பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி
பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி அல்லது பொருளாதாரத் தனியுரிமை வலயம் (ஆங்கிலத்தில் exclusive economic zone) என்பது ஓர் நாடு, கடலை ஆய்வு செய்வது குறித்தும், காற்று மற்றும் நீரிலிருந்து வடிக்கப்படும் மின்சாரம் உள்ளிட்ட பல கடல் சார் வளங்களைப் பயன்படுத்துவது குறித்தும் பெறும் சிறப்பு உரிமைகளை வரையறுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் பரிந்துரைக்கும், கடல் மண்டலம்/பகுதி ஆகும். [1] இப்பகுதி கரையோர அடிக்கோட்டிலிருந்து வெளியே 200 கடல் மைல்கள் வரை நீளும். பெருவழக்கில் இப்பகுதி கண்டத் திட்டையும் உள்ளடக்கியதாகவும் வழங்கப்படுகின்றபோதும் இது பிராந்தியக் கடலையோ, 200 கடல் மைல்களுக்கப்பாலுள்ள கண்டத் திட்டையோ உள்ளடக்கியதன்று. பிராந்தியக் கடல் பகுதியில் ஒரு நாட்டிற்கு முழு இறைமை உண்டு, ஆனால் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியிலோ கடற்பரப்பிற்குக் கீழுள்ளவற்றிற்கான இறைமை உரிமை மட்டுமே கடற்கரையோர நாட்டிற்கு வழங்கப்படும் . இப்பகுதியின் கடற்பரப்பு பன்னாட்டு நீர்ப்பரப்பாகவே கருதப்படும்.[2]
விளக்கம்
தொகுபொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரத் தனியுரிமை பகுதி, கரையோர அடிக்கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் (370 கி.மீ) வரை நீண்டிருக்கும். இரு நாடுகளின் தனியுரிமை பகுதிகள் மேற்குவிந்து கவிந்திருக்கும் தருவாயில் இவ்விதி விலக்கப்படும்; அதாவது இரு நாட்டின் கரையோர அடிக்கோடுகளும் 400 கடல் மைல்களுக்கும்(740 கி.மீ) குறைவான இடைவெளியில் அமைந்திருக்கும் சூழல். மேற்குவிப்பு நிகழும்போது வழக்கிற்கான கடல் எல்லை, தொடர்புடைய இரு நாடுகளையும் பொருத்து அமைக்கப்படும்[3] பொதுவாக, மேற்குவிப்புப் பகுதியுள் அமையும் எந்த இடமும் அதன் அருகாமையில் உள்ள நாட்டையே சாரும்.[4]
பரப்பு வாரியான தரவரிசை
தொகுஅன்டார்டிகா தவிர்த்த, இறைமை தாங்கிய நாடுகளுள் அடங்கிய சார்பு மண்டலங்கள் (குடியேற்றமில்லா பகுதிகள் உட்பட), பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி + மொத்த உள்நாட்டு பரப்பு (மொ.உ.ப.) என்றறியப்படும் பொருளாதார தனியுரிமை கூடுதல் பகுதியையும் இப்பட்டியல் உள்ளடக்கியது.
நாடு | பொ.த.ப கி.மீ2[5] | திட்டு கி.மீ2 | பொ.த.ப+மொ.உ.ப. கி.மீ2 |
---|---|---|---|
ஐக்கிய அமெரிக்கா | 11,351,000 | 2,193,526 | 21,814,306 |
பிரான்சு | 11,035,000 | 389,422 | 11,655,724 |
ஆத்திரேலியா | 8,505,348 | 2,194,008 | 16,197,464 |
உருசியா | 7,566,673 | 3,817,843 | 24,664,915 |
ஐக்கிய இராச்சியம் | 6,805,586 | 722,891 | 7,048,486 |
இந்தோனேசியா | 6,159,032 | 2,039,381 | 8,063,601 |
கனடா | 5,599,077 | 2,644,795 | 15,607,077 |
சப்பான் | 4,479,388 | 454,976 | 4,857,318 |
நியூசிலாந்து | 4,083,744 | 277,610 | 4,352,424 |
சீனா | 2,287,969 | 831,340 | 13,520,487 |
சிலி | 3,681,989 | 252,947 | 4,431,381 |
பிரேசில் | 3,660,955 | 774,563 | 12,175,832 |
கிரிபட்டி | 3,441,810 | 7,523 | 3,442,536 |
மெக்சிக்கோ | 3,269,386 | 419,102 | 5,141,968 |
மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் | 2,996,419 | 19,403 | 2,997,121 |
