இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்
இது இந்தியப் பிரதம மந்திரிகளின் முழுப் பட்டியலாகும். இதில் 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியப் பிரதமராக பதவி ஏற்றவரும் இதில் அடங்கும். இந்திய பிரதம மந்திரி என்ற பதவியானது இந்திய அரசாங்கத்தின் தலைமையாகவும், தலைமைச் செயலதிகாரம் கொண்டதாகவும் உள்ள பதவியாகும். இந்தியாவின் நாடாளுமன்ற அமைப்பில், இந்திய அரசியல் அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர் பதவியையே அரசின் தலைமையகாகக் குறிப்பிகிறது, ஆனால், நடைமுறையில், அவரது அதிகாரம் பிரதம மந்திரிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் கீ்ழ் சபையான மக்களவையில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதம மந்திரியாக குடியரசுத் தலைவரால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறார்.[1]
பிரதமர் ஆட்சி வரலாறு
தொகு- 1947 ஆம் ஆண்டிலிருந்து இன்னாள் வரை இந்தியா பதினைந்து பிரதம மந்திரிகளைக் கண்டுள்ளது. இதில் எண்ணிக்கைகளாக கொண்டு பார்த்தால் இந்தியாவில் நான்கு முறை பிரதமராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜவஹர்லால் நேருவும் அதன் பிறகு மூன்று முறை பிரதமராக அவரது மகள் இந்திரா காந்தியும் பாஜகவை சார்ந்த வாஜ்பாய், நரேந்திர மோடியும் பின்பு இரண்டு முறை பிரதமராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த குல்சாரிலால் நந்தா மற்றும் மன்மோகன் சிங் பதவி வகித்துள்ளனர்.
- அதன் பிறகு மற்ற பிரதமர்கள் தனது ஐந்தாண்டு காலமோ அல்லது அக்கட்சியின் கூட்டணி ஆதரவை பொறுத்து பிரதம மந்திரியாக ஓராண்டு அல்லது இரண்டாண்டு காலம் பதவி வகித்து உள்ளனர்.
- இந்தியாவின் முதல் பிரதம மந்திரி இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்த ஜவகர்லால் நேரு ஆவார்.[2] இவர் இந்திய விடுதலைச் சட்டம் 1947 இன் படி பிரித்தானிய இராச்சியத்திலிருந்து இந்திய விடுதலை பெற்ற 15 ஆகத்து 1947 முதல் தேர்தல் முறைமையில் இல்லாமல் நியமன பிரதமராக பதவியேற்றுக் கொண்டு மே 1964 அவரது இறப்பு வரை 17 வருட காலம் இந்திய பிரதமர் பதவியில் பணியாற்றினார்.
- இந்தியாவில் நீண்ட காலம் பிரதம மந்திரியாகப் பணியாற்றியவராக நேரு இன்றளவும் நீடிக்கிறார். நேருவைத் தொடர்ந்து அவரது இறப்பிற்கு பிறகு அவரது அரசியல் சகாவான குல்சாரிலால் நந்தா சிறிது காலம் பிரதமராக இருந்தார்.
- அதன் பிறகு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒரு மனதாக இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்த முன்னணி தலைவரும், அமைச்சருமான லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பதவியேற்றார். இவரது ஆட்சிக்காலமும் அவரது இறப்பு வரையிலும் நீடித்தது, இவர் 19 மாத காலமே பிரதம மந்திரியாகப் பதவியிலிருந்தார்.
- அதன் பிறகும் இடைக்கால பிரதமர் பொறுப்பில் குல்சாரிலால் நந்தா பணியாற்றினார்.
- அதன் பிறகு நேருவின் மகளான இந்திரா காந்தி 1966 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியானார். பதினோரு நாட்களுக்கு பிறகு, இந்திரா காந்தி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று பிரதம மந்திரி பதவியிலிருந்து வெளியேறினார்.
- பின்பு 1967 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமரான போதிலும் இந்திரா காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்தார். பின்பு இந்திரா காங்கிரசு கட்சியில் இருந்து பல தலைவர்கள் ஸ்தாபன காங்கிரஸ்க்கு சென்றதால் இந்திரா காங்கிரசு பலமாக வலுவிழந்து போனதை தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சி அதிகார பூர்வ தேர்தல் சின்னமான ஏர்பூட்டிய மாடு சின்னத்தை பறித்தனர்.
