Archive இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.

117.207.74.151 ip யின் தொகுப்புகள் தொடர்பாக / சுய விளம்பரம்  ?

வணக்கம் . தங்கள் கவனத்திற்கு .

எனது கணிப்பு( தவறாகக் கூட இருக்கலாம் ) - அந்த i.p மதுரையில் இருப்பதாலும் , சுய விளம்பரம் போல தோன்றுவதாலும் , வெளியிணைப்புகளை நீக்களாமா ? --Commons sibi (பேச்சு) 12:02, 19 நவம்பர் 2014 (UTC)Reply

இவை வெவ்வேறு இதழ்களில் ஒரே நபரால் எழுதப்பட்டக் கட்டுரைகள்..இவை கட்டுரையின் உள்ளடக்கத்திற்கு பொருத்தமானவையாகவேத் தோன்றுகின்றன. இருப்பினும் இது கோபிசங்கருக்கான விளம்பரமோ என்ற ஐயம் எழாமலில்லை. இது குறித்து இரவி, அன்டன் கவனிக்கவும்.--மணியன் (பேச்சு) 14:14, 19 நவம்பர் 2014 (UTC)Reply
வெளியிணைப்புகள் தொடர்பாக ஆங்கில விக்கிப்பீடியா கொள்கை தெளிவாக உள்ளது. குறித்த கட்டுரையின் பொருள் தொடர்பாக விரிவான, ஆழமான, தனித்துவமான இணைப்புகளுக்கு முன்னுரிமை தருதல் நன்று. ஒரே ஆசிரியர் எழுதிய பல வெளியிணைப்புகளை, அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் இணைப்பது தேவையற்றது. இந்த இணைப்புகளை நீக்கலாம். Commons sibi, இது போன்ற தொகுப்புகளைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதற்கு நன்றி. --இரவி (பேச்சு) 06:59, 20 நவம்பர் 2014 (UTC)Reply
நன்றி இரவி, Commons sibi. இணைப்புகள் நீக்கப்பட்டன.--மணியன் (பேச்சு) 09:21, 20 நவம்பர் 2014 (UTC)Reply

உதவி தேவை...

வணக்கம்! The Living Legend award - இதனை எப்படி தமிழ்ப்படுத்துவது? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:19, 5 திசம்பர் 2014 (UTC)Reply

செல்வகுருநாதன், இதனை வாழும் மாமேதை விருது அல்லது வாழும் பெருங்கலைஞர் விருது என மொழிபெயர்க்கலாமா ? --மணியன் (பேச்சு) 04:08, 6 திசம்பர் 2014 (UTC)Reply

குறிப்பிட்டக் கட்டுரை, ஒரு இசைக் கலைஞர் பற்றியது என்பதனால் வாழும் பெருங்கலைஞர் விருது என அக்கட்டுரையில் தற்போது எழுதியுள்ளேன்; தமிழ் விக்சனரியிலும் கேட்கவுள்ளேன். உடனடியான உதவிக்கு நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:54, 6 திசம்பர் 2014 (UTC)Reply

தகவலுக்காக... விக்சனரியில் தகவலுழவன் அவர்களின் பதில்... --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:46, 6 திசம்பர் 2014 (UTC)Reply

சிகரம்:பிலிப்பீன்சு

சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள்.

--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)Reply

மணியன் அவர்களே பிலிப்பீன்சு கட்டுரையை உரைதிருத்தி உதவியமைக்கு நன்றி. அத்துடன் பிலிப்பைன்ஸ் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி உதவியமைக்கும் நன்றி. கட்டுரையின் பராமரிப்புப் பணிக்காக இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன். இங்குள்ள தகவல்களை வாசித்து ஆவன செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:25, 1 சனவரி 2015 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

 
அனைவரும் வருக

வணக்கம் Rsmn/தொகுப்பு 4!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:26, 30 திசம்பர் 2014 (UTC)Reply
வணக்கம் மணியன், வழமை போலவே இம்மாதம் உங்கள் முனைப்பான பங்களிப்புகளைக் கண்டு மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும். இம்மாதமும் தொடர்ந்தும் மேலும் பல முனைப்பான பங்களிப்பாளர்களை உருவாக்குவது தொடர்பான உங்கள் ஆலோசனைகளை இங்கு தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 08:53, 16 சனவரி 2015 (UTC)Reply

Happy New Year

  Happy New Year - 2015
Wish you happy and prosperous new year. -- L Manju (பேச்சு) 19:52, 31 திசம்பர் 2014 (UTC)Reply

விளக்கம்...

வணக்கம். எழுதியவரே திருத்தட்டுமென சிவகுரு நினைக்கிறார் என்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களோ என நான் பயப்படுகிறேன். எனவேதான் கீழ்க்காணும் விளக்கம்:

எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கும் விசயங்களில் மட்டுமே நான் திருத்தங்களை மேற்கொள்கிறேன். நன்கு தெரிந்த எழுத்துப்பிழை, சொற்பிழை, இலக்கணப் பிழைகளை திருத்துகிறேன். சில நேரங்களில் தகவலை சரிபார்க்க உரிய நேரம் கிடைப்பதில்லை. அப்போது சுட்டிக்காட்ட மட்டுமே முடிகிறது. உதாரணமாக அன்புள்ள கமல் (திரைப்படம்) எனும் கட்டுரையை சரிபார்க்க உரிய சூழல் இல்லை (அலுவலகம்). எனவே பேச்சு:அன்புள்ள கமல் (திரைப்படம்) பக்கத்தில் குறிப்பிட்டேன்.

அதே போன்ற வேறொரு சூழலே சப்பானியப் பேரரசு கட்டுரையிலும் எனக்கு ஏற்பட்டது. தங்களால்தான் உரிய திருத்தம் செய்ய இயலும் என்றும் தோன்றியது; எனவே சுட்டிக்காட்டினேன். தமிழ் விக்கியில் எனது தொகுப்பு ஒன்றினால் பிழை வந்துவிடக் கூடாது என்பதுவே எனது எச்சரிக்கை உணர்வுக்குக் காரணம்!

நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 2 சனவரி 2015 (UTC)Reply

உங்கள் விளக்கத்திற்கு நன்றி ! எழுதியவரே திருத்தட்டுமென இல்லை; திருத்த சிவகுரு தயங்குகிறார் என்பதாகவே நான் எண்ணினேன். சிறு பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் திருத்திட எழுதியவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கக் தேவையில்லை; நெடுநாள் பயனர்கள் தங்கள் கட்டுரைகளில் திருத்தப்படும் பிழைகளை கவனிப்பு பட்டியல் மூலம் கண்காணித்துக் கொண்டிருப்பதால் பிழையை அறிந்து பின்வரும் தொகுப்புகளில் திருத்திக் கொள்வர். தவிரவும் தவறுள்ள கட்டுரை ஆக்குநர் மீண்டும் புகுபதிகை செய்யும்வரை காத்திருக்க வேண்டாமே ! மற்றபடி உங்கள் உள்ளுணர்வுப்படி நீங்கள் செயல்படுவதே சரி !. நான் தாய் கட்டுரைகளில் சிவப்பிணைப்புகளை நீக்க சேய் கட்டுரைகளை குறுங்கட்டுரைகளாக ஆக்குகையில் இவ்வாறான பிழைகள் நேர்கின்றன. நீங்கள் சுட்டுக்காட்டுவது எனக்கு மிகவும் உதவியாக உள்ளது.
நன்றி! --மணியன் (பேச்சு) 09:14, 2 சனவரி 2015 (UTC)Reply

புரிதலுக்கு மிக்க நன்றி; இப்போது என்னால் நிம்மதியாக எனது சொந்த வேலையைத் தொடர இயலும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 2 சனவரி 2015 (UTC)Reply

மைதானம்

மைதானம் என்பதற்குப் பதிலாக அரங்கு அல்லது அரங்கம் என்பதைப் பயன்படுத்தலாமா?--Kanags \உரையாடுக 07:26, 5 சனவரி 2015 (UTC)Reply

இலங்கை வழக்கில் விளையாட்டு மைதானம் எனவே அழைக்கின்றனர். எழுதுகின்றனர்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:38, 5 சனவரி 2015 (UTC)Reply

மைதானம் என்பது தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை:)--Kanags \உரையாடுக 07:52, 5 சனவரி 2015 (UTC)Reply
கனகு, பொதுவாக நான் புதிதாக எழுதும் கட்டுரைகளுக்கு மைதானம் என்பதற்கு திடல் என்றும் stadium என்பதற்கு விளையாட்டரங்கம் என்றும் பெயரிடுகிறேன். இங்கு கட்டுரையில் ஏற்கெனவே இடப்பட்டிருந்த சொல்லை மாற்றவில்லை. இதேபோல வெல்லிங்டன் பிராந்திய கூட வெல்லிங்டன் வட்டார என எழுத விரும்புவேன். ஆனால் மற்றவர்கள் முதலில் ஆக்கிய சொற்களை நான் பொதுவாக மாற்றுவதில்லை. ;)--மணியன் (பேச்சு) 10:50, 5 சனவரி 2015 (UTC)Reply
மைதானம் என்பது தமிழ்ச் சொல்லாகத் தெரியவில்லை -- பல தமிழ் விக்கி கட்டுரைகளும் பகுப்புகளும் இச்சொல்லைக் கையாண்டுள்ளன :)--மணியன் (பேச்சு) 11:10, 5 சனவரி 2015 (UTC)Reply

மைதானம் என்பதைத் 'திடல்' என்று சொல்வதே சரி.~~செம்மல்50

திடல் (விளையாட்டுத் திடல்) என்பதே பொருத்தம். இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.--Kanags \உரையாடுக 11:26, 29 சனவரி 2015 (UTC)Reply
இனி மைதானம் என்பதற்கு திடல் என்றும் stadium என்பதற்கு விளையாட்டரங்கம் என்றும் பெயரிடுகிறேன். --மணியன் (பேச்சு) 14:02, 29 சனவரி 2015 (UTC)Reply

தங்களின் கவனத்திற்கு...

வணக்கம்! பேச்சு:வயிற்றரை உட்காண் அறுவை சிகிச்சை காணவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:47, 31 சனவரி 2015 (UTC)Reply

வணக்கம்! இந்த நகரம் குறித்த கட்டுரையை விரிவாக்கித் தர கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:54, 4 பெப்ரவரி 2015 (UTC)

தங்கள் சித்தம் எங்கள் ஆணை !--மணியன் (பேச்சு) 05:21, 4 பெப்ரவரி 2015 (UTC)

தங்களிடம் கேட்டுப்பெற எங்களுக்கு உரிமையிருக்கிறது என்பதனை உறுதிபடுத்தியமைக்கு நன்றி! உலகக் கோப்பைக் கிரிக்கெட் கட்டுரையை காலையில் பார்த்தபோது, மெல்பேர்ண் கட்டுரை குறுங்கட்டுரையாக இருப்பதை அறிந்தேன்; எனவே தங்களிடம் வேண்டுகோள் வைத்தேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:17, 4 பெப்ரவரி 2015 (UTC)

பதக்கம்

விக்கிப்பயனர்கள் அனைவருமே மிகவும் மரியாதை மிக்கவர்கள் தான் !! எனவே இத்தகைய பதக்கங்கள் வேண்டாமே !--மணியன் (பேச்சு) 08:19, 5 பெப்ரவரி 2015 (UTC)

நீங்கள் சொல்லும் கருத்து, சரியானது; எனவே வழங்கிய இந்தப் பதக்கத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:19, 5 பெப்ரவரி 2015 (UTC)

சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு:பிலிப்பீன்சு

சிகரம் திட்டத்தினூடாக விரிவாக்கப்பட்ட பிலிப்பீன்சு கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக நியமிப்பதற்கு இப்பக்கத்தில் முன்மொழிந்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவியுங்கள்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 11:59, 5 பெப்ரவரி 2015 (UTC)

Article request: German school in Chennai

Hi! Are you interested in starting a Tamil article on the en:German International School Chennai ?

