பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தொகுப்பு 4

வலைவாசல் உருவாக்க வேண்டல்

தொகு

வணக்கம் சிவகுரு! நாம் உரையாடி வெகு நாட்களாகி விட்டன. :) எனக்கு உங்கள் உதவி தேவை! கேரளம் தொடர்பான வலைவாசலை உருவாக்கித் தருமாறு வேண்டுகிறேன். பக்க வடிவமைப்பு குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. சிறப்புக் கட்டுரைகள், தேவைப்படும் கட்டுரைகள், பகுப்புகள், இன்ன பிற என ஒவ்வொன்றிலும் இருபது வீதம் குறிப்பிட்டீர்கள் எனில், தொடர வசதியாய் இருக்கும். மேலும் உங்கள் ஆலோசனைகளை வழங்குக! செகதீசுவரனையும், செயரத்தினாவையும் கேட்டுள்ளேன். ;) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:39, 25 நவம்பர் 2013 (UTC)Reply

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு

தொகு


சொதியும் தமிழ்த் தேசியமும்

தொகு

சொதி என்பது திருநெல்வேலி என்று அல்ல கார்காத்தார் சமூகம் இருக்கும் இடம் எங்கும் பரிமாறப்படுகிறதே? திருநெல்வேலியில் மட்டுமா பரிமாறுகிறார்கள்? வேறு வேளாளர் சமூகங்களும் இதைச் செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அதனால் இச்செய்தியை சில நாட்கள் கழித்து காட்சிப்படுத்தலாம்.

அதுசரி. திருநெல்வேலி எப்போ மாநிலமாச்சு?.[1] .--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:15, 3 திசம்பர் 2013 (UTC)Reply

  • தெரிந்த தகவல் அப்போது எழுதப்பட்டது. திருத்தியமைக்கு நன்றி. முடிந்தால், ஆதாரத்துடன் தெளிவான தகவலுடன் இக்கட்டுரையினை நீங்களே திருத்தி விடுங்கள்.
  • மாவட்டம் என எழுதுவதற்குப் பதிலாக மாநிலம் என கவனக்குறைவாக அப்போது என்னால் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதற்கு தமிழன்னையும், தமிழ் குமுகாயமும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!
  • கவனக்குறைவால் ஏற்பட்ட பிழையினை திருத்தியமைக்கு நன்றி!-மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:42, 3 திசம்பர் 2013 (UTC)Reply
சில வருத்தங்கள்:
யாராயினும் எழுதும்போது தவறுகள் ஏற்படுவது வழக்கம்தான். அவ்வாறான தவறுகளை காண்பவர் திருத்திவிடலாம் அல்லது குறித்த பயனரின் பேச்சுப் பக்கத்தில் நயமாகச் சுட்டிக்காட்டலாம். சிறு விடயங்களுக்கெல்லாம் பயனர்களை வருத்தப்பட வைத்தல் நல்லதல்ல. ---மயூரநாதன் (பேச்சு) 04:55, 10 திசம்பர் 2013 (UTC)Reply

பயனர்:Selvasivagurunathan m, பயனர்:Mayooranathan நான் வருத்தப்படுவதற்கு எதையும் சொல்ல வில்லை. சில நபர்கள் எப்போது எப்படி இருப்பார்கள் எனத் தெரியவில்லை. முன்பு ஒருநாள் செல்வசிவகுருநாதன் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் அவரை வாழ்த்தினேன். (நகைச்சுவையான நடையில்) அவர் பேச்சுப் பக்கத்தில் எனக்கு அளித்த பதிலில் இயல்பான நகைச்சுவை உணர்வே இருந்தது. அதனால் இதை அவர் எள்ளி நகையாடலாக எடுத்துக் கொள்வார் என்று நான் எண்ணவில்லை. மேலும் 3ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் கொஞ்சம் இடைவெளி என்பதால் நான் கவனிக்கவில்லை. இப்போதே அறிய முடிந்தது. இனி நான் நகை நடையில் பேசுவது செல்வசிவகுருநாதனுக்கு எள்ளி நகை நடையாகத் தெரிவதால் இனி இந்த விடயம் இவரின் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.

இது முன்பு நடந்த உரையாடல். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 01:37, 4 மே 2014 (UTC)Reply

உதவி

தொகு

புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் ஒன்று ஆனால் ஏற்கனவே உள்ள வங்க தேசம் என்ற கட்டுரை இன்றைய வங்காள தேசத்தைக் குறிக்கிறது. இந்த வங்கதேசமென்ற கட்டுரை வங்காளத்தைப் பற்றியது அல்ல, இதன் எல்லை காசியிலிருந்து இன்றைய கொல்கத்தா வரையிலுமே எனவே வங்காளதேசம் என்ற கட்டுரையின் முந்தைய கட்டுரைப் பெயரான வங்கதேசம் என்று இருப்பதால் இந்த வங்கதேசம் என்ற கட்டுரையை சேமிக்க இயலவில்லை எனவே வங்கதேசம் என்ற பெயரில் கட்டுரை அமைய உதவவும்--Yokishivam (பேச்சு) 03:04, 15 திசம்பர் 2013 (UTC)Reply

வங்க தேசம் (பண்டைய இராச்சியம்) எனப் பெயரிடலாம். --மணியன் (பேச்சு) 16:40, 17 திசம்பர் 2013 (UTC)Reply

உதவி தேவை

தொகு

தமிழ் விக்கி தொகுக்கும்போது சிறு தடங்கள் ஏற்பட்டுள்ளது. தொகுத்தல் பகுதில் ஆங்கிலம் தட்டச்சு செய்துவிட்டு தமிழுக்கு தட்டச்சு செய்ய மாற்ற வலது பக்கத்தில் ஒரு கட்டம் வரும் அதை சொடுக்கினால் ஆங்கிலமா அல்லது தமிழா என்று மாற்றி தட்டச்சு செய்வேன் . ஆனால் திடீர் என்று எனது அலுவலக கணினியில் அந்த கட்டம் வரவில்லை. அதை நான் எப்படி சரி செய்வது, இப்போது கூட தினமலர் பக்கத்தில் தான் தமிழ் தட்டச்சு செய்து உங்களிடம் உதவி கேட்கிறேன். தேடு என்ற இடத்தில் தட்டச்சு செய்யும் போது கூட ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே வருகிறது. உதவி செய்யுங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 11:19, 22 சனவரி 2014 (UTC)Reply

தட்டச்சில் ஏற்ப்பட்ட தடங்கல் சரியாகிவிட்டது. மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள் பல!--Muthuppandy pandian (பேச்சு) 06:40, 23 சனவரி 2014 (UTC)Reply


1. மா என்ற தமிழ் பக்கத்திற்க்கான ஆங்கில பக்கம் (Mangifera) என்று வறுகிறது. ஆனால் இப்பக்கத்தில் தமிழ் கொஞ்சம் விசயம்தான் உள்ளது. ஆனால் (Mango) என்று அமைந்துள்ள ஆங்கில பக்கத்திற்க்கு தமிழ் பக்கம் இல்லாமல் உள்ளது. மா என்று அமைந்துள்ள பக்கத்தை (Mango) என்ற பக்கத்தில் இணைக்கலாமா என்று முடிவு செய்யுங்கள்.

