கோவிட்-19 பெருந்தொற்று

கடுஞ்சுவாசக் கோளாறு
(2019–20 வூகான் கொரோனாவைரசுத் தொற்று இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோவிட்-19 பெருந்தொற்று[6] என்பது கடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS‑ CoV‑ 2) என்ற தீநுண்மி காரணமாக ஏற்படும் கொரோனாவைரஸ் நோயின் (கோவிட்‑19) பெருந்தொற்றாகும்.[1] இது கொரோனாவைரஸ் பெருந்தொற்று என்றும் அறியப்படுகிறது. இந்நோயின் தொற்று முதன்முதலில் சீனாவின் வூகானில் 2019 திசம்பரில் அடையாளம் காணப்பட்டது.[7] சனவரி 30 அன்று கோவிட்-19 தொற்றை உலக அளவில் பொது சுகாதார அவசரநிலையாகவும், மார்ச் 11 அன்று ஒரு பெருந்தொற்றாகவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.[8][9] 29 திசம்பர் 2024 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று
COVID-19 pandemic
100,000 மக்கள்தொகைக்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)

     >1000
     300–1000
     100–300
     30–100
     10–30
     0–10
     தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை

உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம்
உறுதிப்படுத்தப்பட்ட மொத்தத் தொற்றுகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  1,000,000+ உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100,000–999,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  10,000–99,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1,000–9,999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  100–999 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  1–99 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
  உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இல்லை அல்லது தரவு இல்லை
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம்
உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் வரைபடம் (20 நவம்பர் 2022
வரை)
  ஒரு மில்லியனுக்கு, 100+ இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 10–100 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 1–10 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, 0.1–1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  ஒரு மில்லியனுக்கு, >0–0.1 இறப்பு உறுதிப்படுத்தப்பட்டது
  உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் இல்லை அல்லது தரவு இல்லை
(மேலே இருந்து கடிகாரம் சுழலும் திசையில்)
  • தீவிர சிகிச்சை பிரிவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, சிகிச்சை அளிக்கும் ஒரு செவிலியர்
  • தாய்பெய்யில் வாகனங்கள் மூலம் வைரசை அழிக்க செலுத்தப்படும் மருந்துகள்
  • ஆத்திரேலிய பல்பொருள் அங்காடியில் பீதியின் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
  • மிலன் லினேட் வானூர்தி நிலையத்தில் சுகாதார சோதனைகள்
  • இத்தாலிய அரசாங்கத்தின் அவசர கூட்டம்
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுகடுஞ்சுவாசக் கோளாறு கொரோனாவைரஸ் 2 (SARS-CoV-2)[a]
அமைவிடம்உலகளவில்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா[2]
நோயாளி சுழியம்ஊகான், ஊபேய், சீனா
30°37′11″N 114°15′28″E / 30.61972°N 114.25778°E / 30.61972; 114.25778
நாள்1 திசம்பர் 2019–present[3]
(5 ஆண்டு-கள் and 4 வாரம்-கள்)
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்24,77,40,899[4][5]
சிகிச்சை பெறுவோர்15,589,513
குணமடைந்த நோயாளிகள்{{{recovered}}}[4][5]
இறப்புகள்
50,17,139[4][5]
பிராந்தியங்கள்
188[5]

இந்த வைரஸ் பெரும்பாலும் மக்களிடையே நெருக்கமான தொடர்பின்போது[b] இருமல்,[c] தும்மல் மற்றும் பேசுவது ஆகியவற்றின் மூலம் உருவாகும் சிறிய நீர்த்துளிகள் வழியாகப் பரவுகிறது.[11][13] இந்த நீர்த்துளிகள் வழக்கமாக நீண்ட தூரம் காற்று வழியாக பயணிப்பதை விட தரையில் அல்லது மேற்பரப்பில் விழுகின்றன. சில நேரங்களில், தொற்றுள்ள மேற்பரப்பைத் தொட்டுவிட்டு, பின்னர் தங்களின் முகத்தைத் தொடுவதன் மூலமாகவும் மக்களுக்குத் தொற்று ஏற்படக்கூடும். .[11] அறிகுறிகள் தோன்றிய முதல் மூன்று நாட்களில் தொற்றுப் பரவல் வீரியமாக இருக்கும்,எனினும் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், அறிகுறிகளைக் காட்டாத மக்களிடமிருந்தும் தொற்று பரவ சாத்தியமுள்ளது.[11]

பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வாசனை உணர்வு இழப்பு ஆகியவை அடங்கும்.[10][14][15] நோய் தீவிரமடையும்போது நிமோனியா மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படும்.[16] அறிகுறிகள் வெளிப்படும் கால இடைவெளியானது முதல் ஐந்து நாட்கள் வரை இருக்கும்; சிலநேரங்களில் இரண்டு முதல் பதினான்கு நாட்கள் வரைக்கூட இருக்கலாம்.[17][18] இத்தொற்றுநோய்க்கு அறியப்பட்ட தடுப்பூசி அல்லது குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை.[10] அறிகுறி குறைப்பு சிகிச்சை மற்றும் ஆதரவு சிகிச்சை ஆகியவையே முதன்மை சிகிச்சைகளாக உள்ளன.[19]

பரிந்துரைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் கை கழுவுதல், இருமும்போது ஒருவர் தம் வாயை மூடுவது, மற்றவர்களிடமிருந்து தூரத்தை பராமரித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நபர்களைக் கண்காணித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.[20] இதனால் உலகெங்கிலும் உள்ள அரசுத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு, பணியிட முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாடுகள் மற்றும் வசதிகளை மூடல் ஆகிய நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளனர். சோதனை திறனை அதிகரிக்கவும் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறியவும் பலர் பணியாற்றியுள்ளனர்.

