பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்/2013

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம், சுப்பிரமணியன். நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:53, 4 சனவரி 2013 (UTC)Reply

ஆவலுடன் இருக்கிறேன். இதனால் முதற்பக்க இற்றைப்படுத்தல் சற்று எளிமையாகுமல்லவா? இந்த நேரம் சரியான நேரம். ஒருவேளை நிர்வாகி ஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:05, 4 சனவரி 2013 (UTC)Reply
ஆனால் பகுப்பு:ஒன்றிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகள் இதிலுள்ள கட்டுரைகளின் எண்ணிக்கையை குறைப்பது முதல் வேலை யாரேங்கே! நமக்கொரு அடிமை சிக்கியிருக்கிறான்! உடனே பிடித்து நிருவாகி ஆக்குங்கள். :-) --சோடாபாட்டில்உரையாடுக 17:39, 4 சனவரி 2013 (UTC)Reply
:-) --Anton (பேச்சு) 02:08, 5 சனவரி 2013 (UTC)Reply
  விருப்பம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:27, 6 சனவரி 2013 (UTC)Reply

ஆஹா ஊரு ஒன்னு கூடிடுச்சுய்யா... ஒன்னுகூடிடுச்சுயா...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:29, 5 சனவரி 2013 (UTC)Reply

ஊரு மட்டும் தான் ஒன்னுகூடிச்சுன்னு பாத்தா இங்கே நாடே ஒன்னு கூடிட்டுதுதே. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:10, 6 சனவரி 2013 (UTC)Reply

  விருப்பம் ----சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:38, 6 சனவரி 2013 (UTC)Reply

நன்றி, சுப்பிரமணியன். விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் உங்கள் ஏற்பைத் தெரிவியுங்கள். --இரவி (பேச்சு) 04:40, 7 சனவரி 2013 (UTC)Reply

கூட்டு முயற்சி

தொகு

தென்காசி, இவ்வாரக் கூட்டு முயற்சியில் வேட்டையாடுதல் என்ற கட்டுரையை சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் அது இன்னும் உருவாக்கப்படவில்லை போல் தெரிகிறது. கூட்டு முயற்சிக் கட்டுரைகளாகக் குறுங்கட்டுரைகளே தெரிவு செய்யப்படுவது வழக்கம் என நினைத்திருந்தேன்.--Kanags \உரையாடுக 20:56, 5 சனவரி 2013 (UTC)Reply

இருக்கலாம். ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் ஒரு பத்தி இருந்தால் கூட அதிக பங்களிப்புகளை பெற முடிவதில்லை. அதனால் புதுக்கட்டுரையை கொடுத்தால் என்ன என்று தோன்றியது. தாய்லாந்து கட்டுரை 2 வாரமாகியும் விரிவுரவில்லை. அதனால் இப்படிச் செய்தேன். இதிலும் அதிக பங்களிப்புகளை பெற முடியாதாயின் மேலும் யோசிக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:45, 6 சனவரி 2013 (UTC)Reply

நன்றி

தொகு
  நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:07, 14 சனவரி 2013 (UTC)Reply


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:20, 14 சனவரி 2013 (UTC)Reply

வாழ்த்துகள்

தொகு

தென்காசி, தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 06:51, 14 சனவரி 2013 (UTC)Reply

ராதாகிருஷ்ணா...........நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள்...... (ராதாகிருஷணனா ராமகிருஷ்ணனா.....?)..................... :)....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:33, 14 சனவரி 2013 (UTC)Reply

நிர்வாக அணுக்கம் பெற்றமைக்கும், உங்கள் விக்கிப் பணி தொடரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.--கலை (பேச்சு) 20:45, 14 சனவரி 2013 (UTC)Reply
வாழ்த்துக்கள் தென்காசி. --Natkeeran (பேச்சு) 01:37, 15 சனவரி 2013 (UTC)Reply

வணக்கம் தென்காசியரே. உங்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.--சிவம் 01:59, 15 சனவரி 2013 (UTC)

வாழ்த்துக்கள் அளித்த நேரிய உள்ளங்கலுக்கு எஅனக்கு நன்றிகள்.

\\ராதாகிருஷணனா ராமகிருஷ்ணனா.....?\\

ஆஹா. இது பூர்வ சென்ம பகை போல் இருக்கே. நல்ல ஞாபக சக்தி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:51, 15 சனவரி 2013 (UTC)Reply

  விருப்பம் சீரிய பணி தொடர வாழ்த்துகள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:56, 19 சனவரி 2013 (UTC)Reply


தலைவரே அதை எழுதியது நான் அல்ல. தேனி மு. சுப்பிரமணி. நான் தென்காசி சுப்பிரமணியன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:39, 9 திசம்பர் 2013 (UTC)Reply

பெயரில் சிறு குழப்பம். மன்னிக்கவும் இருந்தாலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். நன்றி. தொகுத்துவிடுகிறேன். சிவகார்த்திகேயன் (பேச்சு) 16:49, 9 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றிக்கு நன்றி

தொகு

பாரி பரிசு தந்தார். கபிலர் பாடல் தந்தார். அருணன் கபிலன் படம் தந்தான் தென்காசி சுப்பிரமணியனார் வாழ்த்து தந்தார் பொங்கட்டும் புதிய பொங்கல்.... என்றும் அன்புடன் அருணன் கபிலன்

சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் பற்றி

தொகு

ஆமாம் - Ravichandar84 (பேச்சு) 18:24, 29 சனவரி 2013 (UTC)Reply

ஒளிப்படக் கருவி

தொகு

வணக்கம் தென்காசி, en:Point-and-shoot camera வகை கருவி வாங்குவதைவிட Prosumer வகை கருவி வாங்கினால் என்ன? தெளிவு, zoom, macro, அளவு எனப் பார்க்கும்போது Point-and-shootஐ விட Prosumer சிறப்பானது. ஆனால் விலை சற்று அதிகம்தான். திருப்தியீனம் Point-and-shootஇல் பின்பு ஏற்படுவதைத் தவிர்க்க, சற்று தாமதப்படுத்தி Prosumer வகை வாங்குவது சிறப்பெனக் கருதுகின்றேன். DSLR வகை கருவி போன்றும் தோற்றமளிக்கும். பின்பு DSLRக்கு மாற இது முன் பயிற்சியாகவும் இருக்கும். பின்வரும் வகைகளை சிபார்சு செய்கிறேன்.

  • Sony Cyber-shot DSC-HX200V
  • Sony Cyber-shot DSC-HX100V
  • Nikon Coolpix P500
  • Nikon Coolpix P100
  • Canon PowerShot SX40 HS

காடு, மலை, நதியெல்லாம் தடம்பதித்து படம்பிடிக்க வாழ்த்துக்கள் தென்காசியார்! --Anton (பேச்சு) 03:57, 6 பெப்ரவரி 2013 (UTC)

நன்றி அண்டனாரே. சிறிது தாமதப்படுத்தி நல்ல கேமராகவே வாங்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:05, 6 பெப்ரவரி 2013 (UTC)

பாராட்டு

தொகு
  • புகழூர்க் கல்வெட்டு - படம் சேர்த்தமைக்கு மிக மிக மிக நன்றி. இது சங்ககால வரலாற்றின் காலக் கண்ணாடி. --Sengai Podhuvan (பேச்சு) 20:56, 9 ஏப்ரல் 2013 (UTC)

கட்டுரைகளை இணைத்தல்

தொகு

தென்காசியாருக்கு, இரு கட்டுரைகளை இணைக்கும் போது, இரு கட்டுரைகளினதும் வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும். வெறுமனே ஒன்றை நீக்கி விட்டு மற்றதற்கு வழி மாற்ற முடியாது. உதவிக்கு விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் பக்கத்தைப் பாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:35, 4 மே 2013 (UTC)Reply

ஆம். அறிவேன். நான் இன்று பல கட்டுரைகளை இணைத்தேன். அவற்றில் நீங்கள் கூறுவது போல் வரலாற்றை பாதுகாத்த கட்டுரைகளும் உண்டு. நேரடியாக அழித்த கட்டுரைகளும் உண்டு. இன்று நான் ஒரு கட்டுரையை அழித்தேன் என்றால் அதற்கு 2 காரணங்கள் உண்டு. அவை

  1. முதலில் எழுதப்பட்ட கட்டுரையோடு குறைந்த உள்ளடக்கங்க்ளை இரண்டாவ்து எழுதப்பட்ட கட்டுரை கொண்டிருக்கும்.
  2. மேலும் இரண்டாவது எழுதப்பட்ட கட்டுரையில் உள்ள உள்ளடக்கங்கள் எல்லாம் முதற்கட்டுரையிலேயே இருக்கும். (வீரட்டானம் தொடர்பானவை)

நான் வரலாறுகளை இணைத்த கட்டுரைகள் பின்வருவன போன்று இருக்கும்.

  1. முதலில் எழுதப்பட்ட கட்டுரை இரண்டாவது எழுதப்பட்டதோடு குறைந்த உள்ளடக்கங்களை கொண்டிருக்கும்.
  2. சில இடங்களில் இரண்டாவது எழுதப்பட்ட கட்டுரை முதற்கட்டுரையைவிட குறைந்த உள்ளடக்கங்களை கொண்டிருந்தாலும் முதற்கட்டுரையில் இல்லாத உள்ளடக்கங்கள் இரண்டாவதில் இருக்கும். (ராஜநாகம், கருநாகம்)

கட்டுரையை இணைக்கும் போது நான் முதலில் கூறியபடி இருந்தால் இரண்டாவது கட்டுரையை அழித்து விட்டேன்.

இரண்டாவது கூறியபடி இருந்தால் இரண்டாவது கட்டுரையை முதற்கட்டுரைக்கு வழிமாற்றி (முதற்கட்டுரை அழிந்துவிடும்), பின்பு அப்பக்கத்தை முழுமையாக நீக்கி பின்னர் முழுமையாக மீட்டெடுத்தேன். அதனால் நீங்கள் ராஜ நாகம், கருநாகம் கட்டுரைகளில் இரு வரலாறுகளும் இனைந்திருப்பதை காணலாம். இது தானே சரியான முறை அல்லவா? அல்லது வேறு மாதிரி செய்ய வேண்டுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:14, 4 மே 2013 (UTC)Reply

பொதுவாக அனைத்தையும் வரலாற்றுடன் இணைப்பதே சிறந்தது என்பேன். ஆனாலும், சிலவற்றில் இரண்டாவது கட்டுரையில் ஒருவரே பங்கு பற்றி உள்ளடக்கம் போதுமான அளவு இல்லாவிட்டால் நீக்கலாம். (ஆனாலும் வழிமாற்றல் இருக்க வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பத்தில், கட்டுரையை முழுமையாக நீக்காமல் வழிமாற்று உருவாக்கலாம்). முதல் கட்டுரை குறுங்கட்டுரையாக இருந்தால், கட்டாயம் வரலாற்றுடன் இணைப்பதே நல்லது. ஆனால் வீராட்டானம் பற்றிய கட்டுரையை முற்றாக நீக்கி விட்டு வழிமாற்று ஏற்படுத்தியிருந்தீர்கள்.--Kanags \உரையாடுக 12:26, 4 மே 2013 (UTC)Reply

வீரட்டானத்தின் வரலாறுகள் இங்கு அப்படியே உள்ளதே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:32, 4 மே 2013 (UTC)Reply

இல்லை, சஞ்சீவியின் பங்களிப்புகளை நானே மீள்வித்திருந்தேன்.--Kanags \உரையாடுக 12:50, 4 மே 2013 (UTC)Reply

சூர்ய சந்திர குலம் பற்றிய கட்டுரைகள்

தொகு

சந்திர குலம் என்ற கட்டுரையை செங்கைப் பொதுவனார் தொடங்கிவைத்துள்ளார். சூரிய குலம் பற்றிய கட்டுரையையும் தொடங்கிவிட்டேன். மேம்படுத்துதல்களை செய்த பின் தங்களுக்குத் தெரிவிக்கிறேன். தாங்களும் அக்கட்டுரைகளை கண்டு பிழை திருத்த வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:16, 19 மே 2013 (UTC)Reply

நிச்சயம் மேம்படுத்துகிறேன். என்னிடம் ஊரிலுள்ள 18 புராணங்கள் நூலில் சூர்ய சந்திர வம்சத்தவர் பட்டியல் உள்ளது. நான் அடுத்தவாரம் அதை இற்றைப்படுத்துகிறேன். இதில் முக்கியமான விடயம் என்ன என்றால் சோழர்கள் புராணத்தில் சந்திர வம்சமாகவே கூறப்படுகின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:11, 20 மே 2013 (UTC)Reply

