ஈசநாட்டு கள்ளர்
ஈசநாட்டுக்கள்ளர் (Esanattu Kallar) அல்லது ஈசங்க நாட்டுக்கள்ளர் எனப்படுவோர் தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூகத்தின் கிளைப்பிரிவுகளில் உள்ள ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களும் தேவர் அல்லது முக்குலத்தோர்களின் ஒரு பிரிவினர் ஆவர்.
தமிழகத்தில் உள்ள கள்ளர் இனத்தவர்களுள், அவரவரின் வேறுபட்ட இடங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக உள்ளனர். அதில் ஈசநாட்டுக்கள்ளர், பிறமலைக்கள்ளர், கிளைவழி கள்ளர்கள், நாட்டார்கள்ளர் அல்லது அம்பலக்கள்ளர் மற்றும் கள்ளர் குலத் தொண்டைமான் என்பன முக்கிய பிரிவுகளாகும்.[1][2]
சொற்பிறப்பு
தொகுஎட்கர் தர்ஸ்டன் அவர்களின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்ற நூலில், 1891 கணக்கெடுப்பின்படி கள்ளர்களின் உட்பிரிவுகள் எண்ணிக்கையில் மிகப் பலவாகப் பதியப்பட்டுள்ளன. அதில் விசங்குநாடு கள்ளர் என்பது ஈசங்க நாடக மருவி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. [3]
1874 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சாணார் குல மரபு என்ற நூலில் ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்களில்ப் பெயர். ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக ஈசநாட்டு கள்ளரை பற்றி குறிப்பிடுகிறார்.[4]
வரலாறு
தொகுஈசங்க நாட்டுக் கள்ளர்கள் சோழமன்னர்களின் பங்காளிகள் எனவும் தமது முன்னோர்களாக கரிகாலனையும் கூறிக்கொள்கின்றனர் என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.[5]
இவர்கள் குலத்தில் ஆதிகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தனக்காரர்கள் தலைவராவர். ஆண் குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம். தேவர், வாண்டையார், சேதுராயர், மழவராயர், காளிங்கராயர், சோழகர், களத்தில்வென்றார், பல்லவராயர், தொண்டைமான், நாட்டார், பழுவேட்டரையர், சோழங்கதேவர், அதிகமான், ஈழத்தரையர், கொல்லத்தரையர், கடாரங்கொண்டார்,விஜயதேவர், மண்ணையார், மாளுசுத்தியார், முதலியார், வன்னியர், வல்லத்தரையர், போன்ற பட்டங்கள் பல நூறுகள் உள்ளது. ஆண்களுக்கு அவர்கள் சொந்தப் பட்டங்களில் திருமணம் நடத்துவதில்லை. மற்ற பட்டங்களில் சேர்ந்தவர்களில் பெண் எடுப்பர். திருமணத்தில் குலத்தலைவன் சொற்படி நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பொதுவாக இவர்கள் சைவ மற்றும் வைணவ சம்பிரதாயம் உடையவர்கள். எனவே அதிகப்படியாகப் பிற சமூகத்துடன் தொடர்பு கொள்வதில்லை. இவர்களில் பெண்கள் காதணி மற்றும் பல அணிகள் அதிகம் அணிகின்றனர். காது வளர்த்தல் என்ற ஒரு முறையில் காதில் நீண்ட துவாரம் செய்து அவற்றில் வளையம் போன்ற ஒரு பகுதி தோளைத் தொடும் அளவுக்குப் போடுவர். [5]
தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால் கி.பி. 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்ற ஆய்வு நூலில், ஈசங்க நாட்டுக் கள்ளர்கள் பற்றி பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் பலர் மிக ஏழைகளாகவு மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் வாழ்கின்றனர். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவதுண்டு என்கிறார்.[6]
"சோழன்" என்ற பட்டம் ஈசங்க நாட்டுக் கள்ளர்களில் ஒரு பிரிவினரால் இன்னும் சுமக்கப்படுகிறது. எனவே, அந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான பெயர் வீர என்றால், அவரது முழுப் பெயர் வீர சோழன். அந்த குலத்தை சேர்ந்தவர்களை தஞ்சை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். [7]
இவர்களில் சிற்றரசர்களாக புதுக்கோட்டை தொண்டைமான், அறந்தாங்கி தொண்டைமான் மற்றும் புதுக்கோட்டை பல்லவராயர் மன்னர்கள் இருந்தனர்.
