பயனர் பேச்சு:சா அருணாசலம்/தொகுப்பு 1

வாருங்கள்!

வாருங்கள், சா அருணாசலம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- C.K.MURTHY  ( பேச்சு  ) 16:03, 1 பெப்ரவரி 2015 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், சா அருணாசலம்/தொகுப்பு 1!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--Mohamed ijazz (பேச்சு) 17:35, 19 பெப்ரவரி 2015 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--Kanags \உரையாடுக 12:21, 8 சூலை 2015 (UTC)Reply

கைப்பாவை

தொகு

விக்கிப்பீடியாவில் ஒரு பயனர் ஒரு கணக்கை மட்டுமே பயன்படுத்தி பங்களிக்க வேண்டும் என்பது கொள்கை. பயனர்:NEETHIARASU ARUNACHALAM என்பதும் இதுவும் ஒருவருடையதுபோல் உள்ளது. --AntanO 16:42, 26 சூலை 2015 (UTC)Reply

@AntanO ஐயா நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பதிலளிப்பதற்கு மன்னிக்கவும். எனக்கும் மதுரையைச் சேர்ந்த இவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 2015 காலகட்டத்தில் நான் புதிய கட்டுரை துவங்கவில்லை. அதுவும் பக்கத்தை மொழிப்பெயர்த்து துவங்கவில்லை. --சா அருணாசலம் (பேச்சு) 20:46, 2 திசம்பர் 2021 (UTC)Reply

பதக்கம்

தொகு
  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நபர்கள் தொடர்பான கட்டுரைகளை விரிவாக்குவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் தங்களின் முனைப்பான பங்களிப்பினை எதிர்பார்கிறேன். -- மாதவன்  ( பேச்சு ) 14:23, 21 சனவரி 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 14:56, 21 சனவரி 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:34, 26 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு
 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:55, 8 திசம்பர் 2016 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு

(Sorry for writing in English)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி.

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

தொகு
WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு
WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

September 2018

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய தொகுப்பில் பேணுகை வார்ப்புருக்களை நீக்கியுள்ளீர்கள். ஒரு பேணுகை வார்ப்புருவை நீக்கும்போது, அதில் குறிப்பிட்ட சிக்கல் தீர்ந்துவிட்டதா எனக் கவனிக்கவும். அல்லது தொகுப்புச் சுருக்கத்தில் செல்லுபடியாகும் காரணத்தைக் குறிப்பிடுங்கள். நீங்கள் தவறுதலாக இதனைச் செய்திருந்தால் வருந்தவேண்டாம். உங்கள் தொகுப்பை நான் மீளமைத்துள்ளேன். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 07:29, 13 செப்டம்பர் 2018 (UTC)

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம்.

 
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:18, 3 நவம்பர் 2018 (UTC)Reply

சீமான்

தொகு

வணக்கம். தாங்கள் சீமான் (அரசியல்வாதி) பற்றி தொடர்ந்து கட்டுரையில் அறிமுக உரைக்கு மட்டும் அதிக அளவிலான சான்றுகளைச் சேர்ப்பதன் காரணத்தை அறிந்துகொள்ளலாமா? அந்தக் கட்டுரையில் சான்றுகள் தேவை எனும் இடங்களில் சான்றுகளைச் சேர்க்காமல் இருப்பது நடுநிலை நோக்கு கேள்விக்குள்ளாகிறதோ எனத் தோன்றுகிறது. தங்களால் விளக்கம் அளிக்க இயன்றால் நலம்.ஸ்ரீ (talk) 11:16, 2 மார்ச் 2019 (UTC)

@ஞா. ஸ்ரீதர்: வணக்கம் ஸ்ரீதர். மேற்கோள்கள் போதும் ௭னும்போது அறிமுக உரையில் உள்ள சான்று தேவை [சான்று தேவை] ௭ன்பதை நீக்கி விடுங்கள். சான்று தேவை ௭னும் இடங்களில் மேற்கோள்கள் கொடுக்க வேண்டும் ௭ன்று தான் நினைக்கிறேன் அதற்கான மேற்கோள்கள் கிடைக்கும் போது அதற்கும் தொகுக்கிறேன். நன்றி சா அருணாசலம்,பேச்சு 13:44, 3 மார்ச் 2019 (UTC)