2. தமிழ் விக்கி தட்டச்சு உதவி பக்கத்தில் எந்த எழுத்திற்க்கு எந்த எழுத்து என்று ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் திரு அதாவது (sri) என்ற வார்த்தைக்கு தனி எழுத்தாக வடமொழியில் (ஸ்ரீ) என்ற எழுத்திற்க்கு எந்த எழுத்து என்று இல்லை. அதாவது a பொத்தானை அழுத்தும்போது அ வருகிறது. (ஸ்ரீ) என்ற எழுத்திற்க்கு எந்த எழுத்தை பயண்படுத்தவேண்டும் என்று அட்டவணையில் இல்லை.(நான் பயன்படுத்துவது எழுத்துப்பெயர்ப்பு)--Muthuppandy pandian (பேச்சு) 11:35, 14 பெப்ரவரி 2014 (UTC)

நான் கேட்ட கேள்வியை இன்னமும் நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 05:04, 25 பெப்ரவரி 2014 (UTC)

ஜாரவா பழங்குடியினர் என்ற தமிழ் பக்கத்திற்க்காக (Jarwa) என்ற உத்தரபிரதேச ஊரின் பெயர் வருகிறது. அதேநேரத்தில் ஆங்கில விக்கியில் ((Jarawa (Andaman Islands)) என்பதற்க்கும் ஜாரவா பழங்குடியினர் என்று வருகிறது. இதனை சரி செய்யவும்.--Muthuppandy pandian (பேச்சு) 06:11, 20 மார்ச் 2014 (UTC)

 Y ஆயிற்று விக்கித்தரவில் சரிசெய்துவிட்டேன்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:04, 20 மார்ச் 2014 (UTC)

முசிரி சுப்பிரமணிய ஐயர்

தொகு

உங்களுக்கு பதிலெழுத இதிலே எழுதவேண்டுமா அல்லது எனது பேச்சு பக்கத்தில் உங்கள் தகவலுக்குக் கீழே எழுதவேண்டுமா என்று தெரியவில்லை. உதவி ஆவணத்திலே கையெழுத்து போடுவது எப்படி என சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் ஒருவரின் தகவலுக்கு எப்படி பதிலளிப்பது என்பதற்கு விளக்கம் காணவில்லை.

1. கட்டுரையை தற்காலிகமாக சேமிப்பது பற்றிய உங்கள் தகவலுக்கு நன்றி. 2. முசிரி சுப்பிரமணிய ஐயர் கட்டுரையை நீக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளேன். நான் முசிரி சுப்பிரமணிய ஐயர் என்று தேடியபோது முசிறி சுப்பிரமணிய ஐயர் என்ற தலைப்பை காட்டவில்லை. அதனாலேயே தொடங்கினேன். முசிறி சுப்பிரமணிய ஐயர் கட்டுரையில் சேர்க்க விடயங்கள் உள்ளன. சனவரி 4 வரை எனக்கு இணைய இணைப்பில் 1.2 MB மட்டுமே இருக்கிறது. நான் dongle data card தான் பயன்படுத்துகிறேன். ஆகவே இப்போதைக்கு விக்கியில் எதுவும் எழுத வாய்ப்பில்லை. எனது பொருளாதார நிலையில் ஏதும் முன்னேற்றம் ஏற்பட்டால் நிச்சயம் மேலும் பல கட்டுரைகள் எழுதுவேன். நிறைய குறிப்புகளும் நான் கையால் எழுதிய கட்டுரைகளும் இருக்கின்றன. இறைவன் வழி விட்டால் செய்யக் காத்திருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி--Uksharma3 (பேச்சு) 16:30, 19 திசம்பர் 2013 (UTC)Reply

இது சரியா?

தொகு

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 12:52, 21 திசம்பர் 2013 (UTC)Reply

டிசம்பர் 25, 2013 உங்களுக்குத் தெரியுமா?

தொகு
டிசம்பர் 25, 2013 உங்களுக்குத் தெரியுமா தானியக்கமாக முதற்பக்கம் இற்றைப்படுத்தப்படவில்லை. சரிப்படுத்த உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:29, 25 திசம்பர் 2013 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

போலி உம்ரிக்கர் பக்கம் தவறுதலாக நீக்கப்பட்டது. யாராவது இணைக்க முடியுமா? இன்று காலை பக்கத்தை பார்த்தேன்.

புதிய பகுப்பை உருவாக்க உதவி

தொகு

சங்கீத கலா சிகாமணி விருது பெற்றோர் என ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளேன். ஆனால் இத்தலைப்பு ஒரு பகுப்பாக ஆக்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என்பது என் எண்ணம். வானொலி பற்றிய பகுப்புக்களில் வானொலி ஆர்வலர் என்ற பகுப்பையும் சேர்த்தால் நல்லது என்பதும் என் எண்ணம். Uksharma3 (பேச்சு) 13:12, 29 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
தங்கள் வழிகாட்டுதல்கள் எனக்குப் பேருதவியாக உள்ளன. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி. வணக்கம். Uksharma3 (பேச்சு) 16:13, 29 திசம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம், தொடரட்டும் உங்கள் பணி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:26, 29 திசம்பர் 2013 (UTC)Reply
  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 23:31, 29 திசம்பர் 2013 (UTC)Reply

தேடுதல் பொறிகள் மணல்தொட்டி பக்கங்களை Index, follow செய்வதைத் தடுத்தல்

தொகு

உங்கள் வழிகாட்டலின்படி நான் இப்போது கட்டுரைகளை முதலில் மணல்தொட்டியில் தயார் செய்து, முழுமை பெற்றபின் புதிய பக்கத்துக்கு மாற்றுகிறேன். எனது கட்டுரை மணல்தொட்டியில் இருக்கும்போது கூகிள் பொறி அதனை Index செய்து தனது தேடுதல் முடிவுகள் பட்டியலில் காண்பிப்பதை அவதானித்தேன். இவ்வாறு கூகிளோ வேறு தேடுதல் பொறிகளோ மணல்தொட்டிப் பக்கத்தை Index செய்வதை தவிர்க்கவேண்டும். தேடல்முடிவைப் பார்த்து அந்தப் பக்கத்துக்கு வரும் ஒரு பார்வையாளர், அவர் வரும்போது அந்தப் பக்கத்திலுள்ள தகவல் வேறாக இருப்பதைக் காணக்கூடும். ஏனெனில் கட்டுரையை புதிய பக்கத்துக்கு மாற்றியவுடன் மணல்தொட்டியில் வேறு கட்டுரை தொடங்கிவிடுவேன். In HTML I use meta tag to stop Google and other bots from indexing and following. Also I use robots.txt file to stop indexing certain pages or folders. இவ்வாறு தடுக்க வழி உண்டா? Uksharma3 (பேச்சு) 13:14, 30 திசம்பர் 2013 (UTC)Reply

