில்லை. மீண்டும் ஒருமுறை இவற்றைப் படித்துப் பார்க்கிறேன். நீங்கள் நினைப்பூட்டியதற்கு மிக்க நன்றி.--செல்வா 01:18, 25 ஜூன் 2009 (UTC)
கனடா நாள்
தொகுகனடா நாள் வாழ்த்துகள், செல்வா. -- சுந்தர் \பேச்சு 06:01, 1 ஜூலை 2009 (UTC)
- ஓ! மகிழ்ச்சி! நன்றி சுந்தர்! வாழ்க வாழ்க கனடா! வாழ்க வாழ்க அமைதி போற்றும், உண்மையான வடக்கு என்று போற்றப்படும் கனடா!உலகில் பன்னாட்டில் பிறந்த பல மொழி பேசும் பல மதம் பின்பற்றும் பல இன மக்கள் நல்லுரிமையுடம் வாழும் அழகு கொழிக்கும், நீர்வளம் மிக்க எம் கனடா வாழ்க வாழ்க! நேர்மையிலும், பழங்குடிகளின் உரிமை போற்றுதல்களிலும் இன்னும் சில தொலைவு செல்ல வேண்டிய எம் கனடா, வெற்றியுடன் அடையட்டும் தன் நன்னோக்கை. அன்புடன் --செல்வா 15:16, 1 ஜூலை 2009 (UTC)
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
தொகுஅவரது நோக்கம் தெளிவாகியுள்ளது. en:WP:DFTT -- சுந்தர் \பேச்சு 17:54, 2 ஜூலை 2009 (UTC)
- சுந்தர், மிக்க நன்றி. நீங்கள் கூறுவது புரிகின்றது. வெட்டியாய் வளரும், நம் நேரம் வீணாகும்தான். ஆனால் ஒரு சில கருத்துகள் பதிவாவது வேண்டும் என நினைத்தே எழுதினேன். --செல்வா 15:15, 5 ஜூலை 2009 (UTC)
சொற்பரிந்துரை தேவை
தொகுGrassroots என்பதற்கு கீழ்நிலை (த் தளங்கள்) என்ற சொல் பயன்பாட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்!! அது நல்ல சொல்லா? , அடித்தளங்கள் ? வேர் அமைப்பு,வேர்த் தளம் ?? --Natkeeran 14:58, 5 ஜூலை 2009 (UTC)
- வேரடி நிறுவனங்கள், வேரடி அமைப்புகள்/தளங்கள் அல்லது மண்ணடி அமைப்புகள், அடிமண் அமைப்புகள்/நிறுவனங்கள். மக்களிடையே ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்காக, தேவையால் தோன்றி எழுந்து உருவாகும் வேரடி அமைப்புகளைத்தான், வேரடி எழுச்சி நிறுவனங்களைத்தான் கிராசுரூட்ஃசு மூவ்மென்ட் என்கிறார்கள். வேர், மண், அடி என்பன ஒரு பகுதியாக அமைந்த சொல்லாக் இருந்தால் நல்லது. கீழ் என்பது வேறு பொருள்களையும் இவ்வகைச் சூழல்களில் சுட்ட இடம் இருப்பதால் தவிர்ப்பது நல்லது. கீழ் என்பது அடி என்பது ஒரே பொருளில் இங்கு வருவதுதான். எனவே அடி என்பதைக் கொள்ளலாம்.--செல்வா 15:11, 5 ஜூலை 2009 (UTC)
மாற்ற வேண்டுகிறேன்
தொகுபடிமம்:Fire Triangle.jpg என்ற படிமத்தில் இருந்த பிழையை திருத்தியுள்ளேன். புதிய படிமம் படிமம்:Fire Triangle 1.jpg. Replace செய்ய முடியுமா? --arafat 12:07, 6 ஜூலை 2009 (UTC)
- ஒ, செய்யலாமே! இப்பொழுது படிமம்:Fire Triangle 1.jpg பதிவேற்றப்பட்டு கட்டுரையில் சரியாக இருப்பது போல உள்ளதே. புதிய படம் திருத்தி இட்டதற்கு மிக்க நன்றி.--செல்வா 17:40, 6 ஜூலை 2009 (UTC)
நன்றி
தொகுசெல்வா அண்ணே இடாய்ட்சு பற்றிய விளக்கம் அருமை. ரவியிடம் கூட போன வாரம் இடாய்ட்சு மொழியின் ஒலிப்புகளை பற்றி பேசிகிட்டு இருந்தேன். அவர் சொன்ன பல விசயங்கள்ஆச்சரியமா இருந்தது. "ஜெ" என்ற ஒலிப்பு அம்மொழியில் இல்லையாமே! நம்ம ஆளுங்க "ஜெ"ன்னுதான் போடுனும் "செ" போடகூடாதுன்னு ஒத்த கால்ல நிக்கறாங்க. ஆங்கில போல ஒரு ஒழுக்கமில்லா மொழியை பழகிபாழாபோனதால் தான் அனைத்து மொழிகளையும் ஆங்கிலமாக்க வரிஞ்சி கட்டுகிட்டு நிக்கறாங்க! :(--கார்த்திக் 09:19, 7 ஜூலை 2009 (UTC)
