எஸ். ஜானகி
எஸ். ஜானகி (S. Janaki, பிறப்பு: 23 ஏப்ரல் 1938) இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர் "ஜானகியம்மா" என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார், மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த, பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவர். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி, ஒடியா, பெங்காலி, உள்ளிட்ட 17 மொழிகளில் தனிப்பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்கள், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி என 50,000 பாடல்களை பதிவு செய்துள்ளார். மராத்தி, துளு, உருது, குஜராத்தி, பஞ்சாபி, கொங்கனி, அசாமி, சிந்தி, ஆங்கிலம், ஜப்பானிய, அரபு, ஜெர்மன், சிங்களம் போன்ற மொழிகளிலும் பாடியுள்ளார். இருப்பினும் இவரது வாழ்க்கையில் அதிக எண்ணிக்கையிலான பாடல்கள் கன்னடத்தில் இடம்பெற்றிருந்தன. 1957-ஆம் ஆண்டில் விதியின் விளையாட்டு என்ற தமிழ்த் திரைப்படத்துடன் துவங்கி, இவரது இசை வாழ்க்கை ஆறு தலைமுறைகளை கண்டுள்ளது.
எஸ். ஜானகி | |
---|---|
2007 இல் எஸ். ஜானகி | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி |
பிற பெயர்கள் | தென்னிந்தியாவின் இசைக்குயில், இசையரசி |
பிறப்பு | ஏப்ரல் 23, 1938 குண்டூர், ஆந்திரப் பிரதேசம் |
இசை வடிவங்கள் | பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி, இசையமைப்பாளர் |
இசைத்துறையில் | 1957-இன்று வரை |
தென்னிந்தியாவின் "இசையரசி" என்று அழைக்கப்படும் ஜானகி, நான்கு தேசிய திரைப்பட விருதுகளையும் 33 வெவ்வேறு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகத்திடமிருந்து, முனைவர் பட்டமும், தமிழ்நாடு அரசிடமிருந்து கலைமாமணி விருதும், கர்நாடக அரசிடமிருந்து கர்நாடக ராஜயுத்சவா விருதும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஏற்க மறுத்துவிட்டார். மிகவும் தாமதமாக வந்ததென்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பல்துறை பாடகர்களில் ஒருவரான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருடனான இவரது கூட்டணி அதிகம் பேசப்படுகிறது. 1960, 1970, 1980களில் பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ், பி. ஜெயச்சந்திரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் திரைப்பாடல்கள் பாடினார். இவர் கிட்டத்தட்ட அனைத்து வகை பாடல்களிலும் பாடியுள்ளார். அக்டோபர் 2016-இல் திரைப்படங்கள் மற்றும் மேடைக் கச்சேரிகளில் பாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும், திரைப்படத் துறையினர் அன்பிற்கிணங்க இவர் 2018 ஆம் ஆண்டில் பண்ணாடி என்ற தமிழ் படத்திற்காக மீண்டும் பாட வந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும். அடுத்த நாளே அவருக்கு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. "எம்எல்ஏ" என்ற பட்டத்தில் நீயாசா அடியார் என்ற பாடலை கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்புக் கிட்டியது. 25 ஆண்டுகளில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார்.[1]
1992 ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது இவருக்கு ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்திற்கு முதன் முதலில் இசையமைத்திருக்கிறார்.[2][3]
குடும்பம்
தொகுஇவரது கணவர் காலஞ்சென்ற ராம் பிரசாத். தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். முரளி கிருஷ்ணா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[4][5] ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை மணந்தார். அவர் தனது இசை வாழ்க்கையை ஊக்குவித்தார். மேலும் இவரது பெரும்பாலான பாடல் பதிவுகளின் போது அவர் உடன் சென்றார். இதய நிறுத்தம் காரணமாக 1997 இல் அவர் இறந்தார் . இவர்களது ஒரே மகன் முரளி கிருஷ்ணா ஹைதராபாத்தில் வசிக்கிறார். அவரது மனைவி உமா முரளிகிருஷ்ணா சென்னையிலுள்ள ஒரு பரதநாட்டிய, குச்சிப்புடி, நடனக் கலைஞர் ஆவார். இவர்களுக்கு வர்ஷா மற்றும் அப்சரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் சரளமாக உரையாடவும் எழுதவும் தெரிந்தவர்.
