தமிழ் விக்கிப்பீடியா
பேச்சு
பயனர்:மதனாஹரன்
     
பயனர் பேச்சு:மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/திட்டங்கள்
     
பயனர்:மதனாஹரன்/பதக்கங்கள்
     
பயனர்:மதனாஹரன்/கட்டுரைகள்
     
பயனர்:மதனாஹரன்/படிமங்கள்
     
Special:Emailuser/மதனாஹரன்
     
பயனர்:மதனாஹரன்/மணற்றொட்டி
     
முகப்பு
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
கட்டுரை
     
படிமம்
     
மின்னஞ்சல்
     
மணற்றொட்டி
     
மறுமொழிக் கொள்கை
வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் எனக்குச் செய்தி சொன்னால், இங்கே பதிலளிப்பேன். அது போல உங்கள் பேச்சுப்பக்கத்தில் நான் ஏதேனும் கேட்டிருந்தால், அங்கேயே பதிலளிக்கலாம் (என் கவனிப்புப் பட்டியலில் உங்கள் பேச்சுப்பக்கம் இருக்கும்.). பிற்காலத்தில் பேச்சுப் பக்கங்களைப் படிப்பவர்கள் நடந்த உரையாடலை எளிதில் புரிந்துகொள்ள இக்கொள்கை.
தொகுப்பு

தொகுப்புகள்


மொழிபெயர்ப்பு அறிவிப்புகள்

ல்+த இலக்கணப்பிழை

தொகு

தாங்கள் பல குறிப்புகளில் இரு சொற்கள் சேரும் போது லகர மெய்யைத் தொடர்ந்து தகர உயிர்மெய் வரக்கூடாது அல்லது "ற்ற" என்று வரும் என்று கூறிவருகிறீர்கள். ல்+த=ற்ற என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் தபால்தலை, அஞ்சல்தலை போல இடைவெளியில்லாமல் குறிப்பிடுவது தவறு என்கிறீர்கள். அப்படி ஒரு விதி இருப்பதாகத் தெரியவில்லை. சங்கநூல்களிலும் இம்மாதிரிச் சொற்கள் இடைவெளியில்லாமலே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனது புரிதலில் பிழையிருந்தால் மாற்றிக்கொள்வதற்காக, இதற்கான இலக்கணம் எங்கிருந்து உருவானது என்று விளக்கமுடியுமா? --நீச்சல்காரன் (பேச்சு) 02:09, 21 ஆகத்து 2015 (UTC)Reply

இடைவெளி விட்டு எழுதும் முறை காலத்தாற் பிந்தியதே. செய்யுள்களில் அசையமைப்புக்கு ஏற்பவே, இடைவெளி பிரிப்பது வழமை. அஞ்சல் + தலை என்பதைப் புணர்த்தி எழுதுவதாயின், அஞ்சற்றலை என் வரும். புணர்த்தாமல் அஞ்சல்தலை என ஒரே சொல் போல் குறிப்பது தகாது. அஞ்சல் தலை எனவே எழுத வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 02:56, 21 ஆகத்து 2015 (UTC)Reply
ஒரே சொல் போல எழுதுதல் தவறு என்று எந்த இலக்கண நூலில் உள்ளதென்று அறிய ஆவல். தவறான விதியை நாம் குறிப்பிடக் கூடாது என்றே கேட்கிறேன் -நீச்சல்காரன் (பேச்சு) 04:37, 21 ஆகத்து 2015 (UTC)Reply
தமிழின் முதன்மையான இலக்கண நூல்கள் வெளிவந்த காலத்தில் இடைவெளி விட்டு எழுதும் முறை இருந்ததாகத் தெரியவில்லை. இரண்டு சொற்களைப் பிரித்தெழுதுவதே பொதுவான முறை. பாகிம் இது பற்றிப் பல தடவைகள் உரையாடியுள்ளார். @Fahimrazick: --மதனாகரன் (பேச்சு) 04:47, 21 ஆகத்து 2015 (UTC)Reply

help

தொகு

mathan Nhm writer does not work in my edit page. but it works in word document. how can i rectify?--கி.மூர்த்தி 09:31, 22 ஆகத்து 2015 (UTC)

என்னுடைய தொகுக்கும் பகுதியில் NHM writer வேலை செய்யவில்லை. ஆனால் தனியாக word document இல் வேலை செய்கிறது . எப்படி சரி செய்வது?--கி.மூர்த்தி 09:34, 22 ஆகத்து 2015 (UTC)

தமிழ் விக்கியில் தொகுப்பதற்கு விக்கி வழங்கும் எழுத்துப்பலகையையே பயன்படுத்தலாமே. அதனைத் தான் நான் பயன்படுத்துகிறேன். வேறு இடங்களில் இ-கலப்பை பயன்படுத்துகிறேன்.--Kanags \உரையாடுக 09:52, 22 ஆகத்து 2015 (UTC)Reply

இது எனது பிழை-மீளமைக்க வேண்டாம்

தொகு

இது எனதுபிழை மீளமைக்க வேண்டாம்.இருவரும் இணைந்து, ஒரு கணினியில் பணியாற்றும் போது ஏற்பட்ட பிழை. தவறுதலாக கணக்கிலிருந்து வெளியேறாமல், அவர் கணக்கில் பதிந்தேன். பிறகு எனது ஒப்பத்தை இட்டேன். எனவே மீளமைக்க வேண்டாம்.--உழவன் (உரை) 01:33, 24 ஆகத்து 2015 (UTC)Reply

தங்கள் கவனத்திற்கு

தொகு

உதவி

தொகு

மிகைநிரப்புக் கோணங்கள் கட்டுரையையும் மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேர் கோணம், எதிர் கோணம் -இவற்றில் ஒற்று மிகுமா மிகாதா என்றும் தெளிவுபடுத்த வேண்டும்.--Booradleyp1 (பேச்சு) 16:55, 29 ஆகத்து 2015 (UTC)Reply