- கார்த்திக், ஆங்கிலத்திலே ஒலிப்பொழுக்கம் இல்லையே தவிர, உலக மொழிகளுக்கெல்லாம் வழிகாட்டியாய் (கருத்து, பல்துறை இலக்கியம், வணிக வல்லாண்மை, அரசியல் வல்லாண்மை (இவற்றுக்கு அமெரிக்க வல்லாண்மை முதற்கரணியம்)) இருக்கின்றது. நாம் ஆங்கிலத்தில் இருந்தும், ஆங்கில வரலாற்றில் இருந்தும் (மொழி ஒலிப்பொழுக்கம், மற்றும் மொழி பற்றிய சில கருத்துகள் தவிர) கற்று முன்னேற வேண்டியது பல்லாயிரக்கணக்கில் உள்ளது. ஆங்கிலத்தை நாம் போற்றி கொண்டாட வேண்டியதே, ஆனால் எல்லாமும் ஆங்கிலத்தில் இருப்பதைப் போல இருக்க வேண்டும் என்பது சரியானதல்ல. ஒலிப்பு முறையில் கட்டாயம் நாம் ஆங்கிலத்தைப் பின்பற்றுவது பிற்போக்காகும். சொல்லாக்கத்திலும், சொல்லொட்டு மொழியாகிய தமிழ், பின்லாந்திய மொழி போன்றவை ஆங்கிலத்தில் இருந்து வேறான வகையில் சொற்கள் ஆக்கி வழங்கும் என்பதனையும் பலர் அறிவதில்லை. இடாய்ட்சு மொழி மட்டும் அல்ல, எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் ச' என்னும் ஒலி கிடையாது. --செல்வா 14:46, 7 ஜூலை 2009 (UTC)
நான் 15 திங்கள் ( மாதம் ) இசுரேல் இருந்தேன். அவர்கள் மொழியிலும் (ஈப்ரு) "J" என்ற எழுத்து இல்லை. "ஜெ" என்பதற்கு "யெ" என்றுதான் சொல்லுவார்கள்....−முன்நிற்கும் கருத்து MakizNan (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- ஓ அப்படியா! தகவலுக்கு நன்றி.--செல்வா 02:12, 13 ஜூலை 2009 (UTC)
நன்றி செல்வா அவர்களே,
உங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களின் உற்சாகமான வார்த்தைகள் நம் தமிழை மென்மேலும் வளர்க்கும்.
என் நெறியாளர் மிகவும் நல்லவர். என் ஆய்வில் எதுவும் சிக்கல் என்றால் மட்டும் அவரை பர்ர்க்க வேண்டும் என சொல்லிவிட்டார். என் ஆய்வு சரியான வழியில் செல்வது அவருக்கு மகிழ்ச்சி.
மேலும் ஓய்வு நேரங்களில் செய்தி படிப்பதை குறைந்து விட்டு, கட்டுரை எழுதுவதில் நேரம் போக்குகிறேன்.... உறுதிய்காக நீங்கள் சொல்லும் அறிவுரை படி, என் பணிக்கும் தீங்கு நேரமாலும் வேலை செய்வேன் .
நன்றி. மிக்க நன்றி
அன்புடன் மகிழ்நன்
மிக்க நன்றி மகிழ்நன். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்டலாம் என்பார்களே அதுபோல, உங்கள் வளர்ச்சிக்கு ஏதும் தடை வாராமால் நற்பணி ஆற்ற இருப்பது அறிந்து மிக மகிழ்ச்சி. இன்னொன்று. அருள்கூர்ந்து தயங்காமல் என்னை செல்வா என்றே அழையுங்கள். இங்கு நாம் எல்லோரும் உடன் பங்களிப்பாளர்கள், நண்பர்களே. நீங்கள் இங்கு எழுதுவதைப் பின்னர் நூலாகக் கூட வெளியிடலாம் (விரிவாக்கியோ, சுருக்கியோ, பிறவாறு கிளைத்து எழுதியோ). உங்கள் ஆக்கங்கள் தமிழ் விக்கியை வளப்படுத்தும் என்று நம்புகிறேன்.--செல்வா 01:26, 13 ஜூலை 2009 (UTC)
வீர் சாவர்க்கர் பக்கம் பற்றீ
தொகுசெல்வா, தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பாராட்டுகளுக்கு நன்றி. எனது பயணர் பக்கத்தை தொடங்கிவிட்டேன். விநாயக் தாமோதர் சாவர்க்கர் பக்கத்தில் அவர் கடவுள் மறுப்பாளர் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த எனது கருத்தை உரையாடல் பக்கத்தில் கொடுத்துள்ளேன். அதில் பங்குபெற்று தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி, சாணக்கியன்
செல்வா, தங்களுடைய நன்றியை வரவேற்கிறேன் (welcome என ஆங்கிலத்தில் சொல்வதை எப்படி தமிழில் சொவது?). சாவர்க்கர் பற்றிய மாற்றுக் கருத்துகளை படித்தேன். அதற்கு நந்தாவின் பதிவில் என் பின்னூட்டத்தை அளித்துள்ளேன்.