இத்தொற்றுநோய் உலகளாவிய சமூக மற்றும் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.[21] இதனால் பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பின்னர் உலகளவில் மிகப்பெரிய மந்தநிலை ஏற்பட்டுள்ளது.[22] இது விளையாட்டு, மத, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை ஒத்திவைக்க அல்லது ரத்து செய்ய வழிவகுத்தது. அச்சம் காரணமாக முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அதிக நபர்கள் வாங்கியதால் விநியோகப் பற்றாக்குறை ஏற்பட்டது.[23][24][25] ஊரடங்கால் மாசுபடுத்திகள் மற்றும் பசுமைக்குடில் வாயுக்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு குறைந்தது.[26][27] 177 நாடுகளில் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் நாடு முழுவதும் அல்லது உள்ளூர் அடிப்படையில் மூடப்பட்டுள்ளன. இது உலக மாணவர் தொகையில் சுமார் 98.6 விழுக்காட்டினரை பாதித்துள்ளது.[28] சமூக ஊடகங்கள் மற்றும் பொது ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன.[29] சீன மக்களுக்கு எதிராகவும், சீனர்கள் அல்லது அதிக நோய்த்தொற்று விகிதங்கள் உள்ள பகுதிகளிலிருந்து வந்தவர்களாகக் கருதப்படுபவர்களுக்கும் எதிராக இனவெறி மற்றும் பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.[30][31][32]

கோவிட்-19 ஆரம்ப நிலை

தொகு
 

சீனாவின், ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் சிலருக்கு, காரணம் தெரியாத நுரையீரல் அழற்சி ஏற்பட்டது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள், சிகிச்சைகள் யாவும் பயனளிக்கவில்லை.[33] இவ்வகை தீநுண்மி மக்களிடையே பரவியது, அத்துடன் அதன் பரவுதல் வீதம் (நோய்த்தொற்றின் வீதம்)[34] 2020 சனவரி நடுப்பகுதியில் அதிகரிப்பதாகத் தோன்றியது.[35] ஐரோப்பா, வடஅமெரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பகுதிகளில் பல நாடுகள் இத்தொற்றுகளைப் பதிவு செய்தன.[36] இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம். மேலும் இந்த நோயின் அறிகுறியில்லாதவர்களும் நோய்ப்பரவலுக்குக் காரணமாக இருக்கலாம் என்பதற்கான தற்காலிகச் சான்றுகளும் அறிவிக்கப்பட்டன.[37][38][39] இத்தீநுண்மிக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, மூச்சுத் திணறல் போன்றவையும், மேலும் இறப்புகளும் ஏற்படலாம்.[38]

2020 பிப்ரவரி 15 தரவுகளின்படி, சீனாவின் அனைத்து மாகாணங்கள் உட்பட உலகளாவிய அளவில் 67,100 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன[40] கொரோனாவைரசின் தொற்றால் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு 2020 சனவரி 9 அன்று பதிவானது,[41] அன்றுமுதல் 2020 பெப்ரவரி 15 வரை, 1,526 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.[40] இதனை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்; அவை கண்டறியப்படவில்லை என்று ஆய்வுகள் மதிப்பிடுகின்றன.[42] நோய்த்தொற்று ஏற்பட்டதாக உறுதிசெய்யப்பட்ட முதல் 41 பேரில், மூன்றில் இருவருக்கு ஊகான் கடலுணவுச் சந்தையுடனான நேரடித் தொடர்பு கண்டறியப்பட்டது. இச்சந்தையில் உயிருள்ள விலங்குகளும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.[3][43][44][45] சீனாவிற்கு வெளியே இத்தீநுண்மியின் முதல் பரவல் வியட்நாமில் நோயாளியின் மகனுக்குத் தொற்றியது.[46] அதே சமயம் குடும்பத்துடன் சம்பந்தப்படாத முதல் உள்ளூர் பரவல் செருமனியில் நிகழ்ந்தது, 2020 சனவரி 22 அன்று பவேரியாவிற்கு வந்திருந்த ஒரு சீன வணிகப் பார்வையாளரிடமிருந்து ஒரு செருமேனியர் இந்த நோயைப் பெற்றுக்கொண்டார்.[47] சீனாவிற்கு வெளியே முதலாவது இறப்பு பிலிப்பீன்சில் பதிவானது. 44-அகவையுடையவர் இத்தீநுண்மியால் பாதிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 1 இல் உயிரிழந்தார்.[48][49]

