விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு89

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:51, 21 சூன் 2013 (UTC)[பதிலளி]

நாளிதழ் செய்தி

தொகு

திருநெல்வேலி புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்காகச் சென்றிருக்கும் நண்பர் ஒருவர் கடைகளில் தொங்கவிடப்படும் நாளிதழின் முக்கியச் செய்திகள் அடங்கிய சுவரொட்டியில் இன்று, தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் எனும் தலைப்பில் (தினகரன் நாளிதழ்) சுவரொட்டிச் செய்தியைப் பார்த்ததாகத் தொலைபேசியில் தெரிவித்தார். நான் அந்தச் செய்தியை இணையத்தில் தேடினேன் சிக்கவில்லை. தங்களுக்கு அந்தச் செய்தி கிடைக்கிறதா? என்று முயற்சித்துப் பாருங்கள். கிடைத்தால் இணைய முகவரியைப் பதிவு செய்யுங்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முடிந்தால் சுவரொட்டிச் செய்தியை படமாக்கிப் பதிவேற்றம் செய்யுங்கள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:20, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஆம். நானும் திருச்சி வானொலி நிலைய நேர்க்காணல் சென்ற போது (20/6/2013)இத்தகவலைச் சொன்னார்கள். ஆனால் இணையத்தில் கிடைக்கவில்லை-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:10, 22 சூன் 2013 (UTC)[பதிலளி]

வசந்தம் 23 சூன் 2013

தொகு
இன்றைய தினகரன் நாளிதழின் வசந்தம் இதழில் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டு குறித்த பேட்டி வெளிவந்துள்ளது. ஒரு வேளை நீங்கள் மேலே கண்ட சுவரொட்டி அதற்கான முன்னோட்ட விளம்பரமாக இருக்கலாம். ஏனெனில், அதே நாள் நான் கோவையில் தினகரன் செய்தித் தாள் வாங்கிப் பார்த்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய எந்தச் செய்தியுமில்லை.
இன்றைய தினகரன் வசந்தம் கட்டுரையின் படங்களை இணைத்துள்ளேன். தினகரன் செய்தியாளர் சென்னையில் இருந்து தொலைப்பேசி மூலம் இப்பேட்டியை எடுத்தார். இப்பேட்டியைத் தனியொருவரை முன்வைத்து எழுதாமல் ஒரு இயக்கத்தின் கூட்டுழைப்பாக முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். இதன் பொருட்டே, படங்களை எடுக்க அவர்கள் ஒளிப்படக்காரர் வந்த போது, கோவையில் உள்ள பூங்கோதை, தென்காசி சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் இணைந்து படங்களை எடுத்தோம். ஆனால், இதையும் தாண்டி அனைவரின் பெயரும் பங்களிப்புகளும் வராமல் விடுபட்டுப்போனது வருத்தமளிக்கிறது. கூடவே, ஏகப்பட்ட தகவல் / கருத்துப் பிழைகளும் உள்ளன. குறிப்பாக, நான் எழுதியதாகக் கூறப்படும் கட்டுரைகள் எண்ணிக்கை. எனவே, இது தொடர்பான புரிதலை வேண்டுகிறேன். மற்றபடி, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டில் வெகு மக்கள் ஊடகங்களில் நம்மைப் பற்றிய அறிமுகம் கிடைப்பதை நல்ல விசயமாக கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 06:10, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

//தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாம் ஆண்டில் வெகு மக்கள் ஊடகங்களில் நம்மைப் பற்றிய அறிமுகம் கிடைப்பதை நல்ல விசயமாக கருதுகிறேன். //  விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 06:52, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

ஏற்கனவே இரவி கூறியது போல் விக்கிப்பீடியாவின் உரலி தரப்படவில்லை. விக்கியின் படத்திலும் நான் வாங்கிய நாளிதழில் அது தெளிவாகத் தெரியவில்லை. இது மாதிரி இதழ்களில் பதிவிடும் போது உரலியைக் கொடுகச் சொலி ஒரு பாயின்டையும் அதற்கான பக்கத்தில் இணைத்துவிட்டால் நல்லது. பரப்புரைக் கையேடுக்கான பக்கம் போல் நிறைய உள்ளதால் எதில் இற்றைப் படுத்த வேண்டும் எனக் குழப்பமாக உள்ளது. நான் ஆங்கில விக்கிப்பீடியாவின் பாண்டியர் கட்டுரையில் இருந்த தமிழ் இணைப்பை சொடுக்கி தான் தமிழ் விக்கிப்பீடியாக்கு வந்தேன். தமிழ் விக்கியில் இருந்தே எனக்குத் தமிழ் தட்டச்சு அறிமுகமானது (சுருக்கமாகச் சொன்னால் தட்டச்சே அதன் பிறகு தான் நன்கு பழக்கமானது). அதனால் என்னை போல் தமிழ் தட்டச்சு தெரியாமல் விக்கிப்பீடியாவை தேடும் தமிழர்களுக்கு உரலி முக்கியம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:11, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

  • வாழ்த்துகள் இரவி, பூங்கோதை, தென்காசி சுப்பிரமணியன்!! இந்தப் 10-ஆவது ஆண்டைக் கட்டாயம் ஒரு சிறு நிகழ்ச்சியாகவாவது இந்தியாவில் உள்ளவர்களும், பிற நாடுகளில் உள்ளவர்களும் நடத்த வேண்டும். கனடாவில் நடத்த நற்கீரனும் நானும் பிறரும் முயல வேண்டும். பல ஊர்களில் (நாடுகளிலும்) இந்நிகழ்ச்சியின் நினைவாக மரம் நட்டு பராமரிக்க ஏற்பாடுகள் செய்யலாம். தமிழ்நாடு இலங்கை போன்ற தமிழ்வாழ் நிலங்களில் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரலாம். என்னால் ஆன சிறு பண உதவியும் செய்ய அணியம். இந்தப் பத்தாவது ஆண்டை ஒரு சிறிய அளவிலாவது அறிவார்ந்த வழிகளில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பது என் அவாவும் கருத்தும். நாம் ஊடகங்களுக்கு எழுத்து மூலம் சரியான தகவல்களை கட்டுரையாகக் கொடுக்கலாம். அடுத்த 5-ஆண்டு, 10-ஆண்டு திட்டங்கள் பற்றியும் சிந்திக்கலாம். கட்டுரை எண் என்பதை மட்டும் குறியாகக் கொள்ளாமல் துறைவாரியாக சிறந்த கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மேற்படிப்பு மாணவர்கள் இவர்களை ஈர்க்கும் முகமாக சில திட்டங்கள் தீட்டிச் செயற்படுத்துவது முதலியன சிந்திக்கத்தக்கன. தமிழக அரசுக்கோ, இந்திய நடுவண் அரசுக்கோ, இலங்கை அரசுக்கோ பிற அரசுகளுக்கோ ஒரு பைசா செலவில்லாமல் தன்னார்வலர்களாகவே உழைத்து இப்படி 50,000 உக்கும் அதிகமான கட்டுரைகள் எழுதி, வேறு எங்கும் கிட்டாத பல அரிய செய்திகளும் தரவுகளும் தமிழில் இலவசமாகக் கிட்டும்படியாகவும் உருவாக்கியிருக்கும் இந்தக் கூட்டாக்கப் படைப்பு தமிழுலகில் ஒரு வரலாறு. இது இன்னும் பன்மடங்கு சிறந்த சீரான கலைக்களஞ்சியமாக வளர பற்பல வாய்ப்புக்கூறுகள் உள்ளன என்று நினைக்கின்றேன். இவை அனைத்துக்கும் அடிப்படை உயர் குறிக்கோள் கொண்டிருத்தல், பண்பான உரையாடல் ஒழுக்கம், கூட்டிணக்கம், அறிவும் அறமும் சார்ந்த அணுகுமுறை, கூட்டுழைப்பு, விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்களை நல்ல முறையில் பின்பற்றிவரும் தன்மை ஆகியவையாக நான் கருதுகின்றேன். வளமாகத் தமிழ் விக்கிப்பீடியா 10-ஆண்டுகளையும் கடந்து பீடு நடை போட நல்வாழ்த்துகள்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளவற்றை அச்சடித்தால் அது 40-50 தொகுதிகளைத் தாண்டும் எளிதாக. --செல்வா (பேச்சு) 20:08, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் -- சுந்தர் \பேச்சு 07:52, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:12, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 05:47, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

கொலராடோ பல்கலைக்கழக இலவச ஒப்பியக்க/ஒப்புருவாக்கங்கள் (PhET) - தமிழிலும் செய்யலாம்

தொகு

இயற்பியல் நோபல் பரிசாளர் கார்ல் வீமன் (Carl Wieman) அறிவியல் முறைப்படியே அறிவியலைக் கற்பது பற்றிப் பல ஆய்வுகள் செய்துள்ளார். வெறும் நினைவாற்றலால் மட்டும் இல்லாமல் உண்மையான இயங்கறிவு பெற ஒப்புருக்கள், ஒப்பியக்கங்கள் (சிமியுலேசன்) செய்து பார்த்து அறிந்து கொள்வது நல்லது என்று கூறுவார். அந்த ஒப்புருக்கள், ஒப்பியக்கங்கள் மூலம் தாங்கள் 'விளையாடி" - அதாவது அவர்கள் விருப்பம் போல் இயக்கக்கூறுகளை மாற்றி அதன் விளைவுகளை தாங்களாகவே அறிந்து அதன் வழி உள் தங்கும்படி அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொண்டு அறிவை வளர்க்க உதவும் விளையாட்டுகள்- அவற்றின் பயனாக மாணவர்கள் செய்முறையாக கருத்துகளை உள்வாங்குவது நல்லது. இந்த ஒப்பியக்கங்களை மிக எளிதாகத் தமிழாக்கலாம். புது ஒப்பியகக்ங்களையும் உருவாக்க்வும் செய்யலாம். சிலவற்றை நான் செய்தும் பார்த்தேன், மிகவும் எளிது. நல்ல தமிழில் பல நூற்றுக்கணக்கான ஒப்பியக்கங்களை ஆக்கலாம். இப்பொழுதுள்ள ஒப்பியக்கங்களை இங்கே காணலாம். மொழிபெயர்க்க விரும்புவோர் இப்பக்கத்தைப் பாருங்கள் --செல்வா (பேச்சு) 19:40, 23 சூன் 2013 (UTC)[பதிலளி]

பெரு வழக்கா இலக்கணமா?

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவிற் பல்வேறு பக்கங்களிலும் தமிழிலக்கணம் பற்றி எத்தனையோ கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவிட்டன. ஆயினும், இலக்கணத்தை முன்னிறுத்த வேண்டுமென்னும் நிலைப்பாடு மிகச் சிலரிடமே காணப்படுவதுடன், ஏராளமானோர் இலக்கணத்தைக் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. அத்தகையோர் பெரு வழக்குக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கூறுகின்றனர். பெரு வழக்கு இல்ககணப் பிழையாக அமையுமிடத்து, அதனைத் திருத்துவது கடினமேயாயினும், ஈராயிரம் ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேற்பட்ட காலம் இலக்கணத்துக்கு முக்கியத்துவமளித்தே தமிழிலக்கியங்களும் ஏனைய நூற்களும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் நாமும் எம்மால் முடிந்தளவு இலக்கணம் பிழைக்காமல் எழுத முயல வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான தமிழர்களுக்குத் தமிழ் சரிவரத் தெரயவில்லை என்பதற்காக, பிழையான சொற்களுக்கும் பிழையான வழக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, தமிழின் மேன்மை சிதைகிறது. தமிழறிஞர்களே தமிழைச் சிதைக்க வழி கோலுவது கவலையளிக்கிறது. அவர்களே இலக்கணம் எக்கேடு கெட்டால் எமக்கென்ன என்றோ, தமிழறியாதோர் எழுதும் முறையிலேயே தாமும் எழுதுவதே தொடர்பாடலுக்குச் சிறந்த வழியென்றோ எழுதத் தொடங்கினால் தமிழின் அழகு கெடுவது தடுக்க முடியாததாகிவிடும்.

