விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு110

ஐ.பி பயனர் கட்டுரை உருவாக்கம் தொகு

ஐ.பி பயனர் கட்டுரை உருவாக்கத்தை, ஆ.வி.யில் உள்ளதுபோல் நேரடியாக உருவாக்காமல் விக்கிப்பீடியா:கட்டுரை உருவாக்கல் வழிகாட்டி வழியாக உருவாக்க வகை செய்யலாமா? இதுவரைக்கும் ஐ.பி பயனர் உருவாக்கிய முறையான கட்டுரைகள் மிகமிகக் குறைவு, மாறாக எரிதங்களே அதிகம். --AntanO 03:15, 4 மே 2017 (UTC)[பதிலளி]

இவ்வாறு ஒரு வழியுண்டேனில் அதனைச் செய்யலாம் என நானும் பரிந்துரைக்கின்றேன். ஆனால் ஐ.பி பயனர் தானுலாவி (AWB) மூலம் நேரடியாக எரித வேலையில் ஈடுபட முடியுமல்லவா? ஆ.வியில் தானுலாவி (AWB) மூலம் அணுக்கம் அற்ற பயனர்கள் பதிவேற்ற முடியாது. எனவே இங்கும் அவ்வாறே செய்தால் (அல்லது ஐ.பி பயனர் தானுலாவியைப் பயன்படுத்தா நிலை), இந்தப் பிரச்சனை முழுவதுமாகத் தீரக்கூடும். பயனர் பேச்சு:Neechalkaran#எரித நடவடிக்கைகள் தடுக்கப்படல் - இங்கு வேறு ஒரு வழியும் உரையாடப்பட்டுள்ளது. --சி.செந்தி (உரையாடுக) 03:36, 4 மே 2017 (UTC)[பதிலளி]
ஐ.பி பயனர் தானுலாவியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் இங்கு எப்பயனரும் தானுலாவியைப் பயன்படுத்த வழி உள்ளது. ஐ.பி பயனர் நேரடியாக இல்லாமல் en:Wikipedia:Drafts வரைவு வழியாக கட்டுரை உருவாக்குவதை செயற்படுத்துவதால், எரிதத்தையும் தடுக்க முடியும், பயனருக்கு கலைக்களஞ்சிய கட்டுரை உருவாக்கம் பற்றிய புரிதலும் ஏற்படும். --AntanO 03:48, 4 மே 2017 (UTC)[பதிலளி]
ஐ.பி பயனர் கட்டுரை உருவாக்கத்தை, விக்கிப்பீடியா:கட்டுரை உருவாக்கல் வழிகாட்டி வழியாக உருவாக்கச் செய்யலாம்.--நந்தகுமார் (பேச்சு) 04:01, 4 மே 2017 (UTC)[பதிலளி]

நீக்குதல் வேண்டாம் என்று வாக்கெடுப்பு நடந்து இருக்கும் போது நீக்குதல் முறையன்று தொகு

பேச்சு:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-1 என்ற பக்கத்தில் நீக்குதல் வேண்டாமென்று வாக்கெடுப்பு நடந்துள்ளது. இருப்பினும் நீக்குதல் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுத்து உள்ளேன். இனி கவனமாக செயற்பட கேட்டுக் கொள்கிறேன். --உழவன் (உரை) 07:58, 5 மே 2017 (UTC)[பதிலளி]

யார் கவனமாக இருக்க வேண்டும்? ஒரு மாதத்திற்கும் மேலாக குறிப்பிடத்தக்கதென நிறுவ முடியவில்லை. வாக்கெடுப்பு என்று விளையாடுகிறீர்களா? இதற்கு உடன் நடவடிக்கை வேண்டும். --AntanO 08:01, 5 மே 2017 (UTC)[பதிலளி]
நேற்று நடு இரவும் கடந்து 100+ கட்டுரைகள் என்னால் நீக்கப்பட்டன. தேவையென்றால் அவற்றையும் மீளமைக்கலாம். இங்கு யாரும் மீட்டுவிடலாம். இதற்கு இங்குதான் கொள்கை இல்லையே. --AntanO 08:26, 5 மே 2017 (UTC)[பதிலளி]

@Info-farmer:, ஒருவர் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள கட்டுரை ஆக்கத்தில் அவரது நிருவாக அணுக்கங்களைப் பயன்படுத்துதல் ஊக்குவிக்கப்படுவதில்லை. நிருவாக அணுக்க நடவடிக்கை தேவை என்றால் மற்ற நிருவாகிகளின் கவனத்தை ஈர்க்கலாம்.

@AntanO:, தமிழ் விக்கிப்பீடியாவில் புத்தகங்களின் குறிப்பிடத்தக்கமை குறித்த தெளிவான கொள்கை இல்லா நிலையில், இக்கட்டுரையின் குறிப்பிடத்தக்கமையை மேம்படுத்த இன்னும் கூடுதல் காலம் தரலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தகவல் உழவன் உள்ளிட்ட மற்ற ஆர்வமுள்ள விக்கிப்பீடியர்கள் இக்கட்டுரையை குறித்த காலத்துக்குள் மேம்படுத்த பொறுப்பெடுத்தல் நன்று. --இரவி (பேச்சு) 04:18, 9 மே 2017 (UTC)[பதிலளி]

காண்க விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை (நூல்கள்). இந்த ஒரு கட்டுரைக்கும் மட்டும் ஏன் ஒரு மாதகால சிறப்புச் சலுகை? நல்லது நடக்கட்டும். --AntanO 04:29, 9 மே 2017 (UTC)[பதிலளி]
இந்த நூலைப் பொருத்தவரை, வாக்கெடுப்பு என்பது குறிப்பிட்டத்தக்கமையை நிறுவுவதற்கான வழி இல்லை என்றாலும், நம்மைப் போன்ற சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை எடுத்துக்காட்டுகிறது. ஒரு தலைப்புடன் தொடர்புடைய சமூகத்துக்கு அது குறிப்பிடத்தக்கது என்பது ஒருமனதாகத் தெரிகிறது. ஆனால், அதனை நிறுவுவதற்கான ஆதாரங்கள் இணையத்தில் சிக்கவில்லை. அவை நூலகங்களில் சிக்கலாம். ஆனால், அவற்றுக்கான உழைப்பைச் செலுத்துவதற்கான ஆள்வளம், நேரம் இல்லை. உலகளாவிய சமூகங்கள் பலவும் இதே சிக்கலை எதிர்கொள்கின்றன. ஆங்கில விக்கிப்பீடியா எழுதப்படும் நடைமுறை கீழைச் சமூகங்களின் அறிவைப் பதிவு செயவதற்கு உதவுவதில்லை என்ற விமரிசனமும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. அண்மையில் நடந்த விக்கிமீடியா மாநாட்டிலும் இது பற்றி நிறைய பேசப்பட்டது. விக்கிமீடியா இயக்கமும் இச்சிக்கலை உணர்ந்து ஆய்வு நல்கைகளை வழங்கி வருகிறது. எல்லாம் சரி, இருக்கிற கொள்கைகளின் படி தான் துப்புரவு செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொள்கிறேன். தற்போதைக்கு, நூல்களின் குறிப்பிடத்தக்கமை தொடர்பாக இளக்கத்தன்மை தேவை என்று கருதி கருத்திட்டுள்ளேன். விதிகள் இருக்கும் இடத்தில் விதிவிலக்குகளும் தேவை. நீதிமன்றங்களும் கூட சூழல் கருதித் தான் தீர்ப்புகளை வழங்குகின்றன. தொடுப்பிணைப்பியில் உள்ள குறிப்பிடத்தக்கமை வார்ப்புரு குறிப்பிடத்தக்கமையை நிறுவ மூன்று மாத காலம் அளிக்கிறது. இந்நூலின் குறிப்பிடத்தக்கமை தொடர்பாக பலருக்கும் ஒத்த கருத்து இருப்பதால், கூடுதல் காலம் தருவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:55, 9 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி தொகு

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. பங்குபெற ஆரம்பிக்கலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:30, 1 மே 2017 (UTC)[பதிலளி]

மைல்கல் தொகு

5 நாட்களில் 20 கட்டுரைகள், குறைந்தது 200 கட்டுரைகளைப் போட்டியூடு விரிவாக்கும் எமது இலக்கானது
10% இலக்கு பூர்த்தியானது

இன்றே முனைப்புடன் பங்குபற்றி இலக்கை எட்டும் வேகத்தைக் கூட்டுங்கள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:21, 5 மே 2017 (UTC)[பதிலளி]

நூறாயிரமாவது கட்டுரை தொகு

 

தமிழ் விக்கிப்பீடியாவின் 1,00,000 ஆவது கட்டுரை இதோ!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:23, 8 மே 2017 (UTC)[பதிலளி]
  1.   விருப்பம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்!! :) மாபெரும் அரிய எட்டல்!! பேருழைப்பின் பரிசு :) --செல்வா (பேச்சு) 18:51, 8 மே 2017 (UTC)[பதிலளி]
  2.   விருப்பம் மகிழ்ச்சி!   --5anan27 (பேச்சு) 19:15, 8 மே 2017 (UTC)[பதிலளி]
  3.   விருப்பம் நமது விக்கிப்பீடியாவில் நூறாயிரமாவது கட்டுரையை எழுதிய மாணவர் சிறீகீரனுக்கு எனது பாராட்டுகள்.--Kanags \உரையாடுக 21:29, 8 மே 2017 (UTC)[பதிலளி]
  4.   விருப்பம் இன்னும் நூறாயிரம் நூராயிரங்களைத் தொடுவோம், நண்பர் சிறீகீரனுக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 23:19, 8 மே 2017 (UTC)[பதிலளி]
  5.   விருப்பம் பாராட்டுகள், 1,00,000 ஆவது கட்டுரை குறுங்கட்டுரையாகவோ அல்லது தானியங்கி/தானுலாவி வழியாவோ இல்லாமல் இயல்பாக எழுதப்பட்ட கட்டுரையாகப் பதிவேற்றப்பட்டுள்ளது. அதற்கும் பாராட்டுகள் பயனர்:Shriheeran. எனினும் அதன் முன்னர், இலக்கை அடைவதற்காக சில கட்டுரைகளை தானுலாவி வழியாகப் பதிவேற்றியதைத் தவிர்த்து இருக்கலாம். நூறாயிரமாவது கட்டுரையைத் தொட்டுவிட்டோம்.. இங்கேயுள்ள குப்பைகளைச் சுத்தப்படுத்த அனைவரும் இறங்கவேண்டும். கட்டுரை எண்ணிக்கைகள் கூடக்கூட எமது தரத்திலும் கவனம் தேவை--சி.செந்தி (உரையாடுக) 01:28, 9 மே 2017 (UTC)[பதிலளி]
    சி.செந்தி அதற்கு முன்னும் தானுலாவி கொண்டு உருவாக்க வில்லை, அனைத்தையும் ஒரே நேரத்தில் சேமித்தேன். ஆனால் அவற்றையும் தற்போது விரிவாக்கிவிட்டேன். நான் விரும்பும் சாரணியமே 100,000 கட்டுரையானது அருமை. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:41, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  6.  
    இலக்கம்/இலகரம்
    இலக்கம்/இலகரம் தொட்டு, அச்சிகரம் அடைந்தமைக்குப் பாராட்டுகள். விக்சனரி 2009 ஆம் ஆண்டு இலகரத்தை அடைந்த பொழுது, உருவாக்கிய அசைப்படத்தை காணத் தருகிறேன். நூறாயிரம் என்ற சொல்லைத் தவிர்க்கவும். ஏனெனில், அது ஆங்கில நடையல்லவா? நாம் சொல்வளம் மிக்கவர்கள். சான்றாக, தேவநேயப் பாவாணர் எழுதிய திருக்குறள் உரையில், இலக்கம் என்பதைப் பயன்படுத்தியுள்ளார். --உழவன் (உரை) 03:06, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  7.   விருப்பம் மகிழ்ச்சி! --சிவகோசரன் (பேச்சு) 03:18, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  8.   விருப்பம் இலட்சம் கட்டுரைகளை தமிழுலகிற்கு கட்டற்ற முறையில் தந்திருக்கிறோம். இருக்கும் பிழைகள் நீக்கி, கட்டுரைகளை மேம்படுத்தி செம்மையாக்கும் பணியும், பொறுப்பும் நம்மிடையே இருப்பதை உணர்ந்து இந்த இலக்கினை கொண்டாடி மகிழ்வோம். உழைத்த ஒப்பற்றவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 03:34, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  9. 2013ஆம் ஆண்டு ஒரு இலட்சம் கட்டுரைகளை எட்டுவோம் என்று 2007 வாக்கில் பதிவிட்டிருந்தேன். 2017 ஆகி விட்டது. ஆனாலும், மிகவும் எதிர்பார்த்த மைல்கல். தமி் விக்கிப்பீடியாவில் ஒரு தொகுப்பையேனும் செய்த ஒவ்வொரு பயனரையும் இப்பெருமை சேரும். மாணவர் சிறீகரன் ஒரு இலட்சமாவது கட்டுரையைப் பதிவேற்றினார் என்பது எதிர்காலத்தைப் பற்றிய ஓர் அடையாள நம்பிக்கையைத் தருகிறது. அனைவருக்கும் வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 03:58, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  10. மகிழ்ச்சி...--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:01, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  11.   விருப்பம். இதற்கு உதவிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!! --அஸ்வின் (பேச்சு) 17:49, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  12.   விருப்பம். ஒரு இலட்சம் கட்டுரைகள் எட்டப்பட்டதையிட்டு மகிழ்ச்சி. இந்த இலக்கை எட்டுவதற்கு ஏறத்தாழ 13 1/2 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ் விக்கிப்பீடியா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி இருந்திருந்தால் இந்த இலக்கை இன்னும் விரைவாக எட்டியிருக்கலாம். நமது அடுத்த நகர்வு பரவலான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும் முக்கியமான கூறாகக் கொண்டிருக்க வேண்டும். --- மயூரநாதன் (பேச்சு) 02:45, 12 மே 2017 (UTC)[பதிலளி]
  13. இலட்சமாவது கட்டுரையை உருவாக்கிய ஹீரனுக்கு பாராட்டுகள். --Booradleyp1 (பேச்சு) 04:05, 12 மே 2017 (UTC)[பதிலளி]

Beta Feature Two Column Edit Conflict View தொகு

Birgit Müller (WMDE) 14:41, 8 மே 2017 (UTC)[பதிலளி]


தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரைகளை நீக்குதல் குறித்து தொகு

நீக்குதலை விட, புதிய பயனரின் முதல் பங்களிப்பை, அவரது மணல்தொட்டி என்ற பயிலுடமிடத்திற்கு நகர்த்தும் முறை கூடுதல் பலன் அளிக்கும். அதுபற்றிய நுட்பத்தை நீங்கள் அமைக்கக் கோருகிறேன். பல புதிய அணுகுமுறைகளே புதியவர்களின் ஆற்றலை, பங்களிப்பை இங்கு தேக்க முடியும். நானும் இதுபற்றி தொழினுட்ப நண்பர்களை தேடி வருகிறேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--உழவன் (உரை) 07:01, 7 மே 2017 (UTC)[பதிலளி]
@Info-farmer: முழுமையாக இணையத்தளம் ஒன்றில் பிரதி பண்ணி எழுதப்பட்ட கட்டுரையை உடனடியாக நீக்கி விடுதலே சிறந்தது. புதியவர் என்பதற்காக மணல்தொட்டியில் இட்டு குப்பை சேர்க்க வேண்டியதில்லை.--Kanags \உரையாடுக 07:56, 7 மே 2017 (UTC)[பதிலளி]
புதியவர்களுக்கு, அவர்கள் உருவாக்கிய கட்டுரையைக் கொண்டே, விக்கி வடிவத்தை அறிமுகப்படுத்தும் முறையை நான் பின்பற்றுகிறேன். அதாவது முதலில் விக்கிவடிவாக்கம். அதற்கு தேவையான தரவு, ஆங்கில விக்கிப்பீடியக்கட்டுரைகளின் தமிழாக்கத் தரவு. எனவே, நீக்கப்பட்ட சில கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளதே ஆகும். மணல்தொட்டியில் இருந்தால், தொடர்ச்சியாகக் கற்றுதருதல் எளிது. எனக்கு ஒதுக்கப்பட்ட 5 மாவட்ட கல்விப் பணியாளர்களை வினவிய பொழுது, இணைய இணைப்புத் தடைகள் அவர்களிடம் நிலவுவதை உணர்கிறேன். எனவே, மணல்தொட்டியில் ஒரு மாதங்களாவது ஒரு கட்டரையைப் பேணினால், நாம் வழிகாட்டினால், நல்ல பலன் கிடைக்கும். ஏறத்தாழ 600 கல்விப்பணியிலுள்ள ஆர்வலர்.. முடிந்தவரை பல மாவட்டங்களுக்குச் சென்று, அவர்கள் பயிற்றுவிக்கும் சூழ்நிலையை நேரில் காண உள்ளேன். தமிழக அரசு தந்த தரவினால், நாம் குறிப்பிடதக்க அளவு எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். அந்த அரசுத்துறையினர் மேலும், தமிழ் விக்கிமீடியக கட்டகத்தை புரிந்து கொள்ள நாம் சற்று பொறுத்தருள வேண்டும். அந்த புரிந்துணர்வை, அவர்களிடம் புத்துணர்ச்சியாக மாற்றினால் தமிழ்விக்கிக்கு நல்லது. இச்சூழ்நிலையில் விரைந்து நீக்குதல் சாலச் சிறந்த நடைமுறையல்ல என்பதே எனது எண்ணம். அவற்றை ஒரு பகுப்பிட்டால், அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் காட்டுதல் எளிது. அவர்கள் அக்கட்டுரைகளை செம்மைப்படுத்த உதவ வாய்ப்புண்டு. எந்த மாதிரிகளும் இல்லாமல், எப்படி புரிய வைப்பது? நம்மிடம் ஒன்றிணைந்த வழிகாட்டுதல் இருப்பின், நாம் வளர்வோம் என்பது திண்ணம். வணக்கம்.--உழவன் (உரை) 03:30, 9 மே 2017 (UTC)[பதிலளி]
விக்கிக்கு ஏதும் கொள்கை உள்ளதா? இருந்தால் அதைக்கடைப்பிடிக்க அல்லது கொள்கையை மாற்றுக. இரண்டும் கெட்ட நிலை சிறப்பற்றது. குப்பைகள்தான் பெருகும். இங்கு யார் வழிகாட்டுவது? வழிகாட்டு, வழிகாட்டு என்று சொல்வது எளிது. மேலும், பதிப்புரிமை மீறல் உடன் நீக்கப்படல் வேண்டும்.--AntanO 03:37, 9 மே 2017 (UTC)[பதிலளி]

