சனவரி 15
நாள்
(15 சனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 15 (January 15) கிரிகோரியன் ஆண்டின் 15 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.
நிகழ்வுகள்
தொகு- 69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார்.
- 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார்.
- 1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது.
- 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது.
- 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.[1]
- 1815 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கக் கடற்படைக் கப்பல் பிரெசிடென்ட் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
- 1822 – கொழும்பு, களனி ஆற்றிற்குக் குறுக்கே மிதவைப் பாலம் ("படகுகளின் பாலம்", Bridge of Boats) திறந்து வைக்கப்பட்டது.[2]
- 1867 – இலண்டன், ரீஜன்சு பார்க் என்ற இடத்தில் படகு ஏரி ஒன்றில் மூடியிருந்த பனிக்கட்டி வெடித்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.
- 1889 – கொக்கக் கோலா கம்பனி அட்லான்டாவில் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
- 1892 – யேம்சு நெய்சிமித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.
- 1908 – யாழ்ப்பாணத்தில் காரைதீவு பயணிகள் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1910 – பஃபலோ பில் அணை, அக்காலத்தின் மிக உயர்ந்த அணை (325 அடி) அமெரிக்காவின் வயோமிங்கில் கட்டப்பட்டது.
- 1915 – மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
- 1919 – மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – செருமனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
- 1934 – 8.0 அளவு நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பீகாரைத் தாக்கியதில் 6,000–10,700 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1936 – முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் அமெரிக்காவில் ஒகைய்யோ மாநிலத்தில் கட்டப்பட்டது.
- 1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: கொருன்னா சாலை சமரில் தேசியவாதிகளும், குடியரசுவாதிகளும் பலத்த இழப்புகளின் பின்னர் பின்வாங்கினர்.
- 1943 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் குவாடல்கனால் தீவில் இருந்து விரட்டப்பட்டனர்.
- 1943 – பென்டகன் திறக்கப்பட்டது.
- 1944 – ஆர்ஜெண்டீனாவில் சான் யுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1949 – சீன உள்நாட்டுப் போர்: கம்யூனிஸ்டுப் படைகள் தியான்ஜின் நகரை தேசியவாத அரசிடம் இருந்து கைப்பற்றின.
- 1966 – நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
- 1969 – சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.
- 1970 – நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தனர்.
- 1970 – முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1973 – வியட்நாம் போர்: அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் வட வியட்நாமில் தாக்குதல்களை இடைநிறுத்தினார்.
- 1975 – போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.
- 1977 – சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.
- 1981 – லேக் வலேசா தலைமையிலானபோலந்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் குழு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை வத்திக்கனில் சந்தித்தது.
- 2001 – விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
- 2005 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.
- 2005 – செல்பேசிகளில் தமிழில் குறுஞ்செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2007 – சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
- 2013 – எகிப்தில் இராணுவ வீரர்களி ஏற்றிச் சென்ற தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
- 2016 – சோமாலியாவில் அல்-சபாப் இசுலாமியப் போராளிகளுடனான சமரில் கென்ய இராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டனர்.
