பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 03

Active discussions

பதக்கம்தொகு

  தீக்குறும்பு களைவர் பதக்கம்
விக்கி துப்பரவில் உங்களின் இமாலய வேகம் மலைக்கவைக்கிறது. ஏறேக்குறைய அனைத்து புதிய கட்டுரைகளிலும் கடைசி தொகுப்பு உங்களுடையதே :) அராபத் (பேச்சு) 16:30, 22 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 22 ஏப்ரல் 2013 (UTC)
ஊக்கத்திற்கு மிக்க நன்றி அராபத், செல்வசிவகுருநாதன் அவர்களே!! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:30, 23 ஏப்ரல் 2013 (UTC)

ஊர்கள் பற்றிய குறுங்கட்டுரைகள்தொகு

தமிழ்க்குரிசில், நீங்கள் ஊர்கள் பற்றிய குறுங்கட்டுரைகளை உருவாக்கி வருவதைக் கண்டேன். இவற்றில் பெரும்பான்மையான கட்டுரைகள் இது இந்த மாவடத்திற்குட்பட்ட ஊர் என்பதைத் தாண்டி உருப்படியான தகவல் எதையும் கொண்டிருக்கவில்லை. மற்ற தகவல் அனைத்தும், அனைத்து ஊர்கள் கட்டுரைகளுக்கும் பொதுவான வார்ப்புருவும், வெளி இணைப்புகளுமே. இந்த வெளி இணைப்புகளும் முதல்வர், ஆளுநர், மாவட்ட ஆட்சித் தலைவர் குறித்தது. ஆக, குறிப்பிட்ட ஊரின் புவியியல் வரைபட இருப்பிடம், உள்ளூராட்சித் தலைவர், தொழில், மக்கள் தொகை, அஞ்சல் குறியீட்டு எண், ஊரில் உள்ள வசதிகள் என்று எந்த விதமான தகவலும் இல்லை. இது போன்று தெலுங்கு மற்றும் பிற விக்கிப்பீடியாக்களில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஒரு வரிக் கட்டுரைகள் இன்று வரை வளரவில்லை. எனவே, உங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு ஊர் பற்றியும் கூடுதல் தகவலைச் சேர்க்க முனையுங்கள். மற்ற ஊர்கள் அனைத்தையும் ஒரே பட்டியல் கட்டுரையில் கீழ் தந்து விட்டு, கூடுதல் தகவல் கிடைக்கும் போது தனிக்கட்டுரையாக எழுதலாம். நன்றி--இரவி (பேச்சு) 08:32, 25 ஏப்ரல் 2013 (UTC)

கவலை வேண்டாம் இரவி. :) தொடர்ந்து இதுபோன்று வரிசையாக இடும்போதே நீங்கள் கூறியதை யோசித்தேன். தேங்கிப் போகும் என்றும் வளராது என்றும் நீக்க வேண்டி வரும் என்றும் கவலை வேண்டாம். சில காரணங்களுக்காக இப்படிச் செய்தேன்.
  1. .பெரும்பாலான கிராமத்துவாசிகள் ஆங்காங்கே ஆங்கிலத்தில் சில வரிகளில் கட்டுரைகளில் எழுதி, பின்னர் நீக்கப்பட்டு, போய்விடுகிறார்கள். அவர்கள் பின்னர் கூகிளில் அந்தந்த ஊர்கள் பற்றி தேடும்போது, விக்கியில் இருப்பதைக் கண்டு திருத்த முனைவர்.
  2. .வார்ப்புருக்களில் மக்கள் தொகை, இட அமைப்பு டிகிரியில், தொலைபேசிக் குறியீடு ஆகியனவற்றை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். நுட்ப உதவி தேவைப்படுகிறது. சில நாட்களில் இவற்றை இற்றைபடுத்திவிடுவேன்.
  3. .பெரும்பான்மையானவை, தஞ்சை மாவட்டம் தொடர்புடையவையே! ஆகையால், செய்தித்தாள்களில் மாவட்டப் பிரிவில் தஞ்சாவூர் செய்திகளைக் கொண்டும், என் தாய், உறவினரின் உதவியுடனும் அண்டைக் கிராமங்களை வளர்த்தெடுக்கலாம் என்றிருக்கிறேன். சில நாட்களில் இற்றைப் படுத்திவிடுவேன். மொத்தக் கட்டுரைகளே நூறுக்குள் என்பதால், விரைவில் முடிவடையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:41, 25 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ்க்குரிசில், புரிதலுடன் கூடிய மறுமொழிக்கு நன்றி. ஒரு குறிப்பிட்ட கால இலக்குக்குள் முதல் 100 கட்டுரைகளை விரிவாக்கி முடித்து விட்டு அடுத்த 100 ஊர்கள் என்று செயல்படுவது ஏற்புடையதாக இருக்கும். நன்றி. --இரவி (பேச்சு) 08:45, 25 ஏப்ரல் 2013 (UTC)
அட! இது நல்லாயிருக்கே!! மொத்தமாக கட்டுரைகளை உருவாக்கித் தள்ளுவது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே இனிமேல் இவ்வாறு, 100 100 ஆக செய்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 25 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் சிறப்பாக இற்றைப்படுத்த வாழ்த்துகள், நிறைய புதிய கட்டுரைகள் கிடைப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி :). கட்டுரை எண்ணிக்கை என்கிற பார்வையை(போதை) மட்டும் தளர்த்திக்கொள்ளுங்கள்(தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்). --அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 10:10, 25 ஏப்ரல் 2013 (UTC)
தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கு?? நான் தான் அதிக கட்டுரையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இல்லவே இல்லை. ஒரு விளையாட்டுக்கு மொத்தமாக கட்டுரைகளை உருவாக்கிப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. அதையே செயற்படுத்தினேன். உந்துதலாக இருக்கும் என்று. இவற்றில் வார்ப்புருக்களுக்கான தகவல்களை இற்றைப்படுத்தும் பணி வெகு விரைவில் முடிந்துவிடும். மற்றபடி, ஒரு பத்து கட்டுரைகள் தவிர்த்து ஏனையவை ஒவ்வொன்றிற்கும் ஐந்து வரிகளாவது தகவ்ல்கள் கிட்டும். சிலவற்றிற்கு கோயில், ஊர் முகப்பு வாயில் போன்ற ஏதாவது சில நிழற்படங்களும் கிடைக்கக்கூடும். படம் கிடைப்பது மட்டும் தாமதமாகும். இவற்றில் சில பிரபலமான கோயில்களைக் கொண்டவை :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:51, 25 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் & +1 கி. கார்த்திகேயன் (பேச்சு) 11:20, 25 ஏப்ரல் 2013 (UTC)
தமிழ், உங்களின் பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது... அதே நேரத்தில் தங்களின் அழகான (!) கண்களையும் கவனித்துக் கொள்ளவும். இது கோடைக்காலம் வேறு; கணிப்பொறியில் அதிகநேரம் உழைக்கும்போது உடம்பு இன்னமும் சூடாகும் - இளநீர் அருந்தவும்; தர்பூசணி சாப்பிடவும். அக்கறையுடன்- --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:03, 26 ஏப்ரல் 2013 (UTC)
தங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி! பெருமகிழ்ச்சியடைகிறேன் அய்யா :) நீங்களும் மரு.பெ.கார்த்தியும் என்னை பெரிதும் ஊக்கப்படுத்துகிறீர்கள். நிச்சயமாக தங்கள் ஆலோசனையை ஏற்கிறேன். மிக்க நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:51, 29 ஏப்ரல் 2013 (UTC)

இலக்கிய வலைவாசல்தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில்! வலைவாசல்: இலக்கியம் இப்பக்கத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 10:57, 27 ஏப்ரல் 2013 (UTC)

தலைப்புதொகு

சிபி, உருவாக்கும் கட்டுரைகளில், தலைப்பினை தடித்த எழுத்துகளில் தர வேண்டுகிறேன்.-- சோடாபாட்டில்உரையாடுக 01:07, 1 மே 2013 (UTC)

சரி, கட்டுரையில் முதல் வரியில் காட்டப்படும் தலைப்பின் பெயரைத் தானே சொல்கிறீர்கள். செய்துடுவோம். (சில வேளைகளில் இணையக் கட்டுப்பாட்டு அளவின் காரணமாக, ஜாவாஸ்கிரிப்டை விலக்கி வைத்திருந்தேன். ஆகையால், கருவிப்பட்டைகள் இயங்காது. எனினும், முயன்றூ பார்க்கிறேன்.) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:39, 1 மே 2013 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?தொகு

வணக்கம், தமிழ்க்குரிசில். மிகவும் முனைப்பாகச் செயல்பட்டு வரும் நீங்கள், நிருவாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் பயன் மிக்கதாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் விருப்பத்தை அறிந்தால், நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:02, 2 மே 2013 (UTC)

சரி இரவி. முதலில் எனக்கு விருப்பம் இருந்தது. பழகிய பின்னர் கேட்கலாம் என்று இருந்தேன். ஆனால், தற்போது, கட்டுரை உருவாக்கம், உரை திருத்தம், வடிவமைப்பு, புதியவர்களுக்கு உதவி எனப் பல வேலைகள் இருப்பதால், நிர்வாகப் பொறுப்பு கூடுதல் சுமையாகி விடும். சில நேரங்களில் விக்கி நடைமுறைகளை நிறைய படிக்கவும் வேண்டியிருக்கிறது. ஆகவே, பொறுப்பை ஏற்ற பின் செய்யாவிடில், வருந்துவேன்,. நிர்வாகிகளுக்கான சில அதிகாரங்களை மட்டும் தனியாக வழங்க முடியுமெனில், தாருங்கள். எடுத்துக்காட்டாக, கட்டுரைகளை இணைத்தல் மட்டும். இவ்வாறு செய்ய முடியாதெனில் தற்போது வேண்டாமே! (கூடுதல் பயனர்கள் கிடைத்து சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் எனக்கு பொறுப்பு வழங்கி உதவுங்கள். முனைப்பான பங்களிப்பின் காரணம், இந்த மாதம் மட்டுமே இணைய இணைப்பு உள்ளது. சில வாரங்களில் தேர்வு. எனவே, அப்புறம் தலை காட்டவே முடியாது. ):) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:24, 2 மே 2013 (UTC)
சரி, தமிழ்க்குரிசில். மீண்டும் முழு முனைப்பாக நிருவாகப் பொறுப்பு ஏற்கும் நேரம் வரும்போது சொல்லுங்கள். அதற்கு இடையில், ஒரு சில நிருவாக அணுக்கங்கள் / கருவிகளைச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கிறேன்.--இரவி (பேச்சு) 16:45, 3 மே 2013 (UTC)
சரி இரவி! எனக்கு நிர்வாகப் பொறுப்பேற்க விருப்பம்! தற்போதே செயல்பட முடியாது என்றாலும், விரைவில் செய்வேன். சில முக்கிய செயல்பாடுகளுக்கு நிர்வாக அணுக்கம் தேவை என்பதாலேயே கேட்கிறேன். மற்றையோரின் கருத்தையும் கேட்கவும் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:20, 2 சூலை 2013 (UTC)
  விருப்பம்+  விருப்பம்= 2  விருப்பம்-- :) நிஆதவன் ( உரையாட ) 16:31, 2 சூலை 2013 (UTC)
தற்போது அணுக்கம் தேவைப்படும் செயற்பாடுகள் என்ன என்று அறியலாமா? தாங்கள் முழு வீச்சில் செயல்பட முடியும் போது நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைப்பது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:13, 18 சூலை 2013 (UTC)
பக்கங்களை ஒருங்கிணைத்தலும் நீக்குதலும் இதற்கான காரணங்கள். :) கூடுதலான கருவிகளை நிர்வாகிகளால் மட்டுமே பயன்படுத்த முடியும் என நினைப்பது இரண்டாவது காரணம். மூன்றாவது, நெட் பேக் ஆக்டிவேட் செய்துள்ளேன், உங்கள் சுமைகள் ஏதேனும் இருந்தால் குறைக்க முடியும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:45, 18 சூலை 2013 (UTC)
இன்று இன்னும் சிலரிடம் நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா என்று கேட்டுள்ளேன். அனைவரின் மறுமொழியும் வந்த பிறகு ஒட்டு மொத்தமாக பரிந்துரைத்து விடுகிறேன். சரி தானே :) --இரவி (பேச்சு) 15:38, 2 அக்டோபர் 2013 (UTC)
நன்றி இரவி! நிர்வாகப் பொறுப்பிற்கு அவசரம் எதுவும் இல்லை. :) எனினும், நிர்வாகிகளுக்கான சுமைகள் அதிகரித்தால், நிச்சயமாக சக விக்கியன் என்கிற முறையில் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மென்மத் துறையில் உள்ள நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்தினால் நலம், மொழிபெயர்ப்பில் இருந்து விலகி, சற்றே மென்மப் பக்கம் கவனம் செலுத்த விரும்புகிறேன். விக்கிக்கான கருவிகள் செய்வதில் ஆர்வம் செலுத்துகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:17, 2 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்களை நிருவாகப் பொறுப்புக்குப் பரிந்துரைத்துள்ளேன். பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாக முறைப்படி அப்பக்கத்தில் தெரிவித்து விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 08:53, 7 அக்டோபர் 2013 (UTC)

நீலகிரி மாவட்டம்தொகு

நீலகிரி மாவட்டம் குறித்து விக்கிபீடியாவில் எழுதி வருகிறேன்.. அதில் போட்டோக்கள் இணைப்பது குறித்து தெரிவிக்கவும்.கட்டுரை போட்டியில் இணைவது எப்படி? நன்றி.-- பேச்சு(பேச்சு:)

வணக்கம் நண்பா! உங்கள் கேள்விக்கான பதிலை உங்கள் பேச்சுப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன். பாருங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:39, 9 திசம்பர் 2013 (UTC)

சார் அவர்களுக்கு வணக்கம். நலமா.. சார் நான் விக்கிபீடியாவில் எழுதி வரும் நீலகிரி மாவட்டம் முழு தகவல்களை சேர்க்கும் விபரங்கள் எப்படி தெரிந்து கொள்வது? பயனர் பக்கத்தில் அதனை எப்படி வெளியிடுவது என்ற தகவல் தாங்கள் தந்தால் உதவியாக இருக்கும்...

நண்பரே! உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:14, 15 திசம்பர் 2013 (UTC)

நன்றி... நன்றி.... நன்றி.... பேச்சு

உதவிதொகு

புதிய பயனர்கள் வருவதை கண்காணிப்பது எப்படி?. சக மாணவர்கள் விக்கிபீடியா வருவதாக கூறினார்கள்.நான் வரவேற்றால் மகிழ்வார்கள்.உதவவும்.நன்றி.பதிலுக்கு காத்திருப்பு ;) --ஆதவன் (பேச்சு) 14:30, 3 மே 2013 (UTC)

  விருப்பம். மகிழ்ச்சி ஆதவன்! புதியவர்கள் உள்ளே நுழைந்ததும் அண்மைய மாற்றங்களில் தெரியும். உடனே, அவர்களின் பேச்சுப் பக்கத்தில் புதுப்பயனர் வார்ப்புரு இட வேண்டும். அவர்கள் கட்டுரை எழுதத் தெரியாமல் திண்டாடினால், உடனே கட்டுரையில் திருத்தங்கள் செய்துவிட்டு, அவர் பேச்சுப் பக்கத்தில் உதவிக் குறிப்பை எழுதுங்கள். தவறாக எழுதினால், விக்கிப்பீடியா:மணல்தொட்டி பக்கத்தில் எழுதிப் பழகுமாறு வேண்டுங்கள்.
புதிதாக சேர்ந்தவர்கள் பற்றிய விவரம் இங்கே உள்ளது

சரியான மறுமொழியா? நீங்கள் எதிர்பார்த்த பதில் கிடைத்ததா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:40, 3 மே 2013 (UTC) ஆம் என்று தான் நினைக்கிறன்.அப்படியே ஆகட்டும்.  :) --ஆதவன் (பேச்சு) 14:42, 3 மே 2013 (UTC)

விக்கித்திட்டம் சைவம்தொகு

தொடர்ந்து வழிகாட்டியாய் செயல்படும் தாங்கள் விக்கித்திட்டம் சைவத்திலும் இணைந்து வழிகாட்டுவதும், பங்கேற்பதும் எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது. உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியல் புதிய கட்டுரைகளை உருவாக்க தங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:07, 6 மே 2013 (UTC)

குறுங்கட்டுரைகள்தொகு

வணக்கம் தமிழ்க்குரிசில். இன்று நீங்கள் உருவாக்கிய கட்டுரைகளான மாவட்ட நீதிபதி, சிறப்பு நீதிமன்றம், நீதித் துறை நடுவர் என்பன அகராதிக்கு உகந்தவை போன்றுள்ளது மிகவும் சிறிதாயுள்ளன. இதனை மேற்கொன்டு தொகுக்கும் எண்ணமிருந்தால், தொகுத்தல் வார்ப்புருவை இடுங்கள். அக்கட்டுரைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதையும் நினைவிற் கொண்டு தொகுங்கள். குறுங்கட்டுரைக்கான நடைமுறையினை நீங்கள் அறிந்திருப்பதால் அது பற்றி நினைவூட்ட வேண்டியதில்லை. --Anton (பேச்சு) 12:57, 7 மே 2013 (UTC)

நினைவூட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். :) ஏற்கனவே, நூறு கட்டுரைகள் சில வரிகளில் உள்ளன. மேற்கொண்டு நான் தொடர்வதற்கு காரணம் உண்டு. என் அம்மான் நீதிபதி ஆவார். நீதித் துறை தொடர்பான பல தகவல்களைப் பெற உள்ளேன். அவருடன் இன்று உரையாடி சில தகவல்களைப் பெற்றேன். அவற்றை நினைவிற் கொள்ள குறுங்கட்டுரைகள் ஆக்கினேன். கைபேசி வழித் தொகுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே பின்னர் விரிவாக்குவேன். நான் சொந்த ஊரில் இருப்பதால், அரசு அலுவலர்களின் உதவியுடன், ஊர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகளுக்கு அடிப்படைத் தகவல்கள் விரைவில் கிட்டவிருக்கின்றன. பல்வேறு விடயங்களை அறியவிருக்கிறேன். சில மாதங்களில் பல தகவல்கள் சேர்க்க உள்ளேன். தரக் கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, வழமை போலேயே விரைவு நீக்கல் வார்ப்புரு இடுங்கள். பிரச்சனை இல்லை, விரைவில் விரிவாக்கவிருக்கிறேன், -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:24, 7 மே 2013 (UTC)
புரிதலுக்கு நன்றி. :) மறக்காமல் விரிவாக்குங்கள். --Anton (பேச்சு) 13:43, 7 மே 2013 (UTC)

ஏட்டிக்குப் போட்டிதொகு

இப்ப நம்ம இரண்டு பேரும் சந்திச்சா, இருவருக்கும் ஒரு புள்ளி கூடும், இல்லையா? :) நீங்கள் போட்டியில் கலந்து கொள்வது மகிழ்ச்சி :) நிறைய விக்கிப்பீடியர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது, விக்கிப்பீடியர் சந்திப்புகளில் கொள்வது ஆகியவை நாளடைவில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பயனளிக்கும் என்று நம்புகிறேன். --இரவி (பேச்சு) 17:05, 10 மே 2013 (UTC)

மேலும் உத்வி தேவைதொகு

என்னுடைய கேள்வியும் தங்கள் பதிலும் in the page மேலக்கால் முஹம்மது பிலால் the following warning appears "'இந்த கட்டுரை அல்லது பகுதி நடுநிலை சான்றுகள் எவற்றையும் கொண்டிருக்கவில்லை. − சான்றுகள் தருவது காப்புரிமை சிக்கல்களையும் கருத்துப் பிழைகளையும் தவிர்க்க உதவும் − how i can add the saanrukal? −முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Rahman.chef (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. நண்பரே! முக்கியமான கட்டுரைகளுக்கு சான்றுகள் அவசியம். உங்களுக்குத் தெரிந்த சான்றுகளைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பிரபலமான எழுத்தாளர் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஒரு விருது பெற்றுள்ளார் என வைத்துக் கொள்வோம். இது செய்தித் தாளில் செய்தியாக வெளியாகிறது. இந்த செய்தியைத் தான் ஆதாரம், மேற்கோள், சான்று எனக் கூறுகிறோம். ஆக, ஒரு நபர் பற்றிய கட்டுரையில், அவர் ஆற்றிய பணி தொடர்பான செய்திகள் ஆதாரமாகச் சேர்க்கப்படலாம். மேலும், உதவி தேவை என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். நன்றி!

நான் மேற்கோள்களாக கீழ் வருமாறு பதிவு செய்திருக்கிறேனே ஆனாலும் இப்படி சான்றுகள் இல்லாத கட்டுரை என வருகிறதே; தலித் முரசு பத்திரிகையில் அவரது பேட்டி வெளி வன்துள்ளது விடுதலையின் வேர்காணல் என்ற புத்தகத்தில் இவரை பற்றி தகவல்கள் பதிவு செய்ய பட்டுள்தே,


இம்மானுவேல் தேவேந்திரர் - தமிழவேள் தலித் முரசு அன்பு செல்வன் - விடுதலையின் வேர்காணல்† இணைய தள பத்திரிக்கை கீற்று மதுரை தலித் கலை ஆதார மையம் விடுதலையின் வேர்காணல் தொகுப்பு: அன்பு செல்வம், பக்கங்கள் : 256 வெளியீடு: தலித் ஆதார மய்யம், 32, பாரதிதாசன் சாலை, அரசரடி, மதுரை - 625 016, பேசி : 95452 - 2302199

சரி நண்பரே! எந்தெந்த வரிகளுக்கு என்ன ஆதாரம் தேவைப்படும் எனக் கூறுகிறேன். அவற்றைச் சேருங்கள். சில நிமிடங்கள் பொறுத்திருங்கள். தேடிப் பார்க்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:53, 11 மே 2013 (UTC)
கீழே தரும் வரிகளுக்கு ஆதாரங்கள் தருக, ஆதாரம்/சான்று இணையதள இணைப்பாகவோ நூலின் பக்கமாகவோ இருக்கலாம்.

1. மாவட்ட ஆட்சியர் தேர்வில் தேர்வானவர் 2. கலவரங்களுக்கு காரணமானவர்களை சிறைப்படுத்தப் போராடினார். 3. இஸ்லாமியராக மாறினார் 4. நிலக்கோட்டை சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டார் 5. சாந்தி இல்லம் - படம் தேவை 6. தலித் முரசு இதழுக்கு அளித்த பேட்டி (செய்தித்தாள் வெளியான நாள் அல்லது இணையதள முகவரி) முடிந்தவரை சில ஆதாரங்களாவது தேவை. உதவி தேவை என்றால் கேளுங்கள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:14, 11 மே 2013 (UTC)

தொடர் கட்டுரைப் போட்டி தொடர்பாக கருத்து தேவைதொகு

விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி பக்கத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி புதிய பரிந்துரையை இட்டுள்ளேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 05:18, 13 மே 2013 (UTC)


சென்னை விக்கியர் சந்திப்புதொகு

மே 26 இல் அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --சோடாபாட்டில்உரையாடுக 05:32, 21 மே 2013 (UTC)

என்ன செய்யலாம்தொகு

விக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:52, 23 மே 2013 (UTC)

வேண்டுகோள்தொகு

வணக்கம் தமிழ்!
தேவைப்படும் முக்கியக் கட்டுரைகளை உருவாக்கத் தூண்டும் அறிவிப்பினை மீண்டும் அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் ரவி கொண்டுவந்துள்ளார். தங்களின் சொந்த இலக்குகளோடு, இந்தக் கட்டுரைகளையும் கொஞ்சம் கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் பங்களிப்பில் ஒரு 10%ஐ இந்தக் கட்டுரைகளுக்காக செலவிட்டால், நல்ல பயன் கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு கட்டுரையைத் துவக்கி, விரிவுபடுத்தி ஓரளவு நல்ல கட்டுரையை உருவாக்க முயற்சிக்கலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:42, 28 மே 2013 (UTC)

களத்தில் குதிக்க வருகதொகு

தமிழ்க்குரிசில், 20 கட்டுரைக்கு மேல் வருமா என்றீர்கள். இப்போது பாதி மாதம் முடிந்த நிலையில் உள்ள முடிவுகளைக் காணலாம். நீங்களும் களத்தில் குதிக்க வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.--இரவி (பேச்சு) 17:59, 15 சூன் 2013 (UTC)

உத்தேசமாக சொன்னேன்! அதிக கட்டுரைகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே! ஊரில் இருப்பதால் ஒன்றும் செய்ய இயலவில்லை. சேமித்து வைத்துள்ள சில ஆவணங்களை விக்கி நூல்களை ஏற்ற திட்டமிட்டுள்ளேன். தொடர்பில் இல்லையென்றாலும் நித்தமும், எந்த கட்டுரையை திருத்த வேண்டும், என்னென்ன யோசனைகள் சொல்லலாம் என்றே எண்ணிக் கொண்டிருக்கிறேன் -49.137.122.6 06:24, 16 சூன் 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறந்த யோசனைக்கான பதக்கம்
ரோஹித் 05:23, 23 சூன் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம், நன்றி~ -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:27, 23 சூன் 2013 (UTC)

ஒரு வேண்டுகோள் ...தொகு

வணக்கம், தமிழ்!
சௌராஷ்டிர மொழி எழுத்து எனும் கட்டுரையை விக்கிப்படுத்த இயலுமா எனப் பார்க்கவும், நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:52, 24 சூன் 2013 (UTC)

  விருப்பம்,சரி! எனக்கு தெரிந்தவரையிலும் பார்க்கிறேன்! ஆங்காங்கே உள்ள ஒருங்குறி எழுத்துகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. தெரிந்தவரை திருத்துகிறேன். நீங்களும் ஒரு முறை பார்த்து விடுங்கள்.-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:24, 25 சூன் 2013 (UTC)
 Y ஆயிற்று, சரி பார்க்கவும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:03, 25 சூன் 2013 (UTC)

தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்...! சௌராஷ்டிர மொழி குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. எனவே என்னால் சரி பார்க்க இயலாது! விக்கிப்படுத்தப்படவேண்டிய கட்டுரைகளின் பட்டியலில் இக்கட்டுரையும் இருந்தது; உங்களுக்கு இம்மொழியுடன் பரிச்சயம் உண்டு என்பதால் தங்களிடம் வேண்டினேன். செவிமடுத்து செய்தமைக்கு எனது நன்றிகள்! அன்புடன்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:41, 10 ஆகத்து 2013 (UTC)

கேள்விதொகு

எனக்கு என்ன எழுதுவது என்றே தெரியவில்லை விக்கியில் கதை எழுதுவது என்று ஏதும் திட்டம் இருக்கிறதா, மேலும் திரைப்படங்கள் தொ(ல்)லைக்காட்சி நிகழ்ச்சி பற்றி எதும் எழுத வேண்டி வருமானால் எனக்கு தெரியபடுத்துங்கள். மற்றும் தனிப்பட்ட முறையில் உங்கள் சகோதரனுக்கு (எனக்கு) பரிந்துரைப்பீரா நான் இனி என்ன செய்யலாம் என்று

வணக்கம்தொகு

உங்கள் பதில் கிடைத்தது, மிக்க மகிழ்ச்சி! புதிதாகவே கட்டுரைகள் எழுத ஆரம்பித்துள்ளேன். எனது வயது 20. இலங்கையில் வவுனியாவில் வசிக்கிறேன். எல்லா கட்டுரைகளும் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். எனக்கு விக்கிபீடியாவில் அதிக அனுபவம் இல்லை. ஒருவருக்கு எப்படி message அனுப்புவது என தெரியவில்லை (facebook போல). தயவு செய்து அதனை எவ்வாறு என சொல்லுங்கள். −முன்நிற்கும் கருத்து ‎Vaijayanthvj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வணக்கம் வைஜெயந்து! நீங்கள் விக்கிப்பீடியாவில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! இங்கே எல்லோரும் கூட்டாக சேர்ந்தே எழுதுகிறோம். நீங்கள் கட்டுரையை தொடங்க, நான் அதை விரிவாக்க, இன்னொருவர் படம் சேர்க்க, மற்றொருவர் பிழை திருத்தலாம். :) விக்கிப்பீடியாவில் சில விதிகள் உங்களுக்கு தொடக்கத்தில் புரியாமல் இருக்கலாம். ஆனாலும், தொடர்ந்து பழகினால் எளிதாகிவிடும். அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். :))

நீங்கள் ஒருவருக்கு செய்தி அனுப்ப வேண்டும் என்றால், அதை அவரின் பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்தப் பக்கம் என் பேச்சுப் பக்கம்/உரையாடல் பக்கம். இங்கு தான் மற்றவர்கள் என்னைத் தொடர்பு கொள்வார்கள். இப்போது என்னிடம் பேசினீர்களே, இது போலவே, ஒவ்வொருவரின் பேச்சுப் பக்கத்திலும் உரையாடலாம். என்னுடன் பிறர் உரையாடிய செய்திகள் மேலே உள்ளன. நீங்கள் எழுதும் செய்திகள் எல்லோருக்கும் தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். :) சந்தேகம் தீர்ந்ததா? வேறு ஏதேனும் சொல்ல வேண்டுமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:12, 3 சூலை 2013 (UTC)

உங்கள் பதிலுக்கு மக்க நன்றி... −முன்நிற்கும் கருத்து ‎Vaijayanthvj (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

Hindi Wikipediaதொகு

Hello. Back in April you reported a problem about not being able to log in at hindi wikipedia. I've found and removed a problem that could've possibly be causing this problem. Could you try to log in again and let me know (either here or at hi:विकिपीडिया:दूतावास#Logging_in_failed). Thanks.--Siddhartha Ghai (பேச்சு) 07:13, 13 சூலை 2013 (UTC)

Thanks siddhartha! i'm able to log in now :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:59, 15 சூலை 2013 (UTC)

உதவிதொகு

வணக்கம் நண்பரே சிறிது வேலையால் நான் என் பங்களிப்பை அளிக்கமுடியவில்லை . எனக்கு உதவ முன்வாருங்கள் தயவு கூருகிறேன் நண்பரே −முன்நிற்கும் கருத்து Udhay udhayan 03 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சொல்லுங்கள் நண்பரே! என்ன உதவி வேண்டும்? உதவக் காத்திருக்கிறேன். ::) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:29, 28 சூலை 2013 (UTC)

நன்றிதொகு

விக்கிப்பீடியா நண்பர்களுக்கு மிக்க நன்றி. உங்களின் வாழ்த்துக்கள் என்னை மேலும் வளர்க்க உதவும் படிகட்டுகள் ஆகும். -−முன்நிற்கும் கருத்து Nandhinikandhasamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

மகிழ்ச்சி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:06, 9 ஆகத்து 2013 (UTC)
மீண்டும் நன்றி, மேலும் வளர போகிறேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:28, 2 செப்டம்பர் 2013 (UTC)
விருப்பத்திற்கு நன்றிநந்தினிகந்தசாமி (பேச்சு) 10:12, 2 செப்டம்பர் 2013 (UTC)
மகிழ்வில் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:18, 2 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைக் வேண்டுதல்தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)

சரி நற்கீரன், தெரிந்த தலைப்புகளில் விரைவில் கட்டுரைகள் ஆக்கத் திட்டமிட்டிருக்கிறேன். உங்கள் கோரிக்கைக்கு நன்றி! கூடிய மட்டில் சிறப்பாக செய்ய வேண்டுமென்பதே என் ஆசையும்! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:37, 12 ஆகத்து 2013 (UTC)
நன்றி. எதாவது ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஈடுபாடு இருக்கும் எனின் உங்கள் பெயரை அருகில் இட்டு, 400 அல்லது 800 சொற்களா என்று குறிப்பிடவு. --Natkeeran (பேச்சு) 15:44, 12 ஆகத்து 2013 (UTC)
ஐயய்யோ! தகவல்கள் தொடர்பான கட்டுரையாக இருக்குமுன்னு நினைத்தேன்! விக்கிப்பீடியா பற்றியதாக உள்ளதே! தெரிந்தவரை எதையாவது எழுதுவோம். குறிப்பிட்ட தேதிக்குள் எழுத முடியும். ! தலைப்பை தேர்ந்தெடுக்க இரு நாட்கள் அவகாசம் வேண்டும். கூட்டாக எழுதுவோமே :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:22, 12 ஆகத்து 2013 (UTC)

கதைதொகு

வணக்கம் தமிழ், விக்கிப்பீடியாவில் கதைகள் எழுத முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாது. விறகுவெட்டியின் கடவுள் என்ற கட்டுரையில் நீங்கள் சில திருத்தங்கள் செய்திருந்தீர்கள். அக்கட்டுரை உடனடியாக நீக்கப்பட்டிருக்க வேண்டியது. நன்றி.--Kanags \உரையாடுக 09:45, 15 ஆகத்து 2013 (UTC)

கதை எழுதக் கூடாது என்று அறிவேன். என்றாலும், நான் அதைக் கவனித்திருக்க வில்லை. தலைப்பை மாற்றும் நோக்கில் இருந்ததால் உள்ளடக்கத்தை அவ்வளவாக கவனித்திருக்கவில்லை. வேறு ஒரு கட்டுரையினை தொகுத்துக் கொண்டிருந்தமையால்!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:07, 15 ஆகத்து 2013 (UTC)
எனக்கும் தெரியாது ,ஏனெனில் [1] கவனித்தேன், பின் முயலும் அமையும் கதையையும் உருவாக்கினேன். விளக்கம் தேவை -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:08, 15 ஆகத்து 2013 (UTC)
பரவலாக அறியப்படும் கதைகளைக் குறித்து எழுதுவதில் தவறில்லை. அவர் எழுதியது இயல்பான, வழக்கமாக காணப்படும் நூல்களில் ஒன்று என நினைக்கிறேன். நான் கவனித்திருக்க வில்லை. கவனித்திருந்தால், நீக்கக் கோரியிருப்பேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:33, 15 ஆகத்து 2013 (UTC)
கதை பற்றிய கட்டுரை எழுதுவது வேறு, சிறுகதை எழுதுவது வேறு. புகழ்பெற்ற ஒரு கதை பற்றிய தகவல்களைக் கட்டுரையாகத் தரலாம். யார் எழுதியது, கதைச் சுருக்கம், வெளியீடு, சிறப்பு போன்ற விபரங்களைத் தரலாம்.--Kanags \உரையாடுக 13:38, 15 ஆகத்து 2013 (UTC)
நானும் சிந்தித்திருந்தேன், நன்றி -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 15:08, 15 ஆகத்து 2013 (UTC)

விக்கி பயிற்சி பட்டறைதொகு

நன்றி தமிழ்க்குரிசில்! சூர்யாவின் உதவியுடன் பயிற்சி பட்டறை சிறப்பாக நடந்தது; படிமங்களை ஓரிரு நாட்களில் பதிவேற்றுகிறேன்.--பரிதிமதி (பேச்சு) 17:10, 25 ஆகத்து 2013 (UTC)

நன்றிதொகு

தமிழ்க்குரிசில்(தமிழ்மகன்) அவர்களுக்கு நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 10:10, 4 செப்டம்பர் 2013 (UTC)

) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:10, 4 செப்டம்பர் 2013 (UTC)

பிற விக்கிப்பீடியர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்தொகு

பிற விக்கிப்பீடியர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பகுதியைச் சற்று மேம்படுத்தியுள்ளேன். பிற விக்கிப்பீடியர்களிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.--இரவி (பேச்சு) 07:00, 12 செப்டம்பர் 2013 (UTC)

நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:10, 12 செப்டம்பர் 2013 (UTC)
நேற்று அனுப்பிய மடலில் தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காள மொழி விக்கிப்பீடியர்களை அறிமுகப்படுத்தியிருந்தேன். ஒரு வேளை ஓரிரு நாளில் மடலிலோ கட்டுரைப் பக்கத்திலோ பதில் வராவிட்டால், நேரடியாக ஒவ்வொரு மொழியின் ஆலமரத்தடியிலும் கேள்விகளை இட்டுப் பாருங்கள்.--இரவி (பேச்சு) 08:10, 13 செப்டம்பர் 2013 (UTC)
சிலர் பதில் அனுப்பியிருக்கின்றனர். மீதி பேருக்கு பார்ப்போம். சரி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு)

நன்றிதொகு

எனக்கு சிறப்புப் பதக்கம் அளித்து என்னை ஊக்குவித்த தமிழ்க்குரிசில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்பதக்கம் எனக்கு தமிழ் விக்கியில் நான் இன்னும் முனைப்புடன் செயல்பட ஓர் உந்து சக்தியாய் இருக்கும் என்பதில் ஐயமில்லைBALA.R,Sankaranputhoor. (பேச்சு) 16:36, 16 செப்டம்பர் 2013 (UTC) வணக்கம் அண்ணே! கட்டுரை எழுதுவதில் உங்களுக்கு எந்த சிக்கல் இருந்தாலும் என்னைக் கேட்கலாம். போன முறை, வேற்று மொழி பெயர்களுக்கு தமிழில் தலைப்பு வைப்பது பற்றி சொல்லியிருந்தீர்கள். அதற்கு IPA படிக்க வேண்டும். தவறான தலைப்பாய் இருந்தாலும் பரவாய் இல்லை, தொடர்ந்து செய்யுங்கள். திருத்திக் கொள்ளலாம். இன்னும் நிறைய கருவிகள் உள்ளன. உங்கள் வேலையை இவை எளிதாக்கக் கூடும். நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:17, 17 செப்டம்பர் 2013 (UTC) உங்களது ஒத்துழைப்பிற்கு ரெம்ப நன்றி . சில சந்தேகங்கள் இருக்கின்றன. நேரம் வரும் போது உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி.BALA.R,Sankaranputhoor. (பேச்சு) 05:01, 18 செப்டம்பர் 2013 (UTC)

வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடினை பயன்படுத்துவது குறித்தான பரிந்துரைகள் தேவைதொகு

வணக்கம் நண்பரே, இந்திய மொழி விக்கிகள் வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு பற்றிய தென்காசியாரின் பரிந்துரைகளை ஆலமரத்தடியில் ஆய்வு செய்திருந்தீர்கள். அத்துடன் உங்களது பரிந்துரைகளையும் தருவது சிறப்பாக இருக்கும். தற்போது வரை மயூரநாதன், இரவி ஆகியோரோடு எனது பரிந்துரைகளையும் தந்துள்ளேன். அவற்றைக்கண்டு விமர்சிக்கவும், தங்களது தனிப்பரிந்துரைகளை விரைந்து தரவும் வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:31, 21 செப்டம்பர் 2013 (UTC)

அன்பிற்கு நன்றி!தொகு

என்மீது தாங்கள் கொண்டுள்ள அன்பிற்கும் நட்பிற்கும் மிக்க நன்றி! அலுவலகப் பணி காரணமாக நான் தற்போது வெளியூரில் உள்ளதால், பத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு வர இயலவில்லை; அன்றைய நாளில் என்னால் கையொப்பம் இடுதலும் இயலாததே. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:49, 25 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கள் தவறாது பார்க்கும் மின்னஞ்சல் முகவரியினை எனக்கு உடனடியாக அனுப்பிவையுங்கள். அவசியம்; அவசரம்! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:33, 27 செப்டம்பர் 2013 (UTC)

தேடினேன்தொகு

தமிழ் விக்கிப்பீடியா சென்னைக் கூடலில் செல்வசிவாவையும், தமிழ்க்குரிசில் இருவரையும்

அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 16:19, 30 செப்டம்பர் 2013 (UTC)

மகிழ்ச்சியூட்டும் கவிதை!   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 1 அக்டோபர் 2013 (UTC)
தமிழ், நீங்களும் கலந்து கொள்ளவில்லையா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:46, 2 அக்டோபர் 2013 (UTC)
ஆம்! நான் புதிதாக பணிக்கான பயிற்சியில் சேர்ந்துள்ளேன். வாரத்தின் ஐந்து நாட்கள் கல்லூரிக்கும், ஆறாவது நாள் நிறுவனத்திற்கும் செல்ல வேண்டியிருக்கிறது. ஞாயிறன்று வீட்டுவேலைகளையும், பாடங்களையும், நிறுவன வேலைகளையும் செய்வதற்கே நேரம் இல்லை. நிகழ்ச்சி அரங்கம் அருகிலேயே இருந்ததுதான்! பணியின் காரணமாக இருந்த அயர்ச்சியால் வர இயலவில்லை. எனினும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மென்பொருள் வழியில் உதவ கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன், பணியிடத்தில் மென்மங்களை உருவாக்குவது குறித்து நிறைய கேட்டுத் தெரிகிறேன். விரைவில், தமிழ் விக்கிக்கு அருமையான கருவி ஒன்றை உருவாக்கவுள்ளேன். நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாவிடிலும், நிகழ்ச்சி குறித்து நிறைய அறிய முடிந்ததில் மகிழ்ச்சி  :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:43, 2 அக்டோபர் 2013 (UTC).
\\தமிழ் விக்கிக்கு அருமையான கருவி ஒன்றை உருவாக்கவுள்ளேன்.\\ அருமை நண்பரே. விக்கியில் என் பங்களிப்பினை நேர்படுத்தியவர் நீங்கள். எத்தனையோ பேச்சுப்பக்கங்களில் உங்களுடைய கனிவான வழிகாட்டல்கள் நிறைந்து கிடைக்கின்றன. தற்போது விக்கிக்கு கருவி தயாரிக்கும் பணியில், அக்னி ஏவுகனை தயாரித்த அப்துல்கலாம் போல வர வாழ்த்துகிறேன். :-)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 2 அக்டோபர் 2013 (UTC)--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:58, 2 அக்டோபர் 2013 (UTC)
மூஞ்சிக்கு நேரா புகழாதீங்க, எனக்குப் பிடிக்காது!!!!!!!!!!! :) வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பரே! கடந்த ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் ஒப்பிட்டால் நான் நிறைய கற்றிருப்பதை உணர முடிகிறது. இன்னும் நிறைய கற்கவுள்ளேன். நேரம் கிடைக்கும்போது இதுகுறித்து உரையாடுவோம். உங்களின் உதவியும் தேவைப்படக் கூடும். வேண்டும்பொழுது கேட்கிறேன். அண்மைக்காலமாக, உங்களின் கனிவான, ஆதரவான, ஊக்கமூட்டும் கருத்துகள் பலரது பேச்சுப்பங்களில் நிறைந்திருப்பதைக் காண்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:14, 2 அக்டோபர் 2013 (UTC)

விக்கிதரவுதொகு

தமிழ்க்குரிசில், வேறு மொழி விக்கிப்பீடியாவுக்கு தமிழ்க் கட்டுரைகளில் இணைப்புத் தர wikidata ஐப் பயன்படுத்துங்கள்.--Kanags \உரையாடுக 04:03, 6 அக்டோபர் 2013 (UTC)

ஏற்கனவே, இது குறித்து சில முறை எனக்கு கூறியுள்ளீர். ஆனால், என்னால் அவ்வாறு செய்ய இயலாது. நான் குறைந்தளவு தரவு வழங்கும் இணையத்தை பயன்படுத்துகிறேன். 600 எம்.பி.யை ஒரு மாதம் முழுவதும் பயன்படுத்த வேண்டும். ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தியே, விக்கிதரவில் இணைக்க முடியும். ஆனால், ஜாவாஸ்கிரிப்டை பயன்படுத்தினால், ஒவ்வொரு பக்கத்திற்கும் ஐந்து மடங்கு டேட்டாவை நான் இழக்க வேண்டிவரும். அதிகப் பங்களிப்புகளை வழங்க முடியாது. :( நான் சொல்வது விளங்குகிறது தானே! எனவே, நீங்களோ, பிறரோ இதைச் செய்துவிடுங்கள். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:14, 6 அக்டோபர் 2013 (UTC)
சரி, உங்கள் கட்டுரைகளைக் கண்காணிக்கிறேன்:)--Kanags \உரையாடுக 04:32, 6 அக்டோபர் 2013 (UTC)

கிரந்த எழுத்துகள்தொகு

புரிந்து கொண்டேன். கிரந்த எழுத்துகள் ஓரளவுக்கு உச்சரிப்பை அதன் மூல உச்சரிப்புக்கு நெருக்கத்தில் கொண்டு செல்கின்றன. மேலும் தமிழில் பாடநூல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றில் சரளமாக ஜ, ஸ, ஹ, ஷ ஆகியன பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் பெயர்கள் முதற்கொண்டு அனைத்திலும் இவ்வெழுத்துகள் காணப்படுகின்றன. இருந்தாலும் தமிழ் விக்கியின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இனிமேல் இத்தகைய எழுத்துகளைத் தவிர்க்கிறேன். உங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. ஆர்.பாலா (பேச்சு) 03:03, 13 அக்டோபர் 2013 (UTC)

‎சர்ப்பப்பாட்டுதொகு

வணக்கம். ‎சர்ப்பப்பாட்டு கட்டுரையில் இணைத்துள்ள படத்திற்கு விளக்கம் சேர்க்க முடியுமா? (எனக்கு மலையாளம் தெரியாது). நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:53, 13 அக்டோபர் 2013 (UTC)

நிரல்கள்தொகு

வணக்கம் குரிசில். கொஞ்ச நாள் முன்னாடி javascript எதோ தூக்கிகிட்டு வரனும்னு சொல்லிகிட்டு இருந்தீங்களே, எதாவது உதவின்னா கூப்பிடுங்க. நியாகம் வந்துச்சு அதான் :) --NaanCoder (பேச்சு) 04:18, 14 அக்டோபர் 2013 (UTC)

அதுவந்து, ஒரு சின்ன உதவி வேணும்ணே!
1.மலையாளத்தில் புதிய கட்டுரைகளின் தகவல்களை எடுக்கணும், (ml.wikipedia.org/wiki/special:newpages)
2.அதை அட்சரமுக (aksharamukha) கருவியில் சேர்த்து, மலையாளம் -> தமிழ் மாற்றம் செய்யணும்.
3.மாற்றியபின், மணல்தொட்டியில் போடணும்.
4. நம்மிடம் உள்ள சொற்களைக் கொண்டு, தேடிக் கண்டுபிடித்து மாற்றனும். (find and replace)

எ.கா: நின்ன் -> நின்று, சேர்ந்ந் -> சேர்ந்து, ஸம்விதானம் -> இயக்கம் iஇப்படி செய்தால், தமிழில் சிறு பிழைகளுடன் கட்டுரை ரெடி! இதை திருத்தி சேமிக்கணும். அவ்வளவுதான். இந்த உதவி தேவை அண்ணே. விரைந்து உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:53, 14 அக்டோபர் 2013 (UTC)

வணக்கம் தமிழ்க்குரிசில், நீங்கள் தொடங்கிய மலையாளக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்புத் தமிழில் மலையாள நெடி அதிகம் வீசுவதன் காரணம் இதானா? இந்த முறையில் கட்டுரை உருவாக்குவது கிட்டத்தட்ட தானியங்கி மொழிபெயர்ப்பாகி விடாதா? த.விக்கிக் கொள்கைக்கு இது சரியாக வருமா? சும்மா, எனக்குள் ஒரு சந்தேகம், தெளிவுபடுத்திக்கொள்ளத்தான் கேட்டேன் வேறொன்றுமில்லை. நன்றி. --Booradleyp1 (பேச்சு) 15:31, 17 அக்டோபர் 2013 (UTC)

நன்றியுரைத்தல்தொகு

  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:56, 15 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:23, 16 அக்டோபர் 2013 (UTC)
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:55, 16 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:23, 16 அக்டோபர் 2013 (UTC)

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:34, 16 அக்டோபர் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:23, 16 அக்டோபர் 2013 (UTC)

 --நந்தகுமார் (பேச்சு) 08:24, 16 அக்டோபர் 2013 (UTC)

கருத்துக்களுக்கு பதிலளிக்க நிருவாக அணுக்கப் பரிந்துரைக்காலம் நீட்டிப்புதொகு

தமிழ்க்குரிசில், இங்கு அறிவித்தபடி உங்களுக்கு நிருவாக அணுக்கம் வழங்குவதற்கான பரிந்துரையின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பை மாற்றுக் கருத்து இட்டவர்களிடம் கூடுதல் தகவல்கள் தேவையெனில் கேட்டுப்பெற்று, தேவைப்படும் இடங்களில் உங்கள் நிலை மாறியிருந்தால் அதைக் குறிப்பிடவும், கருத்திட்டவரின் புரிதல் தவறாக இருப்பதாக எண்ணினால் உங்கள் நிலையை விளக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்வது, விக்கியில் மிகத்தேவையான பண்பாக உரையாடி இணக்க முடிவை எட்டும் முறைக்கு வலுச்சேர்க்கும். நன்றி. -- சுந்தர் \பேச்சு 07:28, 16 அக்டோபர் 2013 (UTC)

தமிழ்க்குரிசில், உங்களுக்கு ஒரு நினைவூட்டல். -- சுந்தர் \பேச்சு 06:28, 20 அக்டோபர் 2013 (UTC)
இப்போது தான் பார்க்கிறேன் :) -09:10, 21 அக்டோபர் 2013 (UTC)
இன்றிரவுடன் வாக்கெடுப்பு நிறைவடைகிறது, தமிழ்க்குரிசில். -- சுந்தர் \பேச்சு 13:51, 21 அக்டோபர் 2013 (UTC)

மொழிபெயர்ப்பு பற்றிதொகு

தமிழ்க்குரிசில், குறிப்பிட்டுச் சொல்லச் சொல்லியிருக்கிறீர்கள், எனக்கு அக்கட்டுரைகளை வாசிக்கும் போது மலையாள வாடை நெடியை உணர முடிந்தது அவ்வளவு தான். அதற்கு மேலே சொல்லும் அளவில் எனக்கு மொழிபற்றிய திறமை ஒன்றுமில்லை, அங்கங்கே உள்ள சிறுசிறு எழுத்துப்பிழைகளை எனக்குத் தெரிந்தவரை உரைதிருத்தம் செய்து கொண்டு சிவனே என்றிருக்கிறேன். தெரியாமல் அட்சரமுகி பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் (தொழில்நுட்பம் அறிவு எனக்குப் பூச்சியம்) கேட்டுவிட்டேன் ஏற்கனவே உங்களது ஒரு கட்டுரையில் மலையாளப் படிமம் சேர்த்தபொழுது அதன் விளக்கம் மலையாளத்தில் இருந்தது அதைத் தமிழிலில் எனக்கு மாற்றத் தெரியவில்லை. அதற்காகவும் தான் கேட்டேன். விதிமுறை உருவாக்கம் அதுஇது என்று என்னை இழுக்காதீர்கள் ஆளை விட்டுருங்க. உங்கள் பணி தொடர வாழ்த்துக்களுடன் --Booradleyp1 (பேச்சு) 16:06, 17 அக்டோபர் 2013 (UTC).

விக்கித் திட்டம் திரைப்படம்தொகு

வணக்கம். விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம் ரெடி. இணைய வேண்டுகோள். --பழ.இராஜ்குமார் (பேச்சு) 22:58, 17 அக்டோபர் 2013 (UTC)

  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:36, 18 அக்டோபர் 2013 (UTC)

உருசிய...தொகு

'உருசிய' என்பதனையே பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுவே பெரும்பாலான இடங்களில் (விக்கியில்) இருக்கிறது. ஒரே மாதிரி இருத்தல் நலம்தானே! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:35, 22 அக்டோபர் 2013 (UTC)

சரி! எனக்கு குழப்பமாய் இருந்தது ஐயா! ரஷ்ய என்பதைத் தவிர்க்கும் பொருட்டு ரசிய என்று எழுத வேண்டியதாயிற்று. உருசிய என்பது உரசிய, உருவம் போன்ற சொற்களுடன் தொடர்புடையப் போன்று தோன்றியது. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:46, 22 அக்டோபர் 2013 (UTC)

என்ன...?! புதுசா 'ஐயா' எல்லாம்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:49, 22 அக்டோபர் 2013 (UTC)

:D :D -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:55, 22 அக்டோபர் 2013 (UTC)

எனக்கு பலமுறை மொழி, சொற்கள் குறித்து சந்தேகங்கள் வரும். அந்நேரங்களில் குறிப்பிட்ட மொழியில் புலமையுள்ள/ அல்லது அம்மொழியினை அறிந்த பயனர்கள் அச்சொல்லை எவ்வாறு கையாண்டுள்ளார்கள் என்பதனைக் காண்கிறேன். அவ்வகையில், உருசியா குறித்து கனக்சு அவர்களைக் கவனிக்கிறேன். அவர் அங்கு தங்கி பட்டம் பெற்றிருப்பதாக அறிகிறேன். அவர் உங்களின் கட்டுரையில் செய்துள்ள மாற்றங்களைக் கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 22 அக்டோபர் 2013 (UTC)

இந்த விக்சனரி பக்கத்தில் இரசிய மொழிக்கான சொற்களையும், பல சொற்களுக்கு ஒலிக்கோப்புகளையும் காணலாமென்ற கூடுதல் செய்தியைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 07:12, 22 அக்டோபர் 2013 (UTC)

நிர்வாக அணுக்கம்தொகு

உங்களின் சிறப்பான பங்களிப்புக்களுக்கு நன்றி. 25 மேற்பட்ட சக பயனர்களால் நீங்கள் நிர்வாகியாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு நிர்வாக அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 13:11, 22 அக்டோபர் 2013 (UTC)

நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:38, 22 அக்டோபர் 2013 (UTC)
நிருவாகியாக ஆனதற்கு என் நல்வாழ்த்துகள் தமிழ்க்குரிசில்!--செல்வா (பேச்சு) 14:07, 22 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம் நன்றி! தங்கள் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:17, 22 அக்டோபர் 2013 (UTC)
நிருவாகியாக ஆனதற்கு என் நல்வாழ்த்துகள் தமிழ்க்குரிசில்! //நான் என் தாய்மொழியை விரும்புகிறேன். அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்???//;;; நானும் தான்!! ஆனால் உயிராய் நேசிக்கிறேன்--அன்புடன்--யோகிசிவம் (பேச்சு) 15:06, 22 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம் தங்கள் வாழ்த்து மகிழ்ச்சியளிக்கிறது! நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 22 அக்டோபர் 2013 (UTC)
வாழ்த்துகள் நண்பரே, தங்களின் வழிகாட்டல்கள் தொடரட்டும். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:36, 22 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம் நன்றி! மிக்க மகிழ்ச்சி! இணைவோம். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:42, 22 அக்டோபர் 2013 (UTC)
உங்களுக்கு எனது வாழ்த்துகளும்.--Kanags \உரையாடுக 01:03, 23 அக்டோபர் 2013 (UTC)
  விருப்பம் நன்றி! :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 02:57, 23 அக்டோபர் 2013 (UTC)

பிறமொழித் தலைப்புதொகு

தமிழ், பிறமொழித் தலைப்புள்ள கட்டுரைகளில் கட்டுரையின் ஆரம்பத்தில் அத்தலைப்பின் மூல மொழிச் சொல் (தெரிந்தால்) கட்டாயம் மூல மொழியில் அச்சொல் தரப்பட வேண்டும். இணையான ஆங்கிலச் சொல்லும் தருவது மிகவும் நல்லது (தேடுதல்களில் அகப்படும்). உ+ம்:

ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (பொருள்:ரகுவிற்கு ரசியா சொந்தம்) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம்.

இவ்வரிகள் பின்வருமாறு எழுதப்படலாம்:

ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (மலையாளம்: രഘുവിന്റെ സ്വന്തം റസിയ, ரகுவிற்கு ரசியா சொந்தம்) என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம்.

--Kanags \உரையாடுக 08:43, 26 அக்டோபர் 2013 (UTC)

  விருப்பம் சரி :) விரைவில் மலையாள மொழிபெயர்ப்பு தொடர்பான பக்கத்தை உருவாக்கித் தந்தால் என் கேள்விகளை அங்கே கேட்டுத் தெளிவேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:49, 26 அக்டோபர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)

புதியவர்களுக்கு உதவிதொகு

https://ta.wikipedia.org/wiki/மணக்குள_விநாயகர்_கோவில்,_புதுச்சேரி உங்கள் பங்களிப்புக்கு நன்றி Prabhupuducherry (பேச்சு) 15:55, 11 நவம்பர் 2013 (UTC) Prabhupuducherry (பேச்சு) 17:28, 15 நவம்பர் 2013 (UTC)

கையொப்பம்தொகு

கையொப்பம் LEARNED Prabhupuducherry (பேச்சு) 15:55, 11 நவம்பர் 2013 (UTC)

  விருப்பம் நீங்கள் விரும்பினால், இங்குள்ள கருவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாம். விக்கியன்பு பற்றி அறிந்துகொண்டால், பிறருக்கு பதக்கம் வழங்கி பாராட்டலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:58, 11 நவம்பர் 2013 (UTC)

உங்கள் பங்களிப்புக்கு நன்றி

Uksharma3 அவர்களின் வேண்டுகோள்தொகு

வணக்கம், தமிழ்! Uksharma3 அவர்கள் சற்று மனம்வருந்தியே படிமங்களை நீக்க வேண்டியதாக உணர்கிறேன். இப்போது அப்படிமங்கள் உள்ள கட்டுரையில் சிவப்பெழுத்துகள் தெரிகின்றன. இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் ஒருமுறை பாருங்கள். ஒரு தகவலுக்காக இதனை தங்களுக்கு தெரிவிக்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:21, 19 நவம்பர் 2013 (UTC)

சரி, தங்கள் கருத்தைப் புரிந்துகொண்டேன். படிமங்கள் மீண்டும் வேண்டுமாயின் பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் பேச்சுப் பக்கத்தில் கூறியுள்ளேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:25, 19 நவம்பர் 2013 (UTC)

நன்றிதொகு

தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி. :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:30, 19 நவம்பர் 2013 (UTC)

வலைவாசல்:கேரளம்தொகு

வணக்கம்! சகோதரரின் பேச்சுப் பக்கத்தில் எனது பதிலையும் தந்துள்ளேன். நன்றி! -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:55, 26 நவம்பர் 2013 (UTC)

வணக்கம் நண்பரே, வலைவாசலின் வடிவமைப்பினை ஓரளவிற்கு முடித்துள்ளேன். சிறப்புக் கட்டுரை, சிறப்புப் படம், உங்களுக்குத் தெரியுமா போன்றவற்றில் ஏற்ற பரிந்துரைகளை இட்டு, சிறந்ததை காட்சிபடுத்துங்கள். செல்வசிவகுருநாதன் போன்றோர் தங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கேரள கட்டுரைகளை எழுதும் பிற ஆர்வமுள்ளோர்களையும் இணைத்து செயல்படுங்கள். 15 இன்ச் மானிட்டரில் வலைவாசல் பகுதிகள் முழுமையாக தெரியவில்லை. மாற்றம் செய்ய முடிகின்றதா என்று பார்க்கிறேன். இனி வலைவாசலின் உள்ளடக்கங்களில் தாங்கள் கவனம் செலுத்தலாம். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:34, 26 நவம்பர் 2013 (UTC)

வணக்கம்! பயனர்:Selvasivagurunathan m/தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை என்பது போன்ற ஒரு பக்கத்தினை உங்களின் பயனர்வெளி கொண்டு ஆரம்பித்துவிடுங்கள். நாம் அதில் நன்கு விளக்கமாக உரையாடி, வலைவாசல்:கேரளம் என்பதனை மிகச் சிறப்பாக வளர்த்தெடுக்கலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:12, 6 திசம்பர் 2013 (UTC)

அலுவகத்தில் வேலைப்பளு அதிகம்; சற்று பொறுக்கவும். இவ்வார இறுதியில் இறங்குகிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 18 திசம்பர் 2013 (UTC)

வேற்று மொழிக் கட்டுரைகள்தொகு

வணக்கம், தமிழல்லாத வேற்று மொழித் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதும் போது மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது:

  • முதல் வரிகளில் தலைப்பின் மூல மொழித் தலைப்பு கட்டாயம் தரப்பட வேண்டும். அத்துடன் அதன் ஆங்கில மொழியாக்கமும் தருவது விரும்பத்தக்கது. இதனை நீங்கள் உருவாக்கியுள்ள மலையாள, மற்றும் வேற்று மொழிக் கட்டுரைகளில் (ஏற்கனவே எழுதா விட்டால்) தாருங்கள்.

புதிதாகக் கட்டுரைகள் எழுத முன்னர் நீங்கள் உருவாக்கியுள்ள கட்டுரைகளில் இவற்றைத் தந்து விட்டுத் தொடருவது நல்லது. இது மிகவும் இலகு. ஏனெனில் நீங்கள் மலையாள மொழி விக்கியில் இருந்து தான் அனைத்தையும் எடுக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அங்கிருந்து பிரதி எடுக்கும் போது மலையாளப் பெயரை அழிக்காமல் விட்டு விட்டால் போயிற்று. அவ்வளவு தான் நீங்கள் செய்ய வேண்டியது. நீங்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதப் போகிறீர்கள் என தெரிகிறது. எனவே முறைப்படி திட்டமிட்டுத் தொடங்குவது நல்லது. மேலும், wikidata வில் இணைப்புத் தர மறக்க வேண்டாம். தகுந்த பகுப்புகளையும் தாருங்கள்.--Kanags \உரையாடுக 06:39, 28 நவம்பர் 2013 (UTC)

எ-கா: முதல் வரி இவ்வாறு இருக்க வேண்டும்: '''நதி''' ({{lang-ml|നദി}}) என்பது..--Kanags \உரையாடுக 06:45, 28 நவம்பர் 2013 (UTC)
நன்றி கனகு! எனக்கு கட்டுரை எழுதுவதற்கு அதிக நேரம் இல்லை. ஆயினும், குறுகிய நேரத்தில் அதிக வேலையை செய்ய விரும்புகிறேன். எனவே, தானியக்கமாகவே செய்யப்போகிறேன். நீங்கள் சொன்னபடியே ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதும் முயற்சியில் உள்ளேன். 80 %தானியக்கம், 20% என் பங்களிப்பு என தொடர்ப்போகிறேன். திரைத்துறை, நபர்கள் பற்றிய அடிப்படை கட்டுரைகளை இவ்விதமே செய்ய உள்ளேன். தானியக்கத்தில் பல்வேறு பிழைகள் வருமென்பதை நன்கறிவேன். அவ்வப்போது பிழைகளைத் திருத்திக் கொண்டே வருகிறேன். தங்கள் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்குக இனி, கட்டுரையின் முதல் வரியில் தவறாமல் குறிப்பிடுகிறேன். சில சமயம், குறைந்த டேட்டா இருப்பின், விக்கிடேட்டாவில் இணைக்க முடிவதில்லை. நீங்கள் குறிப்பிட்டது போலவே, திட்டமிட்டு தொடங்குவேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:13, 28 நவம்பர் 2013 (UTC)
கனக்சின் கருத்தை இப்போதுதான் கவனித்தேன். அதன்படி ({{lang-ml|നദി}}) என்ற வார்ப்புருவைத் தானியக்கத்தில் இணைத்துவிட்டேன். --நீச்சல்காரன் (பேச்சு) 06:31, 6 திசம்பர் 2013 (UTC)

தமிழ்க்குரிசில், மலையாள விக்கிக் கட்டுரைகளை தமிழ் விக்கிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு நன்றி. ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவ்வாறு கொண்டு வர இருக்கிறீர்கள் என்றால் இதைப் பற்றிய விவரங்களைத் தனியொரு திட்டப்பக்கத்தில் தெரிவிக்க முடியுமா? பார்க்க: விக்கிப்பீடியா:தரவுத்தள கட்டுரைகள், விக்கிப்பீடியா:தானியங்கிக் கட்டுரையாக்கம்.--இரவி (பேச்சு) 16:41, 7 திசம்பர் 2013 (UTC)

பலே..தொகு

பிப்ரவரி மாதம் போட்டியில் குதிக்கிறேன் என்றவர் இந்த மாதமே குதித்ததன் மர்மம் என்ன? ஒரு வேளை, வாகையர் பட்டத்துக்கு குறி வைக்கிறீர்களோ? கட்டுரைப் போட்டி களை கட்ட வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 08:27, 3 திசம்பர் 2013 (UTC)

நன்றி அண்ணே! நான் ஒரு முட்டாப்பய! போட்டி விதிகளை சரியாப் படிக்காம விட்டுட்டேன். இல்லாத கட்டுரைகளை உருவாக்கி, 15,000 கொண்டுவர வேண்டும் என்று தவறாக எண்ணிக்கொண்டேன். ஏற்கனவே, உள்ளவற்றை மேம்படுத்தலாம் என்று தெரியாமல் போயிட்டுதே! அதுதெரியாம அவசரப்பட்டு போட்டியில் குதித்துவிட்டேன். சரி, பரவாயில்லை! இந்த மாதப் போட்டியின் வெற்றியாளன் நான் தான்! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:37, 3 திசம்பர் 2013 (UTC)
ஓ, சரி. நீங்க இப்படி தொடையைத் தட்டினால், மற்ற போட்டியாளர்கள் களத்தை விட்டே ஓடிவிடுவார்கள் :) ஆகவே, கொஞ்சம் அப்படி இப்படி போக்கு காட்டி கடைசி நாட்களில் மொத்தமாக போட்டுத் தாக்குங்கள் :)--இரவி (பேச்சு) 08:41, 3 திசம்பர் 2013 (UTC)
  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:57, 3 திசம்பர் 2013 (UTC)
அண்ணா நீங்க வேற ஏன் உசுப்பேத்துறீங்க? ஏற்கனவே களத்துல குதிக்கலாமா வேண்டாமான்னு இருக்கேன்.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:47, 3 திசம்பர் 2013 (UTC)
நந்தினி, உம் போன்ற வாண்டுகளிடம் நான் மிகக் கவனமாக இருக்கிறேன். :) சிறீகர்சன், நம் அனைவரின் தொகுப்புகளையும் கூர்ந்து கவனிக்கிறான். இனி, இந்த மாதப் பங்களிப்பாளர்களின் பட்டியல் என் கையிலும் இருக்கும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:57, 3 திசம்பர் 2013 (UTC)
எப்போது நீங்கள் முன் பதிவு செய்தீர்களோ அப்போதே நான் முடிவு செய்து விட்டேன்.கலத்தில் இந்த மாதம் குதிக்க வேண்டாம் என்று. விரிவான கட்டுரைக்கு போட்டியிடலாம் என்று உள்ளேன்.அதுவும் இயலவில்லை என்றால் கோவில் குளமென்று சுற்றி விக்கி திட்டம் சைவத்தை வளர்த்தெடுப்பேன். தப்பி தவறி கூட அந்த பக்கம் வரமாட்டேன்.:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:02, 3 திசம்பர் 2013 (UTC)
அசராதீங்க, நந்தினி. ஏற்கனவே இரு முறை வென்றுள்ளீர்கள். தொடர் ஈடுபாடு தான் உங்களுக்கு வாகையர் பட்டம் பெற்றுத் தரும். அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் களம் சூடாவதற்கே வாய்ப்பு.--இரவி (பேச்சு) 09:08, 3 திசம்பர் 2013 (UTC)

நான் இந்த விளையாட்டுக்கே வரல.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:13, 3 திசம்பர் 2013 (UTC)

நந்தினி, இந்த முறை போட்டியில் நீங்கள் வெல்ல என் வாழ்த்துகள் :) எனக்கு போட்டியில் வெற்றி பெறும் எண்ணம் இல்லை. பிப்பிரவரி மாதத்தில் மட்டும் வெற்றி எனக்குத் தான்! இந்த மாதப் போட்டி கடுமையானதாக இருக்க வேண்டும். எனவே, 25 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். இதைவிட அதிகமான எண்ணிக்கையில் விரிவாக்குபவரே இந்த மாத வெற்றியாளர் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:18, 3 திசம்பர் 2013 (UTC)

இல்லை நான் இந்த மாதம் விரிவான கட்டுரைக்காக புத்தகம் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன்.ஆகவே நான் உண்மையிலேயே விரிவான கட்டுரை தான் எழுத போகிறேன். தாங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.:)-நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:22, 3 திசம்பர் 2013 (UTC)

என்னப்பா தமிழ்க்குரிசில் அண்ணே ரகசியத்த இப்பிடிப் பப்பிளிக்காவா போட்டுடைக்கிறது. உங்கவேகத்தத் தாங்கமுடியல இப்பதான் கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் கட்டுரையில் {{தொகுக்கப்படுகிறது}} என்ற வார்ப்புருவை இட்டுத் தொகுக்க ஆரம்பிச்சேன் அதுக்குள்ள இடையில் புகுந்து இப்பிடி 15360 ஐத் தாண்ட வச்சிட்டீங்களே.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:36, 3 திசம்பர் 2013 (UTC)
என்ன தம்பி, நான் ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளேன். பார்க்கவில்லையா? மேலும், ஏற்கனவே, தொகுத்து வைத்திருந்தேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:53, 3 திசம்பர் 2013 (UTC)
இங்கே எனக்கு முதல் உங்கள் தொகுப்பையே காணவில்லையே? நீங்கள் முன்பதிவுசெய்ததை அவதானிக்கவில்லை. அத்துடன் "கட்டுரைப் போட்டியில் முன்பதிவு எல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத் தான். யார் முன்பதிவு செய்ததையும் யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்." இக்கூற்று தென்காசியாரால் கூறப்பட்டது.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:04, 3 திசம்பர் 2013 (UTC)
நான் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தேன். (நீங்கள் வார்ப்புருவை இணைப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே பதிந்துவிட்டேன்.) எனவே, கட்டுரை என் கணக்கில் வரும். ஒருவேளை நான் பதிவு செய்துவிட்டு, நீங்கள் விரிவாக்கியிருந்தால், கட்டுரையை உங்கள் கணக்கில் சேர்த்திருக்கலாம். :) ஆனால், நானே பதிவும் செய்து, விரிவாக்கியும் உள்ளேன். எனக்கு தான் அந்த கட்டுரை. :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:37, 3 திசம்பர் 2013 (UTC)

உங்களின் கவனத்திற்கு...தொகு

வணக்கம், தமிழ்! இங்கு உங்களுக்கு ஒரு செய்தி இருக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:38, 8 திசம்பர் 2013 (UTC)

ஆசிரியர் வேண்டுகோள்தொகு

அது மாணவன் வேண்டுகோள் தமிழ்குரிசில்!, கவனமேடுக்கவும்!.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:26, 9 திசம்பர் 2013 (UTC)

எதைச் சொல்கிறாய் ஆதவா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:28, 9 திசம்பர் 2013 (UTC)

இதைத்தான்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:25, 9 திசம்பர் 2013 (UTC)

என்ன செய்யட்டும்! மீட்டெடுக்கவா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:29, 9 திசம்பர் 2013 (UTC)
அப்படிச்செய்தால் விக்கி விதிமீறல். அதனால அடுத்த முறை பாத்துக்கலாம். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:38, 9 திசம்பர் 2013 (UTC)
என்ன தான் செய்யட்டும்? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:41, 9 திசம்பர் 2013 (UTC)
அய்யா ஒண்ணுமே வேணாம். ஆள விடுங்க அண்ணா --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:44, 9 திசம்பர் 2013 (UTC)
சரி தம்பி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:52, 9 திசம்பர் 2013 (UTC)

நன்றிதொகு

தங்களது தகவல் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். மிக்க நன்றி. --ஆர்.பாலா (பேச்சு) 07:51, 11 திசம்பர் 2013 (UTC)

யோசனை சொல்லுங்கள்தொகு

அன்பு தமிழ்! தற்போது தொகுத்துக்கொண்டிருக்கும் புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் உள்ளது. ஆனால் ஏற்கனவே வங்காள தேசம் என்ற கட்டுரை உள்ளது, வங்காள தேசம் கட்டுரையில் புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள்ல் உள்ள தகவல்கள் இல்லை. வங்கதேசம் (புராதனம்) எனத் தலைப்பிட்டுத் தொகுக்கலாமா?--Yokishivam (பேச்சு) 14:22, 13 திசம்பர் 2013 (UTC)

    • புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் இதில் வங்கதேசமும் ஒன்று ஆனால் ஏற்கனவே உள்ள வங்க தேசம் என்ற கட்டுரை இன்றைய வங்காள தேசத்தைக் குறிக்கிறது. இந்த வங்கதேசமென்ற கட்டுரை வங்காளத்தைப் பற்றியது அல்ல, இதன் எல்லை காசியிலிருந்து இன்றைய கொல்கத்தா வரையிலுமே எனவே வங்காளதேசம் என்ற கட்டுரையின் முந்தைய கட்டுரைப் பெயரான வங்கதேசம் என்று இருப்பதால் இந்த வங்கதேசம் என்ற கட்டுரையை சேமிக்க இயலவில்லை எனவே வங்கதேசம் என்ற பெயரில் கட்டுரை அமைய உதவவும்--Yokishivam (பேச்சு) 03:03, 15 திசம்பர் 2013 (UTC)

இது சரியா?தொகு

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்--Yokishivam (பேச்சு) 12:46, 21 திசம்பர் 2013 (UTC)

மறுமொழிதொகு

வணக்கம் ஐயா! தங்கள் கருத்து எனக்குப் புரியவில்லை. எந்த கட்டுரையில் இந்த தவறு நிகழ்ந்தது? நாம் செய்ய வேண்டியது என்ன? கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா? நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:55, 21 திசம்பர் 2013 (UTC)

  • வேளாளர் என்ற கட்டுரையில் உள்ள மேற்கோள் தான் அது. வேளாளர் கட்டுரை உரையாடல் பக்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்--Yokishivam (பேச்சு) 13:00, 21 திசம்பர் 2013 (UTC)

மலையாள மொழிபெயர்ப்புக் கருவிதொகு

தமிழ்க்குரிசில், மலையாள மொழிபெயர்ப்புக் கருவி, கூகுள் தமிழ் மொழிபெயர்ப்புக் கருவி போன்றதே. கூகுள் மொழிபெயர்ப்புக் கருவிக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுப்பாடுகள் இதற்கும் பொருந்தும். எனவே இதனைப் பயன்படுத்தும் போது சில மனித உழைப்பும் தேவை. மலையாளத்தில் லளிதா என அழைக்கப்பட்டால் அது தமிழில் அது லலிதா என்று தான் எழுதப்பட வேண்டும். மேலும், கட்டுரைகளைக் கலைக்களஞ்சிய விக்கி நடையில் எழுதப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 13:42, 30 திசம்பர் 2013 (UTC)

இந்த திட்டத்திற்கு கருவிகளை எதையும் பயன்படுத்தவில்லை. அதிகப் புழக்கத்தில் உள்ள சொற்களை இணையான தமிழ்ச் சொற்களுக்கு மாற்றுகிறோம். மலையாள இலக்கணத்தையும் கொஞ்சம் மாற்றுகிறோம். அவ்வளவே. மனித உழைப்புடன் தான் செயல்படுத்துகிறோம். கட்டுரையை ஒரு முறை மேற்பார்வையிட்டு, திருத்தியே வெளியிடுகிறேன். தமிழ் விக்கியில் மூலப் பெயருக்கு அதிக முக்கியத்துவம் தருவதால், லளிதா, கள்யாண் என்றும் எழுத நேர்ந்தது. இந்த திட்டம் குறித்து தங்கள் ஆலோசனைகள் கிடைத்தால் மேம்படுத்த ஏதுவாக இருக்கும். வாக்கியங்களுக்கு எடுத்துக்காட்டு தந்து விளக்கினால் நலம். ஒரு திரைப்படக் கட்டுரை முழுவதையும் நல்ல முறையில் எழுதித் தந்தால் அதை அப்படியே பின்பற்றுவேன் :) நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:04, 30 திசம்பர் 2013 (UTC)
பொதுவான தமிழ்ப் பெயர்கள் உங்களுக்குத் தெரியாதா என்ன? லளிதா என்று எவராவது தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் இவ்வாறு எழுதப் போய் அது கூகுள் தேடலிலும் இனிமேல் வந்து விடப்போகிறது:) எனவே, தமிழ் விக்கிப்பீடியாவில் மலையாளத்தை தமிழில் எழுதப் போய் தமிழை அழித்து விடாதீர்கள். அப்படியான ஒரு தமிழ் விக்கிப்பீடியா எமக்குத் தேவையில்லை. மேலும், இந்த மாற்றத்தைப் பாருங்கள். இந்த அடிப்படையைப் பின்பற்றினாலே போதும். இது பற்றி முன்னரும் இதே பேச்சுப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன். முன்னர் ஒரு உரையாடலில் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு எழுதுவதற்கு ஒரு கருவி பயன்படுத்துவதாக எழுதியிருந்தீர்கள்.--Kanags \உரையாடுக 14:34, 30 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கட்டுரைகளில் அதிகம் மலையாள வாடை வருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே பதியப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 14:41, 30 திசம்பர் 2013 (UTC)
மலையாளத்தை திணிக்கும் பழக்கம் எனக்கு இல்லை. :) கூடுமானவரை தமிழ் விக்கியின் விதிகளுக்கு ஏற்பவே எழுதி வருகிறேன். :) தங்களின் மேலான ஆலோசனைகளை நேரம் கிடைக்கும்போது கூறவும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:49, 30 திசம்பர் 2013 (UTC)

நானும் சில மலையாள விக்கிப்பீடியா கட்டுரைகளை மொழிபெயர்த்திருப்பதால் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிபி என்ன பயன்படுத்துகிறீர்கள் எனத் தெரியவில்லை. நான் பழைய பயனர் வினோதின் கருவியைப் பயன்படுத்துகிறேன். (என் எச் எம் ஃபயர்பாக்சு நீட்சி அவ்வளவு சிறப்பாக இல்லை.) மலையாளக் கட்டுரையை தமிழில் எழுத்துப்பெயர்ப்பு செய்து தரும். பின்பு அதைத் தமிழ்நடையில் மாற்றிக் கொண்டிருந்தேன். இப்படி உருவாக்கியவை - காரகோரம் குஞ்ஞாலி மரைக்காயர் எனச் சில.--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:47, 30 திசம்பர் 2013 (UTC)

:) நானும் அதையே பயன்படுத்தினேன். பின்னர் நீச்சல்காரனின் கருவி எழுத்துப்பெயர்ப்பைச் செய்தது. இலக்கணத்தில் சிறிதளவே மாற்றம் செய்திருந்தேன். அதுவே குறையாகக் கண்டறியப்பட்டுள்ளது :( தங்கள் கருத்திற்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:11, 31 திசம்பர் 2013 (UTC)
சத்யன் அந்திக்காடு எனும் கட்டுரையினைக் கவனியுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:05, 31 திசம்பர் 2013 (UTC)
சிவகுருவை பார்த்து தான் நானும் மலையாளக் கட்டுரைகளை எழுதினேன். நானே எழுதியமையால் பெரிய அளவில் பிழைகள் இருக்கவில்லை. குறுகிய காலத்தில் அதிக கட்டுரைகளை சேர்க்கும் எண்ணம் தோன்றிற்று. மேலும், கண் பிரச்சனையால் அதிக நேரம் கணினியில் அமர முடியவில்லை. அதற்காகவே, தானியக்க வழியை நாடினேன். அது இப்படி சிக்கலில் கொண்டு வந்துவிட்டது. தானியக்கத்தால் பிழை ஏற்படும் என்று அறிவேன். எனினும், தானியக்கக் கட்டுரைகளை மேற்பார்வையிட்டே வந்தேன். கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து திருத்தியிருந்தால் சீராக இருக்கும். ஏற்கனவே உள்ள கட்டுரைகளை நேரம் கிடைக்கும் பொழுது திருத்துவேன். கூடிய மட்டிலும் தர அளவீட்டை உணர்ந்தே செயல்படுகிறேன். கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:23, 1 சனவரி 2014 (UTC)
தமிழ், உங்களின் ஆர்வத்தினை புரிந்துகொள்ள இயல்கிறது. கண் பிரச்சினையுடன் நீங்கள் பணியாற்றுவதும் புரிகிறது. தானியக்க வழி ஒரு நல்ல வழியாக நான் தனிப்பட்ட முறையில் கருதவில்லை. கேரளா மாநிலம் குறித்த கட்டுரைகளை எழுத விருப்பமெனில், ஆங்கிலக் கட்டுரைகளை சொந்தமாக மொழிபெயர்க்கலாம். (\\சிவகுருவை பார்த்து தான் நானும் மலையாளக் கட்டுரைகளை எழுதினேன்\\ அறியாமல் தவறாக எழுதிவிட்டீர்கள் என நினைக்கிறேன்.!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:50, 1 சனவரி 2014 (UTC)

கட்டுரைப் போட்டிக்கான பதக்கம்தொகு

  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
திசம்பர் 2013 கட்டுரைப் போட்டியில் கூடுதல் எண்ணிக்கையில் கட்டுரைகளை விரிவாக்குவதில் இரண்டாம் இடம் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். வாழ்த்துகள்! --Anton·٠•●♥Talk♥●•٠· 14:57, 6 சனவரி 2014 (UTC)

  விருப்பம் தமிழ்க்குரிசில் உங்களது பங்களிப்பைக் கண்டு வியக்கின்றேன். தொடர்ந்து பங்குபற்றி முதலிடம் பெற வாழ்த்துக்கள். பெப்ரவரி மாதம் உங்கள் வசம் என்று கேள்விப்பட்டேன். அதிரடியில் கலக்குங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:18, 6 சனவரி 2014 (UTC)

  விருப்பம், வாழ்த்துகள் ஸ்ரீகர்சா! தொடர்கட்டுரைப் போட்டியின் சிறப்புப் பதக்கமும் உனக்கே கிடைக்க வாழ்த்துகிறேன். நன்றி -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 6 சனவரி 2014 (UTC)
  விருப்பம்வாழ்த்துகள் ஸ்ரீகர்சன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:23, 7 சனவரி 2014 (UTC)

நான் இரண்டு பதக்கங்களைத் தான் எதிர்பார்த்தேன். இரண்டையும் ஒரேபதக்கமாகவே அளித்துவிட்டார்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:30, 6 சனவரி 2014 (UTC)

  விருப்பம் -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 15:42, 6 சனவரி 2014 (UTC)

முதற்பக்கத்துக்கு படம் வேண்டும். படம் தரமுடியாது என அடம் பிடித்தால் உலகில் மிக அழகான தமிழ்க்குரிசில் தன் படத்தை வெளிவிட்டு பப்ளிசிட்டி தேட விரும்பவில்லை என முகநூல் முழுதும் ஓட்டுவோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:08, 6 சனவரி 2014 (UTC)

தமிழ்க்குரிசில் இன்றைக்கே உங்கள் படம் வேண்டும்! --Anton·٠•●♥Talk♥●•٠· 16:14, 6 சனவரி 2014 (UTC)
:D :D இது உச்சகட்ட கலாய்ப்பு! :P மற்றவர்களைப் பற்றிய அறிமுகங்களைத் தருக. தற்போதைக்கு என் முகம் அழகாக இருப்பதாக நான் எண்ணவில்லை. பொறுக்கவும். தின்றுகொழுத்துவிட்டு, உப்பிய கன்னங்களுடனான அழகிய படத்தை சில வாரங்களுக்குள் தந்துவிடுகிறேன். :) யப்பா முடியலை :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:19, 6 சனவரி 2014 (UTC)

ஆமாப்பா கட்டுரைப் போட்டியில பங்குபற்றியும் மலையாளக் கட்டுரைகளை மொழிபெயர்த்து உருவாக்கியும் ரொம்ப இளைச்சு துரும்பாப் போட்டீங்க போல--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 16:26, 6 சனவரி 2014 (UTC)

அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. கடந்த ஓராண்டாகவே நான் இளைத்துப் போய்விட்டதாக என் உறவினர் கூறுவர். அதைத் தான் சொன்னேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:29, 6 சனவரி 2014 (UTC)

தமிழ்க்குரிசில் பிறந்ததில் இருந்து படம் எடுத்துக் கொண்டதே இல்லையோ? ஒன்றரை ஆண்டுக்கு முன்னர் உள்ள படமாவது தரலாமே. நமது சோடாபாட்டிலின் சின்னப்புள்ள படத்த பாத்திருக்கீங்களா. அப்பவே அவரு ஹீரோ மாதிரி இருப்பார்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:25, 6 சனவரி 2014 (UTC)

சொல்ல மறந்துட்டேன். அதப்பாத்துத்தான் ஆதவன் அடத்தில் சூரியாவுக்கு சின்னபுள்ள கெடப் போட்டாங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:27, 6 சனவரி 2014 (UTC)

தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும். என்னுடைய கடந்தாண்டு படங்களைத் தேடுகிறேன். கிடைத்தவுடன் பதிவேற்றிவிடுகிறேன். இல்லையேல், என் நண்பன் ஒரு போட்டோஷூட் நடத்தி என்னை படம் பிடித்து தருவதாக வாக்களித்துள்ளான். :P -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:01, 7 சனவரி 2014 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
வணக்கம், தமிழ்! இந்த நிமிடம் வரை 1241 கட்டுரைகள்..! தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்! 'ஆயிரவர்' பதக்கத்தினை உங்களின் பயனர் பக்கத்தில் பதிவு செய்துள்ளேன். அன்புடன், மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:50, 19 சனவரி 2014 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி சிவகுரு! என் பங்களிப்பிற்கு மூலக் காரணமே உங்களின் பாராட்டுகளே.. என்னை என் பயணத்தின் வழி நெடுகிலும், வழி நடத்தி, ஊக்குவித்து இவ்வளவு தூரம் கொண்டு வந்தவர் தாங்களே! எனவே, என் நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பாராட்டி, உதவுமாறு வேண்டுகிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:55, 19 சனவரி 2014 (UTC)
  விருப்பம் தலைவா! தலைவா! சரிதம் எழுது தலைவா!-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:27, 19 சனவரி 2014 (UTC)


:p -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:16, 19 சனவரி 2014 (UTC)

ஆயிரம் கட்டுரை தாண்டிய அன்பு சிபிக்கு வாழ்த்துகள். ஓராயிரம் மட்டுமன்றிப் பல்லாயிரம் கட்டுரைகள் தருக !--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 05:15, 19 சனவரி 2014 (UTC)

நன்றி யாழ்ஸ்ரீ, மரு. கார்த்தி! கார்த்தியின் அன்பு கனிந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி! :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:32, 19 சனவரி 2014 (UTC)
  விருப்பம் வாழ்த்துக்கள் அண்ணா--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 07:50, 19 சனவரி 2014 (UTC)
நன்றி ஸ்ரீகர்சா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:16, 19 சனவரி 2014 (UTC)


வாழ்த்துக்கள் அண்ணா. மென்மேலும் விக்கிக்குளைக்க வாழ்த்து :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 10:17, 19 சனவரி 2014 (UTC)
நன்றி ஆதவா! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:40, 19 சனவரி 2014 (UTC)

தகவல் பெட்டிதொகு

நீங்கள் உருவாக்கும் இடங்கள் பற்றிய கட்டுரைகளில் தகவல் பெட்டி வார்ப்புவை இணைத்து உருவாக்குங்கள். தகுந்த வார்ப்புரு இணைக்காவிட்டால் "விக்கியாக்கம்" வார்ப்புரு இடப்பட வாய்ப்புள்ளது. en:Template:Wikify --Anton·٠•●♥Talk♥●•٠· 06:52, 20 சனவரி 2014 (UTC)

பெர்னான்டோ சோர்தொகு

பெர்னான்டோ சோர் கட்டுரை ஏன் மீட்கப்பட்டது என விளக்க முடியுமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 16:55, 28 சனவரி 2014 (UTC)

விரிவாக்கலாம் என்று தான்! நீங்கள் காலக்கெடு கட்டுரைகளை நீக்கும் பொழுது எனக்கு செய்தி இடுக! எனக்கு பிடித்தவை ஏதேனும் இருந்தால், அவற்றை விரிவாக்க முடியும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:02, 28 சனவரி 2014 (UTC)
ஒரு பயனர் நீக்கல் வார்ப்புரு இடுகிறார், இன்னொருவார் நீக்குகிறார். நீங்கள் எவ்வித பேச்சுமின்றி மீட்கிறீர்கள். கட்டுரையை மீட்கும்போது நீங்கள் காரணம் சுருக்கம் இட்டிருக்க வேண்டும். காலக்கெடு கட்டுரைகளை நீக்கும் பொழுது உங்களுக்கு செய்தி இடமுடியாது. குறித்த பகுப்பில் கட்டுரைகள் உள்ளதை அறிவீர்கள். இதனையும் பார்க்க: en:Wikipedia:Requests for undeletion--Anton·٠•●♥Talk♥●•٠· 17:10, 28 சனவரி 2014 (UTC)

தயவுசெய்து வாக்களிக்கதொகு

இங்கு சென்று vote' என்பதை click செய்து yes என்பதை தெரிவுசெய்யவும், வேணு மெனில் கருத்துக்களையும் இடவும்.--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:45, 9 பெப்ரவரி 2014 (UTC)

உங்களுக்கு யார் பொருத்தமானவர் என தோன்றுகிறதோ அவர்களுக்கு வாக்களியுங்கள். எனக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றில்லை. மேலும் Yes, No, Neutral இதில் எது உங்களுக்கு சரி என படுகிறதோ அதன்படி வாக்களியுங்கள். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 12:11, 9 பெப்ரவரி 2014 (UTC)

சட்டமன்றம்...தொகு

வணக்கம்! சட்டசபை என்பதனை சட்டமன்றம் என எழுதினால் இன்னமும் சிறப்பு! மிகவும் தூய தமிழ்!! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:27, 2 ஏப்ரல் 2014 (UTC)

இனி சட்டமன்றம் என்றே எழுதுவேன். :) நாளேடுகள் சட்டசபை, சட்டப்பேரவை, ஆட்சிக்குழு, சட்டமன்றம் பல பெயர்களால் குறிக்கின்றன. ஆகையால் குழம்பி, சட்டசபை என்று எழுதிவிட்டேன். வழிமாற்றி விடுங்கள். சட்டசபையும் இருக்கட்டும்! நீண்ட நாள் கழித்து விக்கிப் பக்கம் வந்திருக்கிறேன். இனி கலக்கிடுறேன். :) அவ்வப்போது பிழைகள் இருந்தாலும் திருத்திடுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:42, 2 ஏப்ரல் 2014 (UTC)

நான் குறிப்பிட்டது, எவ்வித தலைப்பு குறித்துமல்ல. கட்டுரையின் உள்ளடக்கத்தில் நீங்கள் எழுதியிருந்ததை வைத்து குறிப்பிட்டேன்! பகுப்பு:ஆந்திர மக்களவைத் தொகுதிகள் எனும் பகுப்பினை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:45, 2 ஏப்ரல் 2014 (UTC)

கேரள மக்களவைத் தொகுதிகள்...தொகு

வணக்கம்! கேரள மக்களவைத் தொகுதிகள் குறித்த கட்டுரைகளை நீங்கள் எழுத ஆரம்பித்துள்ளதைப் பார்த்தேன். அனைத்துக் கட்டுரைகளையும் நீங்கள் எழுதியபிறகு கேரளாவில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014 எனும் கட்டுரையில் உள்ளிணைப்புகளை தரலாம் என நினைத்திருந்தேன். ஏனெனில் கட்டுரைகளில் அதிக சிவப்பிணைப்புகள் இருந்தால், வாசகர்களின் கண்களுக்கு அவை உறுத்தலாக இருக்கும் என்பது எனது கருத்து! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:08, 10 ஏப்ரல் 2014 (UTC)

அனைத்துக் கட்டுரைகளிலும் சான்றுகளைச் சேர்த்து தரமுயர்த்த வேண்டுகிறேன், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:16, 16 ஏப்ரல் 2014 (UTC)

கல்லூரி முடியும் தறுவாயில் உள்ளதால், இங்கு வரமுடிவதில்லை. எனவே, தங்கள் கருத்துகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை. கேரளத்தில் 20 தொகுதிகள் மட்டும் தான் என்பதால் இணைப்புகள் தந்திருந்தேன். அதிக தொகுதிகளாய் இருந்தால் தந்திருக்க மாட்டேன்.இரண்டொரு நாட்களில் மீதத்தையும் முடித்திடுவோம். சான்றுகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் சேர்க்கிறேன். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:39, 16 ஏப்ரல் 2014 (UTC)

சிறு வேண்டுகோள்தொகு

கட்டுரைகளில் சட்டசபை என்ற சொல்லுக்குப் பதிலாக சட்டமன்ற என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் :)--இரவி (பேச்சு) 12:49, 16 மே 2014 (UTC)

ஏற்கனவே, சிவகுரு சொல்லியிருந்தார். அவ்வப்போது மன்றம் எனவும் சபை எனவும் பயன்படுத்தி வந்தேன். இனி எழுதும்பொழுது மாற்றிவிடுகிறேன். :) நன்றி. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:59, 16 மே 2014 (UTC)
சரி :) --இரவி (பேச்சு) 13:06, 16 மே 2014 (UTC)

உங்கள் பார்வைக்குதொகு

பார்க்கவும்:பேச்சு:பயண ஆவணம்--Booradleyp1 (பேச்சு) 15:31, 16 மே 2014 (UTC)

பேச்சு:அனகாபல்லி மக்களவைத் தொகுதி-உங்கள் கருத்து?--Booradleyp1 (பேச்சு) 06:27, 17 மே 2014 (UTC)

சான்று தேவைதொகு

வணக்கம் தமிழ்க்குரிசில்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:56, 17 மே 2014 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்! நீங்கள் அண்மையில் எழுதிவரும் கட்டுரைகளில் சில முழுமையடையாமல் உள்ளன. கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை நிறைவு செய்ய வேண்டுகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:05, 19 மே 2014 (UTC)

  • வணக்கம் தமிழ்க்குரிசில், ஆந்தளீ கோஷிம்பீர் (திரைப்படம்) கட்டுரையின் தலைப்பை சரியான உச்சரிப்புக்காக மாற்றியிருக்கிறீர்கள், அத்தோடு கட்டுரைக்குள்ளும் மாற்றினால் திருத்தங்கள் முழுமையடையும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு மராத்தி தெரியுமா? அப்படியானால் இதனையும் கவனிக்க வேண்டும்படி கேட்டுக்கொள்கிறேன்:பேச்சு:பான்ட்ரி (மராத்தி திரைப்படம்)--Booradleyp1 (பேச்சு) 04:06, 18 சூன் 2014 (UTC)
Booradleyp1, என்ன அம்மையாரே! இப்படி அசிங்கப்படுத்திவிட்டீரே! கட்டுரையை விரிவாக்காமல் விட்டிருப்பேனா? இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஆங்கிலத்தில் அந்த திரைப்படத்தைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. சில பக்கங்கள் மராத்தியில் இருந்தன. எதுவும் புரியவில்லை. கட்டுரையை தொடங்கியவர் திருத்துவார் என்று காத்திருக்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:22, 18 சூன் 2014 (UTC)

\\இப்படி அசிங்கப்படுத்திவிட்டீரே! \\

புரியவில்லையே? நகைச்சுவையாகவா அல்லது உங்கள் மனம் புண்படுமாறு ஏதாவது கூறிவிட்டேனா? உண்மையிலேயே எனக்கு இந்தியில் எழுத்துக்கள் மட்டுமே, அதுவும் சிறிதளவே தெரியும். அதனால்தான் உங்களுக்கு மராத்தி தெரியுமா என்று கேட்டிருந்தேன், பாண்ட்ரி கட்டுரைத் தலைப்பைச் சரிபார்ப்பதற்காக

ஆந்தளீ கோஷிம்பீர் கட்டுரையின் ஆங்கில மொழிக் கட்டுரைக்கு இணைப்புத் தந்திருக்கிறேன். இப்பொழுது நீங்களே கட்டுரையை விரிவுபடுத்தலாம்.--Booradleyp1 (பேச்சு) 16:18, 18 சூன் 2014 (UTC)

Return to the user page of "தமிழ்க்குரிசில்/தொகுப்பு 03".