விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு109

விக்கிக்கோப்பை முடிவுகள் தொகு

  தமிழ் விக்கிப்பீடியாவின் 2017 ஆம் ஆண்டிற்கான விக்கிக்கோப்பை இனிதே நிறைவடந்தது. அதற்கான முடிவுகளை இங்கே காணலாம். பங்குபற்றிய அனைவருக்க்கும் நன்றிகள்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:44, 2 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள் சிறீகீரன். நன்றாகத் திட்டமிட்டு சிறந்தமுறையில் முடித்து வைத்துள்ளீர்கள். தங்களுக்குத் தகுந்த ஒரு பதக்கத்தை விக்கி சமூகம் வழங்கும் என எதிர்பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 01:25, 4 மார்ச் 2017 (UTC)
ஸ்ரீஹீரனை நம் விக்கிப்பீடியாவில் நிருவாகியாகப் பணிபுரிய பரிந்துரை செய்ய விரும்புகிறேன். கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 02:03, 4 மார்ச் 2017 (UTC)
தற்போது வரை நிருவாகி தொடர்பான சில விடயங்கள் மேம்படுத்தலுக்குட்படாமல் உள்ளன. மேலும், எனக்கு மாற்றுக் கருத்துக்களும் உள்ளன. --AntanO 07:23, 4 மார்ச் 2017 (UTC)
Kanags, நந்தகுமார், அன்ரன் ஆகிய அனைவருக்கும் எனது நன்றிகள்! சிறியோனாகிய என்மீது காட்டும் கரிசினைக்கு மேலும் நன்றி! தமிழ் விக்கியில் நிருவாகி அணுக்கம் பெற விருப்பம். எனினும் அன்ரன் ஐயாவின் கருத்துக்கு நான் என்றும் மதிப்பளிப்பவன். அவரே விக்கியில் என் முன்னோடி! பதிப்புரிமை மீறலுக்கு எதிரானவராக இருக்கட்டும், வன்டலிச எதிர்ப்பாளராக இருக்கட்டும், புகைப்படக் கலைஞர், வடிவமைப்பாளராக இருக்கட்டும், ஏன் கலந்துரையாடுகின்ற போதும் நறுக்கென இருக்கும் தன்மை, என அனைத்திலும் அவரையே நான் பின்பற்றுகின்றேன். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்கள். நானோ பூனை. இந்தப்பூனைக்கு சறுக்கும் அடிகளை சரியாக சுட்டிக்காட்டினீர்களானால், அவற்றைத் திருத்திக்கொண்டு தமிழ் விக்கியின் வளர்ச்சியில் கை கோர்ப்பேன். சிறியோன் என் மீது அன்பு செலுத்தும் தங்கள் மூவருக்கும் என் நன்றிகள்! அன்ரன் ஐயாவின் மாற்றுக்கருத்துகள் அதாவது என் பலவீனங்களை கேட்பதற்காக எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:08, 4 மார்ச் 2017 (UTC)
புரிந்து கொள்ளலுக்கு நன்றி ஸ்ரீஹீரன். பின்பு உங்கள் பேச்சுப்பக்கத்தில் உரையாடுகிறேன். --AntanO 09:21, 4 மார்ச் 2017 (UTC)
நன்றி! அன்ரன் ஐயா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:30, 4 மார்ச் 2017 (UTC)

முக்கிய அறிவிப்பு: விக்கிச் செயற்பாடுகள் தொடர்பான உரையாடல்களை விக்கியிலேயே மேற்கொள்ளல் தொகு

அண்மையில் சில ஆண்டுகளாக, பொதுவாக, தமிழ் விக்கிச் செயற்பாடுகள் பற்றி விக்கிக்கு வெளியே உரையாடும் போக்கு தென்படுகிறது. குறிப்பாக, ஒரு சில பயனர்களின் விக்கிப் பங்களிப்புகள் அல்லது ஒரு சில கட்டுரைகளின் விக்கித் திருத்தங்கள் பற்றிய உரையாடல்கள். இவ்வாறு உரையாடுவதால் தேவையற்ற புரிதல் பிழைகள், குழுவாகச் செயற்படும் அரசியல், மனக்குறைகள் நேரவே வாய்ப்பு அதிகம். உரையாடல்களில், முடிவுகளில் வெளிப்படைத் தன்மை இல்லாத போது நாம் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் நம்பிக்கையும் திட்டத்தின் செயற்பாடுகள் மேல் கொள்ளும் நம்பிக்கையும் குறையும். ஆனால், விக்கி வெற்றிகரமாகச் செயற்படுவதன் ஆதாரமே இந்த வெளிப்படைத் தன்மை தான்.

இத்தகயை சுழலில் சிக்கி ஒற்றுமையும் வலுவும் அற்றுப் போன பல விக்கிச்சமூகங்கள் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளைக் கவனமாகத் தவிர்த்து வந்திருக்கிறோம். அதனைப் பெருமையாகப் பல இடங்களில் குறிப்பிடவும் செய்திருக்கிறேன். தொடர்ந்து இச்சூழலைப் பேண வேண்டுகிறேன். முகநூல், வாட்சாப்பு என்று பெருகி வரும் நுட்பங்களும் நாம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி அடிக்கடி நேரிலும் தொலைப்பேசியிலும் பேசுவது கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இவ்வாறான சந்திப்புகளில் பொதுவாக உரையாடி நட்பை வளர்ப்பதே சிறப்பு. திட்டத்தின் செயற்பாடுகள் பற்றி பேச்சு திரும்பினால், அவற்றை விக்கிப்பீடியாவிலேயே வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டிய தேவை பற்றி நினைவூட்டுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 14:57, 5 மார்ச் 2017 (UTC)

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 15:00, 5 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 5 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--

தமிழ் விக்கிப்பீடியா தமிழ் மொழியின், தமிழ்ச் பேசும் சமூகங்களின் அறிவுத் தளங்களை பதிவு செய்வதில் ஒரு முன்னோடிக் களமாக திகழ்ந்து வந்துள்ளது, வருகின்றது. தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நாம் தொகுத்து வருகிறோம். ஆனால் சில முக்கியமான அறிவுத் தொகுதிகளைப் பதிவு செய்வதில் தடைகள் உள்ளன. போதிய உசாத்துணை வளங்கள் இல்லாமை, முன் எடுத்துக்காட்டுக்கள் இல்லாமை, இணைய இணைப்பு இல்லாமை, ஈடுபாடு கொண்ட பயனர்கள் இல்லாமை என்று பல்வேறு காரணங்கள் தடைகளாக உள்ளன. இவ்வாறு போதிய கவனிப்புப் பெறாத துறைகளில் ஒன்றாக மரபுசார் தொழிற்கலைகளும், அவைகளைப் பற்றிய அறிவுத் தளங்களும் உள்ளன. இதை நிவர்த்தி செய்யும் வகையில் விக்கியூடக நிறுவனத்தில் ஒரு முன்மொழிவினை முன்வைத்துள்ளோம். இந்த முன்மொழிவு தமிழ் விக்கி தன்னார்வலர்களாலும், நூலக நிறுவன பங்களிப்பாளர்களாலும், இதர அமைப்புகளின் ஆதரவோடும் முன்னெடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகின்றனது. அந்த முன்மொழிவு ஒரு வரைவு மட்டுமே. அந்த முன்மொழிவினை மேம்படுத்த, அந்தச் செயற்திட்டத்தில் பங்ககெடுக்க உங்களை வரவேற்கிறோம்.

தமிழ் விக்கிப்பீடியா/ஊடகங்களில் பயிற்சிப் பட்டறை, நிகழ்வுகளில் அறிமுகப்படுத்தல், கட்டுரைப் போட்டி, ஊடகப் போட்டி, தொகுத்தல் போட்டி, நிகழ்வுகள், சந்திப்புக்கள் போன்ற முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அறிமுகப்படுத்தல், உள்ளடக்க விரிவாக்கம், புதிய பயனர்களைச் சேர்த்தல், இணையத்துக்கு அப்பாலான தொடர்பாடல் (Outreach), விக்கிச் சமூகக் கட்டமைப்பைப் பலப்படுத்தல் ஆகியவற்றை முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயற்படுத்தப்படுகின்றன. நூலக நிறுவனத்துடன் 2006 இலேயே சில கூட்டுச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்புக்களை விக்கிமூலத்துக்கும், விக்கிசனரிக்கும் கொண்டுவரும் செயற்திட்டமே தமிழ் விக்கியூடகத்தின் முதலாவது முறையான கூட்டுச் செயற்பாடு (partnership) எனலாம்.

இந்தச் செயற்திட்டம் மேற்கண்ட பரிணாமங்களின் புதிய முனையாக, முன்னெடுப்பாக முன்வைக்கப்படுகின்றது.

  • முதலாவதாக இது வெளிக்களத்தில் தொடர்சியான களச் செயற்பாடுகளைக் (sustained on the ground outreach activities) கொண்டு இருக்கும். குறிப்பாக தமிழ் விக்கியர்கள் அரிதாக உள்ள மலையகம், கிழக்கிலங்கை, வன்னி, மன்னார் போன்ற இடங்களைக் குறிவைத்து.
  • இரண்டாவதாக தமிழ்ச் சூழலில் GLAM (https://en.wikipedia.org/wiki/Wikipedia:GLAM) மற்றும் மரபுரிமைச் செயற்திட்டங்களை (https://meta.wikimedia.org/wiki/Connected_Open_Heritage) முன்னெடுப்பது சிக்கல்களும், தடைகளும் மிகுந்தது. எம்மிடம் பலமான நூலக, ஆவணக, அருங்காட்சியகக் கட்டமைப்புக்கள் இல்லாமை இதற்கு ஒரு முக்கிய தடை ஆகும். ஆனால் அந்தக் களங்களை விக்கிக்கும், இணையத்துக்கும் கொண்டுவரும் தேவை மிகையாகவே இருக்கின்றது. அந்தக் களங்களை தமிழ் விக்கியூடகங்களுக்கு கொண்டுவரும் செயற்திட்டமாக இது அமையும்.
  • மூன்றாவதாக இது இலங்கையில் ஒரு நிறுவனத்துடனான, குறிப்பாக வேரடி அமைப்புக்களின் ஒன்றான நூலக நிறுவனத்துடனான ஒரு கூட்டுச் செயற்திடமாக அமையும்.

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு 'விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல்' நல்கவும். நன்றி.

--Natkeeran (பேச்சு) 02:38, 9 மார்ச் 2017 (UTC)

Overview #2 of updates on Wikimedia movement strategy process தொகு

Note: Apologies for cross-posting and sending in English. This message is available for translation on Meta-Wiki.

As we mentioned last month, the Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve.

Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Each month, we are sending overviews of these updates to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.

Here is a overview of the updates that have been sent since our message last month:

More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, 19:44, 9 மார்ச் 2017 (UTC) • Please help translate to your languageGet help

விக்கித்தரவில்லாதவை வார்ப்புரு பயன்பாடு குறித்து கருத்திடுக தொகு

வார்ப்புரு பேச்சு:Nowikidatalink என்பதில், அதன் பயன்பாடு குறித்த எண்ணமிடுக.--உழவன் (உரை) 02:33, 12 மார்ச் 2017 (UTC)

இந்திய அரசு ஆவணங்கள் பொதுகள உரிமத்தில். தொகு

https://data.gov.in/sites/default/files/Gazette_Notification_OGDL.pdf என்ற இந்திய அரசு ஆவணகத்தின் படி, பல அரசுடைமை ஆவணங்கள் பொதுகள உரிமதிதல் வெளியிட அதிக வாயப்பு இருப்பதாகத் தெரிகின்றன, @Commons sibi: நீங்கள் இதனை விளக்கினால் நன்றாக இருக்கும்.--உழவன் (உரை) 09:18, 12 மார்ச் 2017 (UTC)

Netherlands and the World Exchange Platform is online தொகு

தகவலுக்காக (பிரதி செய்யப்பட்டது):

Wikimedia Nederland launches the Netherlands and the World Exchange Platform. The platform aims to stimulate global re-use of Dutch collections on non-European cultural heritage. In particular, it aims to stimulate collections on countries with which the Netherlands have had historical ties such as Sri Lanka, India, and others. காண்க: Wikimedia Nederland/The Netherlands and the world, Shared Cultural Heritage Exchange platform --AntanO 07:04, 17 மார்ச் 2017 (UTC)

தகவலுக்கு நன்றி அன்ரன்.--Kanags \உரையாடுக 07:46, 17 மார்ச் 2017 (UTC)
பயனுள்ள தகவல். நன்றி அன்டன். --- மயூரநாதன் (பேச்சு) 15:58, 17 மார்ச் 2017 (UTC)

We invite you to join the movement strategy conversation (now through April 15) தொகு

05:09, 18 மார்ச் 2017 (UTC)

கோயில் கட்டுரைகள் இரண்டாம் கட்டச் சோதனைப் பதிவேற்றம் தொகு

கோயில் கட்டுரைகளைத் தானியக்கமாக ஏற்றுவது தொடர்பாக இன்று இரண்டாம் கட்டச் சோதனைப் பதிவேற்றமாக 20 கட்டுரைகள் உருவாகியுள்ளன. இவற்றைக் கவனித்து தேவையான மாற்றங்களை இங்கு மட்டும் ஒரே இடத்தில் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவற்றைக் கவனித்துத் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்தி உடன் அடுத்தடுத்த கட்டப் பதிவேற்றங்களை மேற்கொள்ள முனைவோம். --இரவி (பேச்சு) 10:36, 18 மார்ச் 2017 (UTC)

இன்று மேலும் சில சோதனைக் கட்டுரைகள் பதிவேறியுள்ளன. சரி பார்க்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:07, 23 மார்ச் 2017 (UTC)

இன்று அடுத்த கட்டச் சோதனைப் பதிவேற்றமாக மேலும் சில கட்டுரைகள் உருவாகி வருகின்றன. இவற்றைக் கவனித்து தேவையான மாற்றங்களை இங்கு மட்டும் ஒரே இடத்தில் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உடனுக்குடன் சரி பார்த்து கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு விரைந்து நகரலாம்.--இரவி (பேச்சு) 06:54, 24 மார்ச் 2017 (UTC)

நேற்று சோதனைப் பதிவேற்றமாக 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உருவாகியுள்ளன. அடுத்தடுத்து 500, 1000 என்று கட்டுரைகள் ஏறக்கூடும் என்பதால் இவற்றைச் சரி பார்த்து கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 08:21, 26 மார்ச் 2017 (UTC)

மார்ச்சு 29 மேலும் சில கட்டுரைகள் பதிவேறியுள்ளன சரி பார்த்து கருத்து சொல்ல வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:48, 31 மார்ச் 2017 (UTC)

விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களுக்கு பயன்படுத்திய மடிக்கணினிகள் நன்கொடை தொகு

விக்கிமீடியா அறக்கட்டளையானது, பயன்படுத்தி நல்ல நிலையில் உள்ள மடிக்கணினிகளை கொடையளிக்க விரும்புகிறது. தங்களுக்குச் சொந்தமாக மேசைக் கணினி அல்லது மடிக்கணினி இல்லை எனில், இத்திட்டத்தின் கீழ் ஓர் கணினியைக் கோரலாம். விண்ணப்பிக்க இங்கு வாருங்கள். உதவி தேவையெனில் என்னை அணுகலாம். --இரவி (பேச்சு) 11:22, 23 மார்ச் 2017 (UTC)

