பயனர் பேச்சு:Parvathisri/தொகுப்பு 2

உதவி தேவை! தொகு

நான் எழுதியுள்ள அலைபாயுதே கண்ணா (பாடல்) கட்டுரையில் அருஞ்சொற்பொருள் பகுதியில் உங்களின் உதவி தேவைப்படுகிறது. செவிவழி கேட்டலின் அடிப்படையில் பாடலின் வரிகளை எழுதினேன். ரோமன் எழுத்துருவத்தில்தான் பாடல் இணையதளத்தில் நேரடியாக கிடைத்தது. எனவே பாடலின் வார்த்தைகளில் பிழைகளும் இருக்கலாம். (கணை கடலா? கனை கடலா? இது போன்ற சந்தேகங்கள் உள்ளன!) பாடலின் தமிழ் மூலத்தை கிடைக்கப்பெறுவதிலும் முயற்சித்துள்ளேன். உங்களால் முடிந்தஅளவு அருஞ்சொற்பொருள் பகுதியில் உதவவும். --மா. செல்வசிவகுருநாதன் 13:06, 22 பெப்ரவரி 2012 (UTC)

சிறந்த முறையில் விரிவாக்கம் செய்து உதவியமைக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் 17:09, 24 பெப்ரவரி 2012 (UTC)

கவனிக்கவும்! தொகு

அம்மா,
விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் 'எது சரி?' எனும் தலைப்பைப் பார்க்கவும். தமிழாசிரியரின் கருத்து தேவைப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் 11:40, 27 பெப்ரவரி 2012 (UTC)

அம்மா,
விக்கிப்பீடியா:ஆலமரத்தடியில் 'எது சரி?' எனும் தலைப்பைப் பார்க்கவும். தமிழாசிரியரின் கருத்து தேவைப்படுகிறது.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:33, 2 மார்ச் 2012 (UTC)

சிலம்ப நிகழ்படங்கள் தொகு

சிலம்பம் குறித்த நிகழ்படங்கள் அருமை. அவர்களைப் பற்றிய குறிப்பில்லையே என்ற ஏக்கம் என்னுள் எழுந்துள்ளது. சில விவரங்களை தந்தால், அதனை அனைத்து ஊடகக் கோப்புகளிலும் இணைக்கலாமென்று எண்ணுகிறேன். தமிழ் கலையை, சிறுவர்களிடம் வளர்ப்பவர்களை பேண, இதுவும் ஒரு முயற்சியன்றோ? அவர்கள் நம் சேலம் மாவட்டத்தினர் தானே? தாதகாப்பட்டியில் சொல்லித்தருவதாக சில வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன். பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

நன்றி உழவன்.சிலம்பம் கற்றுத்தரும் ஆசிரியர் பெயர் முருகேசன். வசிப்பிடம் சேலம் மாவட்டம் கண்ணங்குறிச்சி.இப்பகுதியில் இளஞ்சிறார் மற்றும் வயது வந்தோர்க்கும் கற்றுத் தருகிறார். அது மட்டுமல்லாமல் சேலத்தைச் சுற்றிலுமுள்ள சிலம்பம் போட்டிகளிலும் வெளி மாநிலங்களிலும் இவருடைய மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார்கள். தற்போது சேலத்தில் நிறைய இடங்களில் சிலம்பம் கற்றுத் தருகிறார்கள். சேலத்திலுள்ள கோல்டன் கேட்ஸ் பள்ளியில் இவர் சிலம்பம், யோகா கற்றுத்தரும் ஆசிரியர் பணியில் உள்ளார். ஓய்வு நேரங்களில் இது போன்று கலை பயிற்றுவிக்கும் சேவையிலும் ஈடுபடுகிறார்.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:27, 2 மார்ச் 2012 (UTC)
நன்றி.மகிழ்ச்சி.உரியக்குறிப்புகளை அனைத்துக் கோப்புகளிலும் இணைத்து விடுகிறேன்.இம்மாத இறுதியில் அவர்களை சந்திக்க எண்ணுகிறேன்.அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் உங்களைத்தொடர்பு கொள்கிறேன்.ஏதாவதொரு சனி,ஞாயிறு சந்திக்க எண்ணுகிறேன்.வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

படிம ஏற்றம் தொகு

நீங்கள் நேற்று கேட்ட 2.0 மற்றும் மற்ற சில உரிமங்களின் பட்டியலும் கோப்பைபதிவேற்றும் போது வரும் கீழ் வீழ் பட்டியலில் (டிராப் டவுன்) கிரியேட்ட்வ் காமன்சு பகுதியில் உள்ளன. நீங்கள் ஏற்றிய படிமம் மறைந்த நபராக இருந்தாலும் மற்றும் அதன் மூலம் மற்றும் உரிமம் தெளிவாக தெரியவில்லை என்றாலும் அதை Fair use வார்ப்புருவுடன் (நிரலில் இருக்கும்) இடலாம். வாழும் நபருக்கு இது பொருந்தாது. உரிமம் மூலத்தில் கொடுக்கப்பட்டிருப்பின் அவ்வுரிமத்தையே பயன்படுத்துங்கள்,.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:36, 2 மார்ச் 2012 (UTC)

எது சரி? தொகு

கீழ்காண்பனவற்றில் 'எது சரி' என்பது குறித்து உங்களின் கருத்து தேவை. ஏனெனில் விக்கியின் பல்வேறு தளங்களில் பல்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது. விடை கிடைத்தால் வாய்ப்பு கிடைக்கும்போது திருத்தங்கள் செய்வேன்.

