விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு115
புதிய நிர்வாகிகள் தேர்தல்
தொகுவிக்கி நிர்வாகிகள் பள்ளித் திட்டத்தின் கீழ் புதிய நிர்வாகிகள் தேர்தல் தொடங்குகிறது. உங்கள் நியமனங்களை இங்கு இட வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 09:23, 2 சனவரி 2019 (UTC)
புதுப்பயனர் வரவேற்புக் குழு
தொகுபுதுப்பயனர் வரவேற்புக் குழுவில் தங்கள் பெயரும் இடம் பெற வேண்டும் என்று விரும்புவோர் இங்கு குறிப்பிடவும். --இரவி (பேச்சு) 04:40, 5 சனவரி 2019 (UTC)
Call for bids to host Train-the-Trainer 2019
தொகுApologies for writing in English, please consider translating the message
Hello everyone,
This year CIS-A2K is seeking expressions of interest from interested communities in India for hosting the Train-the-Trainer 2019.
Train-the-Trainer or TTT is a residential training program which attempts to groom leadership skills among the Indian Wikimedia community (including English) members. Earlier TTT has been conducted in 2013, 2015, 2016, 2017 and 2018.
If you're interested in hosting the program, Following are the per-requests to propose a bid:
- Active local community which is willing to support conducting the event
- At least 4 Community members should come together and propose the city. Women Wikimedians in organizing team is highly recommended.
- The city should have at least an International airport.
- Venue and accommodations should be available for the event dates.
- Participants size of TTT is generally between 20-25.
- Venue should have good Internet connectivity and conference space for the above-mentioned size of participants.
- Discussion in the local community.
Please learn more about the Train-the-Trainer program and to submit your proposal please visit this page. Feel free to reach to me for more information or email tito cis-india.org Best!
Pavan Santhosh ( MediaWiki message delivery (பேச்சு) 05:52, 6 சனவரி 2019 (UTC) )
- நல்ல விசயமாக உள்ளது. தமிழகத்தில் ஏதேனும் ஒரு ஊருக்கு விண்ணப்பம் செய்யலாமா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:46, 12 சனவரி 2019 (UTC)
- ஆம் ஏற்பாடுகள் செய்யலாம்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:26, 13 சனவரி 2019 (UTC)
- விருப்பம்--நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:30, 13 சனவரி 2019 (UTC)
- @Parvathisri: @Nandhinikandhasamy: எந்த ஊருக்கு செய்யலாம்? //சர்வதேச விமான நிலையம் வேண்டும்// தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு ஊர்களில் மட்டுமே பன்னாட்டு விமான நிலையங்கள் வருகின்றன. இந்த நான்கு ஊர்களில் எந்த ஊருக்கு விண்ணப்பம் செய்யலாம்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:00, 13 சனவரி 2019 (UTC)
- என் பரிந்துரை சென்னை பாலாஜி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:34, 14 சனவரி 2019 (UTC)
- @Nandhinikandhasamy: சரி. சென்னைக்கு நிறைய விமானங்கள் உள்ளன. மேலும் சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் உள்ளது. குறைந்தது நான்கு பேர் வேண்டும். அதில் ஒருவர் முதலிலேயே இப்பயிற்சி பெற்றிருந்தால் சிறப்பு. நடத்தக்கூடிய இடம் வேண்டும். எப்படி முன்னெடுத்துச் செல்வது? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:12, 14 சனவரி 2019 (UTC)
- இதனை இப்போது நாம் முன்னெடுக்க வேண்டாம் என்பது என் பரிந்துரை. இதனால் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் பெறும் பலன் என்ன? நிகழ்ச்சியை நடத்தும் சமூகத்தில் இருந்து கூடுதலாக 5 முதல் 10 பேர் பயிற்சி பெற வாய்ப்பாக இருக்கும் எனில், நாமும் நிகழ்ச்சியை நடத்த முனையலாம். இந்தக் கோரிக்கையை இங்கு வைத்துள்ளேன். இல்லையெனில், இது நமக்குத் தேவையற்ற சுமை. விடுதி, போக்குவரத்து, உள்ளூர் ஒருங்கிணைப்பு என்று ஒரு நிகழ்ச்சியை 3 -4 நாட்கள் நடத்துவது ஒரு பெரும் பணி.--இரவி (பேச்சு) 03:49, 15 சனவரி 2019 (UTC)
- @Nandhinikandhasamy: சரி. சென்னைக்கு நிறைய விமானங்கள் உள்ளன. மேலும் சுற்றிப்பார்க்கவும் நிறைய இடங்கள் உள்ளது. குறைந்தது நான்கு பேர் வேண்டும். அதில் ஒருவர் முதலிலேயே இப்பயிற்சி பெற்றிருந்தால் சிறப்பு. நடத்தக்கூடிய இடம் வேண்டும். எப்படி முன்னெடுத்துச் செல்வது? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:12, 14 சனவரி 2019 (UTC)
- என் பரிந்துரை சென்னை பாலாஜி --நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:34, 14 சனவரி 2019 (UTC)
- @Parvathisri: @Nandhinikandhasamy: எந்த ஊருக்கு செய்யலாம்? //சர்வதேச விமான நிலையம் வேண்டும்// தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என நான்கு ஊர்களில் மட்டுமே பன்னாட்டு விமான நிலையங்கள் வருகின்றன. இந்த நான்கு ஊர்களில் எந்த ஊருக்கு விண்ணப்பம் செய்யலாம்? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:00, 13 சனவரி 2019 (UTC)
பராமரிப்புப் பணிக்காக
தொகுமுதன்மைவெளியில் உள்ள கட்டுரை இல்லாமல் பேச்சுப் பக்கம் மட்டும் கொண்ட பல பக்கங்கள் விக்கியில் உள்ளன. அவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். பராமரிப்புப் பணியிலுள்ளோர் இதனை நீக்கியோ, இணைத்தோ ஒழுங்குபடுத்தலாம் -நீச்சல்காரன் (பேச்சு) 14:16, 6 சனவரி 2019 (UTC)
- மேலும் ஒருங்குறி பிழையுள்ள 269 தலைப்புகளையும் பட்டியலிட்டுள்ளேன். நுட்பரீதியாக இவை மாற்றப்படவேண்டும். இப்பக்கங்களைத் தேடுதளத்தின் மூலமோ தேடுபெட்டி மூலமோ அடைவது கடினம். புதியவர்கள் மேலும் அறிந்துகொள்ள [1] -நீச்சல்காரன் (பேச்சு) 11:29, 7 சனவரி 2019 (UTC)