ஐயா, இந்த விசயத்தில் தங்களுக்கு உதவும் அளவிற்கோ அல்லது பதில்தரும் அளவிற்கோ எனக்கு தொழினுட்ப அறிவு கிடையாது; அனுபவமும் இல்லை. எனவே இக்கேள்வியினை இங்கு கேளுங்கள். இந்தப் பக்கமானது, தொழினுட்பம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினைத் தரும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:59, 31 திசம்பர் 2013 (UTC)Reply
நீங்கள் சொன்ன இடத்தில் எனது கேள்வியைப் பதிவு செய்துள்ளேன். வழிகாட்டலுக்கு நன்றி. Uksharma3 (பேச்சு) 04:23, 1 சனவரி 2014 (UTC)Reply
உங்கள் மணல்தொட்டியில் உள்ளது தேடுபொறியில் வராமல் தடுப்பதற்கு வழி ஏதும் இல்லை என்றே நம்புகிறேன். நான் இதுவரையில் என் மணல்தொட்டியையோ அல்லது என் பயனர் வெளியையோ பயன்படுத்தியதே இல்லை.--Kanags \உரையாடுக 04:28, 1 சனவரி 2014 (UTC)Reply

மணல்தொட்டி பற்றிய என் கேள்விக்கு நண்பர் சண்முகம் ஒரு பதில் தந்துள்ளார். ஒரு குறியீடு பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். அது சரியாக இருக்கும் என்பது என் நம்பிக்கை. அன்பு சிறீதரன், உங்கள் பயனர் பக்கத்தில் தமிழ் விக்கியில் நான் தொடங்கிய பக்கங்கள் என்பதைச் சொடுக்கினால் Page not found (404) என்ற பக்கம் வருகிறது. தமிழ் விக்கியில் எனது மொத்த பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கினால் Software error: என்ற அறிவிப்பும் அதனை அறிவிக்கும் படி ஒரு மின்னஞ்சல் முகவரியும் காட்டுகின்றன. 2, 3 தடவை, வெவ்வேறு நாட்களில் முயற்சி செய்தேன். இப்படித்தான் வருகிறது. ஆனால் அனைத்து விக்கி மீடியா திட்டங்களிலும் எனது பங்களிப்புகள் சரியான பக்கத்துக்கு இட்டுச் செல்கிறது. இதே போல் ஒரு கட்டுரையின் திருத்த வரலாறு பக்கத்துக்குப் போய் பதிப்பு வரலாறு புள்ளிவிபரம் என்பதைச் சொடுக்கினால் Page not found (404) பக்கம் வருகிறது. இதனை ஆலமரத்தடியில் பதிவு செய்திருக்கிறேன்) ஒவ்வொரு பயனரும் அவர் தொடங்கிய பக்கங்கள், பங்களிப்பு செய்த பக்கங்கள் தலைப்பு விபரங்களை ஒரு அட்டவணையாக அந்தந்த பயனரின் பயனர் பங்களிப்புகள் பக்கத்தில் காட்டினால் உதவியாக இருக்கும். Uksharma3 (பேச்சு) 01:37, 2 சனவரி 2014 (UTC)Reply

நன்றி

தொகு

மிக்க நன்றி நண்பரே. தங்களது பதக்கம் நான் நிர்ணயித்துள்ள புதிய இலக்கை அடைவதற்கு ஓர் உந்து சக்தியாய் உள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:29, 3 சனவரி 2014 (UTC)Reply

சந்தேகம்

தொகு

Budget என்பது நிதியறிக்கை என்று வருகிறது, Union budget of India என்பது இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம் என்று வருகிறது, interim budget என்பது இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை என்று வரவேண்டும் அல்லவா? ஆனால் அது Union budget of India என்பதோடு சேர்ந்தே வருகிறது. இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை இதை எந்த தலைப்பில் சேர்ப்பது முடிந்தால் சரிசெய்யவும்.--Muthuppandy pandian (பேச்சு) 10:13, 8 சனவரி 2014 (UTC) நான் கூறியிருக்கும் இந்த கருத்துப்பற்றி உங்களின் மேலான கருத்துக்கிற்க்கு காத்திருக்கிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 05:52, 13 சனவரி 2014 (UTC)Reply

மன்னிக்கவும், இன்று பார்க்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:55, 13 சனவரி 2014 (UTC)Reply

இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது அனைத்து நாடுகளிலும் உண்டு.[1][2][3][4]

16.06.2014 அன்று பயனர்:Krishnamoorthy1952 என்பவர் எழுதியுள்ள லவன் என்ற கட்டுரை ஏற்கனவே இலவன் (Lava (Ramayana)) என்ற தலைப்பில் உள்ளது. அதுவும் முதல் கட்டுரையில் உள்ளது போலவே அப்படியே இந்த கட்டுரையிலும் அமைந்துள்ளது. சரி செய்யவும்--Muthuppandy pandian (பேச்சு) 12:48, 17 சூன் 2014 (UTC)Reply

சில வேளைகளில் இந்த மாதிரி நடந்துவிடுவது உண்டு. எனவே, ஒரு தலைப்பில் கட்டுரை எழுதும் முன் அது வேறு பெயரில் இருக்கிறதா என தேடிப் பார்க்க வேண்டும். அதற்கு வேறு பெயர்கள் இருந்தால் வழிமாற்று ஏற்படுத்த வேண்டும். இந்த கட்டுரைகள் இரண்டிலும் ஏறக்குறைய ஒரே உள்ளடக்கம் இருப்பதால் இணைக்கத் தேவையில்லை. இரண்டாவதில் உள்ள சில தகவல்களை முதலாம் கட்டுரையில் சேர்த்துவிட்டு, இரண்டாவது கட்டுரையின் தலைப்பை வழிமாற்று ஆக்கிவிடலாம். :)

நானே செய்துவிடுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:10, 17 சூன் 2014 (UTC)Reply

2014 ஜனவரி 11ஆம் தேதி தி இந்து தமிழ் நாளிதழின் துணை பதிப்பில் 4ஆம் பக்கத்தில் ஆச்சரியமும் அதிச்சியும் என்ற தலைப்பில் தமிழ் விக்கிபீடியா இந்திய மொழிகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தலைப்புகள் கொடுக்கப்படும் பட்சத்தில் குறைந்த அளவாவது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்று செய்யப்படுவதில்லை என்பது ஒரு வருத்தம். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் (Disease) என்ற நோய் இதில் ஆங்கிலத்தில் எவ்வளவோ கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் தமிழில் சொர்ப்ப அளவே தமிழ் படுத்தப்பட்டுள்ளது. இந்த விசயம் பற்றி எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்--Muthuppandy pandian (பேச்சு) 06:22, 18 சூன் 2014 (UTC)Reply