ஆம், மலையேற்றத்தில் ஆர்வம் உண்டு. ஆனால் கூடவே சோம்பேறித்தனமும் இருப்பதால் அதிகம் போனதில்லை. மேலும் சரியான நண்பர் குழாமும் அமையவில்லை. செம்பரா உச்சியின் உயரத்தை பதிவில் இடுகிறேன். உங்கள் பயணர் பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளுக்கான சுட்டியை கொடுத்துள்ளீர்கள். அதை உருவாக்குவது எப்படி என சொல்லுங்களேன்...
படிவாக்கம்
தொகுநன்றி செல்வா அவர்களே,
என்னுடைய படிவாக்க கட்டுரையில் blunt and sticky end cloning என்ற நுட்பத்தை எழுதி உள்ளேன். முதலில் இச்சொற்களை தமிழ் படுத்திய போது சமம் மற்றும் சமமற்ற முனை படிவாக்கம் என எழுதினேன். பின் சமம் என்ற சொல் தமிழா என்றார் ஐயம் வந்ததால், அதை ஒற்று (ஒற்றுமை, ஒத்த முனை) என பொருளில் மாற்றி விட்டேன். தங்களின் கருத்து என்ன என அறிய ஆவல்.
மேலும் bacterial cloning கட்டுரையின் ஆங்கில இணைப்பு தவறானது. this is linking with Bacterial artificial chromosome. படிவாக்க கட்டுரை ஆங்கிலத்தில் இல்லையென்றால் இணைப்பு கொடுக்கமால் விட்டு விடவும்.
நன்றி மகிழ்நன்
--Munaivar. MakizNan 02:16, 13 ஜூலை 2009 (UTC)
- Blunt and sticky end cloning பற்றி எழுதியுள்ளதைப் படித்துவிட்டு கருத்து இருந்தால் தெரிவிக்கிறேன். ஆம், ஆங்கிலத்தில் சரியான தலைப்பு இல்லை என்றால் இணைக்கக்கூடாது.
இவாற்றை நீக்கிவிடலாம். குறிப்பிட்டமைக்கு நன்றி. உங்கள் குறிப்பை அக்கட்டுரைப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலே இடுகின்றேன்.--செல்வா 02:40, 13 ஜூலை 2009 (UTC)
தமிழ் தேவை
தொகு- Cellular automaton
- head transplant
- Cyborg
- Cryonics
- Simulation
- ergonomics
- Self-organization
- Synergy
- Synchronization
- Consistency
- Terraforming
- Dystopia
--Natkeeran 03:09, 13 ஜூலை 2009 (UTC)
- பரிந்துரைகளைக் கூடிய விரைவில் தருகிறேன், நற்கீரன். --செல்வா 18:00, 13 ஜூலை 2009 (UTC)
இப்போதைக்கு என் பரிந்துரைகள்:
- Cellular automaton செலு இயக்கவியல் [செலு என்பது தனிச்சிறு அறை. இவ்வறையில் செலுத்தம், ஓட்டம் நடைபெறும். செலு என்றால் சிறு துண்டு என்று பொருள். துண்டு துண்டாக சீவிய பாக்குக்கும் செலு என்று பெயர். இன்று பொதுவழக்கு சீவல்]
- automaton என்பது தானியங்கி (autonomous robot); இதனைத் தனித்தானியங்கி என்றும் கூறலாம்.
- head transplant = தலைபெயர்க்கை, தலைபெயர்க்கை மருத்துவம் (ஒருவர் தலையைப் பெயர்த்து வேறொரு தலையை அறுவை மருத்துவ முறையில் பூட்டுதல்/பொருத்துதல்)
- Cyborg = இயற்கை-செயற்கை கூட்டுயிரி ஆகவே செய்யியலி எனலாம்
- Cryonics = மீக்குளிர்வைப்பு நுட்பம், மீக்குளிர்வைப்பியம்
- Simulation = ஒப்பியக்கம், ஒப்பியக்கம் செய்தல்
- ergonomics = இன்சூழ்ச்சியம் (சூழ்ச்சி = design); இன்வகுதி (வகுதி = design)
- Self-organization = தன்னமைவு,
- Synergy = ஒத்தாற்றல்
- Synchronization = நேரவொருமிப்பு
- Consistency = சீரொருமை, சீரொற்றுமை
- Terraforming = மண்ணுலகமாக்கல்
- Dystopia = துன்புலகம், துன்குமுகம்
--செல்வா 18:24, 13 ஜூலை 2009 (UTC)
நன்றி செல்வா. --Natkeeran 03:13, 14 ஜூலை 2009 (UTC)
- Terraforming - மண்ணுலகமாக்கல் நேரடியான மொழி பெயர்ப்பாக உள்ளது. புவியுருவாக்கம், உலகுருவாக்கம், புவிச்சூழலாக்கம், புவிவடிவாக்கம்...எப்படி?--Natkeeran 03:20, 14 ஜூலை 2009 (UTC)
- நற்கீரன், மண், மண்ணுலகம் என்றால் உலகம். ஆங்கிலத்திலும் earth என்பதும் மண்தான். மண் என்பதன் பொருட்செறிவு புவி, பூமி என்பதில் கிடையாது. மண், மண்டுதல், மண்வாசனை, வேரடி மண் என்னும் சொற்களில் இழையோடுவது பொருள் சிறப்புடையது. Terraforming என்பது மண்ணுலகச் சூழலை உருவாக்குவது. நேரடி மொழிபெயர்ப்பில்லை, பொருத்தமான கருத்தாக்கம் என்பது என் கருத்து.--செல்வா 03:34, 14 ஜூலை 2009 (UTC)
Buffer என்ற சொல்லுக்கு ஏதாவது தமிழ் வார்த்தை உள்ளதா?
