நவம்பர் 13
நாள்
(13 நவம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | நவம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
நவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).
- 1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர்.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.
- 1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.
- 1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.
- 1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.
- 1914 – பர்பர் இனத்தவர்கள் மொரோக்கோவில் எல் எரி என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளுடன் மோதி அவர்களுக்கு பெரும் சேதத்தை உண்டுபண்ணினர்.
- 1916 – முதலாம் உலகப் போர்: இராணுவத்துக்குக் கட்டாய ஆள் சேர்ப்பை ஆதரித்தமைக்காக ஆத்திரேலியப் பிரதமர் பில்லி இயூசு தொழிற் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
- 1918 – உதுமானியப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டண்டினோபில் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றின.
- 1927 – நியூ செர்சியையும் நியூயார்க் நகரையும் அட்சன் ஆறு ஊடாக இணைக்கும் ஆலந்து சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: வானூர்தி தாங்கிக் கப்பல் ஆர்க் ரோயல் செருமனியின் யூ-81 கப்பலினால் தாக்கப்பட்டது. அடுத்த நாள் இது மூழ்கியது.
- 1946 – இலங்கை அரசியல்வாதியும் விமானியுமான ஜே. பி. ஒபயசேகர தனது சொந்த ஒற்றை-இயந்திர வானூர்தியை இலண்டனில் இருந்து இரத்மலானைக்கு 7,000 மைல்கள் தூரம் செலுத்தி சாதனை படைத்தார்.[1]
- 1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.
- 1950 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் கரகசு நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
- 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.
- 1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் உயிரிழந்தனர்.
- 1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூசு என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
- 1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
- 1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.
- 1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
- 1995 – சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.
- 2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.
- 2013 – அவாய் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது.
- 2015 – பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
- 2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே வீழ்ந்தது.
பிறப்புகள்
- 354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430)
- 1312 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வார்டு (இ. 1377)
- 1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839)
- 1850 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894)
- 1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)
- 1899 – ஹுவாங் சியான் புயான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982)
- 1913 – வி. அப்பாபிள்ளை, இலங்கை இயற்பியலாளர் (இ. 2001)
- 1914 – என்றி லங்லொவைசு, பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977)
- 1923 – ஆல்பர்ட் ராமசாமி, இரீயூனியன் அரசியல்வாதி
- 1933 – மோகன் ராம், தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993)
- 1934 – கமால் கமலேஸ்வரன், மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்
- 1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
- 1940 – சவுல் கிரிப்கே, அமெரிக்க மெய்யியலாளர்
- 1942 – அம்பிகா சோனி, இந்திய அரசியல்வாதி
- 1947 – அனில் அகர்வால், இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002)
- 1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க இயற்பியலாளர்
- 1948 – உமாயூன் அகமது, வங்காளதேச எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 2012)
- 1956 – அம்பிகா சீனிவாசன், மலேசிய சமூக நீதியாளர்.
- 1958 – இந்திரா சௌந்தரராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 2024)
- 1967 – ஜூஹி சாவ்லா, இந்திய நடிகை
- 1969 – அயான் கேர்சி அலி, சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி
- 1984 – விக்ராந்த், இந்திய திரைப்பட நடிகர்
இறப்புகள்
- 1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)
- 1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)
- 1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933)
- 1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)
- 1996 – உரோபெர்த்தா வைல், ஆத்திரேலிய வானியற்பியலாளர் (பி. 1959)
- 2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)
- 2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Principal Ceylon Events, 1946". Ferguson's Ceylon Directory, Colombo. 1947.
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "நவம்பர் 13 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்