விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 11


காற்பந்தாட்ட கலைச்சொற்கள்

தொகு

காற்பந்தாட்டக் கட்டுரைகளில் கோல், பெனால்ட்டி (கிக்) மற்றும் பெனால்ட்டி ஷூட்-அவுட் ஆகியவற்றிற்கு தமிழ்ப் பெயர்கள் தேவையா ? தமிழ் ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் ஆங்கில எழுத்துப்பெயர்ப்பே பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. இருப்பினும் எனது பரிந்துரைகளாக:

கோல் = இலக்கு
கோல் கீப்பர் = இலக்குக் காப்பாளர்
கோல் கம்பம் = இலக்குக் கம்பம்
பெனால்ட்டி கிக் = தண்டனை உதை அல்லது விதிவிலகல்/விதிமீறல் உதை
பெனால்ட்டி ஷூட்-அவுட் = சமன்நீக்கி மோதல்
பெனால்ட்டி ஏரியா = தண்டனை பரப்பு
பெனால்ட்டி மார்க் = தண்டனை உதைகுறி அல்லது தண்டனை உதைவிடம்
ஃப்ரீ கிக் = தடங்கலில்லா உதை

இவற்றைத் தவிர வேறேதேனும் கலைச்சொற்கள் தேவையா.. இலங்கை போன்ற தமிழை கூடுதலாக பாவிக்கும் நாடுகளில் இவற்றிற்கு ஏற்கெனவே ஏதேனும் பெயர்கள் புழங்குகின்றனவா ?

நான் காற்பந்தாட்டக் கட்டுரைகளை ஆக்க இருப்பதால் உங்கள் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் விரைவாக எதிர்நோக்குகிறேன்.--மணியன் (பேச்சு) 08:53, 19 பெப்ரவரி 2014 (UTC)

மேலும் இந்தச்சொற்களுக்கும் தமிழாக்கம் தேவை:

  1. Foul =
  2. Ball in play =
  3. Ball out of play =
  4. Offside =
  5. Goal kick =
  6. corner kick =

--மணியன் (பேச்சு) 13:30, 19 பெப்ரவரி 2014 (UTC)

சில பரிந்துரைகள்:

  1. Foul = முறையற்ற ஆட்டம்
  2. Ball in play = ஆட்டத்தில் பந்து
  3. Ball out of play = ஆட்டத்திற்கு வெளியில் பந்து
  4. Offside = பொருத்தமற்ற பக்கம்
  5. Goal kick = இலக்கு உதை
  6. corner kick = கோண உதை அல்லது மூலை உதை
கோல் கீப்பர் = பந்து காப்பாளர்
பெனால்ட்டி கிக் = தண்ட உதை
பெனால்ட்டி ஷூட்-அவுட் = சமன்நீக்க உதை
பெனால்ட்டி ஏரியா = அபராதப் பரப்பு
பெனால்ட்டி மார்க் = தண்ட உதைப்புள்ளி அல்லது தண்ட உதைவிடம்
ஃப்ரீ கிக் = தடங்கலற்ற உதை

--AntonTalk 14:32, 19 பெப்ரவரி 2014 (UTC)

சொல்லை மையமாகக் கொண்ட கட்டுரைகள்

தொகு

அடி (இறை-கோட்பாடு), அடி (வினைச்சொல்), அடி (கால்-அடி) இக்கட்டுரைகள் சொல்லை மையமாகக் கொண்டு விளக்கப் பெற்றுள்ளன. விக்சனரிக்கு நகர்த்தலாமா என்று கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:32, 20 பெப்ரவரி 2014 (UTC)

வெறுமனே ஒரு வரியில் எழுதப்பட்ட கட்டுரையானால் விக்சனரிக்கு நகர்த்தலாம். சொல்லைப் பற்றிய விரிவான விளக்கம் மேற்கோள்களுடன் கொடுக்கப்பட்டிருந்தால் இங்கேயே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 20:01, 20 பெப்ரவரி 2014 (UTC)
விளக்கத்திற்கு நன்றி நண்பரே -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:03, 21 பெப்ரவரி 2014 (UTC)

அன்புடையீர்,

நான் இளங்கோ - புதுப்பயனர். நான் ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையை மொழிமாற்றம் செய்து, அதை 'வேர்டு' தொகுப்பில் தட்டச்சு செய்து பின்னர் 'காப்பி' செய்து அதை விக்கிபீடியாவில் 'பேஸ்ட்' செய்துவிட்டு முன்தோற்றம் பார்த்தால் கட்டுரையின் வரிகள் நீ..ளமாக (இடது வலமாக) இருக்கிறது. இது ஏன்? இதை எப்படி சரி செய்வது? தயவு செய்து யாராவது விளக்கமளிக்கவும். நன்றி.--குடந்தை இளங்கோ (பேச்சு) 16:51, 24 பெப்ரவரி 2014 (UTC)

ஒரு வரியினை ஆரம்பிக்கும்போது வெற்று-வெளி (empty space) இருக்கக்கூடாது. உங்கள் கட்டுரையில் சரிசெய்துள்ளேன். பாருங்கள்.--நந்தகுமார் (பேச்சு) 20:00, 24 பெப்ரவரி 2014 (UTC)
உங்கள் தொகுப்பையும், எனது திருத்தத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 20:02, 24 பெப்ரவரி 2014 (UTC)

திருவழிபாட்டு ஆண்டின் வாரங்க எத்தனை

தொகு

திருவழிபாட்டு ஆண்டின் வாரங்க எத்தனை

  • திருவழிபாட்டு ஆண்டு என்னும் கட்டுரையைப் பாருங்கள். இது கத்தோலிக்க திருச்சபை வழிபாட்டின் அடிப்படையில் கணக்கிடும் ஆண்டு ஆகும். இந்த வழிபாட்டு ஆண்டு என்பது நவம்பர் மாதம் 27இலிருந்து திசம்பர் 3 வரையிலான ஒரு ஞாயிற்றுக் கிழமை தொடங்கும். அதுவே திருவருகைக் காலத்தின் தொடக்கம். நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் கழிந்ததும் திசம்பர் 25இல் கிறித்து பிறப்பு விழா கொண்டாடப்படும். அதன் பிறகு 5 முதல் 9 வாரங்கள் வரை “பொதுக்காலம்” ஆகும். அதன்பின் பெப்ருவரி 8இலிருந்து மார்ச்சு மார்ச்சு 7க்கு உட்பட்ட ஒரு புதன் கிழமையில் சாம்பல் புதன் கொண்டாடப்படும். அதிலிருந்து நாற்பது நாள்கள் தவக்காலம் ஆகும். அதன் இறுதியில் இயேசுவின் உயிர்த்தெழுதல் விழா மார்ச்சு 26இலிருந்து ஏப்பிரல் 22 வரையிலான நாள்களில் ஒரு ஞாயிறன்று கொண்டாடப்படும். அதிலிருந்து நாற்பது நாள்களுக்குப் பின் இயேசுவின் விண்ணேற்ற விழா மே மாதம் 4இலிருந்து மே மாதம் 31 வரையிலான ஒரு வியாழக்கிழமை கொண்ட்டாடப்படும். பத்து நாள்களுக்குப் பின், 14 மே மாதம் 14ஆம் நாளிலிருந்து சூன் 10ஆம் நாளுக்கு உட்பட்ட ஞாயிறறன்று பெந்தெகோஸ்து விழா கடைப்பிடிக்கப்படும். அதிலிருந்து 6 முதல் 10 வாரங்கள் மீண்டும் “பொதுக்காலம்” ஆகும். அதன் முடிவில் அடுத்த வழிபாட்டு ஆண்டு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறிலிருந்து மீண்டும் தொடங்கும். ன்இறுதியில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்கும்.

இவ்வாறு “திருவழிபாட்டு ஆண்டு” என்பது ஏறக்குறைய 365 நாள்கள் கொண்ட ஆண்டாக உள்ளது. இங்கு மிக மையமான ஒரு கொண்டாட்டம் இயேசு உயிர்த்தெழுந்த விழா. அது கொண்டாடப்படுகின்ற ஞாயிறு, சந்திர நாட்காட்டியின்படி தீர்மானிக்கப்படும். கிறித்து பிறப்பு விழா எல்லா ஆண்டுகளிலும் திசம்பர் 25ஆம் தேதிதான் நிகழும். அதிலிருந்து முன் கணக்காக திருவருகைக் கால 4 ஞாயிறுகள் நிர்ணயிக்கப்படும்.--பவுல்-Paul (பேச்சு) 20:23, 26 பெப்ரவரி 2014 (UTC)

தமிழில் பெயர் வைக்க உதவி

தொகு

Roots: The Saga of an American Family என்ற நாவல் தமிழில் ஏழு‍ தலைமுறைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. பக்கத்திற்கு‍ என்ன தலைப்பிடுவது‍... --Suthir

’ஏழு தலைமுறைகள் (புதினம்)’ என்று தலைப்பிடலாம். புத்தகத்தின் அட்டையில் [1] ’ஏழு தலைமுறைகள்’ என்றுதான் உள்ளது.--Booradleyp1 (பேச்சு) 14:41, 1 மார்ச் 2014 (UTC)

  விருப்பம்--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:36, 6 ஏப்ரல் 2014 (UTC)

விகிபீடியாவில் உள்ள கட்டுரைகளுக்கு ஆதாரங்கள்/மேற்கோள் இணைப்பது எப்படி?