இவ்வாரமும் அடுத்த வாரமும் தமிழகத்தின் 30+ மாவட்டங்களிலும் ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் ஊடாக மூன்று நாள் விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் நடைபெறுகின்றன. இவற்றுக்கு பல்வேறு விக்கிப்பீடியர்கள் நேரடியாக சென்று பயிற்சி அளித்து வருகின்றனர். வாட்சாப்பிலும் ஒரு குழுமம் தொடங்கி நேரடியாக உடனுக்குடன் ஐயங்களைத் தீர்த்து வருகிறோம். பயிற்சிக்கென பார்வதி 40 பக்கக் கையேடு ஒன்றை உருவாக்கித் தந்து உள்ளார். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதையும், அதில் எப்படிக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்பதையும் விளக்குகிறோம். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள 25000 நல்ல கட்டுரைகளையும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளையும் முன்னுரிமை தந்து மொழிபெயர்க்குமாறு வேண்டியுள்ளோம். மணல்தொட்டியில் பழகி மற்றவர்களின் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகு முதன்மை வெளிக்கு நகர்த்துமாறு வேண்டியுள்ளோம். எனவே, இவை அனைத்தையும் தாண்டி கட்டுரை வெளியில் பொருத்தமற்ற கட்டுரைகள் வருகின்றன என்றால் அவை ஆர்வமிகுதியாலோ சரியான புரிதல் இன்மையாலோ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம். மேலும், நம்மால் இயன்ற அளவு வழிகாட்டுவோம். குறிப்பாக, உடனுக்குடன் கட்டுரைகள் நீக்கப்படும் போது திகைக்கிறார்கள். தொடர்ந்து விக்கியில் பங்களிக்கும் ஊக்கத்தை இழக்கிறார்கள். இது தொடர்பாக தகவல் உழவன் கருத்தைக் கவனிக்கலாம். இத்தகைய கட்டுரைகளுக்கு என்று தனி துப்புரவுப் பகுப்பு உருவாக்கி ஒரு மாத கால அவகாசமாவது தந்து துப்புவரவு செய்யலாம். பயனர்களின் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரை பேச்சுப் பக்கத்திலும் தகுந்து காரணங்களைச் சுட்டி விளக்கலாம். நூற்றுக் கணக்கான கட்டுரைகள் குவியும் போது துப்புரவில் ஈடுபடும் ஒரு சிலரே இவையனைத்தையும் செய்வது சிரமம். எனவே, இன்னும் நிறைய பேர் இப்பணியில் இணைய வேண்டுகிறோம். நேரடியாக விக்கிப்பீடியாவிலும் மாவட்டப் பயிற்சி மையங்களுக்குச் சென்றும் வழிகாட்ட விக்கிப்பீடியர்கள் தேவை. பயணம், தங்கும் ஏற்பாடுகள், மதிப்பூதியம் ஆகியவை பொறுப்பெடுத்துக் கொள்ளப்படும். ஏறத்தாழ 12,000 ஆசிரியர்களுக்குப் படிப்படியாக விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்திப் பங்களிக்க வைக்க முயன்று வருகிறார்கள். சென்ற மாதம் செயற்கைக் கோள் ஒளிபரப்பு வழியாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கட்டற்ற உரிமம் தொடர்பான அரசாணை, நாட்டுடைமை நூல் கொடை, கோயில் தரவுகள், ஊராட்சித் தரவுகள் ஆகிய அனைத்தும் தமிழக அரசின் ஆதரவோடே பெறப்பட்டன. அதே கூட்டுறவின் ஒரு பகுதியாகவே ஆசிரியர்களுக்கான இப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. எனவே, கூட்டுறவின் நலனைக் கருத்தில் கொண்டும் தக்கவாறு வழிகாட்டுவோம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:13, 9 மே 2017 (UTC)[பதிலளி]

பயனர் மணல் தொட்டி அல்லது Wikipedia:வரைவு வழி ஏற்புடையது. மேலும் பதிப்புரிமை மீறல்களை திருத்திக் கொண்டு இருக்க முடியாது. அவை உடன் நீக்கப்பட வேண்டும். ஒரு மாத கால அவகாசமாவது தந்து துப்புவரவு செய்யலாம் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. எ.கா: "அம்மா அப்பா ஆகணுமா? (நூல்)" என்ற கட்டுரை ஒன்று வருடக்கணக்காக இருந்தது. எத்தனை பேர் நடவடிக்கை எடுத்தார்கள். இன்னும் நிறைய எ.கா தரமுடியும். உடன் நடவடிக்கை எடுக்காமை ஏற்புடையதல்ல. என்னைப் பொருத்தவரை விக்கிக் கொள்கைக்கு உட்பட்டுத்தான் என்னால் செயற்பட முடியும். இல்லை என்றால் தெரிவியுங்கள் பதில் நடவடிக்கை எடுக்கிறேன். --AntanO 04:24, 9 மே 2017 (UTC)[பதிலளி]
@User:AntanO! யார் செய்வது? நீக்கம் செய்பவர்களே வழிகாட்டுதலும் செய்யலாம். நீக்கம் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும்; தவறுகளைத் திருத்தவும், வழிகாட்டவும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பொறுத்த முடிவு எடுக்க வேண்டும் என்றால் நான் வழிகாட்டுவதற்கு கூடுதல் நேரம் ஆனாலும் அது தான் சரி என்று கூறுவேன். முக்கிய ஆளுமை, விவாதத்துக்குரிய தலைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் தவறான கருத்துகள் ஏற்றப்பட்டால் தயை தாட்சண்யம் பாராமல் உடன் திருத்தலாம் அல்லது நீக்கி விடலாம். பயனர்:Info-farmer கூறிய கருத்துக்கள் மற்றும் பயனர்:Ravidreams கூறிய கருத்துக்களை வரவேற்கிறேன்.--PARITHIMATHI (பேச்சு) 04:41, 9 மே 2017 (UTC)[பதிலளி]
பதிப்பரிமை மீறல் இல்லாதவிடயம் தவிர்த்து உடன் நடவடிக்கை எடுக்காது காத்துக் கொண்டு இருப்பது வழமை. ஆனால், ஒருசிலரே திருத்துகின்றனர். பயனருக்கு வழிகாட்டுகின்றனர். ஆனாலும் கடந்த இறுதி 100 கட்டுரைகளின் தேக்கத்தைக் கவனித்தால் உண்மை நிலை தெரியும். எனக்கு துப்புரவு செய்வதில்தான் ஆர்வம். அதற்காக என்னை வழிகாட்டு எனக் கேட்க முடியாது. விரும்பியவர்கள் வழிகாட்டுங்கள். --AntanO 04:44, 9 மே 2017 (UTC)[பதிலளி]

ːːːஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த மாவட்ட ஆசிரியப்பயிற்சி நிறுவன விரிவுரையாளர்களுக்கு, பெறப்படும் கட்டுரைகளை விக்கியாக்கம் செய்யவும், பிழை திருத்தவும் பயிற்சியளிக்கிறோம். மேலும் இப்பயிற்சியில் மாவட்டவாரியாக தரவுகளைப் பிரிப்பதற்கேற்ப TNSE USER NAME DIST என்ற முறையில் பயனர் கனக்கு தொடங்க வலியுறுத்தி உள்ளோம். பெரும்பாலும் ஆங்கிலக்கட்டுரைகளை மொழிபெயர்ப்பு செய்வதுதான் திட்டம். கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட விக்கியர்கள, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், முதல்வர்கள் உதவியுடன் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் முழு ஒத்துழைப்போடும் பெரும் பொருட்செலவிலும் இப்பயிற்சி நடபெறுகிறது. பயிற்சியளிக்கும்போதே கட்டுரைகள் நீக்கப்படுவது மிகுந்த மனவுளைச்சலைத் தருகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நீக்காமல் சிறிது கால அவகாசம் கொடுக்கலாம். மேலும் இக்கட்டுரைகளைத் துப்புரவு செய்ய குழு அமைத்துச் செயல்படலாம். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:03, 9 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் - இதனை அழித்துவிடலாமா? --AntanO 05:16, 9 மே 2017 (UTC)[பதிலளி]
தயவு செய்து விக்கி கொள்கை, வழிகாட்டல்களுக்கு மாறக செயற்படக் கேட்காதீர்கள். அல்லது விக்கி கொள்கை, வழிகாட்டல்களை மாற்றிவிடுங்கள். மாற்றத்தை பயனர்களிடம் உருவாக்குங்கள். ஒவ்வொருக்ககாகவும் த.வி மாறிக்கொண்டிருக்க முடியாது. என்னால், விக்கி கொள்கை, வழிகாட்டல்களுக்கு ஏற்பவே செயற்பட முடியும். --AntanO 05:21, 9 மே 2017 (UTC)[பதிலளி]
நான் பார்த்தவரையில் ஒரு சிலர் புரிந்து கொண்டு திறம்பட கட்டுரை எழுதுகின்றனர். அவர்களுக்கு அவர்கள் பேச்சுப்பகுதியில் சொல்லப்பட்டவற்றை ஏற்று நடக்கின்றனர். ஒரு சிலர் அவ்வாறு இல்லை. மேலும் கீழ்க்காணும் பிழைகள் பயிற்சியில் முக்கியமாக சொல்லிக் கொடுக்கப்பட்டால் நன்று, இவையே நான் துப்பரவு செய்யும்போது எதிர்கொண்டவை.
  1. வலைப்பதிவுகளில் இருந்து கட்டுரைகளை நகல் எடுக்காமை
  2. கட்டுரையின் தலைப்பின் கீழ் மீண்டும் அதே தலைப்பை துணைத்தலைப்பாக இடுதலைத் தவிர்த்தல்
  3. கட்டுரைக்கு அதன் தொடக்க வரி, கட்டுரையைப்பற்றிய அறிமுகமாக இருத்தல் (தடிப்பு எழுத்து, புதிய கலைச்சொல் மற்றும் ஆங்கிலச் சொல்லாயின் அடைப்புக்குறிக்குள் சாய்வெழுத்தில் ஆங்கிலப் பெயர் இடுதல்)
  4. கட்டுரையை எழுதும்போது தொகுப்புப் பெட்டியின் தொடக்கத்தில் இடைவெளி விடாது எழுதுதல். (எ.கா: புத்தனேரி ரா. சுப்பிரமணியன்)
  5. கட்டுரை ஏற்கனவே இருக்கின்றதா என்று இங்கும் கூகிளிலும் தேடிப்பார்த்தல்
  6. உடனே விக்கித்தரவில் இணைத்தல் (ஒரே கட்டுரைகள் பல வெவ்வேறு நபர்களால் உருவாக்கப்படலாம்)
  7. ஒரு கட்டுரையின் பகுதியாக வரக்கூடிய விடயங்களை கட்டுரையாக உருவாக்காமை (கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்) - அதே சமயத்தில் கரும்பு நடவு முறை எனும் கட்டுரை இருந்து இப்பகுதி பெரியதாயின் அது சரியானது எனலாம்.
  8. பேச்சு நடையில் கட்டுரை எழுதுதல் தவிர்த்தல்
  9. ஆங்கிலத்தலைப்பில் (எ.கா. தென்னை டானிக்கின் பயன்கள், Thelippan pasanam ) இல்லாமை

வாழும் நபர்களைப் பற்றிய கட்டுரைகள் உருவாக்குகையில் அவர்கள் கட்டுரையாக எழுதப்படும் அளவுக்கு முக்கியமானவர்களா என்பதையும் சான்றுடன் குறிப்பிடல் வேண்டும். தானியங்கி மொழிபெயர்ப்பு (?) பயன்படுத்தியும் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஜெ7, இங்கிலாந்தின் 6 வது எட்வர்ட் போன்ற கட்டுரைகளை என்ன செய்யலாம்? சில தலைப்புக்கள்: உண்மை பேசுவதின் சிறப்பு, செவ்வாழையின் செழுமையான பயன்கள், உலக பொதுமறையாம் திருக்குறள் பற்றி தெரியாத பல தகவல்கள், Thelippan pasanam, அது என்ன மொழி

பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் எனும் பகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தயவு செய்து யாவரையும் அந்தப் பகுப்பை இடச்சொல்லுங்கள்.--சி.செந்தி (உரையாடுக) 06:10, 9 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கி கொள்கைகளை மாற்றவோ மீறவோ கூறவில்லை. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் போது, கட்டுரைகள் உருவாகும் சூழலைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். வழமையான நாட்களில் யார் என்றே தெரியாத பயனர் பொருத்தமற்ற கட்டுரைகளை உருவாக்கும் போது உடன் நீக்குவதில் சிக்கல் இல்லை. ஆனால், மாநிலம் தழுவிய பயிற்சி நடக்கிறது என்ற முன்னறிவிப்புடன் பல்வேறு பயனர்களும் வழிகாட்டலில் ஈடுபட்டிருக்கும் போது துப்புரவுக்கு சற்று காலம் தரலாம் என்பது மட்டுமே எதிர்பார்ப்பும் வேண்டுகோளும். நேரடி விக்கிப் பயிற்சிப் பட்டறைகளுக்கு சென்றோர் விக்கி பற்றி அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்கலை உணர முடியும். நாம் கட்டுரை எழுதும் முறையை விளக்கி அங்கு வந்திருக்கும் ஒவ்வொருவர் கட்டுரையையும் சரி பார்ப்பது வழக்கம். எடுத்துக்காட்டுக்கு 50 பேர் இருக்கிறார்கள் என்றால் ஒவ்வொருவரவாகப் பார்த்து முடிப்பதற்குள் முதலில் எழுதியவரின் கட்டுரை நீக்கப்பட்டிருக்கும். இது காலத்துக்கும் அவருக்கு விக்கிப்பீடியாவைப் பற்றிய தவறான புரிதலையும் அயர்ச்சியையும் அளிக்கிறது. இந்த உணர்வு ஆசிரியர்களிடம் புகும் போது அது ஒட்டு மொத்த கல்வித் துறைக்கும் பரவும் ஆபத்து உள்ளது. கலைக்களஞ்சியம் என்பது நமது சூழலில் அந்நியமான ஒன்று. 99% பேர் அதைப் பார்க்கவோ படிக்கவோ செய்தது இல்லை. எனவே, அதன் நடையையும் தேவைகளையும் ஒரே நாளில் புரிந்து கொண்டு பங்களிப்பது மிகவும் சிரமம். தொடக்கத்தில் தடுமாறி பின்னர் சிறப்பாகப் பங்களித்த பலர் இங்குள்ளார்கள். ஒரு பயனரின் இந்த இயல்பான வளர்ச்சிக்கு இடம் கொடுக்கும் வகையில் நமது சமூகம் இருக்க வேண்டும். விக்கிப்பீடியாவின் கொள்கைகள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு புதிய பயனர்களை உள்வாங்குதலும் முக்கியம் ஆகும்.
ஒரு மாநில அரசும் அதன் ஒட்டு மொத்த ஆசிரியர் படையும் விக்கிப்பீடியா அறிமுகம் பெறுவது மிகவும் அரிய பொன்னான வாய்ப்பு ஆகும். உலகின் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு நடைபெறுவது இல்லை. இதில் அனைத்து விக்கிப்பீடியர்களும் இணைந்து தக்க புரிந்துணர்வுடன் எப்படி சிறப்பாக அவர்களை உள்வாங்கலாம் என்று கூடிச் செயற்பட வேண்டுகிறோம். இப்பயிற்சியில் அடிப்படையான விசயங்களையே கற்றுத் தர முடியும். எடுத்த உடன், விக்கித்தரவு, wikiformatting என்று பல்வேறு விசயங்களைக் கற்றுத் தருவதும் அவர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் நடைமுறைச் சாத்தியம் அற்றது. துப்புரவுப் பணிகள் தேங்குகின்றன என்பது உண்மை தான். ஆனால், இம்மாதம் தேங்கும் கட்டுரைகளை அடுத்த மாதம் நீக்கலாம். ஆனால், இம்மாதம் பயிலும் ஆசிரியர்களை அவர்கள் உள்ளே வரும் போதே தளர்வடையச் செய்தால் அவர்கள் காலத்துக்கும் திரும்பவும் பங்களிக்க எண்ண மாட்டார்கள். ஆகவே, மிகவும் தெளிவான ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம்:
  • பொருத்தமற்ற கட்டுரைகளில் நீக்கல் அறிவிப்பு இடாமல், உடனே நீக்காமல் துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள் என்ற பகுப்பை மட்டும் சேர்க்க வேண்டுகிறோம். இயன்ற அளவு இக்கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களில் பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் தேவைப்படும் மாற்றங்களைக் குறிப்பிடுங்கள். அவர்கள் நேரடியாகப் பதில் அளித்து மாற்றிக் கொள்ளாவிட்டாலும் அவர்களை வாட்சாப்பு, தொலைப்பேசி என்று வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முயல்கிறோம். இம்மாதம் தேங்கும் அனைத்துக் கட்டுரைகளையும் அடுத்த மாதம் துப்புரவு செய்வதற்கு நான், பரிதிமதி, பார்வதி ஆகியோர் பொறுப்பெற்றுக் கொள்கிறோம்.

