மேளகர்த்தா

(மேளகர்த்தா இராகங்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.

இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது[1], ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.

விதிமுறைகள்

தொகு

ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  1. சம்பூர்ண ஆரோகணம் அவரோகணம் அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.
  2. கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
  3. அரோகணத்தில் வரும் சுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
  4. ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
  5. மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை சுரங்கள் ஒழுங்காகச் செல்லுதல்.

அமைப்பு

தொகு

72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. வெங்கடமகி இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது. 72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது.

வரலாறு

தொகு

மேளகர்த்தாக்களின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த வெங்கடமகி எழுதிய சதுர்த்தண்டிப் பிரக்காசிகை என்னும் நூலிலும் கோவிந்தாச்சாரியார் என்பவர் இயற்றிய சங்கிரக சூடாமணி என்னும் நூலில் இருந்தும் அறிய முடிகின்றது.

மேளகர்த்தா இராகங்களின் பட்டியல்

தொகு

மேளகர்த்தா இராகங்களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.

சக்கரம் எண் பெயர் சுரங்கள்
ரி நி

ட்

ம்
சு
த்

து
ச்
ரு
தி

ட்
ச்
ரு
தி
சு
த்
சா
தா


ந்

சு
த்
பி

தி

ஞ்


ம்
சு
த்

து
ச்
ரு
தி

ட்
ச்
ரு
தி
சு
த்
கை
சி
கி
கா

லி
சுத்த மத்திம இராகங்கள்
I - இந்து 1 கனகாங்கி ரி1 . . க1 . . ம1 . த1 . . நி1 . .
2 ரத்னாங்கி ரி1 . . க1 . . ம1 . த1 . . . நி2 .
3 கானமூர்த்தி ரி1 . . க1 . . ம1 . த1 . . . . நி3
4 வனஸ்பதி ரி1 . . க1 . . ம1 . . த2 . . நி2 .
5 மானவதி ரி1 . . க1 . . ம1 . . த2 . . . நி3
6 தானரூபி ரி1 . . க1 . . ம1 . . . த3 . . நி3
.
II - நேத்ர 7 சேனாவதி ரி1 . . . க2 . ம1 . த1 . . நி1 . .
8 ஹனுமத்தோடி ரி1 . . . க2 . ம1 . த1 . . . நி2 .
9 தேனுக ரி1 . . . க2 . ம1 . த1 . . . . நி3
10 நாடகப்பிரியா ரி1 . . . க2 . ம1 . . த2 . . நி2 .
11 கோகிலப்பிரியா ரி1 . . . க2 . ம1 . . த2 . . . நி3
12 ரூபவதி ரி1 . . . க2 . ம1 . . . த3 . . நி3
.
III - அக்னி 13 காயகப்பிரியா ரி1 . . . . க3 ம1 . த1 . . நி1 . .
14 வகுளாபரணம் ரி1 . . . . க3 ம1 . த1 . . . நி2 .
15 மாயாமாளவகௌளை ரி1 . . . . க3 ம1 . த1 . . . . நி3
16 சக்ரவாகம் ரி1 . . . . க3 ம1 . . த2 . நி2 .
17 சூர்யகாந்தம் ரி1 . . . . க3 ம1 . . த2 . . . நி3
18 ஹாடகாம்பரி ரி1 . . . . க3 ம1 . . . த3 . . நி3
.
IV - வேத 19 ஜங்காரத்வனி . ரி2 . . க2 . ம1 . த1 . . நி1 . .
20 நடபைரவி . ரி2 . . க2 . ம1 . த1 . . . நி2 .
21 கீரவாணி . ரி2 . . க2 . ம1 . த1 . . . . நி3
22 கரகரப்பிரியா . ரி2 . . க2 . ம1 . . த2 . . நி2 .
23 கௌரிமனோகரி . ரி2 . . க2 . ம1 . . த2 . . . நி3
24 வருணப்பிரியா . ரி2 . . க2 . ம1 . . . த3 . . நி3
.
V - பாண 25 மாரரஞ்சனி . ரி2 . . . க3 ம1 . த1 . . நி1 . .
26 சாருகேசி . ரி2 . . . க3 ம1 . த1 . . . நி2 .