நாம் பள்ளியில் கம்பராமாயணம் கற்றுப் பல காலமாகிறதே என்பதால், அதன் பாடல்கள் ஞாபகத்துக்கு வந்ததும், நேற்று மதுரைத் திட்டத்திலிருந்து கம்பராமாயணத்தைப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் அதனைத் திறந்த போது அதிர்ச்சி தான் காத்திருந்தது. பாடல்களின் முதல் வடிவங்களைச் சிதைத்து விட்டிருக்கிறார்கள். கம்பராமாயணத்தில் அவையடக்கம் முதலாவது பாடல்

என்றே மூலத்தில் இருக்கிறது. ஆனால், தமிழைப் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கில் அமைக்கப்பட்ட மதுரைத் திட்டத்திலோ அது

என்று சந்தி பிரித்து அதுதான் பாடல் என்பது போல் எழுதி வைத்திருக்கிறார்கள். இவ்வாறே கம்பராமாயணம் முழுவதும் காணப்படுகிறது. இது என்னுள்ளே விளைவித்த அதிர்ச்சியும் கவலையும் இன்னும் என்னை நோகச் செய்கின்றன. இவ்வாறு மூலப் பாடலைப் பிரித்து அதன் வடிவத்தை மாற்றி எழுதும் போது, கம்பரின் பாடல்களிற் காணப்படும் தமிழிசை கெடுகின்றதன்றோ. கம்பராமாயணப் பாடல்களை அவற்றின் மூல வடிவிலேயே பாடும் போது செவிக்கினிதாகவுள்ள அதே வேளை, இவ்வாறு மாற்றிப் பாடும் போது கேட்கவே சகிப்பதில்லையன்றோ. "பால் கடல்" என்று எவருமே எழுதுவதில்லை என்பதுடன் அது இலக்கணப் பிழையாகவுமன்றோ இருக்கிறது. புணரும் சொற்களைப் புணர்த்தும் புணராச் சொற்களைப் பிரித்தும் எழுதியாக வேண்டிய நிலையில், தமிழைச் சரிவரக் கல்லாத பலரும் புணராச் சொற்களைப் புணர்த்தெழுத முனைந்து தமிழின் இனிமையைக் கெடுக்கின்றனர். இத்தகைய குழப்பங்களைப் பற்றி நாம்காலத்துக்குக் காலம் கலந்துரையாடினாலும், இதுவரை எத்தீர்வும் எட்டப்படவில்லை.

ஆதலின், இதைப் பற்றி இனியாவது விரிவாகக் கலந்துரையாடி இனியாவது ஒரு நல்ல முடிவை எய்த வேண்டுமென்னும் என் அவாவை இங்கு எம் தோழர்களிடமும், எமக்கு ஒத்தாசையாயுள்ள தமிழறிஞர்களிடமும் முன் வைக்கிறேன்.

இவண்,--பாஹிம் (பேச்சு) 05:14, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

இலக்கண முறைப்படி எழுதுதலே, தமிழில் எழுதுபவர்களின் கடமை; தேவைப்படும் பயிற்சிகளை எடுத்துக் கொள்ளவும் தயங்கக் கூடாது என்பதே எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:00, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
ஆமாம். நாம் இயன்றவரை நல்ல இலக்கணத்தில் எழுத வேண்டும். நீங்கள் மேற் சுட்டிய எடுத்துக்காட்டு புரிதலுக்கு இலகுவாக அவ்வாறு பிரித்து எழுதப்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். மதுரைத் திட்டம் ஒரு பதிப்பே. --Natkeeran (பேச்சு) 12:52, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
மூலப் பாடல்கள் பிரித்து எழுதி வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல. பிரித்து எழுதுவதால் சில வேளை அர்த்தமே மாறி விடலாம். உரைநடைகளைப் பிரித்து எழுதுவது நல்லதே. விக்கியில் எழுதும் போது எளிமையான நடையில் இருப்பது நல்லது. உண்ணாட்டுப் போர் என்பதிலும் பார்க்க உள்நாட்டுப் போர் என எழுதலாம்.--Kanags \உரையாடுக 13:10, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]
சேர்த்து எழுதுவதாயின் உண்ணாட்டுப் போர் என்று எழுத வேண்டுமென்றே இலக்கணம் கூறுகிறது. அதனை உள் நாட்டுப் போர் என்று பிரித்து எழுதுவது தவறன்று. உள்நாட்டுப் போர் என்று எழுதுவது இலக்கணப் பிழை. அது தவறான வழிகாட்டல்.--பாஹிம் (பேச்சு) 13:19, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

பாஃகிம், நீங்கள் கூறியிருப்பது மிகவும் முக்கியமான கருத்து. இது பற்றிய என்னுடைய இரண்டொரு கருத்துகளைக் கூற விரும்புகின்றேன். (1) பெருவழக்கு என்பது மிகச்சிறுபான்மையானோர் ஊடகம் முதலியவற்றின் வாயிலாக, ஊடகத்துறை அறங்களைப் பேணாமல், போதிய பயிற்சியும் பெறாமல், பொறுப்பும் கொள்ளாமல், பல நேரங்களில் வேண்டுமென்றே திரித்தும் சிதைத்தும் எழுதுவதுதான். அது பெருவழக்கு அன்று, மிக மிகச் சிறுபான்மையோர் நடத்தையால் பரவலாக இருப்பது போல் காட்சி/தோற்றம் தருவது (இது ஒருசில தனி மாந்தர்களின் செயல்). இந்தத் தவறான வழக்குகளால், வலுவான ஊடகங்கள் வழியாக வருவதால், அவை பரவி வருகின்றது என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக "C.R. செல்வக்குமார்" என்று உரோமன் எழுத்தையும் தமிழ் எழுத்தையும் கலந்து எழுதுதல். சாலை, தெரு, பெருவழி, வீதி என்று பல சொற்கள் இருக்குபொழுது "ரோட்" என்று எழுதுவது. ரோடு என்றாவது எழுதலாம் (முதல் எழுத்து ரோ கூடாது எனினும்). ரோட் + ஐ = ரோடை ஆகும் ஆனால் ரோட்டை(க்) கடந்தார் என்று எழுதுகின்றார்கள். அப்பொழுது மட்டும் ரோடு என்னும் வடிவைக் கொண்டு தமிழ் இலக்கணத்தைத் தாங்கள் அறியாமலே ரோட்டை என்று எழுதுவார்கள். ரோடு, கோர்ட்டு என்று எழுதப் பரிந்துரைத்தாலும் எழுதுவதில்லை. தமிழால் வாழும் தமிழ் ஊடகங்கள் தமிழ்ச்சொற்களான சாலை, அறமன்றம்/நீதிமன்றம் என்று எழுத மறுக்கின்றார்கள். மேலும் மேலும் லைட், கோர்ட், ரோட் என்று எழுதினால் அவை நிலைபெறும்தான். அப்படி எழுதுவோர் சிலர், அவர்களுக்கு பரப்பும் வாய்ப்புகள் கூட. அதனால் அது சரியாகாது. (2) தமிழாசிரியர்களே தக்க அறிவு இல்லாதவர்களாக இக்காலத்தில் இருக்கின்றனர், அவர்களே தமிழ் இலக்கணங்களைப் போற்றுவது இல்லை. இது வெறும் கடந்த 20-25 ஆண்டுகளில் ஏற்பட்டுவரும் சீரழிவு. எல்லாத் தமிழாசிரியர்களும் என்று பொருள் கொள்ள வேண்டாம். (3) காக்க வேண்டிய அரசுகளும், தமிழ்க்காப்பு நிறுவனங்களும், பள்ளிப்பாட நூல் நிறுவனங்களும் கூட சரிவர வலியுறுத்தாமல் சீர்குலைய விடுகின்றார்கள். நானறிய உரைநடை எழுத்தில் பெரும்பாலானோர், கூடிய மட்டிலும் சரியான இலக்கணத்தமிழில் எழுதுதலை வரவேற்கின்றனர். ஆனால் அது கடுமையான நடையில் இருக்க வேண்டும் என்றோ, வழக்குக் குன்றி வரும் அல்லது அற்றுவரும் புணர்ச்சி விதிகளைக் கொண்டுதான் எழுத வேண்டும் என்றோ பொருள் இல்லை. இன்றைய நிலையில், சற்று நெகிழ்ச்சி தந்து கூடிய மட்டிலும் நல்ல எளிய தமிழில் எழுதுவதே நல்லது. கோர்ட்/ரோட் என்று எழுதினால்தான் புரியும் கோர்ட்டு/ரோடு என்று எழுதினால் புரியாது அல்லது நீதிமன்றம்/சாலை என்று எழுதினால் புரியாது என்பது அறிந்தே செய்யும் திரிப்புவாதம். மடலாடற் குழு ஒன்றில் பூ என்றால் மக்களுக்கு புரியாது பூவு என்று சொன்னால்தான் புரியும் என்று ஒருவர் வாதாடுகின்றார்! கூடிய மட்டிலும் தமிழ் இலக்கணத்தை ஒட்டியே எழுதுவது நல்லது. தமிழ் இலக்கணமானது மிகவும் அறிவார்ந்த முறையில் நுணுகி அறிந்து வகுக்கப்பட்டது மட்டும் அல்லாமல், கடந்த 2500 ஆண்டுகளாகவும் தமிழ் மொழி அழியாமல் இருப்பதற்கு ஒரு காரணமாகவுமுள்ளது என்றும் சொல்லலாம். மார்கரெட்டு திராவிக்கு (Margaret Trawick) என்னும் சமூக அறிவியலாளர் ஓரிடத்தில் கூறியவாறு தமிழ் ஒலியன்கள் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக வியப்புறும் வண்ணம் நிலைப்புத்தன்மை (stability) கொண்டதாக அமைந்துள்ளது. என் கருத்தில் தமிழின் நீண்ட வளமான உயிர்ப்புக்கும், அதன் உள்ளார்ந்த எளிமை, உள்ளொழுக்கம், இலக்கண அரணும் காரணம். உலகில் எந்த மொழியும் ஓர் எழுத்துக்கு இத்தனை மாத்திரை என்று வரையறை செய்யவில்லை, தமிழ்போல். மொழிக்கு அடிப்படை, சொற்கள், சொற்களுக்கு அடிப்படை எழுத்துகள் (படவெழுத்து மொழிகளின் நிலைப்பாடு வேறு), அந்த சொற்களுக்கு அடிப்படை எழுத்துகள். அந்த எழுத்துகளைத் தமிழ் மொழி போல் வரையறை செய்து, மாத்திரை வகுத்துக் கூறும் பிற மொழிகள் உலகில் இல்லை. இது வெற்று பெருமை அன்று, பெருமைக்காகவும் சொல்லவும் இல்லை. இதனால் அறிய வேண்டியது உண்டு - தமிழ் இலக்கணத்தின் உள்ளொழுக்க முறைமையும் அதனை நாம் பின் பற்ற வேண்டிய தேவையும் கருத்தில் கொண்டு சொல்கின்றேன். --செல்வா (பேச்சு) 14:02, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