ஈசநாட்டு கள்ளர் பிரிவு ஜமீன்கள்
தொகுதஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த ஈசநாட்டு கள்ளர் மரபினரின் ஜமீன்கள்
- பாப்பா நாடு சமீன் - விஜயதேவர்,
- கந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்,
- பாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்,
- சிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்,
- புனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார்,
- நெடுவாசல் ஜமீன் பன்றிகொண்டார்,
- பாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
- கல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
- சில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்,
- மதுக்கூர் ஜமீன் - கோபாலர்,
- சேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்,
- அய்யம்பேட்டை சாவடி ஜமீன் - நாயக்கர்,
- உக்கடை ஜமீன் - தேவர்,
- பூண்டி ஜமீன் - வாண்டையார்.[8][9]
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- பாப்பா நாடு ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் சாமினாத விஜயத்தேவர்.
- உக்கடை ஜமீன் ஸ்ரீ ராவ் பகதூர் அண்ணாசாமி தேவர்.
- பாலையவனம் ஜமீன் வணங்கமுடி பண்டாரத்தார் .
- கந்தர்வக்கோட்டை ஜமீன் அச்சுதப்பண்டாரத்தார்.
- பூண்டி ஸ்ரீ ராவ் பகதூர் வி. அப்பசாமி வாண்டையார்.
- பெருங்கமருத்துத பல்லவராயர், புதுக்கோட்டை சமஸ்தானம் அரசப் பிரதிநிதி.
- ஸ்ரீமான் பெ.ந. குப்புசாமி கடாரத் தலைவர், தேவஸ்தான ஸ்தாபகர் அருள்மிகு ஸ்ரீ முனீசுவரர் திருக்கோயில், பர்மா
- அய்யம்பேட்டை சாவடி ஜமீன் கிருஷ்ணசாமி நாயக்கர்[10]
- மதுக்கூர் ஜமீன் ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
- அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- க. முத்துசாமி வல்லத்தரசு, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
- கோபால்சாமி தென்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
- ஆர். சுவாமிநாத மேற்கொண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் தமிழக அரசியல்வாதி.
- நடராஜன் குமராண்டார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- வைரக்கண்ணு மாளுசுத்தியார், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- பட்டுராசு களப்பாடியார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
- ரத்னசாமி காளிங்கராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- ஏ. தியாகராஜன் காடுவெட்டியார் , தமிழக அரசியல்வாதி.
- சோமசுந்தர் காடவராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மாதூரார், தொழிற்சங்கப் போராட்டவாதி.
- சி. நாராயணன் வாணதிராயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- ச. சாமிவேலு நரங்கியர், முன்னாள் மலேசிய இந்திய காங்கிரசு தலைவர், ஊராட்சி வீடமைப்புத் துறை மற்றும் பொதுப்பணி அமைச்சராக இருந்தவர்.[11]
- ராமசாமி ஓந்திரியர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
- திருச்சி பிரேமானந்தா மழவராயர், ஆன்மீக குரு மற்றும் பிரேமானந்தா மடம் நிறுவியவர்.
- சிவாஜி கணேசன் மன்றாயர், திரைப்பட நடிகர்.[12]
- ஆர். முத்துராமன் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
- பிரபு மன்றாயர், திரைப்பட நடிகர்
- கார்த்திக் ஓந்திரியர் , திரைப்பட நடிகர்
- மனோரமா கிளாக்குடையார், திரைப்பட நடிகை.
- சினேகன் கொடும்புரார் , பாடலாசிரியர்.
- பசுபதி ஆர்சுத்தியார் , திரைப்பட நடிகர்
- காசிநாதன் பாஸ்கரன் சிட்டாச்சியார் , இந்திய கபடி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர்.
- தர்மராஜ் சேரலாதன்சோழகர் , இந்திய கபடி வீரர் மற்றும் 2016 இல் நடந்த கபடி உலகக் கோப்பையில் தங்கம் வென்ற இந்திய கபடி அணியில் உறுப்பினர்.
- ப. அனுராதா உத்தமுண்டார் , தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை.[13]
- கேப்டன் பவித்ரா சேதுராயர், தமிழ்நாடு பெண்கள் கபடி அணியின் கேப்டன்.[14]
- சௌமியமூர்த்தி தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
- இரா. தமிழ்ச்செல்வன், மராட்டிய அரசியல்வாதி.
