நவம்பர் 21
நாள்
(21 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 21 (November 21) கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 164 – மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
- 235 – போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 1386 – சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான்.
- 1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார்.
- 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
- 1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.
- 1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சீனாவின் மஞ்சூரியாவில் ஆர்தர் துறைமுகத்தை சப்பான் கைப்பற்றியது.
- 1905 – ஆற்றலுக்கும் திணிவுக்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஆய்வுக் கட்டுரையை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்டார்.
- 1916 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியாவின் பிரித்தானிக் கப்பல் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில் வெடித்து மூழ்கியதில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
- 1920 – டப்ளினில் காற்பந்துப் போட்டி நிகழ்வொன்றில் பிரித்தானியப் படையினர் சுட்டதில் 14 அயர்லாந்துப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 1918 – உக்ரைன், லுவோவ் நகரில் குறைந்தது 50 யூதர்கள், 270 உக்ரைனியக் கிறித்தவர்கள் போலந்துப் படைகளால் கொல்லப்பட்டனர்.
- 1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க நீர்மூழ்கி சீலயன் சப்பானியப் போர்க் கப்பல்கள் கொங்கோ, உராக்கேசு மூழ்கடிக்கப்பட்டன.
- 1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.
- 1950 – வடகிழக்கு பிரிட்டிசு கொலம்பியாவில் இரண்டு கனடியத் தொடருந்துகள் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 17 பேர் கனடிய இராணுவத்தினர் ஆவார்.
- 1962 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம் செய்வதாக ஒருதலைப் பட்சமாக அறிவித்தது.
- 1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
- 1969 – முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
- 1969 – ஓக்கினாவா தீவை 1972 இல் சப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சார்ட் நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு சாட்டோவுக்கும் இடையில் வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
- 1971 – வங்காள தீவிரவாதக் குழுவான முக்தி வாகினியின் உதவியுடன் இந்தியப் படைகள் கரிப்பூர் என்ற இடத்தில் பாக்கித்தான் படைகளைத் தோற்கடித்தன.
- 1974 – பேர்மிங்காமில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 – தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கப்பட்டது.
- 1980 – நெவாடாவில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87 பேர் கொல்லப்பட்டு 650 பேர் காயமடைந்தனர்.
- 1990 – புலிகளின் குரல் வானொலி தொடங்கப்பட்டது.
- 1990 – மாங்குளம் இராணுவ முகாம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.
- 1996 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான் நகரில் கடைத் தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
- 2004 – டொமினிக்காத் தீவில் இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத் நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.
- 2009 – சீனாவில் சுரங்க வெடி விபத்தில் சிக்கி 108 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – லாத்வியா, ரீகா நகரில் வணிகத் தொகுதி ஒன்றின் கூரை இடிந்து விழ்ந்ததில் 54 பேர் உயிரிழந்தனர்.
- 2013 – உக்ரைனில் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச் உக்ரைனிய-ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை இடைநிறுத்தியதை அடுத்து, அங்கு பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
- 2017 – 37 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் ராபர்ட் முகாபே சிம்பாப்வே அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
பிறப்புகள்
- 1694 – வோல்ட்டயர், பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1778)
- 1854 – பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (இ. 1922)
- 1902 – ஐசக் பாஷவிஸ் சிங்கர், நோபல் பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க எழுத்தாளர் (இ. 1991)
- 1933 – த. இராசலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1938 – ஹெலன், ஆங்கிலோ-பர்மிய இந்தியத் திரைப்பட நடிகை
- 1941 – ஆனந்திபென் படேல், இந்தியாவின் குசராத் முதலமைச்சர்
- 1949 – கே. கோவிந்தராஜ், இலங்கையின் மலையக எழுத்தாளர் (இ. 2009)
- 1968 – ஆயு உத்தமி, இந்தோனேசிய எழுத்தாளர்
இறப்புகள்
- 1555 – அகிரிகோலா சார்சியஸ், செருமானிய கனிமவியலாளர், கல்வியாளர் (பி. 1490)
- 1912 – வலையட்டூர் வெங்கையா, இந்தியக் கல்வெட்டாய்வாளர், வரலாற்றாளர் (பி. 1864)
- 1970 – ச. வெ. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1888)
- 1991 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1903)
- 1994 – மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (பி. 1910)
- 1996 – அப்துஸ் சலாம், நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1926)
- 2012 – அஜ்மல் கசாப், பாக்கித்தானிய தீவிரவாதி (பி. 1987)
- 2022 – ஔவை நடராசன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர் (பி. 1936)
சிறப்பு நாள்
- மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் (கிறித்தவம்)
- உலகத் தொலைக்காட்சி நாள்
- தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம் (தமிழீழம்)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 21 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்