பயனர் பேச்சு:Sancheevis/தொகுப்பு 1
வாருங்கள், Sancheevis/தொகுப்பு 1!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 11:57, 8 செப்டெம்பர் 2009 (UTC)
நன்றி
வரவேற்புக்கு நன்றி. காலங்கடந்துதான் நன்றி கூறுவது தமிழர் பண்போ எனக் கோபிக்க வேண்டாம்.
--சஞ்சீவி சிவகுமார் 06:11, 20 ஏப்ரல் 2010 (UTC)
பாராட்டுக்கள்
தொகுசஞ்சீவி, விக்கியில் உங்கள் பங்களிப்புகள் அனைத்தும் மிக நன்றாக உள்ளன. அண்மையில் நீங்கள் எழுதிய கட்டுரைகளில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறேன். பீட்டர் றகர் பற்றிய கட்டுரை வேறொரு தலைப்பில் ஏற்கனவே உள்ளது. உங்கள் கட்டுரையையும், பழைய கட்டுரையையும் இணைத்திருக்கிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:08, 4 ஜூன் 2010 (UTC)
நன்றி--சஞ்சீவி சிவகுமார் 05:46, 14 ஜூன் 2010 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பு நன்றாக உள்ளது. தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்றவர்கள் தேவை. தொடர்ந்து எழுதுங்கள். மயூரநாதன் 05:31, 16 ஜூலை 2010 (UTC)
ஆம். நன்றிகள். உங்கள் பங்களிப்பு தமிழ் விக்கிப்பீடியாவிற்குத் தேவை.பயனர்:Thayamathy
நன்றி
தொகுநிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:00, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
முதற்பக்க அறிமுகம்
தொகுவணக்கம் சஞ்சீவி. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/சஞ்சீவி சிவகுமார் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி --இரவி 08:41, 2 நவம்பர் 2010 (UTC)
- நன்றி இரவி. தங்கள் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.--சஞ்சீவி சிவகுமார் 17:37, 2 நவம்பர் 2010 (UTC)
நன்றி, சஞ்சீவி சிவகுமார். அடுத்த இரு வாரங்களுக்கு, உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருவதில் மகிழ்கிறோம்--இரவி 15:35, 13 நவம்பர் 2010 (UTC)
- சஞ்சீவி, முதற்பக்கத்தில் அறிமுகமானதற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.--Kanags \உரையாடுக 11:54, 17 நவம்பர் 2010 (UTC)
- வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 22:49, 17 நவம்பர் 2010 (UTC)
இலங்கையில் பயிற்சிப் பட்டறை
தொகுவணக்கம் சஞ்சீவி சிவகுமார். நீங்கள் தற்போது இலங்கையில் எந்தப் பகுதியில் உள்ளீர்கள் என்று அறிய முடியவில்லை. நீங்கள் பணி புரியும் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி பட்டறை ஒன்றை ஒழுங்கமைக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதா. தேவையான நிகழ்த்தல் (ppt), துண்ணடறிக்கை (pamphlet), நிகழ்ச்சி நிரல் போன்றவை ஏற்கனவே உள்ளன. நன்றி. --Natkeeran 19:29, 7 நவம்பர் 2010 (UTC)
- வணக்கம் நக்கீரன். நல்லது. நான் கிழக்கு கல்முனையைச் சேர்ந்தவன்.கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்களில் இப்பயிற்சிப் பட்டறை பற்றி பட்டறைக்கான சாத்தியங்கள் பற்றி அறிந்துவிட்டு சில நாட்களில் பதிலளிக்கிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 23:57, 7 நவம்பர் 2010 (UTC)
- நன்றி சிவகுமார். --Natkeeran 01:23, 8 நவம்பர் 2010 (UTC)
