வாருங்கள்!

வாருங்கள், Nandhinikandhasamy, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:15, 3 சூன் 2013 (UTC)Reply

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Nandhinikandhasamy/தொகுப்பு 1!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 18:22, 3 சூன் 2013 (UTC)Reply

புதிய கட்டுரையை சேர்க்க தொகு

கட்டுரை போட்டியில் எப்படி கட்டுரையை நம் கணக்கில் சேர்ப்பது?

நீக்கள் போட்டிமுடிவுகளை தெரிவிக்கும் பக்கத்தில் இணைத்தவற்றை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முன்பதிவு/ஆகத்து, 2013 பக்கத்தில் இணைத்துள்ளேன். --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:10, 5 ஆகத்து 2013 (UTC)Reply

சூறாவளி தொகு

இவருக்கு யாராவது பதக்கம் கொடுக்க நினைத்தால் விக்கிப்புயல் பதக்கம் கொடுக்கக்கூடாது. ஏன் என்றால் இவர் புயலைவிட வேகமாக செயல்படுவது போல் தெரிகிறது. அதனால் சூறாவளின்னு ஏதாவது பதக்கத்த உருவாக்கி கொடுங்கப்பா.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:15, 9 ஆகத்து 2013 (UTC)Reply

சூறாவளிப் பதக்கம் தொகு

    சூறாவளி போன்ற புதியவர் பதக்கம்
மழை போல் விக்கிக்குள் நுழைந்து புயல் போல் கட்டுரைகள் எழுதி சூறாவளி போல் கட்டுரைப்போட்டியில் முன்னேறுகின்றீர்கள். அதற்காக இப்பதக்கம். இந்த மாதப் பரிசை நீங்களே வென்று விடணும். தங்கள் பங்களிப்பு சூறாவளியாய்த் தொடர வாழ்த்துக்கள் -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:49, 9 ஆகத்து 2013 (UTC) 02:53, 11 ஏப்ரல் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


  விருப்பம்.--Kanags \உரையாடுக 08:47, 9 ஆகத்து 2013 (UTC)Reply
  விருப்பம்--மணியன் (பேச்சு) 12:59, 9 ஆகத்து 2013 (UTC)Reply
பதக்கம் அருமையாய் உள்ளது ஆதவன்.   விருப்பம் வாழ்த்துகள் நந்தினி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 9 ஆகத்து 2013 (UTC)Reply
இது தென்காசியாரின் வேண்டுதலிற்காக .........  !  ;) -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 00:35, 10 ஆகத்து 2013 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:04, 9 ஆகத்து 2013 (UTC)Reply
  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:35, 9 ஆகத்து 2013 (UTC)Reply
  விருப்பம்--கலை (பேச்சு) 11:44, 11 ஆகத்து 2013 (UTC)Reply

நந்தினி, நீங்கள் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பது கண்டு மகிழ்கிறேன். இந்த மாதம் பரிசு பெறுவதற்கான போட்டி வலுவாக இருக்கும் போல தெரிகிறது. ஒன்றிரண்டு கட்டுரைகளே எண்ணிக்கை வேறுபாடு உள்ளது. தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு பரிசு வெல்ல வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 17:17, 23 ஆகத்து 2013 (UTC)Reply

ஆலோசனை... தொகு

வணக்கம்!
பயனர் பக்கத்தில் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பது நலம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:30, 10 ஆகத்து 2013 (UTC)Reply

உங்கள் கல்லூரி தொகு

உங்கள் கல்லூரி குறித்த கட்டுரையைத் துவக்கி உள்ளேன். அதனை பிழை திருத்தி, விரிவாக்கிட வேண்டுகிறேன். காப்புரிமையற்ற ஒளிப்படங்கள் இருந்தால் இணைக்கலாம்.--மணியன் (பேச்சு) 19:04, 13 ஆகத்து 2013 (UTC)Reply