Thanks WhisperToMe (பேச்சு) 10:34, 24 மார்ச் 2015 (UTC)

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 11:16, 24 மார்ச் 2015 (UTC)
Thank you :) WhisperToMe (பேச்சு) 19:23, 25 மார்ச் 2015 (UTC)

உதவி

வணக்கம். "தமிழ்த் தேசியர்கள்" என்பது யாரைக் குறிக்கிறது என்று எனக்குப் புரியவில்லை, அவ்வாறு குறிப்பிடப்படும் நபர்களுக்கான பொதுப்பண்பு என்ன என்பதை எனக்கு விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 05:40, 28 மார்ச் 2015 (UTC)

ஙே !!--மணியன் (பேச்சு) 08:32, 28 மார்ச் 2015 (UTC)
Booradleyp1, இக்கட்டுரை பல்வேறு சிக்கல்களைக் கொண்டிருந்தாலும் தமிழ்த் தேசியம் பற்றிய அடிப்படையை விளக்கக்கூடியது. இக்கொள்கையை ஏற்போர், அதற்காக உழைப்போரைத் தமிழ்த் தேசியர்கள் எனலாம்.--இரவி (பேச்சு) 09:18, 28 மார்ச் 2015 (UTC)

நன்றி இரவி. தமிழ்நேயன் என்ற கட்டுரை "தமிழ்த் தேசியர்கள்" என்ற பகுப்பில் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு இந்தக் குழப்பம் நேர்ந்தது. தமிழ்த் தேசியம் கட்டுரையைப் படித்த பின்னும் எனக்குத் தமிழ்த் தேசியம் குறித்து தெளிவான ஒரு கருத்துக் கிட்டவில்லை. (காரணம் கட்டுரையா அல்லது எனது விளங்குதிறனா என்று தெரியவில்லை!) பொதுவாக தமிழ் மொழியால் இணைபடுதல் என்று நானே விளக்கிக் கொண்டுள்ளேன். கட்டுரை கலைக்களஞ்சிய நடையில் இல்லாமலும் தலைப்பைப் பற்றிய தகவலைத் தெளிவாகக் தராமலும் உள்ளது போல எனக்குத் தோன்றுகிறது. --Booradleyp1 (பேச்சு) 07:53, 30 மார்ச் 2015 (UTC)

மணியன், மன்னிக்கவும். என் குழப்பத்தைத் தெளிவிக்க உங்கள் உதவியை நாடி, உங்களையும் குழப்பி விட்டேன் என நினைக்கிறேன். "பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்" என்பதை உள்ளிணைப்புக்குறியுடன் தவறுதலாக தந்து விட்டதால் இங்கு பகுப்பு என்ற வார்த்தை தோன்றாமல், அதற்குப் பதிலாக உங்கள் பேச்சுப் பக்கம் அப்பகுப்புக்குள் இணைந்து விட்டது. இப்போது சரிசெய்திருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:53, 30 மார்ச் 2015 (UTC)

@பூங்கோதை அவர்களே பகுப்பு:தமிழ்த் தேசியர்கள் என்பதை [[:பகுப்பு:தமிழ்த் தேசியர்கள்]] என்று இட்டால் பகுப்பு:தமிழ்த் தேசியர்கள் என்று இணைப்பாகக் காட்சியளிக்கும்.--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 08:02, 30 மார்ச் 2015 (UTC)
நன்றி, ஸ்ரீகர்சன், இனி இவ்வாறு பயன்படுத்துகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:10, 30 மார்ச் 2015 (UTC)
Booradleyp1, குறிப்பிட்ட கட்டுரையில் வேறு சில சிக்கல்கள் இருப்பதாக பராமரிப்பு வார்ப்புருக்கள் இட்டிருக்கிறார்கள். அதனைச் சரி செய்த பிறகு உரிய பகுப்பில் இடலாம். அது வரை இதே பகுப்பில் இருக்கட்டும். தமிழ்த் தேசியம் தொடர்பான கட்டுரைகளை விரிவாகவும் தெளிவாகவும் எழுத முனைவோம்.--இரவி (பேச்சு) 08:22, 30 மார்ச் 2015 (UTC)

புதிய நிருவாகிகள் பரிந்துரை

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)

பரிந்துரைக்கிறேன் இரவி !--மணியன் (பேச்சு) 08:34, 28 மார்ச் 2015 (UTC)

பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்

  2015 பெண்கள் வரலாற்று மாதப் பதக்கம்
2015 பெண்கள் வரலாற்று மாதக் கட்டுரைகளில் சிறப்பான பங்களித்தமைக்காக இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். தொடர்ந்து பெண்கள் சார்பான கட்டுரைகளில் பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 12:16, 1 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம்--AntonTalk 12:35, 1 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:45, 1 ஏப்ரல் 2015 (UTC)
இப்பகுப்பின் பெரும்பான்மையான கட்டுரைகளை உருவாக்கியதற்கு எனது சிறப்பு வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 17:22, 1 ஏப்ரல் 2015 (UTC)
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 07:46, 2 ஏப்ரல் 2015 (UTC)
பதக்கம் வழங்கி பாராட்டிய இரவிக்கும் வாழ்த்துக் கூறிய நல்லிதயங்களுக்கும் மிக்க நன்றி !!--மணியன் (பேச்சு) 17:19, 2 ஏப்ரல் 2015 (UTC)

Article request: Ministry of Civil Aviation (Sri Lanka)

Are you interested in making a Tamil article of en:Ministry of Civil Aviation (Sri Lanka)? The Tamil site of the ministry is http://www.aviationmin.gov.lk/ta/index.html.

Thank you WhisperToMe (பேச்சு) 17:15, 21 ஏப்ரல் 2015 (UTC)

Translating the interface in your language, we need your help

Hello Rsmn, thanks for working on this wiki in your language. We updated the list of priority translations and I write you to let you know. The language used by this wiki (or by you in your preferences) needs about 100 translations or less in the priority list. You're almost done!
 
எல்லா விக்கிகளுக்கும் மொழிபெயர்ப்புகளைச் சேர்க்க அல்லது மாற்ற, மீடியாவிக்கி உள்ளூராக்கல் திட்டமான translatewiki.net ஐப் பயன்படுத்துக.

Please register on translatewiki.net if you didn't yet and then help complete priority translations (make sure to select your language in the language selector). With a couple hours' work or less, you can make sure that nearly all visitors see the wiki interface fully translated. Nemo 14:07, 26 ஏப்ரல் 2015 (UTC)

Article request: École Franco-Indienne Sishya

Hi! I found that en:École Franco-Indienne Sishya is a French school in Chennai. Are you interested in starting a Tamil article on it? Thanks WhisperToMe (பேச்சு) 19:45, 27 ஏப்ரல் 2015 (UTC)

Does not have significant content..Does not meet Notability in our wiki.--மணியன் (பேச்சு) 12:57, 20 மே 2015 (UTC)Reply
Ok. If I do find additional information at a later time I'll ask if it meets the requirements. WhisperToMe (பேச்சு) 02:24, 1 சூலை 2015 (UTC)Reply

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)Reply

கருத்து தேவை...