தங்களின் பதிலுக்கு நன்றி நண்பரே. [சான்று தேவை] என்பது சான்றுகள் சேர்ப்பதற்கு முன்பாக இடப்பட்டது. தாங்கள் சான்றுகளைச் சேர்த்தால் அந்த வார்ப்புருவினை நீங்களே நீக்கியிருக்கலாமே. மேலும் தங்களின் சான்றுகளில் பிரபாகரன் வழியில் நடத்துபவர் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை, புதிய தலைமுறை தளத்தில் இருந்தே பெரும்பாலான சான்றுகளை இணைத்துள்ளீர்கள். அதற்கு மாறாக வேறு பிற வலைத்தளங்களின் சான்றுகளையும் சேர்த்தால் நலம். குறிப்பாக ibc தளத்தில் உள்ள சான்று \\வெள்ளி புடியருவா வெடலப்புள்ள கையறுவா.. கிராமிய பாடல் பாடி அசத்திய சீமான்.!".\\ என்று உள்ளது. அதனை நீங்கள் தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நன்றிஸ்ரீ (talk) 09:12, 3 மார்ச் 2019 (UTC)

ibc தளத்தில் உள்ள சான்று \\வெள்ளி புடியருவா வெடலப்புள்ள கையறுவா.. கிராமிய பாடல் பாடி அசத்திய சீமான்.!".இந்த மேற்கோளில் தமிழ், தமிழர், தன்னாட்சி ௭ன்று மேடை தோறும் முழங்குபவர் ௭ன்று இருக்கிறது. அதனால் தான் அந்த மேற்கோளை சேர்த்தேன். உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு மிக்க நன்றி பயனர்:சா அருணாசலம் 09:47,3 மார்ச் 2019 (UTC)

மன்னிக்கவும் எனது கருத்தை சரியாக புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன். அந்த வலைதளத்தை பற்றிக் கூறவில்லை. சான்றின் பெயரைக் குறிப்பிட்டேன். அந்தக் கட்டுரையில் நான் இறுதியாக செய்துள்ள மாற்றங்களைக் கவனித்தால் நலம். மற்றுமொரு வேண்டுகோள் பரவலாக அறியப்படும் வலைத்தளங்களை சான்றாக இனைத்தால் சிறப்பாக இருக்கும். காரணம் அத்தகைய வலைத்தளங்களுக்கு சற்று கூடுதலான பொறுப்புணர்வு இருக்குமல்லவா? நன்றி--ஸ்ரீ (talk) 10:42, 3 மார்ச் 2019 (UTC)

தங்கள் கருத்தை சரியாகவே புரிந்து கொண்டேன் நீங்கள் கடைசியாக செய்த மாற்றங்களை கண்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நண்பர் ஸ்ரீதர்... சா அருணாசலம் 12:50, 3 மார்ச் 2019 (UTC)

வணக்கம். @சா அருணாசலம்: தங்களின் சீமான் கட்டுரையில் கட்சி சின்னம் பகுதியில்

//பிறகு, தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 'விவசாயி' சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரியதால் வேறு வழியின்றி அதனை ஒதுக்கினார்கள். ஆனால் அச்சின்னத்தை வாக்குப்பதிவு ௭ந்திரத்தில் அச்சிடுகிறபோது தெளிவற்றதாக, மிகவும் மங்கலானதாக பொறித்து இருட்டடிப்பு செய்தார்கள். இதுகுறித்து முறையிட உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாம் தமிழர் கட்சி அணுகியபோதும், அதற்கான நீதி நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவே இல்லை.// என எழுதியுள்ளீர்கள். இதற்கான ஆதாரத்தில் அதனை சீமான் கூறியுள்ளதாக சான்றில் உள்ளது. நம்மைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு உதாரணமாக நான் இங்கு பிறந்தேன் என ஒரு ஆளுமை கூறினால் அதனை சான்றாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் புகார் என்று வரும்போது நம்மைப்பற்றி நாமே கூறுவது எவ்வாறு நடுநிலைத் தன்மையோடு இருக்கும்? தற்போது அதனை நீக்கியுள்ளேன். தாங்கள் இதற்குரிய நம்பகத்தன்மையான சான்றுகளைச் சேர்க்கும் பொருட்ட் தாராளமாக இதனை மீண்டும் சேர்க்கலாம். நன்றி ஸ்ரீ (talk) 15:08, 9 சூன் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