இந்த வேண்டுகோள் ஏற்புடையதா, வேறு எவ்வகையில் ஒருங்கிணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிவியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:36, 9 மே 2017 (UTC)[பதிலளி]

ː ஆம் நான் இதனை ஏற்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:53, 9 மே 2017 (UTC)[பதிலளி]

{{Cleanup may 2017}} எனும் வார்ப்புரு இட்டால் துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள் சேர்க்கப்படும். பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் தேவையில்லையா?--சி.செந்தி (உரையாடுக) 07:01, 9 மே 2017 (UTC)[பதிலளி]
இவ்வார்ப்புருவை உருவாக்கியமைக்கு நன்றி. பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் பகுப்பை அவர்களாகச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. துப்புரவு தவிர வேறு பயன் இருக்கும் எனில் நாமே கட்டுரைகளில் சேர்க்கலாம். --இரவி (பேச்சு) 07:16, 9 மே 2017 (UTC)[பதிலளி]
@பயனர்:Ravidreams கூறியதை நான் ஏற்கிறேன்; ஆசிரியர்களுக்கு (பொதுவில், புதிய பயனர்களுக்கு) விதிகளும் விக்கி நடைமுறைகளும் "'நாம்"' தான் எடுத்துச் சொல்ல வேண்டும். நான் என்னால் இயன்ற வரையில் வழிகாட்டுதல்களைச் செய்கிறேன். பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் விக்கிக்கு வந்துள்ள எனக்கு சில விசயங்கள் புதிதாக உள்ளதால் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது.--PARITHIMATHI (பேச்சு) 07:32, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  • 10, 11, 12 மே 2017 - ஆகிய தேதிகளில் TNSE---TLR என்ற பயனர் வரிசைப் பெயர்களில் திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் 100 பெயர்களும் அதே போல் மற்ற மாவட்டங்களிலும் பலர் பயனர் கணக்கை உருவாக்கி பங்களிக்க உள்ளனர். அதிக பயனர் கணக்கை ஒரே IP முகவரியிலிருந்தும் உருவாக்கிடும் நிலை ஏற்படும்; பொறுமை காத்து உதவிட வேண்டுகிறேன்; நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து உதவிடவும் வேண்டுகிறேன்.--PARITHIMATHI (பேச்சு) 07:41, 9 மே 2017 (UTC)[பதிலளி]
பதிப்புரிமை மீறலையும் அப்படியே விட்டு வைப்பீர்களா? பதிப்புரிமை மீறல் தொடர்பில் விக்கிமீடியாவில் நிலைப்பாடு பற்றிய புரிதல் உள்ளதா? "ஆசைகளை துறந்த ஆசியஜோதி" என்ற பதிப்புரிமை மீறல் உள்ள கட்டுரை தற்போது நீக்கப்படும்வரை [நீக்கியவரும் தினம் துப்புரவுப்பணியாற்றும் ஒருவரே], இங்கு கட்டுரை நீக்கலுக்கு எதிராக வாதாடுவோர். அதனை நீக்கவும் இல்லை அல்லது பயனருக்கு இது தொடர்பில் வழிகாட்டவும் இல்லை. இதுதான் இங்குள்ள யதார்த்தம். களத்தில் இறங்காது கருத்துச் சொல்வது இலகு. இவ்வாறானவர்கள் ஒரு மாதம் கழித்து என்ன செய்வார்கள்? தமிழக ஆசிரியர்களின் பயிலரங்குக் கட்டுரை நடைபெறப்போகிறது; ஆகவே, அக்கட்டுரைகள் தொடர்பில் "இவ்வாறு" நடந்து கொள்ளுங்கள் என்ற ஒப்புதல் பெறப்பட்டதா? அல்லது ஒரு சிலர் மட்டும் முடிவினை எடுக்கும் நிலையை உருவாக்குகிறீர்களா? தானியங்கிக் கட்டுரை உருவாக்கத்திற்கு பக்கம் பக்கமாக விவாதித்தோம். இதற்கு என்னவாயிற்று? என்னைப் போன்றோர் ஒரு பொதுவான தளம் என்பதால்தான் பங்களிக்கிறோம். பொதுவான தளத்தின் தன்மை மாறும் என்றால் குறிப்பிடுங்கள். உதவியாக இருக்கும். --AntanO 07:59, 9 மே 2017 (UTC)[பதிலளி]
மாநில முழுவதுமான ஆசிரியர்களுக்கு மாவட்டளவிலான பயிற்சி அளிக்கும் திட்டம் மிகப்பெரிய அளவிலானது என்பதை மறுக்க முடியாது; புதுப்பயனர்கள் விக்கி நடைமுறையைப் பழக சிறிதுகாலம் ஆகும் என்பதிலும் கருத்து மாறுபாடு இல்லை. விக்கிக்கென்று சில விதிமுறைகள் உள்ளதுதானே. புதுப்பயனர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எனக்கும் முழு உடன்பாடே.

பொதுவாக நான் எந்தக் கட்டுரைகளையும் நீக்க முயற்சிப்பதில்லை, மாறாக அவற்றைச் சரிபண்ணவே பார்ப்பேன். என்றாலும் பதிப்புரிமை மீறல் மற்றும் தானியிங்கி மொழிபெயர்ப்பு, தமிழையே ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுதல், முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுதல் -இவ்வகையான கட்டுரைகள் உடனடியாக நீக்கப்படவேண்டியவையே. பதிப்புரிமை மீறல் கட்டுரைகள் பிறரது பொருளை அவரது அனுமதியின்றி வைத்திருப்தற்குச் சமம், அதைத் தெரிந்து செய்தாலும் தவறு, தெரியாமல் செய்தாலும் தவறே. அவ்வாறு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டால் அவற்றை உருவாக்கிய பயனர்களின் அயர்ச்சியை நீக்கவும் நிலைமையைத் தெளிவாக எடுத்துரைக்கவும் அவர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் பயிற்சியாளர்கள் முனையலாம்.

பதிப்புரிமை மீறல், தானியிங்கி மொழிபெயர்ப்பு, தமிழையே ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு எழுதுதல், முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுதல் போன்ற தவறுகள் உள்ள கட்டுரைகளே பெரும்பாலும் உடனுக்குடன் நீக்கப்படுகின்றன. ஏனைய கட்டுரைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்களால் திருத்தப்படுகின்றன; புதுப்பயனர்களின் பேச்சுப்பக்கங்களில் உற்சாகப்படுத்தும், வழிநடத்தும் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காணலாம்.

தொடர்பங்களிப்பாளர் போட்டியும் ஆசிரியப் பயிற்சியும் ஒரே சமயத்தில் அமைந்ததால் துப்புரவுப் பணியைப் பகிர்ந்து கொள்ள அதிகப் பயனர்கள் இல்லை என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 09:15, 9 மே 2017 (UTC)[பதிலளி]

இரவி , \\இம்மாதம் தேங்கும் அனைத்துக் கட்டுரைகளையும் அடுத்த மாதம் துப்புரவு செய்வதற்கு நான், பரிதிமதி, பார்வதி ஆகியோர் பொறுப்பெற்றுக் கொள்கிறோம்.\\ நல்ல முன்மொழிவு, வரவேற்கத்தக்கதே எனினும் சென்றமுறை இதே போல நடந்த ஆசிரியப்பயிற்சியின் போது உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் துப்புரவுப்பணி நான் அறிந்தவரை முடிவுபெறவில்லை என்பதையும் இங்கு சுட்ட விரும்புகிறேன். இக்கூற்றின் மூலம் நான் யாரையும் குற்றஞ்சாட்ட முற்படவில்லை; இப்பணிக்கு அதிகளவில் ஆட்பலமும் நேரமும் தேவைப்படும் என்பதை வலியுறுத்தவே விரும்புகிறேன். தவறாக எண்ண வேண்டாம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 09:27, 9 மே 2017 (UTC)[பதிலளி]
@AntanO:நான் முன்பே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். துப்புரவுப் பணியில் ஈடுபடுவோரை விக்கி விதிகளை மீறவோ மாற்றவோ கோர இல்லை. பதிப்புரிமை மீறல், துரித நீக்கல் தகுதிகள் அடிப்படையில் வழமையான துப்புரவுப் பணியில் ஈடுபடும் கடமையும் உரிமையும் அனைவருக்கும் உண்டு. தற்போது நானே குடி குடியை கெடுக்கும் என்ற தலைப்பில் இடப்பட்டிருந்த நாடகத்தை உடனே நீக்கி இருக்கிறேன். ஆனால், மேம்பாட்டுக்குச் சிறிது அளவாவது வாய்ப்புள்ள கட்டுரைகளுக்குக் கூடுதல் காலமும் வழிகாட்டும் தரலாம் என்பதே எதிர்பார்ப்பும் வேண்டுகோளும். கட்டுரை இருக்கும் போது வழிகாட்டுவதற்கும் கட்டுரையை நீக்கிய பிறகு வழிகாட்டுவதற்கும் பேரளவு உளவியல் மாறுபாடுகள் உள்ளன. அருள்கூர்ந்து, உள்ளூரில் சில விக்கிப்பீடியா பயிற்சிகளை ஒருங்கிணைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தைப் பகிர வேண்டுகிறேன். இதற்கு மேல் எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.
ஒரு பெருந்திட்டத்தில் ஈடுபடும் போது உள்ள நடைமுறை எதார்த்தத்தை மற்றொரு பார்வையில் இருந்து விளக்கி சில வேண்டுகோள்களையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைக்கவே முனைகிறேன்.
தானியங்கித் திட்டத்திற்கு அவ்வளவு உரையாடினோம், ஏன் இதற்கு இல்லை என்றால் இரு திட்டங்களின் தன்மையும் மாறுபட்டதாக உள்ளதே காரணம். தானியங்கித் திட்டத்தில் தரவுகளைப் பெற்ற பிறகு, அவற்றைச் சீராகப் பதிவேற்ற நமக்கு வேண்டிய காலமும் முயற்சியும் எடுத்துக் கொண்டோம். ஆனால், 30+ மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஒருங்கிணைத்து 3 நாள் பயிற்சி அளிப்பது என்பது நமது திட்டமிடல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இதில் ஈடுபட்டுள்ள பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆசிரியர்களும் விக்கிப்பீடியா தன்னார்வலர்களும் பல்வேறு கட்ட உரையாடல்கள், திட்டமிடல்களுக்குப் பிறகு இந்த அளவிலேயே இந்தக் கோடைக் காலத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதே எதார்த்தம். ஒரே வகையான பயிற்சியின் மூலமாக சில ஆசிரியர்கள் புரிந்து கொண்டு பங்களிக்கிறார்கள், சில ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பிடிபடவில்லை என்றால் பயிற்சி முறையை எப்படி மேம்படுத்துவது என்று ஆய வேண்டும்.
கூகுள் போன்ற பெருநிறுவனங்களோ தமிழக அரசு போன்ற அரசு நிறுவனங்களோ நம்முடன் இணைந்து பணியாற்ற முன்வருவது நல்ல அறிகுறி. அவர்கள் நம்முடைய அனுமதி இல்லாமல் கூட அவர்கள் நினைத்ததைச் செய்வதற்கும் விக்கிப்பீடியா இடம் தருகிறது. ஒன்று, ஒட்டு மொத்தமாக அவர்கள் பங்களிப்பைத் தடை செய்து நம்மையும் நம் திட்டத்தையும் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். அல்லது, இயன்ற அளவு கூடி உழைத்து, அதனை ஒரு சமூகமாக ஒற்றுமையுடன் எப்படிக் கையாள்கிறோம் என்பதில் நமது வெற்றியும் தொடர்ச்சியும் இருக்க முடியும். இதில், கூடுதல் பணிப்பளு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

அதனால், ஒரு சிலர் புதுப்பயனர்களையும் பங்களிப்புகளையும் பெற ஏதாவது செய்யுங்கள், மற்றவர்கள் வழமை போல இறுக்கமாக கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என்றால் ஆங்கில விக்கிப்பீடியா போன்ற பெரிய சமூகங்கள் தாக்குப் பிடிக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா போன்ற வளரும் விக்கிப்பீடியாக்களுக்கு நல்லதல்ல.

ஆசைகளைத் துறந்த ஆசியஜோதி என்ற கட்டுரை விக்கிக்குப் பொருத்தமற்றும் பதிப்புரிமை மீறலுடனும் இருக்கிறது என்ற காரணத்துக்காக தொடங்கி ஒன்றரை மணி நேரத்தில் நீக்கப்பட்டிருக்கிறது. இது சிக்கல் இல்லை. ஆனால், இந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நியாயமற்ற எதிர்பார்ப்பு. இதே நேரத்தில் உரையாடலில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு இடங்களில் பயிற்சிகளில் இருக்கலாம். வேறு பணிகளில் இருக்கலாம். விக்கிப்பீடியா ஒரு தன்னார்வப் பணியே. முழு நேரப் பணி அன்று. விக்கிப்பீடியாவில் நேரடியாக துப்புரவில் ஈடுபடுவோர் மட்டும் தான் விக்கிக்குப் பங்களிக்கிறார்கள் மற்றவர்கள் கருத்து மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற தொனி வருந்தத்தக்கது. ஏனெனில், பலரது பங்களிப்பும் உழைப்பும் விக்கிக்கு வெளியிலும் உள்ளது. நாட்கணக்கில் மாநிலம் முழுக்க விக்கிக்காக குடும்பத்தை விட்டு அலைகிறார்கள். அது இங்கு ஆவணப்படுத்தப்படுவதில்லை. விக்கிச்சமூகம் சுற்றுச்சூழலைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்பாளர்களைக் கொண்டிருக்கிறத்து. நிரலாக்கம் தரும் நீச்சல்காரன், சீனிவாசன் முதல், பரப்புரைகள் மேற்கொள்ளும் தமிழ்ப்பரிதிமாரி, கல்வித்துறையில் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளும் பரிதிமதி, பார்வதி என்று பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்.
@Booradleyp1: நிச்சயம் தற்போதைய ஆசிரியர் பயிற்சிக் கட்டுரைகளைச் சீராக்க கூடுதல் ஆள்பலம் தேவை. பொறுப்பாளர்களாகவே மூன்று பெயர்களைக் குறிப்பிட்டேன். ஆனால், இன்னும் பலரும் இணைய வேண்டும். முந்தைய ஆசிரியர் பயிற்சிக் கட்டுரைகள் குறித்த பகுப்பில் இருந்தால் தெரிவியுங்கள். சீராக்க முனைவோம். 7 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான கூகுள் கட்டுரைகளும் இன்னும் தேங்கியுள்ளன. துப்புரவில் ஆர்வம் காட்டும் பயனர்களாக இது எவ்வளவு பெரிய அயர்ச்சியைத் தரும் என்று அறிவேன். ஆனால், ஒரு கூட்டுறவில் உள்ள போது நமது கொள்கைகளும் நடைமுறைகளுமே கூட்டாளிகளைத் தவறான புரிதலுக்கு இட்டுச் சென்று ஊக்கம் குன்ற வைக்கக் கூடாது என்பது மட்டுமே ஒரே கவலை. உங்களைப் போல், பார்வதியைப் போல், பரிதிமதியைப் போல் இன்னும் பத்து ஆசிரியர்கள் இப்பயிற்சியின் மூலம் கிடைத்தாலும் தமிழ் விக்கிப்பீடியா பேரளவு முன்னேறும். அதற்குத் தகுந்த காலமும் வாய்ப்பும் தர வேண்டும் என்றே கருத்துகளை முன்வைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:13, 9 மே 2017 (UTC)[பதிலளி]

இரவி, இந்த உரையாடல் ஆரம்பித்தது ஏன்? கட்டுரைகள் நீக்கப்பட்டதால் த-உழவன் அளித்த பதில். இவர் துரித நீக்கல் வேண்டாம் என்கிறார். அதற்கு முறையே Kanags, நான் பதிப்பரிமை மீறல் வேண்டாம், உடன் நீக்கப்பட வேண்டும் எனப் பதிலளித்தோம். நீங்கள் பதிலுக்கு த-உழவன் கருத்தைக் கவனிக்கலாம் என்றீர்கள். நாங்கள் என்ன குறிப்பிடுகிறோம் என்பதைக் கருத்திக் கொண்டீர்களா? எங்கள் சொற்களில் வேறு அர்த்தம் தேடுகிறீர்களா?