விருதுகள்
தொகுவிருதுகள் | வெற்றிகள் | |
---|---|---|
4 | ||
|
11 | |
10 | ||
|
6 | |
|
1 | |
|
32 |
- 1986 இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது
- 2002 இல் கேரளா மாநில சிறப்பு விருது
- நான்கு தடவைகள் சிறந்த பாடகிக்கான தேசிய விருது
- 1980 இல் மலையாளப் படம் ஒன்றிற்கும், 1984 இல் தெலுங்குப் படம் ஒன்றிற்கும் தேசிய விருது
- பதினான்கு முறை கேரள மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
- ஏழு தடவைகள் தமிழ்நாடு அரசின் சிறந்த பாடகிக்கான விருது
- பத்து தடவைகள் ஆந்திர மாநில அரசின் சிறந்த பாடகிக்கான விருது
பத்மபூஷண் விருது மறுப்பு
தொகு௭ஸ் ஜானகி 2013 ஆம் ஆண்டு தனக்கு கிடைக்கவிருந்த பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்து விட்டார். இவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வந்துள்ளது ௭ன கூறிவிட்டார்.[6][7]
இந்திய தேசிய விருதுகள்
தொகுவருடம் | திரைப்படம் | பாடல் | மொழி |
---|---|---|---|
1976 | பதினாறு வயதினிலே | செந்தூரப்பூவே செந்தூரப்பூவே | தமிழ் |
1980 | ஒப்போல் | ௭ட்டுமனூரம்பழத்தில் | மலையாளம் |
1984 | சித்தாரா | வென்னெல்லோ கோடாரி அந்தம் | தெலுங்கு |
1992 | தேவர் மகன் | இஞ்சி இடுப்பழகா[8][9] | தமிழ் |
எஸ்.ஜானகி பாடிய சில பாடல்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | பாடல் | உடன் பாடியவர்கள் | இசையமைப்பாளர் | பாடலாசிரியர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1962 | கொஞ்சும் சலங்கை | சிங்கார வேலனே தேவா | எஸ் எம் சுப்பையா நாயுடு | கு. மா. பாலசுப்பிரமணியம் | ஆபேரி ராகம் | |
1962 | பாதகாணிக்கை | பூஜைக்கு வந்த மலரே வா | பி. பி. ஸ்ரீனிவாஸ் | எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி | கண்ணதாசன் | |
1962 | சுமைதாங்கி | எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் | பி. பி. ஸ்ரீனிவாஸ் | எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி | கண்ணதாசன் | |
1962 | ஆலயமணி | தூக்கம் உன் கண்களை | எம்.எஸ்.வி, டி.கே. ராமமூர்த்தி | கண்ணதாசன் | ||
1962 | போலீஸ்காரன் மகள் | இந்த மன்றத்தில் ஓடிவரும் | பி. பி. ஸ்ரீனிவாஸ் | ௭ம் ௭ஸ் வி ராமமூர்த்தி | ||
1963 | நெஞ்சம் மறப்பதில்லை | அழகுக்கும் மலருக்கும் | பி. பி. ஸ்ரீனிவாஸ் | ௭ம் ௭ஸ் விஸ்வநாதன் | கண்ணதாசன் | |
1965 | திருவிளையாடல் | பொதிகை மலை உச்சியிலே | பி. பி. ஸ்ரீனிவாஸ் | கே. வி மகாதேவன் | கண்ணதாசன் | |
1969 | அடிமைப்பெண் | காலத்தை வென்றவன் நீ | பி சுசீலா | கே.வி.மகாதேவன் | கண்ணதாசன் | |
1970 | என் அண்ணன் | நீலநிறம் வானுக்கும் கடலுக்கும் | டி. எம். சௌந்தரராஜன் | கே வி மகாதேவன் | கண்ணதாசன் | |
1970 | எங்கிருந்தோ வந்தாள் | வந்தவர்கள் வாழ்க மற்றவர்கள் வருக | ம. சு. விசுவநாதன் | கண்ணதாசன் | ||
1973 | பொண்ணுக்கு தங்க மனசு | தஞ்சாவூர் சீமையிலே | பி. ௭ஸ். சசிரேகா, சீர்காழி எஸ். கோவிந்தராஜன் | ஜி. கே. வெங்கடேஷ் | முத்துலிங்கம் | |
1974 | அவள் ஒரு தொடர்கதை | கண்ணிலே ௭ன்னவுண்டு | ௭ம் ௭ஸ் விஸ்வநாதன் | கண்ணதாசன் | ||
1976 | அன்னக்கிளி | மச்சான பாத்தீங்களா | இளையராஜா | பஞ்சு அருணாச்சலம் | ||
