தமிழ்நாட்டின் அரசியல் குடும்பங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்திய ஒன்றியம் தமிழ்நாடு மாநில அரசியல் குடும்பங்களின் பட்டியல்.
க.அன்பழகன் குடும்பம் - தி. மு. க
தொகு- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த மு. கருணாநிதி.
- மு. க. சுடாலின், தற்போதைய தமிழக முதல்வர் (கருணாநிதியின் மகன்)
- மு. க. சுடாலினின் மகன் உதயநிதி சுடாலின். இவர் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராகவும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
- இந்திய அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, (கருணாநிதியின் மூத்த மகன்)
- மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (கருணாநிதியின் மகள்)
- இந்திய அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த முரசொலி மாறன்,(கருணாநிதியின் மருமகன்)
- மக்களவையின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய அரசின் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் (முரசொலியின் மகன்).
க. பொன்முடி குடும்பம் - தி.மு.க
தொகு- தமிழ்நாட்டின் தற்போதைய நீர்வளத்துறை அமைச்சர்- துரைமுருகன்
- வேலூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் (துரை முருகனின் ஒரே மகன்)
- 1936இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த பி. டி. ராஜன்.
- தமிழ்நாடு சட்டப் பேரவையின் முன்னாள் சபாநாயகரும், மாநில அமைச்சரவையின் முன்னாள் அமைச்சருமான பி. டி. ஆர். பழனிவேல்ராசன்.
- தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
துரைமுருகன் குடும்பம் - தி.மு.க
தொகு- திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினரும் திமுக பொருளாளருமான த. ரா. பாலு
- மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும், தொழில்துறை, முதலீடு மற்றும் வணிகத்துறை அமைச்சரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளருமான டி. ஆர். பி. ராஜா
வே. தங்கபாண்டியன் குடும்பம் - தி.மு.க
தொகு- அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வி.தங்கபாண்டியன்
- நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு
- தென் சென்னை மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், (வி. தங்கபாண்டியனின் மகள்).
ஐ.பெரியசாமி குடும்பம் - தி.மு.க
தொகு- 2021 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சர் ஐ.பெரியசாமி
- ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் (ஐ.பெரியசாமியின் மகன்)
அன்பில் ப.தர்மலிங்கம் குடும்பம் - தி.மு.க
தொகு- திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக)வின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான அன்பில் பி. தர்மலிங்கம்.
- முன்னாள் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ( அன்பில் ப.தர்மலிங்கத்தின் மகன்) .
- திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி (அன்பில் பொய்யாமொழியின் மகன்).
- தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருச்சிராப்பள்ளி - II அன்பில் பெரியசாமி, அன்பில் ப.தர்மலிங்கத்தின் மகன்.
- முன்னாள் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி ( அன்பில் ப.தர்மலிங்கத்தின் மகன்) .
க.அன்பழகன் குடும்பம் - திமுக
தொகு- முன்னாள் நிதியமைச்சர் க.அன்பழகன்.
- வில்லிவாக்கம் (மாநில சட்டமன்றத் தொகுதி) உறுப்பினர் அ. வெற்றியழகன் . க. அன்பழகனின் பேரன்
க.பொன்முடி குடும்பம் - தி.மு.க
தொகு- தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி
- கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் சிகாமணி (க.பொன்முடியின் மகன்).
ஆலடி அருணா (அல்லது) வி. அருணாசலம் குடும்பம் - தி.மு.க
தொகு- ஆலடி அருணா, முன்னாள் சட்ட அமைச்சர்
- முன்னாள் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆலடி பூங்கோதை ஆலடி அருணா (ஆலடி அருணாவின் மகள்).
என். வி. நடராசன் குடும்பம் - தி.மு.க
தொகு- என். வி. நடராசன் திமுகவின் நிறுவன உறுப்பினர். 1969 - 1975 இல் தமிழ்நாடு அரசில் தொழிலாளர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சராக இருந்தார்.
- முன்னாள் மக்களவை உறுப்பினர் என். வி. என். சோமு இவர் என்.வி.நடராஜனின் மகன்
- திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்விஎன் என். எஸ். கனிமொழி (என். வி. என். சோமுவின் மகள்)
- முன்னாள் மக்களவை உறுப்பினர் என். வி. என். சோமு இவர் என்.வி.நடராஜனின் மகன்
ஆற்காடு என்.வீராசாமி குடும்பம் - தி.மு.க
தொகு- ஆற்காடு என்.வீராசாமி திமுக முன்னாள் பொருளாளர், திமுக முன்னாள் அமைச்சர்.
- வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி
என்.பெரியசாமி குடும்பம் - தி.மு.க
தொகு- என். பெரியசாமி, 1989 மற்றும் 1996 தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
- கீதா ஜீவன், சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் (என்.பெரியசாமியின் மகள்) .
கேபிபி சாமி குடும்பம் - தி.மு.க.