கோவிட்-19 பெருந்தொற்று[50]
இடங்கள் தொற்றுகள் இறப்புகள்
  World[d] 775,431,255 7,047,741
  European Union[e] 185,636,059 1,261,370
  United States 103,436,829 1,186,984
  China[f] 99,354,727 122,196
  India 45,037,776 533,589
  France 38,997,490 168,091
  Germany 38,437,756 174,979
  Brazil 37,519,960 702,116
  South Korea 34,571,873 35,934
  Japan 33,803,572 74,694
  Italy 26,721,656 197,001
  United Kingdom 24,924,986 232,112
  Russia 24,158,502 402,821
  Turkey 17,004,714 101,419
  Spain 13,980,340 121,852
  Australia 11,846,355 25,166
  Vietnam 11,624,000 43,206
  Argentina 10,131,586 130,857
  Taiwan 9,970,937 17,672
  Netherlands 8,636,201 22,986
  Mexico 7,709,747 335,011
  Iran 7,627,863 146,837
  Indonesia 6,828,993 162,058
  Poland 6,662,631 120,711
  Colombia 6,385,309 142,727
  Austria 6,082,347 22,534
  Portugal 5,643,528 28,151
  Greece 5,633,376 39,007
  Ukraine 5,531,524 109,920
  Chile 5,399,992 62,698
  Malaysia 5,281,323 37,350
  Belgium 4,861,717 34,339
  Israel 4,841,558 12,707
  Canada 4,791,646 54,329
  Thailand 4,776,096 34,614
  Czech Republic 4,759,288 43,503
  Peru 4,524,748 220,831
  Switzerland 4,453,663 14,188
  Philippines 4,140,383 66,864
  South Africa 4,072,681 102,595
  Romania 3,528,662 68,800
  Denmark 3,435,018 9,667
  Singapore 3,006,155 2,024
  Hong Kong 2,876,106 13,466
  Sweden 2,751,819 27,279
  New Zealand 2,587,178 3,976
  Serbia 2,583,470 18,057
  Iraq 2,465,545 25,375
  Hungary 2,230,381 49,051
  Bangladesh 2,050,060 29,494
  Slovakia 1,877,741 21,226
  Georgia 1,862,754 17,150
  Jordan 1,746,997 14,122
  Republic of Ireland 1,736,068 9,604
  Pakistan 1,580,631 30,656
  Norway 1,507,568 5,732
  Kazakhstan 1,503,687 19,072
  Finland 1,499,712 11,466
  Lithuania 1,366,278 9,805
  Slovenia 1,355,887 10,056
  Bulgaria 1,329,266 38,700
  Croatia 1,316,958 18,752
  Morocco 1,279,115 16,305
  Puerto Rico 1,252,713 5,938
  Guatemala 1,250,355 20,215
  Lebanon 1,239,904 10,947
  Costa Rica 1,230,653 9,368
  Bolivia 1,212,131 22,387
  Tunisia 1,153,361 29,423
  Cuba 1,113,662 8,530
  Ecuador 1,076,087 36,048
  United Arab Emirates 1,067,030 2,349
  Panama 1,044,336 8,704
  Uruguay 1,037,893 7,625
  Mongolia 1,011,469 2,136
  Nepal 1,003,450 12,031
  Belarus 994,037 7,118
  Latvia 977,701 7,465
  Saudi Arabia 841,469 9,646
  Azerbaijan 835,371 10,353
  Paraguay 735,759 19,880
  Palestine 703,228 5,708
  Bahrain 696,614 1,536
  Cyprus 691,072 1,442
  Sri Lanka 672,754 16,899
  Kuwait 667,290 2,570
  Dominican Republic 661,103 4,384
  Myanmar 642,138 19,494
  Moldova 635,631 12,235
  Estonia 610,366 2,998
  Venezuela 552,695 5,856
  Egypt 516,023 24,830
  Qatar 514,524 690
  Libya 507,269 6,437
  Ethiopia 501,167 7,574
  Réunion 494,595 921
  Honduras 472,789 11,114
  Armenia 451,831 8,777
  Bosnia and Herzegovina 403,638 16,388
  Oman 399,449 4,628
  Luxembourg 391,378 1,000
  North Macedonia 350,589 9,977
  Zambia 349,635 4,069
  Kenya 344,101 5,689
  Brunei 344,020 178
  Albania 334,863 3,605
  Botswana 330,650 2,801
  Mauritius 327,305 1,070
  Kosovo 274,279 3,212
  Algeria 272,027 6,881
  Nigeria 267,188 3,155
  Zimbabwe 266,362 5,740
  Montenegro 251,280 2,654
  Afghanistan 235,214 7,998
  Mozambique 233,794 2,252
  Martinique 230,354 1,104
  Laos 219,038 671
  Iceland 209,938 186
  Guadeloupe 203,235 1,021
  El Salvador 201,865 4,230
  Trinidad and Tobago 191,496 4,390
  Maldives 186,694 316
  Uzbekistan 175,081 1,016
  Namibia 172,404 4,108
  Uganda 172,149 3,632