வணக்கம்! இங்கு தங்களின் கருத்து தேவைப்படுகிறது. (நீங்க எப்ப வருவீங்கன்னு காத்துக்கிட்டு இருந்தேன்...!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:24, 17 மே 2015 (UTC)Reply

Singapore General Hospital article request

Is the en:Singapore General Hospital eligible for an article in the Tamil Wikipedia? Thanks, WhisperToMe (பேச்சு) 02:24, 1 சூலை 2015 (UTC)Reply

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 13:02, 5 சூலை 2015 (UTC)Reply
Thank you :) WhisperToMe (பேச்சு) 16:31, 11 சூலை 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:05, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:25, 7 சூலை 2015 (UTC)Reply

எனது தனிப்பட்ட பிரச்சினைகளால் இணையத்தில் பங்களிப்பது அரிதாகவுள்ளது. எனவே என்னால் இயன்றளவில், முனைப்பை ஊக்குவிக்க, பங்கேற்கிறேன்.--மணியன் (பேச்சு) 04:12, 10 சூலை 2015 (UTC)Reply

நன்றி; தங்களைப் போன்றோரின் புகுபதிகை, அளவற்ற ஊக்கத்தினை எங்களுக்குத் தரும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 10 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:14, 25 சூலை 2015 (UTC)Reply

கருத்துக் கோரல் - த.இ.க ஊடாக த.வி வளர்ச்சி வாய்ப்புக்கள்

தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வாய்ப்புக்கள், செயற்திட்டங்கள் பற்றி உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க பார்க்க: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இணையக் கல்விக்கழகம் ஊடாக தமிழ் விக்கிப்பீடியாவுக்கான வளர்ச்சி வாய்ப்புகள்

--Natkeeran (பேச்சு) 13:04, 29 சூலை 2015 (UTC)Reply

Kuala Lumpur transit requests

Are you interested in starting articles on Kuala Lumpur rail stations?

Also I found en:Petaling Jaya doesn't yet have a Tamil article. பெடாலிங் ஜெயா  Y ஆயிற்று

Thank you, WhisperToMe (பேச்சு) 21:53, 22 ஆகத்து 2015 (UTC)Reply

@WhisperToMe: your requests have been completed..--மணியன் (பேச்சு) 05:05, 22 செப்டம்பர் 2015 (UTC)
Thank you :) WhisperToMe (பேச்சு) 05:03, 18 அக்டோபர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம், 2015

 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2015 00:00 முதல் நவம்பர் 30, 2015 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். (wordcounttools மூலமாக சொற்களின் எண்ணிக்கை நீங்களும் சரி பார்க்கலாம்.)
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். போட்டிக்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்படாது.
  • இந்தியா, இலங்கை பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள் பற்றியதாக கட்டுரைகள் உருவாக்கப்பட வேண்டும்.


குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நன்றி

ஆசிய மாதம் - முதல் வாரம்

 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)Reply

பகுப்பின் பெயரில் ஒற்றுமை

நான் இப்பொழுது இந்திய விருதுகள் குறித்த வார்ப்புருக்களை மேம்படுத்துகிறேன். அப்பொழுது பகுப்பு பேச்சு:பத்ம பூசண் விருது பெற்றோர் என்பதனைக் கண்டேன். சில பகுப்புகள் பெற்றவர்கள் என்றே முடிகிறது. அங்ஙனமே மேற்கூறிய பகுப்பினையும் மாற்ற எண்ணுகிறேன்.உங்களின் எண்ணத்தையும் அங்கு வெளிப்படுத்தக் கோருகிறேன். வணக்கம்--உழவன் (உரை) 09:11, 16 நவம்பர் 2015 (UTC)Reply

கட்டுரைக்கான வேண்டுகோள்...

Myanmar general election, 2015 - ஒரு சுருக்கமான கட்டுரையைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:24, 21 நவம்பர் 2015 (UTC)Reply

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 16:41, 21 நவம்பர் 2015 (UTC)Reply

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:04, 25 நவம்பர் 2015 (UTC)Reply

ஆசிய மாதம் - இறுதி வாரம்

 

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)Reply

Tamil name of this Malaysia school?

Do you know how to find the Tamil name of en:SMK Vivekananda, Brickfields? I would like to know the possibility of having an article in Tamil about this school?

It will be விவேகானந்தா உயர்நிலைப் பள்ளி, பிரிக்பீல்ட்சு --Will attempt in one of these days !--மணியன் (பேச்சு) 06:43, 30 நவம்பர் 2015 (UTC)  Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 05:25, 1 திசம்பர் 2015 (UTC)Reply

Also, what is the Tamil text in File:JayawinCurryHouseKL.jpg? It is transliteration in Tamil script of Jayawin Curry House = ஜெயவின் கறி ஹவுஸ்--மணியன் (பேச்சு) 06:43, 30 நவம்பர் 2015 (UTC)Reply

Thanks! WhisperToMe (பேச்சு) 06:33, 30 நவம்பர் 2015 (UTC)Reply

As they say in Malaysia, terima kasih (thank you!) WhisperToMe (பேச்சு) 11:37, 30 நவம்பர் 2015 (UTC)Reply

If you want to try another school article, I found en:Troy School District (Michigan) in the USA has a handbook in Tamil: http://cos.troy.k12.mi.us/Documents/ESL/Code%20of%20Conduct/August%202011%20without%20revisions%20FINAL_TAMIL.doc (from http://cos.troy.k12.mi.us/ESL.htm ) - Apparently they get a lot of students from India WhisperToMe (பேச்சு) 03:41, 3 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்

  விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம்
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:03, 25 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிக்கோப்பை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! விக்கிக்கோப்பை ஒருங்கிணைப்புக்கு முன்வந்தமைக்கு நன்றி. போதிய நேரம் இல்லாது இருப்பதால் நிரல்கள் இல்லாமல்தான் போட்டியைக் கணிக்க வேண்டும். விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி போன்றுதான் செயற்பட வேண்டும். ஆகவே, சில சிக்கல்கள் இருந்தாலும் நிரல் பற்றிய கவலை இல்லை. மேலும், நீங்களும் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்பை நாங்கள் மதிப்பீடு செய்வோம். அதனால் நலமுரண் ஏற்படாது. --AntanO 03:55, 1 சனவரி 2016 (UTC)Reply

நன்றி அன்டன். உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !! நானும் பங்கேற்கிறேன் :) சனவரி 4 வரை வெளியூர் செல்வதால் எனது பங்களிப்பு தடைபட்டிருக்கலாம்.--மணியன் (பேச்சு) 10:29, 1 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம் --AntanO 13:43, 1 சனவரி 2016 (UTC)Reply

ஆசிய மாதம் - நிறைவு

 

வணக்கம்!