பாஃகிம், தமிழ் விக்கிப்பீடியா என்றில்லை, எந்தவொரு கலைக்களஞ்சியமும் இலக்கணத்தின்படி முறையாகவே எழுதப்பட வேண்டும். ஆங்காங்கே சில இடங்களில் மாற்றுப் பயன்பாடுகளை வழிமாற்றாகத் தரலாம். வேறு வகைகளிலும் சற்று இசைந்து கொடுக்கலாம். மற்றபடி, நீங்கள் மேலே காட்டியுள்ளபடி பாடல்களின் மூல உரைகளைச் சந்திபிரித்து எழுதாமல், தேவைப்படும்போது உரையில் விளக்கம் தரலாம். -- சுந்தர் \பேச்சு 04:23, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

பாஹிம், உங்களுடைய கருத்துக்கள் மிக நியாயமானவை. அதேவேளை, பெருவழக்கு என்று கூறப்படுபவை எல்லாம் ஒரே வகையானவையானவையோ அல்லது அவை எல்லாவற்றையும் ஒரே மாதிரிக் கையாள வேண்டும் என்பதோ இல்லை. சில பெரு வழக்குகள் பரவலான மக்கள் மட்டத்தில் இருந்தும் வேறு சில செல்வா சொல்வது போல், சில காரணங்களுக்காக மேலிருந்து திணிக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. இவற்றுள் எதுவாக இருந்தாலும் எழுத்து வழக்குக்குக் கொண்டுவர முயலும்போது ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். எது எப்படியாயினும், பெருவழக்குகளில் மாற்றங்கள் வேகமாக இடம்பெறுவதாலும், வழக்குகள் இடத்துக்கிடம் வேறுபட்டுக் காணப்படுவதாலும், அவற்றின் போக்குக்கு ஏற்ப எழுத்து மொழியை மாற்றிக்கொண்டே போனால் தமிழை ஒரு மொழியாக வைத்திருக்க முடியாமல் போகும். எனவே தமிழ் இலக்கணத்தைக் கூடியவரை சிதைந்து விடாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. மூலச் செய்யுள்களைப் பதிப்பிக்கும் போது நீங்கள் கூறியிருப்பது போல் இருக்கும் வடிவத்திலேயே பதிப்பிப்பது தான் முறை. மரபு வழிச் செய்யுள்களுக்கு அவற்றின் கட்டமைப்பு மிகவும் முக்கியமானது. அவற்றை முறையாகச் சீர் பிரித்து எழுதினால்தான் அவை செய்யுள்களாக இருக்கும். அவ்வாறு எழுதும்போது அவற்றுக்குத் தனி அழகும், ஓசை நயமும், நினைவில் வைத்திருப்பது இலகு என்பது போன்ற நடைமுறைப் பயன்பாடுகளும் உள்ளன. வேண்டுமானால், தனியாகச் சொற்களைப் பிரித்து எழுதி விளக்கலாம். ---மயூரநாதன் (பேச்சு) 07:31, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

செப்டம்பர் என்பதற்கு தமிழ் இலக்கணப்படி செபிதம்பர் என யாரோ ஒருவர் Translatewiki யில் மாற்றியிருக்கிறார்கள். இதுவும் நம்மவர் யாரோ தான் செய்திருக்கிறார்கள். நான் மீள்வித்திருக்கிறேன். இவ்வாறான மாற்றங்களால் விக்கிசெய்தியில் முதற்பக்கத்தில் நேற்று சிவப்பு இணைப்புகள் அதிகமாகிவிட்டன. விக்கித் தொழில்நுட்பம் எமது உழைப்பை வீணாக்கி விடுமோ என்ற கவலை ஏற்படுகிறது,--Kanags \உரையாடுக 07:39, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் 0% கூட இலக்கணத்தை மதிக்காமல் குப்பையாகவும் எழுத முடியாது. அதே வேளை தற்கால வழக்கை முற்றிலும் புறக்கணித்து 100% இலக்கணச் சுத்தமாக எழுதவும் முடியாது என்பதே நடைமுறை உண்மை. தினமலர் போன்ற வெகு மக்கள் இதழ்களில் நிறைய இலக்கணப் பிழைகளுடன் எழுதுகிறார்கள். குறிப்பாக, தெரிந்தே ஒற்றுப் பிழைகள் விடுகிறார்கள். இவற்றை ஒப்பு நோக்கும் போது அச்சிலும் இணையத்திலும் வரும் எந்த ஒரு வெகுமக்கள் ஊடகத்தைக் காட்டிலும் நாம் பல மடங்கு தமிழிலக்கணத்தை மதித்து நல்ல தமிழைப் பயன்படுத்துகிறோம் என்பது மட்டும் உறுதி.

எப்படி விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் யாவும் தொடர்ந்து முன்னேற்றத்துக்கு உரியனவாக உள்ளனவோ அதைப் போலவே தமிழ் விக்கிப்பீடியாவின் மொழி நடையையும் காண்கிறேன். ஒரு நாளில் அனைத்தையும் மிகச் சரியாக எழுதிவிட முடியாது. நிறைய பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கிய பிறகே முறையாக தமிழிலக்கணம் கற்பதைக் காணலாம். மற்ற பயனர்களின் நல்ல எழுத்து நடையைக் கண்டும் கற்றுக் கொள்கிறார்கள். தனித்தமிழ் விருப்பு, கிரந்தம் தவிர்ப்பு குறித்த வார்ப்புருக்களைத் தங்கள் பயனர் பக்கங்களில் இடுகிறார்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த இயற்கையான தேர்ச்சிக்கும் நகர்வுக்கும் இடம் இருக்க வேண்டும். இன்றே 100% சரியாக இருக்கிறோமா என்பதை விட அதை நோக்கிச் செல்கிறோமா என்பதே முக்கியம்.

2008 வாக்கில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி குறித்த ஒரு உரையாடலில், நாம் ஒரு இலட்சம் கட்டுரைகளை உருவாக்க எப்படியும் 2013 வரை உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இன்று அதில் பாதியை மட்டுமே எட்டி உள்ளோம். கட்டுரைகள் எண்ணிக்கை ஒரு பொருட்டு இல்லையென்றாலும், நமது சமூகத்தின் தமிழ் வழி அறிவுத் தேவையையும் மக்கள் தொகையையும் கணக்கில் கொள்ளும் போது நாம் நிறைய பின்தங்கி உள்ளோம். வெறும் 11.5 மில்லியன் மக்கள் தொகை உடைய கட்டலான் இன மக்கள், விக்கிப்பீடியாவின் ஒரு தர வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்கள். நாம் அதில் 48ஆவது இடத்தில் இருக்கிறோம். தமிழ் விக்கிப்பீடியாவை முற்று முழுதாக ஒரு கலைக்களஞ்சியப் பணியாகப் பார்த்து இறுக்கமான விதிமுறைகளை விதிக்காமல், முதலில் இப்பணியில் ஆர்வமுடையோரை ஈர்ப்பதைத் தலையாய பணியாக கொள்ள வேண்டி இருக்கிறது. வேறு சொற்களில் சொல்வதானால், வலுவான தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தை உருவாக்க வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொருவராலும் இயன்ற அளவில் பங்களிப்பதற்கான அரவணைப்பை நல்க வேண்டும். இறுதியாக, தரமான ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் நோக்கில் அனுபவம் வாய்ந்த விக்கிப்பீடியர்கள் அந்தக் கட்டுரைகளை மெருகேற்ற வேண்டும். இந்த மெருகேற்றலில் தகவல் சரி பார்ப்பு, மொழி நடை முதலிய பல விசயங்களும் அடங்கும். புதுப்பயனராக இணையும் ஒருவர் இந்த ஒவ்வொரு படிநிலையையும் கடப்பதற்கான காலத்தையும் தர வேண்டும். இந்தப் படிநிலைகளைத் தலைகீழாகச் செய்ய முனைந்தோமானால், நாம் எதிர்பார்த்த விளைவுகள் வராமல் போகலாம். --இரவி (பேச்சு) 15:08, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

அதிகம் விடும் இலக்கணப் பிழைகளுக்குத் தனிப்பக்கம்

தொகு

இலக்கணமா? வழக்கா? என்றால் இலக்கணம் தான் முதலில். இலக்கணத்தை வழக்காக்கி விடலாம். அதையே மாற்றிச் செய்தால் ஒத்து வராது. ஆனால் முதலில் இதனால் பாதிக்கப்படுபவர்கள் புதுப் பயனர்கள், வேற்று மொழி ஆனால் தமிழ் தெரிந்த பயனர்கள், அதைவிட முக்கியமானது பள்ளியில் மட்டும் தமிழ் இலக்கணம் படித்துவிட்டு இப்போது என்னைப் போன்று மறந்து போனவர்கள்.

சரி அதனால் இதை இப்படியே விட முடியாது. ஆனால் கட்டுக்குள் கொண்டு வரலாம். அதற்கு ஒரு வழி அதிகம் விடும் இலக்கணப் பிழைகளுக்குத் தனி விக்கிப்பக்கம் வைப்பது. உதாரணமாக நாம் வல்லின மெய்யை சொல்லின் இறுதியில் வைத்து எழுதுவது, இடையின எழுத்துக்களில் 'வ'வை தவிர மற்ற எழுத்துக்களைக் கொண்டு சொல்லை ஆரம்பிப்பது. உதாரணம் பச்சக்குட்டக் தவறு. பச்சக்குட்டக்கு சரி. ராமன் தவறு. இராமன் சரி. இதைப் போன்று அதிகம் விடப்படும் தவறுகளுக்கு சரியான இலக்கணம் எது என்று பட்டியல் போட்டுவிட்டால் புதுப்பயனர் வரவேற்பில் அந்த பக்கத்தின் இணைப்பையும் சேர்த்தால் பெருமளவு இதைப் போன்ற இலக்கணப்பிழைகள் சரியாகிவிடும். முக்கியமாக இனி தவிர்க்கப்படும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:50, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

பார்க்க:

--Natkeeran (பேச்சு) 15:55, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

இவ்விடயத்தில்தென்காசி சுப்பிரமணியனின் கருத்தை ஆதரிக்கிறேன். ஒரு பட்டியலை ஏற்படுத்துவதுடன் அதனை அ முதல் னௌ வரையான ஒழுங்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன், அதில் ஒரு நிரலில் பிழையான சொற்களையும் அடுத்த நிரலில் சரியான சொற்களையும் அதற்கடுத்த நிரலில் அதற்கான காரணத்தையும் தொகுக்கக் கூடியவாறு அமைத்தால் நன்று. அப்போது, அதற்குத் தக்கவாறு சொற்களைச் சேர்க்க வசதியாயிருக்கும்.--பாஹிம் (பேச்சு) 16:20, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