கட்டுரைக்கு மேற்கோள்கள், சான்றுகள் தொகு

வணக்கம் நந்தினி தமிழ் விக்கியில் தங்களின் பங்களிப்புகள் வியப்பு தருகின்றன. வாழ்த்துகள். ஒரு வேண்டுகோள் தாங்கள் விரிவாக்கும் கட்டுரைகளில் மேற்கோள்கள், சான்றுகள், துணைநூல்கள் போன்றவை சேர்க்கப்படுவதில்லை. விக்கியில் ஆதாரங்கள் சேர்த்தல் என்பது கட்டுரையின் நம்பகத் தன்மையைக் கூட்டும் விடயமாகும். சான்றுகளற்ற கட்டுரைகள் ஏற்கப்படுவதில்லை. மேலும் கட்டுரைப்போட்டியில் விரிவாக்கும் கட்டுரைகளின் வரலாற்றுப் பக்கத்தில் அக்கட்டுரையின் பங்களிப்பாளர்கள் பற்றிய விவரங்கள் இருக்கும். எனவே போட்டிக்கான குறிப்பிட்ட பைட்டு அளவுகளை எட்டியவர்கள் அக்கட்டுரையை தனது கணக்கில் சேர்த்திருப்பர். எனவே அதனைக் கவனித்து தங்கள் எண்ணிக்கையில் பதியுமாறும் வேண்டுகிறேன். மற்றபடி தாங்கள் அந்தக் கட்டுரைகளை விரிவாக்குவது பெருமகிழ்ச்சியே. தங்களின் தொடர்பங்களிப்பை விக்கிக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:01, 18 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம் நந்தினி! பார்வதிஸ்ரீ என்பவர் தங்களின் அக்கா ஆவார். (அண்ணா, அக்கா என்றழைக்கலாம்... எனினும் பேச்சுப் பக்கங்களில் நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லியே அழைக்கிறோம் - அண்மைக்காலத்து அலுவலகங்களில் நடைமுறையில் இருப்பதுபோல!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:13, 19 ஆகத்து 2013 (UTC)Reply

விசை கட்டுரை தொகு

இக்கட்டுரை, கட்டுரைப் போட்டியில் இருப்பது தெரியாமல்... எளிதான சில தொகுப்புகளை நான் செய்து விட்டேன். தொடர்ந்து நீங்களே தொகுத்தலைச் செய்யுங்கள். கூடுதலாக 2000 பைட்டுகளை சேர்த்த பின்னர் உங்களின் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:09, 19 ஆகத்து 2013 (UTC)Reply

சான்று தொகு

புரிதலுக்கு நன்றி நந்தினி. ஆங்கில விக்கியிலிருந்து நீங்கள் மொழிபெயர்ப்பு செய்திருந்தால் அதில் காட்டப்பட்டுள்ள மேற்கோள்களை அப்படியே நகலெடுத்து(copy) தமிழில் ஒட்டலாம். ஆங்கில விக்கியின் மொழி பெயர்ப்பு எனக் குறிப்பிடக் கூடாது. பிற வலை தளங்களிலிருந்து நீங்கள் தகவல்களை எடுத்திருந்தால் அதன் உரலியை (url) நீங்கள் மேற்கோள்களாக இடலாம். ஆனால் அத்தளங்களிலிருந்து தகவல்களை அப்படியே வெட்டி ஒட்டக்கூடாது. ஏனெனில் அவை காப்புரிமை உள்ளவையாக இருக்கலாம். மேற்கோள்கள் சுட்டப்பட்டிருக்கும் கட்டுரைகளில் ஏதேனும் ஒரு பத்தியின் தொகு இணைப்பை சொடுக்கி அதில் எவ்வாறு மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளன என ஒரு முறை பார்வையிடவும். என்னை நீங்கள் பார்வதி என்றே அழைக்கலாம். ஏதேனும் உதவி தேவை எனில் தயங்காமல் கேட்கலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:38, 19 ஆகத்து 2013 (UTC)Reply

மறுமொழி தொகு

நந்தினி, நீங்கள் எழுப்பியிருந்த ஐயத்திற்கான மறுமொழி எனது பேச்சுப் பக்கத்தில் காணலாம்.--மணியன் (பேச்சு) 18:27, 19 ஆகத்து 2013 (UTC)Reply

நலமடைய வாழ்த்துகிறேன்.போட்டி இருப்பது ஆரோக்கியமானதுதானே! முத்துராமன் (பேச்சு) 14:05, 31 ஆகத்து 2013 (UTC)Reply

தற்போதே என்னைவிட மிகவும் முன்னிலையில் உள்ளீர்கள்.இன்று இரவு முழுவதும் உங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற என்னால் முடியாது.தென்காசியரும் விலகியே உள்ளார்.நானும் விலகுகிறேன். ஆகஸ்ட் மாத வெற்றியாளர் நந்தினிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.முத்துராமன் (பேச்சு) 16:19, 31 ஆகத்து 2013 (UTC)Reply

ஆம் அதிகபட்ச கட்டுரைகளை எழுதுபவரே வெற்றியாளர்.எனக்கு தெரிந்து நீங்க 25 கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள் தெளிவான எண்ணிகையை முடிவுகள் பக்கத்தில் இடவும். மேலும் பேர் சொல்லியே அளிக்கலாம் இங்கு அனைவரும் மற்றவர்களை பேர் சொல்லியே அழைக்கின்றோம்