தொகு

நீங்கள் கட்டுரையை தொகுக்கும்போது வலது கீழ் பக்கத்தில் Prove-it நீட்சி இருக்கும் அதில் Add Reference எனும் பொத்தானை அழுத்தி கேட்கும் தகவல்களைக் கொடுக்கவும். --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 06:30, 3 மார்ச் 2014 (UTC)

விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:04, 3 மார்ச் 2014 (UTC)

புது பயனர் - யு.முரளிதரன்

தொகு

வணக்கம்,

இங்கு தகவல்கள் அதிகமாக இருப்பதால் புரிவதுபோல் இருந்தாலும் குழப்பம் அதிகம். தமிழ் தட்டச்சு பழகியதில் இங்கு உள்ள தட்டச்சு முறை பயன்படுத்துவது சற்று கடினமாக உள்ளது. ஜீ-டாக் மூலம் அலைபேசியிலும், கணிணியிலும் முழு நேரம் தொடர்பில் இருப்பேன். இதை உள்ளிடு செய்ய 10 நிமிடங்கள் ஆயின. ஆவலாக இருக்கிறே்ன உதவுங்கள்.

நன்றி. யு.முரளிதரன். Y.MURALIDHARAN@GMAIL.COM

sanga kala oviyam

நண்பருக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:46, 6 ஏப்ரல் 2014 (UTC)

தகவல் பெட்டி

தொகு

தகவல் பெட்டிகளுக்கான வார்ப்புருக்கள் எத்தனை வகை இருக்கின்றன? அவற்றை பெற எங்கு செல்லவேண்டும்? அதற்குரிய இணைப்பை உதவி ஆவணங்களில் வெளியிட்டால் உதவியாக இருக்கும். - Uksharma3 (பேச்சு) 08:11, 17 மார்ச் 2014 (UTC)

தகவற்சட்டங்களுக்கான வார்ப்புருகளை பகுப்பு:தகவல் பெட்டிகள் என்பதனைச் சொடுக்கி அறிந்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:49, 6 ஏப்ரல் 2014 (UTC)

இரு கட்டுரைகளை இணைத்தல்

தொகு

இரு கட்டுரைகளை இணைப்பதற்கு உதவி தேவை.

  • ராகினி

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)

  • ராகினி (திரைப்பட நடிகை)

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF

07:48, 14 ஏப்ரல் 2014 (UTC)

வெளியிணைப்புகள் குறித்து உதவி தேவை

தொகு

உசாத்துணை என்றால் என்ன? உசாத்துணையும் வெளியிணைப்புகளும் வெவ்வேறா அல்லது இரண்டுமே ஒன்றுதானா? ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும்போது, ஆங்கிலப்பக்கங்களில் இருக்கும் References பகுதியை அப்படியே வெட்டி ஒட்டினால் போதுமா அல்லது அதையும் (அதில் உள்ள இணையப் பக்கங்களுக்கான இணைப்புகள், புத்தகங்களின்/கட்டுரைகளின் பெயர்கள், ஆசிரியரின் பெயர்) தமிழாக்கம் செய்ய வேண்டுமா?

உசாத்துணை = Reference, வெளியிணைப்பு = External link. பொரும்பாலானவை ஆங்கில புத்தகங்களாக இருப்பதால், தமிழாக்கம் தேவையில்லை என்பது என் கருத்து. --AntonTalk 00:55, 21 ஏப்ரல் 2014 (UTC)

உதவி

தொகு

வார்ப்புரு மொழிமாற்றம் குறித்து அறிந்தவர்கள் இதை [[2]] மொழிபெயர்த்து உதவினால் உதவியாக இருக்கும்--நந்தகுமார் (பேச்சு) 09:31, 21 ஏப்ரல் 2014 (UTC)

இது த.வி.யில் வேறு பெயரில் இல்லையா? --AntonTalk 12:11, 21 ஏப்ரல் 2014 (UTC)
பார்க்க: பேச்சு:தோரியம்.--Kanags \உரையாடுக 08:33, 22 ஏப்ரல் 2014 (UTC)

ஒலிபெயர்ப்பு

தொகு

பயனர்:Thilakshan (பேச்சு)

  • Jupiter Ascending
  • Teenage Mutant Ninja Turtles
  • The Hundred-Foot Journey
  • Let's Be Cops
  • யூப்பிட்டர் அசென்டிங்ஸ்
  • டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்ஜா டேட்டில்ஸ்
  • த ஹன்ரட் பூட் ஜேனி
  • லெட்ஸ் பி கோப்ஸ்

--AntonTalk 12:31, 21 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி பயனர்:Thilakshan

  • The Hundred-Foot Journey என்பதற்கு த ஹன்ரட் பூட் ஜேர்னி என்றும் குறிப்பிடலாம்.
  • Jupiter Ascending ஒருமையில் வருவதால் யூப்பிட்டர் அசென்டிங் என்று குறிப்பிடலாம்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 08:25, 22 ஏப்ரல் 2014 (UTC)
யூப்பிட்டர் அசென்டிங் என்பது சரி. ஜேர்னி என்பது ஜேனி என்று உச்சரிப்பதே சரி. --AntonTalk 14:58, 28 ஏப்ரல் 2014 (UTC)
  • Noah
  • Dawn of the Planet of the Apes

பயனர்:Thilakshan (பேச்சு)

  • நோவா
  • டோன் ஒப் த பிளனட் ஒப் தி ஏப்ஸ்

--AntonTalk 14:58, 28 ஏப்ரல் 2014 (UTC)

அறிவியல் தலைப்புக்கள்

தொகு

அறிவியல் தொடர்பான பல தலைப்புக்களை தொகுப்பாளர்களே புதிதாக உருவாக்குகின்றனர் போல உள்ளது. உதாரணமாக காழ் (Xylem) என்ற கட்டுரையில் உள்ளடக்கம், தலைப்பு சரியாக உள்ளது. எனினும் அதில் உள்ள காழ்க்கலன் என்பதை அழுத்தினால் காழ்க்கலன் என்ற தலைப்புடைய, பிழையான உள்ளடக்கமுடைய கட்டுரை வருகிறது. காழ்க்கலன் என்பது Xylem Vessels என்பதையே குறிக்க வேண்டும். எனினும் காழ்க்கலன் என்ற பதத்தால் அக்கட்டுரை Tracheids எனப்படும் குழற்போலியைக் குறித்து நிற்கின்றது. Xylem vessels என்பதற்காக காழ்க்குழாய் என்ற கட்டுரையை உருவாக்கி உள்ளனர். உண்மையில் காழ்க்குழாய் என்றொரு சொல் பயன்படுத்தப்படுகின்றதா? இலங்கையில் பின்வருமாறு பயன்பாட்டில் உள்ளது:

  • Xylem vessels- காழ்க்கலன்
  • Tracheids- குழற்போலி

தமிழ்நாட்டில் உள்ள பயன்பாட்டை அறிய விரும்புகிறேன். இது இரண்டு கட்டுரைகள் தொடர்பான சர்ச்சை என்பதால் இங்கு குறிப்பிட்டிருக்கின்றேன்.--G.Kiruthikan (பேச்சு) 07:42, 1 மே 2014 (UTC)[பதிலளி]

எரிச்சி உதவி

தொகு

எரிச்சி என்ற தலைப்பில் எனது கிராமத்தின் வரலாற்ரை எழுதி வருகிறேன், எனது கட்டுரை தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறது இதற்கு காரனம் என்னவென்று என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை, எனது கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். sivaram1mail@gmail.com.

