பயனர் பேச்சு:Parvathisri/தொகுப்பு 4
பதக்கம்
தொகுசெயல்நயம் மிக்கவர் பதக்கம் | ||
பல ஆண்டுகளாக தேங்கிக் கிடந்த, நூற்றுக்கும் கூடுதலான ஒன்றிணைக்க வேண்டிய கட்டுரைகளைச் சீராக்கி, சிறப்பான நிருவாகப் பணியாற்றியமையைக் கண்டு மகிழ்ந்து இந்தப் பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 16:31, 17 ஏப்ரல் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
பதக்கத்திற்கு மிக்க நன்றி இரவி. கடந்த வாரங்களாகவே இப்பணியினையே முதன்மையாகக் கொண்டேன் :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:35, 17 ஏப்ரல் 2013 (UTC)
- கடந்த சில நாட்களாகவே நானும் கவனித்து வந்தேன். ஏனெனில், இன்றைய புள்ளிவிவரம் பகுதியில் நீக்கல் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. மிகவும் பொறுமை தேவைப்படும் பணி. கவனித்துச் செய்ததற்கு மீண்டும் ஒரு முறை நன்றி :)--இரவி (பேச்சு) 16:40, 17 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--அன்புடன் கி. கார்த்திகேயன் (பேச்சு) 12:58, 18 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--Kanags \உரையாடுக 21:23, 18 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம் நேரம் ஒதுக்கிப் பணியாற்றும் பார்வதிக்கு எனது வாழ்த்துக்களும்.--சஞ்சீவி சிவகுமார் ::(பேச்சு) 23:39, 18 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--மணியன் (பேச்சு) 03:52, 19 ஏப்ரல் 2013 (UTC)
- விருப்பம்--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு)--ksmuthukrishnan 15:39, 20 ஏப்ரல் 2013 (UTC)
- கார்த்திகேயன், கனக்ஸ், சஞ்சீவி சிவக்குமார், மணியன் அணைவருக்கும் எனது நன்றிகள்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:50, 19 ஏப்ரல் 2013 (UTC)
ஒரு உதவி...
தொகுவணக்கம், கோடை விடுமுறை நாட்கள் எப்படி உள்ளன?
ஒரு உதவி... அனைத்துலக உருளக்கிழங்கு ஆண்டு என்பது வழிமாற்று இல்லாமல் 'அனைத்துலக உருளைக்கிழங்கு ஆண்டு' என நகர்த்தப்படல் வேண்டும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:39, 3 மே 2013 (UTC)
ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 04:36, 4 மே 2013 (UTC)
மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:04, 4 மே 2013 (UTC)
விக்கித்திட்டம் இந்து சமயம்
தொகுவணக்கம். தாங்கள் தொடர்ந்து எனது விக்கிவாழ்க்கைக்கு உதவி வருகின்றீர்கள். தற்போது இந்து சமய வலைவாசல் பகுதிக்கு தாங்கள் உதவுவது குறித்து மகிழ்ச்சி. தங்களைப் போல இந்து சமயத்தில் ஆர்வமும், அறிவும் கொண்ட பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சிதறுண்டு கிடக்கின்றார்கள். அவர்களை ஒழுங்குபடுத்தவும், வழிகாட்டவும், இந்து சமயம் தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தவும் விக்கித்திட்டம் இந்து சமயம் உதவும் என நினைக்கிறேன். ஆனால் அதனை அமைத்து வழிகாட்ட சிறந்த பயனர் தேவைப்படுகிறார். தங்களுடைய நிர்வாகப்பணிகளுக்கிடையே நேரமிருப்பின் விக்கித்திட்டத்தினை உருவாக்கி வழிகாட்டுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 07:23, 4 மே 2013 (UTC)
வலைவாசல்:இலக்கியம்...
தொகுவணக்கம்!
தங்களின் வலைவாசல்:இலக்கியம் பார்த்தேன். எனது கருத்துக்கள்:
- இந்த வலைவாசல், பொதுவாக இலக்கியத்தைப் பற்றிச் சொல்வதா? அல்லது தமிழிலக்கியம் பற்றியதா? ஏனெனில் தமிழிலக்கியம் மட்டுமே தூக்கலாகத் தெரிகிறது.
- பொதுவான இலக்கிய வலைவாசல் என்றால்... தமிழிலக்கியம், இந்திய இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் என மனதினுள் மூன்றாகப் பிரித்து இப்பக்கத்தின் வடிவமைப்பினைத் தீர்மானிக்கலாம்.
- பகுப்புகள் குறித்த பட்டியலிடல் இன்னமும் நல்ல முறையில் வடிவமைக்கப்படல் வேண்டும்.
- நீங்களும் தமிழ்க்குரிசிலும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், இந்த வலைவாசல் மேலும் பொலிவு பெறும் என்பது திண்ணம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:43, 5 மே 2013 (UTC)
வணக்கம்! என்னுடைய முதல் ஐயத்திற்கு நீங்கள் பதிலளித்தால், என்னாலும் இந்த வலைவாசலின் அடிப்படை வடிவமைப்பிற்கு உதவிட முடியும் (துணைப் பக்கங்களை உருவாக்கி உதவுவேன்!). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:00, 6 மே 2013 (UTC)
வணக்கம். தயவுசெய்து இலக்கியமா அல்லது தமிழிலக்கியமா என்பதனை உறுதியாகச் சொல்லுங்கள். காரணங்கள்:
- இலக்கியம் என்றால், அனைத்து கட்டுரைத் தலைப்புகளையும் நீங்களே தெரிவு செய்து எனக்கு பட்டியல் தரவேண்டும். ஏனெனில், எனக்கு திருவள்ளுவர், பாரதியார், பாலகுமாரன் இவர்களைப் பற்றியும் இவர்களின் படைப்புகள் பற்றியும் (தமிழிலக்கியம்) ஓரளவு தெரியும். ஆனால், இந்திய இலக்கியத்தைப் பொறுத்த அளவில்... இராமாயணம், மகாபாரதம் மற்றும் கொஞ்சம் தாகூர் பற்றி மட்டுமே தெரியும். உலக இலக்கியம்... சுத்தம்! சேக்சுபியரின் படைப்புகளை ஆங்கிலம் – இரண்டாம் தாளுக்காக படித்ததோடு சரி... வேறு ஒன்றும் படித்ததில்லை; தெரியவும் செய்யாது!
