கிளம்பாக்கம் பேருந்து நிலையம்

கிளம்பாக்கம் பேருந்து முனையம் (Kilambakkam Bus Terminus) என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 ஏக்கர்கள் (358,200 m2) பரப்பளவில் அமையவுள்ள பேருந்து நிலையமாகும்.[1] இது கோயம்பேடு நகரிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முன்மொழியப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து, தென் தமிழ்நாட்டிற்கு குறிப்பாக திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசாங்க பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.

கிளம்பாக்கம் பேருந்து முனையம்
இடம்ஜிஎஸ்டி சாலை, கிளம்பாக்கம், சென்னை
உரிமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நடைமேடை215
இணைப்புக்கள்சென்னை புறநகர் பேருந்து நிலையம்
மாநகரப் போக்குவரத்துக் கழகம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல்உள்ளது
வரலாறு
திறக்கப்பட்டதுஇல்லை
போக்குவரத்து
பயணிகள் 150000 எதிர்பார்க்கபடுகின்றன

காலக்கோடுதொகு

கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தார். முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் வண்டலூர் மண்டலத்தில் அமையவிருக்கிறது.

பேருந்து நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 88 ஏக்கர் நிலம், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட இடத்தின் அருகிலுள்ளது. 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருளியல் தளங்கள் மற்றும் அழிவுச் சட்டம் (AMASR சட்டம்) திருத்தத்தின் படி, ஏ. எஸ். ஐ.யின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 100 மீட்டருக்குள் அனைத்து கட்டுமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 200 மீற்றர் சுற்றளவில் எவ்விதமான கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு அல்லது பழுதுபார்க்க ஏ. எஸ். ஐயிடம் அனுமதி பெறப்படவேண்டும்.[2] >[3]

சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ரீச் ஃபவுண்டேஷனை "பாரம்பரிய தாக்க மதிப்பீட்டை" செய்யுமாறு கேட்டுக் கொண்டது.[4]

ஐந்து நிபந்தனைகளின் கீழ் மொத்த உயரம் 34 மீட்டர் அடி உயரம் கொண்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு NMA அனுமதி வழங்கியது. பசுமையைத் தவிர்த்து 100 மீட்டர் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் எந்தவொரு அபிவிருத்தியும் இருக்காது என்பதையும்; தளத்தின் எல்லை மற்றும் விளம்பரப் பலகை நிறுவதல் ஆகியவற்றை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.[5]

புதிய பேருந்து நிலையத்திற்கு, 2019 பிப்ரவரி 22 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.[6] முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் 394 கோடி செலவில் கட்டப்படும். இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனம், சி.ஆர் நாராயண ராவ் (கன்சல்டன்ஸ்) பிரைவேட் லிமிடெட் ஆகும்.

வசதிகள்தொகு

இந்த திட்டத்திற்கான நில அளவு 88.52 ஏக்கராக உள்ளது. மொத்த கட்டிட பரப்பளவு 6.4 இலட்ச சதுர அடி ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 215 பேருந்து நிறுத்தங்கள் அமையவுள்ளன, அதில் 130 அரசு பேருந்து, 85 தனியார் பேருந்து நிறுத்தங்களும் உள்ளடக்கமாகும். 3.99 ஏக்கர் பரப்பளவில் 300 பேருந்துகள் துணை உறைவிட நிறுத்தமிடம், 1.99 ஏக்கர் பரப்பளவில் 275 தானுந்துகள், 3582 இரு சக்கர வாகன நிறுத்தம் அமையவிருக்கின்றன.[7] [8]

  • முன்மொழியப்பட்ட முனையத்தின் பொதுமக்கள் தங்கும் வளாகம் 2014 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும்.
  • "தாய்மார்கள் அறை", மருத்துவ மையம், மருந்தகம், இரண்டு சரக்கு அறை, பொருள்வைப்பு அறை மற்றும் ஏடிஎம்.
  • 100 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் தங்க தனித்தனி விடுதி, 340 ஓட்டுனர்களுக்கு இடமளிக்க 4 ஓட்டுனர் விடுதி.
  • தரை தளத்தில் 4 கழிவறை பகுதிகள், ஒரு பாதுகாப்பு / சி.சி.டிவி அறை, ஆறு மின் அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை.
  • 20 டிக்கெட் கவுண்டர்கள், 3 போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 3 நேர அலுவலகங்கள்.
  • 1402 சதுர மீட்டர் பரப்பளவில் 40 சிறு கடைகள், 402 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு உணவகங்கள்.
  • 0.54 ஏக்கரில் தீ கட்டுப்பாட்டு சேவை மையம்/ 0.98 ஏக்கரில் துணை மின் நிலையம் / 0.96 ஏக்கரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியன அமையவுள்ளன.

பேருந்து வளாகம்தொகு

6 பேருந்து நிறுத்து விரல் போன்ற அமைப்பின் மீது 12 தளங்கள் அமைய உள்ளன. இங்கு 14 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரே நேரத்தில் 130 அரசு பேருந்துகள் மற்றும் 85 தனியார் பேருந்துகள் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு இணைப்புகளை வழங்கவிருக்கின்றது.

எம்.டி.சி. பேருந்து நிலையம், ஜி.எஸ் டி சாலைக்கு அருகில் உள்ள 7.4 ஏக்கர் பரப்பளவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 1,100 மீட்டர் நீளம் மற்றும் நான்கு மீட்டர் அகலமுடைய மேடை மற்றும் எட்டு மீட்டர் பரப்பளவில் மேற்கூரை அமையவுள்ளது.

இரண்டு ஏக்கர் பரப்பளவில், ஒரு பேருந்து பட்டறை அமைய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Kilambakkam bus terminus to open in 18 months". The Hindu (Chennai: Kasturi & Sons). 23 Feb 2019. https://www.thehindu.com/news/cities/chennai/bus-terminus-at-kilambakkam-coming-in-18-months/article26345331.ece. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  2. "Bus terminus at burial site? CMDA gets ‘stop work’ notice from ASI". New indian express (Chennai). 25 Apr 2017. http://www.newindianexpress.com/cities/chennai/2017/apr/25/bus-terminus-at-burial-site-cmda-gets-stop-work-notice-from-asi-1597402.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  3. . https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8F-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/article9153046.ece
  4. "CMDA hopes to push case for Kilambakkam terminus project with heritage impact report". The New Indian Express (Chennai). 26 Oct 2018. http://www.newindianexpress.com/cities/chennai/2018/oct/26/cmda-hopes-to-push-case-for-kilambakkam-terminus-project-with-heritage-impact-report-1890183.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  5. "Kilambakkam bus terminus awaits NMA nod". DT NEXT (Chennai). 25 Feb 2019. https://www.dtnext.in/News/City/2019/02/25033500/1108096/Kilambakkam-bus-terminus-awaits-NMA-nod.vpf. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  6. "Foundation stone laid for Kilambakkam bus terminus". Times of India (Chennai). 22 Feb 2019. https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-foundation-stone-laid-for-kilambakkam-bus-terminus/articleshow/68118145.cms. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  7. "Kilambakkam bus terminus: CM to break ground today". New Indian Express (Chennai). 22 Feb 2019. http://www.newindianexpress.com/cities/chennai/2019/feb/22/kilambakkam-bus-terminus-cm-to-break-ground-today-1942102.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  8. http://www.newindianexpress.com/cities/chennai/2017/oct/08/bot-model-likely-for-new-bus-terminus-1668564.html