விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 10

பயனருக்கு வழிகாட்டல் தொகு

நான் டான்டே அலிகியேரி பற்றிய கட்டுரையை தொகுக்கும் பணியில் உள்ளேன். இருந்தும் எனக்கு சில சந்தேகங்கள்...

1. கட்டுரையை தொகுத்து கொண்டிருக்கும்போதே அதனை பார்வையாளருக்கு கண்பிகாலமா அல்லது வேறெங்கும் தொகுத்து கடைசியாக பக்கத்தில் இணைக்க வேண்டுமா ...?? --ArunaLakshmi Ramu (பேச்சு) 20:21, 5 சனவரி 2014 (UTC)[பதிலளி]


நிர்வாகிகள் எவரெனும் பயனர்:Vatsan34 க்கு வழிகாட்ட வேண்டுகிறேன். மேற்கோள் இல்லை என்று மேற்கோள் உள்ள சில கட்டுரைகளிலும், குறுங்கட்டுரைகள் என்ற வார்ப்புருவை கட்டுரையின் கீழிருந்து வெட்டி கட்டுரையின் மேல் ஒட்டுவதுமாக இருக்கிறார். மிகவும் ஆர்வமாக உழைக்கும் பயனருக்கு வழிகாட்டியாக சிறந்த நிர்வாகி இருந்தால் விக்கிப்பீடியாவிற்கு நன்மை கிடைக்குமென நினைக்கிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:37, 31 மே 2013 (UTC)[பதிலளி]

Mathu Kasthuri rengan என்கிற பெயரில் பணியை ஆரம்பித்திருக்கிறேன்.. ஹம்ப்ரி போகர்ட், மற்றும் எக்ஸ்எம்எம் நியூட்டன் என்கிற இரண்டு கட்டுரைகளை தொட்டுவைத்திருகிறேன்.. எப்படி செய்திருக்கிறேன் என்று பார்வையிடவும் விமர்சனங்களும் அவசியம்..

தொடர்ந்த வழிகாட்டுதல் இருந்தால் ... தொடர வாய்ப்பாக இருக்கும். கட்டுரை போட்டிகளில் பங்குபெறுவது குறித்தும் கூறவும்... (--Mathu_kasthuri_rengan)

Mathu_kasthuri_rengan அவர்களே, உங்கள் பயனர் பேச்சுப்பக்கத்தைப் பார்க்கவும்--நீச்சல்காரன் (பேச்சு) 04:22, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் பெயர் மாற்றம் தொகு

மேல்காணும் கட்டுரைகளின் பெயர்களை மாற்றித் தருமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவற்றிக்கான காரணம் குறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விளக்கப்பெற்றுள்ளது. நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:12, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]

விரைந்து நடவடிக்கை எடுத்தமைக்கு மிக்க நன்றி கனகரத்தினம் அவர்களே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:01, 10 சூன் 2013 (UTC)[பதிலளி]


Project - செயற்றிட்டமா ? அல்லது செயற்திட்டமா  ? எது சரி ? செயற்றிட்ட மேலாண்மை செயற்திட்ட மேலாண்மை செயற்திட்டம் - Plan

சிவகார்த்திகேயன் (பேச்சு) 23:52, 26 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

"thendral " ethai parttriya kuripukal vendum

தமிழ்த்தட்டச்சு தொகு

விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். கட்டுரைகள் எழுதுவதற்காக புகுபதிகை செய்தவுடன் வலது பக்க மேல் மூலையில் 'தமிழில் எழுத' என்று தோன்றும். அதைச் சொடுக்கியவுடன் 'செயலாக்குக' என்று வரும். ஆனால் இன்று அதைக் காணவில்லை. இதை எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதைக் கூறவும். அப்துல் றஸ்ஸாக்

தமிழ்த் தட்டச்சுக் கருவிக்கான இடத்தை மாற்றியுள்ளார்கள். புதிய முறையை அறிய விக்கிப்பீடியா:தமிழ்த் தட்டச்சு பாருங்கள்.--இரவி (பேச்சு) 17:33, 15 சூன் 2013 (UTC)[பதிலளி]

வணக்கம். நான் ஏற்காடு என்ற பெயரில் புதிதாகப் பதிவு செய்துள்ளேன். நேற்று ஏற்காடு பைசன் என்கிற காட்டுஎருமைகளும் சில நாய்களும் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதினேன். அதைப் பக்கத்தை சேமிக்கவும் என்ற பகுதியில் சேமிக்கவும் செய்தேன். இப்போது அதை எப்படித் திரும்பப் பார்ப்பது? விக்கிபீடியாவில் வந்துள்ளதா என்று எப்படிப் பார்ப்பது? தயவு செய்து விளக்கவும். இராசலட்சுமி

SANGA ILAKIYATHIL KUDIGAL/SAADHIGAL

வழிமாற்றுப் பக்கங்களை அறிவது குறித்து தொகு

வணக்கம், ஒரு விக்கிக் கட்டுரைக்கு வழிமாற்றுப் பக்கங்களாக உள்ள கட்டுரைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?. உதாரணமாக சிதம்பரம் நடராசர் கோயில் என்ற கட்டுரைக்கு எந்தெந்த பெயர்களில் வழிமாற்று உள்ளது என்பதை அறிய வேண்டும். எளிதான வழி இருந்தால் தெரிவிக்கவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:35, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

எந்தவொரு விக்கிப்பக்கத்தின் இடப்புறமுள்ள சட்டத்திலும் 'இப்பக்கத்தை இணைத்தவை' என்றோர் இணைப்பு இருக்கும். அதை அழுத்தினால் சிறப்பு:WhatLinksHere/சிதம்பரம் நடராசர் கோயில் என்பது போன்ற பக்கத்துக்குச் செல்லலாம். அங்கு வழிமாற்றுக்களை மட்டும் காட்டுமாறு தேர்வு செய்யும் வசதி உள்ளது. -- சுந்தர் \பேச்சு 06:42, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:27, 20 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் தொகு

பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்பதிலுள்ள கட்டுரைகளை விரைந்து ஒன்றிணைக்க வேண்டுகிறேன். சிவத்தலங்கள் குறித்தான ஒழுங்கிற்கு தேவையுருகிறது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:21, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

உதவுங்கள் நண்பர்களே தொகு

நானும் 2 நாட்களாக கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் உதவுங்கள் எதுவும் புரியவில்லை எனக்கு இங்கு ஆவலும் திறமையும் இருக்கிறது என்னிடம் உதவுங்கள் தமிழ் வளர்ப்போம் வாருங்கள்

என்ன வகையான உதவி வேண்டும் நண்பரே. தயக்கமின்றி தங்களது கேள்விகளை முன்வையுங்கள்,.உதவ காத்திருக்கிறோம்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:14, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
முதலில் பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள். பயனர் கணக்கு வழியாக உங்களுடன் உரையாடுவதன் மூலம் சிறந்த முறையில் உங்களுக்கு உதவ முடியும்.--Kanags \உரையாடுக 09:03, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

திருக்குறள் பக்கத்தில் 1330 குறள்களும் முழுமையாக இல்லையே? அதுபோல அதன் பொருள்களும் இல்லையே?, என்ன காரணம், அதை முழுமை படுத்தலாமா என்னால் இயன்ற வரை?

