ரோஜா கம்பைன்ஸ்
ரோஜா கம்பைன்ஸ் (Roja Combines) என்பது காஜா மைதீன் தலைமையிலான ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1990-களில் தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது. ஆனால் தமிழ் திரைப்படங்கள் எண்ணியல் (டிஜிட்டல்) திரைப்பட தயாரிப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து நிறுவனம் போராட்டத்தைச் சந்தித்தது.
வகை | திரைப்பட் தயாரிப்பு திரைப்பட விநியோகம் |
---|---|
நிறுவுகை | 1996 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முதன்மை நபர்கள் | காஜா மைதீன் வி. ஞானவேல் ஜெயப்பிரகாசு |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | திரைப்படம் (தமிழ்) |
வரலாறு
தொகுரோஜா காம்பெயின்ஸ் 1990-களில் காஜா மைதீன், வி. ஞானவேல், ஜெயப்பிரகாசு என மூன்று தனித்தனி தயாரிப்பாளர்களால் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டது. 2000-களின் முற்பகுதியில், ஞானவேலும் ஜெயப்பிரகாசும் ஜிஜே கம்பைன்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கினர்.[1][2]
இளமைப் பருவத்தைக் கருப்பொருளாகக் கொண்ட துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தின் ஆச்சரியமான வெற்றியைத் தொடர்ந்து, ரோஜா காம்பெயின்ஸ் 2002 அக்டோபரில் தனுஷ், செரின் ஆகியோரை முன்னணி நடிகர்களாகக் கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் தயாரிக்க ஒப்பந்தம் மேற்கொண்டது. பூபதி பாண்டியனின் என்னை மட்டும் காதல் பண்ணு என்ற தலைப்பில் ஒரு படம் அதன் பிறகு தொடங்கப்பட்டது. ஆனால் பின்னர் தனுஷ் மற்ற படங்களில் பரபரப்பாக இயங்கிவந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதியில், தனுஷ் மற்றும் ஸ்ரீதேவி விஜயகுமாருடன் தேவதையைக் கண்டேன் (2005) என்ற பெயரில் படம் மீண்டும் தொடங்கப்பட்டது.[3]
2003 ஆம் ஆண்டில், ரோஜா கம்பைன்ஸ் தமிழ் மெகா ஸ்டார் நைட் 2003 என்ற பெயரில் நேரடி கலை நிகழ்ச்சியை ஐக்கிய அரபு அமீரகத்தில் தயாரித்தது.[4] அஜித் குமார் நடிப்பில் இந்த நிறுவனம் தயாரித்த ஜனா (2004) மிகப்பெரிய தோல்வியானது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு எட்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.[5] 2005 ஆம் ஆண்டில், காஜா மைதீன் திவால்நிலையை அடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். மேலும் கமல்ஹாசன் நடித்த கௌதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு (2006) திரைப்படத் தயாரிப்பில் இருந்து நிறுவனம் வெளியேறியது. பின்னர் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தை வெளியிடும் பணியில் ஈடுபட்டது.[6][7]
2010 ஆம் ஆண்டில், சசிகுமாரின் ஈசன் படத்தில் நடிக்க காஜா மைதீன் அணுகப்பட்டார். ஆனால் இறுதியில் அவர் இடம்பெறவில்லை.[8] 2010-களின் நடுப்பகுதியில், தமிழ்த் திரையுலகில் தயாரிப்பு செலவுகள் அதிகரித்தவண்ணம் இருந்ததால் நிறுவனம் பெரும்பாலும் செயலற்ற நிலையில் உள்ளது.[9]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகாஜா மைதீன் சுந்தர காண்டம் (1992) படத்தில் நடித்த நடிகை சிந்துஜாவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு, சிந்துஜா இசுலாத்திற்கு மாறி, தனது பெயரை கே. ஆயிஷா என்று மாற்றிக்கொண்டார். ரோஜா காம்பெயின்சின் பல படங்களில் இணைத் தயாரிப்பாளராக ஆனார்.