பாராட்டுக்கள் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் நான் கட்டுரைகளை எதிர்பார்க்கவில்லை.நீங்கள் தன நிச்சய வெற்றியாளர்.முத்துராமன் (பேச்சு) 17:00, 31 ஆகத்து 2013 (UTC)Reply

நந்தினி, நிச்சயம் முத்துராமன் தான் வெல்வார் என்று எண்ணியிருந்தேன். ஒரே நாளில் அதிரடித் தாக்குதல் நடத்தி விட்டீர்கள். நீங்கள் வெல்வதற்கான வாய்ப்பே 99%. போட்டி செப்டம்பர் 1 காலை இந்திய நேரம் 5.30 க்கு முடியும் (இன்னும் இரண்டு மணி நேரத்தில்). இது UTC நேரத்தில் செப்டம்பர் 1 பிறக்கும் நடு இரவு நேரம் ஆகும். உறக்கத்தையும் உடலையும் கெடுத்துக் கொள்ளாமல் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்களும் முத்துராமனும் இணைந்து பங்களித்து அனைத்து விக்கிப்பீடியர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் என்றே சொல்லலாம். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 21:59, 31 ஆகத்து 2013 (UTC)Reply
நந்தினி, நீங்கள் இங்குள்ள அனைவரையும் பெயர் சொல்லியே அழைக்கலாம். மற்றவர்களின் பேச்சுப் பக்கத்தில் செய்தி விடும் போது விக்கிப்பீடியா:கையொப்பம் பக்கத்தில் குறித்துள்ளவாறு கையொப்பம் இடுங்கள். 5.30 வரை நீங்கள் விழித்திருந்தால் போட்டி முடிவை நீங்களே அறிந்து கொள்ளலாம். இப்போட்டிக்கு நடுவர்கள் எவரும் இல்லை. கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குபவர் வெற்றியாளர். இப்போதைய நிலவரப்படி நீங்களே முதல் ஆளாக உள்ளீர்கள் :)--இரவி (பேச்சு) 22:08, 31 ஆகத்து 2013 (UTC)Reply
ஒரு குறிப்புக்கு: சூன் மாதப் போட்டியில் தென்காசி சுப்பிரமணியன் 33 கட்டுரைகளை விரிவாக்கினார். இன்று வரை அது தான் சாதனை. நீங்கள் இந்த மாதம் ஏற்கனவே 32 கட்டுரைகளை விரிவாக்கி விட்டீர்கள். இன்னும் 2 விரிவாக்கினால் அவரது சாதனையை முறியடிக்கலாம். இல்லாவிட்டாலும் என்ன, அடுத்த மாதம் பிடித்து விடுவீர்கள் தானே :) --இரவி (பேச்சு) 22:14, 31 ஆகத்து 2013 (UTC)Reply

நான் 33 கட்டுரைகளை விரிவாக்கி இருந்தாலும் அதில் சில முதன்மைக்கட்டுரைகளில் இருந்து வெட்டி ஒட்டினேன். தற்போதே அந்த நடைமுறை இல்லை என தெரிய வந்தது. அதனால் ஏற்கனவே இவர் என் சாதனையை முறியடித்து விட்டார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:20, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம் (மேலே உள்ள ஆரோக்கியமான உரையாடல் மொத்தத்திற்குமான என் விருப்பங்கள்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:06, 2 செப்டம்பர் 2013 (UTC)

பாப்லோ பிகாசோ தொகு

பாப்லா பிக்காசோ சூலை மாதமே ஆதவன்+ என்னால் விரிவு செய்யப்பட்டு விட்டது. எனவே இம்மாதத்தில் தங்கள் கணக்கை அதில் சேர்க்க வெண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:54, 31 ஆகத்து 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
முத்துராமன் (பேச்சு) 18:15, 31 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

களைப்புயடையாதவர் என்பதோடு உறக்கத்தை மறந்து செயலாற்றுபவர் என்றும் கூறலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:12, 31 ஆகத்து 2013 (UTC)Reply

தங்களைவிடவா என்று சந்தேகம் தான் தென்காசியாரே :) !!--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:14, 1 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் சூறாவளி நந்தினி அவர்களே, சபா ஒரு பெரு மூச்சு வந்துட்டுது. நேற்று பார்க்கும் போது பதின்மூனு, இன்னைக்கு வந்து பார்த்தா முப்பத்திரண்டா!!!, நீங்கள் சூறாவளி இல்லை சூரியப் புயல் என்று காட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். மேலும் அடுத்தமாதத்தில் நீங்கள் மற்றவர்களை விட்டுவைக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:14, 1 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 2 செப்டம்பர் 2013 (UTC)