வார்ப்புரு என்றால் என்ன?

the cities or towns names ends with patti

வண்ணம் - வர்ணம் - நிறம் தொகு

வண்ணம் என்பது நிறத்தையும் பாவகையையும் குறிக்கும். வர்ணம் கருநாடக இசை பாடத்தில் ஒரு படி. மேலும் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வனப் பிரஸ்தம், சந்நியாசம் ஆகிய வாழ்வின் படிமுறைகள் வர்ணம் என அழைக்கப்படுகிறன. நிறம் எனப் பொருள் தராது என நினைக்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:58, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

வார்ப்புருவிற்கு உதவி தொகு

எகிப்திய புதிய பேரரசு
ஜெபுசேயர்
இசுரயேல் - யூதேயா (தாவீதின் குலம்)
புது அசீரியர்
புது பாபிலோனியர்
மசிடோனியர்கள்
சசனிட் பேரரசு
அயூபிட் பேரரசு
மம்லுக் சுல்தான்
இசுரேல் மற்றும் யோர்தான்
கி.மு. 2000
கி.மு. 1500
கி.மு. 1000
கி.மு. 500
கி.பி. 0
கி.பி. 500
கி.பி. 1000
கி.பி. 1500
கி.பி. 2000
கி.பி. 2500

     யூதர்      இசுலாமியர்      கிறித்தவர்      யோர்தான் ஆக்கிரமிப்பு      பிறர்

{{Graphical Overview of Jerusalem's Historical Periods}} --Anton (பேச்சு) 15:45, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று Anton --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 16:01, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி! --Anton·٠•●♥Talk♥●•٠· 18:49, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
நன்றி ஜெயரத்தின மாதரசன்.--Kanags \உரையாடுக 21:45, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

படிமம் பிரச்சனை தொகு

வணக்கம் நண்பர்களே, நான் எடி மாபோ என்ற கட்டுரையை அதன் ஆங்கிலக்கட்டுரையிலிருந்து உருவாக்கினேன். ஆனால் ஆங்கிலக்கட்டுரையிலுள்ள EddieMaboportrait.gif என்ற கோப்பு (படிமம்) தமிழ் கட்டுரையில் கொண்டுவர இயலவில்லை. ஏன் என்று புரியவில்லை. இதை சரி செய்ய உதவ வேண்டுகிறேன். --Mugunth (பேச்சு) 14:44, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று--Anton (பேச்சு) 15:24, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]
இப்படிமம் பொதுவில் இல்லாததால், அதனை நேரடியாக இணைக்க முடியாது. குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் இணைக்கக்கூடியதாக நியாயமான பயன்பாடின் அடிப்படையில் இங்கு மீண்டும் தரவேற்றலாம்.--Kanags \உரையாடுக 21:14, 10 சூலை 2013 (UTC)[பதிலளி]

subst:மேற்கோள் வார்ப்புரு வேலை செய்யவில்லை தொகு

வணக்கம், நமது விக்கிப்பீடியாவில் தொகுத்தல் பக்கத்தில் பயனர்களின் எளிதான செயல்முறைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள {{subst:மேற்கோள்}} என்பது வேலை செய்யவில்லை. அதனை உள்ளீடு செய்தால் ஆதாரங்கள் மேற்கோள் என்ற தலைப்பும், அதன் கீழ் மேற்கோள் தொகுப்பானும் இடம்பெறும். தற்போது {{subst:மேற்கோள்}} என்றே பதிகிறது. இது எனக்கு மிகவும் உபயோகமாக இருந்து வந்தது. என்ன பிரட்சனை என்று கவனித்து மாற்றவும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:14, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

பார்க்க வார்ப்புரு பேச்சு:மேற்கோள். மேற்கோள் வார்ப்புரு நீக்கப்பட்டுவிட்டது. எனவே இனி அந்த வார்ப்புரு வேலை செய்யாது.-சண்முகம்ப7 (பேச்சு) 09:17, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

Sir/ Madam, Good morning. In Wikipedia images, there were many photos of V.O.CHIDAMBARAM PILLAI. Now I can not find a single image. Can you help me? Thank you, Marmiraja

Tamil keyboard தொகு

could you tell me how to type in tamil?

you can learn that [1]

see this http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81 -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 08:42, 19 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில், சங்கரன்கோயில் -என்றுதான் கோவில் தேவஸ்தானம் அறியப்படுகின்றது. சங்கரன்கோயில் என்னும் கட்டுரை அந்த நகரைப்பற்றியதாக அமையட்டு,ம். திருக்கோவிலைப்பற்றிய முழுச் செய்திகளையும் உள்ளடக்கிய கட்டுரையாக இது அமையும் உதவிடக் கோருகின்றோம். ஏனெனில், பல புதிய செய்திகள் கைவசம் உள்ளன. மேலும் அந்த ஊரைச் சார்ந்தவன் என்ற காரணத்தாலும் இக்கோரிக்கையை வைக்கின்றோம். அன்பு- -சீராசை சேதுபாலா, rssairam99@gmail.com

பதிவேற்றம் தொகு

புகைபடங்களை எப்படி பதிவேற்றம் செய்வதுநந்தினிகந்தசாமி (பேச்சு) 09:31, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி?, விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். --Anton (பேச்சு) 10:06, 2 செப்டம்பர் 2013 (UTC)

நான் ஒரு பெண் எழுத்தாளர். குழந்தைகளுக்காக சுமார் 50 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். தொகு

விக்கிபீடியாவில்கட்டுரையில் படங்களை சேர்த்து பதிவு செய்வது எப்படி?--−முன்நிற்கும் கருத்து 117.208.233.168 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இவற்றை படியுங்கள்.