- பின்பு இந்திரா காந்தி தனது காங்கிரஸ் கட்சியின் பெயரை தனது பெயராலே இந்திரா காங்கிரசு என்று மாற்றி கொண்டு வலுவிழந்த தனது கட்சிக்கு தனது பிரதமர் பதவியை போதிய மக்கள் செல்வாக்கும், அறுதிபெரும்பான்மை பொறுவதற்கு மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை பொறுவதற்கு தனது கட்சியின் அடிப்படை கொள்கைகளான பழமைவாதம், இந்து தேசியம் கொள்கைகளை மாற்றிவிட்டு மதச்சார்பற்ற என்ற கொள்கையை உருவாக்கி கொண்டு மற்ற மாநில கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெற்றார்.
- இதனை தொடர்ந்து 1971 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காந்தி இரண்டாவது முறையாக அறுதிபெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதிலும் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தினார். பின்பு 1971 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடான முறையில் தேர்தலில் வெற்றி பெற்றதை காரணம் காட்டி நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து (1975-1977) வரை இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.
- இதனை எதிர்த்து பல எதிர்க்கட்சிகளும் தனது காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆதரவு கொடுத்த பல கட்சிகள் வெளியேறி இணைந்து காங்கிரஸ் கட்சிக்கும் இந்திரா காந்திக்கும் எதிராக செயல்பட்டதால்.
- 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய சுதந்திரத்திற்கு பின்பு காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து முதல் எதிர் கட்சியான ஜனதா கட்சியின் சார்பில் மொரார்ஜி தேசாய் பிரதம மந்திரியானார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய அமைச்சர் ஆவார். 1979 ஆம் ஆண்டில் ஜனதா கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் பிரதமர் பதவியைத் துறந்தார்.
- பின்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது அவருடன் துணை பிரதம மந்திரியாக இருந்த சரண் சிங் தனது மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சார்பில் சிறிது காலம் பிரதமராக இருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி வெளியில் இருந்து ஆதரவளித்தார். பின்பு 1980 ஆம் ஆண்டு அக்கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால்.
- 1980 இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாக பொறுப்பு வகித்தார்.
- இந்திரா காந்தி பிரதம மந்திரியாக பதவியேற்று பணியாற்றிய நான்காண்டுகளில் 31 அக்டோபர் 1984 இல் அவர் தனது மெய்க்காப்பாளர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டதோடு அவர் பதவியும் முடிவடைந்தது.
- அன்றைய நாளின் மாலைப் பொழுதில் இந்திரா காந்தியின் மகன் இராஜீவ் காந்தி இந்தியாவின் இளம் பிரதம மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார்.
- இவர் நேரு குடும்பத்தின் மூன்றாவது பிரதம மந்திரியானார்.
- அவரது காலம் வரையிலும் நேரு-காந்தி வம்ச பிரதம மந்திரிகளின் ஆட்சிககாலம் மொத்தமாக, 37 ஆண்டுகள் மற்றும் 303 நாட்களாகும்.[3]
- பின்பு அன்னை இந்திரா காந்தியின் இறப்பினால் ஏற்பட்ட அனுதாப அலையால் 1984 நாடாளுமன்றத் தேர்தலில் இராஜீவ் காந்தி வெற்றி பெற்று பிரதமர் பதவியில் ஐந்தாண்டு காலம் பதவி வகித்தார்.
- பின்பு அவரது முன்னாள் அமைச்சரவை சகா வி. பி. சிங் காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்தி அவர்கள் செய்த போபர்ஸ் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய வி. பி. சிங் ஜனதா தளம் கட்சியை உருவாக்கினார்.