நீக்க பட்ட பகுதி https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&diff=1649901&oldid=1649900

உங்களுக்கு உங்கள் பயனர் பக்கத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுரையின் தொகுப்பு வரலாற்றிலும் குறிப்பு எள்ளது. --AntonTalk 05:51, 9 மே 2014 (UTC)[பதிலளி]

படிமங்கைளப் பதிவேற்ற

தொகு

மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் விக்கிபீடியாேவாடு ெதாடர்பு. படிமங்கைளப் பதிேவற்றுவது எப்படி? பற்றி விளக்குமாறு ேவண்டிக்ெகாள்கிேறன்.

படிமங்கைளப் பதிவேற்ற இங்கு பார்க்கவும்--நந்தகுமார் (பேச்சு) 19:08, 3 மே 2014 (UTC)[பதிலளி]

கட்டுரைகளை இணைத்தல்

தொகு

உயிர்த்தோற்றம், மற்றும் உயிர்களின் தோற்றம் என்ற இரு கட்டுரைகளும் ஒன்றையே குறிக்கின்றன. இரண்டையும் இணைத்து ஒரு கட்டுரை ஆக்கலாமே? இரண்டிற்கும் ஆங்கிலத்தில் Abiogenesis என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.--G.Kiruthikan (பேச்சு) 05:39, 9 மே 2014 (UTC)[பதிலளி]

இணைக்க வேண்டிய கட்டுரைகளுக்கு முறையே {{mergeto}}, {{mergefrom}} ஆகிய வார்ப்புருக்களை இடுங்கள். --AntonTalk 05:48, 9 மே 2014 (UTC)[பதிலளி]

நான் விக்கிபீடியாவில் எனது ஆக்கங்களைத் தொகுக்க விரும்புகின்றேன். எழுத வேண்டிய பகுதியில் எழுதித் 'தொகு' என்பதை அழுத்திய பின் எனது பக்கத்தில் அந்த ஆக்கம் தொகுக்கப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு பார்த்தறிவது?

மேலும் ஆக்கங்களுக்கு இடையே அதனுடன் தொடர்புடைய புகைப்படங்களை இணைப்பதாயின் எவ்வாறு இணைக்க வேண்டும்?

நான் ஒரு புதுப் பயனர். நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. தயவு செய்து பதிலளியுங்கள். உங்களின் பதிலைக்கூட நான் எவ்வாறு பார்த்தறிய வேண்டும் எனத் தெரியாதவனாக இஇருக்கின்றேன்.

எதிர்பார்ப்புடன்

புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்

வணக்கம் புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்,

தமிழ் விக்கிப்பீடியாப் பக்கத்தின் வலது மேல் மூலையில் பங்களிப்புகள் என்பதைச் சொடுக்கினீர்களானால் உங்களின் கட்டுரைகள் தொடர்பான விவரங்கள் கிடைக்கும். புகைப்படங்களை இணைப்பது தொடர்பான உதவிக்கு இங்கே சொடுக்குங்கள். மேலதிக உதவிகள் வேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள். உங்களுக்கு உதவ பலரும் காத்திருக்கிறோம். தாங்கள் முகநூல் (Facebook) பயன்படுத்துபவராக இருந்தால் இங்கே இணைந்திடுங்கள் நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 01:06, 15 மே 2014 (UTC)[பதிலளி]

புவி.எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், ஒவ்வொரு கட்டுரையிலும் தொகு எனும் இணைப்பிற்கு அருகில் உள்ள வரலாற்றைக்காட்டவும் எனும் இணைப்பில் நீங்கள் செய்த மாற்றங்களின் எண்ணிக்கை மற்றும் பங்களித்த பைட்டுகளின் அளவு ஆகியவற்றை அறிந்துக்கொள்ளலாம். --நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:15, 15 மே 2014 (UTC)[பதிலளி]

படிமங்கள் முரண்பாடு

தொகு

ஒரே விடயத்தைக் குறிக்கும் இரு படிமங்கள் உள்ளன. எப்படிமத்தை பயன்படுத்துவது நல்லது?

 
 

. ஒன்றை நான் உருவாக்கியிருந்தேன். எனது படிமத்தில் இலங்கை வழக்குக் கலைச் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.--G.Kiruthikan (பேச்சு) 13:02, 23 மே 2014 (UTC)[பதிலளி]

கிருத்திகன், பொதுவகத்தில் பகுப்புகளை தமிழில் உருவாக்காதீர்கள். ஆங்கிலத்தில் இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 13:08, 23 மே 2014 (UTC)[பதிலளி]
நன்றி. அவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு இரு படிமங்கள் வந்திருக்காது. இனிமேல் இவ்வாறு நடைபெறாமல் பார்த்துக்கொள்கிறேன்.--G.Kiruthikan (பேச்சு) 13:50, 23 மே 2014 (UTC)[பதிலளி]

இணைப்பது எப்படி?

தொகு

நான் https://ta.wikipedia.org/wiki/கூகுல்_குறு_மொழி என்ற பக்கத்தை உருவாக்கி இருக்கின்றேன். இதை https://en.wikipedia.org/wiki/Google_Apps_Script-இல் இணைக்க வேண்டும். நான் ஒவ்வொரு முறையும் இதைச் செய்யும்போது "page not found" என்ற பிழை வருகின்றது. நன்றி, வணக்கம்.

 Y ஆயிற்று! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:04, 6 சூன் 2014 (UTC)[பதிலளி]

செல்வசிவகுருநாதன் அவர்கட்கு: "கூகுல்" என்றுதானே இருக்க வேண்டும், "கூகுள்" என்று மாற்றப் பட்டுள்ளது. நன்றி, வணக்கம்.

கட்டுரை

தொகு

நான் "எளிய மகாபாரதம்" என்ற பாரத சுருக்கத்தை விக்கியில் ஏற்றினேன். நண்பரொருவர் இது விக்கியியிற்க்கு உகந்தது அல்ல எனவும் விக்கியிலிருந்து எடுக்கச் சொல்லியுள்ளார்.

தாங்கள் எனது பதிவைப் பார்த்து விளக்கவும்.

அன்புடன்

பாஸ்கர்

விக்கிப்பீடியாவில் சொந்தக் கட்டுரைகளை எழுதக்கூடாது. அதனால் உங்களுடைய கட்டுரையை நீக்கப்பட்டிருக்கும். இதனைப் பார்க்கவும்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:28, 8 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கித் தரவில் இணைக்க முடியவில்லை

தொகு

விக்கித் தரவில் கடந்த இரு நாட்களாக தமிழ்க் கட்டுரைகளை இணைக்க முடியவில்லை. வேறு யாருக்கும் இப்பிரச்சினை உள்ளதா?--Kanags \உரையாடுக 13:06, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]

இதுவரைக்கும் வேறு மொழிக் கட்டுரைகள் ஒன்று கூட இணைக்கப்படாத கட்டுரைகளுக்கு எனக்கும் வரவில்லை. எ.கா. கடுங்கோன்

ஏற்கனவே குறைந்தது ஒரு மொழி கட்டுரையாவது இணைக்கப்பட்டிருப்பின் அது பாப் அப்பு திற்க்காமல் நேரே விக்கத்தரவிறகு நகர்ந்து விடுகிறது. அதில் செய்ய முடிகிறது. எ.கா. அரிகேசரி

எனில் பாபப்பில் தான் சிக்கல். நீங்கள் நேரடியாக விக்கித்தரவு சென்றீர்களா? இல்லை தமிழ் விக்கிக்கட்டுரையில் இருந்து விக்கித்தரவு போக முயன்றீர்களா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:14, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப் பக்கத்தில் இருந்து விக்கித்தரவுக்கு சென்று இணைக்க முயன்றேன். இரண்டு நாட்களாக இப்பிரச்சினை உள்ளதாகத் தெரிகிறது. வேறு மொழிக்காரர்களும் முறையிட்டுள்ளார்கள். நீங்கள் அரிகேசரி கட்டுரைக்கு சென்ற ஆண்டே இணைப்புத் தந்திருக்கிறீர்களே:) இது புதிய பிரச்சினை.--Kanags \உரையாடுக 13:29, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]
எனக்கும் அவ்வாறு நேர்ந்தது (காண்க:பயனர் பேச்சு:Shrikarsan#உதவி தேவை)--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:45, 13 சூன் 2014 (UTC)[பதிலளி]
இன்னும் இப்பிரச்சினை தீரவில்லை போல் தெரிகிறது. இடைக்காலத் தீர்வாக பின்வரும் பரிந்துரையைப் பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது வேலை செய்கிறது: //It does not work to cut-and-paste the article name and click save. It works when deleting the last charachter and select the right value from the suggestion-list.//.--Kanags \உரையாடுக 22:17, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]
இங்கு விக்கித்தரவு இணைப்பு பிரச்சனை எதுவுமில்லை. ஆனால், புகுபதிகை செய்ய 1-2 நிமிடங்கள் ஆகிறது. முன்பு நொடிகளில் புகுபதிகை செய்துக்கொண்டிருந்தேன்--நந்தகுமார் (பேச்சு) 05:26, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]
இணைப்புப் பிரச்சினை பலருக்கு உள்ளது. சிலருக்கு இல்லை. நீங்கள் அச்சிலரில் ஒருவர் போலும்:)--Kanags \உரையாடுக 06:58, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் எந்த மாதிரியான கருத்துக்களை எழுதுவது ?

