வணக்கம், அறிவியல் துறையில் தமிழர்கள் என்ற உங்கள் கட்டுரையை ஆரம்பித்தமைக்கு நன்றி. இதனை வளர்த்தெடுக்க உதவுங்கள். ஏற்கனவே புகழ்பெற்ற தமிழ் ஆய்வாளர்கள் பற்றிய பட்டியலுடன் தொடங்கலாம். நன்றி.--Kanags \உரையாடுக 22:44, 24 சனவரி 2011 (UTC)Reply

சொற்களை சரிபார்த்தல்

தொகு

நந்தகுமார்! உயிரியல் தொடர்பான கட்டுரைகளில் ஆர்வமுள்ள உங்களை வரவேற்கின்றேன். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல் பக்கத்தையும் பார்த்து, அங்கே உங்கள் பெயரையும் இணைத்துக் கொள்ளுங்களேன்.
ஆரம்பத்தில் உயிரியல் தொடர்பான சொற்கள் சரியாகத் தெரியாததாலேயே கட்டுரைகளை எழுதத் தயங்கினேன். தற்போது அதற்கு பலரும் உதவுவதால் நானும் சில கட்டுரைகளை எழுதுகின்றேன். நீங்களும் உயிரியல் திட்டத்தில் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஆலமரத்தடியில் சொற்களை சரிபார்க்க உதவி தேவை என்ற தலைப்பை முதலில் கவனிக்கத் தவறிவிட்டேன். தற்போது அங்கே சில விடயங்களைக் குறிப்பிட்டுள்ளேன். பாருங்கள். நீங்கள் அறிய விரும்பும் சொற்களுக்குரிய ஆங்கிலக் கட்டுரைகளுக்கு தமிழில் இணைப்புள்ளதா எனச் சரிபார்த்தீர்கள் என்றால், பின்னர் அது தொடர்பான சொற்கள்பற்றி கலந்துரையாடலாம். நீங்கள் கேட்டிருந்த சொற்கள் சிலவற்றுக்கு கட்டுரைகள் உள்ளன. அந்தச் சொற்கள் ஏற்புடையனவா எனப் பாருங்கள். இல்லையெனில் மீண்டும் கலந்துரையாடலாம். அத்துடன் ஆலமரத்தடியில், இந்த தலைப்பையும் பாருங்கள். --கலை 21:44, 19 ஏப்ரல் 2011 (UTC)

நன்றிகள்

தொகு
எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:02, 17 சூன் 2011 (UTC)Reply

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
இங்கும் விக்சனரியிலும் மருத்துவ / உயிர்வேதியல் துறை விசயங்களில் அரும் பங்காற்றும் உங்களுக்கு இப்பதக்கத்தை (கொஞ்சம் தாமதமாக  :-) அளிக்கிறேன் சோடாபாட்டில்உரையாடுக 10:11, 19 சூன் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி --Nan 10:15, 19 சூன் 2011 (UTC)Reply

உதவி தேவை

தொகு

உயிர் வேதியியல் பகுப்பில் குளுடாமிக் அமிலம் இல்லாததால் அப்பக்கத்தினை உருவாக்கியிருந்தேன். ஆனால், குளுடாமிக் காடி என்ற பக்கம் ஏற்கனவே உள்ளதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். எனவே, நான் உருவாக்கிய குளுடாமிக் அமிலம் பக்கத்தை உடனடியாக நீக்கிவிடவும். குளுடாமிக் காடி பக்கத்தை உயிர் வேதியியல் பகுப்பில் இடவும். --Nan 08:48, 26 சூன் 2011 (UTC)Reply

இரண்டையும் இணைத்து, வழிமாற்றி விட்டுள்ளேன். பகுப்பினையும் இட்டுள்ளேன். இப்படி ஒரு நிலை மீண்டும் ஏற்பட்டால் {{mergeto|குளுட்டாமிக் காடி}} என்று புதிய கட்டுரையில் வார்ப்புரு இட்டு விடுங்கள். ஒன்றிணைக்கப்படவேண்டிய கட்டுரைகள் பட்டியலில் இணைந்து விடும். நிருவாகிகள் பின் இவற்றை ஒன்றிணைத்து விடுவோம்.--சோடாபாட்டில்உரையாடுக 09:09, 26 சூன் 2011 (UTC)Reply