- 1989 நாடாளுமன்றத் தேர்தலில் வி. பி. சிங் தனது ஜனதா தளம் தலைமையில் தேசிய முன்னணி என்ற கூட்டணி கட்சிகளோடு இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைத்ததோடு கூட்டணி கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் வெற்றி பெற்றார். இந்த ஜனதா தளம் கட்சி தலைமையிலான தேசிய முன்னணியில் இந்திய தேர்தல் வரலாற்றிலே வலதுசாரி கொள்கை உடைய பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரி கொள்கை உடைய இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் இருந்து ஆதரவளிக்க வி. பி. சிங் பிரதமரானார். பின்பு பிரதமர் வி. பி. சிங் அவர்கள் கொண்டு வந்த மண்டல் கமிஷன் மற்றும் ராமர் ரத யாத்திரை எதிர்ப்பு ஆகிய செயல்களால் அவரது ஜனதா தளம் ஆட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அத்வானி ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஓராண்டு காலத்திலே வி. பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது.
- அதன் பிறகு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வி. பி. சிங் தோற்று போனார்.
- பின்பு அந்த வாக்கெடுப்பில் ஜனதா அரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சந்திரசேகர் வெற்றி பெற்று அவரது சமாஜ்வாடி ஜனதா கட்சி சார்பில் இடை கால பிரதமரானார். இக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவும் ஆதரவளித்தனர்.
- பிறகு சமாஜ்வாடி ஜனதா கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்தி விலக்கிக் கொண்டதால். ஒரே வருடத்தில் சந்திரசேகர் ஆட்சி கவிழ்ந்தது.
- பிறகு இந்திய தேசிய காங்கிரசு அன்றைய தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த போது அவர் தற்கொலை படையால் கொள்ளபட்டதை தொடர்ந்து. காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியலும் முடிவுக்கும் வந்தது.
- அதன் பிறகு ஏற்பட்ட அனுதாப அலையால் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அக்கட்சியை சார்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான பி. வி. நரசிம்ம ராவ் சூன் 1991ல் பிரதமராக பதவி வகித்தார். நரசிம்ம ராவின் அவரது ஆட்சி தொங்கு நாடாளுமன்றமாக அமைந்த போதும் கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு ஐந்தாண்டுக் காலம் முழுமையாக ஆட்சி நடத்தினார்.
- அதன் பிறகு நடந்த 1996 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததாலும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை ஆதரவு இல்லாமல் 13 நாட்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
- பின்பு இந்தியாவில் வெற்றி பெற்ற பல மாநில கட்சிகள் இணைந்து ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி ஜனதா தளம் கட்சி சார்பில் பிரதமராக தேவ கவுடா பதவியேற்றார் அவரது ஆட்சி காலத்தில் தனது ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான வி. பி. சிங் அவர்களே கையில் எடுக்க தயங்கிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் ஊழல் மற்றும் பிரதமர் வி. பி. சிங்கால் முழுமை பெறாத மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு முறையை முழுமையாக கொண்டு வருவதை கையில் எடுத்த போது அது இரண்டு செயல் திட்டங்களும் அக்கட்சியின் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியின் நிழல் தலைவி சோனியா காந்திக்கு ஏற்புடையதாக இல்லாததால் தலைவர் சீதாராமன் கேசரி மூலம் தேவ கவுடாவை பிரதமர் பதவியில் இருந்து விலக கூறினார். இதனால் ஜனதா தளம் கட்சி தேர்தலை தவிர்க்கவே வேறுவழியில்லாமல் தேவ கவுடாவை பிரதமர் பதவியில் இருந்து விலக கொரியதால் ஓராண்டு காலத்திலே அவர் பிரதமர் பதவி முடிவுக்கு வந்தது.
- பின்பு அதனை தொடர்ந்து ஜனதா தளம் கட்சியின் மற்றோரு முத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் பிரதமராக பதவி வகித்தார். அவரது காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததை அவர் வெளியிட்ட போது ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களை குறிப்பிட்டு இருந்ததை காரணம் காட்டியது. இதனை அடுத்து ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவளித்த தமிழகத்தை சேர்ந்த திமுக கட்சியை காங்கிரஸ் கட்சியின் நிழல் தலைவி சோனியா காந்தி மூலம் தலைவர் சீதாராம் கேசரி வெளியேற்ற சொன்னதால் அதனை மறுத்த ஐ. கே. குஜ்ரால் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.