தொகு

விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. எந்த மாதிரியான கட்டுரைகளை எழுதுவதேன்றோ, எப்படி அந்த கட்டுரைகளை பதிவு செய்வதென்றோ எனக்கு தெரியவில்லை. தங்களது உதவி வரவேற்கப்படுகிறது.

என்றும் அன்புடன், சகாய அருண் ஜோஸ்

முதலில் உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்கினால் நன்று சகாய அருண் ஜோஸ் அவர்களே.-- மாதவன்  ( பேச்சு  ) 14:12, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:உதவி பக்கத்தைப் பாருங்கள். மேலும் உதவி தேவையெனின் கேளுங்கள்.--கலை (பேச்சு) 22:20, 14 சூன் 2014 (UTC)[பதிலளி]

இப்பகுதிக்கு புதுமுகமாகிய நான், தமிழ் விக்கிப்பீடியாவில் "கத்தோலிக்க புனிதர்களின் சரித்திரம்" பற்றிய கட்டுரைகளை எழுத விழைகிறேன். பல கத்தோலிக்க புனிதர்களின் சரித்திரம் ஆங்கிலத்திலும், சிலரின் சரித்திரம் மட்டும் தமிழிலும் தற்போது கிடைக்கப் பெறுகிறது. எனக்கு தயவுசெய்து உதவுங்கள்...

கட்டுரைகள் குறித்து.

தொகு

வணக்கம், கலைக் களஞ்சியத்திர்க்கான கட்டுரை என்று எவற்றை எழுதலாம்.? நான் கடந்த சில மணித்துளிகளுக்கு முன்பாககவிஞர் கோசின்ரா எழுதிய பூனையின் கடவுள் என்ற நூல் குறித்த ஒரு அறிமுகக் கட்டுரையை இதில் பதிவு செய்தேன்.ஆனால்,அது நீக்கப் பட்ட பதிவாக விக்கிப்பீடியா தெரிவிக்கிறது. ஒரு கவிஞரைப் பற்றிய,அவரது கவிதைகள் பற்றிய அறிமுகம்,அது குறித்த செய்திகள் என்பது,இதில் விதிமுறை மீறலா..? என எனக்குத் தெரியவில்லை. அல்லது எனக்கு உரிய முறையில்,இங்கு பதிவு செய்யத் தெரியவில்லையா. என்றும் புரியவில்லை. இந்த பகுதியில் நிறைய எழுதவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது.எனவே தங்களுக்கு வாய்ப்பு இருக்கும்போது, விளக்கமாக எனக்கு பதில் அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.அதன்படி இனி எனது பதிவுகளைத் தொடரவும் முடியும்.! அன்புடன் பொள்ளாச்சி அபி

வணக்கம்! கவிஞரைப் பற்றிய, அவரது கவிதைகள் பற்றி செய்திகள் எழுதுவது சரியே. நூல் பற்றி எழுதுவதும் சரியே. ஆனால், நூல் குறித்த அறிமுக உரைகள் கலைகளஞ்சியக் கட்டுரை ஆகாது.. நன்றி --நந்தகுமார் (பேச்சு) 16:38, 15 சூன் 2014 (UTC)[பதிலளி]

பாலின்ட்ரோம்

தொகு

தமிழில் புதிய பாலின்ட்ரோம் வாா்த்தைகளை கடந்த ஒரு மணி நேரம் முன்பாக எழுதிவிட்டு விடுபதிகை செய்தேன். மறுபடியும் இப்போது பாா்ப்பது எப்படி?

பாலின்ட்ரோம்

தொகு

தமிழில் புதிய பாலின்ட்ரோம் வாா்த்தைகளை கடந்த ஒரு மணி நேரம் முன்பாக எழுதிவிட்டு விடுபதிகை செய்தேன். மறுபடியும் இப்போது பாா்ப்பது எப்படி?

வணக்கம். மாலை மாற்று (Palindrome) என்னும் கட்டுரை ஏற்கனவே உள்ளது. நீங்கள் அதை விரிவாக்குவதன் மூலம் உங்கள் பங்களிப்பைத் தர வேண்டுகிறேன்.நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 22:15, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]
நன்றி நந்து (இப்படி செல்லமாக உங்களை அழைக்கலாம் அல்லவா.?!). மாலைமாற்று மட்டுமல்லாமல் மற்ற கட்டுரைகளை விாிவாக்குவது எப்படி? விாிவாக விளக்குவீா்களா?
  • எப்படி பங்களிப்பது, கட்டுரைகளை விரிவாக்குவது என்பதுக் குறித்த விரிவான விளக்கத்திற்கு இங்கு பாருங்கள்.
  • உங்கள் செய்திகளுடன் கையெழுத்திட மறக்காதீர்கள். தொகுவை அழுத்தியவுடன் வரும் மேற்பட்டையில் மூன்றாவதாக உள்ள பென்சில் உருவத்தைச் சொடுக்குவதன் மூலம் உங்கள் கையெழுத்தினை அனைத்து உரையாடல்களிலும் இட முடியும்.
  • உங்கள் கேள்வியில் ஒருங்குறி (Unicode) இல்லை. கட்டுரைகள் ஒருங்குறியில் இல்லாவிட்டால் நீக்கப்படும் நிலை ஏற்படும். கவனத்தில் கொள்ளுங்கள்.
  • இன்றே பங்களிக்கத் தொடங்குங்கள்!--நந்தகுமார் (பேச்சு) 19:02, 22 சூன் 2014 (UTC)[பதிலளி]

சீனாபுரம்

தொகு
  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

ஈரோடு மாவட்டம்- பெருந்துறை வட்டத்தில் உள்ள சீனாபுரம் எனும் ஊாில் தமிழ் இலக்கண நுாலான 'நன்னுால்'ஐ இயற்றிய பவணந்தி முனிவாின் கோவில் உள்ளது. இது குறித்து யாரேனும் விாிவான ஆய்வுகள் செய்வாா்களா?

சீனாபுரம் அல்லது பவணந்தி முனிவர் கோயில் பற்றிய கட்டுரைகள் எதுவும் இல்லை. நீங்களே உங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டு கட்டுரைகளை ஆரம்பியுங்கள்.--Kanags \உரையாடுக 22:39, 22 சூன் 2014 (UTC)[பதிலளி]

புதிய கட்டுரை எழுதுவது எப்படி?

தொகு
  • புதிய கட்டுரை எப்படி எழுதுவது, கட்டுரைகளை விரிவாக்குவது என்பதுக் குறித்த விரிவான விளக்கத்திற்கு இங்கு பாருங்கள்.
  • உங்கள் செய்திகளுடன் கையெழுத்திட மறக்காதீர்கள். தொகுவை அழுத்தியவுடன் வரும் மேற்பட்டையில் மூன்றாவதாக உள்ள பென்சில் உருவத்தைச் சொடுக்குவதன் மூலம் உங்கள் கையெழுத்தினை அனைத்து உரையாடல்களிலும் இட முடியும்.
  • இன்றே பங்களிக்கத் தொடங்குங்கள்!--நந்தகுமார் (பேச்சு) 17:11, 29 சூன் 2014 (UTC)[பதிலளி]

i have created one tamil article but i cant create inbox nor upload any images to page.can anyone help?--−முன்நிற்கும் கருத்து ‎27.63.5.113 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

நீங்கள் எந்தக் கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்? பயனர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து புகுபதிகை செய்து பங்களிப்பீர்கள் ஆனால் உங்களுக்கு உதவி செய்வதற்கு எமக்கு வசதியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 08:08, 10 சூலை 2014 (UTC)[பதிலளி]

srilanka foreign policy

தொகு

srilanka foreign policy details

location map

தொகு

இதற்கு எந்த தமிழ்ப் பதத்தை பயன்படுத்தலாம்??? இடக்குறிப்புப் படம்?, இடப்படம், உங்கள் பரிந்துரைகள்...???--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 06:40, 26 சூலை 2014 (UTC) [பதிலளி]

எனது பரிந்துரை:நிலப்படத்தில் அமைவிடம்--மணியன் (பேச்சு) 07:29, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]

en:Holly - இம்மரத்திற்கான தமிழ்ப் பதம் என்ன? --AntonTalk 14:27, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல்

தொகு

--AntonTalk நான் உருவாக்கிய எந்த கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா?

