இந்திய ஒற்றுமைப் பயணம்

காங்கிரசின் இயக்கம்/யாத்திரை

இந்திய ஒற்றுமைப் பயணம் (Bharat Jodo Yatra) என்பது இந்திய அரசியல் கட்சியான இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட [1] ஒரு வெகுஜன இயக்கமாகும்.[2][3] காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் இராகுல் காந்தி, இந்தியாவின் தென் முனையில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து ஜம்மு காஷ்மீர் ஒன்றிய ஆட்சிப் பிரதேசம் வரை கிட்டதட்ட 150 நாட்களுக்கு மேல் 4,080 கிலோமீட்டர்கள் (2,540 மைல்கள்) தொண்டர்களையும் பொதுமக்களையும் ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மேற்கொண்ட ஒரு நடைபயண இயக்கமாகும்.[4][5]

இந்திய ஒற்றுமைப் பயணம்
Bharat Jodo Yatra
நாள்செப்டம்பர் 7, 2022 (2022-09-07) – சனவரி 30, 2023
காலம்146 நாள்கள்
அமைவிடம்இந்தியா
வகைபாதயாத்திரை, எதிர்ப்புப் போராட்டம்
கருப்பொருள்அரசியல் இயக்கம், சமூக இயக்கம்
காரணம்பொருளாதார பிரச்சினைகளும், சமூக ஒற்றுமையின்மையும்
உள்நோக்கம்வகுப்புவாதம், வேலையில்லாத் திண்டாட்டம், வெறுப்பு அரசியல், பணவீக்கம், அரசியல் மையமயமாக்கலுக்கு எதிராகப் போராடுவது
ஏற்பாடு செய்தோர்இந்திய தேசிய காங்கிரசு
பங்கேற்றோர்அரசியல்வாதிகள், குடிமக்கள், குடிமை சமூக அமைப்புகள், அரசியல் ஆர்வலர்கள்
இணையதளம்www.bharatjodoyatra.in

இ.தே.காங்கிரசின் கருத்துப்படி, இந்த இயக்கம் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் "பிளவு அரசியலுக்கு" [6] எதிராக நாட்டை ஒன்றிணைக்கும் நோக்கம் கொண்டது. 2022 செப்டம்பர் 7 அன்று [7] இராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினால் கன்னியாகுமரியில் தொடங்கிவைக்கப்பட்டது [8] இதன் முக்கிய நோக்கம் "அச்சம், சமயவெறி, ஓரவஞ்சனை" அரசியல், வேலையின்மை அதிகரித்தல், பெருகி வரும் சமத்துவமின்மை போன்றவற்றை எதிர்த்தல் ஆகும்.[7] இந்த இயக்கத்தின் போது, இதேகா கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தது, 2022 இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது ஆகியவை நடந்தன.

பின்னணி

தொகு
 
பேரணியின் போது பயன்படுத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்திரையின் கொடி

23 ஆகத்து 2022 அன்று இதேகா தலைமையகத்தில் இந்திய ஒற்றுமை யாத்ரைக்கான இலச்சினை, இணையதளம் ஆகியவற்றை இந்திய தேசிய காங்கிரசு அறிமுகப்படுத்தியது. செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பேரணி தொடங்கியது.[9] இது 3,570-கிலோமீட்டர் (2,220-மைல்) நீளமுள்ளதாக, 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்கள் வழியாக செல்லவதாக, 150 நாள் "இடை நில்லா" நடைபயணமாக நடத்த திட்டமிடப்பட்டது. நடைபயணத்தின் போது, காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்தி பகலில் மக்களைச் சந்தித்தார். இரவில் தற்காலிக தங்குமிடங்களில் தூங்கினார். இந்த தற்காலிக தங்குமிடங்கள் டாடா குழுமத்தால் பிரத்யேகமாக உருவாக்கபட்ட நடமாடும் தங்குமிடங்களாகும்.[10] கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் சிறீநகரில் நிறைவடைந்து. இந்த பயணம் முழுக்க முழுக்க கால் நடையாகவே மேற்கொள்ளபட்டது.[1] இந்த நடைபயணமானத்தில் ஒரு நாளைக்கு தோராயமாக 23 கிமீ (14 மைல்) நடக்க திட்டமிடப்பட்டது. இந்த நடைபயணம் ஒவ்வொரு நாளும் இரண்டு நேரப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.[11]

2022 திசம்பருக்க்குள், நடைபயணம் 3,000 கிமீ (1,900 மைல்) தொலைவைக் கடந்தது.[12] இந்திய ஒற்றுமைப் பயணமானது 1983 இல் இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் சந்திரசேகர் மேற்கொண்ட ஏறக்குறைய 4,260-கிலோமீட்டர் (2,650 மைல்) நீளமான பாரத யாத்திரை நடைபயணத்துடன் ஒத்துள்ளது.[13][14]

அட்டவணை

தொகு
அகில இந்திய - தற்காலிக யாத்திரை அட்டவணை
மாநிலம் / ஒ.ஆ.ப நுழையும் நாள் நாட்களின் எண்ணிக்கை முக்கிய இடங்கள்
தமிழ்நாடு 7 & 29 செப்டம்பர் 4 கன்னியாகுமரி
கேரளம் 10 செப்டம்பர் 18 திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர்
கருநாடகம் 30 செப்டம்பர் 21 மைசூர், பல்லாரி, ராய்ச்சூர்
ஆந்திரப் பிரதேசம் 18 அக்டோபர் 4 டி.ஹிரேஹால், ஆலூர்
தெலங்காணா 23 அக்டோபர் 12 விகாராபாத், ஐதராபாத்
மகாராட்டிரம் 7 நவம்பர் 14 நான்டெட், ஜல்கான் ஜமோத்
மத்திய பிரதேசம் 23 நவம்பர் 16 மோவ், இந்தூர், உஜ்ஜைன்
இராசத்தான் 4 திசம்பர் 18 ஜாலவர், அல்வார், கோட்டா, தௌசா
அரியானா 21 திசம்பர் & 6 சனவரி 12 அம்பாலா, ஃபரிதாபாத்
தில்லி 24 திசம்பர் 2 பதர்பூர், ராஜ்காட்
உத்தரப் பிரதேசம் 3 சனவரி 5 காசியாபாத், புலந்த்ஷாஹர்
பஞ்சாப் 10 சனவரி 11 பதான்கோட்
இமாச்சலப் பிரதேசம் 18 சனவரி 1 காங்க்ரா மாவட்டம்
சம்மு காசுமீர் 19 சனவரி 11 லகான்பூர், சம்மு, சிறீநகர்