- அவ்வாறே ஆங்கில தலைப்புகளுக்கு உள்ள இணைப்புகளையும் நீக்க வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:24, 9 சனவரி 2019 (UTC)
- பெரும்பாலான கட்டுரைகளை விரைவாக ஒழுங்குபடுத்தியமைக்கு @Kalaiarasy, Arularasan. G, and Nan: நன்றிகள். இதுவரை பகுப்பில்லாமல் இருந்த அத்தனைக் கட்டுரைகளையும்(411) பகுப்பு:பகுப்பில்லாதவை பகுப்பில் இப்போது இட்டுள்ளதையடுத்து மொத்தம் சுமார் 1850 கட்டுரைகள் இப்பகுப்பில் உள்ளன. தானியங்கியால் திரட்டப்படும் இப்பகுப்பின் உருப்படிகள் சில காலமாக உரிய பகுப்பின்றி அநாதையாக உள்ளன. தற்போது பலர் துப்புரவுப் பணியில் ஆர்வம் காட்டுவதால் இவற்றை விரைந்து ஒழுங்கமைக்க இங்கே அறியத்தருகிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:46, 21 சனவரி 2019 (UTC)
நீச்சல்காரன் உங்கள் பட்டியலில் இடம்பெற்ற தேவையற்ற கட்டுரைகளை நீக்கும்போது அதை அடிப்படையாகக் கொண்டு விக்கித்தரவில் உருவாக்கப்பட்ட பக்கத்தை எங்கனம் நீக்குவது, நீக்கல் வார்புருவை அப்பக்கத்தில் இடவேண்டுமா அதை எவ்வாறு இடுவது என்று விளக்கம் தேவை.--அருளரசன் (பேச்சு) 13:09, 3 மார்ச் 2019 (UTC)
- தேவையற்ற கட்டுரைகள் இங்கே நீக்கப்பட்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளியில் விக்கித்தரவில் தானாக நீக்கப்படும். புதிதாக வேறுவொரு மாற்றுப் பக்கம் உருவாக்கினால் மட்டும் அந்த உருப்படியை விக்கித்தரவில் இணைத்தால் போதும்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:29, 3 மார்ச் 2019 (UTC)
தகவலுக்கு நன்றி--அருளரசன் (பேச்சு) 00:54, 4 மார்ச் 2019 (UTC)
பெங்களூரூவில் விக்கிமூலம் பற்றிய பயிற்சி
தொகுDear Wikimedians,
We are having the Wikisource training on 23rd and 24th of January 2019 at Samskrita Bharati, Aksharam, Bengaluru. I request all the interested participants to take part in the event and make it a grand success. The following things will be thought during this event. Introduction to Wikisource and better understanding, scope, and future of Wikisource.
- A brief introduction to the Wikisource work process.
- Upload tools and Copyrights
- OTRS process
- OCR4Wikisource and Indic OCR
- Proofreading methods and Tools required.
- Wikisource tools, gadgets
- Uses of special pages
- Transclusion
- Wikidata linkage
You can know more about this event here.
பெங்களுரூவிற்கு அருகில் இருப்பவர்களோ அல்லது சொந்த செலவில் செல்ல முடிந்தவர்களோ பயிற்சி பெறலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:41, 12 சனவரி 2019 (UTC)
FileExporter beta feature
தொகுA new beta feature will soon be released on all wikis: The FileExporter. It allows exports of files from a local wiki to Wikimedia Commons, including their file history and page history. Which files can be exported is defined by each wiki's community: Please check your wiki's configuration file if you want to use this feature.
The FileExporter has already been a beta feature on mediawiki.org, meta.wikimedia, deWP, faWP, arWP, koWP and on wikisource.org. After some functionality was added, it's now becoming a beta feature on all wikis. Deployment is planned for January 16. More information can be found on the project page.
As always, feedback is highly appreciated. If you want to test the FileExporter, please activate it in your user preferences. The best place for feedback is the central talk page. Thank you from Wikimedia Deutschland's Technical Wishes project.
புதிய நிருவாகிகளுக்கு வாழ்த்துகள்
தொகுதை முதல் நாளாம் இன்று, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தமிழ் விக்கிப்பீடியா நிருவாகிகள் தேர்வு பெற்று வருகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் வேட்பு மனு தாக்கல் செய்த ஆறு பேர் உடனடியாகவும், எஞ்சியோர் அடுத்த காலாண்டிலும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். ஆர்வமுடைய நெடுநாள் பயனர்களும் நிருவாகிகளும் நிருவாகிகள் பள்ளியில் வழி காட்டலாம். தை பிறந்து வழி பிறந்திருக்கிறது. விக்கி நிர்வாகிகள் பள்ளிக் கொள்கைக்கு ஆதரவளித்து, தேர்தலில் பங்கெடுத்து, வாக்களித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 06:37, 15 சனவரி 2019 (UTC)
No editing for 30 minutes on 17 January
தொகு18:55, 16 சனவரி 2019 (UTC)
நீங்கள் பயன்படுத்தி பார்பதற்கு உள்ளடக்க மொழிபெயர்ப்பின் (Content translation) ஒரு புதிய பதிப்பு உள்ளது
தொகுTranslation: User:Kaartic
தமிழ் விக்கிபீடியவில் உள்ளடக்க மொழிபெயர்ப்பு (Content translation) வழக்கமாக பயன்படுத்தப் படுகிறது. 8000திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் அதன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போழுது மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்கும் அதன் புதிய பதிப்புபை பயன்படுத்த முடியும். நீங்கள் புதிய பதிப்புபை [மொழிபெயர்ப்பு கட்டுப்பாட்டகத்திலிருந்து இயலச்செய்யலாம். “மொழிபெயர்ப்பு உதவி தேவையா?” குழுமத்தில் இருக்கும் “புதிய பதிப்பை முயற்சிக்கவும்” (“Try the new version “) விருப்பத்தை சொடுக்கி அதை இயலச்செய்யலாம். நீங்கள் துவங்கும் புதிய மொழிபெயர்ப்புகளுக்கு மட்டுமே புதிய பதிப்பு செயல்படும். பழைய பதிப்பை பயன்படுத்தி துவங்கிய மொழிபெயர்ப்புகளை இது பாதிக்காது.
பழைய பதிப்பின் பயனர்கள் அதிகமாக வேண்டி கேட்ட அம்சங்களை புதிய பதிப்பில் கொடுக்க உத்தேசித்திருப்பதால் நாங்கள் குறிப்பாக தமிழ் விக்கிபீடியா சமூகத்தின் பின்னூட்டத்தில் ஆர்வமாக உள்ளோம். உயர்ந்த தற மொழிபெயர்ப்புகளை முடிவாக பெற புதிய பதிப்பு நம்பகமான தொகுக்கும் அனுபவத்தையும் சிறந்த வழிகாட்டுதலையும் கொடுக்கிறது.