மடிகணினி தேவை தொகு

எனக்கு சொந்தமாக மடிக்கணினி இல்லை. பத்தாண்டு பழமையான மேசைக்கணினியே உள்ளது. இதுவும் தற்போது பழமையின் காரணத்தால் பழுதடைந்துள்ளது திரையில் ஏற்பட்டுள்ள பழுதால் அவ்வப்போது இருளடைந்து போகிறது. இதனால் விக்கியில் பங்களிப்பதில் சிரமம் ஏற்படுகிறது இதனால் விக்கிமீடியா அறக்கட்டளையில் பயன்படுத்தப்பட்ட மடிக்கணினியை அளிக்குமாறு வேண்டியுள்ளேன் எனவே தமிழ்விக்கிப்பீடிய சமூகம் [ https://meta.wikimedia.org/wiki/Hardware_donation_program/arulghsr#Endorsements இங்கு] வாக்கிட்டு ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன்.--Arulghsr (பேச்சு) 09:24, 24 மார்ச் 2017 (UTC)

Wikipedia and the numbers falacy தொகு

"In fact, Wikipedia's efforts may have exacerbated the problem. The very public efforts to bring more women editors into Wikipedia (there have been and are organized campaigns both for women and about women) and the addition of more articles by and about women is going to be threatening to some members of the Wikipedia culture. In a recent example, an edit-a-thon produced twelve new articles about women artists. They were immediately marked for deletion, and yet, after analysis, ten of the articles were determined to be suitable, and only two were lost. It is quite likely that twelve new articles about male scientists (Wikipedia greatly values science over art, another bias) would not have produced this reaction; in fact, they might have sailed into the encyclopedia space without a hitch. Some editors are rebelling against the addition of information about women on Wikipedia, seeing it as a kind of reverse sexism (something that came up frequently in the attack on me)." --Natkeeran (பேச்சு) 03:42, 24 மார்ச் 2017 (UTC)

சமூகத்தில் பெண்கள் பாகுபாடாக நடத்தப்படுவதையும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதையும் மறுப்பதற்கு இல்லை எனினும், மேற்காணப்படுவது போன்ற கட்டுரைகள் உண்மை நிலையைத் திரித்துவிடுகின்றன என்றே தோன்றுகிறது. உண்மையில் edit-a-thon ஒரு சிறப்புச் சூழல். இப்படியான சூழல்களில் மிகப் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியத்துக்குப் பொருத்தமில்லாமல் வருவதற்குரிய வாய்ப்புக்கள் உள்ளன. எடுத்துக்காட்டாகத் தமிழ் விக்கியில் செம்மொழி மாநாட்டின்போது பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் எத்தனை பதிவேற்றக் கூடிய தரத்தில் அமைந்திருந்தன என்பதை நாம் அறிவோம். மேலுள்ள கட்டுரையில் பெண்கள் மட்டும் பங்குபற்றிய edit-a-thon தொடர்பிலேயே புள்ளிவிபரங்கள் தரப்பட்டுள்ளன. இரு பாலாரும் பங்கு பற்றிய edit-a-thon ஒன்றில் பெண் பயனர்கள் தொடர்பில் இவ்வாறான பாகுபாடு தெரிகின்றதா எனப் பார்க்க வேண்டும். இக்கட்டுரை பொதுவான edit-a-thon களின் விளைவுகளை ஒப்பிட்டுப் புள்ளி விபரங்களைத் தரவில்லை. மேலும் "விக்கிப்பீடியா" என்று எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இவ்வாறுதான் என்று பொதுமைப்படுத்தவும் முடியாது. தமிழ் விக்கிப்பீடியாவிலாவது இவ்வாறான பாகுபாடுகள் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பெண் பயனர்கள் இது குறித்துத் தமது கருத்துக்களைச் சொல்ல வேண்டும். ஆனாலும், எண்ணிக்கை மட்டும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது என்பது உண்மைதான். -- மயூரநாதன் (பேச்சு) 05:02, 24 மார்ச் 2017 (UTC)

ஆனந்தவிகடன் விருது விழா தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புக்காக ஆனந்த விகடனின் 2016 ஆம் ஆண்டுக்கான "Top Ten" தெரிவில் என்னையும் தெரிவு செய்திருந்ததுபற்றி ஆலமரத்தடியில் முன்னர் பகிரப்பட்டது. இதற்கான விருது வழங்கும் விழா 30 மார்ச் 2017 அன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். சிலவேளை இதற்காக நான் சென்னைக்கு வரக்கூடும் (வீசா உரிய நேரத்தில் கிடைத்தால்). வந்தால் 5 நாட்கள் வரை நான் சென்னையில் இருப்பேன். சென்னையில் உள்ள விக்கிப்பீடியர்களைச் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவேன். --மயூரநாதன் (பேச்சு) 01:44, 28 மார்ச் 2017 (UTC)

மயூரநாதனுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:39, 28 மார்ச் 2017 (UTC)
மயூரநாதனுக்கு மீண்டும் என் நல்வாழ்த்துகள். ஆனந்தவிகனின் தேர்வில் மயூரநாதன் இடம்பெற்றிருப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தேர்வு செய்த ஆனந்தவிகடன் குழுவினரையும் பாராட்டுகின்றேன்.
வாழ்த்துகள் மயூரநாதன்.--Kanags \உரையாடுக 05:55, 28 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சியான செய்தி வாழ்த்துக்கள். சென்னையில் சந்திப்போம் -நீச்சல்காரன் (பேச்சு) 05:03, 29 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள் மயூரநாதன். சென்னையில் உள்ள விக்கிப்பீடியர்கள் இயன்றால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். வார இறுதியில் பொதுவான ஓர் இடத்தில் சந்தித்து உரையாடவும் முனையலாம். @Neechalkaran and Tshrinivasan:, user:Thamizhpparithi Maari கவனிக்க வேண்டுகிறேன்.--இரவி (பேச்சு) 05:50, 29 மார்ச் 2017 (UTC)
காணும் வாய்ப்பினைப் பெறின் மகிழ்ச்சி. --Sengai Podhuvan (பேச்சு) 06:23, 29 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி, உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:23, 29 மார்ச் 2017 (UTC)
மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்கள் ஓய்வு நேரத்தை அறிவிக்கவும். சென்னை விக்கிப்பீடியர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாம். --த.சீனிவாசன் (பேச்சு) 07:31, 29 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துக்கள் மயூரநாதன்.--கலை (பேச்சு) 08:16, 29 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துக்கள் மயூரநாதன். பொருத்தமான தேர்வு. --Natkeeran (பேச்சு) 13:28, 29 மார்ச் 2017 (UTC)

வாழ்த்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். @Tshrinivasan:, இன்று (30-03-2017) நிகழ்வு முடிந்த பின்னர் 5 ஆம் தேதி வரை சென்னையில் இருப்பேன். 6 ஆம் தேதி காலையில்தான் இலங்கைக்குப் புறப்படுகிறேன். உங்களுக்கு வசதியான நேரத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் என்னுடைய பிற தனிப்பட்ட வேலைகளை அதற்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்ளலாம். ---மயூரநாதன் (பேச்சு) 03:46, 30 மார்ச் 2017 (UTC)

மகிழ்ச்சி, உளமார்ந்த வாழ்த்துகள்--ஹிபாயத்துல்லா 14:41, 31 மார்ச் 2017 (UTC)--ஹிபாயத்துல்லா 14:41, 31 மார்ச் 2017 (UTC)

உத்தமத்தின் 16-ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் கனடாவில் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் தொகு

கனடாவில் தொராண்டோ மாநகரில் தொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஆகத்து 25-27, 2017 ஆகிய நாட்களில் உத்தமத்தின் 16-ஆவது தமிழிணைய மாநாடும் கருத்தரங்கமும் நடக்கவிருக்கின்றது. இதில் விக்கிப்பீடியாவின் அலசல்கள், விக்கிப்பீடியாவின் உறவுத்திட்டங்களின் அலசல் பற்றிய கட்டுரைகள் படைப்போரும் படைக்கலாம். கருத்தரங்கத்தின் கட்டுரைகளுக்கான அழைப்பறிவிப்பு தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழ்க்காணும் வலைப்பக்கங்களில் காணலாம்.

--செல்வா (பேச்சு) 05:38, 28 மார்ச் 2017 (UTC)

  • கனடா வான்கூவரில் அப்போது இருக்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 06:21, 29 மார்ச் 2017 (UTC)

பயனர் கணக்குகள் தொகு

இவ்வாறு ஆயிரக்கணக்கில் பயனர் கணக்குகளை உருவாக்குவதால் யாருக்கு அல்லது விக்கிப்பீடியாவுக்கு என்ன நன்மை? வலுக்கட்டாயமாகப் பயனர் கணக்குகள் உருவாக்கப்படுகிறது போல் தெரிகிறது. பயனர் கணக்கு எண்ணிக்கை அதிகமாவதால் நன்மை கிடைக்கிறதா? சம்பந்தப்பட்டவர்கள் விளக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 08:41, 29 மார்ச் 2017 (UTC)

இதன்படி பயிற்சிப்பட்டறைகளில் ஒரே நாளில் நிறைய பயனர் கணக்குகளை உருவாக்க வேண்டிய உடைய தேவை உடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பயிற்சிப்பட்டறைகள் பற்றிய முன்னறிவிப்புக்கள் இல்லை. மேலும், இங்குள்ளபடி பயிற்சிப் பட்டறைகள் பற்றிய விவரங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆவணப்படுத்த வேண்டும். --AntanO 08:59, 29 மார்ச் 2017 (UTC)
இவர்கள் எவ்வாறு விக்கிப்பீடியாவில் பயிற்சி எடுக்கிறார்கள்? எவரும் பங்களிப்பதாகத் தெரியவில்லையே. ஒருவர் கூட ஒரு பிழைதிருத்தம் கூட செய்வதில்லையே?--Kanags \உரையாடுக 09:19, 29 மார்ச் 2017 (UTC)
இன்று உருவாக்கப்பட்டுக் கணக்குகள் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் மாணவர்களுக்கானது. இவர்கள் தமிழ் இணையக்கல்விக் கழகம் உருவாக்கி இருக்கும் கணித்தமிழ்ப்பேரவையில் உறுப்பினர்களாகவும் உள்ளனர். வலுக்கட்டாயமாக கணக்குகள் உருவாக்கப்படவில்லை. இந்த மாணவர்கள் தற்போது தமிழ் உள்ளீட்டுப் பயிற்சியினைப்பெற்றுள்ளனர். எதிர்வரும் சனிக்கிழமை 01.04.2017 இல் இவர்கள் விக்கி மூலத்தில் தமிழ் நூல்களைத் தொகுக்க உள்ளனர். இந்த மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் முதலில் மணல்தொட்டியில் எழுதிப்பழகியபின் முறையான கட்டுரைகளை உருவாக்குவார்கள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 09:45, 29 மார்ச் 2017 (UTC)
தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் விக்கி கட்டுரை உருவாக்கம் பாடத்திட்டதிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு உருவாக்கம் எரிதப்பணி அல்ல--Thamizhpparithi Maari (பேச்சு) 09:47, 29 மார்ச் 2017 (UTC)
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி பரிதி. ஆனாலும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து நீங்கள் இங்கோ அல்லது வேறு எங்கும் அறிவிப்புத் தந்ததாக எனக்குத் தெரியவில்லை. எதற்காக இவ்வாறு பெருந்தொகையாக உருவாக்கப்படுகின்றன என்பது எனக்கு வியப்பாக இருந்தது. நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:05, 29 மார்ச் 2017 (UTC)

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் தொடங்கப்பெற்றுள்ள 100 க்கும் மேற்பட்ட கணித்தமிழ்ப்பேரவைகள் தமிழ் விக்கிப்பீடியர்களின் ஒத்துழைப்புடனே செயற்பட்டு வருகின்றன. தமிழ் விக்கிப்பீடியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நீங்கள் அறிவீர்கள். தமிழகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட கணித்தமிழ்ப்பேரவை உறுப்பினர்களுக்கு விக்கி மீடியா குறித்த அடிப்படை விழிப்புணைர்வு அளிக்கப்பெற்றுள்ளது. கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம் நடக்கும் போது ஒரு ஐபியில் 5 பேருக்கு மேல் அவர்களால் கணக்கு உருவாக்கத்தினை செய்ய இயலவில்லை. எனவேதான் பயிற்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக கணக்குகள் உருவாக்கப்பெறுகின்றன. கணித்தமிழ்ப்பேரவைகளின் நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன. இன்றைக்குள் பயிற்சி குறித்த அறிப்பு வெளியிடப்படும், நன்றி.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:18, 29 மார்ச் 2017 (UTC)

உங்கள் அயராத பங்களிப்பு நன்றி பரிதி. --Natkeeran (பேச்சு) 13:28, 29 மார்ச் 2017 (UTC)

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைகழகத்தில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பயிலரங்கம் தொகு

தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் கணித்தமிழ்ப்பேரவைவையும் தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழக கணித்தமிழ்ப்பேரவையும் இணைந்து எதிர்வரும் 01.04.2017 சனிக்கிழமை அன்று இராசி அரங்கில் தமிழ் விக்கிப்பீடிய அறிமுகப் பயிலரங்கினை நடத்த உள்ளது. இப்பயிரங்கினை கணித்தமிழ்ப்பேரவை மாநில அலகின் சார்பில் நான் பங்கேற்கின்றேன். த.நா.வே.பல்கலையின் சார்பில் முனைவர் இரா பாவேந்தன் ஒருங்கிணைப்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இப்பயிலரங்கில் கோயம்புத்தூர் பகுதியிலுள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உறுதுணைபுரிய அழைக்கின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:26, 29 மார்ச் 2017 (UTC)

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வளாகத்தின் முதன்மையான--Thamizhpparithi Maari (பேச்சு) 09:30, 1 ஏப்ரல் 2017 (UTC) இடங்களை ஒளிப்படம் எடுக்கத்தொடங்கியுள்ளனர். சில மாணவர்களுக்கு பயனர் கணக்குகளைத் தொடங்கியுள்ளேன்.
பணி வெற்றிபெற வாழ்த்துக்கள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:59, 1 ஏப்ரல் 2017 (UTC)

இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் ஆவணப்படுத்தலும்: பயிலரங்கு தொகு

எதிர்வரும் 08.04.2017 சனிக்கிழமை நூலக நிறுவனமும் உத்தமம் அமைப்பும் இணைந்து யாழ்ப்பாணத்தில் "இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடும் ஆவணப்படுத்தலும்" எனும் தலைப்பிலான பயிலரங்கு ஒன்றை நடாத்தவுள்ளனர். இதில் 'தமிழ் விக்கிப்பீடியாவில் ஈழத்து ஆவணமாக்கல்' எனும் தலைப்பில் இ. மயூரநாதன் உரை நிகழ்த்தவுள்ளார். வாய்ப்புள்ள பயனர்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

தலைப்புகள்:

  • இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு- சு.கரிகரகணபதி
  • தமிழ் விக்கிப்பீடியாவில் ஈழத்து ஆவணமாக்கல் - இ. மயூரநாதன்
  • பல்லூடக ஆவணப்படுத்தவில் நூலக நிறுவனம்- ந. பிரபாகர்

இடம்: நூலக நிறுவனம், இல:100 ஆடியபாதம் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம் காலம்: 08.04.2017 பி.ப 2:30 - 6:00மணி --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:21, 30 மார்ச் 2017 (UTC)

மிக்க மகிழ்ச்சி நிகழ்ச்சின் இனிய வெற்றிக்கு வாழ்த்துகள்--Thamizhpparithi Maari (பேச்சு) 08:01, 30 மார்ச் 2017 (UTC)
  விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:10, 30 மார்ச் 2017 (UTC)

