அக்டோபர் 21
நாள்
(21 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 21 (October 21) கிரிகோரியன் ஆண்டின் 294 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 295 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.
- 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
- 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
- 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
- 1824 – யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கான காப்புரிமத்தை பெற்றார்.
- 1833 – இலங்கையில் புதிய மீயுயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.[1]
- 1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.
- 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
- 1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதி நோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[2]
- 1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கான வடிவமைப்புக்கு காப்புரிமம் கோரினார்.
- 1892 – உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
- 1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
- 1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.
- 1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில் செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.
- 1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.
- 1959 – வெர்னர் வான் பிரவுன் உட்படப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் ஆணையை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் பிறப்பித்தார்.
- 1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..
- 1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.
- 1971 – இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.
- 1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
- 1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
- 2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.
பிறப்புகள்
- 1328 – கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398)
- 1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)
- 1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869)
- 1833 – ஆல்பிரட் நோபல், சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ. 1896)
- 1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955)
- 1898 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. 1981)
- 1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978)
- 1921 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (இ. 2015)
- 1925 – சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
- 1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்
- 1931 – சம்மி கபூர், இந்திய நடிகர் (இ. 2011)
- 1936 – பாரூக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்
- 1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)
- 1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்
- 1942 – கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
- 1943 – தாரிக் அலி, பாக்கித்தான் வரலாற்றாளர், நூலாசிரியர்
- 1944 – இழான் பியர் சோவாழ்சு, பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்
- 1949 – பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேலின் 9வது பிரதமர்
- 1958 – ஆந்தரே கெய்ம், நோபல் பரிசு பெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்
- 1969 – வேல்ராஜ், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்
- 1978 – சங்கீதா கிரிஷ், தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி
- 1982 – மாட் டல்லாஸ், அமெரிக்க நடிகர்
இறப்புகள்
- 1805 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)
- 1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)
- 1949 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874
- 1967 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)
- 1984 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)
- 2002 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)
- 2010 – அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)
- 2012 – யஷ் சோப்ரா, இந்திய இயக்குநர் (பி. 1932)
- 2014 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)
- 2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்
- 2022 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர் (பி. 1934)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 21 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்