நன்றி. ஆனால், தற்போது பழைய பக்கச்செய்திகளை (குளுட்டாமிக் காடி) புதியப்பக்கத்தில் காணவில்லையே? --Nan 09:39, 26 சூன் 2011 (UTC)Reply

இறுதிப் படியைச் செய்யாமல் விட்டு விட்டேன் :-). இப்போது செய்து விட்டேன். --சோடாபாட்டில்உரையாடுக 09:44, 26 சூன் 2011 (UTC)Reply

நன்றி--Nan 09:45, 26 சூன் 2011 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் - நன்றி

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:50, 28 சூன் 2011 (UTC)Reply

மகிழ்ச்சி

தொகு

வணக்கம். தங்கள் பங்களிப்புகள், ஆய்வுப் பின்புலத்தை இன்று தான் கண்டேன். மிக மகிழ்ந்தேன். தங்கள் பங்களிப்புகள் தொடர்ந்திட வேண்டுகிறேன். --இரவி 18:50, 17 சூலை 2011 (UTC)Reply

நன்றி. கண்டிப்பாகத் தொடர்ந்திடுவேன். --Nan 07:40, 18 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi Nan,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு




பூஞ்சை நஞ்சு கட்டுரை

தொகு

வணக்கம்! நீங்கள் எழுதிய பூஞ்சை நஞ்சு கட்டுரை முதற்பக்கத்தில் வந்துள்ளது. கட்டுரை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள். நான் கட்டுரையில் ஒரே சொல்லுக்கு பல இடங்களில் இணைப்பு கொடுத்திருந்ததை அகற்றுதல் போன்ற சிறிய திருத்தங்களைச் செய்தேன். அப்போது தமிழ் பெயரையே கட்டுரை முழுவதும் பயன்படுத்தலாமே என்றெண்ணி பூஞ்சை நஞ்சு என்ற சொல்லையே பல இடங்களிலும் மாற்றினேன். பின்னர்தான் தெரிந்தது, Aflatoxin என்பது Mycotoxinகளில் (பூஞ்சை நஞ்சுகளில்) ஒரு வகை மட்டுமே. இங்கே பாருங்கள். எனவே இந்தக் கட்டுரையின் தலைப்பை அஃப்ளாடாக்சின் என்றோ அல்லது வேறு பொருத்தமான தலைப்புக்கோ மாற்றலாமா? மாற்றிய பின்னர், வேண்டுமானால் பூஞ்சை நஞ்சு என்ற தலைப்பில் (Mycotoxin) ஒரு கட்டுரையை எழுதி விடலாம். இது தொடர்பில் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிட்டிருக்கின்றேன். உங்களுக்கும் இதில் சம்மதமிருப்பின் கட்டுரையின் தலைப்பை மாற்றலாம். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி. ----கலை 21:42, 10 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா? அறிவிப்புத் திட்டம்

தொகு




முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் நந்தகுமார்,

தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்தில் காட்சிப் படுத்த விரும்புகிறோம். கீழுள்ள சிவப்பிணைப்பில் தங்களைப் பற்றிய விவரங்களைத் தருமாறு வேண்டிக் கொள்கிறேன். முன்னர் காட்சிப்படுத்தப்பட்ட அறிமுகங்கள் இப்பக்கத்தில் உள்ளன. இவற்றை முன்னுதாரணங்களாகக் கொள்ளலாம்.--சோடாபாட்டில்உரையாடுக 12:07, 4 திசம்பர் 2011 (UTC)Reply


விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நந்தகுமார்

நன்றி சோடாபாட்டில். விரைவில் விவரங்களைக் கொடுக்கிறேன். --Nan 13:48, 4 திசம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளேன். அடுத்த இரு வாரங்கள் அங்கு தோன்றும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:16, 18 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றி சோடாபாட்டில். --Nan 06:20, 18 திசம்பர் 2011 (UTC)Reply

