கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம் (Kalaignar Centenary Bus Terminal- Kilambakkam) என்பது இந்தியாவின், சென்னையில் உள்ள ஜி. எஸ். டி சாலை மீது 88.52 ஏக்கர்கள் (358,200 m2) பரப்பளவில் அமைந்துள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாகும்.[1][2] இது கோயம்பேடு நகரிலுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 2019 ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் - கிளாம்பாக்கம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜிஎஸ்டி சாலை, கிளாம்பாக்கம், சென்னை
உரிமம்சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
நடைமேடை215
இணைப்புக்கள்சென்னை புறநகர் பேருந்து நிலையம்
மாநகரப் போக்குவரத்துக் கழகம்
கட்டமைப்பு
தரிப்பிடம்உள்ளது
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மாற்றுத்திறனாளி அணுகல்உள்ளது
வரலாறு
திறக்கப்பட்டது30.12.2023
பயணிகள்
பயணிகள் 150000 எதிர்பார்க்கபடுகின்றன

இந்த பேருந்து நிலையத்திலிருந்து, தென் தமிழ்நாட்டிற்கு குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், காரைக்குடி, தூத்துக்குடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, திருநெல்வேலி கன்னியாகுமரி போன்ற நகரங்களுக்கு மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன. இது ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகும். இங்கிருந்து புறநகர் அரசாங்க பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

காலக்கோடு

தொகு

கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி, அன்றைய முதல்வர் ஜெயலலிதா புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்தார். முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் வண்டலூர் மண்டலத்தில் அமைந்திருக்கிறது.

பேருந்து நிலையத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 88 ஏக்கர் நிலம், இந்தியாவின் தொல்பொருள் ஆய்வகத்தினால் பாதுகாக்கப்படும் மற்றும் தடைசெய்யப்பட்ட இடத்தின் அருகிலுள்ளது. 2010 ஆம் ஆண்டு சனவரி மாதம் பண்டைய நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருளியல் தளங்கள் மற்றும் அழிவுச் சட்டம் (AMASR சட்டம்) திருத்தத்தின் படி, ஏ. எஸ். ஐ.யின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் 100 மீட்டருக்குள் அனைத்து கட்டுமானங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 200 மீற்றர் சுற்றளவில் எவ்விதமான கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்பு அல்லது பழுதுபார்க்க ஏ. எஸ். ஐயிடம் அனுமதி பெறப்படவேண்டும்.[3][4] என்பதால் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) ரீச் ஃபவுண்டேஷனை "பாரம்பரிய தாக்க மதிப்பீட்டை" செய்யுமாறு கேட்டுக் கொண்டது.[5]

அந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து நிபந்தனைகளின் கீழ் மொத்த உயரம் 34 மீட்டர் அடி உயரம் கொண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை நிர்மாணிப்பதற்கு NMA அனுமதி வழங்கியது. பசுமையைத் தவிர்த்து 100 மீட்டர் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் எந்தவொரு அபிவிருத்தியும் இருக்காது என்பதையும்; தளத்தின் எல்லை மற்றும் விளம்பரப் பலகை நிறுவதல் ஆகியவற்றை மாநில அரசு உறுதி செய்யவேண்டும்.[6]

புதிய பேருந்து நிலையத்திற்கு, 2019 பிப்ரவரி 22 அன்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி க. பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.[7] முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் 394 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனம், சி.ஆர் நாராயண ராவ் (கன்சல்டன்ஸ்) பிரைவேட் லிமிடெட் ஆகும்.

இந்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தினை 2023 டிசம்பர் 30 அன்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.[8] மேலும் இந்த பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

வசதிகள்

தொகு

தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையமாக இம்முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையம் 6.4 இலட்சம்சதுரஅடி பரப்பளவில் 2 தரைகீழ்தளங்கள், தரைதளம் மற்றும் முதல்தளத்துடன் ஐவிரல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும் அளவிலும் 3.99 ஏக்கர் பரப்பளவில் 300 பேருந்துகள் துணை உறைவிட நிறுத்தமிடம், 1.99 ஏக்கர் பரப்பளவில் 275 தானுந்துகள், 3582 இரு சக்கர வாகன நிறுத்தம் என 28.25 ஏக்கர்பரப்பளவில் வாகன நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.[9][10]

  • மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தனி கழிவறைகள்
  • தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள்,
  • தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள், துரித உணவு மையம்
  • முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள், துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை
  • இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம்
  • ஆண்கள், பெண்கள், மற்றும் திருநங்கைகளுக்கான கழிவறைகள்
  • குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு
  • பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள்
  • 2 நகரும் படிக்கட்டுக்கள், பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின்தூக்கிகள்
  • இரண்டு அடித்தளங்களில் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள்
  • 2000 கேவிஏ மின் மாற்றிகள் மற்றும் மின் ஆக்கிகளுடன் கூடிய துணை மின் நிலையம் மற்றும் இதர மின் கட்டமைப்பு வசதிகள்
  • 9 கழிவறை தொகுதிகளை தூய்மையாக்கவும், செடிகளுக்கு நீர் பாய்ச்சவும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் நாளொன்றுக்கு 650 கி.லி. கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
  • குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம்
  • பணிமனை/பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி வசதி
  • முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய நடைபாதைகள் கொண்ட பூங்கா,
  • முனையத்தின் முகப்பில் ஆட்டோ, டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடம்
  • நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, அடித்தள காற்றோட்டம் ஆகியவற்றோடு
  • முக அடையாளம் காட்டும் கேமராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்புமுறை வசதி போன்ற பயணிகளுக்கும், ஓட்டுனர்களுக்கும், வாகனங்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