டென்மார்க் | 2,551,238 | 495,657 | 4,761,811 |
பப்புவா நியூ கினி | 2,402,288 | 191,256 | 2,865,128 |
நோர்வே | 2,385,178 | 434,020 | 2,770,404 |
இந்தியா | 2,305,143 | 402,996 | 5,592,406 |
மார்சல் தீவுகள் | 1,990,530 | 18,411 | 1,990,711 |
போர்த்துகல் | 1,727,408 | 92,090 | 3,969,498 |
பிலிப்பீன்சு | 1,590,780 | 272,921 | 1,890,780 |
சொலமன் தீவுகள் | 1,589,477 | 36,282 | 1,618,373 |
தென்னாப்பிரிக்கா | 1,535,538 | 156,337 | 2,756,575 |
சீசெல்சு | 1,336,559 | 39,063 | 1,337,014 |
மொரிசியசு | 1,284,997 | 29,061 | 1,287,037 |
பிஜி | 1,282,978 | 47,705 | 1,301,250 |
மடகாசுகர் | 1,225,259 | 101,505 | 1,812,300 |
அர்கெந்தீனா | 1,159,063 | 856,346 | 3,939,463 |
எக்குவடோர் | 1,077,231 | 41,034 | 1,333,600 |
எசுப்பானியா | 1,039,233 | 77,920 | 1,545,225 |
மாலைத்தீவுகள் | 923,322 | 34,538 | 923,622 |
பெரு | 906,454 | 82,000 | 2,191,670 |
சோமாலியா | 825,052 | 55,895 | 1,462,709 |
கொலம்பியா | 808,158 | 53,691 | 1,949,906 |
கேப் வர்டி | 800,561 | 5,591 | 804,594 |
ஐசுலாந்து | 751,345 | 108,015 | 854,345 |
துவாலு | 749,790 | 3,575 | 749,816 |
வனுவாட்டு | 663,251 | 11,483 | 675,440 |
தொங்கா | 659,558 | 8,517 | 660,305 |
பஹமாஸ் | 654,715 | 106,323 | 668,658 |
பலாவு | 603,978 | 2,837 | 604,437 |
மொசாம்பிக் | 578,986 | 94,212 | 1,380,576 |
மொரோக்கோ | 575,230 | 115,157 | 1,287,780 |
கோஸ்ட்டா ரிக்கா | 574,725 | 19,585 | 625,825 |
நமீபியா | 564,748 | 86,698 | 1,388,864 |
யேமன் | 552,669 | 59,229 | 1,080,637 |
இத்தாலி | 541,915 | 116,834 | 843,251 |
ஓமான் | 533,180 | 59,071 | 842,680 |
மியான்மர் | 532,775 | 220,332 | 1,209,353 |
இலங்கை | 532,619 | 32,453 | 598,229 |
அங்கோலா | 518,433 | 48,092 | 1,765,133 |
கிரேக்க நாடு | 505,572 | 81,451 | 637,529 |
தென் கொரியா | 475,469 | 292,522 | 575,469 |
வெனிசுவேலா | 471,507 | 98,500 | 1,387,950 |
வியட்நாம் | 417,663 | 365,198 | 748,875 |
அயர்லாந்து | 410,310 | 139,935 | 480,583 |
லிபியா | 351,589 | 64,763 | 2,111,129 |
கியூபா | 350,751 | 61,525 | 460,637 |
பனாமா | 335,646 | 53,404 | 411,163 |
மலேசியா | 334,671 | 323,412 | 665,474 |
நவூரு | 308,480 | 41 | 308,501 |
எக்குவடோரியல் கினி | 303,509 | 7,820 | 331,560 |
தாய்லாந்து | 299,397 | 230,063 | 812,517 |
எகிப்து | 263,451 | 61,591 | 1,265,451 |
துருக்கி | 261,654 | 56,093 | 1,045,216 |
ஜமேக்கா | 258,137 | 9,802 | 269,128 |
டொமினிக்கன் குடியரசு | 255,898 | 10,738 | 304,569 |
லைபீரியா | 249,734 | 17,715 | 361,103 |
ஒண்டுராசு | 249,542 | 68,718 | 362,034 |
தன்சானியா | 241,888 | 25,611 | 1,186,975 |
பாக்கித்தான் | 235,999 | 51,383 | 1,117,911 |
கானா | 235,349 | 22,502 | 473,888 |
சவூதி அரேபியா | 228,633 | 107,249 | 2,378,323 |
நைஜீரியா | 217,313 | 42,285 | 1,141,081 |
சியேரா லியோனி | 215,611 | 28,625 | 287,351 |
காபொன் | 202,790 | 35,020 | 470,458 |
பார்படோசு | 186,898 | 426 | 187,328 |
ஐவரி கோஸ்ட் | 176,254 | 10,175 | 498,717 |
ஈரான் | 168,718 | 118,693 | 1,797,468 |
