இந்தியக் குடியரசின் 18வது அமைச்சரவை
இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
2024 இந்திய பொதுத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வென்று இந்தியாவின் நடுவண் அரசின் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். நரேந்திர மோடி தலைமையில் அமைந்த மத்திய அமைச்சரவை 10 சூன் 2024 அன்று பதவியேற்றது:[1][2] அமைச்சரவையின் பதவிக்காலம் 10 சூன் 2024 முதல் 9 சூன் 2029 வரையாகும். அமைச்சரவைப் பட்டியல் பின்வருமாறு
இந்திய அரசின் 18வது அமைச்சரவை
தொகுமத்திய ஆய அமைச்சர்கள்
தொகுமத்திய இணை அமைச்சர்கள் (தனி பொறுப்புகளுடன்)
தொகு- ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியியல், திட்டம் மற்றும் திட்ட அமலாக்கம் மற்றும் பண்பாட்டுத் துறை
- ஜிதேந்திர சிங் - , பிரதமர் அலுவலகம், பணியாளர் துறை, பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் மற்றும் அணுசக்தி துறை மற்றும் விண்வெளித் துறை
- அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் & நீதி மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை
- பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் (சிவ சேனா) - ஆயூஷ், சுகாதாரம் & குடும்ப நலம்
- ஜெயந்த் சௌத்திரி - (இராஷ்டிரிய லோக் தளம்) - கல்வி மற்றும் திறன் மேம்பாடு & தொழில் முனைவோர் துறைகள்
மத்திய இணை அமைச்சர்கள்
தொகுதனிப் பொறுப்பு அற்ற இராஜாங்க அமைச்சர்கள்:
- ஜிதின் பிரசாதா - வணிகம் & தொழில், மிண்ணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம்
- சிறீபாத யசோ நாயக் - எரிசக்தி & புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி
- பங்கஜ் சௌத்திரி - நிதி
- கிஷன் பால் - கூட்டுறவு
- ராம்தாஸ் அதவாலே (இந்தியக் குடியரசுக் கட்சி)- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
- ராம்நாத் தாக்கூர் (ஐக்கிய ஜனதா தளம்) - வேளாண்மை & உழவர் நலன்
- நித்தியானந்த ராய் - உள்துறை
- அனுப்பிரியா பட்டேல் (அப்னா தளம் (சோனேலால்))- சுகாதாரம், குடும்ப நலம் மற்றும் இராசயனங்கள் & உரங்கள்
- வி. சோமண்ணா - ஜல் சக்தி & இரயில்வே
- சந்திர சேகர் பொம்மசானி - ஊரக வளர்ச்சி & தகவல் தொடர்பு
- எஸ். பி. சிங் பாகேல் - மீன் வளம், கால்நடை வளர்ப்பு,பால் வளம் & பஞ்சாயத்து ராஜ்
- சுசிறீ சோபா கரந்தஜெ - குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர் & வேலைவாய்ப்பு
- பி. எல். வர்மா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் விநியோகம் மற்றும் சமூக நீதி & அதிகாரமளித்தல்
- சாந்தனு தாக்கூர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் தடங்கள்
- சுரேஷ் கோபி - பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலா
- லோ. முருகன் - செய்தி மற்றும் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்
- அஜய் தம்தா - சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள்
- பண்டி சஞ்சய் குமார் - உள்துறை
- கமலேஷ் பாஸ்வான் - ஊரக வளர்ச்சி
- பகீரத் சௌத்திரி - வேளாண்மை & உழவர் நலன்
- சதீஷ் சந்திர துபே - நிலக்கரி & சுரங்கங்கள்
- சஞ்சய் சேத் - பாதுகாப்புத் துறை
- ரவ்னீத் சிங் - உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் இரயில்வே
- துர்காதாஸ் உய்க்கே - பழங்குடியினர் விவகாரங்கள்
- ரக்சா நிகில் கட்சே - இளைஞர் விவகாரங்கள் & விளையாட்டு
- சுகந்த மஜும்தார் -- கல்வி மற்றும் வடகிழக்கு பிரதேச மேம்பாடு
- சாவித்திரி தாக்கூர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்
- தோக்கன் சாகு - வீட்டு வசதி & நகர்புற மேம்பாடு
- ராஜ் பூசண் சௌத்திரி - ஜல் சக்தி
- பூபதி ராஜு சீனிவாச வர்மா - கனரகத் தொழில்கள் & உருக்கு இரும்பு
- ஹர்ச மல்ஹோத்திரா - பெருநிறுவனங்கள் விவகாரம் மற்றும் சாலைப் போக்குவரத்து & நெடுஞ்சாலைகள்
- திருமதி. நிமுபென் ஜெயந்திபாய் பாம்பானியா - நுகர்வோர் விவகாரங்கள், உணவு & விநியோகம்
- முரளிதர மகோல் - கூட்டுறவு, விமானப் போக்குவரத்து
- ஜார்ஜ் குரியன் - சிறுபான்மையோர் விவகாரங்கள் & மீன் வளம், கால்நடைவளர்ப்பு மற்றும் பால் வளம்
- பபித்திராமர்கெரிதா - வெளியுறவு விவகாரங்கள் & ஜவுளி