- மிக்க நன்றி சிவகுமார். இதற்கு ஒரு திட்டப் பக்கம் தொடங்கலாம். கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை அல்லது வேறு பொருத்தமான பெயர். கலாநிதி அவர்கள் மட்டக்களப்பில் உள்ளார். அவர் உங்களுக்கு உதவக் கூடும். விக்கிப்பீடியா:நகரங்கள் வாரியாக தமிழ் விக்கிப்பீடியர்கள் மேலும் பல பயனர்கள் உள்ளார்கள். குறிப்பாக மயூரன் திருகோணமலையைச் சேர்ந்தவர். உமாபதி கிழக்கில் பணியாற்றி உள்ளார். அவர்களையும் நாம் அணுகிப் பாக்கலாம். என்னிடம் ppt, துண்ணடற்றிக்கை ஆகியவை உள்ளன. அவற்றை விரைவில் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். வேற உதவிகள் தேவைப்படினும் நாம் இயன்றவரை உதவுவோம். டிசம்பர் என்றால் பிற ஊடகங்கள் ஊடாக நாம் போதிய அறிமுகப்படுத்தல் செய்யமுடியுமோ தெரியவில்லை. ஆனால் போதிய ஆர்வலர்களோடு நேரடித் தொடர்பு இருப்பின் அது தேவையில்லாமல் இருக்கலாம். --Natkeeran 16:17, 13 நவம்பர் 2010 (UTC)
- உறுதியான இடம், திகதி அல்லது திட்டம் இருக்குமானால் நாம் ஒரு பட்டறைப் பக்கம் உருவாக்கலாம். உங்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்பட்டாலும், நாம் இயன்றவரை உதவுவோம். நன்றி. --Natkeeran 01:30, 25 நவம்பர் 2010 (UTC)
கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் விக்கிப்பீடியா பட்டறை எதிர்வரும் 28.12.2010 செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.--சஞ்சீவி சிவகுமார் 16:17, 10 திசம்பர் 2010 (UTC)
- பட்டறை சிறப்பாக இடம்பெற எனது வாழ்த்துகள். ஆலமரத்தடியிலும் ஒரு செய்தி போட்டு விடுங்கள். படங்கள் கட்டாயம் எடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 19:51, 10 திசம்பர் 2010 (UTC)
- பட்டறை சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள்.--கலை 22:18, 10 திசம்பர் 2010 (UTC)
- நன்றிகள் சிறிதரன்,கலை.--சஞ்சீவி சிவகுமார் 23:10, 10 திசம்பர் 2010 (UTC)
- பட்டறை சிறப்பாக நிகழ வாழ்த்துக்கள்.--கலை 22:18, 10 திசம்பர் 2010 (UTC)
'ஒன்றிய வாழ்வு' பக்கம்
தொகுஒன்றிய வாழ்வு தகவல் பக்கத்தில், நல்ல, மேலதிக தகவல்களைக் கொடுத்திருக்கின்றீர்கள். நன்றி சஞ்சீவி சிவகுமார்.--கலை 16:52, 15 நவம்பர் 2010 (UTC)
வாழ்க்கை வரலாறு குறித்தப் பக்கங்கள்
தொகுசஞ்சீவி சிவகுமார்,இந்த விடயத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களை ஆலமரத்தடியில் கண்டேன். நீங்கள் அதற்கான வழிகாட்டுதல் கட்டுரையை மணல்தொட்டியில் தொகுப்பதையும் கண்டேன். ஆனால் மணல்தொட்டி, புதுப்பயனர்கள் தொகுக்க பழகும் இடமாதலால் விக்கிப்பீடியா பெயர்வெளியில் புதிய திட்டப்பக்கங்களை உருவாக்கி உள்ளேன்.நீங்கள் அங்கு தமிழாக்கம் செய்யலாம்.
- en:Wikipedia:Biographies of living persons ---> விக்கிப்பீடியா:வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
- en:Wikipedia:Autobiography.---> விக்கிப்பீடியா:தன்வரலாறு
--மணியன் 04:18, 17 நவம்பர் 2010 (UTC)
- மிக்க நன்றி மணியன்.--சஞ்சீவி சிவகுமார் 06:29, 17 நவம்பர் 2010 (UTC)
தலைப்பை மாற்றிவிட்டேன்
தொகுஐயா! நீங்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற கட்டுரையின் தலைப்பை உங்களைக் கேட்காமலேயே மாற்றிவிட்டேன். அருள் கூர்ந்து மன்னிக்கவும். உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனில் அக்கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உங்களது கருத்தைத் தெரிவிக்கவும் ஐயா.
- அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 11:11, 4 திசம்பர் 2010 (UTC)
2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்
தொகுவணக்கம் Sancheevis/தொகுப்பு 1:
தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.