- பின்பு 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆனார். ஆனால் அவரது ஆட்சிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழகத்தை சேர்ந்த அதிமுக தலைவி ஜெயலலிதா ஆதரவை விலக்கிக் கொண்டதால். ஒரே ஆண்டில் வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது.
- இதன் பின் நடந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வாஜ்பாய் மூன்றாது முறையாக பிரதமரானார். இம்முறை அவர் தனது கட்சியின் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பல கட்சிகளின் ஏகோபித்த ஆதரவால் தனது அரசாங்கத்தை முழு ஐந்தாண்டுக் காலத்தையும் நிறைவு செய்தார். இவ்வாறு செய்த காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவரேயாவார்.
- வாஜ்பாயைத் தொடர்ந்து 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மன்மோகன் சிங் பிரதமரானார், இவரது காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் தொங்கு நாடாளுமன்றமாக அமைந்த போதும் காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து பல மாநிலங்கட்சிகள் மற்றும் இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் ஆதரவளித்ததால் ஐந்தாண்டு காலம் கூட்டணி கட்சிகளின் பேராதரவுடன் பிரதமராக இருந்தார்.
- 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்து போதிலும் இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த ஈழபோர் என்ற பெயரில் இலங்கையில் நடந்தேறி ஈழதமிழற்கள் இன அழிப்பை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி முறைகேடான முறையில் தேர்தல் ஆணையத்தை தனது வரைமுறையற்ற கட்டுபாட்டில் வைத்து கொண்டு வெற்றி பெற்றது என கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் அரசாங்கமானது 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கிடையிலான பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியில் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு தொடர் ஆட்சி தொடர் வெற்றி பெற்று மன்மோகன் சிங் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் சார்ந்த பிரதமர் ஆவார். இவரது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக சிறப்பாக பணியாற்றியதால் இத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பல தொகுதிகளில் வெற்றி பெற்று இவரது ஆட்சிக்கு ஆதரவளித்தது. இவர் 26 மே 2014 முதல் இந்தியாவின் பிரதம மந்திரியாக உள்ளார். இந்த அரசாங்கமானது கடந்த பத்து வருட காலத்தில் இந்திய மக்கள் ஊழல் மிக்க கட்சியான காங்கிரஸ் மீது கொண்ட அதிருப்தியால் பாஜகவில் மோடி பல மாநில கூட்டணி கட்சிகள் மற்றும் தனது பாஜக பிற மாநிலங்களில் நேரடியாக வெற்றி பெற்று பெரும் ஆதரவுடன் பிரதமரானார்.
- 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த ஆட்சியில் சிறந்த முறையில் நல்லாட்சி செய்ததால் வட மாநிலங்களில் பலமான வாக்கு சதவீதத்தால் நரேந்திர மோடி தொடர் ஆட்சி தொடர் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆனார்.
பிரதமர் மற்றும் கட்சி
தொகு
|
- குறிப்பு
- தற்காலிக பிரதமர்
பாஜக (2)[a] இதேகா/இதேகா(I)/இதேகா(ஆர்)[b] (7) ஜ.த (3) ஜ.க (1) ஜ.க (ம) (1) சஜக (ரா) (1) | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வ. எண் | படம் | பெயர்
(பிறப்பு–இறப்பு) |