அவசியம் இது தேவை. நான் படித்த பள்ளியில் தமிழ் வகுப்பு நடந்ததே கிடையாது. இது 100 சதவீதம் உன்மை. தமிழ் பாடவேளைகளிலும் ஆங்கிலம் அல்லது கனக்கு, அறிவியல் பாடங்களே எடுக்கப்படும். தமிழ் இலக்கணம் எங்களுக்கு சொல்லித்தரப்பட்டதே இல்லை. பள்ளி முடிந்து, கல்லூரியிலும் முழுக்க ஆங்கில வழிக் கல்விதான். எனது எழுத்துக்களில் இலக்கண மற்றும் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பதற்கு காரனமும் இதுவே. பிற்பாடு இதற்காக வருந்தி இலக்கண புத்தகங்களை படிக்க முனைந்த போதும், அடிப்படையே தெரியாததால் புரிந்து படிக்க இயலவில்லை. எனவே என்னைப் போன்றவர்களுக்கு இது மாதிரியான உதவி பக்கங்கள் கட்டாயம் தேவை.--அராபத் (பேச்சு) 05:02, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
விருப்பம் சொல்வதற்கு ஒரு வார்ப்புரு இருப்பதைப் போல அதிர்ச்சியைக் காட்டவும் ஒரு வார்ப்புரு வேண்டும் போலவே? :( நான் மெட்ரிக், நடுவன் கல்வி வாரியம், மாநிலக் கல்வி வாரியம் எல்லாவற்றிலும் மூன்று நகரங்களிலும் பயின்று இருக்கிறேன். எங்கும் இந்த அளவு மோசமில்லை. தமிழுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லித் தந்தார்கள். நான் அண்மையில் எழுதிய மின்னூலைக் கூட என் தமிழாசிரியர்களுக்குப் படையலிடும் அளவுக்கு நல்ல ஆசிரியர்கள் கிடைத்தார்கள்.--இரவி (பேச்சு) 15:08, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]
தென்காசியாரின் இந்த சிந்தனை மிகவும் போற்றுதற்குறியது. தமிழே அறியாத தமிழர்களாக நம் சமூகம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தமிழினை சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழை இன்றி எழுத விக்கப்பீடியா உதவ வேண்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:57, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா மின்னூல்கள்

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் உங்களுக்குத் தெரியுமா பகுதியின் சில துணுக்குகளை எடுத்து சோதனை முறையில் ஒரு மின்னூல் செய்து பார்த்தேன். .mobi, .epub வடிவங்களைத் தரவிறக்கிப் படித்துப் பாருங்கள். iPad வைத்திருப்பவர்கள் iBooks, Kindle for iPad ஆகியவற்றில் வாசிக்கலாம். ஆண்டிராய்டு கருவி வைத்துள்ளவர்கள் ePub for Android செயலி மூலமும் நன்றாக தமிழ் மின்னூல்களை வாசிக்க முடியும். இப்போதைக்கு இந்த இரண்டு கோப்பு வடிவங்களை இணைத்துள்ளேன். PDF ஆகவும் வெளியிட்டால் அனைத்துக் கருவிகளிலும் பிரச்சினை இன்றி வாசிக்க முடியும். சரி, ஏன் இந்தச் சோதனை?

  • தமிழ் விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை இணைய இணைப்பு இல்லாத கருவிகளுக்கும் கொண்டு செல்ல முடியும். தமிழிணையத்தில் நிறைய பேர் மின்னூல்களைத் தேடுகிறார்கள். ஆனால், தமிழுக்கு இது போன்று வாசிக்கக் கிடைக்கும் கட்டற்ற நூல்கள் மிகக் குறைவே. இந்நூல்களில் உள்ள இணைப்புகளைச் சொடுக்குவதன் மூலம் விக்கிப்பீடியா தளத்துக்கான புதிய வாசகர்களையும் பெறலாம்.
  • மின்னூல் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கலாம். அவ்வப்போது புதிய பதிப்புகளை வெளியிடலாம். இற்றைப்படுத்தலாம்.
  • உங்களுக்குத் தெரியுமா போன்ற துணுக்கு நூல்களைச் சட்டென உருவாக்கி விடலாம். தற்போது உள்ள தொகுப்புகளை ஆண்டுவாரியாகவோ துறை வாரியாகவோ ஒழுங்கு செய்து வெளியிடலாம். இதற்குப் பெரிய உரை திருத்தம், சரி பார்ப்பு என மெனக்கெடத் தேவையில்லை.
  • துறை சார் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமுள்ளோர் தங்கள் துறை கட்டுரைகளை மட்டும் தொகுத்து ஒரு மின்னூலாக வெளியிடலாம். இது போன்ற நூல்களைத் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இருந்து காட்சிப்படுத்தலாம். குண்டு குண்டு புத்தகங்களைப் போல் அல்லாமல் இது போன்ற கையடக்கக் கருவிகளில் சிறிய கட்டுரைகள் வாசிக்க இலகுவாக இருக்கும். எனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் குறுங்கட்டுரைகளைக் கொண்டு கூட பல பயனுள்ள நூல்களை உருவாக்க முடியும்.

இம்முயற்சியில் ஆர்வம் உள்ளோர் தெரிவியுங்கள். முறையான திட்டமாகச் செயற்படுத்துவோம். ஒரு மின்னூலை உருவாக்கும் வழிமுறை மிக இலகுவாக உள்ளது. அதனைப் பிறகு விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

வேறு எந்த விக்கிப்பீடியாவிலும் மின்னூல்கள் வெளியிடுகிறார்களா என்று தெரியவில்லை. நாம் செய்தால் ஒரு முன்னோடிச் செயற்பாடாக இருக்கும். இப்போது எல்லாம் மொட்டை மாடியில் துணி காயப் போடப் போனால் கூட, "தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு இதைச் செய்வோமோ அதைச் செய்வோமா.. " என்று ஒரே சிந்தனையாக உள்ளதால் இது போன்று பல தொடர் யோசனைகள் வரலாம் என்று எச்சரிக்கிறேன் :) --இரவி (பேச்சு) 11:41, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

அருமையான திட்டம், இரவி. செய்வோமே.--பாஹிம் (பேச்சு) 16:26, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

இரவி, பலர் இப்போது மின்னூல்களை App வடிவில் வெளியிடுகிறார்கள் (தினமலர், தினகரன், கல்கியின் சிறுகதைகள் போல). அவ்வாரும் முயன்று பார்க்கலாம்.--அராபத் (பேச்சு) 05:09, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]
இவ்வாறே சிறப்பு கட்டுரைகளைக் கூட செய்யலாம். நிறைய இணையப் பயனர்கள், நூல்களை தரவிறக்கி பிறகு படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். மிகச் சிறந்த யோசனை இது. செயல்படுத்த வாழ்த்துகள் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:41, 25 சூன் 2013 (UTC)[பதிலளி]

tamil fonts

தொகு

komara muthu 05:12, 26 சூன் 2013 (UTC) Tamil il yelutha vasathikal illai. Pls tell me... Cell pesikalil intha vasathì kidaikuma....

komara muthu 06:11, 26 சூன் 2013 (UTC) wikipedia tamil il yeluda kooduthal vasathikal vendum.. Udavi koruga... Udadvi pakkangal... Tamil yeluthuru matra.. Ithu pönra pakkangal onru pola thonrukirathey? Thavaraga irunthal manniyungal... Ithil matram vendum...

எனக்கு சுதை சிற்பம் என்ற வார்தையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க

எண்ணிக்கை காட்டாத பக்கங்கள்

தொகு

ஆகிய பக்கங்களில் பக்கங்களுக்கு அதிகமாக இணைக்கப்பட்டவை என்ற கட்டுரைப் போன்று எண்ணிக்கைகள் காட்டப்படவில்லை. தொழில்நுட்பம் அறிந்தோர் சரி செய்ய வேண்டுகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:11, 26 சூன் 2013 (UTC)[பதிலளி]

புதுப்பயனர்களுக்கு வழிகாட்டல் காணொளிகள்

தொகு

வணக்கம், விக்கப்பீடியாவின் அண்மைய மாற்றங்கள் பகுதியை நோக்கும் பொழுது புதிய பயனர்களின் வருகை முன்பை விட சற்று கூடுதலாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த 30 நாட்களில் பங்களித்தோர் எண்ணிக்கையும் 301 ஆக மாறியுள்ளது. தமிழ்த்தட்டச்சு முறையை அனைவரும் அறிவதில்லை. தன்முனைப்பாக போரடி தமிழ்தட்டச்சு கற்றுக் கொண்டவர்களே அதிகம். சிலர் நண்பர்களின் துணையோடு அறிந்து கொள்கின்றார்கள். இவ்வாறு தமிழ்த்தட்டச்சு தெரிந்தவர்கள் வலைப்பதிவுகளில் சில காலம் எழுதிவிட்டு விக்கிப்பீடியாவிற்கு எழுத வருகிறார்கள். அத்துடன் வலைப்பதிகளில் ஒன்றாகவே விக்கப்பீடியாவையும் கருதுகிறார்கள். அதனால் வலைப்பதிவுகளுக்கும் விக்கிப்பீடியாவிற்குமான வேறுபாடுகள் அவர்களுக்கு புரிவதில்லை. அவர்களுடையப் பங்களிப்பு விக்கப்பீடியாவிற்கு ஏற்றதாக இல்லாத நிலையில் நிர்வாகிகளால் நீக்கப்படும் பொழுது, அவர்கள் அதிச்சியடைகிறார்கள், வெறுப்படைகிறார்கள். அவர்களுக்கு சரியான வழிகாட்டலாக நிர்வாகிகளால் தொடர்ந்து செயல்பட இயலும் என்றாலும், அனைத்து நேரங்களிலும் நிர்வாகிகள் விக்கப்பீடியாவில் இருக்கும் வாய்ப்பு குறைவு. இந்த வேறுபாடுகளை நிர்வாகியும், பயனரும் உரையாடல் மூலமாக தீர்த்துக் கொள்வதில் இருக்கும் சிரமங்களை காண இயலுகிறது. அதனால் வழிகாட்டல் காணொளிகள் போன்றவைகளை உருவாக்கி தர வேண்டுகிறேன். அரிதாக பங்களிக்க வரும் பயனர்களுக்கு இருக்கும் சிரமங்களை குறைப்பதன் மூலம் விக்கிப்பீடியாவின் பங்களிப்பு உயரும் என்பது என் திடமான நம்பிக்கை. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:13, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா என்பது மூன்றாம் நிலை மூலம் என அவர்களுக்கு புரிய வைத்தால் இதைப் போன்று சிக்கலில்லை. ஆனால் புதுப்பயனராக வரும் போதே அவ்ர்களுக்கு இதைப் போன்ற சொற்கள் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்கிறார் இரவி. மூன்றாம் நிலை மூலம் என்ன என்பதற்கும் அக்காணொளி அமைவது போல் இருந்தால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:34, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]

நல்ல எண்ணம். இம் மாதிரி முயற்சிகள் சில முன்னர் உண்டு. --Natkeeran (பேச்சு) 13:27, 27 சூன் 2013 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் நன்றி. தக்க சமயத்தில் முந்தைய காணொளிகளை மாதிரியாக் கொண்டு புதிய அதிகாரப்பூர்வ வழிகாட்டல்களை உருவாக்குவீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:33, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