@Booradleyp1: நேர், எதிர் ஆகிய சொற்கள் பெயராகவும் வினையாகவும் தொழிற்படும் என்பதால் இங்குச் சிக்கல் உள்ளது. நேர்கோடு, நேர்கோணம், எதிர்கோணம் என்று எழுதுவதே பொதுவழக்கு. விரைவில் பதிலளிக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:14, 1 செப்டம்பர் 2015 (UTC)
நன்றி மதனாகரன். நானும் க் இல்லாமல்தால் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:52, 1 செப்டம்பர் 2015 (UTC)

உதவி

தொகு

இங்கு விளக்கக் கருத்திட்டு உதவ முடியுமா??? எது சரி என்பதில் குழப்பம் உள்ளது. நன்றி  :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:38, 31 ஆகத்து 2015 (UTC) Reply

உதவி

தொகு

Favicon எனும் ஆங்கிலச் சொல்லின் என்பதன் தமிழ்ப்பதம் யாது?--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:13, 3 செப்டம்பர் 2015 (UTC)

Favourite icon > Favicon. விருப்பப் படவுரு எனலாம். Icon-படவுரு என இலங்கைப் பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும், Faviconஇற்கான சொல்லாக விட்சனரியில் குறிப்பிடப்பட்டுள்ள விருப்புருவையே ஆளலாம். இது சுருக்கமாக இருக்கும். ஆங்கிலச் சொல்லை நேரடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்றில்லை. பொருளுணர்ந்து மொழிபெயர்க்கலாம். --மதனாகரன் (பேச்சு) 15:18, 3 செப்டம்பர் 2015 (UTC)

விளக்கியமைக்கு நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 3 செப்டம்பர் 2015 (UTC)

வேண்டுகோள்...

தொகு

வணக்கம்! தாங்கள் எந்நிலையிலும் பொறுமை இழக்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:10, 8 செப்டம்பர் 2015 (UTC)

நன்றி செல்வசிவகுருநாதன். பொறுமை காக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 14:12, 8 செப்டம்பர் 2015 (UTC)

கைபேசிப் பார்வை

தொகு

மதனாஹரன் அண்ணா கைபேசிப் பார்வையுடன் தொடர்புபட்ட விழுத்தொடர் பாணித் தாள் நிரலை பயனர்:Shrikarsan/Mobile.css இல் உருவாக்கியுளேன். ஆவியிலும் இது பயன்பாட்டிலுள்ளது. இதனை மீடியாவிக்கி:Mobile.css பக்கத்திற்கு நகர்த்தி உதவுங்கள். கைப்பேசியில் விக்கியை பயன்படுத்துபவர்களுக்கு உதவியாக இருக்கும்:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 04:50, 9 செப்டம்பர் 2015 (UTC)

எனக்குங் கூட. நன்றி சிறீகர்சன். --மதனாகரன் (பேச்சு) 05:35, 9 செப்டம்பர் 2015 (UTC)

பங்களிப்பாளர் அறிமுகம் மறுசுழற்சி -- சண்முகம்

தொகு

வணக்கம், மீண்டும் முதற்பக்கத்தில், பங்களிப்பாளர் அறிமுகம் மறுசுழற்சி முறையில் சண்முகம் குறித்த தகவல்கள் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மறுசுழற்சி செய்யும் போது, அப்பங்களிப்பாளரின் உதவியுடன் அவற்றை இற்றைப்படுத்தலாம் என்றே எண்ணுகிறேன். அவர்கள் விக்கித்திட்டங்களில் செய்தவை குறித்து எழுத நிறைய இருக்கும் என நம்புகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:23, 12 செப்டம்பர் 2015 (UTC)

ஆம், இற்றைப்படுத்துவது நல்லதே. இனிமேல் இது குறித்துக் கவனத்தில் எடுக்கிறேன். வழமையாக இந்தப் பணியைச் செய்துவரும் சோடாபாட்டிலின் கவனத்திற்கும் இச்செய்தியை விடுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 10:27, 12 செப்டம்பர் 2015 (UTC)

மதனாஹரன் அக்நா மலை கட்டுரையின் பகுப்பைக் கவனிக்கவும்.--கி.மூர்த்தி 17:08, 12 செப்டம்பர் 2015 (UTC)

 Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 17:50, 12 செப்டம்பர் 2015 (UTC)

sir please do not delete my page since this is the assignment given in college. i will try to improve it.−முன்நிற்கும் கருத்து Amal priyanka (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