தேடு என்ற இடத்தில் மக்கள் என்று தட்டச்சிட்ட உடன் 2006 ஜூன் மாதம் பயனர்:இராஜேஸ்வரன் என்பவர் தமிழ் படுத்தியுள்ள (Population) என்ற ஆங்கிலேய விக்கிக்கான தமிழ் தொகுப்பு ஒன்று மக்கள் தொகை, என்றும் இன்னொன்று மக்கள்தொகை என்றும் இரண்டு விதமாக விக்கிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இன்றை நீக்கிவிடலாமே!--Muthuppandy pandian (பேச்சு) 06:16, 11 சூலை 2014 (UTC)Reply

முத்துப்பாண்டி, உங்கள் கேள்விகளை பக்கத்தின் இறுதியில் கேளுங்கள். மக்கள்தொகை என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரை, கூகுள் மொழிபெயர்ப்பில் உருவானது. எனவே, அதை நீக்கியிருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:21, 11 சூலை 2014 (UTC)Reply

மணி கிருஷ்ணசுவாமி

தொகு

இந்தக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன். தயவு செய்து இந்த கட்டுரைக்கும் தமிழ் கட்டுரையில் இணைப்பு தரவும். இதனை நான் செய்ய முடியுமா? ஆமெனில், எவ்வாறு? நன்றி. வணக்கம் - Uksharma3 (பேச்சு) 12:08, 10 சவரி 2014 (UTC)

it can be done by all. I will send a PPT file to you to explain the method. Regards Selvasivagurunathan.
அருமை! மிக அருமை!! உங்கள் ppt கோப்பு மிக மிக விளக்கமாக உள்ளது. உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவழித்து இந்தக் கோப்பை ஆக்கியுள்ளீர்கள். தமிழ் விக்கிக்கு நீங்கள் ஒரு அரிய சொத்து என்று சொன்னால் மிகையாகாது. என் உளமார்ந்த நன்றி, நண்பரே. - Uksharma3 (பேச்சு) 12:47, 11 சனவரி 2014 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
For taking your time and skill to help others Uksharma3 (பேச்சு) 12:52, 11 சனவரி 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஐயா, தங்களின் பதக்கத்திற்கு எனது உளமார்ந்த நன்றிகள்!

  • நான் புதிய கட்டுரைகள் எழுதுவதைவிட, ஆர்வமுள்ள நல்ல படைப்பாளிகளுக்கு என்னால் இயன்ற சிறுசிறு உதவிகளை செய்ய பெரிதும் விரும்புகிறேன். தமிழ் மொழிக்கும், பொது அறிவுக்களஞ்சியத்திற்கும் என்னால் இயன்ற அர்ப்பணிப்பினை செய்ய விழைகிறேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:33, 11 சனவரி 2014 (UTC)   விருப்பம் --மணியன் (பேச்சு) 15:59, 11 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:26, 11 சனவரி 2014 (UTC)Reply

பத்ம பூசன் பகுப்புகள்

தொகு

பத்ம பூச'ன் என விருது பற்றிய கட்டுரைக்கு பெயர் தரப்பட்டுள்ளது. ஆனால் பகுப்பில் பத்ம பூசண் விருது பெற்றோர் என உள்ளது. இன்னொன்று பத்ம பூசன் விருது பெற்ற தமிழர்கள் என உள்ளது. இவற்றை விட எழுதப்படாதவை என மேலும் இரண்டு பகுப்புகள் பத்ம பூஷண் விருது பெற்றோர் எனவும் பத்ம பூஷண் விருது பெற்ற தமிழர் எனவும் உள்ளன.
அத்துடன் ஏனைய விருது பகுப்புகளில் (சங்கீத கலாநிதி) விருது
பெற்றவர்கள்
என இருக்கிற போது, பூசண் விருது மட்டும் விருது பெற்றோர் என உள்ளது. பெற்றவர்கள் என எழுதுவதே சரியானது என்பது என் எண்ணம். - அன்புடன், Uksharma3 (பேச்சு) 17:17, 11 சனவரி 2014 (UTC)Reply

இந்தக் குழப்பங்களை முன்பு ஒருமுறை அவதானித்தேன். கொஞ்சம் நாட்கள் அவகாசம் கொடுங்கள்... இயன்ற அளவிற்கு பொருத்தமானவற்றை செய்கிறேன் (optimisation); பணி முடிந்ததும் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:27, 11 சனவரி 2014 (UTC)Reply

நன்றி. பத்மபூசண் விருது பெற்றவர்கள் பட்டியல் ஆங்கில விக்கியில் இருக்கிறது. அதை தமிழாக்கம் செய்யலாமென நினைத்தேன். எவ்வாறு தலைப்பு கொடுப்பது என த(ம)யக்கமாக இருக்கிறது. இன்று ஒரு பயனர் பி. ராஜம் ஐயர் கட்டுரையில் நான் கொடுத்திருந்த ஆங்கில விக்கி இணைப்பை நீக்கிவிட்டு ஒரு வணிக வலைத்தளத்துக்கு (அது தமிழில் இருப்பதால் என நினைக்கிறேன்) இணைப்பு கொடுத்திருக்கிறார். அந்தப் பக்கம் திறக்கும்போதே ஒரு pop up விளம்பரம் முன்வந்து நிற்கிறது. தமிழில் விக்கி பக்கம் இருந்திருந்தால் அதனை கொடுக்கலாம். நன்றி. வணக்கம். - Uksharma3 (பேச்சு) 11:45, 13 சனவரி 2014 (UTC)Reply

ஆங்கில விக்கிக் கட்டுரை மேற்கோளாகத் தரப்பட்டிருந்ததை நீக்கியது நான்தான். காரணம்:Wikipedia articles may not be used as tertiary sources in other Wikipedia articles, but are sometimes used as primary sources in articles about Wikipedia itself. ஆங்கில விக்கிக் கட்டுரையில் தரப்பட்டிருந்த மேற்கோள் இணைப்புகள் இயங்கவில்லை. அதனால் ஒன் இண்டியா-இதழில் வந்த செய்தியை மேற்கோளாக இணைத்தேன். தமிழ் விக்கிக்குள் இருக்கும் கட்டுரைகளையும் மேற்கோளாகத் தரக்கூடாது. பத்மபூஷண் விருதுகள் பட்டியல் குறித்த இந்திய அரசுதளப் பக்கத்தின் இணையமுகவரி இணைக்கப்படுதல் சிறப்பானது.--Booradleyp1 (பேச்சு) 13:18, 13 சனவரி 2014 (UTC)Reply
விளக்கத்திற்கு நன்றி Booradleyp1. ஆங்கில விக்கி பட்டியல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்திய அரசு தளத்தில் சம்பந்தப்பட்ட பக்கங்கள் தற்போது இல்லை என்பதை நானும் கவனித்தேன். அதனால் தான் விக்கிப் பக்கத்தையே மேற்கோளாகக் கொடுத்தேன். கூகிளில் தேடியவரை எந்த ஒரு அரசு தளத்திலும் விபரம் இல்லை. கூகிளில் விக்கி ஆங்கில பக்கங்களைத் தான் காட்டுகிறார்கள். மற்றபடி ஒவ்வொரு வருடத்துக்கான விபரம் வேறு வேற் தளங்களில் வெளிவந்துள்ளன. - Uksharma3 (பேச்சு) 16:24, 13 சனவரி 2014 (UTC)Reply