27 சரசாங்கி ரி2 . . . க3 ம1 . த1 . . . . நி3
28 ஹரிகாம்போஜி . ரி2 . . . க3 ம1 . . த2 . . நி2 .
29 தீரசங்கராபரணம் . ரி2 . . . க3 ம1 . . த2 . . . நி3
30 நாகாநந்தினி . ரி2 . . . க3 ம1 . . . த3 . . நி3
.
VI - ருது 31 யாகப்பிரியா . . ரி3 . . க3 ம1 . த1 . . நி1 . .
32 ராகவர்த்தனி . . ரி3 . . க3 ம1 . த1 . . . நி2 .
33 காங்கேயபூஷணி . . ரி3 . . க3 ம1 . த1 . . . . நி3
34 வாகதீச்வரி . . ரி3 . . க3 ம1 . . த2 . . நி2 .
35 சூலினி . . ரி3 . . க3 ம1 . . த2 . . . நி3
36 சலநாட . . ரி3 . . க3 ம1 . . . த3 . . நி3
பிரதி மத்திம இராகங்கள்
VII - ரிஷி 37 சாலகம் ரி1 . . க1 . . . ம2 த1 . . நி1 . .
38 ஜலார்ணவம் ரி1 . . க1 . . . ம2 த1 . . . நி2 .
39 ஜாலவராளி ரி1 . . க1 . . . ம2 த1 . . . . நி3
40 நவநீதம் ரி1 . . க1 . . . ம2 . த2 . . நி2 .
41 பாவனி ரி1 . . க1 . . . ம2 . த2 . . . நி3
42 ரகுப்பிரியா ரி1 . . க1 . . . ம2 . . த3 . . நி3
.
VIII - வசு 43 கவாம்போதி ரி1 . . . க2 . . ம2 த1 . . நி1 . .
44 பவப்பிரியா ரி1 . . . க2 . . ம2 த1 . . . நி2 .
45 சுபபந்துவராளி ரி1 . . . க2 . . ம2 த1 . . . . நி3
46 ஷட்விதமார்க்கிணி ரி1 . . . க2 . . ம2 . த2 . . நி2 .
47 சுவர்ணாங்கி ரி1 . . . க2 . . ம2 . த2 . . . நி3
48 திவ்யமணி ரி1 . . . க2 . . ம2 . . த3 . . நி3
.
IX - பிரம்ம 49 தவளாம்பரி ரி1 . . . . க3 . ம2 த1 . . நி1 . .
50 நாமநாராயணி ரி1 . . . . க3 . ம2 த1 . . . நி2 .
51 காமவர்த்தனி ரி1 . . . . க3 . ம2 த1 . . . . நி3
52 ராமப்பிரியா ரி1 . . . . க3 . ம2 . த2 . . நி2 .
53 கமனச்ரம ரி1 . . . . க3 . ம2 . த2 . . . நி3
54 விஷ்வம்பரி ரி1 . . . . க3 . ம2 . . த3 . . நி3
.
X - திசி 55 சியாமளாங்கி . ரி2 . . க2 . . ம2 த1 . . நி1 . .
56 சண்முகப்பிரியா . ரி2 . . க2 . . ம2 த1 . . . நி2 .
57 சிம்மேந்திரமத்திமம் . ரி2 . . க2 . . ம2 த1 . . . . நி3
58 ஹேமவதி . ரி2 . . க2 . . ம2 . த2 . . நி2 .
59 தர்மவதி . ரி2 . . க2 . . ம2 . த2 . . . நி3
60 நீதிமதி . ரி2 . . க2 . . ம2 . . த3 . ./td> நி3
.
XI - ருத்ர 61 காந்தாமணி . ரி2 . . . க3 . ம2 த1 . . நி1 . .
62 ரிஷபப்பிரியா . ரி2 . . . க3 . ம2 த1 . . . நி2 .
63 லதாங்கி . ரி2 . . . க3 . ம2 த1 . . . . நி3
64 வாசஸ்பதி . ரி2 . . . க3 . ம2 . த2 . . நி2 .
65 மேசகல்யாணி . ரி2 . . . க3 . ம2 . த2 . . . நி3
66 சித்ராம்பரி . ரி2 . . . க3 . ம2 . . த3 . . நி3
.
XII -ஆதித்ய 67 சுசரித்ர . . ரி3 . . க3 . ம2 த1 . . நி1 . .
68 ஜோதிஸ்வரூபிணி . . ரி3 . . க3 . ம2 த1 . . . நி2 .
69 தாதுவர்த்தனி . . ரி3 . . க3 . ம2 த1 . . . . நி3
70 நாசிகாபூஷணி . . ரி3 . . க3 . ம2 . த2 . . நி2 .
71 கோசலம் . . ரி3 . . க3 . ம2 . த2 . . . நி3
72 ரசிகப்பிரியா . . ரி3 . . க3 . ம2 . . த3 . . நி3

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

தொகு
  1. மு. அருணாசலம், தமிழ் இசை இலக்கண வரலாறு, பக் 384, "மதுரையில் பிரசித்த நாகசுர வித்துவானாயிருந்த பொன்னுசாமிப் பிள்ளை என்பவர் 72 என்பது சரியல்ல. மேளகர்த்தா என்பது 32 தான் என்று நன்கு நிறுவியிருக்கிறார்"

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேளகர்த்தா&oldid=4092979" இலிருந்து மீள்விக்கப்பட்டது