விக்கிப்பீடியா:ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு/2007

ஈழப்போர்ச் செய்திகள் தொகுப்பு

2007 ஆம் ஆண்டு ஈழப் போரின் நான்காவது கட்டமாக பலராலும் நோக்கப்படுகிறது. இத்தொகுப்பு 2007 ஆம் ஆண்டின் ஈழப் போர் தொடர்பாக விக்கிபீடியா நடப்பு நிகழ்வுகளில் இணைக்கப்பட்ட ஈழப் போர்ச் செய்திகளின் தொகுப்பாகும். இதில் சில செய்திகள் விடுபட்டுள்ளதாக நீங்கள் கருதினால் சம்பவம் நடைப்பெற்ற மாத தலைப்பிற்கு எதிராக தரப்பட்டுள்ள "தொகு" என்ற இணைப்பை சொடுக்கி இணைப்பு இட்டுச் செல்லும் வார்ப்புருவில் செய்திகளை இணைத்து சேமிப்பதன் மூலம் இத்தொகுப்பில் மேலதிகச் செய்திகளைச் சேர்க்கலாம்.

தொகுப்பின் முன் பக்கத்துக்குச் செல்ல...
டிசம்பர் 2007
நவம்பர் 2007
அக்டோபர் 2007
செப்டம்பர் 2007
ஆகஸ்ட் 2007
ஜூலை 2007
ஜூன் 2007
மே 2007
ஏப்ரல் 2007
மார்ச் 2007
பெப்ரவரி 2007
  • பெப்ரவரி 28: இலங்கை கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல் என் சந்தேகிக்கப்படும் கப்பலொன்றை மாத்தறைக்கு அப்பாலுள்ள கடலில் அழித்துள்ளனர்.(தமிழ்நெட்)
  • பெப்ரவரி 27: மட்டக்களப்பில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒன்றுக்குக்காக உலங்கு வானூர்தி மூலம் சென்ற பல நாட்டு தூதுவர்கள் மற்றும் அமைச்சர் ஒருவர் அடங்கிய குழு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் தரையிரங்கியப் போது உந்துகணை தாக்குதலுக்கு உள்ளானார்கள் இதில் அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதுவர்கள் காயமடைந்தனர்.(தமிழ்நெட்)
ஜனவரி 2007
  • இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.(பிபிசி)
  • காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. புலிகள் இதனை மறுத்துள்ளனர்.(பிபிசி)
  • கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். இது புலிகளின் செயலாகும் என இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.(புதினம்)
  • மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.(புதினம்)