மேலும் உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--Kanags \உரையாடுக 02:10, 15 செப்டம்பர் 2013 (UTC)

விககிபீடியாவின் கட்டுரையில் படங்களைச்சேர்ப்பது எப்படி?

ennaku neer veelchi patri katturai venum

பார்க்க: நீர்வீழ்ச்சி--Kanags \உரையாடுக 10:36, 30 செப்டம்பர் 2013 (UTC)

மொழிபெயர்க்க உதவி தேவை தொகு

வலைவாசல்:உள்ளடக்கங்கள்/வலைவாசல்கள் என்பதனை {{en:Portal:Contents/Portals}} ஆங்கில விக்கியில் உள்ளது போல மாற்றியமைக்க எண்ணியிருக்கிறேன். அதற்கு சில சொற்றொடர்களுக்கு மொழிபெயர்க்க உதவி தேவையுறுகிறது. உதவுங்கள். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:48, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  1. People and self -சுயம் மற்றும் நபர்கள்?
  2. Natural and physical sciences - இயற்கை மற்றும் ? | இயற்கையும் பௌதீக விஞ்ஞானமும் ? --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:59, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  3. Mathematics and logic - தர்க்கம் மற்றும் கணிதம்?
நன்றி ஆதவன் அவர்களே, தற்போதைக்கு இவ்வாறே இயற்படுத்துகிறேன். மாற்றம் தேவையுற்றால் வருங்காலத்தில் மாற்றலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:00, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சில சந்தேகங்கள் தொகு

வணக்கம். தமிழிலக்கியத்தில் ஆர்வமுள்ள நான் சில கட்டுரைகளை விக்கிபீடியாவிற்கு வழங்க விரும்புகிறேன்.கட்டுரையின் தலைப்பு எப்படி இருக்க வேண்டும்? அளவு உண்டா? விளக்கப் படங்கள் கட்டாயமாக இருக்க வேண்டுமா? வானொலி, மாதஇதழ்கள், நாளிதழ்கல் ஆகியவற்றிற்கு எழுதியுள்ளேன். என்னைப் பற்றிய விவரங்களை அனுப்பவேண்டிமானால் எப்படி அனுப்புவது? எங்கள் படைப்புகள் தேர்வானால் அதற்கு ஏதாவது சன்மானம் தரப்படுமா?உடன் விவரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன். என் மெயில் முகவரி பதிவுசெய்யப்பட்டுள்ளது. நன்றி புதுப்பயனர் தே.இந்திரகுமாரி -−முன்நிற்கும் கருத்து Indirakumari.d (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம்,

1.கட்டுரை எந்தவொரு தலைப்பைப் பற்றியும் இருக்கலாம். புகழ்ச்சி, சொந்தக் கருத்து, விமர்சனம் ஆகியவை இருக்கக் கூடாது. கவிதைகள், கதைகள் எழுதக் கூடாது. படங்கள் சேர்ப்பது கட்டாயமில்லை. தகவல்களுக்கான ஆதாரம் இருந்தால் தரலாம். கட்டுரைத் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும். (ஆங்கிலத்திலோ, பிற மொழிகளிலோ இருக்கக் கூடாது). கட்டுரை எந்த அளவிலும் இருக்கலாம். 2.இங்கே எழுதுபவர்கள் தன்னார்வலர்களே! பணம், சன்மானம் பெறுவதில்லை. எங்களுக்கு விருப்பமான கட்டுரைகளை எழுதுகிறோம். எங்களை உற்சாகப் படுத்த அவ்வப்போது போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் நீங்கள் கலந்துகொண்டு, சிறப்பாக எழுதி பரிசு பெறலாம். :) 3. உங்களைப் பற்றி நீங்களே கட்டுரையாக எழுதக் கூடாது. நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் கதை/கவிதை/இலக்கிய ஆய்வு ஆகியவற்றை எழுதியிருந்தால், உங்களைப் பற்றி மற்றவர் எழுதலாம். 4. நீங்கள் எழுதும் கட்டுரை உடனே சேமிக்கப்படும். உங்கள் கட்டுரையை மற்றவர் தேர்வு செய்ய வேண்டியதில்லை. பிழைகள் இருந்தால் திருத்துவோம். தவறானதாய் இருந்தால் நீக்கப்படலாம். ,வேறு சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம். உதவிகள் தேவை என்றாலும் கேட்கவும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:57, 6 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பயனா் டிபயா் எஸ்.பி.எம்.ேதவா்3 என்ப ைத மலாின் மறுபக்கம் (மாத இதழ்) என மாற்றவும்?--−முன்நிற்கும் கருத்து 112.79.47.66 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தேவர் அவர்களே, விளம்பரங்கள் போன்று எழுதப்படும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஒருவர் வெளியிடும் இதழ் பற்றி அவரே கட்டுரை எழுதுவதும் ஒரு விளம்பரமாகவே கருதப்படும்.--Kanags \உரையாடுக 02:43, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

சைவம் பக்கத்தில் எப்படி இனைவது(தலைப்பு)

சைவம் பக்கத்தில் இனைய ஆசையே அசைவத்திர்கு அறிகுறி ஆசையை அகற்றினால் சைவத்திர்கு இனையலாம் சைவம் ஒரு ஆன்மீகம் ஆன்மீகம் அருகில் செல்ல அசைவம் அழிய செல்லும் அசைவம் அழின்து விட்டால் ஆன்மீகம் தலைதூக்கும் ஆன்மீகம் தலைதூக்கினால் அனுதின தியானம் தேவை தியானம் மேற்கொல்ல உபவாசம் தேவை உபவாசம் இருப்பின் உயர்வான என்னங்கள் தோன்றும் அப்பொழுது அன்த சைவம் உங்கல் பக்கத்தில் இருக்கும்

malarin maruppakkam(maatha ethal) தொகு

vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri

malarin maruppakkam(maatha ethal) தொகு

vanakkam naangal uruvaakkiya payanar peyarai thavaruthalaaga uruvaakkivittom athanaal spmdeva3 enbathai maatri malarin maruppakkam (maatha ethal) eanru puthuppitthu tharumpadi kettukolgiren spmdeva3 endrvaasagam thevaiyillai appadi puthupikkamudiyavillai enraal marin maruppakkam (maatha ethal)-spmdevar3 enru maatri kodukkavum nanri--112.79.44.94 13:31, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