மூரித்தானியா | 165,338 | 31,662 | 1,190,858 |
கொமொரோசு | 163,752 | 1,526 | 165,987 |
சுவீடன் | 160,885 | 154,604 | 602,255 |
செனிகல் | 158,861 | 23,092 | 355,583 |
நெதர்லாந்து | 154,011 | 77,246 | 192,345 |
உக்ரைன் | 147,318 | 79,142 | 750,818 |
உருகுவை | 142,166 | 75,327 | 318,381 |
கயானா | 137,765 | 50,578 | 352,734 |
வட கொரியா | 132,826 | 54,566 | 253,364 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 131,397 | 1,902 | 132,361 |
சமோவா | 127,950 | 2,087 | 130,781 |
சுரிநாம் | 127,772 | 53,631 | 291,592 |
எயிட்டி | 126,760 | 6,683 | 154,510 |
அல்ஜீரியா | 126,353 | 9,985 | 2,508,094 |
நிக்கராகுவா | 123,881 | 70,874 | 254,254 |
கினி-பிசாவு | 123,725 | 39,339 | 159,850 |
கென்யா | 116,942 | 11,073 | 697,309 |
குவாத்தமாலா | 114,170 | 14,422 | 223,059 |
அன்டிகுவா பர்புடா | 110,089 | 4,128 | 110,531 |
தூனிசியா | 101,857 | 67,126 | 265,467 |
சைப்பிரசு | 98,707 | 4,042 | 107,958 |
எல் சல்வடோர | 90,962 | 16,852 | 112,003 |
பின்லாந்து | 87,171 | 85,109 | 425,590 |
வங்காளதேசம் | 86,392 | 66,438 | 230,390 |
சீனக் குடியரசு | 83,231 | 43,016 | 119,419 |
எரித்திரியா | 77,728 | 61,817 | 195,328 |
டிரினிடாட் மற்றும் டொபாகோ | 74,199 | 25,284 | 79,329 |
கிழக்குத் திமோர் | 70,326 | 25,648 | 85,200 |
சூடான் | 68,148 | 19,827 | 1,954,216 |
கம்போடியா | 62,515 | 62,515 | 243,550 |
கினியா | 59,426 | 44,755 | 305,283 |
குரோவாசியா | 59,032 | 50,277 | 115,626 |
ஐக்கிய அரபு அமீரகம் | 58,218 | 57,474 | 141,818 |
செருமனி | 57,485 | 57,485 | 414,599 |
மால்ட்டா | 54,823 | 5,301 | 55,139 |
எசுத்தோனியா | 36,992 | 36,992 | 82,219 |
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் | 36,302 | 1,561 | 36,691 |
பெலீசு | 35,351 | 13,178 | 58,317 |
பல்கேரியா | 34,307 | 10,426 | 145,186 |
பெனின் | 33,221 | 2,721 | 145,843 |
கத்தார் | 31,590 | 31,590 | 43,176 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 31,017 | 7,982 | 373,017 |
போலந்து | 29,797 | 29,797 | 342,482 |
டொமினிக்கா | 28,985 | 659 | 29,736 |
லாத்வியா | 28,452 | 27,772 | 93,011 |
கிரெனடா | 27,426 | 2,237 | 27,770 |
இசுரேல் | 26,352 | 3,745 | 48,424 |
உருமேனியா | 23,627 | 19,303 | 262,018 |
கம்பியா | 23,112 | 5,581 | 34,407 |
சியார்சியா | 21,946 | 3,243 | 91,646 |
லெபனான் | 19,516 | 1,067 | 29,968 |
கமரூன் | 16,547 | 11,420 | 491,989 |
செயிண்ட். லூசியா | 15,617 | 544 | 16,156 |
அல்பேனியா | 13,691 | 6,979 | 42,439 |
டோகோ | 12,045 | 1,265 | 68,830 |
குவைத் | 11,026 | 11,026 | 28,844 |
சிரியா | 10,503 | 1,085 | 195,683 |
பகுரைன் | 10,225 | 10,225 | 10,975 |
புரூணை | 10,090 | 8,509 | 15,855 |
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் | 9,974 | 653 | 10,235 |
மொண்டெனேகுரோ | 7,745 | 3,896 | 21,557 |
சீபூத்தீ | 7,459 | 3,187 | 30,659 |
லித்துவேனியா | 7,031 | 7,031 | 72,331 |
பெல்ஜியம் | 3,447 | 3,447 | 33,975 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 1,606 | 1,593 | 2,346,464 |