- 2019 – சோமாலிப் போராளிகள் கென்யா, நைரோபியில் உணவகம் ஒன்றைத் தாக்கி 21 பேரைக் கொன்றனர், 19 பேர் காயமடைந்தனர்.[3]
- 2020 – இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் 6.2-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 67 பேர் உயிரிழந்தனர்.[4]
பிறப்புகள்
தொகு- 1622 – மொலியர், பிரான்சிய நடிகர் (இ. 1673)
- 1842 – மேரி மக்கிலொப், ஆத்திரேலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1909)
- 1850 – சோஃபியா கோவலெவ்சுகாயா, உருசிய-சுவீடன் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1891)
- 1868 – டி. எம். நாயர், இந்திய அரசியல்வாதி (இ. 1919)
- 1887 – திரிபுரனேனி இராமசாமி, ஆந்திர வழக்கறிஞர், நாடக ஆசிரியர், சீர்திருத்தவாதி (இ. 1943)
- 1892 – மயிலை சிவ முத்துக்குமாரசுவாமி, தமிழறிஞர், தமிழாசிரியர் (இ. 1968)
- 1908 – எட்வர்ட் டெல்லர், அங்கேரிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2003)
- 1916 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)
- 1917 – கே. ஏ. தங்கவேலு, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1994)
- 1918 – ஜமால் அப்துல் நாசிர், எகிப்தின் 2வது அரசுத்தலைவர் (இ. 1970)
- 1922 – ம. மு. உவைஸ், இலங்கையின் இசுலாமியத் தமிழறிஞர் (இ. 1922)
- 1923 – ருக்மணிதேவி, இலங்கை நடிகை, பாடகி (இ. 1978)
- 1926 – காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
- 1927 – கீர்த்தி நிதி பிஸ்தா, நேபாள அரசியல்வாதி (இ. 2017)
- 1929 – மார்ட்டின் லூதர் கிங், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கச் செயற்பாட்டாளர் (இ. 1968)
- 1934 – வி. எஸ். ரமாதேவி, கருநாடகத்தின் 13வது ஆளுநர் (இ. 2013)
- 1936 – மா. பா. குருசாமி, தமிழக எழுத்தாளர்
- 1956 – மாயாவதி குமாரி, உத்தரப் பிரதேசத்தின் 23வது முதல்வர்
- 1962 – மு. அப்துல் சமது, இந்திய முசுலிம் எழுத்தாளர்.
- 1965 – ஜேம்ஸ் நெஸ்பிட், வட அயர்லாந்து நடிகர்
- 1966 – பானுப்ரியா, தென்னிந்திய நடிகை
- 1973 – சுபர்னோ சத்பதி, இந்திய சமூக-அரசியல் தலைவர்
- 1976 – மோ. ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர்
- 1982 – நீல் நிதின் முகேஷ், இந்திய நடிகர், பாடகர்
- 1984 – விக்டோர் ரசுக், அமெரிக்க நடிகர்
- 1986 – விக்ரம் பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர்
இறப்புகள்
தொகு- 1919 – ரோசா லக்சம்பேர்க், செருமானிய சோசலிச மெய்யியலாளர் (பி. 1871)
- 1936 – ஹென்ரி ஃபோர்ஸ்டர், ஆத்திரேலியாவின் 7வது ஆளுநர் (பி. 1866)
- 1939 – நடராசன், தமிழக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராளி (பி. 1919)
- 1965 – சு. நடேசபிள்ளை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, தமிழறிஞர் (பி. 1895)
- 1965 – தஞ்சை இராமையாதாஸ், தமிழகக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1914)
- 1981 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)
- 1994 – தெ. வ. இராசரத்தினம், இலங்கைத் தமிழ் நீதிபதி, அரசியல்வாதி (பி. 1920)
- 1998 – குல்சாரிலால் நந்தா, 2-வது இந்தியப் பிரதமர் (பி. 1898)
- 1999 – மீ. ப. சோமு, தமிழக எழுத்தாளர் (பி. 1921)
- 2008 – கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)
- 2008 – ஜான் டி. லாசன், பிரித்தானியப் பொறியியயாளர், இயற்பியலாளர் (பி. 1923)
- 2012 – ஓமாயி வியாரவாலா, இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் (பி. 1913)
- 2018 – ஞாநி சங்கரன், தமிழக எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் (பி. 1954)
சிறப்பு நாள்
தொகு- மர நாள் (எகிப்து)
- இந்திய இராணுவ நாள்
- ஆசிரியர் நாள் (வெனிசுவேலா]])
- தைப்பொங்கல், (சனவரி 14 அல்லது சனவரி 15)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ "Kenya attack: 21 confirmed dead in DusitD2 hotel siege". BBC News. பார்க்கப்பட்ட நாள் 2019-01-17.
- ↑ Masrur Jamaluddin and Nectar Gan. "Powerful earthquake in Indonesia's Sulawesi kills at least 67, injures hundreds". CNN. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.