பகுப்பு சேர்த்தல்

தொகு

வணக்கம் கட்டுரைகளில் தாங்கள் பகுப்பு சேர்த்துவருவது மகிழ்ச்சி. ஒரு கட்டுரையை திறந்து அதில் பகுப்பை இட்டு சேமிப்பதைவிட விரைவுப்பகுப்பி கருவி வழியாக விரைவாகவும் எளிதாகவும் பகுப்புகளை சேர்க்கவோ, திருத்தவோ செய்யலாம் நன்றி--அருளரசன் (பேச்சு) 23:32, 27 மே 2021 (UTC)Reply

வணக்கம் அருளரசன். நான் இதுவரை விரைவுப்பகுப்பியை பயன்படுத்தியது இல்லை தெரியாதும் கூட. இனிமேல் முயற்சி செய்கிறேன் நன்றி. அப்படியே file upload நிழற்படம் சேர்ப்பது எப்படி என்று கொஞ்சம் உதவுங்கள். நன்றி - -சா அருணாசலம்,பேச்சு 01:21, 28 மே 2021 (UTC)Reply

ஒளிப்படங்களை சேர்ப்பது குறித்து விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி? என்ற பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.--அருளரசன் (பேச்சு) 16:09, 28 மே 2021 (UTC)Reply

நன்றிங்க அருளரசன் ஐயா விரைவுப்பகுப்பி எனக்கு உபயோகமாக உள்ளது. இதையும் விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/படம் சேர்ப்பது எப்படி? முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி-சா அருணாசலம்,பேச்சு 16:19, 28 மே 2021 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:34, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

தொகு

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

தொகு

அன்புடையீர் சா அருணாசலம்/தொகுப்பு 1,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021

தொகு

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (12 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 9 போட்டியாளர்களுடன் 361 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 26 போட்டியாளர்களுடன் 337 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 143 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 119 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பங்களிப்பாளர்கள் இணைந்தால், தமிழ் விக்கிப்பீடியா 1 ஆம் இடத்தில் இருப்பது உறுதியாகிவிடும்! ஸ்ரீதரினதும் பாலசுப்ரமணியன் பங்களிப்பு மிகவும் சிறப்பாகவுள்ளது. இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

பால்க்குடம்

தொகு

இனிய வணக்கம் ஐயா,

சொற்கள் பொருள் நிலையில்தான் நோக்குதல் வேண்டும்.

பால்க்குடம் (பாலை உடைய குடம்) என்பது இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆகும். இரண்டாம் உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும்.

தயிர்க்குடம்(தயிரை உடைய குடம்) என்பது போல...

பால்குடம் என்பது பாலும் குடமும் என்று உண்மை தொகையாக தனித்து நிற்கும். பாஸ்கர் துரை (பேச்சு) 15:56, 16 செப்டம்பர் 2021 (UTC)

பால்க்குடம்

தொகு

பால் என்பது பெயர்ச்சொல் குடம் என்பது பெயர்ச்சொல்

பால்குடம் என்பது பாலும் குடமும் என்பது உம்மைத்தொகை ஆகும்

பால்குடம் எடுத்தேன் என்றால் பாலையும் குடத்தையும் எடுத்தேன் என்ற பொருளை உணர்த்தி விடும்

பால்க்குடம் எடுத்தேன் என்றால் பாலை உடைய குடத்தை எடுத்தேன் என்று பொருள்படும்.

யான் கூறியதில் பிழை இருப்பின் எனக்குத் தெளிவு படுத்துக.

வாழ்க தமிழ்.. வாழ்க வளமுடன். பாஸ்கர் துரை (பேச்சு) 16:05, 16 செப்டம்பர் 2021 (UTC)