சரபம் கட்டுரைகள்

தொகு

நண்பரே, விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கத்தில் சரபம் குறித்தான நான்கு கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளமைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன். சரபம் என்ற பழங்கதைகளில் வருகின்ற விலங்கினத்திற்காக ஒரு பக்கமும், சரபேஸ்வரர் என்ற சிவவடிவத்திற்காக ஒரு பக்கமுமே போதும் என நினைக்கிறேன். இதுகுறித்து ஏற்ற நடவெடிக்கை எடுக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:47, 27 மே 2013 (UTC)Reply

காணிக்கை

தொகு
  • எளியேனுக்கு 1013 விக்கியேனியா கருத்தரங்கம் செல்ல முழு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு நல்வாய்ப்பு.
  • "எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்."
  • வரவேற்றவர் நற்கீரன்
  • சங்க காலப் புலவர்கள் கட்டுரையில் தலைப்புப் பிரிப்பு செய்து வழிகாட்டியவர் கனகசீர்
  • விக்கியில் அடிக்குறிப்பு இடக் கற்றுத்தந்த இறைவன் பாலா.
  • பகுப்புக் குறிப்பு சேர்க்கக் கற்றுக்கொடுத்த இறைவன் தென்காசியார்.
  • இவர்களுக்கு இந்த நல்வாய்ப்பைக் காணிக்கை ஆக்கி நிறைவடைகிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 18:51, 27 மே 2013 (UTC)Reply

கட்டுரைகளை இணைத்தல்

தொகு

கட்டுரைகளை இணைக்கக் கோரும் போது mergeto, mergefrom வார்ப்புருக்களை இட்டால் போதுமே? கருத்து மாறுபாடு வரும் போது மட்டும் பேச்சுப் பக்கங்களில் உரையாடலாம்.--இரவி (பேச்சு) 18:54, 27 மே 2013 (UTC)Reply

அல்ல அதை எல்லாம் ஒரு ஆசிரியர் தான் எழுதியிருந்தார். அதனால் அவரே வெட்டி ஒட்டி விடலாம் என்பதால் அப்படிக் குடுத்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:06, 28 மே 2013 (UTC)Reply
mergeto, mergefrom வார்ப்புரு இடும்போது, இது அதற்கான பராமரிப்புப் பகுப்புகளின் கீழ் வரும். பிற்காலத்திலும் கூட எவரேனும் கவனித்துத் திருத்தக்கூடும். அண்மையில், பார்வதி நூற்றுக்கணக்கான கட்டுரைகளை அவ்வாறு இணைத்தது போல. எனவே, இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 06:23, 28 மே 2013 (UTC)Reply

உங்களுக்கு இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன். பார்த்துவிட்டு கூறவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:42, 28 மே 2013 (UTC)Reply

mஎregeto, delete வார்ப்புருக்களைக் கட்டுரைகளில் சேர்ப்பதே சிறந்த முறை. பேச்சுப் பக்கங்கள் கவனிக்கப்படாமலே போய்விடக்கூடும்.--Kanags \உரையாடுக 08:15, 28 மே 2013 (UTC)Reply


கருத்து தேவை

தொகு

முதற்பக்க இற்றைப்படுத்தல் மாற்றம் பற்றி தங்கள் கருத்தினைத் தர வேண்டுகிறேன் - விக்கிப்பீடியா பேச்சு:முதற்பக்கம் இற்றைப்படுத்தல் ஒழுங்கமைவு--சோடாபாட்டில்உரையாடுக 06:11, 29 மே 2013 (UTC)Reply

வணக்கம்

தொகு

சுப்பிரமணியன் அவர்களுக்கு சக விக்கிப்பீடியா தொகுப்பாளனின் வணக்கங்கள்!! - Vatsan34 (பேச்சு) 15:56, 29 மே 2013 (UTC)Reply

பதில் வணக்கங்கள். தற்போது நான் Benchல் உள்ளதால் உங்களிடம் நேற்று சரியாக தொடர்பு கொள்ள இயலவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:05, 30 மே 2013 (UTC)Reply

சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை அல்ல

தொகு

வணக்கம். நீங்கள் சீமைக்கருவேலம் சாய்வுக்கட்டுரை என்பதைப் போல் குறிப்பிட்டிருந்தீர்கள். அம்மரம் வெளிநாட்டவர்களால் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பதை நான் அக்கட்டுரையில் இணைத்த அரசு அறிக்கை பற்றிய செய்தியே சொல்லும். சீமைக்கருவேலம் மனிதர்களின் உடலில் உள்ள நீர்ச்சத்தையும் கூட உறிஞ்சிவிடும் என உவமைக்கு சொல்லப்படும் அளவுக்கு நச்சு மரம் ஆகும். இதைப் பல ஊடகங்களில் நீங்களே கண்டிருக்கலாம். உதாரணமாக பேராண்மை படத்தில் இந்திய வளஞ்சுரண்ட விதைக்கப்பட்ட நச்சு விதைகளே என்பது போல் வசனம் வரும். இவை எல்லாம் அந்த மரத்தை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆர்வலர்கள் கொடுத்த வசனங்களே. சீமைக்கருவேலம் பற்றி இணையத்தில் இன்னும் தேடினால் தகுதியான மேற்கோள்கள் கிடைக்கும். எனக்கு உயிரியல் பற்றிய அதிக அறிவு கிடையாது. அதனால் அதில் அதிக ஆர்வம் கொண்ட நீங்கள் அதற்கான மேற்கோள்களை தேடிச் சேர்க்க வேண்டுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:18, 29 மே 2013 (UTC)Reply

தகுந்த சான்று ஒன்றை இணைத்தமைக்கு நன்றி, தென்காசி சுப்பிரமணியன். அது சீமைச்செடி என்பதாலும் நிலத்தடிநீரை முழுக்க உறிஞ்சிவிடும் என்பதாலும் வரும் பாதிப்பை அறிந்திருந்தேன். இருந்தாலும் மாந்தர் உயிருக்கே ஆபத்து என்பது சற்று மிகையாகத் தோன்றியது. தவிர, இத்தனை இடைஞ்சல்களைத் தரும் அச்செடிக்கு ஒரேயொரு பயன் உண்டு. அதை உயிர்வளிக் குறைந்த சூழலில் மூட்டம் போட்டு கரியாக்கி எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நடுநிலைபொருட்டு அந்தத் தகவலையும் சேர்க்க வேண்டும். இயன்றால் நான் சான்றுகளோடு இணைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:38, 1 சூன் 2013 (UTC)Reply

நன்றி. சுந்தர். நான் கூகுளில் தகுந்த சான்றை தேடுவதற்கு எனக்கு அதன் பெயர்முறை சொற்கள் தெரியாது. அதனால் நீங்கள் தேடி நடுநிலை சான்றுகளோடு எழுதினால் கட்டுரை சிறக்கும். மேலும் அது வேற்று நாட்டவரால் எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது எனச் சுட்டினாலும் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:33, 1 சூன் 2013 (UTC)Reply

குட்ட பரிந்தன் கல்வெட்டு

தொகு

அநுராதபுரத்தில் இருப்பதாக நீங்கள் குறிப்பிட்ட குட்ட பரிந்தன் கல்வெட்டைத் தேடி எனது நண்பர் ஒருவர் அங்கு சென்றிருந்தார். ஆனால் அப்படி எதுவும் அங்கு இல்லையாம். மற்றும் அங்கு ஒளிப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. கொழும்பில் தொல்பொருட்காட்சிச்சாலையில் இருக்கலாம் என அநுராதபுர தொல்பொருட்காட்சிச்சாலையில் உள்ளோர் தெரிவித்தனர். சந்தர்ப்பம் கிடைத்தால் முயற்சிக்கிறேன். கொழும்பிலிருந்து யாரும் த.வி.க்கு எழுதுகிறார்களா? --Anton (பேச்சு) 10:51, 2 சூன் 2013 (UTC)Reply

கொழும்பின் பங்களிப்பாளர்கள் பற்றி சரியாகத் தெரியவில்லை. ஆனால் எபிகிராபிக்கா சிலோனிக்கா பிரதிகள் எனக்கு நாளை கைக்கு வந்துவிடும் என நினைக்கிறேன். இப்பரிந்தனின் கல்வெட்டோடு தாட்டியன் கல்வெட்டையும் பார்க்கிறேன்.

உங்கள் நண்பரை அனுப்பி அங்கே தேடச்சொன்னதற்கு முதற்கண் என் நன்றி. குட்ட பரிந்தன் கல்வெட்டு அநுராதபுரத்தில் இருப்பதாக மயிலை சீனி. வேங்கடசாமி தன் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) இல் குறித்திருந்தார். எனினும் இரண்டையும் நான் பார்த்துவிட்டு சொல்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:21, 2 சூன் 2013 (UTC)Reply

உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்கு அனுப்பினால் உதவியாக இருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:35, 2 சூன் 2013 (UTC)Reply

எபிகிராபிக்கா சிலோனிக்கா (1-4) பிரதிகள் கைக்கு வந்துவிட்டன. குட்ட பரிந்தன் கட்டுரையில் கொடுத்த மேற்கோளின் படியே Epigraphia Zeylonica, Vol 4, PP 111 - 115ல் Anuradhapura:Slab Inscription Khuddha Parindha என்ற தலைப்பின் கீழ் உள்ளது. கல்வெட்டில் இவனது பெயர் புத்ததாசன் எனப் பதியப்பட்டுளது.ஆனால் படம் தெளிவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:32, 2 சூன் 2013 (UTC)Reply

மின்னஞ்சல் முகவரியை அனுப்பிவிட்டேன். அநுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்டிருக்கலாம். தேடுவோம்! :) --Anton (பேச்சு) 10:42, 3 சூன் 2013 (UTC)Reply

மாற்றத்தின் பிண்ணனி குறித்தும் விசாரிக்க முயற்சிக்கவும். சில சமயம் maintenance எளிதாக வேண்டும் என்பதற்காக இடத்தை ஒன்றுபடுத்தி இருப்பார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:16, 3 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:54, 24 சூன் 2013 (UTC)Reply

நான் செப்டம்பரில் தமிழ்நாட்டில் இருந்து கூடல் சனி ஞாயிறுகளில் இருந்தால் வருகிறேன். நிலைமை என்ன என்று அப்போது தான் தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:59, 24 சூன் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்

தொகு

விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டியில் முதல் வெற்றியாளரான தங்களுக்கு என் வாழ்த்துகள் நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:41, 1 சூலை 2013 (UTC)Reply

முதல் மாத வெற்றியாளராக மட்டுமின்றி இந்தப் போட்டிக்கே சுறுசுறுப்பைத் தந்த தென்காசியாருக்கு வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 11:27, 1 சூலை 2013 (UTC)Reply
வாழ்த்துகள் தென்காசியார்! --Anton (பேச்சு) 11:31, 1 சூலை 2013 (UTC)Reply
வாழ்த்துகள் பாண்டியரே :) பத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பான நல்கைத் தொகை கிட்டியவுடன் பரிசு உங்களுக்குக் கிட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். அடுத்து பதக்கம் வடிவமைக்க வேண்டும் :) முதற்பக்கத்தில் வெற்றிச் செய்தியை இட வேண்டும் :)--இரவி (பேச்சு) 12:35, 1 சூலை 2013 (UTC)Reply

வாழ்த்துக்கள் கூறிய நல்லுள்ளங்களுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:38, 1 சூலை 2013 (UTC)Reply

விட்டத்தைப் பார்த்து வெறித்தபடியே கட்டுரைப்போட்டியில் வென்று, அடுத்தவர்கள் விட்டதைப் பார்த்த தென்காசியருக்கு வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:03, 2 சூலை 2013 (UTC)Reply

  விருப்பம் விட்டத்தைப்பார்த்து வெறித்தாரோ? பார்த்தால் அப்படித்தான் தோணுதோ? வாழ்த்துக்கள் தென்காசியாரே!-- :) நிஆதவன் ( உரையாட ) 08:39, 3 சூலை 2013 (UTC)Reply

நன்றி. ஊரு கூடிட்டாலே நான் வழக்கமாக எஸ்ஸாயிடுவது வழக்கம். :)--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:11, 2 சூலை 2013 (UTC)Reply

தென்காசி சுப்பிரமணியன், வாழ்த்துகள்! 33 கட்டுரைகளை உயர்த்தினீர்களா?! ஓ! :) --செல்வா (பேச்சு) 21:57, 2 சூலை 2013 (UTC)Reply
வாழ்த்துக்கள் தென்காசி சுப்பிரமணி.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:12, 2 சூலை 2013 (UTC)Reply
வாழ்த்துகள் தென்காசியாரே! இந்த தம்பி தான் செயிச்சவரு, ஆனா இவரு எப்படி செயிச்சாருன்னு சொல்லமாட்டேன். :) (திரைப்பட வசனம்) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:39, 3 சூலை 2013 (UTC)Reply
குற்றாலச்சாரல் சும்மா கலக்கிவிட்டது போல? வாழ்த்துகள் தென்காசி சுப்பிரமணியன். :) -- சுந்தர் \பேச்சு 14:08, 3 சூலை 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா?