முறைகள்

தொகு

இந்திய ஒற்றுமைப் பயணத்தில் மைல் கதம், ஜூட் வதன் (ஒன்றாக நடந்து, நாட்டை ஒன்றிணையுங்கள்), மெஹெங்காய் சே நாடா டோடோ, மில் கர் பாரத் ஜோடோ (பணவீக்கத்திலிருந்து விடுபட்டு, இந்தியாவை ஒன்றிணையுங்கள்) பெரோஜாகரி கா ஜல் டோடோ, பாரத் ஜோடோ (வேலையின்மை வலையை அறுத்து, இந்தியாவை ஒன்றிணையுங்கள்), நஃப்ரத் சோடோ, பாரத் ஜோடோ (வெறுப்பை விட்டு, நாட்டை ஒன்றிணையுங்கள்), சம்விதன் பச்சாவ் (அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்) போன்ற பல்வேறு கவிதைகள், முழக்கங்கள் போன்றவை எழுப்பப்பட்டன.[15][16] பாதயாத்திரையாளர்கள் என்று அழைக்கப்படும் அணிவகுப்பாளர்கள் நடைபயணத்தின் இடைவேளையின் போது ஒவ்வொரு நாளும் குடிமை சமூக உறுப்பினர்களுடன் பேசுவார்கள்.[17][18] ஊர்வலத்தின் போது பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. அக்டோபர் 15 அன்று, பெல்லாரியில் கனமழைக்கு நடுவில் நடந்த இராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் பரவலான ஊடக கவனத்தைப் பெற்றது.[19][20][21]

கலந்துகொண்டவர்கள்

தொகு

ஐந்து மாத கால நடைபயணம் முழுவதும், மூன்று வகையான நடைபயணி குழுவினர் இருந்தனர். இதில் முதல் குழு பாரத யாத்ரிகள் என்பவர்களாவர். இவர்கள் நடைபயணம் முழுவதும் முழுப் பயணத்திலும் கலந்துகொண்டவர்கள்.[22] இரண்டாவது குழுவினர் விருந்தினர் நடையணிகள் என்பவர்களாவர். இவர்கள் இந்திய ஒற்றுமைப் பயணம் செல்லாத மாநிலங்களிலிருந்து வரும் விருந்தினர் ஆவர். மூன்றாவது குழுவினர், பிரதேச நடைபயணிகள் என்பவர்களாவர். இவர்கள் நடைபயணம் செல்லும் மாநிலங்களைச் சேர்ந்த 100 பேர் கொண்ட நடைபயணிகளாக இருப்பர். பயணம் முழுவதும் முந்நூறு நடைபயணிகள் இருப்பார்கள். சில முக்கிய நபர்களும் நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர்

ஆதரவாளர்கள்

தொகு

பல அடிமட்ட இயக்கங்கள் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தன அல்லது ஆதரவு அளித்தன. பயணத்தில் இணையுமாறு தனிநபர்கள், அமைப்புகள், இயக்கங்கள் போன்றவற்றிற்கு இதேகா அழைப்பு விடுத்தது.[27] காங்கிரசின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கு ஆதரவளிக்குமாறு 200க்கும் மேற்பட்ட குடிமை சமூக உறுப்பினர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.[28] பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை பயணத்தில் சேருமாறு காங்கிரசு அழைப்பு விடுத்தது. ஆனால் நிதீஷ் குமார் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் சேர மறுத்துவிட்டார் [29]

பயணமானது செப்டம்பரின் பிற்பகுதியில், கர்நாடகத்திற்குள் நுழையத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலத்தை தளமாகக் கொண்ட குறைந்தது 89 அமைப்புகள் பேரணிக்கு தங்கள் ஆதரவையும் பங்கேற்பையும் வழங்குவதாக அறிவித்தன. கர்நாடகத்தில் நடந்த நடைபயணத்தில் முக்கிய பங்கேற்பாளர்களாக எழுத்தாளர் தேவனூர் மகாதேவா மற்றும் இலக்கிய விமர்சகர் கணேஷ் வி தெவி ஆகியோர் கலந்து கொண்டனர்.[30]

  • அருணா ராய், மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன், இணை நிறுவனர்
  • யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா நிறுவனர்[27]
  • கணேஷ் தேவி, எழுத்தாளர் மற்றும் பண்பாட்டு செயற்பாட்டாளர்
  • சையதா அமீது, திட்டக் கமிஷன் முன்னாள் உறுப்பினர்
  • பெஸ்வாடா வில்சன், சஃபாய் கர்மாச்சாரி அந்தோலனின் நிறுவனர்
  • மிருணாள் பாண்டே, இந்திய ஊடகவியலாளர்
  • தரம்வீர் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  • அஞ்சலி பரத்வாஜ், இந்திய சமூக செயற்பாட்டாளர்
  • சுஜாதா ராவ், இந்திய குடிமை சமூக உறுப்பினர்[31]
  • அபிஜித் சென்குப்தா, இந்திய குடிமை சமூக உறுப்பினர்[28]
  • சிறீதர் ராதாகிருஷ்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர்[32]
  • சி. ஆர். நீலகண்டன், சுற்றுச்சூழல் ஆர்வலர்[33]
  • அமோல் பலேகர் மற்றும் சந்தியா கோகலே இயக்குனர் மற்றும் எழுத்தாளர்
  • ரஷ்மி தேசாய், தொலைக்காட்சி நடிகை
  • அகன்ஷா பூரி, இந்திய நடிகை மற்றும் வடிவழகி
  • ரியா சென், நடிகை
  • ரமேஷ் பிஷாரடி, நகைச்சுவை நடிகர்
  • காலக்கோடு

    தொகு

    முதல் வாரம் (செப்டம்பர் 7-13)

    தொகு

    இராகுல் காந்தி தன் மறைந்த தந்தை இராஜீவ் காந்தி, சுவாமி விவேகானந்தர், திருவள்ளுவர் ஆகியோருக்கு மரியாதை செலுத்திய பின்னர் கன்னியாகுமரியில் 7 செப்டம்பர் 2022 அன்று பயணத்தைத் தொடங்கினார். இந்த நடை பயணம் "இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் தொடர்பு திட்டம்" என்று காங்கிரசு கூறியது. இதனால் மக்களின் உணர்வுகள் தில்லியை சென்றடையும் என்றது.[34]

    இரண்டாம் வாரம் (செப்டம்பர் 14-20)

    தொகு

    பயணம் செப்டம்பர் 14 அன்று கொல்லத்தை அடைந்தது. நாராயணகுருவுக்கு இராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.[35] உள்ளூர் முந்திரித் தொழிலாளர்களைச் சந்தித்த அவர், வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர்களின் குறைகளை எடுத்துரைப்பதாக உறுதியளித்தார். அந்த வாரத்தில் கொல்லம், ஆலப்புழா, கொச்சி போன்ற நகரங்களின் வழியாக பயணம் சென்றது.[36][37][38]

    மூன்றாம் வாரம் (செப்டம்பர் 21-27)