பாற்குடம் என்று எழுதுவதே சரி. திருப்பாற்கடல் என்பது திருமால் பள்ளி கொள்ளும் இடமாகும். அதை திருப்பால்க்கடல் என எழுதக்கூடாது. ல் உம் க் கும் புணரும்போது அது ற் ஆகும். திருச்செந்தூர் திருமுருகன் திருப்பள்ளியெழுச்சியில் "பாற்குடம்" என்றே பல இடங்களில் வருகிறது. https://kaumaram.com/text_new/t_palli_ezhuchi_u.html - UKSharma3 உரையாடல் 04:56, 29 சனவரி 2022 (UTC)Reply
பாஸ்கர் துரை அவர்களின் பேச்சு பக்கத்திலும் பாற்குடம் என்றே மாற்றலாம் என்று kanags மற்றும் பாஸ்கர் துரை இருவரும் பேசியுள்ளனர். பாற்குடம் பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி சா அருணாசலம் (பேச்சு) 09:00, 29 சனவரி 2022 (UTC)Reply

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (19 செப்டம்பர் 2021)

தொகு

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


 
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டம் முடிவடைய இன்னும் 12 நாட்கள் உள்ளன. தற்போது தமிழ் விக்கிப்பீடியா 11 போட்டியாளர்களுடன் 550 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 32 போட்டியாளர்களுடன் 514 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான ஸ்ரீதர் 225 கட்டுரைகளுடனும், பாலசுப்ரமணியன் 159 கட்டுரைகளுடனும் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம். புள்ளிவிபரங்களை இங்கே காணலாம்.

குறிப்பு: கட்டுரை நகர்த்தப்பட்டால், மறக்காமல் பவுண்டன் கருவியில் இணைத்துவிடுங்கள். ஆகவே, தலைப்பை மிகவும் சரியாகத் தேர்ந்தெடுங்கள். கட்டாயமாக, முக்கிய இலக்கண விதிகளை மீற வேண்டாம். மெய்யெழுத்திலும் ஆயுத எழுத்திலும் முதல் எழுத்து வருமாறு கட்டுரை எழுதுவதைத்தவிருங்கள். கட்டுரை குறைந்தது 2-3 வரையான நம்பகமான மூலங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள், விக்கி பெண்களை நேசிக்கிறது

உதவி

தொகு

சகோ. அனிதா ஆனந்த் ஒரு கனடிய இந்தியத் தமிழர். இரண்டாவது முறையாக கனேடிய பாதுகாப்பு அமைச்சரானார். தயவுசெய்து அந்தக் கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து மேம்படுத்தவும்.

Tamil098 (பேச்சு) 08:33, 27 அக்டோபர் 2021 (UTC)Reply

உங்களுக்கு ஒரு பதக்கம் அளிக்கப்பட்டுள்ளது!

தொகு
  உரைதிருத்துனர் பதக்கம்
உங்கள் உரை திருத்தங்களுக்கு நன்றி Spharish (பேச்சு) 18:13, 8 நவம்பர் 2021 (UTC)Reply


WLWSA-2021 Newsletter #6 (Request to provide information)

தொகு

Wiki Loves Women South Asia 2021
September 1 - September 30, 2021 view details!

 
Thank you for participating in the Wiki Loves Women South Asia 2021 contest. Please fill out this form and help us to complete the next steps including awarding prizes and certificates.

If you have any questions, feel free to reach out the organizing team via emailing @here or discuss on the Meta-wiki talk page

Regards,
Wiki Loves Women Team
07:35, 17 நவம்பர் 2021 (UTC)

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்

தொகு
 

விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 பதக்கம்
வணக்கம் சா அருணாசலம்,
விக்கி பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2021 திட்டத்தில் பங்களித்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் பங்களித்த கட்டுரை(கள்) போட்டியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள(து)ன. இந்த விக்கிப்பதக்கம் அத்திட்டத்தில் உங்களின் பங்களிப்பினைப் பாராட்டி வழங்கப்படுகின்றது. வருங்காலத்திலும் உங்களின் பங்களிப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.


வாழ்த்துக்களுடன்,
அன்ரன்
தமிழ் விக்கி ஒழுங்கமைப்பாளர், விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021
27-12-2021

வணக்கம் அன்ரன் ஐயா, விக்கி பெண்களை நேசிக்கிறது தெற்காசியா 2021 தமிழ் போட்டியை ஒழுங்கமைத்ததற்கு வாழ்த்துகள். நான் விக்கிப் போட்டியில் கலந்து கொண்டது இதுவே முதல்முறை. வருங்காலத்திலும் என்னால் முடிந்த அளவு போட்டிகளில் பங்கெடுக்கிறேன். மகிழ்ச்சி மிக்க நன்றி - - சா அருணாசலம்