இப்போது "குடி குடியை கெடுக்கும்" என்ற கட்டுரையை நீக்கிவிட்டு, நீங்கள் நீக்கியது சரியென்கிறீர்கள். புதுப்பயனருக்கு ஏன் கால அவகாசம் கொடுக்கப்படவில்லை அல்லது அவர் பயனர் வெளிக்கு மாற்றவில்லை? உங்களுக்கு எபப்டி துரித நீக்கல் ஏன் சரியானது? நாங்கள் துரித நீக்கலை எவ்வாறு விளங்கிக் கொள்வது?

//பதிப்புரிமை மீறல், துரித நீக்கல் தகுதிகள் அடிப்படையில் வழமையான துப்புரவுப் பணியில் ஈடுபடும் கடமையும் உரிமையும் அனைவருக்கும் உண்டு.// இதைத்தான் நானும் குறிப்பிட்டேன். ஆனால், //முழுமையாக இணையத்தளம் ஒன்றில் பிரதி பண்ணி எழுதப்பட்ட கட்டுரையை உடனடியாக நீக்கி விடுதலே சிறந்தது. புதியவர் என்பதற்காக மணல்தொட்டியில் இட்டு குப்பை சேர்க்க வேண்டியதில்லை// என்று Kanags குறிப்பிட, பதிலுக்கு த-உழவன், விரைந்து நீக்குதல் சாலச் சிறந்த நடைமுறையல்ல என்பதே எனது எண்ணம். என்றதும், நீங்கள் பதிலுக்கு //இது தொடர்பாக தகவல் உழவன் கருத்தைக் கவனிக்கலாம்.// என்றது எதனுடன் தொடர்புபடுகிறது? பதிலுக்கு நானும் "பதிப்பரிமை மீறல்", "பதிப்பரிமை மீறல்" எனக்குறிப்பிட்டும் நீங்கள், PARITHIMATHI, பார்வதிஸ்ரீ என்போர் விரைந்து நீக்குதல் வேண்டாம் என்றீகளே.

//மேம்பாட்டுக்குச் சிறிது அளவாவது வாய்ப்புள்ள கட்டுரைகளுக்குக் கூடுதல் காலமும் வழிகாட்டும் தரலாம் என்பதே எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.// - இதில் எச்சிக்கலும் இல்லையே. தற்போதல்ல பொதுவாக இதுதான் இடம்பெறுகிறது.

//விக்கிப்பீடியா பயிற்சிகளை ஒருங்கிணைத்துப் பார்த்து உங்கள் அனுபவத்தைப் பகிர வேண்டுகிறேன்.// நான் இருக்கும் இடம் தமிழ்கள் குறைவான இடம். யாராவது சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்தால் நிச்சயம் என்னால் சிறப்பாக பயிற்சியளிக்க முடியும். சர்வதேச நிறுவனங்களில் ஒருங்கிணைப்பாளராக கடைமையாற்றியுள்ளேன். ஆகவே எனக்கு ஒருங்கிணைப்பு பற்றிய அனுபவம் உள்ளது. பயிற்சியளிப்பதில் எனக்கு சிறப்புப் பயிற்சியுமுள்ளது. அதைவிட, விக்கி கொள்கை மட்டில் தெளிவு உள்ளது. நிற்க, 2 மாதங்கள் தற்போதுள்ள நிலையில் ஒவ்வொருநாளும் துப்புரவுப்பணி செய்துபார்த்து உங்கள் அனுபவத்தையும் பகிர வேண்டுகிறேன்.

//மற்றவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நியாயமற்ற எதிர்பார்ப்பு.// கட்டுரைகள் உருவாகும்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பதும் நியாயமற்ற எதிர்பார்ப்பு.

//துப்புரவில் ஈடுபடுவோர் மட்டும் தான் விக்கிக்குப் பங்களிக்கிறார்கள் மற்றவர்கள் கருத்து மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற தொனி வருந்தத்தக்கது.// மற்றவர்களின் பங்களிப்பைக் கேட்கவில்லை. துப்புரவில் ஈடுபடுவோரை விக்கி விதியின்படி இயங்கவிடுமாறுதான் கேட்கிறோம். புதுப் பயனர் உளவியல் பற்றிக் குறிப்பிடும் உங்களுக்கு 4-5 ஆண்டுகள் தொடர்ந்து பங்களிப்பவர்களின் உளவியல் கருத்திற் கொள்ளப்படாதது வருந்தத்தக்கது.--AntanO 11:18, 9 மே 2017 (UTC)[பதிலளி]

தகவல் உழவன், இரவி ஆகியோர் கூறியவாறு, உடனடி நீக்கத்திற்கு பதிலாக, மே மாத ஆசிரியர் பங்களிப்பு என்ற வார்ப்புரு இட்டு அதித கவனத்திற்கு உட்படுத்தலாம், ஏனெனில் சகோ இரவி அவர்கள் கூறியவாறு ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவை எடுத்துச் செல்வது என்பது முக்கியமானது, அவர்கள் மூலமே அடுத்த தலைமுறையை எளிதில் ஈர்க்கலாம். மேலும் விக்கிப்பீடியாவில் எழுதும் முறைகூறித்து பல்வேறு தகவல்களை தொகுத்து வெளியிடலாம்.

நிர்வாகிகளின் பணிச்சுமையும் அதிகமே, ஆங்கில வீடியாவில் உள்ளவாறு புதுப்பயனர் வழிகாட்டி(https://en.wikipedia.org/wiki/Wikipedia:Mentorship) ஆக அனுபவ பயனர்களோடு புதுப்பயனர்களை இணைத்து விடுவதின் மூலம் அவர்கள் புதுப்பயனர்களுக்கு வழிகாட்டியாக திகழ்வதால் நிர்வாகிகளின் பணிச்சுமையும் குறையும், குப்பைகளும் கூடாது. --குறிஞ்சி

@AntanO:, பதிப்புரிமை மீறல், பிற துரித நீக்கல் தகுதிகள் காரணமாக விரைந்து கட்டுரைகளை நீக்குவதை நான் ஏற்கிறேன். சிறிதளவாவது மேம்படுத்த வாய்ப்புள்ள கட்டுரைகளுக்குக் கூடுதல் காலமும் வழிகாட்டலும் தேவைப்படுகிறது என்பதையே தெரிவிக்க விரும்பினேன். இதைத் தெரிவிப்பதில் ஏதேனும் தொடர்பாடல் குழப்பம் இருந்தால் வருந்துகிறேன். ஏற்கனவே அவ்வாறே நடைமுறை உள்ளது என்று தாங்கள் உறுதிப்படுத்தினாலும், அதில் இன்னும் சற்று இளக்கமாக இருப்பது தற்போது பயிற்சிகள் நடக்கும் சூழலைக் கருத்தில் கொண்டு உதவும் என்று கருதினேன். பொதுவாக, புதுப்பயனர் விக்கியை கற்கும் பாங்கு பற்றிய தகவல் உழவனின் கருத்தில் ஏற்பு இருந்தது. அதற்கு ஏற்பு துப்புரவுக்கு என தனிப்பகுப்பு உருவாக்குதல் போன்ற பரிந்துரைகளை முன்வைத்தேன். தங்களின் பயிற்சி அளிக்கும் திறனை அறிந்து மகிழ்ச்சி. அதே வேளை, உலகெங்கும் விக்கியை அறிமுகப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கிறோம் என்பதும் இயக்கம் பெற்ற பாடம். அதுவும் மாநிலம் தழுவிய பயிற்சி நடக்கும் போது ideal vs practical limits பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். துப்புரவுப் பணியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் தொடக்கக் காலங்களில் துப்புரவுப் பணி ஆற்றியதால் அதன் சிரமம் அறிவேன். அதே வேளை, இந்த உரையாடல் துப்புரவாளர் எதிர் பரப்புரையாளர் என்பது போல் நகர்வதும் நல்லதன்று. "எங்களைத் துப்புரவுப் பணியைச் செய்ய விடுங்கள்" என்று நீங்கள் கூறுவது போல் "எங்களைப் புதுப்பயனர்களை கொண்டு வர விடுங்கள்" என்ற மற்றவர்களும் கருதலாம் அல்லவா? நாம் அனைவரும் ஒரு கட்டகத்தின் பகுதிகள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து புரிதலுடன் செயற்படும் போதே வினைத்திறமுடன் செயற்பட முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 13:12, 9 மே 2017 (UTC)[பதிலளி]

தொடுப்பிணைப்பியில் Cleanup May 2017 வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 13:12, 9 மே 2017 (UTC)[பதிலளி]

பயிற்சி பட்டறைகள் நடக்கும்பொழுது புதுப்பயனர்களுக்கு என்று ஏற்கனவே விக்கியிலிருக்கும் கட்டுரைத் தொகுதிகளில் எழுதப்படாமலிருக்கும் கட்டுரைகளை கொடுத்து முயற்சி செய்ய சொல்லலாம், உதாரணம் கிழக்கு ஆப்பிரிக்க நேரம் என்ற கட்டுரை ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ளது, ஆனால் இங்கு அரேபிய சீர் நேரம் போன்ற கட்டுரைகள் இன்னும் எழுதப்படவில்லை, இதனால் அரேபிய சீர் நேரம் போன்ற கட்டுரைகளை புதுப்பயனர்கள் உருவாக்கும்பொழுது அவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் மாதிரி கட்டுரைகள் கிடைக்கும். இதற்கான கட்டுரைகளை அட்டவணையிட்டு முயற்சி செய்யலாம். --குறிஞ்சி

இரவி, இப்போதும் kurinjinet கருத்தும் உடனடி நீக்கத்திற்கு பதிலாக என்றிருக்கிறது. இந்த நீக்கல் என்பது இங்கு எப்படி விளங்கிக் கொள்ளப்படுகின்றது என அறியேன். ஒரு சிலர் நீக்க வேண்டாம் (எவற்றை என்பதில் தெளிவில்லை. சகலதையும் நீக்க வேண்டாமா?) என்றும், சிலர் துரித நீக்கல் தகுதிகள் காரணமாக விரைந்து கட்டுரைகளை நீக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மொத்தத்தில் நீக்கல் என்பது தெளிவில்லை. நீக்க வேண்டாம் என்று கருத்திட்டவர்கள் பதிலளிப்பது நல்லது. அல்லது ஒரு மாதத்திற்கு எக்கட்டுரையையும் நீக்குவதில்லை என்ற முடிவெடுக்கலாம். அதற்கு நானும் ஆதரவளிக்கிறேன். "எங்களைப் புதுப்பயனர்களை கொண்டு வர விடுங்கள்" என்ற மற்றவர்களும் கருதலாம் என்பதற்கும் இடமுள்ளது. ஆம், நாங்கள் எதிர்க்கவில்லை, முட்டுக்கட்டையாக இல்லாது வழிவிடுகிறோம். நீங்கள் புதுப்பயனர்களைக் கொண்டு வாருங்கள். நன்றி. --AntanO 13:42, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் //அல்லது ஒரு மாதத்திற்கு எக்கட்டுரையையும் நீக்குவதில்லை என்ற முடிவெடுக்கலாம்.// ஆதரக்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:28, 9 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் //அல்லது ஒரு மாதத்திற்கு எக்கட்டுரையையும் நீக்குவதில்லை என்ற முடிவெடுக்கலாம்.// ஆதரக்கின்றேன், அதே நேரத்தில் முடிந்தால் விரைவில் விக்கியின் கொள்கைகளை, நிரல்களையும் புரிந்து சிறப்பாக எழுதும் புதுப்பயனர்களின் கட்டுரைகளை திருத்தம் செய்து வழிகாட்டலாம், அது அவர்களுக்கு உற்சாகத்தினை தரும். எனது தனிப்பட்ட வேண்டுகோள். --குறிஞ்சி
எந்தக் கட்டுரைகளும் நீக்குவதில்லை என்ற முடிவு சரியாக இருக்கும் எனத் தோன்றவில்லை. முழு பதிப்புரிமை மீறல் (நீக்குவதற்கு பதில் வெற்றாக்கலாம்), விளம்பரம், விசமம், ஆங்கிலக் கட்டுரை போன்ற அடிப்படை கொள்கைகளுக்கு ஒவ்வாத கட்டுரைகளை நீக்கலாம், ஏனையவற்றை (சோதனை, தானியங்கி மொழிபெயர்ப்பு, கலைகளஞ்சிய நடை, கலைக்ளஞ்சியக் கட்டுரை அல்லாதது, மிகக் குறைவான உள்ளடக்கம்) வார்ப்புரு சேர்த்து ஒரு ஒரு குறிப்பிட்ட காலங்கழித்து நீக்கலாம். கொள்கைகள் குறித்த ஒரு பொதுவான கருத்து, எந்தக் கொள்கையையும் விக்கிமீடியா wmf:Terms of use and wmf:Privacy policy மீறாதவரை, நமது சமூகம் ஓன்று கூடி தேவைக்கேற்றவாறு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மாற்றிக் கொள்ளலாம், எனவே நம்மிடையே கருத்தொற்றுமை இருப்பின் துரித நீக்கல் குறித்த கொள்கையை சிறிதளவு தளற்றுவதில் தவறில்லை. அதே நேரத்தில் இதனால் சேரும் துப்புரவு பணியையும் கவனத்த்தில் கொண்டு, எவ்வளவு நாட்கள் கழித்து எவற்றை நீக்குவது போன்றவற்றில் தெளிவான முடிவெடுத்தல் அவசியம்--சண்முகம்ப7 (பேச்சு) 16:10, 9 மே 2017 (UTC)[பதிலளி]
நீக்காமல் விடலாம். நீக்காமல் இருப்பதற்கு நம்மிடையே கருத்தொற்றுமை உள்ளது. நீக்கப்பட்ட கட்டுரைகளை மீளமைக்கும் எண்ணம் உள்ளதா? ஆம், எனில் நான் நீக்கிய கட்டுரைகளை மீளமைக்கிறேன். மற்ற நிருவாகிகளுக்கும் செய்தி அனுப்பலாம்.--AntanO 16:56, 9 மே 2017 (UTC)[பதிலளி]
அன்டன், பெரும்பாலும் துரித நீக்கல் கட்டுரைகளையே நீக்கியிருப்பீர்கள் என நினைக்கிறேன், அவற்றை மீண்டும் மீளமைப்பது தேவையில்லை என்றே நான் கருதுகின்றேன். ஏற்கனவே இரவி துப்புரவு பணி குறித்த செய்தி அனுப்பியுள்ளார், வேண்டுமானால் இந்த உரையாடல் மற்றும் நீக்கலில் கடைபிடிக்க வேண்டிய தளர்வு குறித்தும் ஒரு செய்தி அனுப்பலாம்--சண்முகம்ப7 (பேச்சு) 17:14, 9 மே 2017 (UTC)[பதிலளி]
துரித நீக்கல் கட்டுரைகள் நீக்கத்தால் புதுப்பயனர் சோர்வடைவதாக கருதுகிறார்கள். நான் நீக்கியது தவறு என்ற கருத்தும் பல இடங்களில் காணப்பட்டது. எனவே மீளமைப்போம். நீக்கத்தான் வேண்டும் என்றால் நீக்கிவிடலாம். --AntanO 17:35, 9 மே 2017 (UTC)[பதிலளி]
@AntanO: புரிதலுக்கு நன்றி. ஏற்கனவே நீக்கிய கட்டுரைகளை மீளமைக்கத் தேவையில்லை. உடனடி நீக்கம் வேண்டாம் என்று பலரும் சொன்னாலும் அவை மேம்படுத்த, தக்க வைக்க சிறிதளவே வாய்ப்புள்ள கட்டுரைகளைத் தான் என்பதாகவே புரிந்து கொள்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, தவறான தலைப்பு, உள்ளடக்கம் ஆனால் தொடர்புடைய கட்டுரை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருக்கிறது என்றால் அதனைச் சுட்டி மேம்படுத்தக் கோரலாம். தற்போது உள்ள Cleanup may 2017 வார்ப்புரு நன்று. ஏனெனில், பொதுவாக கட்டுரை நீக்கப்படும் என்ற அறிவிப்பைக் கண்டாலே படபடப்பதாக புதிய பயனர்கள் தெரிவிக்கிறார்கள். பதிப்புரிமை மீறல், துரித நீக்கல் தகுதிகள் உள்ள கட்டுரைகளை உடனடியாக நீக்கலாம் துப்புரவுப் பணித் தேக்கத்தைக் குறைக்கலாம். அதே வேளை, இவ்வாறு நீக்கும் கட்டுரைகளின் பதிகையைக் கவனித்து உரிய வழிகாட்டுக் குறிப்புகளை அனைவரும் (நீக்குபவர் மட்டுமே அல்ல) பேச்சுப் பக்கங்களில் பகிர்ந்தால் உதவியாக இருக்கும். ஏற்கனவே பலர் துப்புரவுப் பணியில் இணைந்துள்ளது மகிழ்ச்சி. அனைத்து நிருவாகிகளுக்கும் பேச்சுப் பக்க அழைப்பும் விடுத்துள்ளேன். ஏறத்தாழ 2000 பேருக்கு மேல் பங்களிக்க உள்ளார்கள். நாம் வழமையாக ஒவ்வொரு மாதமும் முனைப்பாக பங்களிப்போர் 20 பேர் தான் ! இயன்ற அளவு சிறப்பாகப் பங்களிப்பாளர்களை அரவணைக்கவும் துப்புரவு மேற்கொள்ளவும் முனைவோம். நன்றி. --இரவி (பேச்சு) 17:40, 9 மே 2017 (UTC)[பதிலளி]
நான் நீக்கிய கட்டுரைகள் 100 - 150 இருக்கும். ஆகவே, குறைந்தது 50 பேரையாவது உள்வாங்கலாம் அல்லவா? மீளமைத்தல் குறித்து மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம். --AntanO 17:44, 9 மே 2017 (UTC)[பதிலளி]