- ராஜகுமார் விஜய ரகுநாத தொண்டைமான், தமிழக அரசியல்வாதி
- வி. இராமையா சேப்பிளார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் பொதுப்பணித்துறை, உணவுத்துறை அமைச்சர்
- மன்னை நாராயணசாமி ஓந்திரையர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் கூட்டுறவு, விவசாயம், உள்ளாட்சித் துறை அமைச்சர்.
- எஸ். டி. சோமசுந்தரம் கோபாலர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்.
- டி. என். அனந்தநாயகி வாண்டையார் , இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர்.
- ஆறுமுகன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் முன்னாள் கால்நடைவள, கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர்
- வி. கே. சசிகலா சாளுவர், தமிழக அரசியல்வாதி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்.[15]
- டி. டி. வி. தினகரன் முனையதரையர், அஇஅதிமுக முன்னாள் பொருளாளரும் மற்றும் அம்முக நிறுவனர்
- ஸ்ரீதர் வாண்டையார், தலைவர் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
- ஜீவன் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி மற்றும் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்.
- அன்பில் பி. தர்மலிங்கம் நாட்டார் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் அமைச்சர்.
- எல். கணேசன் கண்டபிள்ளை , தமிழக அரசியல்வாதி மற்றும் மொழிப்போர் தியாகி.
- தா. வீராசாமி அதிகைமான் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னால் உணவுத்துறை, வணிகவரித்துறை அமைச்சர்.
- எஸ். எஸ். பழனிமாணிக்கம் வன்னியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர்.
- சி. விஜயபாஸ்கர் மழவராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர்.
- ஆர். காமராஜ் காளிங்கராயர், தமிழக அரசியல்வாதி மற்றும் உணவுத்துறை அமைச்சர்.
- ஆர். வைத்திலிங்கம் சேதுராயர் , தமிழக அரசியல்வாதி மற்றும் தொழில்துறை, வனம், சுற்றுச்சூழல் வீட்டுவசதி மற்றும ஊரக வீட்டுவசதித் துறை அமைச்சர்.
- அழகு. திருநாவுக்கரசு சேண்டபிரியர் , தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
- துரை. விஜய ரகுநாத பல்லவராயர், தமிழக அரசியல்வாதி.
- நா. சுந்தர்ராஜ் சேப்ளார், தமிழக அரசியல்வாதி.
- துரை சந்திரசேகரன் பாண்டுரார், தமிழக அரசியல்வாதி.
- ஜி. முருகையா சேதுரார், தமிழக அரசியல்வாதி.
- கோவிந்தராசு கலிங்கராயர், தமிழக அரசியல்வாதி.
- கே. என். சேகரன் கார்கொண்டார் , தமிழக அரசியல்வாதி
- கி. அய்யாறு வாண்டையார், தமிழக அரசியல்வாதி
- அன்பில் பெரியசாமி நாட்டார், தமிழக அரசியல்வாதி
- செந்தில் தொண்டமான், இலங்கை அரசியல்வாதி.
- அன்பில் பொய்யாமொழி நாட்டார், தமிழக அரசியல்வாதி.
மேற்கோள்கள்
தொகு- ↑ சங்க இலக்கியம் காட்டும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல். 2016. p. 200.
- ↑ பிறமலைக்கள்ளர் சமுதாய மொழியியல். 1977. p. 40.
- ↑ தென்னிந்தியக் குலங்களும் குடிகளும். 1987. p. 95.
- ↑ சாணார் குல மரபுகள். 1874. p. 46.
- ↑ 5.0 5.1 கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை. 2007. p. 89.
- ↑ கருணாமிர்த சாகரம். 1917. p. 281.
- ↑ The Ancient Heroes Of South India Peninsula. 1893. p. 13.
- ↑ மூவேந்தர் குல தேவர் சமூக வரலாறு. 1976. pp. 115.
- ↑ ந. மு. வேங்கடசாமி நாட்டார் (1923). கள்ளர் சரித்திரம். சென்னை: Jegam & Co, Dodsin Press. p. 91.
- ↑ Thanjavur Maratha Kings.
- ↑ Cage of Freedom: Tamil Identity and the Ethnic Fetish in Malaysia. 2007. p. 298.
- ↑ "Actor Sivaji Ganesan". Daily FT.
- ↑ "அனுராதா: பளுதூக்கும் போட்டி". பிபிசி(தமிழ்).
- ↑ "கபடி... கபடி...!". தினத்தந்தி.
- ↑ "Sasikala". Indian Express.