லக்சயா சென் மொழி முதல் எழுத்து குறித்து

தொகு

நன்றி. ல என்பதை இல என்று கட்டுரையில் மாற்றி விட்டேன்; வழிமாற்றும் கொடுத்து விட்டேன். இருப்பினும், பல தமிழ் விக்கிக் கட்டுரைகள் இவ்விலக்கணத்தில் எழுதப்படவில்லை என்பதைக் கவனித்த பின்பே ல-வில் தொடங்கினேன். --PARITHIMATHI (பேச்சு) 05:24, 18 சனவரி 2022 (UTC)Reply

சரோஜா ராமாமிருதம்

தொகு

சரோஜா ராமாமிருதம் கட்டுரையில் ஜனவரி என்பதை சனவரி என்று மாற்றினால், சரோஜா என்பதை சரோசா என்று மாற்றம் செய்வதே முறையானது. ஜ எழுதலாமா கூடாதா என்பதற்குக் கொள்கை ரீதியான முடிவு எதுவும் தமிழ் விக்கியில் கிடையாது. அப்படியிருக்க ஜனவரி சனவரி ஆக மாற்றப்பட்டது ஏன் என்று புரியவில்லை. ஸ்ரீஸ்கந்த என்றால் சிறீஸ்கந்த என்று எழுதுவார்கள். ஸ் எழுதலாம், ஸ்ரீ எழுதக்கூடாதா? (சிறிசு என்று எழுதினால் அனர்த்தமாகி விடும்!). உங்கள் மீது குறை சொல்வதற்காக இதை எழுதவில்லை, தமிழ் விக்கியின் முரண்பாடான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டவே எழுதினேன்.--UKSharma3 உரையாடல் 04:45, 29 சனவரி 2022 (UTC)Reply