கலந்துகொள்வதற்கு விருப்பம், ஒரு சிலகாரணங்களினால் கலந்துகொள்ளமுடியாமலும் போகலாம். எனினும் விக்கிப்பீடியனாக இந்நிகழ்வில் கலந்துகொள்வதில் கிடைக்கும் நன்மைகளினை எடுத்துரைக்க வேண்டுகின்றேன் ஐயா! @Mayooranathan:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:36, 30 மார்ச் 2017 (UTC)

நிகழ்ச்சி பெருவெற்றி பெற வாழ்த்துக்கள்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:48, 4 ஏப்ரல் 2017 (UTC)

விகடன் விருது தொகு

 

"டாப் 10 மனிதருக்கான" ஆனந்தவிகடன் விருதை நேற்று சென்னையில் இடம்பெற்ற விழாவில் பெற்றுக்கொண்டேன். உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் இதை எனக்கு வழங்கினார். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்காக உழைத்த அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் இது சமர்ப்பணம்.--மயூரநாதன் (பேச்சு) 06:02, 31 மார்ச் 2017 (UTC)

வாழ்த்துகள் மயூரநாதன். அனைவருக்கும் பெருமை.--Kanags \உரையாடுக 06:33, 31 மார்ச் 2017 (UTC)
"டாப் 10 மனிதருக்கான" ஆனந்தவிகடன் விருதைப்பெற்றிருக்கும் தங்களுக்கு எங்களின் இனிய வாழ்த்துகள் ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 07:13, 31 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி. அனைவருக்குமான பெருமை இது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:15, 31 மார்ச் 2017 (UTC)
வாழ்த்துகள் ஐயா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:25, 31 மார்ச் 2017 (UTC)
மகிழ்ச்சி.வாழ்த்துகள் மயூரநாதன். --சிவகோசரன் (பேச்சு) 07:41, 31 மார்ச் 2017 (UTC)
வணக்கம் ஐயா! மகிழ்ச்சி; தங்களால் எமக்குப் பெருமை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 31 மார்ச் 2017 (UTC)
தங்களின் முன்னோடியான முனைப்பிற்கு பொருத்தமான விருது ! வாழ்த்துகள் !! தங்களோடு நாங்களும் பங்களித்தோம் என்பதில் அளப்பரிய மகழ்ச்சி !! --மணியன் (பேச்சு) 11:12, 31 மார்ச் 2017 (UTC)
உங்களுக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 15:09, 31 மார்ச் 2017 (UTC)
  • தமிழ் விக்கிப்பீடியா விதையை நட்ட இவருக்கு விருது என்பது "தமிழ்-விக்கிப்பீடியா"வுக்கே பெருமை. --Sengai Podhuvan (பேச்சு) 19:27, 1 ஏப்ரல் 2017 (UTC)
  • மகிழ்ச்சியும் வாழ்த்துகளும். --இரா.பாலா (பேச்சு) 00:15, 2 ஏப்ரல் 2017 (UTC)
  • மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்--Arulghsr (பேச்சு) 09:41, 3 ஏப்ரல் 2017 (UTC)
  • மயூரனாதன் அவர்களே! மட்டற்ற மகிழ்ச்சி.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:07, 4 ஏப்ரல் 2017 (UTC)
  • விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். திரு. உதயச்சந்திரன் மூலம் விருது வழங்கியமை மிகச் சிறப்பு. --இரவி (பேச்சு) 19:29, 4 ஏப்ரல் 2017 (UTC)
வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ---மயூரநாதன் (பேச்சு) 03:45, 12 ஏப்ரல் 2017 (UTC)

சென்னையில் சந்திப்பு தொகு

நாளை (செவ்வாய் ஏப்ரல் 4) மாலை 7-9 சென்னை தி.நகர் Taz Kamar விடுதியில் மயூரநாதன் ஐயாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். வாய்ப்புள்ளவர்கள் இச்சிறு சந்திப்பிற்கு வந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:30, 3 ஏப்ரல் 2017 (UTC)

விடுதி முகவரி - Taz Kamar, 36, ரங்கன் தெரு, போஸ்டல் காலனி, தியாகராய நகர், சென்னை

விடுதிக்கான வரைபடம் - https://goo.gl/maps/mc6QKeaujdE2

அங்குள்ள உணவகத்தில் இரவு உணவுக்கு முன்பதிவு செய்ய, நிகழ்ச்சிக்கு வருவோர் இங்கு பதிவு செய்க. --த.சீனிவாசன் (பேச்சு) 11:45, 3 ஏப்ரல் 2017 (UTC)

வருகைப்பதிவு -

  1. த.சீனிவாசன்
  2. நீச்சல்காரன்
  3. நந்தினி கந்தசாமி
  4. மணியன்(*உணவு வேண்டாம்)
  5. செம்மல்


இச்சந்திப்புக்கௌ வர இயலாமைக்கு வருத்தம்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 16:09, 4 ஏப்ரல் 2017 (UTC)


சந்திப்பு இனிதே நடைபெற்றது. தமிழ் விக்கியில்புது பயனர்களை தக்க வைக்கத் தேவையான இணக்கமான அணுகுமுறைகள், நிரலாலர்கள்களை பங்களிக்க அழைத்தல், நிரலாக்கத் தேவைகளைத் தொகுத்தல், இலங்கை வரலாறு, தமிழர்கள் வரலாறு, நூலகத்திட்டம் போன்ற பல்வேறு விடயங்களை பேசினோம். பங்குபெற்றோர்.

  1. மயூரநாதன்
  2. செங்கை பொதுவன்
  3. செங்கை செல்வி
  4. நந்தினி கந்தசாமி
  5. நீச்சல்காரன்
  6. செம்மல்
  7. மணியன்
  8. த.சீனிவாசன்
  9. பழனியப்பன்

சில புகைப்படங்கள் இங்கே - https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_Wikipedians_Meet_with_Mayuranathan

கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.--த.சீனிவாசன் (பேச்சு) 06:49, 6 ஏப்ரல் 2017 (UTC)

போட்டிகள் தொகு

புதுப்பயனர் போட்டி


மாதிரிப் போட்டி (விக்கிப்பீடியா):

  • கலந்துகொள்பவர்கள்: ஆர்வமுள்ள 500 போட்டியாளர்கள். இவர்களை 50 போர் கொண்ட 10 குழுக்களாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குழுவும் ஒன்று அல்லது இரண்டு விக்கிமீடியர் அல்லது விக்கித்திட்டங்கள் பற்றி அறிந்த தன்னார்வலர் கொண்ட குழுவினால் வழிநடத்தப்படும்.
    • ஒவ்வொரு குழுவுக்கும் தொடக்கத்தில் குறைந்தது ஒரு நாளாவது பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்படும்.
    • பயிலரங்குக்கு முன்பே போட்டியாளர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
    • பயிலரங்கன்று ஒவ்வொருவரும் குறைந்தது 300 சொற்களைக் கொண்ட இரண்டு முறையான கட்டுரைகளை எழுதவேண்டும் (தாளில் எழுதலாம், சரிபார்த்த பின்னர் விக்கிப்பீடியாவில் சேர்த்துக்கொள்ளலாம்).
    • பின்னர் தொடர்ந்து மாதத்துக்குக் குறைந்தது 5 கட்டுரைகள் வீதம் ஆறு மாதங்களில் 30 கட்டுரைகள் எழுதவேண்டும். (இதன்மூலம் முறையான 15,000 கட்டுரைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது).
    • மாதம் ஒரு பரிசும் இறுதியாக 3 பரிசுகளும் வழங்கலாம்.

இந்த முறையில் ஒவ்வொரு போட்டியாளரும் பயிற்சி பெற்றபின்னரே போட்டியில் கலந்துகொள்வார். இதனால், கட்டுரைகள் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றவகையில் அமையக் கூடிய வாய்ப்பு உள்ளது. போட்டியாளர்கள், விக்கிப்பீடியாவில் நேரடியான அனுபவத்தைப் பெறுவர். போட்டியாளர்கள் 6 மாதங்களுக்கு விக்கிப்பீடியாவுடன் தொடர்பில் இருப்பர் என்பதால் அவர்களில் பலர் தொடர் பங்களிப்பாளர்களாக மாறவும் வாய்ப்பு உள்ளது. --மயூரநாதன் (பேச்சு) 19:12, 28 சூலை 2015 (UTC)[பதிலளி]


மேற்படி மயூரநாதன் ஐயாவின் கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்றேன். அந்தவகையில் எம் விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15 மூலம் இவ்வாறான ஒரு போட்டியை நடாத்தலாம். இது பற்றி உங்கள் என்ணங்கள், கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன.@Ravidreams, AntanO, Mayooranathan, Kanags, Semmal50, Rsmn, and Aswn:@Natkeeran, Maathavan, Aathavan jaffna, Shrikarsan, and Sivakosaran:@Kalaiarasy, Nan, Balurbala, Selvasivagurunathan m, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, Booradleyp1, and Arulghsr:@Tshrinivasan and Uksharma3:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:19, 4 ஏப்ரல் 2017 (UTC)

  • மயூரநாதன் பரிந்துரைக்கும் திட்டம், மிகவும் சிறந்த திட்டமாகவே தோன்றுகிறது. ஒரே ஒரு கேள்வி. இந்தப் போட்டியில், ஏதாவது ஒரு வகையில் கட்டுரைகளை மேம்படுத்துவதையும் இணைத்துக் கொள்ள முடியுமா? இதைக் கேட்பதற்கான காரணம் இங்குள்ள உரையாடல்.--கலை (பேச்சு) 16:59, 4 ஏப்ரல் 2017 (UTC)
நிச்சயமாக, ஆனால் பிற பயனர்களின் கருத்துத் தேவைப்படுகின்றது.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:27, 5 ஏப்ரல் 2017 (UTC)
15000 கட்டுரைகள், 500 பேருக்குப் பயிற்சி அளித்து போட்டியில் பங்கு பெறச் செயல் என்பவை நடைமுறைச் சாத்தியமற்றவையாகத் தோன்றுகிறது. கல்வியில் விக்கிப்பீடியா திட்டத்தின் மூலம் இத்தகைய பெருமெடுப்பிலான பயிற்சிகள் உதவுவதில்லை என்பதை அறிந்துள்ளோம். இயன்றால் பல பள்ளி, கல்லூரிகளில் பயிலரங்கங்கள் நடத்தி போட்டி குறித்து அறிவிக்கலாம். அதற்கு மேல் போட்டிக்கு வரும் கட்டுரைகள் குறித்து எண்ணிக்கை இலக்கு தேவையில்லை. --இரவி (பேச்சு) 19:28, 4 ஏப்ரல் 2017 (UTC)
நன்று, இரவி, தாங்கள் கூறியது போல பயிலரங்களை யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில், குறித்த இடத்துஇல் பல கல்லூரிகலூக்கும் கடிதங்கள் மூலம் தகவல் அனுப்பி முற்கூட்டியே நமக்குத் தெரியப்படுத்திப் பின் அவர்களை ஒன்றிணைத்து நடாத்தலாம். இங்கு யாழ்.தமிழ் விக்கிப்பீடியர்கள் முன்வருவர் என எண்ணுகின்ரேன். வரும் வருடம் இவாறு நடாத்தலாம். இதனை விட வேறு எவ்வாறு நடாத்தலாம் அல்லது இவாறு நடாத்துவதே சிரப்பா எனக் கருத்திட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:28, 5 ஏப்ரல் 2017 (UTC)

Please accept our apologies for cross-posting this message. This message is available for translation on Meta-Wiki.

 

On behalf of the Wikimedia Foundation Elections Committee, I am pleased to announce that self-nominations are being accepted for the 2017 Wikimedia Foundation Board of Trustees Elections.

The Board of Trustees (Board) is the decision-making body that is ultimately responsible for the long-term sustainability of the Wikimedia Foundation, so we value wide input into its selection. More information about this role can be found on Meta-Wiki. Please read the letter from the Board of Trustees calling for candidates.

The candidacy submission phase will last from April 7 (00:00 UTC) to April 20 (23:59 UTC).

We will also be accepting questions to ask the candidates from April 7 to April 20. You can submit your questions on Meta-Wiki.

Once the questions submission period has ended on April 20, the Elections Committee will then collate the questions for the candidates to respond to beginning on April 21.

The goal of this process is to fill the three community-selected seats on the Wikimedia Foundation Board of Trustees. The election results will be used by the Board itself to select its new members.

The full schedule for the Board elections is as follows. All dates are inclusive, that is, from the beginning of the first day (UTC) to the end of the last.

  • April 7 (00:00 UTC) – April 20 (23:59 UTC) – Board nominations
  • April 7 – April 20 – Board candidates questions submission period
  • April 21 – April 30 – Board candidates answer questions
  • May 1 – May 14 – Board voting period
  • May 15–19 – Board vote checking
  • May 20 – Board result announcement goal

In addition to the Board elections, we will also soon be holding elections for the following roles:

  • Funds Dissemination Committee (FDC)
    • There are five positions being filled. More information about this election will be available on Meta-Wiki.
  • Funds Dissemination Committee Ombudsperson (Ombuds)
    • One position is being filled. More information about this election will be available on Meta-Wiki.

Please note that this year the Board of Trustees elections will be held before the FDC and Ombuds elections. Candidates who are not elected to the Board are explicitly permitted and encouraged to submit themselves as candidates to the FDC or Ombuds positions after the results of the Board elections are announced.

More information on this year's elections can be found on Meta-Wiki. Any questions related to the election can be posted on the election talk page on Meta-Wiki, or sent to the election committee's mailing list, board-elections wikimedia.org.

On behalf of the Election Committee,
Katie Chan, Chair, Wikimedia Foundation Elections Committee
Joe Sutherland, Community Advocate, Wikimedia Foundation

Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation Elections Committee, 03:36, 7 ஏப்ரல் 2017 (UTC) • Please help translate to your languageGet help

திரு. உதயச்சந்திரனுடான சந்திப்பு தொகு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைச் செயலர் உதயச்சந்திரன் அவர்களைக் கடந்த 5 ஏப்ரல் 2017 அன்று தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. பயனர் @Neechalkaran: இச்சந்திப்பை ஒழுங்கு செய்ய உதவினார். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் என்ற வகையிலும், அதற்காகத் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்துவருபவர் என்ற வகையிலும், ஆனந்த விகடன் விருதை எனக்கு அவர் கையால் வழங்கியதற்கு நன்றி சொல்வதற்காகவும் அவரைச் சந்திக்க விரும்பினேன். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாக அமைந்தது. தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் பேசினோம். பின்வரும் விடயங்கள் தொடர்பில் தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.

  • கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் விக்கிப்பீடியாவை இந்தியாவில் மிகப்பெரிய விக்கிப்பீடியாவாக வளர்த்து எடுத்தல்
  • கட்டுரைகளின் தரத்தை அதிகரித்தல்
  • அறிவியல் தொடர்பான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குதல் (தேவையான கட்டுரைத் தலைப்புக்களைத் தந்தால் உரியவர்களைக்கொண்டு கட்டுரைகளை உருவாக்கத் தான் உதவ முடியும் என்றார்)
  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவதை இலகுவாக்கப் பயன்படக்கூடிய நிரல்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்குதல் (இது தொடர்பில் தமிழ் விக்கிப்பீடியாப் பயனர்களது தேவைகள் குறித்து அறிய விரும்புகிறார்.)