தொகு- இந்தியாவின் தமிழ்நாடு மாநில மீன்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே. பி. பி. சாமி,
- 2021 ஆம் ஆண்டு திருவொற்றியூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் (கே. பி. பி. சாமியின் சகோதரர்) .
எஸ்.சிவசுப்பிரமணியன் குடும்பம் - தி.மு.க
தொகு- எஸ்.சிவசுப்பிரமணியன், 1989 தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார்.
- எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்.
காங்கிரசில் உள்ள குடும்பங்கள்
தொகுஇராசகோபாலாச்சாரி குடும்பம் - காங்கிரசு
தொகு- சென்னை மாகாண முதலமைச்சரும் (1937-40), சென்னை மாநிலம் (1952-54), மேற்கு வங்க ஆளுநரும் (1946-48), இந்தியாவின் கவர்னர்-ஜெனரலும் (1948-50). இந்திய அரசாங்கத்தில் மத்திய அமைச்சருமான (1950–52) மறைந்த சி. ராஜகோபாலாச்சாரி.
- கோபாலகிருஷ்ண காந்தி, மேற்கு வங்க ஆளுநர்.
- கிருஷ்ணகிரி மக்களவை முன்னாள் உறுப்பினர் சி.ஆர்.நரசிம்மன் .
சிபிராமசாமி ஐயர் குடும்பம் - காங்கிரசு
தொகு- சென்னை சட்டமன்ற உறுப்பினரும் திருவிதாங்கூர் திவானுமான சி. பி. இராமசுவாமி ஐயர்.
- கும்பகோணம் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் சி. ஆர். பட்டாபி ராமன்.
பக்தவத்சலம் குடும்பம் - காங்கிரசு
தொகு- எம். பக்தவத்சலம், சென்னை மாநில முதல்வர் (1962–1967).
- ஜெயந்தி நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
அ. தி. மு. க. வில் உள்ள குடும்பங்கள்
தொகு- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த ம. கோ. இராமச்சந்திரன்
- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த வி.என்.ஜானகி இராமச்சந்திரன், (எம்.ஜி.ஆரின் மனைவி)
ஓ. பன்னீர்செல்வம் குடும்பம் - அ.தி.மு.க
தொகு- தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- ஓ. பி. இரவீந்திரநாத் குமார் நாடாளுமன்ற உறுப்பினர் (ஓ. பி. எஸ்-இன் மூத்த மகன்)
பல கட்சிகளில் உள்ள குடும்பங்கள்
தொகுகுமாரமங்கலம் குடும்பம் - பலதரப்பு
தொகு- சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் (1926-1930), திருச்செங்கோடு மக்களவை உறுப்பினருமான மறைந்த பி. சுப்பராயன்
- இராதாபாய் சுப்பராயன், பிரபல மனித உரிமை ஆர்வலர்.
- அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான மோகன் குமாரமங்கலம்.
- அரங்கராஜன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி. சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மக்களவை உறுப்பினரும், இந்திய அரசின் மத்திய அமைச்சர்
- அரசியல்வாதியும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான லலிதா குமாரமங்கலம்,
- பார்வதி கிருஷ்ணன், கோவை மக்களவை முன்னாள் உறுப்பினர்.
- அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான மோகன் குமாரமங்கலம்.
வி.கே.சசிகலா குடும்பம் - பல கட்சிகள்
தொகு- வி.கே.சசிகலா, இந்திய தொழிலதிபராக இருந்து பின்னர் அரசியல்வாதியானார்.
- ம. நடராசன், சசிகலாவின் கணவர்
- அண்ணா திராவிடர் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரும், வி.கே.சசிகலாவின் சகோதரருமான வி. கே. திவாகரன்
- சசிகலாவின் மூத்த சகோதரி வாணிமணியின் மகனும், அமமுகவின் பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன்.
- தினகரனின் மனைவி அனுராதா தினகரன் .
- ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் டிடிவி தினகரனின் சகோதரருமான வி. என் சுதாகரன்
- அண்ணா எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி பாஸ்கரன் (டிடிவி தினகரனின் சகோதரர்) .
- சசிகலாவின் சகோதரரான ஜெயராமனின் விதவை ஜெ. இளவரசி
- சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமன்
ம.தி.மு.க குடும்பம்
தொகுவைகோ குடும்பம் - ம.தி.மு.க
தொகு- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய வைகோ .
- துரை வையாபுரி, இணையதள ம.தி.மு.க.
பா.ம.க குடும்பம்
தொகுஇராமதாசு குடும்பம் - பா.ம.க
தொகு- பாமக நிறுவனர் எஸ்.இராமதாஸ்
- 2004 முதல் 2009 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் (சுகாதார அமைச்சகம்) இருந்த அன்புமணி இராமதாஸ்.
த.மா.க குடும்பம்
தொகுஜி. கே. மூப்பனார் குடும்பம் - த.மா.கா
தொகு- இந்திய அரசியல்வாதியும் தமிழ் மாநில காங்கிரசின் நிறுவனருமான மறைந்த ஜி.கே.மூப்பனார்.
- இந்திய அரசின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் .