சிங்கப்பூர் | 1,067 | 1,067 | 1,772 |
ஈராக் | 771 | 771 | 439,088 |
மொனாகோ | 288 | 2 | 290 |
பலத்தீன் | 256 | 256 | 6,276 |
சுலோவீனியா | 220 | 220 | 20,493 |
யோர்தான் | 166 | 59 | 89,508 |
பொசுனியா எர்செகோவினா | 50 | 50 | 51,259 |
கசக்கஸ்தான் | 2,724,900 | ||
மங்கோலியா | 1,564,100 | ||
சாட் | 1,284,000 | ||
நைஜர் | 1,267,000 | ||
மாலி | 1,240,192 | ||
எதியோப்பியா | 1,104,300 | ||
பொலிவியா | 1,098,581 | ||
சாம்பியா | 752,612 | ||
ஆப்கானித்தான் | 652,090 | ||
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 622,984 | ||
தெற்கு சூடான் | 619,745 | ||
போட்சுவானா | 582,000 | ||
துருக்மெனிஸ்தான் | 488,100 | ||
உஸ்பெகிஸ்தான் | 447,400 | ||
பரகுவை | 406,752 | ||
சிம்பாப்வே | 390,757 | ||
புர்க்கினா பாசோ | 274,222 | ||
உகாண்டா | 241,038 | ||
லாவோஸ் | 236,800 | ||
பெலருஸ் | 207,600 | ||
கிர்கிசுத்தான் | 199,951 | ||
நேபாளம் | 147,181 | ||
தஜிகிஸ்தான் | 143,100 | ||
மலாவி | 118,484 | ||
அங்கேரி | 93,028 | ||
அசர்பைஜான் | 86,600 | ||
ஆஸ்திரியா | 83,871 | ||
செக் குடியரசு | 78,867 | ||
செர்பியா | 77,474 | ||
சிலவாக்கியா | 49,035 | ||
சுவிட்சர்லாந்து | 41,284 | ||
பூட்டான் | 38,394 | ||
மல்தோவா | 33,846 | ||
லெசோத்தோ | 30,355 | ||
ஆர்மீனியா | 29,743 | ||
புருண்டி | 27,834 | ||
ருவாண்டா | 26,338 | ||
மாக்கடோனியக் குடியரசு | 25,713 | ||
சுவாசிலாந்து | 17,364 | ||
கொசோவோ[a] | 10,887 | ||
லக்சம்பர்க் | 2,586 | ||
அந்தோரா | 468 | ||
லீக்கின்ஸ்டைன் | 160 | ||
சான் மரீனோ | 61 | ||
வத்திக்கான் நகர் | 0.44 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரை 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள். பார்க்கப்பட்ட நாள் 2011-08-28.
- ↑ "(ஆங்கிலம்) பகுதி 5 - பொருளாதாரத் தனியுரிமைப் பகுதி, கட்டுரைகள் 55, 56". கடல் சட்டம். ஐக்கிய நாடுகள்.
- ↑ வில்லியம் ஆர். சுலோமேன்சன், 2006. (ஆங்கிலம்)பன்னாட்டு சட்டம் குறித்த அடிப்படை கண்ணோட்டம், 5-ஆவது பதிப்பு, பெல்மான்ட், கலிபோர்னியா: தாம்சன்-வாட்ஸ்வர்த், 294.
- ↑ ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்.
- ↑ "Seaaroundus.org". Archived from the original on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2015-05-08.
வெளி இணைப்புகள்
தொகு- (ஆங்கிலம்) ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் - பகுதி 5
- (ஆங்கிலம்) நமைச் சூழ்ந்த கடல் திட்டம் - அனைத்து நாடுகளின் பொருளாதாரத் தனியுரிமைப் பகுதியைக் காண்க பரணிடப்பட்டது 2011-03-22 at the வந்தவழி இயந்திரம் (குறிப்பு: இத்தளம் உள்நாட்டுக் கடலையும் பொ.த.ப-வையும் வேறுபடுத்துவதில்லை, ஆகையால் பொ.த.ப பகுதிகளை மிகைப்படுத்திக் காட்டும்.)
- (ஆங்கிலம்) ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மண்டலம், 1977-இல் இருந்து பரணிடப்பட்டது 2003-01-12 at the வந்தவழி இயந்திரம்
- புவியியல் தகவல் முறைமை தரவு: VLIZ.be
- (ஆங்கிலம்) ஆசிய பொருளாதார தனியுரிமை பகுதிகளில் அயல்நாட்டு இராணுவ நடவடிக்கைகள்: மூளும் சச்சரவுகள்? மார்க் ஜே. வேலன்சியா (மே 2011)
- பொருளாதார தனியுரிமை பகுதி மேலாண்மை