  • மக்கள் தொகை
  • மக்கள்தொகை
  • மக்கட்தொகை

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:31, 5 மார்ச் 2012 (UTC)

பதக்கம் தொகு

  சிறந்த கூட்டு முயற்சிக் கட்டுரையாளர்
தாங்கள் அண்மைய கூட்டு முயற்சிக் கட்டுரைகள் அனைத்திலும் உரை திருத்தம், விரிவாக்கம் என மிகச் சிறப்பான பணிகளைச் செய்து வருவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை உங்களுக்கு அளிக்கிறேன். நன்றி - இரவி (பேச்சு) 13:31, 9 மார்ச் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

+1   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 7 செப்டெம்பர் 2012 (UTC) தங்கள் விக்கியன்பிற்கு மிக்க நன்றி இரவி.--பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:39, 9 மார்ச் 2012 (UTC)Reply

கிளைமொழி எதிர் வட்டார மொழி வழக்கு தொகு

கிளைமொழி எதிர் வட்டார மொழி வழக்கு குறித்த தங்கள் உரையாடலை இங்கு தொடர்ந்துள்ளேன். நன்றி--இரவி (பேச்சு) 20:40, 9 மார்ச் 2012 (UTC)

முக்கிய கட்டுரைகள் பக்க வடிவமைப்பு தொகு

முக்கிய கட்டுரைகள் பக்கத்தில் நான்கு மடிப்புகளாகக் கட்டுரைகளைத் தந்தது மிகவும் உதவியாக உள்ளது. மிக்க நன்றி--இரவி (பேச்சு) 20:51, 9 மார்ச் 2012 (UTC)

அச்சே சுல்தானகம் தொகு

அச்சே சுல்தானகம் கட்டுரையில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களைப் பார்த்தேன். அவற்றிற் சில பற்றிச் சிறு விளக்கமளிக்க வேண்டுமென விழைகிறேன். மன்னர்களின் பெயரில் உள்ள ஷாஹ் என்பதை சேக் என மாற்றியுள்ளீர்கள். முதலாவதாக, அது அவர்களின் பெயரின் ஒரு பகுதியாகும். ஷாஹ் (شاه) என்னும் பாரசீக மொழிச் சொல்லின் பொருள் மன்னன் என்பதாகும். அதேவேளை ஷைகு (الشيخ) என்னும் அரபு மொழிச் சொல்லின் பொருள் தலைவன் அல்லது மூத்தோன் என்பதாகும். அவ்வாறே, சுமாத்திராத் தீவை இந்தோனேசியாவிற் சுமாத்திரா (Sumatera / Sumatra) என்றே அழைக்கப்படுகிறது. நான் இப்போதும் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலேயே இருக்கிறேன். இங்கு யாரும் சுமத்திரா என அழைப்பதில்லை என்பதுடன் இந்தோனேசிய மொழியின்படி அவ்வாறு அழைக்கப்படவும் முடியாது. எனவே, இவற்றை அருள்கூர்ந்து கவனித்துக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.--பாஹிம் (பேச்சு) 02:03, 14 மார்ச் 2012 (UTC)

நன்றி தொகு

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC) +1   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஐயம் தொகு

பெரும்பாலும் தாங்கள் உருவாக்கும் கட்டுரைகளில், தொகுப்புகளைச் சிறுகச் சிறுகவும் உடனுக்குடனும் சேர்க்கிறீர்கள். இதற்கு ஏதும் நுட்பக் காரணம் உள்ளதா அல்லது மின்வெட்டு அச்சம் போன்ற காரணமா என அறிய விரும்புகிறேன். நுட்பக்காரணம் என்றால் அது குறித்து ஏதேனும் செய்ய இயலுமா என்றும் முயல்வேன். நன்றி--இரவி (பேச்சு) 19:18, 19 மார்ச் 2012 (UTC)

மின்வெட்டு மட்டுமல்லாமல் இடையில் எனது வேலை காரணமாக எழுந்து செல்ல வேண்டியதாகிறது.திரும்ப வந்து சேமிக்கும்போது முரண்பாடுகளைத் தொகுக்கவும் என்று வந்து விடுகிறது.தட்டச்சிட்டது அனைத்தும் வீணாகி விடுகிறது. எனவே அவ்வப்போது சேமித்துவிடுகிறேன். --பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:24, 19 மார்ச் 2012 (UTC)

விக்கி வேலைக்கு நடுவே மற்ற வேலைகளையும் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடுகிறேன் :) தொகுப்பு முரண்பாடு அறிவிப்பு வரும் அதே பக்கத்தின் கீழ், நீங்கள் தட்டச்சு செய்த வடிவமும் இருக்கும். அதனைப் படி எடுத்து மீண்டும் இட்டும் தொகுப்பைத் தொடரலாம். எனவே, நீங்கள் தட்டச்சு செய்தது வீணாகாது. இதனை அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதே வேளை, உரை திருத்தம் போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றங்கள் இருந்தால் ஒப்பிட்டுப்பார்த்து நமது படியை இடுவதும் சிரமமே. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 19:39, 19 மார்ச் 2012 (UTC)

பகுப்பு தொகு

வணக்கம், தாங்கள் தவறாக நினைக்கவில்லை எனில் ஒரு சிறு பரிந்துரை :) .. பகுப்புகளை இடும் போது அதன் தாய்ப்பகுப்பை நீக்கி விடலாம்.. எ.கா. வாக தமிழகப் பறவைகள் சரணாலயங்கள் கட்டுரையில் பறவைகள்_காப்பகங்கள் பகுப்பின் கீழ் தான் இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் பகுப்பு வருகிறது.. எனவே இந்தியா மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பறவைகள் புகலிடங்கள் பகுப்பை இடும் போது அதன் தாய்ப்பகுப்பான பறவைகள் காப்பகங்கள் வேண்டியதில்லை என கருதுகிறேன்--shanmugam (பேச்சு) 13:37, 27 மார்ச் 2012 (UTC)