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டியதால், உங்கள் பெயரினை இந்த மதிப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதன் மூலம் உள்ளீடு செய்யுங்கள்.

குறிப்பு: படிவம் ஆங்கிலத்தில் உள்ளது. உதவி தேவையெனின் என் பேச்சுப்பக்கத்தில் குறிப்பிடுங்கள். நன்றி! --AntanO 09:26, 13 சனவரி 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 14:39, 13 சனவரி 2016 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


உதவி...

வணக்கம்! இங்கு இருக்கும் அட்டவணையில் Row 62 - Row 69 வரைக்கும் பிரச்சனை உள்ளது. காரணம் தெரியவில்லை; திருத்தி உதவவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:45, 26 சனவரி 2016 (UTC)Reply

கண்டறிந்து திருத்தியுள்ளேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:50, 26 சனவரி 2016 (UTC)Reply

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  வணக்கம் Rsmn/தொகுப்பு 4 அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
 

-- மாதவன்  ( பேச்சு ) 06:13, 4 பெப்ரவரி 2016 (UTC)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! --AntanO 06:16, 4 பெப்ரவரி 2016 (UTC)
மிக்க நன்றி மாதவன்,அன்டன் !--மணியன் (பேச்சு) 07:34, 4 பெப்ரவரி 2016 (UTC)

Ideas for Malaysia articles

Hi! Are you interested in starting some Tamil articles about these topics from Malaysia?

Thanks, WhisperToMe (பேச்சு) 08:53, 23 பெப்ரவரி 2016 (UTC)

Thank you for letting me know! I'll go ahead and post the remainder of my list :) - Also thank you for doing these articles! WhisperToMe (பேச்சு) 23:48, 8 மார்ச் 2016 (UTC)

மூவாயிரவர் பதக்கம்

  மூவாயிரவர் பதக்கம்
தமிழ் விக்கிப்பீடியாவில் தாங்கள் செய்துவரும் அனைத்துப் பணிகளும் உன்னதமானவை; தங்களுக்கு இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 6 ஏப்ரல் 2016 (UTC)
நன்றி செல்வசிவகுரு !!--மணியன் (பேச்சு) 09:40, 6 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:15, 6 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்--நந்தகுமார் (பேச்சு) 11:38, 6 ஏப்ரல் 2016 (UTC)
  விருப்பம் வாழ்த்துகள்! --AntanO 13:30, 6 ஏப்ரல் 2016 (UTC)
பலருக்கும் முன்மாதிரியான, முழுமையான பங்களிப்பு. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 14:52, 6 ஏப்ரல் 2016 (UTC)
  விருப்பம் வாழ்த்துகள் --குறும்பன் (பேச்சு) 01:50, 7 ஏப்ரல் 2016 (UTC)
வாழ்த்துகள்--Booradleyp1 (பேச்சு) 06:15, 7 ஏப்ரல் 2016 (UTC)
  விருப்பம் வாழ்த்துகள்--கி.மூர்த்தி
வாழ்த்துரைத்த அன்பு நெஞ்சங்களுக்கு மிக்க நன்றிகள் !! --மணியன் (பேச்சு) 02:24, 8 ஏப்ரல் 2016 (UTC)

Participate in the Ibero-American Culture Challenge!

Hi!

Iberocoop has launched a translating contest to improve the content in other Wikipedia related to Ibero-American Culture.

We would love to have you on board :)

Please find the contest here: https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translating_Ibero_-_America/Participants_2016

Hugs!--Anna Torres (WMAR) (பேச்சு) 13:54, 10 மே 2016 (UTC)Reply

பகுப்புகளை விக்கித்தரவில் சேர்த்தல்

வணக்கம் மணியன், கட்டுரைகளை விக்கித்தரவில் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வாறே பகுப்புகளையும் விக்கித்தரவில் சேர்ப்பது மிகவும் முக்கியமானது. இதனால் பல நன்மைகள் உள்ளன. நன்றி.--Kanags \உரையாடுக 01:00, 8 சூன் 2016 (UTC)Reply

அவ்வாறே செய்கிறேன் கனக்சு. கோபா அமெரிக்கா நூறாண்டுகள் கட்டுரையில் நீங்கள் மேம்படுத்திய தொகுப்புகளுக்கு நன்றி ! --மணியன் (பேச்சு) 02:02, 8 சூன் 2016 (UTC)Reply

உதவி...

வணக்கம்! பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி எனும் கட்டுரையை கவனிக்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:21, 10 சூன் 2016 (UTC)Reply

 Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 14:51, 10 சூன் 2016 (UTC)Reply

மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:13, 10 சூன் 2016 (UTC)Reply

நன்றிகள்!

வணக்கம்! வரவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான புதிய கட்டுரையாக்கம், கட்டுரை விரிவாக்கம் ஆகியவற்றில் தங்களின் முனைப்பான பங்களிப்புகளுக்கு எமது நன்றி! (ஒலிம்பிக் பூங்கா எனும் முக்கியமான கட்டுரை தமிழைத் தவிர 12 மொழிகளில் மட்டுமே உள்ளது என்பது, தமிழ் விக்கியின் சிறப்புக்கு ஒரு சான்றாக நான் கருதுகிறேன்)--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 23 சூன் 2016 (UTC)Reply

வணக்கம்!

நன்றி மணியன் அவர்களே எமக்காக தங்கள் நேரத்தை ஒத்துகியதற்கு. நான் ஒரு அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவன் மேலும் ஸ்காட்லாந்தில் Masters in Medical Science clinical pharmacology பயின்றேன். இப்போது சென்னையில் சித்த மருத்துவம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியில் உள்ளேன். நான் விக்கிக்கு புதியவன் சரிவர படிகாமல் பொதுவான பக்கத்தில் மாற்றம் செயத்தது தவறு தான் மன்னிக்கவும் மேலும் இதை எமக்கு எடுத்துறைத்தமைக்கு நன்றி. நான் சித்த மருத்துவத்தில் பயின்றவரை இதை காளாஞ்சகப்படை என்றே படித்துள்ளேன். மேலும் டிவிஎஸ் சாம்பசிவம் பிள்ளை தமிழ் மருத்துவ அகராதியில் இதை காளாஞ்சகப்படை என்றே குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே இந்த மாற்றத்தை செய்தேன் மேலும் தடிப்பு தோல் அழற்சி என்பதற்கு மேற்கோள் ஏதும் இல்லாததாலும் இம்மாற்றத்ததை செய்தேன் தவறு இருப்பின் தெரிவிக்கவும் திருத்திகாள்கிறேன்Dr.satiz (பேச்சு) 17:29, 27 சூன் 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)Reply