வாழ்த்துக்கள்

தொகு

வணக்கம் நந்தகுமார், உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்--P.M.Puniyameen 15:54, 18 திசம்பர் 2011 (UTC)   விருப்பம் --சூர்யபிரகாசு உரையாடுக... 14:20, 19 திசம்பர் 2011 (UTC)Reply

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி புன்னியாமீன் --Nan 17:23, 18 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் நந்தகுமார், முதற் பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:44, 18 திசம்பர் 2011 (UTC)Reply

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி சஞ்சீவி சிவகுமார் --Nan 12:38, 19 திசம்பர் 2011 (UTC)Reply

உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிக மகிழ்ந்தேன். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகள்--இரவி 14:39, 19 திசம்பர் 2011 (UTC)Reply

இரவியின் வாழ்த்துகளுக்கும், சூர்ய பிரகாசின் விருப்பத்திற்கும் என் நன்றிகள்--Nan 15:00, 19 திசம்பர் 2011 (UTC)Reply

நந்தகுமார், உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:52, 21 திசம்பர் 2011 (UTC)Reply

தங்கள் வாழ்த்துகளுக்கு என் அன்பு கலந்த நன்றிகள் கனக்ஸ்--Nan 12:39, 21 திசம்பர் 2011 (UTC)Reply

தங்கள் அறிமுகம் கண்டு மிக்க மகிழ்வு அடைந்தேன்.. தங்கள் பணி சிறப்படைய வாழ்த்துக்கள்..--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:23, 25 திசம்பர் 2011 (UTC)Reply

தங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் செந்தி--Nan 18:38, 25 திசம்பர் 2011 (UTC)Reply

மலேசியாவிலிருந்து வாழ்த்துகள்

தொகு

வணக்கம் திரு. நந்தகுமார் ,விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய அறிமுகம் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு என்னுடைய இனிய வாழ்த்துக்கள்.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--10:49, 21 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் மலாக்கா முத்துக்கிருஷ்ணன். உங்கள் வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்--Nan 12:38, 21 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் ஐயா. தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன். தங்களின் பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.--Parvathisri 13:08, 21 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் பார்வதிஸ்ரீ. தங்களின் பிரார்த்தனைக்கு என் உள்ளம் கனிந்த நன்றிகள்--Nan 19:10, 21 திசம்பர் 2011 (UTC)Reply

ஒத்தாசைப் பக்கம்

தொகு

விக்கிப்பீடியாவை நீங்கள் தொகுக்கும் போது எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தான உதவியை இங்கு வேண்டலாம். ஆலமரத்தடியைப் பொதுவான உரையாடல்கள், அறிவிப்புகளுக்குப் பயன்படுத்தலாம் நன்றி. --இரவி 03:02, 15 சனவரி 2012 (UTC)Reply

நன்றி. இனி அவ்வண்ணமே செய்கிறேன்--Nan 07:17, 15 சனவரி 2012 (UTC)Reply

உதவமுடியுமா?

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Medicine project என்னும் குறிப்பைப் பார்க்கவும். இது மிகவும் பயனுடைய ஒரு திட்டம் போல் தெரிகின்றது. இதற்கு நீங்கள் இயலும்போது உதவமுடியுமா? நானும் பங்களிக்க ஆவலாக உள்ளேன். இப்பொழுது குறுந்தகடு திட்டம் நடக்கின்றது. இதனோடு இதிலும் இயலுமாறு பங்களிக்க முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 20:58, 24 பெப்ரவரி 2012 (UTC)

கூட்டாக முயற்சி செய்வோம். உறுதியாக இயலும்போது பங்களிக்கிறேன்--Nan 10:21, 25 பெப்ரவரி 2012 (UTC)

மிக்க நன்றி. நானும் என்னால் ஆன உதவிகளைச் செய்ய உள்ளேன் (இயலும்போது இயலுமாறுதான்). --செல்வா 14:47, 25 பெப்ரவரி 2012 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவு

தொகு

தாங்கள் இதயத்திசு இறப்புக்கட்டுரையை விரிவுபடுத்துவதற்கு மிக்க நன்றி, தங்களால் இயலுமாயின் விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் மருத்துவம்/மொழிபெயர்ப்புச் சிறப்புப் பணிப்பிரிவுத் திட்டத்தையும் நோக்க வேண்டுகிறேன். அங்கு தங்கள் பெயரை இட்ட பின்னர், இதயத்திசு இறப்புக்கட்டுரையின் பணி 1 - 7 போன்றவற்றில் தங்கள் பெயரைப் பதியவேண்டி உள்ளது.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 10:11, 6 மார்ச் 2012 (UTC)

நன்றி --Nan (பேச்சு) 06:15, 10 மார்ச் 2012 (UTC)

நன்றி

தொகு

உங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)

நன்றி

தொகு
 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:06, 26 மே 2012 (UTC) +1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:36, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:09, 30 மே 2012 (UTC)Reply

தலைப்பு மாற்றம்

தொகு

[ஐரோப்பிய வாதநோய்க்கெதிரானக் கூட்டமைப்பு]] என்ற தலைப்பு பொருத்தமற்றது என்பதால், அதை வாதநோய்க்கெதிரான ஐரோப்பியக் கூட்டமைப்பு என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். முதல் தலைப்பை நீக்கப் பரிந்துரைத்துள்ளேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:15, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

நன்றி--Nan (பேச்சு) 17:34, 22 செப்டெம்பர் 2012 (UTC)Reply

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:57, 26 திசம்பர் 2012 (UTC)Reply

மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்

தொகு

மலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:24, 12 சனவரி 2013 (UTC)

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:08, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:22, 14 சனவரி 2013 (UTC)Reply

+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:51, 15 சனவரி 2013 (UTC)Reply

இணைய Cochrane Library க்கான அணுக்கம்

தொகு

விக்கித் திட்டம் மருத்துவத்தில் பங்குபற்றும் பயனர் மற்றும் மருத்துவ, அறிவியல், உடல்நல கட்டுரைகளை எழுதுபவர் எனும் நோக்கில் பின்வரும் தகவல் தங்களுக்கு வழங்கப்படுகின்றது: en:Cochrane Library என்பது மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், அண்மைய ஆய்வுகள் அடங்கியுள்ள தரவுத்தளம். இதற்கான சந்தா 300 - 800 $ ஆகும். விக்கிபீடியாவில் மருத்துவத்தில் சிறப்பாகப் பங்களிக்கும் நூறு நபர்களுக்கு இலவசமாக இதன் அணுக்கம் கிடைக்கவுள்ளது. இதில் ஈடுபாடு இருக்குமெனின் தங்களின் நுழைவுப்பதிவை ஆங்கில விக்கிபீடியாவில் இடலாம். ஆலமரத்தடியிலும் இதைப்பற்றிய சிறுகுறிப்பு உள்ளது. en:Wikipedia:COCHRANE சென்றால் விவரங்களை அறிந்து பதியலாம்.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 22:54, 19 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:56, 24 சூன் 2013 (UTC)Reply

கடவுச்சொல்

தொகு

கடவுச் சொல்லை மாற்றி அமைக்க Reset-Password பயன்படுத்தவும்--≈ உழவன் ( கூறுக ) 17:48, 31 சூலை 2013 (UTC)Reply

sysop அணுக்கத்துடன் இதனைச் சரி செய்ய முடியாது. அதிகாரிகளாலும் முடியுமோ தெரியாது. இரவியிடம் கேட்டுப் பாருங்கள். மின்னஞ்சல் முகவரி விக்கியில் பதியப்பட்டிருக்கவில்லையா? மின்னஞ்சல் பதியப்பட்டிருந்தால் இலகுவாக அவரே மேலேயுள்ள இணைப்பில் சென்று மாற்றலாம்.--Kanags \உரையாடுக 21:05, 31 சூலை 2013 (UTC)Reply

மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Nan/தொகுப்பு01!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:28, 3 ஆகத்து 2013 (UTC)Reply

பகுப்பு:எதிர்ப்பியல்

தொகு

பகுப்பு பேச்சு:எதிர்ப்பியல் என்ற பக்கத்தில் உள்ள உரையாடலைப் பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 09:28, 5 ஆகத்து 2013 (UTC)Reply

தற்பொழுது, அதேப் பக்கத்தில் என்னுடையக் கருத்தைக் கூறியுள்ளேன், கவனியுங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 09:52, 5 ஆகத்து 2013 (UTC)Reply
எனது பேச்சுப் பக்கத்தில் உள்ள உங்களது கேள்விக்கான பதிலை அங்கேயே கொடுத்துள்ளேன். சரியாகப் புரியும்படி சொல்லியிருக்கின்றேனா தெரியவில்லை. எனக்கு முன்னர் ஒரு விக்கிப்பீடியர் சொல்லிக் கொடுத்தது எங்கே இருக்கின்றது எனத் தெரியவில்லை :(. மின்னஞ்சலிலா, அல்லது இங்கேயே பேச்சுப் பக்கத்திலா எனத் தெரியவில்லை. தேடிப் பார்த்து கிடைத்தால், அனுப்புகின்றேன்.--கலை (பேச்சு) 10:49, 6 ஆகத்து 2013 (UTC)Reply

கட்டுரைக் வேண்டுதல்

தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)Reply

புதுப்பயனர் வரவேற்பு...

தொகு

வணக்கம்! புதிய பயனர்களை வரவேற்கும் வார்ப்புருவினை இடுவதற்கு ஏதேனும் தானியங்கி வைத்திருக்கிறீர்களா! அண்மைக்காலமாக ஒரு நாளின் 75% வேளைகளில் நீங்களே இப்பணியினை செய்கிறீர்களே?! ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பொறுப்பினை தாமே எடுத்துக் கொண்டு செயல்புரிவதே விக்கிப்பீடியாவின் தனிச் சிறப்பு! தங்களின் செயல்பாட்டிற்கு சிறப்பு நன்றிகள்!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:44, 17 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம் செல்வசிவகுருநாதன். தானியங்கியெல்லாம் எதுவுமில்லை! நம் விக்கிபீடியாவிற்கு வருபவர்களை வரவேற்பதிலும், அடையாளம் காட்டா பயனர்களைப் புதுக் கணக்கு தொடங்க ஊக்குவிப்பதை விரும்புவதாலும் இதைச் செய்து வருகிறேன்--நந்தகுமார் (பேச்சு) 12:31, 17 ஆகத்து 2013 (UTC)Reply
ஆம், நானும் கண்காணித்தேன். அண்மையமாற்றங்கள் இவரது வரவேற்பால் நிறைந்து இருந்தது. வாழ்த்துக்கள் நந்தகுமார் அவர்களே-- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:23, 18 ஆகத்து 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  சிறந்த வழிகாட்டுனர் பதக்கம்
பல பயனர்களை (கடந்த மாதங்களில் கிட்டத்தட்ட எல்லா பயனர்களுக்கும்) வரவேற்று , அப்பணியை தங்கள் பணியாகக் கொண்டு செயற்படுகிறீர்கள். அதற்காக இப்பதக்கம் நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 13:33, 18 ஆகத்து 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி--நந்தகுமார் (பேச்சு) 17:55, 18 ஆகத்து 2013 (UTC)Reply

உங்களின் விவரம் பார்த்தேன். அதிசயித்தேன். நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 05:53, 2 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி முத்துப்பாண்டி பாண்டியன்--நந்தகுமார் (பேச்சு) 06:51, 2 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் 1000 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், Nan/தொகுப்பு01!