பொங்கல் வாழ்த்து

தொகு

தமிழர் திருநாளாம் இப்பொங்கல் நன்நாளில் தங்கள் தன்னலமற்ற தொண்டு தொடர இறைவன் ஆசியுடன் நல்வாழ்த்துகள் - Uksharma3 (பேச்சு) 02:03, 14 சனவரி 2014 (UTC)   விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:24, 14 சனவரி 2014 (UTC)Reply

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! உங்களைப் போன்ற அறிஞர்களின் நல்லாசியுடன் தமிழ் விக்கி வளர்ந்து அனைவருக்கும் பயன் தரட்டும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:06, 14 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம்--Yokishivam (பேச்சு) 09
43, 14 சனவரி 2014 (UTC)
  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:40, 14 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:05, 14 சனவரி 2014 (UTC)Reply
  விருப்பம்--[[ |திரைகடல் ஓடித் திரவியம் தேடு]] யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:25, 17 சனவரி 2014 (UTC)Reply

நன்றி

தொகு

தங்களின் கருத்தைப் புரிந்து கொண்டேன். இனிமேல் கட்டுரை எழுதும் போது உங்களின் கருத்தையும் கவனத்தில் கொள்கிறேன். மிக்க நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 04:05, 17 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:38, 17 சனவரி 2014 (UTC)Reply

புதிய பகுப்புகள்

தொகு

சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள், சங்கீத சூடாமணி விருது பெற்றவர்கள் என இரண்டு புதிய பகுப்புகளை உருவாக்குவது நல்லதென நினைக்கிறேன்.
சங்கீத கலாசிகாமணி விருது கட்டுரை எழுதி, அந்த விருதைப் பெற்றவர்களின் பக்கங்களிலும் அதனைச் சேர்த்து விட்டேன். பகுப்பை உருவாக்கி hot cat மூலம் அந்தந்தப் பக்கங்களில் சேர்க்க முடியுமா? இல்லாவிட்டாலும், பகுப்பை உருவாக்கினால் நான் ஒவ்வொன்றாக பக்கங்களில் சேர்த்து விடுகிறேன்.
சங்கீத சூடாமணி விருது கட்டுரையும் எழுத எண்ணியுள்ளேன். விருது பெற்றவர்களின் பக்கங்களில் அதனைச் சேர்க்கும்போது பகுப்பு இருந்தால் அதனையும் சேர்த்துவிடலாம். - Uksharma3 (பேச்சு) 11:20, 17 சனவரி 2014 (UTC)Reply

பகுப்பு உருவாக்குவது குறித்த உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி. நான் வானொலி ஆர்வலர் என்ற பகுப்பை உருவாக்கினேன். நான் ஒரு வானொலி ஆர்வலர் என்பதாலும் வேறு சில வானொலி ஆர்வலர்கள் பற்றி எழுத உத்தேசித்துள்ளதாலும் இந்தப் பகுப்பை உருவாக்கினேன். எனது usr பக்கத்தில் அந்த பகுப்பை சேர்த்தபோது "கட்டுரை பகுப்புகள் பயனர் பக்கங்களுக்குப் பொருந்தாது" எனக் கூறி kanags அந்தப் பகுப்பையே நீக்கிவிட்டார். பயனர் வானொலி ஆர்வலர் என ஒரு பகுப்பை தொடங்கி என் பக்கத்தை அந்தப் பகுப்பில் சேர்த்திருக்கிறார். இதற்காக வானொலி ஆர்வலர் என்ற பகுப்பை நீக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை, அதை நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்தைத் தவிர. - Uksharma3 (பேச்சு) 05:47, 18 சனவரி 2014 (UTC)Reply

கவனத்திற்கு...

தொகு

இதனைக் கவனிக்கவும்.

கவனத்தில் கொள்ளப்பட்டு உரியன செய்யப்பட்டது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:48, 18 சனவரி 2014 (UTC)Reply

தங்களுக்கு சில தகவல் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன் - Uksharma3 (பேச்சு) 03:07, 21 சனவரி 2014 (UTC)Reply

ஐயா, இன்று பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 22 சனவரி 2014 (UTC)Reply


தயவு செய்து இந்த இணைய பக்கத்தைப் பாருங்கள். எனக்குப் புரியவில்லை. கலைமாமணி விருது பற்றி எழுதப்பட்டுள்ளது. பயன்படுமா தெரியவில்லை. - Uksharma3 (பேச்சு) 17:39, 24 சனவரி 2014 (UTC)Reply

தமிழ் தட்டச்சு

தொகு

ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:11, 24 சனவரி 2014 (UTC)Reply

கட்டுரை இணைப்பில் ஒரு உதவி தேவை

தொகு

கே. வி. நாராயணசாமி கட்டுரை மலையாளத்தில் இருந்தது. (எனக்கு மலையாளம் தெரியாது ஆனால் பெயரை ஆங்கிலத்தில் எழுதி தேடினேன்.) அதனை தமிழ் கட்டுரையுடன் இணைத்தேன். பின்னர் ஆங்கிலத்திலும் இருப்பதைக் கண்டு அதனையும் இணைக்க முயன்றேன். ஆனால் ஆங்கிலக் கட்டுரையும் தமிழ் கட்டுரையும் முன்னரே இணைக்கப் பட்டிருந்தன. அதனால் மலையாளக் கட்டுரையை (കെ.വി. നാരായണസ്വാമി) அதனுடன் இணைக்க முயன்றேன். ஆனால் ஏற்கெனவே தமிழும் மலையாளமும் இணைக்கப் பட்டுவிட்ட படியால் அந்த இணைப்பை நீக்க வேண்டுமென அறிவுறுத்தல் வந்தது. அந்த இணைப்பை நீக்க கோரிக்கை விடுத்தேன். அக்கோரிக்கைக்கு ஒருவர் பதில் பின்வருமாறு அனுப்பியுள்ளார்.