வனக்கம் விலக்கம் தருவீர் எஙலுடைய பைலிலிருன்து ௩கலெடுத்து இன்த பகுதியி செர்க்க முடியுமா

வனக்கம் நன்பரே நாங்கள் சைவம் பக்கத்தில் இனைவது எப்படி? என்ற கேல்விக்கு பதில் எழுதி இருன்தோம் அப்பகுதியை நாங்கல் எஙுகு சென்று பார்ப்பது

பெயரிடாத அன்பருக்கு, சைவம் பக்கத்தில் இணைவது எளிதே. இந்தப் பக்கத்தில் சென்று சேர்ந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஒரு பயனர் கணக்கைத் தொடங்கினால், எங்களால் உங்களுடன் உரையாடி உதவ முடியும். காப்புரிமை பாதிக்காத எந்தத் தகவல்களையும் சரியான பக்கத்தில் நகல் எடுத்துச் சேர்க்கலாம். பிறகு நீங்கள் கட்டுரைகளை எழுதி மகிழ்ச்சிக் கடலில் எங்களைத் தள்ளலாம், ஆலோசனைகள் வழங்கி செல்லமாக எங்கள் காதையும் கிள்ளலாம்--நீச்சல்காரன் (பேச்சு) 15:47, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் தக்கதொரு விளக்கம் நீச்சல்காரன் அவர்களே. தங்களுடைய வாக்கிய அமைப்பு முறை அசத்தலாக உள்ளது. தொடருங்கள்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:24, 10 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

therar tippu sulthan தொகு

== # தலைப்பு

  1. therar tippu sulthan

Infobox settlement தொகு

{{Infobox settlement}} இந்த வார்ப்புரு சரியாக இயங்குவதில் சிக்கல் உள்ளது. உதவ முடியுமா? தமிழீழம் இங்கு அது சரியாக இயங்கவில்லை. ஆங்கிலத்திலிருந்து பிரதி செய்தால் எல்லா விபரங்களும் காட்டபப்டுகிறது. ஆனால் அகலம் மாறுகிறது. --Tamil23 (பேச்சு) 06:59, 13 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

n.s.krishnan comedy collection

விக்கிமீடியா பொது படிமங்கள் தொகு

கவனிக்க:

கொடி தொகு

இக்கொடியை நீக்கக் கோரியுள்ளேன். விரும்பியவர்கள் ஆதரவளிக்கலாம். நன்றி. Deletion requests/File:Bandera LTTE.png --Tamil23 (பேச்சு) 02:40, 17 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

விரிதாள் கட்டுரை தொகு

நான் விரிதாள் என்ற கட்டுரையைத் திருத்தி அமைக்கலாமென எண்ணியுள்ளேன். யாருடன் நான் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்க வேண்டுகிறேன். நான் முதலில் செய்த சிறு மாற்றங்கள் நீக்கப்பட்டு உள்ளன. நன்றி.−முன்நிற்கும் கருத்து ‎Paramesh1231 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் திருத்தி எழுதுங்கள். யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. உங்கள் தொகுப்புகள் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ப இல்லாவிடின் நீக்கப்படலாம். உங்கள் நீக்கப்பட்ட பழைய தொகுப்பை வேண்டுமானால் மீள்வித்துத் தருகிறேன். நீங்களே திருத்தி எழுதலாம்.--Kanags \உரையாடுக 00:57, 23 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

particulate தொகு

particle = துகள் எனலாம். particulate என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 10:48, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பெயர்ச்சொல்லாகப் பயன்படும்பொழுது "matter in the form of minute separate particles" என்று விளக்குகின்றார்கள். எனவே தூளகம், தூள்பொருள் எனலாம். பெயரைடையாய் வரும் பொழுது "relating to or in the form of minute separate particles" இங்கே இடம்சார்ந்து தூளாக, தூள்வடிவில், தூளிய என்று கூறலாம். காற்றின் மாசுபாட்டில் தூள்கள் இருந்தால் அவற்றை தூள்வடிவ மாசுபாடு, தூள்விரவிய மாசுபாடு, தூள் மாசுபாடு என்று பலவிதமாகச் சொல்லலாம். நாம் நேரடியாக மொழி பெயர்க்காமல், கருத்து என்னவோ அதனைத் தமிழில் சொல்லலாம். தூள், துகள், பொடி, தூசு (தூசுப்பொடி) போன்ற பல சொற்கள் உள்ளன. ஆங்கிலத்திலோ, பிறமொழிகளிலோ உள்ளவாறு அப்படியே இருக்க வேண்டும் என்றில்லை, அவை குறிக்கும் பொருளைத் துல்லியமாகத் தமிழில் குறிக்க வேண்டும் அவ்வளவே.--செல்வா (பேச்சு) 11:57, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி செல்வா. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 13:02, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
விக்சனரியில் துகள்மம், துகள்மப் பொருள் எனத் தந்திருக்கிறார்கள். அதுவும் பொருத்தமாக உள்ளது.--Kanags \உரையாடுக 21:08, 26 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

இதில் கட்டுரை எழுத வயைதல்லை உள்ளதா?

தொகு - உதவி வார்ப்புருக்கள் தொகு

கட்டுரையை தொகுக்கும் போது (தொகுக்கப்படுகிறது பக்கம்) முன்பு இருந்த விக்கி குறியீடுகள், (உதவி வார்ப்புருக்கள்) [[]] {{}} <> </> போன்றவை தற்போது இல்லை!--ஸ்ரீதர் (பேச்சு) 09:11, 19 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழல்லா பெயர்களுக்கான பொதுப்பக்கம் தொகு

தமிழல்லா வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் பெயர்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு முறையில் தமிழாக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுரைகளை இணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. உதாரணமாக "Francois Du Plessis" என்ற பெயரை மூலத் தமிழ் கட்டுரையில் "பான்சுவா டு பிளெசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வார்ப்புருவில் "ஃபாஃப் டு பிளேசிஸ்" எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் கட்டுரையில் "பிரான்காயிசு டூ பிளசிசு" எனவும் உள்ளது. இதற்கென்று ஒரு பொது தரவு இருந்தால் நன்றாக இருக்குமே! --Fireishere (பேச்சு) 03:01, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

தற்போதைக்கு எளிய தீர்வு உண்டு. ஜெயரத்தினாவின் iwt கருவி உங்களுக்கு உதவும். தமிழ் விக்கியில் ஒரு ஆங்கிலக் கட்டுரையைப் போட்டுவிட்டு, அதில் இந்த கருவியை இயக்கினால், ஆங்கில இணைப்புகளுக்கு இணையான தமிழ் கட்டுரைகளை மாற்றித் தரும். பின்னர், கட்டுரையைத் திருத்திக் கொள்ளலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:02, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
பிரான்சுவா என்பதே சரியானது. பயனர்:Jayarathina/iwt இப்பயனர் கருவியை நிறுவிக் கொள்ளுங்கள். மேலும் உதவி தேவைப்படின் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 07:16, 29 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில பெயரை தமிழில் எழுத உதவி தொகு

Philo Taylor Farnsworth இந்த பெயரை எப்படி‍ தமிழில் எழுதுவது...

