மாநிலங்களவைத் தேர்தல்களின் பட்டியல்
மாநிலங்களவைத் தேர்தல்களின் பட்டியல் (List of Rajya Sabha elections) என்பது இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தல் பட்டியல் ஆகும். மாநிலங்களவை (மாநிலங்களின் குழு) அல்லது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் (தில்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) சட்டமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்தியாவின் மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் 'நாடாளுமன்ற உறுப்பினர்' என அழைக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். புது தில்லியில் உள்ள சன்சாத் பவனில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் அவையில், புதிய சட்டங்களை உருவாக்குதல், இந்தியாவின் அனைத்து குடிமக்களையும் பாதிக்கும் தற்போதைய சட்டங்களை நீக்குதல் அல்லது மேம்படுத்துதல் தொடர்பான விடயங்களில் இந்த சபை கூடுகிறது. மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேரைத் தேர்ந்தெடுக்க ஆண்டுதோறும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுகின்றனர்.[1]
மாநிலங்களவையின் முதல் தேர்தல் 1952ல் நடந்தது.
ஆண்டுதோறும் மாநிலங்களவைத் தேர்தல்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Terms of the Houses". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 February 2020.