புதிய பதிப்பு இன்னும் சுறுசுறுப்பான வளர்ச்சியில் இருப்பதால் உங்கள் பின்னூட்டங்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். நீங்கள் புதிய பதிப்பை இயலச்செய்து, அதை சில கட்டுரைகளுக்கு பயன் படுத்திப்பார்த்து உங்கள் அனுபவத்தை பகிரிந்து கொள்ளவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அடுத்த இரண்டு வாரங்களில் நாங்கள் பெற்ற பின்னூட்டங்களை மதிப்பீடு செய்து எங்கள் வருங்கால திட்டத்துடன் இணைத்துக்கொள்வோம்.
புதிய பதிப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கட்டுரைகள் “ContentTranslation2” எனும் திருத்த குறிப்பை (revision tag) பெற்றிருக்கும். இயந்திர மொழிமாற்றம் போதுமான அளவு திருத்தப்படாமல் இருக்க வாய்ப்புள்ள கட்டுரைகள் “மதிப்பாய்வு செய்யப்படாத மொழிபெயர்ப்புகள் கொண்ட பக்கங்கள்” (“Pages with unreviewed translations”) எனும் பகுப்பில் சேர்க்கப்படும்.
தயவுகூற்ந்து புதிய பதிப்பின் பேச்சுப் பக்கத்தில் உங்களது பின்னூட்டங்களை எந்த மொழியிலும் பகிருங்கள்.
நன்றி! --அமீர் எ. அஹரொனி (WMF) (பேச்சு) 21:40, 17 சனவரி 2019 (UTC)
இரு பயனர் கணக்குகளின் நிருவாக அணுக்கம் நீக்கல்
தொகுகவனிக்க - கடவுச் சொல் சிக்கலை எதிர்கொள்ளும் இரு பயனர் கணக்குகளின் நிருவாக அணுக்கத்தை நீக்கப் பரிந்துரைத்து உள்ளேன். நன்றி. --இரவி (பேச்சு) 11:43, 20 சனவரி 2019 (UTC)
ஆங்கில எழுத்துடன் தலைப்பு
தொகுபொதுவாகத் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில எழுத்தில் தலைப்புகள் வைப்பதில்லை. மேல் உரையாடலில் @Dineshkumar Ponnusamy: சுட்டிக்காடிய பிறகு மொத்த விக்கியில் ஆங்கில எழுத்துக்கள் கொண்ட தலைப்புகளைப் பட்டியலிட்டுள்ளேன். இதில் அறிவியல் குறியீடு, சாலைக் குறியீடு, சர்வதேசக் குறியீடு போன்றவற்றிற்கு ஆங்கில எழுத்து முதன்மை தலைப்பாகவோ வழிமாற்றியாகவோ அமையலாம், அவை அன்றி தலைப்பில் ஆங்கிலம் கொண்ட மற்றவற்றை உரிய முறையில் நீக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம் எனப் பரிந்துரைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 17:07, 21 சனவரி 2019 (UTC)
- நீங்கள் தரும் பட்டியல்கள் குறித்த தகவல்களை இங்கும் இட்டால், நீண்டகால பயனைத் தரும். மேற்கோள்ளப்பட்ட துப்புரவுகள் பற்றிய ஆவணமாகவும் அமையும். தற்போதைய நிலவரத்தை எப்போது வேண்டுமானாலும் பார்வையிட இயலும். பட்டியல் பக்கம் நீண்டகாலம் இருக்கும்வகையில் பயனர்வெளிப் பக்கங்களின் பெயரை அதற்கேற்றாற்போல் நீங்கள் உருவாக்கினால் நல்லது என நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, Neechalkaran/ஆங்கில எழுத்துகள் கொண்ட தலைப்புகள்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:27, 21 சனவரி 2019 (UTC)
- நீச்சல்காரன் பட்டியலிட்டுள்ள ஆங்கில எழுத்துள்ள தலைப்புகள் பட்டியலில் ரோமன் எண் இடப்பட்டுள்ள கீழ்கண்ட தலைப்புகள் போல பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
1.லியுதேத்தியம்(III)_குளோரைடு 2.இரிடியம்(V)_புளோரைடு
ஆ.வி தலைப்புகளில் ரோமன் எண்ணுக்குப் பக்கத்தில் ஓர் இடைவெளி விடப்படுகிறது. என்பதை கவனிக்கவும். இடைவெளி வேண்டுமா வேண்டாமா என்று வழிகாட்டவும் -−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- இப்போதுள்ளது போன்றே ஒரு இடைவெளியுடன் தலைப்பிட வேண்டும்.--Kanags (பேச்சு) 01:42, 22 சனவரி 2019 (UTC)
- அனைத்துலக அறிவியல் முறைப்படி உள்ள பெயர்களை வழிமாற்றாக அமைத்து, அதன் மேல் தமிழ் ஒலிப்புகளுடன் வைப்பது மிகவும் நலன் அளிக்கும், நமது விக்கி தேடுபொறி அல்லாது எந்த தேடுபொறியில் தேடினால், அது தமிழ் கட்டுரையைக் காட்டும். எடுத்துக்காட்டாக, ஒரு தாவரவியல் பெயரை எடுத்துக் கொள்வோம். ஆடாதோடை என்பது யாவருக்கும் தெரிந்த மூலிகைப்பெயர். ஆனால், Barleria acuminata என்ற தாவரவியல் பெயரை எழுதும் போது, அதன் தமிழ் ஒலிப்பு அடிப்படையில் பெயர் (பார்லேரியா அகுமினேட்டா)வைக்கும் போது, அதன் பின்னே வழிமாற்றாக, அந்த அனைத்துலக தாவரவியல் பெயரைப் பேணுதல் சிறப்பு. CNN, AIDS, Twiiter போன்ற அகில உலக பயன்பாட்டில் இருக்கும் அஃகுப்பெயர்களையும் பேண வேண்டும்.ஒலிப்பியல் அடிப்படையில் பெயர் வைக்கும் போது, நபருக்கு நபர் வேறுபட வாய்ப்புள்ளது. எனவே, உங்களின் கருத்தென்ன?--த♥உழவன் (உரை) 05:09, 27 சனவரி 2019 (UTC)
- இப்போதுள்ளது போன்றே ஒரு இடைவெளியுடன் தலைப்பிட வேண்டும்.--Kanags (பேச்சு) 01:42, 22 சனவரி 2019 (UTC)
உயிரியற் பெயர்களின் இலத்தீன் வரவடிவத்திலிருந்தும் அதற்கான தமிழ் ஒலிப்பிலிருந்தும் வேறு வேறாக வழிமாற்றுக்களை ஏற்படுத்தி, கட்டுரைகளுக்கு தமிழில் அல்லது தமிழ்ப்படுத்தித் தலைப்பிட வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 06:55, 27 சனவரி 2019 (UTC)
Women's TTT
தொகுSorry for posting in English.