- இந்திய, உலக இலக்கியங்கள் குறித்து நமது தமிழ் விக்கிப்பீடியாவில் போதிய கட்டுரைகள் உள்ளனவா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை; ஆனால், தமிழிலக்கியம் குறித்து ஏராளமான கட்டுரைகள் உள்ளன; இவற்றில் பல சிறப்புக் கட்டுரை தரத்தில் உள்ளவை என்றும் நம்புகிறேன். உங்களுக்குத்தான் நன்கு தெரியும்.
(பின் குறிப்பு: சிறப்புக் கட்டுரைகள் குறைந்தது 12, அதேபோல இலக்கியவாதிகள் குறித்த கட்டுரைகள் குறைந்தது 12... நமக்கு வேண்டும்; அப்போதுதான் காட்சிப்படுத்துதல் நன்றாக இருக்கும்)
ஆக, நீங்கள் உங்களின் இறுதி முடிவினைச் சொல்லுங்கள்; அதனடிப்படையில் முதற் பக்க வடிவமைப்பினை திட்டமிடுவேன். இலக்கிய வலைவாசலுக்கு நீங்களே சொந்தக்காரர்! உங்களிடம் பக்கத்தின் ‘முன் வரைவினை’ காட்டியபிறகே பணிகளைத் துவக்குவேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:08, 6 மே 2013 (UTC)
பதக்கம்
தொகுசிறப்புப் பதக்கம் | ||
சில நாட்களாக ஆங்கில விக்கி கட்டுரைகளுக்கு ஏற்ற தமிழ் பெயர்கள் அறியாமல் திகைத்து நின்றேன். தாங்கள் முன்வந்து இந்து சமய தலைப்புகள் மற்றும் விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ஆகியவற்றில் ஏற்ற தமிழ்ப்பெயர்களை இணைத்து தந்தமைக்கு நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 01:10, 8 மே 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வலைவாசல்:தமிழ் இலக்கியம்
தொகுவணக்கம்!
1. கீழ்காணும் பக்கங்களை வழிமாற்று இல்லாமல் நகர்த்தி உதவவும்:
- வலைவாசல்:இலக்கியம் என்பதனை வலைவாசல்:தமிழ் இலக்கியம் என்பதாக ஆயிற்று
- வலைவாசல்:இலக்கியம்/அறிமுகம் என்பதனை வலைவாசல்:தமிழ் இலக்கியம்/அறிமுகம் என்பதாக ஆயிற்று
2. பயனர் பேச்சு:Selvasivagurunathan m/தமிழிலக்கியம்/செயல் திட்ட வேலை எனும் பயனர் பக்கத்தினை உருவாக்கியுள்ளேன். நீங்கள் ஒவ்வொரு முறை விக்கியில் வலம் வரும்போது இப்பக்கத்தினை பார்வையிடவும். நீங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்தான எனது வேண்டுகோள்கள் இங்கு இருக்கும். தமிழ் இலக்கிய வலைவாசல் குறித்த நமது உரையாடலையும் இனிமேல் இங்கே தொடரலாம். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 8 மே 2013 (UTC)
- நல்லது; நீங்கள் திரும்பி வருவதற்குள் தேவைப்படும் துணைப் பக்கங்களை தயார் செய்து விடுகிறேன். பிறகு உங்களின் பணியினை நீங்கள் தொடரலாம். (குறிப்பு: திட்டப் பணிக்கான பேச்சுப் பக்கத்தில் ஒவ்வொரு முறையும் பெயர் சொல்லி அழைப்பதற்கு மன்னிக்கவும். 'உங்களிடம் பேசுகிறேன்' என்பதனை மற்ற பயனர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே காரணம்.) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:12, 10 மே 2013 (UTC)
தங்களின் பணியினை நீங்கள் எளிதாக செய்யவேண்டும் என்பதனைக் கருத்தில்கொண்டு பணி 3 எனும் தலைப்பின்கீழ் விளக்கியுள்ளேன். நீங்கள் பரிந்துரைத்த பட்டியலில் மாற்றம் செய்துள்ளேன் - காரணமும் அங்கு எழுதியுள்ளேன். முதல் 23 பரிந்துரைகளை துணைப் பக்கங்களில் கொண்டு சென்று விடுங்கள். நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:52, 15 மே 2013 (UTC)
- இலக்கியவாதிகள் குறித்த பரிந்துரைகளுக்கு நன்றி. 'தமிழிலக்கியம் குறித்த சிறப்புக் கட்டுரைகள்' மீதான தங்களின் 23 பரிந்துரைகளையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:54, 18 மே 2013 (UTC)
வலைவாசலின் முகப்புப் பக்கத்தில், மே 19 நிறைவுபெறும் நேரத்தில்... 'இலக்கியவாதிகள்' பகுதி காட்சிப்படுத்தப்பட்டது. மாதத்தின் திகதிக்கு ஏற்ப கட்டுரை பார்வைக்குத் தெரியும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:40, 19 மே 2013 (UTC)
- ஆமாம், இதில் இடம்பெறும் பகுதிகள் தானியக்கமாகக் காட்சிக்கு வரும்.