 

நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

--இரவி (பேச்சு) 08:50, 2 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி இரவி--நந்தகுமார் (பேச்சு) 08:39, 4 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
தொடர்ந்து புதிய பயனர்களுக்கு வரவேற்பு செய்திகளை இட்டுவரும் உங்களைக் கண்டு வியக்கிறேன். அவ்வப்பொழுது நான் சில புதிய வருகைகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. ஆனால், நீங்கள் எந்நேரமாயினும் எத்தனை புதியவர்கள் வந்தாலும் அனைவருக்கும் வரவேற்புச் செய்தி இடுவது கண்டு மகிழ்வு. சென்ற வாரம் ஒரு பள்ளியில் பயிற்சிப் பட்டறையில் அனைத்து மாணவர்களும் புகுபதிந்தவுடன் நீங்கள் வரவேற்றது தெரிந்ததும் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி கண்டு நான் பெருமையடைந்தேன். வரவேற்பதின் முக்கியத்துவத்தையும் உணர்ந்தேன். தொடர்க உங்கள் செம்பணி! :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:35, 4 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--Anton (பேச்சு) 08:29, 4 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி சூர்யபிரகாஷ், ஆன்டன்--நந்தகுமார் (பேச்சு) 08:37, 4 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்

தொகு

புதுப்பயனர் வரவேற்பில் நீங்கள் முனைப்பாக ஈடுபடுவது கண்டு மகிழ்ச்சி. இது தொடர்பாக இன்னொரு வேண்டுகோள். https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions&contribs=newbie பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியாவில் புதிதாக இணைந்து பங்களிப்பவர்களைக் காணலாம். அவர்களின் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் சில வார்ப்புருக்களை இட வேண்டும். ஏனெனில் ஒன்றுமே வாங்காதவரை விட ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களிடம் இன்னும் விற்கலாம் என்ற சந்தைப்படுத்தல் விதி தான்.

முதல் பயனுள்ள தொகுப்பு செய்பவருக்கு - {{முதல் தொகுப்பு}}

எடுத்தவுடனேயே பயனுள்ள கட்டுரை எழுதுபவருக்கு - {{முதல் கட்டுரையும் தொகுப்பும்}}

தொடர்ந்து பல காலமாக நல்ல பங்களிப்புகளைத் தருபவருக்கு - {{தொடர் பங்களிப்பாளர்}} . இவர் அவ்வளவாக பயனர் சமூகத்துக்கு அறிமுகமில்லாதவராக இருத்தல் நலம். நன்கு அறிமுகமானவர்களுக்கு இட வேண்டாம். இதாவது, இவர்கள் நன்கு ஊக்குவிக்கப்பட்டால் விக்கிப்பீடியர்:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் இடம்பெற வல்லவர்கள்.

இந்த வார்ப்புருக்களுக்கான இணைப்புகள் தொகுப்புப் பெட்டிக்குக் கீழேயே உள்ளன.

கடந்த பல நாட்களாகப் புதிதாக பங்களிப்பவர்களுக்கு இவ்வார்ப்புருக்களை இடாமல் தேங்கி நிற்கிறது. வார்ப்புருக்களை இடும் போது அப்படியே அவர்கள் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான குறிப்புகளையும் தரலாம். மேலும், இது போன்ற முயற்சிகளில் பங்கெடுக்க விக்கித்திட்டம்:100 வாருங்கள்.--இரவி (பேச்சு) 21:12, 21 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி

தொகு

உங்களது பாரட்டிற்கு மிக்க நன்றி. நாம் அனைவரும் இணைந்து தமிழ் விக்கிபீடியாவை முதல் 10 இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி செய்வோம். கட்டுரைகளைத் தொகுப்பதில் எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்படும் போது உங்களின் உதவியைக் கோருகிறேன். உங்களின் அன்பிற்கும் , ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.ஆர்.பாலா (பேச்சு) 02:37, 23 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி

தொகு

நந்தகுமார் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். என்னால் முடிந்த அளவு தமிழ் விக்கிக்கு உதவுகிறேன். இது நம் தமிழ் இனத்திற்க்கு நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் சேவை என உள்ளம் மகிழ்கிறேன். அதோடு உங்களின் தொகுப்பு, கட்டுரை நினைத்து பிரமித்தவன் நான். உங்களின் வேலைப்பலுவுக்கு இடையே உங்களிடமிருந்து வந்த வாழ்த்துக்கு மேலும் நன்றிகள். --Muthuppandy pandian (பேச்சு) 06:34, 28 செப்டம்பர் 2013 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம், நந்தகுமார். பத்தாண்டுகளைக் கடந்துள்ள தமிழ் விக்கிப்பீடியா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக இன்னும் பல கைகள் தேவை. தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பம் என்றால் தெரிவியுங்கள். பரிந்துரைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 08:23, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம், இரவி. தமிழ் விக்கி மேலும் சிறப்பாக வளர நிருவாகப் பொறுப்பு ஏற்று, பணிகளைப் பகிர்ந்து கொண்டு செயற்பட விருப்பமே.--நந்தகுமார் (பேச்சு) 11:30, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம் நன்றி நந்தகுமார்! ---செல்வா (பேச்சு) 09:13, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

பட்டையைக் கிளப்பவும் நேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:28, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

செல்வா, தென்காசி சுப்பிரமணியன், உங்கள் செய்திகளுக்கும், அன்பிற்கும் நன்றி--நந்தகுமார் (பேச்சு) 10:53, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம் அண்மைய மாற்றங்களில் புதுப்பயனர்களை தாங்கள் வரவேற்பதை தொடர்ந்து காண்கிறேன். இத்தனை ஈடுபாடுகளோடு விக்கிக்கு வரவேற்பதை கண்டு மகிழ்கிறேன். செங்கை அய்யாவுடன் கூடலின் இறுதியில் பேசும் பொழுது புதுப்பயனர்களை வழிநடத்த தனித்த குழுவொன்று இயங்கினால் நன்றாக இருக்கும் என்பது தெரிந்தது. ஆர்வமுள்ளோர்களுடன் கலந்துரையாடி இதனைப் பற்றி பிறகு பரிசீலிப்போம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:48, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:51, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
நல்ல யோசனை முடிவு செய்துவிட்டு கூறுங்கள். என்னால் முடிந்த பணிகளைச் செய்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 06:57, 3 அக்டோபர் 2013 (UTC)Reply
நன்றி, நந்தகுமார். இன்னும் சில பயனர்களிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். எனவே, அனைவருக்கும் பதில் தர அவகாசம் தந்து வரும் திங்களன்று அனைவரையும் நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 04:51, 4 அக்டோபர் 2013 (UTC)Reply
விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:51, 7 அக்டோபர் 2013 (UTC)Reply
உங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 30 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டு அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 18:08, 15 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர்:பழ.கந்தசாமி...

தொகு

வணக்கம்!
மன்னிக்கவும்... மறக்கவில்லை; எனக்குத் தெரியவில்லை! (கடந்த 2 வருடங்களாக மட்டுமே நான் இங்கிருப்பதால், சிலரை பற்றி கொஞ்சம்கூட அறிந்திருக்கவில்லை) சுட்டிக் காட்டியமைக்கு நன்றி! அலுவலகப் பணிச்சுமை காரணமாக சான்றிதழ் குறித்த வேலையினை சரிவர என்னால் செய்து முடிக்க முடியாமல் போய்விட்டது. இப்போது மீண்டும் ஒருமுறை சரிபார்த்து முடிந்த அளவிற்கு இவ்வேலையினை நிறைவு செய்ய விழைகிறேன். வேறு எவரேனும் விடுபட்டிருந்தால்... தயவுசெய்து சுட்டிக் காட்டுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:59, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று, காண்க: விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்#கூடல் நிகழ்விற்குப் பின்னர் சேர்க்கப்பட்ட பயனர் பெயர்கள், விவரங்கள்...
நன்றி--நந்தகுமார் (பேச்சு) 07:43, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

நீக்குக

தொகு

மன்னிக்கவும்... புகுபதிகை செய்ய மறந்த நிலையில் நடந்துவிட்டது, எனவே அந்த பயனர் பக்கத்தை நீக்கிடுக அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 17:25, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