  விருப்பம்-- அன்புமுனுசாமி பேச்சு 16:39, 20 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம் அன்போடு வாழ்த்தும்  அன்புமுனுசாமி 18:07, 20 சூலை 2016 (UTC)Reply
வாழ்த்துகள்.--Booradleyp1 (பேச்சு) 13:54, 21 சூலை 2016 (UTC)Reply
வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:47, 22 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்

 
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016
MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)Reply

பதக்கம்

  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
நீங்கள் பஞ்சாப் மாதத்தின் பகுதியாக தொடர்ந்து பல கட்டுரைகளை விரிவாகவும் நேர்த்தியாகவும் உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் அரும்பணி. --இரவி (பேச்சு) 04:56, 23 சூலை 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

மிக   விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:28, 23 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்--Kanags \உரையாடுக 06:10, 23 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்
  விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 10:29, 23 சூலை 2016 (UTC)Reply
நன்றி இரவி ! வாழ்த்துரைத்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி !
பஞ்சாப் மாத கட்டுரையாக்கத்தில் பல பயனர்கள் துடிப்பாக இயங்கி வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒரு நேரத்தில் ஒன்றிரண்டு பேர்தான் பங்களிப்பார்கள் என்றிருந்த நிலை மாறி இன்றைய தமிழ் விக்கிச் சமூகம் கூட்டாக பங்களிப்பது உற்சாகத்தைத் தூண்டுகின்றது. தேர் பெரியதாக இருக்கலாம்; ஊர் கூடும்போது நகர்த்துவது பெரிதல்ல. ஊர் கூடியதுதான் எனக்கு மிகுந்த உவப்பளிக்கின்றது. பங்கேற்கும் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் !!--மணியன் (பேச்சு) 20:53, 23 சூலை 2016 (UTC)Reply

பஞ்சாபி கிஸ்ஸே - குறித்தது

மணியன் அவர்களுக்கு வணக்கம்!

தாங்கள் 'Punjabi Qisse'-வின் மொழி பெயர்ப்பாக பஞ்சாபி கதைகள் பக்கத்தை இயற்றியிருப்பதை இப்போதுதான் கவனித்தேன். இதன் மொழிபெயர்ப்பாக நானும் ஒரு கட்டுரையை பஞ்சாபி கிஸ்ஸா என்ற தலைப்பில் இயற்றியுள்ளேன். இரண்டனையும் இணைத்து ஒரு கட்டுரையாக ஆக்குவதற்குத் தங்கள் உதவி தேவை.

எனது யோசனை - இரண்டின் பொருளையும் ஒரு கட்டுரையில் இணைத்து, மற்ற தலைப்பை அதன் மறுஊட்டமாக மாற்றலாம். அல்லது நான் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டென்றாலும் கூறுமாறு வேண்டுகிறேன்.

--கலைவாணன் (பேச்சு) 12:26, 26 சூலை 2016 (UTC)Reply

கலைவாணன், உங்கள் கட்டுரை நல்லத் தரத்தில் உள்ளது. பாராட்டுக்கள் !! இவை இரண்டையும் இணைக்க வார்ப்புரு இட்டுள்ளேன். --மணியன் (பேச்சு) 12:49, 26 சூலை 2016 (UTC)Reply
நன்றி!! --கலைவாணன் (பேச்சு) 06:07, 27 சூலை 2016 (UTC)Reply

உதவி

லாகூர் குறித்தகட்டுரைகளை பஞ்சாப் மாதத் திட்டத்தில் சேர்க்கலாமா என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:03, 29 சூலை 2016 (UTC)Reply

@Booradleyp1, பஞ்சாப் மாதத் திட்டத்தை நான் ஒருங்கிணைக்கவில்லை :) இருப்பினும் பஞ்சாப் தொடர்புள்ளத் தலைப்புகள் இந்தியாவில் இருந்தாலும் பாக்கித்தானில் இருந்தாலும் சேர்க்கலாம் என்பதே எனது துணிபு. பரிந்துரைத்துள்ள கட்டுரைப் பட்டியலில் பாக்கித்தானில் சீக்கியம் போன்ற கட்டுரைகளைக் காண்க. எனவே இலாகூர் பஞ்சாப் பகுதியின் அங்கம் என்பதால் சேர்க்கலாம்.--மணியன் (பேச்சு) 15:16, 29 சூலை 2016 (UTC)Reply
Booradleyp1, மணியனின் கருத்து சரி. தமிழர் மாதம் என்றால் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு எல்லாம் சேர்த்து தான் :)--இரவி (பேச்சு) 15:31, 29 சூலை 2016 (UTC)Reply

மணியன், இரவி தெளிவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி. இலாகூரிலுள்ள கோவில்களின் பட்டியல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் வார்ப்புருவை இணைத்து விடுகிறேன்.--Booradleyp1 (பேச்சு) 15:36, 29 சூலை 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்

 
2016 விக்கிக்கோப்பை

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)Reply

பதக்கம்

  விக்கிக்கோப்பை வெற்றியாளர்
தமிழ் விக்கிப்பீடியர் அனைவர் சார்பாகவும், 2016 தமிழ் விக்கிக்கோப்பையில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி அடைந்தமைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! இம்முயற்சியின் ஊடாக 169 புதிய கட்டுரைகளை உருவாக்கியிருப்பது மற்ற பயனர்களுக்கு ஊக்கமாக அமைகின்றது. மிக்க நன்றி. --இரவி (பேச்சு) 10:01, 31 சூலை 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம் --AntanO 10:05, 31 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:37, 31 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 14:26, 31 சூலை 2016 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:51, 11 ஆகத்து 2016 (UTC)Reply

பதக்கம்

  பஞ்சாப் மாதப் பங்களிப்பாளர் பதக்கம்
வணக்கம்,

பஞ்சாப் மாதத்தில் சிறப்பான பங்களித்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியர் சிவகோசரனின் முன்னெடுப்பில், இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டது தமிழ் விக்கிப்பீடியாவே. இம்முனைப்பின் ஊடாக இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் அனைத்திலும் ~3,000 கட்டுரைகள் உருவாகியுள்ளன. கூடுதல் பைட்டுகளைச் சேர்த்து கேடயம் வெல்ல இயலாவிட்டாலும், பல்வேறு தலைப்புகளிலும் செறிவான கட்டுரைகளை உருவாக்கியது தமிழ் விக்கிப்பீடியர்களே என்பது ஒருங்கிணைப்பாளர்கள் கருத்து. அனைத்துக்கும் மேலாக, இந்திய விக்கிமாநாட்டுக்குச் சென்ற போது, பஞ்சாப் பற்றிய பல்வேறு தகவல்களையும் தமிழிலேயே அறிந்து கொள்ள நமது கட்டுரைகள் உதவின என்பதே ஆகப் பெரும் சிறப்பு. தொடர்ந்து இது போன்ற பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பற்றி கட்டுரைகளைச் சீராக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியது. நன்றி. --இரவி (பேச்சு) 07:15, 15 ஆகத்து 2016 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)Reply

