ஏப்ரல் 6
நாள்
(6 ஏப்ரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | ஏப்ரல் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | ||||
MMXXIV |
ஏப்ரல் 6 (April 6) கிரிகோரியன் ஆண்டின் 96 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 269 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது.
- 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார்.
- 1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார்.
- 1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார்.
- 1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை உருவாக்கினார்.
- 1712 – நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1782 – தாய்லாந்து மன்னர் டாக்சின் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். முதலாம் இராமா மன்னராக முடி சூடினார். சக்ரி வம்ச ஆட்சி ஆரம்பமானது. இந்நாள் சக்ரி நாள் என நினைவுகூரப்படுகிறது.
- 1793 – பிரெஞ்சுப் புரட்சி: பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு பிரெஞ்சுக் குடியரசின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டு அமைக்கப்பட்டது.
- 1812 – பிரித்தானியப் படைகள் வெலிங்டன் பிரபுவின் தலைமையில் படாயோசு கோட்டையைத் தாக்கின.
- 1814 – பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரிச்மண்ட் நகரில் ஏற்பட்ட தோல்வியின் பின்னர் கூட்டமைப்பின் இராணுவத்தினர் ராபர்ட் ஈ. லீ தலைமையில் தமது கடைசிச் சமரை வடக்கு வர்ஜீனியாவில் நடத்தினர்.
- 1869 – செலுலாயிடு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1895 – ஆஸ்கார் வைல்டு இலண்டனில் கைது செய்யப்பட்டார்.
- 1896 – 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசினால் தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதற்தடவையாக கிரேக்கத்தின் ஏதன்ஸ் நகரில் ஆரம்பமாயின.
- 1917 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கா செருமனி மீது போரை அறிவித்தது.
- 1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார்.
- 1930 – மகாத்மா காந்தி தனது புகழ்பெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன், நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்", என அறிவித்தார்.
- 1936 – ஐக்கிய அமெரிக்கா, ஜோர்ஜியாவில் சுழற்காற்று தாக்கியதில் 203 பேர் உயிரிழந்தனர்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா (யுகோசிலாவியப் படையெடுப்பு) மற்றும் கிரேக்கத்தை (கிரீசு சண்டை) நாட்சி ஜெர்மனி முற்றுகையிட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சாரயேவோ செருமனிய, குரோவாசியப் படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1965 – முதல் தடவையாக புவியிணக்கச் சுற்றுப்பாதையில் இணைக்கப்பட்ட வணிகரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இன்டெல்சாட் I ஏவப்பட்டது.
- 1968 – அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 41 பேர் கொல்லப்பட்டு, 150 காயமடைந்தனர்.
- 1973 – பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1979 – நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் மாணவர் போராட்டம் ஆரம்பமானது.
- 1984 – கமரூனின் குடியரசுப் படை பவுல் பியா அரசைக் கவிழ்க்க எடுத்த இராணுவப் புரட்சி முயற்சி தோல்வியடைந்தது.
- 1992 – பொசுனியப் போர் ஆரம்பமானது.
- 1994 – ருவாண்டா மற்றும் புருண்டி அரசுத்தலைவர்கள் பயணம் செய்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ருவாண்டா இனப்படுகொலைகள் ஆரம்பமானது.
- 1998 – அணுகுண்டு சோதனை: இந்தியாவைத் தாக்கக்கூடியதான நடுத்தர ஏவுகணைகளை பாக்கித்தான் சோதித்தது.
- 2005 – குர்தியத் தலைவர் ஜலால் தலபானி ஈராக் அரசுத்தலைவர் ஆனார்.
- 2009 – இத்தாலியில் ஆக்கிலா பகுதியில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 307 பேர் உயிரிழந்தனர்.
- 2010 – இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தந்தேவாடாவில் மாவோயிசப் போராளிகள் 76 மத்திய சேமக் காவல் படை அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.
- 2012 – அசவாத் மாலியில் இருந்து பிரிந்து செல்வதாக அறிவித்தது.
- 2018 – கனடா, சஸ்காச்சுவான் நகரில் பேருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- 1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (இ. 1520)
- 1815 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1876)
- 1901 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலிய செயற்பாட்டாளர் (இ. 1925)
- 1909 – ராம. அழகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1957)
- 1928 – ஜேம்ஸ் டூயி வாட்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரியலாளர்
- 1931 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (இ. 2014)
- 1933 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (இ. 2016)
- 1938 – கோ. நம்மாழ்வார், தமிழக இயற்கை ஆர்வலர் (இ. 2013)
- 1950 – கருப்பையா வேலாயுதம், இலங்கை மலையக அரசியல்வாதி (இ. 2015)
- 1956 – திலீப் வெங்சர்கார், இந்தியத் துடுப்பாளர்
- 1963 – ராஃபாயெல் கொறேயா, எக்குவதோரின் 54வது அரசுத்தலைவர்
- 1964 – டேவிட் வூடார்ட், அமெரிக்க எழுத்தாளர், இசைக்கலைஞர்
- 1973 – பிரசாந்த், தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் (பி. 1157)
- 1520 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக் கலைஞர் (பி. 1483)
- 1528 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (பி. 1471)
- 1829 – நீல்சு என்றிக்கு ஏபெல், நோர்வே கணிதவியலாளர் (பி. 1802)
- 1961 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (பி. 1870)
- 1963 – ஆட்டோ சுத்ரூவ, உக்ரைனிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1897)
- 1971 – இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, உருசிய-அமெரிக்க இசையமைப்பாளர் (பி. 1882)
- 1974 – விஷ்ணு இராமகிராஷ்ண கார்க்கரே, இந்துத்துவவாதி (பி. 1910)
- 1984 – சா. பஞ்சு, தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1915)
- 1992 – இல. செ. கந்தசாமி, தமிழகத் தமிழறிஞர், இதழாளர் (பி. 1939)
- 1992 – ஐசாக் அசிமோவ், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1920)
- 2001 – தேவிலால், இந்திய அரசியல்வாதி (பி. 1914)
- 2008 – ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, இலங்கை அரசியல்வாதி (பி. 1953)
- 2011 – கல்பகம் சுவாமிநாதன், தமிழக வீணை இசைக்கலைஞர், கல்வியாளர் (பி. 1922)
- 2011 – சுஜாதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1952)
- 2021 – தி. ந. இராமச்சந்திரன், தமிழறிஞர் (பி. 1934)
- 2021 – வே. ஆனைமுத்து, பெரியாரிய அறிஞர் (பி. 1925)
சிறப்பு நாள்
- அபிவிருத்திக்கும் அமைதிக்குமான பன்னாட்டு விளையாட்டு நாள்