தொகு









என்னய்யா இது!!!!!!!! இப்படி டபுள் டபுளா ஹாட்ரிக் அடிக்கிறாரு. ஒரு வேளை கும்ப ராசிக்கு குருபார்வையா இருக்குமோ? :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:05, 4 சூலை 2013 (UTC)Reply

உ.தெ. தகவலை இற்றைப்படுத்துபவர் வேற்று கிரகத்திலும் தமிழ் விக்கிப்பீடியாவின் கொ.ப.செ.யாக ஆகப்போகும் ஒரு ஆசிரியயை. அவரின் பார்வை தற்போதைக்கு என் இராசியில் இருக்கிறது போலும்.

அது சரி இராசி கண்டறிந்த இரகசியம் என்ன?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:33, 4 சூலை 2013 (UTC)Reply

அதுவா... இரகசியம் :)-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:38, 30 சூலை 2013 (UTC)Reply

என் இராசியை எப்படி கண்டறீந்தீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:42, 30 சூலை 2013 (UTC)Reply

2013 தொடர் கட்டுரைப் போட்டி. சூலை, 2013

தொகு

தேதி இன்றோடு ஐந்தாகிவிட்டது :) தாமதமில்லாமல் விரைந்து உங்கள் பங்களிப்புகளை தரவும்.--அராபத் (பேச்சு) 05:10, 5 சூலை 2013 (UTC)Reply

இன்று பசும்பொழிலாம் கோவையில் இருந்து செண்பகப்பொழிலாம் தென்காசிக்கு செல்ல இருப்பதால் நாளையிலிருந்து தொடங்குகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:58, 5 சூலை 2013 (UTC)Reply

உதவி

தொகு

வணக்கம். அடவி நயினார் அணை கட்டுரையைச் சற்று பார்க்கவும். அதில் அவ்வணை அனுமந்த நதியில் கட்டப்பட்டுள்ளது என்றுள்ளது(ஆதாரம்:[1]). அனுமந்த நதியும் அனுமான் ஆறும் ஒன்றா அல்லது வெவ்வேறா?--Booradleyp1 (பேச்சு) 15:37, 6 சூலை 2013 (UTC)Reply

ஆம் இரண்டும் ஒன்று தான். முதலில் கட்டுரைப் பெயர் அனுமன் நதி என தான் நான் இயற்றினேன். பிற்பாடு இரவியால் அது வழிமாற்றப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:49, 7 சூலை 2013 (UTC)Reply

தெளிவுபடுத்தியதற்கு நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:47, 7 சூலை 2013 (UTC)Reply

சிறப்புக் கட்டுரை முன்மொழிவு

தொகு

விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள் முன்மொழிவு பக்கத்தில் எம்.ஜி.ஆர் கட்டுரையை இருநாட்களுக்கு முன் சிறப்புக்கட்டுரையாக்க முன்மொழிந்தேன். நிர்வாகிகள் யாரும் கருத்தினை இடவில்லை. சிறப்புக்கட்டுரையாக்கும் செயல்படுகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதா நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:20, 11 சூலை 2013 (UTC)Reply

முன்பே இது பற்றி இரவியிடம் கேட்டதில் சிறப்புக் கட்டுரையை விட நாம் அடிப்படை விடயங்களில் உள்ள அனைத்துக் கட்டுரைகளையும் முதற்பக்க தரத்துக்கு முன்னேற்ற வேண்டும் என்றார். அதனால் இந்த சிறப்புக் கட்டுரை தற்போது கவனிப்பார் அற்றுக் கிடக்கிறது. ஆனால் தற்போது உள்ள பங்களிப்பார்கள் புது கட்டுரையை விட இருப்பதை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பதால் சீக்கிரம் அது மீண்டும் கவனிக்கப்படலாம். ஆலமரத்தடியில் இது பற்றி பல முறை நான் உரையாடியும் போதிய கவனிப்பு இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:48, 11 சூலை 2013 (UTC)Reply

தெளிவுபெற்றேன்.நன்றி நண்பரே. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:59, 11 சூலை 2013 (UTC)Reply
நிருவாகிகளும் பங்களிப்பாளர்களே :) எல்லா விசயங்களிலும் அவர்களின் ஒப்புதலோ பங்களிப்போ தேவையில்லை. தேவையான திட்டங்களை முன்னெடுத்துச் செயற்படுத்துங்கள். தேவையான இடங்களில் அனைத்துப் பயனர்கள் தங்கள் கருத்தையும் பங்களிப்பையும் தருவர்.--இரவி (பேச்சு) 10:18, 11 சூலை 2013 (UTC)Reply

சிறப்புக்கட்டுரைப் பகுதியில் என்னுடைய பரிந்துரைகளே பாதி இருப்பதால் என்னிடம் கேட்டார் என நான் நினைத்தேன். எங்கேயோ இடிக்குதே?

சரி. சிறப்புக் கட்டுரை வாக்கெடுப்பை மீண்டும் தொடங்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:56, 11 சூலை 2013 (UTC)Reply

நன்று   விருப்பம்-- :) நிஆதவன் ( உரையாட ) 15:26, 11 சூலை 2013 (UTC)Reply
//சிறப்புக்கட்டுரைப் பகுதியில் என்னுடைய பரிந்துரைகளே பாதி இருப்பதால் என்னிடம் கேட்டார் என நான் நினைத்தேன்.//தங்களுடைய புரிதல் சரியானதே தென்காசியாரே. சமீபத்திய பரிந்துரைகள் உங்களுடையதாக இருந்தது. அத்துடன் பரிந்துரைகள் 2012 ஆம் வருடம் என இருந்தமையினால் இவை பற்றி அறிந்திருப்பீர்கள் என நினைத்தேன். அத்துடன் சிறப்புக் கட்டுரையாகப் பரிந்துரைத்தால் கட்டுரையின் குறைகள் சுட்டப்படும் திருத்தலாம் என எண்ணினேன். அவை கவனிக்கப்படாதது குறித்து சிறிது வருத்தம் உள்ளது. 55000 கட்டுரைகளை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் எனவே இவற்றையும் கவனித்தல் சிறந்தது. அதென்ன // எங்கேயோ இடிக்குதே?// எங்கென்று கூறினால் சரிசெய்யலாம்.:-) நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:24, 12 சூலை 2013 (UTC)Reply

உங்கள் இருவரின் பேச்சுப் பக்கத்திலும் இது பற்றி உரையாடாததை கண்டேன். அதுதான் எங்கோ misundersatnding இருக்கிறதா என்று கேட்டேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:22, 12 சூலை 2013 (UTC)Reply

அதெல்லாம் இல்லை நண்பரே. உங்களிடம் விடை கிடைக்குமென தோன்றியது. கிடைத்தும் விட்டது. இரவி அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து இங்கு ஈர்க்கப்பட்டிருக்கலாம். அவருடைய கருத்து என்னுடைய முயற்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. :-) --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:33, 12 சூலை 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்

தொகு
  கட்டுரைப் போட்டி வெற்றியாளர் பதக்கம்
சூன் 2013 கட்டுரைப் போட்டியில் வென்றமைக்காக இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். தொடர்ந்து சுறுசுறுப்புடன் இயங்கி பலரின் பரோட்டாக்களை முதலில் இருந்து எண்ண வைப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) --இரவி (பேச்சு) 14:31, 12 சூலை 2013 (UTC)Reply

  விருப்பம்--Anton (பேச்சு) 15:07, 12 சூலை 2013 (UTC)Reply

  விருப்பம்-- :) நிஆதவன் ( உரையாட ) 15:12, 12 சூலை 2013 (UTC)Reply
கட்டுரைப் போட்டியில் வென்றமைக்கு பாராட்டுக்கள்! தொடரட்டும் பணி --ஸ்ரீதர் (பேச்சு) 11:52, 15 சூலை 2013 (UTC)Reply

வாழ்த்தளித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:25, 23 சூலை 2013 (UTC)Reply

குருபார்வை தொடர் வெற்றிக்கும் உதவுமோ :) ? தொடர்ந்து சூலை மாதப் போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 07:23, 1 ஆகத்து 2013 (UTC)   விருப்பம் வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 11:22, 3 ஆகத்து 2013 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா?

தொகு

வணக்கம் தென்காசி. விக்கிமேனியாவிற்குச் செல்வதால். உங்களுக்குத் தெரியுமா பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் மற்றும் பயனர் பக்கங்களில் இடம்பெறவேண்டிய வார்ப்புருவினை இட்டு உதவுமாறு வேண்டுகிறேன். இம்மாதமும் தொடர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்... காணிக்கைய மறக்காம வெட்டனும்...:) -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:59, 3 ஆகத்து 2013 (UTC)Reply

I'll.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:14, 3 ஆகத்து 2013 (UTC)Reply

ஆகஸ்ட் 21, 2013 இற்றைப்படுத்தப்பட்டுவிட்டது. கட்டுரைகள், பயனர் பக்கங்களில் இடம்பெறவேண்டிய வார்ப்புக்கள் இடப்படவில்லை. --Anton (பேச்சு) 05:20, 21 ஆகத்து 2013 (UTC)Reply
ஆம் கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கான வார்ப்புரு இடப்படவில்லை போலும். சரி சரி தென்காசியாரே வேலையை சீக்கிரம் தொடங்குங்கள் -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 14:13, 21 ஆகத்து 2013 (UTC)Reply

நன்றி

தொகு

நன்றி அண்ணா தங்களால் எனக்கு ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.-நந்தினிகந்தசாமி

தாயே வணக்கம். அது என்னால் கிடைக்கவில்லையம்மா. உங்கள் சூறாவளி பங்களிப்புக்காக ஒரு எரிமலை அந்த பதக்கம் அளித்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:26, 10 ஆகத்து 2013 (UTC)Reply

நல்ல கதை. அது 'சுனாமி' சொன்னதால் கிடைத்தது. 'சுனாமியே' வியக்கிறதே என சூறாவளி பதக்கம் கொடுத்தேன். -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:39, 10 ஆகத்து 2013 (UTC)Reply

பகத்சிங்கின் தூக்குதண்டனை

தொகு

காந்தித் தாத்தாவின் பேச்சுப்பக்கத்துக்கு உள்ளடக்கங்கள் நகர்த்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:22, 19 ஆகத்து 2013 (UTC)Reply

பாண்டியர்களின் 201 தலைமுறைகள்

தொகு

வணக்கம், முக்குல மனனர்கள்

இந்தப் பதிவில் கீழ்க்கண்ட இரண்டு நூல்களில் பாண்டியர்களின் 201 தலைமுறைகள் பற்றிய செய்திகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

  • 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
  • முனைவர் இரா. மதிவாணனின் கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் எனற நூல்.

அந்தப் பதிவிலிருந்து கழகக்காலப் பாண்டியர்களின் ஆட்சி ஆண்டுகள் விக்கிபீடியாவில் சேர்க்க நம்பகமானவையா?. இந்த நூல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். :) - ச.பிரபாகரன் (பேச்சு) 22:51, 23 ஆகத்து 2013 (UTC)Reply

வணக்கம். பிரபாகரன். என் பேச்சுப்பக்கம் வந்து குறிபிட்டமைக்கு முதற்கண் என் நன்றி. நற்குடி வேளாளர் வரலாறு (நூல்) கட்டுரையும் அதன் பேச்சுப்பக்கமும் பார்க்கவும். இரா. மதிவாணர் எழுதிய பட்டியல் நற்குடி வேளாளர் நாட்டுப்பறப்பாடலின் முழுப்பதிப்பு அல்ல. முதலில் அது ஒரு நாட்டுப்புறப் பாடலாய் இருந்தது. அதை ஆறுமுக நயினார் ஆராய்ந்து கிடைத்த பெயர்களை கொண்டு 201 தலைமுறைகளில் ஏறக்குறைய இருபது மன்னர்களை மட்டும் வெளிக்கொணர்ந்தார். அதை ஆய்ந்த மதிவாணர் தன் சங்க இலக்கிய ஆய்வுகல் மூலம் இடையில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மன்னர்களை பற்றிய பாடல்களை ஆராய்ந்து பட்டியலை முழுமைப்படுத்தினார். மதிவாணர் முழுமைப்படுத்திய பட்டியலும் நற்குடி வேளாளர் மூலப்பாடலின் உள்ள 201 மன்னர்களின் பட்டியலும் ஒன்றாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மதிவாணர் முழுமைப்படுத்திய பட்டியலில் பிழைகளும் உள்ளன. உதாரணத்துக்கு கடலன் வழுதி - நெடுஞ்செழியன் - 75 ஆவது பாண்டியன் கி.மு. 200 - 180, கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு - 96 ஆவது பாண்டியன் இந்த இரண்டில் வரும் கடலன் வழுதியும் ஒன்றுதான்.