  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:35, 22 ஆகத்து 2016 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2016 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:24, 22 ஆகத்து 2016 (UTC)Reply

New requests

Hi again! I posted some new requests on the request page. The biggest one so far is en:Toronto District School Board, the largest school district in all of Canada. They recently introduced new websites in various languages, and Tamil is one of them: http://www.tdsb.on.ca/languages/ta-in/home.aspx WhisperToMe (பேச்சு) 12:03, 30 ஆகத்து 2016 (UTC)  Y ஆயிற்று--மணியன் (பேச்சு) 20:17, 5 செப்டம்பர் 2016 (UTC)Reply

Tamil name for "Category:School districts in Ontario"

I would like to have a Tamil category for en:Category:School districts in Ontario? How do you write that in Tamil?

Thanks, WhisperToMe (பேச்சு) 23:31, 6 செப்டம்பர் 2016 (UTC)

 Y ஆயிற்று
The Tamil category will be ta:பகுப்பு:ஒன்றாரியோவிலுள்ள பாடசாலை மாவட்டங்கள் --மணியன் (பேச்சு) 23:51, 6 செப்டம்பர் 2016 (UTC)
Thank you! WhisperToMe (பேச்சு) 10:26, 7 செப்டம்பர் 2016 (UTC)

விளையாட்டுக்கு தமிழ் பெயர் உதவி

Team Pursuit, Team Sprint ( இரண்டும் மிதிவண்டி விளையாட்டு) air rifle, air pistol, Rifle Prone, Rifle 3 Positions, (துப்பாக்கி சுடுதல்) Clean & Jerk, Snatch, Total, (பளு தூக்குதல்) pentathlon போன்றவற்றுக்கு பெயர் என்ன? ஒலிம்பிக் சாதனைகள் கட்டுரை எழுத முயன்ற போது இவ்வயங்கள் தோன்றின, முன்பு நீங்கள் சில சொற்களை பயன்படுத்தினீர்கள் என்று நினைக்கிறேன் - குறும்பன்

குறும்பன், நாடு திரும்பியபின் இணைய அணுக்கம் பெறுவதில் சிக்கலேற்பட்டதால் இதுநாள்வரை விக்கிப் பக்கம் வரவில்லை. எனவே உங்களுக்கு மறுமொழியிடுவதில் தாமதமேற்பட்டது, மன்னிக்க..
எனது பரிந்துரைகள்
  • Team Pursuit = அணித்தொடர்கை
  • Team Sprint = அணி விரைவோட்டம்
  • air rifle = காற்றழுத்தத் துப்பாக்கி; காற்றுச் சுருள்துப்பாக்கி
  • air pistol = காற்றழுத்தக் கைத்துப்பாக்கி
  • Rifle Prone = துப்பாக்கிச் சுடுதல் குப்புறத்து
  • Rifle 3 Positions =துப்பாக்கி 3 குறியிடங்கள்
  • Clean & Jerk = பகுதியும் மிகுதியும்
  • Snatch = ஒரே வீச்சு
  • Total = மொத்தம்
  • pentathlon = ஐந்திறப் போட்டி

--மணியன் (பேச்சு) 16:49, 6 அக்டோபர் 2016 (UTC)Reply

Clean & Jerk என்பதற்கு எடு தூக்கு எனலாம் Snatch என்பதை ஒரே தூக்கு எனலாம். அனைத்துமே பொருத்தமானதாகவே தோன்றுகின்றன. Prone என்பது குப்புறப்படுத்திருக்கும் நிலை. இங்கே ஓடி வந்து குப்புறப்படுத்துச் சுடுவதாகவும் பல நிகழ்ச்சிகள் உள்ளன. எனவே குப்புப்புறப்படுத்துச் சுடல் எனலாம். ஓடுநீளம் இருந்தால் 50 மீ ஓடிவந்து குப்புறப்படுத்துச் சுடல் என்பதுபோலச் சொல்லலாம். அகடு என்றால் வயிறு. எனவே அகடுந்திச் சுடல் என்றும் சொல்லலாம். --செல்வா (பேச்சு) 17:32, 6 அக்டோபர் 2016 (UTC)Reply
நன்றி செல்வா ! தங்கள் வருகையும் பதிகையும் எனக்கு உவகையும் உற்சாகமும் தந்தது. --மணியன் (பேச்சு) 12:14, 8 அக்டோபர் 2016 (UTC)Reply

நன்றி மணியன், செல்வா --குறும்பன் (பேச்சு) 21:46, 2 நவம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை 2017

 
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:29, 9 திசம்பர் 2016 (UTC)Reply

விக்கிக்கோப்பை:அறிவிப்பு 1

 
2017 விக்கிக்கோப்பை


விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...


.

விக்கிக்கோப்பை: விசேட அறிவித்தல்

 
2017 விக்கிக்கோப்பை


உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.


அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!


இங்கு சமர்ப்பிக்க

.



விக்கிக்கோப்பை:ஞாபகம் ஊட்டி

      
இன்று நவம்பர் 22, 2024
விக்கிக்கோப்பைப் போட்டி ஆரம்பமாகிவிட்டது. இன்றிருந்தே முனைப்புடன் பங்குபெறத் தொடங்குங்கள்!...

விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:31, 11 சனவரி 2017 (UTC)Reply

கருத்துக்கோரல்

ஆலமரத்தடியில் தமிழ் விக்கியின் வளர்ச்சி கருது முன்னெடுக்கவுள்ள போட்டி தொடர்பான கருத்துகளை அறிய ஆவல். தாங்கள் தவறாது அங்கு உங்கள் கருத்துக்களை இடுவீர்கள் என நம்புகின்றேன்...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:04, 13 சனவரி 2017 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey

  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

நன்றி

  நன்றி
மாபெரும் தமிழ் விக்கிப்பீடியாப் போட்டியின் கருத்துக்கணிப்பில் பங்குகொண்டதற்கு நன்றி. போட்டிப்பரிசு இன்னும் தேவை எனக் குறிப்பிட்டதன் விளைவாக, தேவைப்படும் பணத்தொகையை அறிய ஆவல். பதிலை விரைவில் எதிர்பார்க்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:19, 14 சனவரி 2017 (UTC)Reply


விக்கிக்கோப்பை-இரண்டாம் சுற்று

விக்கிக்கோப்பைப் போட்டியில் தாங்கள் முனைப்புடன் பங்குபற்றுவதையிட்டு மகிழ்ச்சி!. விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படாத பல கட்டுரைகள் பல இருக்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிக்கும் நோக்குடன் விக்கிக்கோப்பையின் இரண்டாம் சுற்றானது திகழ்கின்றது. அந்தவகையில் விக்கிக்கோப்பையின் பெப்ரவரி மாதம் முழுவதும் இடம்பெறும் இரண்டாம் சுற்றிலும் பங்குபற்றி உங்கள் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் கீழுள்ள பகுப்புகளிலுள்ள கட்டுரைகளுக்கு சான்றுகள்/மேற்கோள்களைச் சேர்த்து போட்டியின் வெற்றியாளராக வாழ்த்துக்கள். அத்துடன் நீங்கள் மேற்கோள் சேர்க்கும் கட்டுரைகளை இங்கு உடனுக்குடன் சமர்ப்பியுங்கள். பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளுக்கு விசேட புள்ளிகளும் வழங்கப்படும். அப்பகுப்புகள்
*மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் * மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்* மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:22, 25 சனவரி 2017 (UTC)Reply

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

(Sorry for writing in English)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:31, 10 ஏப்ரல் 2017 (UTC)

15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம்-கருத்துக்கணிப்பு

அருள்கூர்ந்து இங்கு உங்கள் கருத்துக்களினை இட வேண்டுகின்றேன். உங்கள் பதில்கள் எம் விக்கியின் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க உதவியாக அமையும். தாங்கள் நிச்சயம் கருத்திடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:28, 26 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை

வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:17, 20 சூன் 2017 (UTC)Reply

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

ஆசிய மாதம், 2017

 

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:30, 14 நவம்பர் 2017 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

அன்புள்ள மணியன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 18 மார்ச் 2018 (UTC)

அன்புள்ள இரவிக்கு,

எனது சில சொந்தப் பயணங்களாலும் வாழ்வியல் முறைமாற்றங்களாலும் தமிழ் விக்கிக்கு வருவது தடைபட்டது. விட்ட பழக்கத்தைத் தொடர ஏற்படும் மனத்தடையால் இது மேலும் தொடர்ந்தது. மீண்டுவர ஒவ்வொரு முயன்றபோதும் ஏதாவது தடை வந்தவண்ணம் இருந்தது. இப்போதுகூட தில்லி பயணம் என்று செல்ல வேண்டியுள்ளது. இருப்பினும் கிடைக்கும் காலத்தில் குறைந்தளவேனும் ஒரு துவக்கத்தை முன்னெடுப்போம் என்ற எழுச்சியை உங்களது தனிமடல் தூண்டியுள்ளது. கட்டாயமாக இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறேன். அடுத்து வரும் காலங்களில் பட்டிப்படியாக பங்களிப்பு கூட்டுகிறேன். அழைப்பிற்கு நன்றி !

அன்பு நட்புகளுக்கு, உங்கள் தொடர்பில் இல்லாதிருப்பினும் அவ்வப்போது இங்கு வந்து உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மகிழ்வதுண்டு. இருப்பினும் இந்தக் காலக்கட்டத்தில் நிறைய மாற்றங்களைக் காண்கிறேன். ஓர் புதுப்பயனராகவே உணர்கிறேன். ஏதேனும் தவறுகள் இழைத்தால் தட்டித் திருத்துங்கள் !! - மணியன்

மிக்க மகிழ்ச்சி, இதே மனத்தடையைப் பலரும் உணர்ந்திருக்கிறோம். இது போன்ற காரணங்கள், செயற்றிட்டங்கள் மீண்டும் வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. உங்கள் பங்களிப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 10:39, 22 மார்ச் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - புதிய தலைப்புகள் அறிவிப்பு, தமிழ் இரண்டாம் இடத்தில்!

வணக்கம், மணியன். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டு கட்டுரைகள் எழுதி வருவதற்கு நன்றி. இப்போட்டி 45 நாட்களைக் கடந்து பாதி நிறைவடைந்துள்ளது. தனிப்பட்ட பரிசுகள் போக, இந்திய அளவில் நடைபெறும் இப்போட்டியில் கூடுதல் கட்டுரைகளை உருவாக்கும் விக்கிச்சமூகத்தைச் சேர்ந்த 40 விக்கிப்பீடியர்களுக்கு 3 நாட்கள் சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கான நிதியுதவியும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்போது, பஞ்சாபி மொழி விக்கிப்பீடியா இப்போட்டியில் 300 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கி முதல் நிலையில் இருக்கிறது. தமிழ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நேற்று முதல் இன்னும் பல கூடுதல் தலைப்புகளையும் சேர்த்துள்ளோம்.

குறிப்பாக,

எனவே, தொடர்ந்து உற்சாகத்துடன் போட்டியில் பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவை வெற்றி பெற வைக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 07:13, 16 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply


Thank you for keeping Wikipedia thriving in India

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

Please help to translate Gubbi Thotadappa

Hi Sir
I'm Naveen from karnataka, Could you please help to translate this English article Gubbi Thotadappa to Tamil Wikipedia. I would be grateful to Wikipedia Tamil community if you do so --NaveenNkadalaveni (பேச்சு) 18:22, 5 மே 2018 (UTC)Reply

 Y ஆயிற்று --மணியன் (பேச்சு) 04:40, 6 மே 2018 (UTC)Reply
@மணியன் Thank you so much for your quick help! Have a nice day :) --NaveenNkadalaveni (பேச்சு) 18:42, 6 மே 2018 (UTC)Reply
  இது ஓர் முந்தைய உரையாடல்களின் பெட்டகம். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை தொகுக்க வேண்டாம். ஏதேனும் புதிய உரையாடலைத் துவக்க எண்ணினாலோ அல்லது பழைய உரையாடல் ஒன்றினைத் தொடர விரும்பினாலோ, தயவு செய்து நடப்பிலுள்ள பேச்சுப் பக்கத்தில் செய்யவும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rsmn/தொகுப்பு_4&oldid=2539577" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Rsmn/தொகுப்பு 4".