நன்றி --JeyTalk 14:27, 26 சூலை 2014 (UTC)[பதிலளி]

புரிதலுக்காக..

தொகு

1.பத்திரிக்கை மற்றும் இதழ்களின் வலைப்பூக்கள் http://blog.dinamani.com/ (தினமணி), http://srkvijayam.com/ (ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்) போன்றவை கூட மேற்கோள்களாகச் சுட்டப்படக்கூடாதா? இல்லை சுட்டலாமா?

2.பல மேற்கோள்கள் கொண்ட "எண்ணங்களின் சங்கமம்" தலைப்பிலான கட்டுரைக்கு "குறிப்பிடத்தக்கமை வேண்டுகோள்" தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு மேற்கோள் கொண்ட "பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை" அறக்கட்டளை தலைப்பிலான கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே எந்த விதமான கட்டுரைகள் தமிழ் விக்கியில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதப்படும் என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். −முன்நிற்கும் கருத்து ‎Kuzhali.india (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சில கட்டுரைகளில் பிழை இருக்கின்றன என்பது உண்மை தான். அவற்றை விரைவில் திருத்தி வருகிறோம். அவற்றை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டாம். ”அவற்றை ஏற்றுக் கொண்டதாகவோ, உங்களுடையதில் குறை காண்பதாகவோ கருத வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.” தமிழ் விக்கிப்பீடியாவில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் செய்யப்படுகின்றன. தன்னார்வலர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ள போதும், கூடிய வரையிலும் கவனித்து திருத்தி வருகிறோம். ஏதாவது ஒன்றிரண்டு கட்டுரைகள் விடுபட்டிருக்கக் கூடும். :( எந்த கட்டுரையில் தவறு இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள். ”யாருக்கும் பாரபட்சம் எதுவும் இல்லை என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.” நீங்கள் குறிப்பிட்ட இணையதளங்களில் இருந்து சான்றுகளை தரலாம். நம்பத்தகுந்த எந்த தளத்தையும் சான்றாகக் காட்டலாம். நீங்கள் குறிப்பிட்ட தளங்களில் நம்பத்தகுந்த தகவல் இல்லாத பட்சத்தில் மட்டும் அவற்றை நீக்கக்கூடும். சொந்தக் கருத்தை எழுதும் ஒருவரின் இணையதளம், ஒரு கருத்தியலை உயர்த்தி/தாழ்த்தி தம் கருத்தை வெளியிடும் இணையதளம் போன்றவற்றை சேர்க்கக் கூடாது. விதிவிலக்குகள் உண்டு. எ.கா: பிரபலமான நாளேடு, அரசியல் ரீதியாக தம்மைச் சார்ந்த ஒன்றைப் பற்றி உயர்த்தியோ, பழிவாங்கும் நடவடிக்கையில் எதிர்தரப்பினரைப் பற்றிய தவறான தகவல்களையும் வெளியிடுவதுண்டு. அத்தகைய சூழல்களில் அந்த தளங்களை சான்றாகக் காட்ட முடியாது. உங்களுக்கு உதவி தேவைப்படும்பொழுது கேட்கத் தவறாதீர். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:37, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

பயனர்:Kuzhali.india உயர் நம்பகத்தன்மை உடைய ஒன்றுக்கு மேற்பட்ட சார்பற்ற சான்றுகள் வரவேற்கப்படுகின்றன. பெரும்பாலும், நாளிதழ் சான்றுகள் ஏற்றுக்கொள்ளப்படும். வலைப்பதிவுச் சான்றுகளை இயன்ற வரை தவிர்க்கலாம். வேறு ஏதும் இல்லாவிட்டால், வலைப்பதிவுச் சான்றைத் தரலாம். ஆனால், அது மதிப்பு குறைவான சான்றாகவே பார்க்கப்படும். எண்ணங்களின் சங்கமம் கட்டுரையில் என்ன சிக்கல் என்று அதன் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கிறேன். பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை கட்டுரையில் உள்ள சிக்கலைக் குறித்து தெரிவித்தமைக்கு நன்றி. அதன் பேச்சுப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளேன். இது போல் தமிழ் விக்கிப்பீடியாவின் பல பக்கங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. போதுமான பங்களிப்பாளர் வளம் இல்லாததே சிக்கல். மற்றபடி, குறிப்பிட்ட தலைப்புகள் பற்றி சார்புடன் செயல்படுகிறோம் என்று எண்ண ஏதும் இல்லை. நீங்களும் இந்தப் பணியில் தர மேம்பாட்டுப் பணியில் இணைந்து உதவ வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:50, 11 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

டுவோலிங்கோ (Duolingo) கட்டுரை தொகுக்க அழைப்பு

தொகு

டுவோலிங்கோ விக்கிப்பீடியாவைப் போன்றே பயனர்களால் பங்களிக்கப்பட்டு மேம்படுத்தப்படும் ஒரு செயல்பாடு. இதனைப் பற்றிய தகவல்களும் உரையாடல்களும் தமிழ் இணையவெளியில் அவ்வளவாகக் காணக் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த விக்கிப்பீடியா பக்கம் ஒரு முக்கிய துவக்கமாக இருக்கவெண்ணி இப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாம் அனைவரும் இணைந்து மேம்படுத்த வேண்டும். ஒரு பயனர் மட்டுமே தொகுக்கும் கட்டுரைகள் நீக்கப்படுகின்றன. எனவே இக்கட்டுரையை ஆங்கில விக்கிப்பீடியாவை அடிப்படையாகக் கொண்டு பலரும் மொழி பெயர்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

--BalajiBBI (பேச்சு) 22:32, 28 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:கொழுப்புகள், எண்ணெய்கள்

தொகு

நீங்கள் உருவாக்கிய வார்ப்புரு:கொழுப்புகள், எண்ணெய்கள் என்ற தகவல்சட்டம் {{translate}} என்ற வார்ப்புருவால் பயன்படுத்தப்பட்ட கட்டுரைகளில் அக்கட்டுரைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாக தவறாக வருகிறது. பார்க்க அரிசித் தவிட்டு எண்ணெய். மேலும் கைபேசி பார்வையில் தகவல்சட்டமே வரவில்லை. அதையும் சற்று சரிபார்க்க! நன்றி - தமிழ்த்தம்பி (பேச்சு) 06:54, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் தமிழ்த்தம்பி!
  • இந்தத் தகவல்சட்டத்தில் உள்ள சில ஆங்கிலப் பெயர்களுக்கு எனக்கு தமிழில் பெயர் தெரியாததால் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வார்புருவை நான்தான் இட்டேன். நீங்களோ அல்லது வேறு பயனர்களோ இப்பெயர்களை மொழிப்பெயர்ப்த்து உதவினால் நன்றாக இருக்கும்.

வார்ப்புரு:SpecialChars பாதுகாப்பு

தொகு

வார்ப்புரு:SpecialChars பாதுகாக்கப்பட்டுள்ளதாக சொன்னாலும் அதனைத் தொகுக்க முடிகிறது. பாதுகாப்பு வார்ப்புருவை மட்டும் சேர்த்து, பாதுகாக்கும் செயலைச் செய்யாமல் விட்டுவிட்டனர் என்று நினைக்கிறேன். இதைச் சரிசெய்வதோடு இது போல் வேறு வார்ப்புருக்கள் உள்ளனவா என்றும் பார்க்கவேண்டும். நன்றி. - தமிழ்த்தம்பி (பேச்சு) 09:25, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் இருந்து தருவித்த போது பாதுகாப்பு வார்ப்புருவை நீக்காமல் விட்டு விட்டார்கள். தமிழ் விக்கியில் இவ்வாறு பல உள்ளன. அவற்றைக் கண்டு நீக்க வேண்டும். இங்கு அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை..--Kanags \உரையாடுக 10:21, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி Kanags. உங்கள் வேகமும் நுட்ப வல்லமையும் அருமை. நானும் இனி இவ்வாறான வார்ப்புருக்கள் பார்த்தால் பாதுகாப்பு வார்ப்புருவை நீக்கிவிடுகிறேன். - தமிழ்த்தம்பி (பேச்சு) 10:58, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
இந்த வார்ப்புரு இணைக்கப்பட்ட வார்ப்புருக்களை சிறப்பு:WhatLinksHere/Template:Pp-template என்ற பக்கத்தில் காணலாம். :) தகாதவற்றை நீக்கலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:07, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
நன்றி! பட்டியல் மிகப்பெரியதாக இருக்கிறது, தானியங்கி மூலம் செய்வதே நுண்ணறிவு! இது தொடர்பில் மொத்தமாக பல கட்டுரைகளில் தேடி மாற்றம் செய்ய மக்கள் என்ன நுட்பம் பயன்படுத்துகின்றனர்? - தமிழ்த்தம்பி (பேச்சு) 19:43, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா கைபேசி தளம் / ஆண்டிராய்டு நிரல் குறித்த கேள்விகள் / புலம்பல்