நன்றி சண்முகம். எனக்கு பகுப்பு பற்றிய அறிவு அவ்வளவு இல்லை.இதில் தவறாக நினைப்பதற்கு ஒன்றுமே இல்லை. காப்பகங்கள் பற்றிய கட்டுரைகள் தெரியவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்தேன். ஏற்புடையதைக் கொண்டு பிறவற்றை நீக்கி விடுங்கள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:41, 27 மார்ச் 2012 (UTC)

திணையள்வேனும் என்று எழுதிய இடத்தில் தினையளவேனும் என்று இருப்பத்துதானே சரியான வார்த்தையாக இருக்கும். ? .rssairam , புதுப்பயனர். 03-05-2012

வாழ்த்துகள் தொகு

  தமிழ் விக்கி ஊடகப் போட்டி பரிசு
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் நீங்கள் தொடர் பங்களிப்பாளர் பரிசு பெற்றுள்ளீர்கள்.

பரிசுத் தொகை மற்றும் சான்றிதழை உங்களுக்கு அனுப்பி வைக்கப் பின்வரும் விவரங்களை tamil.wikipedia@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்:

1) சான்றிதழில் இடம் பெற வேண்டிய பெயர் (தமிழில்)

2) முழு அஞ்சல் முகவரி

3) வசிக்கும் நாடு

--சோடாபாட்டில்உரையாடுக 20:34, 29 மார்ச் 2012 (UTC)

  • வெற்றி பெற்றமைக்கு எனது மனதார வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 22:00, 29 மார்ச் 2012 (UTC)
எதிர்பாராமல் கிடைத்த பரிசு இது. எனது மனமகிழ்ச்சிக்கு எல்லையில்லை. தேர்ந்தெடுத்த அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:07, 30 மார்ச் 2012 (UTC)
  • போட்டியில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்துக்கள் --Iramuthusamy (பேச்சு) 14:08, 30 மார்ச் 2012 (UTC)
  • மிக்க நன்றி பார்வதி தங்கள்.. உண்மையில் நான் இந்த பரிசை எதிர்பார்க்கவே இல்லை. பெரும் மகிழ்ச்சி. தேர்ந்தெடுத்த நடுவர் குழுவிற்கு என் நன்றிகள். உங்களது படைப்புகள் அனைத்தும் மிக அருமை. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பார்வதி ஸ்ரீ . . ! --எஸ்ஸார் (பேச்சு) 15:19, 30 மார்ச் 2012 (UTC)
  • தங்களின் அன்புக்கு மிகுந்த நன்றி... உண்மையில் எல்லாப் பெருமையும் விக்கிபீடியாவையும் அதன் உறுப்பினர்களையுமே சேரும்.. தாங்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல, ‘கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்க்க’ இன்னும் வலிமையோடு இணைந்து முயல்வோம். மிகுந்த நன்றியுடன் - அருணன் கபிலன்
  • பார்வதிஸ்ரீ, விக்கி ஊடகப் போட்டியில் பரிசு பெற்ற தங்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி.--Kanags \உரையாடுக 21:27, 30 மார்ச் 2012 (UTC)
  • ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் பங்களிப்புக்கள் தொடரட்டும்.--கலை (பேச்சு) 22:37, 30 மார்ச் 2012 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர் பங்களிப்பாளரான தாங்கள் ஊடகப்போட்டியில் தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றது குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:03, 31 மார்ச் 2012 (UTC)
  • பார்வதிஸ்ரீ, தங்கள் ஒளிப்படத் திறமையைப் பாராட்டி வாழ்த்துகின்றேன். அருமையான படைப்புகள்!--பவுல்-Paul (பேச்சு) 18:34, 1 ஏப்ரல் 2012 (UTC)

மிக்க நன்றி! தொகு

  நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!


உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்! --Anton (பேச்சு) 05:55, 31 மார்ச் 2012 (UTC)

நன்றி தொகு

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பரிசுச் செய்தியை என் நண்பர்கள் மற்றும் உடன் அலுவலர்களுடன் பகிர்ந்த போது "உங்களுக்குள் ஒரு புகைப்படக் கலைஞரா!" என்ற பாராட்டே எழுந்தது. :)... விக்கிபீடியா வெறும் தகவல் களஞ்சியத் தொகுப்பு மட்டுமல்ல. கட்டுரைப்போட்டி மற்றும் இது போன்ற ஊடகப்போட்டிகள் மூலம் திறமைகளையும் வெளிக்கொண்ர ஒரு வாய்ப்பைத் தருகிறது. விக்கிபீடியா சமூகத்திற்கு என் வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டுள்ளேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:14, 1 ஏப்ரல் 2012 (UTC)

வாழ்த்துகள் பார்வதிஸ்ரீ தொடர் பங்களிப்பாளர் பரிசைப் பெற்றதற்கு. நீங்கள் உருவாக்கும் கட்டுரை தொடர்ந்து படித்து வருகிறேன், உங்கள் கட்டுரை அதிக தகவல்வுடன் முழுமையானதாக உள்ளது. எனக்கு அதிக தகவல்வுடன் முழுமையான கட்டுரை உருவாக்க ஆலோசனை வழங்க முடியுமா? நன்றி --ரகுநாதன்.ப