நந்தினி புயலின் வேகம் தென்காசி, ஆதவன், முத்துராமன் என்ற மலைகளை சாய்த்துப் பொடித்து விட்டது போலும்...:) கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நந்தினி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:11, 1 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:41, 2 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள் நந்தினி. பரிசில் எனக்கும் பங்கு தரவேண்டும்?--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:28, 2 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:22, 2 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம்; வாழ்த்துகள்! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு பெரிதும் தேவைப்படுகிறது (அவர்களின் கல்வி பாதிக்கப்படாத அளவில்). உங்களின் நண்பர்கள் குறைந்தது 5 பேரை இங்கு பங்களிப்புத் தர நீங்கள் முயற்சி செய்யலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 2 செப்டம்பர் 2013 (UTC) கொஞ்சம் பொறுக்கவும், முடிவுகளை அறிவிக்க உதவும் பக்கத்தினை இற்றை செய்து முடிவுகளை விரைவில் வெளியிடுவர்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:55, 2 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
ஆகத்து 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்கி பலரைத் தூங்க விடாமல் பங்களிக்க வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 06:37, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 08:16, 2 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம், வாழ்த்துகள் நந்தினி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:18, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:57, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம் வாழ்த்துகள்.--Anton (பேச்சு) 09:56, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள் !! உங்களைப் போன்ற புதியவர்களின் இத்தகைய பங்களிப்பு எங்களுக்கெல்லாம் எத்துணை மகிழ்ச்சியைத் தருகிறது என்று உணர்ந்திருப்பீர்கள். இதனை உங்கள் நண்பர்களிடமும் உற்றாரிடையும் கொண்டு சேருங்கள். தொடர்ந்து பங்களித்து வாருங்கள் !!--மணியன் (பேச்சு) 02:10, 3 செப்டம்பர் 2013 (UTC)
  விருப்பம் - தங்களின் வேகம் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்!--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:38, 3 செப்டம்பர் 2013 (UTC)
மணியன், தென்காசியார், ஆதவன்.. இப்படிப்பட்ட பெரும் போட்டியாளர்களை வென்று வாகை சூடியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள். (தற்போது 250 கட்டுரைகள் இலக்கு என்று வேறு கூறியிருக்கின்றீர்கள்) தமிழ் விக்கி விரைவில் 10,000 கட்டுரைகளை எட்டிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:02, 3 செப்டம்பர் 2013 (UTC)
தங்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி, வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:22, 18 நவம்பர் 2013 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Nandhinikandhasamy/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:50, 2 செப்டம்பர் 2013 (UTC)

முதற்பக்க அறிமுகம் தொகு

நந்தினி, கட்டுரைப் போட்டி வெற்றியாளர்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்தி வருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் ஒளிப்படத்தை உங்கள் பயனர் பக்கத்தில் தரலாம். அதனை முதற்பக்கத்தில் இடுவோம். விரும்பாவிட்டாலும் பிரச்சினை இல்லை. நீங்கள் விரிவாக்கிய கட்டுரைகளுக்கான இணைப்புகளை முதற்பக்கத்தில் இடுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 09:03, 2 செப்டம்பர் 2013 (UTC)

ஒளிப்படத்துக்கு நன்றி. அடுத்த 10 நாட்களுக்கு உங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறுகிறது.--இரவி (பேச்சு) 19:04, 2 செப்டம்பர் 2013 (UTC)

விருப்பம் தொகு

உங்களின் வேகத்துடன் போட்டியிட இயலுமா என்று எனக்கு தெரியவில்லை இருந்தாலும் என்னால் இயன்ற பங்களிப்பை நான் தொடர்ந்து தருவேன். னிகள் அடுத்த மாதம் நூறு கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பது என் விருப்பம்.தினமும் பங்களித்தல் நீங்க நூறு என்ன 200 ஐ கூட தொட்டு விடுவீர்கள்.நீங்கள் மறுமொழியை உங்கள் பக்கத்திலேயே இடலாம் உங்கள் பக்கமும் என் கவனிப்பு பட்டியலில் உள்ளது. முத்துராமன் (பேச்சு) 09:17, 2 செப்டம்பர் 2013 (UTC)

அது சரி.நான் 250 பக்கங்கள் தொகுக்கலாம் என்று உள்ளேன்நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:40, 2 செப்டம்பர் 2013 (UTC)

மிக்க மகிழ்ச்சி முத்துராமன் (பேச்சு) 16:22, 2 செப்டம்பர் 2013 (UTC)