திரு உதயச்சந்திரனுடைய ஆர்வத்தையும் நல்லெண்ணத்தையும் பயன்படுத்திக்கொண்டு தமிழ் விக்கிப்பீடியாவை வளர்ப்பதற்குக் குறிப்பான சில திட்டங்களை உருவாக்க முடியும் எனக் கருதுகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 05:07, 7 ஏப்ரல் 2017 (UTC)

மகிழ்ச்சி, ஐயா.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை இலகுவாக உருவாக்குவதற்கு ஏதேனும் கருவிகள் உள்ளதா? எடுத்துக்காட்டாக ஒரு சில தரவுகளை உட்புகுத்தும் போது அவற்றையெல்லாம் தொகுத்து தானாகவே வாக்கியங்களை அமைப்பது போன்ர கருவி. இவ்வாறான ஒரு கருவி இடங்கள் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்கள் தொடர்பான எழுதப்படாத கட்டுரைகளினை உருவாக்க உதவும். மேலும் இவற்றைத் தானியங்கிகள் கொண்டும் செய்யலாம் என எண்ணுகின்றேன். எனினும், அனைத்தையும் தானியங்கியினைக் கொண்டு செய்வது நல்லதல்ல. ஆகவே, இவாறான கருவிகளை உருவாக்கிதர விருப்பம். ஏற்கனவே அவ்வாறு உள்ளதாயின் அறியத்தாருங்கள்

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:41, 7 ஏப்ரல் 2017 (UTC)

முக்கிய அறிவிப்பு: கோயில் கட்டுரைகள் இறுதிச் சோதனை ஓட்டம் தொகு

முக்கிய அறிவிப்பு: கோயில் கட்டுரைகளின் இறுதிச் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 400க்கும் மேற்பட்ட கட்டுரைகள் ஏற்றப்பட்டுள்ளன. இவற்றைக் கவனித்து தேவையான மாற்றங்களை இங்கு மட்டும் ஒரே இடத்தில் குவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த கட்டப் பதிவேற்றங்கள் 1000, 2000 கட்டுரைகள் என்று படிப்படியாக 99,500 கட்டுரை இலக்கை எட்டும் வரை ஏற்றப்படும். நன்றி.--இரவி (பேச்சு) 08:24, 7 ஏப்ரல் 2017 (UTC)

நூலகம் - உத்தமம் பயிலரங்கில் விக்கிப்பீடியா தொகு

நேற்று (08 ஏப்ரல் 2017) பிற்பகல் 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள நூலக நிறுவனத்தின் அலுவலகத்தில் "இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாடு, ஆவணப்படுத்தல்" என்னும் தலைப்பிலான பயிலரங்கு இடம்பெற்றது. இதில் தமிழ் விக்கிப்பீடியா குறித்த எனது உரையொன்றும் இடம்பெற்றது. இப்பயிலரங்குக்கு உத்தமம், நூலகம் ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தோரும், சில வெளி ஆர்வலர்களும் பங்கு பற்றினர். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நானும், பயனர் ஸ்ரீஹீரனும் பங்குபற்றினோம். ஸ்ரீஹீரனும் தன்னுடைய விக்கிச் செயற்பாடுகள் குறித்துச் சபையினருக்கு எடுத்துரைத்தார். அவரது தமிழ் விக்கிச் செயற்பாடுகளுக்கு கலந்துகொண்டோர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பயனுள்ள தொடர்புகளும் கிடைத்தன. இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாக இலங்கையின் தமிழ் பேசும் பகுதிகளில் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசிரியர்கள் சிலரையும் சந்திக்கக்கூடியதாக இருந்தது (இவர்களுடைய மாணவர்களே அண்மையில் தமது கல்வித் தேவைக்காகத் தமிழ் விக்கியில் பல கட்டுரைகளை எழுதினர்). எதிர்காலத்திலும் இது போன்ற செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த விருப்பமும் தெரிவித்தனர். இத்தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு ஒன்றை ஒழுங்கு செய்வதற்கும் அவர்கள் ஆர்வம் காட்டினர். -- மயூரநாதன் (பேச்சு) 02:42, 9 ஏப்ரல் 2017 (UTC)

இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். தொழிநுட்பக் கல்லூரி மாணவர்களின் பரீட்சைகள் முடிவடைந்து விட்டனவா? அவர்கள் எழுதிய மாதிரிக் கட்டுரைகள் சில மேம்பாட்டுக்காக தேங்கியுள்ளன. சில கட்டுரைகள் மாணவர்களின் பெயர் வெளிகளிலும் உள்ளன. அவற்றை அந்தந்த மாணவர்களைக் கொண்டே திருத்துவது நல்லது. மயூரநாதன், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.--Kanags \உரையாடுக 02:52, 9 ஏப்ரல் 2017 (UTC)
அம்மாணவர்களுக்கு இப்போது விடுமுறை. விடுமுறைக்குப் பின்னர் பயிற்சி வகுப்புக்களை ஒழுங்கு செய்வதாகக் கூறியுள்ளனர். அப்போது இவ்விடயங்கள் குறித்தும் பேசலாம். ---மயூரநாதன் (பேச்சு) 03:08, 9 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags and Mayooranathan:, தொழிநுட்பக் கல்லூரி தலைவர் கரிகணபதியை அணுகியபோது, வரும் மே, மீண்டும் தொழிநுட்பக் கல்லூரி ஆரம்பிக்கப்படுவதாகவும், சூன் முதல் வாரத்தில் தனது தொலைபேசிக்கு அழைக்குமாறும், அவ்வாரமே பயிற்சிப்பட்டறை ஒன்றை ஒழுங்குசெய்வதாகவும், தவறாமல் சமுகமளிக்கவும், கேட்டுக்கொண்டார்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:47, 9 ஏப்ரல் 2017 (UTC)

Read-only mode for 20 to 30 minutes on 19 April and 3 May தொகு

MediaWiki message delivery (பேச்சு) 17:35, 11 ஏப்ரல் 2017 (UTC)

மொழிபெயர்ப்பு தொகு

19 ஏப்ரல் 2017 மற்றும் 03 மே 2017 ஆகிய தினங்களில் UTC நேரமான 14:00 மணியளவில் தொடர்ந்து 20 தொடக்கம் 30 நிமிடக் கால இடைவெளியில் விக்கிப்பீடியா உட்பட அனைத்து விக்கிப்பீடியாத்திட்டங்களிலும், எதுவிதமான தொகுப்புக்களையும் மேற்கொள்ளமுடியாது. வாசிக்க மட்டுமே முடியும்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:19, 12 ஏப்ரல் 2017 (UTC)

பயிற்சிப்பட்டைறைக்கான காட்சிப்படுத்தல் வளங்கள் தொகு

பயிற்சிப்பட்டைறையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற Presentationகள் தங்களிடம் இருப்பின் shriheeran@gmail.com எனும் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவுங்கள். @Sivakosaran, AntanO, Kanags, Ravidreams, Nan, Natkeeran, and Aswn:@Neechkaran, Rsmn, Shanmugamp7, Parvathisri, and தமிழ்க்குரிசில்:@கி.மூர்த்தி, Thamizhpparithi Maari, and Dineshkumar Ponnusamy:@Sodabottle, Surya Prakash.S.A., and Sundar:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:15, 14 ஏப்ரல் 2017 (UTC)

Wikidata description editing in the Wikipedia Android app தொகு

Wikidata description editing is a new experiment being rolled out on the Wikipedia app for Android. While this primarily impacts Wikidata, the changes are also addressing a concern about the mobile versions of Wikipedia, so that mobile users will be able to edit directly the descriptions shown under the title of the page and in the search results.

We began by rolling out this feature several weeks ago to a pilot group of Wikipedias (Russian, Hebrew, and Catalan), and have seen very positive results including numerous quality contributions in the form of new and updated descriptions, and a low rate of vandalism.

We are now ready for the next phase of rolling out this feature, which is to enable it in a few days for all Wikipedias except the top ten by usage within the app (i.e. except English, German, Italian, French, Spanish, Japanese, Dutch, Portuguese, Turkish, and Chinese). We will enable the feature for those languages instead at some point in the future, as we closely monitor user engagement with our expanded set of pilot communities. As always, if have any concerns, please reach out to us on wiki at the talk page for this project or by email at reading@wikimedia.org. Thanks!

-DBrant (WMF) 08:41, 14 ஏப்ரல் 2017 (UTC)

மாநில அளவிலான தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி தொகு

கடந்த 10/4/2017, 11/4/2017 ஆகிய இரன்டுநாட்கள் மாநில அளவிலான, " கல்வியில் தகவல் தொழில்நுட்பம், மற்றும் விக்கிப்பீடியா" குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திரு. உதய சந்திரன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வு பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் நிகழ்ந்தது. மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் திரு இராமேஸ்வர முருகன், இணை இயக்குநர், விரிவுரையாளர்கள், தமிழ்நாடெங்குமுள்ள மாவட்டக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், மாநிலமெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். இதில் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகளை தரம் , எண்ணிக்கையில் உயர்த்துவதற்கான ஆலோசனைக் கேட்கப்பட்டது. நான் பள்ளிமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோடை முகாம் நிகழ்த்துவதற்கான திட்டங்களை முன்வைத்தேன். இதன் படி முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆயிரம் கட்டுரைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சிறப்பாக பங்களிக்கும் மாவட்டத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. வரும் 2/5/2017 முதல் 4/5/2017 வரை மூன்று நாட்கள் மாநில அளவில் விக்கிப்பீடியா பயிற்சியும், 10/5/2017 முதல் 12/5/2017 வரை மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டங்களில் பயிற்சியும் வழங்கப்படும். மாநில அளவிலான விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களாக பயனர்:பரிதிமதி மற்றும் பயனர்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:52, 14 ஏப்ரல் 2017 (UTC) செயல்படவுள்ளோம். இப்பயிற்சிக்கென விக்கிப்பீடியர்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி முகாம் வெற்றிபெறவாழ்த்துகள்! பார்வதிஸ்ரீ, பயிற்சிப்பட்டறைகள் பற்றி தங்களுக்குத் தெரியாதது தான் என்ன? இலங்கையிலும் இவ்வாறு, நடாத்த உள்ளோம். இந்தியாவில் அரசு உதவியுடனும் இலங்கையில் நாமாவே நடாத்த உள்ளதும் தான் வித்தியாசம் என நினைக்கிறேன். அது இருக்க, தங்களிடம் பயிற்சிப்பட்டறைக்கு ஏற்ற காணொளி ஏதேனும் தேவையெனின் வினவுக. தங்களிடம் இருக்கும் Presentationஐ என் மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுங்கள். அத்துடன்
  • பயிற்சிப்பட்டறையில் பதிப்புரிமை பற்றி வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.
  • மேலும், விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை வர்ணனை நடையிலோ, ஆராய்ச்சி வடிவிலோ எழுத வேண்டாம் என வலியுறுத்துங்கள். *அத்துடன், தமிழ் விக்கியில் பயிற்சிப்பட்டறைக்கு என ஒரு பக்கத்தை உருவாக்குக.
  • தமிழ் விக்கிப்பங்களிப்பாளார்களினால் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி கொடுக்கப்பட்ட காணொளிகளினையும் தவறாது காட்சிப்படுத்துங்கள்
  • விக்கிப்பீடியாவின் கொள்கைகள், வழிகாட்டுதல்களினை ஞாபகமூட்டல் வேண்டும்.
  • பேச்சுப்பக்கத்தில் விடுக்கும் செய்திகளுக்கு பதில் அளிப்பது பற்றிக் கற்றுக்கொடுங்கள், மேலும் அதனை தவறாது செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.
  • தீக்குறும்பு மற்றும் இதர தடை செய்யப்படுவதற்கான சாத்தியங்களினை எடுத்துரைக்கவும்.
  • ஆங்கில விக்கியிலிருந்து தமிழ் விக்கிக்கு கட்டுரைகளை மொழிபெயர்ப்பது எப்படி? அதற்கான இலகு வழிமுறைகள்.
  • சான்றிணைப்பது தொடர்பிலும் விளக்கவும்.
  • குறிப்பிடத்தகைமை கொண்ட கட்டுரைகளையே நாம் வரவேற்கின்றோம் என்பதை தெளிவுபடுத்துங்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக விருதுக்காக அன்றி நாமாகவே முன்வந்து விக்கியில் பங்களிப்போம் எனவும் அதனால் கிடைக்கும் பயன்களினையும் விலாவாரியாக எடுத்துக்கூறுக.
  • அத்தோடு விக்கிப்பீடியாவின் 15 ஆம் ஆண்டுகளைக் அடையும் தருணம், கொண்டாட்டம் என்பவற்றிற்கு இப்பயிற்சிப்பட்டறை உந்துதலாக அமையும்.

ஆயிரம் கட்டுரைகளும் மேல் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படின் அவற்றினை திருத்தும், கண்காணிக்கும் பணிகளிலும் என்னால் ஈடுபடமுடியும். உதவிகள் தேவையெனின் தவறாது கேளுங்கள். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:21, 14 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி! ஸ்ரீஹீரன் கட்டாயம் உதவி தேவை 32,000 கட்டுரைகள் இலக்கு.

வாழ்த்துக்கள் @Parvathisri:. பயிற்சிகளின்போது, நுட்ப விடயங்களுடன் சேர்த்துக் கலைக்களஞ்சியக் கட்டுரைகளை எவ்வாறு எழுதுவது என்பது குறித்து விளக்க வேண்டியது அவசியம். முடியுமானால், எல்லா உறுப்புக்களும் அடங்கிய மாதிரிக் கட்டுரை ஒன்றை எழுதிக்காட்டி விளக்குவது பயன் தரும். இது தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளின் அமைப்புக் குறித்தும் விளக்கப் பயன்படும். ---மயூரநாதன் (பேச்சு) 03:01, 15 ஏப்ரல் 2017 (UTC)
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் மாவட்ட அளவிலான ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி (2,3,4 மே)நடந்துவருகிறது. சுமார் எழுபது ஆசிரியர்கள் கலந்து கொள்கிறார்கள். முதல் நாள் கலந்து கொண்டு அடிப்படை விக்கிப்பீடியாவின் அமைப்புகள் பற்றி விளக்கினேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்வதிஸ்ரீ, பரிதிமதி, தமிழ்ப்பரிதியுடன் சீனிவாசன், தகவலுழவன், சிபி(Commons_sibi), செம்மல், செந்தமிழ்க்கோதை போன்றோரும் கலந்து கொண்டனர். ஆசிரியர்களின் பயனர் பெயர் TNSE என்று தொடங்குமாறு திட்டமிட்டுள்ளனர், அவர்களின் தொகுப்புகள் மணல்தொட்டில் செய்யப்பட்டு, பின்னர் பொதுவெளிக்கு மாறுகிறது. இத்தகைய பெயருடைய பயனர்கள் ஏதேனும் சிக்கலுக்குள்ளானால் கனிவுடன் உதவிடக் கோருகிறேன். மாவட்டம் வாரியாக விக்கித் தரத்துடன் ஆயிரம் கட்டுரையாவது எழுத இலக்கைக் கொண்டுள்ளனர்.-நீச்சல்காரன் (பேச்சு) 01:50, 4 மே 2017 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் நீச்சல்காரன். இந்நிகழ்வில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஆசிரியர்களும் பங்கு பெறுவதாக அறிகிறேன். இப்பயிற்சிக்குப் பின்னரும் அவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு உதவி (நேரடி) தேவையெனில் குமரி மாவட்டத்தில் நான் உதவக்கூடும் என்பதையும் தெரிவியுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:03, 4 மே 2017 (UTC)[பதிலளி]
கவனிக்க @Parvathisri:, @Thamizhpparithi Maari:, @பரிதிமதி:

ːː தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற மே மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் (சில மாவட்டங்களில் மாறும்) ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் விக்கிப்பீடியா பணிமனை அந்தந்த மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.. இதற்கு மாநில அளவில் கடந்த 2,3,4 பயிற்சியளித்துள்ளோம். ஆயினும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விக்கிப்பீடியர்களின் வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று நாட்கள் விக்கிப்பீடியாப் பயிற்சி மட்டுமே நடைபெறுகிறது. எனவே அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த விக்கிப்பீடியர்கள் தமது மாவட்டத்தில் ஒருநாளும் மற்ற இரு நாட்களில் அருகிலுள்ள மாவட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். இதன் திட்டப்பக்கத்தில் மிகவும் விரைவாக தங்கள் வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:17, 6 மே 2017 (UTC)[பதிலளி]

சிங்கப்பூரில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை தொகு

சிங்கப்பூரில் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பல புதிய பயனர்கள் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனை யார் ஒருங்கிணைக்கிறார்கள்? @Balurbala: --Kanags \உரையாடுக 02:14, 15 ஏப்ரல் 2017 (UTC)

தெரியவில்லையே! நான் சமீபகாலங்களில் இந்தியாவில்தான் இருக்கிறேன். நன்றி. --இரா. பாலா (பேச்சு) 03:46, 15 ஏப்ரல் 2017 (UTC)
@Kanags:, இந்த இணைப்பைப்பாருங்கள். ஏற்பாட்டாளர்களைத் தொடர்புகொண்டு அன்று பதிவேற்றப்பட்ட கட்டுரைகளின் தரம், செய்யவேண்டிய மாற்றங்கள், இவ்வாறான முயற்சிகள் குறித்து விக்கிப்பீடியாவில் உரையாடுதல் போன்றவற்றை நாம் எடுத்துரைக்கலாம். --சிவகோசரன் (பேச்சு) 04:44, 3 மே 2017 (UTC)[பதிலளி]
அவர்களிடம் சில தவறான புரிதல்கள் உள்ளன. //பதிவேற்றம் செய்யப்பட்ட கட்டுரைகள் விக்கிபீடியா ஒருங்கிணைப்பாளர்களால் சரிபார்க்கப்பட்டு பொதுவெளிக்கு விரைவில் வரும்.// என்றுள்ளது :) --சிவகோசரன் (பேச்சு) 04:47, 3 மே 2017 (UTC)[பதிலளி]

நூறாயிரம் கட்டுரைகள் தொகு

விக்கிப்பீடியா:நூறாயிரம் கட்டுரைகள் - இதனை விரிவாக்கி உதவுங்கள். en:Wikipedia:Five million articles, இங்கிருந்து மாதிரி அமைப்பைப் பெறலாம். விரைவில் இதற்கான படிமத்தை இணைக்க முடியும். --AntanO 03:19, 18 ஏப்ரல் 2017 (UTC)

யாழ் பயில் களம் நிகழ்வு தொகு

யாழ்ப்பாணப் பயில் களம் (Jaffna Learning Forum) எனும் குழுவினால் மாதாந்தம் நடைபெறும் செயலமர்வுத் தொடரில் இம்மாத செயலமர்வு நாளை ஏப்ரல் 19 மாலை 5 மணிக்கு ஹற்றன் தேசிய வங்கி யாழ் தலைமை அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இம்மாத அமர்வு தமிழ் விக்கிப்பீடியாவைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இங்கு மயூரநாதன் 'விக்கிப்பீடியா அறிமுகம்' எனும் தலைப்பிலும் ஸ்ரீஹீரன் 'ஓர் இளைய விக்கிப்பீடியனின் பார்வை' எனும் தலைப்பிலும் நான் 'தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்தல்' எனும் தலைப்பிலும் கருத்துரைகளை வழங்கவுள்ளோம்.

நிகழ்ச்சி நிரல்

--சிவகோசரன் (பேச்சு) 04:44, 18 ஏப்ரல் 2017 (UTC)

யான் அங்கு கூற என எதிர்பார்க்கும் விடயங்களை என் பேச்சுப்பக்கத்தில் தெரிவியுங்கள் சிவகோசரன்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:16, 18 ஏப்ரல் 2017 (UTC)
நிகழ்வுக்கு எனது வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:24, 19 ஏப்ரல் 2017 (UTC)
நிகழ்வு நிறைவாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 10:02, 19 ஏப்ரல் 2017 (UTC)
வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:12, 19 ஏப்ரல் 2017 (UTC)

வாழ்த்துகளுக்கு நன்றிகள். நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ஏறத்தாழ 50 பேர் வரை பங்கு கொண்டனர். சிலர் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து ஆர்வம் காட்டினர். ஆர்வமுடையோருக்குத் தனியாக மீண்டும் ஒரு பயிற்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்படத் தீர்மானிக்கப்பட்டது. --சிவகோசரன் (பேச்சு) 14:46, 20 ஏப்ரல் 2017 (UTC)

New Page previews feature தொகு

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளின் பகுப்புகள் தொகு

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளின் புதிதாக குழப்பமான பகுப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. எ.கா: லிசா ஆன் என்ற கட்டுரையில் கூகுள் தமிழாக்கம் திருத்தப்பட்ட பின்பு, கூகுள் தமிழாக்கம்-நபர்கள் என்ற பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது. இது எதற்காக? இவ்வாறான துணைப்பகுப்புக்களை உடனடியாக நீக்கிவிடுகிறேன். --AntanO 15:02, 20 ஏப்ரல் 2017 (UTC)

பயனர் பேச்சு:AntanO இல் இருந்து திருத்தம் செய்யப்பட்ட உரையாடல்: தங்களது தானியிங்கி சில மருத்துவக் கட்டுரைகளில் இருந்து கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் எனும் பகுப்பை நீக்கியுள்ளது. அதற்குரிய காரணம் ஆங்கிலத்தில் "removing category per CFD" என்று காரணம் கொடுக்கப்பட்டுள்ளது. en:Wikipedia:Categories for discussion என்பதை அருள் கூர்ந்து கவனிக்குமாறு வேண்டுகின்றேன். ("Unless a change to a category is non-controversial – e.g. prompted by vandalism or duplication – please do not amend or remove the category from pages before a decision has been made.") நீங்கள் "கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்" எனும் துணைப் பகுப்பை நீக்கிய கட்டுரைகள் அனைத்துமே திருத்தப்படவேண்டியவை. இங்கு நீங்கள் தெரிவித்து இருப்பது கூகுள் தமிழாக்கம் திருத்தப்பட்ட பின்பும் இருக்கக்கூடிய துணைப்பகுப்புகளை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் எனும் பகுப்பு இக்கட்டுரைகளுடன் சேர்ந்திருப்பது முக்கியமானது. இலகுவில் "கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகளை" அறிந்து அவற்றைத் திருத்தும் முயற்சியில் ஈடுபட மருத்துவக் கட்டுரைகள் எழுதுவோருக்கு அறியத் தருகின்றது. எதிர்காலத்தில் இவ்வகைக் கட்டுரைகள் திருத்தியமைக்கப்படும் சந்தர்ப்பம் உருவாகையில் இப்பகுப்புகள் தேவையானவை.

தாங்கள் செய்த மாற்றத்தைத் தயவு செய்து மீளமைக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன். மேலும், இவ்வகை மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் துணைப்பகுப்புகளை உருவாக்கிய அல்லது அவற்றுடன் சம்பந்தப்பட்ட பயனர்களை அணுகுவது சாலச்சிறந்தது. நன்றி. --சி.செந்தி (உரையாடுக) 16:52, 20 ஏப்ரல் 2017 (UTC)

திருத்தப்படவேண்டியவை, கூகுள் தமிழாக்கம் திருத்தப்பட்ட பின்பும் உள்ள பகுப்புகள் என இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது எப்படி? வழிமுறை என்ன? அல்லது ஆ.வி. வழிகாட்டலின்படி, (en:WP:CAT The {{Check category}} template can be used to flag a page that may be in the wrong category) அனைத்திற்கும் வார்ப்புரு இடுவதா? ஆ.வி.யின்படி, Please use it before undertaking any complicated re-categorization of existing categories or mass creation of new categories. என்கிறது. ஆகவே புதிய, அதிகமான துணைப்பகுப்பு உருவாக்கத்திற்காக உரையாடப்பட்டதா? அல்லது அந்நடைமுறை உள்ளதா? மேலும், இக்கட்டுரைகள் வருடக்கணக்கான தேங்கிக் கிடக்கின்ற எத்தனை மருத்துவ மாணவர்கள் திருத்தினார்கள் என்பதை அறியேன். எப்போது திருத்துவார்கள் என்பதையும் அறியேன். குறித்த பகுப்பினை உருவாக்கிய பயனரிடம் வினவப்பட்ட வேறு ஒருவிடயத்திற்கு, கிட்டத்தட்ட 3 கிழமையாகியும் பதில் இல்லை. இவ்வாறான நேரத்தில் யாரிடம் வினவுவது? --AntanO 17:41, 20 ஏப்ரல் 2017 (UTC)
திருத்தப்படவேண்டியவை, கூகுள் தமிழாக்கம் திருத்தப்பட்ட பின்பும் உள்ள பகுப்புகள் என இரண்டுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது எப்படி?

பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் அல்லது பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பகுப்புகளை நோக்குக. {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை}} எனும் வார்ப்புரு பேச்சுப் பக்கத்தில் இடப்படுகின்றது. "மருத்துவ மாணவர்கள்" மட்டும்தான் இங்கு மருத்துவக் கட்டுரைகள் திருத்துகின்றனரா?? இக்கட்டுரைகள் எப்போதும் திருத்தப்படலாம், இது பற்றி யாருக்குமே தெரியாது! கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் எனும் பகுப்பு என்னால் உருவாக்கப்பட்டது. தாங்கள் எப்பொழுது என்னைத் தொடர்பு கொண்டீர்கள்? இதே எண்ணத்தில், நோக்கில் வேறு துணைப் பகுப்புகளை @Info-farmer: உருவாக்கி உள்ளார். விவாதத்தை வளர்க்காமல் தாங்கள் செய்த மாற்றத்தைத் தயவு செய்து மீளமைக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன்.--சி.செந்தி (உரையாடுக) 20:09, 20 ஏப்ரல் 2017 (UTC)

இவை பராமரிப்பு பகுப்புகள். இவ்வாறான துணைப் பகுப்புகளை உருவாக்குவது பராமரிப்பாளர்களுக்கு இலகுவாக இருக்கும். எனவே செந்திலின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறேன். இவற்றை மறைக்கப்பட்ட பகுப்பில் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 01:58, 21 ஏப்ரல் 2017 (UTC)
என கேள்வி பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டடுள்ளது. உதாரணத்துடன் விளக்குகிறேன். அன்னை தெரேசா - இக்கட்டுரை திருத்தப்பட்டு, முதற்பக்கக் கட்டுரையாகவும் இருந்துள்ளது. "திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள்" என்ற பகுப்பும் நீக்கப்பட்டது. [திருத்தம்: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் என்ற பகுப்பும் நீக்கப்பட்டது.] ஆனால், மீண்டும் 18 திசம்பர் 2016‎ அன்று "கூகுள் தமிழாக்கம்-நபர்கள்" என்ற துணைப்பகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாறான துணைப்பகுப்பு குழப்பத்தைத் தவிர்ப்பது எவ்வாறு? இதற்குப் பதிலளித்தால், பிற கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறேன். --AntanO 02:38, 21 ஏப்ரல் 2017 (UTC)
வருடக்கனக்கில் தேங்கிக்கிடக்கின்றன என்பதற்காகவோ அல்லது எப்போது திருத்துவார்கள் என்பது அறியாததாலோ வார்ப்புருவை [திருத்தம்: பகுபப்பை] நீக்குவது தவறானது. அதே சமயம் திருத்தப்பட்ட கட்டுரைகளில் திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் பகுப்பை நீக்காமலிருப்பதே சிறந்தது. கூகிள் தமிழாக்கம் - நபர்கள் என்ற துணைப்பகுப்பு தேவையற்ற குழப்பம் என்றே கருதுகிறேன்.--இரா. பாலா (பேச்சு) 04:00, 21 ஏப்ரல் 2017 (UTC)
யார் வார்ப்புவை நீக்கியது? நீக்கப்பட்ட வார்ப்புரு எது? திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் பகுப்பு எங்கு நீக்கப்பட்டது? இங்கு வார்ப்புரு தொடர்பில் சிக்கல் இல்லை. --AntanO 04:03, 21 ஏப்ரல் 2017 (UTC)
தானியிங்கி சில மருத்துவக் கட்டுரைகளில் இருந்து கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் எனும் பகுப்பை நீக்கியுள்ளது என செந்தி குறிப்பிட்டுள்ளார்.--இரா. பாலா (பேச்சு) 04:12, 21 ஏப்ரல் 2017 (UTC)
உங்களது கேள்வியை நான் ஏற்கனவே விளங்கிக் கொண்டுள்ளேன். அதில் ஏற்கனவே திருத்தப்பட்ட கட்டுரைக்கு Info-farmer ஆல் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது திருத்தப்படவேண்டியதுதான். எனினும் கூகுள் தமிழாக்கம்-நபர்கள் என்ற பகுப்புகள் உள்ள கட்டுரைகளில் உள்ள „கூகுள் தமிழாக்கம்-நபர்கள்“ பகுப்பை தானியங்கி முதற்கண் நீக்கி இருக்கலாம் அல்லவா? குழப்பம் தந்த பகுப்புக்குரிய கட்டுரைகளில் (இருபது) குறிப்பிட்ட பகுப்பு அவ்வாறே இருக்க தங்களது தானியங்கி நீக்கிய கட்டுரைகளில் உள்ள கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் பகுப்பை நான் சுட்டிக்காட்ட விரும்பினேன். தங்களது தானியங்கி இயக்கப்பட்ட விதம் பிழையாக இருக்கலாமோ என்று கூட எண்ணினேன்.