"TNSE" முன்னொட்டு இல்லாமல் ஆசிரியர்கள் பங்குபற்றக் கூடிய சாத்தியம் உள்ளதா? ஏனெனில் சில கட்டுரைகள் இயல்பான பெயரில் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையான கட்டுரைகளை எழுதியவர்கள் ஆசிரியர்கள் அல்ல என்று எடுத்து வழமை போல துப்பரவு செய்தல் தேவை. இதற்குத்தான் பகுப்பு:ஆசிரியர் பயிற்சி கட்டுரைகள் எனும் பகுப்பை ஆசிரியர் உருவாக்கும்போது இடுமாறு கேட்டுக்கொண்டேன். மேலும் பல கருத்துகள் பட்டியலிட்டேன். அவற்றை மீண்டும் பயிற்சியாளர்கள் பரிசீலித்து அவற்றை மனதில் நிறுத்தி பயிற்சி அளித்தால் துப்பரவுப் பணி குறையும். //எடுத்த உடன், விக்கித்தரவு, wikiformatting என்று பல்வேறு விசயங்களைக் கற்றுத் தருவதும் அவர்கள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதும் நடைமுறைச் சாத்தியம் அற்றது. // ஒரே நேரத்தில் வெவ்வேறு நபர்களால் ஒரே கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. இதற்காகவே அதனை மேலே கூறினேன். தானியங்கித் தமிழாக்கம்கூட இருக்கின்றது என்று குறிப்பிட்டேன். தானியங்கித் தமிழாக்கத்தை பின்னர் ஒழுங்குபடுத்த முடியும் என்றால் அதனையும் நீக்காது விடலாம். --சி.செந்தி (உரையாடுக) 17:50, 9 மே 2017 (UTC)[பதிலளி]

TNSE முன்னொட்டு இல்லாமலும் பங்களிக்க வாய்ப்பிருக்கிறது. சிலர் தங்கள் பழைய கணக்குகளில் பங்களிக்கிறார்கள். எனவே தான், ஆசிரியர்கள் என்று கருதாமல் இம்மாதம் முழுவதும் துப்புரவைத் தனிப்பகுப்பாகக் கருதலாம் என்று பரிந்துரைத்தேன். எது ஆசிரியர் எழுதியது, எழுதாதது என்று கண்டுபிடிப்பதை விட ஒட்டு மொத்தமாக இம்மாதம் முழுவதும் தனி அணுகுமுறை மேற்கொள்வது இலகு. இதற்கு ஏற்ப வார்ப்புரு அறிவிப்பிலும் மாற்றம் செய்வது என்றாலும் செய்யலாம். நீங்கள் சொல்லும் அனைத்து குறைபாடுகளும் மேம்பாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடியவை. ஆனால், இவை அனைத்தையும் கடைசி ஆசிரியர் வரை கொண்டு சேர்ப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன என்பதால் தான் நம்மால் செய்யக்கூடிய விசயங்களைப் பற்றி மட்டும் பேசுகிறோம். --இரவி (பேச்சு) 18:01, 9 மே 2017 (UTC)[பதிலளி]
ஆம், முன்னொட்டு இல்லாமல் தங்களின் பழைய கணக்கில் எழுதுவதாகவும் ஆசிரியர் ஒருவர் சொன்னார். மேலும் புதுப் பயனர்களுக்கு நாம் செய்யும் ஒத்தாசைகள் அவர்களைச் சென்று அடைவதில்லை. குறிப்பாக நாம் அவருக்குப் பேச்சுப் பக்கத்தில் சொல்லும் செய்தி அவர்கள் கவனத்தை அடைவதில்லை. அடுத்த இரு நாள் பயிற்சியில் பயனரில் பேச்சுப் பக்கத்தையும் கட்டுரையின் உரையாடல் பக்கத்தையும் பயன்படுத்துவதைப் பற்றியும் விளக்கவுள்ளேன். பிற பயிற்சியாளர்களும் இதைக் கவனத்தில் கொள்ளல் நலம்.--இரா. பாலா (பேச்சு) 00:13, 10 மே 2017 (UTC)[பதிலளி]
துப்புரவுப் பணியை எளிதாக்கும் வகையில் பகுப்பு பேச்சு:துப்புரவு தேவைப்படும் மே 2017 கட்டுரைகள் எனும் பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:38, 29 மே 2017 (UTC)[பதிலளி]
ஆசிரியர்களின் பங்களிப்பு சூன் மாதத்திலும் தொடர்கிறது. துப்புரவு தேவைப்படும் கட்டுரைகளில் cleanup june 2017 எனும் வார்ப்புருவினை இட்டு வருகிறேன். (உதாரணம்: டவ் செயல்முறை). இதனைத் தொடரலாமா? கருத்தறிய விரும்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:55, 5 சூன் 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிபீடியாவின் அடுத்த இலக்கு 10 லட்சம் கட்டுரைகள்! தொகு

தமிழ் விக்கிபீடியாவின் அடுத்த இலக்கு 10 லட்சம் கட்டுரைகள்! --AntanO 18:28, 9 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவின் ஆலமரத்தடியில் உரையாடி முடிவெடுப்பது தான் நமது முறையான இலக்குகளாக கருத முடியும். உற்சாக மிகுதியில் விக்கிப்பீடியாவைக் கவனித்து வருபவர்கள் கூறும் கருத்துகளைப் பொருட்படுத்த வேண்டாம். ஒரு இலட்சம் கட்டுரைகளை எட்டிய பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் பொதுக் கருத்தாக உணர்கிறேன். வேறு எந்த எண்ணிக்கை இலக்கும் இருப்பதாகத் தோன்றவில்லை. --இரவி (பேச்சு) 04:44, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இதனை தகவலுக்காகவே பகிர்ந்தேன். --AntanO 04:52, 10 மே 2017 (UTC)[பதிலளி]

கவனத்திற்கு தொகு

சில கட்டுரைகள் "வாழ்வியற் களஞ்சியம்" பிரதி செய்து எழுதப்பட்டுள்ளதுபோல் உள்ளது. பதிப்புரிமை மீறல் செய்யப்படுகின்றதா என்பதைக் கவனிக்கவும். --AntanO 03:43, 10 மே 2017 (UTC)[பதிலளி]

அவ்வாறாயின் அதனை முறையாக கட்டுரையில் இணைக்க வேண்டும். இதனை பயிற்சியாளர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.--AntanO 03:51, 10 மே 2017 (UTC)[பதிலளி]
@Ravidreams: அண்மையில் உரிமை பெற்றதைப்பற்றி அறிவித்த நினைவு. ஆனால் இதனை எப்படி பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவுசெய்யவேண்டும். இந்த உரிமைவழங்கு மடலையும் இங்கே பதிவு செய்துவிட்டு, கட்டுரை வாழ்வியல் களஞ்சியத்தில் யார் எழுதியது என்னும் தகவலையும் பதிவு செய்வது முக்கியம் என நினைக்கின்றேன். இவற்றை நாம் மேம்படுத்தவோ, சுருகக்வோ நமக்கு உரிமை இருக்கலாம். முன்னர் நாம் பெற்றது 10-தொகுதி கலைக்களஞ்சியத்துக்கு. அதன் பின் இந்த அறிவிய்ல வாழ்வியல் பல்தொகுதி கலைக்களஞ்சியத்த்துக்கு.--செல்வா (பேச்சு) 04:19, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இந்த அரசாணையின் படி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள் உட்பட அனைத்து அரசு நிறுவன வெளியீடுகளையும் CC-BY-SA வில் பயன்படுத்தலாம் என்பதால் இவை பதிப்புரிமை மீறலாகக் கருதப்படாது. ஆனால், தகுந்த முறையில் ஆக்குநர்சுட்டு அளிக்கப்பட வேண்டும். உதவி:ஆக்குநர்சுட்டு பக்கத்தில் இந்த வழிகாட்டலைச் சேர்க்கலாம். தொடர்புடைய ஆங்கில விக்கிப்பீடியா உதவிப் பக்கம் சிக்குபவர்கள் குறிப்பிட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 04:38, 10 மே 2017 (UTC)[பதிலளி]

Wikipedia:Drafts தொகு

en:Wikipedia:Drafts என்று ஆ.வியில் உள்ளதை இங்கு கொண்டுவரலாமா? (Drafts are administration pages in the Draft namespace where new articles may be stored. They help facilitate new articles to develop and receive feedback before being moved to Wikipedia's mainspace.) --சி.செந்தி (உரையாடுக) 04:45, 10 மே 2017 (UTC) இங்கு ஏற்கனவே முதல் கட்டுரை ஆக்கத்தின்போது வார்ப்புரு:New page பயன்படுத்தப்படுகின்றது. அதில் இம்முறை சொல்லப்பட்டு உள்ளது.--சி.செந்தி (உரையாடுக) 04:48, 10 மே 2017 (UTC)[பதிலளி]

வேண்டாம். இது தேவையற்ற அதிகாரப் படிநிலைகளைக் கொண்டு வருவதுடன் புதிய பயனர்களின் உற்சாகத்தை முற்றிலும் குலைத்து விடுகிறது. தமிழ் விக்கிப்பீடியா போன்ற சிறு விக்கிகளுக்கு உகந்தது அன்று. --இரவி (பேச்சு) 04:55, 10 மே 2017 (UTC)[பதிலளி]

புதுப் பயனர்களுக்கு இந்த கோப்பு பெரிதும் உதவும் என நம்புகிறேன்.

 

குறிஞ்சி (பேச்சு) 05:42, 13 மே 2017 (UTC)[பதிலளி]

  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:55, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் இலக்கணம் தொகு

  • பயிற்றுவிப்பாளர்கள் குறைந்தபட்சம், பாரிய இலக்கண விதிகளை மீறாது தலைப்புக்கள் அமைக்கக் கற்றுக்கொடுங்கள். எ.கா: கேண்டி க்ரஷ் சாகா என்ற கட்டுரை. --AntanO 09:22, 10 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தற்காலிக இரத்து தொகு

தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி நிருவாகக் காரணங்களை முன்னிட்டு தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் ஒரு தேதியில் ஒருங்கிணைக்கப்படலாம்.--இரவி (பேச்சு) 13:04, 10 மே 2017 (UTC)[பதிலளி]

பின்னர் எப்போது நடக்கும்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:22, 10 மே 2017 (UTC)[பதிலளி]
தேதி முடிவாகவில்லை. முன்கூட்டியே அறிவிக்க வேண்டுவோம். இது நம் தரப்பில் தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்க உதவும். --இரவி (பேச்சு) 13:50, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இரவி, போட்டிக்கு இடையூறு விளைவிக்காத நாள் ஒன்றில் ஒழுங்கு செய்யமுடியாதா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:54, 10 மே 2017 (UTC)[பதிலளி]
~30 மாவட்டங்களில் ஏறத்தாழ 3000 ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி என்பது மாபெரும் நடைமுறை ஏற்பாடுகள் அடங்கிய திட்டம். இதனை ஒருங்கிணைப்பவர்கள் தேதியை முடிவு செய்ய பல்வேறு காரணிகள் உள்ளன. விக்கிப்பீடியாவுக்குத் தோதான நாளில் நடத்துங்கள் என்று கோருவது ஏரணமற்றது. முன்கூட்டியே அறிவிக்க வேண்டுமானால் கோரலாம். --இரவி (பேச்சு) 14:07, 10 மே 2017 (UTC)[பதிலளி]
//நிருவாகக் காரணங்களை முன்னிட்டு// விளக்க முடியுமா?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:12, 10 மே 2017 (UTC)[பதிலளி]
ஏற்பாட்டாளர்கள் வேறு காரணம், விளக்கம் ஏதும் தரவில்லை. மீண்டும் நிகழ்ச்சிகளைத் தக்க வேளையில் ஒருங்கிணைக்க ஆர்வமாக உள்ளார்கள் என்று மட்டும் அறிய முடிகிறது. --இரவி (பேச்சு) 14:15, 10 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் நலம் தொகு

தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் பொதுவான மனநிலை (Community health) குறித்து அறியவும் உரையாடவும் விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலங்களில் (~2010 அல்லது 2013 வரையிலும் கூட), விக்கிப்பீடியாவுக்கு வருவதும் பங்களிப்பதும் உடன் பங்காற்றும் பயனர்களுடன் உரையாடுவதுமே ஒரு நிறைவான, நட்பான அனுபவமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால், அண்மைய சில ஆண்டுகளாக பல்வேறு பயனர்களும் ஓர் இறுக்கமான சூழலில் பங்களிப்பதாக உணர்கிறேன். மற்றவர்கள் எப்படி உணர்கிறீர்கள், இதனை மாற்ற என்ன செய்யலாம் என்று அறிய விரும்புகிறேன். தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம், அதனைத் தரத்துடன் பேண வேண்டும், அதற்கென சில விதிகள் உள்ளன என்பதை எல்லாம் தாண்டி, நாம் ஒரு சமூகமும் கூட என்பதை மறந்து விட முடியாது. சமூகம் இல்லா விக்கி மயானக்காடாகவே இருக்கும். அண்மைக்காலமாக, ஆங்கில விக்கிப்பீடியாவைக் கொண்ட பல்வேறு விதிகளை இறுக்கமாக வலியுறுத்தி பயனர்களை அயர்வுறச் செய்து விரட்டியடிக்கிறோமோ என்று கவலையுறுகிறேன். விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் தவிர்த்த மற்ற சிறு நடைமுறைகள், வழிகாட்டல்கள் அனைத்திலும் இயன்ற அளவு பங்களிப்பவரின் அனுபவம், சூழலைக் கருத்தில் கொண்டு அரவணைத்துச் செல்வதே நலம் பயக்கும். விக்கி விதிகள் முக்கியம் தான். ஆனால், இராணுவப் பயிற்சிக்குச் செல்வதைப் போன்ற ஒரு பதைபதைப்போடு விக்கியைத் தொகுக்க முடியாது. இது ஆங்கில விக்கிப்பீடியாவில் மிகப் பெரிய பிரச்சினையாக அலசப்படுகிறது. en:Wikipedia:Harassment பற்றிய உரையாடல்கள் நடைபெறுகின்றன. ஆனால், நம்மைப் போன்ற சிறு விக்கிகள் தற்போதைய நிலையிலேயே இந்தச் சிக்கலுக்குள் மாட்டுவது பெரும் கேடாக முடியும். --இரவி (பேச்சு) 13:28, 10 மே 2017 (UTC)[பதிலளி]