  Ghana 172,003 1,462
  Jamaica 156,822 3,600
  Cambodia 139,117 3,056
  Rwanda 133,235 1,468
  Cameroon 125,207 1,974
  Malta 121,422 905
  Barbados 110,615 593
  Angola 107,423 1,937
  Democratic Republic of the Congo 100,566 1,470
  French Guiana 98,041 413
  Malawi 89,168 2,686
  Senegal 89,077 1,971
  Kyrgyzstan 88,953 1,024
  Ivory Coast 88,425 835
  Suriname 82,496 1,405
  New Caledonia 80,064 314
  French Polynesia 79,302 650
  Eswatini 75,191 1,427
  Guyana 74,125 1,301
  Belize 71,409 688
  Fiji 69,047 885
  Madagascar 68,525 1,427
  Jersey 66,391 161
  Cabo Verde 64,474 417
  Sudan 63,993 5,046
  Mauritania 63,854 997
  Bhutan 62,697 21
  Syria 57,423 3,163
  Burundi 54,569 15
  Guam 52,287 419
  Seychelles 51,686 172
  Gabon 49,051 307
  Andorra 48,015 159
  Papua New Guinea 46,864 670
  Curaçao 45,883 305
  Aruba 44,224 292
  Tanzania 43,225 846
  Mayotte 42,027 187
  Togo 39,530 290
  Guinea 38,572 468
  Bahamas 38,084 844
  Isle of Man 38,008 116
  Lesotho 36,138 709
  Guernsey 35,326 67
  Faroe Islands 34,658 28
  Haiti 34,298 860
  Mali 33,164 743
  Cayman Islands 31,472 37
  Saint Lucia 30,252 410
  Benin 28,036 163
  Somalia 27,334 1,361
  Federated States of Micronesia 26,547 65
  Solomon Islands 25,954 199
  United States Virgin Islands 25,389 132
  San Marino 25,292 126
  Republic of the Congo 25,219 389
  Timor-Leste 23,460 138
  Burkina Faso 22,122 400
  Liechtenstein 21,576 89
  Gibraltar 20,550 113
  Grenada 19,693 238
  Bermuda 18,860 165
  South Sudan 18,823 147
  Tajikistan 17,786 125
  Monaco 17,181 67
  Equatorial Guinea 17,130 183
  Samoa 17,057 31
  Tonga 16,958 12
  Marshall Islands 16,178 17
  Nicaragua 16,143 245
  Dominica 16,047 74
  Djibouti 15,690 189
  Central African Republic 15,466 113
  Northern Mariana Islands 14,656 41
  Gambia 12,626 372
  Collectivity of Saint Martin 12,324 46
  Vanuatu 12,019 14
  Greenland 11,971 21
  Yemen 11,945 2,159
  Caribbean Netherlands 11,922 41
  Sint Maarten 11,051 92
  Eritrea 10,189 103
  Saint Vincent and the Grenadines 9,674 124
  Guinea-Bissau 9,614 177
  Niger 9,515 315
  Comoros 9,109 160
  Antigua and Barbuda 9,106 146
  American Samoa 8,359 34
  Liberia 7,930 294
  Sierra Leone 7,818 125
  Chad 7,702 194
  British Virgin Islands 7,420 64
  Cook Islands 7,326 2
  Sao Tome and Principe 6,771 80
  Turks and Caicos Islands 6,754 40
  Saint Kitts and Nevis 6,607 46
  Palau 6,332 10
  Saint Barthélemy 5,507 5
  Nauru 5,393 1
  Kiribati 5,085 24
  Anguilla 3,904 12
  Wallis and Futuna 3,760 9
  Macau 3,514 121
  Saint Pierre and Miquelon 3,426 2
  Tuvalu 2,943 1
  Saint Helena, Ascension and Tristan da Cunha 2,166
  Falkland Islands 1,923
  Montserrat 1,403 8
  Niue 1,074
  Tokelau 80 0
  Vatican City 26 0
  Pitcairn Islands 4
  North Korea 1 6
  Turkmenistan 0 0
  1. இது SARS‑CoV‑2 என்ற வைரஸால் ஏற்படும் கோவிட்-19 என்ற நோயின் பெருந்தொற்றைப் பற்றிய கட்டுரையாகும் .[1]
  2. நெருக்கமான தொடர்பு என்பது WHOஆல் ஒரு மீட்டர் (~ 3.3 அடி)[10] என்றும் CDCஆல் 8 1.8 மீட்டர் (ஆறு அடி) என்றும் வரையறுக்கப்படுகிறது.[11]
  3. முகத்தை மூடாமல் இருமுவதன் மூலம் வெளிப்படும் வைரஸானது 8.2 மீட்டர்கள் (27 அடிகள்) தூரம் பயணிக்கும்.[12]
  4. Countries which do not report data for a column are not included in that column's world total.
  5. Data on member states of the European Union are individually listed, but are also summed here for convenience. They are not double-counted in world totals.
  6. Does not include special administrative regions (Hong Kong and Macau) or Taiwan.

இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக, ஊகான் உட்பட 57 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள், மற்றும் சுற்றியுள்ள ஊபேய் மாகாணத்தில் 15 நகரங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பூட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டன, அனைத்து நகர்ப்புற பொதுப் போக்குவரத்து, தொடருந்து, வானூர்தி மற்றும் தொலைதூரப் பேருந்துகள் மூலம் வெளிப்புறப் போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன.[51][52][53] பெய்ஜிங்கில் தடைசெய்யப்பட்ட நகர், பாரம்பரியக் கோயில் கண்காட்சிகள் மற்றும் பிற கொண்டாட்டக் கூட்டங்கள் உள்ளிட்ட பல சீனப் புத்தாண்டு நிகழ்வுகள் தடை செய்யப்பட்டன, சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.[54] ஆங்காங்கும் அதன் தொற்று நோய்ப் பரவல் எச்சரிக்கை அளவை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி, அவசரநிலையை அறிவித்தது, 2020 பிப்ரவரி நடுப்பகுதி வரை அதன் பள்ளிகளை மூடிப் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்தது.[55][56]

ஊகான் மற்றும் ஊபேய் மாகாணத்திற்கான பயணங்களுக்கு எதிராக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்தன.[57]

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைந்தது இரண்டு வாரங்களாவது தங்கள் உடல்நிலையை கண்காணிக்கவும், தீநுண்மியின் அறிகுறிகளைப் பற்றியும் அறிவிக்க மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.[58] கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கும் எவரும் ஒரு பாதுகாப்பு முகமூடியை அணிந்துகொண்டு மருத்துவரை நேரில் சென்று பார்வையிடுவதை விட மருத்துவரை தொலைத்தொடர்பு சாதனத்தின் உதவியால் மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.[[59] சீனாவில் வானூர்தி நிலையங்கள் மற்றும் தொடருந்து நிலையங்கள் தீநுண்மியைக் காவுபவர்களை அடையாளம் காணும் முயற்சியாக மனித வெப்பநிலை சோதனைகள், சுகாதார அறிவிப்புகள் மற்றும் தகவல் கையொப்பங்களை செயல்படுத்தியுள்ளன.[60]

சீன அறிவியலாளர்கள் தீநுண்மியின் மரபணு வரிசையை விரைவாகத் தனிமைப்படுத்தித் தீர்மானித்தனர். அத்துடன் ஏனைய நாடுகள் இந்நோயைக் கண்டறிவதற்கான பிசிஆர் சோதனைகளைத் தாமாகக் கண்டறிவதற்காக சீனா தான் கண்டுபிடித்த மரபணு வரிசையை மற்ற நாடுகளுக்குக் கொடுத்தது.[61][62][63][64] 2019-nCoV தீநுண்மியின் மரபணு வரிசை 75 முதல் 80 சதவிகிதம் SARS-CoV உடன் ஒத்ததாகவும், 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக பல்வேறு வௌவால் கொரோனாவைரசுகளைப் போலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.[65] ஆனாலும், இந்த வைரசு சார்சைப் போலவே ஆபத்தானதா என்பது தெளிவாக இல்லை.[61][62][63][64]

உலக சுகாதார அமைப்பு

தொகு

2020 சனவரி 30 அன்று, இத்தொற்றுப் பரவலை ஒரு பொது சுகாதாரப் பன்னாட்டு அவசரநிலையாக (PHEIC) என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இது 2009 ஆம் ஆண்டில் H1N1 தொற்றுநோய்க்குப் பின்னர் அறிவிக்கப்படுவது ஆறாவது முறையாகும்.[66][67][68][69]

2020 மார்ச் 12 அன்று, கோவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்து. உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனாவைரசு எதிராக அவசர மற்றும் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டணியோ குட்டரெஸ் அறிவுறுத்தியுள்ளார்.[70]

நாடுகள் வாரியாக தொற்றுகள்

தொகு

29 திசம்பர் 2024 அன்றைய நிலவரப்படி, 188 நாடுகளில், 24,77,40,899[4] பேர் பாதிக்கப்பட்டு, இவற்றுள் 50,17,139[4] பேர் உயிரிழந்துள்ளனர். இதில் {{{recovered}}}[4] பேர் மீண்டு வந்துள்ளனர். இதில் ஐக்கிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலி

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, இத்தாலியில் 243,061 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 34,954 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 194,928 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மார்ச் 21, அன்று மட்டும் 793 பேர் வைரசால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்குப் பிறகு கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்ட நாடு இது. மார்ச் 19 அன்று, தொற்றுநோயால் 3,405 இறப்புகள் ஏற்பட்டதாக அறியப்பட்டபிறகு, உலகிலேயே அதிக கொரோனாவைரசு தொடர்பான இறப்புகளைக் கொண்ட நாடாக இத்தாலி இருந்தது.[71]

ஐக்கிய அமெரிக்கா

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, ஐக்கிய அமெரிக்காவில் 3,366,515 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 137,191 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 988,656 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர். நாட்டின் வர்த்தக தலைநகரான நியூயார்க் நகரம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியா

தொகு

23 மே , 2021 நிலவரப்படி, இந்தியாவில் 26,530,132 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 22,674 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 534,620 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இலங்கை

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, இலங்கையில் 2,454 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 11 பேர் உயிரிழந்துள்ளார் மற்றும் 1,980 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

பாக்கித்தான்

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, பாக்கித்தானில் 248,872 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 5,197 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 156,700 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