நடைபெற்று வரும் பணிகள்

தொகு

இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்காக புதிதாக பிரத்யேகமான ஒரு புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்கவும், அதிலிருந்து பேருந்து முனையத்தை ஆகாய நடைபாதை வாயிலாக இணைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது. மேலும் இந்த புறநகர் பேருந்து முனையம், இந்திய தொல்லியல் துறை நிலங்களுக்கு அருகில் அமைந்திருப்பதால், 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் அறிவுசார் மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, நடைபாதை, விளையாட்டு மைதானம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு இந்த முனையத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை வெளிவட்டச் சாலை முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் ஆம்னி(எம்.டி.சி.) பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

பேருந்து சேவைகள்

தொகு

தென் தமிழ்நாட்டின் உள்ள மாவட்டங்களின் தலைநகர்களுக்கும் கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும், பேருந்துகளை இயக்குகிறது.

நடைமேடை

தொகு
பாந்து எண் பேருந்து செல்லும் ஊர் பெயர் மாவட்டம் வழித்தடம்
நடைமேடை - 1
1,2 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்
3,4 மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
5,6 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்
7,8 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
9,10 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
11 திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
12,13 செங்கோட்டை தென்காசி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
நடைமேடை - 2
1,2 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
3 பாபநாசம், குட்டம், திசையன்விளை திருநெல்வேலி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
4 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
5 மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
6 கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
7 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
8 திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
9 செங்கோட்டை தென்காசி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
10 திருவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
10 சிவகாசி விருதுநகர் மாவட்டம்
11 திருவனந்தபுரம் கேரளா விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி
12 குலசேகரம் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
13 உடன்குடி தூத்துக்குடி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை
14 கருங்கல் கன்னியாகுமரி மாவட்டம் விழுப்புரம், திருச்சி, மதுரை, விருதுநகர்
நடைமேடை - 3
1,2,3 மதுரை மதுரை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
4 காரைக்குடி சிவகங்கை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
5 தேவக்கோட்டை சிவகங்கை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
6 இராமேஸ்வரம், ஏர்வாடி இராமநாதபுரம் மாவட்டம் விழுப்புரம், திருச்சி
7 கீரமங்கலம், தொண்டி இராமநாதபுரம் மாவட்டம் விழுப்புரம், திருச்சி
8 பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
9 சிவகங்கை சிவகங்கை மாவட்டம் விழுப்புரம், திருச்சி,
10 பரமக்குடி சிவகங்கை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
11 ஒப்பிலான் இராமநாதபுரம் மாவட்டம் விழுப்புரம், திருச்சி
12 வீரசோழன் விருதுநகர் மாவட்டம் விழுப்புரம், திருச்சி
13 சாயல்குடி சிவகங்கை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
14 கமுதி இராமநாதபுரம் மாவட்டம் விழுப்புரம், திருச்சி
நடைமேடை - 4
1,2,3,4 திருச்சி திருச்சி மாவட்டம் விழுப்புரம், பெரம்பலூர்
5 கரூர், பொள்ளாச்சி கரூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் விழுப்புரம், திருச்சி
6 திண்டுக்கல், தேனி திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தேனி மாவட்டம் விழுப்புரம், திருச்சி
7 போடிநாயக்கனூர் தேனி மாவட்டம் விழுப்புரம், திருச்சி
8 கம்பம், குமுளி தேனி மாவட்டம்
9,10 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர்
11,12,13 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
14 மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
15 பேராவூரணி புதுக்கோட்டை மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
16 பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
நடைமேடை - 5
1,2,3,4,5 திருச்சி திருச்சி மாவட்டம் விழுப்புரம், பெரம்பலூர்
6 பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் விழுப்புரம்
7 அரியலூர் அரியலூர் மாவட்டம் விழுப்புரம், பெரம்பலூர்
8 துறையூர் திருச்சி மாவட்டம் விழுப்புரம், திருச்சி
9,10 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர்
11 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
12 நன்னிலம், பேராவூரணி, மன்னார்குடி, பட்டுக்கோட்டை திருவாரூர் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
13 மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம்
14 திருவாரூர் திருவாரூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர், கும்பகோணம்
15 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம்
16 வேளாங்கண்ணி, ஒரத்தநாடு நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம்
நடைமேடை - 6
1 எர்ணாகுளம், குருவாயூர், சேலம் கேரளா மற்றும் சேலம் மாவட்டம் விழுப்புரம்
2 ஊட்டி, சேலம் நீலகிரி மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி
3,4,5 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்
6 திருவாரூர், நாமக்கல் திருவாரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம்
7 மேட்டுப்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டம்
8 திருப்பூர், பொள்ளாச்சி திருப்பூர் மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்
9,10,11,12,13 சேலம் சேலம் மாவட்டம் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர்
14 ஈரோடு ஈரோடு மாவட்டம்
15 நாமக்கல் நாமக்கல் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்
16 கரூர் கரூர் மாவட்டம்
நடைமேடை - 7
1,2 வந்தவாசி திருவண்ணாமலை மாவட்டம் உத்திரமேரூர்
3,10,11,12,13,14,15,16 திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் மேல்மருவத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை
4,5 போளூர் திருவண்ணாமலை மாவட்டம் உத்திரமேரூர், வந்தவாசி, சேத்துப்பட்டு
6 செங்கம் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மருவத்தூர், செஞ்சி, கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை
7,8 செஞ்சி திருவண்ணாமலை மாவட்டம் மேல்மருவத்தூர், திண்டிவனம்
9 மேல்மலையனூர் விழுப்புரம் மாவட்டம்
நடைமேடை - 8
1,2 திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம்
3,4,5 விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூர், திண்டிவனம்
6,7 திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திண்டிவனம், விழுப்புரம்
8 சங்கராபுரம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
9,10,11,12 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம் திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை
13,14 ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டம் திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர்
15,16 அரியலூர் அரியலூர் மாவட்டம் திண்டிவனம், விழுப்புரம், பெரம்பலூர்
நடைமேடை - 9
1,2 புதுச்சேரி புதுச்சேரி மேல்மருவத்தூர், திண்டிவனம்
3,4 கடலூர் கடலூர் மாவட்டம் மேல்மருவத்தூர், திண்டிவனம், புதுச்சேரி
4 திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூர்
5,6,11,12 சிதம்பரம் கடலூர் மாவட்டம் திண்டிவனம், புதுச்சேரி, கடலூர்
7,8 நெய்வேலி கடலூர் மாவட்டம் திண்டிவனம், பண்ருட்டி, வடலூர்
10 காட்டுமன்னார்கோயில் கடலூர் மாவட்டம் மேல்மருவத்தூர், திண்டிவனம், பண்ருட்டி, வடலூர்
13,14 விருத்தாசலம் கடலூர் மாவட்டம்
15,16 திட்டக்குடி கடலூர் மாவட்டம்
நடைமேடை - 10
நடைமேடை - 11