மதிவாணர் நல்ல பண்பாளர். தன் நூலான "சிந்துவெளி எழுத்தின் திறவு" என்னும் நூலை தன் மாணவரான சேசாத்ரி சிறிதரன் மூலம் இலவசமாக வெளியிட்டவர். சிந்துவெளி எழுத்தை படிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமேற்கொண்டு முயன்றிருப்பார் என பண்டைய தமிழ் எழுத்துக்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்போருக்கு நன்கு தெரியும். அப்படி கடின உழைப்போடு திரட்டிய தகவல்களை உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே இலவசமாக வெளியிடவர் அவர். அவரின் மற்ற நூல்களை தமிழகம்.வலையின் மூலம் தரவேற்ற முயற்சி செய்து வருகிறேன். அவரின் நூல்களை பெற விக்கிப்பீடியாவின் கூடலுக்கு நான் சென்னைக்கு வரும்போது முயன்று பார்க்க வேண்டும். அலுவலக சூழல் பொறுத்து இந்த முயற்சியில் தாமதம் ஏற்படலாம். நற்குடி வேளாளர் நாட்டுப்புறப் பாடலின் மூலப்பாடலை கண்டறிய பல தமிழ் ஆர்வலர்கள் முயன்று வருகிறார்கள். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:45, 24 ஆகத்து 2013 (UTC)Reply

கல்பதுக்கை

தொகு

உள்ளடக்கங்கள் பேச்சு:கல்பதுக்கை பக்கத்துக்கு நகர்த்தப்பட்டது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:33, 30 ஆகத்து 2013 (UTC)Reply

மறதி

தொகு

விக்கியில் கட்டுரை எழுத வந்தால் தூக்கத்தை மறந்துவிட வேண்டும்.அடுத்து என்ன செய்யலாம் எனும் சுறுசுறுப்பான சூழலில் தூக்கம் மறந்து இரு நாட்களாகின்றன.

தாங்களும் உறங்குவதில்லை போல் தெரிகிறதே?

ஆகத்து மாத கட்டுரை போட்டி எப்பொழுது முடியும்?

ஹலோ. யாருப்பா இது? தூங்கிட்டு இருக்கேல வந்து பேச்சுப் பக்கத்துல பெயரே இல்லாம கொலவெறி தாக்குதல் நடத்துறது? எது என்றாலும் பெயரை சொல்லிவிட்டு பன்னுங்கப்பா. பயமா இருக்குல்ல.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 21:40, 31 ஆகத்து 2013 (UTC)Reply

மன்னிக்கவும் . பெயர் குரிப்பிட மறந்துவிட்டேன் நந்தினிகந்தசாமி (பேச்சு) 02:53, 1 செப்டம்பர் 2013 (UTC)

ஐயய்யோ இதுக்கு குறிப்பிடலாமலே இருந்திருக்கலாம். இப்போ ரொம்ப பயமா இருக்கு. நான் ஏதோ கொலைவெறி தாக்குதல்னு நினைச்சேன். இப்போதான் தெரியுது. தாக்குனது சூறாவளின்னு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:13, 1 செப்டம்பர் 2013 (UTC)

மன்னிக்கவும், நீங்கள் குழம்பிவிட்டீர்கள் தென்காசி!, இவர் சூறாவளி இல்லை சூரியப் புயல் !!!!, எனக்கு இவரை வாழ்த்தத் தெரியவில்லை போலும், வாழ்த்த வார்த்தைகளே இல்லை, ஒரே நாள் பதினேழு கட்டுரைகள், சபா!!!! , தென்காசியாரே நீங்க இனி விடிய விடிய இல்ல மாதம் பூரா உழைத்தால் தான் முந்தலாம். :):):) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:20, 1 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் பூரா உழைப்பது என்பது கடினம் தான். ஏனெனில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளது. கூர்ங்கோட்டவர் 7.4 நிகழ்வு ஏவப்பட்டுள்ளது. பார்க்கவும். சனி ஞாயிறுகளில் மலைகளில் சுற்ற வேண்டி வரலாம். இருந்தாலும் ஆன மட்டும் முயல்வோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:32, 2 செப்டம்பர் 2013 (UTC)

பார்க்கிறேன் :) :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:45, 3 செப்டம்பர் 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:16, 18 செப்டம்பர் 2013 (UTC)


ஏன் வேலை நிறுத்தம் செய்ரீங்கநந்தினிகந்தசாமி (பேச்சு) 11:42, 25 செப்டம்பர் 2013 (UTC)

இருக்குறது நாளைக்கு மட்டும்தான். நாளைக்களித்து சென்னை கிளம்போனும். அடுத்த 2 நாள் கூடலில் இருக்கோனும். அடுத்த நாள் கூடலுக்கு போய்ட்டு வந்த களைப்பில் படுத்துத் தூங்கோனும். இதில் எங்கிருந்து வேலையைத் தொடர்வது. அதனால் தான் வீரமாக வேலைநிறுத்தம் செய்தது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:38, 25 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....

தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:40, 27 செப்டம்பர் 2013 (UTC)

இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை

தொகு

வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:34, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒரு புறாவுக்கு போரா? ஒரே அக்கப்போரோக அல்லவா இருக்கிறது

தொகு

கையெழுத்து மேட்டர் இவ்வளவு சீரியசாக ஆகும் என நினைக்கவில்லை. நான் மரியாதை வைத்திருப்பவர்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என்று நினைத்தேன். பிடித்தவர்களிடம் கையெழுத்து வாங்குவதற்கு சான்றிதழ் தேவையில்லை. அதற்கு வேறு இருக்கிறது. அதன் பெயர் நினைவில் வரவில்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:31, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

  விருப்பம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 13:26, 1 அக்டோபர் 2013 (UTC)Reply

ஒரு சந்தேகம்...

தொகு

வணக்கம்!
ஒரு பேச்சுப் பக்கத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட தலைப்பிற்கு நேரடியாக இணைப்பு கொடுக்க எம்மாதிரியான நிரல்/குறியீடுகளை இடவேண்டும்? உதாரணமாக .... 'விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள்' எனும் பக்கத்திலுள்ள 'எஞ்சிய சான்றிதழ்கள்' எனும் தலைப்பிற்கு நேரடியாக இணைப்பு செல்லவேண்டும். உங்களின் பேச்சுப்பக்கத்தில் இதனை விளக்கிக் காட்டிவிடுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:38, 2 அக்டோபர் 2013 (UTC)Reply


  • செல்வ்சிவகுருநாதன் அவர்களே, பேச்சுப்பக்கத்தில் பொருளடக்கத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட தலைப்பிற்கு கொண்டு செல்லும். அந்த நேரம் உள்ள இணைப்பே ஆகும்.

உம்: https://ta.wikipedia.org/wiki/பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்

இது தென்காசியாரின் பேச்சுப்பக்கம். இப்பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் பொருளடக்கத்தில் உள்ள "ஒரு சந்தேகம்..." என்பதைச் சொடுக்கியவுடன்

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:% E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%A E%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D#.E0.AE.92.E0.AE.B0.E0.AF.81_.E0.AE.9A.E0.AE.A8.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.87.E0.AE.95.E0.AE.A E.E0.AF.8D... , இந்த link மேலே வரும். இதுவே தலைப்பிற்கு செல்ல வழி,
விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/பாராட்டுப் பத்திரங்கள் பக்கத்தில் எஞ்சிய சான்றிதழ்கள் பக்கம் செல்ல இது --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:03, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றி, ஆனால்... இதைவிட எளிதான வழி உள்ளது; மறந்துவிட்டேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 2 அக்டோபர் 2013 (UTC)Reply
சரி, நானும் அறிந்து கொள்கிறேன் :) --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:28, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்#ஒரு சந்தேகம்.... இதுதான் அந்த வழி. இதில் ஏதும் சந்தேகம் இருக்கிறதா? குறிப்பு - ஒரு சந்தேகம் என்ற உள்ளடக்கமே இரண்டு முறை ஒரு பக்கத்தில் இருந்தால் அது முதலாவது உள்ளடக்கத்துக்கு தான் வரும். இப்போது சொல்லுங்கள் உங்கள் இருவருக்கும் சேர்த்து எத்தனை சந்தேகங்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:45, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

முதலே அறிந்திருந்தும் அதை அப்பக்கத்திளிருந்தே செய்துபார்த்து வராததால் கடுப்பாகி இவ்வழியைக் கூறினேன். நன்றி தென்காசியாரே


எங்களுக்கு ஒரு சந்தேகம், அனால் செல்வசிவகுருனாதனுக்கு ஒரு சந்தேகம், எனக்கு ஒரு சந்தேகம், ஆனால் இரண்டு சந்தேகமல்ல, ஒருவருக்கு ஒரு சந்தேகத்தின் மேல் சந்தேகம் இல்லை மற்றவர்க்கு ஒரு சந்தேகத்தின் மேல் சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தவர் ஒரு சந்தேகம் :)

, ஆக அவர் சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறார், அந்த சந்தேகத்தில் இதுவும் ஒன்று , இந்த சந்தேகத்தை தீர்க்க என்னொரு சந்தேகம் வேண்டும் :) :)

இது எப்படி ?????, இந்த சந்தேகத்தை அதே சந்தேகம் தான் தீர்ப்பாரோ ? , தீர்க்கவேண்டும் , சந்தேகத்திலிருந்து சந்தேகத்திற்கான பதில் வரும் வரை ...... ♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 15:56, 2 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயா, ஏற்கனவே எனக்கு தலையில் பாதி கொட்டிவிட்டது. இன்னமும் கொட்ட வேண்டுமா? எழுந்த சந்தேகம் தீர்ந்துவிட்டது, நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

\\அந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தவர் ஒரு சந்தேகம் \\

ஆதவன். நான் சந்தேகம் எல்லாம் இல்லை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:40, 3 அக்டோபர் 2013 (UTC)Reply

தங்களின் மேல் சந்தேகம் இல்லை ஆனாலும் நீங்கள் சந்தேகம் தான் , நீங்கள் சந்தேகம் என்பதில் சந்தேகமே இல்லை ! --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 04:21, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிக்கு தேவைப்படும் கருவிகள் குறித்து வழிகாட்டல் தேவை

தொகு

வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:34, 4 அக்டோபர் 2013 (UTC)Reply

இருக்கின்ற கருவிகளிலேயே சில மாற்றங்களையும் மேம்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது. அதை அங்கு கூறுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:16, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழில்நுட்பம்) மற்றும் விக்கிப்பீடியா:பயனர் கருவிகள் என்ற இரு இடங்களில் தங்களுடைய கருத்தினை பகிரந்து கொள்ளலாம் நண்பரே. தற்போது தேவைப்படும் விக்கி கருவிகள் பக்கம் பயனர் கருவிகளுக்கு வழிமாற்று செய்யப்பட்டுள்ளது. நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:08, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா முகநூல் அணுக்கம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா முகநூல் பக்கத்துக்கு உங்களுக்கு அணுக்கம் உள்ளதாக அறிகிறேன். அதை இங்கு விக்கிப்பீடியா:சமூக ஊடகப் பராமரிப்பு உறுதிச் செய்ய முடியுமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 14:24, 5 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயா, வணக்கம். தங்கள் தொலைபேசி எண் அவசரமாகத் தேவைப்படுகின்றது. rssairam99@gmail -

தொகு

--சங்கர இராமசாமி/உரையாடுக. 07:40, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

தற்போதைக்கு என்னிடம் எண்ணில்லை. கைப்பேசியை தொலைத்த காரணத்தால். நீங்கள் உங்கள் எண்ணை என் மின்னஜ்சலுக்கு அனுப்பினால் நான் உடன் உங்களுடன் உரையாடுகிறென்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:11, 8 அக்டோபர் 2013 (UTC)Reply

மேம்படுத்த வேண்டிய சாசிகள்

தொகு

தென்காசியாரே, தாங்கள் கொடுத்த மேம்பாட்டு ஆலோசனைகள் இப்பக்கத்தில் இருப்பதை விட அந்த சாசிகளின்(தொடுப்பிணைப்பி, புரூவ் இட்) பேச்சுப் பக்கத்தில் இருப்பது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். அதனால் சாசிகளுக்கு அணுக்கம் உள்ளவர்களால் திருத்தமுடியும். சரியெனில் நீங்களே திருத்திவிடுங்கள் --நீச்சல்காரன் (பேச்சு) 01:39, 9 அக்டோபர் 2013 (UTC)Reply