தாய்லாந்து

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, தாய்லாந்தில் 3,217 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3,088 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

ஈரான்

தொகு

13 சூலை, 2020 நிலவரப்படி, ஈரானில் 257,303 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 12,829 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 219,993 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

மறைவு

தொகு

கொரோனா நுண்நச்சுயிரி நோய் பற்றி முதலில் அறிவித்து சீன அரசை எச்சரித்த சீன மருத்துவர், 34 அகவை நிரம்பிய, இலீ வென்லியாங்கு (Dr. Li Wenliang) கொரோனா நுண்நச்சுயிரி பாதிப்பால் இறந்துவிட்டார்.[72]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Naming the coronavirus disease (COVID-19) and the virus that causes it". World Health Organization (WHO).
  2. "Wuhan virus: Seafood market may not be only source of novel coronavirus, says expert". The Straits Times. 31 January 2020.
  3. 3.0 3.1 Huang, Chaolin; Wang, Yeming; Li, Xingwang; Ren, Lili; Zhao, Jianping; Hu, Yi; Zhang, Li; Fan, Guohui et al. (24 January 2020). "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet. doi:10.1016/S0140-6736(20)30183-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986264. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 "COVID-19 Dashboard by the Center for Systems Science and Engineering (CSSE) at Johns Hopkins University (JHU)". ArcGIS. Johns Hopkins University. பார்க்கப்பட்ட நாள் 3 November 2021.
  5. 5.0 5.1 5.2 5.3 "Coronavirus Update (Live)". Worldometer. 2020. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  6. https://www.bbc.com/tamil/global-51470389
  7. "Clinical features of patients infected with 2019 novel coronavirus in Wuhan, China". Lancet 395 (10223): 497–506. February 2020. doi:10.1016/s0140-6736(20)30183-5. பப்மெட்:31986264. 
  8. "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". World Health Organization (WHO). 30 January 2020. Archived from the original on 31 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  9. "WHO Director-General's opening remarks at the media briefing on COVID-19—11 March 2020". World Health Organization. 11 March 2020. பார்க்கப்பட்ட நாள் 11 March 2020.
  10. 10.0 10.1 10.2 "Q&A on coronaviruses (COVID-19)". World Health Organization. 17 April 2020. Archived from the original on 14 May 2020. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.
  11. 11.0 11.1 11.2 11.3 "How COVID-19 Spreads". Centers for Disease Control and Prevention (CDC). 2 April 2020. Archived from the original on 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  12. "Turbulent Gas Clouds and Respiratory Pathogen Emissions: Potential Implications for Reducing Transmission of COVID-19". JAMA. March 2020. doi:10.1001/jama.2020.4756. பப்மெட்:32215590. 
  13. "Q & A on COVID-19". European Centre for Disease Prevention and Control. பார்க்கப்பட்ட நாள் 30 April 2020.
  14. Hopkins, Claire. "Loss of sense of smell as marker of COVID-19 infection" (PDF). Ear, Nose and Throat surgery body of United Kingdom. Archived from the original on 27 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020. {{cite web}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  15. "Coronavirus Disease 2019 (COVID-19)—Symptoms". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 20 March 2020. பார்க்கப்பட்ட நாள் 21 March 2020.
  16. "Interim Clinical Guidance for Management of Patients with Confirmed Coronavirus Disease (COVID-19)". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 4 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020.
  17. "Symptoms of Novel Coronavirus (2019-nCoV)". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 10 February 2020. பார்க்கப்பட்ட நாள் 11 February 2020.
  18. "The COVID-19 epidemic". Tropical Medicine & International Health 25 (3): 278–280. March 2020. doi:10.1111/tmi.13383. பப்மெட்:32052514. 
  19. "Caring for Yourself at Home". U.S. Centers for Disease Control and Prevention (CDC). 11 February 2020. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  20. "Unite against COVID-19". Unite against COVID-19. Government of New Zealand. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020.
  21. "Here Comes the Coronavirus Pandemic: Now, after many fire drills, the world may be facing a real fire". த நியூயார்க் டைம்ஸ். 29 February 2020. https://www.nytimes.com/2020/02/29/opinion/sunday/corona-virus-usa.html. 
  22. "The Great Lockdown: Worst Economic Downturn Since the Great Depression". IMF Blog. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.
  23. Yuen, Kum Fai; Wang, Xueqin; Ma, Fei; Li, Kevin X. (2020). "The psychological causes of panic buying following a health crisis". International Journal of Environmental Research and Public Health 17 (10): 3513. doi:10.3390/ijerph17103513. பப்மெட்:32443427. https://www.mdpi.com/1660-4601/17/10/3513. 
  24. Scipioni, Jade (18 March 2020). "Why there will soon be tons of toilet paper, and what food may be scarce, according to supply chain experts". CNBC. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  25. "The Coronavirus Outbreak Could Disrupt the U.S. Drug Supply". Council on Foreign Relations. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  26. Watts, Jonathan; Kommenda, Niko (23 March 2020). "Coronavirus pandemic leading to huge drop in air pollution". The Guardian. https://www.theguardian.com/environment/2020/mar/23/coronavirus-pandemic-leading-to-huge-drop-in-air-pollution. 