பாடநூல் உசாத்துணை தொகு

பாடநூல் உசாத்துணை தரும் போது, எந்தப் பாடத்தில் எந்தெந்தப் பக்கங்கள் என்ற குறிப்பையும் தந்தால் உதவியாக இருக்கும். நன்றி--இரவி (பேச்சு) 05:51, 3 ஏப்ரல் 2012 (UTC)

About Wikipatrika தொகு

Dear Parvathisri, Hi :) My name is Noopur and I work as communications consultant at the India program office. Ravishankar gave me your reference for Wikipatrika. Since we are planning to bring out the Wikipatrika newsletter for all of India community, would you be interested in coordinating the page for the Tamil community, please? All you have to do is create a page on Tamil Wikipedia for Wikipatrika and fill information in sections. You can see how the last year's page was created here. All editors can contribute in Tamil or English and once our template is ready, we can start moving it to wiki.wikimedia.in. We hope to bring this out by end of April. I hope you can help out. :) Thanks in advance! Noopur28 (பேச்சு) 09:15, 3 ஏப்ரல் 2012 (UTC)

படிமம்:Copernicus (1).gif தொகு

Copernicus (1).gif மேற்கூறிய படத்தினை விக்கியில் பயன்படுத்துவதற்கான அநுமதி பற்றித் தாங்கள் எதுவும் இடவில்லை. குறுந்தட்டுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரையொன்றில் இப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதனை வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 11:15, 11 ஏப்ரல் 2012 (UTC)


வணக்கம் மதனாஹரன்.நான் விக்கியில் பங்களிக்கத் தொடங்கிய காலத்தில், தொடக்கத்தில் தொகுத்த கட்டுரையாதலால், இந்தப் படிமத்தின் மூலம் மற்றும் அனுமதி பற்றி எனக்குத் தெரியவில்லை. எனவே இப்படிமத்தை நீக்க வேண்டுமாயின் நீக்கிவிடுங்கள்.நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:18, 12 ஏப்ரல் 2012 (UTC)

படிமத்தை நீக்குவது முக்கியமன்று. தாங்கள் இப்படிமத்தை காமன்சில் ஏற்றியுள்ளீர்கள். காமன்சில் விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் அனுமதி தரப்படாத காரணத்தால் கடந்த அக்டோபரில் இது நீக்கப்பட்டு விட்டது. தாங்கள் தான் பதிவேற்றியவர் என்பதால் தங்களால் மட்டுமே இதற்கான அனுமதியைத் தர இயலும். தாங்கள் எடுத்துக் கையாண்ட மூலத்தின் அனுமதி என்ன என்பதைத் தரவும். நன்றி. --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:50, 12 ஏப்ரல் 2012 (UTC)

மேற்கூறிய படத்தினது கட்டற்ற படிமத்தினைப் பதிவேற்றி அதனை நீக்கி விடுகிறேன்... --மதனாஹரன் (பேச்சு) 09:56, 13 ஏப்ரல் 2012 (UTC)

உங்களின் கவனத்திற்கு! தொகு

பார்க்கவும்:பேச்சு:ராம்நாத் கோயங்கா

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:33, 28 ஏப்ரல் 2012 (UTC)

உங்களுக்கான ஒரு செய்திக்கு...பார்க்கவும்:பயனர் பேச்சு:Selvasivagurunathan m

வணக்கம்! குறுந்தட்டு திட்டம் குறித்த உங்களின் வேண்டுகோளை எனது பேச்சுப் பக்கத்தில் பார்த்தேன். திட்டம் தீட்டி 'குறுந்தட்டு திட்டத்தில்' பணிபுரிய முயல்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:07, 6 மே 2012 (UTC)Reply

நிர்வாகி தொகு

வணக்கம் பார்வதி: உங்களின் கட்டுரை ஆக்க/திருத்த/ஒழுங்குபடுத்தல் பங்களிப்புகள், பல்லூடகப் பங்களிப்புகள், அறிமுகப்படுத்தல் மற்றும் பிற விக்கி வளர்ச்சி செயற்பாடுகள் மெச்சும் வண்ணம் உள்ளன. உங்களை நிர்வாகியாக பங்கேற்க பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்கள் பதில் கண்டு தொடர்கிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 03:43, 19 மே 2012 (UTC)Reply

வணக்கம் நற்கீரன். மிக்க நன்றி எனக்கு நிருவாகி பொறுப்பை ஏற்குமளவுக்கு விக்கியில் அடிப்படை அறிவு, முதிர்ச்சி, அனுபவம் மற்றும், தொழில்நுட்ப அறிவு குறைவு என்பதாலும், இதனால் கட்டுரையாக்கத்திற்கான நேரம் குறைவுபடுமோ என்பதாலும் சிறிது தயக்கமாக உள்ளது. எனினும் மேன்மேலும் கற்க ஆர்வமாய் இருக்கிறேன். என்மேல் நம்பிக்கை வைத்து, ஏனையவர்களும் ஆதரவு தந்தால் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன். நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:17, 19 மே 2012 (UTC)Reply
நன்றி. --Natkeeran (பேச்சு) 05:44, 19 மே 2012 (UTC)Reply

நெறிப்படுத்தவும் தொகு

பார்வதி எனது அறிமுகப் பக்க தொடுப்பு இது. இதை சரிபார்த்து திருத்தவும். --எஸ்ஸார் (பேச்சு) 16:19, 20 மே 2012 (UTC) நன்றி எஸ்ஸார்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:43, 20 மே 2012 (UTC)Reply