தொகுநான் " பிடிமம்" என்ற சொல்லை பயன்படுத்தாலம் என நினைக்கிறேன். ஏனெனில் buffer நீர்மத்தில் உள்ள அமிலதன்மையோ, காரத்தனமையேய் (pH) எளிதில் மாற்றிவிடாது. அதனால் பிடிமம் (பிடி+ நீர்மம்) என்ற வார்த்தை பயன்படுத்துலாமா?
தங்களின் விடையெய் எதிர் பார்கிறேன்...--Munaivar. MakizNan 22:38, 13 ஜூலை 2009 (UTC)
- மகிழ்நன், buffer என்பது இடையே ஏதேனும் ஒன்றை உடனே கலந்துவிடாமலோ அல்லது
தடுக்கவோ, தற்காலிகமாக தேக்கி/பிடித்து வைக்கவோ பயன்படும் இடம்/வெளி/பொருள்.இங்கே காடித்தன்மை-காரத்தன்மையைச் சட்டென மாற்றிவிடாத வகையில் அமைந்த இடைமுகப் பொருள். எனவே உங்கள் பிடிமத்தைச் சற்று மாற்றி இடைப்பிடிமம் எனலாமோ என்று நினைக்கின்றேன். சில இடங்களில் இடைமம் என்பதே கூட பொருள்தரும். கணினிகளில் பாடல்கள், அல்லது தரவுகள் இறக்கும்பொழுது கணினி தற்காலீகமாக சேமித்து வைத்து கணினியின் பயன்பாட்டு மென்கலத்துக்கு அளிப்பதும் buffer என்பர். இங்கே இடைமுகம் அல்லது இடைத்தேக்கு என்றும் சொல்லலாம். இப்போதைக்கு இடைப்பிடிமம், இடைத்தடுமம், இடைத்தேக்ககம் முதலியன இடத்துக்கு ஏற்றார்போல பயன்படக்கூடும்.--செல்வா 22:59, 13 ஜூலை 2009 (UTC)
நன்றி
தற்போது இடைபிடிமம் என்ற சொல்லை பயன்படுத்துகிறேன்.
இடைபிடிமம் என்ற சிறு கட்டுரையெய் எழுதி விடுங்களேன்....
நன்றி --Munaivar. MakizNan 23:11, 13 ஜூலை 2009 (UTC)
- இடையம் என்றும் பயன்படுத்தலாம். சுருக்கமாக இருப்பது நல்லது. வரையறை செய்துகொண்டு ஆளலாம். செய்நுட்பங்கள் பற்றிய கட்டுரை எழுத ஆவல் உண்டு. நான் திருப்பதியில் முடிவெட்டுபவன் போல ஆங்காங்கே அரைகுரையாக (ஆனால் வளர்த்தெடுப்பதில்) பல கட்டுரைகளைத் துவக்கி, இன்னும் போதிய அளவு வளர்த்தெடுக்காமல் விட்டு வைத்திருக்கின்றேன். கட்டாயம் துணைக்கட்டுரைகள் எழுதி உதவி செய்கிறேன். சற்று பொறுமையாக நடக்கும் :) --செல்வா 23:23, 13 ஜூலை 2009 (UTC)
செல்வா
concentration என்பதை அடர்வு என்று எழுதவேண்டும் என நினைக்கிறேன். அடர்த்தி என்பது என்ன? எங்கயோ படித்து மறந்து விட்டேன்..
மேலும் ஆங்கில இணைப்பில் ஒரு கூழ்ம படம் இருக்கும் . அதையும் இணைத்தால் நன்றாக இருக்கும்.. நன்றி மகிழ்நன்--Munaivar. MakizNan 01:46, 14 ஜூலை 2009 (UTC)
இக்கட்டுரை தவியில் உண்டா?