- வலைவாசல் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணமும், கூட்டு முயற்சியின் பயன்திறன் (efficiency) அதிகபட்சமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமுமே திட்டமிடலுக்குக் காரணம்.
- குறைவாக செய்தாலும் நிறைவாக செய்ய வேண்டும் எனும் கொள்கைப்பிடிப்பும் ஒரு காரணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:11, 20 மே 2013 (UTC)
'தமிழிலக்கியம் குறித்த சிறப்புக் கட்டுரைகள்' மீதான தங்களின் 23 பரிந்துரைகளை (சொந்த மற்றும் விக்கி வேலைப்பளுவுக்கு மத்தியில்) தருமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 24 மே 2013 (UTC)
- மீதியிருந்த வேலையையும் முடித்துத் தந்தமைக்கு நன்றி, இன்றைக்குள் அந்தக் கட்டுரைகளை வலைவாசலில் ஏற்றி விடுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:36, 27 மே 2013 (UTC)
வணக்கம்!
- வலைவாசல்:தமிழிலக்கியம், காட்சிப்படுத்தும் நிலைக்கு உருவாக்கப்பட்டிருப்பதால்... அதனை வலைவாசல்:உள்ளடக்கங்கள் பக்கத்தில் சேர்த்துள்ளேன்.
- போதிய நேரமும், வாய்ப்பும் கிடைக்கும்போது இந்த வலைவாசலில் மேம்பாடுகள் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
- இந்த வலைவாசல் பொலிவு பெற்றமைக்கு தங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தங்களின் அனைத்து உதவிகளுக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:29, 18 சூலை 2013 (UTC)
வால்ட் டிஸ்னி உலகம்...
தொகுவணக்கம்!
வால்ட் டிஸ்னி உலகம் எனும் கட்டுரையை நீங்கள் துவக்கிய நேரத்துக்கு சரியாக 6 நிமிடங்கள் முன்னதாக வோல்ட் டிஸ்னி உலகம் எனும் கட்டுரையை அன்டன் துவக்கியுள்ளார். என்ன செய்யலாம்? உரியன செய்யவும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:22, 13 மே 2013 (UTC)
நீங்கள் பங்களித்த எலியாஸ் ஓவே என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 15, 2013 அன்று வெளியானது. |
மறுமொழி
தொகுவணக்கம் பார்வதிஸ்ரீ!சப்த(ஏழு) சிவத் தலங்கள் என்ற தலைப்பு தான் கரைகண்ட தலங்கள் ஏழும் செய்யாற்றின் வட கரையிலும் ,கைலாயத்தலங்கள் ஏழும் செய்யாற்றின் தென் கரையிலும் உள்ள சிவ தலங்களாகும் இவை குறித்து அருணாச்சல புராணத்தில் விரிவாகவே சொல்லப் பட்டுள்ளது. இந்த இரு சப்த(ஏழு) சிவத் தலங்கள் குறித்து சொல்வதற்கு முன் செய்யாறு தோற்றம் பற்றி சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எழுதப்பட்டுள்ளது.செய்யாறு தோற்றம் பின் விளைவுகள் இரு சப்த(ஏழு) சிவத் தலங்கள்.ஒவ்வொரு சிவத் தலங்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும். இது விக்கி சைவத் திட்டத்திற்கு பின்னாளில் இணைக்கப்படும்--Yokishivam (பேச்சு) 13:14, 20 மே 2013 (UTC)
நன்றி ஐயா!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:28, 20 மே 2013 (UTC)
படம் பரிந்துரைப்பு
தொகுபடம் பரிந்துரைத்ததற்கு நன்றி. இது போன்று பயனுள்ள படங்களையும் உங்களுக்குப் பிடித்த படங்களையும் (காமன்சில் தேடலாம்) எனக்குப் பரிந்துரைத்தால் எடுத்துப் பயன்படுத்த எளிமையாக இருக்கும். நான் இதுநாள் வரை எனக்குப் பிடித்த படங்களை (முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தத் தகுந்தவை) மட்டுமே பயன்படுத்தி வருகிறேன் (காமன்சின் Featured Picture Listஇல் தேடிப் பார்ப்பேன்). நீங்களும் பரிந்துரைத்தால் எனக்கு தெரிவு செய்ய எளிமையாக இருக்கும். நன்றி -- சூர்யபிரகாஷ் உரையாடுக 13:43, 22 மே 2013 (UTC)
என்ன செய்யலாம்
தொகுவிக்கி ஆதாரம் அற்றதா--Sengai Podhuvan (பேச்சு) 18:31, 23 மே 2013 (UTC)
நல்வாழ்த்துகள்..!
தொகுதி இந்து நாளிதழில் வெளியான செய்திக் கட்டுரையில் உங்களைப் பற்றிய குறிப்பினையும் வாசித்தேன்; தங்களின் பணி இனிதே தொடர வாழ்த்துகள்!
- (உங்களைப் போன்று ஒரு 5 பேரை நீங்கள் இங்குக் கொணர்ந்தால்... மிகவும் நன்றாக இருக்கும்!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:03, 27 மே 2013 (UTC)
- நன்றி சிவகுரு. முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:36, 27 மே 2013 (UTC)
- வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 08:43, 27 மே 2013 (UTC)
- எங்கள் குரலாக நீங்கள் உரைப்பீர்கள். வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:51, 27 மே 2013 (UTC)
- விருப்பம், வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 19:32, 27 மே 2013 (UTC)
- தங்களுக்கும் செங்கை ஐயாவிற்கும் வாழ்த்துக்கள். மேலும் செயற்கரிய செயல்களால் பெருமை கொள்ள ஈசன் அருளட்டும். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:34, 27 மே 2013 (UTC)
விருப்பம் வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:27, 29 மே 2013 (UTC)
- நான் விக்கி விடுப்பில் இருந்ததால் உடனடியாக எனது வாழ்த்தைத் தெரிவிக்க இயலவில்லை..நாளிதழில் தங்கள் பெயரைக் கண்ட நாளிலேயே மகிழ்ச்சி யடைந்தேன். தங்கள் பணி இத்தகைய சந்திப்புகள் மூலம் மேலும் மெருகேறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 04:23, 30 மே 2013 (UTC)
வாழ்த்துக்கு நன்றி மனியன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:18, 30 மே 2013 (UTC)
கருத்து தேவை
தொகுமுதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:10, 29 மே 2013 (UTC)
போட்டிக் கட்டுரைத் தலைப்புகள் சரிபார்ப்பு
தொகுவிக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள் பக்கத்தில் விரிவான கட்டுரைகளை நீக்கி உதவுவதற்கு நன்றி. தங்கள் பணி முடிந்த பிறகு, எது வரை சரி பார்த்துள்ளீர்களோ அந்த இடத்தில் ***இதற்குக் கீழே உள்ள கட்டுரைகளின் பைட்டு அளவைச் சரி பார்க்க வேண்டும்*** என்று குறிப்பிட்டு விடுங்கள். தற்போது புவியியல் பகுதி முடிய சரி பார்த்துள்ளேன். அடுத்து வரலாறு பகுதியில் இருந்து சரி பார்க்க வேண்டும்.--இரவி (பேச்சு) 12:43, 31 மே 2013 (UTC)
ஒன்றிணைப்பு
தொகுவணக்கம் பார்வதி, எதிர்நீச்சல் (1968 திரைப்படம்), எதிர் நீச்சல் இரு கட்டுரைகளையும் இணைத்து உதவுங்கள். இரண்டின் உள்ளடக்கங்களையும் எதிர்நீச்சல் (1968 திரைப்படம்) கட்டுரையில் இணைத்திருக்கிறேன். --Booradleyp1 (பேச்சு) 16:27, 31 மே 2013 (UTC) ஆயிற்று-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:21, 31 மே 2013 (UTC)
தொடர் கட்டுரைப் போட்டி/தலைப்புகள்
தொகு- விவிலியம் - 18,967 பைட்டுகள்
- கீதை - 33,059 பைட்டுகள்
- திருக்குறள் - 48,870 பைட்டுகள்
- மகாபாரதம்- 38,390 பைட்டுகள்
போன்ற கட்டுரைகள் 15360 பைட் அளவினை தாண்டியுள்ளது. அத்துடன் இந்து மதம், பிரம்மா, விஷ்ணு போன்ற கட்டுரைகளையும் மேம்படுத்தியுள்ளேன். இதற்குக் கீழே உள்ள கட்டுரைகளின் பைட்டு அளவைச் சரி பார்க்க வேண்டும் என்று கட்டுரையில் உள்ளமையால் (நான் குறிப்பிட்டுள்ளவை இந்த குறியீட்டின் மேல் அமைந்துள்ளது) மறுமுறை சீர்திருத்தத்தின் பொழுது எளிமையாக இருக்கவே இங்கே பகிர்கிறேன். நன்றி.
வேண்டுகோள்
தொகுKamala Nehru கட்டுரையை கமலா நேரு கட்டுரையுடன் ஒன்றிணைத்து விடவும். உள்ளடக்கங்கள் இணைத்து விட்டேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:32, 5 சூன் 2013 (UTC)
பதக்கம்
தொகுமெய்வாழ்வுப் பதக்கம் | ||
போட்டிக்குட்பட்ட கட்டுரைகளில் வெற்றிக் கோடான 15360 பைட்டுகளைத் தாண்டியும் கட்டுரைகளைச் சீராக்க முனைவதைக் கண்டு மகிழ்கிறேன். இந்த மெய்யான விக்கிப் பண்பு மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியான செயற்பாடு ஆகும் இரவி (பேச்சு) 13:21, 11 சூன் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
- விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:19, 28 சூலை 2013 (UTC)
அன்பின் சகோதரி பார்வதிசீ அவர்களுக்கு
தொகுசென்னை மாவட்டத்தின் அந்த இணைப்பு சைதாபேட்டை நகராட்சி மதராசு நகராட்சியுடன் இனைகபெற்றதின் சான்றே ஆகும். மேலும் "dead municipality" என்ற சொல் அண்ணா காலத்தில் கலைக்கபெற்ற நகராட்சி என்று வழங்கபெற்றது . மேலும் இராமச்சந்திரன் ஆட்சியில் " அழிக்கபெற்ற நகராட்சி " எனப்பட்டது ..இதற்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதால் ..மீண்டும் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு "இறந்த நகரம் " என்று வழங்கப்பட்டு உள்ளதாக அறிகிறேன் . மேலும் இதன் தொடர்பான அரசு சட்டபூர்வ அறிவிப்பை தேடிவருகிறேன். மேலும் அந்த சொல்லி மாற்றம் செய்யலாம் என்றாலும் எனக்கு ஐயம் இல்லை . மொழியே மாற்றுதலுக்கு உரியது தானே? மேலும் இது நாள் வரை ஆங்கிலத்தில் எழுதிய நான் இப்போது தமிழில் எழுத முற்படுகிறேன் என்பதால் சிறிது உதவி தேவை .. நனி நன்று. ரோஹித் முதலியார் 02:22, 12 சூன் 2013 (UTC)
பாராட்டுகளும், நன்றிகளும்!