    தொகு

    இராகுல் காந்தி செப்டம்பர் 22 அன்று கொச்சியில் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.[39] ஹாலிவுட் நடிகர் ஜான் குசாக் ராகுல் காந்திக்கு தனது கூட்டுணர்வை தெரிவித்தார்.[40] இந்திய ஒற்றுமைப் பயணத்தை முறைப்படுத்தக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. செப்டம்பர் 29 அன்று பயணமானது திருச்சூர், மலப்புறம், தமிழ்நாட்டின் கூடலூருக்குள் நுழைந்தது.[36][38]

    நான்காம் வாரம் (28 செப்டம்பர்-4 திசம்பர்)

    தொகு

    கேரளத்தில் நடந்த கடைசிநாள் பயணமான செப்டம்பர் 28 அன்று பயணம் தமிழ்நாட்டில் நுழைந்து பின்னர் கர்நாடகத்திற்குள் நுழைந்தது.[41] இது மறுநாள் தமிழ்நாட்டின் நீலகிரியை வந்தடைந்தது. செப்டம்பர் 30 அன்று, அது மீண்டும் கர்நாடகத்தில் நுழைந்து, பெரும் கூட்டத்தை ஈர்த்தது. கர்நாடகத்தில் பாஜக அரசின் ஊழலுக்கு எதிரான பேசிஎம் பரப்புரையை காவல்துறை ஒடுக்கத் தொடங்கியது.[42] காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி படத்துக்கு இராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.[43] கர்நாடத்தில் கோவிட்-19 பெருந்தொற்றை கையாண்டது குறித்து அவர் பாஜகவை இலக்குவைத்தார்.[44] அக்டோபர் 4 அன்று மாண்டியாவில் பயணம் இளைப்பாறியது.[45]

    ஐந்தாம் வாரம் (அக்டோபர் 5-11)

    தொகு

    சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அக்டோபர் 6 ஆம் நாள் பயணத்தில் இணைந்தார்.[46] மறைந்த ஊடகவியலாளர் கௌவுரி லங்கேசின் குடும்பத்தினர் இந்திய ஒற்றறுமைப் பயணத்தின் 30 நாட்களை நிறைவு நாளில் இணைந்தனர்.[47] தும்கூர் மாவட்டத்தில் இந்த பயணத்திற்கு உள்ளூர் மக்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்தது.[48] பயணம் அக்டோபர் 11 அன்று சித்திரதுர்க்கா மாவட்டத்தை அடைந்தது.[49]

    ஆறாம் வாரம் (அக்டோபர் 11-17)

    தொகு

    சித்ரதுர்கா மாவட்டத்தில் வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களை இராகுல் காந்தி சந்தித்தார் .[50] கன்னட மொழி மற்றும் பிற பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் வலியுறுத்தியது.[51] இந்த பயணம் அக்டோபர் 14 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நுழைந்தது.[52] அது மறுநாள் கர்நாடகத்தில் மீண்டும் நுழைந்து பெல்லாரி மாவட்டத்தில் 1,000 கிமீ (620 மைல்) தொலைவை நிறைவு செய்தது.[53]

    ஏழாம் வாரம் (அக்டோபர் 18-24)

    தொகு

    பயணம் அக்டோபர் 18 ஆம் நாள் கர்னூல் மாவட்டத்தின் வழியாக மீண்டும் ஆந்திரத்திற்குள் நுழைந்தது. அக்டோபர் 21 ஆம் நாள் கர்நாடகத்திற்குத் திரும்பியது.[54] இந்த பயணம் அக்டோபர் 23 அன்று தெலங்காணாவில் நுழைந்தது, அதைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு மூன்று நாள் இடைவேளை விடப்பட்டது.

    எட்டாம் வாரம் (25-31 அக்டோபர்)

    தொகு

    தீபாவளி இடைவேளையைத் தொடர்ந்து, அக்டோபர் 27 அன்று தெலங்காணாவில் பயணம் மீண்டும் தொடங்கி, பெரும் கூட்டத்தை ஈர்த்தது.[55][56] இது மகபூப்நகர், நாராயணன்பேட்டை, சங்காரெட்டி, ரங்காரெட்டி போன்ற பல முக்கிய மாவட்டங்கள் வழியாக சென்றது.[57][58] 29 அக்டோபர் 2022 அன்று, மகபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஜாட்செர்லா என்ற நகரத்தை நடைபயணிகள் நெருங்கியபோது, இராகுல் காந்தியுடன் தெலுங்கு திரைப்பட நடிகை பூனம் கவுர் கலந்து கொண்டார்.[59][60][61]

    ஒன்பதாம் வாரம் (நவம்பர் 1-7)

    தொகு

    ஐதராபாத் செல்லும் வழியில் 2022 நவம்பர் முதல் நாளன்று, மறைந்த தலித் அறிஞர் ரோகித் வெமுலாவின் தாயார் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இராகுல் காந்தியுடன் இணைந்தார்.[62] இராகுல் காந்தி சார்மினார் முன் தேசியக் கொடியை ஏற்றினார். 32 ஆண்டுகளுக்குப் முன்பு, அவரின் தந்தை, அப்போதைய கட்சித் தலைவர் இராஜீவ் காந்தி 19 அக்டோபர் 1990 அன்று அதே இடத்திலிருந்து சத்பவ்னா யாத்திரையைத் தொடங்கினார்.[63][64][65]

    2022 நவம்பர் இரண்டாம் நாளன்று, நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமைப் பயணத்தின் 56வது நாள் இணைந்தார்.[66][67] நடைபயணத்தின் 61வது நாளான 7 நவம்பர் 2022 அன்று மாலை, இந்திய ஒற்றுமைப் பயணம் மகாராட்டிரத்தில் நுழைந்தது.[68] தெலுங்கானா மாநிலம் மத்னூர் மண்டல மாவட்டத்தில் உள்ள மெனுரு கிராமத்தில் இருந்து மகாராட்டிரத்தின் நாந்தேடு மாவட்டத்திற்கு நடைபயணம் சென்றது.