பிறந்தநாள் வாழ்த்து

தொகு
  வணக்கம் மதனாஹரன் அவர்களே, பிறந்தநாள் வாழ்த்துக் குழுமத்தின் சார்பாக பிறந்தநாளை இனிதே கொண்டாட வாழ்த்துகிறோம்!
இந்நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் !
~~~~
 

-- மாதவன்  ( பேச்சு  ) 10:25, 30 செப்டம்பர் 2015 (UTC)

பிறந்த நாள் குழுமம் மறுபடியும் இயங்குவது மகிழ்ச்சியே. நன்றி மாதவா! --மதனாகரன் (பேச்சு) 11:34, 30 செப்டம்பர் 2015 (UTC)
பிந்திய வாழ்த்துக்கள் அண்ணா :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:33, 1 அக்டோபர் 2015 (UTC)Reply

பிறந்தநாள் வாழ்த்து

தொகு

இன்று தங்களது பிறந்தநாள் செய்தியறிந்து, மனமுவந்து வாழ்த்துகிறேன். --அன்புமுனுசாமி 22:10, 30 செப்டம்பர் 2015 (UTC)

நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட வேண்டுகோள்

தொகு

வணக்கம். மீடியாவிக்கி தொடர்புடைய நுட்பத்தில் ஆர்வமும் திறமும் உடைய நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பத் திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகச் செயற்பட்டால் நன்றாக இருக்கும். இணைய வேண்டுகிறேன். விவரங்களை இங்கு காணலாம். நன்றி.--இரவி (பேச்சு) 08:06, 13 அக்டோபர் 2015 (UTC)Reply

வரலாற்று பதிவுகளிட எனக்கு விருப்பம்

தொகு

உ pyaree priyan 16:20, 18 அக்டோபர் 2015 (UTC)

உதவி

தொகு

வணக்கம் மதன். ஆசிய விஞ்ஞானி கட்டுரையில் அறுபட்ட கோப்பு என பகுப்பில் வருகிறதே ? எப்படி சரி செய்வது?--கி.மூர்த்தி 04:56, 24 நவம்பர் 2015 (UTC)

இந்தக் கோப்பை மறுபடியும் அதே உரிமத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவில் பதிவேற்றஞ் செய்ய வேண்டும். பொதுவகத்தில் இல்லாத நியாயப் பயன்பாட்டுப் படிமங்களை மீண்டும் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்றினாலேயே இங்கே தோன்றும். --மதனாகரன் (பேச்சு) 05:01, 24 நவம்பர் 2015 (UTC)Reply

உதவி: அனந்தபுரம்

தொகு

அனந்தபுரம் என்ற பெயரில் சில பக்கங்கள் உள்ளன, எனவே பக்கவழி நெறிப்படுத்தல் பக்கத்தை உருவாக்கலாமா?, எனில் அனந்தபுரம் பக்கத்தின் தொகுத்தல் வரலாறு மாறாது பக்கவழி நெறிப்படுத்துவது எப்படி என்று அறிய உதவுங்கள். நன்றி !
அனந்தபுரம் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி
அனந்தபுரம் ஊராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளுர் வட்டாரத்தில் உள்ளது
அனந்தபுரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்திலுள்ள வருவாய் கிராமம்
அனந்தபுரம் மாவட்டம் (அனந்தபூர் மாவட்டம்) ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள மாவட்டம் - ʋɐɾɯnபேச்சு 14:14, 3 திசம்பர் 2015 (UTC)Reply

 Y ஆயிற்று காண்க: அனந்தபுரம் @Wwarunn:--உழவன் (உரை) 15:35, 3 திசம்பர் 2015 (UTC)Reply

உதவி

தொகு

மதானகரன் அண்ணா Prefecture-level city, Sub-Provincial city ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பை தந்து உதவும். நன்றி-- மாதவன்  ( பேச்சு  ) 06:40, 10 திசம்பர் 2015 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, November 2015

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, November 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from November, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 20:22, 11 திசம்பர் 2015 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Requests for comment/Password policy for users with certain advanced permissions/massmessage

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Requests for comment/Password policy for users with certain advanced permissions/massmessage மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 11:42, 13 திசம்பர் 2015 (UTC)

விக்கிமூலம்

தொகு
நேரம் கிடைக்குமாயின், அத்திட்டத்திலும் கலந்துகொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 15:33, 23 சனவரி 2016 (UTC)Reply

நான் Xuser2016 : மீண்டும் தடை

தொகு

சில மணிநேரங்களுக்கு முன் மீண்டும் தடை செய்யப்பட்டேன், இந்த முறை சில தகவல்களை பெற்றுக்கொண்டேன்.

" இப்பக்கத்தைத் தொகுக்கவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:

உங்கள் பயனர் பெயர் அல்லது IP முகவரி மதனாஹரன் ஆல் தடுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட காரணம்: பக்கங்களிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கல்: Static IP continous vandalism இது பற்றிப் பேசுவதற்கு மதனாஹரன் ஐயோ அல்லது நிர்வாகிகளில் ஒருவரையோ நீங்கள் தொடர்புகொள்ளலாம். பயனர் விருப்பத் தேர்வுகளில்</wiki/Special:Preferences> உங்களுடைய செல்லுபடியாகக்கூடிய மின்னஞ்சல் முகவரி பதியப்பட்டிராவிட்டால் "இப் பயனருக்கு மின்னஞசல்" வசதியை நீங்கள் உபயோகிக்க முடியாது என்பதைக் கவனிக்கவும். உங்கள் ஐபி முகவரி 103.21.166.2. தயவுசெய்து இந்த ஐபி முகவரியை விசாரிப்புகளைச் செய்யும்போது குறிப்பிடவும்.

எல்லா AOL பயனர்களுக்குமான குறிப்பு:

குறிப்பிட்ட ஏஓஎல் (AOL) பயனர் ஒருவருடைய தொடர்ந்த விஷமச் செயல்கள் காரணமாக விக்கிபீடியா அடிக்கடி ஏஓஎல் proxy யை தடுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஒரு proxy வழங்கனை பெருமளவு ஏஓஎல் பயனர்கள் பயன்படுத்தக் கூடும், அதனால் அப்பாவி ஏஓஎல் பயனர்களும் அடிக்கடி தடுக்கப்படுகிறார்கள். இதனாலேற்படும் வசதியீனங்களுக்கு மன்னிப்புக் கோருகிறோம். இது உங்களுக்கு நிகழ்ந்திருந்தால், தயவுசெய்து ஒரு ஏஓஎல் மின்னஞ்சல் முகவரியை உபயோகித்து, நிர்வாகியொருவருக்கு அஞ்சல் செயுங்கள். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐபி முகவரியைக் குறிப்பிட மறவாதீர்கள். "

 
தடை செய்யப்பட்டேன்

--Xuser (பேச்சு) 17:46, 21 திசம்பர் 2015 (UTC)--Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: 2015 Community Wishlist Survey

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் 2015 Community Wishlist Survey மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 13:05, 21 திசம்பர் 2015 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Blog/Drafts/Android app is a Google Play Best App of 2015

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Blog/Drafts/Android app is a Google Play Best App of 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Google has named the Wikipedia Android app a "Best App of 2015," featuring the app in the Google Play Stores of Russia, India, Mexico, Japan, and Indonesia. We have published a blog post about this accomplishment and would appreciate help with translations. Thank you in advance for any help you can provide! Either way, let's celebrate. :-)

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 21:41, 21 திசம்பர் 2015 (UTC)

தங்களின் மின்னஞ்சல் குறித்து..

தொகு

விக்கிமூலத்தில் நீங்கள் குறிப்பிட்ட, mathanaharan.ta என்ற சிமெயில் என்பது சரியா? எனது மின்னஞ்சலுக்கு(tha.uzhavan_அட்_சிமெயில்), உங்களின் மின்மடல் அனுப்பவும்.--உழவன் (உரை) 03:12, 22 திசம்பர் 2015 (UTC)Reply

மின்னல்

தொகு

மின்னல் தொடர்பில் செய்த மொழிபெயர்ப்புக்கள், புதிய பெயர், நுட்ப திருத்தங்கள் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு நன்றி. ஆரம்பித்துவிட்டு, வேலை இருந்ததால் நான் எடுத்துக் கொண்ட நேரத்தில் கச்சிதமாக, உரிய திருத்தங்களை மேற் கொண்டு இருந்தீர்கள். நான் வந்து பார்த்தபோது பலவற்றையும் சிறப்பாகச் செய்து முடித்திருந்தீர்கள். இந்த நேர இடைவெளி இருந்ததால் இன்னுமொரு கருவியை இங்கு கொணர முயற்சி செய்கிறேன். மீண்டும் நன்றி. --AntanO 16:53, 28 திசம்பர் 2015 (UTC)Reply

நம்பிக்கை கூட்டணி

தொகு

You should not delete the page as it was a political party in Malaysia. Check at https://en.wikipedia.org/wiki/Pakatan_Harapan - User:Visnu92

@Visnu92: It is a machine translation. We do not accept machine translations in Tamil Wikipedia as they are poor in quality. --மதனாகரன் (பேச்சு) 02:25, 29 திசம்பர் 2015 (UTC)Reply

நம்பிக்கை கூட்டணி

தொகு

Okey got it. Can u create a page on it as my tamil not so good. Thank You- User:Visnu92

@Visnu92: You can post similar requests on விக்கிப்பீடியா:கோரப்படும் கட்டுரைகள். --மதனாகரன் (பேச்சு) 15:00, 30 திசம்பர் 2015 (UTC)Reply

விக்கிக்கோப்பை

தொகு

இனிய புதுவருட வாழ்த்துக்கள! இங்கு உங்கள் ஒருங்கிணைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன். --AntanO 04:03, 1 சனவரி 2016 (UTC)Reply

@AntanO: தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும். மின்னற் கருவி சார்ந்த பணிகளை நிறைவுசெய்தபின் (பெரும்பாலும் சனவரி 15), ஒருங்கிணைப்பில் பங்குகொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 05:05, 1 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 05:32, 1 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம் --AntanO 05:36, 1 சனவரி 2016 (UTC)Reply
மதனாஹரன் மாலத்தீவுகள் ஒலிம்பிக் குழு கட்டுரையில் தகவல் பெட்டி இணைக்கவும் --கி.மூர்த்தி 17:00, 1 சனவரி 2016 (UTC)

வாழ்த்துக்கள்

தொகு

இந்தச் செய்தியின்படி சிறப்புப் பெறுபேறு பெற்றவர் பயனர்:மதனாஹரன் அல்லவா? உறுதிப்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன். பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! கோபி (பேச்சு) 08:36, 3 சனவரி 2016 (UTC)Reply

  1. யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மதனாகரனுக்கு வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:40, 3 சனவரி 2016 (UTC)Reply
  2. மகிழ்ச்சி; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:41, 3 சனவரி 2016 (UTC)Reply
  3. வாழ்த்துக்கள் மதன் --கி.மூர்த்தி 09:09, 3 சனவரி 2016 (UTC)Reply
  4. வாழ்த்துக்கள் மதனாகரன் அண்ணா !-- மாதவன்  ( பேச்சு  ) 09:20, 3 சனவரி 2016 (UTC)Reply
