அக்டோபர் 2
நாள்
(2 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 2 (October 2) கிரிகோரியன் ஆண்டின் 275 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 276 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 90 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
- 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான்.
- 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார்.
- 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார்.
- 1552 – உருசியப் படைகள் கசானை ஊடுருவின.
- 1608 – டச்சு வில்லைத் தயாரிப்பாளர் ஆன்சு லிப்பர்சி முதலாவது தொலைநோக்கியை டச்சு நாடாளுமன்றத்தில் காட்சிப்படுத்தினார்.
- 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: உளவாளி என்ற சந்தேகத்தில் பிரித்தானிய இராணுவ அதிகாரி ஜான் அந்திரே அமெரிக்க விடுதலைப் படையால் தூக்கிலிடப்பட்டார்.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படையினர் வர்ஜீனியாவின் சால்ட்வில் நகரைத் தாக்கினர். ஆனாலும் அவர்கள் கூட்டமைப்பினரால் விரட்டப்பட்டனர்.
- 1865 – இலங்கையின் முதலாவது தொடருந்து போக்குவரத்து சேவை கொழும்புக்கும் அம்பேபுசைக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1903 – யாழ்ப்பாணம் ஸ்டீம் நெவிகேசன் கம்பனிக்குச் சொந்தமான "ஜாஃப்னா" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.[2]
- 1919 – அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பெரும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
- 1925 – தொலைக்காட்சித் திட்டத்தின் முதலாவது சோதனையை ஜான் லோகி பைர்டு நடத்தினார்.
- 1937 – டொமினிக்கன் குடியரசில் வசிக்கும் எயிட்டிய மக்களைக் கொல்ல டொமினிக்கன் சர்வாதிகாரி ரபாயெல் ட்ருசிலோ உத்தரவிட்டார்.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டை: நாட்சி ஜெர்மனிப் படைகள் மாஸ்கோவுக்கு எதிரான தமது மூன்று மாதத் தாக்குதலை ஆரம்பித்தன.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: குயீன் மேரி கப்பல் தவறுதலாகத் தனது பாதுகாப்புப் படகு குரக்கோவாவை மோதி மூழ்கடித்ததில் 337 மாலுமிகள் உயிரிழந்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் வார்சாவா கிளர்ச்சியை அடக்கின.
- 1955 – ஆரம்பகாலக் கணினிகளில் ஒன்றான எனியாக் மூடப்பட்டது.
- 1958 – கினி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது..
- 1968 – மெக்சிகோவில் இடம்பெற்ற மாணவர்களின் போராட்டத்தின் முடிவில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். படுகொலைகள் இடம்பெற்று 10 நாட்களில் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின.
- 1970 – அமெரிக்கா, கொலராடோவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், விச்சிட்டா அரசுப் பல்கலைக்கழகத்தின் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்தனர்.
- 1972 – இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சா. ஜே. வே. செல்வநாயகம் தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார்.
- 1990 – சீனாவின் போயிங் விமானம் கடத்தப்பட்ட பின்னர் அது குவாங்சூ விமானநிலையத்தில் தரையிறங்கும் போது தரையில் நின்ற இரு விமானங்களுடன் மோதியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
- 1992 – பிரேசிலில் சிறைக்கைதிகளின் போராட்டம் ஒன்றின் போது 111 கைதிகள் சுட்டுக் கொல்லபட்டனர்.
- 1996 – பெரு விமானம் ஒன்று பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 70 பேரும் உயிரிழந்தனர்.
- 2006 – பென்சில்வேனியாவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 5 மாணவிகள் கொல்லப்பட்டனர்.
- 2007 – தென் கொரிய அரசுத்தலைவர் ரோ மூ-இயூன் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு எல்லை தாண்டி வட கொரியா சென்றார்.
- 2016 – எத்தியோப்பியாவில் பண்டிகை ஒன்றின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டனர்.