நான் மேலே இட்ட பதக்கத்தை முன்னிட்டு விக்கிப்பீடியாவை 250 முறை தொகுக்கப்போகிறீர்களா இல்லை கட்டுரைப் போட்டியில் 250 கட்டுரைகளை விரிவாக்கப்போகிறீர்களா? ஏனெனில் உங்கள் மறுமொழியைப் பார்த்து பீதியடைந்து பலர் கட்டுரைப் போட்டியை விட்டே ஓடி விடுவார்கள் போல் இருக்கிறது :) --இரவி (பேச்சு) 18:56, 2 செப்டம்பர் 2013 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:48, 3 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரை விரிவாக்கப் போட்டியில் வெற்றி பெற்றதற்குப் பாராட்டுக்கள். தொடர்ந்தும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 16:30, 4 செப்டம்பர் 2013 (UTC)
இந்த மாசமும் கட்டுரைப் போட்டியில் புயலடிக்கும் என்று பார்த்தால் ஒன்றும் காணோமே? புயலுக்கு முன் பதுங்குகிறீர்களோ :)--இரவி (பேச்சு) 19:07, 18 செப்டம்பர் 2013 (UTC)
இந்த மாதமும் கட்டுரை போட்டியிலும் இறுதியில் முன்னேரலாம் என்று திட்டமிட்டுள்ளீர்கள் போலிருக்குதே.............??? முத்துராமன் (பேச்சு) 09:13, 22 செப்டம்பர் 2013 (UTC)

படிமங்கள் தொகு

பதிப்புரிமை உள்ள படிமங்களை பதிவேற்ற முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். தேவையான படிமங்கள் விக்கி பொதுவில் உள்ளன. --Anton (பேச்சு) 05:59, 5 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 7 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:15, 18 செப்டம்பர் 2013 (UTC)

மேற்கோள்கள் சேர்த்து உதவவும். தொகு

சூறாவளியாக நீங்கள் பங்களித்ததால் கட்டுரைப் போட்டியில் சில கட்டுரைகள் மேற்கோள் இல்லாதிருப்பதைக் கண்டேன். அதனால் ஆதவன் கூறியபடி சூரியப் புயலாய் மேற்கோள்கள் சேர்த்துதவவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:19, 30 செப்டம்பர் 2013 (UTC)

:), இவரை என்ன செய்யலாம் ???,   விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:10, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:31, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

ஜோசப் எல் மேங்கியூவிஸ் தொகு

வணக்கம் நந்தினி, ஜோசப் எல் மேங்கியூவிஸ் கட்டுரையில் மேற்கோள்கள் இணைத்திருக்கிறீர்கள். அதில் நான் சிறிதளவு மாற்றம் செய்திருக்கிறேன். நூலின் தலைப்பையும் பதிப்பகம் பெயரையும் கூகுள் தேடலில் கண்டுபித்தேன். நீங்கள் குறிப்பிட்டது இந்நூல்தானா என்பதை எனக்கு உறுதிப்படுத்த முடியுமா?

இனிமேல் பிற கட்டுரைகளில் நூல்களை ஆதாரமாகத் தரும்பொழுது அந்நூலின் முழு விவரங்களையும் தருவது நன்று. நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:52, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த நகைச்சுவை உணர்வாளர் பதக்கம்
பேச்சுப் பக்கங்களில் தங்கள் நகைச்சுவைகளுக்காக இந்த பதக்கம். அப்பாட இனி ஒரு விடயத்திற்குக் குறைவில்லை. அதென்னவென்றால் நகைச்சுவை :) ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:45, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

வாழ்த்துக்கள் தொகு

உங்களுக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 09:55, 14 அக்டோபர் 2013 (UTC)Reply

கடவுளின் அருள் என்றும் துணைநிற்கட்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:54, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரையின் உள்ளடக்கத்தில் ஆங்கிலப்பெயர் சேர்க்கவேண்டியது குறித்து தொகு

வணக்கம், தமிழ் விக்கியில் உங்கள் பங்களிப்பைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்சியாய் உள்ளது, இப்பங்களிப்பு மேலும் தொடர்ந்து வளர வாழ்த்துகள்.
தாங்கள் உருவாக்கிய லினாக்ஸ் லீவிஸ் கட்டுரையில் சிறு சிறு திருத்தங்களைச் செய்துள்ளேன். பிறமொழி பெயர்கள், வார்த்தைகள் ஆகியவற்றைக் தலைப்பில் கொண்ட கட்டுரைகளில் அவற்றின் ஆங்கிலப் பெயரை கட்டுரையில் (ஆங்கிலம்:English Name) என்றவாறு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் கட்டுரைகளை தமிழ் விக்கப்பீடியாவில் தேடுபவர்கள் கட்டுரையின் தலைப்பை சரியாகத் தேடுவார் என எதிர்பார்க்க முடியாது. இதனால்,

  1. பயனர் அக்கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை என ஏமாற்றம் அடையலாம்.
  2. பயனர் அக்கட்டுரையை அவர் எண்ணிய தலைப்பில் புதியதாக தொடங்கலாம். (இது இரட்டிப்பு வீண்வேலை, பிறகு 2 கட்டுரைகளையும் இணைக்க வேண்டிய வேலைவேறு..)