தொகுசெல்வா, en:Dugong தமிழில் உள்ளதா? எங்கோ பார்த்த ஞாபகம். தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை :( முடிந்தால் தேடிக் கொடுக்கவும்--கார்த்திக் 10:00, 14 ஜூலை 2009 (UTC)
விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்
தொகுவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் திட்டத்தை தொடங்கியாச்சு:) இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது--கார்த்திக் 17:05, 19 ஜூலை 2009 (UTC)
நன்றிகள்
தொகுசெல்வா, உங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றிகள். சில இடையூறுகள் காரணமாக என்னால் சிறிது நாட்கள் முழுமையான பங்களிப்புகளை வழங்க இயலவில்லை. ஆயினும் இயன்றவாறு தொடர்ந்து பங்களிப்பேன். மேலும் தமிழ் விக்கிக்கு அவ்வப்போது வந்து நான் அளிக்கும் பங்களிப்புகளை ஊக்குவித்தமைக்கு மிகுந்த நன்றிகள். --சிந்து
ஒரு சிறு மெய்த்தேர்வு (எனக்காக)
தொகுபாலூட்டிகள்
தொகுஇந்த வார்புருவையும் வார்ப்புரு:இந்திய_பாலூட்டிகள் இதன் பேச்சு பக்கத்தையும் பார்க்கவும்--கார்த்திக் 04:06, 27 ஜூலை 2009 (UTC)
அருமை. இங்கிருக்கும் இதழ்கள் தமிழ் மொழியின் நெடிய தற்காப்பு பயணத்தை நன்கு உணர்த்துகின்றன. --Natkeeran 03:58, 30 ஜூலை 2009 (UTC)
- இதனை நான் பார்த்து வந்திருக்கின்றேன். அண்மையில் பார்க்கவில்லை. அருமை! மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு நன்றி.--செல்வா 04:25, 30 ஜூலை 2009 (UTC)
புதிய திட்டம்
தொகுசெல்வா. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் இந்தியத்துணைக்கண்ட பாலூட்டிகள் திட்டபக்கத்தை பாருங்கள் உங்களின் கருத்துக்களை கூறுங்கள். இத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் தேவை--கார்த்திக் 19:39, 3 ஆகஸ்ட் 2009 (UTC)
நன்றி
தொகுபல பேச்சுப் பக்கங்களிலும் நான் அவ்வப்போது விடுக்கும் ஐயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் உதவியாக உள்ளது. நன்றி--ரவி 08:09, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
Canadian Charter of Rights and Freedoms
தொகுசெல்வா, நேரம் கிடைக்கும் போது இந்தக் கட்டுரையை: Canadian Charter of Rights and Freedoms எழுதித் தந்தால் நன்று. Features, Interpretation and enforcement ஆகிய பக்கங்களுக்கு கூடிய கவனத்தைத் தந்தால் நன்று.--Natkeeran 00:39, 8 ஆகஸ்ட் 2009 (UTC)
பரிந்துரைகள் தேவை
தொகுசெல்வா, கீழே உள்ளவைக்கு தமிழ் பரிந்துரைகள் கிடைக்குமா?
- Fire Alarm System
- Access control System
- ISDN
- Video Conferencing
- Public Address System
- Forbidden City
- Junk food
- Night (Disco) Clubs
- Pubs
--arafat 14:30, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
- Fire Alarm System = தீ எச்சரிக்கை அமைப்பு
- Access control System = அணுக்க கட்டுப்பாட்டு இயக்கம்
- ISDN = ஐ.எசு.டி.என் (ஒருங்கிணைந்த எண்ணிம தரவு-பேச்சு தொலைதொடர்பு வலைச் சேவை)
- Video Conferencing = நிகழ்படக் கூட்டம் (கூட்டரங்கம்), நிகழ்படவழிக் கூட்டம்.
- Public Address System = பொது ஒலியறிவிப்பு கருவி(/அமைப்பு)
- Forbidden City = பேரரண் நகரம் (உயரொதுக்கு நகரம்), ஒதுக்குப்புரம், பேரரசர் ஒதுக்குப்புரம்.
- Junk food = சுவைத்தீனி
- Night (Disco) Clubs = இரவுக் களிக்கூடம்
- Pubs = பொதுக் குடிப்பகம்
--செல்வா 20:05, 11 ஆகஸ்ட் 2009 (UTC)
- நன்றி செல்வா.--arafat 03:15, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- சில மாற்றுச்சொற்களை உங்கள் கவனத்திற்கு இடுகிறேன்..கருத்திடுக!
- ISDN -Integrated Services Digital Network - ஒருங்கிணைந்த சேவைகள் எண்ணிம பிணையம்
..........Network என்பதற்கு ஒரேசீராக பிணையம் (பிணைப்பது பிணையம்) என்ற சொல்லை ஆளலாம் என்று எண்ணுகிறேன். social network - குமுகப் பிணையம், computer network - கணினிப் பிணையம் என்றவாறு..பிணையங்களை இணைப்பது இணையம் ஆயிற்று..
- நல்ல சொல்லே ஆனால் வேதியியல் bond, bonding என்பதோடு முரண்பட வாய்ப்புள்ளது. வெவ்வேறு துறைதான், மேலும் இவ்வகை பல்பொருள் இயல்பு எல்லா மொழீகளிலும் உண்டு. vector என்னும் சொல் உயிரியலில் ஒருவாறும், கணித, இயற்பியலில் ஒருவாறும் பயன்படுகின்றது. பிணையம் என்பதை எல்லா இடங்களிலும் சீராகப் பயன்படுத்துவதும் நல்லது. வலை/வலையம் என்பது net/network என்பதற்குப் பொருத்தமான மற்றொரு சொல்லிணை. பிணையம், வலை/வலையம் ஆகிய இரண்டு சொற்களும் எனக்கு உடன்பாடே. --செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- Conferencing - கூட்டம் என்பது ஒருவர் பலரிடம் உரை நிகழ்த்துவதை குறிப்பதாக உணர்கிறேன்...ஆனால் இங்கு ஒருவரோடொருவர் உரையாடுவதைக் குறிக்க அரங்கம் அல்லது மன்றம் சிறப்பான சொல்லாக அமையும். Conferencing -பேச்சரங்கம் என பரிந்துரைக்கிறேன்.