    10ஆம் வாரம் (நவம்பர் 8-14)

    தொகு

    2022 நவம்பர் 10 அன்று, பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், நான்டெட்டில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார்.[69][70][71]

    2022 நவம்பர் 11, அன்று, சிவசேனை தலைவரும், மகாராட்டிர முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே, ஹிங்கோலி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார். இந்த நடைபயணம் 65-வது நாளையும், மகாராட்டிரத்தில் ஐந்தாவது நாளையும் தொட்டது.[72]

    11 ஆம் வாரம் (நவம்பர் 15-21)

    தொகு

    2022 நவம்பர் 16, அன்று, செயற்பாட்டாளர் மேதா பட்கர் வாஷிமில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார்.[73][74] 2022 நவம்பர் 17 அன்று, நடிகை ரியா சென் அகோலாவில் நடந்த நடைபயணத்தில் இணைந்தார்.[75] விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு உதவியாக இருந்தார் என்று இராகுல் காந்தி கூறினார்.[76][77] 2022 நவம்பர் 18 அன்று, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துசார் காந்தி, நடிகர் மோனா அம்பேகோன்கர் ஆகியோர் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகாவ்னில் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் போது இராகுலுடன் இணைந்தனர்.[78][79] இந்திரா காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று, நடிகர்கள் ரஷ்மி தேசாய், அகன்ஷா பூரி மற்றும் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய நக்மா ஆகியோர் புல்தானா மாவட்டத்தில் நடைபயணத்தில் இணைந்தனர். 2022 நவம்பர் 20 அன்று, மகாராட்டிரத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் கடைசி நாளில் ஜல்கான் ஜமோடில் நடிகர் அமோல் பலேகர் இணைந்தார்.[80]

    12ஆம் வாரம் (நவம்பர் 22-28)

    தொகு

    2022 நவம்பர் 24 அன்று, பிரியங்கா காந்தியும் அவரது கணவர் ராபர்ட் வதேராவும் மத்தியப் பிரதேசத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தனர்.[81][82] புர்ஹான்பூரில் இராகுல் காந்தி கூறுகையில், இந்த நடைபயணம் இந்தியாவில் பரப்பப்படும் வெறுப்பு, வன்முறை, அச்சத்திற்கு எதிரான நடைபயணம் என்றார். புர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்த வாழைத்தோட்டம், விசைத்தறித் தொழிலாளர்களுடனான சந்திப்பின் போது, இராகுல் வேலைவாய்ப்பின்மை மற்றும் வேளாண் சிக்கல்கள் குறித்து பேசினார். மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் நடைப்பயணத்தின் தாக்கம் தேர்தலில் போதுமான அளவு எதிரொலிக்கவில்லை என்று மதிப்பிட்டார்.[83]

    காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்திய ஒற்றுமைப் பயணம் என்பது கட்சி மக்களுடன் இணைவதற்கான ஒரு வழி என்றார். மேலும் நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பானது, 2023இல் இந்தியாவின் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி இதே போன்ற நடைபயணங்களை மேற்கொள்ள காங்கிரசுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்றார்.[84] அசோக் கெலட், சச்சின் பைலட் ஆகிய இருவரையும் கட்சிக்கு சொத்து என்று இராகுல் காந்தி வர்ணித்தார்.[85] இந்திய ஒற்றுமைப் பயணம் இப்போது ஏழாவது மாநிலத்தை அடைந்தது. இந்த நடைபயணம் காங்கிரசைத் தாண்டி நகர்ந்து, இந்தியாவின் குரலை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக இராகுல் காந்தி கூறினார்.[85]

    13ஆம் வாரம் 13 (29 நவம்பர்-5 திசம்பர்)

    தொகு

    இந்திய ஒற்றுமைப் பயணம் முதன்முறையாக காங்கிரசு ஆளும் மாநிலமான இராசத்தானில் 2022 திசம்பர் நான்காம் நாள் நுழைந்தது.[86] இந்திய ஒற்றுமைப் பயணம், வேறு எந்த போக்குவரத்து முறையிலும் கற்றுக்கொள்ள முடியாத விசயங்களை கற்றுக் கொடுத்ததாக இராகுல் காந்தி கூறினார். ஜலவர் நகரத்திலிருந்து 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள சான்வ்லி சௌராகாவில் இராகுல் மற்றும் அவரது சக நடைபயணிகளுக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது; அவரும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத்தும் பழங்குடி நடனக் கலைஞர்களுடன் நடனமாடினர்.

    14ஆம் வாரம் (6-12 திசம்பர்)

    தொகு

    2022 திசம்பர் 9 அன்று, காங்கிரசின் பொதுச் செயலாளர் (செய்தித் தொடர்பு) ஜெய்ராம் ரமேஷ், கூறுகூயில் இந்திய ஒற்றுமைப் பயணம் திசம்பர் 25 அன்றிலிருந்து ஒன்பது நாள் இடைவெளிக்குப் பிறகு, 2023 சனவரி 3 அன்று மீண்டும் தொடங்கும் என்றார் [87] இந்த நடைபயணம் திசம்பர் 24-ஆம் நாள் தில்லியை அடையும் என்றும், நொய்டாவில் 60 நடமாடும் நங்குமிடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 2022 திசம்பர் 11 அன்று, நடிகர் திகங்கனா சூர்யவன்ஷி பூந்தி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் சேர்ந்தார்.[88]

    15ஆம் வாரம் (திசம்பர் 13-19)

    தொகு

    திசம்பர் 13 அன்று, இராசத்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள ஜீனாபூரில் இருந்து இந்திய ஒற்றுமைப் பயணம் மீண்டும் தொடங்கியது. அடுத்த நாள், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், சவாய் மாதோபூர் மாவட்டத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார்.[89]

    இந்திய ஒற்றுமைப் பயணம் 16 திசம்பர் 2022 அன்று 100 நாட்களை நிறைவு செய்தது. இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிவோத்ரி, மாநில காங்கிரசு தலைவர் பிரதிபா சிங் ஆகியோர் ராகுல் காந்தியுடன் நடையணத்தில் சென்றனர். நடைபயணம் 100 நாள்களை நிறைவு செய்ததை முன்னிட்டு திசம்பர் 16 அன்று ஜெய்ப்பூரில் உள்ள ஆல்பர்ட் மண்டப அருங்காட்சியகத்தில் பாடகி சுனிதி சௌஹான் பாடல் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.[90] திசம்பர் 19 அன்று, இராசத்தானின் அல்வாரில் ஒரு பேரணியில் உரையாற்றிய இராகுல் காந்தி ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும் இராத்தானில் சுமார் 1,700 ஆங்கில வழிப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.[91] பாஜக தலைவர்கள் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிப்பதை விரும்பவில்லை, ஆனால் பாஜக தலைவர்களின் குழந்தைகள் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயில்கின்றர் என்றார்.

