சனவரி 10
நாள்
(10 ஜனவரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 10 (January 10) கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
- 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.
- 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார்.
- 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
- 1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.
- 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஜொசப்பின் என்ற தனது முதல் மனைவியை மணமுறிவு செய்தான்.
- 1840 – ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.
- 1863 – உலகின் மிகப் பழமையான சுரங்கத் தொடருந்துப் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.
- 1881 – யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1916 – முதலாம் உலகப் போர்: எர்சுரும் சமரில் உருசியா உதுமானியரைத் தோற்கடித்தது.
- 1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இது 1919 சூன் மாதம் வரை தொடர்ந்தது.
- 1920 – வெர்சாய் ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் அதிகாரபூர்வமாக முடிவுற்றது.
- 1924 – பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் உயிரிழந்தனர்..
- 1946 – லண்டனில் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் முதலாவது பொதுச்சபைக் கூட்டத்தில் 51 நாடுகள் பங்குபற்றின.
- 1946 – ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையின் சிக்னல் கோர்ப்சு நிறுவனம் முதற்தடவையாக வானொலி அலைகளை நிலாவில் தெறித்துப் பெறும் முயற்சியில் வெற்றி பெற்றது.
- 1954 – பிரித்தானியப பயணிகள் விமானம் வெடித்து திரேனியக் கடலில் வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.
- 1962 – பெருவில் நிகழ்ந்த சூறாவளியில் 4000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வர தாஷ்கந்து உடன்பாட்டில் லால் பகதூர் சாஸ்திரி, அயூப் கான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- 1972 – சேக் முஜிபுர் ரகுமான் பாக்கித்தானில் 9 மாதங்கள் சிறையில் கழித்த பின்னர் புதிதாக உருவான வங்காளதேசத்திற்குத் திரும்பினார்.
- 1974 – யாழ்ப்பாணத்தில் 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் 11 பொதுமக்கள் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
- 1984 – 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவும் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.
- 1985 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி தலைவர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவாவின் அரசுத்தலைவர் ஆனார்.
- 1989 – கியூபா படைகள் அங்கோலாவில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
- 1995 – உலக இளையோர் நாள் பிலிப்பீன்சில் இடம்பெற்றது.
- 2001 – விக்கிப்பீடியா நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது 5 நாட்களின் பின்னர் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.
- 2005 – தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.
- 2007 – கினியில் அரசுத்தலைவர் லன்சானா கொண்டேக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
- 2013 – பாக்கித்தானில் இடம்பெற்ற பல குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 2015 – மொசாம்பிக்கில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 56 பேர் முதலையின் பித்தநீர் கலக்கப்பட்ட பியரை அருத்தியதால் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
- 1573 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (இ. 1624)
- 1775 – இரண்டாம் பாஜி ராவ், மராத்திய பேரரசின் கடைசித் தலைமை அமைச்சர் (இ. 1851)
- 1929 – பாலி சாம் நரிமன், இந்திய சட்ட அறிஞர்
- 1931 – ஆர். சூடாமணி, தமிழகப் பெண் எழுத்தாளர் (இ. 2010)
- 1931 – நிக் அப்துல் அசிஸ் நிக் மாட், மலேசிய மதகுரு, அரசியல்வாதி (இ. 2015)
- 1933 – கி. கஸ்தூரிரங்கன், தமிழக இதழாளர், எழுத்தாளர் (இ. 2011)
- 1933 – குர்தியால் சிங், பஞ்சாபி எழுத்தாளர் (இ. 2016)
- 1936 – இராபெர்ட் உட்ரோ வில்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- 1937 – முரளி தியோரா, இந்திய அரசியல்வாதி (இ. 2014)
- 1938 – டொனால்ட் குனுத், அமெரிக்கக் கணினிவியலாளர்
- 1940 – கே. ஜே. யேசுதாஸ், இந்தியப் பாடகர்
- 1943 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கலைஞர் (இ. 1999)
- 1949 – லிண்டா லவ்லேஸ், அமெரிக்க நடிகை, செயற்பாட்டாளர் (இ. 2002)
- 1958 – லொள்ளு சபா மனோகர், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
- 1967 – பழனி திகாம்பரம், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிலதிபர்
- 1974 – கிருத்திக் ரோஷன், இந்திய நடிகர்
- 1984 – கல்கி கோய்ச்லின், இந்தியத் திரைப்பட நடிகை
- 1990 – ஐஸ்வர்யா ராஜேஷ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 314 – மில்த்தியாதேஸ் (திருத்தந்தை)
- 1761 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (பி. 1709)
- 1775 – ஸ்ட்ரிங்கர் லாரன்சு, பிரித்தானிய இந்தியாவின் முதற் பெரும் படைத்தலைவர் (பி. 1697)
- 1778 – கரோலஸ் லின்னேயஸ், சுவீடிய தாவரவியலாளர், மருத்துவர் (பி. 1707)
- 1904 – ஜீன் லியோன் ஜேர்மி, பிரான்சிய ஓவியர், சிற்பக் கலைஞர் (பி. 1824)
- 1951 – சிங்ளேர் லுயிஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1885)
- 1957 – கேப்ரியெலா மிஸ்திரெல், நோபல் பரிசு பெற்ற சிலி கவிஞர் (பி. 1889)
- 1969 – சம்பூர்ணாநந்தர், இராசத்தானின் 2வது ஆளுநர் (பி. 1891)
- 2005 – சங்கர் ராஜி, இலங்கைத் தமிழ்ப் போராளி, அரசியல்வாதி (பி. 1949)
- 2006 – ஆர். எஸ். மனோகர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
- 2007 – எஸ். சர்வானந்தா, இலங்கை நீதிபதி, மேல்மாகாணத்தின் 1வது ஆளுநர் (பி. 1923)
- 2008 – பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1959)
- 2023 – ஜார்ஜ் பெல், ஆத்திரேலியக் கர்தினால் (பி. 1941)
சிறப்பு நாட்கள்
- பெரும்பான்மையின ஆட்சி நாள் (பகாமாசு)
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 42
வெளி இணைப்புகள்