- conferencing என்பதைப் பேச்சரங்கம் எனலாம். வீடியோ என்னும் சொல் இருப்பதால் கூட்டரங்கம் என்றேன். நிகழ்படப் பேச்சரங்கம் என்பது அழகாக இருக்கும். --செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- Public Address System = பொது ஒலியறிவிப்பு கருவி(/அமைப்பு) ....இங்கு ஒலியறிவிப்பு பதிலாக அறிவிப்பு மட்டுமே போதுமானதாக உணர்கிறேன்.
- அறிவிப்பு என்று முன்னொட்டு இல்லாமல் இருந்தால் அது announcement, proclamation, declaration என்பது போன்ற பொருள் தரும் அல்லவா? மேலும் இங்கு கூறப்படுவது ஒலிபெருக்கி அமைப்பைப் பற்றியது. ஓலிபெருக்கி என்றே ஒரு சொல்லாகவும் கூறலாம். இப்பொழுதெல்லாம் loudspeaker என்னும் சொல் அதிகமாகப் புழங்குவதாக இல்லை என்று நினைக்கிறேன். Loudspeaker system (தக்க மின்னியல் மிகைப்பிகள் உதவியால் இயங்கும் ஒலிபெருக்கி அமைப்பு). வெறும் அறிவிப்பு என்பது சரியாக இருக்காதுஎன்று நினைக்கிறேன். --செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- Forbidden City = பேரரண் நகரம் (உயரொதுக்கு நகரம்), ஒதுக்குப்புரம், பேரரசர் ஒதுக்குப்புரம் ....ஒதுக்குப்புரம் என்னும் புதுச்சொல்லிற்கு பதிலாக அந்தப்புரம் பாவிக்கலாமே ?
- அந்தப்புரம் என்னும் வகையில்தான் ஒதுக்குப்புரம், உயரொதுக்குப்புரம் என்றேன். அந்தப்புரம் என்பது பொதுவாக அரசியும் அவர்தம் உதவியாளர்களும் இருக்கும் இடம். அங்கு ஒருசில ஆண்களே வர உரிமை பெற்றவர்கள் என்பது பொதுவாக மக்கள் கருத்தில் உள்ள ஒன்று என்று நினைத்தேன். இங்கு பொருந்துமா எனத் தெரியவில்லை. --செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- Junk food = சுவைத்தீனி ...இங்கு Junk -உடலுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய என்னும் பொருளில் வருகிறது. நச்சுத்தீனி/நொறுக்குத்தீனி எனக் கூறலாமா ?
- நொறுக்குத்தீனி சரியாக இருக்கும். நச்சுத்தீனி என்பதும் பொருந்தும் ஆனால் நச்சு என்னும் சொல் சற்று தயங்கச்செய்கின்றது. நச்சு விளைவுகள்/தீவிளைவுகள் தருவது உண்மையே. மேலும் நச்சுதல் என்றால் மீண்டும் மீண்டும் விரும்பி வேண்டுவது என்னும் பொருளும் உடையது. குழந்தைகளை "சும்மா நச்சாதே" என்று கூறுவது "மீண்டும் மீண்டும் வந்து ஏதேனும் வேண்டிக் கேட்டுக்கொண்டே இராதே" என்னும் பொருல் கொண்டது ("தொந்தரவு" என்று புரிந்துகொள்கிறோம்). நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரையும் பலரும் அறிந்திருப்பர். நச்சிக் (விரும்பிக்) கேட்பவருக்கு அவர் இனியராம். எனவே இருபொருளில் நச்சுத்தீனி என்பது பொருந்தும். நச்சுத்தீனி என்றும் சொல்லலாம். நொறுவை, நொறுக்குத்தீனி ஏற்கனவே வழக்கில் உள்ளவை. --செல்வா 15:17, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
--மணியன் 05:30, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- மேலே என் கருத்துகளை இட்டிருக்கின்றேன், மணியன். உங்கள் கருத்துகள் அருமையானவை. பகிர்ந்ததற்கு நன்றி.--செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- செல்வா,மணியன்..
- Video Conference - நிகழ்படக் கலந்தாய்வு / நிகழ்படவழிக் கலந்தாய்வு சரியா?
- pub பொதுக் குடிப்பகம் then bar??
- --arafat 08:10, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
- செல்வா,மணியன்..