இதற்காக செய்யவேண்டியது தான் என்ன?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:58, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இரவி நானே இது பற்றி எங்காவது ஆரம்பிகலாம் என நினைத்ததுண்டு. சிங்கப்பூரில் சந்தித்தபோது உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். இணையத்தில் எங்கெங்கோ சுற்றியலைந்து யதேச்சயாய் கண்டடைந்த இடம் தமிழ் விக்கிப்பீடியா. எனக்கான களம் இதுவென உணர்ந்தேன். 2014 வரை மகிழ்வாக பங்காற்றினேன். 2015, 2016 மற்றும் சமீப காலங்களில் மிகவும் இறுக்கமாக உணர்கிறேன். முக்கிய குறையாக எனக்குத் தெரிவது புதுப்பயனர்களை அரவணைத்துச் செல்லாமை, கனிவான சொற்களைப் பயன்படுத்தாமை. மேலும் தெளிவு வேண்டி சில விசயங்களை ஆலமரத்தடியிலே அல்லது தொடர்புடைய பங்கங்களிலோ கேட்கும்போது சரியான வழிகாட்டலின்றி தவித்திருக்கிறேன். கடுமையான மற்றும் மறைமுக கேலியையும் உணர்ந்த்தாக நினைக்கிறேன். 2008 லிருந்தே தமிழ் விக்கியில் இணைந்திருந்தாலும் 2013-ல் முனைப்பாக பங்களித்தபோது என்னை அடையாளம் கண்டு திறன் மேம்படுத்தும் சிறு பயிற்சிகள் எனக்கு வழங்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். இப்போது கூட பயிற்சியாளர்களுக்கு என சிறப்பு பயிற்சிகளோ, செய்யக்கூடியவை மேலும் செய்யக்கூடாதவை, பயிற்சிக்கான வளங்கள், கடந்த பயிற்சியில் கற்றுக் கொண்ட பாடங்கள் பற்றிய ஆவணப்படுத்துதல் போன்றவை இல்லை. (ஒருவேளை நான் கவனிக்கவில்லையோ என்னவோ) தமிழ் விக்கியில் சற்று சோர்வாக உணர்ந்தபோதுதான் பொதுவகத்திற்கு நேரம் ஒதுக்கினேன். இம்மாதிரியான குழுப் பங்களிப்புகளில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றுவது இயல்பு என்ற மனநிலையையும் மீறி காயப்பட்டதாகவே உணர்கிறேன். இதன்காரணமாகவே விக்கிக்கு வெளியே சில சமயம் சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்திருக்கிறேன் (நேற்று கூட). ஒற்றை வரியில் சொல்வதானால் குழுவாக செயல்படுவதாக சொல்லிக் கொண்டு எந்த அறிவையும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கிறோமோ எனத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் யாரையும் குறிப்பிட்டு இதை எழுதவில்லை. நன்றி.--இரா. பாலா (பேச்சு) 14:32, 10 மே 2017 (UTC)[பதிலளி]
1000 கட்டுரைகளுடன் ஒருசில பயனர்களுடன் இருந்த விக்கிக்கும், இப்போது 100,000 கட்டுரைகளுடன் விக்கிக்கும் நிச்சயம் வேறுபாடு இருந்தே ஆகும். இரு ஒரு பரிணாமம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது நியதி. இதனைப் புரிந்து கொண்டு நகர வேண்டும். மேலும், எமக்கு சாத்தியமான பகுதிகளுக்கு மட்டும் ஆ.வி விதிகளின் சுட்டிகளை இணைக்கிறோம். ஆனால், விரும்பமில்லாதவற்றுக்கு ஆ.வி விதிகளை மறுக்கிறோம். உண்மையில் எது நமது வழிகாட்டி? ஒருவரைப் பிடிக்காவிட்டால் குழுவாகச் சேர்ந்து, குற்றங்கண்டு, விரட்டியடிக்கிறோமோ அல்லது அரவணைத்துச் செல்ல வழி காண்கிறோமா என்பதிலும் தெளிவு வேண்டும். சிலவேளைகளில், கடும் தொணியில் பேச்சை ஆரம்பித்துவிட்டு, பதிலுக்கு மற்றவரும் இன்னும் கடுமை காட்டினால், "ஐயோ, கடிமையான வார்த்தை" என தற்காப்புத் தந்திரோபாயம் செய்கிறோமா? இரு கைகள் தட்டினால்தான் ஓசை வரும். ஒருவரைப் பற்றிய நமது முன்னமே பதிவாகியுள்ள மறை எண்ணங்கள் எப்படிப்பட்டன? இவை தாக்கம் செய்கின்றனவா எனவும் ஆய வேண்டும். "இல்லை" என மறுத்து சுய தற்காப்பு உளவியல் இடம்பெறுகின்றதா? en:Wikipedia:Harassment பற்றிய சிக்கல் விக்கிக்கு வெளியிலும் எனக்கு ஏற்பட்டது. இதனை விக்கிமீடியா நிறுவனமும் அறியும். ஆனாலும், இன்னும் விக்கிக்கு வெளியில் என்னைப் பற்றிப் பேசும் போக்குத் தொடர்கிறது. [இது பற்றி அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவுள்ளேன்.] இவ்வாறான போக்குகள் நிச்சயம் தமிழ் விக்கிப்பீடியா சமூகத்தின் நலத்தைப் பாதிக்கும். உண்மையானதும், பக்கச்சார்பற்ற சுயபரிசோதனை செய்ய தமிழ் விக்கிப்பீடியாவோ அல்லது அதன் பயனர்களே ஆயத்தமாக உள்ளனரா? --AntanO 19:08, 10 மே 2017 (UTC)[பதிலளி]
இரவி, இந்தச் சிக்கல் பற்றி என்னாலும் உணர முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் விக்கிப்பீடியாவுக்கு மக்கள் பங்களிப்பதற்கான காரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்படி "Fun" என்பதே மிக முக்கியமான காரணம் என்று கூறப்பட்டது. இந்த Fun ஐத் தவிர்த்துவிட்டு விக்கிப்பீடியாவை வளர்த்தெடுப்பது கடினம் என்றே தோன்றுகிறது. பங்களிப்பவர்கள் மகிழ்ச்சியாகப் பங்களிப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்குவது அவசியம். உரையாடல்களில் சில சந்தர்ப்பங்களில் பயனர்கள் மரியாதைக் குறைவான சொற்பயன்பாடுகள் மூலம் தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்குவதையும் காண முடிகிறது. நக்கல், நையாண்டி, அவமதிப்பு, பயமுறுத்தல் போன்றவற்றையும் அவ்வப்போது காண முடிகிறது. முக்கியமான விக்கிப்பீடியா விதி முறைகளைக் கடைப்பிடிப்பது தமிழ் விக்கியின் தரத்தை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியம் என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது. ஆனாலும் இதை எவ்வாறு பங்களிப்பவர்களிடையே எதிர்மறைக் கருத்துக்கள் உருவாகாமல் இருக்கும்படி நடைமுறைப் படுத்துவது என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. விக்கிப்பீடியா விதிகள் குறித்து விளக்கம் அதிகம் இல்லாத புதிய பயனர்கள் மட்டுமன்றி நீண்டகாலப் பயனர்கள்கூடத் தமது உற்சாகத்தை இழந்துவிடக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படுவது வருந்தத்தக்கது. இந்த விடயங்கள் குறித்துக் கலந்துரையாடி நல்ல வழிமுறைகளை உருவாக்கவேண்டும். கட்டுரைகளில் இடப்படும் சில tags தேவையில்லாமல் கடுமையாக இருக்கின்றன. அவைகளையும் திருத்த வேண்டும். -- மயூரநாதன் (பேச்சு) 03:40, 12 மே 2017 (UTC)[பதிலளி]

உண்மையில் ஆய்வு எதை வெளிப்படுத்துகிறது. பின்வருவனவற்றைக் கவனிக்கலாம்.

    • விக்கிப்பீடியாவுக்கு பங்களிக்கத் தொடங்கியதற்கான பிரதான காரணங்கள்:
      • 69% Like the idea of volunteering to share knowledge
      • 64% Saw an error & wanted to fix it
      • 50% Knew a lot about subject that was poorly covered
    • பங்களிப்புத் தொடர்வதற்கான பிரதான காரணங்கள்:
      • 70% Like the idea of volunteering to share.
      • 69% Believe that information should be free
      • 63% Contribute to subject matters with expertise
      • 60% It's fun
      • 59% Like Wikipedia's philosophy of openess
      • 57% Keep finding or looking for mistakes
      • 53% Find articles that are biased/incomplete
    • தொகுத்தலை இலகுவாக்க உதவுவன:
      • 74% Help Pages
      • 63% Policies & guidelines
      • 61% Editing Interface
      • 56% Wiki markup
      • 56% Community forums/discussions
    • பங்களிப்புத் குறைவதற்கான பிரதான காரணங்கள்:
      • 37% Less time
      • 21% Spend more time in other offline activities
உசாத்துணை - WIKIPEDIA EDITORS STUDY: RESULTS FROM THE EDITOR SURVEY, APRIL 2011


@Shriheeran:, இந்த உரையாடலையே தொடக்கப் புள்ளியாக கருதலாம். பயனர்களின் கருத்துக்கும் தேவைக்கும் ஏற்ப அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். எனக்குத் தோன்றுவது: மற்ற சமூகங்கள் எப்படி இதனை எதிர்கொள்கின்றன, ஏதேனும் சிறப்புப் பயிற்சிகள் உள்ளனவா (விக்கி நுட்பப் பயிற்சி போல) என்ற அறிந்து கொள்ளலாம். அன்டன் கூறுவது போல் உண்மையான, பக்கச்சார்பற்ற சுயபரிசோதனை செய்வதற்கு கருத்தெடுப்பு, கலந்துரையாடல் முதலிய வழிகள் உள்ளனவா என்று ஆயலாம். இந்தச் செயற்பாட்டின் இறுதியில் மயூரநாதன் கூறுவது போல நம் அனைவருக்கும் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதை இனிமையான ஒரு அனுபவமாக மாற்றுவதே இலக்காக இருக்கும். அதற்கான சில அடிப்படைப் புரிந்துணர்வுகளை வரையறுக்கலாம். இது நிச்சயம் மிக நீண்ட ஒரு செயற்றிட்டமாகவே இருக்கும்.

@Balurbala:, மனம் திறந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. எத்தகைய சிறு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? எடுத்துக்காட்டுக்கு, சில தலைப்புகளைக் குறிப்பிட முடியுமா? எத்தகைய சிறு ஐயம் ஆனாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் புதிய விசயங்களைக் கற்றுக் கொண்டே வருகிறோம். வலையுரைகளாக சிறு சிறு பயிற்சிகள் வழங்கலாம் என்று முன்பு பல முறை பேசி இருக்கிறோம். அதனை முடுக்கி விட வேண்டிய தேவை இருக்கிறது. விக்கி நுட்பப் பயிற்சி போன்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும் மிக அரிதாகவே அவை போன்ற பெருமெடுப்பிலான பயிற்சிகளை வழங்க முடியும். CIS-A2K வழங்கும் Train the Trainer பயிற்சியிலும் வழமையாகத் தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவின் தேவைக்கு ஏற்ப பன்முகத் திறன்களை வழங்கும் இத்தகைய பயிற்சிகள் உதவுமா? நிச்சயம் இது போன்ற பயிற்சி ஒன்றை ஒருங்கிணைக்க முடியும். நாம் பல பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்திருந்தாலும் ஒரு முறையான பயிற்சி முறைமை இன்றி இருப்பதும் பெரும் குறையே. வரும் ஆண்டுகளில் இதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.

@AntanO:, நிச்சயம் புதியவர், நெடுநாள் பங்கேற்பாளர், நிருவாகிகள், முனைப்பான துப்புரவுப் பணியாற்றுவோர், மூத்தோர், இளையோர், பெண்கள் என்று அனைத்து வகையான பயனர்களும் எப்படி உணர்கிறார்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன, அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் என்று பொதுவாகத் தான் இவ்வுரையாடலைத் துவக்கினேன். இவ்வுரையாடல் வழிமுறைகள், செயற்பாடுகள் பற்றியதாக இருக்குமே தவிர, குறித்த நிகழ்வுகள் தொடர்பாகவோ குறிப்பிட்ட நபர்கள் தொடர்பாகவோ நிச்சயம் இருக்காது.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், மாற்றத்தின் படிநிலைகள் குறித்தும் அது நல்ல மாற்றமாக இருக்க முனைவது குறித்தும் தெளிவு வேண்டும் என்று கருதுகிறேன். இங்கு கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள சூழல் மாற்றம் குறித்தே பேசுகிறோம். 1000 கட்டுரைகளும் ஒரு சில பயனர்களும் இருந்த 2005-2006 காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு அன்று. 2014க்கும் 2017க்கு என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது?

தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சி நிலை (தோராயமான எண்ணிக்கை) கீழே:

ஆண்டு கட்டுரைகள் 10+ மொத்தப் பங்களிப்பாளர்கள் புதியவர்கள் (மாதம்) 5+ பங்கிப்பாளர்கள் (மாதம்) 100+ பங்கிப்பாளர்கள் நிருவாகிகள்
மார்ச்சு 2014 60000 1137 18 88 24 37
மார்ச்சு 2017 93488 1657 14 77 13 37

இந்த மூன்று ஆண்டுகளில் 10+ பங்களிப்புகள் செய்த 520 பங்களிப்பாளர்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஒவ்வொரு மாதமும் பெறும் புதியவர்கள், 5+ தொகுப்புகள் செய்வோர், 10+ தொகுப்புகள் செய்வோர் எண்ணிக்கை வளரவில்லை என்பதோடு தொடர்ந்து ஓரளவு வீழ்ச்சியும் கண்டு வருகிறது. இணையத்தில் தமிழ் பயன்பாடும், பரவலான கணினி, கைப்பேசி வழி இணைய அணுகலும் கூடி வரும் வேளையில் நமது பங்களிப்பாளர்கள் ஈடுபாடும் கூடியிருக்க வேண்டும் அல்லவா? 2003 தொடங்கி 2010 வரை மாதம் 100+ பங்களிப்போர் எண்ணிக்கை ஒற்றை எண்ணாக இருந்தது அதற்குப் பிறகு சீராக 10ஐத் தாண்டி 20க்கு மேல் இருந்தது. ஆகத்து 2013 - சூன் 2014 வரை இது சீராக 20க்கு மேலே இருந்தது. அதற்குப் பிறகு அதனைத் தக்க வைக்க முடியவில்லை. கடந்த ஓரிரு ஆண்டாக தமிழ் விக்கிப்பீடியாவில் இறுக்கம் நிலவுவவதாக நாம் உணர்வதுடன் இந்த எண்ணிக்கையைப் பொருத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் 2% பங்களிப்பாளர்களே 80% தொகுப்புகளுக்கு மேல் செய்கிறார்கள் என்பதால் ஒவ்வொரு மாதமும் 100+ பங்களிப்புகள் செய்வோர் எண்ணிக்கை மிக முக்கியம். சூழல் உவப்பாக இல்லாததால் பங்களிப்பை நிறுத்துவோரும் இவர்களே. அவ்வப்போது வந்த செல்வோருக்கு இச்சூழலைச் சட்டென உணர முடியாது. இந்தச் சூழலை எங்கே, எப்படி தவற விட்டோம் என்ற தன்னாய்வே இந்த உரையாடலுக்கான தொடக்கப்புள்ளி.

இந்தப் புள்ளிவிவரங்களை ஆங்கில விக்கிப்பீடியா வளர்ச்சி நிலைகளோ ஒப்பிட்டுப் பார்ப்போம்.

ஆங்கில விக்கிப்பீடியா மொத்தம் 1657 10+ பங்களிப்பாளர்களைக் கொண்டிருந்தது ஏப்ரல் 2003இல். அதாவது அவர்கள் திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் 3 மாதங்களில். அன்று தொடங்கி மே 2008 வரை சீரான வளர்ச்சி காண்கிறார்கள்.

ஆங்கில விக்கிப்பீடியா வளர்ச்சி நிலை (தோராயமான எண்ணிக்கை) கீழே:

ஆண்டு கட்டுரைகள் 10+ மொத்தப் பங்களிப்பாளர்கள் புதியவர்கள் (மாதம்) 5+ பங்கிப்பாளர்கள் (மாதம்) 100+ பங்கிப்பாளர்கள்
ஏப்ரல் 2003 120000 1658 130 508 122
மே 2008 2.3 மில்லியன் 374868 10625 44560 4354

2007-2008 வரை சீரான வளர்ச்சி நிலையில் இருந்த ஆங்கில விக்கிப்பீடியா அதன் பிறகு தொடர்ந்து சீராக பயனர்களை இழந்து வருகிறது. இதே ஆண்டுகளில் அவர்களின் நிருவாகிகள் தேர்வும் குறைந்து வருகிறது. அவர்களது நிருவாகிகள் தேர்வு எண்ணிக்கை கீழே:

  • 2017 (இது வரை 12)
  • 2016 (16)
  • 2015 (21)
  • 2014 (22)
  • 2013 (34)
  • 2012 (28)
  • 2011 (52)
  • 2010 (75)
  • 2009 (121)
  • 2008 (201)
  • 2007 (408)
  • 2006 (353)
  • 2005 (387)
  • 2004 (240)
  • 2003 (123)

ஓர் உயிர்ப்புள்ள சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகள் உறைந்து வருவது போன்ற நிலையையே ஆங்கில விக்கிப்பீடியா எட்டி வருகிறது. நிச்சயம் நாம் அவர்களை ஒப்பிட்டுச் சில பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்லது.

ஆங்கில விக்கிப்பீடியா நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நிலை என்ன, தமிழ் விக்கிப்பீடியர்களின் பக்குவம் என்ன என்று இடம் அறிந்து வளர்முக நோக்கில் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கு நடைமுறைப்படுத்துதல் என்பது ஒருவருக்குத் தோதானது மற்றொருவருக்குத் தோது இல்லை என்ற அணுகுமுறையில் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட விதியின் அடிப்படையில் அடுத்த கட்டத்துக்குச் செல்ல தயாராக இருக்கிறதா என்பதை வைத்துத் தான். ஒன்று அல்லது பூச்சியம் என்ற இரட்டை நிலைப்பாட்டில் செயற்படமுடியாது. சூழல் மதிப்பீடு (Judgment) இங்கு முக்கியம். ஆங்கில விக்கிப்பீடியா விதிகள் ஆங்கில விக்கிப்பீடியா பயனர்களையே சோர்வுறச் செய்கின்றன என்று அவர்களே விமரிசிக்கும் போது நாம் இங்கு அப்படியே இறக்குமதி செய்ய முடியாது.