விக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி/பரிந்துரைகள் தொகு

பரிந்துரை பக்கத்தில் நீங்கள் செய்த மாற்றங்களை மீளமை செய்து விடுங்கள். இரவி அதற்கான மாற்றங்களை ஏற்கனவே செய்துவிட்டார். பார்க்க விக்கிப்பீடியா:இந்த வாரக் கூட்டு முயற்சி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:01, 25 மே 2012 (UTC)Reply

நானே உங்களுடைய மாற்றங்களை மீளமை செய்துவிட்டேன். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:28, 25 மே 2012 (UTC)Reply

நன்றி தினேஷ். இணையக் கோளாறு காரணமாக இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:16, 25 மே 2012 (UTC)Reply

:-) -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:52, 26 மே 2012 (UTC)Reply

நிருவாக அணுக்கம் தொகு

உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப்பட்டுள்ளது , உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:42, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 07:08, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துக்கள் பார்வதி!--கலை (பேச்சு) 10:43, 26 மே 2012 (UTC) வாழ்த்துக்கள் வாத்தியாரம்மா..! அப்படியே கொஞ்சம் இந்த பக்கத்தையும், |இந்த பக்கத்தையும் கவனிக்க. நான் வார்ப்புரு இட்டு பல நாட்களாகியுள. நீங்களும் பயிற்சி எடுத்தது போலிருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:23, 26 மே 2012 (UTC)Reply

பார்வதிசிறீ, நீங்கள் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள். இவ்வணுக்கம் உங்கள் விக்கிப் பணியை இலகுவாக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.--Kanags \உரையாடுக 12:22, 26 மே 2012 (UTC)Reply
வாழ்த்துகள் பார்வதிஸ்ரீ! உங்களுடைய பணி மேலும் சிறக்க இது உதவும் என்பதில் ஐயமில்லை !!--மணியன் (பேச்சு) 18:19, 26 மே 2012 (UTC)Reply
நல்வாழ்த்துகள்! --செல்வா (பேச்சு) 17:22, 28 மே 2012 (UTC)Reply

வாழ்த்துகள் பார்வதிஸ்ரீ! (நிர்வாகிகள் பட்டியல் தொகுப்பில் தங்கள் பெயரைச் சேர்த்த நான் பின்னர் வாழ்த்து தெரிவிக்க மறந்து போயிருக்கிறேன்.) --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 28 மே 2012 (UTC)Reply

நன்றி தொகு

எனக்கு நிர்வாகித் தேர்தலில் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. (அப்படியே உங்கள் நன்றி நவிலல் வார்ப்புருவை நானும் உபயோகப்படுத்திக் கொண்டேன் :) )--சண்முகம் (பேச்சு) 11:45, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:08, 30 மே 2012 (UTC)Reply

நிருவாகி வார்ப்புரு தொகு

உங்கள் பயனர் பக்கத்தில் {{User wikipedia/Administrator}} என்ற வார்ப்புருவை இணைத்து விட்டால் நீங்கள் ஒரு நிருவாகி என்பதை ஏனைய பயனர்கள் அறிந்து கொள்வார்கள். அவ்வார்ப்புருவை இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:03, 26 மே 2012 (UTC) Y ஆயிற்று நன்றி மதனாகரன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:45, 26 மே 2012 (UTC)Reply

நன்றி தொகு

வார்ப்புருவுக்கு நன்றி பார்வதி. நீங்கள் சொல்லியவாறே எனது பயனர் பக்கங்களில் இணைத்துவிட்டேன். :)

வேண்டுகோள் தொகு

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:48, 29 மே 2012 (UTC)Reply

கட்டுரைகளை ஒன்றிணைத்தல் தொகு

 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Parvathisri. உங்களுக்கான புதிய தகவல்கள் Shanmugamp7 இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


பெரும்பறை, பெருமுரசு - சிறுபறை, சிறுமுரசு தொகு

பெரும்பறை, பெருமுரசு குறிப்புகள் வருகின்றன. அவை இரண்டும் வேறு வேறு கருவிகளாக அல்லது ஒரே கருவிகளுக்கான ஒத்த பெயர்களா? இவ்வாறே சிறுபரை சிறுமுரசு என்றும்.


  • பறை என்ற கருவி ஒரு பக்கம் திறந்த நிலையில் இருக்கும். ஆடு, மாடு இவற்றின் தோலால் செய்யப்பட்டது.
  • பெரும்பறை, பொதுவாகப் பயன்படுத்தப்படும் பறை
  • சிறுபறை என்பது சிறுவர்களின் விளையாட்டுக்காகச் செய்யப்படுவது.
  • பெருமுரசு, சிறுமுரசு ஒத்த கருவிகளே. பயன்படும் இடத்திற்கேற்ப பொருள் கொள்ளப்படுகிறது. முரசு மூடிய நிலையில் இருக்கும். கடம்ப மரத்தில் தோல் கொண்டு மூடிய அமைப்பில் செய்யப்பட்டது முரசு. -பொதுவாக போர் முரசு, மண முரசு இரண்டும் பெரிய முரசுகள், ஊருக்குச்சேதி சொல்லும் தோட்டி என்பவர் பயன்படுத்தும் கருவி சிறுமுரசு எனப்படுகிறது. அளவில் சிறியது. முரசு கட்டுரையை விரிவாக்கம் செய்ய எண்ணியுள்ளேன். கருத்துகளை இணைத்து விடுகிறேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:51, 7 சூன் 2012 (UTC)Reply

