விழுப்புரத்தில் போக்குவரத்து

விழுப்புரத்தில் போக்குவரத்து (Transport in Viluppuram) என்பது இந்தியா, தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் நகரின் போக்குவரத்து வசதியைப்பற்றியது ஆகும். விழுப்புரம் நகரமானது சாலை மற்றும் தொடருந்து மூலம் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரமானது பேருந்துகள் நிறைந்த நகரமாகும். தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையிலிருந்து வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் இரயில்கள் தென்தமிழகமான திருச்சி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் இரயில்கள் விழுப்புரத்தின் வழியாக செல்கிறது.

பேருந்து நிலையம்

தொகு

விழுப்புரம் நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள் ஆகும். பழைய பேருந்து நிலையமானது நகரப் பேருந்துகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைந்துள்ளது.

சாலைப் போக்குவரத்து

தொகு

விழுப்புரம் நகரத்திலிருந்து பல இடங்களுக்குச் செல்ல சாலைப்போக்குவரத்திற்கு நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

 
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் வழியாக செல்லும் பேருந்து

இங்கிருந்து வடக்கு திசையில் 160 கி.மீ தொலைவில் சென்னையும், தெற்கு திசையில் 160 கி.மீ தொலைவில் திருச்சியும், கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் புதுச்சேரியும், மேற்கு திசையில் 38 கி.மீ தொலைவில் திருக்கோவிலூரும், தென்கிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் கடலூரும், வடமேற்கு திசையில் 60 கி.மீ தொலைவிலும் திருவண்ணாமலையும் மற்றும் 44 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டையும், தென்மேற்கு திசையில் 144 கி.மீ தொலைவில் சேலமும் அமைந்துள்ளது. விழுப்புரத்திலிருந்து கோலியனூர் வழியாக பண்ருட்டி, கடலூர், விருத்தாச்சலம், கும்பகோணம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற இடங்களுக்கு செல்லலாம்.

இரயில் போக்குவரத்து

தொகு
 
விழுப்புரம் சந்திப்பு

விழுப்புரம் நகரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாக திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.

இணைப்புகள்

தொகு

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 5 தொடருந்து இணைப்புகள் பிரிந்து செல்கின்றது.