தொகு

விக்கிப்பீடியாவை பெரும்பாலும் படிக்கவும் தொகுக்கவும் கைபேசியைப் பயன்படுத்துபவனாக சில தடங்கல்களைப் பார்க்கிறேன்:

  1. கைபேசி தளத்திலும் சரி நிரலிலும் சரி முழுக்கட்டுரையையும் ஒன்றாக தொகுக்க வழியிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் பகுதிக்கொரு தொகுப்பாக தேவையில்லாமல் எண்ணிக்கை கூடுவதோடு தொகுப்பதற்கு எளிதாகவும் இருப்பதில்லை. மேலும் புதிய பகுதிகள் உருவாக்க வேறொரு தொடர்பில்லாத பகுதியைத் தொகுக்க வேண்டியிருக்கிறது. (இந்த தொகுப்புகூட அப்படியே செய்யப்பட்டது.)
  2. தொகுப்புச் சுருக்கத்தில் சிறிய தொகுப்பாகக் குறிக்க வழியில்லை. இதனால் பல சிறிய தொகுப்புகள் பொதுத்தொகுப்புகளாகச் சேர்ந்து மற்ற தொகுப்பாளர்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு தொகுப்புகள் பற்றிய புள்ளியியலையும் களங்கப்படுத்தலாம்.
  3. புதிய கட்டுரை தொடங்குவதற்கான நேர்வழி இல்லை. புதுக்கட்டுரை பக்கம் விக்கிப்பீடியா கணிணி பதிப்பிலேயே எப்போதும் திறக்கிறது. தெளிவாக, கணிணி பதிப்பை பேசியில் திறந்து தொகுப்பது அவ்வளவு எளிதானதல்ல.
  4. வார்ப்புருக்கள் ஆதரவை கைபேசி பார்வையில் அவ்வளவாக முதன்மைப்படுத்தவில்லை. சில வார்ப்புருக்கள் கைபேசி பார்வையில் பிழைகள் தருகின்றன. சில வார்ப்புருக்கள் (குறிப்பாக navbox, தகவல்சட்டம்) கைபேசி பார்வையில் தெரிவதே இல்லை.

மேலும் புள்ளிகள் கிடைக்கும்போது இப்பட்டியலை விரிவாக்க உள்ளேன். இதில் சிலவற்றை கணிணியில் நேரம் கிடைக்கும்போது விக்கிப்பீடியா பக்சில்லாவில் ஏற்ற உள்ளேன். ஆனால் சில குறைகள் நான் சரியான தெரிவுகள் செய்யாததாலோ சரியாகப் பயன்படுத்தாததாலோ இருக்கலாம். அப்படி உங்களுக்கு ஏதேனும் தெரிந்தாலும் இவற்றை வேறு வழியில் கைபேசியில் செய்வதற்கு முறை தெரிந்தாலும் இங்கு சொல்லவும். நன்றி! - தமிழ்த்தம்பி (பேச்சு) 20:32, 31 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

#புதிய கட்டுரை தொடங்குவதற்கான நேர்வழி இல்லை. புதுக்கட்டுரை பக்கம் விக்கிப்பீடியா கணிணி பதிப்பிலேயே எப்போதும் திறக்கிறது. தெளிவாக, கணிணி பதிப்பை பேசியில் திறந்து தொகுப்பது அவ்வளவு எளிதானதல்ல.

ஏதேனும் புதுக்கட்டுரையை மற்ற கட்டுரையின் உள்ளிணைப்பிலிருந்து சொடுக்கி ஆரம்பிக்கும்போது கைப்பேசி பதிப்பிலிருந்தே புதுப்பக்கத்தைத் துவக்க முடிகிறது. (அதாவது முகவரியில் &redlink=1 எனும் இணைப்பு உள்ளபோது). --Kuzhali.india (பேச்சு) 07:54, 6 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]

நல்லெண்ண படிமங்களை எவ்வாறு இணைப்பது

தொகு

ஆங்கில விக்கியில் பொதுவக உரிமையில் இல்லத நல்லெண்ண படிமங்களை எவ்வாறு இணைப்பது . உதாரணம் இந்தக் கட்டுரையில் உள்ள இலச்சினை படிமம் .--Commons sibi (பேச்சு) 14:04, 3 செப்டம்பர் 2014 (UTC)

அவற்றை நேரடியாக இணைக்க முடியாது. நல்லெண்ண அடிப்படையில் இங்கு மீண்டும் தரவேற்றப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 20:45, 3 செப்டம்பர் 2014 (UTC)

என்னைப் பற்றிய தகவல்களை விக்கியில் இணைத்தல்.

தொகு

அன்புடையீர்! வணக்கம்! வாழிய நலம்! நான் ஒரு குழந்தை எழுத்தாளர். என்னைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ளது. இருப்பினும் அது செம்மையாக இல்லை என்பதால் தங்கள் உதவி தேவை.அதனைத் தாங்கள் தயவு செய்து சீர்படுத்துமாறு வேண்டும். என்னைப் பற்றிய சுய குறிப்பை இணைப்பது எப்படி?. அன்புடன் ஜெயந்தி நாகரஜன்.

ஜெயந்தி நாகரஜன் அவர்களே வணக்கம் . அக்கட்டுரையில் என்னென்ன தவராக உள்ளன என்பதை இங்கு ஆதாரங்களுடன் தெரிவிக்கவும். கட்டுரை சீர்படுத்தப்படும். --Commons sibi (பேச்சு) 11:09, 6 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம் ஜெயந்தி நாகராஜன். நீங்கள் முதலில் விக்கிப்பீடியாவில் ஒரு பயனராகப் பதிவு செய்யுங்கள். பின்னர் உங்களுக்கென பயனர் பக்கம் ஒன்றை ஆரம்பித்து, அதில் உங்கள் சுய தகவல்களைத் தாருங்கள். விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை எழுதுங்கள். இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கலாம். ஆனாலும், உங்களைப் பற்றிய கட்டுரையை நீங்களே தொகுக்க முடியாது. அவ்வாறு எழுதுவது இங்கு வரவேற்கப்படுவதில்லை. மேலே கூறியவாறு அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:12, 6 செப்டம்பர் 2014 (UTC)

ஒலிக்கோப்புகள் தொடர்பில்

தொகு

ஆங்கிலத்தில் நியாயமான பயன்பாட்டு காரணங்களை ஒட்டி உள்ள ஒலிக்கோப்புகளை (.ogg) எவ்வாறு தரவிறக்கி பின்னர் தமிழ் விக்கியில் தரவேற்றம் செய்வது ? இது தொடர்பாக கட்டுரை குயின் (இசைக்குழு) காண்க. குறிப்பாக ஆங்கில விக்கியிலிருந்து QueenBohemianRhapsody Mama.ogg இந்தக் கோப்பை தமிழ் விக்கிக்கு மாற்ற விரும்புகிறேன்.--மணியன் (பேச்சு) 07:11, 8 செப்டம்பர் 2014 (UTC)

புதிய வார்புரு உருவாக்குதல்

தொகு

வணக்கம் , இந்தக் கட்டுரையில் //இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் // என்று உள்ளது . இந்த சமீபம் என்பது எந்த வருடத்தை சுட்டுகிறது என்ற குழப்பம் பட்டிப்பவருக்கு வரும் . பல செய்திசார் கட்டுரைகளில் இவ்வாறு உள்ளன . [எப்போது?] / [எப்போது?] என்கிற வார்புரு உருவாக்கலாம் என்று நினைக்கிறேன் , உதவி தேவை . --Commons sibi (பேச்சு) 11:58, 8 செப்டம்பர் 2014 (UTC)

செய்துள்ளேன். பொருத்தமாக இருக்கிறதா எனப் பாருங்கள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:28, 8 செப்டம்பர் 2014 (UTC)

