செப்டம்பர் 29
நாள்
(29 செப்டம்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | செப்டம்பர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
29 | 30 | |||||
MMXXIV |
செப்டம்பர் 29 (September 29) கிரிகோரியன் ஆண்டின் 272 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 273 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 93 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான்.
- கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது.
- 1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர்.
- 1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
- 1567 – பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
- 1717 – ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நகரின் பல தொன்மை வாய்ந்த கட்டடங்கள் அழிந்தன.
- 1832 – இலங்கையில் கட்டாய வேலை ஒழிக்கப்பட்டது.[1]
- 1848 – அங்கேரியப் படையினர் குரொவாசியர்களை பாகொஸ்த் என்ற இடத்தில் இடம்பெற்ற முதலாவது அங்கேரிப் புரட்சிப் போரில் தோற்கடித்தனர்.
- 1850 – இங்கிலாந்திலும் வேல்சிலும் உரோமைக் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயசு மீண்டும் அமைத்தார்.
- 1864 – எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையேயான எல்லை லிஸ்பன் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்டது.
- 1885 – உலகின் முதலாவது திராம் சேவை இங்கிலாந்து, பிளாக்பூல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1911 – இத்தாலி உதுமானியப் பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது.
- 1918 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
- 1923 – கட்டளைப் பலத்தீன் நிறுவப்பட்டது.
- 1940 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சில் இரண்டு அவ்ரோ விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு, இரண்டும் இணைந்து பாதுகாப்பாகத் தரையிறங்கின.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனின் கீவ் நகரில் பாபி யார் என்ற இடத்தில் குறைந்தது 33,771 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
- 1949 – சீனப் பொதுவுடமைக் கட்சி பின்னாளைய மக்கள் சீனக் குடியரசின் பொதுத் திட்டத்தை அறிவித்தது.
- 1954 – ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- 1971 – ஓமான் அரபு நாடுகள் கூட்டமைப்பில் இணைந்தது.
- 1972 – சப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது.
- 1979 – எக்குவடோரியல் கினியின் இராணுவத் தலைவர் பிரான்சிசுக்கோ மசியாசு மேற்கு சகாராவின் படையினரால் சுடப்பட்டார்.
- 1991 – எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1998 – இலங்கை, பலாலி விமானநிலையத்தில் இருந்து இரத்மலானை நோக்கி 56 பேருடன் புறப்பட்ட லயன் எயார் பயணிகள் விமானம் புறப்பட்டு 10 நிமிடங்களில் காணாமல் போனது.[2]
- 2003 – சூறாவளி ஜுவான் கனடாவின் ஆலிபாக்சு துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
- 2004 – 4179 டூட்டாட்டிசு என்ற சிறுகோள் புவியில் இருந்து நான்கு சந்திரன் தூரத்தில் புவியைத் தாண்டியது.
- 2006 – பிரேசிலில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதியதில் 154 பேர் உயிரிழந்தனர்.
- 2009 – சமோவாவில் 8.1 அளவு நிலநடுக்கமும், ஆழிப்பேரலையும் தாக்கியதில் 189 பேர் உயிரிழந்தனர்.
- 2011 – வாச்சாத்தி வன்முறை: தலித்துகள் மீது தாக்குதல் நடத்திய 269 அதிகாரிகளும், பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட 17 பேரும் குற்றவாளிகள் என இந்தியாவின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- 2013 – நைஜீரியாவில் வேளாண்மைக் கல்லூரியில் போகோ அராம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1492 – மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1553)
- 1547 – மிகெல் தே செர்வாந்தேஸ், எசுப்பானியக் கவிஞர் (இ. 1616)
- 1571 – கரவாஜியோ, இத்தாலிய ஓவியர் (இ. 1610)
- 1725 – ராபர்ட் கிளைவ், ஆங்கிலேய அரசியல்வாதி, கிழக்கிந்தியக் கம்பனி இராணுவ அதிகாரி (இ. 1774)
- 1758 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (இ. 1805)
- 1809 – வில்லியம் கிளாட்ஸ்டோன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1898)
- 1881 – இராஜா அண்ணாமலை செட்டியார், தமிழிசை இயக்க செய்ற்பாட்டாளர் (இ. 1948)
- 1881 – லுட்விக் வான் மீசசு, ஆத்திரிய-அமெரிக்க பொருளியலாளர் (இ. 1973)
- 1892 – ந. சிவராஜ், தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (இ. 1964)
- 1901 – என்ரிக்கோ பெர்மி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1954)
- 1904 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் எழுத்தாளர் (இ. 1936)
- 1912 – சி. சு. செல்லப்பா, எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் (இ. 1998)
- 1920 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1996)
- 1926 – திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை, தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 1981)
- 1927 – கே. டி. முகம்மது, மலையாள நாடக, திரைக்கதை ஆசிரியர் (இ. 2008)
- 1928 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் 1-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (இ. 2012)
- 1929 – சையது அலி கிலானி, ஜம்மு காசுமீர் அரசியல்வாதி
- 1936 – சில்வியோ பெர்லுஸ்கோனி, இத்தாலியின் 50வது பிரதமர்
- 1938 – கரவை கந்தசாமி, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி, கவிஞர் (இ. 1994)
- 1940 – கரு ஜயசூரிய, இலங்கை அரசியல்வாதி
- 1943 – லேக் வலேசா, போலந்தின் 2வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- 1947 – மா. சுதர்சன நாச்சியப்பன், தமிழக அரசியல்வாதி
- 1951 – மிசெல் பாச்செலெட், சிலியின் 34வது அரசுத்தலைவர்
- 1956 – செபாஸ்டியன் கோ, ஆங்கிலேய தட கள விளையாட்டாளர்
- 1957 – எச். ராஜா, தமிழக அரசியல்வாதி
- 1961 – ஜூலியா கிலார்ட், ஆத்திரேலியாவின் 27வது பிரதமர்
- 1970 – ரசல் பீட்டர்சு, கனடா நடிகர்
- 1970 – குஷ்பூ, தென்னிந்திய நடிகை, அரசியல்வாதி
- 1973 – ம. திலகராஜா, இலங்கை மலையகத் தமிழ்க் கவிஞர், அரசியல்வாதி
- 1975 – இசுட்டீவ் கிளார்க், ஆத்திரேலியத் துடுப்பாளர்
- 1986 – நிதேந்திர சிங் ராவத், இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்
இறப்புகள்
- 1910 – அ. சிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1830)
- 1913 – ருடோல்ப் டீசல், டீசல் பொறியைக் கண்டுபிடித்த பொறியியலாளர் (பி. 1858)
- 1961 – பி. சீனிவாசராவ், தமிழக அரசியல்வாதி (பி. 1906)
- 1964 – ந. சிவராஜ், தமிழக அரசியல்வாதி, நீதிக்கட்சித் தலைவர் (பி. 1892)
- 1969 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884)
- 1983 – அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், உருசிய வானியலாளர் (பி. 1888)
- 1985 – பெஞ்சமின் மர்க்கரியான், ஆர்மீனிய-சோவியத் வானியற்பியலாளர் (பி. 1913)
- 2004 – பாலாமணியம்மா, மலையாளக் கவிஞர் (பி. 1909)
- 2014 – வாரன் அண்டர்சன், அமெரிக்கத் தொழிலதிபர், போபால் பேரழிவுக்குக் காரணமானவர் (பி. 1921)
சிறப்பு நாட்கள்
- கண்டுபிடிப்பாளர்களின் நாள் (அர்கெந்தீனா)
- பன்னாட்டு காப்பி நாள்
- உலக இருதய நாள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "செப்டம்பர் 29 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்