சனவரி 20
நாள்
(20 ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 20 (January 20) கிரிகோரியன் ஆண்டின் 20 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1265 – பிரபுக்கள் மற்றும் முக்கிய நகரங்களின் பிரதிநிதிகள் அடங்கிய இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.
- 1320 – விளாதிசுலாவ் லொக்கீத்தெக் போலந்து மன்னராக முடிசூடினார்.
- 1523 – இரண்டாம் கிறித்தியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1567 – போர்த்துக்கீசப் படைகள் பிரெஞ்சுப் படைகளை இரியோ டி செனீரோவில் இருந்து விரட்டின.
- 1649 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1783 – 1783 பாரிசு உடன்படிக்கை: பெரிய பிரித்தானியா, பிரான்சுடன் புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
- 1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தது. குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஆர்தர் பிலிப் ஜாக்சன் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
- 1795 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
- 1816 – இலங்கையில் மோர்பசு வாந்திபேதி நோய் முதல் தடவையாக கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்டது.[1]
- 1839 – யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.
- 1841 – ஆங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.
- 1887 – பேர்ள் துறைமுகத்தை கடற்படைத் தளமாகப் பயன்படுத்த அமெரிக்க செனட் அனுமதியளித்தது.
- 1906 – வாரன்ஸ் சர்க்கஸ் யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது வட்டரங்கு ஆகும்.[2]
- 1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[2]
- 1921 – பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் கே5 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 56 பேரும் உயிரிழந்தனர்.
- 1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
- 1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் எட்டாம் எட்வர்டு மன்னராக முடிசூடினார்.
- 1941 – செருமனிய அதிகாரி ஒருவர் உருமேனியா, புக்கரெஸ்ட் நகரில் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு இடம்பெற்ற கலவரத்தில் 125 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச வான்படையினர் பெர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனி கிழக்கு புருசியாவில் இருந்து 1.8 மில்லியன் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது.
- 1945 – அங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
- 1972 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் ஆகியவற்றில் தோல்வியடைந்ததை அடுத்து பாக்கித்தான் அணுவாயுதத் திட்டத்தை ஆரம்பித்தது.
- 1981 – ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.
- 1986 – அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் நாள் முதல் தடவையாக விடுமுரையாக அறிவிக்கப்பட்டது.
- 1990 – அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.
- 1991 – சூடான் அரசு நாடெங்கும் இசுலாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்து, நாட்டின் வடக்குப் பகுதி முசுலிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறித்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.
- 1992 – பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்திராஸ்பூர்க் அருகே வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 96 பேரில் 85 பேர் உயிரிழந்தனர்.
- 1995 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்து சேர்ந்தார்.[3]
- 2001 – பிலிப்பீன்சில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்திராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.
- 2009 – பராக் ஒபாமா அமெரிக்காவின் முதலாவது ஆப்பிரிக்க அமெரிக்க அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.
பிறப்புகள்
- 1488 – செபஸ்தியான் மூன்ஸ்டர், செருமனிய நிலப்பட வரைஞர், கிறித்தவ எபிரேய அறிஞர் (இ. 1552)
- 1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
- 1775 – ஆந்த்ரே-மாரி ஆம்பியர், பிரான்சிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1836)
- 1859 – சவரிராயர், தமிழறிஞர், மொழி ஆய்வாளர் (இ. 1923)
- 1873 – யொகான்னசு வி. யென்சென், நோபல் பரிசு பெற்ற தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1950)
- 1911 – செமியோன் யாகோவிச் பிரவுதே, உக்ரைனிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2003)
- 1913 – சி. மூ. இராசமாணிக்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1974)
- 1920 – பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலிய இயக்குநர் (இ. 1993)
- 1921 – பிரான்செஸ் லிவைன், அமெரிக்க ஊடகவியலாளர் (இ. 2008)
- 1930 – எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்
- 1940 – கிருஷ்ணம் ராஜூ, இந்திய நடிகர், அரசியல்வாதி
- 1946 – டேவிட் லிஞ்ச், அமெரிக்க இயக்குநர்
- 1956 – பில் மேகர், அமெரிக்க நடிகர்
- 1964 – பரீத் சகாரியா, இந்திய-அமெரிக்க ஊடகவியலாளர்
- 1981 – டேனியல் கிட்மோரே, கனடிய நடிகர்
- 1987 – இவான் பீட்டர்ஸ், அமெரிக்க நடிகர்
- 1994 – அக்சார் பட்டேல், இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர்
இறப்புகள்
- 250 – ஃபேபியன் (திருத்தந்தை) (பி. 200)
- 1838 – ஒசியோலா, அமெரிக்கப் பழங்குடிப் போர்த் தலைவன் (பி. 1804)
- 1900 – ஜான் ரஸ்கின், ஆங்கிலேய ஓவியர் (பி. 1819)
- 1907 – அகனேசு மேரி கிளார்க், அயர்லாந்து வானியலாளர் (பி. 1842)
- 1921 – மேரி வாட்சன் விட்னி, அமெரிக்க வானியலாளர் (பி. 1847)
- 1936 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் (பி. 1865)
- 1971 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர், அண்ணாவி (பி. 1902)
- 1980 – ஸ்ரீசங்கர், இலங்கைத் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- 1983 – கரிஞ்சா, பிரேசில் கால்பந்து வீரர் (பி. 1933)
- 1987 – பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)
- 1988 – கான் அப்துல் கப்பார் கான், பாக்கித்தானிய அரசியல்வாதி, செயற்பாட்டாளர் (பி. 1890)
- 1993 – ஆட்ரி ஹெப்பர்ன், பிரித்தானிய நடிகை (பி. 1929)
- 2019 – மித்திர வெத்தமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் (பி. 1951)
சிறப்பு நாள்
- வீரர்கள் நாள் (கேப் வர்டி)
- மாவீரர் நாள் (அசர்பைஜான்)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5
- ↑ "Principal Ceylon Events, 1995". Ferguson's Ceylon Directory, Colombo. 1997-99.