முன்பக்க இற்றைப்படுத்தல்

தொகு

முன்பக்க இற்றைப்படுத்தல் தொடர்பாக ஆலமரத்தடியில் கருத்திட்டுள்ளேன். ஆர்முள்ள பயனர்களை இதில் சேர்த்துக் கொள்ளப்படுவது ஏற்கெனவே இற்றைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு உதவியாக அமையும். உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி. --Anton·٠•●♥Talk♥●•٠· 03:19, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்க கட்டுரைகள் இற்றைப்படுத்தில் தற்போது தொய்வு நிலை காணப்படுகின்றது. வரும்வாரம் எக்கட்டுரைகள் இடம்பெற இருக்கின்றன என்பது தெரியாதுள்ளது. கடந்த ஞாயிறு எவரும் இற்றைப்படுத்தாத நிலையில் நானே இற்றைப்படுத்தினேன். நீங்கள் முன்னர் இற்றைப்படுத்தியதுபோல் தொடர்ந்து இற்றைப்படுத்த முடியுமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 00:15, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

நன்றியுரைத்தல்

தொகு
  நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:52, 15 அக்டோபர் 2013 (UTC)Reply
 
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:49, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:24, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

 --நந்தகுமார் (பேச்சு) 08:18, 16 அக்டோபர் 2013 (UTC)Reply

சிறந்த கட்டுரைக்கான அளவீடு

தொகு

சிறந்த கட்டுரை ஒன்றிற்கான அளவீடுகள் பற்றி கூறவும். குறிப்பாக எத்தனை பைட்டுகள் இருக்கவேண்டும். ஆங்கில எழுத்துருவையும், தமிழ் எழுத்துருவையும் ஒப்பிட்டு கூறுக. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 16:26, 23 அக்டோபர் 2013 (UTC)Reply

சில இளம்பரிதிகளுக்கு பொறுத்திருக்கவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:11, 24 அக்டோபர் 2013 (UTC)Reply

பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல்

தொகு

காண்க: விக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா#பயனர்களை உ.தெ கட்டுரைகளை உருவாக்க தூண்டல் --Anton·٠•●♥Talk♥●•٠· 15:24, 25 அக்டோபர் 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு



கட்டுரைப் போட்டி

தொகு
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:14, 27 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயா முத்தையா பெற்ற ஐயனே

தொகு

ஐயா தென்காசி ஐயாவே.. எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து உலக அனுபவமில்லா சிறு குழந்தைகளையும், உலக அறிவைப் பெற்ற பெரு அறிஞர்களை மட்டும்தான் ஐயா என்று அழைக்க பயன்பட்டது என நினைத்தேன் ஐயா.. ஆகவே ஐயா இப்பொடியனை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா.. ஐயாவின் மறுமொழிக்காக காத்திருக்கும் ஐயா ர.க.ரத்தின சபாபதி (பேச்சு) 10:37, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

ஐயய்யோ ஆளவிடுங்க. எதிர்கட்சிகளின் தாக்குதல்கள் அதிகமாகிவிட்டன.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:24, 28 அக்டோபர் 2013 (UTC)Reply

இரண்டாம் நிலை ஆய்வு பற்றி

தொகு

தென்காசி சுப்பிரமணியன், மேற்கோள் சுட்டுதலையும் சொந்த ஆய்வைத் தவிர்ப்பதிலும் உங்கள் முனைப்பு நன்று. அதைப்பெரிதும் வரவேற்கிறேன். மூன்றாம் நிலைத் தரவுகளை மட்டுமே எல்லா இடங்களிலும் அடிப்படையாகக் கொள்ள வேண்டுமா எனவும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இயன்றவரை அதுவே சிறந்தது. வெகு சில இடங்களில் கருத்து நம்பக்கூடியதாகவும், அறிவுக்கு எட்டும் வகையிலும் இருந்தால் தக்கவாறு முதல் இருநிலைத் தரவுகளைப் பயன்படுத்தலாம். Exceptional claims require exceptional evidence. மற்ற இடங்களில் கருத இடமுண்டு போலக் குறிப்பிடுவதில் பிழையிருப்பதாகத் தெரியவில்லை. நிறைய மேற்கோள்கள் வரத் தொடங்கியபின் சற்று கூடுதலாக வலியுறுத்தலாம். சொந்த ஆய்வைப் பற்றிய கொள்கையையும் வளர்க்க வேண்டும். சில விக்கிக்களில் விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் வாய்மொழியறிவை எப்படி விக்கிக்குப் பயன்படுத்துவது என்றுகூட ஆய்ந்து வருகிறார்கள். தமிழைப்பொருத்தவரை முதல்நிலைத்தரவுகளின் மிகுதி காரணமாக, (அடிப்படை குலையாமல்) நமக்கேற்ற கொள்கையை உருவாக்கினால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 13:44, 31 அக்டோபர் 2013 (UTC) பி.கு. அண்மையில் சான்றுபொருட்டு நீங்கள் நீக்கியதில் ஒரு சிறு பகுதியை மட்டும் தக்க சான்றுடன் மீட்டுள்ளேன். இருந்தாலும் எனது இக்கருத்து அதைப்பற்றியது மட்டுமல்ல, பொதுவானது.Reply

\\சொந்த ஆய்வைப் பற்றிய கொள்கையையும் வளர்க்க வேண்டும். சில விக்கிக்களில் விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் வாய்மொழியறிவை எப்படி விக்கிக்குப் பயன்படுத்துவது என்றுகூட ஆய்ந்து வருகிறார்கள்.\\
இது நல்ல நகர்வு. முக்கியமாக கிராம நம்பிக்கைகளுக்கு வாய்மொழி ஆதாரம் மட்டும் தான் இருக்கும். நீங்கள் பொதுவாக கூறினீர்கள் என்று எனக்கு நன்கு தெரியும்.
மேலும் கவவு என்னும் சொல் தான் கவுரியர் ஆனது என்பதை நான் நம்புகிறேன். இதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கவுரியர் என்னும் சொல் பற்றி செங்கை பொதுவனின் கருத்து என்று இரண்டாம் நிலை மூலங்களில் பதிந்துவிட்டு அது வெளியாகி விமர்சனங்களையும் கருத்துகளையும் பெற்றவுடன் மூன்றாம் நிலை தரவு தளங்களில் பதியலாம். நான் இதற்கான ஆய்வில் இறங்கியாகிவிட்டது.
மற்றபடி கவவு என்றால் அகத்திடுதல் என்பதற்கு நான் தான் மேற்கோளைச் சேர்த்தேன் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 31 அக்டோபர் 2013 (UTC)Reply
புரிதலுக்கும் உங்கள் மேல்முயற்சிக்கு நன்றி. -- சுந்தர் \பேச்சு 06:50, 1 நவம்பர் 2013 (UTC)Reply

ஒரிசா பாலு கட்டுரை

தொகு

நீங்கள் இக்கட்டுரையைத் தொடங்கியுள்ளீர்கள் என்று நினைக்கின்றேன். இக்கட்டுரையில் பல சிக்கல்கள் உள்ளன. வெகுவாக மேம்படுத்தப்படவேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும், அல்லது வெகுவாகச் சுருக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றேன். பேச்சு:ஒரிசா பாலு என்னும் பக்கத்தில் இட்டிருக்கும் கருத்தைப் பாருங்கள்- அது ஒரு துளிதான். உலகப்புகழ் பெற்ற ஆய்விதழ்களில் முதன்மைக்கட்டுரைகள் பல எழுதி முறையாகப் பெருமை எய்தி கடலியல் ஆய்வாளர் போன்ற சொற்களுக்கு பொருத்தம் உடையவராக இருக்க வேண்டும். செய்தித்தாள்களில் வெளியிடுவதெல்லாம் ஆய்வு ஆகாது. இப்படி நான் சொல்வதால் திரு ஒரிசா பாலு அவர்களின் பங்களிப்புகளையோ, அவர் தேடல்களையோ நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம், ஆனால் தக்கவாறு வரைவுகள் இருக்க வேண்டும். நான் மருத்துவத்தை ஆர்வத்தால் படிக்கின்றேன், மருத்துவத்தைப் பற்றி ஓரளவுக்கு அறிவேன் என்பதால் நான் மருத்துவர் அல்லன். ஆகவே சற்று நடுநிலையில் நின்று தக்கவாறு கூற்றுகளை வைத்து எழுதுதல் வேண்டும். இக்கட்டுரையில் கூறியுள்ளவை தேவையானவையா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது.--செல்வா (பேச்சு) 15:44, 1 நவம்பர் 2013 (UTC)Reply

ஆம். தெரியும் ஐயா. எனக்கு தற்போது நேரமில்லை என்பதாலேயே அதை ஒழுங்காக இற்றைப்படுத்த முடியவில்லை. தேவையான மாற்ரங்களை நீங்களும் செய்யுங்கள் நானும் செய்கிறேன்.

[2] இங்கு இடது பக்கத்தில் உள்ள உள்ளடக்கங்கள் மட்டும் தான் நான் சேர்த்தது. அதுவும் நாளிதழ் செய்தியில் இருந்து.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:52, 1 நவம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  மரியாதை மிக்கவர் பதக்கம்
பெருந்தகையே இப் பதக்கத்தை இவ் அடியேன் வழங்குகின்றேன். ♥ ஜீவதுவாரகன் ♥ ♀ பேச்சு ♀ 06:32, 2 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:57, 2 நவம்பர் 2013 (UTC)Reply

மரியாதை மிக்கவரா? யாரப்பா அது? என் மீது மற்றவர் மரியாதை வைத்திருக்கின்றனரா? அல்லது நான் மற்றவர் மீது மரியாதை வைத்திருக்கின்றேனா? குழப்பமாக உள்ளதே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:54, 2 நவம்பர் 2013 (UTC)Reply

தென்காசியாருக்கே குழப்பமா???????, கூடாதே, அட ஜீவா நீ என்னடா இங்கெல்லாம் சுத்துற, இவர் ஆர் தெரியுமா? , ...... அதுதான் எனக்கும் ஒரு சந்தேகம் --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 11:57, 2 நவம்பர் 2013 (UTC)Reply

நான் யார் என்றே உங்களுக்கு சந்தேகம் அந்த அளவுக்கு தான் என்னைத் தெரியும். ஆனால் நீங்கள் யார் என்றால் உடனே அவரையா யார் என்று கேட்கிறாய் எனக்கேட்டு யாழ்பாண இளவேந்தன் அரண்மனையை காட்டுகின்றனர் யாழ் குடாநாட்டினர். தற்போது உலகம் முழுதும் உள்ள தமிழர்களும் காட்டுகின்றனர். ந--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:26, 2 நவம்பர் 2013 (UTC)Reply

தென்காசியாரைத் தெரியாமல் விக்கிப்பீடியாவில் ஒருவரா? ரஜனியைத் தெரியாதவர்களும் இருக்கலாம் ஆனால் வடிவேலைத் தெரியாதவர்கள் யார் உளரோ?--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 04:34, 3 நவம்பர் 2013 (UTC)Reply

வடிவேலுவைத் தமிழ்நாட்டில் தானப்பா தெரியும். ஆனா யாழ்பாண இளவேந்தனை உலகத் தமிழர்களுக்கே தெரியுமே. ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன் தளபதியே கேளும்.