//இவ்வாறான துணைப்பகுப்பு குழப்பத்தைத் தவிர்ப்பது எவ்வாறு?// இதற்குத்தான் ஏற்கனவே மேலே விவரித்துள்ளேன். பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் அல்லது பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பேச்சுப்பக்கத்தில் இடப்பட்டிருந்தால் அவை திருத்தப்பட்ட கட்டுரைகள். யாரேனும் தவறுதலாக கூகிள் மொழியாக்கக் கட்டுரைகள் என்று கட்டுரைப் பக்கத்தில் இட்டிருந்தால், நாம் பேச்சுப் பக்கம் சென்று அது திருத்தம் செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும். இதற்கு தானியங்கியின் செயற்திறன் இல்லாத பட்சத்தில் உரியதொரு தானியங்கி உருவாக்கப்படும்வரை நாம்தான் திருத்தவேண்டும் என்பது எனது கருத்து. தனிப்பட்ட முறையில் உரையாட விரும்பின் மின்னஞ்சல்: dr.srisenthi@themedicalnotes.com --சி.செந்தி (உரையாடுக) 04:16, 21 ஏப்ரல் 2017 (UTC)

இந்த துணைப்பகுப்பு சிக்கல் முன்னரே நிகழ்ந்திருந்தது. (எடுத்துக்காட்டுக்கு முயற்சித்தேன். ஆனால் சில மாதங்கள் ஆகிவிட்ட ஆயிரக்கணக்கான தொகுப்புக்களில் தேடுவது சிக்கலாகவுள்ளது.) திருத்தங்கள் செய்தும், திரும்பத்திரும்ப அவற்றை திருத்துவது அயர்வானது. ஆயிரக்கணக்காண கட்டுரைகளில் துணைப்பகுப்புகளைத் தேடித் திருத்துவது என்பது நேர விரயம் என்பதைத் தவிர்க்க தாய்ப்பகுப்பில் இருப்பது நல்லதாகப்படுகிறது. துணைப் பகுப்புகள் இருப்பது பராமரிப்புக்கு இலகுவானது என்பதை மறுக்கவில்லை. என்ன செய்யலாம்? --AntanO 04:33, 21 ஏப்ரல் 2017 (UTC)

என்னைப் பொறுத்தவரையில் நான் தொகுக்க விரும்புவது மருத்துவம், உயிரியல், வானியல், கணினி தொடர்பான கட்டுரைகள். கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் அனைத்தும் தேவையான கட்டுரைகள், ஆனால் அது எழுதப்பட்டிருக்கும் விதம் உகந்தது அல்ல. விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு/துப்புரவு எனும் பக்கத்தில் 2012 இல் ஒரு முயற்சி தொடங்கி நிலுவையில் உள்ளது. ஒன்று இப்பக்கம் மேலும் விரிவு படுத்தப்பட வேண்டும் அல்லது கூ.மொ.க துணைப்பகுப்புகள் சேர்க்கப்பட வேண்டும். அப்போதே பயனர்கள் தமக்கு விரும்பிய துறைசார் கட்டுரைகளை உடனடியாகக் கண்டறியலாம். இப்பேச்சில் செலவிடும் நேரத்தைக் கட்டுரைகள் திருத்தத்தில் அல்லது உருவாக்கத்தில் செலவிடவேண்டும் எனக் கருதி இந்த உரையாடலை மேலும் தொடர விரும்பவில்லை. --சி.செந்தி (உரையாடுக) 05:17, 21 ஏப்ரல் 2017 (UTC)

திருத்தி முடிக்கப்படாத கூகிள் கட்டுரைகளுக்கு கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் போன்ற துணைப்பகுப்புக்கள் இருப்பது நிச்சயம் உதவும். எனவே அவை இருப்பது நல்லதே.@Drsrisenthil:@Kanags:@Balurbala:@AntanO:. திருத்தி முடிக்கப்பட்ட கட்டுரைகளாயின், செந்தி கூறியிருப்பதுபோல், பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள், பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என்ற பகுப்பிற்குள் இணைத்துவிடலாம்.
எனக்கு ஒரு கேள்வி உள்ளது. திருத்தி முடிக்கப்பட்ட கட்டுரைகளுக்கு ஏன் பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள், பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் என்ற இரு வேறுபட்ட பகுப்புக்கள் உள்ளன? இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டா? இல்லையெனில் இவற்றை ஒன்றாக்கிவிடலாமா? சில கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்கள் இரு பகுப்புகளுக்குள்ளும் வந்துள்ளது.
இன்னுமொரு கேள்வி உள்ளது. திருத்தி முடிக்கப்பட்ட சில கட்டுரைகளின் பக்கத்தில் (எ.கா. 2008 இந்தியன் பிரீமியர் லீக்), {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை}} வார்ப்புரு இடப்பட்டுள்ளது. வேறு சிலவற்றில் (எ.கா. பேச்சு:நியமவிலகல்), கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலேயே இந்த வார்ப்புரு இடப்பட்டுள்ளது. எங்கே (கட்டுரையிலா அல்லது அதன் பேச்சுப் பக்கத்திலா) இந்த வார்ப்புருவை இடுவது நல்லது என்பது தொடர்பில் ஒரு முடிவெடுத்தால், அதற்கேற்ப அவற்றை மாற்றி ஒரு சீர்மையைப் பேணலாம். கட்டுரையில் போடுவது நல்லது என்பதே எனது கருத்து. மற்றவர்களின் கருத்தையும் அறிய ஆவல். எனது தானியங்கியும் இயங்கத் தொடங்கிவிட்டதால், என்னால் இதில் உதவ முடியும். நன்றி.
--கலை (பேச்சு) 10:52, 22 ஏப்ரல் 2017 (UTC)
வார்ப்புரு பேச்சுப் பக்கத்திலேயே வரவேண்டும். ஆரம்பத்தில் கூகுள் பயனர்களே திருத்தங்களை மேற்கொண்டு திருத்தம் முடிந்ததாக அறிவித்தார்கள், ஆனாலும் அவை முற்றுமாக விக்கி நடைக்கு மாற்றப்படவில்லை. வெறுமனே சிவப்பு இணைப்புகளை நீக்கித் திருத்தியிருந்தார்கள். இவை பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பகுப்பில் உள்ளன. விக்கிப் பயனர்களால் திருத்தியவை பகுப்பு:திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் இல் உள்ளன. பயனர்:Info-farmer கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 12:09, 22 ஏப்ரல் 2017 (UTC)
  • அவ்வாறாயின் விக்கிப் பயனர்களால் திருத்தி முடிக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து, திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பகுப்பை நீக்கி விட்டு, திருத்தப்பட்ட கூகுள் கட்டுரைகள் என்ற பகுப்பை மட்டும் வைத்திருக்கலாம்தானே? அதேவேளை, பேச்சுப் பக்கத்தில் {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை}} வார்ப்புருவும் இடப்பட்டுவிடும்தானே? --கலை (பேச்சு) 15:37, 22 ஏப்ரல் 2017 (UTC)
  • {{திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை}} என்ற வார்ப்புரு இணைக்கப்பட்ட எல்லாக் கட்டுரைகளும் தமிழ் விக்கிப் பயனர்களால் உரைதிருத்தம் செய்யப்பட்டவைதானா? எ.கா. உணரி கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள திருத்தங்கள் கூட செய்யப்படவில்லை. விக்கிப் பயனர்களால் திருத்தப்பட்டிருக்காவிடின், தவறுதலாக இந்த வார்ப்புரு இணைக்கப்பட்டிருக்கக் கூடுமா?
  • திருத்தப்பட்ட கூகிள் கட்டுரைகள் பலவற்றின் பக்கத்தில் {{Google}} வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலவற்றில் நீக்கப்படவில்லை. அவற்றை நீக்கலாம்தானே? அதேவேளை, திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள் பக்கங்களில் {{Google}} வார்ப்புரு இருக்க வேண்டும்தானே. சிலவற்றில் இல்லை. அவற்றில் மீண்டும் அந்த வார்ப்புருவை இடலாமா?
--கலை (பேச்சு) 19:23, 22 ஏப்ரல் 2017 (UTC)
கலை, நீங்கள் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறீர்கள். சில கட்டுரைகள் கூகுள் பயனர்களால் திருத்தட்டுள்ளன. அவற்றுக்கு தவறாக விக்கிப் பயனர்களால் திருத்தப்பட்டதாக வார்ப்புரு தானியங்கி ஒன்றினால் சேர்க்கப்பட்டுள்ளது. உ+ம்: நக்சலைட். இவ்வாறானவை இனங்காணப்பட்டு திருத்தப்பட வேண்டும். திருத்திய பின்னர் பழைய பகுப்பை நீக்கி விடலாம். அப்பகுப்பை எக்கட்டுரையும் இல்லாத "0" நிலைக்குக் கொண்டுவருவதே விக்கிப் பயனர்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 00:34, 23 ஏப்ரல் 2017 (UTC)

திருத்தி முடிக்கப்படாத கூகிள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகளுக்கு மீண்டும் கூகிள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள் பகுப்பை இணைத்திருக்கிறேன். நன்றி.--கலை (பேச்சு) 16:53, 27 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டங்கள் ஒன்றுகூடல்களை நாடாத்துவது தொடர்பிலான உரையாடல்களினை விரிவாக உரையாட முன்பு குறிப்பிட்ட காலப்பகுதியில் Google Form ஒன்றினூடாக கருத்துக்கணிப்பு ஒன்றை மேற்கொள்ள விரும்புகின்றேன். இதன் மூலம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்களை அலசிப்பார்க்க முடிவதுடன் ஜனநாயக ரீதியான இணக்க முடிவையும் பெறலாம். Google Form ஒன்று ஒவ்வொரு விடைகளும் எத்தனை பேரால் ஆதரிக்கப்பட்டுள்ளது எனும் விபரங்களை பை வரைபு, போன்ற பலவிதமான வழிகளில் மாற்றித்தருவது அதன் சிறப்பாகும். எங்கு இடம்பெற வேண்டும். என்ன செய்யலாம் என்பவற்றை கேள்விகளாக முன்வைத்து பல்தெரிவுக் கேள்விகளாக சிலவற்றை அமைக்கலாம். விரும்பின் நீங்கள் எதிர்பார்க்கவுள்ள கேள்விகளையும் கீழே குறிப்பிடலாம். இவ்வாறான கருத்துக்கணிப்பை குறிப்பிட்ட காலத்தில் நடாத்தி, பின் அக்கருத்துக்கணிப்பில் ஆதரவு பெற்ற விடயங்களை பின்னர் விரிவாக அலசி உரையாடலாம். அவ்வாறு ஒரு Google Form ஒன்றை உருவாக்க உங்கள் ஆதரவுகளினை எதிர்பார்க்கின்றேன். மாற்றுக்கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதரவு
  1. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:20, 25 ஏப்ரல் 2017 (UTC)
  2. --தமிழ்ப்பரிதி மாரி--Thamizhpparithi Maari (பேச்சு) 10:22, 26 ஏப்ரல் 2017 (UTC)
  3. --kurinjinet
  4. --சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 15:14, 26 ஏப்ரல் 2017 (UTC)
  5. --நந்தகுமார் (பேச்சு) 15:36, 26 ஏப்ரல் 2017 (UTC)
  6. --பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதைஉலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:47, 26 ஏப்ரல் 2017 (UTC)
  7. --சிவகோசரன் (பேச்சு) 16:22, 26 ஏப்ரல் 2017 (UTC)
  8. --சி.செந்தி (உரையாடுக) 18:00, 26 ஏப்ரல் 2017 (UTC)
  9. --கலை (பேச்சு) 18:56, 26 ஏப்ரல் 2017 (UTC)
  10. --Arulghsr (பேச்சு) 03:15, 27 ஏப்ரல் 2017 (UTC)
  11. --Booradleyp1 (பேச்சு) 06:10, 27 ஏப்ரல் 2017 (UTC)
  12. --5anan27 (பேச்சு) 07:47, 27 ஏப்ரல் 2017 (UTC)
  13. --மணியன் (பேச்சு) 03:54, 29 ஏப்ரல் 2017 (UTC)
நடுநிலை
எதிர்ப்பு
கருத்துகள்

இக்கொண்டாட்டத்தையும் உள்ளடக்கிய/உள்ளடக்காத நம் விக்கிப்பீடியாவின் முன்னேற்றத்திற்கான பொதுவான பிற கேள்விகளையும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முன் வைக்கலாமே? நான் அறிந்த வரையில் முதன்முறையாக இவ்விதம் பயனர்களை நோக்கி கேள்வி எழுப்பப்படுவதால் இத்தகு படிவம் நன்கு யோசித்து பெரிய அளவில் செய்தால் பலன்கள் இருக்கும் என நம்புகிறேன்.--நந்தகுமார் (பேச்சு) 15:36, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஆம், நந்தகுமார், தாங்கள் விரும்பும் கேள்விகளை கீழே இடுங்கள். முதலில் நமக்குக் கிடைக்கும் ஆதார்வைப் பார்ப்போம். பெரும்பான்மையாயின், இடம்பெறும் கேள்விகளை முடிந்தளவு சேகரிப்போம். நாமும் இடுவோம். பின்னர், பாரிய படிவம் உருவாக்கலாம். ஆனால், படிவம் பெரிதாகினால் சலிப்பு ஏற்படும் என்பதையும் அவதானிக்க வேண்டும். கொண்டாட்டத்திற்கான கேள்விகளை முன்வைத்து இம்முயற்சி வெற்றியளிப்பின் பின்னர் விக்கிப்பீடியாவின் முன்னேற்றத்திற்கான பொதுவான பிற கேள்விகளையும் புதியதோர் படிவத்தில் இடலாம். அருள்கூர்ந்து உங்கள் கேள்விகளை கீழே இடுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:50, 26 ஏப்ரல் 2017 (UTC)   விருப்பம் --மணியன் (பேச்சு) 04:01, 29 ஏப்ரல் 2017 (UTC)
@Drsrisenthil: ஆம், தொடர்பங்களிப்பாளர் போட்டியும் இதன் ஒரு பகுதியே. புதுப்பயனர் போட்டி வரும் வருடமே நடாத்துவதற்கு இங்கு உரையாடப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே நேரத்தில் அமையாது என்பதால் எவ்வித சிக்கல்களும் இல்லை. அவாறு சிக்கல் உருவாகும் என்று தான் இவ்வருடத்தில் தொடர்பங்களிப்பாளர் போட்டி நடாத்தப்படுகிறது. அத்துடன் படிவத்தில் மேலுள்ளது போல் வேறு எவ்வாறு கேள்விகள் இடம்பெறலாம்?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:17, 27 ஏப்ரல் 2017 (UTC)

உரையாடல் மூலம் கருத்தொற்றுமை நிறுவக்கூடிய விசயங்களுக்குக் கருத்துக் கணிப்பு தேவை இல்லை. எடுத்துக்காட்டுக்கு, கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பதற்கு ஏற்கனவே தெளிவான ஆதரவு உள்ளது. கருத்துக்கணிப்பு வடிவமைத்தல் என்பதே தனித்துறை. இக்கணிப்பில் உள்ள பல கேள்விகள் தேவையற்றவை. தகுந்த உரையாடலின் மூலம் முடிவெடுக்க முடியும்.--இரவி (பேச்சு) 02:56, 30 ஏப்ரல் 2017 (UTC)