நாம் தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய 2003ல் இருந்து 2017 வரை மிகவும் வளர்ந்து விட்டோம், அதனால் கடுமையான மாற்றங்கள் தகும் என்று தோன்றினாலும், ஏப்ரல் 2003ல் 1658 மொத்தப் பயனர்களுடன் 120000 கட்டுரைகளுடன் ஆங்கில விக்கிப்பீடியா இருந்த மிகவும் தொடக்க நிலையிலேயே நாம் இருக்கிறோம். இப்போதிருக்கும் ஆங்கில விக்கி விதிகளை 2003லேயே நடைமுறைப்படுத்தி இருந்தால் அச்சமூகம் அப்போதே கருகி இருக்கும். விதிகளும் நடைமுறைகளும் சமூகம் சமூகம் வளர வளர அதன் வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்பவே தேவைக்கு ஏற்பவே விரிவாக வேண்டும். உசேன் போல்ட் ஓடும் ஒட்டப்பந்தயத்தின் விதிகளையும் பயிற்சிகளையும் தொடக்கப் பள்ளியில் மகிழ்ந்து விளையாடும் சிறுவர்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாது. ஆங்கில விக்கிப்பீடியாவிலும் காமன்சிலும் பயிற்சி உடைய உங்களைப் போன்றோர் இங்கு பங்களிப்பது நன்று. அதன் மூலமே தமிழில் மட்டுமே பங்களிக்கும் புதியவர்கள் புதியன கற்று முன்னேற முடியும். சுந்தர், சோடாபாட்டில் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வாறு வழிகாட்ட பல பயனர்களைப் பெற்றுள்ளோம். ஆனால், இது ஒரு வகை mentoringஆக இருக்க வேண்டுமே ஒழிய policing ஆக இருக்கக்கூடாது. கட்டுரைகள் மேம்பட மேம்பட விதிகள் தெளிவுபட தெளிவுபட பயனர்களும் அடுத்த கட்டப் பக்குவத்துக்கு நகர்ந்திருக்க வேண்டும். மாறாக, அவர்களைக் களைப்புறச் செய்து பங்களிப்புகளைக் குறைத்துக் கொள்ள வைக்கக் கூடாது.

WIKIPEDIA EDITORS STUDY: RESULTS FROM THE EDITOR SURVEY, APRIL 2011 பின்வருமாறு சுட்டுகிறது:

The Wikimedia movement has made increasing its editor base to 200,000 by 2015 a major priority. But the recently concluded Editor Trends Study discovered an alarming trend of flattening participation across all language projects. Looking closely at English Wikipedia, the study found significant decline in editors with more than 10 edits. It has been hypothesized that edit wars, reverts and acrimony among editors is a contributor to this decline. We found that, overall, editors have a very positive opinion of their peers, but many reported experiencing negative interactions and harassment by others. In addition, negative interactions reduce the likelihood of editing in the future. On the other hand, positive interactions, like helping others in editing and peer recognition, not only make editors have a more positive opinion of the community, but also increase the likelihood of editing in the future.

நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள ***60% It's fun என்ற கருத்து மற்ற காரணங்களிலும் இருந்து தனித்ததல்ல. மற்ற காரணங்களுக்காக பங்களிப்பவர்களுக்கும் இந்த இன்சூழல் இன்றியமையாதது.

தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் இடர்கள் குறித்து நீங்கள் அதிகாரிகளுக்கு அனுப்பிய மடலுக்கு நன்றி. தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த உரையாடலைப் பொதுவாகவே அணுக வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:57, 22 மே 2017 (UTC)[பதிலளி]

//பொதுவாகத் தான் இவ்வுரையாடலைத் துவக்கினேன்// அப்படியா? பொது இடத்தில் இவ்வாறுதான் நாகரீகமாக எழுத வேண்டும் என்பதற்காக, தயவு செய்து என்னிடம் இவ்வாறு குறிப்பிட வேண்டாம். நிற்க, தமிழ் விக்கிப்பீடியா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சிலரும், அப்படியல்ல இப்படித்தான் இருக்க வேண்டும் என வேறு சிலரும் கருதலாம், அதன்படி செயற்படலாம். அதற்கு தேவையான ஏரணரங்களைப் பயன்படுத்தலாம். இதுதான் உளவியலும்கூட. உங்களுக்கு எப்படியோ அவ்வாறு மாற்றிக் கொள்ளுங்கள். விருப்பியவர்கள் பங்களிப்பார்கள். மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்வார்கள். ஆனால், அதனை தெளிவாகக் குறிப்பிடுங்கள். ஒருவரின் உழைப்பை இங்கு பயன்படுத்திவிட்டு, அவர் தங்கள் நலனுக்கு அல்லது விருப்பு வெறுப்புக்கு அமைவாகச் செல்லாவிட்டால், முதுகில் குத்துவது போல் செயற்பட வேண்டாம். இதற்கும் பதிலாக உங்களிடம் ஏரணம் இருக்கும். அதைக் கொண்டு பதில் எழுதுங்கள். இனி நான் ஏரணமாக பதில் அளிக்கப் போவதில்லை. எப்போது தமிழ் விக்கிப்பீடியா பிழையாகச் செல்கிறதோ அப்போது கேள்விகளை நேராகக் தெரிவிப்பேன். இனிமேல் அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்போவதுமில்லை. --AntanO 11:13, 22 மே 2017 (UTC)[பதிலளி]

இரவி ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் போதும் நாம் சரியாகத்தான் பயிற்சியளித்தோமா எனத் தோன்றுகிறது. பொதுவான பயிற்சி வழிகாட்டல்கள் எதுவும் இன்று பயிற்சியளித்ததாகவே உணர்கிறேன். தானாகவே keynote (Powerpoint) உருவாக்கி அதன் மூலம் பயிற்சியளித்தேன். இது ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை. தமிழ் விக்கிக்குள்ளேயே பயிற்சியாளருக்கு என பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும். மேலும் பயிற்சிக்கென பொதுவான திட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டும். பொதுவான keynote (Powerpoint) அனைத்து பயிற்சியாளரும் பயன்படுத்தும்படி உருவாக்க வேண்டும். பயிற்சியின்போது, பயிற்சி பெறுபவர்கள் கையோடு எடுத்துச் செல்லும்படியான சிறு விளக்கக் கையேடு அளித்தல் வேண்டும் என எதிர்பார்க்கிறேன். பயிற்சியளிக்கும் முறையை நெறிப்படுத்த வேண்டும்.--இரா. பாலா (பேச்சு) 02:04, 23 மே 2017 (UTC)[பதிலளி]

ரவியின் மதிப்பீட்டுஅன் உடன்படுகிறேன். எவ்வாறு தமிழ் வலைப்பதிவு உலகு சிதறியதோ, அது போன்றே தமிழ் விக்கியியும் fragment படுகிறது போன்று தெரிகிறது. Community இன் முக்கியத்தவத்தை நாம் தொடக்கத்தில் மிகவும் முதன்மைப்படுத்தி இருந்தோம். அது இழக்கப்பட்டு இருக்கின்றது என்று நினைக்கிறேன். Community பேண வளர்ப்பது தொடர்பாக நாம் கூடிதலாகச் சிந்திக்க வேண்டும். இது தொடர்பாக அண்மையில் நானும் ஒரு கருத்து இட்டு இருந்தேன் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)# விக்கிச் சமூகத்தை இணைத்தல் - மாதாந்த விக்கி அல்லது ஸ்கைப் சந்திப்பு. சமூகப் பிணைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும். --Natkeeran (பேச்சு) 17:20, 23 மே 2017 (UTC)[பதிலளி]

──────────────────────────────────────────────────────────────────────────────────────────────────── இப்படியொரு உரையாடலைத் தொடங்கியமைக்கு நன்றி. நமது சமூகம் என்பதை விட, குடும்பம் எனலாம். இதில் நானும் இணைந்தமைக்கு, பல சமூக சூழ்நிலைகளில் மகிழ்ந்து வருகிறேன். ஏனெனில், தொடக்க காலத்தில் எனக்கு கிடைத்த வழிகாட்டல்களை விக்கியினுள் பெற்றேன். ஆனால், தற்போது அது விக்கிக்கு வெளியே தான் அதிகம் கிடைக்கிறது.

இரா. பாலா ! என்னுடைய அனுபவங்களை பலருடன் பகிர்ந்து கொள்ள, அவ்வப்போது முயற்சி எடுத்தே வருகிறேன். இருப்பினும் நீங்கள் கூறியது போல, நமக்குள் பரவிக்கிடக்கும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள, ஒரு சூழல் வேண்டும். என்னால் புதியவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு நாளும், ஒரு மணிநேரம் ஒதுக்க முடியும். அந்த ஒரு மணி நேரமும், அறிந்து கொள்ளவரும் புதியவருக்கு உகந்த நேரமே. எனது அலைப்பேசி எண் 90 ஒன்பது ஐந்து 34 33 நான்கு இரண்டு. வினாக்களுக்குக் காத்திருக்கிறேன். அழைக்கவும்.

எனது முன்மொழிவுகள் தொகு

  1. முதலில் காப்புரிமையற்ற தரவின் முக்கியத்துவம், அது கிடைக்கும் இடங்கள், தமிழ் எழுத்தாளர்களை காப்புரிமையற்று எழுதக்கோரல்
  2. அத்தரவின் கலைகளஞ்சிய நடைக்கும், பிற கட்டுரை நடைக்கும் உள்ள வேறுபாடு,
  3. பயிலுமிடத்தில் (மணல்தொட்டி) அதற்குரிய தொடர் பயிற்சி,
  4. அப்பொழுது அவர்கள் மனதில் ஏற்படும் வினாக்களுக்கு வழிகாட்டல்கள்,
  5. இறுதியாக விக்கி வடிவமானது, பிற திட்டங்களுடன் இணைந்து செயற்படும் முறைகளின் முக்கியத்துவம்
  6. விக்கி வடிவ விதிகள்: அனைவரின் ஒப்புதல்களோடு, இனி பல விதிகள் வேண்டும். பிறமொழி விக்கிகளின் நடைமுறைகளை, எப்பொழுதும் எடுத்தாள்வதே சமூக நலனுக்கு எதிர். அது எப்பொழுதும் உதவாது. நமது ஒருமித்த கொள்கை மிக மிக அவசியம். அதனைத்தானே 'விக்கிமீடியத் தூண்கள்' சொல்கின்றன.
  7. விக்கித்தமிழ் நிரலாக்கம் : கணேஷ்,சுந்தர், மாகீர், சீனி, காமன்சு சிபி என்போர் அவ்வப்போது, பங்களிப்பாளர்களின் செயலை மென்மையாகவும், மேன்மையாகவும் மேம்படுத்த முதுகெலும்பாக இருக்கின்றனர். அவர்களின் அணி பெருக வேண்டும். ஆன்டன் இங்கு பல நுட்பவசதிகளை இறக்குமதி செய்தது போல, பிற விக்சனரி நுட்பங்களையும் நடைமுறை படுத்த வேண்டும். அப்பொழுது அவை இந்திய அளவிலான தேவைகளுக்கு, தமிழ் மொழி வழிகாட்டியது போல இருக்கும் என்பதே என் வேண்டுகோள்..

பயிலரங்குகள் தொகு

செம்மொழி மாநாட்டு பயிலரங்கு, சேலம் பல்கலை, அண்ணா பல்கலை, திண்டுக்கல் காந்தி பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, த.இ.க.க. பயிலரங்குகள், சென்ற வருட மாநில அளவிலான ஆசிரியர் பயிலரங்கு, இந்த வருட பயிலரங்கு என (ஏறத்தாழ 3000 நபர்கள்) பலவற்றிலும் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். இவற்றினால் ஏற்பட்ட பலன் மிகமிகக்குறைவே. இது ஒரு கூட்டு செயற்பாடு என்பதை மறந்தே, அதீத ஆர்வத்துடன், அக்கரையுடன் செயற்படுகிறோம். நாம் தொடர்ந்து கற்றே வருகிறோம். கட்டற்ற கலைக்களஞ்சியத்தில், ஆயிரம் கட்டுபாடுகளா? மணல்தொட்டி என்றால் என்ன? ஒரு திரைப்படம் பற்றி இருக்கலாம், ஒரு நூலாசிரியர், நூல் பற்றி இருக்கக் கூடாதா? என பல வினாக்கள். அத்தகைய கூடல்களில், ஒரு சிலர் மட்டுமே தங்களை முன்னிருந்திக் கொள்வது போன்ற சாயல் தெரிகிறது. தமிழ் விக்கியின் சமூக முக்கியத்துவம் தெரியவில்லை என்பதே உண்மை நிலை. அப்பொழுதே தமிழ் விக்கிமீடியா , பிற மொழியினருக்கும் வழிகாட்ட முடியும். அத்தகைய தொரு முயற்சியே, முதலில் ஊடகப்போட்டியிலும், பிறகு விக்கிமூலத்திலும் வெற்றிகரமாக நடந்தன. தற்போது விக்சனரி அளவில், இந்திய அளவில் நடைபெறும். அதற்கான கருவியை சில நாட்களுக்கு முன், சீனி அமைத்துள்ளார்.

ஆசிரியர் பயிலரங்குகள் தொகு

நடந்த (2,3,4 மே)தமிழக ஆசிரியர் பயிலரங்குகளில் இணைய இணைப்பு குறைபாடு இருந்தது. அதனாலும், ஒருமித்த வழிகாட்டல் திட்டமிடவில்லை. மேலும், 'வாட்சுஅப்', போன்ற சமூக வலைதளங்களில் எத்தகைய ஒருங்கிணைப்பு நடந்தது என்பது தெரியவில்லை. பல முயற்சிகளை தனியொருவராக பார்வதிசிறீ செய்ததாக அறிகிறேன். அவர் பல நிகழ்பட தொகுத்தல் வழிகாட்டுதல்களை அவர் அளித்ததாகத் தெரிகிறது. அவைகளின் நகலை, பொதுவகத்தின் இட்டால், அவற்றை விட, அதற்குரிய வழிகாட்டுதல் பாடங்களை பிறர் உருவாக்க இயலும். பத்தாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன், மயூரனின் இம்முயற்சிகளைக் கண்டதால், நான் அதுபோல பதிவுகளை எனது முயற்சியாக இட்டேன். இவற்றை விட சிறந்த நிகழ்படங்களை உருவாக்க திட்டஉதவி பெற்று, சிறந்த தொழினுட்பம் அடங்கிய நிகழ்பட பாடங்களை உருவாக்க அடித்தளமிடுங்கள். இரவி

ஒவ்வொருவரும் ஒரு துறையில் தான் ஆர்வம் கொண்டிருப்பர். அதனால் அவர்களின் திறன் மேம்பட்டு இருக்கும். அந்த அனுபவங்களைக் கொண்டு, தற்போதுள்ள கருவிகளை மேம்படுத்தலாம். அப்படியே நான் செய்து வருகிறேன். வழிகாட்டுதல் நிகழ்பட பாடங்கள் உருவாக்கினாலும், புதியவர்களின் கேள்விகளுக்கு உரிய பதில்களை, நாம் ஒவ்வொன்றாக பொறுமையாகச் சொன்னால் மிகுந்த பலன் கிடைக்கும்.

இணையத் தமிழ் வளத்தைக் கூட்டினால் தான், ஒருங்குறிய சேர்த்தியம், நமது மொழிக்கான அனைத்து எழுத்தரு தரப்பாடைத் தரும். அதனால் தமிழின் கணியத்திறன் மேலோங்கி, விரைவான பல்துறை வளர்ச்சி கிட்டும். அதுவே நமது இலக்காக இருக்கட்டும். அத்தரப்பாட்டை பெறல் மிக மிக முக்கியம் என கணிய வல்லமையர் கூறுகின்றனர்.. என்றும் விதை நேர்த்தி விரும்பும் வேண்டி.... வணக்கம்.--உழவன் (உரை) 09:52, 24 மே 2017 (UTC)[பதிலளி]

வரவேற்புச் செய்தி தொகு

ஓர் விளக்கக் காணொளிக்காக விக்கிப்பீடியாவில் கணக்கொன்றை உருவாக்கினேன். அப்போது தானியங்கியாக வரவேற்புச் செய்தி இடப்படும். ஆனால் அங்கே "உங்களுக்குப் புதிய செய்திகள் உள்ளன" எனும் ஆரஞ்சு நிறப் பின்னணியில் அமைந்த செய்தியைக் கான முடியவில்லை. ஆகையால் கணக்கு உருவாக்கும் எந்தவொரு புதுப்பயனருக்கும் தமக்கென்று ஒரு பேச்சுப்பக்கம் உள்ளது பற்றியோ அதில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் பற்றியோ தெரிய வராது. இது ஒரு பாரிய பிரச்சினை. ஆகையால், இதைத் தற்காலிகமாக நிறுத்துக. தானியங்கித் தொகுட்ட்துகளை சிறுதொகுப்பாகக் குறிதால் பேச்சுப்பக்கத்தில் செய்யும் மாற்றங்கள் செய்தியாக வராது என்பதுஎன் சொந்த அனுபவம். அதர்கும் இங்கும் தொடர்பு உள்ளதா? அத்துடன் இதனாலேயே பல புதியவருக்கும் விக்கிப்பீடியா பற்றிய தெளிவு இல்லை என எண்ணுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:21, 10 மே 2017 (UTC)[பதிலளி]

உண்மைதான். புதுப்பயனர்களுக்கு பேச்சுப் பக்கம் மற்றும் கட்டுரையில் உரையாடல் பக்கம் பற்றி தெரிவதில்லை. இன்றைய பயிற்சியில் அதை வலியுறுத்தலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் பயிற்சி நடைபெறவில்லை. புதுப்பயனருக்கும் ஏற்கனவே பங்களிக்கும் விக்கிப்பீடியருக்குமிடையேயான இடைவெளி மிகமிக அதிகம்.--இரா. பாலா (பேச்சு) 14:35, 10 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி:முதல் 10 நாட்கள்: கண்ணோட்டம் தொகு

தொடர்பங்களிப்பாளர் போட்டி ஆரம்பமாகி 10 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அது பற்றிய அறிந்ததும், அறியாததுமான தகவல்களை கீழுள்ளவற்றைச் சொடுக்கி அறியலாம். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.