Dear All,
Women Wikimedians are happy to express their intent as they plan towards having a focused Train-the-Trainer program this year for female community leaders within the Wikimedia movement. A 2-day residential training program to nurture leadership amongst the leading women contributors from different Indian language Wikimedia projects. A program where not only women community members are the participants but also they host it from logistics, finance, resource, trainers, communications etc.
This is a separate program and not to be confused with the annual Train-the-Trainer program hosted by Access to Knowledge Team. Access to Knowledge Team would be the funding affiliates for this program and it would be grateful to receive their advice and suggestions from time to time along with other affiliates and community members, however, the program would be put up in collaboration with women community members only. The idea is to develop leadership in each and every aspect of community work, so that, in the future, there is equity and also diversity when community undertakes activities.
Recognizing this to be a distinct and new approach, it is a priority to be extra careful in making the judicious use of public money. Having said so, we wish to host this program in the National Capital Region, New Delhi as the city offers larger travel connectivity and stay options. We wish to host this program on the weekend following The Women's Day on Friday, 8th March. Also, happy to share that besides #Wiki4Women edit-a-thon at UNESCO Head Office in Paris, Delhi Office has also shared their intent in hosting the same. All scholarship recipients for the Women's TTT could, in turn, be the representatives of "Wikimedians of India" at the UNESCO workshop and also be the resource persons.
To make this initiative a success, direction from all of you is the key! Please feel free to suggest.
Also please find the link to submit your interest to be a part of the event (Women only). Due to the shortage of time, the time limit to fill the form is 5 days i.e. till 8 February 2019 (23:59 p.m. IST).
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe_r7GRyUY8I6sHpHezhOhp8JjjpIvCPAA2QxqlXj6kXrIFgw/viewform
Regards, Manavpreet Kaur -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:33, 4 பெப்ரவரி 2019 (UTC)
fountain
தொகுகட்டுரைப்போட்டிக்கான fountain கருவி வேலை செய்யவில்லை.--அபிராமி (பேச்சு) 15:45, 15 பெப்ரவரி 2019 (UTC)
- கருவி வழங்கியில் உள்ள வழு சீர்செய்யப்பட்டு வருகிறது. கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதுங்கள், கருவி செயல்பாட்டிற்கு வந்தவுடன் சமர்பிக்கவும்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:47, 15 பெப்ரவரி 2019 (UTC)
- @அபிராமி நாராயணன், Vinotharshan, Balu1967, Fathima rinosa, and Vasantha Lakshmi V: பவுண்டைன் கருவி வேலை செய்யத் தொடங்கியது. இனி வழக்கம் போல கட்டுரைகளை அங்கே சமர்பிக்கலாம் -நீச்சல்காரன் (பேச்சு) 06:39, 20 பெப்ரவரி 2019 (UTC)
இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019
தொகுஇந்திய அளவில் நடந்த முதல் விரித்திசையன் வரைகலை மேலதிக பயற்சியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் பங்களிப்பாளர் என்ற முறையில், விக்கிநூலில் அடிநிலை குறிப்புகளையும், வழிகாட்டுதல்களையும் நிழற், நிகழ்படங்களாகத் தொகுத்துள்ளேன். அவற்றின் துணைக் கொண்டு, இந்த பரப்புரையில் யாவரும் எளிதாக கலந்து கொள்ளலாம். ஏதேனும் ஐயங்கள் இருப்பின், எனது பேச்சுப்பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும், பயனுள்ள சில குறிப்புகள் வருமாறு;-
- ஒரு விவரப்படம், ஒரு குறுங்கட்டுரை போன்றது. பல படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, தமிழ் மொழிக்குத் தேவையெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதனை மொழிபெயர்ப்பு மட்டுமே தமிழில் நாம் செய்ய வேண்டும்.
- 2019 வருடம், பிப்ரவரி 21 முதல் மார்ச்சு மாதம் இறுதிவரை இந்த விழிப்புணர்வு பரப்புரை நடைபெற உள்ளது. இதற்கான திட்டப்பக்கம்
- ஓர் அறிமுக 'யூடியூப்' நிகழ்படம். மேலும் சில அடிப்படை நிகழ்படங்களை திட்டப்பக்கத்தில் காணலாம். விக்கிநூலில் தமிழ் நிகழ்படங்களைக் காணலாம்.
- கூகுள் குரோம் இயக்குதளக்கணினியில் அடிப்படை மென்பொருட்களை கட்டமைக்க இயலாத சூழ்நிலை உள்ளது என்ற குறிப்புரையைத் தருகிறேன். பிற இயக்குதளங்களில் எளிதே.
அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றேன். தொடர்வோம். வணக்கம்.--த♥உழவன் (உரை) 02:43, 21 பெப்ரவரி 2019 (UTC)
தமிழ்ப் பிழைதிருத்தி வெளியீடு
தொகுசர்வதேச தாய்மொழி நாளை முன்னிட்டு வாணி எழுத்துப்பிழைதிருத்தியின் மேம்பட்ட பதிப்பு இன்று வெளியாகியுள்ளது. விக்கியில் தமிழில் எழுதுபவர்களுக்கு நாவியைவிட வாணி பெரிதும் உதவும் என்ற அடிப்படையில் இச்செய்தியைப் பகிர்கிறேன். மேலும் அறிய http://tech.neechalkaran.com/2019/02/20.html -நீச்சல்காரன் (பேச்சு) 12:01, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 12:28, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்----TNSE Mahalingam VNR (பேச்சு) 16:49, 21 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்--கலை (பேச்சு) 19:14, 21 பெப்ரவரி 2019 (UTC)
- மிக்க மகிழச்சி. தங்களது அயராத மேம்பாட்டு பணிகளுக்குத் தலைவணங்குகிறேன். --த♥உழவன் (உரை) 01:34, 22 பெப்ரவரி 2019 (UTC)
- விருப்பம்--சிவக்குமார் (பேச்சு) 03:12, 22 பெப்ரவரி 2019 (UTC)
- மிக்க மகிழச்சி.ஹிபாயத்துல்லா (பேச்சு) 12:08, 25 பெப்ரவரி 2019 (UTC)
Talk to us about talking
தொகுThe Wikimedia Foundation is planning a global consultation about communication. The goal is to bring Wikimedians and wiki-minded people together to improve tools for communication.
We want all contributors to be able to talk to each other on the wikis, whatever their experience, their skills or their devices.