மேலும் தொடாகுச்சி வைத்து வயலின் போல வசிக்கும் கருவின் பெயரை சொல்ல முடிமா?. குறிப்பாக இந்த பாடலில் அந்த வாத்தியம் பயன்படுத்தபட்டுள்ளது http://www.youtube.com/watch?v=wMBdmbYimKw --Natkeeran (பேச்சு) 17:24, 6 சூன் 2012 (UTC) இதற்கான பதில் தங்களின் பேச்சுப்பக்கத்தில் இட்டுள்ளேன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:51, 7 சூன் 2012 (UTC)Reply


விளங்களுக்கு நன்றி. இலங்கையில் பறை என்ற சொல் பல இசைக் கருவிகளைக் குறிக்கப் பயன்படுகிறது. அதனால் மேலும் சற்றுக் குளப்பாகி விட்டது. --Natkeeran (பேச்சு) 22:27, 8 சூன் 2012 (UTC)Reply

இரு கட்டுரைகளை வரலாற்றுடன் இணைத்தல் தொகு

A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம். A கட்டுரையில் உள்ள முக்கிய தகவல்களை B கட்டுரையில் சேருங்கள். பின்னர் அதனை A கட்டுரைக்கு மாற்றுங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி மாற்றுங்கள். பின்னர் A கட்டுரையை நீக்க வேண்டும். பின்னர் அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள். அவ்வளவு தான். மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 11:44, 8 சூன் 2012 (UTC)Reply

நன்றி கனக்ஸ் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:13, 10 சூன் 2012 (UTC)Reply

பதக்கம் தொகு

  விக்கிப்புயல் பதக்கம்
நீங்கள் செய்த பின்வரும் பங்களிப்புகளுக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.
  1. நேற்று நான் கோவையில் பேருந்து ஏறி தென்காசி வருவதற்குள் பல்லவர் கட்டுரையை உரைத்திருத்தி முடித்தது. (அது நீண்ட நாட்களாக விக்கியாக்கம் செய்யப்படாமல் இருந்தது.)
  2. கூட்டு முயற்சிக்கட்டுரைகளில் பங்களித்து மற்றவர்களுக்கு வேலை கொடுக்காமல் 2 நாட்களில் முடித்து கடுப்பேற்றுவது.
  3. பெரிய கட்டுரையாயினும் சில மணிகளில் உரைத்திருத்துவது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 03:47, 30 சூன் 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

+1   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தங்கள் விக்கியன்புக்கு நன்றி தென்காசி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:09, 30 சூன் 2012 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
வணக்கம்..!

சொல்வதற்கு வேறொன்றும் இல்லை...பதக்கத்தின் தலைப்பே சொல்லிவிட்டது!! நன்றி!!! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:44, 3 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டதுReply

+1   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

படிமங்களுக்கான பகுப்புகள் தொகு

பார்வதிசிறீ, படிமங்களுக்காக சில சிறப்புப் பகுப்புகள் உள்ளன. படிமங்களை கட்டுரைகளுக்கான பகுப்புகளில் சேர்க்க முடியாது. இதனாலேயே நீங்கள் சில படிமங்களுக்கு இணைத்திருந்த வேளாண்காடு வளர்ப்பு என்ற பகுப்பை படிமங்களில் இருந்து நீக்கியிருந்தேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:37, 8 சூலை 2012 (UTC)Reply

ஓர் வேண்டுகோள் தொகு

வணக்கம், சிற்றாமைக் கட்டுரையில் நம் பிரதேசத்தில் என்று இருப்பதில் நம் எனக் குறிப்பிட வேண்டாம் என நினைக்கிறேன். பிரதேசத்தின் பெயரைக் குறிப்பிடுவது சரி எனத் தோன்றுகிறது. எனக்குத் சரியாகத் தெரியாததால் உங்களை மாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp (பேச்சு) 20:28, 12 சூலை 2012 (UTC)Reply

உறுதியாக நம்மென குறிப்பிடக்கூடாது. இதை தமிழில் படிப்பவர்கள் இந்தியாவில் மட்டும் இல்லை. மேலும் கடலாமை நீண்ட வாழ்நாள் கொண்டது என்பதற்கும் எத்தனை ஆன்டு என்பதற்கும் ஆதாரமிருந்தால் உங்களுக்குத் தெரியுமாவில் இடலாம்.

ஒரு தடவை ஒரு கிரகம் "நம் புவியிலிருந்து" இத்தனை தூரம் எனக் கொடுத்திருந்தேன். சோடாபாட்டில் தன்னிலை பெயரான நம் என்பதை நீக்கி மானிடர் என மாற்றினார். அப்படி என்றால் வேற்றுலக வாசிகளும் விக்கிப்பீடியா பார்க்கிறார்கள் போலும். ஹி...ஹி...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:23, 13 சூலை 2012 (UTC)Reply

ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்து சில செய்திகளைத் திருத்த, இணைக்க, விரிவாக்க எண்ணியுள்ளேன். செப்பம் செய்துவிடுகிறேன். உதவிக்கு நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:45, 13 சூலை 2012 (UTC)Reply

இந்தியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள் தொகு

இந்தியாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்களைக் குறித்த கட்டுரைகளை விரைவாகவும் சிறப்பாகவும் ஆக்கியதற்கு பாரட்டுக்கள் !! --மணியன் (பேச்சு) 16:17, 12 ஆகத்து 2012 (UTC)Reply

கழிநெடிலடி தொகு

வணக்கம் பார்வதி, பேச்சு:கழி நெடிலடி பார்க்கவும். நன்றி--Booradleyp (பேச்சு) 17:36, 17 ஆகத்து 2012 (UTC)Reply