@Uksharma3: சனவரியையும் சரோஜாவையும் குழப்பிக் கொள்ள வேண்டாம். சனவரி, சூன், சூலை போன்ற சொற்கள் ஏற்கனவே நல்ல புழக்கத்தில் உள்ளன. 2009 செம்மொழி மாநாட்டிலேயே சூன், சூலை என்றுதான் பயன்படுத்தப்பட்டன. இங்கும் அதுவே வழக்கமாகி விட்டது. மற்றும்படி, நபர்களின் பெயர்களை எழுதுவது குறித்து கடுமையான சட்டதிட்டங்கள் எதுவும் தமிழ் விக்கியில் இல்லை.--Kanags \உரையாடுக 05:57, 29 சனவரி 2022 (UTC)Reply
"2009 செம்மொழி மாநாட்டிலேயே சூன், சூலை என்றுதான் பயன்படுத்தப்பட்டன", இது பற்றி எழுதப்போனால் அது அரசியலாகிவிடும். தனிநாயக அடிகளின் முயற்சியால் உலகத் தமிழரை ஒருங்கிணைத்துத் தோற்றுவிக்கப்பட்ட பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகம் இதில் பங்கேற்கவில்லை. செம்மொழி மாநாட்டை முன்னின்று நடத்தியவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தாரே தவிர அது ஒரு அதிகாரம் கொண்ட அமைப்பால் நடத்தப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட கொள்கை கொண்டவர்களால் நடத்தப்பட்டது.
தமிழ் நாடு அரசின் அதிகார இணையதளத்தில் நாட்கள்/திகதிகள் மாத எண்ணை பயன்படுத்தப்பட்டுள்ளது. மாதத்தின் பெயர் குறிப்பிடப்பட்ட இடங்களில் ஆங்கில எழுத்துகளிலேயே எழுதப்பட்டுள்ளது. இணையதளத்தில் எந்த ஒரு இடத்திலும் சனவரி, சூன், சூலை, ஆகத்து என எழுதப்படவில்லை. தமிழ் விக்கியில் ஆங்கில பயன்பாடு மிகத் தாராளமாகவே உள்ளது. சில விதிகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன. ஆகவே ஆங்கில மாதங்களின் பெயர்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதுவது சிறப்பு. வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கலாம். அத்துடன் தேடுவோருக்கும் உதவியாக இருக்கும். பார்க்கவும்: https://www.tn.gov.in/ta/government/keycontact/81162 UKSharma3 உரையாடல் 02:31, 30 சனவரி 2022 (UTC)Reply
ஆங்கிலத்தில் Abcd கூட தெரியாதவர்கள் ஏன் ஆங்கிலத்தை பயன்படுத்தீனர்கள் என்று வினவுவார்கள்-- சா அருணாசலம் (பேச்சு) 07:17, 30 சனவரி 2022 (UTC)Reply
@Uksharma3: ஜனவரி என்பதை சனவரி என்று எழுதினால் புரிந்து கொள்வதில் பிரச்சனை இல்லை. அதையே நீங்கள் ஜானகி என்ற பெயரை சானகி என்றும், ஜான் என்ற பெயரை சான் என்றும் குறிப்பிட்டால் குழப்பங்கள் ஏற்படும். அவர்களது பெயரையே மாற்றுவது போல் தான் இருக்கும் நன்றி --சா அருணாசலம் (பேச்சு) 08:47, 29 சனவரி 2022 (UTC)Reply
சனவரி என எழுதினால் புரிந்து கொள்வதில் பிரச்சனை இல்லை என்று நீங்களே முடிவு செய்ய முடியாது. சனவரி என்பது ஒருவகை வரி என்றும் பொருள் கொள்ளலாம். ஜான் என்பது போல ஜனவரி என்பதும் ஒரு பெயர்ச்சொல் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே பெயர்களை அவற்றின் ஒலி சிதைவடையாமல் எழுதுவதே சிறந்தது. ஜ என்ற எழுத்து தமிழ் விக்கியில் பயன்பாட்டில் உள்ளது. ஆகவே ஜனவரி என்பதை வலிந்து சனவரி என மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்பதே என் கருத்து. அது போலவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்பவற்றையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஜ, ஸ் தமிழ் விக்கியில் பயன்பாட்டில் உள்ள எழுத்துக்களே. நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 02:41, 30 சனவரி 2022 (UTC)Reply
நம்மால் முடிந்தவரை தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழைப் பயன்படுத்த வேண்டும். நபர்கள், திரைப்படங்கள் போன்றவற்றில் உள்ள வடமொழி எழுத்துக்களை மாற்றுவதிலும் எனக்கு விருப்பமில்லை. - - சா அருணாசலம் (பேச்சு) 07:06, 30 சனவரி 2022 (UTC)Reply