தொகுவணக்கம், பார்வதிஸ்ரீ!
அச்சு இதழ், வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களிடம் தமிழ் விக்கிப்பீடியாவினை எடுத்துச் செல்லும் தங்களின் முயற்சிகளுக்கு, தமிழ் விக்கிப்பீடியா குமுகாயம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!
- திருச்சி வானொலியின் பண்பலை வரிசையில் ஒலிபரப்பான செவ்வி மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
- நன்றாக தெளிவாக பேசினீர்கள், தங்களின் கட்டுரையைப் போலவே.
- 'நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும்போது விக்கிப்பீடியாவை நாங்கள் பயன்படுத்துகிறோம்' என நிகழ்ச்சி நடத்தியவர் கூறியபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:39, 21 சூன் 2013 (UTC)
விருப்பம்--ஆதவன் (பேச்சு) 14:40, 21 சூன் 2013 (UTC) விருப்பம் -- ரோஹித் 15:19, 22 சூன் 2013 (UTC) விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 16:10, 22 சூன் 2013 (UTC) விருப்பம்--Yokishivam (பேச்சு) 11:42, 23 சூன் 2013 (UTC)
2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013
தொகுதேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:04, 5 சூலை 2013 (UTC)
நன்றி அராபத் பள்ளி வேலை அதிகரித்துள்ள காரணத்தால் விக்கியில் பங்களிப்பு குறைவாய் உள்ளது. இயன்றளவு செய்கிறேன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:44, 5 சூலை 2013 (UTC)
சிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம்
தொகுபதக்கம்
தொகுசிறந்த பரப்புரைச் செயற்பாட்டுக்கான பதக்கம் | ||
பள்ளிப் பணி, குடும்பப் பணிக்கு இடையிலும் தொடர்ந்து பல்வேறு ஊர்களிலும் ஊடகங்களிலும் சுற்றிச் சுழன்று தமிழ் விக்கிப்பீடியா பற்றி எடுத்துரைத்ததைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். உங்கள் பரப்புரைகள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஒரு புத்துணர்வு அளித்ததை உணர முடிந்தது. --இரவி (பேச்சு) 14:37, 12 சூலை 2013 (UTC) |
- விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 04:11, 13 சூலை 2013 (UTC)
நன்றி இரவி, பூராட்லி. -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:06, 15 சூலை 2013 (UTC)
ஆமாம். ஆமாம். இப்பதக்கம் இவருக்கு பொருத்தமானது தான். இவர் தான் தமிழ் விக்கியின் அகிலாண்ட கொ.பா.செ.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:11, 28 சூலை 2013 (UTC)
விக்கிமூலத்தில் மின்னூல்
தொகுமின்னூல் தரவேற்றும் போது அது படிமம் என்ற பெயர் வெளியிலேயே தோன்றும். விக்கிமூலத்தில் நீங்கள் தரவேற்றியது சரியானதே. மின்னூல்களை இணைப்பது குறித்து ஆங்கில விக்கிமூலத்தில் உதவிப் பக்கங்கள் இருக்கும். தேடிப் பார்க்கிறேன்.--Kanags \உரையாடுக 10:32, 19 சூலை 2013 (UTC)
தமிழக பள்ளி கல்வி தேர்ச்சி முறை பற்றி கட்டுரை தேவை
தொகுஅதாங்க. 10 வர்சம் 10 கண்டத்த எங்களுக்கு வைக்குறீங்களே அதை பத்தி ஒரு கட்டுரை எழுதலாமே. நான் படிக்கும் போது முறை சற்று வேறு மாதிரி இருந்தது. மேலும் இக்கட்டுரையில் பால்வாடி, எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற தனியார் பால்வாடி பற்றிய குறிப்புகள். பத்தாம் வகுப்பிற்கு பிறகு ஜ.டி.ஐ., பட்டயம் போன்றவற்றுக்கு போதல் தொடர்பான குறிப்புகளும் இருந்தால் நன்று.
அதை எல்லாம் முடித்த பிறகு பழைய முறைகளை பற்றியும் ஒவ்வொரு பத்தி எழுதலாம். நீங்கள் இதை எழுதி முடித்த கணம் யாழ் நகர இளவரசனிடம் இருந்து இலங்கை பள்ளி கல்வி தேர்ச்சி முறை பற்றிய கட்டுரை வந்து விழும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:08, 28 சூலை 2013 (UTC)
- செமையான கலாய்ப்பு தென்காசி! யாழ் நகர இளவரசர் ஆதவன் இதை கவனிக்க :)-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:27, 28 சூலை 2013 (UTC)
- யாழ் நகர இளவரசரா ! , தென்காசியாரே இது ரொம்ப ஓவர். முடியலைப்பா -- நி ♣ ஆதவன் ♦ (உரையாட படத்தை சொடுக்கவும்)) 15:50, 28 சூலை 2013 (UTC)
- ஆம், முதலில் அக்கட்டுரை முடிந்த பிறகு இக்கட்டுரை வந்து பதிலடியையா -- நி ♣ ஆதவன் (உரையாட படத்தை சொடுக்கவும்)) 15:52, 28 சூலை 2013 (UTC)
விக்கிமேனியா சென்று வந்த கையோடு கண்டிப்பாக தொடங்குகிறேன். :) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:09, 28 சூலை 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுசனிக்கிழமை இரவே முதற்பக்கக் கட்டுரையை மாற்றம் செய்துவிடும் தாங்கள் ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 28, 2013) இரவு வந்து விட்ட போதும் மாற்றம் செய்யாததால் இந்த முறை மட்டும் முதற்பக்கக் கட்டுரையை மாற்றம் செய்திருக்கிறேன். இதில் ஏதாவது தவறு தென்பட்டாலோ அல்லது செய்ய வேண்டியவை ஏதாவது விடுபட்டிருந்தாலோ சரி செய்து கொள்ள வேண்டுகிறேன். அடுத்த வாரம் வழக்கம் போல் தாங்கள் தொடரலாம். நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:21, 28 சூலை 2013 (UTC) மிக்க நன்றி தேனியாரே.. வேலைப்பளுவின் காரணமாக இயலவில்லை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 19:06, 28 சூலை 2013 (UTC)
சந்தேகம்
தொகுபார்வதி அக்காவிற்கு வணக்கம். ஒரு கட்டுரை முதற்பக்கக் கட்டுரையாக வரவேண்டுமெனில் , அக்கட்டுரை எவ்வாறிருக்க வேண்டும்? அதற்கான கோட்பாடுகள் என்ன? தெளிவுபடுத்துங்களேன். நன்றி! --Praveenskpillai (பேச்சு) 02, ஆகத்து, 2013 (UTC)
நன்றி
தொகுஒரு அருமையான தலைப்பில் கட்டுரை வரைந்து தருவதற்கு நன்றி.