Translatewiki

தொகு

மொழிபெயர்ப்புவிக்கியில் புதிய பயனர் ஒருவர் பல மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார். இதன் தாக்கம் இப்போது இங்கும் தெரிகிறது. செப்டெம்பர் என்பதை செபுதம்பர் என மாற்றியிருக்கிறார். இவ்வாறே மாதங்கள் பலவற்றையும் மாற்றியிருக்கிறார். இம்மாற்றம் தமிழ்விக்கியில் அதிக பாதிப்பு ஏற்படுத்தா விட்டாலும் ஏனைய விக்கிகளில் (குறிப்பாக விக்கிசெய்தியில் மாதங்கள் முக்கியமானவை) பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாற்றங்களை இப்போதைக்கு மீள்வித்திருக்கிறேன். ஆனாலும், வருங்காலத்தில் இவ்வாறான மாற்றங்களினால் விக்கிசெய்திக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தொழிநுட்ப வல்லுனர்களின் ஆலோசனை, உதவி தேவை. நன்றி--Kanags \உரையாடுக 11:39, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

முதற் பக்கம் என்பதை முகப்பு என மொழிபெயர்ப்புவிக்கியில் மாற்றியுள்ளார். முகப்பு என்ற பக்கம் காக்கப்படாமல் இருந்தது. அதனைப் புதிய பயனர் ஒருவர் தொகுத்துள்ளார். விக்கியின் முதற்பக்கம் அந்த முகப்பு கட்டுரைக்கு சென்றது. இப்போது முதற்பக்கத்துக்கு வழிமாற்றியிருக்கிறேன். முகப்பு என்ற வழிமாற்றுப் பக்கத்துக்குக் காப்புப் போட்டுள்ளேன்.--Kanags \உரையாடுக 11:51, 28 சூன் 2013 (UTC)[பதிலளி]

நான் இதைப் போல் விக்கி மேற்கோளில் செய்தேன். செய்த காரணம் யாதெனில் விக்கி மேற்கோள் மேல் இடப்பக்க இமேஜை சொடுக்கினால் அது வெற்று பக்கமாக இருந்த முகப்பு பக்கத்துக்கு சென்றது. பிற்பாடு முகப்புப் பக்க்த்தை முதற்பக்கத்துக்கு வழிமாற்றிட்டேன். அவரும் அது போல் செய்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. சற்று கவனத்துடன் இதை அனுகவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:21, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு விக்கியில் செய்யும் மாற்றங்கள் உடனுக்குடன் விக்கிக்களில் வந்து விடுகின்றனவா? அங்கு பூட்டும் வசதி உண்டா? -- சுந்தர் \பேச்சு 08:27, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
உடனுக்குடன் வருவதில்லை. இரண்டு மூன்று நாட்கள் ஆகின்றன. இந்தப் பக்கத்தைப் பாருங்கள். சூன் 27 முதல் 29 வரை முதற்பக்க வரவுகளில் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளதை அவதானியுங்கள். அதே காலப் பகுதியில் இதனைப் பாருங்கள். முகப்பு என்ற பக்கம் காக்கப்படாமல் இருந்ததால் புதிய பயனர் ஒருவர் அதில் தனது கட்டுரை ஒன்றை இட்டதால் அது சிறிது நேரத்திற்கு முதற்பக்கத்தில் தெரிந்தது. இப்பிரச்சினை விக்சனரியிலும் இருந்தது.--Kanags \உரையாடுக 08:51, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஓ, இவ்வாறு நிகழாமல் தடுக்க முக்கிய தெரிவுகளைப் பூட்டி வைக்கலாமா? அதற்கான அணுக்கம் யாரிடத்தில் உள்ளது. நான் மொழிபெயர்ப்பு விக்கிக்குச் சென்று நெடுங்காலம் ஆகிறது. போய்ப் பார்க்கிறேன், சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 09:16, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஐயையோ! லுவா நிரல் முழுமையும் இந்த மாதங்களைத்தான் அளபுருக்களாகக் கொண்டு இயங்குகின்றன. எதை மாற்றினாலும் இங்கு ஓர் இற்றைப்பாடும் நிகழாது. தயவுசெய்து இதில் மேலும் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளாமல் இருப்பதை விட்டுவிடவும். தயவுசெய்து கேட்கிறேன். எனக்கு சொந்த விருப்புவெறுப்போ ஆதாயங்களோ இதில் இல்லை. தயவுசெய்து மாற்ற வேண்டும்... -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:35, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
சூரியப்பிரகாசு, எதனை மாற்ற வேண்டும் அல்லது எதனை மாற்றக் கூடாது என்று தெளிவாகச் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 12:40, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆசிரியர்களுக்கான ஒரு வலைப்பதிவு-அசிம் பிரேம்ஞ்சி அவர்களின் அறக்கட்டளை உதவியுடன்

தொகு

இங்கே பார்க்கவும் --செல்வா (பேச்சு) 01:50, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

நன்றி, செல்வா. இது போன்ற அறிவிப்புகளை விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்) பகுதியில் இடலாம். --இரவி (பேச்சு) 14:37, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

கலைஞர் தொலைக்காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

தொகு

நாளை காலை (இந்திய நேரம் சூலை 3, காலை எட்டு மணிக்கு) கலைஞர் தொலைக்காட்சியில் பார்வதி கலந்து கொள்ளும் தமிழ் விக்கிப்பீடியா அறிமுக நிகழ்ச்சி வருகிறது. யாராவது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து போட முடிந்தால் நன்று. http://tamiltv.tv/kalaignar-tv-live/ தளத்தில் நேரடி அலைபரப்பு உள்ளது. ஆனால், அவ்வளவு நம்பகமாக இல்லை.--இரவி (பேச்சு) 14:36, 2 சூலை 2013 (UTC)[பதிலளி]

யாராவது ஒளிப்பதிவு செய்தீர்களா?--Kanags \உரையாடுக 11:44, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 12:37, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

பள்ளிக்கு பெருமை

தொகு

கலைஞர் தொலைக்காட்சியில் பார்வதிஸ்ரீ கலந்து கொண்ட நிகழ்ச்சியை, தேனி. மு. சுப்பிரமணி அவர்கள் எனக்கு செல்பேசியில் தெரிவித்த உடன் நான் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு சென்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியை குடும்பத்துடன் கண்டு மகிழ்தோம்! ஓவ்வொரு கல்வி நிறுவனத்திலும் பார்வதிஸ்ரீ மாதிரி பலர் இருந்தால் தமிழ் விக்கிப்பீடியாவின் பெருமையை அளவிட முடியாது!

நான் கற்ற எங்கள் ஊர் பள்ளியில் உள்ள வாசகம்.
இப்பள்ளியினால் நான் பெருமை பெற வேண்டும்
பள்ளியும் என்னால் பெருமையுற வேண்டும்.
இங்கு
தமிழ்விக்கிப்பீடியாவினால் நான் பெருமை பெற வேண்டும்
:தமிழ்விக்கிப்பீடியாவும் என்னால் பெருமையுற வேண்டும்.
பார்வதிஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்து
இவர்போல் மேலும் பலர் பங்களிக்க வரவேற்பு--ஸ்ரீதர் (பேச்சு) 14:58, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

//பெறுமை// பெருமை ---தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:12, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா?

தொகு
 
உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் கட்டுரை விரிவாக்க வேலை நடந்து கொண்டிருக்கிறது என்கிற வார்ப்புருச் செய்தி இடம் பெற்றிருக்கிறது (பார்க்க: படம்) என்பது உங்களுக்குத் தெரியுமா? தவறாக இடம் பெற்றிருக்கும் என நினைக்கிறேன். இதை நீக்கம் செய்து கூடுதலாக உங்களுக்குத் தெரியுமா? செய்திகளைச் சேர்க்கலாம்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 04:32, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாற்றங்கள் செய்துவிட்டேன். ஆனாலும் முதற் பக்கத்தில் பழைய மாதிரியே உள்ளது. தெரிந்தவர்கள் உதவவும். --அராபத் (பேச்சு) 04:44, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
மாறிவிட்டது. மாற்றங்கள் தெரிய நேரம் தேவையென நினைக்கிறேன். --Anton (பேச்சு) 05:15, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
அடிக்கடி பார்க்கப்படும் பக்கங்களை ஒரு இடைப்பொதியில் சேர்த்து வைப்பார்கள். நமது உலாவிகளிலும் சில வேளைகளில் ஒரு படி இருக்கும். அதனால் மாற்றங்கள் இற்றைப்படாமல் இருக்கலாம். அவ்வாறான நேரங்களில் இந்த இணைப்பின்வழி பொதியை இற்றைப்படுத்தலாம். உலாவியில் உள்ள பொதியைக் கடந்து செல்ல Ctrl-F5 அல்லது Ctrl-r போன்ற விசைகள் உதவும். -- சுந்தர் \பேச்சு 06:02, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
அண்மையில் முதற்பக்க வார்ப்புருவில் செய்யப்பட்ட மாற்றங்களே இதற்குக் காரணமா? அது தான் காரணம் என்றால், இதனை எதிர்காலத்தில் தவிர்க்க என்ன செய்யலாம்?--Kanags \உரையாடுக 08:11, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

இல்லை. குறிப்பிட்ட பகுதி இன்றைப்படுத்தப்படாமல் போனதே இதற்கு முக்கிய காரனம். பார்க்க.. அடுத்த மாற்றமும் கூட இன்னும் இன்றைப்படுத்தப்படாமல்தான் உள்ளது.--அராபத் (பேச்சு) 08:46, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

அதைத்தான் நான் குறிப்பிடுகிறேன். உங்களுக்குத் தெரியுமா பகுதி தானியங்கியாக ஒவ்வொரு வாரமும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் தவறாமல் அடுத்த வாரத்துக்குரியதை இவ்வாரமே இற்றைப்படுத்த வேண்டும். அல்லாவிட்டால் அடுத்த வாரமும் இதே பிரச்சினை எழும்.--Kanags \உரையாடுக 09:51, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

இது என்ன? ஏற்கனவே சூரியா வேலை நடந்துகொண்டிருக்கிறது வார்ப்புரு இருந்தால் தானியங்கி தானாக எடுக்காது என்றாரே. இது புதுச்சிக்கல் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:47, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

சூரியா அப்படியா சொன்னார்?? ஆனால் யூவி இந்தச் சிக்கல் ஏற்படக்கூடும் என சொல்லியிருந்தார். பார்க்க.. --அராபத் (பேச்சு) 12:11, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
அராபத், தயவுசெய்து மேலே தகவற்பெட்டியில் நான் குறிப்பிட்டுள்ள மாதங்களின் பெயர்களைப் பயன்படுத்தவும். மேலும், இப்போதைக்கு "வேலை நடந்துகொண்டிருக்கிறது" என்ற வார்ப்புரு இருப்பின் இற்றைப்பாடு நடக்காதவண்ணமே நிரல் வேலைசெய்துகொண்டிருக்கிறது. எனவே, நீங்கள் அதனைப்பற்றி கவலைகொள்ளத் தேவையில்லை. வேறேதேனும் விளக்கம் தேவைப்படின் கேட்கவும். சிக்கல்களிருப்பினும் கூறவும் நிரலில் தேவையாதன திருத்தங்கள் செய்கிறோம். நன்றி.-- சூர்யபிரகாஷ்  உரையாடுக 01:33, 12 சூலை 2013 (UTC)[பதிலளி]