ஸ, ஜ, போன்ற எழுத்துக்களை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்வதே தவறு. வடக்கே யாருக்கும் இந்த எழுத்துக்கள் தெரியாது. வடமொழி/பிறமொழிச் சொற்களை எழுதப்பயன்படும் தமிழ் எழுத்துக்களே இவை. சிலர் கிரந்தம் என்று சொல்வார்கள். அதுவும் தவறு. தமிழ் விக்கியில் கிரந்தம் பற்றி கட்டுரை இருக்கிறது. அதில் கிரந்த எழுத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை வடிவில் சிறிது ஒத்திருந்தாலும், வித்தியாசமானவை. வடமொழி எழுத்துக்கள் என்று கடந்த நூற்றாண்டில் சிலர் தூண்டிவிட புரளி காரணமாக சிலர் அவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்கிறார்கள். திரு மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்த தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருங்கோட்டில் தமிழ் எழுத்தாகவே ஸ, ஜ, ஷ போன்ற எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ் விக்கியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென்பதில் நானும் உறுதியாக உள்ளேன். ஆனால் தமிழ் விக்கியில் இக்காலத்தில் கட்டுரைகள் எழுதுவோர் பலர் தமிழ் இலக்கணம் கற்றவர்களாகத் தெரியவில்லை. கட்டுரைகளைப் படித்தால் எண்ணற்ற இலக்கணப் பிழைகள் நிறைந்திருப்பதைக் காணலாம். அவன்தான் மனிதன் என்ற திரைப்படக் கட்டுரையில் நீங்கள் ஒரு திருத்தம் செய்திருக்கிறீர்கள். அதே சமயம் அக்கட்டுரையில் நடிகர்கள் விபரம் எழுதப்பட்டுள்ள விதத்தைப் பாருங்கள். "சிவாஜி கணேசன் ஆக ரவிகுமாா்" - இப்படி எல்லோருடைய பெயரும் பாத்திரமும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தகவல் பிழை. கலைக்களஞ்சியத்தில் தகவல் பிழை இடம் பெறலாமா? இவற்றை யாரும் திருத்துவதில்லை. ஆனால் "வட எழுத்தை"க் கண்டவுடன் மாற்றிவிடுவார்கள்.
தமிழ் விக்கி, தமிழ் விக்கியாக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். இப்போதைய கட்டுரைகள் பல ஆங்கில விக்கியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட கட்டுரைகளாகவே உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை அதிகமாகுமே தவிர அவற்றில் பல தமிழ் மக்களுக்கோ, தமிழ் பண்பாட்டுக்கோ கிஞ்சித்தும் பயனில்லாதவை என்பது என் கருத்து.
பெயர்ச் சொற்களில் தமிழில் இருக்க வேண்டும் என்று புழக்கத்தில் இல்லாத எழுத்துக்களை வலிந்து மாற்றவேண்டிய அவசியமில்லை. கட்டுரைகளில் பிரபல நபர்களின் பெயர்கள் வழக்கத்தில் இல்லாத மாதிரி, தமிழ் முன்னெழுத்து (initial) போட்டு எழுதப்படுகிறது. தமிழக அரசின் அதிகார இணையதளத்தில் முதலமைச்சரின் பெயர் எம். கே. ஸ்டாலின் என்று தான் எழுதப் பட்டுள்ளது. எம். ஜி. ஆர்., எம். எஸ். சுப்புலட்சுமி போன்ற பிரபலங்களின் பெயர்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளன. கலைக்களஞ்சியம் என்பது முதலில் சரியான தகவல் கொடுப்பது. ஆகவே பிரபலமானவர்கள் தங்கள் பெயரை எப்படி எழுதினார்களோ, அதே போலவே தமிழ் விக்கியிலும் எழுத வேண்டும். எம். ஜி. ராமச்சந்திரன் கையெழுத்திடுவதே எம். ஜி. ராமச்சந்திரன் என்று தான். அதை தமிழ் விக்கியில் ஏன் மாற்ற வேண்டும்? ம. கோ. ராமச்சந்திரன் என்றால் தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்?
தமிழ் விக்கி தமிழ்ப் பற்றுடன் இருக்க வேண்டும், தமிழ் வெறித்தனத்துடன் இருக்கக்கூடாது என்பதே என் விருப்பம். UKSharma3 உரையாடல் 02:32, 31 சனவரி 2022 (UTC)Reply
தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நீங்கள் குறிப்பிட்ட (ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ) எழுத்துகள் இல்லை. அதிகாரப் பூர்வமாகவும் இவையெல்லாம் தமிழ் எழுத்துகள் தான் என்றும் அரசு சார்பிலும் அறிவிப்பில்லை. எம். ஜி. ஆர். மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமி. போன்ற தலைப்பில் உள்ள மாற்றங்களை நிர்வாகிகளிடம் தெரிவியுங்கள். அவன்தான் மனிதன் திரைப்படத்தில் உள்ளது (ஆக ஆக ஆக) போலவே ஒருசில திரைப்படங்களில் (ஆக ஆக ஆக) இருந்தது. எனது பங்களிப்புகளில் சென்று பாருங்கள் இரண்டு மூன்று திரைப்படங்களில் (ஆக ஆக ஆக) நீக்கியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்த்து சரி செய்கிறேன். நன்றி -- சா அருணாசலம் (பேச்சு) 05:25, 31 சனவரி 2022 (UTC)Reply