நன்றி
தொகுதங்களுக்கு மிக்க நன்றி.மேற்கோள்கள் சேர்த்துள்ளேன்.அவை சரியா என்று பார்த்து கூறுங்கள் அண்ணா அக்கா. தவறு என்றால் எப்படி செய்ய வேண்டும் என்று கூறுங்கள் அண்ணா அக்கா. சிரமத்திற்கு மன்னிக்கவும். இப்படிக்கு அன்பு தங்கை நந்தினிகந்தசாமி.
- சிறு திருத்தம் செய்துள்ளேன். --Anton (பேச்சு) 04:08, 19 ஆகத்து 2013 (UTC)
காத்திருப்பு
தொகுபார்வதி ஸ்ரீ அவர்களே, இதற்காக காத்திருக்கிறேன். சீக்கிரம் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:12, 20 ஆகத்து 2013 (UTC)
பத்தாண்டு கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு
தொகுவணக்கம் பார்வதி, தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்ட பொறுப்பாளர்களில் ஒருவராக பணியாற்ற இயலுமா? விக்கிப்பீடியா பங்களிப்புக் கையேடு உருவாக்கம் முதலிய பல்வேறு பணிகளில் உங்கள் பங்களிப்பு பயன் நல்கும். நன்றி.--இரவி (பேச்சு) 17:29, 23 ஆகத்து 2013 (UTC)
எனக்கு அம்மாதத்தில் முதல்பருவத் தேர்வுகள் இருப்பதால் பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆயினும் இயன்ற அளவு செய்கிறேன். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:38, 24 ஆகத்து 2013 (UTC)
மாற்றம்
தொகுதங்களால் அது நீக்கப்பட்டுவிட்டது என நினைக்கிறேன் -நந்தினி.
ஒரு சிறப்புப் பரிந்துரை...
தொகுஎம். ஜி. இராமச்சந்திரன் என்பவர் தமிழக அரசியல் வரலாற்றிலும், தமிழ்த் திரைப்பட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்கவர். அவர் குறித்தக் கட்டுரையினை 'முதற்பக்கக் கட்டுரைகள்' பகுதியின் மேல்பாகத்தில் காட்சிப்படுத்தினால் இன்னமும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற் பக்கத்திற்கு வரும் எந்த ஒரு வாசகரின் பார்வைக்கும் இது உடனடியாகக் கண்களுக்குத் தெரியும் - 'scroll' செய்யும் முன்பே தெரிந்துவிடும்! நடுநிலை நோக்குடனே இந்தப் பரிந்துரை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:34, 1 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி, சிறீதரன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:51, 1 செப்டம்பர் 2013 (UTC) விருப்பம் --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 30 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி
தொகுமிக்க நன்றி. ஆகத்து மாத முடிவுகள் எப்போது அறிவிக்கபடும்? நந்தினிகந்தசாமி (பேச்சு) 01:52, 2 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
தொகுகட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம் | ||
சூன், ஆகத்து மாதக் கட்டுரைப் போட்டிகளில் விரிவான கட்டுரைக்கான சிறப்புப் பரிசு வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து முக்கிய கட்டுரைகளைத் தரமுயர்த்தித் தருமாறு வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 09:01, 2 செப்டம்பர் 2013 (UTC) |
- வாழ்த்துக்கள். பொதுவாகவே மிகவும் விரிவாக கட்டுரை தொகுப்பவர்! --Anton (பேச்சு) 09:59, 2 செப்டம்பர் 2013 (UTC)
- நன்றி இரவி, அண்டன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. மகிழ்ச்சி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:39, 2 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துக்கள்
தொகுதங்களின் பணிச் சுமைகளுக்கு இடையிலும் பரிசுகளை வென்றுள்ளீர்கள். வாழ்த்துக்கள்நந்தினிகந்தசாமி (பேச்சு) 09:08, 2 செப்டம்பர் 2013 (UTC)
போட்டிக்கான அளவையும் தாண்டி கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்ற தங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தானே தேடி வந்த பரிசு இது. வாழ்த்துக்கள். நாங்கள் சிறிது விரிவுபடுத்தியிருந்தாலும் போட்டிக்காக பின்னர் விரிவு படுத்திக்கொள்ளலாம் என்று விட்டிருக்கின்றேன்.தங்கள் தரத்தை கருத்தில் கொண்டு விருவு படுதியத்ர்க்காக பாராட்டுக்கள் முத்துராமன் (பேச்சு) 09:32, 2 செப்டம்பர் 2013 (UTC)
விருப்பம் வாழ்த்துகளுக்கு நன்றி -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:38, 2 செப்டம்பர் 2013 (UTC)
உதவி