  5.   விருப்பம் வாழ்த்துகள் மதனாஹரன் அண்ணா தங்களை விக்கிப்பீடியா 15 - யாழ்ப்பாண நிகழ்வில் சந்திக்க மிகவும் ஆவலாக இருந்தேன். தற்போது அந்த ஆவல் இரட்டிப்பாகியுள்ளது:)--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 09:21, 3 சனவரி 2016 (UTC)Reply
  6. வாழ்த்துக்கள்.மதனா!--உழவன் (உரை) 11:43, 3 சனவரி 2016 (UTC)Reply
  7. சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்--பிரஷாந் (பேச்சு) 14:09, 3 சனவரி 2016 (UTC)Reply
  8. வாழ்த்துகள் மதனாகரன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:09, 3 சனவரி 2016 (UTC)Reply
  9. வாழ்த்துக்கள் மதனாஹரன்! -- மகிழறிவன் (பேச்சு) 18:25 3 சனவரி 2016 (UTC)
செய்தியை இங்குத் தெரிவித்து, வாழ்த்திய கோபிக்கு நன்றி. மற்றும், வாழ்த்துகள் கூறிய சிறீதரன், செல்வசிவகுருநாதன், கி. மூர்த்தி, மாதவன், சிறீகர்சன், த. உழவன் முதலானோருக்கும் நன்றி. --மதனாகரன் (பேச்சு) 12:03, 3 சனவரி 2016 (UTC)Reply
  1. கல்வியிலும் சிறந்து விளங்கும் நீங்கள் சிறந்த எடுத்துக்காட்டு. வாழ்த்துக்கள்-நீச்சல்காரன் (பேச்சு) 01:24, 4 சனவரி 2016 (UTC)Reply
  2. வாழ்த்துக்கள் அண்ணா!...--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:54, 4 சனவரி 2016 (UTC)Reply
  3. மகிழ்ச்சியான செய்தி. பரீட்சையில் வெற்றி பெற்றதற்கும், மாவட்டத்தில் முதலிடம் பெற்றதற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், மதனாகரன்! --AntanO 03:59, 4 சனவரி 2016 (UTC)Reply
  4. வாழ்த்துக்கள் மதனாகரன்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 04:10, 4 சனவரி 2016 (UTC)Reply
  5. வாழ்த்துகள் மதனாஹரன்! --சிவகோசரன் (பேச்சு) 04:38, 4 சனவரி 2016 (UTC)Reply
  6. வாழ்த்துக்கள் மதனாகரன். வாழ்நாள் முழுதும் இன்னும் பல சிறப்புகளை எட்டிட வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 05:20, 4 சனவரி 2016 (UTC)Reply
  7. வாழ்த்துக்கள் மதனாகரன். விக்கி மாணவர் சமுகத்திற்கு முன்மாதிரி ஆக...............--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:10, 4 சனவரி 2016 (UTC)Reply
  8. வாழ்த்துகள் மதனாகரன்!--நந்தகுமார் (பேச்சு) 08:08, 4 சனவரி 2016 (UTC)Reply
  9. மதனாகரன், திட்டமிட்டுச் செயற்பட்டால் விக்கிப்பணி சாதனைக்குத் தடையாக இருக்காது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளீர்கள். உங்கள் சாதனைக்கு எனது பாராட்டுக்கள். மேலும் பல உயரங்களைத் தொட எனது வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 16:04, 4 சனவரி 2016 (UTC)Reply
வாழ்த்துகள் கூறிய பிரசாந்து, பார்வதிசிறீ, மகிழறிவன், நீச்சல்காரன், சிறீகீரன், ஆண்டன், சத்திகுமார் இலெட்சுமணன், சிவகோசரன், இரவி, சஞ்சீவி சிவகுமார், நந்தகுமார், மயூரநாதன் முதலானோருக்கும் நன்றி. --மதனாகரன் (பேச்சு) 12:06, 5 சனவரி 2016 (UTC)Reply
  1. மதனாகரனின் சாதனைக்கு வாழ்த்துக்கள் - சு.குணேஸ்வரன்
  2. மதனாகரன்! உங்கள் சாதனைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 07:56, 6 சனவரி 2016 (UTC)Reply
  3. மதானகரன் வாழ்த்துக்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் சாதியுங்கள். அப்பொதுதான் விக்கிப்பீடியா பற்றி மேலும் நல் அபிப்பிராயம் ஏற்படும். --உமாபதி \பேச்சு 15:27, 8 சனவரி 2016 (UTC)Reply
  4. மதனாகரன் வாழ்த்துகள் !! தொடர்ந்த வெற்றிக்கும் சாதனைகளுக்கும் இது அடித்தளமாக அமையட்டும் ! 3A சித்தி பெறுதலின் பொருளும் பெறுபேறு என்பதன் பொருளும் எங்களுக்கு முழுமையாக கிட்டவில்லை :) இலங்கை கல்வி அமைப்பைக் குறித்த விக்கிக் கட்டுரையை யாராவது எழுதலாம்!! --மணியன் (பேச்சு) 03:25, 9 சனவரி 2016 (UTC)Reply
கட்டாயம் எழுதுகின்றேன். நன்றி சு. குணேசுவரன், கலை, உமாபதி, மணியன். --மதனாகரன் (பேச்சு) 03:47, 9 சனவரி 2016 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Template:StrategyButton2016/editintro/Communities

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Template:StrategyButton2016/editintro/Communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம் இப்பக்கத்தை மொழிபெயர்க்க கடைசி நாள் 2016-01-18

- This is the part of a series of community consultation pages. The WMF Community Advocacy team has put together a list at https://meta.wikimedia.org/wiki/2016_Strategy/Translations. We're hoping to launch the consultation on January 18th. Realizing getting all translations in place before the launch of the consultation may not be possible (and that people will likely help with translations after the launch), I'd be really grateful for any assistance especially that you can give in translating the templates at that Meta page link, like this one. It'll probably be harder for casual translators to help out with those!

- Text should be stable at this point. I've just made what I hope will be the last modification to those pages!

- Thank you for all you do, and I hope you will not only assist in translation (if you are able) but also take part in the consultation. Your input will be very welcome.