நீங்கள் தமிழ் விக்கியில் செய்துவரும் பணிகளை நான் கவனித்திருக்கிறேன். அதனால் உங்கள் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்பதற்காக எழுதினேன். இங்கே நீங்களோ, நானோ மாற்றம் எதுவும் செய்ய முடியாது. நான் பள்ளிப் படிப்பு படித்தது 1950களில். மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் ஒருவரிடம் தான் நான் தமிழ் கற்றேன். அக்காலத்தில் ஜ, ஹ ஆகிய எழுத்துகள் தமிழ் எழுத்துகள் என்றே சொல்லித் தரப்பட்டது. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, திசை எழுத்து என்று இருந்தது. இந்த எழுத்துகள் திசை எழுத்துக்கள். அதாவது, பிறமொழிச் சொற்களை தமிழ் ஏற்றுக்கொண்டிருந்தது. அவற்றை திசைச் சொற்கள் என்று சொன்னார்கள். அந்தத் திசைச் சொற்களை எழுத திசை எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போதெல்லாம் இந்த வேறுபாடு கிடையாது. திராவிடத் தலைவர்களே ஜ, ஸ போன்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தார்கள். 1960 களின் பின்னர் தான் விஷ விதை விதைக்கப்பட்டது. 1960 களின் பின்னர் பள்ளிகளில் இந்த எழுத்துகளைச் சொல்லிக் கொடுத்தார்கள், கூடவே இவை தமிழ் எழுத்துக்கள் அல்ல என்ற குறிப்பு சேர்க்கப்பட்டது. இவை கிரந்த எழுத்து அல்ல, வட எழுத்தும் அல்ல. வடநாட்டில் யாருக்கும் இந்த எழுத்துகள் தெரியாது. அப்படியானால் இவை என்ன எழுத்துகள்?
இப்போது தமிழை ஆங்கிலம் அழித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதைப்பற்றி ஒருவரும் பேசுவதில்லை. தமிழ் இலக்கணமே இப்போது பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. இலக்கணம் இல்லாத மொழி விரைவில் அழிந்துவிடும். இப்போதே 95% பேரால் தனித் தமிழில் பேச முடிவதில்லை. இன்னும் இரண்டு தலைமுறை போனால் ... கவலையாக உள்ளது. ஆனாலும் அந்த நிலையைப் பார்க்க நான் இருக்க மாட்டேன் என்று மன ஆறுதல் கொள்கிறேன். இந்த உரையாடலை இத்துடன் நிறுத்திக் கொள்ளுகிறேன். நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 14:28, 31 சனவரி 2022 (UTC)Reply
தமிழகத்தில் ஏழு எட்டு கோடி தமிழ் மக்கள் இருந்தும், ஒருமாதத்தில் மொத்த பங்களிப்பாளர்கள் எண்ணிக்கை 340 பேர், வாரத்துக்கு 265 பேர், மட்டுமே உள்ளது. இத்தனை பேர் பங்களித்தும் ஆயிரத்தெட்டு பிழைத் திருத்தங்கள். இதிலிருந்தே நீங்கள் தமிழ் பற்றாளர்களை கணக்கிடலாம். மாதம் தொடர்பான கட்டுரைகளில் அடிப்படையே தமிழில் மாற்றப்பட்டுள்ளது (கையெழுத்திட்டு பதியும் போதும் சனவரி என்றுதான் வருகிறது. ஜனவரி என்று வருவதில்லை). மீண்டும் ஒருமுறை மாற்ற வேண்டுமென்றால் மிகவும் கடினம். நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை பதிந்துள்ளீர்கள். நன்றி -- சா அருணாசலம் (பேச்சு) 15:15, 31 சனவரி 2022 (UTC)Reply
என் தம்பி திரைப்படத்தில் உள்ள தொகுப்பு [1] கவனியுங்கள் -- சா அருணாசலம் (பேச்சு) 05:33, 31 சனவரி 2022 (UTC)Reply
பழைய வரலாறு [2] என் தம்பி திரைப்படம் -- சா அருணாசலம் (பேச்சு) 05:40, 31 சனவரி 2022 (UTC)Reply

தமிழாக்கம்

தொகு

இன்று ஆங்கில விக்கியில் Ahalya Sthan என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். முடிந்தால் தமிழாக்கம் செய்யுங்கள். நன்றி. வணக்கம் --UKSharma3 உரையாடல் 02:46, 15 பெப்ரவரி 2022 (UTC)

நீங்கள் உருவாக்கிய Ahalya Sthan ஆங்கிலக் கட்டுரை எப்பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. பகுப்புகளை இணையுங்கள். இக்கட்டுரையை தமிழாக்கம் செய்ய எனக்கு ஆர்வமில்லை ஐயா. நன்றி-- சா அருணாசலம் (பேச்சு) 03:02, 15 பெப்ரவரி 2022 (UTC)
தகவலுக்காக எழுதினேன். ஆர்வமில்லையெனில் வேண்டாம். நன்றி. வணக்கம். UKSharma3 உரையாடல் 04:44, 15 பெப்ரவரி 2022 (UTC)
Return to the user page of "சா அருணாசலம்/தொகுப்பு 1".