தொகுநான் ஆத்தூரில் வசித்து வருகிறேன் பார்வதி.நீங்கள் தங்கள் மகளுடன் விக்கிபீடியா பத்தாண்டுகள் நிறைவு விழாவிற்கு வருவதாக குறிப்பிட்டு இருந்தீர்கள். நான் தனியாக வர என் பெற்றோர் அனுமதிக்கவில்லை.ஆகவே தங்களுடன் வரலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களுக்கு விருப்பம் என்றால் தெரிவிக்கவும். நன்றி.நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:13, 9 செப்டம்பர் 2013 (UTC)
முடிந்தால்
- மொழிநடை
- கலைச்சொற்கள்
அல்லது பிற பகுதிகளை விரைந்து உருவாக்கித் தர முடிந்தால் நன்று. நன்றி. --Natkeeran (பேச்சு) 13:31, 11 செப்டம்பர் 2013 (UTC)
பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:58, 18 செப்டம்பர் 2013 (UTC)
Hi, Nice to be able to talk with you on-wiki! I have sent you a message over e-mail yesterday. Please look into the mail and reply me as early as possible. Thank you! --Netha Hussain (பேச்சு) 14:58, 26 செப்டம்பர் 2013 (UTC)
புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு
தொகுவிக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. இதனை பயன்படுத்த: {{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}} என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:53, 30 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை
தொகுவணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:35, 4 அக்டோபர் 2013 (UTC)
முன்பக்க இற்றைப்படுத்தல்
தொகுமுன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:15, 11 அக்டோபர் 2013 (UTC)
கட்டுரைப் போட்டி
தொகு- வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
- விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)
முதற்பக்கத்தில் தமிழலக்கிய வலைவாசல்
தொகுதாங்களும் செல்வசிவகுருநாதன் அவர்களும் இணைந்து மேம்படுத்திய தமிழிலக்கிய வலைவாசலை முதற்பக்கத்தில் காட்சிபடுத்தியுள்ளோம். இந்த வலைவாசல் ஒரு மாதகாலத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். தொடர்ந்து வலைவாசல்களில் ஈடுபாடு கொண்டு மேம்படுத்தி தரவும் வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:57, 1 நவம்பர் 2013 (UTC)
முதற்பக்க வலைவாசல் அறிவிப்பு
தொகுநீங்கள் பங்களித்த வலைவாசல்:தமிழிலக்கியம் என்ற வலைவாசல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் நவம்பர் 1,2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
தேவையான படிமங்களைக் தெரிவிக்கவும்
தொகு(இவையனைத்தும் இலவசமில்லாதவை என குறிக்கப்பட்டுள்ளன, ஆயினும் எந்த கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 19:13, 4 திசம்பர் 2013 (UTC)
உங்கள் கவனத்திற்கு
தொகுவணக்கம்! நீங்கள் பதிவேற்றிய படிமத்தை (படிமம்:Rajaraja Chozha Dynasty.jpg) சங்க கால நாணயவியல் கட்டுரையில் இணைத்துள்ளேன். சரியா எனப் பார்க்கவும். தவறு எனில் என் செயல்களை மீளமைக்கவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 11:31, 10 திசம்பர் 2013 (UTC)
விக்கித் திட்டம் வானியல் அழைப்பு
தொகுவணக்கம், Parvathisri/தொகுப்பு 4!
- தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
- நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
- பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
வானியல்த் துறையை வளர்த்தெடுக்க விக்கியில் பணியாற்றுபவர்கள் மிக மிக அரிது, அப்படி இருகையில் தாங்கள் பெருங்கரடி எனும் கட்டுரையை ஆரம்பித்துள்ளீர்கள் தொடர்ந்து வானியல்த்துறைக்கு பெரும்பணி ஆற்றி அத்திட்டத்தை வளர்த்தெடுக்க கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அன்பு இளவல் --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 05:20, 23 திசம்பர் 2013 (UTC)
விக்கித்திட்டம் சென்னை அழைப்பு
தொகுஉதவி
தொகுநீங்கள் குறிப்பிட்டபடி கட்டுரையை ஒன்றிணைக்க முயன்றேன் ஆனால் \\அவ்வாறு மாற்று போது அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும்.\\ என கேட்கவில்லை. நகர்த்தல் வெற்றி என்று வந்துவிட்டது :(.
கட்டுரை மேற்குக் கங்கர். மூன்று கட்டுரைகள் இப்போது உள்ளது. நான் எழுதியதை ஆவியுடன் இணைத்துள்ளேன். ஆனால் முன்பே இரண்டு உள்ளது தெரியாமல் புதிதாக உருவாக்கினேன். நீங்கள் ஒன்றிணைக்க உதவ வேண்டும்--குறும்பன் (பேச்சு) 19:21, 16 பெப்ரவரி 2014 (UTC)
Women's History Month:Come join us!