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்

தொகு

வணக்கம். முதன்முதலாக ஒத்தாசைப்பக்கத்திற்கு ஒத்தாசை வேண்டி வருகிறேன்.சாரங்கபாணி திருக்கோவில் என்ற கட்டுரையில் உள்ள செய்தி கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் என்பதுடன் தொடர்புடையது. ஆகையால் சாரங்கபாணி திருக்கோவில் என்ற கட்டுரையில் இருந்த செய்திகளை கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் கட்டுரையில் தற்போது இணைத்துள்ளேன். ஒரே கோயிலைப் பற்றி இரு வேறு தலைப்புகள் இருப்பின் அவை குழப்பத்தினை உண்டாக்கும் என்ற நிலையில் இவ்வாறு செய்துள்ளேன். கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் என்ற தலைப்பிலான கட்டுரையை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:56, 10 செப்டம்பர் 2014 (UTC)

பா.ஜம்புலிங்கம் அவர்களே , வழிமாற்று இட்டுள்ளேன்:)பார்த்துவிட்டு மேலும் உதவிதேவையெனில் கூறவும் . நன்றி .--Commons sibi (பேச்சு) 11:29, 10 செப்டம்பர் 2014 (UTC)
நீண்ட வரலாறுள்ள கட்டுரைகளை இவ்வாறு வழிமாற்று மூலம் இணைப்பது தவிர்க்கப்பட வேண்டும். இரு கட்டுரைகளையும் வரலாற்றுடன் இணைக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:58, 10 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம் Commons sibi, பா.ஜம்புலிங்கம் . இரண்டு கட்டுரைகள் ஒரு தலைப்பைப் பற்றி இருக்கும்போது {{mergeto|கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்}} வார்புருவை இடுங்கள். நிருவாகிகளில் ஒருவர் கட்டுரைகளை வரலாற்றுடன் இணைத்துவிடுவார். வழிமாற்றில் அழிக்கப்பட்டப் பக்கத்தின் வரலாறு அழிக்கப்படும் அபாயம் உள்ளது. புரிதலுக்கு நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 12:02, 10 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம் Kanags ,நந்தகுமார் . தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . இனிமேல் அவ்வாறு செய்துவிடுகிறேன் . --Commons sibi (பேச்சு) 12:06, 10 செப்டம்பர் 2014 (UTC)

உங்கள் அனைவருக்கும் நன்றி. தாங்கள் விவாதித்துள்ள பொருண்மை தொடர்பாக ஓரளவு புரிந்துகொண்டேன். இனி முன்கூட்டி தெரிவித்துவிட்டு செய்வேன். ஒத்துழைப்புக்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:26, 10 செப்டம்பர் 2014 (UTC)

கோயில் புகைப்படங்களில் பக்தர்கள் படம்

தொகு

வணக்கம். தேவாரப்பாடல்/மங்களாசாசனம் பெற்ற கோயில்களுக்கு தனியாகவும், புனிதச்சுற்றுலாக் குழுவினரோடும் கலந்துகொண்டு சென்றுவருகிறேன். அவ்வாறாக நான் நேரில் சென்ற கோயில்களில் நான் எடுத்த புகைப்படங்களை தற்போது சில கட்டுரைகளில் இட ஆரம்பித்துள்ளேன். சில புகைப்படங்களில் பக்தர்கள் காணப்படுவதால் அவ்வாறான புகைப்படங்களை வெளியிடலாமா? உதாரணமாக கோயிலையோ/கருவறையையோ/கோயில் மண்டபத்தையோ பின்புலமாகக் கொண்டு பக்தர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அவ்வாறான புகைப்படங்களை நானும் எடுத்துள்ளேன். தற்போது திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் என்ற தலைப்பில் நான்கு புகைப்படங்கள் இட்டுள்ளேன். அதில் நான்காவது புகைப்படம் பக்தர்கள் இறைவனை தரிசிப்பதற்காக வாயிலில் காத்திருக்கும் படமாகும். மற்ற புகைப்படங்கள் பொதுவானவையாகும். நான் இணைத்துள்ள நான்காவது படத்தினை (பக்தர்கள் வாயிலில் காத்திருக்கும் படம்) அப்படியே வைத்துக்கொள்ளலாமா? அல்லது நீக்கிவிடலாமா?என்பதைத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நீக்கப்படலாம் எனக் கருதினால் அன்புகூர்ந்து நான்காவது படத்தை நீக்க வேண்டுகிறேன். நான் அதனை நீக்கவேண்டும் என்று கூறினால் நானே நீக்கிவிடுகிறேன். கருத்தறிந்து தொடர்வேன். நன்றி.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:44, 11 செப்டம்பர் 2014 (UTC)

இவ்வாறான படங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. Wikipedia is not a blog, Web hosting service, social networking service, or memorial site, Commons is not your personal free web host போன்ற காரணங்களினால் நீக்கப்படுகிறது. மேலும், நீங்களே இப்படங்களை எடுத்திடுப்பதனால், பொதுவில் பதிவேற்றுவதால் பிறதிட்டங்களிலும் அப்படிமங்களைப் பயன்படுத்தலாம். --AntonTalk 11:09, 11 செப்டம்பர் 2014 (UTC)

(கோயிலின் முன்பாக பக்தர்கள் அமைந்திருக்கும்) நான்காவது படத்தை தற்போது நீக்கிவிட்டேன். கருத்திற்கு நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:15, 11 செப்டம்பர் 2014 (UTC)

குறிப்பிட்ட ஊர்/ஊரில் உள்ள கோயில் நிலையில் இரு தனித்தனி கட்டுரைகள்

தொகு

வணக்கம். தமிழ்நாட்டில் காவிரி வடகரைத்தலங்கள் என்ற பகுப்பினைச் சரிசெய்தபோது அவற்றில் சில தென்கரைத்தலங்கள் இணைக்கப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. அவற்றை உரிய இடத்தில் சேர்த்தேன். வடகரைத் தலங்கள் 63 மட்டுமே ஆகும். இவ்வாறு செப்பம் செய்தபோது குறிப்பிட்ட ஊர்/ஊரில் உள்ள கோயில் நிலையில் இரு தனித்தனி கட்டுரைகளைக் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். மேலக்கடம்பூர் என்ற தலைப்பில் ஊர் பற்றிய கட்டுரையும், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் என்ற தலைப்பில் கோயிலைப் பற்றிய கட்டுரையும் காணப்படுகின்றன. இரு கட்டுரைகளையும் இணைத்தால் ஏதாவது ஒரு கட்டுரை விடுபடும் நிலை ஏற்படும். அந்நிலையைத் தவிர்க்க கோயில் பற்றிய செய்திகளை கோயில் பற்றிய கட்டுரையில் கொணர்ந்துவிட்டு ஊர் பற்றிய செய்தியை மட்டும் ஊர் பற்றிய கட்டுரையில் (கோயிலைப் பற்றிய செய்திகளை நீக்கிவிட்டு) வைப்பது பற்றி கருத்தறிய வேண்டுகிறேன். அக்கோயிலுக்கு சென்றுள்ள நிலையில் அக்கோயிலைக் குறித்த புகைப்படங்களை அக்கோயிலின் தலைப்பில் சேர்க்க உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். தமிழகத்தில் சிற்பங்களுக்குப் புகழ்பெற்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தங்களின் கருத்தறிந்து தொடர்வேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:02, 12 செப்டம்பர் 2014 (UTC)

புகைப்படங்களை முன்னரே சேர்த்துவிட்டேன். வாய்ப்பிருப்பின் மேலும் புகைப்படங்களை அக்கோயிலின் தலைப்பில் சேர்க்க உள்ளேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:05, 12 செப்டம்பர் 2014 (UTC)

HotCat இணைப்பு முறை

தொகு

வணக்கம். நான் எழுதும் பதிவுகளில் பிறர் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது HotCat முறையில் அமைக்கப்படுவதான குறிப்பு காணப்படுகிறது. அது என்ன என்று எனக்குப் புலப்படவில்லை. அம்முறையை எழுதும்போதே நான் எளிதில் கடைபிடிக்கமுடியுமா? எளிதில் அதை புரிந்துகொள்ளமுடியுமா? எழுதுபவர்களைத் தவிர மற்றவர்கள்தான் HotCat முறையை உபயோகிக்கவேண்டுமா? கட்டுரை எழுதுபவரே இம்முறையைப் பயன்படுத்தி எழுதலாம் என்றால் அந்த முறையைத் தெரிவித்து உதவ வேண்டுகிறேன். எனது கட்டுரைகளை மேம்படுத்திக்கொள்ள இது பயனாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:15, 18 செப்டம்பர் 2014 (UTC)