விக்கிபீடியா கட்டுரைப் போட்டி

தொகு

பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டுரைகள் மட்டும் தான் , போட்டிக்கு உரியவையா? ரோஹித் (பேச்சு) 07:44, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆம். அனைத்து விக்கிப்பீடியாக்களிலும் இருக்க வேண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய கட்டுரைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மேம்படுத்துவதே இப்போட்டியின் நோக்கம்.--இரவி (பேச்சு) 07:44, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஆத்திரேலிய வானொலியில் பார்வதியின் பேட்டி

தொகு

ஆத்திரேலியாவின் அரசு வானொலியான சிறப்பு ஒலிபரப்புச் சேவையில் (SBS) பார்வதி அவர்களின் பேட்டி இன்று (சூலை 3) ஒலிபரப்பினார்கள். மிக அருமையாக செய்திருந்தார். இந்த இணைப்பில் கேட்கலாம். நாளை அவர்களின் இணையத்தளத்தில் பேட்டி மட்டும் கேட்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் முகநூலிலும் நாளை இற்றைப்படுத்துவார்கள்.--Kanags \உரையாடுக 12:56, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

நான் சென்று பார்த்தபோது முன்னோட்டமாக பேட்டியின் ஒருபகுதியை மட்டும் ஒலிபரப்பினார்கள். நாளை பார்க்கலாம். தொலைக்காட்சிப் பேட்டியையும் யாராவது பதிவு செய்தி போட்டால் நன்று. -- சுந்தர் \பேச்சு 13:33, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
ஆஸ்திரேலிய வானொலிப் பேட்டி

கோப்புப் பதிவேற்றப்பட்டுள்ளது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:11, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

இன்னும் பார்வதி அம்மையாரின் பேட்டி வேற்று கிரகங்களில் தான் வெளியாகவில்லை என நினைக்கிறேன். அதையும் முடித்தால் அகிலாண்ட பார்வதி தான். இப்போதே முன்பதிவு செய்யவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]

முழுவதும் கேட்டேன். நன்றாகப் பேசியுள்ளீர்கள். -- சுந்தர் \பேச்சு 16:51, 3 சூலை 2013 (UTC)[பதிலளி]
பார்வதியின் புகழ் பாரெங்கும் பரவுவதைக் கண்டு மகிழ்ச்சி. உங்களுடன் பாரெங்கும் பயணிக்கும் தமிழ் விக்கிப்பீடியா மென்மேலும் பெருமையடைகிறது. நன்றாகப் பேசியுள்ளீர்கள் !! வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 03:23, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் பார்வதி! தமிழ் விக்கியின் அறிவிக்கப்படாத கொ.ப.செ நீங்கள்தான் :)--அராபத் (பேச்சு) 08:36, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் பார்வதி ஸ்ரீ அவர்களே! -- :) நிஆதவன் ( உரையாட ) 09:55, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
பேட்டியை நானும் கேட்டேன். நன்றாக இருந்தது. ஒரு கலக்கு கலக்குறதுன்னு முடிவோட இருக்கிறீங்க.  :) மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பார்வதி. --கலை (பேச்சு) 11:02, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் பார்வதி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:12, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
அருமையான வானொலிப் பேட்டி, நன்றாக இருந்தது--சங்கீர்த்தன் (பேச்சு) 15:44, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் - சூர்யபிரகாஷ்  உரையாடுக 01:34, 12 சூலை 2013 (UTC)[பதிலளி]

முகுந்துக்கு தமிழ்க் கணிமைக்கான சுந்தர இராமசாமி விருது

தொகு

நமது விக்கிப்பீடியா பங்களிப்பாளரும் எ-கலப்பை உருவாக்குநரும் தமிழா திட்ட நிறுவனருமான முகுந்துக்கு 2012ஆம் ஆண்டுக்கான தமிழ்க்கணிமைக்கான சுந்தர இராமசாமி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். இன்று இணையத்தில் தமிழில் எழுதும் பலரும் எ-கலப்பை கொண்டே எழுதத் தொடங்கினோம்  ! வாழ்த்துகள், முகுந்த்.--இரவி (பேச்சு) 12:36, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்.--Kanags \உரையாடுக 12:42, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம், வாழ்த்துகள் முகுந்து! உங்களுக்கு இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:08, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
விண்டோசைப் பயன்படுத்தும்போதெல்லாம் எ-கலப்பைதான் எனக்கும் துணை நின்றது. அதன் தொடர்ச்சியாக இப்போது ஆண்டிராய்டிலும் துணைபுரிகிறது. அடிப்படையான பயனை நல்கும் கருவியைக் கட்டற்ற நிரலாக வெளியிட்ட முகுந்துக்கு இவ்விருது முற்றிலும் பொருத்தமானதே. எ-கலப்பை மென்பொருளை வளர்க்கப் பங்களித்த மற்ற பங்களிப்பாளர்களுக்கும் நன்றி. -- சுந்தர் \பேச்சு 15:03, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள் முகுந்து. நானும் எகலப்பை கொண்டே தமிழ் தட்டச்ச பழகினேன்!!! -- மாகிர் (பேச்சு) 15:21, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 15:45, 4 சூலை 2013 (UTC)[பதிலளி]
முகுந்து எ-கலப்பை மட்டுமல்ல, பலத் தமிழ் கணிமை திட்டங்களில் பங்கேற்றவர். அவருக்கு இவ்விருது பொருத்தமானதே. அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகள் முகுந்து !!--மணியன் (பேச்சு) 02:52, 5 சூலை 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--Nan (பேச்சு) 12:01, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

பல்வேறு கணிமைத் திட்டங்களில் இவரது சாதனைகளோடு, 2003 ஆம் ஆண்டில் பின்வரும் இடுகையை மடற்குழு ஒன்றில் இட்டுத் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கத்துக்கும், தமிழ் விக்கிப்பீடியாவில் எனது பங்களிப்புக்கும் அடியெடுத்துக் கொடுத்தமைக்காகவும், அவருக்கு இவ்விருது கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சி அடைவதுடன் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடையீர்,
விக்கிபீடியா என்றொரு வலைத்தளம் இருக்கிறது, இது வலையிலுள்ள இலவச 
கலைக்களஞ்சியம். இதனை உலகெங்கிலும் உள்ள பல ஆர்வலர்கள் சேர்ந்து 
உருவாக்கி வருகின்றனர். இது ஆரம்பிக்கப்பட்டது ஜனவரி 2001ல் 
ஆரம்பிக்கப்பட்டு, நாளொரு மேனியாக விரைவாக வளர்ந்துவரும் 
கலைக்களஞ்சியமாகும்.

இன்றையதேதியில் ஒரு லட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து எழுநூற்றுப் 
பண்ணிரண்டு கட்டுரைகள் (ஆங்கிலப்பதிப்பில்) இருக்கிறது.

இதனை இந்த வலைத்தளத்தில் பார்வையிடலாம். http://en.wikipedia.org/

நீங்களும் விருப்பப்பட்டால், இந்த கலைக்களஞ்சியத்தில் உடனே கட்டுரைகளை 
எழுதலாம். எங்கே கிளம்பிட்டீங்க.... சற்று பொறுங்க...

இந்த பிராஜக்ட் ஆங்கிலத்திற்கு மட்டுமில்லை. மற்ற மொழிகாரர்களும் 
அந்தந்த மொழியில் இந்த கலைக்களங்ஞ்சியத்தை உருவாக்கலாம்.

நம்ம ஹிந்தி ஆட்கள் ஏற்கனவே முந்திகொண்டார்கள். அவர்கள் 
கலைக்களஞ்சியத்தை http://hi.wikipedia.org/  இல காணலாம்.

ஹிந்திகாரங்க மட்டும்தான் ஆரம்பிச்சிருக்காங்ன்னு திரும்பினா.. 
அட நம்ம சகோதரர்கள் மலையாளிகளும் (http://ml.wikipedia.org/ )
ஆரம்பிச்சிட்டாங்க...

ஆனால் தமிழுக்கு இன்னும் யாரும் ஆரம்பிக்கவில்லை...
தமிழ் பெரியோர்களே உடனே தமிழ் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை 
ஆரம்பித்து தமிழில் (யூனிகோட் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும்) 
ஒரு நிரந்தர கலைக்களஞ்சியத்தை அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
முகுந்தராஜ்

---மயூரநாதன் (பேச்சு) 10:08, 6 சூலை 2013 (UTC)   விருப்பம்--Nan (பேச்சு) 12:01, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

தகவலைப் பகிர்ந்து கொண்ட மயூரநாதனுக்கு நன்றிகள்.--Kanags \உரையாடுக 12:22, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]


முகுந்து ஒரு நல்ல முன் எடுத்துக் காட்டு. மிகவும் முக்கியமான மென்பொருட்களை உருவாக்கியது மட்டும் அல்லாமல் அதை முறைப்படி கட்டற்ற முறையில் பகிர்ந்தது தமிழில் கட்டற்ற அடித்தளம் ஒன்றை உருவாக்கினார். மிகப் பொருத்தமான விருது. --Natkeeran (பேச்சு) 12:41, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக என்னுடைய பழைய மடலை இங்கு இட்ட மயூரநாதனுக்கும் நன்றி. தமிழ் விக்கிப்பீடியா அபரிதமாக வளர்ந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவில் நீண்ட காலம் மும்முரமாக பங்கேற்காமல் போனது குறித்து சிறிது குற்றவுணர்வும் ஏற்படுகிறது. இனி அவ்வப்போது பங்களிப்பது என்று சங்கல்பம் எடுத்துள்ளேன். --Mugunth (பேச்சு) 12:52, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
இந்த மடலைப் பகிர்ந்ததற்கு நன்றி, மயூரநாதன். -- சுந்தர் \பேச்சு 14:22, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]
  • வாழ்த்துகள் முகுந்து! சுந்தர இராமசாமி விருது பெற்றதோடு, மயூரநாதனும் சிறீதரனும் பகிர்ந்த மடற்பதிவுகள் பெருமகிழ்ச்சி தருகின்றன. நல்ல ஆவணப்பதிவு. நன்றி மயூரநாதன், சிறீதரன்.--செல்வா (பேச்சு) 23:20, 8 சூலை 2013 (UTC)[பதிலளி]

மாவட்ட வார்ப்புருக் குறிப்புகளின் வேறுபாடுகள்

தொகு

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களுக்கான வார்ப்புருக்களில் இருக்கும் குறிப்புகள் அனைத்தையும் ஒரே மாதிரியாக அமைப்பது நல்லது. ஒன்றுக்கொன்று மாறுபட்டிருப்பது சரியாக இல்லை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:12, 6 சூலை 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 13:35, 7 சூலை 2013 (UTC)[பதிலளி]

நூலைப் பற்றிய கட்டுரைகள்

தொகு

தமிழ் விக்கியில் நூல்கள் பற்றிய கட்டுரைகள் எவ்வாரு எழுதப்பட வேண்டும் என்பதற்கான ஒரு கையேடு உதவியாக அமையும். ஒரு தலம், ஒரு பாடல், ஒரு நயம் (நூல்) என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள சுருக்கம் ஏற்றுக் கொள்ளத் தக்கதா? அதன் நடை நூலை வாசிப்பது போன்று அமைந்துள்ளதால் அது சுருக்கமா என்பதில் சற்றுத் தெளிவில்லாமல் உள்ளது. மேலும் சுருக்கம் மிகவும் நீண்டு விட்டது போன்றும் தெரிகிறது.