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kilambakkam bus terminus to open in 18 months". The Hindu (Chennai: Kasturi & Sons). 23 Feb 2019. https://www.thehindu.com/news/cities/chennai/bus-terminus-at-kilambakkam-coming-in-18-months/article26345331.ece. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  2. "கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்". The Hindu (Chennai: Kasturi & Sons). 30 Dec 2023. https://www.hindutamil.in/news/tamilnadu/1176272-rs-393-crore-artist-centenary-bus-terminal-at-kilambakkam-cm-stalin-inaugurates.html. பார்த்த நாள்: 31 Dec 2023. 
  3. "Bus terminus at burial site? CMDA gets ‘stop work’ notice from ASI". New indian express (Chennai). 25 Apr 2017. http://www.newindianexpress.com/cities/chennai/2017/apr/25/bus-terminus-at-burial-site-cmda-gets-stop-work-notice-from-asi-1597402.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  4. https://www.hindutamil.in/news/tamilnadu/197134-.html. பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 30,2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Missing or empty |title= (help)
  5. "CMDA hopes to push case for Kilambakkam terminus project with heritage impact report". The New Indian Express (Chennai). 26 Oct 2018. http://www.newindianexpress.com/cities/chennai/2018/oct/26/cmda-hopes-to-push-case-for-kilambakkam-terminus-project-with-heritage-impact-report-1890183.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  6. "Kilambakkam bus terminus awaits NMA nod". DT NEXT (Chennai). 25 Feb 2019 இம் மூலத்தில் இருந்து 23 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190323044814/https://www.dtnext.in/News/City/2019/02/25033500/1108096/Kilambakkam-bus-terminus-awaits-NMA-nod.vpf. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  7. "Foundation stone laid for Kilambakkam bus terminus". Times of India (Chennai). 22 Feb 2019. https://timesofindia.indiatimes.com/city/chennai/chennai-foundation-stone-laid-for-kilambakkam-bus-terminus/articleshow/68118145.cms. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  8. "‘கலைஞர் நூற்றாண்டு’ பெயரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்;". dinakaran (Chennai). 31 Dec 2023. https://www.dinakaran.com/kalaingercentenary_modernfacility_clambakkam_busterminal_inaugurated_chiefministerm-k-stalin/. பார்த்த நாள்: 31 Dec 2023. 
  9. "Kilambakkam bus terminus: CM to break ground today". New Indian Express (Chennai). 22 Feb 2019. http://www.newindianexpress.com/cities/chennai/2019/feb/22/kilambakkam-bus-terminus-cm-to-break-ground-today-1942102.html. பார்த்த நாள்: 23 Mar 2019. 
  10. http://www.newindianexpress.com/cities/chennai/2017/oct/08/bot-model-likely-for-new-bus-terminus-1668564.html