தொகுதி | கட்சி (கூட்டணி) |
பதவிக் காலம்[5] | மக்களவை[c] | அமைச்சரவை | நியமித்தவர் | |||
1 | ஜவஹர்லால் நேரு (1889–1964) |
புல்பூர், உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 15 ஆகத்து 1947 | 15 ஏப்ரல் 1952 | 16 ஆண்டுகள், 286 நாட்கள் | அரசியலமைப்பு மன்றம்[d] | நேரு I | மவுண்ட்பேட்டன் பிரபு | ||
15 ஏப்ரல் 1952 | 17 ஏப்ரல் 1957 | 1ஆவது | நேரு II | இராசேந்திர பிரசாத் | |||||||
17 ஏப்ரல் 1957 | 2 ஏப்ரல் 1962 | 2ஆவது | நேரு III | ||||||||
2 ஏப்ரல் 1962 | 27 மே 1964† | 3ஆவது | நேரு IV | ||||||||
தற்காலிகம் | குல்சாரிலால் நந்தா (1898–1998) |
சபர்காந்தா, குசராத்து | இந்திய தேசிய காங்கிரசு | 27 மே 1964 | 9 சூன் 1964 | 13 நாட்கள் | நந்தா I | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் | |||
2 | லால் பகதூர் சாஸ்திரி (1904–1966) |
அலகாபாத்து, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 9 சூன் 1964 | 11 சனவரி 1966† | 1 ஆண்டு, 216 நாட்கள் | சாஸ்திரி | ||||
தற்காலிகம் | குல்சாரிலால் நந்தா (1898–1998) |
சபர்காந்தா, குசராத்து | இந்திய தேசிய காங்கிரசு | 11 சனவரி 1966 | 24 சனவரி 1966 | 13 நாட்கள் | நந்தா II | ||||
3 | இந்திரா காந்தி (1917–1984) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு | 24 சனவரி 1966 | 4 மார்ச் 1967 | 11 ஆண்டுகள், 59 நாட்கள் | இந்திரா I | ||||
ரெய்பரேலி, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (ஆர்) | 4 மார்ச் 1967 | 15 மார்ச் 1971 | 4ஆவது | |||||||
15 மார்ச் 1971 | 24 மார்ச் 1977 | 5ஆவது | இந்திரா II | வி. வி. கிரி | |||||||
4 | மொரார்ஜி தேசாய் (1896–1995) |
சூரத், குசராத்து | ஜனதா கட்சி | 24 மார்ச் 1977 | 28 சூலை 1979[RES] | 2 ஆண்டுகள், 126 நாட்கள் | 6வது | தேசாய் | பசப்பா தனப்பா ஜாட்டி (தற்காலிகம்) | ||
5 | சரண் சிங் (1902–1987) |
பாகுபத், உத்தரப் பிரதேசம் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | 28 சூலை 1979 | 14 சனவரி 1980[RES] | 170 days | சரண் | நீலம் சஞ்சீவ ரெட்டி | |||
(3) | இந்திரா காந்தி (1917–1984) |
மெதக், ஆந்திர பிரதேசம் |
இந்திய தேசிய காங்கிரசு (I) | 14 சனவரி 1980[§] | 31 அக்டோபர் 1984† | 4 ஆண்டுகள், 291 நாட்கள் | 7ஆவது | இந்திரா III | |||
6 | ராஜீவ் காந்தி (1944–1991) |
அமேதி, உத்தரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 31 அக்டோபர் 1984 | 31 திசம்பர் 1984 | 5 ஆண்டுகள், 32 நாட்கள் | ராஜீவ் | ஜெயில் சிங் | |||
31 திசம்பர் 1984 | 2 திசம்பர் 1989 | 8ஆவது | |||||||||
7 | வி. பி. சிங் (1931–2008) |
பதேபூர், உத்தரப் பிரதேசம் | ஜனதா தளம் (தேசிய முன்னணி) |
2 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990[NC] | 343 நாட்கள் | 9ஆவது | வி. பி. சிங் | ரா. வெங்கட்ராமன் | ||
8 | சந்திரசேகர் (1927–2007) |
பல்லியா, உத்தரப் பிரதேசம் | சமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய) {{small|சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆதரவு இதேகா பாஜக |
10 நவம்பர் 1990 | 21 சூன் 1991[RES] | 223 நாட்கள் | சந்திரசேகர் | ||||
9 | பி. வி. நரசிம்ம ராவ் (1921–2004) |