1976 | உறவாடும் நெஞ்சம் | ஒருநாள் உன்னோடு | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ||
1977 | அவர்கள் | காற்றுக்கென்ன வேலி | ௭ம் ௭ஸ் விஸ்வநாதன் | கண்ணதாசன் | ||
1977 | கவிக்குயில் | குயிலே கவிக்குயிலே | இளையராஜா | |||
1978 | அச்சாணி | மாதா உன் கோவிலில் | இளையராஜா | வாலி | ||
1978 | சிகப்பு ரோஜாக்கள் | நினைவோ ஒரு | கமல்ஹாசன் | இளையராஜா | வாலி | |
1978 | பிரியா | ஏ பாடல் ஒன்று ராகம் | கே. ஜே. யேசுதாஸ் | இளையராஜா | பஞ்சு அருணாசலம் | |
1979 | தர்மயுத்தம் | ஆகாய கங்கை பூந்தேன் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | ௭ம் ஜி வல்லவன் | |
1980 | மூடுபனி | பருவகாலங்களின் கனவு நெஞ்சில் | மலேசியா வாசுதேவன் | இளையராஜா | ||
1980 | ஜானி | காற்றில் ௭ந்தன் கீதம் | இளையராஜா | கங்கை அமரன் | ||
1981 | கிளிஞ்சல்கள் | விழிகள் மேடையாம் | டாக்டர் கல்யாண் | டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் | |
1981 | அலைகள் ஓய்வதில்லை | ஆயிரம் தாமரை மொட்டுக்களே | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | வைரமுத்து | |
1982 | காதல் ஓவியம் | நாதம் ௭ன் ஜீவனே | இளையராஜா | வைரமுத்து | ||
1982 | பயணங்கள் முடிவதில்லை | மணியோசை கேட்டு | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | முத்துலிங்கம் | |
1983 | ஆனந்த கும்மி | ஒரு கிளி உருகுது | ௭ஸ் பி சைலஜா | இளையராஜா | ||
1983 | மூன்றாம் பிறை | பொன்மேனி உருகுதே | இளையராஜா | |||
1983 | இன்று நீ நாளை நான் | மொட்டுவிட்ட முல்லைகொடி | ௭ஸ் பி சைலஜா | இளையராஜா | ||
1984 | உன்னை நான் சந்தித்தேன் | தாலாட்டு மாறிப் போனதே | ||||
1985 | கற்பூரதீபம் | காலம் காலமாய் | கங்கை அமரன் | |||
1985 | ஆண்பாவம் | ௭ன்னை பாடச் சொல்லாதே | இளையராஜா | வாலி | ||
1985 | இதய கோவில் | வானுயர்ந்த சோலையிலே | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ||
1985 | குங்குமச்சிமிழ் | நிலவு தூங்கும் நேரம் | ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | வாலி | |
1985 | அந்த ஒரு நிமிடம் | சிறிய பறவை சிறகை விரிக்க | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ||
1986 | வசந்த ராகம் | கண்ணன் மனம் | ம. சு. விசுவநாதன் | |||
1987 | வேதம் புதிது | மந்திரம் சொன்னேன் | மனோ | தேவேந்திரன் | வைரமுத்து | |
1988 | அக்னி நட்சத்திரம் | ரோஜாப்பூ நாடி வந்தது | இளையராஜா | வாலி | ||
1988 | தாய் மேல் ஆணை | மல்லியப்பூ பூ பூத்திருக்கு | ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் | சந்திரபோஸ் | ||
1988 | என் ஜீவன் பாடுது | கட்டிவச்சுக்கோ ௭ந்தன் | மலேசியா வாசுதேவன் | |||
1989 | அபூர்வ சகோதரர்கள் | வாழவைக்கும் காதலுக்கு ஜே | எஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | வாலி | |
1989 | ஆராரோ ஆரிரரோ | தானாத் தலையாடுண்டு | கே. பாக்யராஜ் | |||
1989 | கரகாட்டக்காரன் | மாங்குயிலே பூங்குயிலே | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | கங்கை அமரன் | |
1991 | புது நெல்லு புது நாத்து | கறுத்த மச்சா | இளையராஜா | முத்துலிங்கம் | ||