- Questions or concerns? Please let me know at mdennis@wikimedia.org. Thanks! Maggie


உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 02:06, 12 சனவரி 2016 (UTC)

விக்கியிடை இறக்குமதி

தொகு

விக்கியிடை இறக்குமதியின்போது முன்னைய தொகுப்புக்களை இல்லாதபோகும் சந்தர்ப்பங்களில் அல்லது மேலாக எழுதப்படும்போது (overwrite), அவற்றை ஒவ்வொன்றாகத் தொகுக்காது முன்னைய நிலைக்கு மீளமைத்துவிடுங்கள். இதனால் நேர வீண்விரயத்தை தவிக்கலாம். --AntanO 17:21, 12 சனவரி 2016 (UTC)Reply

@AntanO: எந்தத் தொகுப்பைச் சொல்கின்றீர்கள் எனத் தெளிவுபடுத்தமுடியுமா? --மதனாகரன் (பேச்சு) 08:27, 13 சனவரி 2016 (UTC)Reply
பதிலளிக்கத் தாமதமாகி விட்டேன் :( இந்த மாதிரித் தொகுப்புக்கள் பற்றிக் குறிப்பிட்டேன். மேலும், பல வார்ப்புருக்கள் தமிழ்ப் பெயர்களில் உள்ளன. அவற்றை ஆங்கிலத்திற்கு நகர்த்திவிடுங்கள். பராமரித்தல் இலகுவாக இருக்கும். --AntanO 15:45, 19 சனவரி 2016 (UTC)Reply

விக்கிமூலம் வருக!

தொகு

https://ta.wikisource.org/s/4l8 என்பதில் உங்கள் எண்ணங்களை இடுக.--உழவன் (உரை) 17:00, 17 சனவரி 2016 (UTC)Reply

மொழி பெயர்ப்பாளர் பதக்கம்

தொகு
  மொழி பெயர்ப்பாளர் பதக்கம்
 
மின்னல் கருவிக்குத் தேவையான மொழிபெயர்ப்புக்களைத் தனி ஒருவராக, முனைப்புடன் செய்வதைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கிறேன். (மின்னலும் யாருக்காகவும் காத்திருக்காது.) உங்களின் மொழி பெயர்ப்பே மின்னல் கருவிக்கு நிறைவைத் தருகிறது! --AntanO 16:28, 19 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 16:33, 19 சனவரி 2016 (UTC)Reply
நன்றி. --மதனாகரன் (பேச்சு) 16:33, 19 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்---செல்வா (பேச்சு) 17:04, 19 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 18:33, 19 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 02:21, 20 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம் --மணியன் (பேச்சு) 04:08, 20 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:28, 20 சனவரி 2016 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


சந்தேகம்

தொகு

township என்ற சொல்லிற்கு நகரியம் என்ற சொல் பொருந்துமா?-- மாதவன்  ( பேச்சு ) 14:51, 20 சனவரி 2016 (UTC).Reply

நீண்ட காலமாக township என்பதற்கு ஈடாக நகரியம் (நகர் + இயம்) என்ற தமிழ்ச்சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஊடகங்களில், அகரமுதலிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகின்றது. அதனையே பயன்படுத்தலாம். --மதனாகரன் (பேச்சு) 15:05, 20 சனவரி 2016 (UTC)Reply
  விருப்பம்-- மாதவன்  ( பேச்சு ) 15:06, 20 சனவரி 2016 (UTC)Reply

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Wikimedia Highlights, December 2015

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Wikimedia Highlights, December 2015 மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from December, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 22:52, 25 சனவரி 2016 (UTC)

முதற்பக்கம்

தொகு

@Surya Prakash.S.A.:}முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா வை இற்றை செய்க.-- மாதவன்  ( பேச்சு ) 05:34, 27 சனவரி 2016 (UTC)Reply

 Y ஆயிற்று --மதனாகரன் (பேச்சு) 04:26, 28 சனவரி 2016 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


வார்ப்புரு

தொகு

வணக்கம், வார்ப்புரு:No, இணைத்தால் எனது மணல் தொட்டியிலுள்ள அட்டவணை தாறுமாறாகத் தெரிகிறதே மதனாகரன், அதனைச் சரி செய்து தாருங்கள். அதேமாதிரி வார்ப்புரு:Yes இதனையும் தமிழுக்கு மாற்றி உதவ வேண்டும். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:17, 1 பெப்ரவரி 2016 (UTC)

 Y ஆயிற்று--AntanO 05:40, 1 பெப்ரவரி 2016 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/Notice to communities

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Admin activity review/Notice to communities மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


* The 2015 admin activity review process is starting. We need your cooperation to translate missing message, but also to proofread and correct already existing messages. Understanding of messages that we're going to be sent in the next weeks are very important. Thank you very much for your help.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 15:58, 8 பெப்ரவரி 2016 (UTC)

மொழிபெயர்ப்பு அறிவிப்பு: Admin activity review/Notice to inactive right holders

தொகு
வணக்கம் மதனாஹரன்,

Meta இல் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்துள்ளதால், நீங்கள் இந்த அறிவிக்கையைப் பெறுகிறீர்கள்.

பக்கம் Admin activity review/Notice to inactive right holders மொழிபெயர்க்க உள்ளது. நீங்கள் அதனை இங்கு மொழிபெயர்க்கலாம்: தமிழ்.

இந்த பக்கத்தின் முக்கியத்துவம்: அதிகம்