நந்தியாலா, ஆந்திரப் பிரதேசம் | இந்திய தேசிய காங்கிரசு (I) | 21 சூன் 1991 | 16 மே 1996 | 4 ஆண்டுகள், 330 நாட்கள் | 10ஆவது | ராவ் | |||
10 | அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) |
லக்னோ, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி | 16 மே 1996 | 1 சூன் 1996[RES] | 16 நாட்கள் | 11ஆவது | வாஜ்பாய் I | சங்கர் தயாள் சர்மா | ||
11 | தேவகவுடா (1933–) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், கருநாடகம் | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) |
1 சூன் 1996 | 21 ஏப்ரல் 1997[RES] | 324 days | தேவகவுடா | ||||
12 | ஐ. கே. குஜ்ரால் (1919–2012) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், பீகார் | ஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) |
21 ஏப்ரல் 1997 | 19 மார்ச் 1998[RES] | 332 நாட்கள் | குஜ்ரால் | ||||
(10) | அடல் பிஹாரி வாஜ்பாய் (1924–2018) |
லக்னோ, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி (தே.ச.கூ) |
19 மார்ச் 1998[§] | 10 அக்டோபர் 1999[NC] | 6 ஆண்டுகள், 64 நாட்கள் | 12ஆவது | வாஜ்பாய் II | கே. ஆர். நாராயணன் | ||
10 அக்டோபர் 1999 | 22 மே 2004 | 13ஆவது | வாஜ்பாய் III | ||||||||
13 | மன்மோகன் சிங் (1932–) |
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், அசாம் | இந்திய தேசிய காங்கிரசு (ஐ.மு.கூ) |
22 மே 2004 | 22 மே 2009 | 10 ஆண்டுகள், 4 நாட்கள் | 14ஆவது | மன்மோகன் சிங் I | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | ||
22 மே 2009 | 26 மே 2014 | 15ஆவது | மன்மோகன் சிங் II | பிரதிபா பாட்டில் | |||||||
14 | நரேந்திர மோதி (1950–) |
வாரணாசி, உத்தரப் பிரதேசம் | பாரதிய ஜனதா கட்சி (தே.ச.கூ) |
26 மே 2014 | 30 மே 2019 | 10 ஆண்டுகள், 216 நாட்கள் | 16ஆவது | மோதி I | பிரணப் முகர்ஜி | ||
30 மே 2019 | 04 சூன் 2024 | 17ஆவது | மோதி II | ராம் நாத் கோவிந்த் | |||||||
09 சூன் 2024 | தற்போது பதவியில் | 18ஆவது | மோதி III | திரௌபதி முர்மு |
புள்ளிவிவரம்
தொகுபதவிக்காலத்தின் அடிப்படையில் பிரதமர்களின் பட்டியல்
தொகுவ. எண் | பெயர் | கட்சி | பதவிக் காலம் | |
---|---|---|---|---|
அதிக நாட்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்த காலம் | பதவியில் இருந்த மொத்த நாட்கள் | |||
1 | ஜவஹர்லால் நேரு | இதேகா | 17 ஆண்டுகள், 286 நாட்கள் | 17 ஆண்டுகள், 286 நாட்கள் |
2 | இந்திரா காந்தி | இதேகா/இதேகா(I) | 15 ஆண்டுகள், 59 நாட்கள் | 15 ஆண்டுகள், 350 நாட்கள் |
3 | நரேந்திர மோதி | பாஜக | 10 ஆண்டுகள், 216 நாட்கள் | 10 ஆண்டுகள், 216 நாட்கள் |
4 | மன்மோகன் சிங் | இதேகா | 10 ஆண்டுகள், 4 நாட்கள் | 10 ஆண்டுகள், 4 நாட்கள் |
5 | அடல் பிஹாரி வாஜ்பாய் | பாஜக | 6 ஆண்டுகள், 64 நாட்கள் | 6 ஆண்டுகள், 80 நாட்கள் |
6 | ராஜீவ் காந்தி | இதேகா(I) | 5 ஆண்டுகள், 32 நாட்கள் | 5 ஆண்டுகள், 32 நாட்கள் |
7 | பி. வி. நரசிம்ம ராவ் | இதேகா(I) | 5 ஆண்டுகள் | 5 ஆண்டுகள் |
8 | மொரார்ஜி தேசாய் | ஜ.க | 2 ஆண்டுகள், 126 நாட்கள் | 2 ஆண்டுகள், 126 நாட்கள் |
9 | லால் பகதூர் சாஸ்திரி | இதேகா | 1 ஆண்டு, 216 நாட்கள் | 1 ஆண்டு, 216 நாட்கள் |