தமிழில் தலைப்பு பைலோ பார்ன்சுவர்த் என எழுதலாம். முழுப்பெயர் பைலோ டெய்லர் பார்ன்சுவர்த். சரியான பெயர்ப்பு: ஃபைலோ டெய்லர் ஃபார்ன்ஸ்வர்த்.--Kanags \உரையாடுக 07:22, 2 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

ஆங்கில பெயரை தலைப்புடன் இணைப்பது‍ எவ்வாறு? தொகு

தமிழ் கட்டுரையின் தலைப்பில் ஆங்கில பெயரை இணைக்க சாத்தியமுள்ளதா? சாத்தியமிருப்பின் எவ்வாறு‍ இணைப்பது? பயனர்:Suthir

அவ்வாறு எழுதுவது சாத்தியம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழில் தான் தலைப்பு இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.--Kanags \உரையாடுக 08:36, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் பெயர் மாற்றம் தொகு

சமணம் எனும் கட்டுரையின் பெயரை ஜைனம் என மாற்றித் தருமாறு நிர்வாகிகளை கேட்டுக் கொள்கிறேன். இவற்றிக்கான காரணம் https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit#குறித்து அக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் விளக்கப்பெற்றுள்ளது. நன்றி. - ச.பிரபாகரன் (பேச்சு) 17:09, 4 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

உதவி தேவை தொகு

Haymarket affair பெயரை தமிழில் எவ்வாறு கட்டுரை தலைப்பிடுவது.......

அஃபேர் என்பதை விவகாரம் என்பர். இதை ஹேமார்க்கெட் விவகாரம்/ஹேமார்க்கெட் கலவரம்/ஹேமார்க்கெட் படுகொலை எனலாம். (மற்றவர்கள் ஆங்கிலக் கட்டுரையைப் பார்த்துவிட்டுக் கருத்து கூறுக) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:59, 6 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஹேமார்க்கெட் படுகொலை என்பதையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று‍ நினைக்கிறேன்Suthir

உதவி தேவை தொகு

https://en.wikipedia.org/wiki/Chudamani_Vihara

இந்த கட்டுரையில் பெளத்த விஹாரம் கி .பி 1006 இல் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது .

1006 என்பது இராஜ இராஜ சோழன் ஆட்சி செய்த காலமாகும் .ஆனால் பொன்னியின் செல்வன் நாவலில் இராஜ இராஜ சோழன் இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பும் பொழுது நாகை பெளத்த விஹாரத்தில் தங்கி தனது சுரத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டது போன்ற கதையமைப்பு வரும் .

ஆனால் கட்டுரையிலோ இராஜ இராஜ காலத்தில் தான் பெளத்த விஹாரம் ஏற்பட்டதாக குறிப்பிடபட்டுள்ளது .

எது உண்மை ?????

KOSALI FROM KAMBARAMAYANAM தொகு

I WANT TO KNOW MARE ABOUT KOSALAI FROM KAMBARAMAYANAM PLEASE HELP ME TO THIS. IF ANY ONE GET LINK PLEASE SEND - −முன்நிற்கும் கருத்து 121.240.156.85 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

கோசலை என்ற பக்கத்தை காண்க -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:18, 20 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தமிழ்ச் சொற்கள் தேவை தொகு

  • Equinoxes and solstices

Equinoxes - சமப் பகலிரவு நாட்கள் solstices - கதிர்த் திருப்பங்கள்

  • Protoliterate period

-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:15, 21 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கிரியேட்டிவ் காமன்சு 2.5 உரிமப் படங்கள் தொகு

கிரியேட்டிவ் காமன்சு 2.5 உரிமப் படங்களை பொதுவகத்தில் எப்படி பதிவேற்றுவது? பயனர்:Commons sibi எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீங்கள் அழைக்கும் நபர் தற்போது விக்கிக்கு வெளியில் உள்ளார் ஆகவே சிறிது நேரத்தின் பின் அழைக்கவும்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:29, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
வந்தேன்.--Commons sibi (பேச்சு) 16:54, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

காமன்சில் எப்படி ஏற்றுவது என்ரு கூட பிறகு தெரிந்து கொள்கிறேன். பொதுவாக கிரியேட்டிவ் காமன்சு பதிப்புரிமை உள்ளதை பொதுவகத்தில் ஏற்றலாமா? அதை முதலில் தெரிவித்தால் முன் வேலைகள நிறையவற்றைச் செய்யலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:58, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

//காமன்சில் எப்படி ஏற்றுவது என்ரு கூட பிறகு தெரிந்து கொள்கிறேன்.//Its very simple . Please create a account in wiki commons . Then you can upload your photos there . //பொதுவாக கிரியேட்டிவ் காமன்சு பதிப்புரிமை உள்ளதை பொதுவகத்தில் ஏற்றலாமா?//Yes . 100% you can .If its your work , it will automatically provide your name . If its not your work , and its given in cc and you want to upload to Commons , you can do it provided you give proper credits to the original author . Please use the "uploads" wizard .--Commons sibi (பேச்சு) 17:05, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

வழி தெரிந்துவிட்டது.

Step 1: Select "This file is not my own work."

Step 2: Select "The copyright holder published this work with the right Creative Commons license"

Step 3: Select the license given by owner.

Step 4: usual upload steps.