பட உரிமங்கள்
தொகுநீங்கள் புன்னியாமீன் அவர்களிடமிருந்து மின்னஞ்சலில் பெற்று பதிவேற்றிய படிமங்களுக்கு பின்வரும் பதிப்புரிமை நிரல் துண்டினை இணைக்க வேண்டுகிறேன். இப்போது அவை எவ்வித உரிம விளக்கமும் இன்றி உள்ளன.--சோடாபாட்டில்உரையாடுக 17:25, 10 பெப்ரவரி 2011 (UTC)
{{Cc-by-sa-3.0}}
பாராட்டுகள்
தொகுஇலங்கையில் விக்கிப்பீடியா பட்டறைகளை நடத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகளைக் கண்டு மகிழ்கிறேன். வாழ்த்துகள். பல்கலைக்கு வெளியே பொதுவான இடங்களில் அறிவித்தால் பொதுமக்கள் கூடுமான பேர் வரலாம். யாழ்ப்பாணம், கொழும்பிலும் நடத்த முயற்சிகள் எடுக்கலாம். நிகழ்ச்சிக்குச் செல்லும் முன்பே சில எடுத்துக்காட்டுத் திரைக்காட்சிகள், திரைபரப்புகளை (screencast) எடுத்து வைத்துக் கொண்டால், இணைய இணைப்பு இல்லாமலும் சமாளிக்கலாம்.--இரவி 16:37, 6 மே 2011 (UTC)
நன்றி இரவி. உடனடியாக கல்முனை, மட்டக்களப்புப் பகுதியில் பொதுமக்களின் பங்கேற்பைக் கருதி செய்ய முனைகிறேன். கண்டியில் செய்வது குறித்து புன்னியாமீன் உடன் கதைத்துள்ளேன். கொழும்பு,யாழ்ப்பாணத்தில் எனக்கு தொடர்புகள் குறைவு. அங்குள்ள பயனர்கள் ஏற்பாடு செய்வார்களாயின் உதவமுடியும்.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 17:21, 6 மே 2011 (UTC)
நிர்வாகிப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுகோள்
தொகுவணக்கம் சஞ்சீவ். உங்களின் ஈடுபாடு, பங்களிப்பு, தமிழ் அறிவு, கட்டுரைகள் ஆக்கம், பராமரிப்புப் பணிகள், தொடர்பாடல் பணிகள் ஆகியவை மிகச் சிறப்பாக அமைகின்றன. உங்களை நிர்வாகியாப் பெற்றால் த.வி நன்மை பெறும். மேலும் மேலும் விக்கி நுட்பத்தையும் முறைகளையும் அறிந்து கொள்ள உதவும். உங்களை நிர்வாகியாக பரிந்துரைக்க விரும்புகிறேன். உங்களுக்கு இசைவு எனினும் இங்கு தெரிவிக்கவும். Natkeeran 14:12, 5 சூன் 2011 (UTC)
- வணக்கம் நக்கீரன். தங்கள் அழைப்புக்கும் நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைகளுக்கும் நன்றிகள். த.வியின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தல் தமிழ்மொழியை நுட்ப்ஞ்சார் தளத்தில் வளர்ப்பதற்கான முனைப்பாகவே கருதுகிறேன். இது நம் வருங்கால சந்ததிக்கான பணி. ஆனவற்றைச் செய்ய முழுமனதாயுள்ளேன். தங்கள் அழைப்புக்கு இசைகிறேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 16:34, 5 சூன் 2011 (UTC)
- தங்கள் முடிவுக்கு மகிழ்ச்சி சஞ்சீவி சிவகுமார். முன்கூட்டிய வாழ்த்துக்கள்--P.M.Puniyameen 16:41, 5 சூன் 2011 (UTC)
- நன்றி. --Natkeeran 03:14, 6 சூன் 2011 (UTC)
வாக்கெடுப்பு முடிவுக்கு ஏற்ப, தங்களுக்கு நிருவாக அணுக்கம் செயற்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க மனமார்ந்த வாழ்த்துகள்--இரவி 16:01, 15 சூன் 2011 (UTC)
- மிக்க மகிழ்ச்சி நிருவாகி சஞ்சீவி சிவகுமார். மனமார்ந்த வாழ்த்துகள்--P.M.Puniyameen 16:25, 15 சூன் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் சஞ்சீவ். இலங்கையில் இருந்து இரண்டாவது நிர்வாகி நீங்களே :) --Natkeeran 16:36, 15 சூன் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் சஞ்சீவி சிவகுமார். தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். -- மயூரநாதன் 18:06, 15 சூன் 2011 (UTC)
- வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 02:53, 16 சூன் 2011 (UTC)
- வாழ்த்துக்கள் -- மாகிர் 04:41, 16 சூன் 2011 (UTC)
வாழ்த்துகள் சஞ்சீவி, பக்க ஒன்றிணைப்பு பணியில் ஈடுபடும் போது கூப்பிடுங்கள் நானும் வந்து இணைந்து கொள்கிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 04:56, 16 சூன் 2011 (UTC)
வாழ்த்துகள் சஞ்சீவி. உங்கள் பணி இன்றியமையாத ஒன்று. நானும் தற்போது இப்பணிகளில் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளேன். --சூர்யபிரகாசு.ச.அ. உரையாடுக... 05:11, 16 சூன் 2011 (UTC)
- தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!!--மணியன் 05:16, 16 சூன் 2011 (UTC)
அனைவருக்கும் நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 06:38, 16 சூன் 2011 (UTC)