    16ஆம் வாரம் (திசம்பர் 20-26)

    தொகு

    பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி 20 திசம்பர் 2022 அன்று அல்வாரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார். மறுநாள், நடைபயணம் நூக் மாவட்டத்தில் உள்ள முண்டகாவிலிருந்து அரியானாவுக்குள் நுழைந்து.[92][93] திசம்பர் 23 அன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார்.[94] இந்தியாவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.[95]

    திசம்பர் 24 அன்று, இந்திய ஒற்றுமைப் பயணம் என்.எச்.பி.சி சௌக் மெட்ரோ நிலையத்திலிருந்து மீண்டும் தொடங்கிய நடைபயணம் பிறகு பதர்பூரில் தில்லிக்குள் நுழைந்தது.[96][97] நடிகரும், அரசியல்வாதியுமான, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், புது தில்லியில் நடந்த நடைபயணத்தில் கலந்து கொண்டார். செங்கோட்டையில் கமல் தனது உரையில், ஓர் இந்தியனாக நடைப்பயணத்தில் இணைந்ததாகவும், நாடு என்று வரும்போது, அனைத்துக் கட்சிகளில் எல்லைக் கோடுகளும் மங்க வேண்டும் என்றும் கூறினார். 2,800 கிமீ (1,700 மைல்) நடந்து செல்லும் போது மக்களிடையே வெறுப்பு அல்லது வன்முறையைக் காணவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.[98][99] அந்த நேரத்தில், நடைபயணம் கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து 3,122 கிமீ (1,940 மைல்) தொலைவை நிறைவு செய்திருந்தது.[100][101][102]

    17ஆம் வாரம் (3-9 சனவரி 2023)

    தொகு

    ஆண்டின் இறுதியில் ஒன்பது நாள் இடைவேளைக்குப் பிறகு, இந்திய ஒற்றுமைப் பயணம் 2023 சனவரி 3, அன்று காஷ்மீர் நுழைவாயிலில் உள்ள அனுமன் கோயிலில் இருந்து அதன் இரண்டாவது கட்டத்தை மீண்டும் தொடங்கியது. தி இந்து செய்தியின்படி, மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷ் அகர்வால், இந்த நடைபயணம் "குடிமக்களின் குரலை எதிரொலிப்பதாக" கூறினார். இந்திய ஒற்றுமைப் பயணம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனியில் இருந்து உத்தரப் பிரதேசத்தில் நுழைந்தது . ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் ஏ. எஸ். துலத் மற்றும் சம்மு காசுமீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா ஆகியோர் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தனர்.[103] 5 சனவரி 2023 அன்று, பாலிவுட் நடிகர் ரிது சிவ்புரி உத்தரபிரதேசத்தின் சாம்லியில் நடந்த நடைபயணத்தில் இணைந்தார்.[104][105]

    18ஆம் வாரம் (10-16 சனவரி 2023)

    தொகு

    இந்திய ஒற்றுமைப் பயணம் 2023 சனவரி 10 அன்று பஞ்சாபின் ஷம்புவில் நுழைந்தது.[106] மாநிலத்தில் நடைபயணம் தொடங்கும் முன் இராகுல் காந்தி அங்குள்ள பொற்கோயிலுக்குச் சென்றார்.[107] சனவரி 14 அன்று, ஜலந்தர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினர் சந்தோக் சிங் சவுத்ரி, பில்லூரில் மாரடைப்பால் பேரணியின் போது இறந்தார்.[108][109] சனவரி 15 அன்று, மறைந்த பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவின் தந்தை மற்றும் வரலாற்றாசிரியர் மிருதுளா முகர்ஜி இந்திய ஒற்றுமைப் பயணத்ததில் இணைந்தனர்.[110][111]

    19ஆம் வாரம் (17-23 சனவரி 2023)

    தொகு

    18 சனவரி 2023 அன்று, இந்திய ஒற்றுமைப் பயணம் இமாச்சலப் பிரதேசத்தில் நுழைந்து மாநிலத்தில் 24 கிமீ (15 மைல்) பயணம் நடந்தது.[112][113] மறுநாள் மாலை, பட்டான்கோட்டில் சம்மு-காசுமீருக்குள் நடைபயண அணிவகுப்பு நுழைந்தது.[114][115] வேற்றுமையில் ஒற்றுமை என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைப்பதற்காக இந்த யாத்திரையில் கலந்து கொண்டதாக தேசிய மாநாட்டுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரூக் அப்துல்லா கூறியதுடன், ராகுல் காந்தி “மக்களின் இதயங்களை இணைக்கும் வேலையைச் செய்து வருகிறார்” என்றார். பாரூக் அப்துல்லா, இராகுல் காந்தியை ஆதி சங்கர்ருடன் ஒப்பிட்டு, கன்னியாகுமரி முதல் காசுமீர் வரை திக்விஜய யாத்திரை நடத்திய முதல் நபர் சங்கராச்சாரியார் என்றும், அதேபோன்று இராகுல் காந்தி மீண்டும் அதைச் செய்கிறார் என்றும் கூறினார்.[116][117] 20 சனவரி 2023 அன்று, பரம் வீர் சக்ரம் பெற்ற கேப்டன் பனா சிங் சம்மு காசுமீரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தார்.[118]

    20ஆம் வாரம் (24-30 சனவரி 2023)

    தொகு

    2023 சனவரி 24 அன்று, நடிகையும், அரசியல்வாதியுமான ஊர்மிளா மடோண்த்கர், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் சம்முவின் காரிசன் நகரமான நக்ரோடாவில் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இணைந்தனர்.[119][120][121][122] கன்னியாகுமரியில் இருந்து காசுமீர் வரையில் 137 நாள்கள் நடைப்பெற்ற நடைபயணத்தை நிறைவு செய்யும் விதமாக சிறீநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க லால் சௌக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணம் நாட்டின் அரசியலில் மாற்றுப் பார்வையை அளித்துள்ளது என்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க மணிக்கூட்டு கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றிய இராகுல் காந்தி, நாட்டுப் பண்ணைப் பாடி, தேசியவாதத்தின் வலுவான செய்தியை தெரிவித்தார்.

    சர்ச்சைகள்

    தொகு

    இந்திய ஒற்றுமைப் பயணம் தேர்தல் நடைபெறும் குசராத்து, இமாச்சலப் பிரதேசம் வழியாக செல்லவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. காங்கிரசு தலைவர் ஜெய்ராம் ரமேசு இந்த முடிவை ஆதரித்தார். கன்னியாகுமரியில் தொடங்கி குசராத்தை அடைய 90-95 நாட்கள் ஆகும். இதனால் "தேர்தலுக்கு முன், இமாச்சலப் பிரதேசத்தை அடைவது சாத்தியமில்லை" என்று ரமேசு கூறினார். யாத்திரை செல்ல முடியாத மாநிலங்களில், தானும் மற்றொரு மூத்த காங்கிரசு தலைவர் திக்விஜய சிங்கும் மற்றும் பலருடன் இணைந்து அந்தப் பகுதிகளைப் பார்வையிடுவோம் என்று அவர் கூறினார்.[123]

    கொல்லத்தில், மூன்று காங்கிரசு கட்சியினர் தெருவோர வியாபாரி ஒருவரிடம் ₹2,000 நன்கொடை கேட்டனர். ஆனால் அவர் ₹500 கொடுத்தார். இதனால் அவர்கள் வியாபாரியின் எடை இயந்திரம் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தினர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக காங்கிரசு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[124] கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கு. சுதாகரன் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, "ஏற்றுக்கொள்ள முடியாதது" மற்றும் "மன்னிக்க முடியாதது" என்று தெரிவித்தார்.[125]

    இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்

    தொகு

    27 திசம்பர் 2023 அன்று, காங்கிரசு கட்சி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை அறிவித்தது.[126] இந்த அணிவகுப்பு 14 சனவரி 2024 அன்று மணிப்பூரில் தொடங்கி மார்ச் 20 அன்று மும்பையில் முடிவடையும். இது 14 மாநிலங்களில் 6,200 கிலோமீட்டர்களை கடக்கும். வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வதில் கவனம் செலுத்திய இந்திய ஒற்றுமைப் பயணத்தைப் போலல்லாமல், பணவீக்கம், வேலையின்மை போன்ற வாழ்வாதார பிரச்சனைகளில் இந்திய நீதிப் பயணம் கவனம் செலுத்தும்.[127][128] இந்திய ஒற்றுமைப் பயணத்தைப் போலவே, இந்திய நீதிப் பயணமும் இராகுல் காந்தி தலைமையில் நடைபெறும்.[129]

    குறிப்புகள்

    தொகு
    1. 1.0 1.1 "भारत जोड़ो यात्रा: राहुल गांधी क्या पूरे रास्ते पैदल चलेंगे?". BBC News हिंदी (in இந்தி). 2022-09-10. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
    2. "Bharat Jodo Yatra". The Times of India (in ஆங்கிலம்). December 12, 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
    3. "Congress Launches Website Of 'Bharat Jodo Yatra', Bills It People's Movement". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-31.
    4. "Rahul Gandhi skirts restoration of Article 370 as Congress's Bharat Jodo Yatra ends in Jammu and Kashmir".
    5. "Rahul launches yatra: Tricolour under attack, BJP wants to divide country on religious lines". 7 September 2022.
    6. Krishnan, Murali (2022-10-03). "India's divisive politics spill over to UK diaspora community". DW News (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
    7. 7.0 7.1 "Bharat Jodo Yatra: All you need to know about Congress's Kanyakumari to Kashmir rally". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-06. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
    8. "Tamil Nadu CM Stalin to launch Rahul Gandhi's Bharat Jodo Yatra on September 7". The Indian Express (in ஆங்கிலம்). 2022-08-29. பார்க்கப்பட்ட நாள் 2022-09-13.
    9. Singh, Bikash Kumar (September 8, 2022). "As Bharat Jodo Yatra begins, here's a look at earlier political rallies held by Rahul Gandhi". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
    10. "Bharat Jodo Yatra: Check out containers where Rahul Gandhi, Congress leaders are putting up". financialexpress.com. பார்க்கப்பட்ட நாள் 10 September 2022.
    11. "Bharat Jodo Yatra Of Congress: A Necessity In Dark Times". Outlook India (in ஆங்கிலம்). 2022-09-12. பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
    12. "Bharat Jodo Yatra - भारत जोड़ो यात्रा". Bharat Jodo Yatra (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
    13. "The Parallels Between Congress's 'Bharat Jodo Yatra' and Ex-PM Chandra Shekhar's 'Padayatra'". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
    14. "Rewind & Replay | That other 'Bharat Yatri': The long march, but short run, of Chandra Shekhar". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-10-15.
    15. "Congress launches Bharat Jodo Yatra tagline, logo". 2022-08-23. https://www.thehindu.com/news/national/congress-launches-logo-website-of-bharat-jodo-yatra/article65801386.ece. 
    16. "Gujarat polls: Rahul Gandhi promises loan waiver and free electricity to farmers, LPG cylinder at Rs 500". CNBC TV18 (in ஆங்கிலம்). 2022-09-05. பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
    17. "On day 1 of Bharat Jodo Yatra, Rahul interacts with activists, Dalit groups, environmentalists". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
    18. "Bharat Jodo Yatra: Rahul holds 'jan ki baat', interacts with artists, farmers, activists in Karnataka". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-10-08.
    19. "Watch: Rahul Gandhi Addresses Bharat Jodo Yatra Rally Amid Heavy Rain In Mysuru". news.abplive.com (in ஆங்கிலம்). 2022-10-02. பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
    20. Basavaraj Maralihalli (Sep 13, 2022). "Bharat Jodo Yatra: Congress plans massive rally in Ballari | Hubballi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-13.
    21. "Rahul to address public rally in Ballari on October 15". 2022-10-10. https://www.thehindu.com/news/national/karnataka/rahul-to-address-public-rally-in-ballari-on-october-15/article65992334.ece. 
    22. "Bharat Yatris". BHARAT JODO YATRA (in ஆங்கிலம்). Archived from the original on 29 Jan 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
    23. "Swara Bhasker gives Rahul Gandhi roses, urges all to join Bharat Jodo Yatra: 'Resist hate'". December 2022.
    24. "Cong's 'Bharat Jodo Yatra' Tomorrow | All About 3,500-km Padyatra Covering 12 States from Kanyakumari to Kashmir". News18 (in ஆங்கிலம்). 2022-09-08. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
    25. "Bharat Yatris". BHARAT JODO YATRA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
    26. "Bharat Jodo Yatra: Rahul Gandhi Among 230 'Padyatris' To Spend Nights In Containers Mounted On Trucks". outlookindia.com (in ஆங்கிலம்). 2022-09-09. பார்க்கப்பட்ட நாள் 2022-10-19.
    27. 27.0 27.1 Yadav, Yogendra (2022-08-24). "Sansad to sadak – Why grassroots movements are joining Congress' Bharat Jodo Yatra". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
    28. 28.0 28.1 "Over 200 civil society members appeal people to support Congress' 'Bharat Jodo Yatra'". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
    29. "With Invite To Tejashwi Yadav, Team Rahul Gandhi Sends This Message". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
    30. "Around 100 civil society groups to be part of Bharat Jodo Yatra in Karnataka". தி நியூஸ் மினிட். 2022-09-27. https://www.thenewsminute.com/article/bhart-jodo-yatra-rahul-gandhi-reach-out-civil-society-karnataka-168335. 
    31. "Congress to launch 3570-km Bharat Jodo Yatra in Kanyakumari today. Details here". mint (in ஆங்கிலம்). 2022-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-09-14.
    32. "Rahul genuinely concerned about India: Activist Sridhar recollects Bharat Jodo moments". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
    33. "Rahul resumes yatra after paying tribute to Sree Narayana Guru". United News of India. பார்க்கப்பட்ட நாள் September 29, 2022.
    34. "Bharat Jodo Yatra: Rahul Gandhi offers floral tributes at his father's memorial in Sriperumbudur". The Hindu BusinessLine (in ஆங்கிலம்). 2022-09-07. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
