சூன் 15
நாள்
(15 ஜூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 15 (June 15) கிரிகோரியன் ஆண்டின் 166 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 167 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
தொகு- கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள்.
- 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார்.
- 923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார்,
- 1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார்.
- 1215 – இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது இலச்சினையைப் பதிந்தார்.
- 1219 – வடக்கு சிலுவைப் போர்கள்: லிந்தானீசு சமரை அடுத்து தானிய எசுத்தோனிய இராச்சியம் அமைக்கப்பட்டது.
- 1246 – ஆஸ்திரியாவின் இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
- 1300 – பில்போ நகரம் அமைக்கப்பட்டது.
- 1389 – கொசோவோவில் நடந்த போரில் உதுமானியர்கள் செர்பியர்களையும் பொசுனியர்களையும் தோற்கடித்தனர்.
- 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற் பயணத்தின் போது மர்தினிக்கு தீவில் கால் வைத்தார்.
- 1520 – திருத்தந்தை பத்தாம் லியோ மார்ட்டின் லூதரை உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கப்போவதாக எச்சரித்தார்.
- 1667 – முதலாவது மனித குருதி மாற்றீடு மருத்துவர் சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
- 1752 – பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் ஒரு மின்சாரம் என்பதை நிறுவினார்.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் அமெரிக்க இராணுவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- 1776 – டெலவெயர் பென்சில்வேனியாவில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக வாக்களித்தது.
- 1785 – ஆங்கிலக் கால்வாயை ழீன்-பிரான்சுவா பிலாத்ரே டி ரோசியர், பியேர் ரொமாயின் ஆகியோர் வெப்பக் காற்றுக் குடுவையில் பறக்க முயன்றபோது குடுவை வெடித்ததில் உயிரிழந்தனர். இதுவே முதலாவது வான விபத்து ஆகும்.
- 1808 – யோசப் பொனபார்ட் எசுப்பானியாவின் மன்னராக முடிசூடினார்.
- 1836 – ஆர்கன்சா 25வது அமெரிக்க மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1844 – இயற்கை இறப்பர் பதப்படுத்தும் முறை சார்லசு கூடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- 1846 – அமெரிக்கா, கனடா ஆகியவற்றின் எல்லைக்கோடு ராக்கி மலைத்தொடர் முதல் உவான் டெ பூக்கா நீரிணை வழியாக வரையப்பட்டது.
- 1846 – இலங்கையின் அரச ஆசியர் சமூகம் ஜேர்னல் என்ற தனது முதலாவது இதழை வெளியிட்டது.[1]
- 1878 – குதிரை ஒன்று ஓடுகையில் அதன் நான்கு கால்களும் தரையில் படுவதில்லை என்பதை நிறுவும் புகைப்படங்களை எதுவார்து மைபிரிட்ச் என்பவர் எடுத்தார். இவ்வாய்வே பின்னர் அசையும் திரைப்படம் உருவாக மூலமாக அமைந்தது.
- 1888 – முடிக்குரிய இளவரசர் வில்லியம் செருமானியப் பேரரசின் கடைசி மன்னராக முடிசூடினார். 1888 இல் முதலாம் வில்லியம், மூன்றாம் பிரெடெரிக் ஆகிய மன்னர்கள் இறந்ததனால், இவ்வாண்டு செருமனியின் மூன்று பேரரசர்களின் ஆட்சி ஆண்டு ஆகும்.
- 1896 – சப்பானில் சன்ரிக்கு என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கம், மற்றும் சுனாமியால் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- 1904 – நியூயோர்க் நகரில் கிழக்கு ஆற்றில் ஜெனரல் சுலோக்கம் என்ற நீராவிப் படகு தீப்பற்றியதில் 1,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1909 – இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலார்ட்சுவில் கூடி, இம்பீரியல் துடுப்பாட்ட மாநாட்டை ஆரம்பித்தனர்.
- 1937 – கார்ல் வியென் தலைமையில் சென்ற செருமானியக் குழு நங்க பர்வதத்தில் பனிச்சரிவில் சிக்கி தனது 16 உறுப்பினர்களை இழந்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பாரிசு நகரைக் கைப்பற்றியதை அடுத்து நேச அணிப் படைகள் பிரான்சில் இருந்து வெளியேற ஆரம்பித்தன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியரின் பிடியில் இருந்த சைப்பேனை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றியது.
- 1944 – சசுக்காச்சுவான் பொதுத்தேர்தலில் டொம்மி டக்ளசு தலைமையில் வட அமெரிக்காவின் முதலாவது சோசலிச அரசு பதவியேற்றது.
- 1954 – ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் சுவிட்சர்லாந்தின் பேசெல் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1977 – எசுப்பானியாவில் முதல் தடவையாக மக்களாட்சி முறைத் தேர்தல் இடம்பெற்றது.