Step 5: Enjoy --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

exactly :) . --Commons sibi (பேச்சு) 17:13, 23 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

தவறு என்ன ? என்று சுட்டிக்காட்டி களைய உதவுங்கள் தொகு

நான் 'ஆட்டைப் பெரிய திருவிழா' என்று ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்தேன். அது https://ta.wikipedia.org/s/3m2s பதிவேற்றப் பட்டிருக்கிறது. ஆனால்

"தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல் இந்த கட்டுரை பெரும்பாலும் உரையை மட்டும் கொண்டுள்ளது அல்லது கலைக்களஞ்சிய நடையில் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்"

தவறுகளை சுட்டிக்காட்டி விக்கிதமிழ் நடையில் எழுத உதவுங்கள்.

சாங் சொங் தொகு

Song Dynasty என்பது சொங் அரசமரபு என்றும் Shang Dynasty என்பது சாங் அரசமரபு என்றும் எழுதப்பட்டுள்ளது. இலங்கை தமிழில் சொங் என்பது தமிழ் நாட்டு தமிழில் சாங் என்பது தானே. எப்படி இரு மரபுகளையும் வேறுபடுத்தி தமிழில் எழுதுவது?--குறும்பன் (பேச்சு) 18:10, 6 சனவரி 2014 (UTC)[பதிலளி]

Song Dynastyஜ விட (960–1279) Shang Dynasty (c. 1600 BC–c. 1046 BC) காலத்திலும், நிலப்பரப்பு, மற்றும் அமைவிலும் வெவ்வேறானவை. --Anton·٠•●♥Talk♥●•٠· 02:51, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]
சொங், சாங் இலங்கை வழக்கு, தமிழக வழக்கில் பிரித்துக் காட்ட வேண்டுமானால் சாங், ஷாங் என்றே எழுத வேண்டியிருக்கும்:(.--Kanags \உரையாடுக 07:45, 7 சனவரி 2014 (UTC)[பதிலளி]
Song என்பது இந்த இடத்தில் ஆட்களின் பெயரைக் குறிக்கிறது. இந்திய வழக்கிலும் இது சொங் என்றே சொல்லப்பட வேண்டும். சாங் என்பது பாடலைக் குறிக்கும். (அது கூட தமிழ்மொழிக்கல்வி ஊடாக வந்தவர்கள் மட்டுமே அவ்வாறு சொல்வார்கள்.) ஆகவே Song Dynasty சொங் அரச வமிசம் என எழுதப்படலாம். மரபு என்பது tradition என்பதைக் குறிக்கும். Shang Dynasty சாங் அரச வமிசம். - Uksharma3 (பேச்சு) 01:49, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை சிக்கல் தொகு

நான் அண்மையில் விக்கிப்பீடியாவில் ஏற்கனேவே இருந்த கட்டுரையில் ஒரு பகுதியினை "தொகு" மூலமாக அதிக தகவல்களை தொகுத்தேன். ஆனால் பதிவேற்றம் முடித்தவுடன் எனக்கு வந்த பயனர் பேச்சு மூலமாக , எனது பதிவேற்றம் நீக்கப்பட்டுவிட்டது. "பதிப்புரிமை" காரணமாக நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இணையத்தில் கிடைக்கும் கட்டுரைகளில் சில சுருக்கங்கள், மாற்றங்கள் செய்துதானே பதிவேற்றம் செய்கிறோம். பின் ஏன் நீக்குகிறீர்கள். அந்த கட்டுரைகள்கூட ஏற்கனவே வெளிவந்த புத்தகங்கள் , குறிப்புகள், encyclopaedia , போன்றவற்றை ஆதராபடுதிதானே எழுதுகிறார்கள். அதை சுருக்கியோ, விரித்தோ நாம் ஏன் பயன்படுத்தகூடாது. அப்படியே இருந்தாலும், அந்த ஆசிரியர் ஆட்சேபம் தெரிவிக்காதவரை, அதை அனுமதிக்கலாமே. ஏனென்றால் ஏற்கனவே அது இணையத்தில் , அனைவரும் இலவசமாக பயன்படுத்தும்படி தான் உள்ளது. அதை ஒரு மையபடுத்தப்பட்ட இடத்தில பதிவேற்றம் செய்வதில் என்ன தவறு.

அடுத்தவரின் ஆராய்சியைதான் நாம் களவாடகூடாது. படிபதற்காக வெளியிடப்பட்ட கருத்தை, ஒரு மைய இடத்தில இருந்து பரப்புவது அந்த ஆராய்ச்சியாளருக்கு பெருமைசெற்பதாகும். நாம் வேண்டுமென்றால் அந்த கட்டுரையாளரின் பெயரை reference ல் குறிப்பிடலாமே. கல்விக்காக கட்டுரையை எடுத்தாள்வது தவறல்ல. வணிக பயன்பாடுதான் கூடாது. எனக்கு தெரியும்,விக்கியின் கொள்கைகள் அதை அனுமதிப்பதில்லை என்று நீங்கள் பதில் கூறுவீர்கள்.

பிறகு எவ்வாறுதான் கட்டுரை எழுதுவது.--−முன்நிற்கும் கருத்து Librarystc (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இணையத்திலிருந்தோ புத்தகத்தில் இருந்தோ அப்படியே வெட்டி ஒட்டுவதோ அல்லது அதில் இருப்பது போன்றோ எழுதக்கூடாது. அதிலுள்ள தகவல்களை உங்கள் நடையில் எழுதுவது பதிப்புரிமை மீறியதாகாது. --குறும்பன் (பேச்சு) 02:22, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]
அங்குள்ள பணி கலைக்களஞ்சிய நடையில் இல்லாமலும், ஆதாரமற்றும் காணப்பட்டன. எ.கா: அரண்மனையில் அரசியல் செல்வாக்கும் பொருளாதாரத்தில் மேன்மையும் கொண்டிருந்த இவர்களை மணந்துகொள்ள மலாய், சீன இனப் பெண்கள் முன்வந்தது ஆச்சரியமல்ல. இவ்வாறான வரிகள் ஆதாரம் கேட்டு கேள்விக்குட்படுத்தப்படலாம். மேலும், இங்கு வெட்டி ஒட்டமல்தான் பலர் எழுதுகின்றனர். --Anton·٠•●♥Talk♥●•٠· 02:33, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Librarystc, ஆரம்ப காலங்களில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளவர்களும் இப்படித்தான் எழுதினார்கள். கலைக்களஞ்சிய நடையில்லாமல் எழுதியதால் எனக்கும் இது போல நேர்ந்திருக்கிறது. அதை எப்படிக் கையாள்வது என இங்கு பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:59, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சந்தேகம் தொகு