வடிவேலுவுக்கும் (நான் தானப்பா) இளவேந்தனுக்கும் ஒரு போட்டி. யாரை மக்களுக்கு அதிகம் தெரியும் என்று. முதலில் தமிழககத்தின் முக்கிய அரசியல் வாதியிடம் இருவரும் சென்றோம். அவருக்கு இருவரையுமே தெரிந்திருந்தது. அடுத்தது ஈழத்தமிழ் அரசியல்வாதியிடம் சென்றோம். அவருக்கு யாழ் பாண இளவேந்தனை மட்டுமே தெரிந்திருந்தது. இருந்தாலும் கர்வம் தலைக்கேறிய வடிவேலு யாழ்பாண இளவேந்தனிடம் "எனக்கு போப்பாண்டவரின் பக்கத்து அறை வரை செல்ல அனுமதி உண்டு. உனக்கு உண்டா?" என கேட்டான். அதற்கு இளவேந்தன் "நீங்கள் என்னை அந்த அறைக்கு முதலில் கூட்டிச் செல்வீர்களா ?" என்றான். "ஆகா தோற்றதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி" என போப்பாண்டவரின் பக்கத்து அறை வரை இளவேந்தனை கூட்டிச் சென்றான் வடிவேலு. அவனுக்கு இளவேந்தனை தோற்கடித்து விட்டோம் என்ற மிதப்பு அதிகம். உள்ளே போப்பாண்டவர் இருவரையும் பார்த்தவுடன் இளவேந்தனை மேலே அழைத்தார். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. "சிறுவர்களை போப்பாண்டவருக்கு மிகவும் பிடிக்கும் அதனால் தான் உன்னைக் கூப்பிடுகிறார்" என்று சொல்லிவிட்டு மக்கள் போப்பை கானும் இடத்திற்கு இறங்கிச் சென்றுவிட்டான். அங்கு மக்கள் எல்லோரும் இருவரையும் பார்த்து கோசமிட்டு கொண்டிருந்தனர். அப்போதும் வடிவேலுவுக்கு திமிர் குறையவில்லை. அப்போது "மேல் நிக்கிறவர் யார் என்று தெரியுதா?" என்று ஒரு தமிழனிடம் கேட்டான். அதற்கு அவன் தெரியாதே என்றான். "ஹஹஹ யாழ்பாண இளவேந்தனை ஒரு தமிழனுக்கே தெரியவில்லை" என மட்டம் தட்டினான் வடிவேலு. அதைக்கேட்டுவிட்டு அந்த தமிழன் வடிவேலுவை ஓங்கி அறந்தான். அறை வேகமாக இருந்தாலும் அடிவாங்கி அடிவாங்கி பழக்கமாகிய வடிவேலுவுக்கு அது எல்லாம் பெரியதாக் தெரியவில்லை. அறைந்த தமிழன் ஒரு கேள்வி வடிவேலுவை பார்த்து கேட்டான். அதை கேட்டு என்ன அடித்தாலும் தாங்கும் வடிவேலுவே மயங்கி கோமாவுக்கு போய்விட்டான். அவனை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து கோமாவிலிருந்து மீட்டு எடுத்தான் இளவேந்தன். வடிவேலுவிடம் "ஏன் நீ மயங்கி விழுந்தாய்? உன் பக்கத்தில் உள்ளவன் உன்னை அப்படி என்ன கேட்டான்?" என கேட்டான்.

அதற்கு வடிவேலு சொன்னான். "எனக்கு யாழ்ப்பாண இளவேந்தனை நன்கு தெரியும். ஆனால் பக்கத்தில் நிற்பவரை (Pope) யார் என்று தெரியாது. அதை தான்டா சொன்னேன்"னு சொல்லிட்டான்பா என்று அழுதது நினைவில் இருக்கிறது.

இப்போது சொல்லுங்கள் யாரை அதிகம் தெரியும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:43, 3 நவம்பர் 2013 (UTC)Reply

இக் கதையைக் கட்டுரையாக்கி சிறுவர் கதைகள் என்ற பகுப்பினுள் சேர்த்துவிடுங்கள்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:01, 3 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கிப்பீடியா கலைக்கலஞ்சியம் (தகவல் களஞ்சியம்). கதைக்களஞ்சியம் அல்ல. இப்ப அதெல்லாம் எதுக்கு. யாரை அதிகம் தெரியும். வடிவேலுவா அல்லது இளவேந்தனா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:32, 4 நவம்பர் 2013 (UTC)Reply

ஆதவனைத்தான் தெரியும் ஏனெனில் ஆதவன் தனது படத்தைத் தன் பயனர் பக்கத்தில் இட்டுள்ளார் நீங்கள் தங்கள் படத்தை இடவில்லையே தென்காசியாரே. :)--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:32, 4 நவம்பர் 2013 (UTC)Reply

தளபதிகள் ஸ்ரீகர்சனும் அவரின் இளவலும் (தம்பி) அவர்களின் முகநூல் முகவரியை இதற்கு அனுப்பினால் நன்றாய் இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:30, 4 நவம்பர் 2013 (UTC)Reply

ஜகஜல புஜபல தெனாலிராமரே என்னிடமும் தம்பியிடமும் முகநூல் முகவரி இல்லை. எனது முடிவை மாற்றிக்கொண்டேன் ஏனெனில் ஆதவனைப் படமாகத்தான் தெரியும் ஆனால் தங்களையோ காணொளியாகவே தெரியுமே!--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:34, 11 நவம்பர் 2013 (UTC)Reply

காணொளியை காணவில்லை என வருகிறது. நீங்கள் தானே காவல் தளப்தி. கண்டுபிடித்து கொடுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:45, 11 நவம்பர் 2013 (UTC)Reply

கோடான கோடி நன்றிகள்

தொகு

பெருந்தகையே!தாங்கள் என் பேச்சுப்பக்கத்திற்கு எழுந்தருளி அருள்பாலித்தீர்கள், அதற்கு அடியேனிடம் இருந்து கோடானகோடி நன்றிகள்!

அடியேன் யாழ்ஸ்ரீ  உரையாடுக 20:30, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

அய்யய்யோ எழுந்து அருள்வதா? ஆண்டவா! என் இளவேந்தனே எனக்கு எதிராக ஆள் அனுப்புகிறானே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:09, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

தளபதியே, இவர விடாதீக , சுட்டுத் தள்ளுக :)--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 16:24, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

சுடுவதற்கு நான் என்ன தோசையா? அல்லது முருகன் ஔவையாருக்கு உதிர்த்த நாவற்பழமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:07, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

வாருங்கள் உடனே ஆலமரத்தடிக்குச் சென்று தென்காசியார் தோசையா? நாவற்பழமா? என சர்வ பயனர் வாக்கெடுப்பு நடத்திவிடுவோம்.

நிச்சயமாக எனது ஓட்டு தோசைக்கே.

காரணம் 1 - தோசை, நாவலை விடப் பழமையானது. [1]

காரணம் 2 - நாவற்பழம் கீழே விழுந்து தானாய் சுடுகின்றது. தோசை பிறரால் சுட வைக்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட எக்குத்தப்பான விளக்கங்களுக்கு நீங்கள் நாடவேண்டிய ஒரே இடம் தம்பி ஸ்ரீகர்சனின் பேச்சுப் பக்கம். --  ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:08, 29 அக்டோபர் 2013 (UTC)Reply

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. தோசையினதும், நாவலினதும் திருத்த வரலாற்றைப் பார்க்க. நீங்கள் தான் வரலாறு விரும்பி ஆயிற்றே!

மயக்கமா...? தயக்கமா...!

தொகு

தாங்கள் தான் வடிவேலயிற்றே, எங்கே தாறத் தப்பட்டைகள் தாறுமாறாகக் கிழியவில்லை. நாரதர் (தளபதி) தந்த நாவல்ப்பழத்திற்கு மதிப்பிற்குரிய Mr இடமிருந்து பதிலைக்காணோம். ஹய்யோ! ஹய்யோ! --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:27, 5 நவம்பர் 2013 (UTC)(மயக்க தயக்கமற்ற இளவல்)Reply

வடிவேலுவுக்கு தயக்கம் மட்டும்தான். நான் என்ன யாழிளவேந்தனா? உடனே வஞ்சினம் கூரி போருக்குச் செல்ல?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:28, 5 நவம்பர் 2013 (UTC)Reply

உங்களுக்கு மயக்கம் போலிருக்கே?!!!, --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 14:02, 7 நவம்பர் 2013 (UTC)Reply

இளவேந்தன் என் பக்கத்துக்கே வந்து தாகினால் மயக்கம் வராமல் என்ன செய்யும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:03, 7 நவம்பர் 2013 (UTC)Reply

அப்ப நீங்க என் பக்கம் வாங்க, தாக்குறன். என்ன நடக்குதுன்னு பார்ப்பம்.--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:35, 8 நவம்பர் 2013 (UTC)Reply

புலி என் வீடு வரலாம் என்பதற்காக நான் அதன் குகையில் போய் தங்க முடியுமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 08:13, 8 நவம்பர் 2013 (UTC)Reply

என்னக்கொரு சந்தேகம் ஆதவர் இளவேந்தனா?... போர்க்கலை பயின்ற ராணுவமா?... அல்லது புலியா!... --அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:26, 9 நவம்பர் 2013 (UTC)Reply

வேந்தன் என்றாலே போர்க்கலை தெரிந்தவனாகவும் புலி போல் உள்ளவனாகவும் தான் இருப்பான்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 20:46, 9 நவம்பர் 2013 (UTC)Reply

ஐயா நான் சொன்னது அந்தப் புலியை இல்லை.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 03:27, 12 நவம்பர் 2013 (UTC)Reply

என்ன கொடுமை இளவேந்தா!....

தொகு

ஐயய்யோ! இளவேந்தா தங்கள் கல்லூரியில் போர்க்கலை கற்பிப்பதாகக் கேள்வி, எதிர் காலத்தில் இலங்கை ராணுவத்தில் இணைய வாழ்த்துக்கள். இணையும் முன்பே இவற்றை ஆரம்பிக்கலாமே: விக்கியிளம் ராணுவம் (குழு), வலைவாசல்:ராணுவம் முக்கிய குறிப்பு:-கவனம் விக்கித் தீவிரவாசிகளின் நடமாட்டம் இங்கு அதிகம். (வடிவேலு, தளபதி, இளவல்)இப்படிக்கு தீவிரவாசி--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:50, 7 நவம்பர் 2013 (UTC)Reply

ஸ்ஸ்ஸ்ஸ்

தொகு

தென்காசியாரே என்ன கூற விழைகிறீர்கள்:).நந்தினிகந்தசாமி (பேச்சு) 18:20, 25 நவம்பர் 2013 (UTC)Reply

சத்தமில்லாமல் நீங்க கட்டுரைகளை எழுதுவதைத்தான் தென்காசியார் அப்படி குறிப்பிடுகிறார்.முத்துராமன் (பேச்சு) 05:11, 26 நவம்பர் 2013 (UTC)Reply
ஓ!!! :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 06:05, 26 நவம்பர் 2013 (UTC)Reply
இந்த முறையும் முதல் பரிசு நந்தினி அக்காவுக்குத்தான் போல. ஆனால் முத்துராமன் அண்ணாவும் திட்டமிடப்பட்ட கரந்தடிப் போரில் ஈடுபட்டுள்ளது போல் தெரிகின்றதே!--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 18:47, 26 நவம்பர் 2013 (UTC)Reply

நந்தினி பதட்டப்படாமல் கட்டுரைப் போட்டியில் கவனம் செலுத்துங்கள். உரையாடலை விக்கிப்பீடியா_பேச்சு:2013_தொடர்_கட்டுரைப்_போட்டி#இடை இற்றை சிக்கல் இம்மாதப் போட்டி முடிந்ததும் தொடங்கலாம். சிக்கலுள்ள இரண்டு கட்டுரைகள் தற்போதைக்கு யார் கணக்கிலும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:03, 27 நவம்பர் 2013 (UTC)Reply

மன்னிக்கவும் தென்காசியாரே.கடுமையான காய்ச்சலில் நான் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.அத்தருணத்தில் இது போல் பிணக்கு வந்தால் ..... என் நிலையை சற்று சிந்திகவும். அதனாலேயே சிறிது உணர்ச்சிவசபட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.மற்றபடி தங்கள் மேல் எந்த கோபமும் இல்லை.:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:11, 27 நவம்பர் 2013 (UTC)Reply

இதுபோல் நான் நிறைய தடவை மற்றவர்களை ஆரம்பகாலங்களில் பேசியிருக்கிறேன். தற்போது நீங்கள் வருத்தப்பட்டு துக்கப்பட்டு கஷ்டப்படுவது சில மாதங்களுக்குத் தெரியும். அதற்குப் பிறகு............

...............

...............


அதுவே பழகிரும். எனக்குப் பழகிருச்சு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:22, 27 நவம்பர் 2013 (UTC)Reply

) :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:25, 27 நவம்பர் 2013 (UTC)Reply

கட்டுரைப் போட்டி

தொகு

பின்நவீனத்துவம் கட்டுரையை திருத்தியுள்ளேன் சரிபாருங்கள்.பார்க்கவும்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:43, 30 நவம்பர் 2013 (UTC)Reply

சரிங்க தளபதியாரே. அதை சேர்த்து விடுகிறேன். நான் இப்போ தான் ஒரு புயல் கிட்ட திணறத் திணற அடி வாங்குனேன். நீங்க வேற கையில் வேலை எடுத்து வீசிவிடாதீர்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:25, 30 நவம்பர் 2013 (UTC)Reply

இருமுனையப் பிறழ்வு,பார்க்க மனித இரையகக் குடற்பாதை,பார்க்க உயிரியல் வகைப்பாடு,பார்க்க கட்டுரைகளைத் திருத்தியுள்ளேன் சரிபாருங்கள். --  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:35, 30 நவம்பர் 2013 (UTC)Reply

யுவான் அரசமரபு

தொகு

யுவான் அரசமரபு கட்டுரையில் இறுதிக்காலம் தலைப்பில் நீங்கள் சிவப்பு தலைப்பாகை குழுவைப்பற்றி எழுதியுள்ளீர்கள். இறுதி 2 பத்திகள். அவற்றை ஆவியில் தேடினேன் எனக்கு எங்கிருந்து அத்தகவல்களை எடுத்தீர்கள் என்று தெரியவில்லை.