கட்டுரைகளை இனைப்பு தொகு

பார்வதி! சீனாவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்களுக்கான கட்டுரைகளை வரலாற்றுடன் சேர்த்து இணைத்துவிட்டேன். நீங்கள் எழுதியிருந்த கட்டுரையை நான் கவனிக்காமல் போனதற்குக் காரணங்கள் இரண்டு:

எனவே இந்தக் கட்டுரையில் தொடர்ந்து பங்களிப்பீர்களாயின், கட்டுரையில் ஏற்கனவே புதிய கட்டுரைகளை ஆரம்பிப்பதற்கான இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதனால், தயவு செய்து அந்த சிவப்பிணைப்பை அழுத்தி, குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரையை ஆரம்பியுங்கள். அவ்வாறு செய்யின் குழப்பத்தைத் தவிர்க்கலாம். மேலும் இவ்வாறு நேரும்போது, கட்டுரைகளை உடனேயே இணைத்துவிடலாம். தவறாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என்பதனால், இப்படியான இடங்களில் உரையாடல் தேவைப்படாது.நன்றி. --கலை (பேச்சு) 15:45, 23 ஆகத்து 2012 (UTC)Reply


ஓராண்டு நிறைவு தொகு

இன்றுடன் நானும் விக்கிப்பீடியாவும் இணைந்து ஓராண்டு நிறைவுறுகிறது. ஒராண்டுக்குள் 365 கட்டுரைகளையும் 10,000 தொகுப்புகளும் செய்து முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆயின் அது உடல் நலம், பணி போன்ற பல்வேறு காரணங்களால் இயலாமல் போனது. 6150 வரையிலான தொக்குப்புகளும் 324 கட்டுரைகளும் மட்டுமே இவ்வாண்டு முடித்துள்ளேன். இவோராண்டில் விக்கிப்பீடியா எனது நண்பனாகவும் பொழுது போக்கியாகவும் தேடுதலுக்கு விடையாகவும் இருந்துள்ளது. விக்கிப்பீடியாவிற்கும் இக்குறுகிய காலத்தில் நிர்வாகியளவுக்கு என்னை உயர்த்திய விக்கியன்புள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:02, 31 ஆகத்து 2012 (UTC)Reply

விக்கியில் உங்கள் பங்களிப்புகள் மென்மேலும் சிறப்புற அமைய வாழ்த்துகள் பார்வதிசிறீ.--Kanags \உரையாடுக 23:39, 31 ஆகத்து 2012 (UTC)Reply
பாராட்டுக்கள்! இரண்டாண்டு நிறைவில் 365+41 கட்டுரைகளுக்கு மேல் முடிக்க வாழ்த்துக்கள்! --Anton (பேச்சு) 00:19, 1 செப்டெம்பர் 2012 (UTC)   விருப்பம்--எஸ்ஸார் (பேச்சு) 12:42, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
முதலாண்டு சாதனைகள் உங்கள் இலக்கை எட்டாவிடினும் முதன்மையானவை. வருமாண்டில் உங்களது சீரிய பங்களிப்பு மேலும் முனைப்புடன் மென்மேலும் சிறப்புற விளங்கிட வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:04, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
வாழ்த்துகள் பார்வதிஸ்ரீ - --Nan (பேச்சு) 12:53, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
உங்களைப் போல் திட்டமிட்டு உழைப்போரைப் பெற்றிருப்பது தமிழ் விக்கிப்பீடியா செய்த பேறு. 324 கட்டுரைகளுடன் நீங்கள் விரிவாக்கிய, உரை திருத்திய எண்ணற்ற கட்டுரைகளையும் சேர்த்தால் பெரும்பணி. தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 15:06, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
  • எஸ்ஸார், Nan, மற்று இரவி அவர்களுக்கும் என் நன்றிகள். ஓர் குறிப்பை இட்டு வைக்கலாம் என நினைத்தே இங்கு பகிர்ந்தேன். இத்தனைப் பேர் வாழ்த்தும்போது எனக்கே சிறிது அதிகமாகத் தோன்றுகிறது. கனக்ஸ் மணியன்,மயூரநாதன், நற்கீரன், செல்வா, சோடாபாட்டில் இரவி.. என இன்னும் எத்தனைபேர் பல ஆண்டுகளாகவும் எத்தனையோ ஆயிரவர் பட்டம் பெற்றும் அமைதியுடன் இருக்க ஓராண்டுக்கேவா :) எனத் தோன்றுகிறது... தங்கள் அனவரும் என்மீது கொண்ட நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்திற்கும் நன்றிகள்....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:43, 1 செப்டெம்பர் 2012 (UTC)  விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 03:58, 2 செப்டெம்பர் 2012 (UTC)Reply
  • ””உங்களை நாங்கள் பெற்றிருப்பது பேறு“”, ஒராண்டு நிறைவு பெற்றமைக்கு வாழ்த்துகள் பார்வதி, :) உங்களின் இந்த செய்தி உங்களுக்கு வேண்டுமானால், மிகையாக சொன்னதுபோல் தோன்றலாம். ஆனால், இதற்கு நீங்கள் பெற்ற மறுமொழிகளே உங்கள் கடின உழைப்பைக் காட்டுகின்றன. இதுபோன்ற ”சமூக உரையாடல்கள்” என்னை இலகுவாக்கி, மகிழ்ச்சியடையச் செய்கின்றன. இச்செய்தியின் மூலம் நான் ஒன்று தெரிந்து கொண்டேன். உங்களைப் போன்றே, ஆர்வமுடன் பங்களிக்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்குகிறது. உங்கள் சீரிய பங்களிப்பைத் தொடருங்கள்   விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை இற்றைப் பொறுப்பு தொகு