- சிவகுமார், தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளுள் ஒருவராக நீங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. இந்த அணுக்கம் உங்கள் விக்கிப்பங்களிப்புகளுப்புக்குப் பெரிதும் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 10:14, 16 சூன் 2011 (UTC)
- நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சஞ்சீவி--செந்தி//உரையாடுக// 12:26, 16 சூன் 2011 (UTC)
- நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்! --செல்வா 05:51, 17 சூன் 2011 (UTC)
நகர்த்தல் /அழித்தல்
தொகுலெமூரியா இலெமூரியா இவற்றையும் பார்த்து விடுங்கள் --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 04:47, 22 சூன் 2011 (UTC)
- வணக்கம் கார்த்தி. ஏற்கனவே பக்கவழிமாற்று செய்யப்பட்டுள்ள தனிப்பக்கமே இது.--சஞ்சீவி சிவகுமார் 04:54, 22 சூன் 2011 (UTC)
- சுட்டிக் காட்டியதற்கு நன்றி. கனக்சு அவற்றை இணைத்துள்ளார்.--சஞ்சீவி சிவகுமார் 06:43, 22 சூன் 2011 (UTC)
நிர்வாக அணுக்கம் - நன்றி
தொகுதமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாக அணுக்கப் பணிக்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் எனக்கு வாக்களித்து உதவிய தங்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்...--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:44, 28 சூன் 2011 (UTC)
- சிவகுமார், இணையம் கட்டுரைகளை நீங்கள் இணைக்கத் தொடங்கியது தெரியாமல் நீக்கி விட்டேன். இப்போது வரலாற்றுடன் மீட்டிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 23:40, 6 ஆகத்து 2011 (UTC)
- ஆம் கனக்ஸ். கவனித்தேன். மிக்கநன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் 23:43, 6 ஆகத்து 2011 (UTC)
Invite to WikiConference India 2011
தொகுHi Sancheevis,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
தமிழ் விக்கி ஊடகப் போட்டி
தொகுஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:19, 4 அக்டோபர் 2011 (UTC)
ஒருங்கிணைப்பாளர்
தொகுபோட்டியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக உங்களையும் முன்மொழிந்துள்ளேன். மொத்தம் ஐந்து பேர் உள்ளோம் (நற்கீரன், நான், நீங்கள், கலை, ஸ்ரீகாந்த்)
ஒருங்கிணைப்பாளர்களின் பணிகள் - 1) பரப்புரை செய்தல் 2) போட்டியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தல் + வழிகாட்டுதல் (மின்னஞ்சல் + சமூக வலை) 3) போட்டிப் பக்கம் பராமரிப்பு 4) நடுவர் பணி (மதிப்பீடு மற்றும் பதிப்புரிமை மீறல்களை கண்டுபிடித்தல்)
ஒருங்கிணைப்பாளர்களாவதால் வரும் தடைகள் 1)போட்டியில் நாமும் நமது நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்ளலாம். ஆனால் நமது ஆக்கங்கள் பரிசுகள் தேர்வுக்காக பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
தங்களுக்கு இது ஏற்பில்லையெனில் தங்கள் பெயரினை நீக்கி விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 09:12, 7 அக்டோபர் 2011 (UTC)
- நன்றி சோடாபாட்டில். ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றுவதில் மகிழ்ச்சி.--சஞ்சீவி சிவகுமார் 15:35, 7 அக்டோபர் 2011 (UTC)
நல்கை விண்ணப்ப வரைவு
தொகுபோட்டித் திட்டத்துக்கான விதிகள் மேல்நிலை அளவில் உறுதியாகிவிட்ட நிலையில் அக்டோபர் 11ம் தேதி நல்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என நினைக்கிறேன். வரைவு விண்ணபத்தைப் பரிசீலித்து திருத்தங்கள் ஏதும் இருப்பின் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:28, 9 அக்டோபர் 2011 (UTC)
- விண்ணப்பம் செய்தாயிற்று- Meta:Grants:Tamil Wikimedians/TamilWiki Media Contest--சோடாபாட்டில்உரையாடுக 06:53, 11 அக்டோபர் 2011 (UTC)
தேர்வுப் புள்ளியிடல்
தொகுசஞ்சீவி,
ஊடகப் போட்டி பேச்சுப்பக்கத்தில் இட்டிருந்த புள்ளியிடல் கூறுகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி/தெரிவுப் பக்கம் பக்கத்தில் இடும்படிக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இப்பக்கத்தில் தேர்வு பற்றி தங்களுக்கு தோன்றும் பிற வ்ழிமுறைகளையும் சேர்த்து விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 08:24, 25 அக்டோபர் 2011 (UTC)
- செய்துள்ளேன்.--சஞ்சீவி சிவகுமார் 14:42, 25 அக்டோபர் 2011 (UTC)
விக்கி ஊடக நடுவப் (காமென்சு)படங்கள் குறித்து..