நன்றி..! --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 14:53, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கித் திட்டம் திரைப்படம் தொகு

விக்கித் திட்டம் திரைப்படத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. தமிழ்த் திரைப்படங்களைப் பற்றிய தகவல்களை ஆங்கில விக்கியை தான் தற்போது அனைவரும் பார்க்கிறார்கள். தமிழ் விக்கியை மேம்படுத்துவதுடன் அப்பயனர்கள் தமிழ் விக்கியையே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என்பது என் எண்ணம். சிறந்த பங்களிப்பை வழங்க என் வாழ்த்துக்கள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 07:34, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி தொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
அக்டோபர் 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 08:06, 3 நவம்பர் 2013 (UTC)Reply

பதிப்புரிமை மீறல் தொகு

 

வணக்கம், Nandhinikandhasamy/தொகுப்பு 1!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 09:08, 16 நவம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும் தொகு

வணக்கம் சகோதரி, தங்கள் செய்தி கிடைத்தது, நீங்கள் இயங்குப்படம் எனும் தலைப்பை முன்பதிவு செய்து இருப்பதை நான் கவனிக்க வில்லை. அத்தலைப்பினை தொகுக்கும் முன் வரலாற்று பக்கத்தில் தானியங்கி மூலம் செய்தி சேர்த்து இருப்பதை பார்த்து, நான் அதை தொகுக்க எண்ணினேன். மன்னிக்கவும். இடையூருக்கு வருந்துகிறேன். - அசோக் ராஜ் (பேச்சு) 03:05, 19 நவம்பர் 2013 (UTC)Reply

நந்தினி... அருமை! புதுப்பயனர்களுக்கு உதவும் பணியினை நீங்களும் துவக்கிவிட்டீர்கள்! நன்றி, வாழ்த்துகள்! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:08, 19 நவம்பர் 2013 (UTC)Reply
{  விருப்பம், எனது வாழ்த்துகளும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:11, 19 நவம்பர் 2013 (UTC)Reply

ஸ்ஸ்ஸ்ஸ் தொகு

ஸ்ஸ்ஸ்ஸ்..........ஸ்ஸ்ஸ்ஸ்............ஸ்ஸ்ஸ்ஸ்..............--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:11, 25 நவம்பர் 2013 (UTC)Reply

என்ன தென்காசியாரே இது? நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:13, 25 நவம்பர் 2013 (UTC)Reply

ஒரு தம்பியின் மன்னிப்பு மடல் தொகு

அக்கா நீங்கள் தொகுத்துக் கொண்டிருந்த கடுங்கரி மற்றும் தொலைநோக்கி ஆகிய கட்டுரைகளை இடையில் புகுந்து நான் தொகுத்தது மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்ந்துவிட்டேன். என்னைத் தயவுசெய்து மன்னித்து விடுங்கள். இதனால் நீங்கள் எவ்வளவு மன உளைச்சலுக்கும் கவலைக்கும் அளாகியுள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன்.

கீழுள்ள தீர்வுகளை விட எனக்கு வேறுவழி தெரியவில்லை. தயவுசெய்து ஏற்றுக்கொள்வீர்களென நம்புகின்றேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:42, 28 நவம்பர் 2013 (UTC)Reply

முதல் தீர்வு தொகு

கீழுள்ள அனத்தையும் சுற்றுலாத்துறை என்ற கட்டுரைக்குள் நகலெடுத்து ஒட்டி விடுங்கள்.இது கட்டுரைப் போட்டிக்குரிய தலைப்பாகும் குமுகமும் மாந்த வாழ்வு அறிவியலும் என்ற பகுதியினுள் உள்ளது.