- 1978 – ஜோர்தான் மன்னர் உசைன், லீசா அலபி என்ர அமெரிக்கப் பெண்ணைத் திருமனம் புரிந்தார். இவர் நூர் மகாராணி என அழைக்கப்பட்டார்.
- 1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கைக் கடற்படை ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1991 – பிலிப்பீன்சில் பினாடூபோ எரிமலை வெடித்ததில் 800 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- 1994 – இசுரேலும், வத்திக்கானும் முழுமையான பண்ணுறவாண்மையை ஏற்படுத்திக் கொண்டன.
- 1996 – ஐரியக் குடியரசுப் படை (ஐஆர்ஏ) மான்செஸ்டர் நகரில் பலம் வாய்ந்த சுமையுந்துக் குண்டை வெடிக்கவைத்ததில் பலர் காயமடைந்தனர்.
- 2014 – பாக்கித்தான் வடக்கு வசீரித்த்தானில் தீவிரவாதிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.
பிறப்புகள்
தொகு- 1594 – நிக்கோலா போசின், பிரான்சிய ஓவியர் (இ. 1665)
- 1754 – யுவான் ஒசே எலுயார், எசுப்பானிய வேதியியகாளர், கனிமவியலாளர் (இ. 1796)
- 1843 – எட்வர்டு கிரெய்கு, நோர்வே இசைக்கலைஞர். இசையமைப்பாளர் (இ. 1907)
- 1848 – பருமலா திருமேனி, இந்திய ஆயர், புனிதர் (இ. 1902)
- 1863 – கிருஷ்ண சுவாமி அய்யர், இந்திய வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் (இ. 1911)
- 1902 – எரிக் எரிக்சன், செருமானிய-அமெரிக்க உளவியல் நிபுணர் (இ. 1994)
- 1921 – எம். எச். மொகம்மது, இலங்கை அரசியல்வாதி (இ. 2016)
- 1926 – அல்பிரட் துரையப்பா, இலங்கை அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1975)
- 1933 – வீரசிங்கம் ஆனந்தசங்கரி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
- 1934 – ஜவஹர் சு. சுந்தரம், தமிழக எழுத்தாளர்
- 1935 – மணவை முஸ்தபா, தமிழகத் தமிழறிஞர் (இ. 2017)
- 1937 – ப. தங்கம், தமிழக ஓவியர்
- 1938 – பா. சத்தியசீலன், ஈழத்துக் கவிஞர் (இ. 2001)
- 1939 – உதுமாலெவ்வை ஆதம் பாவா, இலங்கை எழுத்தாளர்
- 1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்
- 1941 – டி. ஆர். பாலு, இந்திய அரசியல்வாதி
- 1941 – ஆகென் கிலிநெர்டு, செருமனிய இயற்பியலாளர்
- 1942 – ப. மு. அன்வர், மலேசியத் தமிழ்க் கவிஞர்
- 1944 – மலேசியா வாசுதேவன், திரைப்படப் பாடகர், நடிகர் (இ. 2011)
- 1944 – க. நெடுஞ்செழியன், தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2022)
- 1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)
- 1950 – இலட்சுமி மித்தல், இந்திய-ஆங்கிலேயத் தொழிலதிபர்
- 1953 – சீ சின்பிங், சீன அரசுத்தலைவர்
- 1959 – பசேலியோஸ் கிளேமிஸ் பாவா, கேரள பேராயர்
- 1969 – ஐஸ் கியூப், அமெரிக்க ராப் கலைஞர், நடிகர்
- 1973 – நீல் பாட்ரிக் ஹாரிஸ், அமெரிக்க நடிகர், பாடகர்
- 1984 – நகுல், தமிழ் நடிகர், பின்னணிப் பாடகர்
இறப்புகள்
தொகு- 1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார், தமிழிசை ஆய்வாளர் (பி. 1881)
- 1849 – ஜேம்ஸ் போக், அமெரிக்காவின் 11வது அரசுத்தலைவர் (பி. 1795)
- 1952 – விளாதிமிர் அலெக்சாந்திரோவிச் அல்பித்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1891)
- 1971 – சத்தியன், தென்னிந்திய, மலையாளத் திரைப்பட நடிகர் (பி. 1912)
- 1975 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழக கடம் கலைஞர் (பி. 1912)
- 1975 – கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (பி. 1892)
- 2006 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (பி. 1918)
- 2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, இலங்கை ஆன்மிகவாதி (பி. 1925)
- 2013 – மணிவண்ணன், தமிழகத் திரைப்பட நடிகர், செயற்பாட்டாளர் (பி. 1954)
- 2016 – ஏ. சி. திருலோகச்சந்தர், தமிழகத் திரைப்பட இயக்குநர் (பி. 1930)
- 2016 – சோமவன்ச அமரசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- 2016 – அலவி மௌலானா, இலங்கை அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1932)
சிறப்பு நாள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 22