The 2015 admin activity review process is starting. We need your cooperation to translate missing message, but also to proofread and correct already existing messages. Understanding of messages that are going to be sent in the next weeks are very important. Thank you very much for your help.

உங்கள் உதவி பெரிதும் பாராட்டப்படுகிறது. உங்களைப் போன்ற மொழிபெயர்ப்பாளர்களே Meta தளம் ஒரு உண்மையான பன்மொழி சமுதாயமாக செயல்பட உதவுகின்றனர்.

நன்றி!

Meta மொழிபெயர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள்‎, 16:00, 8 பெப்ரவரி 2016 (UTC)

பொதுவகத்தில் ஒரு நிரல் மாற்றம் தேவை.

தொகு

இந்த இடத்திலுள்ள கூட்டு எண்ணிக்கை சரியாக வரவில்லை. வழு களைக!--உழவன் (உரை) 05:16, 16 பெப்ரவரி 2016 (UTC)

இடைமாற்றை நீக்கியதும் (purge) சரியாகியுள்ளது என நினைக்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 05:22, 16 பெப்ரவரி 2016 (UTC)

உதவி...

தொகு

வணக்கம்! இங்கு காணப்படும் அட்டவணையில் Sorting செய்வதற்கு எளிய முறையில் வடிவமைக்க இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:29, 17 பெப்ரவரி 2016 (UTC)

உடனடியான உதவிக்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:27, 17 பெப்ரவரி 2016 (UTC)

உங்கள் பார்வைக்கு

தொகு

வணக்கம். en:Complement (set theory), en:Exponentiation -இந்த இரு ஆங்கில விக்கிக் கட்டுரைகளிலும் ஏனைய மொழிகள் இணைப்புக் காணப்படவில்லை.--Booradleyp1 (பேச்சு) 16:02, 17 பெப்ரவரி 2016 (UTC)

இது தற்காலிகமானதே. சிலவேளைகளில் இவ்வாறு நிகழ்வதுண்டு. கட்டுரையின் இடைமாற்றை நீக்கிவிட்டால் (purge) சரியாகிவிடும். --மதனாகரன் (பேச்சு) 16:29, 17 பெப்ரவரி 2016 (UTC)

பதக்கம்

தொகு
  நேர்மைக்கான பதக்கம்
மிகவும் நேர்மையான விக்கிப்பீடியராகத் திகழ்வதற்குப் பாராட்டுக்கள். இப்பதக்கம் பெறுவது இங்கு நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அதை அளிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன்! --AntanO 05:24, 9 மார்ச் 2016 (UTC)
நீங்கள் உருவாக்கிய ஜீவநதி (சிற்றிதழ்) என்ற கட்டுரையை நீங்களே, ஆதாய முரணுக்காக நீக்கப் பரிந்துரைத்தீர்கள். நீக்கிவிட்டு என்னுடைய மறு கணக்கு மூலம் உருவாக்கியுள்ளேன். உங்கள் இந்த விக்கி நற்பண்பு ஒரு சிறந்த உதாரணம். மற்றவர்களுக்கு முன்மாதிரி! பாராட்டுக்கள்! --AntanO 05:13, 9 மார்ச் 2016 (UTC)
நன்றி. விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கிய காலம் அது. விக்கிக்கொள்கைகள் பற்றிய புரிதல் அப்போது குறைவு. கட்டுரையைச் சீரமைத்ததற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 06:50, 9 மார்ச் 2016 (UTC)
வாழ்த்துக்கள் அண்ணா!-- மாதவன்  ( பேச்சு ) 09:52, 9 மார்ச் 2016 (UTC)

கவனிக்கவும்

தொகு

விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதியைக் கவனிக்கவும் பழங்காலக் கொரியப் பாடல்களில் வாய்மொழி மரபும் சடங்கு நிகழ்த்தலும் அடைப்படைக் குறுகளாக விளங்கின.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

 Y ஆயிற்று-- மாதவன்  ( பேச்சு ) 16:24, 12 மே 2016 (UTC)Reply

உதவி-விக்கிமூலம்-உள்ளடக்க அட்டவணைக் கட்டகத்தில் ஆலோசனை

தொகு

விக்கிமூலத்தில் உள்ளடக்க அட்டவணைக் கட்டகத்தில் s:மீடியாவிக்கி:Proofreadpage index template இறுதியாக ஒரு இழையை அமைத்து உதவுக. அதாவது ஒரு மூல மின்னூலினை பதிவிறக்க தேவையான இணைப்பே அது.
(எ. கா.) (மின்னூலைப் பதிவிறக்குக) ([{{filepath:{{{1| குறிஞ்சி மலர்.pdf}}}}} (மின்னூலைப் பதிவிறக்குக)]) இதனால் மின்னூலை மீ்ண்டும் எழுத்துணரி செய்யக்கூடிய நிலை வந்தாலும், பொதுவகம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படாது. மெய்ப்புப் பார்க்கும் பணியை முடிக்க, த. இ. க. இணைய இணைப்பற்ற நிலையில் செய்ய, பலரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு விக்கிநுட்பம் தெரியாது என்பதால், இந்த வசதி முக்கியமானது ஆகும். எனவே, Year of publication என்பதற்குக் கீழே இதனை அமைக்கக் கோருகிறேன். குறிப்பு தருக. இட்டு விடுகிறேன். தரப்போகும் மாற்றங்களை காண ஆவலுடன்..உழவன் (உரை) 01:57, 14 மே 2016 (UTC)Reply

பல மணிநேர கற்றலுக்குப் பின் தீர்வு கண்டேன். மீண்டும் மற்றுமொரு இலக்கில் சந்திப்போம். வணக்கம்-- உழவன் (உரை) 14:29, 25 மே 2016 (UTC)Reply

ஐயம்-சந்தி இலக்கணம் ஆலோசனை

தொகு

பகுப்பு:வடிவமைப்புப் பற்றிய உரையாடல்கள் என்பது சரியா? தவறெனில், இலக்கண விதி கூறுக.-- உழவன் (உரை) 08:05, 10 சூன் 2016 (UTC)Reply

வடிவமைப்புப் பற்றிய, வடிவமைப்பு பற்றிய - இரண்டுஞ் சரி. வன்றொடர்க் குற்றியலுகரந் தவிர்ந்த குற்றியலுகரம் வந்தால், இவ்வாறான இடங்களில் ஒற்றுமிகக்கூடாது (எ-டு: நாடு பற்றிய). வன்றொடர்க் குற்றியலுகரம் வந்தால் ஒற்றுமிகுந்தும் வரலாம். காண்க: 4
கசடற கற்றுத்தந்தமைக்கு மிக்க நன்றி. மேற்கூறிய எடுத்துக்காட்டில் சிறு இணைப்பு மாற்றம் செய்துள்ளேன். மீண்டும் சந்திப்போம். வணக்கம்.---- உழவன் (உரை) 18:32, 11 சூன் 2016 (UTC)Reply

About reverting my edits in மக்குவா