தொகுWe need you! | |
---|---|
Hi Parvathisri! 8th March is International Women's Day and to celebrate, women in India are organizing edit-a-thons and meetups to create and expand articles of importance to women in Wikipedia in English and various Indian languages. The goal of the month-long event is to encourage more women to contribute to Wikipedia and increase representation of articles related to women in Wikipedia. The event aims at creating new articles, expanding the existing stubs and translating English articles to various Indic languages. Read more about the event on our project page: Women's History Month (India), 2014. Get involved by:
We look forward to your contributions. Thank you! --Netha Hussain (பேச்சு) 15:18, 5 மார்ச் 2014 (UTC) |
தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
தொகுநீங்கள் விரிவாகப் பங்களித்த கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் வெளியாகி உள்ளது. பார்க்க: தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு - பக்கம்: 54- பார்வதிஸ்ரீ. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:27, 23 மார்ச் 2014 (UTC)
- வாழ்த்துக்கள். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:35, 29 மார்ச் 2014 (UTC)
தமிழ் எளிது
தொகுகட்டுரைப் போட்டி நிறைவு
தொகுவணக்கங்க, கட்டுரைப் போட்டியின் மூலம் குறைந்தது 500 முக்கிய குறுங்கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும் என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளோம். போட்டியில் பங்கேற்று இதற்கு உதவியமைக்காக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதத்துடன் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. முதல் சில மாதங்களில் பங்கேற்ற அதே உற்சாகத்துடன் இம்மாதமும் போட்டியில் பங்கேற்று உடன் போட்டியிடுபவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 15:29, 6 மே 2014 (UTC)
முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்
தொகுநீங்கள் பங்களித்த மெசொப்பொத்தேமியா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 4, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த கற்றாழை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 25, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த உப்புச் சத்தியாகிரகம் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மே 25, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த நிகழ்த்து கலை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 1, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த அசாய் பனை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 1, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
நீங்கள் பங்களித்த பைங்குடில் விளைவு என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சூன் 8, 2014 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
2013 கட்டுரைப் போட்டி பரிசு விவரம்
தொகுவணக்கம், பார்வதி. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
- உங்கள் வங்கிக் கணக்கு விவரம் (கணக்கில் உள்ள முழுப்பெயர், கணக்கு எண், கணக்கின் வகை (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு போல), வங்கியின் பெயர், வங்கி முகவரி, IFSC குறியீட்டு எண்
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
- வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் முழுப்பெயர் விவரம் தேவை.
- சான்றிதழ்கள் / காசோலை அனுப்பி வைக்க உங்கள் இல்ல முகவரி தேவை.
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி. --இரவி (பேச்சு) 18:41, 30 சூன் 2014 (UTC)
பெண்ணியம் வலைவாசல்
தொகுவணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:21, 27 அக்டோபர் 2014 (UTC)
தகவல் பரிமாற்றம்...
தொகுவணக்கம்! தாங்கள் எழுதிய ஞான வெட்டியான் (நூல்) எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியினை அப்படியே எடுத்து, வெட்டியான் எனும் தனிக் கட்டுரையினை துவக்கியுள்ளேன். தனிக் கட்டுரையாக இருப்பதன் அவசியத்தை உணர்ந்து இவ்வாறு செய்துள்ளேன். தங்களின் அறிதலுக்காக இதனை தெரிவிக்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 23 திசம்பர் 2014 (UTC)
விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு
தொகுவணக்கம் Parvathisri/தொகுப்பு 4!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
மீண்டும் வருக !
தொகுமீண்டும் வருக :) --இரவி (பேச்சு) 06:30, 27 மார்ச் 2015 (UTC)
- விருப்பம்கோடை விடுமுறையை விக்கியில் கொண்டாட வருகின்ற ஆசிரியை அன்புடன் வரவேற்கிறோம். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:31, 28 மார்ச் 2015 (UTC)
- நன்றி இரவி, நன்றி ஜெகதீஸ்வரன்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:46, 29 மார்ச் 2015 (UTC)
புதிய நிருவாகிகள் பரிந்துரை
தொகுவணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் பரிந்துரைகள் தேவை. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --இரவி (பேச்சு) 07:35, 28 மார்ச் 2015 (UTC)
உதவி...
தொகுவணக்கம்! இங்கு உரிய மேற்கோள் இட்டு உதவுங்கள்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:12, 6 ஏப்ரல் 2015 (UTC)
செவிமடுத்து, உதவியதற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:15, 7 ஏப்ரல் 2015 (UTC)
சிரமத்திற்கு மன்னிக்கவும்; இங்கும் தங்களின் உதவி தேவை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:27, 10 ஏப்ரல் 2015 (UTC)
பெரிய உதவிக்கு, மீண்டும் மிகுந்த நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:46, 10 ஏப்ரல் 2015 (UTC)
இங்கு கவனிக்க வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:27, 15 ஏப்ரல் 2015 (UTC)
முதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள்
தொகுமுதற்பக்கம் இற்றைப்படுத்தல் - முதற்பக்கக் கட்டுரைகள் வணக்கம், தற்போது சில காலமாக முதற்பக்கக் கட்டுரைகள் இற்றைப்படுத்தலில் தொய்வுத் தன்மை தெரிக்கின்றது. நீங்களும் முதற்பக்கக் கட்டுரை பராமரிப்பாளர்களில் ஒருவர் என்பதால் இது தொடர்பில் கருத்துத் தெரிவிப்பது பயனுள்ளதாக அமையும். குறித்த திட்டப்பக்கத்திலோ ஆலமரத்தடியிலோ இதுபற்றி உரையாடலாம். நன்றி. --AntonTalk 07:52, 8 ஏப்ரல் 2015 (UTC) |
- பள்ளி வேலைப்பளு காரணமாக என்னால் அதக நேரம் வி்கிகியில் பங்காற்ற இயலவில்லை. இது தொடர்பாக எனது ஒத்துழைப்பை அவ்வப்போது தரத் தயாராக உள்ளேன். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 05:49, 10 ஏப்ரல் 2015 (UTC)
தானியங்கி வரவேற்பு
தொகுவணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:19, 7 மே 2015 (UTC)
குங்குமம் தோழி இதழில் தங்களின் பேட்டி இடம்பெற்றுள்ளது...
தொகுவிக்கிபீடியா வித்தகிகள்!; வாழ்த்துகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:49, 19 மே 2015 (UTC)