 
(விரிவாகப் பார்ப்பதற்கு, கீழுள்ளவற்றின் மேலே சொடுக்குக)
தொடர்பங்களிப்பாளர் போட்டி
முதல் 10 நாட்கள்:ஓர் அலசல்

எந்தவொரு விடயமும் ஆரம்பத்தில், அல்லது இறுதியில் அல்லது இரண்டிலும் சிறப்பாக அமைவது வழமை. தொடர்பங்களிப்பாளர் போட்டியின் ஆரம்பமும் அவ்வாறே எதிர்பார்த்ததை விடவும் அசத்தலாக இருந்தது. இப்போட்டியின் மூலம் குறைந்தது 200 முக்கிய கட்டுரைகளையாவது விரிவாக்க எதிர்பார்க்கின்றோம்.

புள்ளிவிபரங்கள்
எமது அடைவுகளும், வியப்பூட்டும் தகவல்களும்
  • போட்டியின் மூலம் நாம் இதுவரையில் 70 கட்டுரைகளை விரிவாக்கியுள்ளோம்.
    • முதலாவதாக விரிவாக்கப்பட்ட கட்டுரை:- அசோகர்
    • அதிக அளவில் விரிவாக்கப்பட்ட கட்டுரை:- நைட்ரசன்
  • இதுவரையிலும் 13 பயனர்கள் கட்டுரைகளை விரிவாக்கிப் போட்டியில் பங்குபற்றியுள்ளனர்.
  • ஒட்டுமொத்தமாக இப்போட்டியின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் 700,000 பைட்டுக்களுக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இப்போட்டியின் மூலம் குறைந்தது 200 முக்கிய கட்டுரைகளையாவது விரிவாக்க எதிர்பார்க்கும் எமது இலக்கின் 35% ஆன இலக்கு பூர்த்தியானது.
    • இதிலும் முதல் 5 நாட்களில் 10% இலக்கும்...
    • மிகுதி 5 நாட்களில் மட்டும் மிகுதி 25% இலக்கும் பூர்த்தியனாது...
மேல் விக்கியில் நாம்
மேல் விக்கிப் புள்ளிவிபரங்கள்
முன்னர்
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
49 ta தமிழ் 0.9 10,585 6,426 1 689 239 71 25.38 +0.06
தற்போது
Wiki Language Weight Mean Article
Size
Median Article
Size
Absent
(0k)
Stubs
(< 10k)
Articles
(10-30k)
Long Art.
(> 30k)
Score Growth
44 ta தமிழ் 0.9 11,544 7,031 0 619 304 77 28.09 +2.71

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:54, 11 மே 2017 (UTC)[பதிலளி]

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:42, 11 மே 2017 (UTC)[பதிலளி]
மிகவும் அருமை. மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கிறீர்கள். பங்கேற்று விரிவாக்கும் அனைத்துத் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 07:00, 11 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் --5anan27 (பேச்சு) 17:43, 11 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:10, 11 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் --நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:36, 12 மே 2017 (UTC)[பதிலளி]
{{விருப்பம்}) --அஸ்வின் (பேச்சு) 13:24, 12 மே 2017 (UTC)[பதிலளி]

தேவைப்படும் 50,000 கட்டுரைகள் பட்டியல் தொகு

விக்கிப்பீடியா பயிற்சிகளை அளிக்கும் போது எழும் முக்கியமான கேள்வி எத்தலைப்புகளைப் பற்றி எழுதலாம் என்பதே. இவற்றை எவ்வளவு விளக்கினாலும் எதிர்பார்த்த வகையில் கட்டுரைகள் அமைவதில்லை. நாமும் ஒவ்வொரு கலைக்களஞ்சியத்திலும் இருக்க வேண்டிய 1000, 10000 கட்டுரைகள் இலக்கை எட்டி விட்டதால் அடுத்த கட்டமாக நமக்குத் தேவைப்படும் 25,000 அல்லது 50,000 கட்டுரைத் தலைப்புகளை இனங்காண்பது உதவியாக இருக்கும். இப்பணிக்கு உடனடி கவனம் கொடுத்து உருவாக்கினால், ஆசிரியர்களிடம் பகிரலாம். உதவ இயலுமா? @Rsmn, Booradleyp1, Kanags, Shriheeran, Balurbala, Parvathisri, PARITHIMATHI, Mayooranathan, and Natkeeran:--இரவி (பேச்சு) 07:36, 11 மே 2017 (UTC)[பதிலளி]

50,000 கட்டுரைகளின் பட்டியல் இங்கு உள்ளது. தமிழில் கொண்டுவந்து மொழிபெயர்த்து உதவலாம் @Ravidreams, Rsmn, Booradleyp1, Kanags, Shriheeran, Balurbala, Parvathisri, PARITHIMATHI, Mayooranathan, and Natkeeran:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:01, 11 மே 2017 (UTC)[பதிலளி]
நானும் அப்படியைல் கண்டேன். ஆனால், அது தனி ஒருவரின் முழுமை பெறாத விருப்பப் பட்டியல். ஏற்கனவே 1000, 10000 பட்டியல்களில் மேற்கத்திய சாய்வு இருப்பதாக இங்கு சுட்டப்பட்டது. எனவே, புதிய பட்டியலை முற்றிலும் தமிழர் பார்வையில் கூட உருவாக்கலாம். --இரவி (பேச்சு) 09:10, 11 மே 2017 (UTC)[பதிலளி]

இன்று கண்ணில் பட்டது இது. ஆயினும் இரவி சொல்வது போல தமிழர் பார்வையில் பட்டியலை உருவாக்குவோம்.--இரா. பாலா (பேச்சு) 09:37, 11 மே 2017 (UTC)[பதிலளி]

செல்வா அவர்கள் இது பற்றி தொடர்.பங்.போட்டி பேச்சுப்பக்கத்தில் கூறியுள்ளார். மேற்கத்திய சாய்வு உண்மை தான். ஆனால் தமிழ்த் தலைப்புக்களைத் தேடி ஆராய்ந்து பகுத்து உதவ வல்லோர் உளரா? அத்துடன் ஆங்கில விக்கியில் பகுப்பு:தமிழ் இற்கு சென்று அங்கு ஒவோரு துணைபகுப்புகளுக்கும் சென்று அலசி ஓர் பட்டியலை உருவாக்கலாம். இதுல் ஜெரத்தினா அவர்களின் கருவி கைகொடுக்கும். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:00, 11 மே 2017 (UTC)[பதிலளி]
10000 பட்டியல் முழுமை பெறவில்லையே! (இன்னும் 4000+ கட்டுரைகள் எழுதப்படவில்லை). இதில் மேற்கத்திய சாய்வு உள்ளது என்பது உண்மை. நாமே ஓர் திட்டத்தினைத் துவங்கி பட்டியலிட்டால் ஈடுபாடு அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன். --அஸ்வின் (பேச்சு) 13:17, 12 மே 2017 (UTC)[பதிலளி]
பழைய 10,000 கட்டுரைகள் பட்டியலில் கிட்டத்தட்ட அனைத்துக் கட்டுரைகளையும் உருவாக்கி இருந்தோம். இப்போது பட்டியலை மாற்றி நம்மை ஏமாற்றி விட்டார்கள் :) சரி, புதிய பட்டியலையும் நிறைவு செய்வோம் :) நாம் உருவாக்காத கட்டுரைகளின் சிகப்பு இணைப்புகளை மட்டும் ஒரு பக்கத்தில் பட்டியல் இட முடியுமா? அவற்றை முன்னுரிமை கொடுத்து உருவாக்கலாம். --இரவி (பேச்சு) 03:49, 13 மே 2017 (UTC)[பதிலளி]
@Aswn: தங்களால் இயலுமென நினைக்கின்றேன்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:03, 13 மே 2017 (UTC)[பதிலளி]


எனது பரிந்துரையாக, பின்வருவனற்றைக் கூறுகிறேன். தமிழகம், தமிழர் சார்ந்த பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டும் உள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்க்கலாம்.

@இரவி, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 10000 பட்டியலில் உள்ள சிவப்பு இணைப்புகளை மட்டும் துறை வாரியாகத் தொகுத்துள்ளேன். இங்கு பட்டியற்படுத்தியுள்ளதுடன், இப்பக்கத்தில் உள்ளவை மேல்விக்கி பட்டியலில் உள்ளவற்றில் சிவப்பிணைப்பு மட்டும் கொண்ட பக்கங்கள். இவற்றை Regex உதவியுடன் உருவாக்கினேன். உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்துமாக 4100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:52, 14 மே 2017 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி @Shrikarsan:. நீங்கள் தந்த பக்கங்களின் அடிப்படையில் தேவைப்படும் 4,000+ கட்டுரைகளையும் ஒரே பக்கத்தில் இங்கு இட்டுள்ளேன். ஒரே பக்கத்தில் இருப்பது பகிர்வதற்கும் கண்காணிப்பதற்கும் உதவக்கூடும். இப்பக்கத்தில் உள்ள ஆங்கிலத் தலைப்புகளுக்கு அருகே தமிழ் விக்கிப்பீடியா தலைப்புக்கான சிகப்பு இணைப்பையும் சேர்த்து உதவுமாறு அனைவரையும் வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 04:43, 16 மே 2017 (UTC)[பதிலளி]

பணயத் தீநிரல் (Ransomware) பரவுகிறது - அதீத கவனம் கொள்ளுங்கள் தொகு

நேற்று முதல் உலகின் பல இடங்களில், கணினிகளை, பணயத் தீநிரல் (Ransomware) தாக்குவதாக செய்திகள் வருகின்றன. குறிப்பாக வின்டோசு இயக்குதளத்தை பயன்படுத்துவோர், தமது தரவுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தெரியா மின்னஞ்சல்களையும், புது விளையாட்டுகளையும் இயக்காதீர்கள். இணைய வங்கி பரிமாற்றம் செய்வோர் கூடுதல் கவனம் கொள்ளுங்கள். வணக்கம்.--உழவன் (உரை) 12:41, 14 மே 2017 (UTC)[பதிலளி]

RevisionSlider தொகு

Birgit Müller (WMDE) 14:44, 16 மே 2017 (UTC)[பதிலளி]

21:08, 16 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : மைல்கல் தொகு

 
தொடர்பங்களிப்பாளர் போட்டியில், 16 நாட்களிலேயே, 100 கட்டுரைகளை விரிவாக்கியதன் மூலம்,
50% இலக்கு பூர்த்தியானது
பங்குபெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:26, 17 மே 2017 (UTC)[பதிலளி]

  விருப்பம் --கலை (பேச்சு) 09:19, 17 மே 2017 (UTC)[பதிலளி]

அடடா, இது தான் ஐயா தமிழ் விக்கிப்பீடியா கலக்கல் :) மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் சிறீகீரன், கலை உள்ளிட்ட அனைத்து பயனர்களுக்கும் வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 13:12, 17 மே 2017 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டிக் கட்டுரைத் தலைப்புக்களில் இல்லாத, ஆனால் முக்கியமான கட்டுரைகளை அந்தப் பட்டியலில் இணைத்தல் தொகு

போட்டிக் கட்டுரைத் தலைப்புக்களில் இல்லாத, ஆனால் முக்கியமான கட்டுரைகளை அந்தப் பட்டியலில் இணைத்தல் தொடர்பில் எனது கருத்தை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். தயவுசெய்து இது தொடர்பில் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி. --கலை (பேச்சு) 09:19, 17 மே 2017 (UTC)[பதிலளி]

விக்கிமீடியா நிரலாக்கநாட்களில் த. சீனிவாசன் பங்கேற்பு தொகு

இம்மாதம் நடக்கும் விக்கிமீடியா நிரலாக்கநாட்களில் தமிழ் விக்கிப்பீடியா சார்பாக த. சீனிவாசன் கலந்து கொள்கிறார். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வழங்கப்பட்ட நுட்பத் திறன்கள் பயிற்சியின் நீட்டிப்பாகவும் சீனிவாசன் தமிழ் மற்றும் இந்திய மொழி விக்கிமீடியா திட்டங்களின் வளர்ச்சிக்கு அளித்து வரும் கட்டற்ற நிரலாக்கத்தின் காரணமாகவும் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. பயணம் சிறந்து நமக்கு மேலும் பல பங்களிப்புகளை நல்குவாராக என்று வாழ்த்துகிறேன். --இரவி (பேச்சு) 13:09, 17 மே 2017 (UTC)[பதிலளி]

  1. நிச்சயமாக, வாழ்த்துக்கள் த. சீனிவாசன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:31, 17 மே 2017 (UTC)[பதிலளி]
  2. வாழ்த்துக்கள் --Sengai Podhuvan (பேச்சு) 17:54, 17 மே 2017 (UTC)[பதிலளி]
  3. வாழ்த்துகள் ஸ்ரீனிவாசன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:13, 17 மே 2017 (UTC)[பதிலளி]
  4. வாழ்த்துக்கள் ஸ்ரீனிவாசன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:14, 18 மே 2017 (UTC)[பதிலளி]
  5. வாழ்த்துக்கள் --5anan27 (பேச்சு) 15:47, 18 மே 2017 (UTC)[பதிலளி]
  6. வாழ்த்துக்கள் த. சீனிவாசன்.--இரா. பாலா (பேச்சு) 06:28, 19 மே 2017 (UTC)[பதிலளி]
  1. வியன்னா நிரலர் கூடல் - நாள் ஒன்று,
  2. வியன்னா நிரலர் கூடல் - நாள் இரண்டு--உழவன் (உரை) 07:22, 20 மே 2017 (UTC)[பதிலளி]
  3. வியன்னா நிரலர் கூடல் - நாள் மூன்று--உழவன் (உரை) 09:21, 22 மே 2017 (UTC)[பதிலளி]

கூகுள் மொழிபெயர்ப்பு மேம்பட்டு வருகிறது. தொகு

பல புதிய பயனர்கள் எழுதும் கட்டுரைகள் படிப்பதற்குச் சிரமமான நடையில் இருப்பது போல் தோன்றினாலும் இவை கூகுள் மொழிபெயர்ப்பில் இருந்து வெட்டி ஒட்டப்படுபவை. முன்பு போல் முற்றிலும் பொருள் தராத மொழிபெயர்ப்பாக அல்லாமல் கூகுளின் சேவை மேம்பட்டு வருவது நன்று. ஆனால், துப்புரவில் ஈடுபடுவோர் இது குறித்து விழிப்புடன் இருப்பது நன்று. ஐயத்துக்கு இடமாக உள்ள இடங்களில் கூகுள் சேவையில் இட்டுச் சோதித்துப் பார்க்கலாம். பயனர்கள் ஓரளவாவது கூகுள் மொழிபெயர்ப்பை மேம்படுத்த முனைந்திருந்தால் நாமும் உதவலாம். இல்லையெனில் நீக்கலாம். எப்படியாயினும் இது குறித்து பயனருக்கு அறிவுறுத்துவது நன்று. --இரவி (பேச்சு) 14:57, 21 மே 2017 (UTC)[பதிலளி]

இந்தத் தானியங்கி மொழிபெயர்ப்புகளைக் கண்டு கொள்ள எளிய வழி: 1. பொருத்தமற்ற இடங்களில் காற்புள்ளிகள் இருத்தல். 2. ஓரிரு சொற்றொடர்கள் இயல்பாக இருக்கும். நாம் ஏமாறுவது இங்கு தான். மற்ற சொற்றொடர்கள் முன்பிருக்கும் நடைக்குப் பொருந்தாத வகையில் குழப்பும். முழக்க மனித உழைப்பில் இருக்கும் கட்டுரைகள் இப்படி குழப்பா.--இரவி (பேச்சு) 14:59, 26 மே 2017 (UTC)[பதிலளி]

21:05, 23 மே 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி : மைல்கல் தொகு

 
தொடர்பங்களிப்பாளர் போட்டியில், 24 நாட்களில், 150 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் தோராயமாக 6 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டுள்ளன.
75% இலக்கு பூர்த்தியானது
பங்குபெறுவோர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்!...


--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 00:26, 24 மே 2017 (UTC)[பதிலளி]

மிகவும் அருமை. நமது இந்தப் போட்டி இன்னும் பல விக்கிப்பீடியாக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. --இரவி (பேச்சு) 14:59, 26 மே 2017 (UTC)[பதிலளி]
நிச்சயமாக இரவி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:17, 28 மே 2017 (UTC)[பதிலளி]