சமீபத்தில் நான் எழுதிய ஜிசாட்-14 கட்டுரையில் வெளி இணைப்புகள் எனும் தலைப்பின் கீழ் புகைப்படங்களுக்காக எனது வலைப்பூவின் முகவரியை இணைத்துள்ளேன். எனது வலைப்பூவின் முகவரியை நான் இணைக்கலாமா அல்லது இது தமிழ் விக்கியின் கொள்கைகளை மீறும் செயலா? நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 14:08, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

இணைக்க முடியாது:(.--Kanags \உரையாடுக 14:33, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]
தகவலுக்கு மிக்க நன்றி. இணைப்பை நீக்கிவிட்டேன்--ஆர்.பாலா (பேச்சு) 16:28, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் ஆம். இணைக்க முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 16 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு உதவி தேவை தொகு

அனைவருக்கும் வணக்கம், இணையத்தில் TACE16(Tamil All Character Encoding) Standard என்பதற்கு பல்வேறு இடங்களில் பல்வேறு மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. Tamil All Character Encoding என்பதற்கு நான் மொழிபெயர்ப்பு செய்தது "தமிழ் அனைத்து எழுத்துக்/அனைத்தெழுத்துக் குறியேற்றத் தரப்பாடு". ஆனால், இணையத்தில் பல்வேறு மொழிபெயர்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

1. தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்([4]) - நான் மொழிபெயர்ப்பு செய்தது:Tamil All Character Encoding
2. தமிழ் அனைத்து எழுத்துரு([5]) - நான் மொழிபெயர்ப்பு செய்தது:Tamil All Font
3. தமிழ் ஒருங்குறி அனைத்து எழுத்துரு தரப்பாடு([6]) - நான் மொழிபெயர்ப்பு செய்தது:Tamil Unicode All Font Standard

இவற்றில் எந்த மொழிபெயர்ப்பு சரியானது?.

"தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம்" அல்லது "தமிழ் அனைத்து எழுத்துக்/அனைத்தெழுத்துக் குறியேற்றம்" சரி என்று கருதுகிறேன்.

-- ச.பிரபாகரன் (பேச்சு) 11:19, 18 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புருவைத் திருத்தல் தொகு

வார்ப்புரு:Infobox settlement பயன்படுத்தி கட்டுரையைத் தொகுக்கும் போது ஆங்கில விக்கிக் கட்டுரையில் காணப்படும் சில தகவல்கள் தமிழ் விக்கிக் கட்டுரையில் காட்டப்படவில்லை(தரவுகள் உள்ளிடப்பட்ட போதும்.) இவ்வார்ப்புருவைத் திருத்தி உதவுக. (மேலதிக விவரத்துக்கு பார்க்க: யாழ்ப்பாண மாவட்டம், Jaffna District)--பிரஷாந் (பேச்சு) 11:02, 21 சனவரி 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இது மிகவும் கடினமானதொரு வார்ப்புரு. ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளது. மிகக் கவனமாக இற்றைப்படுத்த வேண்டும். பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 09:01, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

I am unable to write in Tamil.Control m does not work. Tamilil ezhutha also does not give any positive answer. I do not understand. Kindly help me out of this problem. arunthanumalayan

இங்கு பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:01, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழில் பெயர் வேண்டும் தொகு

Ardi என்ற பெயருக்கு‍ தமிழில் பெயர் வேண்டும்..... --Suthir

ஆர்தி (ஆர்த்தி அல்ல) என எழுதலாம்.--Kanags \உரையாடுக 05:57, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எப்படி பகுப்பை நீக்குவது தொகு

பராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள் என்ற பகுப்பு யுவான் அரசமரபு கட்டுரையில் ஏன் வருகிறது? பராமரிப்பு எதுவும் அதற்கு தேவையில்லை. Infobox Former Country வார்ப்புருவுக்கும் கட்டுரையில் பயன்படுத்தப்படும் பெறுமானத்திற்கும் ஒத்திசைவு இல்லாவிட்டால் அவ்வார்ப்புரு உருவாகும் என்றும் தற்போது ஆ.வி.யில் உள்ள வார்ப்புரு மாற்றங்களைக் கொண்டுள்ளது என்றும் ஆன்டன் தெரிவித்துள்ளார். அதை எப்படி சரி செய்வது? தேவையற்ற பகுப்பை நீக்கினால் இக்கட்டுரை முதல் பக்கத்தில் காட்சிபடுத்தக்கூடிய கட்டுரையாகும். --குறும்பன் (பேச்சு) 17:59, 25 சனவரி 2014 (UTC)[பதிலளி]

 Y ஆயிற்று சரி செய்துள்ளேன் மகிழ்ச்சியுடன் யுவான் அரசமரபு கட்டுரையைப் பாருங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:44, 26 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பகுப்பினை மறைத்துள்ளீர்கள். ஆனால், வார்ப்புருவில் குழப்பம் உள்ளது. இது ஏற்புடையதெனில் அப்படியே விட்டுவிடலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 17:41, 26 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஆ.வியிலும் அப்பகுப்பு மறைக்கப்பட்டிருந்ததால் அவ்வாறு செய்தேன்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:15, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பூச்சி கட்டுரையில் பொருளடக்கம் தொகு

பூச்சி கட்டுரை பல துணைத் தலைப்புக்களுடன் உள்ளபோதும் பொருளடக்கம் தானாகப் போடப்படவில்லையே. காரணம் தெரிந்தால் கூறுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 08:47, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உதவி தேவை தொகு

நான் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியத்தைப் பற்றி சுற்றுலா இடல்கள் என்ற இடத்த்ல் பதிந்துள்ளேன் வாசகர்கள் அதன் உள்ளே சென்று அருங்காட்சியகத்தை பற்றிய விவரங்களை படிக்க எப்படி வழி செய்வது−முன்நிற்கும் கருத்து 117.213.36.45 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் குறிப்பிடுவது கன்னியாகுமரி மாவட்டம் என்ற கட்டுரையில் இருக்கும் துணைத் தலைப்பான சுற்றுலாத் தலங்கள் என்பதைத்தானே? அதிலே சில மாற்றங்களைச் செய்து, சிவப்பு இணைப்பாக வரும்படி செய்துள்ளேன். உங்களிடம் அந்த அரசு அருங்காட்சியகம் தொடர்பான தகவல்கள் அதிகம் இருக்குமாயின், அந்த சிவப்பிணைப்பில் அழுத்தி, புதிய கட்டுரை ஒன்றை ஆக்கலாம். நீங்கள் விக்கிப்பீடியாவுக்குப் புதியவர் என நினைக்கின்றேன். எனவே விக்கிப்பீடியா:புதுப் பயனர் பக்கம், விக்கிப்பீடியா:உதவி போன்ற பக்கங்களைப் பார்வையிடுங்கள். இதனையும் பாருங்கள். மேலும் ஏதேனும் உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள். நன்றி.--கலை (பேச்சு) 11:07, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