Hallo Uksharma3,

For merging items, you may want to use the merge.js gadget from help page about merging. It has an option "Request deletion for extra items on RfD" to automatically place a request to delete the empytied page. This way of nominating makes it a lot easier for the admins to process the requests. இது எனக்குப் புரியவில்லை. உங்களால் முடிந்தால் மலையாளக் கட்டுரையை ஆங்கில, தமிழ் கட்டுரைகளோடு இணைத்து விடுகிறீர்களா? நன்றி, வணக்கம். - Uksharma3 (பேச்சு) 01:48, 31 சனவரி 2014 (UTC)Reply

ஐயா, இன்று இரவு பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு)

விண்மீன் ஊடு பருப்பொருள்

தொகு

இந்தக் கட்டுரை ஏற்கனவே இருக்கிறது. எனவே நீக்கிவிடுங்கள். நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 06:10, 3 பெப்ரவரி 2014 (UTC)

நன்றி

தொகு

--G.Kiruthikan (பேச்சு) 15:32, 7 பெப்ரவரி 2014 (UTC)

கருவி

தொகு

கருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன் இங்கு வருக. கருத்துக்களை இடவும்--aho;- பேச்சு 08:13, 15 பெப்ரவரி 2014 (UTC)

மன்னிக்கவும்

தொகு

நான் பல நாள்களாக விக்கிப்பீடியாவுக்கு வரவில்லை (வர இயலவில்லை) ஆகவே நீங்கள் சனவரி 27 அன்று விடுத்திருந்த விண்ணப்பத்தை (பத்மபூசன்) இன்றுதான் பார்த்தேன். --செல்வா (பேச்சு) 21:10, 15 பெப்ரவரி 2014 (UTC)

உங்கள் பார்வைக்கு

தொகு
மா. செல்வசிவகுருநாதன் நீங்கள் கூறிய தவறுகளை திருத்திக் கொள்கிறேன், மேலும் வராமலும் பார்த்துக் கொள்கிறேன். நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 08:44, 19 பெப்ரவரி 2014 (UTC)

உதவி

தொகு

ஜார்வா மற்றும் ஜாரவா பழங்குடியினர் கட்டுரைகளில் ஒன்றிணைப்பு தொடுப்பிணைப்பினை இணைத்திருந்தேன். இரண்டாவது கட்டுரையைத் தொடங்கிய பயனர் கிருஷ்ணமூர்த்தி, கிட்டத்தட்ட முதல் கட்டுரைகளில் இருந்த அதிகப்படியான விவரங்களை இரண்டாவதில் சேர்த்துவிட்டு கட்டுரைகளை இணைத்துவிடும்படி எனக்கு மின்னஞ்சல் அனுப்பினார். நான் என்னால் இயலாது, நிர்வாகிகள் மட்டுமே செய்ய முடியும் என்று பதிலளித்தேன். இப்பொழுது ஜார்வா கட்டுரையின் உள்ளடக்கங்களை அவர் நீக்கியிருக்கிறார். அதனை மீளமை செய்து இரு கட்டுரைகளின் வரலாறும் காக்கப்படும் வகையில் அவற்றை ஒன்றிணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:44, 8 மார்ச் 2014 (UTC)

நன்றி

தொகு

நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி. எழுதுவதை விட மற்றவர்களை ஊக்குவிக்கும் உங்களைப் போன்றவர்கள் அதில் இருப்பது தான் விக்கிக்கு பெருமளவு நன்மை செய்யும். வாழ்க, வளர்க உங்கள் தொண்டு. - Uksharma3 (பேச்சு) 00:58, 14 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:32, 14 மார்ச் 2014 (UTC) நன்றி--ஹிபாயத்துல்லா (பேச்சு) 13:47, 4 சூன் 2014 (UTC)Reply

மைசூர் டி. சௌடையா

தொகு

இந்த கட்டுரைக்கு ஆங்கிலக்கட்டுரையுடன் இணைப்பு கொடுத்துள்ளேன். ஆங்கில கட்டுரையிலுள்ள படிமத்தை இத்தமிழ் கட்டுரையில் பயன்படுத்த முடியுமா? - Uksharma3 (பேச்சு) 16:24, 15 மார்ச் 2014 (UTC)

இந்தப் படிமம் தி இந்து நாளிதழின் காப்புரிமை உடையது. எனவே விக்கி காமன்சில் ஏற்ற முடியாது. அங்கு கட்டற்ற (எவ்வித காப்புரிமைகளும் அற்ற) படிமங்கள் தான் தரவேற்ற முடியும். அங்குள்ள படங்கள் தான் அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களிலும் தானாகவே தோன்றும். ஒவ்வொரு விக்கியிலும் தனிப்பட்ட நியாயமான பயன்பாடுடைய படிமங்களை தகுந்த காரணங்களை குறிப்பிட்டு தரவேற்றலாம். அதன்படி ஆங்கில விக்கியிலிருந்து எனது கணினிக்கு இறக்கி பிறகு தமிழ் விக்கியில் இங்கு தரவேற்றியுள்ளேன். அங்கு நான் தந்திருக்கும் நியாயமான பயன்பாட்டுக் காரணங்களை கவனிக்கவும். இது உங்கள் வருங்காலத் தொகுப்புகளுக்கு பயனாகும் என்பதால் இவ்வளவு விரிவாக எழுதியுள்ளேன். மற்றபடி நீங்கள் வேண்டியபடி இந்த கட்டுரைக்கு ஆ.வி படிமத்தை சேர்த்தாயிற்று ;) --மணியன் (பேச்சு) 04:10, 16 மார்ச் 2014 (UTC)

தங்கள் விளக்கத்துக்கும் படிமத்தைச் சேர்த்ததற்கும் மிக்க நன்றி. - Uksharma3 (பேச்சு) 03:27, 17 மார்ச் 2014 (UTC)

மங்கல இசை மன்னர்கள்

தொகு

இந்த புத்தகம் எங்கேயாவது கிடைக்குமா என முயற்சி செய்து பார்க்கிறீர்களா? நன்றி. வணக்கம். - அன்புடன் Uksharma3 (பேச்சு) 13:23, 20 மார்ச் 2014 (UTC)

கண்டிப்பாக நாளை முயற்சி செய்கிறேன்; வணக்கத்துடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:46, 20 மார்ச் 2014 (UTC)

முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு

தொகு


வணக்கம் நண்பரே, தாங்கள் தொடங்கி மேம்படுத்திய வலைவாசல் கருநாடக இசை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து சிறந்த வலைவாசல்களை மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:19, 31 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 17:22, 31 மார்ச் 2014 (UTC)
விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி ஆதவன் அவர்களே, தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் தங்களுக்குப் பெருங்கடன் பெற்றுள்ளேன். :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:27, 31 மார்ச் 2014 (UTC)
ஜெகதீஸ்வரன் அறிவிப்பிற்கு நன்றி; இற்றை செய்யப்படாத சில பகுதிகளை வலைவாசலில் நீக்கியுள்ளேன். தற்போது தேர்தல் குறித்த கட்டுரைகளில் கவனம் செலுத்திவருவதால், இப்பகுதிகளை இற்றை செய்ய நேரமில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:52, 1 ஏப்ரல் 2014 (UTC)
  விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:24, 1 ஏப்ரல் 2014 (UTC)
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:50, 1 ஏப்ரல் 2014 (UTC)

Wikimedians Speak

தொகு
      
 

An initiative to bring the voices of Indian Wikimedians to the world
Hi Selvasivagurunathan m,

I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.

Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:38, 9 ஏப்ரல் 2014 (UTC)

மேற்கோள்கள் இல்லாத, என்னால் துவக்கப்பட்ட கட்டுரைகள்...

தொகு

என்னால் துவக்கப்பட்ட கட்டுரைகள், மொத்தத்தில் சுமார் நூறு. 25, 25 ஆக எடுத்து மேற்கோள்களை சேர்க்க திட்டமிட்டுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:32, 15 ஏப்ரல் 2014 (UTC)

  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:52, 15 ஏப்ரல் 2014 (UTC)

முதற்பக்கம் இற்றைப்படுத்தல்

தொகு

இங்கு அடுத்த முதற்பக்கக் கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். நான் நிர்வாகியில்லை ஆதலால் வார்ப்புரு:Mainpage v2 இல் இற்றைப் படுத்தி உதவவும்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:06, 5 மே 2014 (UTC)Reply

உதவி

தொகு

தலைப்பை எப்படி மாற்றுவது. உதவி தேவை. Raghukraman (பேச்சு) 09:16, 5 மே 2014 (UTC)Reply

விளக்கம் தேவை

தொகு

திருமயம் (சட்டமன்றத் தொகுதி) பக்கத்தில் நான் சேர்த்திருந்த இவற்றையும் காண்க பகுதியை நீக்கியிருக்கிறீர்கள்; ஆனால் திருமயம் தொடர்பான பிற பக்கங்களில் இடப்பட்ட இதே பகுதியை நீக்கவில்லை. இப்பக்கத்தில் மட்டும் அதனை நீக்கியதற்கான காரணத்தை நான் அறிந்துகொள்ளலாமா? --அரிஅரவேலன் (பேச்சு) 10:22, 5 மே 2014 (UTC)Reply

  • திருமயம் (சட்டமன்றத் தொகுதி) எனும் கட்டுரையில் திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில், திருமயம் மலைக்கோட்டை, திருமயம் வட்டம் போன்றவற்றை இவற்றையும் காண்க எனக் குறிப்பிடுவது எனக்கு வித்தியாசமாக பட்டது; பொருத்தமில்லாமல் தோன்றியது. எனவே நீக்கினேன். தவறாக நினைக்கவேண்டாம்.
  • மற்ற கட்டுரைகளை நான் கவனிக்கவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:58, 5 மே 2014 (UTC)Reply
 

வணக்கம் Selvasivagurunathan m! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:48, 17 மே 2014 (UTC)Reply

தொகுத்துக் கொண்டிருக்கிறேன்

தொகு

பாகிஸ்தான் விமான நிலையத் தாக்குதல் கட்டுரையை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். வார்ப்புருவை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். --ஆர்.பாலா (பேச்சு) 05:52, 9 சூன் 2014 (UTC)Reply

தொகுத்தலில் உதவுவதில் தவறில்லை என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:54, 9 சூன் 2014 (UTC)Reply
எனது தொகுப்பு உங்களை பாதிப்பதாகக் கருதினால் எனது தொகுப்பினை நீக்கிவிடுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:57, 9 சூன் 2014 (UTC)Reply
நீக்கல் வார்ப்புரு இடுதலோ, சான்றில்லை போன்ற வார்ப்புருக்களை போடுதலே தவறென நம்புகிறேன்; எழுத்துப்பிழையினைக்கூட திருத்தலாம். நான் ஒரு பகுப்பினை மட்டுமே சேர்த்தேன். எனினும் எனது பேச்சுப்பக்கத்தில் உங்களின் தனிப்பட்ட அறிவிப்புக்கு மரியாதை தந்து இக்கட்டுரையில் எனது தொகுப்பினை நிறுத்திக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:10, 9 சூன் 2014 (UTC)Reply
எனது தொகுத்தல் நிறைவடையவில்லை. இடையே நீங்கள் தொகுக்கும் போது என்னால் எனது அடுத்த பதிவைச் சேமிக்க இயலவில்லை. எனவே மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டியதாயிற்று. :) அதைச் சுட்டிக்காட்டவே தங்களுக்கு செய்தி அனுபினேன். இத்தகைய இடர்களைத் தவிர்க்கவே தொகுத்துக் கொண்டிருக்கிறேன் எனும் வார்ப்புருவை இணைத்திருந்தேன். தவறாக எண்ண வேண்டாம். 2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல் கட்டுரையை முடித்துவிட்டேன். மேலதிக விவரங்களைச் சேருங்கள். நன்றி :) --ஆர்.பாலா (பேச்சு) 06:26, 9 சூன் 2014 (UTC)Reply
என்னால் உங்களுக்கு நேரிட்ட சிரமத்திற்கு வருந்துகிறேன். இனிமேல் கவனமாக இருப்பேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:36, 9 சூன் 2014 (UTC)Reply
@ஆர்.பாலா, தொகு முரண் ஏற்பட்டால் உங்கள் உரை கீழுள்ள இன்னொரு பெட்டியில் இருக்கும். மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. :)--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 09:47, 11 சூலை 2014 (UTC)Reply
தொகுத்தலில் முரண்பாடு ஏற்பட்டால், நீங்கள் எழுதியதை மீட்க இன்னொரு வசதியும் உண்டு. உங்கள் உலாவியில் back அழுத்தினால், முந்தைய பக்கம் (தொகுத்த பக்கம்) கிடைக்கும். அதில் உள்ள உரையை நகலெடுத்து வைத்துக் கொள்ளலாம். பின்னர், இன்னொருவரின் தொகுப்புடன் தேவையான இடங்களில் சேர்த்து விடலாம். :) --தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:31, 11 சூலை 2014 (UTC)Reply

மீண்டும் வந்தேன்

தொகு

வணக்கம் தலைவரே! கணினியில் சில பிரச்சனைகள் இருந்தமையால் பல மாதங்களாக இங்கு வர முடியவில்லை. எது எப்படியோ, மறுபடியும் வந்துட்டேன். :) நம்ம கட்சியில் மீண்டும் என்னை சேர்த்துக்குங்க. விரைவில் செயலாளர் பதவி தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன். :) :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:10, 17 சூன் 2014 (UTC)Reply

மீண்டும் வருக...! தங்களின் கட்டுரைகளை எல்லாம் ஒருமுறை அலசி, உரியன செய்யுங்கள்; முன்னுதாரணமாக விளங்குவோம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:23, 17 சூன் 2014 (UTC)Reply
வரவேற்புக்கு நன்றி தலைவரே! நேரம் கிடைக்கையில் ஏற்ற பணிகளை மேற்கொள்வோம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:02, 17 சூன் 2014 (UTC)Reply

விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் பட்டியல்" பக்கத்தின் விளக்கம்

தொகு

வணக்கம் திரு. செல்வசிவகுருநாதன் அவர்களே.