உலகச் சுற்றுலாப் புள்ளிவிபரங்கள் தொகு

உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் வருகைதந்த பயணிகளின் எண்ணிக்கைகேற்ப முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

தரவரிசை நாடு உலக
சுற்றுலாத்துறைப்
பிரதேசம்[1]
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2012)[2]
சர்வதேச
சுற்றுலா பயணிகளின்
வருகைகள்
(2011)[2]
மாற்றம்
(2011 முதல்
2012வரை)
மாற்றம்
(2010 முதல்
2011வரை)
1   பிரான்சு ஐரோப்பா 83.0 மில்லியன் 81.6 மில்லியன் +1.8% +5.0%
2   ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா 67.0 மில்லியன் 62.7 மில்லியன் +6.8% +4.9%
3   சீனா ஆசியா 57.7 மில்லியன் 57.6 மில்லியன் +0.3% +3.4%
4   எசுப்பானியா ஐரோப்பா 57.7 மில்லியன் 56.2 மில்லியன் +2.7% +6.6%
5   இத்தாலி ஐரோப்பா 46.4 மில்லியன் 46.1 மில்லியன் +0.5% +5.7%
6   துருக்கி ஐரோப்பா 35.7 மில்லியன் 34.7 மில்லியன் +3.0% +10.5%
7   செருமனி ஐரோப்பா 30.4 மில்லியன் 28.4 மில்லியன் +7.3% +5.5%
8   ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா 29.3 மில்லியன் 29.3 மில்லியன் -0.1% +3.6%
9   உருசியா ஐரோப்பா 25.7 மில்லியன் 22.7 மில்லியன் +13.4% +11.9%
10   மலேசியா ஆசியா 25.0 மில்லியன் 24.7 மில்லியன் +1.3% +0.6%

சர்வதேச சுற்றுலாத்துறைச் செலவீனங்கள் தொகு

உலக சுற்றுலா அமைப்பின் அறிக்கையின்படி 2012 ஆவது ஆண்டில் சர்வதேச சுற்றுலாத்துறைக்காக அதிக செலவீனத்தை மேற்கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

தரவரிசை
2012
நாடு உலக
சுற்றுலாத்துறைப்
பிரதேசம்
சர்வதேச
சுற்றுலாத்துறைச்
செலவீனம்
2011
சர்வதேச
சுற்றுலாத்துறைச்
செலவீனம்
2012[3]
% மாற்றம்
1   சீனா ஆசியா $72.3 பில்லியன் $102.0 பில்லியன்   40.5
2   செருமனி ஐரோப்பா $85.9 பில்லியன் $83.8 பில்லியன்   2.4
3   ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா $78.7 பில்லியன் $83.7 பில்லியன்   6.6
4   ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா $51.0 பில்லியன் $52.3 பில்லியன்   2.5
5   உருசியா ஐரோப்பா $32.5 பில்லியன் $42.8 பில்லியன்   31.6
6   பிரான்சு ஐரோப்பா $44.1 பில்லியன் $38.1 பில்லியன்   13.6
7   கனடா வட அமெரிக்கா $33.3 பில்லியன் $35.2 பில்லியன்   5.7
8   சப்பான் ஆசியா $27.2 பில்லியன் $28.1 பில்லியன்   3.3
9   ஆத்திரேலியா ஓசானியா $26.7 பில்லியன் $27.6 பில்லியன்   3.4
10   இத்தாலி ஐரோப்பா $28.7 பில்லியன் $26.2 பில்லியன்   8.8

இரண்டாவது தீர்வு தொகு

விரைவில்...--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:26, 28 நவம்பர் 2013 (UTC)Reply

  1. See [1] Retrieved 14 November 2012.
  2. 2.0 2.1 "2013 Tourism Highlights" (PDF). World Tourism Organization. 2013. பார்க்கப்பட்ட நாள் 11 July 2013. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Barom201304 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமைக்கு நன்றி தொகு

தாங்கள் விக்கி்த்திட்டம் சைவத்தில் இணைந்திருப்பதைக் கண்டேன். மிகச் சீறிய பங்களிப்புகளை விக்கிப்பீடியாவிற்கு தந்து கொண்டிருக்கும் தாங்கள் விக்கித்திட்டம் சைவத்தில் இணைந்தமை மகிழ்வை தருகிறது. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகளும் நன்றிகளும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 1 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
"2013 தொடர் கட்டுரைப் போட்டியின் மானம் காத்த மங்கை" என்று தான் உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்க விரும்பினேன். ஆனால், அப்பதக்கத்தைச் செய்ய சோம்பலாக இருப்பதால், இதனை வைத்துக் கொள்ளுங்கள் :) உங்கள் வரவுக்குப் பிறகே கட்டுரைப் போட்டி ஒவ்வொரு மாதமும் சூடு பிடித்துள்ளது. நீங்கள் புதுப்பயனர்களுக்கு வழிகாட்டத் தொடங்கி இருப்பதும் மகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பாக அனைத்து விக்கிப்பணிகளிலும் கலந்து கொள்ளுங்கள். நன்றி. இரவி (பேச்சு) 09:05, 3 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் செஞ்சுடுரேன்.ஆனா கடைசியா என்னையே கட்டுரை போட்டிய விட்டு அனுப்பீட்டாங்க இரண்டு பேர்.:(--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:09, 3 திசம்பர் 2013 (UTC)Reply