பதில் அளித்தமைக்கு நன்றி இரவி, //தகுந்த உரையாடலின் மூலம் முடிவெடுக்க முடியும்.// ஓரிரு வருடங்களுக்கு முன் இருந்தவாறன்றி தற்போது தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் களையிழந்து போயினர். உரையாடல்களில் சொற்ப அளவினோரே பங்குபற்றுவதுடன் கூறப்படும் கருத்துகளுக்கு பதில்/மாற்றுக்கருத்துக்கூற பலரும் தயங்குகின்றனர். அல்லது பல நாட்களின் பின்னரேயே பதில் இடுகின்றனர். முன்னர் இவ்வாறான நிலை இன்மையை அவதானித்துள்ளேன். சீரான உரையாடல் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களும் வெகுவாகக் குறைந்துள்ளதை அவதானித்த பின்னரேயே தட்டச்சு செய்யும் நேரத்தைக்குறைக்கும் வகையில் கருத்துக்கணிப்பொன்றை நடாத்த விரும்பினேன். பரவாயில்லை, தங்கள் கருத்தும் ஏற்புடையதாகவே தோன்றுகின்றது, ஆனால் பலர் மேலே அளித்த ஆதரவைப் பார்த்தீர்களா? //எடுத்துக்காட்டுக்கு, கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்துவது என்பதற்கு ஏற்கனவே தெளிவான ஆதரவு உள்ளது.// அருள்கூர்ந்து நிறுவுக? அப்படியாயின் ஆதரவு உள்ளமையினை கருத்துக்கணிப்பு மூலமும் நிறுவிக்கொள்ளலாம் தானே. இலங்கையில் நடாத்துவதாயின் அதற்கான ஆள்பலம் இருப்பதை யான் அறியேன். என்னால் ஒரிரு பாடசாலைகளில் பயிற்சிப்பட்டறைகளை மட்டும் ஒருங்கிணைக்க முடியும். ஆனால், என்னால் ஒன்றுகூடலுக்கான விடயங்களினை ஒருங்கிணைக்க முடியாது. காரணம், பள்ளி மாணவன். அந்தவகையில் உரையாடல் மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கையினைத் தொடரவிரும்ம்பினும் நன்றே. ஆனால், நாம் ஒரு சிலர் மட்டும் பங்குகொண்டு முடிவுகள் எட்டப்படுமா? அந்தக்குறையினைக் கருத்துக்கணிப்பு போக்கும். //இக்கணிப்பில் உள்ள பல கேள்விகள் தேவையற்றவை.// அருள்கூர்ந்து சுட்டிக்காட்ட அல்லது strike செய்ய வேன்டுகின்றேன். கொசுவுச்சட்டை, அடையாளச்சின்னம் அவசியமானவையா என்பதை அன்ரன் சமூக ஒப்புதல் பெறக் கூறியதன் காரணமாகவே அது பற்றிய கேள்வியை கீழே இணைத்தேன். ஏற்கனெவே மேல் கூறியது போல, கருத்துக்கணிப்பின் பின்னர் உரையாடல் இடம்பெறும் எனவும் கூறியிருந்தேன். //கருத்துக்கணிப்பு வடிவமைத்தல் என்பதே தனித்துறை.// இது 100% உண்மை. உங்கள் பதில்களை அருள்கூர்ந்து இட வேண்டுகின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:02, 30 ஏப்ரல் 2017 (UTC)
இடம்பெறக்கூடிய கேள்விகள்
  • தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் நடைபெறுவதற்கு ஏற்ற நாடு? (விடை:- இந்தியா/இலங்கை/வேறு)
  • தங்கள் விடைக்கு ஏற்ற நகரம் யாது? (விடை:- சென்னை/கொழும்பு/யாழ்பாணம்/வேறு)
  • அந்நகரில் ஒன்றுக்கூடலுக்காகக் கலந்துகொள்வோர் சுற்றுலா செல்தல் அவசியமா? (விடை:- ஆம்/விருப்பத்தேர்வு/இல்லை)
  • பொதுமக்களிடம் தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாட்டை ஊக்குவிக்க பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு ஏதாவது வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தலாமா ?
  • தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு புதுப்பயனர்களை எவ்வாறு ஈர்க்கலாம்? (விடை: கட்டுரைப் போட்டி/வேறு)
  • ஒன்றுகூடலில் Edit-a-thon ஒன்றில் ஈடுபடலாமா? (விடை: ஆம்/இல்லை)
  • ஆமெனில் எதனை Edit-a-thonஇல் முன்னெடுக்கலாம்? (பகுப்பு சேர்த்தல்/சான்றிணைத்தல்/கட்டுரை உருவாக்கம்/விக்கியாக்கம்)
  • புதுப்பயனர் போட்டி எவ்வாறு அமையலாம்? (விடை: கட்டுரை விரிவாக்கம்/கட்டுரை உருவாக்கம்)
  • புதுப்பயனர் போட்டிகாலம் எவ்வாறு அமையலாம்? (விடை: குறுகிய காலம்/நீண்ட காலம்/ __மாதங்கள்)
  • புதுப்பயனர் போட்டிப்பரிசானது எந்தக்காலப்பகுதி அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்? (விடை: 1 வாரம், 2 வாரங்கள், 1 மாதம்)
  • தமிழ் விக்கிப்பீடியாவின் 15 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு அடையாளச் சின்னம், கொசுவு சட்டை,பயனர்களுக்கான சான்றிதழ்கள் என்பவை அவசியமானவையா? (விடை: ஆம்/இல்லை)
  • புதுப்பயனர் போட்டிக்கு இணையப் பரப்புரை தவிர பள்ளிகள். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பிதழ் சுவரொட்டி மூலம் போட்டி பற்றி அறிவிக்கலாமா? (விடை: ஆம்/இல்லை)
  • மேலும் விசேடமாக ஏதேனும் தெரிவிக்க விரும்பின் கீழே கூறுக. ஆங்கிலத்திலும் கூறலாம்.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:20, 25 ஏப்ரல் 2017 (UTC)

விசமத் தொகுப்பு தொகு

138.68.93.161 எனும் ஐ.பி முகவரியில் இருந்து அடையாளம் தெரியாத நபர் தானியங்கி மூலம் தொடர்ச்சியாகப் பதிவுகளை (ஒவ்வொரு ஆண்டுக்குமான நாட்காட்டி) மேற்கொண்டிருந்தார். அந்த ஐ.பி முகவரி தடை செய்யப்பட்ட பின்பும் 138.68.108.44 எனும் முகவரியில் இருந்து பதிவுகள் வந்தன. இரண்டு ஐ.பி முகவரியும் தடை செய்யப்பட்டது. இவ்வாறான பதிவுகளை தன்னிச்சையாக அடையாளம் கண்டு தடை செய்யும் வழி அல்லது நிருவாகிகளுக்கு அல்லது அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும் வழி இருக்கின்றதா? இதனைக் கவனிக்க யாரும் இருந்திராத சந்தர்ப்பத்தில் ஒரு லட்சமாவது கட்டுரையை இந்தப் பதிவுகள் அடைந்திருக்கும்.--சி.செந்தி (உரையாடுக) 22:59, 25 ஏப்ரல் 2017 (UTC)

உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றிகள் User:drsrisenthil. //Mass deletion of pages // இதனை எவ்வாறு எக்கருவி மூலம் நீக்கினீர்கள் என அறிய ஆவல்.--Kanags \உரையாடுக 08:33, 26 ஏப்ரல் 2017 (UTC)
சிறப்பு:Nuke --AntanO 09:10, 26 ஏப்ரல் 2017 (UTC)
எரித நோக்கமுடையப்பதிவுகளை அகற்றியமைக்கு மகிழ்ச்சி.--Thamizhpparithi Maari (பேச்சு) 09:14, 26 ஏப்ரல் 2017 (UTC)
நல்ல வேலை செய்தீர்கள்! ஸ்ரீசெந்தில், நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:05, 26 ஏப்ரல் 2017 (UTC)

தங்கள் அரிய பணிக்குப் பாராட்டுகள்உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 15:50, 26 ஏப்ரல் 2017 (UTC)

நன்றி. நான் கேட்க விரும்பியது யாதெனில் ///இவ்வாறான பதிவுகளை தன்னிச்சையாக அடையாளம் கண்டு தடை செய்யும் வழி அல்லது நிருவாகிகளுக்கு அல்லது அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கும் வழி இருக்கின்றதா?/// ஒரு நிருவாகிகளும் இல்லாத படசத்தில் இவ்வாறு நடக்கையில் அதனை யாரேனும் நிருவாகிகளுக்கு அறிவிக்க ஏதேனும் வழியுண்டா?
Kanags, குறிப்பிட்ட ஐ.பி முகவரியில் சொடுக்கினால் பயனர் பங்களிப்புகள் தலைப்பின் கீழே இவ்வாறு காட்சியளிக்கும்:
xxx.xxx.xxx.xxx இற்காக (உரையாடல் | தடு | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | பயனரின் நீக்கப்பட்ட பங்களிப்புக்கள் | mass delete | முறைகேடுகள் பதிவேடு) 
-இங்குள்ள mass delete -ஐச் சொடுக்கி நீக்கினேன்.--சி.செந்தி (உரையாடுக) 16:27, 26 ஏப்ரல் 2017 (UTC)
மீண்டும் இந்த நபர் இன்று மூன்று ஐபி களில் தானியங்கி மூலம் தொடர்ச்சியாக மேற்குறிப்பிட்ட ஏராளமான பக்கங்களை உருவாக்கினார். அவற்றை நீக்கி விட்டேன். இவர்களை Globally தடுக்க முடியுமா? அண்மைய மாற்றங்களில் ஆகக்கூடியது 750 தொகுப்புகளையே பார்க்கமுடியும். தானியங்கி மூலம் ஆயிரக்கணக்கில் வெவ்வேறு ஐபி களுடன் இவ்வாறான விசமத் தொகுப்புகளை செய்யும் போது கண்காணிப்பது கடினமாகிவிடும். @Shanmugamp7 and Ravidreams:--Kanags \உரையாடுக 22:27, 29 ஏப்ரல் 2017 (UTC)
இவை Open Proxy's. இவற்றை உலகளவில் தடை செய்துள்ளேன். ஒரே IP தொகுதிகளை இவர்கள் பயன்படுத்தவில்லையாதலால் Range block செய்ய இயலாது, முறைகேட்டு வடிகட்டிகளை பயன்படுத்த முயற்சிக்கலாம்.---சண்முகம்ப7 (பேச்சு) 12:08, 30 ஏப்ரல் 2017 (UTC)
மீண்டும் மீண்டும் விசமத்தொகுப்புகள் நிகழ்கின்றன. தற்போது குறிப்பிட்ட நபர் IP V6 முகவரியில் (2600:387:A:19:0:0:0:67) வருகின்றார். கவனிக்க @Shanmugamp7, Ravidreams, and Kanags:. --சி.செந்தி (உரையாடுக) 01:03, 1 மே 2017 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் - தானியங்கி தொகு

விக்கித்தானுலவி கொண்டு மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகளில் பராமரிப்பு வசதிகளுக்காக {{சான்றில்லை}} வார்ப்புருவை இட்டு வருகின்றேன். இதனைப் பைத்தான் அல்லது பிறவற்றைக்கொண்டும் தானியங்களால் செய்யமுடியுமா? என அறிய ஆவல். இதுவரையில் 800 மேற்பட்ட கட்டுரைகளில் வார்ப்புரு இட்டுவிட்டேன். அன்ரன், கனக்ஸ் ஆகியோரும் அருள்கூர்ந்து தமது தானியங்கிக் கணக்குகள் மூலம் இப்பணியை என்னோடு இணைந்து மேற்கொள்ள வேண்டுகின்றேன். வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படினும் கேட்கலாம். அத்துடன் இப்பணியினை மிகவும் வேகமாக வேறு தானியங்கிகள் கொண்டு செய்யலாமா? விக்கித்தானுலவியில் நான் ஒரு நிமிடத்திற்கு சராசரி 25 தொகுப்புகள் செய்கிறேன். இதனை விட வேகமாக தானியங்கு மூலம் செய்யக்கூடியவர்கள் உதவ முன்வரவேண்டும். @Neechalkaran, Aswn, and Info-farmer:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:46, 29 ஏப்ரல் 2017 (UTC)

  • இப்பதிவுகள் பதிவாகும் வழங்கிக்கு, பணிப்பளு (the server's workload) ஏற்படாமல் இருக்கு, ஒரு நிமிடத்திற்கு 10 தொகுப்புகள் செய்தலே, என்றும் சிறப்பு. அது என்றும் சிறப்பு ஆகும். நீச்சலாரும், அசுவினும் இதனை மேகக்கணிமையில் இருந்து இயக்க முடியும் என்றே எண்ணுகிறேன். எனக்கு விக்கித் தானுலாவியின், இத்திட்டத்தை xml (save as)கோப்பாகத் தந்தால், அதனை பைத்தானில் செயற்பட வைக்க முயல்வேன். எனது PAWS கணக்கானது வழுவுடன் இருப்பதால், வேறுவழிமுறைகளை ஆய்ந்து வருகிறேன். சான்றில்லை என்பதை எப்படி அறிகிறீர்கள்? ஒரு திட்டபக்கம் உருவாக்குங்கள். அதில் சான்று இடுதல், சான்றுப் பிழை நீக்குதல் குறித்தும் ஆராய்ந்து, செயற்திட்டமொன்றை உருவாக்கலாம். இது பிற மொழிகளுக்கும் பயனாகும் ஒரு சிறப்பு முன்மொழிவு. வாழ்த்துகள் ShriheeranBOT! வணக்கம்.--உழவன் (உரை) 06:44, 29 ஏப்ரல் 2017 (UTC)
விக்கித்தானுலவினை தானியக்கமாக பயனர் மேற்பார்வை இல்லாமல் 1 விநாடி இடைவேளியில் இயற்றலாம். இதைவிட எளிதான வழி தற்போதைக்கு இல்லை. இதை இயற்றும் போது தேவையான கட்டுரைகளுக்கு {{Orphan}} வார்ப்புருவினையும் இடுங்கள். விக்கித்தானுலவியில் இதற்கும் வழி உண்டு. நன்றி --அஸ்வின் (பேச்சு) 07:43, 29 ஏப்ரல் 2017 (UTC)
@Aswn and Info-farmer:விரைந்து பதிலளித்தமைக்கு மிக்க நன்றி! விக்கித்தானுலவியை நான் 0 வினாடி இடைவெளியில் இயக்குகிறேன். தற்போது வரை 1225 கட்டுரைக்கு வார்ப்புரு இட்டாயிற்று.
  • //சான்றில்லை என்பதை எப்படி அறிகிறீர்கள்?// More எனும் பகுதியில் Prepend என்பதை தெரிவு செய்து {{சான்றில்லை}} என பெட்டியில் இடுங்கள். பின்னர் Skip எனும் பகுதியில் Contains என்பதை தெரிவுசெய்து அருகில் உள்ள பெட்டியில் <ref என்பதை இடுக. அதாவது குறித்த பக்கம் <ref எனபதைக் கொண்டிருந்தால் மேற்கோள் உள்ளதாக அர்த்தம். ஆகவே அவற்றை விக்கித்தானுலவி தவிர்த்துவிடும். மாற்றங்கள் செய்யாது. இவ்வாறே சான்றில்லை என்பதை அறிகின்றேன். நான் மட்டும் இதில் ஈடுபட்டால் இலகுவில் நோக்கத்தை அடைய இயலாது. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படல் அவசியம். ஆனால் ஏற்கவனே வார்ப்புரு உள்ள கட்டுரையில் மீண்டும் வார்ப்புரு இடப்படக்கூடும். அவ்வாறு 25 மேற்பட்ட கட்டுரைகள் தற்போது உள்ளன. அது பரவாயில்லை. உங்கள் உதவி தேவை. அத்தோடு வார்ப்புருவைக் பக்கத்தின் கீழே இடலாமா? அவ்வாறாயின் இணைய விக்கித்தானுலவி ஒன்றின் மூலம் இடமுடியும். ஆம் எனில் இன்றே வேலையை ஆரம்பிக்கின்றேன்.
  • {{Ping|Info-farmer}}//எனக்கு விக்கித் தானுலாவியின், இத்திட்டத்தை xml (save as)கோப்பாகத் தந்தால், அதனை பைத்தானில் செயற்பட வைக்க முயல்வேன்.// xml கோப்பாக சேமித்தாயிற்று எவ்வாறு உங்களுக்குத் தருவது. மின்னஞ்சல் மூலமாகவா? அவ்வாறாயின் மின்னஞ்சலைக் குறிப்பிடுங்கள்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:19, 29 ஏப்ரல் 2017 (UTC)
கவனிக்க, {{Ping|Neechalkaran|Aswn|Info-farmer|AntanO|Kanags}}--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:38, 29 ஏப்ரல் 2017 (UTC)
சிறீகீரன், சில கட்டுரைகளில் உங்கள் தானியங்கி இரண்டு தடவைகள் வார்ப்புருவை இட்டுள்ளது. கவனித்து அவற்றை நீக்குங்கள்.--Kanags \உரையாடுக 09:20, 29 ஏப்ரல் 2017 (UTC)
Kanags, இரு முறை இடப்பட்டுள்ள கட்டுரைகள் எவை என அறிவது கடினமாக உள்ளது. அறிந்து கூற முடியுமா? ஆனால் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள் எனும் ஏதோ ஒரு பகுப்பு கட்டுரையில் இருக்கும் தானே. அதுவே போதும். ஆனால் சொற்ப அளவிலேயே இருக்கின்றன. அத்துடன் இப்பணிக்கு உங்கள் உதவியும் தேவை கனக்ஸ். விக்கிப்பீடியாவின் எதிர்காலப் பராமரிப்புகளுக்கு உதவலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:46, 29 ஏப்ரல் 2017 (UTC)
சிலவற்றை மாற்றியிருக்கிறேன். வேறும் கட்டுரைகள் இருக்கலாம். குறிப்பிட்ட பகுப்பு இப்போது 7,000 ஐத் தாண்டுகிறது. இவற்றைப் பராமரிப்பது இலகுவானதாக இருக்கும் என நினைக்கிறீர்களா? அனைத்தையும் ஒரே பகுப்புக்குள் வைக்காமல், துறை வாரியாக உப பகுப்புகளை உருவாக்குவது பராமரிப்பை இலகுவாக்கலாம். கோவில் கட்டுரைகளில் இவ்வாறே உப பகுப்பு உருவாக்கப்பட்டது. எனவே, இப்பணியை இத்துடன் முடித்துக் கொண்டு துணைப் பகுப்புகள் உருவாக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 10:08, 29 ஏப்ரல் 2017 (UTC)
நிறுத்திவிட்டேன். துணைப் பகுப்புகள் உருவாக்கவிளைவது பற்றி அனுபவமில்லை. நேரம் கிடைக்கும் போது பார்ப்போம், பிற தானியங்களும் உதவுக.@Neechalkaran, Aswn, Info-farmer, AntanO, and Kanags:--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:55, 29 ஏப்ரல் 2017 (UTC)
கோயில் கட்டுரைகளுக்கு உருவாக்கியது போன்று புதிய வார்ப்புருக்களை உருவாக்கி, தானியங்கி மூலம் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 11:02, 29 ஏப்ரல் 2017 (UTC)