என்னால் திருத்தி எழுதப்பட்ட வீரச்சாவடைந்த என்கின்ற வசனத்தை நீங்கள் கொல்லப்பட்ட என்று மாற்றியுள்ளீர்கள், ஆனால் அந்த மாவீரர் பட்டியலில் இருப்பவர்கள் கரும்புலிகள். அவர்கள் கொல்லப்படவில்லை, அவர்களுடைய மரணம் வீரச்சாவு என்று குறிப்பிடப்பட வேண்டும். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். Baabuji (பேச்சு) 15:23, 7 சூலை 2014 (UTC) நன்றிReply

வணக்கம் Baabuji! விக்கிப்பீடியா என்பது ஒரு கலைக்களஞ்சியம். இங்கு கட்டுரைகளில் எவர் குறித்தும் மிகைப்படுத்தியோ, உயர்வுபடுத்தியோ எழுதுவது உகந்ததன்று; விக்கிப்பீடியா கொள்கைகளின் அடிப்படையில் எழுதுவதும், திருத்தங்களை மேற்கொள்ளுதலுமே எனது பணியும், விருப்பமும்! பண்பான முறையில் இந்த விசயத்தை என்னிடம் அணுகியதற்கு எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:07, 8 சூலை 2014 (UTC)Reply
தற்கொலை படையினர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்வதை கொலை என்று குறிப்பிட முடியாது. மரணமடைந்த, இறந்த போன்ற பதங்களினால் அவ்விடங்களில் குறிப்பிடுதல் தகும்.--AntonTalk 05:03, 8 சூலை 2014 (UTC)Reply

மரணம், இறப்பு என்பது இயற்கை எய்துதலை குறிப்பது. தற்கொலைப் படை தாக்குதலில் தன்னையே மாய்த்துக்கொண்டவர்கள் எனலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 8 சூலை 2014 (UTC)Reply

காற்பந்துப் பதக்கம்

தொகு
  காற்பந்துப் பதக்கம்

வணக்கம் , Selvasivagurunathan m/தொகுப்பு 4 2014 உலகக்கோப்பை காற்பந்து கட்டுரையை இற்றைப்படுத்திச் செம்மைப் படுத்தியமைக்காக இப்பதக்கத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.-- mohamed ijazz(பேச்சு) 09:31, 14 சூலை 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மொஹம்மத் இஜாஸ்... இந்தப் பதக்கத்தைப் பெறும் தகுதி எனக்கில்லை - ஓரிரு திருத்தங்கள் மட்டுமே செய்ததாக நினைவு. எனினும் தங்களின் ஊக்குவிக்கும் குணத்திற்கு எனது நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:12, 14 சூலை 2014 (UTC)Reply

முதற்பக்கம் இற்றைப்படுத்தல்

தொகு

முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப் படவேண்டும். நேற்றுத் தவறுதலாக இற்றைப்படுத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. புதிய கட்டுரைகள் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 13, 2014 இல் உள்ளன. வார்ப்புரு:Mainpagev2 இல் மாற்றி உதவுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 03:09, 15 சூலை 2014 (UTC)Reply

 Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 15 சூலை 2014 (UTC)Reply

தலைப்பு நகர்த்தல்

தொகு

சிவகுருநாதன், நதிம் கார்டிமர் கட்டுரையின் தலைப்பை ‘நாடின் கார்டிமர்’ என வழிமாற்று இன்றி நகர்த்தி உதவவேண்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:07, 16 சூலை 2014 (UTC)Reply

 Y ஆயிற்று--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:15, 16 சூலை 2014 (UTC)Reply

முதற்பக்கம் இற்றைப்படுத்தல்

தொகு

முதற்பக்கக் கட்டுரை இற்றைப்படுத்தப் படவேண்டும். புதிய கட்டுரைகள் விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 20, 2014 இல் உள்ளன. வார்ப்புரு:Mainpage v2 இல் மாற்றி உதவுங்கள்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:18, 21 சூலை 2014 (UTC)Reply

கவனிக்கவும்

தொகு

வணக்கம் மா. செல்வசிவகுருநாதன் ஐயா புதிய பயனர் ஒருவர் பயனர்:Zubair ,பயனர்:Mohamedtet ,பயனர்:Zubair11 மற்றும் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த 180.215.103.149 ,/116.202.172.165 /180.215.115.128 / 180.215.99.122 கணக்குகளை வைத்து விக்கியில் பங்களிப்பதை அவதானிக்க முடிகிறது இவர் என்ன செய்ய முனைகிறார் ??????  -- mohamed ijazz(பேச்சு) 11:47, 17 ஆகத்து 2014 (UTC)Reply

தகவலுக்காக...

தொகு

தகவலுக்கு நன்றி Raghukraman (பேச்சு) 06:28, 24 ஆகத்து 2014 (UTC)Reply

விடை

தொகு

பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தமிழ் விக்கியில் உங்களின் பங்களிப்பிற்காக அகம் மகிழ்ந்து இப்பதக்கத்தை தங்களுக்கு வழங்குகிறேன்.--இரா.பாலா (பேச்சு) 07:10, 27 ஆகத்து 2014 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம் -- mohamed ijazz(பேச்சு) 07:29, 27 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம் --மணியன் (பேச்சு) 07:41, 27 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம்--Kanags \உரையாடுக 07:53, 27 ஆகத்து 2014 (UTC)Reply
  விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:59, 27 ஆகத்து 2014 (UTC)Reply

@இரா.பாலா, Mohamed ijazz, மணியன், Kanags, ஸ்ரீகர்சன்... உங்களின் அனைத்துவகை உதவிகளுக்கும் எனது

 

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:32, 29 ஆகத்து 2014 (UTC)Reply

பிந்தைய   விருப்பம் தங்கள் விக்கிப்பணி தொடர என் பாராட்டுக்கள் உரித்தாகுக!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:52, 13 செப்டம்பர் 2014 (UTC)

விக்கிச்செய்திகள்

தொகு

சரிபார்க்கப்படாத பக்கம் என சில செய்திகள் உள்ளது கவனிக்கவும்--குறும்பன் (பேச்சு) 21:35, 10 செப்டம்பர் 2014 (UTC)

@குறும்பன், இந்த வாரத்திலிருந்து சனி - ஞாயிறுகளில் கவனிக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:55, 11 செப்டம்பர் 2014 (UTC)
Return to the user page of "Selvasivagurunathan m/தொகுப்பு 4".