அக்டோபர் 9
நாள்
(9 அக்டோபர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | அக்டோபர் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 | ||
MMXXIV |
அக்டோபர் 9 (October 9) கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர்.
- 1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான்.
- 1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது.
- 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது.
- 1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் தீவைக் கண்டுபிடித்த ரொஜர் வில்லியம்சு மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- 1708 – உருசியாவின் முதலாம் பேதுரு லெசுனயா சமரில் சுவீடனைத் தோற்கடித்தார்.
- 1740 – டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1760 – ஏழாண்டுப் போர்: உருசியப் படைகள் பெர்லின் நகரைக் கைப்பற்றின.
- 1790 – அல்சீரியாவைத் தாக்கிய நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையினால் 3,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1799 – லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
- 1806 – புருசியா பிரான்சு மீது போர் தொடுத்தது.
- 1812 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: ஈரீ ஏரியில் இடம்பெற்ற கடற் சமரில் அமெரிக்கப் படையினர் இரண்டு பிரித்தானியக் கப்பல்களைக் கைப்பற்றினர்.
- 1820 – உவயாகில் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1824 – கோஸ்ட்டா ரிக்காவில் அடிமை முறை இல்லாதொழிக்கப்பட்டது.
- 1831 – கிரேக்கத்தின் முதலாவது அரசுத்தலைவர் இயோனிசு கப்பொதிசுத்திரியாசு படுகொலை செய்யப்பட்டார்.
- 1835 – கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1847 – செயிண்ட்-பார்த்தலெமியில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
- 1854 – உருசியாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்சு, துருக்கியப் படைகள் ஆரம்பித்தன.
- 1871 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1874 – அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அமைக்கப்பட்டது.
- 1900 – குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.
- 1910 – மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
- 1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் செருமனியிடம் வீழ்ந்தது.
- 1934 – யுகோசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியச் சண்டை: செருமனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.
- 1941 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.
- 1942 – வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆத்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.
- 1962 – உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.
- 1963 – வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1966 – வியட்நாம் போர்: தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1967 – சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1970 – கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1980 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.
- 1981 – பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
- 1983 – ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
- 1987 – யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
- 2001 – இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
- 2004 – ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
- 2006 – வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
- 2012 – பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையியைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
பிறப்புகள்
- 1852 – எர்மான் எமில் பிசர், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1919)
- 1864 – ரெசினால்டு டையர், பிரித்தானிய இராணுவ அதிகாரி (இ. 1927)
- 1873 – கார்ல் சுவார்சுசைல்டு, செருமானிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 1916)
- 1876 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்த பேரறிஞர் (இ. 1947)
- 1879 – மேக்ஸ் வோன் உலோ, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1960)
- 1897 – எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் 6வது முதலமைச்சர் (இ. 1987)
- 1908 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர், நாடகாசிரியர் (இ. 1974)
- 1909 – வ. நல்லையா, இலங்கைக் கல்வியாளர், அரசியல்வாதி
- 1911 – பி. எஸ். வீரப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 1998)
- 1924 – இம்மானுவேல் சேகரன், இந்திய தலித் தலைவர் (இ. 1957)
- 1933 – சு. சுசீந்திரராஜா, இலங்கைத் தமிழ் மொழியியலாளர் (இ. 2019)
- 1940 – ஜான் லெனன், ஆங்கிலேயப் பாடகர் (இ. 1980)
- 1945 – விஜய குமாரணதுங்க, இலங்கை நடிகர், அரசியல்வாதி (இ. 1988)
- 1945 – அம்ஜத் அலி கான், இந்திய பாரம்பரிய சாரோட் இசைக் கலைஞர்
- 1950 – ஜோடி வில்லியம்ஸ், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர்
- 1959 – போரிசு நெம்த்சோவ், உருசிய அரசியல்வாதி (இ. 2015)
- 1966 – டேவிட் கேமரன், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- 1968 – டிராய் டேவிஸ், அமெரிக்கக் குற்றவாளி (இ. 2011)
- 1968 – அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி
இறப்புகள்
- 892 – இமாம் திர்மிதி, பாரசீக உலமா (பி. 824)
- 1943 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. 1865)
- 1958 – பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1876)
- 1967 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப கெரில்லா தலைவர், மருத்துவர் (பி. 1928)
- 1974 – ஆஸ்கர் ஷிண்ட்லர், செக்-செருமானியத் தொழிலதிபர் (பி. 1908)
- 1987 – வில்லியம் பாரி மர்பி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1892)
- 1989 – தி. கோ. சீனிவாசன், தமிழக எழுத்தாளர், பேச்சாளர், இதழாசிரியர், அரசியல்வாதி (பி. 1922)
- 1995 – அலெக் டக்ளஸ் - ஹோம், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1903)
- 2003 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928)
- 2004 – ஜாக்கஸ் தெரிதா, அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1930)
- 2005 – மதுரை என். கிருஷ்ணன், இந்திய கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)
- 2006 – கன்சிராம், இந்திய அரசியல்வாதி (பி. 1934)
- 2010 – எஸ். எஸ். சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர், அரசியல்வாதி
- 2015 – என். ரமணி, தமிழகப் புல்லாங்குழல் கலைஞர் (பி. 1934)
- 2015 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1937)
- 2018 – தாமசு இசுடைட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1940)
சிறப்பு நாள்
- விடுதலை நாள் (உகாண்டா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1962)
- விடுதலை நாள் (எக்குவடோர், எசுப்பானியாவிடம் இருந்து 1820)
- உலக அஞ்சல் நாள்
- தேசிய நானோ தொழில்நுட்ப நாள் (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
வெளி இணைப்புகள்
- "இன்றைய நாளில்". பிபிசி.
- "அக்டோபர் 9 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.
- நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்