HotCat என்பது தமிழ் விக்கியில் விரைவுப்பகுப்பி எனப்படுகிறது. இது பகுப்புகளை இட உதவியாக உள்ளது. இதை செயற்படுத்த உங்கள் விருப்பத்தேர்வுகளில் கருவிகள் என்ற தத்தலில் தொகுப்புதவி கருவிகளில் உள்ள விரைவுத்தொகுப்பிக்கு எதிராக டிக் குறியீடு இட வேண்டும். பின்னர் நீங்கள் பார்வையிடும் அனைத்து கட்டுரைகளிலும் பகுப்புகள் காட்டுமிடத்தில் + அல்லது _ காட்டப்படும். இவற்றின் மூலம் பகுப்புகளில் சேர்க்கவோ நீக்கவோ முடியும்.--மணியன் (பேச்சு) 10:37, 18 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம். தாங்கள் கூறியபடி இணைத்துவிட்டேன். என்னால் செயல்படுத்தத் தெரியவில்லை. கட்டுரைகளில் சேர்க்க, நீக்க முடியும் என்றுள்ளதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.தட்டச்சு செய்தியை சேர்க்க அப்படியே செலக்ட் செய்து டெலிட் செய்துவிடலாமே? புதிதாகச் சேர்ப்பதாயின் தட்டச்சு செய்துவிடலாமே? தவிரவும் பகுப்புகள் என்ற தலைப்பில் அண்மையில் நான் உருவாக்கிய கட்டுரையில் புதிய தலைப்பினை அடித்துப் பார்த்தேன். அவ்வாறு தலைப்புகள் இல்லை என்றவாறு வருகிறது. தெளிவு வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:07, 24 செப்டம்பர் 2014 (UTC)

இதற்கான தமிழ்விக்கிக் கட்டுரையில் படத்துடன் விளக்கப்பட்டிருக்கிறது. காண்க:விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி--மணியன் (பேச்சு) 08:32, 24 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம். அண்மையில் எழுதியுள்ள கட்டுரைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். தங்களின் மறுமொழி மிகவும் உதவியாக இருந்தது. நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:55, 25 செப்டம்பர் 2014 (UTC)

வார்ப்புரு உதவி

தொகு

இங்கு கவனிக்கவும். நிரலாளர்களின் உதவி தேவை.--மணியன் (பேச்சு) 04:52, 23 செப்டம்பர் 2014 (UTC)

தொகுத்தல் உதவி - தமிழ்நாடு

தொகு

தமிழ்நாடு குறித்த கட்டுரையில் முதலமைச்சர் பெயரை எவ்வாறு மாற்றுவது? தகவற்சட்டத்தில் அதற்கான வசதி இருப்பதாக தெரியவில்லை. இதற்கான ஆங்கில விக்கி கட்டுரையில் leader_title1 மற்றும் leader_name1 என பயன்படுத்தப்பட்டுள்ளது. அதையே இங்கும் செய்தால் இரு முறை முதலமைச்சர் பெயர் வருகிறது. (முதலில் இருந்தவர் பெயரும், இப்போது நான் சேர்த்த பெயரும்.) இதை சரியான வழியில் தொகுக்க உதவவும். ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 28 செப்டம்பர் 2014 (UTC)

Done.--Kanags
நன்றி Kanags. :) அதை எப்படி செய்தீர்கள் என கூறினால் அடுத்த முறை தொகுக்கும் பொழுது உதவியாக இருக்கும். - ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 20:17, 29 செப்டம்பர் 2014 (UTC)
இந்த வார்ப்புருவில் இற்றைப்ப்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 20:45, 29 செப்டம்பர் 2014 (UTC)
உதவிக்கு நன்றி! அந்த வார்ப்புருவில் சில இணைப்புகளை சேர்த்துள்ளேன். -ஹரீஷ் சிவசுப்பிரமணியன் (பேச்சு) 18:51, 30 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம் நண்பர்களே, எனக்கு யாரவது உதவமுடியுமா? நாலாயிரத்து திவ்ய பிரபந்தம் பாடப்பட்ட காலக் கட்டங்களை எவ்வாறு அறிவது?--−முன்நிற்கும் கருத்து பராசக்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பயனர்:பராசக்தி, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கட்டுரையில் உங்களுக்குத் தேவையான தகவல்கள் உள்ளனவா எனப் பாருங்கள் மேலதிக தகவல் தேவையாயின், அப்பக்கத்தின் உரையாடல் பகுதியில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 12:16, 30 செப்டம்பர் 2014 (UTC)

ரவி சுப்பிரமணியன் அல்ல, ரவிசுப்பிரமணியன்

தொகு

வணக்கம். ரவி சுப்பிரமணியன் என்ற தலைப்பில் அண்மையில் ஒரு பதிவைத் தொடங்கியுள்ளேன். அவருடைய பெயர் ரவிசுப்பிரமணியன் என்று எழுதப்படுவதாக தற்போது அறிந்தேன். ரவிசுப்பிரமணியன் என்ற தலைப்பில் (பெயருக்கு நடுவே இடைவெளியின்றி) மாற்ற உதவ வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 15:05, 30 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம் பா.ஜம்புலிங்கம் அவர்களே . அப்பக்கத்திலேயே படிக்கவும் , தொகு , வரலாற்றைக் காட்டவும் என்பதைத் தொடர்ந்து , More என்கிற இணைப்பு உள்ளதல்லவா ?அதை சொடுக்குங்கள் . நகர்த்தவும் என்று வரும் . பக்கத்தை ரவிசுப்பிரமணியன் என்கிற தலைப்புக்கு நகர்த்திவிடுங்கள் . மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கவும் . நன்றி --Commons sibi (பேச்சு) 16:06, 30 செப்டம்பர் 2014 (UTC)

வணக்கம் Commons sibi . நகர்த்திவிட்டேன். தற்போது சரியாகிவிட்டது என நினைக்கிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 16:15, 30 செப்டம்பர் 2014 (UTC)

உதவி தேவை

தொகு

அன்புள்ள னண்பர்களுக்கு, இதை னீங்கள் படிக்கும் போதே என் பிரச்சினைகள் புரியும். னன்றி என எழுத உதவுங்கள். 2. கதைகள், கவிதைகள் எழுத அனுமதி உண்டா? 3. னான் எழுதிய கவலை என்ற கட்டுரையும், கீரிப்பிள்ளை என்ற சிறுவர் கதையும் எங்கே போயின என தெரியவில்லை. 4. ஆங்கில விக்கிபீடியாவில் எனது பள்ளிக்கூடத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். எத்தகைய ஆதாரங்களை எவ்வண்ணமாக அதில் புகுத்த வேண்டும்? அன்புடன், ஜார்ஜ் (னன்றி என எழுத பயமாயிருக்கிறது!)

வணக்கம், ஜார்ஜ்! கட்டுரைகளை எழுத முன்வந்தமைக்கு நன்றி! கட்டுரைகளில் தகவல்கள் மட்டுமே இடம் பெற வேண்டும். அவற்றை சரி பார்க்க, போதிய ஆதாரம் தேவைப்படும். எடுத்துக்காட்டு: உங்கள் பள்ளியை பற்றி எழுதுகிறீர்கள். உங்கள் பள்ளி உண்மையிலேயே இருக்கிறதா என்பது எனக்கு தெரிய வேண்டுமே! எனவே, உங்கள் பள்ளியை பற்றி செய்தி, நாளிதழில் வெளிவந்திருந்தால் அதை ஆதாரமாக தரலாம். உதவி தேவைப்படும்பொழுது கேளுங்கள். கதை, கவிதை போன்றவற்றை எழுத முடியாது. நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:36, 7 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
நன்றி என எழுதுவதற்கு ஒருங்குறியில் wanRi எனத் தச்சிடுங்கள்.--Kanags \உரையாடுக 19:59, 7 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

எசுப்பானியாவின் அரசர் பெயர் - ஒலிபெயர்ப்பு

தொகு

எசுப்பானியாவின் தற்போதைய அரசர் Felipe VI. இவரது பெயரை எவ்வாறு ஒலிபெயர்ப்பது? ஆறாம் பிலிப்பு என்றா, அல்லது ஆறாம் பெலிப்பு என்றா?--சத்தியராஜ் (பேச்சு) 06:49, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

ஆறாம் பிலிப்பு -- mohamed ijazz(பேச்சு) 06:56, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]
தமிழ் முறைப்படி எசுப்பானியாவின் ஆறாம் பிலிப்பு என்று எழுதுவதே சிறந்தது.--Kanags \உரையாடுக 06:58, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி. சத்தியராஜ் (பேச்சு) 08:28, 13 அக்டோபர் 2014 (UTC)[பதிலளி]