- கலந்தாய்வு என்பது அறிவியல்/பொறியியல்/மருத்துவ மற்றும் தொழிசார்ந்த ஆழ்ந்த கருத்துரையாடல்களுக்குப் பொருந்தும். conference என்பது ஆய்வரங்கம்தான். ஆனால் பொதுவாக ஆய்வு என்னும் சொல் இங்குப் பயன்படுமா என்று கூறுதல் கடினம். சில இடங்களில் கட்டாயம் பொருந்தும். எனவேதான் கூட்டரங்கம் என்று பொதுவாகக் கூறினேன். இரண்டு மூன்று பேரோ அல்லது பலரோ, நிகழபட வாயிலாகக் கூடிக் கலந்துரையாடும் நிகழ்வு. நன்றி, ரியாத் அராவ'த். --செல்வா 15:08, 12 ஆகஸ்ட் 2009 (UTC)
resin பரிந்துரைகள்
தொகுresin - பசழி
இது சரிதானா?
synthetic resin
vynelyster resin
synthesis
synthetic language
perseids
thermoplastic - வென்னெகிழி
fiber or glass reinforced plastic (GRP or FRP ) இதன் பொருள் நரம்பிழைகளால் வழுவூட்டிய நெகிழிகள்
fiber or glass reinforced plastic (GRP) - வன்னிழை நெகிழி அல்லது இழைக்கூட்டு நெகிழி .
reinforced plastic - வன்னெகிழி
Fiber cement siding
Fiber reinforced composite
Fiber pull-out
Fiber reinforced concrete
Fiber volume ratio
Fiberglass - கண்ணாடியிழை
Fiberglass sheet laminating
Fiberglass spray lay-up process
Fibre-reinforced plastic
Filament winding
fiber splice
monomer - ஓருரு polymer - பன்னுரு bond - பிணைப்பு covalent bond - வன்பிணைப்பு
molding composite material
injection molding compression molding
இவை களுக்கு பரிந்துரைகள் தேவை
MUNEESHWAR பக்கம் அழிக்கவும்.
தொகுMUNEESHWAR பக்கம் தொடங்க பட்டுள்ளது, அது எதையும் குறிப்பிடவில்லை. அதை எப்படி அழிப்பது என்று எனக்கு தெரியவில்லை. அந்த பக்கத்தை தயவு செய்து அழிக்கவும். நன்றி Vegpuff 06:54, 16 ஆகஸ்ட் 2009 (UTC) | | MUNEESHWAR_பக்கத்தை_அழிக்கவும் யும் அழிக்கவும் :) Vegpuff 06:54, 16 ஆகஸ்ட் 2009 (UTC)
vision, mission, principles, strategy
தொகு- Goal - இலக்கு
- Vision - நோக்கம்
- Mission - ??
- Principles - கொள்கைகள்
- Strategy - வியூகம்
- Values - விழுமியம், மதிப்புகள்
உங்கள் பரிந்துரைகள் அறிய ஆவல். நன்றி. --Natkeeran 00:22, 25 ஆகஸ்ட் 2009 (UTC)
உங்கள் பரிந்துரைகளை தந்துதவ முடியுமா
தொகு- Greenhouse effect - வெப்பம் சிக்குறும் விளைவு
- Greenhouse gas - வெப்பம் சிக்குறுத்தும் வளிமம்
இவற்றைப்பற்றிய உங்கள் பரிந்துரைகளை தந்துதவ முடியுமா?--Terrance \பேச்சு 14:01, 3 செப்டெம்பர் 2009 (UTC)
தெரன்சு நீங்கள் குறித்துள்ள சொற்கள் சரியானதாகவே எனக்குப் படுகின்றது. சில நாட்கள் விடுப்பில் இருந்தேன். உடனே மறுமொழி தராததற்கு மன்னிக்கவும்.--செல்வா 19:41, 12 செப்டெம்பர் 2009 (UTC)
சில நாட்கள் விடுப்பில் இருந்தேன்
தொகுஆகத்து மாத இறுதியில் கலிவோ'ர்னியா சென்றிருதேன். அங்கு யோசமிட்டி புரவுக் காட்டில் உள்ள கருங்கல் அரையுருண்டை (Half Dome) எனப்படும் பெரும்பாறையின் மீது ஏறினோம். இப்பாறைமீது ஏறுவதற்கு போய்வர 27 கி.மீ தொலைவு ஏற்றப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். கடைசியில் ஏறத்தாழ 120 மீட்டர் (400 அடி)பாறை முகட்டை ஏற இருப்பு வடங்களைப் பற்றிக்கொண்டு ஏற வேண்டும். மாமத்து ஏரிகள் (Mammoth lakes) என்னும் இடத்திலும் பல கடுநடைப் பாதைகளில் நடந்தோம். மலை உச்சியில் நடந்து எல்லா புறங்களையும் பார்த்துக் களித்தோம். ஒற்றை உவர் ஏரி (Mono Lake) என்னும் இடத்தில் டூவா' (Tufa) என்னும் கனிமக் கோபுரங்களைக் கண்டோம். இவை பற்றியெல்லாமும் விக்கியில் கட்டுரைகள் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். நேற்று இரவுதான் திரும்பினேன். விரைவில் விக்கிப் பங்களிப்புகளைத் தொடர்வேன். --செல்வா 19:41, 12 செப்டெம்பர் 2009 (UTC)