மேற்கோள் ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கும் {{சான்றில்லை}} வார்ப்புரு இடப்படுகிறதே? காரணம் என்ன? நான் இரண்டு கட்டுரைகளை மட்டுமே திறந்து பார்த்தேன். இப்படி இன்னும் எத்தனை கட்டுரைகளுக்கு இவ்வாறு தவறாக வார்ப்புரு இணைக்கப்பட்டதோ தெரியவில்லை. ஸ்ரீஹீரன் கவனியுங்கள். --கலை

ஸ்ரீஹீரன், கவனியுங்கள். பல கட்டுரைகளில் மீண்டும் இரண்டு, மூன்று தடவைகள் வார்ப்புரு இணைக்கப்படுகிறது. பாருங்கள்: [1]. அருள் கூர்ந்து தானியங்கியை நிறுத்தி விடுங்கள். மேலும் சேர்க்காதீர்கள். நான் மேலே கூறியது போன்று புதிய வார்ப்புருக்களை உருவாக்கிய பின்னர் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 12:33, 29 ஏப்ரல் 2017 (UTC)
  • அத்துடன் ஏற்கனவே மேற்கோள் இடப்பட்ட கட்டுரைகளின் பட்டியலை இந்த வார்ப்புரு இடப்பட்ட பட்டியலில் இருந்து பிரித்தெடுத்து, அவற்றிலிருந்து இந்த வார்ப்புருவை நீக்க வேண்டும் என நினைக்கிறேன்.
  • //More எனும் பகுதியில் Prepend என்பதை தெரிவு செய்து {{சான்றில்லை}} என பெட்டியில் இடுங்கள். பின்னர் Skip எனும் பகுதியில் Contains என்பதை தெரிவுசெய்து அருகில் உள்ள பெட்டியில் <ref என்பதை இடுக. அதாவது குறித்த பக்கம் <ref எனபதைக் கொண்டிருந்தால் மேற்கோள் உள்ளதாக அர்த்தம். ஆகவே அவற்றை விக்கித்தானுலவி தவிர்த்துவிடும். மாற்றங்கள் செய்யாது. இவ்வாறே சான்றில்லை என்பதை அறிகின்றேன்.// <ref உள்ள கட்டுரைகளும் தவிர்க்கப்படாமல் இணைந்துள்ளதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் நான் திறந்து பார்த்தவற்றில் இரு கட்டுரைகள் அவ்வாறு மேற்கோள் இருந்தும் வார்ப்புரு இணைக்கப்பட்டிருந்தது.
  • ஸ்ரீஹீரன் நீங்கள் புதிதாக வார்ப்புரு இட்ட கட்டுரைகளின் பட்டியலைப் பெற முடியுமா?
--கலை

கலை, Kanags தானியங்கியை நிறுத்தி பல மணி நேரம் ஆகிவிட்டது. பின்னர் செய்யத்தொடங்குமுன் அறிவிப்பேன். ஆங்கில விக்கியில் இது போல் உள்ளதை அவதானித்து, தமிழ் விக்கியிலும் செய்யலாம் என எண்ணுகின்றேன், வார்ப்புரு:சான்றில்லை-வாழும் நபர் என்பதை உருவாக்கியுள்ளேன், வாழும் நபர்கள் பகுப்பில் உள்ள முதல் 400 கட்டுரைகளிலும் 85 கட்டுரைகளுக்கு இவ்வார்ப்புருவை இணைத்துள்ளேன். இதைத்தான் கனக்ஸ் மேலே குறிப்பிட்டார் என எண்ணுகின்றேன்.‎ <nowiki>பகுப்பு:மேற்கோள்_எதுவுமே_தரப்படாத_வாழும்_நபர்கள்_பற்றிய_பக்கங்கள்</nowiki> எனும் பகுப்பில் அந்த 85 கட்டுரைகளும் உள்ளன. இதுபோலவா அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். என்னால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தற்போது இயலாது. வேறு தானியங்கிகள் விரும்பின் கனக்ஸின் கோரிக்கைக்கு உதவலாம். கவனிக்க, @Neechalkaran, Aswn, Info-farmer, AntanO, and Kanags: --ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:48, 29 ஏப்ரல் 2017 (UTC)

//<ref உள்ள கட்டுரைகளும் தவிர்க்கப்படாமல் இணைந்துள்ளதற்கான காரணம் தெரியவில்லை// "<ref" என்று தேடும் போது, "என்றழைக்கப்பட்டது. <ref" இங்கு காட்டப்பட்டுள்ளது போன்று உள்ளவை தவிர்க்கப்படுகின்றன. ஆனால் "என்றழைக்கப்பட்டது.<ref" - எனும் வரியில் உள்ளவை தவிர்க்கப்படவில்லை எனத்தோன்றுகின்றது. (இடைவெளி இல்லாததால் முதல் உள்ள வசனத்தின் முடியும் சொல்லும் முற்றுப்புள்ளியும் மற்றும் "<ref" சேர்ந்து ஒரே சொல்லாகக் கருதப்படுகின்றது போல உள்ளது.) நான் நினைப்பது சரியா எனத் தெரியவில்லை, ஆனால் தேடலில் ஏற்பட்ட குறைபாடே காரணம். இதை நிவர்த்தி செய்ய "regex" பயன்படுத்தித் தேடலாம். அல்லது "மேற்கோள்கள்" "உசாத்துணைகள்" எனும் வாசகத்தைப் பயன்படுத்தியும் தேடலாம் அல்லவா?--சி.செந்தி (உரையாடுக) 17:25, 29 ஏப்ரல் 2017 (UTC)
ஸ்ரீஹீரன் உங்கள் தானியங்கியைத் தற்காலிகமாகத் தடை செய்யலாமா என யோசிக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் தானியங்கியை இனிமேல் இயக்காதீர்கள். தேவையற்ற தொகுப்புகளை செய்கிறீர்கள். சோதித்துப் பார்க்க வேண்டுமானால் உங்கள் பயனர் கணக்கில் ஆகக்கூடியது 10 தொகுப்புகளை செய்து ஒப்புதல் பெற்று தானியங்கியை இயக்கலாம்.--Kanags \உரையாடுக 22:42, 29 ஏப்ரல் 2017 (UTC)
தானியங்கியை அப்போதே நிறுத்திவிட்டேன் தானே. தானியங்கியைத் தடை செய்யாதீர்கள். [[ஸ்ரீசெந்தில், தாங்கள் குறிப்பிடுவதும் சரியானதே. அதனாலேயே மேற்கோள் இடப்பட்ட கட்டுரைக்கும் வார்ப்புரு இடப்பட்டது. பராமரிப்புக்காக செய்த வேலை சிக்கலில் மாட்டியதற்கு வருந்துகின்றேன். தானியங்கியைப் தொடர்பங்களிப்பாளர் போட்டிக்காலத்தில் பயனுள்ள ரீதியில் பயனபடுத்த விரும்புகின்றேன். இன்று ஒரு சில சோதனைத் தொகுப்புகள் வெற்றியளிப்பின் நாளை இப்பணியை நான் செய்ய எதிர்பார்க்கின்றேன். நான் தானியங்கியைநிறுத்திப் பல மணி நேரம் ஆகிவிட்டது. நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:21, 30 ஏப்ரல் 2017 (UTC)
மீண்டும் தானியங்கியை ஆரம்பிக்கும் போது, அறிவிப்பேன். அத்துடன், மேற்கோள்கள் இரு தடவை இடப்பட்டவற்றை என் பயனர்கணக்கு மூலம் சீர் செய்ய எதிர்பார்க்கின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 01:44, 30 ஏப்ரல் 2017 (UTC)
@Shriheeran:, நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தானியங்கித் தொகுப்புகள் பற்றி இங்கு அறிவித்து ஓரிரு நாள் பொறுத்து பயனர் கருத்துக்கு ஏற்ப தொடர வேண்டுகிறேன். ஆயிரக்கணக்கான பராமரிப்பு வார்ப்புருகளைத் தானியங்கியாக இடுவது இலகு. ஆனால், அவற்றைச் சரி செய்ய ஆள் வளமும் கவனமும் இன்றிப் போனால் பல ஆண்டுகளுக்கு இவ்வார்ப்புருக்கள் தேங்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, துறை சார்ந்து மேற்கோள் சேர்ப்பது முதலிய இன்ன பிற பராமரிப்புப் பணிகளுக்கான திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் மட்டும் தானியக்கப் பணிகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 02:45, 30 ஏப்ரல் 2017 (UTC)
அப்படியே செய்கின்றேன், சான்றுள்ள கட்டுரைகளுக்குத் தவறாக தானியங்கி இணைத்த வார்ப்புருக்களை நீக்கிவிட்டேன். இனிவரும் காலங்களில் செய்யக்கூடிய பாரிய வேலைகளை அறிவித்துவிட்டுச் செய்வேன். சிறியவற்றை அறிவிக்கவேண்டிய அவசியம் இல்லை என எண்ணுகின்ரேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 04:33, 30 ஏப்ரல் 2017 (UTC)
மேற்கோள் இல்லாத பழைய கட்டுரைகளை எல்லாம் வார்ப்புரு இடுதல் துப்புரவுப் பணியைத் தொய்வாக்கும். மாற்றாக பகுப்பில்லாத புதிய கட்டுரைகளை 24மணி நேர இடைவெளியில் பகுப்பில்லாதவை என்ற வார்ப்புருவைத் தானியங்கிமேற்பார்வையில் இட்டுவருகிறோம், அதுபோல புதிய கட்டுரைகளுக்கு மட்டும் மேற்கோள் இல்லாவிட்டால் வார்ப்புரு இடலாம். இதனால் எழுதியவரே மேம்படுத்த வாய்ப்பாக இருக்கும், துப்புரவு செய்யவும் ஏதுவாக இருக்கும். கீழே எனது பரிந்துரை ஏற்புடையதென்றால் எனது தானியங்கியை இத்தொடர்கண்காணிப்பில் அமர்த்துகிறேன்.
  • ஒரு புதுக் கட்டுரை தொகுக்கப்பட்டு 24 மணி நேரம்கடந்தும் மேற்கோள் இல்லாமலும், வெளியிணைப்பு இல்லாமலும், ஆங்கிலக் கட்டுரை இணைப்பில்லாமலும் இருந்தால் மேற்கோளில்லாப் புதுக்கட்டுரை என்ற வார்ப்புருவைச் சேர்க்கவைக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 05:54, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் --சி.செந்தி (உரையாடுக) 06:07, 1 மே 2017 (UTC)[பதிலளி]
  விருப்பம் --கலை
  விருப்பம்-- எனினும் ஏற்கனவே யாரும் அவ்வார்ப்புருக்களை முற்கூட்டி இட்டிருந்தால் தானியங்கி வார்ப்புரு இடாமல் சென்று விடுமா? அத்துடன் அறுபட்ட கோப்புக்களை நீக்கும் போது நான் எழுதிய ஒரு கட்டுரையின் மொத்த உள்ளடக்கத்தையும் தானியங்கி நீக்கிவிட்டது. உள்ளட்டக்கம் குறைவான கட்டுரைகளுக்கு இவ்வாறான பிரச்சினைகள் எழாதா--ஸ்ரீஹீரன் (பேச்சு) 06:40, 1 மே 2017 (UTC)[பதிலளி]
ஆண்டுக்கும் மேலாக இது இயங்கிவருகிறது, நீங்கள் குறிப்பிட்ட அறுபட்ட இணைப்பு அண்மையில் தான் நடந்தது, கடந்த வாரம் அந்த வழு சீராகிவிட்டது. எத்தகைய சிக்கல் இருந்தாலும் அதனை எனது கவனத்திற்குக் கொண்டுவந்தால் இதைப்பகுத்துணர வைக்கமுடியும்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:30, 1 மே 2017 (UTC)[பதிலளி]
மகிழ்ச்சி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:39, 1 மே 2017 (UTC)[பதிலளி]

WikiProject Turkey 2017 தொகு

Dear friends,

In an unfortunate turn of events, Wikipedia is currently blocked in Turkey, as can be seen from en: 2017 block of Wikipedia in Turkey

In order to express solidarity with the Turkish Wikipedia editors and readers, it is proposed that Indian Wikipedians write articles related to Turkey in their respective languages. Our message is clear — we are not motivated by any politics; we just want the Wikipedia to be unblocked in Turkey.

Participating members can create new articles on Turkish language, culture, political structure, religion, sports, etc. But the essential condition is that the articles should be related to Turkey.

Note: The normal Wikipedia rules also apply to all new articles. Wikipedia admins can facilitate other member contributions by creating project pages where users can list their newly written articles. --Hindustanilanguage (பேச்சு) 19:33, 30 ஏப்ரல் 2017 (UTC)

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி தொகு

விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. பங்குபெற ஆரம்பிக்கலாம். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 03:30, 1 மே 2017 (UTC)[பதிலளி]

New Wikipedia Library Accounts Available Now (May 2017) தொகு

Hello Wikimedians!

 
The TWL OWL says sign up today!

The Wikipedia Library is announcing signups today for free, full-access, accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials from:

Expansions

  • Gale – Biography In Context database added
  • Adam Matthew – all 53 databases now available

Many other partnerships with accounts available are listed on our partners page, including Project MUSE, EBSCO, Taylor & Francis and Newspaperarchive.com.

Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team 18:52, 2 மே 2017 (UTC)

You can host and coordinate signups for a Wikipedia Library branch in your own language. Please contact Aaron.
This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.

19:14, 3 மே 2017 (UTC)