  27. "Analysis: Coronavirus temporarily reduced China's CO2 emissions by a quarter". Carbon Brief. 19 February 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  28. "COVID-19 Educational Disruption and Response". UNESCO. 4 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.
  29. Clamp, Rachel (5 March 2020). "Coronavirus and the Black Death: spread of misinformation and xenophobia shows we haven't learned from our past". The Conversation. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020. {{cite web}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  30. Sui, Celine. "China's Racism Is Wrecking Its Success in Africa". {{cite web}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  31. Tavernise, Sabrina; Oppel Jr, Richard A. (23 March 2020). "Spit On, Yelled At, Attacked: Chinese-Americans Fear for Their Safety". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/03/23/us/chinese-coronavirus-racist-attacks.html. 
  32. Kuo, Lily; Davidson, Helen (29 March 2020). "'They see my blue eyes then jump back'—China sees a new wave of xenophobia". The Guardian. https://www.theguardian.com/world/2020/mar/29/china-coronavirus-anti-foreigner-feeling-imported-cases. 
  33. "Is the World Ready for the Coronavirus?". த நியூயார்க் டைம்ஸ். 29 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130005006/https://www.nytimes.com/2020/01/29/opinion/coronavirus-outbreak.html. பார்த்த நாள்: 30 January 2020. 
  34. "China virus death toll rises to 41, more than 1,300 infected worldwide". CNBC. 24 January 2020. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  35. Shih, Gerry; Lynch, David J.; Denyer, Simon. "Fifth coronavirus case confirmed in U.S., 1,000 more cases expected in China" இம் மூலத்தில் இருந்து 27 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200127132045/https://www.washingtonpost.com/world/asia_pacific/coronavirus-china-latest-updates/2020/01/26/4603266c-3fa8-11ea-afe2-090eb37b60b1_story.html. 
  36. "Confirmed 2019-nCoV Cases Globally | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.
  37. "Novel Coronavirus(2019-nCoV)" (PDF). உலக சுகாதார அமைப்பு (WHO).
  38. 38.0 38.1 Hessen, Margaret Trexler (27 January 2020). "Novel Coronavirus Information Center: Expert guidance and commentary". Elsevier Connect (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 January 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  39. Rothe, Camilla; Schunk, Mirjam; Sothmann, Peter; Bretzel, Gisela; Froeschl, Guenter; Wallrauch, Claudia; Zimmer, Thorbjörn; Thiel, Verena et al. (30 January 2020). "Transmission of 2019-nCoV Infection from an Asymptomatic Contact in Germany". New England Journal of Medicine. doi:10.1056/NEJMc2001468. 
  40. 40.0 40.1 "Tracking coronavirus: Map, data and timeline". BNO News. 10 February 2020. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 10 February 2020.
  41. Qin, Amy; Hernández, Javier C. (10 January 2020). "China Reports First Death From New Virus". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 11 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200111020017/https://www.nytimes.com/2020/01/10/world/asia/china-virus-wuhan-death.html. 
  42. "HKUMed WHO Collaborating Centre for Infectious Disease Epidemiology and Control releases real-time nowcast on the likely extent of the Wuhan coronavirus outbreak, domestic and international spread with the forecast for chunyun". HKUMed School of Public Health. Archived from the original on 25 January 2020. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.
  43. Joseph, Andrew (24 January 2020). "New coronavirus can cause infections with no symptoms and sicken otherwise healthy people, studies show". STAT இம் மூலத்தில் இருந்து 24 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200124204338/https://www.statnews.com/2020/01/24/coronavirus-infections-no-symptoms-lancet-studies/. 
  44. Chan, Jasper Fuk-Woo; Yuan, Shuofeng; Kok, Kin-Hang; To, Kelvin Kai-Wang; Chu, Hin; Yang, Jin; Xing, Fanfan; Liu, Jieling et al. (24 January 2020). "A familial cluster of pneumonia associated with the 2019 novel coronavirus indicating person-to-person transmission: a study of a family cluster". The Lancet 0. doi:10.1016/S0140-6736(20)30154-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0140-6736. பப்மெட்:31986261. 
  45. Schnirring, Lisa (25 January 2020). "Doubts rise about China's ability to contain new coronavirus". CIDRAP. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  46. "China coronavirus: 'family cluster' in Vietnam fuels concerns over human transmission". South China Morning Post. 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  47. "Germany confirms human transmission of coronavirus". Deutsche Welle. 28 January 2020. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  48. "Philippines reports first coronavirus death outside China after travel ban". South China Morning Post. 2 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  49. Wang, Christine (2 February 2020). "Philippines reports first death outside of China in coronavirus outbreak". CNBC. பார்க்கப்பட்ட நாள் 2 February 2020.