- உங்கள் ஆர்வமும் மலையேற்றத்தில் காட்டும் முனைப்பும் வியக்க வைக்கிறது! வாழ்த்துகள். ஒருமுறை பயிற்சியாளர்களுடன் பாறையில் கயிறு கட்டி இறங்குவதற்குள்ளாகவே மலைத்துப் போய்விட்டேன். மாறுபட்ட இயற்கை அமைப்புகளைக் கண்டு வந்திருக்கிறீர்கள். அவை பற்றிய கட்டுரைகளை எதிர்நோக்குகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:12, 17 செப்டெம்பர் 2009 (UTC)
- உங்கள் பாராட்டுக்கு நன்றி. புதுப்பயனர்களுக்கு இது உதவுமானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். த.வி உதவிப்பக்கங்களை படித்து உள்வாங்கி எழுதியிருந்தாலும் ஏதேனும் கருத்து/கொள்கை பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டி திருத்தவும். உங்கள் பல்திறன் வண்ணம் கண்டு வியக்கிறேன். இயற்கை அமைப்புகளைப் பற்றிய உங்கள் விக்கி கட்டுரைகளுக்கு காத்திருக்கிறேன்.--மணியன் 04:46, 18 செப்டெம்பர் 2009 (UTC)
- சுந்தர், மணியன் உங்கள் பாராட்டுமொழிகளுக்கு மிக்க நன்றியுடையேன். சிறீதரன் கனகு கூறியவாறும், நீங்கள் இருவரும் கூறியவாறும் கட்டாயம் இவற்றைப் பற்றி எழுதுவேன். என் தொழிற் பணியிலும் இங்கு விக்கியிலும் மீண்டும் பொறுப்புகளைப் பற்றிக் கொள்வது மெதுவாக நிகழ்கின்றது. விரைவில் சூடு பற்றும். உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி.--செல்வா 00:59, 19 செப்டெம்பர் 2009 (UTC)
விக்கிப்பீடியா:புதிய பக்கத்தை உருவாக்குதல்
தொகுசெல்வா, மேற்படி கட்டுரையை பழைய வரலாற்றுடன் மீட்டிருக்கிறேன். (இந்தக் கட்டுரை திருத்தி எழுதப்பட வேண்டும். புதிய பயனர்களுக்கு இக்கட்டுரை குழப்பமாக உள்ளது போல் தெரிகிறது). பயனர் செயராம் எழுதிய கள்ளர் வரலாறு கட்டுரையை கள்ளர் பக்கத்தின் உரையாடல் பக்கத்துக்கு மாற்றியிருக்கிறேன். மற்றும் உங்கள் பயண அநுபவங்களை அழகான கட்டுரைகளாக படங்களுடன் விக்கி எதிர்பார்க்கிறது.--Kanags \பேச்சு 08:03, 17 செப்டெம்பர் 2009 (UTC)
- கட்டாயம் எழுதுகிறேன். --செல்வா 01:00, 19 செப்டெம்பர் 2009 (UTC)
விக்கிசெய்திகள்
தொகுசெல்வா, விக்கிசெய்திகளில் நீங்கள் செய்திருந்த திருத்தங்களுக்கு மிக்க நன்றி. குறிப்பாக இந்திய மரபணு தொடர்பான செய்தியை மேம்படுத்தியமைக்கு நன்றி. இந்த ஒன்கே இனம் பற்றி இப்போது தான் அறிந்தேன். இது குறித்து இங்கு விக்கிப்பீடியாவிலும் விரிவாக எழுதப்பட வேண்டும். மேலும் கிரந்த எழுத்துக்கள் தவிர்ப்பது குறித்து தங்களின் ஆலோசனைகளைக் கருத்தில் எடுக்கிறேன். வாரம் ஓர் அறிவியல் கட்டுரையாவது உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்:).--Kanags \பேச்சு 23:40, 26 செப்டெம்பர் 2009 (UTC)
Thank you
தொகுThank you for your welcome --Neozoon 21:34, 10 அக்டோபர் 2009 (UTC)
தமிழ் தேவை
தொகு- popular culture - பரவலர் பண்பாடு
- reality tv உண்மைநிகழ்வு தொ.கா., மெய்நிகழ்சி தொ.கா, மெய்நடப்புத் தொ.கா.
- gym பயிற்சிக் களம் (முற்காலத்தில் அறிவுப் பயிற்சி பெறும் கல்விக்கூடமாக இது இருந்துள்ளது). இன்று உடற்பயிற்சியகம்
- shopping = கடைச்செலவு, அங்காடிச்செலவு (செலவு = செல்லுதல், பயணம்; இங்கு செல்லுதலும், பணச்செலவும் சேர்ந்து குறிக்கப்படுகின்றது).. பேச்சு வழக்கில் கடைக்குப் போதல் அவ்வளவுதான். window shopping கடைகண்ணி பார்த்தல்.
- gang = கூட்டம் (கொள்ளைக் கூட்டம் என்பது போல)
- party = கட்சி, களிக்கூட்டம்
- celebrity = புகழாளர்
- Casino = சூதாடகம்
நன்றி
தொகுஉங்கள் வரவேற்ப்பு செய்திக்கு நன்றி. I am a user from English Wikipedia. I'm afraid am not very good in writing in Tamil (the least could be said on my English too). I will try my best to contribute on here. Thanks again Wikiality123 11:58, 27 நவம்பர் 2009 (UTC)