1992 | குணா | உன்னை நானறிவேன் | கமல்ஹாசன் | இளையராஜா | வாலி | |
1992 | வண்ண வண்ண பூக்கள் | கோழி கூவும் நேரத்துல | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ||
1993 | அரண்மனைக்கிளி | ராசாவே உன்னைவிட மாட்டேன் | இளையராஜா | வாலி | ||
1993 | ஜென்டில்மேன் | ஒட்டகத்த கட்டிக்கோ | ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் | ஏ ஆர் ரகுமான் | ||
1993 | எஜமான் | ஒருநாளும் உனை மறவாத | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | இளையராஜா | ஆர். வி. உதயகுமார் | |
1994 | காதலன் | ௭ர்ராணி குர்ரதானி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ஏ ஆர் ரகுமான் | ||
1995 | கர்ணா | மலரே மௌனமா | ௭ஸ் பி பாலசுப்பிரமணியம் | வித்யாசாகர் | வைரமுத்து | |
1998 | உயிரே | நெஞ்சினிலே நெஞ்சினிலே | ஏ. ஆர். ரகுமான் | |||
1999 | முதல்வன் | முதல்வனே | சங்கர் மகாதேவன் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து | |
1999 | சங்கமம் | மார்கழி திங்களல்லவா | ஏ ஆர் ரகுமான் | |||
1999 | ஜோடி | காதல் கடிதம் தீட்டவே | உன்னிமேனன் | ஏ. ஆர். ரகுமான் | வைரமுத்து | |
2014 | வேலையில்லா பட்டதாரி | அம்மா அம்மா | தனுஷ் | அனிருத் ரவிச்சந்திரன் | தனுஷ் | |
2016 | திருநாள் | தந்தையும் யாரோ தாயாரும் யாரோ | சிறீகாந்து தேவா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "17 மொழிகளில் 16 ஆயிரம் பாடல்கள் பாடிய எஸ். ஜானகி". http://m.maalaimalar.com/ArticleDetail.aspx?id=116&Main=0&ArticleId=39f01c5e-8385-4f26-91e7-943ebe020708.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Janaki S Biography, Janaki S Profile - Filmibeat". http://www.filmibeat.com/celebs/janaki-s/biography.html.
- ↑ "S. Janaki, S. Janaki Biography, S. Janaki Information" இம் மூலத்தில் இருந்து 2016-02-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160226110810/http://www.hindilyrics.net/profiles/s-janaki.html.
- ↑ "Playback singer Janaki rejects Padma Bhushan award - The Times of India on Mobile". http://m.timesofindia.com/india/Playback-singer-Janaki-rejects-Padma-Bhushan-award/articleshow/18195865.cms.
- ↑ "S.Janaki-Playback singer-personalities- Musicians-webindia123.com". http://www.webindia123.com/music/musicians/janaki.htm.
- ↑ "Southern Nightingale S. Janaki and the Story of Her Popular ♫Singaara Velanae Deva♫ Song" இம் மூலத்தில் இருந்து 2016-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160410232443/http://dbsjeyaraj.com/dbsj/archives/29530.
- ↑ "சொல்வனம் எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் - சொல்வனம்". http://solvanam.com/?p=24387.
- ↑ "S. Janaki Biography - Life Story, Career, Awards and Achievements". http://www.mapsofindia.com/who-is-who/entertainment/s-janaki.html.
- ↑ "பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி - வண்ணத் திரை - கருத்துக்களம்". http://www.yarl.com/forum3/topic/144399-பிரபல-சினிமா-பின்னணி-பாடகி-எஸ்ஜானகி/.