2005 யூலையில், காஜா மைதீன் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றார். தயாரித்த படங்களின் தோல்விகள், பெரும் பொருட் செலவில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட நட்சத்திரக் கலைவிழாக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.[10] அவர் உயிர் பிழைத்தார், என்றாலும் திவாலானார், பெரிய படங்களில் முதலீடு செய்வதை நிறுத்தினார்.[11]
திரைப்படவியல்
தொகுபடம் | ஆண்டு | மொழி | இயக்குநர் | நடிப்பு | சுருக்கம் | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|
கோபாலா கோபாலா | 1996 | தமிழ் | பாண்டியராஜன் | பாண்டியராஜன், குஷ்பு | கோபால் தனது அண்டை வீட்டினரின் மனைவிகளுடன் நட்பாக இருப்பதால் அவர்களின் கணவர்களின் கோபத்துக்கு ஆளாகிறார். கோபாலுக்கு உஷாவுடன் மணமானபிறகு அவர்கள் நிம்மதியடைகின்றனர். ஆனால் அவருக்கு ஏறனவே ஒரு ஒருமுறை திருமணம் ஆனதை அறிந்த உஷா அவரை விட்டு பிரிந்து செல்கிறார் | |
பொற்காலம் | 1997 | தமிழ் | சேரன் | முரளி, மீனா, சங்கவி | முரளி ஒரு குயவர். அவருக்கு ஒரு ஊமை தங்கை உள்ளார். அவர் அவளை ஒழுக்கமான மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார், ஆனால் எல்லோரும் அவளை நிராகரிக்கின்றனர். சோகமான நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, முரளி ஊனமுற்ற ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்கிறார் | |
பூந்தோட்டம் | 1998 | தமிழ் | மு. களஞ்சியம் | முரளி, தேவயானி, ரகுவரன் | ஒரு பெண் தனது சித்தியிடமிருந்து அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார், அவர் அவளை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறார். இதற்கிடையில், அவளது வட்டீல் வாடகைதாதர் அவர்களை காப்பாற்ற முன்வருகிறார். | |
ஆனந்த பூங்காற்றே | 1999 | தமிழ் | ராஜ்கபூர் | அஜித் குமார், கார்த்திக், மீனா, மாளவிகா | ஜீவா கைம்பெண்ணான மீனாட்சியை காதலிக்கிறார். அவள் சமூக விதிகளுக்கு அஞ்சி அவனை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமற்று உள்ளாள். | |
பாட்டாளி | 1999 | தமிழ் | கே. எஸ். ரவிக்குமார் | சரத்குமார், தேவயானி, ரம்யா கிருஷ்ணன் | பெரிய சொத்துக்கு ஒரே வாரிசாக இருந்தும், சண்முகம் தனது அத்தையால் வேலைக்காரனாக நடத்துகிறாள். பின்னர், அவள் அவனது செல்வத்தை அபகரிப்பதற்காக தன் மகளை திருமணம் செய்து கொள்ளும்படி அவனை வற்புறுத்துகிறாள். | |
சந்தித்த வேளை | 2000 | தமிழ் | இரவிச்சந்திரன் | கார்த்திக், ரோஜா, கௌசல்யா | ஒரு பயணத்தின்போது, ஆடலரசு தன்னைப் போன்ற தோற்றம் கொண்டவரைச் சந்திக்கிறான். அவரின் ஒரு கோரிக்கையை நிறைவேற்றுவதாக ஆடலரசு உறுதியளிக்காற்ர. ஒரு சூழலில் அவரைப் போன்ற தோற்றம் கொண்டவர் இறந்துவிடுகிறார். சில பணிகளைச் செய்ய ஆடலரசு அவரது குடும்பத்தில் நுழைகிறார். | [12] |
பெண்ணின் மனதைத் தொட்டு | 2000 | தமிழ் | எழில் | பிரபுதேவா, சரத்குமார், ஜெயசீல் | சுனில் ஒரு புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். சுனிதாவுக்கு இதயப் பிரச்சனை உள்ள ஒரு குழந்தை உள்ளது. அவள் சுனிலைச் சந்திக்கும் போது, அவளுக்கு அவன் பல வருடங்களுக்கு முன்பு துரோகம் செய்ததாகவும், அதனால் தன் வாழ்வு அவலநிலைக்கு ஆளானதாகவும் அவன்மீது குற்றம் சாட்டுகிறாள். | |
வாஞ்சிநாதன் | 2001 | தமிழ் | சாஜி கைலாஸ் | விசயகாந்து, சாக்ஷி சிவானந்த், ரம்யா கிருஷ்ணன் | நேர்மையான காவலரான வாஞ்சிநாதன், இதுவரை நீதித்துறையால் தண்டிக்கப்படாத குற்றவாளிகளை ஒழிக்க, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துகிறான். | |