இரண்டு பேரா..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:13, 3 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசியாரே, பதறாதீங்க. நீங்க இல்ல, ஸ்ரீகர்சனும்,தமிழ்க்குரிசிலும் அவங்க இரண்டு பேரும் பங்களிப்பதை பார்த்தாலே பயமா இருக்கு, அதனால இனிமே அந்த பக்கம் தலை வச்சு படுக்கக்கூட கூடாதுனு முடிவு பன்னிட்டேன்.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:19, 3 திசம்பர் 2013 (UTC)Reply

தமிழ்க்குரிசிலுக்கு நான் ஒரு பெரிய பிரேக்கிங்கு பாயிண்டு வத்திருக்கிறேன். அதனால் கவலைப்படவேண்டாம். ஸ்ரீஇகர்சனுக்கு பிரேக்கிங்கு பாய்ண்டு எல்லாம் வைக்கமுடியாது. அதனால் அவரை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:27, 3 திசம்பர் 2013 (UTC)Reply

எனக்கு செக்கா? என்னது தென்கா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:38, 3 திசம்பர் 2013 (UTC)Reply
அடை மொழி அற்புதம்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:40, 3 திசம்பர் 2013 (UTC)Reply

அது தான் முடியலையே தென்காசியாரே.... நான் என்ன மூவ் வச்சாலும் அத மாக்னஸ் கார்ல்சன் மாரி சப்ப மூவ் ஆக்குராரே, என்ன பன்றது. அதான் விக்கி திட்டம் சைவத்துக்கு போறேன்.தென்னாடுடைய சிவனே போற்றி_/\_ என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி_/\_.நாரதரே நாம் கைலாயத்தில் சந்திப்போம்.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:33, 3 திசம்பர் 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் தொகு

வணக்கம், Nandhinikandhasamy/தொகுப்பு 1!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 09:29, 3 திசம்பர் 2013 (UTC)Reply

ஆ! இவ்வளவு தொகுப்பு செய்துவிட்டேனா! ஆச்சரியகுறி:)நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:31, 3 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம் அசோக் ராஜ் (பேச்சு) 16:14, 3 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:02, 3 திசம்பர் 2013 (UTC)Reply

  விருப்பம் அக்கா அசத்துங்க! 1000 ஐயும் அடுத்த மாசத்திலயே தாண்டிடுவீங்கள் போல. புயலெண்டா சும்மாவா. தாழமுக்கம் அதிகமாத்தான் இருக்கு.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:27, 5 திசம்பர் 2013 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

பேச்சு:காணாபத்தியம் பார்க்கவும். --Booradleyp1 (பேச்சு) 06:00, 4 திசம்பர் 2013 (UTC)Reply

9 கட்டுரைகளே தேர்வாகியுள்ளன தொகு

[2] இந்த இணைப்பில் நீங்கள் கட்டுரைப் போட்டிக்கு சேர்த்த 21 கட்டுரைகள் இருக்கும். நீங்கள் சேர்த்த வெளி இணைப்புகள், உசாத்துணைகளை மட்டும் நீக்கிப் பார்த்தாலும் 15360 பைட்டுகளுக்கு குறைவாக 12 கட்டுரைகள் வருகின்றன. அதனால் அதை கட்டுரைப் போட்டியில் தேர்வு செய்ய இயலவில்லை.

அதனால் இரண்டாம் பரிசை அறிவிப்பதற்கு முன் உங்களுக்கு என் மீது நம்பிக்கை இல்லை என்றால் கூறலாம். வேறு பயனர்களை வைத்து உங்கள் கட்டுரையை சரி பார்க்கச் சொல்லலாம். பதில் அளிக்கையில் என் பெயரை Tag செய்யவும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:46, 7 திசம்பர் 2013 (UTC)Reply

பரவாயில்லை தென்காசிரே, முடிவுகளை அறிவித்துவிடுங்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:55, 7 திசம்பர் 2013 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

  • கோகிலா,ஹேமா-தவறு; கோகிலா, ஹேமா -சரி
  • முதற் பத்தியில்:
பிள்ளை நிலா -தவறு; பிள்ளை நிலா -சரி.--Booradleyp1 (பேச்சு) 14:06, 13 சனவரி 2014 (UTC)Reply
Return to the user page of "Nandhinikandhasamy/தொகுப்பு 1".