    35. "Rahul Gandhi visits Sivagiri Mutt, Bharat Jodo Yatra in Kollam today". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    36. 36.0 36.1 "Congress's Bharat Jodo Yatra resumes after a day break, Sonia Gandhi, Priyanka to join in Karnataka". India Today (in ஆங்கிலம்). September 24, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    37. Bhardwaj, Supriya (September 21, 2022). "'Rattled' BJP going after Rahul Gandhi, says Congress as Bharat Jodo Yatra enters Day 14". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    38. 38.0 38.1 "Bharat Jodo Yatra enters Malappuram". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-27. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    39. "Rahul Gandhi resumes Bharat Jodo Yatra from Aluva UC college in Kerala". English.Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    40. "Hollywood Actor John Cusack On Rahul Gandhi's Bharat Jodo Yatra". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    41. "Last phase of Congress' Bharat Jodo Yatra in Kerala ends". English.Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    42. "Bharat Jodo Yatra enters day 2 in Karnataka; FIR against Congress worker for holding PayCM poster". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-10-01. பார்க்கப்பட்ட நாள் 2022-10-01.
    43. Singh, Nandini (October 2, 2022). "Floral tributes to Bapu, visit to Khadi unit: Rahul Gandhi leads Bharat Jodo Yatra in Mysuru". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    44. "Congress Bharat Jodo Yatra LIVE Updates: Bharat Jodo Yatra will spread message of ahimsa and swaraj, says Rahul Gandhi". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-02.
    45. "Bengaluru News Live Updates: Sonia Gandhi reaches Mysore for Bharat Jodo Yatra; K'taka CM Bommai hits out at Rahul Gandhi, Congress". The Indian Express (in ஆங்கிலம்). 2022-10-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-03.
    46. Lahiri, Ishadrita (2022-10-06). "'What she means to them': Women flock to see Sonia as she joins Bharat Jodo, keeps Udaipur pledge". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-07.
    47. "Bharat Jodo Yatra completes 30 days on the road" (in en-IN). The Hindu. 2022-10-07. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/bharat-jodo-yatra-completes-30-days-on-the-road/article65981802.ece. 
    48. "Bharat Jodo Yatra goes through BJP bastion" (in en-IN). The Hindu. 2022-10-09. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/karnataka/bharat-jodo-yatra-goes-through-bjp-bastion/article65988854.ece. 
    49. "Bharat Jodo Yatra: Rahul Gandhi resumes his 'padayatra' from Chitradurga in Karnataka". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
    50. "Bharat Jodo Yatra day 35: Rahul Gandhi to meet 2000 unemployed youths from K'nataka". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.
    51. "Rahul Gandhi Asked About Making Hindi 'National Language'. His Reply". NDTV.com.
    52. "Tumultuous welcome to Rahul Gandhi's Bharat Jodo Yatra in Anantapur". https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tumultuous-welcome-to-rahul-gandhis-bharat-jodo-yatra-in-anantapur/article66010456.ece. 
    53. "Video | Rahul Gandhi's Bharat Jodo Yatra Achieves 1000 Km Milestone" – via www.ndtv.com.
    54. Susarla, Ramesh (2022-10-17). "Bharat Jodo Yatra to enter Andhra Pradesh on Tuesday" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/bharat-jodo-yatra-to-enter-andhra-pradesh-on-tuesday/article66022744.ece. 
    55. "Congress' Bharat Jodo Yatra enters Telangana" (in en). The Times of India. October 23, 2022. https://timesofindia.indiatimes.com/india/congress-bharat-jodo-yatra-enters-telangana/articleshow/95043170.cms. 
    56. Reddy (2022-10-29). "Hate will be abolished, says Rahul Gandhi as massive crowds join him in Bharat Jodo Yatra" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/hate-will-be-abolished-says-rahul-gandhi-as-massive-crowds-join-him-in-bharat-jodo-yatra/article66070756.ece. 
    57. "Bharat Jodo Yatra in Sangareddy on Wednesday". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-11-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-03.
    58. "Rahul Gandhi's Bharat Jodo Yatra Enters Hyderabad" (in en). https://news.abplive.com/telangana/rahul-gandhi-s-bharat-jodo-yatra-enters-hyderabad-1560927. 
    59. "Rahul Yatra Day 52: Actress visit, a kid goat as gift, a dance". 29 October 2022.
    60. "Bharat Jodo Yatra enters day 52, fourth day in Telangana". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    61. "Actor Poonam Kaur explains why Rahul Gandhi held her hand; 'Sit down...': Priyanka Chaturvedi to troll". 30 October 2022.
    62. "Rohith Vemula's Mother Joins Rahul Gandhi On Congress March In Telangana".
    63. "'Rajiv se Rahul tak' parallel as Bharat Jodo reaches Charminar: 'Papa started Sadbhavana Yatra 32 years ago'". 2 November 2022.
    64. "Bharat Jodo Yatra: Rahul unfurls national flag in front of Charminar".
    65. "Rajiv Gandhi tries to live down his elitist image, woos the common man".
    66. "Watch: Actor Pooja Bhatt Joins Rahul Gandhi For Bharat Jodo Yatra".
    67. "Actor Pooja Bhatt joins Rahul Gandhi's Bharat Jodo Yatra in Hyderabad. Watch". 2 November 2022.
    68. "Congress's Bharat Jodo Yatra enters Maharashtra today; Tricolour to be handed over to Nana Patole".
    69. "Yatra Diary: A Ringside View Of 'Bharat Jodo Yatra'". 18 November 2022.
    70. "'Should I attend or not...': Actor Sushant Singh joins Rahul Gandhi's Bharat Jodo; Pooja Bhatt says..." 11 November 2022.
    71. "Actor Sushant Singh joins Rahul Gandhi's 'Bharat Jodo Yatra' in Maharashtra; says 'path of love, harmony difficult'".
    72. "Cross-Country foot-march". https://www.thehindu.com/news/national/other-states/aaditya-thackeray-takes-part-in-bharat-jodo-yatra-marches-along-with-rahul-gandhi-in-mahas-hingoli/article66124410.ece. 
    73. "Social media companies can make any party win election: Rahul Gandhi on Yatra Day 70". 17 November 2022.
    74. "BJP Slams Rahul Gandhi For Marching With Activist Medha Patkar".
    75. "Riya Sen joins Rahul Gandhi for Bharat Jodo Yatra in Maharashtra days after Pooja Bhatt, Riteish Deshmukh". 17 November 2022.
    76. "Am not a soothsayer, can't predict future: Rahul on Bharat Jodo Yatra's impact on Congress". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    77. "Vinayak Damodar Savarkar helped British: Rahul Gandhi".
    78. "Mahatma Gandhi's Great Grandson Joins Rahul Gandhi's Bharat Jodo Yatra".