அடுத்தது நூலில் நூலாசிரியர் பற்றி எவ்வளவு விளக்கங்கள் சேர்ப்பது பொருத்தம். ஒருவர் பல நூல்கள் எழுதி இருந்தால், அதே தகவலை எல்லாக் கட்டுரைகளிலும் சேர்க்க வேண்டுமா.

நூலின் விலை எங்கு பெற்றுக் கொள்ளலாம் போன்ற தகவல்களைச் சேர்ப்பது பொருத்தமன்று.

விக்கிப்பீடியா பேச்சு:நூல்கள் பற்றிய கட்டுரைகள்

--Natkeeran (பேச்சு) 17:28, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

என்னைக் கேட்டால் நூலின் உள்ளடக்கங்கள் வரும்போது அதன் தலைப்புகளை மட்டும் கொடுத்தால் போதும் என்பேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:57, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]

உள்ளடக்க தலைப்புகள் மட்டும் இடுவது பாரபட்சமான முடிவாக மாறும் அபாயம் உள்ளது. பொன்னியின் செல்வன் நூலில் உள்ள அனைத்துமே சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கதைமாந்தர்களென நாற்பது கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டுரையில் நிகழும் மாற்றங்களை கொண்டு வரைமுறைகள் கொண்டுவந்தால் பின்நாட்களில் அவை பிரட்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே ஆங்கில விக்கியில் புகழ்பெற்ற ஹாரிபாட்டர், அரேபிய இரவுகள் போன்ற நூல்களை மாதிரிகளாக ஏற்கலாம். அத்துடன் வரைகலை நூல்களுக்கும் ஏற்றவாறு தீர்மானம் அமைய வாழ்த்துகள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:25, 11 சூலை 2013 (UTC)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:25, 11 சூலை 2013 (UTC)[பதிலளி]
உரையாடலை விக்கிப்பீடியா பேச்சு:நூல்கள் பற்றிய கட்டுரைகள் பக்கத்தில் தொடர வேண்டுகிறேன். எனது கருத்தை அங்கு இட்டுள்ளேன்.--இரவி (பேச்சு) 14:44, 12 சூலை 2013 (UTC)[பதிலளி]

இலங்கை இனப்பிரச்சினை பகுப்புக்கள்

தொகு

இலங்கை இனப்பிரச்சினை இங்கே உங்கள் ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. நன்றி. --Tamil23 (பேச்சு) 10:49, 16 சூலை 2013 (UTC)[பதிலளி]

புதியவர்களுக்கான பயிற்சியிடம்+கட்டுரைப் போட்டிக்கு இரு இடமா?

தொகு

புதியவர்கள் தயங்காமல், பதிவுப்பயிற்சியை செய்யுமிடம், யாவருக்கும் தெரியும் வகையில், இடப்பக்கப் பட்டியலில் இருப்பின் சிறப்பான தூண்டுதலாக அமையும். அதோடு ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பது போல, புகுபதிகை செய்தவுடன், பயனர் பெயருக்கு அடுத்து அமையும் படியும் செய்யக்கோருகிறேன். இப்பொழுது கட்டுரைப் போட்டியை பற்றிய அறிவிப்பு, இரு இடங்களில் (இடப்பக்கப்பட்டியல் பகுதியிலும்) இருப்பதைத் தவிர்க்கலாம். தெரிந்தவர்களுக்கான வசதியை விட, தெரியாதவர்களுக்கான வசதிகளே, நம் தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க உறுதுணையாக இருக்கும் என்பதால், இதனை முன்மொழிகிறேன்.வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 13:47, 17 சூலை 2013 (UTC)[பதிலளி]

த. உழவன், தற்போதைக்கு பக்கப்பட்டையில் மணல் தொட்டிக்கான இணைப்பு சேர்த்துள்ளேன். ஆங்கில விக்கியில் உள்ளது போல் புகுபதிந்த பயனர் பெயர் அருகேயும் ஒரு மணல்தொட்டி இணைப்பு வருமாறு செய்தால் நன்றாக இருக்கும். எந்த மீடியாவிக்கிப் பக்கத்தில் இந்த மாற்றத்தைச் செய்வது என்று அறிந்தவர்கள் கண்டு சொன்னால் சேர்த்து விடலாம். தள அறிவிப்பை மறைத்து வைப்பவர்களுக்கான ஒரு நினைவூட்டலாகவும் உலாவல் கருவியாகவும் பக்கப்பட்டையில் உள்ள போட்டி அறிவிப்பு செயல்படும் என்று நினைக்கிறேன். எனவே, அது இருக்கட்டும்.--இரவி (பேச்சு) 07:41, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]
//ஆங்கில விக்கியில் உள்ளது போல் புகுபதிந்த பயனர் பெயர் அருகேயும் ஒரு மணல்தொட்டி இணைப்பு வருமாறு செய்தால் நன்றாக இருக்கும்.//  Y ஆயிற்று :) --சண்முகம்ப7 (பேச்சு) 10:19, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]
எப்போதோ இதுபற்றிக் கேட்டிருந்தேன். நன்றி சண்முகம்.--Kanags \உரையாடுக 10:26, 18 சூலை 2013 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி.நேற்று முழுவதும், மாதம் ஒருமுறை வரும் தொடர்மின்தடை(9மணிநேரங்கள்) என்பதால் உடனுக்குடன் ஏற்படுத்திய மாற்றங்களை காண முடியவில்லை. மேலும், மெருகூட்ட சில எண்ணங்களைக் கூற விரும்புகிறேன். பயிற்சியிடம் என்று குறிப்பிடலாமே? மணல்தொட்டி என்ற சொல்லுக்கான பொருள், புதியவர்களுக்கு புரியாது. அதோடு, தற்போதுள்ள இணைப்புகளை வரிசை மாற்றினால், இன்னும் நெருக்கமாக இருக்குமென்று எண்ணுகிறேன்.
முதற் பக்கம்
அண்மைய மாற்றங்கள்
புதிய கட்டுரை எழுதுக
கட்டுரைப் போட்டி
தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ஏதாவது ஒரு கட்டுரை
தமிழில் எழுத
எழுதிப் பழக
தொடர்புக்கு

----------------------------------------------------------------------------------------------------
என்ற இப்பொழுதுள்ள வரிசையை, கீழ்கண்ட வரிசைப்படி அமைக்கலாமா?
-------------------------------------------------------------------------------------------------------

முதற் பக்கம்
சிறப்புக் கட்டுரைகள்
ஏதேனுமொரு கட்டுரை
கட்டுரைப் போட்டி
புதியன எழுதுக
பயிற்சியிடம்
தமிழில் எழுத
அண்மைய மாற்றங்கள்
தொடர்புக்கு
 

--≈ உழவன் ( கூறுக ) 11:56, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

மணல்தொட்டி என்பது sandbox என்பதன் நேரடி மொழிபெயர்த்தலாக தமிழில் பொருளின்றி விளங்குகிறது. இதனை பயிற்சியிடம்/பயிற்சிப்பெட்டி அல்லது தொகுப்பயிற்சி என (அல்லது இன்னும் பொருத்தமான தலைப்பிற்கு) மாற்றுவதை வரவேற்கிறேன். ஆனால் village pump என்பது ஆலமரத்தடி என்று தமிழ் பண்பாட்டுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்புக்காக என்று குறுகிய நோக்கில் அல்லாது பலதும் உரையாடப்படும் (சிற்றூர்) ஆலமரத்தடி என்றே குறிப்பிடலாமே...மேலும் கருவிப்பட்டையில் இப்பக்கத்தை மேற்கோள் காட்டு என்ற சிறப்புப் பக்கத்தில் உள்ள ஆங்கிலத்தை எவ்வாறு தொகுப்பது ? அதையும் data item என்பதையும் தமிழாக்கினால் நன்று.--மணியன் (பேச்சு) 05:09, 20 சூலை 2013 (UTC)[பதிலளி]

த. உழவன், விக்கிப்பீடியாவுக்குத் திரும்ப வரும் பங்களிப்பாளர்கள், வாசகர்கள் ஆகிய இருவருக்கும் அடிக்கடி பயன்படக்கூடிய இணைப்புகளைத் தற்போதுள்ள வரிசையில் தர முயன்றுள்ளேன். மணியன், மணல்தொட்டியின் பெயர் பொருத்தம் குறித்து ஏற்கனவே எங்கோ உரையாடியுள்ளோம். முற்காலத்தில் மணலில் எழுதிப் பழகும் வழக்கம் தமிழ்நாட்டிலும் இருந்துள்ளதால் மணல்தொட்டி ஓரளவு பொருத்தமான பெயர் தான் என்று நினைக்கிறேன். சில வேளைகளில், புதுமையான இந்தப் பெயரே கூட வாசகர்களைத் தூண்டலாம். அதே வேளை, ஆலமரத்தடி, மணல்தொட்டி போன்ற பெயர்கள் புதியவர்களுக்குச் சட்டென புரியுமா என்ற கவலையும் உள்ளதால், இடப்பக்க இணைப்புகளில் எழுதிப் பழக, தொடர்புக்கு என்ற பொதுவான சொற்களைப் பயன்படுத்தினேன்.--இரவி (பேச்சு) 15:58, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

இரு இடங்களில் ஒரே நோக்கமுள்ள இரு பெயர்கள் நல்ல நடைமுறை . இதுபோல, பல சொற்கள் கொண்டு அவ்வப்போது, மாற்றினால், ஒருவேளை நல்விளைவுகள் வரவாய்ப்புள்ளது. அப்பொழுது இந்த பயிற்சியிடம் என்பதையும் எடுத்தாள்க. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 16:10, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஒன்றா? வெவ்வேறா?

தொகு

திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலும் திருவாரூர் தியாகேசர் கோயிலும் திருவாரூர் தியாகராஜர் கோயிலும் வெவ்வேறு கோயில்களா? ஒரே கோயிலுக்கு வழங்கப்படும் வெவ்வேறு பெயர்களா?--பொன்னிலவன் (பேச்சு) 04:58, 19 சூலை 2013 (UTC)[பதிலளி]

Pywikipedia is migrating to git

தொகு

Hello, Sorry for English but It's very important for bot operators so I hope someone translates this. Pywikipedia is migrating to Git so after July 26, SVN checkouts won't be updated If you're using Pywikipedia you have to switch to git, otherwise you will use out-dated framework and your bot might not work properly. There is a manual for doing that and a blog post explaining about this change in non-technical language. If you have question feel free to ask in mw:Manual talk:Pywikipediabot/Gerrit, mailing list, or in the IRC channel. Best Amir (via Global message delivery). 13:49, 23 சூலை 2013 (UTC)[பதிலளி]

வழிகாட்டல் நிகழ்படங்கள்

தொகு

இங்கு மயூரன் உருவாக்கிய பல நிகழ்படங்கள் உள்ளன. அவற்றை அந்தந்த பகுதியில் தெரிவது போல இணைக்க வேண்டும். இதுபற்றிய பிறரின் எண்ணமறிய ஆவல். அத்தகைய நிகழ்படங்கள் தேவையெனின், நான் அவற்றை இற்றைப்படுத்தித் தரவும், புதியன உருவாக்கவும் ஆவலாக உள்ளேன். --≈ உழவன் ( கூறுக ) 16:20, 24 சூலை 2013 (UTC)[பதிலளி]

ஏர்செல் வழங்கும் இலவச விக்கிப்பீடியா சேவை

தொகு

http://economictimes.indiatimes.com/tech/internet/aircel-to-offer-free-mobile-wikipedia-access/articleshow/21334289.cms

இந்த சேவை எப்போதிருந்து தொடங்குகிறது. அல்லது தற்போதே உள்ளதா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:12, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

பார்க்க wmf:Press releases/Aircel partners with Wikimedia Foundation--சண்முகம்ப7 (பேச்சு) 17:39, 25 சூலை 2013 (UTC)[பதிலளி]

VisualEditor and your Wikipedia

தொகு

(Please translate this message)

Greetings,

The Wikimedia Foundation will soon turn on VisualEditor for all users, all the time on your Wikipedia. Right now your Wikipedia does not have any local documents on VisualEditor, and we hope that your community can change that. To find out about how you can help with translations visit the TranslationCentral for VisualEditor and read the easy instructions on bringing information to your Wikipedia. The User Guide and the FAQ are very important to have in your language.