We are looking for input from as many different parts of the Wikimedia community as possible. It will come from multiple projects, in multiple languages, and with multiple perspectives.
We are currently planning the consultation. We need your help.
We need volunteers to help talk to their communities or user groups.
You can help by hosting a discussion at your wiki. Here's what to do:
- First, sign up your group here.
- Next, create a page (or a section on a Village pump, or an e-mail thread – whatever is natural for your group) to collect information from other people in your group. This is not a vote or decision-making discussion: we are just collecting feedback.
- Then ask people what they think about communication processes. We want to hear stories and other information about how people communicate with each other on and off wiki. Please consider asking these five questions:
- When you want to discuss a topic with your community, what tools work for you, and what problems block you?
- What about talk pages works for newcomers, and what blocks them?
- What do others struggle with in your community about talk pages?
- What do you wish you could do on talk pages, but can't due to the technical limitations?
- What are the important aspects of a "wiki discussion"?
- Finally, please go to Talk pages consultation 2019 on Mediawiki.org and report what you learned from your group. Please include links if the discussion is available to the public.
You can also help build the list of the many different ways people talk to each other.
Not all groups active on wikis or around wikis use the same way to discuss things: it can happen on wiki, on social networks, through external tools... Tell us how your group communicates.
You can read more about the overall process on mediawiki.org. If you have questions or ideas, you can leave feedback about the consultation process in the language you prefer.
Thank you! We're looking forward to talking with you.
Trizek (WMF) 15:01, 21 பெப்ரவரி 2019 (UTC)
பேசுவதை பற்றி எங்களிடம் பேசுங்கள்
தொகுஇது "Talk to us about talking" அறிவிப்பின் மொழிப்பெயர்க்கப்பட்ட பதிப்பாகும். மொழிப்பயெர்ப்பாளர்: பயனர்:Kaartic
விக்கிமீடியா நிறுவனம் கருத்து பரிமாறுதல் பற்றிய உலகளாவிய கலந்தாய்வு ஒன்றை திட்டமிடுகிறது. இதன் நோக்கம், கருத்து பரிமாறுதலுக்கான கருவிகளை மேம்படுத்துவதற்காக விக்கிமீடியர்கள் மற்றும் விக்கி- நோக்கமுள்ள மக்களை ஒன்று சேர்ப்பதாகும்.
நாங்கள் எல்லா பங்களிப்பாளர்களும் அவர்களின் அனுபவம், அவர்களின் திறமைகள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் வேறுபாடின்றி விக்கியில் ஒருவர் மற்றொருவர் உடன் பேசிக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.
நாங்கள் முடிந்தவரை விக்கிமீடியா சமூகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்ளீடுகளை தேடுகிறோம். உள்ளீடுகள் பல்வேறு திட்டங்களில் இருந்து, பல்வேறு மொழிகளில் மற்றும் பல்வேறு கண்ணோட்டத்தில் வரும்.
நாங்கள் இப்போது கலந்தாய்வை திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உங்களது உதவி வேண்டும்.
அவர்களது சமூகம் மற்றும் பயனர் குழுக்களுடன் பேசுவதற்கு உதவ எங்களுக்கு தன்னார்வலர்கள் தேவை.
நீங்கள் உங்களது விக்கியில் ஒரு கலந்துரையாடலை தொகுத்து வழங்கியோ அல்லது ஏற்கனவே இருக்கும் கலந்துரையாடலில் பங்கேற்றோ உதவலாம். நீங்கள் செய்ய வேண்டியவை:
- முதலில், உங்களது குழுவை பதிவு செய்யவும் அல்லது ஏற்கனவே ஒன்று இங்கே இருக்கிறதா என பார்க்கவும்.
- குழு ஏதும் இல்லையெனில், அடுத்து, உங்கள் குழுவில் இருக்கும் மற்ற மக்களிடம் இருந்து தகவல் சேகரிப்பதற்கு பக்கம் ஒன்றை உருவாக்கவும் (அல்லது ஆலமரத்தடி பக்கத்தில் ஒரு பகுதியை, அல்லது ஒரு மின்னஞ்சல் தொடரை - எது உங்களது குழுவிற்கு இயல்பானதோ அதை செய்யவும்). இது வாக்களிக்கும் அல்லது முடிவெடுக்கும் கலந்துரையாடல் அல்ல: நாங்கள் கருத்து மட்டுமே சேகரித்து கொண்டிருக்கிறோம்.
- அடுத்து, கருத்து பரிமாறும் செயல்முறைகள் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேளுங்கள். விக்கியிலும் விக்கிக்கு வெளியிலும் மக்கள் எவ்வாறு கருத்து பரிமாறுகிறார்கள் என்பது பற்றிய கதை மற்றும் அது தொடர்பான தகவல்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். பின்வரும் ஐந்து கேள்விகளை கேட்பதற்க்கு கருதுங்கள்:
- நீங்கள் உங்களது சமூகத்துடன் ஒரு விஷயத்தை பற்றி கலந்துரையாட வேண்டும் போது உங்களுக்கு உதவும் கருவிகள் யாவை, மற்றும் உங்களுக்கு தடையாக வரும் பிரச்சனைகள் யாவை?
- புதிய பயனர்கள் எவ்வாறு பேச்சுப் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள்? மேலும் அவர்கள் அதை பயன்படுத்துவதை தடுப்பது என்ன?
- உங்கள் சமூகத்தில் இருக்கும் மற்றவர்கள் பேச்சுப் பக்கம் தொடர்பாக சந்திக்கும் சிரமங்கள் யாவை?
- நீங்கள் பேச்சுப் பக்கங்களில் செய்ய விரும்பும் எந்த விஷயங்களை தொழில்நுட்ப வரையறைகளால் செய்ய முடியவில்லை?
- ஒரு "விக்கி கலந்துரையாடலின்" முக்கிய அம்சங்கள் என்ன?
- இருதியாக, மீடியாவிக்கியில் இருக்கும் பேச்சு பக்கங்களின் கலந்தாய்வு 2019 பக்கத்தில் உங்கள் குழிவிடம் இருந்து நீங்கள் தெரிந்து கொண்டதை கூறவும். கலந்துரையாடலின் இணைப்பு பொதுவாக கிடைக்கும் என்றால், அதையும் சேர்க்கவும்.
மேலும் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும் பல்வேறு விதங்கள் பற்றிய பட்டியலை உருவாக்க நீங்கள் உதவலாம்.