தொகு

I had fixed the typos to names of villages in மக்குவா mandal, விஜயநகரம் district, ஆன்திர ப்ரடெஷ். But you have reverted all of those without stating any reasonable reason. I belong to Makkuva village and know how to pronounce & spell the names of villages in the mandal unlike any other Tamil speaker who belong to Tamilnadu. So I am reverting your edit again. Take it to my talk page if you have any objection.

Sri Harsha Bhogi (பேச்சு) 04:42, 7 சூலை 2016 (UTC)Reply

பஞ்சாப் மாதம்

தொகு

2016 இந்திய விக்கி மாநாட்டை ஒட்டி நடைபெறும் பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பில் பங்கேற்க வேண்டுகிறேன். இதன் மூலம் பஞ்சாப் பற்றி நாம் அறிந்து கொள்வதுடன் இந்நிகழ்வை ஒருங்கிணைக்க உழைக்கும் பஞ்சாபியர்களுக்கு நாம் அளிக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கும். கூடுதல் பைட்டுகள் அல்லது சொற்களைச் சேர்க்கும் சமூகத்துக்குக் கேடயமும் உண்டு. எனவே, இன்றே வாரீர்! கட்டுரைகள் தாரீர் ! :)--இரவி (பேச்சு) 20:43, 15 சூலை 2016 (UTC)Reply

விக்கிக் கோப்பைப் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம். விக்கிக்கோப்பை வெற்றியாளர்களுக்குச் சிறப்புப் பதக்கங்கள் வழங்கி ஊக்கப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான பதக்கங்களை அன்டன் தந்து உதவுவார்.--இரவி (பேச்சு) 10:36, 21 சூலை 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:41, 26 சூலை 2016 (UTC)Reply

Share your experience and feedback as a Wikimedian in this global survey

தொகு
  1. This survey is primarily meant to get feedback on the Wikimedia Foundation's current work, not long-term strategy.
  2. Legal stuff: No purchase necessary. Must be the age of majority to participate. Sponsored by the Wikimedia Foundation located at 149 New Montgomery, San Francisco, CA, USA, 94105. Ends January 31, 2017. Void where prohibited. Click here for contest rules.

பதக்கம்

தொகு
  சிறந்த உழைப்பாளர் பதக்கம்
திரு. கலாமணி மதனாகரன் (பயனர் மதனாஹரன்) அவர்களுக்கு, உங்களின் இள வயதிலேயே நீங்கள் விக்கிபீடியாவிற்கு செய்யும் தமிழ் நிர்வாகிப் பணி உதவி மற்றும் பிற உதவிகள் (மொத்தம் 16,100+ தொகுப்புகள், தமிழில் 14,200+ தொகுப்புகள், தமிழில் 280+ புதிய பக்கங்கள் உருவாக்கம்) அனைத்துக்கும் மிகவும் நன்றி. உங்களின் சேவைகள் விக்கிப்பீடியாவிற்கு சிறப்பைச் சேர்க்கின்றன. உங்களின் விக்கிபீடியா பணிகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள். அன்புடன், பயனர் 2know4power (பேச்சு) 00:11, 13 பெப்ரவரி 2017 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

தொகு

(Sorry for writing in English)

மேற்கோள்கள்

தொகு

ஆவலுடன்

தொகு

தங்களின் பங்களிப்புக்காக விக்கியில் ஆவலுடன் காத்திருக்கின்றேன் அண்ணா!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:34, 13 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)

Wikimedia-LK

தொகு
 

Hello!

As a member of the Wikimedia Community User Group Sri Lanka, you are invited to join the official Wikimedia-LK mailing list.

The list may be used for both official announcements, as well as community discussions by the editor community in Sri Lanka.

Thank you, Rehman (பேச்சு) 10:52, 30 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 14:47, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள மதனாகரன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:30, 18 மார்ச் 2018 (UTC)

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

படிமம் இருந்தால் மட்டும் காட்டும்படியான மாற்றம்

தொகு

விக்கிமூலத்தில் செய்த இந்த மாற்றத்தினைப்போல, தமிழ் விக்சனரியின் வார்ப்புரு ஒன்றில் செய்து பார்த்தேன். ஆனால், உரிய பலனை அடைய இயலவில்லை. நீங்கள் செய்து அளித்தால் பல சொற்களின் இணைப்பு முறிவு நீங்கும்.சோதனைக்கு இந்த இரு சொற்களையும் எடுத்துக்கொள்க. wikt:零 அசைப்படம் இருக்கும். wikt:آخر என்பதில் அசைப்படம் இல்லை என்பதால், வலது புறம் 80px என்பது தெரிகிறது. அது தெரிந்தால், wikt:பகுப்பு:அறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள் என்ற மறைமுகப்பகுப்பில் அச்சொல் தோன்றும். அவ்வாறு தோன்றாமல் இருக்கவே இதனை வினவுகிறேன்.--உழவன் (உரை) 02:00, 15 அக்டோபர் 2018 (UTC)Reply

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

Your advanced permissions on ta.wikipedia

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:05, 7 பெப்ரவரி 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

தீபச்செல்வன்

தொகு

சகோதரர், எனது விக்கி பக்கத்தை மேம்படுத்தி தர இயலுமா? Theepachelvan (பேச்சு) 08:40, 6 மார்ச் 2023 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:மதனாஹரன்&oldid=3671277" இலிருந்து மீள்விக்கப்பட்டது