We want to find out as much as we can from you about VisualEditor and how it helps your Wikipedia, and having local pages is a great way to start. We also encourage you to leave feedback on Mediawiki where the community can offer ideas, opinions, and point out bugs that may still exist in the software that need to be reported to Bugzilla. If you are able to speak for the concerns of others in English on MediaWiki or locally I encourage you to help your community to be represented in this process.

If you can help translate the user interface for VisualEditor to your language, you can help with that as well. Translatewiki has open tasks for translating VisualEditor. A direct link to translate the user interface is here. You can see how we are doing with those translations here. You need an account on Translatewiki to translate. This account is free and easy to create.

If we can help your community in any way with this process, please let me know and I will do my best to assist your Wikipedia with this |exciting development. You can contact me on my meta talk page or by email. You can also contact Patrick Earley for help with translations and documents on Mediawiki. We look forward to working with you to bring the VisualEditor experience to your Wikipedia! Keegan (WMF) (talk) 19:14, 30 சூலை 2013 (UTC)[பதிலளி]

Distributed via Global message delivery. (Wrong page? Fix here.)
அருமையான தகவல். தமிழ் விக்கியிலும் தற்போது நிரலில்லாமல் தொகுக்க முடியும்... வரவேற்கத்தக்கது. :-) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:03, 1 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவிலுள்ள நூற்கட்டுரைகளை மேற்கோளாக காட்டலாமா?

தொகு

விக்கிப்பீடியாவில் நூல் பற்றிய கட்டுரைகள் பல உள்ளன. அக்கட்டுரையையே, அந்நூலில் வரும் மற்ற செய்திகள் வேறு கட்டுரையில் இருந்தால் மேற்கோள் காட்டலாமே? நூல் தகவல்சட்ட வார்ப்புவிலுள்ள தகவலில் ஒரு எண் போன்று வரச்செய்து அதை வார்ப்புருவாக இட்டால் மேற்கோள் வருமாறு செய்ய முடியுமா? இதனால் அந்த நூல் கட்டுரையில் உள்ள தகவற்சட்டத்தில் மாற்றம் செய்தால் அது அனைத்து மேற்கோள்களிலும் இற்றையாகும்.

இதே போல் திரைப்படங்கள் போன்ற மற்றவைக்கும் செய்யலாம். எ.கா. {{நூல்|1}}, {{திரைப்படம்|1}}--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:09, 3 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

இளந்தமிழர் இலக்கியப் பட்டறை

தொகு
 
சென்னையில் நடைபெற்ற இரண்டாம் இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் இணையத் தமிழ் எனும் தலைப்பில் உரை

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப் பெற்ற பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் 200 பேருக்கு “இளந்தமிழர் இலக்கியப் பட்டறை” எனும் நிகழ்வின் மூலம் படைப்பாற்றல் திறன் பயிற்சி சென்னை, அடையாறு, இந்திராநகர் இளைஞர் விடுதியில் அளிக்கப்பட்டு வருகிறது. 01-08-2013 முதல் 07-08-2013 வரை நடைபெறும் இந்நிகழ்வில் 03-08-2013 அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் “இணையத் தமிழ்” எனும் தலைப்பில் உரையும், தமிழ் எழுத்துருக்கள், தமிழ் மின்னஞ்சல்கள், தமிழ் மடலாடற் குழுக்கள் (மின் குழுமங்கள்), தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணைய இதழ்கள், தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் விக்சனரி, தமிழ் மின் நூலகங்கள், தமிழ் தளங்கள், பிற வழிமுறைகள் போன்றவைகள் குறித்த அறிமுகமும், இவைகளில் பங்களிப்பது குறித்த பயிற்சியும் என்னால் அளிக்கப்பட்டது. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:13, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  1. அருமை சுப்பிரமணி. வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:14, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  2.  -வாழ்த்துக்கள்.அடுத்த முறை கொஞ்சம் நம்ப பக்கம் திருப்பி விடுங்க!--≈ உழவன் ( கூறுக ) 08:34, 5 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

Do all Wikipedia articles lead to Philosophy? (ஆங்கில விக்கி) (94.52% ஆம்)

தொகு

தாவரங்கள் குறித்த கட்டுரைகள் விரிவாக்கம்

தொகு

இப்பக்கத்தில் கட்டுரைகள் விரிவாக்கத் திட்டமொன்றில், கருத்திட அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதன் அடிப்படையில், இங்கு இதுவரை இல்லாத பல தாவரங்களை உருவாக்க எண்ணியுள்ளேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 19:04, 9 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

நல்லது பங்களிக்க விருப்பம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:57, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
பங்களிக்க நேரம் கிடைக்கையில் நானும் பங்களிக்க முயல்கின்றேன்.--கலை (பேச்சு) 10:37, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

55 ஆயிரம் கட்டுரைகள்

தொகு

இன்று 55,000 கட்டுரை எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். ---மயூரநாதன் (பேச்சு) 18:29, 11 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம்-- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 08:13, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் 237 நாட்களில் 5000 கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:13, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அருமையான செய்தி. இம்முறை பல கட்டுரைகளை விரிவாக்கவும் செய்துள்ளோம். -- சுந்தர் \பேச்சு 08:45, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் --கலை (பேச்சு) 12:47, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 02:33, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம் சுந்தர் கூறியது போலவே நாம் பல கட்டுரைகளை விரிவாக்கியதற்கும் மகிழ்ச்சி அடைகிறேன். 55,000ஆவது கட்டுரையை யார் எழுதினார் அது என்ன கட்டுரை?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:28, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
அந்த 55,000மாவது கட்டுரையை எழுதியவன் நான் தான் என்று நினைக்கிறேன் புவியியல் தொடர்பான கட்டுரை! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:52, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:58, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:52, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
  • தமிழ் விக்கியின் வளர்ச்சி உள்ளத்திற்கு நிறைவு தருகிறது. கட்டுரைகளின் தரம் உயர வேண்டும். குறிப்பாக, எல்லாக் கட்டுரைகளுக்கும் ஆதாரம் கட்டாயமாகத் தருவதில் பயனர்கள் அதிக கவனம் செலுத்தினால் த.வி.யின் கட்டுரை எண்ணிக்கையோடு நம்பகத் தன்மையும் வளரும். வாழ்த்துகள்!--பவுல்-Paul (பேச்சு) 14:30, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
மிகுந்த மகிழ்ச்சியான செய்தி ! ஒவ்வொருமுறையும் குறிப்பிட்ட எண்ணிக்கையை எட்டியவுடன் மகிழ்வதோடு தரத்தைக் குறித்த நெகிழ்ச்சியும் கொள்கிறோம். பிரசவகால உறுதிமொழி போல தரத்தை உயர்த்த உறுதி பூண்டாலும் அதனை நிலையாக கடைபிடிக்க வேண்டிய நேரமும் ஆட்களும் இன்றி திணறுகிறோம். எனவே தற்போது கூடிவரும் பங்களிப்புக்களும் புதிய பயனர்களின் முனைப்புமே நம்பிக்கை ஊட்டுவனவாக உள்ளன. முனைப்புள்ளவர்களுக்கு நேரமும் கிட்ட வாழ்த்துகிறேன் !! அணுவினையில் உய்யுமை எனக் கூறுவார்கள்..இத்தகைய நிலை எய்திட இந்த எண்ணிக்கை துணைபுரியும் என நம்பிக்கையுடன் இதனை எட்ட பங்களித்த தமிழுள்ளங்களுக்கு பாராட்டுதல்களை தெரிவிக்கிறேன். --மணியன் (பேச்சு) 16:23, 13 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா 2013 புகைப்படங்கள்

தொகு

User:HK_Arun/Wikimania_2013.--Kanags \உரையாடுக 13:25, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கிமேனியா’ 2013 புகைப்படங்கள் அனைத்தும் அருமை.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:35, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நல்ல படங்கள். தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒவ்வொரு ஆண்டும் விக்கிமேனியா மாநாட்டில் ஆர்வத்துடன் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சி. ---மயூரநாதன் (பேச்சு) 16:39, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நல்ல தொகுப்பு. நேரில் சென்ற ஒரு மகிழ்ச்சியைத் தந்தது. ஆக்கிய பயனர்:HK_Arun ஐத் தான் காண இயலவில்லை :( அவருக்கு நன்றிகள் !!--மணியன் (பேச்சு) 19:54, 14 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நல்லாயிருக்கு. அருண் கமராவோரு அங்குமிங்கும் திரிகிறேரே. காணவில்லையா?(:.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:47, 15 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய கட்டுரை

தொகு

இந்த வார தமிழ் இந்தியா டுடே இதழில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. அண்மைய பல ஊடகக் கட்டுரைகளைக் காட்டிலும் தெளிவாகவும் சரியாகவும் இருப்பது சிறப்பு :) --இரவி (பேச்சு) 04:58, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம் , நன்று -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:04, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

சோடாப்பாட்டிலின் உண்மைப் பெயர் சரியாக உள்ளதா? மேலும் எனக்குத் தெரிந்து மிக இளைய பயனர் மாதவன் ஆயிற்றே. இதை ஏற்கனவே பார்வதியின் பேட்டி வெளியாகும் போதே கூறியிருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:02, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பத்துவயதா???? எனக்கே 13 , மதனாகரனுக்கு 16 , மாதவன் 11 , கிருத்திகன் ? , பிரபன் 13 , அபிராமி ? . இவர்கள் தான் மாணவர்களாகவும் சிறுவர்களாகவும் இருக்க வேண்டும். (எனக்குத்தெரிந்த வரையில்) வேறும் பலர் இருந்திருக்கலாம். கவனத்திற்கொள்ள, தென்காசியார் கூறியது போல் :) -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:01, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
எழுத ஊக்கம் தரக் கூடிய ஒரு கட்டுரை. --Natkeeran (பேச்சு) 17:25, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
நல்ல படங்களுடன் கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. பல்வேறு பின்புலங்களைக் கொண்ட பயனர்களைக் குறிப்பிட்டு எழுதியிருப்பது எல்லாத் தரப்பினரையும் ஊக்குவிக்கும்படி இருக்கிறது. இது போல் பல கட்டுரைகள் வெளிவரவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:05, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]
இவ்வளவு சிறுவர்கள் தமிழ் விக்கியில் இருக்கிறார்களா? மகிழ்ச்சிக்குரிய விடயம்தான். புதிய தலைமுறை உசாராகத்தான் உள்ளது. இன்னும் பலர் சேரவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:15, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:13, 21 ஆகத்து 2013 (UTC)   விருப்பம்--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 05:23, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

  விருப்பம் -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:25, 26 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]