புதிய பக்கத்தில் இணைப்புக்களைத் திறக்க தொகு

ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target="_blank") திறக்க என்ன செய்ய வேண்டும்? - Uksharma3 (பேச்சு) 13:09, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சர்மா ஐயா, நீங்கள் mouse பயன்படுத்துகிறீர்களா? அப்படியாயின் mouse இல் நடுவில் இருக்கும் சில்லை குறிப்பிட்ட சொல்லின் மீது வைத்து அழுத்தும் போது புதிய tab இல் திறக்குமே. அதைத் தான் நான் பயன்படுத்துகிறேன்.--Kanags \உரையாடுக 20:08, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தகவலுக்கு நன்றி kanags. நான் மடிக்கணினி தான் பயன்படுத்துகிறேன். Table இல் உட்கார்ந்து வேலை செய்யும் போது மட்டும் mouse பயன்படுத்துவதுண்டு. html ல் <a href="url" target="_blank">word</a> என்று கொடுத்தால் எவருக்கும் புதிய பக்கத்தில் அல்லது Tabல் திறக்கும். அது போல code உண்டா என்பதை அறிய விரும்புகிறேன். - Uksharma3 (பேச்சு) 01:17, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

சண்முகம் உதவக் கூடும்.--Kanags \உரையாடுக 09:51, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

CTRL+click புதிய tabஇல் திறக்க வைக்கும். --Anton·٠•●♥Talk♥●•٠· 10:06, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

பதில்--சண்முகம்ப7 (பேச்சு) 02:24, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழ் தட்டச்சு தொகு

Still I am unable to type in Tamil in my computer.. I do not understand why. Help. Arunthanumalayan.

நீங்கள் ArunThanumalayan என ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டிருப்பதால், நீங்கள் புகுபதிகை செய்யவில்லை என யூகிக்கிறேன். எனக்கும் தமிழில் தட்டச்சு செய்ய முடியாநிலை இருந்தது. பிறகு என் "விருப்பத்தேர்வுகளில்" Enable the Universal Language Selector என்கிற விருப்புரிமையை தேர்ந்தெடுத்தப் பின்னால் வேலைசெய்தது.

Note: இதன் பின்னரும் கூட புகுபதிகை செய்தால் மட்டுமே என்னால தமிழில் தட்டச்சிட முடிகிறது :(. யாரேனும் சரிசெய்ய முடியுமென்றால் நன்றாயிருக்கும். இப்பொழுது சாதாரணமாக நான் ஒரு பக்கத்தைத் தேட வேண்டுமென்றால் கூட புகுபதிகை செய்தால் மட்டுமே தமிழில் தட்டச்சிட்ட தேட முடிகிறது. கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:36, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அன்புள்ள வணக்கம்.

பக்க வழிமாற்று உருவாக்குவது எப்படி? தொகு

வழிமாற்றுப் பக்கங்களை எப்படி உருவாக்குவது என்று தெரியவில்லை. தயவு செய்து சொல்லித் தருவீர்களா?--G.Kiruthikan (பேச்சு) 07:24, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஈ. காயத்ரி எனும் பக்கத்தினைப் பாருங்கள் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:29, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]
கட்டுரை ஒன்றைப் புதிதாகத் தொடங்குவது போன்றே தொடங்க வேண்டும். ஆனால் கட்டுரைக்குப் பதிலாக தொகுப்புப் பெட்டியில் உள்ள "திருப்பிவிடு" என்ற பொத்தானை அழுத்தினால் பின்வருமாறு தெரியும். #வழிமாற்று [[குறித்த பக்கம்]] . மூலப் பக்கத்தலைப்பை இட்டு சேமியுங்கள்.--Kanags \உரையாடுக 07:47, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உதவி தேவை-பெயர் மொழியாக்கம் தொகு

Chinghiz Aitmatov என்ற ஆங்கிலப் பெயரை தமிழில் சிங்கிஷ் எய்த்மாத்தோ என்று‍ எழுதலாமா? --Suthir

சிங்கிஸ் அயித்மாத்தொவ்.--Kanags \உரையாடுக 06:47, 2 பெப்ரவரி 2014 (UTC)

motor patri santhegam தொகு

oru kan parvai uullavar driving school vaikkalama, ottunar urimam peralama, L m v and m w c g driving licence edukkalama, batge edukkalama, driving school vaithu evare sollikutukkalama enaku vivaram therinthavar theriapatuthavum. somu.

இங்கு பொதுவான தகவல்களை மட்டுமே கேட்க வேண்டும். உங்களுக்கு தேவையான, ஓட்டுநர் பற்றி அறிய நீங்கள் வாழும் நாட்டின் மத்திய, மாநில அரசு அமைப்புகளைத் தொடர்பு கொள்ளவும். ஓட்டுநர்க்கான அரசு அமைப்புகளும் விதிகளும் நாட்டுக்கு நாடு மாறுபடும். ஓட்டுநருக்கான நலச் சங்கங்களும் உள்ளன. அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:00, 11 பெப்ரவரி 2014 (UTC)

PRISM (surveillance program) பற்றிய பக்கம் துவங்க தொகு

PRISM (surveillance program) பற்றி தமிழில் பக்கம் துவங்க PRISM (surveillance program) என்ற ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் பெயர்களை பரிந்துரைக்கவும்.... -Suthir

பிரிசம் என்பது அமெரிக்க கண்காணிப்பு நிறுவனம் தானே? அது பெயராக இருந்தால் அதே பெயரிலேயே இருக்க வேண்டும். பிரிசம் (கண்காணிப்பு அமைப்பு) அல்லது பிரிசம் (உளவு அமைப்பு) என்று வைக்கலாம். அதன் தன்மையைப் பொருத்து, அமைப்பு, செயல்திட்டம், நிறுவனம், ஆணையம், திட்டம் என்று வைத்துக் கொள்ளலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:57, 11 பெப்ரவரி 2014 (UTC)