விக்கியிலோ அல்லது விக்கியை சுற்றியோ செயலில் இருக்கும் அனைத்து குழுக்களும் கலந்துரையாட ஒரே வழியை பயன்படுத்துவதில்லை. கலந்துரையாடல் விக்கியிலோ, சமூக வலைப்பின்னல்களிலோ, வெளிப்புற கருவிகளைக் கொண்டோ நடக்கலாம். உங்கள் குழு எவ்வாறு கலந்துரையாடுகிறது என்று எங்களுக்கு சொல்லுங்கள்.
மீடியாவிக்கியில் நீங்கள் ஒட்டுமொத்த செயல்முறை பற்றி மேலும் படிக்க முடியும். கலந்தாய்வின் செயல்முறையைப் பற்றி உங்களுக்கு கேள்விகளோ அல்லது யோசனைகளோ இருந்தால், நீங்கள் விரும்பும் மொழியில் கருத்து தெரிவிக்க முடியும்.
மிக்க நன்றி! உங்களுடன் பேசுவதை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்.
விசமத் தொகுப்பு
தொகுநிர்வாகிகளின் கவனத்திற்கு, குறிப்பிட்ட ஒரு பயனர் வெவ்வேறு பெயர்களில் தலைப்பினை நகர்த்துதல் உட்பட்ட விசமத் தொகுப்பில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக இக்குறிப்பிட்ட செயலுக்கான எச்சரிக்கை இன்றியே 2 வாரங்கள் தடை செய்துவிடுங்கள். --AntanO (பேச்சு) 08:53, 10 மார்ச் 2019 (UTC)
- குறிப்பிட்ட கணக்குகள் 2-3 வருட பழைமையானதும், சில தொலைக்காட்சி தொகுப்புக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய இலக்கு விலங்கியல் கட்டுரைகளுடன் தொடர்புபட்டது. தயவுசெய்து விசமத் தொகுப்புக்களைக் கவனிக்கவும். --AntanO (பேச்சு) 08:58, 10 மார்ச் 2019 (UTC)
- FYI: Jamil2K --AntanO (பேச்சு) 09:02, 10 மார்ச் 2019 (UTC)
- 10 மேற்பட்ட கணக்குகள் (பழையதும் புதியதும்) பயன்படுத்தப்படுகிறது. ஒருசில தொகுப்புகளிலேயே இவ்விசமத் தொகுப்புகளைக் கண்டுகொள்ளலாம். நிர்வாகிகளுக்கு இதனை விளங்கிக் கொள்வதில் சிக்கல் உள்ளதா? --AntanO (பேச்சு) 02:56, 12 மார்ச் 2019 (UTC)
- @Arularasan. G, Balajijagadesh, Dineshkumar Ponnusamy, Gowtham Sampath, Info-farmer, Jagadeeswarann99, Kanags, Mayooranathan, and Nan:, @Ravidreams, Sancheevis, Selvasivagurunathan m, Sivakosaran, Sivakumar, and கி.மூர்த்தி:--AntanO (பேச்சு) 03:02, 12 மார்ச் 2019 (UTC)
அன்ரன், இப்பிரச்சினையை நான் முன்னரே கண்டறிந்தமையாலேயே உங்களது பேச்சுப் பக்கத்தில் உங்களுக்குத் தெரிவித்தேன். அப்பயனரால் நிகழும் முறையற்ற நகர்த்தல்கள், தனக்கு நினைத்தவாறெல்லாம் கட்டுரைகளைத் திரிபு படுத்துவது, இணக்கமற்ற சொல் வழக்குகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுவரை மற்ற நிருவாகிகளில் எவரும் இதனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நீங்கள் தொடர்ச்சியாக இது தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக உங்களுக்கு நன்றி. --பாஹிம் (பேச்சு) 03:08, 12 மார்ச் 2019 (UTC)
- விசமத் தொகுப்புகள் குறித்த அறிவிப்புகளுக்கு நன்றி. அண்மைக் காலத்தில் தமிழ் விக்கியில் நான் உலவுவதும், பங்களிப்பதும் குறைவாக இருந்தது. மற்றபடி, கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. இங்கு உலவும்போது, உரிய நிர்வாகப் பணிகளை கண்டிப்பாக செய்வேன் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:46, 12 மார்ச் 2019 (UTC)
இப்பயனரின் தற்போதைய கணக்கு பயனர்:Rivanya Shitik. கவனியுங்கள்.--பாஹிம் (பேச்சு) 07:40, 12 மார்ச் 2019 (UTC)
@AntanO: விசமத் தொகுப்புகள் குறித்த அறிவிப்புகளுக்கு நன்றி. இனிமேல் கவனமாக இருக்கிறேன்.--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:02, 12 மார்ச் 2019 (UTC)
- இவர்களுக்கு இரு வாரங்கள் தடை போதாது. குறைந்தது மூன்று மாதங்களாவது தடை விதிக்கப்பட வேண்டும். இவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். (எல்லோரும் ஒருவரோ நானறியேன்).--Kanags (பேச்சு) 11:36, 12 மார்ச் 2019 (UTC) விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:11, 13 மார்ச் 2019 (UTC)
- I wait for this to block all with infinite block, and requested 2 weeks for some technical needs and bring all IDs to a trap. The vandalism can occur again. Thanks @Fahimrazick: --AntanO (பேச்சு) 02:10, 15 மார்ச் 2019 (UTC)
- New attack started by "Michael2M0". Watch and block by "infinite block"--AntanO (பேச்சு) 02:16, 15 மார்ச் 2019 (UTC)
- Please analysis those 11 IDs and its behavioral patterns. These edit on several topics such as biology, Christianity, Indian cities, politician biography, mythology, etc. His/her intention is solo kinda Wikipedia, and does not listen others concern or Wiki policy. --AntanO (பேச்சு) 02:34, 15 மார்ச் 2019 (UTC)
Keep eye on DanielDL7 --AntanO (பேச்சு) 05:22, 17 மார்ச் 2019 (UTC)
- இப்போது பிரச்சினை பயனர்:Lakshmanlaksh என்பதிலிருந்து தொடங்கியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 04:52, 18 மார்ச் 2019 (UTC)
அடுத்த பிரச்சினை பயனர்:Krishnak20 இலிருந்து வருகிறது.--பாஹிம் (பேச்சு) 01:28, 19 மார்ச் 2019 (UTC)
New Wikipedia Library Accounts Available Now (March 2019)
தொகுHello Wikimedians!
The Wikipedia Library is announcing signups today for free, full-access, accounts to published research as part of our Publisher Donation Program. You can sign up for new accounts and research materials on the Library Card platform:
- Kinige – Primarily Indian-language ebooks - 10 books per month
- Gale – Times Digital Archive collection added (covering 1785-2013)
- JSTOR – New applications now being taken again
Many other partnerships with accounts available are listed on our partners page, including Baylor University Press, Taylor & Francis, Cairn, Annual Reviews and Bloomsbury. You can request new partnerships on our Suggestions page.