தொகுFile:Thoranam3.jpg என்பது அமங்களத்தோரணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.File:Thoranam.jpg இக்கோப்பும் அமங்களத் தோரணம் தானே? ஆம். எனில், ஒரே மாதிரியான கோப்புகளில் சிறந்தவைகளை மட்டும் பதிவேற்றக் கோருகிறேன்.File:Thoranam-2.jpg என்பதில் மாவிலை வருவதால், அமங்களத்தோரணமல்ல என்றே எண்ணுகிறேன். அப்படித்தானே? இம்மூன்று கோப்புகளையும் பகுத்துள்ளேன். File:Thoranam.jpg என்பதனை விட, File:Thoranam3.jpg என்பதே சிறப்பாக உள்ளது. தொடர்ந்து சிறந்த படங்களை பதிவேற்றுக. ஒளியானது, நிழற்படக்கருவியின் பின்னிருந்து வந்தால் மிக நன்றாக இருக்கும். தென்னங்கீற்றில் அமைந்த கலைநயம் எனக்குள் பூரிப்பை உண்டாக்கியது.முடிந்தால், சிறப்பான படத்தைப் பதிவேற்றுங்கள். நன்றி. வணக்கம்.≈07:47, 9 நவம்பர் 2011 (UTC)த♥உழவன்+உரை..
த. உ. வணக்கம். நான்கு குருவிகள் மேல் நோக்கி இருப்பது மங்கள தோரணம். மூன்று குருவிகள் கீழ் நோக்கி அமைவது அமங்கள தோரணம். மாவிலை தோரணம் மங்கள வகையைச் சேர்ந்தது தான். பார்க்க:தோரணம்--சஞ்சீவி சிவகுமார் 09:31, 9 நவம்பர் 2011 (UTC)
தமிழ்விக்கிப்பீடியாவில் 7500 கட்டுரைகள்
தொகுசஞ்சீவி சிவகுமார், தங்களால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கையை தமிழ்விக்கிப்பீடியாவில் இன்று பூர்த்தி செய்ய முடிந்ததை தங்களுக்கு மகிழ்வுடன் அறியத் தருகின்றேன். எதிர்பாராத விதமாக கடந்த வாரம் மின்னல் தாக்குதலினால் என் இணைய இணைப்பும், தொலைபேசி இணைப்பும் செயலிழந்தமையினால் பெரிதும் சிரமத்துக்குள்ளானேன். புரோட்பேன்ட் இணைப்பைப் போல கம்பியில்லா டொங்கல் இணைப்புகளில் வேலை செய்வது கடினம். தரவிரக்கம் செய்ய அதிக நேரமாகின்றது. மேலும் மழை, மின்வெட்டு. அதிகாலையில் எழுந்து இரவு வரை முழுமையாக உழைத்தமையினாலேயே தங்களால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய முடிந்தது. சிலநேரங்களில் தங்களால் இலக்கு நிர்ணயிக்கப்படாதுவிடின் என் கட்டுரைகள் 7000 அளவில் நின்றிருக்கும். எப்படியோ நடப்பதெல்லாம் நன்மைக்கென்பார்கள். அது போல சில தற்காலிக பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மனநிறைவாகவுள்ளது. மிக்கநன்றி.--P.M.Puniyameen 16:08, 13 நவம்பர் 2011 (UTC)
- நீங்கள் மனந்தளராமல் எழுதவேண்டும் எனும் ஒரே நோக்கமே எனது கட்டுரை எண்ணிக்கை நிருணயத்தில் பின்னணியாயிருந்தது. சிலவேளை உங்களை சிரமப்படுத்திவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள் எழுந்ததுண்டு. இடையில் இணைய இணைப்பும், தொலைபேசி இணைப்பும் செயலிழந்தமை. ஆயினும் தளராமல் இலக்கை அடைந்த உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். நாளை விக்கிக்கு வந்த முதலாம் ஆண்டைக் கொண்டாடும் உங்களுக்கு என் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 16:16, 13 நவம்பர் 2011 (UTC)
உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத்திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த பூந்துணர் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 16, 2011 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த நெஞ்சுக்கு நீதி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 8, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த ஊழிநாள் கடிகாரம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மார்ச் 21, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த டிரினிட்டி_(அணுகுண்டு_சோதனை) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 11, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கடலை அசுவுணி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 2, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த லேய்டின் கொள்கலன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 2, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கடல் முள்ளி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 15, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த கோவேறு கழுதை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் அக்டோபர் 30, 2013 அன்று வெளியானது. |