புதுப்பயனர்களுக்கு வழிகாட்டல் கருவிகள்

தொகு

வணக்கம் நண்பரே, புதுப்பயனர்களை வரவேற்றலுக்கு தானியங்கி சேவையும், வழிகாட்டல் சுற்றுலா கருவியையும் அமைத்துதர தொழில்நுட்ப வல்லுனர்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். புதுப்பயனர்களுக்கு வழிகாட்டும் ஆர்வலர் என்ற முறையில் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#புதுப்பயனர்களுக்கு வழிகாட்டும் TOUR கருவி என்ற பக்கத்தில் கருத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:05, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:47, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!
--அஸ்வின் (பேச்சு) 03:17, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

வாழ்த்துரைத்தல்

தொகு

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு என்னுடைய வாழ்த்துகள் நண்பரே, {{User wikipedia/Administrator}} என்ற வார்ப்புருவை விருப்பம் இருப்பின் தங்களுடைய பயனர் பக்கத்தில் இணைத்துக் கொள்ளவும். புதிய பயனர்களின் வரவேற்பினை அதிகம் நல்கும் பயனர் என்பதால் தங்களின் பயனர் பக்கத்தினை காணும் புதிய பயனர்களுக்கு விக்கிப்பீடியா பற்றி மிகுந்த நன்மதிப்பினை ஈட்டுதரும். நன்றி! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:09, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி நண்பரே!--நந்தகுமார் (பேச்சு) 13:05, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 18:44, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே!--நந்தகுமார் (பேச்சு) 20:55, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

உங்களின் கவனத்திற்கு...

தொகு

வணக்கம்! 'முதற்பக்க கட்டுரைகள்' என்பதனை இற்றை செய்ய ஆள் பற்றாக்குறை உள்ளது. இங்கு காண்க. உங்களால் இயன்றால் செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:40, 18 அக்டோபர் 2013 (UTC)Reply

வணக்கம் செல்வ.சிவகுருநாதன். இற்றை பணிகளில் பங்களிக்க விருப்பம் இருப்பினும், ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளதால், இங்கு கட்டற்ற முறையிலேயே என் பங்களிப்புகளை நல்க இயலும். புரிதலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 06:26, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

பதிலுரைக்கு மிக்க நன்றி! நேரமிருக்கையில் இப்பகுதிக்காக பரிந்துரைகளை இட்டு உதவலாம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:53, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

நீங்கள் கூறியபடியே செய்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 06:56, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

மின்னஞ்சல்

தொகு
உங்கள் பல்கலைக்கழக மின்னஞ்சல் [nandakumar.kutty-selva @ ki.se] என்ற முகவரிக்கு அனுப்பியுள்ளேன். நன்றி :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 18:32, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
தங்களுக்கான பதிலை விரைவில் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்--நந்தகுமார் (பேச்சு) 18:41, 19 அக்டோபர் 2013 (UTC)Reply
மிக்க நன்றி நந்தகுமார் :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 19:01, 19 அக்டோபர் 2013 (UTC)Reply

விளக்கப்படம் திட்டம் தொடர்பாக

தொகு

விளக்கப்படத்திட்டத்தின் பங்களிப்பாளர் என்ற முறையில் தேவைப்படும் படங்கள் பக்கத்தினைத் தங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். நன்றி. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 07:49, 20 அக்டோபர் 2013 (UTC)Reply

புதுப் பயனர்களின் தொகுப்புகள்

தொகு

வணக்கம், புதுப் பயனர்களை வரவேற்கும் போது அவர்கள் செய்த தொகுப்புகளையும் ஒரு முறை கண்ணோட்டம் விடுங்கள். விசமத் தொகுப்புகளாக இருந்தால் அவற்றைத் தயங்காது நீக்குங்கள். ஏன் நீக்குகிறீர்கள் என்ற குறிப்பையும் சேருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 09:20, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

நீங்கள் கூறியவண்ணமே செய்கிறேன்--நந்தகுமார் (பேச்சு) 11:43, 25 அக்டோபர் 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Nan/தொகுப்பு01&oldid=1593890" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Nan/தொகுப்பு01".