Do better research and help expand the use of high quality references across Wikipedia projects: sign up today!
--The Wikipedia Library Team 17:40, 13 மார்ச் 2019 (UTC)
- You can host and coordinate signups for a Wikipedia Library branch in your own language. Please contact Ocaasi (WMF).
- This message was delivered via the Global Mass Message tool to The Wikipedia Library Global Delivery List.
தமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வு நல்கை விண்ணப்பம்
தொகுதமிழ் விக்கிப்பீடியா பதினாறாம் ஆண்டு நிகழ்வு நல்கை விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. இதற்கான ஆதரவை இங்கு வழங்கி நல்கை விண்ணப்பத்தை வலுச்சேர்க்கவும். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 16:24, 19 மார்ச் 2019 (UTC)
- நல்கை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. பதினாறாம் ஆண்டுக்கொண்டாட்டங்களுக்கான வேலைகளை முனைப்புடன் செயற்படுத்த அனைவரையும் அழைக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 08:26, 23 மார்ச் 2019 (UTC)
- வணக்கம் சிவகோசரன். உங்களின் முன்னெடுப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 23 மார்ச் 2019 (UTC)
- மகிழ்ச்சி சிவகோசரன். ஆண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். என்னால் ஏதாவது செய்யக்கூடிய விடயங்கள் இருக்குமானால், செய்து உதவ முடியும். நன்றி.--கலை (பேச்சு) 08:55, 23 மார்ச் 2019 (UTC)
- மட்டற்ற மகிழ்ச்சி. சிவகோசரன்! வாழ்த்துக்கள். உங்களின் தொடர் முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன்.--த♥உழவன் (உரை) 02:42, 24 மார்ச் 2019 (UTC)
- மகிழ்ச்சிகரமான விசயம். சிவகோசரன், மற்றும் குழுவாக இணைந்து இவ்விண்ணப்பத்திற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். நிகழ்ச்சி செப்டம்பரில். நீண்ட நாட்கள் இருப்பது போல் தெரிந்தாலும் நேரம் விரைவில் கடந்துவிடும். தொய்வில்லாமல் ஒவ்வொரு நாளும் வேலை செய்தால் நிறைவாக நடத்தலாம். செய்ய வேண்டிய வேலைகள், வேலைக்கான காலக்கெடு, பொறுப்புகள் குழுக்கள் முதலியவைகள் முதலில் முடித்துவிடலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 08:27, 24 மார்ச் 2019 (UTC)
- மட்டற்ற மகிழ்ச்சி. சிவகோசரன்! வாழ்த்துக்கள். உங்களின் தொடர் முயற்சிகளைக் கண்டு வியக்கிறேன்.--த♥உழவன் (உரை) 02:42, 24 மார்ச் 2019 (UTC)
- மகிழ்ச்சி சிவகோசரன். ஆண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். என்னால் ஏதாவது செய்யக்கூடிய விடயங்கள் இருக்குமானால், செய்து உதவ முடியும். நன்றி.--கலை (பேச்சு) 08:55, 23 மார்ச் 2019 (UTC)
- வணக்கம் சிவகோசரன். உங்களின் முன்னெடுப்பிற்கும், உழைப்பிற்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:36, 23 மார்ச் 2019 (UTC)
- மகிழ்ச்சி சிவகோசரன். திட்டம் வெற்றிபெற வாழ்த்துகளுபன் ஒத்துழைப்புகளும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:18, 2 ஏப்ரல் 2019 (UTC)
- மகிழ்ச்சி சிவகோசரன். திட்டம் வெற்றிபெற வாழ்த்துகள். இயன்ற ஒத்துழைப்பை தருகிறேன். அன்புடன்--கி.மூர்த்தி (பேச்சு) 12:39, 2 ஏப்ரல் 2019 (UTC)
வாழ்த்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. திட்டப்பக்கத்தில் நடைபெறும் உரையாடல்களில் பங்கேற்றுத் திட்டமிடலுக்கு உதவவும். --சிவகோசரன் (பேச்சு) 09:30, 7 ஏப்ரல் 2019 (UTC)
இந்தியாவிலிருந்து நிகழ்வில் கலந்து கொள்ள உதவுத்தொகை கோருவோர் இங்கே பதிவு செய்யலாம் விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் -நீச்சல்காரன் (பேச்சு) 09:42, 10 மே 2019 (UTC)
புதுப்பயனர் போட்டி நிறைவு
தொகுசுமார் 25 புதிய பயனர்களுடன் சுமார் 920 கட்டுரைகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. முறையாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்படும். கலந்துகொண்ட பயனர்கள், நடுவர்கள் @Arularasan. G, Balajijagadesh, Parvathisri, and ஞா. ஸ்ரீதர்:, மற்றும் ஒருங்கிணைத்த பயனர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இதுதொடர்பான கற்றல்களையும், அனுபவங்களையும் போட்டியின் பேச்சுப்பக்கத்திலேயே பதிவு செய்வோம். புதுப்பயனர் போட்டி நிறைவு ஆனதையொட்டி அது தொடர்பான அறிவிப்பை அனைத்து இடங்களிலிருந்து நீக்க வேண்டும். எனக்கு இன்னும் அணுக்கம் வழங்கப்படததால் அணுக்கம் கொண்டவர்கள் மீடியாவிக்கி:Sitenotice மற்றும் MediaWiki:Mobile.js இரு பக்கத்தின் உள்ளடக்கத்தை நீக்கக் கோருகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 02:19, 1 ஏப்ரல் 2019 (UTC)
- மீடியாவிக்கி:Sitenotice ஆயிற்று
- MediaWiki:Mobile.js அணுக்கம் இல்லை.--நந்தகுமார் (பேச்சு) 03:05, 1 ஏப்ரல் 2019 (UTC)
- @Shanmugamp7, Mayooranathan, Natkeeran, Ravidreams, and Sundar: மீடியாவிக்கி:Mobile.js பக்கத்தின் உள்ளடக்கத்தை நீக்க உதவுக -நீச்சல்காரன் (பேச்சு) 17:39, 4 ஏப்ரல் 2019 (UTC)
Read-only mode for up to 30 minutes on 11 April
தொகு10:56, 8 ஏப்ரல் 2019 (UTC)
Wikimedia Foundation Medium-Term Plan feedback request
தொகுPlease help translate to your language
விக்கித்தரவில் விக்சனரி இணைவு
தொகுபேச்சு:அகராதியியல்#தலைப்பு மாற்றம் என்பதில் உங்களின் எண்ணங்களைத் தெரிவிக்கவும்.--த♥உழவன் (உரை) 09:25, 14 ஏப்ரல் 2019 (UTC)
விக்கி நிர்வாகிகள்/அதிகாரிகள் பள்ளி தொடர்பான கொள்கை உரையாடல்கள்
தொகுவிக்கி நிர்வாகிகள்/அதிகாரிகள் பள்ளி தொடர்பான கொள்கை உரையாடல் அறிவிப்புகளைக் காணவும்.