கத்தரித்தல்
தொகுதாங்கள் உருவாக்கிவரும் கத்தரித்தல் என்ற கட்டுரையின் தலைப்பு பொதுவானதாக உள்ளது என நினைக்கிறேன். தாவரவியல் தொடர்புடைய தெளிவான பெயருக்கு (உதாரணம்: கத்தரித்தல் (தாவரவியல்),தாவர உறுப்புக் கத்தரித்தல் போல) நகர்த்தினால் நன்றாக இருக்குமென கருதுகிறேன்.--ஏர்னஸ்டோ பாலாஜி 15:12, 19 திசம்பர் 2011 (UTC)
நல்லது பாலாஜி en:trimming, en:pruning என்பவற்றுக்கெல்லம் நாம் தமிழில் ஒரே பதத்தையே பயன் படுத்துகின்றோம். அது தவிர தலைப்பு பொதுவானதாக உள்ளது உண்மைதான். மாற்றிவிடுகிறேன்.--சஞ்சீவி சிவகுமார் 15:26, 19 திசம்பர் 2011 (UTC)
நிலைகொள் வேளாண்மை கட்டுரையை மேம்படுத்த வேண்டல்
தொகுவணக்கம், நீங்கள் பெரிதும் பங்களித்துள்ள நிலைகொள் வேளாண்மை கட்டுரையை முழுதும் படித்து உரை திருத்திய பிறகும் இத்துறை குறித்த முழுமையான புரிதலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை :( இக்கட்டுரையில் கூடுதல் தகவலைச் சேர்த்து மேம்படுத்தினால் குறுந்தட்டுப் பெறுபவர்களுக்கும் அனைவருக்கும் உதவியாக இருக்கும். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையின் அடிப்படையில் கூட எழுதலாம். நன்றி--இரவி 23:24, 19 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி
தொகுஉங்கள் வாழ்த்து கண்டு மகிழ்ந்தேன். உங்களைப் போன்ற பலரும் தமிழ் விக்கிப்பீடியாவின் இணைந்து பங்களிப்பதே, இன்னும் கூடிய உற்சாகத்துடன் அனைவரையும் பங்களிக்க வைக்கிறது. நன்றி.--இரவி (பேச்சு) 07:17, 14 மார்ச் 2012 (UTC)
மிக்க நன்றி
தொகுநன்றி | ||
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் மிக்க நன்றி! Anton (பேச்சு) 06:09, 9 ஏப்ரல் 2012 (UTC) |
விக்கி பற்றிய இலங்கை அறிமுகப் பட்டறைகளுக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும். மட்டக்களப்பிலிருந்து ஒருவரை விக்கி ஊடாக தொடர் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. --Anton (பேச்சு) 06:10, 9 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி
தொகுநிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி. -பார்வதிஸ்ரீ |
-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:23, 26 மே 2012 (UTC)+1 மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:42, 26 மே 2012 (UTC)
+1 நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:21, 30 மே 2012 (UTC)
கரப்பு
தொகுநீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
உங்களுக்குத் தெரியுமா
தொகுவணக்கம். சஞ்சீவி. நிங்கள் உங்களுக்குத் தெரியுமாவை அவ்வப்போது இற்றைப்படுத்துவது கண்டு மகிழ்ச்சி. ஆனால் அங்கு இடம்பெறும் தகவல் குறைந்தபட்சம் ஒரு நம்பத்தகுந்த் மேற்கோள் கொண்டதாய் இருக்க வேண்டும் என்பது விதி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 15 அக்டோபர் 2012 (UTC)
- சுட்டிக்காட்டிமைக்கு நன்றி சுப்பிரம்மணி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:24, 16 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் சஞ்சீவி. இவ்வாரம் இடம்பெற்ற உங்களுக்குத் தெரியுமா பகுதியில் நின்றொளிர் காளான் பற்றிய செய்தி ஏற்கனவே இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. காண்க பேச்சு:நின்றொளிர் காளான் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:15, 7 நவம்பர் 2012 (UTC)
- வணக்கம் பார்வதிஸ்ரீ. 2011 சூன் இடம்பெற்ற அச்செய்தி நின்றொளிர் காளான் கட்டுரையில் இடம் பெற்ற மற்றொரு செய்தி. --சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:53, 8 நவம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Anton (பேச்சு) 02:06, 26 நவம்பர் 2012 (UTC)