- 2018 – சவூதி ஊடகவியலாளர் ஜமால் காசோகி இசுதான்புல்லில் உள்ள சவூதி துணைத்தூதரகத்திற்கு சென்றதை அடுத்து அவர் காணாமல் போனார்..
பிறப்புகள்
- 1452 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (இ. 1485)
- 1538 – சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியப் புனிதர் (இ. 1584)
- 1746 – பீட்டர் சாக்கப் இச்செலம், சுவீடன் வேதியியலாளர் (இ. 1813)
- 1800 – நாட் டர்னர், அமெரிக்க அடிமை, கிளர்ச்சித் தலைவர் (இ. 1831)
- 1848 – காசிவாசி செந்திநாதையர், ஈழத்துத் தமிழறிஞர், புலவர் (இ. 1924)
- 1866 – சுவாமி அபேதானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1939)
- 1869 – மகாத்மா காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மெய்யியலாளர் (இ. 1948)
- 1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1-வது பிரதமர் (இ. 1951)
- 1904 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1991)
- 1904 – லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1966)
- 1904 – அ. சிவசுந்தரம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1908 – டி. வி. இராமசுப்பையர், தமிழகப் பத்திரிகையாளர், தொழிலதிபர் (இ. 1984)
- 1913 – எல். கே. பி. லகுமையா, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 2013)
- 1916 – ப. நீலகண்டன், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. 1992)
- 1925 – ஆன் றணசிங்க, ஆங்கிலேய யூதப் பெண் எழுத்தாளர்
- 1930 – ஐராவதம் மகாதேவன், தமிழக கல்வெட்டு ஆய்வாளர் (இ. 2018)
- 1933 – சான் பி. குர்தோன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர்
- 1939 – புத்தி குந்தேரன், இந்தியத் துடுப்பாளர் (இ. 2006)
- 1945 – மார்ட்டின் எல்மேன், அமெரிக்க குறியாக்கவியலாளர்
- 1959 – பாண்டியராஜன், தமிழகத் திரைப்பட, மேடை நாடக நடிகர்
- 1965 – மயில்சாமி, தென்னிந்திய நடிகர், நகைச்சுவையாளர் (இ. 2023)
- 1965 – டொம் மூடி, ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1974 – ரச்சநா பானர்ஜி, இந்திய நடிகை
இறப்புகள்
- 1588 – பெர்னாடினோ தெலெசியோ, இத்தாலிய மெய்யியலாளர், இயற்கை அறிவியலாளர் (பி. 1509)
- 1803 – சாமுவேல் ஆடம்ஸ், அமெரிக்க மெய்யியலாளர், அரசியல்வாதி (பி. 1722)
- 1804 – நிக்கொலா-யோசப் கியூனியோ, பிரான்சியப் பொறியியலாளர் (பி. 1725)[3]
- 1906 – ராஜா ரவி வர்மா, இந்திய ஓவியர் (பி. 1848)
- 1927 – சுவாந்தே அறீனியசு, நோபல் பரிசு பெற்ற சுவீடிய வேதியியலாளர் (பி. 1859)
- 1975 – காமராசர், சென்னை மாநிலத்தின் 3-வது முதலமைச்சர் (பி. 1903)
- 1980 – ஜோன் கொத்தலாவலை, இலங்கைப் படைத்துறை அதிகாரி, அரசியல்வாதி (பி. 1895)
- 1992 – ஹொன்னப்ப பாகவதர், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1915)
- 2014 – பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (பி. 1923)
- 2022 – தர்சன் தர்மராஜ், இலங்கைத் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1981)
சிறப்பு நாள்
- காந்தி ஜெயந்தி (இந்தியா)
- அனைத்துலக வன்முறையற்ற நாள்
- விடுதலை நாள் (கினி, பிரான்சிடம் இருந்து, 1958)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 73
- ↑ "Nicolas-Joseph Cugnot | Facts, Invention, & Steam Car". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2021.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 2 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்