10 | வி. பி. சிங் | ஜ.த | 1 ஆண்டு, 343 நாட்கள் | 1 ஆண்டு, 343 நாட்கள் |
11 | ஐ. கே. குஜரால் | ஜ.த | 1 ஆண்டு, 332 நாட்கள் | 1 ஆண்டு, 332 நாட்கள் |
12 | தேவகவுடா | ஜ.த | 1 ஆண்டு, 324 நாட்கள் | 1 ஆண்டு, 324 நாட்கள் |
13 | சந்திரசேகர் | சஜக(ரா) | 1 ஆண்டு, 223 நாட்கள் | 1 ஆண்டு, 223 நாட்கள் |
14 | சரண் சிங் | ஜ.க (ம) | 1 ஆண்டு, 170 நாட்கள் | 1 ஆண்டு, 170 நாட்கள் |
15 | குல்சாரிலால் நந்தா | இதேகா | 13 நாட்கள், 13 நாட்கள் | 26 நாட்கள் |
கட்சி வாரியாக பட்டியல்
தொகுவ. எண் | அரசியல் கட்சி | பிரதமர்களின் எண்ணிக்கை | பிரதமர் அலுவலகத்தில் இருந்த மொத்த நாட்கள் |
---|---|---|---|
1 | இதேகா/இதேகா(I)/இதேகா (ஆர்) | 7 | 54 ஆண்டுகள், 123 நாட்கள் |
2 | பாஜக | 2 | 16 ஆண்டுகள், 55 நாட்கள் |
3 | ஜ.த | 3 | 3 ஆண்டுகள், 269 நாட்கள் |
4 | ஜ.க | 1 | 2 ஆண்டுகள், 126 நாட்கள் |
5 | சஜக (ரா) | 1 | 223 நாட்கள் |
6 | ஜ.க(ம) | 1 | 170 நாட்கள் |
கட்சி வாரியாக பிரதமர் பதவியை வகித்த மொத்த காலங்கள் (ஆண்டுகள்)
தொகு- இதேகா/இதேகா(I)/இதேகா (ஆர்)
- பாஜக
- ஜ.த
- ஜ.க
- ஜ.க(ம)
- சஜக (ரா)
தற்போது வாழும் முன்னாள் பிரதமர்கள்
தொகு28 திசம்பர் 2024 நிலவரப்படி, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் ஒருவர் மட்டுமே வாழுகின்றார்:
- இதற்கிடையே 90களின் பிற்பகுதியின் காலகட்டத்தில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் 30 நவம்பர் 2012 ஆம் ஆண்டு 93 ஆவது வயதில் காலமானார்.
- அதே காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய் 16 ஆகத்து 2018 ஆம் ஆண்டு 93 ஆவது வயதில் காலமானார்.
- தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 26 டிசம்பர் 2024 அன்று 92 ஆவது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Constitutional Government in India (in ஆங்கிலம்). S. Chand Publishing. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788121922036.
- ↑ "Former Prime Ministers | Prime Minister of India". www.pmindia.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-03.
- ↑ "In India, next generation of Gandhi dynasty". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2016-12-27.
- ↑ Statistical Report on General Elections, 1980 to the Seventh Lok Sabha (PDF). New Delhi: இந்தியத் தேர்தல் ஆணையம். p. 1 (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
{{cite book}}
:|archive-url=
requires|archive-date=
(help) - ↑ "Former Prime Ministers". PM India. Archived from the original on 9 October 2014. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
குறிப்புகள்
தொகு- ↑ In office
- ↑ 1969-1978 இந்திய தேசிய காங்கிரஸ் (I) 1978-96 இடையே இந்திய தேசிய காங்கிரஸ் (ஆர்) என அறியப்பட்டது. [4]
- ↑ பிரதமர் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்க முடியும் என்றாலும், அவர்கள் லோக்சபாவின் நம்பிக்கையைப் பெற வேண்டும். மக்களவை கலைக்கப்பட்டவுடன், த
- ↑ இந்திய அரசியல் நிர்ணய சபை 1946 இல் மாகாண சபைகளால் ஒற்றை, மாற்றத்தக்க-வாக்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட 389 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.].