    79. "Mahatma Gandhi's great-grandson joins Rahul during Bharat Jodo Yatra". 18 November 2022.
    80. "Actor Amol Palekar, wife Sandhya Gokhale join Bharat Jodo Yatra". Archived from the original on 2022-11-27. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
    81. "Watch: Priyanka joins Rahul Gandhi in Madhya Pradesh for Bharat Jodo Yatra". 24 November 2022.
    82. ""Steps Are Stronger When...": Sister Priyanka Joins Rahul Gandhi's Yatra".
    83. "A march against hatred, violence, fear in India, says Rahul as Bharat Jodo Yatra enters MP". https://www.thehindu.com/news/national/other-states/a-march-against-hatred-violence-fear-in-india-says-rahul-as-bharat-jodo-yatra-enters-mp/article66174913.ece. 
    84. "Bharat Jodo Yatra". https://www.thehindu.com/news/national/buoyed-by-bharat-jodo-yatra-congress-mulls-yatra-from-west-to-east/article66161843.ece. பார்த்த நாள்: 21 November 2022. 
    85. 85.0 85.1 Sikdar, Shubhomoy. "Gehlot, Pilot are assets for the Congress, says Rahul Gandhi, breaking silence on the power struggle within the party in Rajasthan". https://www.thehindu.com/news/national/other-states/both-leaders-assets-to-congress-rahul-gandhi-on-ashok-gehlot-and-sachin-pilot/article66195085.ece. பார்த்த நாள்: 29 November 2022. 
    86. "Bharat Jodo Yatra enters Rajasthan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    87. "Bharat Jodo Yatra 2.0 to begin on January 3: Congress MP Jairam Ramesh".
    88. "Actress Digangana Suryavanshi Joins Bharat Jodo Yatra, Walks With Rahul Gandhi In Rajasthan, See PICS". 13 December 2022.
    89. "Ex RBI governor Raghuram Rajan joins Rahul Gandhi at Bharat Jodo Yatra". 14 December 2022.
    90. "Rahul 'connects India' on 100th day of Yatra with Sunidhi show in Jaipur".
    91. "Rahul Gandhi backs English education in schools, slams BJP".
    92. "'Opening a shop of love in market of hate': Rahul Gandhi attacks BJP as Bharat Jodo Yatra enters Haryana".
    93. "Bharat Jodo in Haryana: Fog worries Congress netas, workers can't wait for 'yuvraj'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    94. "DMK MP Kanimozhi joined Rahul Gandhi's Bharat Jodo Yatra in Haryana". 23 December 2022.
    95. . 23 December 2022. 
    96. "Rahul Gandhi's Bharat Jodo Yatra In Delhi Amid BJP vs Congress Over Covid".
    97. "'Hum jahan gaye humko pyar mila': Rahul Gandhi as Bharat Jodo Yatra enters Delhi".
    98. "'Even dogs came, but…': Rahul Gandhi on 'no hatred' in Congress yatra; attacks BJP". 24 December 2022.
    99. ""Love that I got from her…" Rahul Gandhi makes emotional post". 24 December 2022.
    100. "Bharat Jodo Yatra: Rahul Gandhi to hoist national flag in Srinagar on January 30".
    101. "Rahul Gandhi to hoist national flag in Srinagar on Jan 30: K C Venugopal". 2 January 2023.
    102. "Rahul Gandhi to hoist national flag in Srinagar on Jan 30". 2 January 2023.
    103. "Bharat Jodo Yatra: NC leader Farooq Abdullah joins Rahul Gandhi as Yatra enters Uttar Pradesh". 3 January 2023.
    104. "Day In Pics: January 05, 2023".
    105. "Rahul Yatra: As BKU's Naresh Tikait now hails the 'thought revolution', Jairam calls march sanjivani for Congress". 6 January 2023.
    106. "Yatra enters state, factionalism comes to the fore in Congress".
    107. "Rahul Gandhi visits Golden Temple as Bharat Jodo enters Punjab". 10 January 2023.
    108. "Congress MP Chaudhary Santokh Singh passes away during Bharat Jodo Yatra in Punjab". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    109. Congress MP Chaudhary Santokh Singh dies of heart attack during Rahul Gandhi's Bharat Jodo Yatra in Punjab's Phillaur
    110. "Rahul Gandhi gets a gift from Sidhu Moosewala's father". 15 January 2023.
    111. "Sidhu Moose Wala's Father Joins Bharat Jodo Yatra In Punjab".
    112. "Rahul Gandhi's 'Bharat Jodo Yatra' enters Himachal Pradesh". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    113. "Rahul Gandhi begins day long leg of Bharat Jodo Yatra in Himachal Pradesh". 18 January 2023.
    114. "Watch: Congress' Bharat Jodo Yatra enters Jammu and Kashmir". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    115. "Govt diverting attention of people and then looting them: Rahul Gandhi in J&K".
    116. "Farooq Abdullah Compares Rahul Gandhi With Shankaracharya".
    117. "'After Shankaracharya...': Farooq Abdullah praises Rahul Gandhi for Bharat Jodo Yatra". 20 January 2023.
    118. "Hero of 'Operation Rajiv' — Param Vir Chakra recipient Capt Bana Singh joins Bharat Jodo Yatra". 20 January 2023.
    119. "Urmila Matondkar marches with Rahul Gandhi during Bharat Jodo in Jammu. Watch". 24 January 2023.
    120. "Actor-Politician Urmila Matondkar Joins Rahul Gandhi's Bharat Jodo Yatra in Jammu".
    121. "Rahul dismisses Digvijaya's surgical strike remark as 'ridiculous'". 25 January 2023.
    122. "Actor-politician Urmila Matondkar joins Rahul Gandhi's Bharat Jodo Yatra in Jammu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
    123. Singh, Darpan (September 15, 2022). "Bharat Jodo Yatra: Jairam Ramesh explains Rahul Gandhi's 18 days in Kerala, skipping poll-bound Gujarat, Himachal". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-15.
    124. "3 Congress activists suspended for creating ruckus demanding funds for Bharat Jodo Yatra". Mathrubhumi English (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
    125. "3 Cong workers suspended for threatening vegetable vendor over donation". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-09-16. பார்க்கப்பட்ட நாள் 2022-09-17.
    126. "Bharat Nyay Yatra: Key points about Congress's Manipur-Mumbai yatra ahead of LS polls". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-27.
    127. "Rahul Gandhi Yatra 2.0: In longer distance, shorter time, from Manipur to Mumbai, Congress leader to cover several vital LS states". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-27.
    128. "Eyeing 2024 polls, Rahul Gandhi gets set for Yatra 2.0 with focus on jobs, price rise". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-16. பார்க்கப்பட்ட நாள் 2023-12-27.
    129. "Rahul Gandhi to embark on 'Manipur to Mumbai' Bharat Nyay Yatra from Jan 14; all you need to know". Business Today (in ஆங்கிலம்). 2023-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-27.
    "https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_ஒற்றுமைப்_பயணம்&oldid=4110423" இலிருந்து மீள்விக்கப்பட்டது