பத்தி 1 = மங்கோலியர்களின் கீழ் அமைந்த யுவான் மரபு (1271-1368)... பத்தி2 = சிவப்பு தலைப்பாகை குழுவினர் வெள்ளைத்தாமரை என்ற.....

யுவான் அரசமரபைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்ற ஒரு போர் உண்டு. அந்த ஆங்கிலக்கட்டுரையில் இருந்து எடுத்தேன். கட்டுரைப்பெயர் நினைவில்லை. கூகுளில் உலகில் அதிக நபர்கள் பங்குபெற்ற கடல்போர் எது என ஆங்கிலத்தில் தேடிப்பாருங்கள் வரும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:05, 2 திசம்பர் 2013 (UTC)Reply

யுவான் மரபை அமைத்த குப்லாய் கான் மங்கோலியர் தான். செங்கிசுக்கானும் இவரும் ஒரே வழியில் வந்தவர்கள் என நினைக்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:21, 2 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசி நீங்கள் எழுதிய பத்திகளை நீக்கி அவற்றை சிறிதாக்கிவிட்டேன். அவற்றை மிங் அரசமரபில் சேர்க்கலாம் அல்லது சிகப்பு தலைப்பாகை குழு கட்டுரையில் விரிவாக தருவதே சரியாக இருக்கும். --குறும்பன் (பேச்சு) 23:23, 6 திசம்பர் 2013 (UTC)Reply

[3] மிங்கின் தோறம் தான் யுவானின் அழிவல்லவ்வா? அதனால் இதில் அழிக்க வேண்டியது என்று எதுவும் எனக்குப்படவில்லை. மிங் கட்டுரையின் ஆரம்பத்தி இது இருக்க வேண்டும். அதே போல் யுவானுக்கு முன்னிருந்த வம்சத்தின் கட்டுரையில் யுவானின் எழுச்சியும் முன்னிருந்த அரசமரபின் அழிவும் என்று இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தவல் சேர்ப்பது எளிதாக இருக்கும், தகவல் விட்டுப்போகாமலும் இருக்கும் என்பதால் இம்முறையை பின்பற்றுகிறேன். --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:31, 7 திசம்பர் 2013 (UTC)Reply

தேவையான படிமங்களைக் தெரிவிக்கவும்

தொகு

கீழ் உள்ளவற்றில் தேவையான படிமங்களைக் தெரிவிக்கவும்:

(இவையனைத்தும் இலவசமில்லாதவை என குறிக்கப்பட்டுள்ளன, ஆயினும் எந்த கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 18:49, 4 திசம்பர் 2013 (UTC)Reply

தேவையில்லாதவற்றை நானே அழித்துவிடுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:15, 4 திசம்பர் 2013 (UTC)Reply

சந்தேகம்

தொகு

இந்த உரையாடலைப் பாருங்கள். தொலைநோக்கி கட்டுரையை விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி/முடிவுகள்/நவம்பர், 2013 இல் என் கணக்கில் சேர்க்கலாமா? ஏனெனில் இங்கு சேர்க்கலாம் என இரவியும் நந்தினிகந்தசாமியும் கூறியுள்ளனர்.--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:45, 7 திசம்பர் 2013 (UTC)Reply

இந்த இணைப்பைப் பார்க்கவும். யார் கணக்கிலும் அப்படி செய்ய முடியாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:26, 7 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசியாரே! அதனை நான் சேர்க்கவில்லையே 15360 பைட்டைத் தாண்டாத பல கட்டுரைகளில் ஏற்கனவே நூற்பட்டியல் வெளியிணைப்புக்கள் என்பன சேர்க்கப்பட்டுள்ளதே. நான் சேர்த்தவை உரைப்பகுதியாகவே உள்ளது (நவம்பர் மாதக் கட்டுரைப் போட்டி விதிகளின் படி).--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:35, 7 திசம்பர் 2013 (UTC)Reply

ஏற்கனவே வெளி இணைப்புகளை சேர்த்த கட்டுரைகளை எல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு சுட்டிக்காட்டுகின்றாய். கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர் அதை அம்மாதத்தில் இணைத்திருக்கிறார். அதனால் அது போட்டிக் கணக்கில் வராது. இதை நாம் கணக்கில் கொண்டோமானால் நீயும் நானும் பேசி வைத்துக்கொண்டு நான் 15359 பைட்டு அளவுக்கு வெளி இணைப்பை சேர்த்துவிட்டு நீ 1 பைட்டை சேர்த்து கூட கணக்குக் காட்டலாம். ஆக 100 கட்டுரைகளை ஒரே நாளில் 100 பைட்டுகளைச் சேர்த்து வென்றுவிடலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 7 திசம்பர் 2013 (UTC)Reply

அட ஆமா இது எனக்குத் தெரியாமப் போச்சுதே! (நகைச்சுவை) பரவாயில்லை ரொம்ப நல்லாத்தான் யோசிக்கிறீங்கள். (நகைச்சுவை) முடிஞ்சா கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்களில் இருந்து 30 கட்டுரைய 15359.9999999999 பைட்டுக்குக் கொண்டந்து விடுங்கோ சுலபமா ஜெயிச்சுடலாம் (மிகப் பெரிய நகைச்சுவை) :)--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:32, 7 திசம்பர் 2013 (UTC)Reply

தென்காசியாரே முடிவுகளில் சிறு திருத்தம் உள்ளது. இரண்டாம் பரிசிற்கு பதிலாக அசோக் ராஜ் அவர்களின் பெயர் முதல் பரிசில் இடப்பட்டுள்ளது.நட்சத்திரமும் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.இங்கு கவனிக்கவும்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 05:57, 8 திசம்பர் 2013 (UTC)Reply

 Y ஆயிற்று சிறப்புப் பரிசுக்கான இடத்தில் இரண்டாவது பரிசுக்கான விண்மீன் இருந்தது தற்போது மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

தங்கம் - முதல் பரிசு, வெள்ளி - இரண்டாம் பரிசு, சிகப்பு - சிறப்புப் பரிசு.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:11, 8 திசம்பர் 2013 (UTC)Reply

நன்றி சொல்ல உனக்கு, வார்த்தை இல்லை எனக்கு..

தொகு

தென்காசியாரே, என் கட்டுரைகளை சரிப்பார்த்து என்னை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி, விக்கிபீடியாவில் கட்டுரைகளை தொகுப்பது எனக்கு இதுவே முதல் முறை, உங்கள் பயனர் பக்கத்தில் உள்ள "பெயரளவில்" தமிழனாக இல்லாது, "செயலளவில்" மட்டும் தமிழனாக இருப்பது சிறப்பு. "பெயரிலும்", "செயலிலும்" இரண்டிலுமே தமிழனாக இருப்பதே மிகச்சிறப்பு. எனும் சொலவடை என்னை மிகவும் கவர்ந்தது அதை கண்ட பிறகு என்னுள் உறங்கி கொண்டிருந்த தமிழன் தானகவே எழுந்து கட்டுரைகளை தொகுத்து விட்டான். தமிழுக்கு தொண்டு செய்ய எனக்கு இது ஒரு ஊக்கமாக இருக்கும். என் புகைப்பட கோப்பை என் பயனர் பக்கத்தில் பதிவேற்றி விட்டேன். கோவையில், ஈச்சனாரி எனும் இடத்தில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நான் பயில்கிறேன். -- அசோக் ராஜ் (பேச்சு) 06:07, 8 திசம்பர் 2013 (UTC)Reply

புதுப்பயனர் வார்ப்புருவில் திருத்தம்

தொகு

தென்காசி, புதுப்பயனர் வார்ப்புருவில் செய்த திருத்தத்தை இல்லாமல் ஆக்கியிருக்கிறேன். காரணம், பயனர் பக்கத்துக்கான இணைப்பு அவரது சொந்தப் பயனர் பக்கத்துக்குச் செல்லவில்லை. மாறாக அவரது பெயரில் கட்டுரை ஒன்றை உருவாக்க அழைக்கிறது.--Kanags \உரையாடுக 20:59, 13 திசம்பர் 2013 (UTC)Reply

அதை பயனர் பக்கத்துக்கு போகின்ற மாதிரி செய்ய என்ன செய்வது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:49, 13 திசம்பர் 2013 (UTC)Reply

இவ்வாறான திருத்தம் செய்யும் போது சோதித்துப் பார்த்து செய்ய வேண்டும். தொழிநுட்பக்காரர்கள் நிறையப் பேர் இங்கு உள்ளார்கள். அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம். அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.--Kanags \உரையாடுக 23:57, 13 திசம்பர் 2013 (UTC)Reply

உங்களின் இந்த ஆணையை சிரம் தாழ்த்தி வணங்கி அப்படியே செய்ய முற்படுகிறேன். மன்னவா!--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:10, 17 திசம்பர் 2013 (UTC)Reply

பதக்கம்

தொகு
  விக்கிப்பீடியா ஊக்குவிப்பாளர் பதக்கம்
சுப்பிரமணிய சுவாமிகள் புதிய பல பயனர்களை ஆர்வமோடு ஊக்குவிப்பதால் அடியேன் யாழ்ஸ்ரீயான யாம் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:12, 2 நவம்பர் 2013 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது



 
திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், தென்காசி சுப்பிரமணியன்/2013!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.


--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:09, 16 திசம்பர் 2013 (UTC)Reply

என்ன் விக்கித்த்ட்டம் வானியலில் உறுப்பினர் ஆகவில்லை வானியல் கட்டுரைகளில் நீங்கள் நன்றாகப் பங்களிக்கின்றீகளே--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:14, 19 திசம்பர் 2013 (UTC)Reply

திட்டம் எதிலுமே நான் பங்களிக்க விரும்பவில்லை. நான் பல்துறை விருப்பம் கொண்டவன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:18, 19 திசம்பர் 2013 (UTC)Reply

பரவாயில்லை ஐயா...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 10:24, 19 திசம்பர் 2013 (UTC)Reply

இது சரியா?

தொகு

\\துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]\\ இந்த மேற்கோள் அபிதான சிந்தாமணியில் பக்கம் 614 ல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 614ல் கொடுகொட்டி என்றும் கொடுந்தமிழ் நாடு 12 என உள்ளது. கலந்துரையாடவும்

அண்டனார் சரியான வார்ப்புருவை அங்கு இணைத்திருக்கிறார். துளுநாடு கொடுந்தமிழ்நாட்டில் ஒரு பகுதிதான். ஆனால் கீழுள்ள

//துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். [2]//

இந்த வரி அபிதான சிந்தாமணியில் இல்லை என்றால் அந்த பக்கத்தை முடிந்தால் உங்கள் மொபைலில் புகைப்படம் எடுத்து நிர்வாகி யாருக்காவது அனுப்பி அந்த வரியை எடுத்துவிடச் சொல்லுங்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:08, 21 திசம்பர் 2013 (UTC)Reply

எனில் பக்கத்தை மட்டும் மேற்கோளில் மாற்றிவிட்டு அண்டனார் போட்ட வார்ப்புருவை நீக்கிவிடுங்கள். அபிதான சிந்தாமணி மொத்தம் எத்தனை பக்கம். ஒருவேளை முதலில் எழுதியவர் வேறு பதிப்பகதுடையதையும் நீங்கள் வேறு பதிப்பகத்துடையதையும் பார்த்திருக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:17, 21 திசம்பர் 2013 (UTC)Reply

  • இல்லை நண்பரே அபிதான சிந்தாமணி மொத்தம் 1960 பக்கம்- சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” ஒரே நூல் தான், சிங்காரவேலு முதலியார் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றியிருக்கிறார். --Yokishivam (பேச்சு) 14:27, 21 திசம்பர் 2013 (UTC)Reply

en:Tamil-Brahmi

தொகு

ஆங்கில தமிழ்ப் பிராமி கட்டுரையில் "கவாமிகாமி" எதை அழுத்திக் கூற முற்படுகிறார். அவர் திருத்தங்களைக் கவனியாததால் விளக்கம் குறைவாகவுள்ளது. சுருக்கமாக குறிப்பிடுங்கள். அங்கு சந்திக்கிறேன். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:39, 25 திசம்பர் 2013 (UTC)Reply

எனக்கு "கவாமிகாமி" சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுகிறார் எனத் தோன்றுகிறது. அங்கு ஏற்கனவே ஏராளமான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவர் நடன காசிநாதன் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எழுதிய கட்டுரையை மட்டும் எடுத்துக்கொண்டு தரமற்ற கட்டுரை என்கிறார். இவர் தமிழ்பிராமிக்கு ஆன மேற்கோள் நூல் ஒன்றை அதன் வயதில் கொடுத்திருக்கிறார். கீழே பாருங்கள்.