- தகவல்களுக்கு நன்றிகள் அன்ரன்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 03:35, 28 நவம்பர் 2012 (UTC)
- வணக்கம் சஞ்சீவி. இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 19:12, 26 திசம்பர் 2012 (UTC)
மின்வெட்டு விடுப்பு
தொகுகல்முனைப் பிரதேசத்தில் எதிர்வரும் 07.12.2012 முதல் 09.12.2012 பிற்பகல் வரை முழுநேர மின்வெட்டு ஆதலால்
Sancheevis குறுகிய விக்கி விடுப்பில் உள்ளார். மீண்டும் விரைவில் விக்கிப்பணிக்கு திரும்புவார். |
==
மலேசியாவில் ஒரே ஆள்
தொகுஎனக்கு உதவி செய்யுங்கள்.
மலேசியாவில் ஒரே விக்கிபீடியர் மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
தொகுமலேசியாவைப்பற்றி 128 கட்டுரைகள். மலேசியாவிற்கு ஓர் இடம் கொடுங்கள். எனக்கு உதவி செய்ய வேண்டாம். மலேசியாவில் இருக்கும் 22 இலட்சம் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி. கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நான் எழுதி கொண்டுதான் இருப்பேன். ஆளை விடுங்கள்.--ksmuthukrishnan 15:07, 12 சனவரி 2013 (UTC)
நன்றி
தொகுநன்றி | ||
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:07, 14 சனவரி 2013 (UTC) |
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:21, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:48, 15 சனவரி 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள்
தொகுநீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:47, 31 சனவரி 2013 (UTC)
மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Sancheevis/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.கட்டுரை ஒன்றிணைப்பு
தொகுகட்டுரைகளை ஒன்றிணைக்க பயனர் மணியம் அவர்கள் எழுதி வைத்திருந்த how to குறிப்பில் இருந்து:
Two articles are there for same subject : Article OLD, Article NEW Update Article NEW with stuff from OLD delete OLD move NEW to OLD without leaving a redirect, now only OLD title remains delete OLD again restore OLD. while doing it choose all versions now histories are merged in OLD title (with contents of updated NEW from step 2) move article to one of the two earlier titles with other as a redirect
விக்கிப்பீடியர் சந்திப்பு
தொகுகொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விக்கிப்பீடியர் சந்திப்பு குறித்து நினைவூட்டலுக்கு நன்றி சிவகுமார். விக்கிப்பீடியர் சந்திப்பில் கலந்துகொள்ள ஆர்வமிருப்பினும் இத்திகதிகளில் கொழும்புக்கு வருவது சற்று சிரமமாக இருக்கும் என எண்ணுகின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 09:40, 25 மார்ச் 2013 (UTC)
- தொடர்புக்கு நன்றி சிவகோசரன். யாழ்ப்பாணத்தில்/வவுனியாவில் மற்றொரு அறிமுகப்பட்டறையை நடாத்தும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றோம். கொழும்பு பட்டறையை 26ந் திகதி மாலையில் ஒழுங்கு படுத்துவதும் யாழ் பட்டறையை ஏப்ரல் 29ந் திகதி நடத்துவதும் குறித்தும் (27,28ந் திகதிகலில் நூலக நிறுவனத்தின் ஆவண மாநாடு இருப்பதால்) சிந்தித்து வருகின்றோம். வசதிப்படும் இடத்தில் பங்குபெறுவதும் உங்களால் ஏற்பாடுகளில் உதவமுடியுமெனினும் எதிர்பார்க்கின்றோம். ஆர்வத்துக்கு நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:16, 25 மார்ச் 2013 (UTC)
தேவைப்படும் கட்டுரைகள்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிதாக வருபவர்கள் எழுதக்கூடியவை என்ற நோக்கில், இலகுவான ஆனால் முக்கியமான கட்டுரைகள் என்று சிலவற்றை இங்கு பரிந்துரைக்க முடியுமா? நன்றி. --இரவி (பேச்சு) 15:33, 29 மார்ச் 2013 (UTC)
மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்