கடந்த வாரம் முதற்பக்கக்க கட்டுரைகளை இற்றைப்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து வரும் வாரங்களில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பது, இற்றைப்படுத்துவது ஆகிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஞாயிறுகளில் நீங்கள் கணினி முன்பு இருக்க இயலாவிட்டாலும் வார்ப்புருவை முன் கூட்டியே உருவாக்கி விட்டால் வேறு எவரேனும்கவனித்து இற்றைப்படுத்த இயலும். நன்றி--இரவி (பேச்சு) 08:12, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி இரவி. ஏற்றுக்கொள்கிறேன் கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் விதிகள் உள்ளனவா? எனத் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:37, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி, பார்வதி. விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள் பக்கத்தில் உள்ள முதல் இரண்டு துணைத்தலைப்புகளில் வழிகாட்டல்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையிலும் இவற்றை மேம்படுத்தியும் செயற்படலாம்.--இரவி (பேச்சு) 14:38, 7 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Coimbatore can't be a FPA until [சான்று தேவை] are removed.

முதற்பக்க இற்றைப்படுத்தலுக்கு வந்தமைக்கும் ஒராண்டுகள் தொடர்ந்து விக்கியில் சிறந்த பங்களிப்புகளை செய்ததற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:46, 12 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மகபாரதத்தில் பாண்டியன் தொகு

//மகாபாரதப் போரில் கலந்து கொண்ட மலையத்துவச பாண்டியன் காசி நாட்டு அரசனின் மகன். இவனது மனைவி வைதற்பி. இவனது மகன்கள் பிரதீபன்,இத்ம வாகன்; பாரதப் போரில் பதினேழாம் போரில் தான் அசுவத்தாமன் படைகலம் ஏற்கிறான். மறுநாள் பதினெட்டாம் நாள் போரிலே மலையத்துவசன் அசுவத்தாமனால் கொல்லப்பட்டான். தனது தந்தை துரோனரைக் கொல்ல இவன் உதவியதாகக் கூறப்படுகிறது.( அபிதான சிந்தாமனி. ஆனால் எவ்வாறு என விளக்கப்படவில்லை. இவன் தமிழகத் தென்னாட்டு பாண்டியன் அல்லன்.//

இத்தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள். மேலும் மாபாரதம் 3 பாண்டியர் பெயர்களை கூறுகிறது.

  1. மலையத்வசன்
  2. சாரங்கத்வசன்
  3. கௌரவர்களுக்கு உதவிய ஒருவன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:02, 14 செப்டெம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரையில் மாற்றம் தொகு

23 செப்டம்பர் அன்று காட்சிப்படுத்தப்படப் போகும் கோயமுத்தூர் கட்டுரை ஆதாரம் தேவை, சான்று தேவை போன்ற வார்புருக்கள் மும்முறை இடம்பெற்றுள்ளன. அதனால் அது நீக்கப்பட்ட பின் காட்சிப்படுத்தவும்.

ஒட்டுமொத்த இந்தியாவின் கற்கால வரலாற்றாய்வின் ஆரம்பம், இராபர்ட் புருசு ஃபோடெ என்பவர் 1863ல் பல்லாவரத்தில் கண்டறிந்த பழங்கற்கால கோடாரி கண்டறிந்ததன் மூலமே தொடங்கியது. அவர் பிறந்தது செப்டம்பர் 22, 1834. அவர் நினைவாக தமிழகத்தில் கற்காலம் கட்டுரையை காட்சிப்படுத்தினால் சிறந்ததாக இருக்கும் என்பது என் எண்ணம். சரியாக இருப்பின் தேர்வு செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:56, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தமிழகத்தில் கற்காலம் என்ற கட்டுரையில் ஒருவர் மட்டுமே பங்களித்துள்ளார். இது போன்ற ஆய்வுக் கட்டுரையை வேறு யாராவது பார்த்துத் திருத்திய பின்னர் முதற்பக்கத்தில் காட்சிப் படுத்துவது நல்லது.--Kanags \உரையாடுக 21:24, 16 செப்டெம்பர் 2012 (UTC)Reply

வணக்கம் அதற்கான தேவையில்லை என்பது என் எண்ணம். பார்க்க பண்டைய தமிழகம் (நூல்). அதிலிருவ்து தமிழர் வரலாற்றுக் காலக்கோடு கட்டுரைக்கு நான் தகவல்களை சேத்தேன், அது ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்டதே. மேலதிக செய்திகள் நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டவை. அதனால் உரைதிருத்தம் செய்தாலே போதுமானது.

மேலும் இது ஆய்வுக்கட்டுரை அல்ல. நிங்கள் குகுளில் தேடிப்பார்த்தாலே இதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். மேலும் நுலினுள் பல பேர் எழுதிய ஆய்வுகளை கொண்டு தான் ஆசிரியர் அனைத்து முடிவுகளையும் எடுத்தானடுளார். அன்னுள் கட்டுரையில் உள்ள pdf தரவிரகக்கி பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:58, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி தென்காசி. கட்டுரையில் உரை திருத்தம் செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 08:26, 17 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றிகள் தொகு

பார்வதிஸ்ரீ, நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:17, 18 செப்டெம்பர் 2012 (UTC)Reply

Return to the user page of "Parvathisri/தொகுப்பு 2".