- விக்கிப்பீடியா பேச்சு:விக்கி நிர்வாகிகள் பள்ளி#கொள்கை மீளாய்வு
- விக்கிப்பீடியா பேச்சு:விக்கி அதிகாரிகள் பள்ளி
இந்தக் காலாண்டுக்கான நிர்வாகிகள்/அதிகாரிகள் தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. எனவே, பயனர்கள் விரைந்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:54, 15 ஏப்ரல் 2019 (UTC)
strategy meet
தொகுThe Wikimedia Foundation's Community Brand and marketing team coordinator Sameer Elsharbotti [2] is visiting Bangalore to discuss and collect feedback about Wikipedia Branding proposal (More details here). During this time contributors of the Indian language Wikimedia projects and the coordinators/representatives of User Groups are welcome for discussion. On April 21, we are organizing a meeting in CIS Bengaluru office. Visit this page [3] to get more information and register your name. Interested Active Contributors who need accommodation and travel support, please contact User:Gopala (CIS-A2K) via Email. We will request you to give more information if needed over Email. E-mail address gopala@cis-india.org. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 12:38, 15 ஏப்ரல் 2019 (UTC)
விக்கிமீடியா அறக்கட்டளையில் விக்கி திட்டங்களின் வணிகக்குறி மற்றும் சந்தைபடுத்துதல் சம்பந்தமாக உரையாடல் நடந்துகொண்டுவருகிறது.Wikipedia Branding proposal. இது சம்பந்தமாக விவாதிக்க சமீர் பெங்களூரூக்கு வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வருகிறார். பெங்களூரூ நிகழ்வு. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை கூற விருப்பமுள்ளவர்கள் சிஐஎஸ்யின் கோபாலாவை தொடர்பு கொள்ளலாம். gopala@cis-india.org பல விக்கிதிட்டங்களின் பெயர்கள் மாற வாய்ப்புள்ளது. விக்கிமூலம் என்பது விக்கிபீடியாமூலம் போல பல மாற்றங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை பற்றி விவாதிக்க உங்கள் கருத்துக்களை எடுத்துச்சொல்ல நல்ல வாய்ப்பு. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 17:29, 17 ஏப்ரல் 2019 (UTC)
- நானும், சீனியும் கலந்து கொண்டோம். இந்த முன்மொழிவினை கலந்துரையாடலுக்குப் பின் ஏற்றோம். முடிவுகளை இன்னும் சில மாதத்தில் அறிவிப்பர். தற்போதுள்ள திட்டப்பெயர்கள் மாறாது. ஆனால்,இது விக்கிப்பீடியத் திட்டங்களுள் ஒன்று என்ற அறிவிப்பு இணையும். எந்த விக்கிப்பக்கத்தில் இருந்தாலும், அனைத்து விக்கிப்பீடியத் திட்டங்களைக் குறித்து தெரிந்து கொள்ள ஏதுவாக, பக்கமொன்று இணைக்கப்படுமென்று தெரிகிறது.--த♥உழவன் (உரை) 01:53, 24 ஏப்ரல் 2019 (UTC)
இலங்கை குண்டுவெடிப்புகள்
தொகுநேற்று இலங்கையில் நடந்து குண்டுவெடிப்புகள், அதுவும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் குறி வைக்கப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. உயிர் இழந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலியையும் காயமுற்றவர்கள் விரைவில் நலம் பெற வேண்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும். --இரவி (பேச்சு) 05:39, 22 ஏப்ரல் 2019 (UTC)
- என் ஆழ்ந்த அனுதாபங்கள்--அருளரசன் (பேச்சு) 07:38, 22 ஏப்ரல் 2019 (UTC)
- ஆழ்ந்த அனுதாபங்கள்--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:52, 22 ஏப்ரல் 2019 (UTC)
- அப்பாவி மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அதே நேரத்தில் மக்கள் விரோத சக்திகளுக்கு எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:26, 23 ஏப்ரல் 2019 (UTC)
- நானும் தற்போது என் மனைவியுடன் இலங்கைக்கு வந்திருக்கிறேன். நிலைமை மிகக் கவலையளிக்கிறது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த நாளிலிருந்து என் மனத்தை விட்டுத் துயரம் மறையவேயில்லை. அப்பாவிகள் இலக்கு வைக்கப்படுகிறார்கள். எத்தனையோ பாவங்களும் துரோகங்களும் நிகழ்கின்றன. இறைவன் எல்லாருக்கும் நல்வழி காட்டி, அமைதியை நல்குவானாக.--பாஹிம் (பேச்சு) 08:02, 23 ஏப்ரல் 2019 (UTC)
- என்று மானுடம் மேலோங்கும்...--த♥உழவன் (உரை) 01:47, 24 ஏப்ரல் 2019 (UTC)
விக்கிமூலம் பயிற்சிப்பட்டறை - 2019
தொகுவிக்கிமூலம் பற்றிய அறிமுகம் மற்றும் பயிற்சிக்கு தேவை இருக்கிறது. தமிழ் விக்கிபீடியர்களுக்குக் கூட விக்கிமூலம் கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு சனி ஞாயறுகளில் இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிட்டதட்ட 20 பேர் அளவில் பயிற்சி பட்டறை நடத்தத்திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சி பட்டறை நடத்த சிஐஎஸ் முன்வந்துள்ளது. நீண்ட நாள் வங்காள விக்கிமூல பங்களிப்பாளரான ஜெயந்த நாத் சிறப்பு பயிற்சியாளராக பங்கு கொள்ள இசைவு கொடுத்துள்ளார்.
- பயிற்சியில் கலந்துகொள்பவர்கள் எண்ணிக்கை, வசதிக்கேற்ப சென்னை அல்லது தமிழ்நாட்டிலுள்ள வேறு ஊர்.
- சூன் 8-9 அல்லது சூன் 15-16. இந்த இரண்டு தேதிகளில் எந்த தேதி மற்றும் இடத்தை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடைப்பெறுகிறது. அதற்காக வாக்களிக்கலாம்.
மேலும் தங்கள் கருத்துக்களை நிகழ்ச்சியின் பேச்சுப்பக்கத்தில் பதிவு செய்யலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 07:58, 23 ஏப்ரல் 2019 (UTC)