//Indian Epigraphy : A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages://

இந்த மேற்கோள் நூலை எப்படி தமிழ் பிராமிக்கான வயதில் இடமுடியும். இங்கு இருப்பது சமஸ்கிருதம், பிராகிருதம், இந்தோ-ஆரிய மொழிகள் இவை எதிலுமே தமிழ் அடங்காதே.

[4] இந்த தொகுப்பைப் பாருங்கள். இதில் இவர் கொடுத்திருப்பது என்ன என்றால்

//Some Tamil Brahmi inscriptions are interpreted as being fully alphabetic, in that an unmarked consonant had no inherent vowel. It has been claimed that these variants must have been earlier than and ancestral to Ashokan Brahmi, though no reason for thinking they are earlier has been given.<ref name=Kasinathan/>{{RS|date=December 2013}}//

இவர் கட்டுரையை முழுதாக படித்த மாதிரியே தெரியவில்லை. இவர் சொல்லி இருப்பது என்ன என்றால் அசோகப் பிராமிக்கு தமிழ் பிராமி முன்னது என எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை எனக் கூறி நடனகாசிநாதன் கட்டுரையையே எடுத்துவிட்டார். அதில் அவர் 8 ஆம் பக்கத்தில் ஜம்பைக்கல்வெட்டில் உள்ள சதியபுதோ என்பதும் அசோகன் 2 கல்வெட்டில் உள்ள சதியபுதோ என்பதும் ஒரே மாதிரி இருப்பதால் இரண்டும் ஒரே காலத்தவை என்றும் அதனால் அதுக்கு முற்பட்ட தமிழ் பிராமி வகைகள் அதற்கும் முன்னது எனக் கூறியிருக்கிறார். ஆனால் குவாமிகாமி அவர் எந்த காரணமும் கூறவில்லை எனக்கூறி நடனகாசிநாதன் கட்டுரையை நீக்கியிருக்கிறார். இவர் எப்படி அப்படிச் செய்யலாம்?

இப்போது என் மேல் பொய் குற்றச்சாட்டுகளில் இறங்கிவிட்டார். நான் இந்த நூலின் தலைப்பை விரும்பவில்லை (/Indian Epigraphy : A Guide to the Study of Inscriptions in Sanskrit, Prakrit, and the other Indo-Aryan Languages://) என ஏதேதோ பொய் சொல்கிறார்.

அவர் நடனகாசிநாதன் தவிர மற்ற அகழாய்வுச் சான்றுகள் என்னானது எனக் கேட்டால் அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை. இவர் தரமற்ற கட்டுரை எனக்கூறி உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கட்டுரையை இன்னொரு முறை அகற்றினால் நான் அசோகன் பிராமி தமிழ் பிராமிக்கு முந்தையது எனக் கூறுவனவற்றை எல்லாம் தரமற்றவை என நீக்கலாமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:11, 25 திசம்பர் 2013 (UTC)Reply

இன்னொரு பொய்யைப் பாருங்கள்.

//Kasinathan is a primary source a//

காசிநாதன் உலகத்தமிழாய்வு இதழ்க்கட்டுரை முதலாம் நிலை மூலம் எனக் கூறுகிறார். கல்வெட்டுகள் தான் முதலாம் நிலை மூலமே தவிர இதழ்க்கட்டுரைகள் எல்லாம் இரண்டாம் நிலை மூலமே. இவர் எப்படி ஒரு இதழ்க்கட்டுரையை முதலாம் நிலை மூலம் எனக் கூற முடியும்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:24, 25 திசம்பர் 2013 (UTC)Reply

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் கட்டுரை மற்றும் கே. ராசனின் அறிக்கை ஆகியவற்றின் இணைப்பினை செய்தித்தாள்களின் இணைப்பற்று தர முடியுமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 04:37, 26 திசம்பர் 2013 (UTC)Reply

அந்த இணைப்பை நான் ஆங்கிலப் பேச்சுப்பக்கத்திலேயே தருகிறேன். அதை குவாமிகாமி முழுதாக படிக்கவில்லை என்பது தெளிவு. அகரமேறிய மெய் முறைமை கட்டுரையில் காசிநாதன் கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:03, 26 திசம்பர் 2013 (UTC)Reply

ஆங்கிலப் பேச்சுப்பக்கத்தில் அதை தந்திருக்கிறேன். அவர் சால்மோன் என்ற ஆய்வாளரின் கூகுள் நூலை மேற்கோளுக்கு கொடுத்திருந்தார். அதில் பிரிவியூ வரவே இல்லை. ஆனால் நான் கா. ராஜன் கூகுள் நூலை மேற்கோள் கொடுத்தால் மட்டும் [dubious – discuss] என்று வார்ப்புருவை இட்டிருக்கிறார். அவருக்கு ஒரு விதி மற்றொருவருக்கு வேறு விதியா? எனக்கு இவரின் மேல் நம்பிக்கையில்லை. இவர் மட்டும் இருப்பதை விட நடுநிலையாக வாதிட இன்னொரு ஆங்கில விக்கிப்பீடியா நிர்வாகி தேவை அந்தப் பக்கத்துக்கு தேவை. இதை எப்படி நான் கேட்பது?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 07:57, 26 திசம்பர் 2013 (UTC)Reply

இப்போது [dubious – discuss] போட்டது பொருந்தாது. காரணம் Karai Rajan (2009). Archaeological Excavations at Porunthal 2009. Pondicherry University: Central Institute of Classical Tamil, Archaeological Survey of India. இந்த நூலை எழுதியவர் தான் பொருந்தல் அகழாய்வை செய்து முடிவை வெளியிட்டவர். இதற்கு எப்படி [dubious – discuss] வார்ப்புரு போடலாம்? கா. ராஜன் தமிழ் பிராமியை கி.மு. 490 எனச் சொல்வது நாளிதழ்களிலும் வந்துவிட்டது. நூலும் இருக்கிறது. இங்கு [dubious – discuss] வார்ப்புரு இடுவது பொருந்தாது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:10, 26 திசம்பர் 2013 (UTC)Reply

நான் இன்று கோவையில் இருந்து தென்காசி கிளம்புகிறேன். அடுத்த மூன்று நாட்கள் நேரம் எவ்வளவு கிடைக்கும் எனத் தெரியவில்லை. குற்றாலத்தில் நடக்கும் சி.பா. ஆதித்தனார் இதழியல் கழகம் நடத்தும் விழாவில் என் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாக உள்ளது. அதன்பிறகு சன்யாசிப்புடவுக் கல்வெட்டு நோக்கி பயனம். அதனால் மூன்று நாட்கள் நீங்கள் தான் அண்ணன் குவாமிகாகேமியை கவனிக்க வேண்டும். இப்போதைக்கு அவரிடம் பேசுவதற்கு உள்ளவற்றை இங்கு கூருகிறேன்.

ஆரம்ப காலங்களில் ஐராவதம் மகாதேவன் தமிழ் பிராமிக்கு மூன்று வளர்ச்சி நிலைகளை காட்டினார். ஆனால் அவருடைய நூலில் இந்த மூன்று நிலைகளும் ஏன் அசோகன் பிராமிக்கு பிந்தியவை என்பதற்கு ஒரு காரணமும் தரவில்லை.

பின்னர் நடன காசிநாதன் ஏற்கனவே ஐராவதம் கூறிய மூன்று முறைகளோடு இன்னொன்றையும் சேர்த்தார். ஆனால் அசரின் கட்டுரையில் ஏன் முதல் இரண்டு நிலைகள் அசோகனுக்கு முன்னரே பழமையானது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. அசோகனின் கல்வெட்டில் உள்ள சதியபுதோ தான் நமது ஜம்பைக் கல்வெட்டிலும் இருக்கிறது.

ஜம்பைக்கல்வெட்டு ஐராவதம் மகாதேவன் எழுத்து வளர்ச்சி முறைப்படி இரண்டாவது வகையாகும். நடன காசி நாதன் வகை படி மூன்றாவது ஆகும். ஐராவதம் முறை படி எடுத்தாலும் இரண்டாம் வகை தான் ஜம்பைக் கல்வெட்டு வருகிறது. அதற்கு முன்பு ஐராவதம் முறைப்படி தமிழ் பிராமிக்கு ஒரு வளர்ச்சி நிலையும் காசிநாதன் முறைப்படி இரண்டு வளர்ச்சி நிலைகளௌம் உண்டு.

குவாமிகாமி என்ன சொல்கிறார் என்றால் ஐராவதம் தான் பிராமியின் காலத்தை கண்டறிய அதிகாரப்பூர்வமான தகுதி இருப்பதாக உளர்கிறார். [5] இதை ஏற்க முடியாது. அதே எழுத்து வளர்ச்சி முறையை சில ஆண்டுகள் கழித்து நடன காசிநாதன் நான்க்காக்கி அதில் இரண்டு ஏன் அசோகப்பிராமியை விட பழமையானது என்ற விளக்கம் தான் அந்த ஆய்வுக்கட்டுரையில் எட்டாம் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அப்படியே குவாமிகாகாமி கூறுவது படிப் பார்த்தாலும் நடனகாசிநாதன் முறை தவறானது என எந்த வரலாற்று ஆய்விதழ்களிலாவது பதிவாகி இருக்க வேண்டும். விக்கிப்பீடியா குவாமிகாமிக்கானது அல்ல என்பதை தெரியப்படுத்துங்கள்.

  1. தமிழ்பிராமி தான் முன்னது எனக்காட்ட ரேடியோ கார்பன் டேட்டிங் படி கா. ராஜனின் கூகுள் நூலும் நாளிதழ் செய்திகளும் உள்ளன.
  2. எழுத்து வளர்ச்சி முறைப்படி அதை நிறுவ நடனகாசிநாதனின் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இதழ்க்கட்டுரை உள்ளது.
  3. வெளிநாட்டு ஆய்வாளர்கள் சான்றின்படி ஆக்சுபோர்டு பல்கலைக்கழக அறிஞர் கபில் சக்ரபாட்டி எழுதிய நூல் உள்ளது. அந்த கூகுள் நூல்லுக்கு பிரிவியூ இல்லாவிட்டாலும் அவர் அந்த நூலில் அசோகப்பிராமிக்கு முந்தையது தமிழ் பிராமி என்று கூறுகிறார் என இந்து நாளிதழ் செய்தி உள்ளது.
  1. ஆனால் குவாமிகாமி காட்டும் ஐராவதம் நூலில் மூன்று வகை தமிழ் பிராமி வகைகள் இருக்குதே ஒழிய ஏன் அசோகனுக்கு பின்னர் தமிழ் பிராமி வந்தது என்பதற்கு காரணம் இல்லை.
  2. அவர் கொடுத்த சாலமோன் என்பவர் எழுதிய நூல்லுக்கு கூகுள் பிரிவிய்யூ இல்லை. அதனால் அவர் சொல்வது உண்மையா என்பதை அறிய நம்பக்கம் இருப்பது போல் நாளிதழ் செய்தி கூட இல்லை.
  3. ஐராவதம் மகாதேவன் முறையை நிறுவ ரேடியோ கார்பன் டேட்டிங்கும் இல்லை.
  4. நடனகாசிநாதன் கட்டுரையில் எட்டாம் பக்கம் காரணம் கூறப்பட்டிருக்கிறது எனக் கூறியும் அவர் அதில் அப்படி ஒன்றும் இல்லை எனப் பொய் கூறுகிறார்.

நம்மிடம் இருப்பது எல்லாம் சரி. அவரிடம் இருப்பது எல்லாம் தவறு. இதை வைத்துக்கொண்டு ஆனதைச் செய்யுங்கள். அவர் என் மீது நான் முதல் நிலை மூலத்தை உபயோகிக்கிறேன் எனவும், ஆய்வுக்கருத்துகளை எழுதுகிறேன் எனவும், Edit Warrior என்று Edit Summaryயிலும் குற்றம் சாட்டுகிறார். மேலும் இது தொடரலாம். கட்டுரைகள்ல் தவறான தகவல்கள் இற்றைப்படுத்தாத வண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் இந்த மூன்று நாட்களிலும் நான் நேரம் கிடைத்தால் வருகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:47, 26 திசம்பர் 2013 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி சுப்பிரமணியன். தற்போது சிக்கல் பற்றிய புரிதல் உள்ளது. நிச்சயமாக குவாமிகாகாமி தொகுப்புப் போர் நடத்த முற்படுகிறார். சென்று வாருங்கள், நான் குவாமிகாகாமியைப் பார்த்துக் கொள்கிறேன். :) --Anton·٠•●♥Talk♥●•٠· 16:56, 26 திசம்பர் 2013 (UTC)Reply
Return to the user page of "தென்காசி சுப்பிரமணியன்/2013".