தொகுவணக்கம், Sancheevis/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
பட்டறை விவரங்கள்
தொகுவணக்கம் சஞ்சீவி. ஏப்பிரல் 26, 29 தேதிகளில் நடக்கும் அறிமுகப் பட்டறைகள் குறித்த பக்கங்களை முழுமைப்படுத்தினால், தள அறிவிப்பில் வெளியிடலாம். இன்னும் ஒரு வார காலமே உள்ளதால், நிறைய இலங்கைப் பயனர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இலங்கையில் தங்களுக்கு ஏதேனும் ஊடகத் தொடர்புகள் இருந்தால், அவற்றிலும் இந்தச் செய்தியை வெளியிடுவது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 19:16, 20 ஏப்ரல் 2013 (UTC)
மின்னஞ்சல்
தொகுஉங்களிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் பார்க்கவும்--சங்கீர்த்தன் (பேச்சு) 06:56, 22 ஏப்ரல் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுநீங்கள் பங்களித்த மட்டக்களப்பு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 28, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
விக்கித்திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு
தொகுவணக்கம், Sancheevis/தொகுப்பு 1!
தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
- உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.
- சைவ சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள் என்ற பகுப்பிலுள்ள குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி சிறப்புக் கட்டுரைகளாக மாற்றலாம்.
- ஏற்கனவே உள்ள சைவ சமய கட்டுரைகளில் உள்ள பிழைகளை திருத்தலாம்.
- விக்கித்திட்டம் சைவத்தில் பங்களிப்பவர்களுக்கு வழிகாட்டலாம். சிறப்பாக பங்களிப்போருக்கு பதக்கங்களை கொடுத்து ஊக்கப்படுத்தலாம்.
தாங்கள் திருவிளையாடல்கள் பற்றிய பல கட்டுரைகளை எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் 54 திருவிளையாடல்கள் எழுதப்பெறாமல் உள்ளது. அவற்றையும் தங்களுக்கு நேரமிருப்பின் எழுதி தர வேண்டுகி்றேன். உதவிக்கு சில தளங்களையும், எழுதப்பெற வேண்டிய படலங்கள் குறித்தும் இங்கு நீங்கள் காணலாம். நன்றி.
என்ன செய்யலாம்
தொகுவிக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:38, 23 மே 2013 (UTC)
கருத்து தேவை
தொகுமுதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:11, 29 மே 2013 (UTC)
2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013
தொகுதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:08, 5 சூலை 2013 (UTC)
கட்டுரைக் வேண்டுதல்
தொகுவணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:
- இலங்கையில் தமிழ் விக்கியூடகங்களின் வளர்ச்சியும் வாய்ப்புக்களும்
- இணையத் தமிழ் கல்வி உள்ளடக்கங்களில் தமிழ் விக்கியூடகங்கள் பங்கு
உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)
நன்றி
தொகுமிக்க நன்றி.பரிசுத்தொகை முழுதையும் தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு அளிப்பதாக திட்டமிட்டுள்ளேன். மேற்கொண்டு நான் பரிசு வாங்கும் பட்சத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு. நந்தினிகந்தசாமி (பேச்சு) 03:43, 2 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி நந்தினி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:17, 2 செப்டம்பர் 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:56, 18 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி...
தொகுவணக்கம்! பத்தாண்டுகள் கொண்டாட்டத்தில்... ஆரம்பம் தொட்டே சிறந்தக் கருத்துகளைப் பரிமாறியும், பரப்புரைக்கானக் கட்டுரைகளில் பணியாற்றியும் அருமையான தொண்டினை செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 20 செப்டம்பர் 2013 (UTC)
சென்னை வரவு
தொகு27 அன்று எத்தனை மணிக்குச் சென்னை வருகிறீர்கள்? உங்கள் தொலைப்பேசி எண்ணை 99431 68304க்கு அனுப்பி வையுங்கள்.--இரவி (பேச்சு) 03:22, 25 செப்டம்பர் 2013 (UTC)