அள்ளித்தந்த வானம் | 2001 | தமிழ் | ஸ்ரீதர் பிரசாத் | பிரபுதேவா, முரளி, லைலா | ஒரு தொழிலதிபர் பொறுப்பற்ற தன் மகன் சத்யாவை தன் உதவியின்றி மூன்று மாதங்கள் வாழ சவால் விடுகிறார். வீட்டை விட்டு வெளியே சத்யா சந்திக்கும் நிகழ்வுகள் அவனை ஒரு பொறுப்புள்ள மனிதனாக மாற்றுகிறது. | [13] |
சார்லி சாப்ளின் | 2002 | தமிழ் | சக்தி சிதம்பரம் | பிரபு, பிரபுதேவா, அபிராமி, காயத்திரி ரகுராம் | ராமகிருஷ்ணன் ஒரு விபச்சாரியுடன் சிக்கும்போது, அவளைத் தன் மனைவிக்கு திருவின் காதலி என்று அறிமுகப்படுத்துகிறான். இதனால் திருவின் வாழ்வில் சில சிக்கல்கள் நேர்கின்றன. | |
சமஸ்தானம் | 2002 | தமிழ் | ராஜ்கபூர் | சரத்குமார், சுரேஷ் கோபி, தேவயானி | திருவும் சூர்யாவும் பல தடைகளைத் தாண்டிவந்த நண்பர்கள். ஆனால், அவர்களின் மனைவிகளாலும், அவர்களின் எதிகளாலும் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படுகிறது. | |
ஜனா | 2004 | தமிழ் | சாஜி கைலாஸ் | அஜித் குமார், சினேகா, சித்திக் | வீரபாண்டியின் அட்டூழியங்களுக்கு எதிராக, தனது கிராம மக்களுக்கு ஆதரவாக ஜனா நிற்கிறார். வீரபாண்டியின் மகள் மணிமேகலை, ஜனாவை காதலிக்கிறாள், ஆனால் மும்பையில் அவனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி அறிந்ததும் திகைக்கிறாள். | |
தேவதையைக் கண்டேன் | 2005 | தமிழ் | பூபதி பாண்டியன் | தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், குணால் | டீ விற்பவரான பாபு, பணக்கார பெண்ணான உமாவை காதலிக்கிறார், அவளும் அவனது நேர்மைக்காக அவனை காதலிக்கிறாள். இருப்பினும், பாதுகாப்பான எதிர்கால வாழ்வு வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அவள் பாபுவிடமிருந்து விலகுகிறாள். தன்னை ஏமாற்றியதற்காக உமா மீது பாபு வழக்குத் தொடர்கிறார். | |
பேரரசு | 2006 | தமிழ் | உதயன் | விசயகாந்து, டெபினா பொன்னர்ஜி, பிரகாஷ் ராஜ் | நீதிபதி ஒருவர் காணாமல் போனதை விசாரிக்க சிபிஐ அதிகாரி காசி பணிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னணியில் ஒரு அமைச்சரும் மூன்று போலீஸ்காரர்களும் இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Showbitz – Double delight". 16 December 2011. https://www.thehindu.com/features/cinema/showbitz-double-delight/article2720603.ece.
- ↑ "On the road to recognition". 26 September 2010. https://www.thehindu.com/features/cinema/On-the-road-to-recognition/article16048607.ece.
- ↑ "New Launches in Tamil". 1 July 2003. Archived from the original on 1 July 2003.
- ↑ Reporter, A. Staff. "Tamil film stars poised to perform live". Khaleej Times.
- ↑ "www.ajithkumar.fr.fm". ajithkumar.free.fr.
- ↑ "'Vetayadu Vilayadu' orphaned!". சிஃபி. Archived from the original on 2019-07-27.
- ↑ "Confusion confounded!". சிஃபி. Archived from the original on 2019-07-27.
- ↑ "Sasi - Tamil Movie News - Vikram-Sasi project - only producers, no hero - Sasi | Vikram | Samuthrakani - Behindwoods.com". www.behindwoods.com.
- ↑ Correspondent, Special. "Madurai Anbu: Tamil Film Industry's Biggest Shylock". The Lede.
- ↑ "Producer attempts suicide!". சிஃபி. Archived from the original on 2017-11-05.
- ↑ "Tamil movies : The Making of Vettaiyadu Vilaiyadu".
- ↑ "Film Review: Santhitha Vaelai". The Hindu. 21 April 2000. https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/film-review-santhitha-vaelai/article28012643.ece.
- ↑ "A medley of emotions". The Hindu. 2 March 2001. https://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/tp-others/a-medley-of-emotions/article27919466.ece.