விரைவு வண்டிகளின் விவரம்

தொகு
எண் தொடருந்து எண்: புறப்படுமிடம் சேருமிடம் தொடருந்து பெயர் சேவை நாட்கள்
1. 16853/16854 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி சோழன் விரைவு வண்டி தினமும்
2. 12635/12636 சென்னை எழும்பூர் மதுரை வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி தினமும்
3. 12605/12606 சென்னை எழும்பூர் காரைக்குடி பல்லவன் அதிவிரைவு வண்டி தினமும்
4. 16127/16128 சென்னை எழும்பூர் குருவாயூர் குருவாயூர் விரைவுவண்டி தினமும்
5. 16129/16130 சென்னை எழும்பூர் தூத்துக்குடி குருவாயூர் விரைவுவண்டி (லிங்க் மெயில்) தினமும்
6. 16105/16106 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் விரைவு வண்டி தினமும்
7. 16713/16714 சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் சேது விரைவு வண்டி தினமும்
8. 12633/12634 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி தினமும்
9. 16115/16116 சென்னை எழும்பூர் பாண்டிச்சேரி ஆரவல்லி விரைவுவண்டி தினமும்
10. 12693/12694 சென்னை எழும்பூர் தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு வண்டி தினமும்
11. 16723/16724 சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு வண்டி தினமும்
12. 12631/12632 சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு வண்டி தினமும்
13. 12661/12662 சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும்
14. 12637/1263 சென்னை எழும்பூர் மதுரை பாண்டியன் அதிவிரைவு வண்டி தினமும்
15. 16101/16102 சென்னை எழும்பூர் ராமேசுவரம் போட் மெயில்விரைவு வண்டி தினமும்
16. 16179/16180 சென்னை எழும்பூர் மன்னார்குடி மன்னை விரைவுவண்டி தினமும்
17. 16859/16860 சென்னை எழும்பூர் மங்களூர் மங்களூர் விரைவுவண்டி தினமும்
18. 16177/16178 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விரைவுவண்டி தினமும்
19. 11063/11064 சென்னை எழும்பூர் சேலம் சேலம் விரைவு வண்டி தினமும்
20. 16175/16176 சென்னை எழும்பூர் காரைக்கால் கம்பன் விரைவு வண்டி தினமும்
21. 16185/16186 சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி இணைப்பு வண்டி தினமும்
22. 16183/16184 சென்னை எழும்பூர் தஞ்சாவூர் உழவன் விரைவு வண்டி தினமும்
23. 22623/22624 சென்னை எழும்பூர் மதுரை மகால் அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
24. 16779/16780 திருப்பதி ராமேசுவரம் மீனாட்சி விரைவு வண்டி வாரம் மூன்று முறை
25. 17407/17408 திருப்பதி மன்னார்குடி பாமனி விரைவு வண்டி வாரம் மூன்று முறை
26. 11005/11006 தாதர் பாண்டிச்சேரி சாலுக்கியா விரைவு வண்டி வாரம் மூன்று முறை
27. 22603/22604 விழுப்புரம் காரக்பூர் அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
28. 12651/12652 மதுரை ஹசரத் நிசாமூதின், தில்லி தமிழ்நாடு சம்பக் கிராந்தி விரைவு வண்டி வாரமிருமுறை
29. 12641/12642 கன்னியாகுமரி ஹசரத் நிசாமூதின், தில்லி திருக்குறள் விரைவு வண்டி வாரமிருமுறை
30. 16181/16182 சென்னை எழும்பூர் மானாமதுரை சிலம்பு விரைவு வண்டி வாரமிருமுறை
31. 11017/11018 குர்லா, மும்பை காரைக்கால் விரைவு வண்டி வாரமிருமுறை
32. 16339/16340 மும்பை சிஸ்டி நாகர்கோவில் விரைவு வண்டி வாரமிருமுறை
33. 12663/12664 ஹவுரா திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஹவுரா அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
34. 12667/12668 சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
35. 11043/11044 குர்லா,மும்பை மதுரை விரைவு வண்டி வாரந்தோறும்
36. 12897/12898 பாண்டிச்சேரி புவனேசுவர் அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
37. 22605/22606 விழுப்புரம் புரூலியா அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
38. 12867/12868 ஹவுரா பாண்டிச்சேரி அரபிந்தோ விரைவு வண்டி வாரந்தோறும்
39. 17413/17414 திருப்பதி பாண்டிச்சேரி விரைவு வண்டி வாரந்தோறும்
40. 12665/12666 ஹவுரா கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
41. 14259/14260 ராமேசுவரம் வாரணாசி விரைவு வண்டி வாரந்தோறும்
42. 18495/18496 ராமேசுவரம் புவனேசுவரம் விரைவு வண்டி வாரந்தோறும்
43. 16861/16862 பாண்டிச்சேரி கன்னியாகுமரி விரைவு வண்டி வாரந்தோறும்
44. 18683/18684 ஜோத்பூர் மன்னார்குடி விரைவு வண்டி வாரந்தோறும்

பயணிகள் வண்டி விவரம்

தொகு
எண் தொடருந்து எண்: புறப்படுமிடம் சேருமிடம் தொடருந்து பெயர் சேவை நாட்கள்
1. 56881/56882 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
2. 56883/56884 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
3. 56885/56886 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
4. 56037/56038 சென்னை எழும்பூர் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
5. 56859/56860 தாம்பரம் விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
6. 56041/56042 திருப்பதி பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
7. 56873/56874 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
8. 56875/56876 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
9. 56877/56878 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
10. 56705/56706 விழுப்புரம் மதுரை பயணிகள் வண்டி தினமும்
11. 56861/56862 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
12. 56863/56864 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
13. 56865/56866 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்

விமானப் போக்குவரத்து

தொகு

விழுப்புரத்தில் விமான நிலையம் இல்லாததால், 40 கி. மீ தொலைவில் உள்ள புதுச்சேரி விமான நிலையம் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு