விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/முந்தைய வேண்டுகோள்கள் 14

தகவலுழவன் (அக்டோபர் 7, 2013- அக்டோபர் 21, 2013) (வாக்கு: 43|1|0)தொகு

தகவலுழவன், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விக்சனரியில் மாபெரும் பங்களிப்பை அளித்து வருபவர். நிருவாகப் பணி அறிந்தவர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவிலும் முனைப்பான பங்களிப்பை அளிக்கத் தொடங்கியிருக்கும் இவருக்கு நிருவாக அணுக்கம் அளிப்பதன் மூலம், தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யலாம் என்பதால், இவருக்கு நிருவாக அணுக்கம் அளிக்கப் பரிந்துரைக்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:48, 7 அக்டோபர் 2013 (UTC)

ஆதரவுதொகு

 1. --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:59, 7 அக்டோபர் 2013 (UTC)
 2.   விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 08:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 3.   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:05, 7 அக்டோபர் 2013 (UTC)
 4. ஆதரவு--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 09:32, 7 அக்டோபர் 2013 (UTC)
 5.   விருப்பம்--ஸ்ரீதர் (பேச்சு) 09:41, 7 அக்டோபர் 2013 (UTC)
 6.   விருப்பம் ஆதரவு -- கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 7.   விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:48, 7 அக்டோபர் 2013 (UTC)
 8.   விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:52, 7 அக்டோபர் 2013 (UTC)
 9.   விருப்பம்--கலை (பேச்சு) 10:35, 7 அக்டோபர் 2013 (UTC)
 10. தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 11. ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 12:36, 7 அக்டோபர் 2013 (UTC)
 12. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
 13. --பவுல்-Paul (பேச்சு) 13:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 14.   விருப்பம் - Vatsan34 (பேச்சு) 16:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 15. --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 16:26, 7 அக்டோபர் 2013 (UTC)
 16. --மயூரநாதன் (பேச்சு) 17:42, 7 அக்டோபர் 2013 (UTC)
 17. --குறும்பன் (பேச்சு) 19:17, 7 அக்டோபர் 2013 (UTC)
 18. --Kanags \உரையாடுக 20:55, 7 அக்டோபர் 2013 (UTC)
 19. --Anton (பேச்சு) 02:34, 8 அக்டோபர் 2013 (UTC)
 20. --சங்கர இராமசாமி/உரையாடுக. 07:34, 8 அக்டோபர் 2013 (UTC)
 21. விருப்பம் --Vaarana18 (பேச்சு) 09:30, 8 அக்டோபர் 2013 (UTC)
 22.   விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 9 அக்டோபர் 2013 (UTC)
 23. --மணியன் (பேச்சு) 11:36, 9 அக்டோபர் 2013 (UTC)
 24. ----முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 12:02, 9 அக்டோபர் 2013 (UTC)
 25. நந்தினிகந்தசாமி (பேச்சு) 04:42, 10 அக்டோபர் 2013 (UTC)
 26. --அஸ்வின் (பேச்சு) 07:40, 10 அக்டோபர் 2013 (UTC)
 27. சண்முகம்ப7 (பேச்சு) 16:54, 10 அக்டோபர் 2013 (UTC)
 28. --பழ.இராஜ்குமார் (பேச்சு) 17:13, 10 அக்டோபர் 2013 (UTC)
 29.   விருப்பம்--பரிதிமதி (பேச்சு) 18:29, 10 அக்டோபர் 2013 (UTC)
 30.   விருப்பம்--கிருஷ்ணாபேச்சு 01:32, 11 அக்டோபர் 2013 (UTC)
 31. --Pitchaimuthu2050 (பேச்சு) 13:06, 11 அக்டோபர் 2013 (UTC)
 32.   விருப்பம் ஆதரவு --Tshrinivasan (பேச்சு) 13:11, 11 அக்டோபர் 2013 (UTC)
 33. --Raju Saravanan (பேச்சு) 13:12, 12 அக்டோபர் 2013 (UTC)
 34. --Sengai Podhuvan (பேச்சு) 20:34, 12 அக்டோபர் 2013 (UTC)
 35. --சோடாபாட்டில்உரையாடுக 04:23, 13 அக்டோபர் 2013 (UTC)
 36. --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
 37. --Thamizhpparithi Maari (பேச்சு) 09:16, 13 அக்டோபர் 2013 (UTC)
 38. --சிவகோசரன் (பேச்சு) 10:02, 13 அக்டோபர் 2013 (UTC)
 39. --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:11, 13 அக்டோபர் 2013 (UTC)
 40. ----V.B.Manikandan (பேச்சு) 02:40, 14 அக்டோபர் 2013 (UTC)
  ----[[பயனர்:--முனைவர். துரை. மணிகண்டன் (பேச்சு) 10:29, 14 அக்டோபர் 2013 (UTC)
 41. எஸ்ஸார் (பேச்சு) 14:00, 14 அக்டோபர் 2013 (UTC)
 42. --யோகிசிவம் (பேச்சு) 01:46, 15 அக்டோபர் 2013 (UTC)
 43. மதனாகரன் (பேச்சு) 16:41, 20 அக்டோபர் 2013 (UTC)

எதிர்ப்புதொகு

--Tamil23 (பேச்சு) 03:10, 12 அக்டோபர் 2013 (UTC)

நடுநிலைதொகு

கேள்விகள்தொகு

கருத்துதொகு

 1. விக்கிப்பீடியாவை தொழில்நுட்ப முறையில் மேம்படுத்த எண்ணற்ற ஆலோசனைகளை தன்னிடம் கொண்டுள்ளவர். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டோர்களை ஒருங்கிணைத்து புதுக்கருவிகளை உருவாக்கிதருவார் என்பதால் என்னுடைய ஆதரவு. வாழ்த்துக்கள் தகவலுழவன் நண்பரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:27, 7 அக்டோபர் 2013 (UTC)
  தமிழ் பற்றாளர்கள் ஏராளம். அவர்களை யார் அணுகினாலும், தமிழுக்காக செய்வர். அதனை நீங்களும் கேட்டுப் பாருங்கள்!.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)
  இயன்றதைச் செய்கிறேன் நண்பரே. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:31, 8 அக்டோபர் 2013 (UTC)
 2. சிறந்த பங்களிப்பாளர். விக்சனரியில் இருந்து இவரை இங்கே இழுத்துவிவோமோ என்று பயம் உள்ளது. --Natkeeran (பேச்சு) 13:28, 7 அக்டோபர் 2013 (UTC)
  விக்கித்திட்டங்கள் என் "குடும்பத்திட்டம்". விக்சனரிக்காகவும் பரப்புரை செய்து, வளங்களைக் கூட்டுவேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 8 அக்டோபர் 2013 (UTC)
 3. தகவலுழவன் அண்ணன் நிரலாக்கத்தில் பெரும் ஆர்வம் கொண்டவர். விக்சனரியில் பழ.கந்துவும், தகவல் அண்ணனும் பெரும் பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். இவர் விக்சனரியை மேலும், விரிவாக்கும் திட்டத்தில் உள்ளார், நிறை தமிழ் ஆவணங்களை சேகரித்தும் வைத்துள்ளார். நிர்வாக அணுக்கம் ஏற்புடையதே! நிரல்களை எழுதுமாறு என்னையும் உந்துகிறார். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:35, 9 அக்டோபர் 2013 (UTC)
  "'தம்பி உடையான்;படைக்கு அஞ்சான்" - விக்சனரியின் உயர்த்த, உங்கள் நிரலாக்கம் என்று உதவும்?--≈ உழவன் ( கூறுக ) 02:06, 11 அக்டோபர் 2013 (UTC)
 4. நான் விக்கிபீடியனாக ஆனதற்கு முழுமுதல் காரணம் த*உழவன் அவர்களே. உழவனுக்கு நன்றிகள் பல. அதே தருணம் நக்கீரனின் அச்சம் எனக்கும் உள்ளது.--பரிதிமதி (பேச்சு) 18:29, 10 அக்டோபர் 2013 (UTC)
  உங்களின் பரிவு, என்னுள் நிதானத்தை வளர்க்கிறது. விரைவில் தகவல் எந்திரன் முன் ஓட உள்ளான்!!! -≈ உழவன் ( கூறுக ) 02:06, 11 அக்டோபர் 2013 (UTC)
 5. எதிர்ப்புக்கான காரணங்கள்: தான் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வாதங்களில் ஈடுபடுவது. தமிழ் இலக்கண வழிகளை பின்பற்றாமை. உதாரணம்: பபேசியே பூக்குடும்பத்தின் பேரினங்கள் பட்டியல், அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ், பபேசியே −முன்நிற்கும் கருத்து Tamil23 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
  வெளிச்சமிட்டமைக்கு நன்றி. கூறுதல் உங்களின் நிலை. அப்பக்கக் கூறுகளை ஆய்தல் எனது நிலை. குணம் நாடி.. (திருக்குறள்) வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 03:00, 16 அக்டோபர் 2013 (UTC)
உழவன், குணம் நாடியே அனைவரும் வாக்கிட்டுள்ளனர். எனவே, நிருவாகப் பொறுப்புக்கு வர இருப்பவர் என்ற முறையில், Tamil23யின் கூற்று குறித்து உங்கள் விரிவான பதிலை எதிர்பார்க்கிறேன். இதே போன்ற ஒரு எதிர்ப்பு இன்னொரு பயனருக்கு வருமெனில் உங்கள் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கும்? நன்றி.--இரவி (பேச்சு) 09:54, 16 அக்டோபர் 2013 (UTC)
தகவல் உழவனின் உழைப்பை யாருமே மறுக்க முடியாது. அவருடைய ஆர்வத்தையும் யாரும் மறுக்க முடியாது. கணினி இல்லாமலே உழைத்த நாள்களில் இரவியும் சுந்தரும் நானும் இயன்ற வழிகளில் எல்லாம் த.உழவனுக்கு உதவியும் இருக்கின்றோம். ஆனால் இன்னும் அவர் விக்கியின் கொள்கைகளைச் சரிவர உள்வாங்கவில்லை, பொறுப்புணர்வு-முதிர்ச்சி (உடன் பணியாற்றும் பங்களிப்பாளர்களுடன் உரையாடும் பாங்கு) எய்தவில்லை என்பதே என் மெய்யான கணிப்பு. அவருக்கு நிருவாக அணுக்கம் மறுப்பதால் (அப்படி ஒரு வாய்ப்பு இருப்பதாகக் கொண்டால்) பெரிதாக எதுவும் நன்மை நடக்கப்போவதில்லை, தடுக்க என் கருத்துகளை இடவும் இல்லை, அதனால்தான் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை, ஆனால் நிருவாக அணுக்கம் பெறும் ஒருவர் பிற பங்களிப்பாளர்களை எள்ளி நகையாடாமல் பண்புடன் தன் எதிர்க்கருத்துகளை முன்வைக்கும் பக்குவமும், இணக்கமான முடிவுகள் நோக்கி நகரும் இயல்பான முதிர்ச்சி நிலையும் கொண்டிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இது தமிழ் விக்கிப்பீடியா என்றாலும், தமிழ் விக்சனரியில் தகவல் உழவன் அவர்கள் பல நேரங்களிலும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. அங்கே பங்களிக்கவே எனக்குத் தயக்கமாக உள்ளது. அதனால் ஒதுங்கிப் போகவில்லை, பங்களிப்பைக் குறைவாகச் செய்கின்றேன். இப்பண்புகள் ஒரே நாளில் மாறுவன அல்ல. ஆனால் என் வேண்டுகோள், மெள்ள மெள்ளவாவது நாம் எல்லோரும் நண்பர்களே, எல்லோரும் அவரவர்களுக்குத் தெரிந்தவாறு பங்களிக்கின்றோம், ஒரே உயர் நோக்கிற்காக உழைக்கின்றோம். ஒருவருக்கு ஒருவர் ஏவலாள் அல்லர் (!!), ஆகவே உடன்பங்களிப்பாளர்களுடன் பண்புடன் பழகுவோம் என்னும் முதிர்ந்த நல்லுணர்வு கொள்ளப்பழகவேண்டும். இவ்வணுகுமுறை த.வி-யி சீரான வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்று. சுந்தர் கீழே குறிப்பிட்டவாறு போகப்போக நாம் பண்படுவோம். த. உழவனுக்கு நிருவாகப் பொறுப்பை மறுப்பதால் (மறுக்கும் நிலை இருப்பதாக நினைத்தால்) என்ன நற்பயன் விளையப் போகின்றது? ஏதும் அதிகம் இல்லை. எனவே அவருக்கு இந்த நிருவாகப் பொறுப்பை அளிக்கப் பொறுப்பாளர்கள் முன்வரவேண்டும் என்றே விரும்புகின்றேன், ஆனால் த.உழவன் மேலே சொல்லியுள்ளவற்றைச் சரிவர உள்வாங்கி நடந்துகொள்வார் என்று எதிர்பார்ப்போம். இக்கூற்றுகள் யாவும் நன்னோக்குடனும் உண்மையுடனும் கூறுகின்றேன் என்பதையும் அவர் உணரவேண்டும். --செல்வா (பேச்சு) 15:34, 16 அக்டோபர் 2013 (UTC)

  விருப்பம்--யோகிசிவம் (பேச்சு) 15:43, 16 அக்டோபர் 2013 (UTC)

//தமிழ் விக்சனரியில் தகவல் உழவன் அவர்கள் பல நேரங்களிலும் நடந்துகொண்ட விதம் மிகவும் வருந்தத்தக்கது. அங்கே பங்களிக்கவே எனக்குத் தயக்கமாக உள்ளது. // உழவன், இது தொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். ஏற்கனவே மேலை இன்னொரு விளக்கம் கோரியுள்ளேன். முறையான கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளிக்க வேண்டும் என்பது நிருவாகப் பணியாற்றுவோர் மீது உள்ள அடிப்படை எதிர்பார்ப்பு. நன்றி.--இரவி (பேச்சு) 02:47, 20 அக்டோபர் 2013 (UTC)
ஆம். -- சுந்தர் \பேச்சு 06:26, 20 அக்டோபர் 2013 (UTC)
 1. விக்கிமீடியாவின் அடிப்படை நோக்கத்தைப் புரிந்து, உலகோடு ஒத்து நோக்கி, இங்கு எழுதப்படும் ஆக்கங்கள் மற்றவருக்கு உதவ வேண்டும் என்கிற பண்புடன் செயல்படும் பண்பாளர் --நீச்சல்காரன் (பேச்சு) 04:56, 13 அக்டோபர் 2013 (UTC)
  தங்களுடன் நடந்த உரையாடலுக்குப் பிறகு, w3schoolஇணையத்தில் கற்கத் தொடங்கியுள்ளேன். தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியமைக்கு நன்றி--≈ உழவன் ( கூறுக ) 03:00, 16 அக்டோபர் 2013 (UTC)
 2. விக்கி திட்டங்களில் அதிக முனைப்புள்ள இவருக்கு, இதுவரை sysop அணுக்கம் இல்லை என்பதே தற்பொழுதுதான் எனக்கு தெரிகிறது. இங்கும் தகவல் உழவனின் பணிகள் சிறப்பாக தொடரும் என்று நம்புகிறேன். --எஸ்ஸார் (பேச்சு) 14:10, 14 அக்டோபர் 2013 (UTC)
  இணைவோம். ஏதேனும் திட்டமிருப்பின், எனது உரையாடற்பக்கத்தில் கூறுக. இணைந்து பங்களிப்போம்.--≈ உழவன் ( கூறுக ) 03:00, 16 அக்டோபர் 2013 (UTC)

தகவலுழவனின் வாக்கெடுப்பு விளக்கவுரைதொகு

இரவி! சுந்தர்!

உங்கள் இருவருடன் எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, இந்த உரையாடலை நிறைவு செய்ய எண்ணுகிறேன்.

தனிப்பகுதிதொகு

ஏற்கனவே 'நிருவாக' அணுக்கம் பெற்றவர்கள் மட்டும் பங்குகொள்ளக் கூடிய ஒரு தனிப்பகுதி வேண்டும். அங்கு அடுத்த திட்டங்களைப் பற்றியோ, பொறுப்புகளைப் பற்றியோ, உரையாடிமுடிவெடுத்து விட்டு, பிறகு ஒரு சுற்றறிக்கை(ஆலமரத்தடி) செய்து, பிறரின் பகிர்வுகளை உள்வாங்கலாம். இறுதியாக, அணுக்கவசதியைப் பெற்றவர்கள், அவரவர்திட்டபடி, தேவையான, பிற தன்னார்வ பங்களிப்பாளர்களை இணைத்துக் கொண்டு, செயற்பட்டால் நன்றாக இருக்கும். அப்பொழுதே, நமது வளர்ச்சி மேலோங்கும். வாக்கெடுப்பு நடக்கும் முன்பே, கருத்திட்டால் வாக்கின் அளவு மாறுபடும். இவ்வாறே இந்த அணுக்கவழங்கலுக்கான வாக்கெடுப்புத் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், இவ்வளவு நேரம், பல்வேறு பணிகளுக்கு இடையில், நீங்கள் ஒருசிலர் மட்டும், சிரமப்பட வேண்டியதில்லை. பிறரை வாக்கிட சொல்லிவிட்டு, கருத்திடச்சொல்வது சரி. ஆனால், உரையாடச் சொல்வது, சிறந்த மேலாண்மை அன்று.

எனது வேதனைதொகு

நமது விக்கியை பல்வேறு அடிப்படையில் வளர்க்க, நீங்கள் பட்ட சிரமங்களை அருகில் இருந்து பார்த்து வளர்ந்தவன். விக்சனரி குழுமத்தில், நீங்கள் பிறருடன் உரையாடியது, கூகுளுடன் போராடியது, நீங்கள் என்மீது காட்டிய தொடக்க கால பரிவு, பயிற்சியுமே என்னை விக்சனரியில் இந்திய அளவில், முதலாவது நிலையில் உள்ள பங்களிப்பாளனாக மாற்றியுள்ளது. அதனை மேலும் சிறப்பாகச் செய்ய முயற்சிக்கிறேன். அதனால் ஏற்பட்ட பிழைகளைப்பொறுக்கவும். பல இடங்களில், நீங்கள் பதில் சொல்லவில்லையென்றாலும், பணியடர்வில் இருப்பீர்கள் என்று எண்ணி, தொடராமல் இருந்து விடுகிறேன். இப்பக்கத்தின் உரையாடற்பக்கத்தில் சொற்களின் வன்மை என்பதனைக் கவனிக்கவும். ஒரு வருடமாக உங்களின் முடிவுகளுக்குக் காத்திருக்கிறேன். பொறுப்பாளராக இருக்கும் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வது? எப்படி அதனை இனிது முடிப்பது?

வேண்டுகோள்தொகு

குறிப்பிட்ட சில கட்டுரைகளில் எனது அணுகுமுறை தவறுதான். அயலகச்சொல்லொன்றுக்கு அத்தகைய உரையாடல்கள் தேவையில்லை. அதனை உணர்ந்தே, அடுத்து நான் தொடங்கிய கட்டுரைகளில் எனது பங்களிப்புகளை மாற்றிக்கொண்டேன். பல்வேறு இடங்களில், இந்த வார்ப்புருவை பயன்படுத்தி பலர் மாற்றங்களை ஏற்படுத்துவது போல, என்னை வளர்த்தவர்களில் ஒருவரான பேராசிரியரான செல்வா) ஏன் அதனைத் தவிர்த்தார் என்று எனக்குப் புரியவில்லை. அவரைப் போல அனைவரும் தவிர்த்தால், விக்கியின் நடைமுறை கட்டுக்கோப்பு என்ன ஆகும்? எந்த மாற்றத்தையும் விரும்புவர்கள். அதன் முக்கியத்துவத்தை, உரையாடற் பக்கத்தில் வலியுறுத்திய பிறகே மாற்றவேண்டும் என்று நீங்கள் உருவாக்கிய நடைமுறையை, நீங்களே தவிர்த்தால் எப்படி? நமக்குள்ளேயே சிறந்த மாற்றத்தை கொண்டு வர இயலாத போது, நமது முயற்சிகளால் சமூகத்தில் மாற்றம் எப்படி வரும்? விக்கியின் எதிர்காலம் கூட்டுமுயற்சியே. நாம் நமக்குள்ளே குழுக்களாக செயல்படுவது போல, பிறர் எண்ணுவதற்கான சூழல் எழுந்துள்ளது. அதனை நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

புதிய பயனர்களுக்கான எனது விவரங்கள்தொகு

விக்கிமீடியாத்திட்டங்களில் ஒன்றான விக்சனரிக்கு வருவதற்கு முன்பு, நான் கணினியைத் தொட்டுப்பார்த்தது கூட இல்லை. இன்று விக்கியில் குனு/லினக்சில் தானியங்கியை இயக்கும் வரை முன்னேறி உள்ளேன். ரிச்சர்ட் ஸ்டால்மன் கருத்துக்களை, 'யூடிப்பில்' பார்த்து பார்த்து, அவரின் கொள்கைகளைப் பின்பற்றும் 'தீவிரவாதி' ஆகி விட்டேன்!. தற்போது தமிழ் அனையெழுத்துக் குறியேற்றம் முக்கியத்துவத்தை, பொன்னவைக்கோ அவரின் நேரடி கட்டுபாட்டில் இயங்கும் தமிழ்பேராயத்தில் பணியாற்றிய போது, அறிந்தேன். அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு நிரலாக்கம் செய்ய முயற்சித்து வருகிறேன். குடும்ப சூழ்நிலையின் காரணமாக, தமிழ்பேராயப் பணியை விட்டு, தற்போது பழையபடி சுயதொழில் புரிந்து, பங்களிக்கிறேன். இருந்த இடத்திலேயே, தற்போது இணையத்தில், பல்வேறு தமிழ்ஆர்வலருடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறேன். ஓரளவு நான் வளர்ந்ததற்கு, முழுமுதற்காரணம் இரவி. விக்சனரியில் நான் தடுமாறிக் கொண்டு இருந்த போது, இரவி எனக்குக் கொடுத்த தொடர்பயிற்சியும், பின்னர் பலமுறை அலைப்பேசியில் தொடர்பும் கொண்டும், எனது முயற்சிகளையும் மேம்படுத்தினார். என்னை பிறருக்கு இணையவழியே அறிமுகப்படுத்தி, என் சூழ்நிலையைச் சொல்லி, கணினி வாங்கித் தர, அடித்தளமிட்டார். ஓரளவு வளர்ந்த நான், சேலத்தில், என்னை விட உயர்ந்தவர்களுடன் இணைந்து, இணையத்தமிழுக்காக எடுக்கும் முயற்சிகளை காணவாருங்கள். தவறுகளைச் சுட்டுங்கள். அடுத்த முயற்சியில் இன்னும் என்னை மேம்படுத்திக் கொள்கிறேன்.

ஏக்கம்தொகு

முறையான பயிற்சி வகுப்புகளோ, பாடங்களோ, இருந்திருந்தால், அதனை கற்ற பிறகு, இங்கு வந்திருப்பேன். நீச்சலுக்காக நீரில் குதிப்பது போல, விக்கிக்குள் குதித்தே, கற்கிறேன். அந்த கற்றல் அனுபவத்தில் நானும், எனக்குள் மாறி, விக்கியினையும் மேம்படுத்த, ஒவ்வொரு நாளும் இயன்றவரை போராடுகிறேன். தற்போதுள்ள சிறப்பு அணுக்கம் பெற்றவர்களிடம் சேர்ந்து செயல்பட்டால், இன்னும் என்னால் எனது பங்களிப்புகளை மேம்படுத்திக் கொள்ள இயலும் என்றே எண்ணுகிறேன்.

புதியவர்களுக்கான அணுகுமுறைதொகு
 • ஒரு புதுப்பயனர் வரும் போது, என்னென்ன அணுகுமுறை வேண்டும் என்பதனை உணர்ந்தே செயற்பட உள்ளேன். தமிழ் விக்கியின் முன்னோடிகளின் அடியொற்றி, பலருக்கும் பரப்புரை செய்வேன். அதனால் தான், சேலம் பயிலரங்கு, மற்ற பயிலரங்குகளை விட சிறப்பாக அமைய, எனது முன்மொழிவுகளைக் கூறியுள்ளேன். அதற்கேற்ற நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து பல பயிலரங்குகள், சேலம் மாவட்ட அளவிலாவது நடக்க திட்டமிட்டுள்ளனர். தமிழகமெங்கும் பலருடன் இணைந்து நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
அளவுகோல்தொகு

நமது தமிழ் விக்கிமீடியாத்திட்டங்கள் பல்வேறு அளவுகோல்களில் அளக்கப்படுவது போல, இங்குள்ளவர்களையும் பல்வேறு அளவுகோல்களால் அளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விக்கியில் உள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு முனைப்பான பங்களிப்பு முயற்சிகளை செய்வது, புதிதாக வருபவருக்கோ, விக்கிக்கு வெளியில் இருப்பவருக்கோ தெரியா நிலை உள்ளது. அவர்கள் நம் கூற்றுகளை நம்புவதை விட, அந்த அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிட்டால், இன்னும் நமது வளர்ச்சி வேகமெடுக்கும். ஒருசில பக்கங்களைக் காட்டுதல், ஒருவரின் ஒட்டுமொத்த பங்களிப்பை மறக்கச்செய்யதான் என்ற நிலை மாறவேண்டும். நாம் ஒன்று கூடிதான் ஒரு முடிவு எடுக்கிறோம்; அம்முடிவுபடி செயற்படுகிறோம் என்று உலகுக்கு பறைசாற்ற வேண்டும்.

உரையாடலுக்கான எல்லைகள்தொகு
 • ஒட்டுமொத்த பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, ஒருவர் விக்கியில் கருத்திட வேண்டும். அவர்கள் முதலில் அதற்குரியவர்களிடம் உரையாடலாம், அல்லது பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம், ஏற்கனவே உள்ள 'நிருவாக அணுக்கம்' பெற்றவர்களுக்கான தனிப்பகுதியில் தெரிவிக்கலாம். அப்பொழுது தான் அனுபவமுள்ள, அணுக்க நிலையில் உள்ளவர்கள் சிறப்பாக செயற்பட முடியும்.
 • புதியவர்கள் அவரவர் துறையில் சிறப்பாக இருக்கிறார்கள் என்பதற்காக, விக்கியில் எப்பொழுது வேண்டுமானாலும், அணுகி கேள்விகேட்கலாம், எழுதலாம் என்ற நிலை மாறவேண்டும். அது விக்கியில் பயிற்சி பெற்றவர்களுக்கு/ உழைப்பவருக்கு மன உளச்சலைத்தான் தரும். அதுவே, கூடல் முடிந்தவுடன் நடந்தது. *உரையாடற் பக்கத்தில் ஒருவர் இட்ட கருத்து எவ்வளவு மதிப்புடையதாக இருந்தாலும், அவர் கட்டுரையாக்கத்தில் குறைந்த பட்ச பதிவுகளை செய்ய வேண்டும். தானியங்கிக்கு அணுக்கத்திற்கு எல்லைகள் இருப்பது போல, பங்களிப்பாளர்களிடையே எல்லைகள் வகுக்கலாம். இவ்வளவு தரமான கட்டுரைகள் செய்தால், இந்த உரிமைகள் வழங்கப்படும் என்பது போல..அப்பொழுது தான் தமிழ்விக்கி வளரும். தற்போது பல இடங்களில், உங்களின் ஆற்றல் வெளியாட்களை சமாளிக்கவே வீணாவது வேதனை அளிக்கிறது. எனவே, திட்டமிடுவோம். செயற்படுவோம்.
முடிவுதொகு

எனவே, தற்போதுள்ள 'நிருவாக அணுக்கம்' பெற்றவர்களின் ஆலோசனைகளையும், கருத்திற் கொண்டு, அனைவரது ஒப்பங்களும் பெற்ற பின், எனக்கு 'நிருவாக' அணுக்கம் தரக்கோருகிறேன். இதனை நல்லதொரு வழிகாட்டல் பக்கமாக அமைக்குமாறு, மயூரனாதன், சுந்தர், இரவி, நற்கீரன், கனகு, செல்வா, பார்வதிஶ்ரீ போன்ற, அனைத்து சிறப்புநிலைப் பங்களிப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். விக்கிக்குடும்பம் வளர என்னால் இயன்றதை செய்தே வருகிறேன். நான் இங்கு வேராக இருக்க விரும்புகிறவன்; வேறாக இருப்பவன் அல்ல. இவ்வளவு நேரம் எனது எண்ணங்களை கேட்டமைக்கு மிக்க நன்றி. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 18:02, 21 அக்டோபர் 2013 (UTC)

தகவலுழவன், இவ்வளவு நீளமாகப் பலவற்றையும் சேர்த்து எழுதியுள்ளீர்கள். என்னால் உடனுக்குடன் முழுவதையும் படித்துக் கருத்துச் சொல்ல முடியவில்லை. மேலோட்டமாகப் பார்த்ததில் எனக்கு உறுத்திய இரண்டு செய்திகளை மட்டும் இப்போது உங்கள் எண்ணத்துக்கு இடுகிறேன்:
 1. எந்த அடிப்படையில் இதை இரவியையும் என்னையும் நோக்கிக் கருத்திட்டீர்கள்? ஒன்று உங்களிடம் கேள்வி கேட்டவர்களை மட்டும் விளித்து எழுதியிருக்க வேண்டும். அல்லது, பொதுவாக விக்கி சமூகத்துக்கு எழுதியிருக்கலாம்.
 2. "ஏற்கனவே நிருவாகம் பெற்ற குழு" என்பது போல இவ்வாறான விசயங்களில் பொறுப்பாளர்களைத் தனிக்குழுவாகப் பார்க்க வேண்டியதில்லை. அது ஏற்புடைய போக்கும் அல்ல. சில குறிப்பிட்ட முறையீடுகளுக்காக நிருவாகிகளுக்கான அறிவுப்புப் பலகை போன்றவற்றை வைக்கலாம். ஆனால், சமூகம் உரையாடும் களங்களை அனைத்தும் படிநிலைகளாகப் பிரித்தல் கூடாது.

மற்றவை பின்னர். -- சுந்தர் \பேச்சு 05:03, 22 அக்டோபர் 2013 (UTC)

என்னைப் பொருத்தவரை நீங்கள் நல்ல பங்களிப்பாளர். தவிர நிருவாகி அணுக்கம் என்பது பெரும்பாலும் துப்புரவுப் பணிக்கானது. நீக்கல் போன்ற விசயங்களில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்பதில் முழு உடன்பாடு உள்ளது. அதனால் மேலேயுள்ள உங்கள் மறுமொழியைப் படிக்கும்வரை உங்களுக்கு நிருவாக அணுக்கத்தை வழங்குவதில் முழு உடன்பாடுதான்.
இந்த மறுமொழியைப் பற்றிப பார்ப்போம்: நீங்கள் உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டீர்கள் என்று ஓரிடத்தில் தெரிவித்திருந்த கூற்று வளர்முகமானது. மற்றபடி, இத்தனை நாட்கள் தமிழ்123-இக்கு பதிலளிக்காமல் இருந்தது, பலமுறை நினைவூட்டியபின், இன்று இரவோடு முடிகிறது என்றபின் வந்து உரையாடச் சொல்வது சரியான மேலாண்மையல்ல என்று கருத்திட்டுவிட்டு, இத்தோடு உரையாடலை நிறைவு செய்ய விரும்புவதாகவும் ஒருபுறமாக நீங்களே முடிவு செய்து கொண்டது, அதைவிட மேலே நான் குறித்துள்ள இரு உறுத்தல்களும் நிருவாகி என்றால் எவர் என்ற உங்கள் புரிதலையே சற்று கேள்விக்குள்ளாக்குகிறது.
எனக்கு மாற்றுக்கருத்து ஏற்பட்டுள்ள நிலையில் நானே கருத்திடுபவனாகவும் நானே தேர்வைச் செயற்படுத்துபவனாகவும் இருக்க விரும்பவில்லை. மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட உளைச்சலினாலும் என் பணிகள் மிகவும் பாதித்துள்ளதாலும் வேறு பொறுப்பாளர் யாராவது இதைச் செயற்படுத்த வேண்டி நான் இந்தமுறை நிலுவையில் இருக்கும் பரிந்துரைகளில் இருந்து தேர்வு செய்யும் பணியில் இருந்து விடுபடுகிறேன். உங்களுக்கு நிருவாகப்பணி அளிப்பது எனக்கு ஏற்பே, ஆனால் எனது இந்த கருத்தை நீங்கள் உள்வாங்க வேண்டுமென்றும் வளர்முகமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:39, 22 அக்டோபர் 2013 (UTC)
சுந்தர், உங்களுக்கு மாற்றுக்கருத்து ஏற்பட்டால், எல்லோரையும் மீள்பார்வையிடச்சொல்லி இன்னும் ஒரு கிழமை நேரம் நீட்டிக்க இடம் இருந்தால் தாருங்கள் (இது கூடுதலான வினை அழுத்தம் என்பதை உணர்கின்றேன்), அல்லது உங்கள் முடிவை இப்பொழுதே நிறைவேற்றலாம் (எதுவாக இருந்தாலும்). ஏனெனில் இந்த நிலையில் இன்னொருவர் இப்பொறுப்பை ஏற்பது கடினம். யாரும் அப்படி வந்தால் நல்லது. நான் இப்பொறுப்பை ஏற்க முடியாது ஏனெனில் என் கருத்தை இதில் இட்டிருக்கின்றேன். இத்தனை பேர் ஆதரவு தந்து வாக்களித்திருக்கின்றார்களே, என்று ஏற்கும் முகமாகப் பார்க்க வேண்டும் எனிலும், மேலே தகவல் உழவன் தந்துள்ள மறுமொழியில், அவர் எதையும் நேர்பட அணுகி விளக்கம் அளிக்காமல் வேறு பற்பல செய்திகளைப்பற்றிக் கருத்துரைத்து உள்ளார். நிருவாக அணுக்கம் பெற இன்னும் பக்குவம் பெற வேண்டும் என்பது என்னளவில் தெளிவாகத் தெரிகின்றது. ஆனால் இது என் தனிக்கருத்து. மேலே தகவல் உழவன் கூறிய கருத்துகளை உள்வாங்கி வாக்களித்த பயனர்கள் கருத்துரைத்தோ அல்லது தங்கள் வாக்குகளை மீளுறுதி செய்தோ மாற்றியோ செயற்பட்டால் அதன் அடிப்படையில் தீர்வு எட்ட விதிகள் இடம் தந்தால் அப்படிச் செய்யலாம். இதில் பல "-ஆல்" கள் வருகின்றன. காரணம் இவ்வகையான முடிவுகள் பெரும்பான்மை என்னும் அடிப்படையில் மட்டும் அன்று. சுந்தருக்கு இப்பொறுப்பில் இருந்து விடுபாடு கிட்டவும் வேண்டும். நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளன. எனவே விரைவில் இந்த வாக்கெடுப்பு முடிவுக்கு வருவது நல்லது. பிற நிருவாகிகள், அதிகாரிகள் யாரும் முன் வந்து தீர்க்க முடியும் (வாக்கு அளிக்காதவர்கள்) என்றால் முன்வாருங்கள். --செல்வா (பேச்சு) 12:45, 22 அக்டோபர் 2013 (UTC)
வாக்கிடல் பகுதியில் கேள்விகள் என்ற உட்பிரிவு இருந்தும், யாரும் எதுவும் கேட்கவில்லை. என்னைப் பற்றி கருத்திட்டவர்களிடம், நான் கலந்துரையாட வேண்டுமா? ஒரு பொது இடத்தில், ஒருவர் என்னைப் பற்றி கூறும் போது, அதனை உள்வாங்கிக் கொண்டு, அடுத்த பதிவுகளில் அத்தவறுகளை கைவிட்டுதான் செயல்பட முடியும் என்பதே என் நிலை. வேறு நான் என்ன கூறவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. சுந்தரும், இரவியும் எனது பக்கத்திற்கு வந்ததால், அவர்களிடம் என்மனதில் பட்டதை இயல்பாகக் கூறினேன். ஏனெனில், பொதுவாக சுந்தருடனும், இரவியிடமும் பேசிதான் வளர்ந்துள்ளேன். ஒரே நேரத்தில் பலர், பலவிதங்களில் என்னைப் பற்றி கூறும் போது, எனது மனநிலையும் இயல்பாக இல்லை. இறுக்கமான வாழ்வியல் சூழ்நிலைகளில், என்னால் இயன்ற அளவு விக்கியில் பங்களிக்கிறேன். இத்தகைய அணுக்கம் துப்புரவு பணிதான். அதற்குரிய தகுதி எனக்கு இருப்பின் தரவும். தரப்படும் அணுக்கவசதியில் தொடர்ந்து தவறுகள் செய்தால், அவ்வசதியை நீங்கள் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் என அனைத்து நிருவாகிகளையும், அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 14:00, 22 அக்டோபர் 2013 (UTC)


உழவன், நிருவாகத் தேர்தலில் சுந்தர் கூறிய கருத்துகளை வழிமொழிகிறேன். ஒரு புறம், அதிகாரி / நிருவாகி ஆகிய சொற்களில் உள்ள அதிகாரத்தன்மையைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள். ஆனால், "நிருவாகிகள் மட்டும் கூடி உரையாடி முன்வைத்தல்" போன்ற உண்மையிலேயே அதிகாரம் மிக்க செயற்பாடுகள், மேலாண்மை போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள். இவை இரண்டுக்கும் உள்ள முரணை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். விக்கியில் செயற்பாடுகள் சரியாக அமையாக உரையாடல்களை முன்னெடுப்பது முக்கியம். கேள்விகளுக்கு நேரடியாக பதில் தர வேண்டும். அந்த இழையில் கூற வேண்டியதில் இருந்து விலகிப் பேசக் கூடாது. தமிழ் நடை, விக்கி நடை, விக்கி நுட்பம் போன்ற திறன்களை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால், உளப்பாங்கு தானாக மாறுவது. இதற்குக் காலம் பிடிக்கும். பல வகைப்பட்ட விக்கி பங்களிப்பாளர்களுடன் திறந்த மனதுடன் உரையாடுங்கள். நீங்கள் கொண்டிருக்கிற நிலைப்பாடுகளுக்கு மாற்று நிலைகள் இருக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்கள். இவற்றை மனதில் கொண்டு உங்கள் நிருவாகப் பணிகளை ஆற்றுங்கள். வாழ்த்துகள்.--இரவி (பேச்சு) 10:14, 25 அக்டோபர் 2013 (UTC)

இற்றைதொகு

பெரும்பான்மைப் பயனர்களின் ஆதரவுடன் தமிழ்க்குரிசில், வத்சன், கிருஷ்ணபிரசாத் ஆகிய மூவருக்கும் நிர்வாக அணுக்கம் ஏதுவாக்கப்பட்டுள்ளது. தகவலுழவனுடன் உரையாடல் தொடர்வதால் அது இன்னும் நடப்பில் இருக்கிறது. --Natkeeran (பேச்சு) 13:14, 22 அக்டோபர் 2013 (UTC)

பொறுப்பெடுத்துக் கொண்டமைக்கு நன்றி, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 13:21, 22 அக்டோபர் 2013 (UTC)
நற்கீரன், பொறுப்பை முன்வந்து ஏற்று முடிவுகளை இற்றைப் படுத்தியமைக்கு நன்றி. --செல்வா (பேச்சு) 14:01, 22 அக்டோபர் 2013 (UTC)