  50. ரிட்சீ, ஆன்னா; மாத்தியு, எடவுர்டு; ரோட்சு-குயிரோ, லூகசு; அப்பெல், கேமரன்; கியாட்டினோ, சார்லி; ஒர்டிசு-ஒசுபினா, எசுடபான்; ஆசெல், ஜோ; மெக்டானல்டு, பாப்பி; பெல்ட்கியன், டையானா; டட்டானி, சலொனி; ரோசர், மாக்சு (2020–22). "கொரோனாவைரசு பெருந்தொற்று (கோவிட்-19)". அவர் வேர்ல்டு இன் டேட்டா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-22.{{cite web}}: CS1 maint: date format (link)
  51. James Griffiths; Amy Woodyatt. "Wuhan coronavirus: Thousands of cases confirmed as China goes into emergency mode". CNN. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 29 January 2020.
  52. Hui, Jane Li, Mary. "China has locked down Wuhan, the epicenter of the coronavirus outbreak". Quartz. பார்க்கப்பட்ட நாள் 23 January 2020.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  53. Hamblin, James (24 January 2020). "A Historic Quarantine – China's attempt to curb a viral outbreak is a radical experiment in authoritarian medicine". The Atlantic. Archived from the original on 28 January 2020.
  54. "China cancels Lunar New Year events over deadly virus fears". Deutsche Welle. 23 January 2020. பார்க்கப்பட்ட நாள் 24 January 2020.
  55. "Hong Kong Chinese New Year | Hong Kong Tourism Board". www.discoverhongkong.com. Archived from the original on 29 November 2019. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  56. Lum, Alvin; Sum, Lok-kei (25 January 2020). "China coronavirus: Hong Kong leader hits back at delay criticism as she suspends school classes, cancels marathon and declares city at highest level of emergency". South China Morning Post (South China Morning Post) இம் மூலத்தில் இருந்து 25 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200125085413/https://www.scmp.com/news/hong-kong/health-environment/article/3047645/china-coronavirus-hong-kong-students-get-two-more. பார்த்த நாள்: 26 January 2020. 
  57. Gilbertson, Jayme Deerwester and Dawn. "Coronavirus: US says 'do not travel' to Wuhan, China, as airlines issue waivers, add safeguards". USA TODAY-US. Archived from the original on 27 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  58. bw_mark-US. "Travelers from China asked to check for flu-like symptoms | BusinessWorld". Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  59. "MOH | Updates on Novel Coronavirus". www.moh.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  60. "Coronavirus Update: Masks And Temperature Checks In Hong Kong". Nevada Public Radio. Archived from the original on 2 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  61. 61.0 61.1 Hui, David S.; Azhar, Esam EI; Madani, Tariq A.; Ntoumi, Francine; Kock, Richard; Dar, Osman; Ippolito, Giuseppe; Mchugh, Timothy D. et al. (14 January 2020). "The continuing epidemic threat of novel coronaviruses to global health – the latest novel coronavirus outbreak in Wuhan, China". International Journal of Infectious Diseases 91: 264–266. doi:10.1016/j.ijid.2020.01.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1201-9712. பப்மெட்:31953166. https://www.ijidonline.com/article/S1201-9712(20)30011-4/pdf. பார்த்த நாள்: 16 January 2020. 
  62. 62.0 62.1 "Undiagnosed pneumonia – China (HU) (01): wildlife sales, market closed, RFI Archive Number: 20200102.6866757". Pro-MED-mail. International Society for Infectious Diseases. Archived from the original on 22 January 2020. பார்க்கப்பட்ட நாள் 13 January 2020.
  63. 63.0 63.1 Cohen, Jon; Normile, Dennis (17 January 2020). "New SARS-like virus in China triggers alarm". Science 367 (6475): 234–235. doi:10.1126/science.367.6475.234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:31949058. 
  64. 64.0 64.1 Parry, Jane (January 2020). "China coronavirus: cases surge as official admits human to human transmission". British Medical Journal 368: m236. doi:10.1136/bmj.m236. பன்னாட்டுத் தர தொடர் எண்:1756-1833. பப்மெட்:31959587. 
  65. Perlman, Stanley (24 January 2020). "Another Decade, Another Coronavirus". New England Journal of Medicine 0: null. doi:10.1056/NEJMe2001126. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-4793. பப்மெட்:31978944. 
  66. "Coronavirus declared global health emergency". பிபிசி. 30 January 2020 இம் மூலத்தில் இருந்து 30 January 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200130201004/https://www.bbc.com/news/world-51318246. 
  67. Joseph, Andrew (30 January 2020). "WHO declares coronavirus outbreak a global health emergency". Stat News. https://www.statnews.com/2020/01/30/who-declares-coronavirus-outbreak-a-global-health-emergency/. 
  68. Wee, Sui-Lee; McNeil Jr., Donald G.; Hernández, Javier C. (30 January 2020). "W.H.O. Declares Global Emergency as Wuhan Coronavirus Spreads". https://www.nytimes.com/2020/01/30/health/coronavirus-world-health-organization.html. 
  69. "Statement on the second meeting of the International Health Regulations (2005) Emergency Committee regarding the outbreak of novel coronavirus (2019-nCoV)". உலக சுகாதார அமைப்பு (WHO). 30 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  70. "Coronavirus: what the WHO pandemic declaration means".
  71. "Coronavirus: Italy death toll reaches 3,405, overtaking China".
  72. "Chinese Doctor, Silenced After Warning of Outbreak, Dies From Coronavirus".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிட்-19_பெருந்தொற்று&oldid=3931203" இலிருந்து மீள்விக்கப்பட்டது